Saturday, 23 May 2020

சிறுகதை 163-173

163                 மரத்தில் விரதம் 

கரடியின் பிடியிலிருந்து தப்பிக்க இரு நண்பர்களில் ஒருவர் மரத்தில் ஏறிக்கொண்டார் . மற்றவர் செத்தவர் போல் படுத்துக்கொண்டார் . கரடிகள் ஏமாந்தன . இருவரும் பிழைத்தார்கள் . இது நாம் முதலாம் வகுப்பில் படித்த பழைய கதை . 

புதிய புலிக்கதை ஒன்று இன்று நடந்திருக்கிறது . சுமத்திரா தீவில் ஏச் பகுதியில் அடர்ந்த காடுகளைக்கொண்ட வன விலங்குப் பூங்கா உள்ளது . இங்கு விலை உயர்ந்த வாசனைத் திரவிய மூலிகை மரங்கள் , செடிகள் , கொடிகள் நிறைய வளர்த்துள்ளன . வாசனை மரங்கள் கிலோ 30 ஆயிரத்திற்கும் மேலாக விலைபோகும் . அந்த அளவிற்கு மிகக் கிராக்கியான காடுகளாகும் . இந்த அரிய அபூர்வ வாசனை மரக்கட்டைகளை வெட்டி எடுக்க , வன விலங்குகளை வேட்டையாட கிராமவாசிகள் ஆறுபேர் காட்டிற்குள் நுழைந்தனர் . 

அங்கு குறுக்கிட்ட புலிக்குட்டி ஒன்றைப் புள்ளிமான் என எண்ணி வேட்டையாடிக் கொன்றுவிட்டனர் . இதைக் கண்டு ஆவேசம் மூண்டபுலிகள் ஆங்காரத்துடன் ஆறுபேரையும் விரட்டியது . ஒரு நபரை அடித்துக்கொன்றது . மற்ற ஐந்து பேரும் ஒரு பெரிய மரத்தில் ஏறிக்கொண்டனர் .

 புலிக்கூட்டம் மரத்தடியில் இரவு பகலாக மூன்று நாட்கள் முற்றுகை யிட்டன . தர்ணா செய்தன . மரத்தில் ஏறினவர்கள் இறங்கித்தானே ஆக வேண்டும் என்று புலிகள் நினைத்தன . ஆனால் மனிதன் புத்தி , சித்தி , சக்திகளில் வல்லவனாச்சே . மரத்தில் மூன்றுநாட்களாகத் தண்ணீரும் , உணவும் இன்றி விரதம் இருந்தார்கள் . அவர்களிடம் செல்போன் இருந்தது . புலிகள் ஓடிவிடும் என்ற நம்பிக்கை இழந்ததால் கிராமத்திற்குத் தகவல் கொடுத்தார்கள் . 

கிராம மக்கள் தடிகள் , தப்பட்டைகளுடன் ஆயுதங்கள் ஏந்தி பெரும்படையாகத் திரண்டு வந்தார்கள் . புலிகளை விரட்டி ஐவரையும் காப்பாற்றினார்கள் . இது நடந்தது 8 . 7 . 2013 அன்று . 


164                  மாதிரியாக இரு

 என் நண்பர் ஆபிரகாம் பொன்னு சொன்ன ஒரு செய்தி என் உள்ளத்தைக் தொட்டது . பிஷப் ஃபுல்டர் மனிதநேயர் , சமூகப் பற்றாளர் . வானொலிச் செய்தியில் வல்லவர் . 

அவரது ஊழியத்தின் ஒரு நாள் அனுபவத்தைக் கூறினார் . “ நான் ஆப்பிரிக்காவில் ஒரு கிராமத்திற்குச் சென்றேன் . அது ஒரு தொழு நோயாளிகளின் குடியிருப்பு . 500 பேரைக் குடியமர்த்தி இருந்தார்கள் . அவர்கள் ஒவ்வொருவருக்கும் இயேசுவின் உருவம் பொறித்த தங்கச் சிலுவை கொடுக்க விரும்பினார் . முதலாவது சிலுவையைப் பெற்றுக்கொள்ள வந்தவரின் இடதுகை விரல்கள் அழுகி இருந்தன . வலது கையில் வெள்ளைத் தழும்புகள் . பார்க்க அருவருப்பாயிருந்தது . சிலுவையைக் கொடுக்கும் போது என் கை அவர் தோல் மீது பட்டு விடாமல் வலது கையை ஒரு அங்குலம் உயர்த்தி அவரது உள்ளங்கையில் போட்டேன் . எனக்குள் ஓர் குற்ற உணர்வு ஏற்பட்டது . என் பாவத்திமிரை உணர்ந்தேன் . எனக்குள் தூய ஆவியானவர் ஊடுருவிப் பாய்ந்தார் . " 

“ இங்குள்ள 500 தொழுநோயாளிகளோடு என்னையும் சேர்த்து 501 பேர் இருக்கிறோம் . தியாகச் சின்னமான சிலுவையைக் கையில் எடுத்தேன் . என்னையும் ஒரு தொழுநோயாளியாகக் கண்டேன் . அந்த மக்களோடு மக்களானேன் . அழுகிய அவர்களில் சிலுவைச் சின்னத்தைக் கண்டேன் . சீழ்படிந்த அந்தக்கரங்களை நன்றாகப் பிடித்து கையைக் குலுக்கிப் பின்பு சிலுவையைக் கொடுத்தேன் . எனக்குச் சொல்லமுடியாத மகிழ்ச்சியும் எழுச்சி யும் ஏற்பட்டது . "

 " நீங்கள் எங்களைப் பின்பற்றும்படிக்கு நாங்கள் உங்களுக்கு மாதிரியாக இருக்கவேண்டும் என்றே அப்படிச் செய்தோம் ” ( 2 தெச . 3 : 9 ) . 


165               தடுமாற்றம்   

ஓட்டப்பந்தய வீராங்கனை Shiny Wilson அவர்களது Favourite 800 மீட்டர் ஓட வேண்டிய நாள் அது. பல பயிற்சி, பல முயற்சி, அயராது உழைத்து, பதக்கத்தை கைபற்ற வேண்டிய நாள். ஓட்டம் ஆரம்பித்தது சிறப்பாக ஓடி முடித்து வெற்றி வாகை சூட காத்திருந்த போது அந்த அதிர்ச்சியான அறிவிப்பு. Shiny Wilson தங்க பதக்கம் பெறவில்லை மாறாக தகுதி நீக்கம் செய்யப்பட்டார். காரணம் 800 மீட்டர் ஓட்டத்தில் அவர்களுடைய ஓடு பாதையை 200 மீட்டர் வரை அந்த கோட்டை விட்டு மாறக்கூடாது. ஆனால் Shiny Wilson 200 மீட்டர் முன்பாகவே மாறிவிட்டதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார் என்று அறிவித்தனர். உள்ளம் உடைந்துப் போனார். எப்படி இந்த தடுமாற்றம் ஏற்பட்டது என்று ஆராய்ந்து பார்க்கும் போது, 200 மீட்டர் முடிவில் ஒரு சிவப்பு நிற கொடி இருக்கும் அது தான் அவர்களுடைய அடையாளம். ஆனால் அன்றைய தினம் அங்கு மஞ்சள் மற்றும் சிவப்பு நிற கொடி இருந்தது. முதலில் மஞ்சள் நிறக் கொடி இருந்ததால் அது தான் அடையாளம் என்று நினைத்து, தடுமாறினேன் என்று வருத்தத்தோடு கூறினார். ஒரு சிறிய தவறினால் தடுமாற்றம் அடைந்து முடிவில் ஒரு பெரிய இழப்பை உண்டாக்கி, அன்றைய நாள் Shiny Wilsonனின் gold medal பறிபோனது மட்டும் அல்ல இந்தியாவிற்கே ஒரு பெரிய இழப்பாக மாறியது. 

வாலிபனே இன்றைக்கு உங்களுடைய வாழ்க்கையில் ஒரு சிறிய தடுமாற்றம், அல்லது ஒரு தவறான முடிவு கண்டிப்பாக ஒரு பெரிய பாதிப்பிலும், இழப்பிலும் தான் கொண்டு சேர்க்கும். எனவே உங்களுடைய வாலிபத்தில் பரிசுத்தத்தைக் காத்துக்கொள்ள உங்களின் தெளிவான தீர்மானமும், எடுத்த தீர்மானத்தில் உறுதியும் மிக அவசியம். 

ஒரு செத்த ஈ முழுப் பரிமள தைலம் முழுவதையும் நாறிப் போகப் பண்ணும். அதே போல் உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் தடுமாற்றத்தின் போது தவறான தீர்மானம் பரிசுத்தத்தை கெடுத்து உங்கள் வாலிபத்தின் நறுமணத்தை பாழாக்கும். கர்த்தரை சார்ந்து முடிவு எடுக்கும் போது அவர் உங்களுக்கு உதவி செய்து உங்களில் ஜீவ வாசனையை பரவச் செய்வார். ஆமென். 

இயேசுவே, என் காலடிகள் வழுவாதபடிக்கு, என் நடைகளை உமது வழிகளில் ஸ்திரப்படுத்தும். ஆமென். (சங்கீதம் 17:5)


 166            தாழ்மை தந்த மேன்மை 


மேற்கு வங்கத்தில் நிர்ஜா ராணி . படிப்பில் படுசுட்டி . நூற்றுக்கு நூறுதான் வாங்குவாள் . ஒரு ரயில்வேத் தொழிலாளியின் மூத்தமகள் . எப்போதும் சிரித்த முகம் . எல்லோருக்கும் உதவும் சுபாவம் . அப்பா நோயாளி . படுத்த படுக்கை . 

1968 இப் பள்ளியிறுதித் தேர்வில் மாநில அளவில் மதிப்பெண்கள் வாங்கினாள் . மேலே படிக்க வழியில்லை . பங்கிம் சந்திரர் கல்லூரி முதல்வரை பார்க்கச் சென்றார் . கல்லூரியில் குப்பை கூட்டிப் படித்தாள் . பி . எஸ்ஸி தேர்வில் முதல் தரமாக வந்தாள் . 

கல்லூரியில் எழுத்தர் பதவி கிடைத்தது . நூறு ரூபாய் சம்பளம் . ஒரு தம்பியையும் , தங்கையையும் படிக்க வைத்தாள் . எம் . எஸ்ஸி தேர்விலும் நல்ல மதிப்பெண்களும் நற்பெயரும் பெற்றாள் .

 1986 இல் அரசு கல்லூரியில் விரிவுரையாளர் ஆனாள் . பின்பு பி . எச்டி ஆய்வுப்பட்டமும் பெற்றாள் . அவள் படித்த கல்லூரியில் முதல்வர் பதவி காலியானது . 

முதல்வர் தேர்விலும் முதல் தரமாக வந்தாள் . கல்லூரி முதல்வர் ஆனாள் . "

 தாழ்மை உள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார் ” ( 1 பேது . 5 : 5 ) . 



167          யானையின் ஞானம் 

மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரம் . இரு யானைகளும் , ஒரு குட்டியும் தண்ணீர் தாகத்தால் சமவெளிப்பகுதிக்கு வந்துவிட்டன . கல்லிடைக் குறிச்சி என்ற கிராமத்தினுள் புகுந்தது . புஞ்செய் நிலத்திலுள்ள பாசனக் கிணற்றின் பக்கம் வந்தது . அதன் அருகே ஒரு பெரிய தண்ணீர் தொட்டி இருந்தது . அதில் தண்ணீர் குடிக்கும் போது குட்டியானை தண்ணீர் தொட்டியில் விழுந்துவிட்டது .

 பெரிய யானைகள் இரண்டும் தங்கள் தும்பிக்கைகளினால் தூக்கிவிட முயன்றன . ஆனால் குட்டியானை அவைகளின் பிடிகளிலிருந்து நழுவி விழுந்தது . 

பலமுறை முயன்றும் குட்டியானையைத் தூக்கி விட முடியவில்லை . இறுதியாக இரு யானைகளும் ஒன்றிணைந்து தொட்டியிலுள்ள தண்ணீரை தும்பிக்கையால் உறிஞ்சி உறிஞ்சி வெளியே கொட்டியது . தொட்டி வறண்டது . 

இப்பொழுது குட்டியை எளிதாகத் தூக்கி வெளியே விட்டன . தொட்டியில் நீர் நிறைந்திருக்கும்போது பிடிமானம் கிடையாமல் தூக்கி விட முடியவில்லை . தண்ணீரைக் காலிபண்ணி குட்டியைத் தூக்கிவிட வேண்டும் என்ற ஞானத்தைக் கடவுள் கொடுத்திருக்கிறார்

 என்றெண்ணி வியந்தேன் . நான் முதலாம் வகுப்புப் படிக்கும்போது , தாகத்தோடு வந்த இரு காகங்கள் பானையில் தண்ணீர் பாதியாய் இருந்தமையால் தண்ணீர் குடிக்க முடியாமல் தவித்தன . பின்பு கற்களை பானைக்குள் பொறுக்கிப்போட்டு தண்ணீர்மேலே வந்தவுடன் தாகம் தீர்ந்து சென்ற காக்காக் கதை நினைவிற்கு வந்தது . " 

மாடு தன் எஜமானையும் , கழுதை தன் ஆண்டவனின் முன்னணையையும் அறியும் ; இஸ்ரவேலோ அறிவில்லாமலும் , என் ஜனம் உணர்வில்லாமலும் இருக்கிறது ” ( ஏசா . 1 : 3 ) . 


168            களிமண் உருண்டை

 வெளிநாட்டுப் பயணி ஒருவர் பழைய சீனாவிற்குச் சென்றிருந்தார் . ஒரு விக்கிரக வழிபாட்டுக் கோயிலின் திருவிழாவைக் காணச்சென்றார் . உருவ வழிபாட்டின் உச்ச கட்டம் . ஆட்டம் , பாட்டம் , பேயாட்டம் , காலாட்டம் , கரகாட்டம் என்று பல ஆட்டங்கள் நடந்து முடிந்தபிறகு விந்தையான ஒரு வழியாக நடந்தது . 

அந்த விக்கிரக தெய்வத்தின்மீது நம்பிக்கை வைத்திருக்கிற ஒவ்வொருவரும் தங்கள் வேண்டல்களை ஒரு தாளில் ஜெபமாக எழுதிக் கைகளில் வைத்திருந்தார்கள் . அங்கு களிமண் உருண்டைகள் விற்பனைக்கு இருந்தன . நபருக்கு ஒரு உருண்டைதான் தரப்படும் . தங்கள் ஜெப விண்ணப்பத்தாளை களிமண் உருண்டையில் ஒட்டி விக்கிரகத்தின்மீது எறிய வேண்டும் . ஒவ்வொருவராகக் குறிபார்த்து எரிந்தார்கள் .

 சிலருக்குக் குறி தவறிவிட்டது . பலருடைய உருண்டைகளில் ஒட்டி இருந்த தாள்கள் கீழே விழுந்துவிட்டன . இப்படியாக ஒரு சில விண்ணப்பங்கள் மட்டும் விக்கிரகத்தின் மீது ஒட்டின . களிமண் உருண்டையோடு ஓட்டிய விண்ணப்பங்கள் மட்டுமே கேட்கப்படும் என்பது அவர்கள் நம்பிக்கை .

 விக்கிரகத்தின் மீது விழாத விண்ணப்பத் தாரர்கள் வெட்கியும் , ஏமாந்தும் , கவலையோடும் வீட்டிற்குத் திரும்பினர் . இதைக் கேள்விப்பட்ட வெளிநாட்டுப்பயணி மிகவும் வருந்தினார் . 

வழிபாடுகளில் மூடக்கருத்துக்கள் எத்தனை வடிவங்களில் உள்ளன ? தேவைகளை இறைவனிடம் நேரே விண்ணப்பிக்கலாமே . " கேளுங்கள் கொடுக்கப்படும் என்றுதானே தேவாதிதேவன் சொல்கிறார் .

 " ஈசன் அருளைப் பெறுவதிலும் இடையே தரகர்க்கு இடமுண்டோ ? " என்று உமர்கய்யாம் புலவர் பாடுகிறார் . "

 என்னை நோக்கிக் கூப்பிடு , அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து நீ அறியாததும் , உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன் ” ( எரே 33 : 3 ) , 



169            மன்னிப்பு தேனிலும் இனிமை

 வடதிருநெல்வேலியில் கைலாசபுரம் என்றோர் ஊர் உள்ளது . போக்கு வரத்து வசதிகளற்ற அந்நாட்களில் அவ்வூரில் ரயில் நிலையம் இருந்தது . வீட்டுக்கொருவர் வெளிநாடு போய் பலர் காரைவீடும் கால்வரை வேட்டியும் கட்டி வசதியாக வாழ்ந்தார்கள் . 

எனவே பூலோகக் கைலாசம்போல் விளங்கிய அவ்வூருக்குக் “ கைலாசபுரம் ” என்ற பேர் வந்தது . கிறிஸ்தவக் குடியிருப்புகளும் , இந்துக் குடும்பத்தினரும் சரிசமமாய் வாழ்ந்தார்கள் . 

வெள்ளையா , வேதமுத்து என்ற இருவரும் இணைபிரியா நண்பர்கள் . வெள்ளையா இந்து சகோதரர் . வேதமுத்து கிறிஸ்தவர் . அந்த ஊராருக்கு அது ஆச்சரியமாய் இருந்தது .

 வடநெல்லையில் அதிகமாக உழைத்த மிஷனெரி கேர்ண்ஸ் ஐயர் . அவரும் இரட்டையர் போன்றிருந்த அவர்களின் நட்பைக் குறித்து பெருமையாகப் பேசினார் . கேர்ண்ஸ் புதியம்புத்தூரைச் சுற்றியுள்ள கிராமங்களில் பள்ளி களையும் , கோயில்களையும் உண்டுபண்ணினார் . சமூகப் பணிகளையும் செய்தார் . 

பக்கத்திலுள்ள பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையில் புகுந்து நற்செய்தி நவின்றார் . 1871ஆம் ஆண்டு மே மாதம் பத்தாம் தேதி கைலாசபுரம் வந்திருந்தார் . மக்கள் வெகுவாக நேசித்த மேநாட்டு மிஷனெரி அவர் . 

வெயிலின் கொடுமை அகோரமாயிருந்தது . கேர்ண்ஸ் தம் கூடாரத்தின் பக்கம் ஒரு மரத்தடியில் அமர்ந்து ஒரு நூலைப் படித்துக்கொண்டிருந்தார் . 

இந்து நண்பர் வெள்ளையா , ஐயர் பக்கம் வந்து கவலையோடு நின்றார் . “ வெள்ளையா , தனியா வரமாட்டீங்களே , உங்கள் நண்பரை எங்கே ? கவலையா இருக்கீங்களே காரணம் என்ன ? " ஐயர் நலம் விசாரித்தார் . 

“ வேதமுத்து கொஞ்சநாளா பேசுறதே இல்ல , என்னைவிட்டு விலகிப் போறார் . எனக்கு ரொம்ப கவலையா இருக்கு . துரைதான் எங்களை சேர்த்து வைக்கனும் ” வெள்ளையா வெள்ளை மனதோடு சொன்னார் . துரை வேதமுத்தை அழைத்தவர ஆள் அனுப்பினார் .

வேதமுத்து வரும்போது வெள்ளையா வணக்கம் சொன்னார் . வேதமுத்து அதைக் கண்டுகொள்ளாமல் வீராப்புடன் நடந்து சென்றார் . பின்பு மிஷனெரியிடம் சென்று கும்பிடுகிறேன் என்றார் . மிஷனெரிக்கும் , வேதமுத்திற்கும் உரையாடல் நடந்தது .

 " அதோ இருக்கும் வெள்ளையா . உங்கள் நண்பர்தானே ? " " அது ஒரு காலத்தில் . இப்போ ஒட்டு உறவு ஒண்ணும் கிடையாது . ' " அப்படி வெறுப்பாகப் பேசக்கூடாது . இருவரும் ஒருவரையொருவர் மன்னித்து நட்பைத் தொடருங்கள் . ' '

 " பொய்காரப்பயலை மன்னிக்க முடியாது

 " அப்படிச் சொல்லக்கூடாது . நீங்கள் மன்னிக்கவும் மன்னிப்புக் கேட்கவும் தயாராக இருக்கவேண்டும் . ' 

" நான் ஏன் மன்னிப்புக் கேட்க வேண்டும் ? ஊர்ல என்னைப்பற்றிக் கேட்டுப்பாருங்க துரை ? ” 

“ ஒருவன் தன்னில்தானே நீதிமானாயிருக்கமுடியாது , அதிருக்கட்டும் , இப்போ அவர் உமது நட்பை நாடுகிறார் . சமாதானமாய் இருக்க விரும்புகிறார் . அவருடைய தவறுகளுக்கு வருந்துகிறார் . மீண்டும் சிநேகமாய் இருங்கள் .

 " திடீரென்று கிறிஸ்தவ வேதமுத்து முழந்தாளிட்டார் . கைகளை வானத்திற்கு நேராக விரித்தார் . சத்தம் போட்டு ஜெபித்தார் . 

“ தேவனே , இயேசுவே , இங்கே நிற்கிறானே வெள்ளையா , அவன் துரைமுன் நடிக்கிறான் . அவன் பொய் சொன்னான் . கடைசி நியாயத்தீர்ப்பு நாளில் அவன் செய்த பாவம் வெளிப்படும் . ஆமென் ” என்றார் .

 கேர்ண்ஸ் ஐயர் மிகவும் வருந்தினார் . “ நீர் ஒரு கிறிஸ்தவப் பரிசேயர் , உத்தம மனஸ்தாபத்தோடு முதலில் ஆண்டவரிடம் மன்னிப்புக் கேளும் . கடின வைராக்கியம் கூடாது , கசப்பு உம்மை சிறியவராக்கும் .

 மன்னிப்பைப் பெறுவது தேனிலும் இனிமையானது . ஆனால் மன்னிப்பதோ அதைவிட இனிமையாது " என்றார் .

 வேதமுத்து மன்னிப்புக் கேட்க மனமின்றி கல்மனதோடு வீட்டிற்குச் சென்றார் . தம் கூடாரத்தினுள் சென்ற கேர்ண்ஸ் ஐயர் குமுறி அழுதார் . மன்னிக்கத் தெரிந்த மாந்தரின் இதயம் இறைவன் குடியிருக்கும் இனிய ஆலயம் . ( காலக்குறிப்பிற்கு ஆதாரம் “ மாணிக்கக் கற்கள் ” ) . 

170.                     ஓரம் போ!!! 


பரப்பரப்பான நகரத்தின் சாலை அது. வாகனங்கள் அங்கும் இங்குமாக அலைமோதிக் கொண்டிருந்தன. ‘பீங்! பீங்!’ என வாகனங்கள் எழுப்பிய சத்தங்கள் காதைத் துளைத்தன. சாலையோரங்களில் நின்று கொண்டிருந்தவர்கள் சாலையைக் கடக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தனர். அந்நேரத்தில் “சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்” என வேகமாக அந்த வாகன நெரிசலை உடைத்துக் கொண்டு முகிலனின் சைக்கிள் வந்து கொண்டிருந்தது.

 சாலையின் ஓரமாக முகிலன் சைக்கிளை வேகமாகச் செலுத்திக்கொண்டிருந்தான். அவனுக்கு முன்னால் சைக்கிளின் பிடியைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருக்கும் குமரன் நடுங்கியே போய்விட்டான். “வேகமா போவதே! பயமா இருக்கு..” எனக் கத்தினான் குமரன். முகிலன் அதையெல்லாம் காதில் வாங்கிக் கொண்டதாகத் தெரியவில்லை.

 அவன் சைக்கிளைப் பலம் கொண்டு மிதிப்பதிலேயே கவனமாக இருந்தான். உணவகத்தில் அமர்ந்திருந்தவர்களில் சிலர் முகிலனைப் பார்த்து ஏதோ முணுமுணுத்தனர். “ஸ்கூல் உடுப்பைப் போட்டுக்கிட்டு… பாருங்க… என்ன பண்றானுங்க நம்ப பையனுங்க” என ஒருவர் ஆதங்கத்தோடு கூறினார்.

 முகிலன் காதில் எதுவுமே விழவில்லை. சைக்கிளின் மிதியை மேலும் வேகமாக மிதித்தான். குறிப்பிட்ட நேரத்திற்குள் அங்குப் போய் சேர்ந்தாக வேண்டும் என மட்டுமே நினைத்துக் கொண்டிருந்தான். மதிய வெயில் தலையைச் சுட்டது. 

ஒரு முற்சந்தியை நெருங்கியது முகிலனின் சைக்கிள். எதிரே வாகனம் வந்தால்கூட தெரியாத அளவிற்கான வளைவு அது. முகிலன் கொஞ்சம்கூட சைக்கிளின் வேகத்தைக் குறைக்கவில்லை. குமரன் கண்கள் இரண்டையும் இறுக மூடிக் கொண்டான்.

 ‘எதிரில் கார் வருது… என்ன இந்தப் பையனுங்க சைக்கிளை இப்படி ஓட்டுறானுங்க?’ என அந்தத் திருப்பத்திற்கு அருகில் நின்று கொண்டிருந்த ஒரு பெரியவர் நினைத்தார். “முகிலன்ன்ன்ன்! பார்த்து..” எனக் கத்தியே விட்டான் குமரன்.

 “கவலைப்படாத குமரா! நான் உன்னைப் பத்திரமா போய் சேர்த்துருவேன்” எனக் கூறிவிட்டு சைக்கிளின் வேகத்தை மேலும் கூட்டினான் முகிலன். ‘என்ன நடந்தாலும் குமரனை உடனே போய் அங்க சேர்த்திடணும்’ என முகிலன் மனதில் உறுதி எடுத்துக் கொண்டான். 

சாலையில் முகிலன் சைக்கிள் ஓட்டுவதைப் பார்த்த பலர் அவனைத் திட்டியிருப்பார்கள். கடுமையான சொற்களைக் கொண்டு அவன் மீது கோபம் கொண்டிருப்பார்கள். முகிலனின் கால்கள் அதை உணரவில்லை. அவனுடைய குறிக்கோள் அனைத்தும் உரிய நேரத்தில் குமரனைக் கொண்டு சேர்ப்பதுதான். 

10 நிமிடத்திற்குள் முகிலனும் குமரனும் சைக்கிளுடன் விவேகானந்தா தமிழ்ப்பள்ளியின் வளாகத்திற்குள் நுழைந்தார்கள். மணி 2.00-ஐ நெருங்கியிருந்தது. சைக்கிளை ஓரமாக நிறுத்திவிட்டு குமரனின் புத்தகப்பையை எடுத்துக் கையில் வைத்துக் கொண்டு முகிலன்தான் முன்னே ஓடினான்.

 “சார்ர்ர்ர்ர்.. நடனப் போட்டி எந்த இடத்துலே நடக்குது?” என மூச்சிரைக்க எதிரில் வந்த ஆசிரியரிடம் கேட்டான் முகிலன். 

பிறகு மேலே இரண்டாவது மாடியிலுள்ள மண்டபத்தை நோக்கி ஓடினான். குமரன் திகைப்புடன் முகிலனைப் பின் தொடர்ந்து ஓடி வந்து கொண்டிருந்தான். மண்டபம் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என நிறைந்து காணப்பட்டது. அங்கும் இங்கும் தேடியப் பிறகு முகிலன் குமரனின் நண்பர்கள் ஓர் ஓரமாய் கவலையில் அமர்ந்திருப்பதைப் பார்த்துவிட்டான். 

குமரனின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு அவர்களை நோக்கி ஓடினான். “குமரன் வந்துட்டான்! குமரன்…” அங்கிருந்தவர்கள் எல்லோரும் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தனர். குமரன் சரியான நேரத்திற்குப் போயிருக்காவிட்டால் அவர்களின் 7 பேர் அடங்கிய நடனக்குழு போட்டியில் பங்கெடுத்திருக்க முடியாது. அவசர அவசரமாக குமரனும் அவனுடைய குழு உறுப்பினர்களும் உடையை மாற்றிவிட்டு நடனத்திற்குத் தயாராகினார்கள். 

பாடல் ஒலித்ததும் குமரனின் குழு மிகச் சிறப்பாக ஆடத் துவங்கினர். குமரன் ஆடிக் கொண்டிருந்தாலும் அவனுடைய கலங்கிய கண்கள் மண்டபத்தில் தன்னுடைய நண்பன் முகிலன் எங்கு நின்று கொண்டிருக்கிறான் என்றே தேடிக்கொண்டிருந்தன.  

என் அன்பு வாசகரே, நண்பர்கள் இல்லையேல் இந்த உலகம் இல்லை என்கிற அளவுக்கு மிகவும் இன்றிமையாதது நட்பு. நமக்காக எந்த ஒரு சூழ்நிலையையும் தாங்கக்கூடிய நட்பு கிடைக்கப்பெற்றவர்கள் பாக்கியவான்கள் என்றே கூறலாம். 

நம் எல்லோருக்கும் தெரிந்த அழகிய பழமொழி ஒன்று உண்டு. "ஆபத்தில் உதவுபவனே உற்ற நண்பன் ஆவான்" என்று. அதற்கேற்ப இன்றைய கதையில் முகிலன் தன்னுடைய கால்கள் வலிக்கிறது என்றோ, பிறர் என்ன கூறுகிறார்கள் என்றோ அவன் சிந்தியாமல் குமரனை ஏற்ற நேரத்தில் ஏற்ற இடத்தில் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற குறிக்கோளோடு மாத்திரம் இருந்தான்.

 அதுபோலவே நம்மை  நித்திய ராஜ்ஜியத்தில் சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோள் மாத்திரமே நம் அருமை நண்பர் இயேசுவிடம் இருந்தது. 

ஜனங்கள் அவரை காறி துப்பிய போதும், தலையில் குட்டிய போதும், சிரசில் முள்முடி சூட்டிய போதும், வாரினால் அடிபட்ட போதும், கைகள் கால்களில் ஆணிகள் கடாவிய போதும், சிலுவையில் அறைந்த போதும், ஈட்டியால் குத்தப்பட்ட போதும் அவருடைய நோக்கம் பாவத்திலிருந்து அனைவரையும் மீட்டு நித்திய ராஜ்ஜியத்தில் கொண்டு சேர்ப்பதாய் மாத்திரமே இருந்தது. அதனால் தான் தனக்கு மிகுந்த வேதனை தரக்கூடிய எல்லாவற்றையும் நமக்காக அவரே தாங்கினார்.

 சாலெமோன் ஞானி இவ்வாறாக கூறுகிறார், சிநேகிதருள்ளவன் சிநேகம் பாராட்டவேண்டும்; சகோதரனிலும் அதிக சொந்தமாய்ச் சிநேகிப்பவனுமுண்டு. நீதிமொழிகள் 18:24 

நம்மை நம்முடைய சகோதரர்களை விட, பெற்றோரை விட, இன ஜன பந்தங்களை விட அதிகமாய் நேசித்து, தன்னுடைய உயிரையே தியாகமாய் தந்து, நம்மை மீட்ட  இயேசு கிறிஸ்தவை இன்று முதல் அருமை நண்பராக ஏற்றுக்கொள்வோம்.

 நம்முடைய சிநேகத்தை (அன்பை) அதிகமாய் அவரிடம் காட்டுவோம், அவரே சகல நாட்களிலும் நம்மோடு இருந்து நமக்காக எல்லாவற்றையும் செய்து நம்மை நித்திய ராஜ்ஜியத்தில் கொண்டு சேர்க்கும் வரை நமக்கு நல்ல நண்பராய் இருந்து நம்மை அனுதினமும் வழிநடத்துவார். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்


 171        உருளைக்கிழங்கு ஜெபம் "


 குற்றாலம் ஆவிக்குரியக் கூட்டத்திற்கு இன்னும் மூன்றே நாட்கள்தான் இருக்கு . " பாக்கியம் தங்கச்சிக்கு தரையில் கால் பரவவில்லை படுகுஷி !

 " ஐ . . . . ஐ . . . நாங்க குற்றாலம் போறமே " பாக்கியம் குதித்தாள் , குதூகலித்தாள் . " அங்க நல்ல அருவிக் குளிப்பு , அதிருசியான சாப்பாடு , ஆடல் பாடல்களோடு அருளுரை . . . ஆமா . . . இன்னும் மூணே நாள்தான் . . . " எட்டாம் வகுப்புப் படிக்கும் பாக்கியம் சென்ற ஆண்டு குற்றாலம் மாணவர் முகாமிற்குச் சென்று புதுவாழ்வு பெற்று வந்தாள் .

 பொய்யும் , சூதும் வாதுமாயிருந்த பாக்கியம் புதுமனுஷி ஆகிவிட்டாள் . அவள் பெற்றோரும் மற்றோரும் அவளிடம் பெரிய மாற்றத்தைக் கண்டார்கள் . அதைப் பார்த்த அநேகம் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை குற்றாலம் கூட்டத்திற்கு அனுப்ப ஆசைப்பட்டனர் .

 பாக்கியம் தன்னோடு படிக்கும் மற்ற நான்கு பிள்ளைகளை குற்றாலம் போக ஆயத்தப்படுத்திவிட்டாள் . குற்றாலம் சீஷனில் ஆண்டுதோறும் நடக்கும் அந்தக் கூட்டம் . ஆசீர்வாதம் நிறைந்ததாகவும் , ஆத்துமாக்களை உயிர்ப்பிக்கிறதாகவும் இருந்தது . குற்றாலம் பாறையடி பங்களாவில் , நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளிலுமிருந்து வந்த மாணவியர் நூற்றுக்கணக்கில் குழுமினர் . 

சாரல் இதமாக இருந்தது . பிள்ளைகள் பட்டாம்பூச்சிபோல் கூட்டம் கூட்டமாக ஆடிப்பாடி ஆனந்தம் கொண்டனர் . மலைக்காட்சி மகிழ்ச்சியும் ரம்மியமுமாய் இருந்தது . 

காய்கறிகளை சுத்தம் செய்ய பத்துப் பிள்ளைகள் ஒருமணி நேரம் மட்டும் வந்து உதவி செய்யவேண்டும் என்று பாலிர்நேசன் தாத்தா கேட்டிருந்தார் . பாக்கியம்தான் முதலில் கைத்தூக்கினாள் . “ கூட்டங்களிலும் பங்கெடுக்க வேண்டும் , உதவியும் செய்யவேண்டும் " என்று பாக்கியம் தீர்மானித்துக் கொண்டாள் . சமையலுக்கு வரும் அந்த அம்மாக்களில் , 

ஓர் அம்மாவிற்கு சற்று சுகமில்லை . எனவேதான் பிள்ளைகளை உதவிக்குக் கூப்பிடும் தற்காலிக ஏற்பாடு . உருளைக் கிழங்கை தோல் சீவி சுத்தம் செய்யவேண்டும் . மதியம் உருளைக்கிழங்கு பொறியல் , வாழைக்காய் அவியல் . பத்துப்பிள்ளைகளும் சுழன்று பம்பரமாக வேலை செய்தனர் . ஆனால் பாக்கியம் நிதானமாக மிகச் சுத்தமாகத் தோல் சீவினான் . 

" பிள்ளைகளா , சீக்கிரம் வேலை செய்யுங்கள் . இன்னிக்கு பி . சேமியல் அண்ணன் பிரசங்கம் . பிரேமாக்கா பாட்டுச் சொல்லிக் கொடுப்பாங்க . பிந்திரக்கூடாது ' என்றாள் பாக்கியத்தின் தோழி கனகா . 

மிஷனெரி அக்காள் பாக்கியத்தை கவனித்தாள் . பாக்கியம் ஏதோ முனுமுனுத்துக்கொண்டே மெதுவாகவும் , சுத்தமாகவும் வேலை செய்தாள் . "

 என்னடீ பாக்கியம் . நீ உருளைக்கிழங்குகிட்டே என்ன பேசுறா ? சீக்கிரம் செய்வியா ? ” என்றாள்

 மிஷனெரி . மற்றப் பிள்ளைகள் சிரித்தார்கள் . உடனே பாக்கியம் சத்தமாகச் சொன்னாள் : " அக்கா , நான் உருளைக்கிழங்கை மட்டும் வெட்டல்ல ; இந்த உருளைக் கிழங்கை சாப்பிடப் போகிற பிள்ளைகள் அனைவரும் இரட்சிப்பின் புதுவாழ்விற்குள் வரவேண்டும் என்று ஜெபித்துக்கொண்டே காய்கறிகளை நறுக்குகிறேன் ” என்றாள் . 

ஆத்தும் பாரம்கொண்ட பாக்கியத்தை அனைவரும் பாராட்டினர் . " ஆவியின் சிந்தையோ ஜீவனும் , சமாதானமுமாம் ” ( ரோமர் B : 6 ) . 



172                       தரிசனம் 


ராமநாதபுரம் வட்டாரத்தில் சிறப்பான ஊழியம் செய்த மேனாட்டு மிஷனரி    ஜே . ஏம் . ஸ்ட்ரான் . ஒரு நாள் அவருக்குக் கிடைத்த தரிசனம் உரையாடல் ரூபத்திலிருந்தது . " ஸ்ட்ரான் . நீ நாளை நடக்கும் பாம்பன் கோயில் கொடைவிழாவிற்கு மாலையில் போ . "

 " ஐயா , ஆண்டவரே ! அந்த மக்கள் குடித்து வெறித்துக் கும்மாள மிடுவார்கள் . பச்சை இரத்தம்குடித்துக் கொச்சையாக ஆடுவார்கள் . அங்கு போனால் ஆபத்து " என்றார் மிஷனரி . " இல்லை . நீ கட்டாயம் போக வேண்டும் . திரளான மக்கள் கூடுவார்கள் . உன்னை அனுப்பிகிறவர் நானல்லவா . பயப்படாதே . " ஸ்ட்ரான் ஐயர் தயங்கினார் . 

ஆயினும் தரிசனத்தை அலட்சியம் செய்யக் கூடாதே என்று தடுமாறினார் . 1865 ஆம் ஆண்டு டிசம்பர் 23ம் தேதி . பாம்பன் நகரிலுள்ள அம்மன் கோயிலில் கொடைவிழா நடந்தது . பெரும் விழாவாக நடக்கும் . சாராயம் குடம் குடமாகப் புரளும் . பலர் கள்ளில் குளித்து மூழ்குவர் . இன்னும் பலர் களி நடம் புரிந்து ஆடுவர் . ஆடு கோழிகளை வெட்டி ஆங்காங்கு தலைகள் உருளும் . இரத்தம் புரண்டு ஓடும் . வில்லுப் பாட்டு ஓங்கார ஒலி எழுப்பும் . 

மிஷனரி தரிசனத்தை நினைத்தவராக சிந்தனையில் ஆழ்ந்தார் . காலரா என்னும் கொள்ளை நோய் பாம்பன் நகரிலும் , சுற்றியுள்ள கிராமங்களிலும் கோரத்தாண்டவமாடியது . 

1864ஆம் ஆண்டில் எந்த ஆண்டையும் விடப் பயங்கரமாக மூர்க்க வெறி கொண்டது . கூட்டம் கூட்டமாக மக்கள் மாண்டனர் . தேவ ஊழியர் ஸ்ட்ரான் பாம்பன் பட்டணத்தில் குடி இருந்தார் .

 அவர் ஒரு மருத்துவ மிஷனரி . மருந்து மாத்திரைகள் கொடுத்து வியாதியைக் குணமாக்குவதில் கைதேர்ந்த வைத்தியராயிருந்தார் பேதி என்னும் கொடிய நோயால் மக்கள் பீதியடைந்தனர் . சுகாதாரமின்றி விகார விளைவுகள் நேர்ந்தன   ஸ்ட்ரான் , காலரா தாக்குண்டவர்களை நேரில் சந்தித்து சிகிச்சை செய்தார் . 

ஆரோக்கியமாக வாழக் கற்றுக் கொடுத்தார் . “ சுத்தம் சுகம் தரும் ” என்று சுத்தத் தமிழில் பேசி பலரைக் காப்பாற்றினார் . அவரது வைத்தியத்திற்குப் பைசா வாங்கியதில்லை . அர்ப்பணிப்போடு ஊழியம் செய்தார் . உபதேசிமார் , பிரசங்கிமார் , மூப்பர்கள் . . . அனைவரும் நன்கு உதவி செய்தார்கள் . மதப் பாகுபாடின்றி ஓடி ஓடி உழைத்தார் .

 காலராவிற்கு இரையாகாமல் பல உயிர்களைக் காப்பாற்றினார் . பாரத்தோடு பிரார்த்தனையும் ஏறெடுத்தார் . குளிரும் , மழையும் , புயலும் காற்றும் சீறி வீசியது . துணையை இழந்து தவிப்போர் , பிள்ளைகளை இழந்த பெற்றோர் . இப்படியாய் பலர் பாவப்பட்ட மக்களாயினர் . 

ஸ்ட்ரான் , பாதிக்கப்பட்ட மக்களிடம் ஓடி ஆறுதல் கூறினார் . மக்கள் நேய பக்தியுடன் துக்கம் விசாரித்தார் . அவர்களின் வாழ்வாதாரங்களை கவனித்தார் . “ உயிர் தந்த உத்தமர் என்று மக்கள் அவரைப் போற்றினார்கள் . 

அவர் சொல் கேட்டார்கள் . இத்தகு சூழலில் பாம்பன் கோயில் கொடை விழா வந்தது . சிறு தெய்வ வழிபாடுகளை ஆங்காரத்தோடும் ஆரவாரத்தோடும் கொண்டாடினர் . கோயில் பெருங்கூட்டத்தால் விம்மி , நெளிந்தது . கொட்டு மேளங்கள் , கும்ப விளையாட்டுகள் , வில்லுப் பாட்டுகள் , விநோத ஈட்டி எய்தல்கள் , தீப்பந்தங்கள் , தோரணங்கள் , பூ மாலைகள் , சூடம் சாம்பிராணிப் புகைகள் . . 

. மாறுபாடான மணங்கள் குமட்டின . இன்னும் பலர் கிடா வெட்டவும் , சேவல்களைக் கொல்லவும் ஆயத்தமாகக் காத்திருந்தனர் . ஆட்டுக் கடாக்களும் , சேவல்களும் , அபயமிட்டு அழுதன . பெண்களின் குலவைக் குரலும் , பம்பைமேள இரைச்சலும் விண்ணை முட்டின . 

இன்னொரு பக்கம் சண்டைகளும் , சச்சரவுகளுமாக சந்தைக் கூட்ட இரைச்சலாய் காதுகளை உடைத்தன . திடீரென்று கூட்டம் அமைதலானது . கொட்டு முழக்கங்கள் நின்றன . அமைதி , சாந்தி , நிசப்தம் , எங்கும் மௌனம் ஏன் ? என்ன நடந்தது ? 

ஸ்ட்ரான் ஐயர் அங்கு வந்து நின்றார் . தரிசனத்திற்குக் கீழ்ப்படிந்தார் . எண்ணற்ற உயிர்களைக் காத்த கண் கண்ட கடவுள் நிற்பதுபோல் மக்கள் அவரைக் கண்டனர் . ஆரவாரமான தோற்றம் தூய வெண்ணிற அங்கி ஒளி நிறைந்த கண்கள் அவர் மக்களைப் பார்த்து கை கடப்பி வணங்கினார் .

 பூசாரிகள் தங்கள் ஈட்டிகளையும் , வல்லயங்களையும் , அருவாள்களையும் , ஆயுதங்களையும் கிடே போட்டுவிட்டு மரியாதையுடன் நின்றனர் . அனைவரையும் அமரும்படி பெரிய பூசாரி சொன்னார் .

 மிஷனரி , பூசாரியிடம் நான் சில நிமிடங்கள் பேசலாமா ? ' என்று கேட்டார் . மக்கள் வணங்கியவாறு மரியாதையுடன் கேட்டனர் . 

" கடவுள் வீண் பலிகளை விரும்பமாட்டார் . அவர் கருணை உள்ளவர் . இயேசு பெருமான் நம் ஒவ்வொருவருக்காகவும் சிலுவையில் இரத்தம் சிந்தினார் . எனவே நல்வாழ்வு என்னும் இரட்சிப்பை இலவசமாகத் தந்திருக்கிறார் . 

ஆடு கோழிகளுக்கு விடுதலை கொடுப்போம் காலரா போன்ற வியாதிகளைத் தடுத்து நிறுத்துவோம் . யாவரும் விட்டிற்குப் போங்கள் கடவுள் உங்களைக் காத்து ஆசிர்வதிக்கட்டும் . . . எல்லோரும் எழுந்து வீட்டிற்குச் சென்றனர் .

 கிடாக்கள் கொம்புகளை ஆட்டித்துள்ளின . ஆடுகள் ஆனந்தமாகக் குதித்து ஆடின . சேவல்கள் கொக்கரக்கோ என்று சுடவின . " ஐயர் சொல்வது உண்மை . துரை வாழ்க ! என்று மக்கள் ஒலிகளை எழுப்பினர் .

 புத்தாண்டை புத்துணர்வோடு வரவேற்றனர் . ஆதாரம் : மறையவிருந்த மாணிக்கக் கற்கள் 


173            பேராபத்திலிருந்து பண்ணைவிளை கிராம மக்கள் கோலாகலக் குதூகலம் கொண்டார்கள் . பண்ணை விளை பங்களாக் கோயில் தங்கமயமாக அலங்கரிக்கப் பட்டிருந்தது . “ நம்ம கோயில்ல குருப்பட்டாபிஷேகம் நடக்கப்போகுதாம் . ராஜ பட்டாபிஷேகம் மாதிரி ராப்பகலா வேலை நடக்கு , ஆச்சரியமா இருக்கு முத்தாபரணம் பாட்டி மூக்கில் விரல் வைத்து முகம் மலர்ந்து சொன்னாள் .

 " பட்டணத்திலிருந்து வெள்ளைக்கார பிஷப் வந்திருக்காரு , நம்ம டக்கர் ஐயர் வீட்ல இருக்காரு . என்னா வளத்தி , எவ்வளவு சிவப்பு , ஐயர் வேலைக்குப் படிச்சவங்களுக்கு நம்ம கோயில்ல வச்சி பட்டம் கொடுக்காங்களாம் " நேசம் அக்கா வாய் நிறைய சிரித்துச் சொன்னாள் . "

 அஞ்சி இளங்குருக்கள் முழுக்குருக்கள் ஆகப்போறாங்களாம் . மெட்ராசில , கல்கத்தாவில் நடக்கவேண்டிய ஆராதனை நம்ம கோயில்ல நடக்கப்போகுது , அதிசயம்தான் என்று தங்கமணித் தாத்தா தாளம் போட்டுப் பேசினார் . 

18 . 12 . 1859ஆம் ஆண்டில் அன்றைய நெல்லை மாவட்டம் பண்ணை விளையில் குரு அபிஷேக ஆராதனை நடக்கவிருந்தது . சென்னைப் பேராயர் தாமஸ் டேயல்ட்கி வந்துவிட்டார் . கடந்த ஒரு மாதமாக இந்த மகத்தான ஆராதனைக் காக ஜே . ஜி . டக்கர் ஐயர் பம்பரமாகச் சுழண்டு பாடுபட்டார் . 

அன்று அதிகாலை மக்கள் குளித்து வீடுகளைச் சுத்தம் செய்து வீட்டு முன்னால் குருத்தோலை தோரணங்கள் கட்டினார்கள் . காலை ஏழு மணிக்குத்தான் ஆராதனை . ஆறு மணிக்கே கோயில் நிறைந்து விட்டது . ஆறு முப்பதுக்கெல்லாம் கோயிலிலுள்ள காலரி நிரம்பி வழிந்தது . "

 குருப்பட்டாபிஷேக ஆராதனை நடக்கிறத நல்லாப் பாக்கனும்ன்னா காலரியில் இருந்தாத் தான் தெளிவாத் தெரியும் . நான் காலரியில் போய் உட்காரப் போறேன் என்று சொல்லி சிங்கராஜ் அங்கிள் அங்கவஸ்திரம் தரித்து விரைந்து நடந்தார் . 

“ கிறிஸ்மஸ் பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரம்தான் இருக்கு , அதுக்குள்ள நமக்கு ஒரு சிறப்பு ஆராதனை கிடைச்சிருக்கு ” என்று கோயில் பாட்டி பூரித்துப் பொங்கினாள் . இந்த மகத்தான ஆராதனைக்காக பலரும் உபவாசித்து பல நாட்களாக ஜெயித்தனர் . 

பண்டாரவிளை , செவளை , பெருங்குளம் , பேரூர் . . . . முதலிய பக்கத்துக் கிராமங்களிலிருந்தும் ஆராதனைக்கு மக்கள் வந்திருந்தார்கள் . இரண்டாம் மணி அடித்தது . கோயில் கொள்ளாமல் கூட்டம் தத்தளித்தது . காலரியில் உள்ள கூட்டம் புளியை அடைத்து வைத்தது போலிருந்தது . 

ஆராதனைக்கு ஆரம்பமாக இன்னும் இரண்டு நிமிடங்களே இருந்தன . குருமார் , மிஷனெரிமார் , சென்னை அத்தியட்சர் , அத்தியட்சர் சேப்ளள் , பாடகர்குழு யாவரும் பவனிக்காக நின்றனர் . அருள் தொண்டர் டக்கர் ஐயர் முதல் பாட்டின் எண்ணைச் சொல்ல வாய் திறந்தார் .

 திடீரென்று ஆலயத்திற்குள் திடும் திடும் என ஒரு பெருஞ்சத்தம் கேட்டது . தொடர்ந்து கூக்குரல் , ஓலம் , ஒப்பாரி எழுந்தது . அழுகை , அலறல் வெடித்தன . நடந்தது என்ன ?

 ' காலரியை தாங்கிக்கொண்டிருந்த பெரிய உத்தரம் பாரம் தாங்காமல் மடமடவென்று உடைந்து கீழே இறங்கிற்று . இறங்கிய உத்தரத்தை அதை இணைத்திருந்த கனத்த ஆணி வளைந்து கொடுத்து , ஓடிந்து விழுந்துவிடாமல் பிடித்துக்கொண்டது . ' ' அந்த ஆணி மட்டும் அப்படிப் பிடித்திராவிட்டால் , காலரிக்குக் கீழ் உட்கார்ந்திருந்த அனை வரும் நசுங்கிச் செத்திருப்பர் . காலரியில் இருந்தவர்களுக்கும் உறுப்பு நாசமும் , உயிர்ச்சேதமும் ஏற்பட்டிருக்கும் . ' காலரியில் இருந்தவர்கள் பத்திரமாய் இறக்கப்பட்டு , அமைதி ஏற்பட்ட பின்பு , அரைமணி நேர தாமத்துடன் ஆராதனை அருமையாய் நடந்து முடிந்தது . மக்கள் நன்றி உள்ளத்துடன் கர்த்தரைத்துதித்து மகிழ்ந்தனர் . ஆண்டவர் எவ்வளவு அற்புதமாக - ஆச்சரியமாக ஆராதனையின் மகத்துவத்தை எண்ணி உயிர்ச்சேதம் எதுவுமில்லாமல் பேராபத்திலிருந்து பாதுகாத்திருக்கிறார் . ' ஊரே வியந்து பரவசமடைந்தது . 

No comments:

Post a Comment