Sunday, 31 May 2020

Christian Missionary History Tamil Part 9

பிறந்த நாள்: ஆகஸ்ட் 3 - 1949

பிறந்த ஊர்: சூசைபட்டி, மதுரை

பெற்றோர் வேலை: விவசாயம்

படித்தது: 12ம் வகுப்பு (PUC)

பின்பு வேதாகம கல்லூரியில் இணைந்து கத்தோலிக்க போதகருக்கான படிப்பை தொடர்ந்தார்.

படித்த பள்ளி: செயின்ட் மேரீஸ் உயர் நிலைப்பள்ளி, மதுரை

பார்த்த வேலை: கத்தோலிக்க பாதிரியார்

பார்க்கிற வேலை: இயேசு கிறிஸ்துவின் ஊழியன்

கத்தோலிக்க பாதிரியாரான வருடம்:1974

இரட்சிக்கப்பட்ட வருடம்:1983

யார் மூலமாக?: சகோதிரர் DGS தினகரன் அவர்கள்.

வெளியிட்டுள இசைத்தட்டுகள்: 50க்கும் மேல் பாடல்கள்: 350 கும் மேல் மொழிகள்: தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், சிங்களம் (இவர் பாடல்கள் பலரால் பல உலக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது)

இசை ஞானம்: தேவன் கொடுத்த வரம்

இருக்கும் இடம்: காளையர் கோயில், சிவகங்கை மாவட்டம்

திருமணம்: இல்லை

சொந்த நிலம்: இல்லை...

இருக்கும் இடம் காளையார்கோவில் பகுதி மக்கள் ஊழியத்திற்காக கொடுத்தது 5 ஏக்கர் நிலம்.

இடத்தின் பெயர்: ஜெபத்தொட்டம் தந்தை பெர்க்மான்ஸ் அவர்கள் எல்லோருக்கும் தெரிந்த ஓர் நபர். அவரை குறித்த நண்பர் ஒருவரின் சாட்சி....

2009ம் ஆண்டு மலேசியா தேசத்திற்கு சென்ற பொழுது அங்கொரு மேதடிஸ்ட் ஆலயத்தில் ஆராதனையை முடித்த பின்னர் ஓர் சபை அங்கத்தினர் (தமிழர்) எங்களை தங்களுடைய வாகனத்தில் கூட்டிக்கொண்டு போனார். அவர் இரட்சிக்கப்பட்ட அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். மனைவி, பிள்ளைகள் கைவிட்ட நிலைமையில், வருமானம் சரியாக இல்லாததால் தன் வாழ்க்கையை முடித்துக்கொள்ள தன் காரை எடுத்துக்கொண்டு மனம் போன போக்கில் ஓட்டினார். அப்போது யாரோ ஒருவர் கொடுத்த பெர்க்மான்ஸ் ஐயா பாட்டு இசைத்தட்டு தட்டுபட்டது. அதில் உள்ள பாடலை கேட்க ஆரம்பித்தார். "விண்ணபத்தை கேட்பவரே, என் கண்ணீரை காண்பவரே" என்கிற பாடலை கேட்டதும் கதறி அழுதார். இயேசுவை தேடினார். கண்டுகொண்டார்.

எனக்கு மிகவும் ஆச்சரியமாய் இருந்தது. எங்கே ஓர் மூலையில் உள்ள பெர்க்மான்ஸ் ஐயா அவர்களின் பாடல், இன்னொரு நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிற இந்து குடும்பத்தை சேர்ந்த, இயேசுவை யார் என்றே தெரியாத நபரை இரட்சிக்கப்பட வைத்ததே.. இவருடைய ஆசை எப்படியாவது இறப்பதற்குள் பெர்க்மான்ஸ் அவர்களை பார்த்து விடவேண்டும் என்பதுதான்.

இன்று குடும்பமாய் இயேசுவை ஏற்றுக்கொண்டு சந்தோசமாய் உள்ளனர். நம்மால் கொடுக்கப்படும் செய்திகள், ஆலோசனைகள் மட்டும் அல்ல.

ஓர் சிறிய பாடல், தேவனை நேசிக்கும் உணர்வோடு நீங்கள் எழுதும் அல்லது பாடும் ஒவ்வொரு பாடலும் ஒரு நபரை தேவனுக்குள் வழிநடத்தும்.

ஒருவேளை ஐயா அவர்களுக்கு இந்நபரை தெரியாமல் இருக்கலாம். ஆனால் உலகில் உள்ள பல கோடிக்கணக்கான தமிழ் கிறிஸ்தவர்கள் இவரை மறக்கவே முடியாது. கிறிஸ்தவ கீர்த்தனைகள், பாமாலைகள் போன்ற சிறந்த பாடல்களுக்கு பிறகு ஜிக்கி அம்மா, FMPB பாடல்கள், தினகரன் ஐயா பாடல்கள் என்று பல வந்தன.

இதில் FMPB பாடல்கள் மிகவும் புகழ் பெற்றவை. சகோதரர் பாடல்களும் பட்டி தொட்டி எல்லாம் சிறப்புற்றது.

இன்று திருச்சபைகளில், ஆலயங்களில், சபைகளில், ஜெபங்களில், கூட்டங்களில், இவருடைய பாடல்கள் இல்லாமல் இல்லை என்ற நிலைமைக்கு வந்து விட்டது.

இந்த ஓர் தனி நபருடைய சாதனை விண்ணை தாண்டிவிட்டது. இவரை எடுத்து பயன்படுத்தின கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. யார் இந்த தந்தை பெர்க்மான்ஸ்? இவர் கத்தோலிக்க சபையில், சித்தாந்தத்தில் ஊறிப்போன பெற்றோருக்கு மகனாய் பிரிந்தவர்.

சிறுவயது முதலே தாய்க்கு மிகவும் கீழ்ப்படிந்து நடந்தபடியால் கட்டுகொப்புடன் வாழ்ந்து வந்தார். தன்னை கத்தோலிக்க போதகராக அர்ப்பணித்து கொண்ட இவர். தன்னுடைய படிப்பை கத்தோலிக்க கல்லூரியில் தொடர்ந்தார்.

இசைக்கருவி வாசிப்பதில் மிகவும் தேர்ந்த இவர் வாலிப வயதில் பாடல்கள் பாடி அனைவரையும் மகிழ்விப்பார். கத்தோலிக்க குருப்பட்டத்திற்கு படித்தாலும் பாவ மன்னிப்பு நிச்சயம் பெறாமல் மனம் போன போக்கில் வாழ்ந்தார்.

இவர் நாடகம் போடுவதில் ஆர்வம் கொண்டவர். ஒருமுறை மதுரையில் உள்ள ஓர் சிறு கிராமத்தில் இரவு நாடகம் நடந்து கொண்டிருந்தது, வாலிபர் மற்றும் கத்தோலிக்க போதகரான பெர்க்மான்ஸ் தான் ஓர் காதல் இசைவுக்கு ராகம் மீட்டிகொண்டிருந்தார்.

புனிதமாக கருதவேண்டிய போதகருக்கான அங்கியை போட்டு இசை வாசிப்பதை பார்த்த ஓர் வயதான தாயார் பெர்க்மான்சிடம் வந்து

"எயா.. இதற்க்கு தானா சாமியார் ஆனீர்கள்? எஞ்சாமி இந்த கேவலத்திற்க்கா இசை போடுகிறீர்கள்?" என்று வேதனையுடன் கேட்டார். கடவுளே நேராக வந்து பேசினதை போல உணர்ந்தார்.

மனம் நொந்தவராய் நாடகத்தின் பாதியிலேயே ஓடிவிட்டார். தேவன் தெளிவாக பேசுவதை உணர்ந்தார். "நீ பரலோகத்தை காட்ட வேண்டியவன். இந்த அசிங்கத்தை காட்றியேடா? இது உனக்கு வேலையா? என்று தேவன் தன்னுடைய ஊழியத்தை செய்ய அழைத்தார்.

அன்றே ரட்சிக்கபட்டார். 1991 ம் வருடம் கத்தோலிக்க போதக பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். ஆனால் அதை பற்றி கவலைபடாமல் இன்றும் தேவனுக்காக உழைத்து வருகிறார். இவர் பாடல்களின் விசேஷம் பரிசுத்த வேதாகமத்தை மையமாக வைத்தே பாடல்களை எழுதிவருகிறார். படிக்காத பாமரர் முதல் படித்த மேதைகள் வரை இவர் பாடல்கள் பாடி தேவனை மகிமைபடுத்துகின்றனர். ஒரு முறை எங்கள் ஊழியத்தின் சார்பாக ஆனைகட்டி மலைக்கு சென்றிருந்தோம். அங்கே மலை மேலே ஏறி செல்ல பாதை இல்லை. செடி, மர வேர்களை பிடித்து ஏறினோம். மலை உச்சியில் ஓர் கிறிஸ்தவ சபை. படிப்பறிவே இல்லாத அங்குள்ள மக்கள் சகோதரர் பாடலை பாடி தேவனை ஆராதித்தபோது தேவன் சகோதரர் அவர்களை எப்படியெல்லாம் பயன்படுத்துகிறார் என்று தெளிவாக அறிந்து கொண்டேன்.

இந்த சாட்சியை படிக்கும் சகோதர சகோதரிகளே.. நீங்கள் தாலந்து படைத்தவராக இருக்கலாம். அதை தேவனுக்கென்று படைக்கும் போது நிச்சயம் தேவன் உங்களை உயர்த்துவார். அவரிடம் உங்களை ஒப்புகொடுங்கள். நிச்சயம் உங்கள் வாழ்வில் தேவன் அளிக்கும் மாற்றத்தை உணர்வீர்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்

தியோடர் வில்லியம்ஸ் (1935-2009)

தியோடர் வில்லியம்ஸ் அவர்கள் 1935 ம் ஆண்டு பிப்ரவரி 24 ம் நாள் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் நாசரேத் என்னும் ஊரில் திரு. ஏசுதாசன், திருமதி. கிரேஸ் தம்பதியினருக்கு பிறந்தார். தியோடர் அவர்களின் தாத்தா ஒரு குருவானவராக ஊழியம் செய்து கொண்டிருந்தார். தகப்பனார் ஒரு ஆசிரியர். ஆகவே மிகவும் பக்தியும் கண்டிப்பும், ஒழுக்கம் நிறைந்த வாழ்க்கையில் வளர்ந்தார்.

தினமும் காலையில் வேதாகமம் வாசித்து, இரண்டு வசனங்கள் மனப்பாடம் செய்தால்தான் தியோடர் அவர்களின் பெற்றோர்கள் காலை ஆகாரம் கொடுப்பது வழக்கம். இதனால் சிறுவயது முதற்கொண்டே அநேக வேதவசனங்களை மனப்பாடம் செய்திருந்தார்.

இந்நிலையில் தியோடர் வில்லியம்ஸ் அவர்கள் 18 வயது இருக்கும்போது 1953 ம் ஆண்டில் சகோ. பகத்சிங் மூலமாக இம்மானுவேல் ஆலயம், சென்னையில் நடைபெற்ற ஒரு எழுப்புதல் கூட்டத்தில், இசையையும் பாடலையும் ரசிப்பதற்காக சென்ற தியோடரை, பிரசங்க நேரத்தில் கர்த்தர் ஊழியத்திற்கு அழைப்பதை அவரால் புரிந்துகொள்ள முடிந்தது. மேலும் தியோடருடன் தொடர்ந்து கர்த்தர் பேச ஆரம்பித்தார்.

ஆகவே 1954 ம் ஆண்டு ஏப்ரல் 28 ம் நாள் ஆண்டவரை சொந்த இரட்சகராக ஏற்றுங்கொண்டு, கிடைத்த நேரங்களில் எல்லாம் சுற்றியுள்ள கிராமங்களின் திருச்சபைகளுக்கு சென்று சிறுவர்கள் மத்தியில் நற்செய்திபணி அறிவிப்பதிலும் தெருக்களில் நடைபெரும் சுவிசேஷ பணியில் ஈடுபட்டு, ஊழிய அழைப்பில் செயல்பட தன்னை அற்பணித்தார். சென்னையில் இம்மானுவேல் திருச்சபையில் ஓய்வுநாள் பள்ளி ஆசிரியராக ஊழியம் செய்தார்.

தியோடர் அவர்கள் சென்னை லயோலா கல்லூரியில் இளங்கலை முடித்து பின்னர் முதுகலை பட்டத்தில் புள்ளியியல் துறையில் சிறந்த மாணவராக வந்தார். அப்போது இந்தி மொழியையும், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் தட்டச்சு செய்வதையும் சிறப்பாய் கற்றுக்கொண்டார். அப்போது நடைபெற்ற இந்திய பொதுத்துறை தேர்வையும் சிறப்பா க எழுதினார். இதனால் அரசாங்கத்திலிருந்து வேலைவாய்ப்பு தேடி வந்தது. ஆயினும் ஆண்டவருடைய ஊழியத்திற்காக அதை ஏற்றுக்கொள்ளாமல் தன்னை நற்செய்திபணி செய்வதற்கு முழுவதுமாய் அற்பணித்தார்.

இந்நிலையில் 1955 ம் ஆண்டு பெங்களூரில் பங்கார்பேப் பகுதியில் இருந்த South Indian Bible Institute என்ற வேதாக கல்லூரியில் இரண்டு ஆண்டுகள் இறையியல் பாடங்களையும் நன்கு கற்று கொள்ள ஆரம்பித்தார். இறையியல் புத்தகங்கள் வாங்குவதற்காக கல்லூரி நேரம் முடிந்ததும் அங்குள்ள குளியல் அறைகளை சுத்தம் செய்து, கல்லூரி விடுதிக்கு தேவையான மளிகைபொருட்களை வாங்கி தன்படிப்பு செலவை பார்த்துக்கொண்டார். தியோடர் அவர்களின் அறிவார்ந்த புத்திசாலித்தனம் வேதாகம கல்லூரியில் பிரகாசித்தது. வேதாகம படிப்பில் சிறந்து விளங்கினார்.

பின்னர் செராம்பூர் பல்கலை கழகத்தில் 1957 ம் ஆண்டு B.D. படிப்பை 4 ஆண்டுகள் பயின்று வேதாகமத்தை எபிரேயம், கிரேக்கு மொழிகளில் கற்று தேர்ந்து பின்னர் 1961 ம் ஆண்டில் பெங்களூரில் SIBS வேதாகம கல்லூரியில் பேராசிரியராக பணிபுரியும் அளவிற்கு சிறந்த வேத பண்டிதராக விளங்கினார்.

தியோடர் வில்லியம் பல திருச்சபைகளுக்கு சென்று வேதபாட வகுப்புகள் எடுக்க ஆரம்பித்தார். இவருடைய வேதாக ஞானத்தினாலும், வேத போதனைகளினால் அழிந்துவரும் இந்த உலகில் மீட்பரின் தேவை பற்றிய செய்திகள் ஈர்க்கப்பட்ட அநேக வாலிபர்கள் இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டார்கள்.

தியோடர் வில்லியம்ஸ் அவர்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் சரளமாய் பேசக்கூடிய தாலந்துகளை ஆண்டவர் கொடுத்திருந்ததார். இவருடைய சமரசம் செய்யாத வேதாகம போதனைகள் அநேக படித்த வாலிபர்களின் ஆத்துமாக்களை தூண்டியது. ஆகவே அநேக வாலிபர்கள் மற்றும் யுவதிகள் இயேசுவை ஏற்றுக்கொண்டார்கள்.

இந்நிலையில் 1963 ம் ஆண்டு தியோடர் வில்லியம்ஸ் அவர்களின் வேத வசனங்களை போதிக்கும் வரத்தை அகில இந்தியாவும் கேட்க செய்யும்படி *வேதத்திற்கு திரும்புவோம்* என்ற பெயரில் வானொலி நிகழ்சி ஆங்கிலத்திலும், தமிழில் *சத்திய வசனம்* என்ற வானொலி நிகழ்ச்சி மூலமாக ஒலிபரப்பப்பட்டது. இதன் மூலம் இவருடைய வேதஞானம் உலகம் முழுவதும் பரவ ஆரம்பித்தது. ஆண்டவர் தியோடர் வில்லியம்ஸ் அவர்களை வல்லமையாக பயன்படுத்தினார். பல நாட்டு திருச்சபைகள் அவருக்கு அழைப்பு கொடுத்தது. இதனால் உலகம் முழுவதும் சென்று வேதாகமத்தை பிரசங்கித்ததால் அமெரிக்க வேதாகம கல்லூரி இவருடைய வேத ஞானத்திற்காக முனைவர் என்ற *வேத பண்டிதர்* பட்டமும் கொடுத்து கௌரவித்தது.

தியோடர் வில்லியம்ஸ் அவர்கள் வேத ஞானத்தினால் அநேக ஆவிக்குறிய நண்பர்கள் பலரின் தொடர்பு ஏற்பட்டது. சகோ. சாம் கமலேசன், டேனிஸ்பேட்டை சகோ. P. சாமுவேல் மற்றும் சகோ. பிரட் டேவிட், சேலம் Dr. புஷ்பராஜ், மெஞ்ஞானபுரம் எமில் ஜெபசிங் இவர்களுடன் ஐக்கியம் ஏற்பட்டது. இவர்கள் ஒன்றாக சேர்ந்து *நண்பர் சுவிசேஷ ஜெபக்குழு* என்ற நற்செய்திபணி இயக்கம் உருவாவதற்கு தியோடர் வில்லியம்ஸ் அவர்கள் காரணமாய் இருந்தார்கள்.

இந்நிலையில் 1964 ம் ஆண்டில் இந்திய சுவிசேஷ ஐக்கியத்தின் தலைவரா நியமிக்கப்பட்டார்கள். அப்போது இந்தியாவில் நற்செய்திபணிக்கு மேலைநாட்டு மிஷனெரிகளையும் அவர்கள் பண உதவியையும் சார்ந்திராமல், உள்நாட்டு மிஷனெரிகள் இந்தியாவில் உருவாக்கப்பட வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார். மேலூம் நற்செய்தி பணியானது மேற்கத்திய முறைக்கு மாறாக இந்திய முறையில், இந்திய கலாச்சாரத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்றும் கிறிஸ்துவை பற்றி கேள்விப்பட்ட மக்கள் மத்தியிலே ஊழியம் செய்யாமல் கிறிஸ்துவைப் பற்றி அறியப்டாத இடங்களுக்கும் சென்று நற்செய்திபணி செய்யவேண்டும் என்ற அறைகூவல் விடுத்தார்.

இதன் காரணமாக 1965 ம் ஆண்டு மூலம் தனது 30 ம் வயதில் *இந்திய அருட்பணி இயக்கம் (IEM)* என்ற மிஷனெரி இயக்கத்தை சில நூறு ருபாய்கள் மூலமாக மிதிவண்டிகள் வாங்கி, சபை பாகுபாடற்ற நிலையில் அறியப்படாத மக்கள் இனக்கூட்டங்களுக்கு சென்று நற்செய்திபணி அறிவித்தார்.

தியோடர் வில்லியம்ஸ் அவர்கள் இந்திய அருட்பணி இயக்கத்தில் நான்கு கோட்பாடுகளை மைய்ப்படுத்தினார்.

  1. நற்செய்திபணி செய்தல்,
  2. திருச்சபைகளை நிறுவுதல்
  3. மருத்துவ ஊழியங்கள் மற்றும்
  4. வேதபாட வகுப்புகள் நடத்துதல்

என்ற தரிசனத்தோடு இந்தியா முழுவதும் நற்செய்திபணி செய்ய ஆரம்பித்தார்கள்.

தியோடர் வில்லியம்ஸ் அவர்கள் தமிழ்நாட்டு திருச்சபைகளில் மிஷனெர்களின் தரிசனம் கொடுக்க ஆரம்பித்தார். இதனால் திருச்சபையில் எழுப்புதல் ஏற்பட்டதால், அநேக வாலிபர்கள் தங்களை நற்செய்திபணிக்கு அற்பணித்தார்கள். அநேகர் நற்செய்திபணி செய்யும் மிஷனெரிகளின் தேவைக்காக தியாகத்தோடு கொடுக்க முன்வந்தார்கள். இதன் மூலமாக இந்திய அருட்பணி இயக்கம் பெரிய வளர்ச்சி கண்டு இந்தியாவின் பல மாநிலங்களுக்கும் நற்செய்திபணி அறிவிக்க கடந்து சென்றார்கள்.

தியோடர் வில்லியம்ஸ் அவர்கள் நற்செய்திபணி சிறப்பாக செய்வதற்கு ஏற்ற வாழ்க்கை துணையாக எஸ்தர் என்ற பெண்மணியை 1971 ம் ஆண்டில் ஜூன் 14 ம் நாள் திருமணம் செய்துகொண்டார். மேலும் கணவன் மனைவியாக சேர்ந்து நற்செய்திபணி அறிவிப்பதிலும் சமுதாய சேவை செய்வதிலும் தங்களை அற்பணித்துக்கொண்டார்கள். அநேக ஏழை பிள்ளைகளை படிக்க வைக்க நிதி திரட்டி கல்வி கற்று கொடுக்க உதவி செய்தார்கள்.

இந்நிலையில் பெங்களூரில் 1972 ம் ஆண்டு மெத்தடிஸ்ட் திருச்சபையின் குருவானவராக நியமிக்கப்பட்டார்.


இந்நிலையில் பெங்களூரில் தியோடர் வில்லியம்ஸ் அவர்கள் *விடுமுறை வேதாகம பள்ளி (VBS)* ஏற்படுத்தினார்கள்.

எஸ்தர் அம்மையார் சிறுபிள்ளைகள் மத்தியில் விடுமுறை வேதாக பள்ளி மாணவர்களுக்கு சுவிசேஷ பணியை செய்வதற்கு ஏதுவாக சிறப்பு பாடதிட்டங்களை பெங்களூரில் உறுவாக்கினார்கள். இதனால் அநேக சிறுபிள்ளைகள் இயேசுவை ஏற்றுக்கொண்டு கல்வியிலும் ஒழுக்கத்திலும் வேத அறிவிலும் வளர்ந்தார்கள்.

தியோடர் வில்லியம்ஸ் அவர்கள் இரண்டாம் தலைமுறை நற்செய்திபணி செய்யும் தலைவர்களை உறுவாக்குவதற்காக கர்த்தர் கொடுத்த வேதஞானம் முழுவதையும் பயன்படுத்தி அநேகரை சிறந்த வேதாகம வல்லுனர்களையும், நற்செய்திபணியாளர்களையும் உறுவாக்கினார். இவர்களுக்கு வேதத்தை மிகவும் நேர்த்தியாக கற்றுக்கொடுத்து, ஜெபத்திலும், வேத ஞானத்திலும் அநேக நேரம் செலவு செய்து பல வேதாகம பாட புத்தகங்களையும், ஒலி பேழைகளையும் (CD) வெளியிட்டு தரமான திருச்சபை தலைவர்களை உருவாக்கினார்.

இந்நிலையில் 1975 ம் ஆண்டு தியோடர் வில்லியம்ஸ் அவர்கள் *இந்தி மிஷனெரி ஐக்கியம்(IMA)* தலைவராகவும் நியமிக்கப்பட்டார். இதனால் உலகம் முழுவதும் சென்று இந்திய நற்செய்திபணிகளை குறித்து விளக்கினார். அப்படியே *இந்திய சுவிசேஷ ஐக்கியம் (EFI)* செயலாளராக நியமிக்கப்பட்டு இந்தியாவின் மிஷனெரி இயக்கங்ளிடையே ஐக்கியத்தை பலப்படுத்தி இந்தியாவில் சுவிசேஷம் பல இடங்களுக்கும் செல்வதற்கு சிறப்பாக செயல்பட்டார். மேலும் *உலக சுவிசேஷ ஐக்கியம் (WEF)* தலைமத்துவத்திற்கும் பொறுப்பாய் நியமிக்கப்பட்டு நற்செய்திபணியை இன்னும் சிறப்பாக செய்யும் தலைவர்களை கண்டுபிடித்து அவர்களை பயன்படுத்தினார். இப்படியாக இந்தியாவில் கிறிஸ்துவின் சுவிசேஷம், கொஞ்சம் கொஞ்சமாக எல்லா கிராமங்களுக்கும் செல்ல ஆரம்பித்தது.

இந்நிலையில் எதிர்பாராத விதமாக 39 ஆண்டுகள் குடும்ப வாழ்க்கை நடத்திய எஸ்தர் தியோடர் அம்மையார் பலவீனத்தின் நிமித்தமாக 2009 ம் ஆண்டு கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்கள். இவர்களுடைய இழப்பு தியோடர் வில்லியம்ஸ் அவர்களை பலமாக தாக்கியது. இதனால் ஆறுமாத காலத்தில் 74 ம் வயதில் தியோடர் வில்லியம்ஸ் அவர்கள் 2009 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 29 ம் நாள் கோதுமை மணியாக விதைக்கப்பட்டார்.

இந்திய மிஷனெரி இயக்கங்களில் தியோடர் வில்லியம்ஸ் அவர்கள் போல் முத்திரை பதித்தவர்கள் வெகுசிலரே. ஏனெனில் சுவிசேஷத்தை பகிர்ந்து கொள்வதற்கும் மிஷனெரிபணியை செய்வதற்கும் கடவுளால் இந்தியாவில் பெரிதும் பயன்படுத்தப்பட்ட பாத்திரம் ஆவார். இந்தியாவில் இவரைப்போல சிறந்த வேதபண்டிதர்கள் எவரும் இல்லை என்றே கூறலாம். அந்த அளவிற்கு கலப்படம் இல்லாத, ஆதாயத்திற்காக அல்லாத, வேத ஞானத்தை போதித்தார்.

தியோடர் வில்லியம்ஸ் அவர்களை *இந்தியாவின் பில்லிகிரகாம்* என்று அழைக்கும் அளவிற்கு தன்னுடைய நற்செய்திபணியினாலும் வேத ஞானத்தினாலும் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்களை உயிர்மீட்சி அடைய செய்தார். இந்தியாவில் மட்டுமல்ல, உலக அளவிலும் சிறந்த மிஷனெரி இயக்க தலைவர் என்று அறியப்பட்டார். எல்லோராலும் செல்லமாக *அண்ணாச்சி* என்ற அடைமொழியோடு அழைக்கப்பட்டார்.

தியோடர் வில்லியம்ஸ் என்ற ஒரு மிஷனெரி மூலம் ஆரம்பிக்கப்பட்ட *இந்திய அருட்பணி இயக்கம்* இன்று நேப்பாளம், பூட்டான் உட்பட இந்தியாவில் 960 மிஷனெரிகள் நற்செய்திபணி செய்துகொண்டு 116 இன மக்களுக்கு நற்செய்திபணி அறிவித்து, அநேகரை கிறிஸ்துவுக்குள் ஆத்தும ஆதாயம் செய்துகொண்டு இயேசு கிறிஸ்துவின் இராஜியத்தை கட்டிக்கொண்டு இருக்கின்றார்கள்.

இந்திய அருட்பணி இயக்கத்தின் மூலம் 19 இந்திய மொழிகளில் வேதாகமம் மொழி பெயர்க்கப் பட்டுள்ளது. மேலும் 34 மொழிகளில் நற்செய்திபணி அறிவிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. பல மருத்துவ மனைகள் அமைத்து சமுதாய சேவைகள் செய்துகொண்டு இருக்கின்றார்கள். 24 விடுதிகள் அமைத்து ஆதிவாசி பிள்ளைகளுக்கு கல்வி கற்று கொடுக்கப்படுகிறது. இவைகளுக்கு காரணம் ஒரு மணிதரின் ஆழமான அற்பணிப்பே.

இன்றைக்கு தியோடர் வில்லியம்ஸ் போன்ற அநேக நற்செய்தி பணியாளர்கள் நம்முடைய திருச்சபையில் இருந்து எழும்ப வேண்டும், அதற்காக ஜெபிப்போம். நம்முடைய பிள்ளைகளுக்கு நற்செய்திபணியின் தரிசனத்தையும் கொடுப்போம். ஆமென்.

Saturday, 23 May 2020

தியோடர் வில்லியம்ஸ் (1935-2009)*

தியோடர் வில்லியம்ஸ் (1935-2009)*

தியோடர் வில்லியம்ஸ் அவர்கள் 1935 ம் ஆண்டு பிப்ரவரி 24 ம் நாள் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் நாசரேத் என்னும் ஊரில் திரு. ஏசுதாசன், திருமதி. கிரேஸ் தம்பதியினருக்கு பிறந்தார். தியோடர் அவர்களின் தாத்தா ஒரு குருவானவராக ஊழியம் செய்து கொண்டிருந்தார். தகப்பனார் ஒரு ஆசிரியர். ஆகவே மிகவும் பக்தியும் கண்டிப்பும், ஒழுக்கம் நிறைந்த வாழ்க்கையில் வளர்ந்தார். 

தினமும் காலையில் வேதாகமம் வாசித்து, இரண்டு வசனங்கள் மனப்பாடம் செய்தால்தான் தியோடர் அவர்களின் பெற்றோர்கள் காலை ஆகாரம் கொடுப்பது வழக்கம். இதனால் சிறுவயது முதற்கொண்டே அநேக வேதவசனங்களை மனப்பாடம் செய்திருந்தார்.

 இந்நிலையில் தியோடர் வில்லியம்ஸ் அவர்கள் 18 வயது இருக்கும்போது 1953 ம் ஆண்டில் சகோ. பகத்சிங் மூலமாக  இம்மானுவேல் ஆலயம், சென்னையில் நடைபெற்ற ஒரு எழுப்புதல் கூட்டத்தில்,  இசையையும் பாடலையும் ரசிப்பதற்காக சென்ற தியோடரை, பிரசங்க நேரத்தில் கர்த்தர் ஊழியத்திற்கு அழைப்பதை அவரால் புரிந்துகொள்ள முடிந்தது. மேலும் தியோடருடன் தொடர்ந்து கர்த்தர் பேச ஆரம்பித்தார்.

ஆகவே 1954 ம் ஆண்டு ஏப்ரல் 28 ம் நாள் ஆண்டவரை சொந்த இரட்சகராக ஏற்றுங்கொண்டு, கிடைத்த நேரங்களில் எல்லாம் சுற்றியுள்ள கிராமங்களின் திருச்சபைகளுக்கு சென்று சிறுவர்கள் மத்தியில் நற்செய்திபணி அறிவிப்பதிலும் தெருக்களில் நடைபெரும் சுவிசேஷ பணியில் ஈடுபட்டு, ஊழிய அழைப்பில் செயல்பட தன்னை அற்பணித்தார். சென்னையில் இம்மானுவேல் திருச்சபையில் ஓய்வுநாள் பள்ளி ஆசிரியராக ஊழியம் செய்தார்.

தியோடர் அவர்கள் சென்னை லயோலா  கல்லூரியில் இளங்கலை முடித்து பின்னர் முதுகலை பட்டத்தில் புள்ளியியல் துறையில் சிறந்த மாணவராக வந்தார். அப்போது இந்தி மொழியையும், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் தட்டச்சு செய்வதையும் சிறப்பாய் கற்றுக்கொண்டார். அப்போது நடைபெற்ற இந்திய பொதுத்துறை தேர்வையும் சிறப்பா க எழுதினார். இதனால் அரசாங்கத்திலிருந்து வேலைவாய்ப்பு தேடி வந்தது. ஆயினும் ஆண்டவருடைய  ஊழியத்திற்காக அதை ஏற்றுக்கொள்ளாமல் தன்னை நற்செய்திபணி செய்வதற்கு முழுவதுமாய் அற்பணித்தார்.

இந்நிலையில் 1955 ம் ஆண்டு பெங்களூரில் பங்கார்பேப் பகுதியில் இருந்த South Indian Bible Institute என்ற வேதாக கல்லூரியில் இரண்டு ஆண்டுகள் இறையியல் பாடங்களையும் நன்கு கற்று கொள்ள ஆரம்பித்தார். இறையியல் புத்தகங்கள் வாங்குவதற்காக கல்லூரி நேரம் முடிந்ததும் அங்குள்ள குளியல் அறைகளை சுத்தம் செய்து, கல்லூரி விடுதிக்கு தேவையான மளிகைபொருட்களை வாங்கி  தன்படிப்பு செலவை பார்த்துக்கொண்டார். தியோடர் அவர்களின் அறிவார்ந்த புத்திசாலித்தனம் வேதாகம கல்லூரியில் பிரகாசித்தது. வேதாகம படிப்பில் சிறந்து விளங்கினார்.

பின்னர் செராம்பூர் பல்கலை கழகத்தில் 1957 ம் ஆண்டு B.D. படிப்பை 4 ஆண்டுகள் பயின்று வேதாகமத்தை எபிரேயம், கிரேக்கு மொழிகளில் கற்று தேர்ந்து பின்னர் 1961 ம் ஆண்டில் பெங்களூரில் SIBS வேதாகம கல்லூரியில் பேராசிரியராக பணிபுரியும் அளவிற்கு சிறந்த வேத பண்டிதராக விளங்கினார்.

தியோடர் வில்லியம் பல திருச்சபைகளுக்கு சென்று வேதபாட வகுப்புகள் எடுக்க ஆரம்பித்தார். இவருடைய வேதாக ஞானத்தினாலும், வேத போதனைகளினால் அழிந்துவரும் இந்த உலகில் மீட்பரின் தேவை பற்றிய செய்திகள் ஈர்க்கப்பட்ட அநேக வாலிபர்கள் இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டார்கள். 

தியோடர் வில்லியம்ஸ் அவர்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் சரளமாய் பேசக்கூடிய தாலந்துகளை ஆண்டவர் கொடுத்திருந்ததார். இவருடைய சமரசம் செய்யாத வேதாகம போதனைகள் அநேக படித்த வாலிபர்களின் ஆத்துமாக்களை தூண்டியது. ஆகவே அநேக வாலிபர்கள் மற்றும் யுவதிகள் இயேசுவை ஏற்றுக்கொண்டார்கள். 

இந்நிலையில் 1963 ம் ஆண்டு தியோடர் வில்லியம்ஸ் அவர்களின் வேத வசனங்களை போதிக்கும் வரத்தை அகில இந்தியாவும் கேட்க செய்யும்படி *வேதத்திற்கு திரும்புவோம்* என்ற பெயரில் வானொலி நிகழ்சி ஆங்கிலத்திலும், தமிழில் *சத்திய வசனம்* என்ற வானொலி நிகழ்ச்சி மூலமாக ஒலிபரப்பப்பட்டது.  இதன் மூலம் இவருடைய வேதஞானம் உலகம் முழுவதும் பரவ ஆரம்பித்தது. ஆண்டவர் தியோடர் வில்லியம்ஸ் அவர்களை வல்லமையாக பயன்படுத்தினார். பல நாட்டு திருச்சபைகள் அவருக்கு அழைப்பு கொடுத்தது. இதனால் உலகம் முழுவதும் சென்று வேதாகமத்தை பிரசங்கித்ததால் அமெரிக்க வேதாகம கல்லூரி இவருடைய வேத ஞானத்திற்காக முனைவர் என்ற *வேத பண்டிதர்* பட்டமும் கொடுத்து கௌரவித்தது. 

தியோடர் வில்லியம்ஸ் அவர்கள் வேத ஞானத்தினால் அநேக ஆவிக்குறிய நண்பர்கள் பலரின் தொடர்பு ஏற்பட்டது.  சகோ. சாம் கமலேசன்,  டேனிஸ்பேட்டை சகோ. P. சாமுவேல் மற்றும் சகோ. பிரட் டேவிட், சேலம் Dr. புஷ்பராஜ், மெஞ்ஞானபுரம் எமில் ஜெபசிங் இவர்களுடன் ஐக்கியம் ஏற்பட்டது. இவர்கள் ஒன்றாக சேர்ந்து *நண்பர் சுவிசேஷ ஜெபக்குழு* என்ற நற்செய்திபணி இயக்கம் உருவாவதற்கு தியோடர் வில்லியம்ஸ் அவர்கள் காரணமாய் இருந்தார்கள்.

இந்நிலையில் 1964 ம் ஆண்டில் இந்திய சுவிசேஷ ஐக்கியத்தின் தலைவரா நியமிக்கப்பட்டார்கள். அப்போது இந்தியாவில் நற்செய்திபணிக்கு மேலைநாட்டு மிஷனெரிகளையும் அவர்கள் பண உதவியையும் சார்ந்திராமல், உள்நாட்டு மிஷனெரிகள் இந்தியாவில் உருவாக்கப்பட வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார். மேலூம் நற்செய்தி பணியானது மேற்கத்திய முறைக்கு மாறாக இந்திய முறையில், இந்திய கலாச்சாரத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்றும் கிறிஸ்துவை பற்றி கேள்விப்பட்ட மக்கள் மத்தியிலே ஊழியம் செய்யாமல் கிறிஸ்துவைப் பற்றி அறியப்டாத இடங்களுக்கும் சென்று நற்செய்திபணி செய்யவேண்டும் என்ற அறைகூவல்  விடுத்தார்.  

இதன் காரணமாக 1965 ம் ஆண்டு மூலம் தனது 30 ம் வயதில் *இந்திய அருட்பணி இயக்கம் (IEM)* என்ற மிஷனெரி இயக்கத்தை சில நூறு ருபாய்கள் மூலமாக மிதிவண்டிகள் வாங்கி, சபை பாகுபாடற்ற நிலையில்  அறியப்படாத மக்கள் இனக்கூட்டங்களுக்கு சென்று நற்செய்திபணி அறிவித்தார்.

 தியோடர் வில்லியம்ஸ் அவர்கள் இந்திய அருட்பணி இயக்கத்தில் நான்கு கோட்பாடுகளை மைய்ப்படுத்தினார். 1). நற்செய்திபணி செய்தல், 2). திருச்சபைகளை நிறுவுதல், 3). மருத்துவ ஊழியங்கள் மற்றும் 4). வேதபாட வகுப்புகள் நடத்துதல் என்ற தரிசனத்தோடு இந்தியா முழுவதும் நற்செய்திபணி செய்ய ஆரம்பித்தார்கள்.

தியோடர் வில்லியம்ஸ் அவர்கள் தமிழ்நாட்டு திருச்சபைகளில் மிஷனெர்களின் தரிசனம் கொடுக்க ஆரம்பித்தார். இதனால் திருச்சபையில் எழுப்புதல் ஏற்பட்டதால், அநேக வாலிபர்கள் தங்களை நற்செய்திபணிக்கு அற்பணித்தார்கள். அநேகர் நற்செய்திபணி செய்யும் மிஷனெரிகளின் தேவைக்காக தியாகத்தோடு கொடுக்க முன்வந்தார்கள். இதன் மூலமாக இந்திய அருட்பணி இயக்கம் பெரிய வளர்ச்சி கண்டு இந்தியாவின் பல மாநிலங்களுக்கும் நற்செய்திபணி அறிவிக்க கடந்து சென்றார்கள்.

தியோடர் வில்லியம்ஸ் அவர்கள் நற்செய்திபணி சிறப்பாக செய்வதற்கு ஏற்ற வாழ்க்கை துணையாக எஸ்தர் என்ற பெண்மணியை 1971 ம் ஆண்டில் ஜூன் 14 ம் நாள் திருமணம் செய்துகொண்டார். மேலும் கணவன் மனைவியாக சேர்ந்து நற்செய்திபணி அறிவிப்பதிலும் சமுதாய சேவை செய்வதிலும் தங்களை அற்பணித்துக்கொண்டார்கள். அநேக ஏழை பிள்ளைகளை படிக்க வைக்க நிதி திரட்டி கல்வி கற்று கொடுக்க உதவி செய்தார்கள்.

இந்நிலையில் பெங்களூரில் 1972 ம் ஆண்டு  மெத்தடிஸ்ட் திருச்சபையின் குருவானவராக நியமிக்கப்பட்டார். 

இந்நிலையில் பெங்களூரில் தியோடர் வில்லியம்ஸ் அவர்கள் *விடுமுறை வேதாகம பள்ளி (VBS)* ஏற்படுத்தினார்கள்.
எஸ்தர் அம்மையார் சிறுபிள்ளைகள் மத்தியில் விடுமுறை வேதாக பள்ளி மாணவர்களுக்கு சுவிசேஷ பணியை செய்வதற்கு ஏதுவாக சிறப்பு பாடதிட்டங்களை பெங்களூரில் உறுவாக்கினார்கள். இதனால் அநேக சிறுபிள்ளைகள் இயேசுவை ஏற்றுக்கொண்டு கல்வியிலும் ஒழுக்கத்திலும் வேத அறிவிலும் வளர்ந்தார்கள்.

தியோடர் வில்லியம்ஸ் அவர்கள் இரண்டாம் தலைமுறை நற்செய்திபணி செய்யும் தலைவர்களை உறுவாக்குவதற்காக கர்த்தர் கொடுத்த வேதஞானம் முழுவதையும் பயன்படுத்தி அநேகரை சிறந்த வேதாகம வல்லுனர்களையும், நற்செய்திபணியாளர்களையும் உறுவாக்கினார். இவர்களுக்கு வேதத்தை மிகவும் நேர்த்தியாக கற்றுக்கொடுத்து, ஜெபத்திலும், வேத ஞானத்திலும் அநேக நேரம் செலவு செய்து பல வேதாகம பாட புத்தகங்களையும், ஒலி பேழைகளையும் (CD) வெளியிட்டு தரமான திருச்சபை தலைவர்களை உருவாக்கினார்.

இந்நிலையில் 1975 ம் ஆண்டு தியோடர் வில்லியம்ஸ் அவர்கள் *இந்தி மிஷனெரி ஐக்கியம்(IMA)* தலைவராகவும் நியமிக்கப்பட்டார். இதனால் உலகம் முழுவதும் சென்று இந்திய நற்செய்திபணிகளை குறித்து விளக்கினார். அப்படியே *இந்திய சுவிசேஷ ஐக்கியம் (EFI)* செயலாளராக நியமிக்கப்பட்டு இந்தியாவின் மிஷனெரி இயக்கங்ளிடையே ஐக்கியத்தை பலப்படுத்தி இந்தியாவில் சுவிசேஷம் பல இடங்களுக்கும் செல்வதற்கு சிறப்பாக செயல்பட்டார்.  மேலும் *உலக  சுவிசேஷ ஐக்கியம் (WEF)* தலைமத்துவத்திற்கும் பொறுப்பாய் நியமிக்கப்பட்டு நற்செய்திபணியை இன்னும் சிறப்பாக செய்யும் தலைவர்களை கண்டுபிடித்து அவர்களை பயன்படுத்தினார். இப்படியாக இந்தியாவில் கிறிஸ்துவின் சுவிசேஷம், கொஞ்சம் கொஞ்சமாக எல்லா கிராமங்களுக்கும் செல்ல ஆரம்பித்தது.

இந்நிலையில் எதிர்பாராத விதமாக 39 ஆண்டுகள் குடும்ப வாழ்க்கை நடத்திய  எஸ்தர் தியோடர் அம்மையார் பலவீனத்தின் நிமித்தமாக 2009 ம் ஆண்டு கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்கள். இவர்களுடைய இழப்பு தியோடர் வில்லியம்ஸ் அவர்களை பலமாக தாக்கியது. இதனால் ஆறுமாத காலத்தில் 74 ம் வயதில் தியோடர் வில்லியம்ஸ் அவர்கள் 2009 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 29 ம் நாள் கோதுமை மணியாக விதைக்கப்பட்டார். 

இந்திய மிஷனெரி இயக்கங்களில் தியோடர் வில்லியம்ஸ் அவர்கள் போல் முத்திரை பதித்தவர்கள் வெகுசிலரே. ஏனெனில் சுவிசேஷத்தை பகிர்ந்து கொள்வதற்கும் மிஷனெரிபணியை செய்வதற்கும் கடவுளால் இந்தியாவில் பெரிதும் பயன்படுத்தப்பட்ட பாத்திரம் ஆவார். இந்தியாவில் இவரைப்போல சிறந்த வேதபண்டிதர்கள் எவரும் இல்லை என்றே கூறலாம். அந்த அளவிற்கு கலப்படம் இல்லாத, ஆதாயத்திற்காக அல்லாத, வேத ஞானத்தை போதித்தார்.

 தியோடர் வில்லியம்ஸ் அவர்களை *இந்தியாவின் பில்லிகிரகாம்* என்று அழைக்கும் அளவிற்கு தன்னுடைய நற்செய்திபணியினாலும் வேத ஞானத்தினாலும் ஆயிரக்கணக்கான  கிறிஸ்தவர்களை உயிர்மீட்சி அடைய செய்தார். இந்தியாவில் மட்டுமல்ல, உலக அளவிலும் சிறந்த மிஷனெரி இயக்க தலைவர் என்று அறியப்பட்டார்.  எல்லோராலும் செல்லமாக *அண்ணாச்சி* என்ற அடைமொழியோடு அழைக்கப்பட்டார்.

தியோடர் வில்லியம்ஸ் என்ற ஒரு மிஷனெரி மூலம் ஆரம்பிக்கப்பட்ட *இந்திய அருட்பணி இயக்கம்* இன்று நேப்பாளம், பூட்டான் உட்பட இந்தியாவில் 960 மிஷனெரிகள் நற்செய்திபணி செய்துகொண்டு 116 இன மக்களுக்கு நற்செய்திபணி அறிவித்து, அநேகரை கிறிஸ்துவுக்குள் ஆத்தும ஆதாயம் செய்துகொண்டு இயேசு கிறிஸ்துவின் இராஜியத்தை கட்டிக்கொண்டு இருக்கின்றார்கள்.

 இந்திய அருட்பணி இயக்கத்தின் மூலம் 19 இந்திய மொழிகளில் வேதாகமம் மொழி பெயர்க்கப் பட்டுள்ளது. மேலும் 34 மொழிகளில் நற்செய்திபணி அறிவிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. பல மருத்துவ மனைகள் அமைத்து சமுதாய சேவைகள் செய்துகொண்டு இருக்கின்றார்கள். 24 விடுதிகள் அமைத்து ஆதிவாசி பிள்ளைகளுக்கு கல்வி கற்று கொடுக்கப்படுகிறது. இவைகளுக்கு காரணம் ஒரு மணிதரின் ஆழமான அற்பணிப்பே.

இன்றைக்கு தியோடர் வில்லியம்ஸ் போன்ற அநேக நற்செய்தி பணியாளர்கள் நம்முடைய திருச்சபையில் இருந்து எழும்ப வேண்டும், அதற்காக ஜெபிப்போம். நம்முடைய பிள்ளைகளுக்கு நற்செய்திபணியின் தரிசனத்தையும் கொடுப்போம். ஆமென்.

✝. இதை வாசிக்கின்ற அன்பு தம்பி மற்றும் தங்கையே இன்று நீ கல்வியிலும், சமுதாய அந்தஸ்திலும் உயர்ந்து இருப்பதற்கு, உனக்காக மற்றும் உன்னுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக, நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அழைப்பை ஏற்று, தன்னுடைய வாழ்க்கை, குடும்ப உறவுகள், சொத்து சுகங்கள் யாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு, உன்னுடைய கிராமத்திற்கு வந்து, நற்செய்திபணியையும், சமுதாய நற்பணிகளையும் செய்த பல மிஷனெரிகளை அனுப்பி வைத்த அந்த ஆண்டவருக்கு நீ என்ன செய்ய போகின்றாய்?...நீ வா...நாம் எல்லோரும் சேர்ந்து நம்முடைய தலைமுறையில் இந்திய தேசத்தை ஆண்டவருக்கு சொந்தமாக்குவோம்.
🛐. இந்த மிஷனெரி சரித்திரத்தை வாசிக்கின்ற அன்பு தாய்மார்களே! தகப்பன்மார்களே! உங்கள் பிள்ளைகளை நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இராஜ்யத்தை கட்டும் இந்த கனமான ஊழியத்தை செய்ய ஒரு கல்வி மிஷனெரியாக, சமுதாய முன்னேற்ற மிஷனெரியாக, மருத்துவ மிஷனெரியாக, சுவிசேஷ மிஷனெரியாக இயேசு கிறிஸ்துவுக்கு சேவை செய்ய அற்பணிப்பீர்களா? ஊக்கப்படுத்துவீர்களா? தேவ இராஜ்யம் உங்கள் மூலமாய் தேவை நிறைந்த இந்திய தேசத்தில் கட்டப்படுவதாக. ஆமென்.

சிறுகதை 163-173

163                 மரத்தில் விரதம் 

கரடியின் பிடியிலிருந்து தப்பிக்க இரு நண்பர்களில் ஒருவர் மரத்தில் ஏறிக்கொண்டார் . மற்றவர் செத்தவர் போல் படுத்துக்கொண்டார் . கரடிகள் ஏமாந்தன . இருவரும் பிழைத்தார்கள் . இது நாம் முதலாம் வகுப்பில் படித்த பழைய கதை . 

புதிய புலிக்கதை ஒன்று இன்று நடந்திருக்கிறது . சுமத்திரா தீவில் ஏச் பகுதியில் அடர்ந்த காடுகளைக்கொண்ட வன விலங்குப் பூங்கா உள்ளது . இங்கு விலை உயர்ந்த வாசனைத் திரவிய மூலிகை மரங்கள் , செடிகள் , கொடிகள் நிறைய வளர்த்துள்ளன . வாசனை மரங்கள் கிலோ 30 ஆயிரத்திற்கும் மேலாக விலைபோகும் . அந்த அளவிற்கு மிகக் கிராக்கியான காடுகளாகும் . இந்த அரிய அபூர்வ வாசனை மரக்கட்டைகளை வெட்டி எடுக்க , வன விலங்குகளை வேட்டையாட கிராமவாசிகள் ஆறுபேர் காட்டிற்குள் நுழைந்தனர் . 

அங்கு குறுக்கிட்ட புலிக்குட்டி ஒன்றைப் புள்ளிமான் என எண்ணி வேட்டையாடிக் கொன்றுவிட்டனர் . இதைக் கண்டு ஆவேசம் மூண்டபுலிகள் ஆங்காரத்துடன் ஆறுபேரையும் விரட்டியது . ஒரு நபரை அடித்துக்கொன்றது . மற்ற ஐந்து பேரும் ஒரு பெரிய மரத்தில் ஏறிக்கொண்டனர் .

 புலிக்கூட்டம் மரத்தடியில் இரவு பகலாக மூன்று நாட்கள் முற்றுகை யிட்டன . தர்ணா செய்தன . மரத்தில் ஏறினவர்கள் இறங்கித்தானே ஆக வேண்டும் என்று புலிகள் நினைத்தன . ஆனால் மனிதன் புத்தி , சித்தி , சக்திகளில் வல்லவனாச்சே . மரத்தில் மூன்றுநாட்களாகத் தண்ணீரும் , உணவும் இன்றி விரதம் இருந்தார்கள் . அவர்களிடம் செல்போன் இருந்தது . புலிகள் ஓடிவிடும் என்ற நம்பிக்கை இழந்ததால் கிராமத்திற்குத் தகவல் கொடுத்தார்கள் . 

கிராம மக்கள் தடிகள் , தப்பட்டைகளுடன் ஆயுதங்கள் ஏந்தி பெரும்படையாகத் திரண்டு வந்தார்கள் . புலிகளை விரட்டி ஐவரையும் காப்பாற்றினார்கள் . இது நடந்தது 8 . 7 . 2013 அன்று . 


164                  மாதிரியாக இரு

 என் நண்பர் ஆபிரகாம் பொன்னு சொன்ன ஒரு செய்தி என் உள்ளத்தைக் தொட்டது . பிஷப் ஃபுல்டர் மனிதநேயர் , சமூகப் பற்றாளர் . வானொலிச் செய்தியில் வல்லவர் . 

அவரது ஊழியத்தின் ஒரு நாள் அனுபவத்தைக் கூறினார் . “ நான் ஆப்பிரிக்காவில் ஒரு கிராமத்திற்குச் சென்றேன் . அது ஒரு தொழு நோயாளிகளின் குடியிருப்பு . 500 பேரைக் குடியமர்த்தி இருந்தார்கள் . அவர்கள் ஒவ்வொருவருக்கும் இயேசுவின் உருவம் பொறித்த தங்கச் சிலுவை கொடுக்க விரும்பினார் . முதலாவது சிலுவையைப் பெற்றுக்கொள்ள வந்தவரின் இடதுகை விரல்கள் அழுகி இருந்தன . வலது கையில் வெள்ளைத் தழும்புகள் . பார்க்க அருவருப்பாயிருந்தது . சிலுவையைக் கொடுக்கும் போது என் கை அவர் தோல் மீது பட்டு விடாமல் வலது கையை ஒரு அங்குலம் உயர்த்தி அவரது உள்ளங்கையில் போட்டேன் . எனக்குள் ஓர் குற்ற உணர்வு ஏற்பட்டது . என் பாவத்திமிரை உணர்ந்தேன் . எனக்குள் தூய ஆவியானவர் ஊடுருவிப் பாய்ந்தார் . " 

“ இங்குள்ள 500 தொழுநோயாளிகளோடு என்னையும் சேர்த்து 501 பேர் இருக்கிறோம் . தியாகச் சின்னமான சிலுவையைக் கையில் எடுத்தேன் . என்னையும் ஒரு தொழுநோயாளியாகக் கண்டேன் . அந்த மக்களோடு மக்களானேன் . அழுகிய அவர்களில் சிலுவைச் சின்னத்தைக் கண்டேன் . சீழ்படிந்த அந்தக்கரங்களை நன்றாகப் பிடித்து கையைக் குலுக்கிப் பின்பு சிலுவையைக் கொடுத்தேன் . எனக்குச் சொல்லமுடியாத மகிழ்ச்சியும் எழுச்சி யும் ஏற்பட்டது . "

 " நீங்கள் எங்களைப் பின்பற்றும்படிக்கு நாங்கள் உங்களுக்கு மாதிரியாக இருக்கவேண்டும் என்றே அப்படிச் செய்தோம் ” ( 2 தெச . 3 : 9 ) . 


165               தடுமாற்றம்   

ஓட்டப்பந்தய வீராங்கனை Shiny Wilson அவர்களது Favourite 800 மீட்டர் ஓட வேண்டிய நாள் அது. பல பயிற்சி, பல முயற்சி, அயராது உழைத்து, பதக்கத்தை கைபற்ற வேண்டிய நாள். ஓட்டம் ஆரம்பித்தது சிறப்பாக ஓடி முடித்து வெற்றி வாகை சூட காத்திருந்த போது அந்த அதிர்ச்சியான அறிவிப்பு. Shiny Wilson தங்க பதக்கம் பெறவில்லை மாறாக தகுதி நீக்கம் செய்யப்பட்டார். காரணம் 800 மீட்டர் ஓட்டத்தில் அவர்களுடைய ஓடு பாதையை 200 மீட்டர் வரை அந்த கோட்டை விட்டு மாறக்கூடாது. ஆனால் Shiny Wilson 200 மீட்டர் முன்பாகவே மாறிவிட்டதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார் என்று அறிவித்தனர். உள்ளம் உடைந்துப் போனார். எப்படி இந்த தடுமாற்றம் ஏற்பட்டது என்று ஆராய்ந்து பார்க்கும் போது, 200 மீட்டர் முடிவில் ஒரு சிவப்பு நிற கொடி இருக்கும் அது தான் அவர்களுடைய அடையாளம். ஆனால் அன்றைய தினம் அங்கு மஞ்சள் மற்றும் சிவப்பு நிற கொடி இருந்தது. முதலில் மஞ்சள் நிறக் கொடி இருந்ததால் அது தான் அடையாளம் என்று நினைத்து, தடுமாறினேன் என்று வருத்தத்தோடு கூறினார். ஒரு சிறிய தவறினால் தடுமாற்றம் அடைந்து முடிவில் ஒரு பெரிய இழப்பை உண்டாக்கி, அன்றைய நாள் Shiny Wilsonனின் gold medal பறிபோனது மட்டும் அல்ல இந்தியாவிற்கே ஒரு பெரிய இழப்பாக மாறியது. 

வாலிபனே இன்றைக்கு உங்களுடைய வாழ்க்கையில் ஒரு சிறிய தடுமாற்றம், அல்லது ஒரு தவறான முடிவு கண்டிப்பாக ஒரு பெரிய பாதிப்பிலும், இழப்பிலும் தான் கொண்டு சேர்க்கும். எனவே உங்களுடைய வாலிபத்தில் பரிசுத்தத்தைக் காத்துக்கொள்ள உங்களின் தெளிவான தீர்மானமும், எடுத்த தீர்மானத்தில் உறுதியும் மிக அவசியம். 

ஒரு செத்த ஈ முழுப் பரிமள தைலம் முழுவதையும் நாறிப் போகப் பண்ணும். அதே போல் உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் தடுமாற்றத்தின் போது தவறான தீர்மானம் பரிசுத்தத்தை கெடுத்து உங்கள் வாலிபத்தின் நறுமணத்தை பாழாக்கும். கர்த்தரை சார்ந்து முடிவு எடுக்கும் போது அவர் உங்களுக்கு உதவி செய்து உங்களில் ஜீவ வாசனையை பரவச் செய்வார். ஆமென். 

இயேசுவே, என் காலடிகள் வழுவாதபடிக்கு, என் நடைகளை உமது வழிகளில் ஸ்திரப்படுத்தும். ஆமென். (சங்கீதம் 17:5)


 166            தாழ்மை தந்த மேன்மை 


மேற்கு வங்கத்தில் நிர்ஜா ராணி . படிப்பில் படுசுட்டி . நூற்றுக்கு நூறுதான் வாங்குவாள் . ஒரு ரயில்வேத் தொழிலாளியின் மூத்தமகள் . எப்போதும் சிரித்த முகம் . எல்லோருக்கும் உதவும் சுபாவம் . அப்பா நோயாளி . படுத்த படுக்கை . 

1968 இப் பள்ளியிறுதித் தேர்வில் மாநில அளவில் மதிப்பெண்கள் வாங்கினாள் . மேலே படிக்க வழியில்லை . பங்கிம் சந்திரர் கல்லூரி முதல்வரை பார்க்கச் சென்றார் . கல்லூரியில் குப்பை கூட்டிப் படித்தாள் . பி . எஸ்ஸி தேர்வில் முதல் தரமாக வந்தாள் . 

கல்லூரியில் எழுத்தர் பதவி கிடைத்தது . நூறு ரூபாய் சம்பளம் . ஒரு தம்பியையும் , தங்கையையும் படிக்க வைத்தாள் . எம் . எஸ்ஸி தேர்விலும் நல்ல மதிப்பெண்களும் நற்பெயரும் பெற்றாள் .

 1986 இல் அரசு கல்லூரியில் விரிவுரையாளர் ஆனாள் . பின்பு பி . எச்டி ஆய்வுப்பட்டமும் பெற்றாள் . அவள் படித்த கல்லூரியில் முதல்வர் பதவி காலியானது . 

முதல்வர் தேர்விலும் முதல் தரமாக வந்தாள் . கல்லூரி முதல்வர் ஆனாள் . "

 தாழ்மை உள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார் ” ( 1 பேது . 5 : 5 ) . 



167          யானையின் ஞானம் 

மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரம் . இரு யானைகளும் , ஒரு குட்டியும் தண்ணீர் தாகத்தால் சமவெளிப்பகுதிக்கு வந்துவிட்டன . கல்லிடைக் குறிச்சி என்ற கிராமத்தினுள் புகுந்தது . புஞ்செய் நிலத்திலுள்ள பாசனக் கிணற்றின் பக்கம் வந்தது . அதன் அருகே ஒரு பெரிய தண்ணீர் தொட்டி இருந்தது . அதில் தண்ணீர் குடிக்கும் போது குட்டியானை தண்ணீர் தொட்டியில் விழுந்துவிட்டது .

 பெரிய யானைகள் இரண்டும் தங்கள் தும்பிக்கைகளினால் தூக்கிவிட முயன்றன . ஆனால் குட்டியானை அவைகளின் பிடிகளிலிருந்து நழுவி விழுந்தது . 

பலமுறை முயன்றும் குட்டியானையைத் தூக்கி விட முடியவில்லை . இறுதியாக இரு யானைகளும் ஒன்றிணைந்து தொட்டியிலுள்ள தண்ணீரை தும்பிக்கையால் உறிஞ்சி உறிஞ்சி வெளியே கொட்டியது . தொட்டி வறண்டது . 

இப்பொழுது குட்டியை எளிதாகத் தூக்கி வெளியே விட்டன . தொட்டியில் நீர் நிறைந்திருக்கும்போது பிடிமானம் கிடையாமல் தூக்கி விட முடியவில்லை . தண்ணீரைக் காலிபண்ணி குட்டியைத் தூக்கிவிட வேண்டும் என்ற ஞானத்தைக் கடவுள் கொடுத்திருக்கிறார்

 என்றெண்ணி வியந்தேன் . நான் முதலாம் வகுப்புப் படிக்கும்போது , தாகத்தோடு வந்த இரு காகங்கள் பானையில் தண்ணீர் பாதியாய் இருந்தமையால் தண்ணீர் குடிக்க முடியாமல் தவித்தன . பின்பு கற்களை பானைக்குள் பொறுக்கிப்போட்டு தண்ணீர்மேலே வந்தவுடன் தாகம் தீர்ந்து சென்ற காக்காக் கதை நினைவிற்கு வந்தது . " 

மாடு தன் எஜமானையும் , கழுதை தன் ஆண்டவனின் முன்னணையையும் அறியும் ; இஸ்ரவேலோ அறிவில்லாமலும் , என் ஜனம் உணர்வில்லாமலும் இருக்கிறது ” ( ஏசா . 1 : 3 ) . 


168            களிமண் உருண்டை

 வெளிநாட்டுப் பயணி ஒருவர் பழைய சீனாவிற்குச் சென்றிருந்தார் . ஒரு விக்கிரக வழிபாட்டுக் கோயிலின் திருவிழாவைக் காணச்சென்றார் . உருவ வழிபாட்டின் உச்ச கட்டம் . ஆட்டம் , பாட்டம் , பேயாட்டம் , காலாட்டம் , கரகாட்டம் என்று பல ஆட்டங்கள் நடந்து முடிந்தபிறகு விந்தையான ஒரு வழியாக நடந்தது . 

அந்த விக்கிரக தெய்வத்தின்மீது நம்பிக்கை வைத்திருக்கிற ஒவ்வொருவரும் தங்கள் வேண்டல்களை ஒரு தாளில் ஜெபமாக எழுதிக் கைகளில் வைத்திருந்தார்கள் . அங்கு களிமண் உருண்டைகள் விற்பனைக்கு இருந்தன . நபருக்கு ஒரு உருண்டைதான் தரப்படும் . தங்கள் ஜெப விண்ணப்பத்தாளை களிமண் உருண்டையில் ஒட்டி விக்கிரகத்தின்மீது எறிய வேண்டும் . ஒவ்வொருவராகக் குறிபார்த்து எரிந்தார்கள் .

 சிலருக்குக் குறி தவறிவிட்டது . பலருடைய உருண்டைகளில் ஒட்டி இருந்த தாள்கள் கீழே விழுந்துவிட்டன . இப்படியாக ஒரு சில விண்ணப்பங்கள் மட்டும் விக்கிரகத்தின் மீது ஒட்டின . களிமண் உருண்டையோடு ஓட்டிய விண்ணப்பங்கள் மட்டுமே கேட்கப்படும் என்பது அவர்கள் நம்பிக்கை .

 விக்கிரகத்தின் மீது விழாத விண்ணப்பத் தாரர்கள் வெட்கியும் , ஏமாந்தும் , கவலையோடும் வீட்டிற்குத் திரும்பினர் . இதைக் கேள்விப்பட்ட வெளிநாட்டுப்பயணி மிகவும் வருந்தினார் . 

வழிபாடுகளில் மூடக்கருத்துக்கள் எத்தனை வடிவங்களில் உள்ளன ? தேவைகளை இறைவனிடம் நேரே விண்ணப்பிக்கலாமே . " கேளுங்கள் கொடுக்கப்படும் என்றுதானே தேவாதிதேவன் சொல்கிறார் .

 " ஈசன் அருளைப் பெறுவதிலும் இடையே தரகர்க்கு இடமுண்டோ ? " என்று உமர்கய்யாம் புலவர் பாடுகிறார் . "

 என்னை நோக்கிக் கூப்பிடு , அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து நீ அறியாததும் , உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன் ” ( எரே 33 : 3 ) , 



169            மன்னிப்பு தேனிலும் இனிமை

 வடதிருநெல்வேலியில் கைலாசபுரம் என்றோர் ஊர் உள்ளது . போக்கு வரத்து வசதிகளற்ற அந்நாட்களில் அவ்வூரில் ரயில் நிலையம் இருந்தது . வீட்டுக்கொருவர் வெளிநாடு போய் பலர் காரைவீடும் கால்வரை வேட்டியும் கட்டி வசதியாக வாழ்ந்தார்கள் . 

எனவே பூலோகக் கைலாசம்போல் விளங்கிய அவ்வூருக்குக் “ கைலாசபுரம் ” என்ற பேர் வந்தது . கிறிஸ்தவக் குடியிருப்புகளும் , இந்துக் குடும்பத்தினரும் சரிசமமாய் வாழ்ந்தார்கள் . 

வெள்ளையா , வேதமுத்து என்ற இருவரும் இணைபிரியா நண்பர்கள் . வெள்ளையா இந்து சகோதரர் . வேதமுத்து கிறிஸ்தவர் . அந்த ஊராருக்கு அது ஆச்சரியமாய் இருந்தது .

 வடநெல்லையில் அதிகமாக உழைத்த மிஷனெரி கேர்ண்ஸ் ஐயர் . அவரும் இரட்டையர் போன்றிருந்த அவர்களின் நட்பைக் குறித்து பெருமையாகப் பேசினார் . கேர்ண்ஸ் புதியம்புத்தூரைச் சுற்றியுள்ள கிராமங்களில் பள்ளி களையும் , கோயில்களையும் உண்டுபண்ணினார் . சமூகப் பணிகளையும் செய்தார் . 

பக்கத்திலுள்ள பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையில் புகுந்து நற்செய்தி நவின்றார் . 1871ஆம் ஆண்டு மே மாதம் பத்தாம் தேதி கைலாசபுரம் வந்திருந்தார் . மக்கள் வெகுவாக நேசித்த மேநாட்டு மிஷனெரி அவர் . 

வெயிலின் கொடுமை அகோரமாயிருந்தது . கேர்ண்ஸ் தம் கூடாரத்தின் பக்கம் ஒரு மரத்தடியில் அமர்ந்து ஒரு நூலைப் படித்துக்கொண்டிருந்தார் . 

இந்து நண்பர் வெள்ளையா , ஐயர் பக்கம் வந்து கவலையோடு நின்றார் . “ வெள்ளையா , தனியா வரமாட்டீங்களே , உங்கள் நண்பரை எங்கே ? கவலையா இருக்கீங்களே காரணம் என்ன ? " ஐயர் நலம் விசாரித்தார் . 

“ வேதமுத்து கொஞ்சநாளா பேசுறதே இல்ல , என்னைவிட்டு விலகிப் போறார் . எனக்கு ரொம்ப கவலையா இருக்கு . துரைதான் எங்களை சேர்த்து வைக்கனும் ” வெள்ளையா வெள்ளை மனதோடு சொன்னார் . துரை வேதமுத்தை அழைத்தவர ஆள் அனுப்பினார் .

வேதமுத்து வரும்போது வெள்ளையா வணக்கம் சொன்னார் . வேதமுத்து அதைக் கண்டுகொள்ளாமல் வீராப்புடன் நடந்து சென்றார் . பின்பு மிஷனெரியிடம் சென்று கும்பிடுகிறேன் என்றார் . மிஷனெரிக்கும் , வேதமுத்திற்கும் உரையாடல் நடந்தது .

 " அதோ இருக்கும் வெள்ளையா . உங்கள் நண்பர்தானே ? " " அது ஒரு காலத்தில் . இப்போ ஒட்டு உறவு ஒண்ணும் கிடையாது . ' " அப்படி வெறுப்பாகப் பேசக்கூடாது . இருவரும் ஒருவரையொருவர் மன்னித்து நட்பைத் தொடருங்கள் . ' '

 " பொய்காரப்பயலை மன்னிக்க முடியாது

 " அப்படிச் சொல்லக்கூடாது . நீங்கள் மன்னிக்கவும் மன்னிப்புக் கேட்கவும் தயாராக இருக்கவேண்டும் . ' 

" நான் ஏன் மன்னிப்புக் கேட்க வேண்டும் ? ஊர்ல என்னைப்பற்றிக் கேட்டுப்பாருங்க துரை ? ” 

“ ஒருவன் தன்னில்தானே நீதிமானாயிருக்கமுடியாது , அதிருக்கட்டும் , இப்போ அவர் உமது நட்பை நாடுகிறார் . சமாதானமாய் இருக்க விரும்புகிறார் . அவருடைய தவறுகளுக்கு வருந்துகிறார் . மீண்டும் சிநேகமாய் இருங்கள் .

 " திடீரென்று கிறிஸ்தவ வேதமுத்து முழந்தாளிட்டார் . கைகளை வானத்திற்கு நேராக விரித்தார் . சத்தம் போட்டு ஜெபித்தார் . 

“ தேவனே , இயேசுவே , இங்கே நிற்கிறானே வெள்ளையா , அவன் துரைமுன் நடிக்கிறான் . அவன் பொய் சொன்னான் . கடைசி நியாயத்தீர்ப்பு நாளில் அவன் செய்த பாவம் வெளிப்படும் . ஆமென் ” என்றார் .

 கேர்ண்ஸ் ஐயர் மிகவும் வருந்தினார் . “ நீர் ஒரு கிறிஸ்தவப் பரிசேயர் , உத்தம மனஸ்தாபத்தோடு முதலில் ஆண்டவரிடம் மன்னிப்புக் கேளும் . கடின வைராக்கியம் கூடாது , கசப்பு உம்மை சிறியவராக்கும் .

 மன்னிப்பைப் பெறுவது தேனிலும் இனிமையானது . ஆனால் மன்னிப்பதோ அதைவிட இனிமையாது " என்றார் .

 வேதமுத்து மன்னிப்புக் கேட்க மனமின்றி கல்மனதோடு வீட்டிற்குச் சென்றார் . தம் கூடாரத்தினுள் சென்ற கேர்ண்ஸ் ஐயர் குமுறி அழுதார் . மன்னிக்கத் தெரிந்த மாந்தரின் இதயம் இறைவன் குடியிருக்கும் இனிய ஆலயம் . ( காலக்குறிப்பிற்கு ஆதாரம் “ மாணிக்கக் கற்கள் ” ) . 

170.                     ஓரம் போ!!! 


பரப்பரப்பான நகரத்தின் சாலை அது. வாகனங்கள் அங்கும் இங்குமாக அலைமோதிக் கொண்டிருந்தன. ‘பீங்! பீங்!’ என வாகனங்கள் எழுப்பிய சத்தங்கள் காதைத் துளைத்தன. சாலையோரங்களில் நின்று கொண்டிருந்தவர்கள் சாலையைக் கடக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தனர். அந்நேரத்தில் “சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்” என வேகமாக அந்த வாகன நெரிசலை உடைத்துக் கொண்டு முகிலனின் சைக்கிள் வந்து கொண்டிருந்தது.

 சாலையின் ஓரமாக முகிலன் சைக்கிளை வேகமாகச் செலுத்திக்கொண்டிருந்தான். அவனுக்கு முன்னால் சைக்கிளின் பிடியைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருக்கும் குமரன் நடுங்கியே போய்விட்டான். “வேகமா போவதே! பயமா இருக்கு..” எனக் கத்தினான் குமரன். முகிலன் அதையெல்லாம் காதில் வாங்கிக் கொண்டதாகத் தெரியவில்லை.

 அவன் சைக்கிளைப் பலம் கொண்டு மிதிப்பதிலேயே கவனமாக இருந்தான். உணவகத்தில் அமர்ந்திருந்தவர்களில் சிலர் முகிலனைப் பார்த்து ஏதோ முணுமுணுத்தனர். “ஸ்கூல் உடுப்பைப் போட்டுக்கிட்டு… பாருங்க… என்ன பண்றானுங்க நம்ப பையனுங்க” என ஒருவர் ஆதங்கத்தோடு கூறினார்.

 முகிலன் காதில் எதுவுமே விழவில்லை. சைக்கிளின் மிதியை மேலும் வேகமாக மிதித்தான். குறிப்பிட்ட நேரத்திற்குள் அங்குப் போய் சேர்ந்தாக வேண்டும் என மட்டுமே நினைத்துக் கொண்டிருந்தான். மதிய வெயில் தலையைச் சுட்டது. 

ஒரு முற்சந்தியை நெருங்கியது முகிலனின் சைக்கிள். எதிரே வாகனம் வந்தால்கூட தெரியாத அளவிற்கான வளைவு அது. முகிலன் கொஞ்சம்கூட சைக்கிளின் வேகத்தைக் குறைக்கவில்லை. குமரன் கண்கள் இரண்டையும் இறுக மூடிக் கொண்டான்.

 ‘எதிரில் கார் வருது… என்ன இந்தப் பையனுங்க சைக்கிளை இப்படி ஓட்டுறானுங்க?’ என அந்தத் திருப்பத்திற்கு அருகில் நின்று கொண்டிருந்த ஒரு பெரியவர் நினைத்தார். “முகிலன்ன்ன்ன்! பார்த்து..” எனக் கத்தியே விட்டான் குமரன்.

 “கவலைப்படாத குமரா! நான் உன்னைப் பத்திரமா போய் சேர்த்துருவேன்” எனக் கூறிவிட்டு சைக்கிளின் வேகத்தை மேலும் கூட்டினான் முகிலன். ‘என்ன நடந்தாலும் குமரனை உடனே போய் அங்க சேர்த்திடணும்’ என முகிலன் மனதில் உறுதி எடுத்துக் கொண்டான். 

சாலையில் முகிலன் சைக்கிள் ஓட்டுவதைப் பார்த்த பலர் அவனைத் திட்டியிருப்பார்கள். கடுமையான சொற்களைக் கொண்டு அவன் மீது கோபம் கொண்டிருப்பார்கள். முகிலனின் கால்கள் அதை உணரவில்லை. அவனுடைய குறிக்கோள் அனைத்தும் உரிய நேரத்தில் குமரனைக் கொண்டு சேர்ப்பதுதான். 

10 நிமிடத்திற்குள் முகிலனும் குமரனும் சைக்கிளுடன் விவேகானந்தா தமிழ்ப்பள்ளியின் வளாகத்திற்குள் நுழைந்தார்கள். மணி 2.00-ஐ நெருங்கியிருந்தது. சைக்கிளை ஓரமாக நிறுத்திவிட்டு குமரனின் புத்தகப்பையை எடுத்துக் கையில் வைத்துக் கொண்டு முகிலன்தான் முன்னே ஓடினான்.

 “சார்ர்ர்ர்ர்.. நடனப் போட்டி எந்த இடத்துலே நடக்குது?” என மூச்சிரைக்க எதிரில் வந்த ஆசிரியரிடம் கேட்டான் முகிலன். 

பிறகு மேலே இரண்டாவது மாடியிலுள்ள மண்டபத்தை நோக்கி ஓடினான். குமரன் திகைப்புடன் முகிலனைப் பின் தொடர்ந்து ஓடி வந்து கொண்டிருந்தான். மண்டபம் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என நிறைந்து காணப்பட்டது. அங்கும் இங்கும் தேடியப் பிறகு முகிலன் குமரனின் நண்பர்கள் ஓர் ஓரமாய் கவலையில் அமர்ந்திருப்பதைப் பார்த்துவிட்டான். 

குமரனின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு அவர்களை நோக்கி ஓடினான். “குமரன் வந்துட்டான்! குமரன்…” அங்கிருந்தவர்கள் எல்லோரும் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தனர். குமரன் சரியான நேரத்திற்குப் போயிருக்காவிட்டால் அவர்களின் 7 பேர் அடங்கிய நடனக்குழு போட்டியில் பங்கெடுத்திருக்க முடியாது. அவசர அவசரமாக குமரனும் அவனுடைய குழு உறுப்பினர்களும் உடையை மாற்றிவிட்டு நடனத்திற்குத் தயாராகினார்கள். 

பாடல் ஒலித்ததும் குமரனின் குழு மிகச் சிறப்பாக ஆடத் துவங்கினர். குமரன் ஆடிக் கொண்டிருந்தாலும் அவனுடைய கலங்கிய கண்கள் மண்டபத்தில் தன்னுடைய நண்பன் முகிலன் எங்கு நின்று கொண்டிருக்கிறான் என்றே தேடிக்கொண்டிருந்தன.  

என் அன்பு வாசகரே, நண்பர்கள் இல்லையேல் இந்த உலகம் இல்லை என்கிற அளவுக்கு மிகவும் இன்றிமையாதது நட்பு. நமக்காக எந்த ஒரு சூழ்நிலையையும் தாங்கக்கூடிய நட்பு கிடைக்கப்பெற்றவர்கள் பாக்கியவான்கள் என்றே கூறலாம். 

நம் எல்லோருக்கும் தெரிந்த அழகிய பழமொழி ஒன்று உண்டு. "ஆபத்தில் உதவுபவனே உற்ற நண்பன் ஆவான்" என்று. அதற்கேற்ப இன்றைய கதையில் முகிலன் தன்னுடைய கால்கள் வலிக்கிறது என்றோ, பிறர் என்ன கூறுகிறார்கள் என்றோ அவன் சிந்தியாமல் குமரனை ஏற்ற நேரத்தில் ஏற்ற இடத்தில் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற குறிக்கோளோடு மாத்திரம் இருந்தான்.

 அதுபோலவே நம்மை  நித்திய ராஜ்ஜியத்தில் சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோள் மாத்திரமே நம் அருமை நண்பர் இயேசுவிடம் இருந்தது. 

ஜனங்கள் அவரை காறி துப்பிய போதும், தலையில் குட்டிய போதும், சிரசில் முள்முடி சூட்டிய போதும், வாரினால் அடிபட்ட போதும், கைகள் கால்களில் ஆணிகள் கடாவிய போதும், சிலுவையில் அறைந்த போதும், ஈட்டியால் குத்தப்பட்ட போதும் அவருடைய நோக்கம் பாவத்திலிருந்து அனைவரையும் மீட்டு நித்திய ராஜ்ஜியத்தில் கொண்டு சேர்ப்பதாய் மாத்திரமே இருந்தது. அதனால் தான் தனக்கு மிகுந்த வேதனை தரக்கூடிய எல்லாவற்றையும் நமக்காக அவரே தாங்கினார்.

 சாலெமோன் ஞானி இவ்வாறாக கூறுகிறார், சிநேகிதருள்ளவன் சிநேகம் பாராட்டவேண்டும்; சகோதரனிலும் அதிக சொந்தமாய்ச் சிநேகிப்பவனுமுண்டு. நீதிமொழிகள் 18:24 

நம்மை நம்முடைய சகோதரர்களை விட, பெற்றோரை விட, இன ஜன பந்தங்களை விட அதிகமாய் நேசித்து, தன்னுடைய உயிரையே தியாகமாய் தந்து, நம்மை மீட்ட  இயேசு கிறிஸ்தவை இன்று முதல் அருமை நண்பராக ஏற்றுக்கொள்வோம்.

 நம்முடைய சிநேகத்தை (அன்பை) அதிகமாய் அவரிடம் காட்டுவோம், அவரே சகல நாட்களிலும் நம்மோடு இருந்து நமக்காக எல்லாவற்றையும் செய்து நம்மை நித்திய ராஜ்ஜியத்தில் கொண்டு சேர்க்கும் வரை நமக்கு நல்ல நண்பராய் இருந்து நம்மை அனுதினமும் வழிநடத்துவார். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்


 171        உருளைக்கிழங்கு ஜெபம் "


 குற்றாலம் ஆவிக்குரியக் கூட்டத்திற்கு இன்னும் மூன்றே நாட்கள்தான் இருக்கு . " பாக்கியம் தங்கச்சிக்கு தரையில் கால் பரவவில்லை படுகுஷி !

 " ஐ . . . . ஐ . . . நாங்க குற்றாலம் போறமே " பாக்கியம் குதித்தாள் , குதூகலித்தாள் . " அங்க நல்ல அருவிக் குளிப்பு , அதிருசியான சாப்பாடு , ஆடல் பாடல்களோடு அருளுரை . . . ஆமா . . . இன்னும் மூணே நாள்தான் . . . " எட்டாம் வகுப்புப் படிக்கும் பாக்கியம் சென்ற ஆண்டு குற்றாலம் மாணவர் முகாமிற்குச் சென்று புதுவாழ்வு பெற்று வந்தாள் .

 பொய்யும் , சூதும் வாதுமாயிருந்த பாக்கியம் புதுமனுஷி ஆகிவிட்டாள் . அவள் பெற்றோரும் மற்றோரும் அவளிடம் பெரிய மாற்றத்தைக் கண்டார்கள் . அதைப் பார்த்த அநேகம் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை குற்றாலம் கூட்டத்திற்கு அனுப்ப ஆசைப்பட்டனர் .

 பாக்கியம் தன்னோடு படிக்கும் மற்ற நான்கு பிள்ளைகளை குற்றாலம் போக ஆயத்தப்படுத்திவிட்டாள் . குற்றாலம் சீஷனில் ஆண்டுதோறும் நடக்கும் அந்தக் கூட்டம் . ஆசீர்வாதம் நிறைந்ததாகவும் , ஆத்துமாக்களை உயிர்ப்பிக்கிறதாகவும் இருந்தது . குற்றாலம் பாறையடி பங்களாவில் , நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளிலுமிருந்து வந்த மாணவியர் நூற்றுக்கணக்கில் குழுமினர் . 

சாரல் இதமாக இருந்தது . பிள்ளைகள் பட்டாம்பூச்சிபோல் கூட்டம் கூட்டமாக ஆடிப்பாடி ஆனந்தம் கொண்டனர் . மலைக்காட்சி மகிழ்ச்சியும் ரம்மியமுமாய் இருந்தது . 

காய்கறிகளை சுத்தம் செய்ய பத்துப் பிள்ளைகள் ஒருமணி நேரம் மட்டும் வந்து உதவி செய்யவேண்டும் என்று பாலிர்நேசன் தாத்தா கேட்டிருந்தார் . பாக்கியம்தான் முதலில் கைத்தூக்கினாள் . “ கூட்டங்களிலும் பங்கெடுக்க வேண்டும் , உதவியும் செய்யவேண்டும் " என்று பாக்கியம் தீர்மானித்துக் கொண்டாள் . சமையலுக்கு வரும் அந்த அம்மாக்களில் , 

ஓர் அம்மாவிற்கு சற்று சுகமில்லை . எனவேதான் பிள்ளைகளை உதவிக்குக் கூப்பிடும் தற்காலிக ஏற்பாடு . உருளைக் கிழங்கை தோல் சீவி சுத்தம் செய்யவேண்டும் . மதியம் உருளைக்கிழங்கு பொறியல் , வாழைக்காய் அவியல் . பத்துப்பிள்ளைகளும் சுழன்று பம்பரமாக வேலை செய்தனர் . ஆனால் பாக்கியம் நிதானமாக மிகச் சுத்தமாகத் தோல் சீவினான் . 

" பிள்ளைகளா , சீக்கிரம் வேலை செய்யுங்கள் . இன்னிக்கு பி . சேமியல் அண்ணன் பிரசங்கம் . பிரேமாக்கா பாட்டுச் சொல்லிக் கொடுப்பாங்க . பிந்திரக்கூடாது ' என்றாள் பாக்கியத்தின் தோழி கனகா . 

மிஷனெரி அக்காள் பாக்கியத்தை கவனித்தாள் . பாக்கியம் ஏதோ முனுமுனுத்துக்கொண்டே மெதுவாகவும் , சுத்தமாகவும் வேலை செய்தாள் . "

 என்னடீ பாக்கியம் . நீ உருளைக்கிழங்குகிட்டே என்ன பேசுறா ? சீக்கிரம் செய்வியா ? ” என்றாள்

 மிஷனெரி . மற்றப் பிள்ளைகள் சிரித்தார்கள் . உடனே பாக்கியம் சத்தமாகச் சொன்னாள் : " அக்கா , நான் உருளைக்கிழங்கை மட்டும் வெட்டல்ல ; இந்த உருளைக் கிழங்கை சாப்பிடப் போகிற பிள்ளைகள் அனைவரும் இரட்சிப்பின் புதுவாழ்விற்குள் வரவேண்டும் என்று ஜெபித்துக்கொண்டே காய்கறிகளை நறுக்குகிறேன் ” என்றாள் . 

ஆத்தும் பாரம்கொண்ட பாக்கியத்தை அனைவரும் பாராட்டினர் . " ஆவியின் சிந்தையோ ஜீவனும் , சமாதானமுமாம் ” ( ரோமர் B : 6 ) . 



172                       தரிசனம் 


ராமநாதபுரம் வட்டாரத்தில் சிறப்பான ஊழியம் செய்த மேனாட்டு மிஷனரி    ஜே . ஏம் . ஸ்ட்ரான் . ஒரு நாள் அவருக்குக் கிடைத்த தரிசனம் உரையாடல் ரூபத்திலிருந்தது . " ஸ்ட்ரான் . நீ நாளை நடக்கும் பாம்பன் கோயில் கொடைவிழாவிற்கு மாலையில் போ . "

 " ஐயா , ஆண்டவரே ! அந்த மக்கள் குடித்து வெறித்துக் கும்மாள மிடுவார்கள் . பச்சை இரத்தம்குடித்துக் கொச்சையாக ஆடுவார்கள் . அங்கு போனால் ஆபத்து " என்றார் மிஷனரி . " இல்லை . நீ கட்டாயம் போக வேண்டும் . திரளான மக்கள் கூடுவார்கள் . உன்னை அனுப்பிகிறவர் நானல்லவா . பயப்படாதே . " ஸ்ட்ரான் ஐயர் தயங்கினார் . 

ஆயினும் தரிசனத்தை அலட்சியம் செய்யக் கூடாதே என்று தடுமாறினார் . 1865 ஆம் ஆண்டு டிசம்பர் 23ம் தேதி . பாம்பன் நகரிலுள்ள அம்மன் கோயிலில் கொடைவிழா நடந்தது . பெரும் விழாவாக நடக்கும் . சாராயம் குடம் குடமாகப் புரளும் . பலர் கள்ளில் குளித்து மூழ்குவர் . இன்னும் பலர் களி நடம் புரிந்து ஆடுவர் . ஆடு கோழிகளை வெட்டி ஆங்காங்கு தலைகள் உருளும் . இரத்தம் புரண்டு ஓடும் . வில்லுப் பாட்டு ஓங்கார ஒலி எழுப்பும் . 

மிஷனரி தரிசனத்தை நினைத்தவராக சிந்தனையில் ஆழ்ந்தார் . காலரா என்னும் கொள்ளை நோய் பாம்பன் நகரிலும் , சுற்றியுள்ள கிராமங்களிலும் கோரத்தாண்டவமாடியது . 

1864ஆம் ஆண்டில் எந்த ஆண்டையும் விடப் பயங்கரமாக மூர்க்க வெறி கொண்டது . கூட்டம் கூட்டமாக மக்கள் மாண்டனர் . தேவ ஊழியர் ஸ்ட்ரான் பாம்பன் பட்டணத்தில் குடி இருந்தார் .

 அவர் ஒரு மருத்துவ மிஷனரி . மருந்து மாத்திரைகள் கொடுத்து வியாதியைக் குணமாக்குவதில் கைதேர்ந்த வைத்தியராயிருந்தார் பேதி என்னும் கொடிய நோயால் மக்கள் பீதியடைந்தனர் . சுகாதாரமின்றி விகார விளைவுகள் நேர்ந்தன   ஸ்ட்ரான் , காலரா தாக்குண்டவர்களை நேரில் சந்தித்து சிகிச்சை செய்தார் . 

ஆரோக்கியமாக வாழக் கற்றுக் கொடுத்தார் . “ சுத்தம் சுகம் தரும் ” என்று சுத்தத் தமிழில் பேசி பலரைக் காப்பாற்றினார் . அவரது வைத்தியத்திற்குப் பைசா வாங்கியதில்லை . அர்ப்பணிப்போடு ஊழியம் செய்தார் . உபதேசிமார் , பிரசங்கிமார் , மூப்பர்கள் . . . அனைவரும் நன்கு உதவி செய்தார்கள் . மதப் பாகுபாடின்றி ஓடி ஓடி உழைத்தார் .

 காலராவிற்கு இரையாகாமல் பல உயிர்களைக் காப்பாற்றினார் . பாரத்தோடு பிரார்த்தனையும் ஏறெடுத்தார் . குளிரும் , மழையும் , புயலும் காற்றும் சீறி வீசியது . துணையை இழந்து தவிப்போர் , பிள்ளைகளை இழந்த பெற்றோர் . இப்படியாய் பலர் பாவப்பட்ட மக்களாயினர் . 

ஸ்ட்ரான் , பாதிக்கப்பட்ட மக்களிடம் ஓடி ஆறுதல் கூறினார் . மக்கள் நேய பக்தியுடன் துக்கம் விசாரித்தார் . அவர்களின் வாழ்வாதாரங்களை கவனித்தார் . “ உயிர் தந்த உத்தமர் என்று மக்கள் அவரைப் போற்றினார்கள் . 

அவர் சொல் கேட்டார்கள் . இத்தகு சூழலில் பாம்பன் கோயில் கொடை விழா வந்தது . சிறு தெய்வ வழிபாடுகளை ஆங்காரத்தோடும் ஆரவாரத்தோடும் கொண்டாடினர் . கோயில் பெருங்கூட்டத்தால் விம்மி , நெளிந்தது . கொட்டு மேளங்கள் , கும்ப விளையாட்டுகள் , வில்லுப் பாட்டுகள் , விநோத ஈட்டி எய்தல்கள் , தீப்பந்தங்கள் , தோரணங்கள் , பூ மாலைகள் , சூடம் சாம்பிராணிப் புகைகள் . . 

. மாறுபாடான மணங்கள் குமட்டின . இன்னும் பலர் கிடா வெட்டவும் , சேவல்களைக் கொல்லவும் ஆயத்தமாகக் காத்திருந்தனர் . ஆட்டுக் கடாக்களும் , சேவல்களும் , அபயமிட்டு அழுதன . பெண்களின் குலவைக் குரலும் , பம்பைமேள இரைச்சலும் விண்ணை முட்டின . 

இன்னொரு பக்கம் சண்டைகளும் , சச்சரவுகளுமாக சந்தைக் கூட்ட இரைச்சலாய் காதுகளை உடைத்தன . திடீரென்று கூட்டம் அமைதலானது . கொட்டு முழக்கங்கள் நின்றன . அமைதி , சாந்தி , நிசப்தம் , எங்கும் மௌனம் ஏன் ? என்ன நடந்தது ? 

ஸ்ட்ரான் ஐயர் அங்கு வந்து நின்றார் . தரிசனத்திற்குக் கீழ்ப்படிந்தார் . எண்ணற்ற உயிர்களைக் காத்த கண் கண்ட கடவுள் நிற்பதுபோல் மக்கள் அவரைக் கண்டனர் . ஆரவாரமான தோற்றம் தூய வெண்ணிற அங்கி ஒளி நிறைந்த கண்கள் அவர் மக்களைப் பார்த்து கை கடப்பி வணங்கினார் .

 பூசாரிகள் தங்கள் ஈட்டிகளையும் , வல்லயங்களையும் , அருவாள்களையும் , ஆயுதங்களையும் கிடே போட்டுவிட்டு மரியாதையுடன் நின்றனர் . அனைவரையும் அமரும்படி பெரிய பூசாரி சொன்னார் .

 மிஷனரி , பூசாரியிடம் நான் சில நிமிடங்கள் பேசலாமா ? ' என்று கேட்டார் . மக்கள் வணங்கியவாறு மரியாதையுடன் கேட்டனர் . 

" கடவுள் வீண் பலிகளை விரும்பமாட்டார் . அவர் கருணை உள்ளவர் . இயேசு பெருமான் நம் ஒவ்வொருவருக்காகவும் சிலுவையில் இரத்தம் சிந்தினார் . எனவே நல்வாழ்வு என்னும் இரட்சிப்பை இலவசமாகத் தந்திருக்கிறார் . 

ஆடு கோழிகளுக்கு விடுதலை கொடுப்போம் காலரா போன்ற வியாதிகளைத் தடுத்து நிறுத்துவோம் . யாவரும் விட்டிற்குப் போங்கள் கடவுள் உங்களைக் காத்து ஆசிர்வதிக்கட்டும் . . . எல்லோரும் எழுந்து வீட்டிற்குச் சென்றனர் .

 கிடாக்கள் கொம்புகளை ஆட்டித்துள்ளின . ஆடுகள் ஆனந்தமாகக் குதித்து ஆடின . சேவல்கள் கொக்கரக்கோ என்று சுடவின . " ஐயர் சொல்வது உண்மை . துரை வாழ்க ! என்று மக்கள் ஒலிகளை எழுப்பினர் .

 புத்தாண்டை புத்துணர்வோடு வரவேற்றனர் . ஆதாரம் : மறையவிருந்த மாணிக்கக் கற்கள் 


173            பேராபத்திலிருந்து பண்ணைவிளை கிராம மக்கள் கோலாகலக் குதூகலம் கொண்டார்கள் . பண்ணை விளை பங்களாக் கோயில் தங்கமயமாக அலங்கரிக்கப் பட்டிருந்தது . “ நம்ம கோயில்ல குருப்பட்டாபிஷேகம் நடக்கப்போகுதாம் . ராஜ பட்டாபிஷேகம் மாதிரி ராப்பகலா வேலை நடக்கு , ஆச்சரியமா இருக்கு முத்தாபரணம் பாட்டி மூக்கில் விரல் வைத்து முகம் மலர்ந்து சொன்னாள் .

 " பட்டணத்திலிருந்து வெள்ளைக்கார பிஷப் வந்திருக்காரு , நம்ம டக்கர் ஐயர் வீட்ல இருக்காரு . என்னா வளத்தி , எவ்வளவு சிவப்பு , ஐயர் வேலைக்குப் படிச்சவங்களுக்கு நம்ம கோயில்ல வச்சி பட்டம் கொடுக்காங்களாம் " நேசம் அக்கா வாய் நிறைய சிரித்துச் சொன்னாள் . "

 அஞ்சி இளங்குருக்கள் முழுக்குருக்கள் ஆகப்போறாங்களாம் . மெட்ராசில , கல்கத்தாவில் நடக்கவேண்டிய ஆராதனை நம்ம கோயில்ல நடக்கப்போகுது , அதிசயம்தான் என்று தங்கமணித் தாத்தா தாளம் போட்டுப் பேசினார் . 

18 . 12 . 1859ஆம் ஆண்டில் அன்றைய நெல்லை மாவட்டம் பண்ணை விளையில் குரு அபிஷேக ஆராதனை நடக்கவிருந்தது . சென்னைப் பேராயர் தாமஸ் டேயல்ட்கி வந்துவிட்டார் . கடந்த ஒரு மாதமாக இந்த மகத்தான ஆராதனைக் காக ஜே . ஜி . டக்கர் ஐயர் பம்பரமாகச் சுழண்டு பாடுபட்டார் . 

அன்று அதிகாலை மக்கள் குளித்து வீடுகளைச் சுத்தம் செய்து வீட்டு முன்னால் குருத்தோலை தோரணங்கள் கட்டினார்கள் . காலை ஏழு மணிக்குத்தான் ஆராதனை . ஆறு மணிக்கே கோயில் நிறைந்து விட்டது . ஆறு முப்பதுக்கெல்லாம் கோயிலிலுள்ள காலரி நிரம்பி வழிந்தது . "

 குருப்பட்டாபிஷேக ஆராதனை நடக்கிறத நல்லாப் பாக்கனும்ன்னா காலரியில் இருந்தாத் தான் தெளிவாத் தெரியும் . நான் காலரியில் போய் உட்காரப் போறேன் என்று சொல்லி சிங்கராஜ் அங்கிள் அங்கவஸ்திரம் தரித்து விரைந்து நடந்தார் . 

“ கிறிஸ்மஸ் பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரம்தான் இருக்கு , அதுக்குள்ள நமக்கு ஒரு சிறப்பு ஆராதனை கிடைச்சிருக்கு ” என்று கோயில் பாட்டி பூரித்துப் பொங்கினாள் . இந்த மகத்தான ஆராதனைக்காக பலரும் உபவாசித்து பல நாட்களாக ஜெயித்தனர் . 

பண்டாரவிளை , செவளை , பெருங்குளம் , பேரூர் . . . . முதலிய பக்கத்துக் கிராமங்களிலிருந்தும் ஆராதனைக்கு மக்கள் வந்திருந்தார்கள் . இரண்டாம் மணி அடித்தது . கோயில் கொள்ளாமல் கூட்டம் தத்தளித்தது . காலரியில் உள்ள கூட்டம் புளியை அடைத்து வைத்தது போலிருந்தது . 

ஆராதனைக்கு ஆரம்பமாக இன்னும் இரண்டு நிமிடங்களே இருந்தன . குருமார் , மிஷனெரிமார் , சென்னை அத்தியட்சர் , அத்தியட்சர் சேப்ளள் , பாடகர்குழு யாவரும் பவனிக்காக நின்றனர் . அருள் தொண்டர் டக்கர் ஐயர் முதல் பாட்டின் எண்ணைச் சொல்ல வாய் திறந்தார் .

 திடீரென்று ஆலயத்திற்குள் திடும் திடும் என ஒரு பெருஞ்சத்தம் கேட்டது . தொடர்ந்து கூக்குரல் , ஓலம் , ஒப்பாரி எழுந்தது . அழுகை , அலறல் வெடித்தன . நடந்தது என்ன ?

 ' காலரியை தாங்கிக்கொண்டிருந்த பெரிய உத்தரம் பாரம் தாங்காமல் மடமடவென்று உடைந்து கீழே இறங்கிற்று . இறங்கிய உத்தரத்தை அதை இணைத்திருந்த கனத்த ஆணி வளைந்து கொடுத்து , ஓடிந்து விழுந்துவிடாமல் பிடித்துக்கொண்டது . ' ' அந்த ஆணி மட்டும் அப்படிப் பிடித்திராவிட்டால் , காலரிக்குக் கீழ் உட்கார்ந்திருந்த அனை வரும் நசுங்கிச் செத்திருப்பர் . காலரியில் இருந்தவர்களுக்கும் உறுப்பு நாசமும் , உயிர்ச்சேதமும் ஏற்பட்டிருக்கும் . ' காலரியில் இருந்தவர்கள் பத்திரமாய் இறக்கப்பட்டு , அமைதி ஏற்பட்ட பின்பு , அரைமணி நேர தாமத்துடன் ஆராதனை அருமையாய் நடந்து முடிந்தது . மக்கள் நன்றி உள்ளத்துடன் கர்த்தரைத்துதித்து மகிழ்ந்தனர் . ஆண்டவர் எவ்வளவு அற்புதமாக - ஆச்சரியமாக ஆராதனையின் மகத்துவத்தை எண்ணி உயிர்ச்சேதம் எதுவுமில்லாமல் பேராபத்திலிருந்து பாதுகாத்திருக்கிறார் . ' ஊரே வியந்து பரவசமடைந்தது . 

Friday, 22 May 2020

சிறுகதை137-140

137      எங்கள் அருமைப் பூனைக்குட்டி   

      வீட்டில் விளையாடுது மூன்று பூனைக்குட்டி வீட்டுத் திரையில் தொங்கி ஆடுது செல்லக்குட்டி ஓடிக் குதித்து ஓட்டம் காட்டி ஆடி மகிழுது ஓய்ந்திருக்காது சாய்ந்து மறைந்து பாயுது பூனைக்குட்டி கூடிக் கொஞ்சுக் குலாவுது மூன்றாய் கூப்பிட்டால் ஓடிவந்து மியாவ் சொல்லுது நன்றாய் . சுத்தக் கருப்பு நிறத்தில் ஒன்று சுடு சாம்பல் நிறத்தில் மற்றொன்று கழுத்தைச் சுற்றி வெள்ளை உடல் முழுதும் சாந்து நிறத்தில் இன்னொன்று ஆக மூன்றும் பண்ணும் அட்டகாசம் ஆகா ஓகோ என்று நேரம் போகும் ஏகதேசம் மெத்தைக் கட்டில் அவைகளின் பந்தடிமேடை மெத்து மெத்தான தலையணைகள் பந்தடி மட்டை முகத்தைத் துடைத்து மூஞ்சியை சுத்தமாக வைத்துக்கொள்ளும் நகக்கால்களால் உடல் முழுவதையும் ஓயாமல் சுத்திகரிக்கும் முன்கால்கள் இரண்டையும் நன்றாய் ஊன்றி பின்கால்களை மடித்து அமர்ந்திருக்கும் காட்சி போற்றி போற்றி ! ரூபன் வீட்டுப் பூனைகளின் சித்து விளையாட்டை ருசித்து மகிழலாம் நாள் முழுதும் சளையாமல் எங்கள் அருமைப் பூனைக்குட்டி எங்கள் வீட்டுத் தங்கக் கட்டி எங்கோ ஒளிந்து மறைந்து கொண்டால் எங்கும் தேடித் திரிந்து புலம்புவோம் துள்ளிக்குதித்து ஓடிவந்தால் அள்ளி எடுத்து அரவணைப்போம் தெருநாய்களை விரட்டி அடிப்போம் ஒரு கேடும் வராமல் பாதுகாப்போம் . ஜெருஷாவைக் கண்டால் செல்லமாய் ஓடி சொகுசாய் மடியில் படுத்து உருளும் ஜெசிந்தா கிச்சனுக்குள் போனால் பசி தீர வயிற்றை நிரப்பி ஆடும் . 

138                    எதிரும் புதிரும் 

அது ஒரு பெரிய கிறிஸ்தவத் திருச்சபை . அந்த சபைக் குருவானவர் ஒவ்வொரு வாரமும் உற்சாகமாக ஏதாவது செய்வார் . அன்று ஆராதனை முடியவும் ஆலயத்தின் முன்பாக இரு பெரிய கூடைகள் இருந்தன . ஒரு கூடை நிறைய ஆப்பிள் பழங்கள் . அடுத்த கூடை நிறைய சாக்லட்கள் . ஆப்பிள் கூடைமீது ஓர் அட்டை இருந்தது . அட்டையில் இப்படி எழுதி இருந்தது . " ஆளுக்கொரு ஆப்பிள் எடுத்துக்கொள்ளவும் ஆண்டவர் பார்த்துக்கொண்டிருக்கிறார் . ” சாக்லட் கூடைமீது அட்டை ஏதுமில்லை . ஐந்து நிமிடங்கள் கழித்து ஒரு குறும்புச் சிறுவன் , பச்சை மையில் அழகாக ஓர் அட்டையில் எழுதி சாக்லட் கூடைமீது வைத்தான் . அதில் இப்படி எழுதி இருந்தது . " சாக்லட் எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம் . ஏனெனில் ஆண்டவர் ஆப்பிள் பழக்கூடைப் பக்கம்தான் இருக்கிறார் ” என்று எழுதி இருந்தது . 


139        விலையேறப்_பெற்ற_விசுவாசம்... 


 ஒரு பிச்சைக்காரன் ஒருவன் இருந்தான். அவனுடைய சொத்து என்று பார்த்தால் அழுக்குப் பிடித்த உடை, கரிபிடித்த ஒரு பிச்சை ஓடு என இவ்வளவுதான். இந்த சூழ்நிலையில் தினமும் அவன் அந்த பிச்சை ஓட்டை நீட்டி எல்லோரிடமும் பிச்சை கேட்பது அவன் வழக்கம். ஒருநாள் ஒரு கடைக்காரரிடம் இப்படி தன் பிச்சை ஓட்டை அவர் முகத்துக்கருகில் நீட்டி பிச்சைக் கேட்டுக் கொண்டிருந்தான். முதலில் முகம் சுழித்த அவர், சற்று நிதானத்துக்கு வந்து, அவனையும், அந்த ஓட்டையும் மாறி மாறி பார்க்க தொடங்கினார். சட்டென்று அவனிடமிருந்த அந்த பிச்சை ஓட்டை பிடுங்கி ஆராய்ந்தார். கடையிலிருந்து ஒரு பேனாக் கத்தியை எடுத்து விரித்தார். பிச்சைக்காரன் பயந்து போனான். எவ்வளவு காலமா பிச்சை எடுக்கறே? எனக் கேட்க, நெனப்பு தெரிஞ்ச காலத்துல இருந்தே இதாங்க சாமி! என்றான்  பிச்சைக்காரன். இந்தப் "பிச்சை" ஓட்டை எவ்வளவு காலமா வச்சிருக்க? எனக்கேட்க..

 எங்க அப்பா, தாத்தா, தாத்தாவுக்குத் தாத்தா, தாத்தா.... ன்னு பல தலைமுறைக்கு முன்னாடில இருந்தே! யாரோ ஒரு மகான்- கிட்ட பிச்சை கேட்டப்போ அவர் இந்த ஓட்டைக் கொடுத்து, 'இதை வச்சுப் பொழைச்சிக்கோ- ன்னு குடுத்தாராம்..

 அடப்பாவி! பரம்பரை பரம்பரையாய் இந்த ஓட்டை வச்சுப் பிச்சைதான் எடுக்கறீங்களா? எனக்கடைக்காரர் ஆச்சர்யத்தோடு கேட்க, பிச்சைக்காரனுக்குப் புரியவில்லை. கடைக்காரர் அமைதியாக பேனாக்கத்தியால்...

 அந்தப் பிச்சை ஓட்டைச் சுரண்டத் தொடங்கினார். பிச்சைக்காரன் துடிதுடித்துப் போனான். சாமி..! எங்கிட்ட இருக்கற ஒரே சொத்து அந்த ஓடுதான். நீங்க பிச்சை போடாட்டியும்.... பரவால்ல... அந்த ஓட்டக் குடுத்துடுங்க சாமீ..! என பரிதாபமாக கேட்க... கடைக்காரர் சிரிக்கிறார். மேலும் சுரண்டுவதை நிறுத்தவே இல்லை. 

பிச்சைக்காரன் அழுதான். அங்கலாய்த்தான். ராசியான ஓடு சாமி! மகான் கொடுத்த ஓடு ஐயா...  தர்மப்பிரபு! ஆனால் கடைக்காரர் ஓட்டைச் சுரண்டிக் கொண்டே இருந்தார். 

சுரண்டச் சுரண்ட... அந்த ஓட்டின் மீதிருந்த கரியெல்லம் உதிர்ந்து... மெள்ள மெள்ள... மஞ்சள் நிறத்தில் பளீரிட்டுப் பிரகாசிக்க துவங்கியது தங்கம்...! 

பிச்சைக்காரனின் கையில் அந்தத் தங்க ஓட்டைக் கொடுத்த கடைக்காரர் வேதனையுடன் சொன்னார்! அந்த மகான் கொடுத்தத் தங்க ஓட்டை வச்சுக்கிட்டு,  இந்த ஊருலேயே பெரிய பணக்காரங்களா இருந்திருக்க வேண்டியவங்க நீங்க    

அதை பிச்சை எடுக்க உபயோகப் படுத்திட்டீங்களேடா.? என்று  கடைக்காரா் கூறியவுடன் அவன் அதின் அருமையை உணா்ந்து  பிச்சையெடுப்கதை விட்டு விட்டு  பணக்காரனாக வாழ்ந்தான்.  

 என்_அன்புக்குாியவா்களே, இதே போலத்தான்... நீங்கள்  உங்களுக்குள்  இருக்கும்... தங்கத்தை அதாவது  அழிந்து போகிற பொன்னைப் பார்க்கிலும் அதிக விலையேறப் பெற்றதாயிருக்கிற உங்கள் விசுவாசம் புகழ்ச்சியும் கனமும் மகிமையுயும் உங்களுக்கு கொடுக்கும்.  என்று 1 பேதுரு 1:7 -ல் வாசிக்கிறோம்.

 இந்த விசுவாசம் உங்களிடத்தில் மாபெரும் சக்தியை உங்களுக்குள் அடக்கி வைத்துள்ளது. உங்களுக்குள் தேவன் வைத்த விசுவாசத்தை இன்று முதல் நீங்கள்  செயல்படுத்துங்கள். விசுவாசம் மூன்று விதத்தில் செயல்படுகிறது.  🛑 ஆவியின் கனியாக...கலா. 5 :22.23 🛑 சா்வாயுத வா்க்கமாக.... எபே.  6 :16 🛑 ஆவியின்  வரமாக..1கொ.12 :9 இத்தகைய விசுவாசத்தை  உபயோகியுங்கள். 
 விசுவாசத்தை செயல்படுத்தி பாருங்கள்.  நீங்கள் எந்த காாியங்களிலும் பதறமாட்டீா்கள் சிதறமாட்டீா்கள்,கதறமாட்டீா்கள் உளற மாட்டா்கள். எபிரேயா்  11-ம் அதிகாரம்  முழுவதும் விசுவாசத்தினால்  எந்தெந்தக் காரியங்களில் எப்படியெல்லாம் சாதித்தாா்கள். என்று  எழுதப்பட்டுள்ளது. அதை வாசித்து பாருங்கள். உங்களுக்குள் இருக்கும் விசுவாசம்  மாபெரும் சக்தியாக உருவெடுக்கும்.  எது இல்லையோ அதை உங்களால் வர வைக்க முடியும்...உங்கள் விசுவாசத்தினால் 

 குழந்தையின்ஆசீா்வாதம்,பிள்ளைகளின் எதிர்கால ஆசீா்வாதம், பணம், சொத்து, வீடு  ஆகியவைகளின் ஆசீா்வாதம். ஊழியத்தின் ஆசீா்வாதம்.பரலோக ஆசீா்வாதம்  ஆகியவற்றைப் பெற்றுக் கொள்வீா்கள். அதுமட்டுமல்ல..எத்தகைய பிரச்சனைகள் வந்தா லும் அவைகளை   நீங்களே முறியடிப்பீா்கள்.  உதாரணமாக, விசுவாசத்தினாலே அவர்கள் ராஜ்யங்களை ஜெயித்தார்கள், நீதியை நடப்பித்தார்கள், வாக்குத்தத்தங்களைப் பெற்றார்கள், சிங்கங்களின் வாய்களை அடைத்தார்கள், அக்கினியின் உக்கிரத்தை அவித்தார்கள், பட்டயக்கருக்குக்குத் தப்பினார்கள், பலவீனத்தில் பலன்கொண்டார்கள். யுத்தத்தில் வல்லவர்களானார்கள், அந்நியருடைய சேனைகளை முறியடித்தார்கள். எபிரேயர் 11:33,34 இதையெல்லாம் இன்று உங்களுக்குளிருக்கும் விசுவாசத்தினால் நீங்களும் செயல்படுத்த முடியும். அப்படி நீங்கள் விசுவாசத்தைப் கொண்டு நீங்கள் செயலாற்றும்  போது உங்களுக்குள் இருக்கும் ஆவியானவா்  உங்கள் பேருக்கு  புகழும்,கீா்த்தியும், மகிமையும்  கொண்டு வரச் செய்வாா். அந்த பிச்சைக்காரனைப்போல ஏன் நான் இருக்க வேண்டும்? என்னிடத்தில் தங்கத்தை விட மிகப்பொிய விலையேறபபெற்ற  விசுவாசம்  இருக்கிறதே? என்று  உங்களை நீங்களே கேள்வி கேட்பீா்களானால் நீங்கள உணா்ந்து  விட்டீர்கள். 

இப்போதே ஆவியானவா்  உங்களில் இருக்கும் விசுவாசத்தை  பீறிட்டு வர செய்து  உங்கள் சூழ்நிலைக்சகும் மேலாக கிாியை செய்வாா். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!!! 



140           மாவீரனை அசைத்த அன்பு

 மங்கோலியா சாம்ராஜ்யத்தின் மன்னனாக இருந்து . மகா அலெக்ஸாண்டரை விட அதிகமான நாடுகளைக் கைப்பற்றி , இட்சக்கணக்கான மக்களைக் கொன்று குவித்த செங்கிஸ்கான் வரலாற்றில் மறக்க முயாத , நடுக்கத்துக்குரிய ஒரு சர்வாதிகாரி , உலக வரலாற்றில் 12 - ம் நூற்றாண்டு செங்கிஸ்கானின் இரத்தக்கறை படிந்த யுத்தங்களால் கறைப்பட்டு நிற்கிறது . என்பதை அநேக வரலாற்று ஆசிரியர்கள் எழுதிவைத்துள்ளனர் . 

சீனப் பெருஞ்சுவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம் . ஆனால் செங்கிஸ்கானின் படையெடுப்புக்குத் தப்பவே சீனப் பெருஞ்சுவர் கட்டப்பட்டது என்ற விபரம் பலருக்குத் தெரியாது . அந்தப் பெருஞ்சுவரையே தாண்டி சீனாவைக் கலங்கடித்தவன் செங்கிஸ்கான் . செங்கிஸ்கானை மாவீரன் என்றும் , மகா கொடூரமானவன் என்றும் பல வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர் . ஏனெனில் செங்கிஸ்கானும் . அவன் படையினரும் ஈவு இரக்கமின்றி செய்த கொலைகள் அத்தனை அதிகம் ! இப்படிப் பலருக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கிய செங்கிஸ்கானையே அசைத்த அன்பின் செயல் ஒன்று அவனது சீனப்படையெடுப்பின்போது நடந்தது .

 ஒரு சமயம் சீன நகரம் ஒன்றில் புகுந்து செங்கிஸ்கானின் படைவீரர்கள் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தார்கள் . அச்சமடைந்த மக்கள் அங்குமிங்கும் சிதறி ஓடினார்கள் . பெண்கள் தாங்கள் குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு உயிர்பிழைக்க ஓடிக் கொண்டிருந்தார்கள் . பரபரப்பும் , திகிலும் அங்கே காணப்பட்டது . எங்கும் மரண ஓலம் ! அந்தக் கூட்டத்தில் ஒரு தாய் தன் பெரிய குழந்தையை முன்னால் ஓடவிட்டு , சிறிய குழந்தையை இடுப்பில் சுமந்து கொண்டு , மிகுந்த கஷ்டத்தோடு ஓடிக்கொண்டிருந்தாள் . ஆனால் அசுரத்தனமாக முன்னேறி வரும் மங்கோலியப்படையின் வேகத்துக்கு அவளால் ஈடுகொடுக்க முடியவில்லை . அவளுக்கு முன்னால் ஓடிக்கொண்டிருந்த பெரிய குழந்தை பயத்தால் மிரண்டு தடுமாறிக் கீழே விழுந்து விட்டாள் . பதறிப்போன தாய் இடுப்பிலிருந்த தன் சிறிய குழந்தையை இறக்கி விட்டு , தடுக்கி விழுந்த பெரிய குழந்தையைத் தூக்கிக் கொண்டு சிரமத்துடன் ஓடத் தொடங்கினாள் .

 கீழே இறக்கிடைப்பட்ட சிறிய குழந்தை பயத்துடன் , பரிதாபமாக அழுது கொண்டிருந்தது . பின்னால் குதிரையில் வந்து கொண்டிருந்த செங்கிஸ்கான் இந்தக் காட்சியைக் கண்டான் . அவனுக்குக் கோபம் வந்தது . அந்தப் பெண்ணைப் பிடித்து வரக் கட்டளையிட்டான் . பயந்து நடுங்கி தனக்கு முன் நின்ற அவளைப் பார்த்து

 சின்னக் குழந்தையைக் கீழே இறக்கி விட்டு விட்டு பெரிய குழந்தையை மட்டும் தூக்கிக் கொண்டு ஓடுகிறாயே ! இந்தப் பிஞ்சுக் குழந்தை நீ பெற்ற குழந்தை இல்லையா ? இது என்ன உன் பக்கத்து வீட்டு குழந்தையா ? என்று கோபமாகக் கேட்டான் செங்கிஸ்கான் ,

 இல்லை ஐயா , நான் தூக்கிக்கொண்டு ஓடிய பெரிய குழதைதான் பக்கத்து வீட்டுக் குழந்தை , நான் கீழே இறக்கிவிட்ட சிறிய குழந்தை என் குழந்தை , என்று கண்ணீருடன் கூறினாள் அந்தத் தாய் . இதைக் கேட்ட செங்கிஸ்கான் அதிர்ச்சியடைந்தான் . ஆச்சரியத்தோடு அந்தக் தாயை நோக்கனான் . அவள் சொன்னாள் : 

" என் பக்கத்து வீட்டுப் பெண் இறந்து விட்டாள் . அவள் இறக்கும் போது இந்த தன் ஒரே குழந்தையை என் பொறுப்பில் ஒப்படைத்தாள் . இந்தக் குழந்தையை நான் காப்பாற்றி வளர்ப்பேன் என்று அவளுக்கு வாக்குறுதி கொடுத்தேன் . அந்த வாக்குறுதியைக் காப்பாற்றுவதற்குத்தான் நான் பெற்ற குழந்தையை இறக்கி விட்டு ,

 இந்தப் பெரிய குழந்தையைக் காப்பாற்ற முயற்சித்தேன் . இறக்கும் வேளையில் அந்தத் தாய்க்கு நான் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றினால் என் குழந்தையைக் கடவுள் காப்பாற்றுவார் என்று நம்பினேன் கண்ணீரோடு பேசிய தாயின் வார்த்தைகளைக் கேட்டு , கடின உள்ளம் கொண்ட செங்கிஸ்கான் கண் கலங்கினான் . 

அந்தத் தாயையும் . இரண்டு குழந்தைகளையும் விடுதலை செய்து அனுப்பிவிடும்படி உத்தரவிட்டான் . ஆண்டவரை அறியாத அந்தச் சீனப் பெண்மணியிடம் காணப்பட்டது சுயநலமே இல்லாத அன்பு ! தாயினும் மேலான அன்புடையவர் நம் அருள்நாதர் இயேசு ! பாவ பாரத்தினால் உருக்குலைந்து கிடந்த மனுக்குலத்தின் மேல் அன்பு கூர்ந்து இரட்சிக்கவே அவர் விண்ணுலக மேன்மையைத் துறந்து மண்ணுலகம் வந்தார் . அந்த தூய அன்பை . கல்வாரி தியாகத்தை அலட்சியப்படுத்தாமல் அவரை விசுவாசித்து , அவரில் நிலைத்திருப்பதே நமக்கு ஆசீர்வாதம் ! . 



சிறுகதை 141-150



141                       முதலில் . . .

 . ஹைடி வித்தியாசமான ஒரு பெண் . வேறுபாடான சிந்தனைகள் வேர்விட்டன . மண்டைகனம் கொஞ்சம் மிகுதியானது . சராசரியான அவள் சமீப நாட்களில் ஆடம்பரப்பிரியை ஆக மாறினாள் . அவளின் சொகுசுக்கார் ஜெர்மன் நாட்டிலேயே முதல் தரமானது என்று எண்ணினாள் . அது அவளைப் பெருமையின் ஏணியின் ஏற்றியது . சிலுவையைக் குறித்தே அல்லாமல் வேறொன்றையும் குறித்துப் பெருமைபாராட்ட மாட்டேன் ' என்ற பவுல் அடியாரின் விவிலிய வாக்கு அவள் சிந்தையில் எழுந்தபோது சிரித்தாள் . என் உல்லாசக் காரை அல்லாமல் வேறொன்றையும் குறித்துப் பெருமை பாராட்டமாட்டேன் ' என்று சொல்லி முறுவலிந்தாள் . அவளின் உல்லாசக் காரில் ஏ . சி , டி . வி , கேமரா , படுக்கை , பாத்ரூம் முதலிய வசதிகளோடு படிக்க சிறு நூல் நிலையமும் இருந்தது . அவள் தன் காரையே ஆராதித்தாள் . பாராட்டினாள் . பெருமையாகப் பேசினாள் . தினம் மாலை அணிவிப்பாள் . கணவர் ஒருநாள் அன்புடன் கடிந்துகொண்டார் . ' ஹைடி , முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் , அவருடைய நீதியையும் தேடு , பின்பு உனக்கு இதைவிட இன்னும் மேலான வசதிகள் , வாய்ப்புகள் கிட்டும் ' என்றார் . அவள் சிரித்துக்கொண்டே சொன்னாள் ; ' எனக்கு முதலில் என் படகுக்கார் , படாடோபக்கார் , சொகுசுக்கார் , சொந்த அழகுக்கார்தான் முக்கியம் , மற்றெல்லாம் இரண்டாவதுதான் ' என்று சொல்லி தன் கையாலே காரைக் கழுவித் துடைத்து பளிச் ' சென்று ஒளிரச் செய்தாள் . கணவர் மீண்டும் சொன்னார் : " இன்று மாலை நமது ஆலய வளாகத்தில் ஒரு பிரபலமான ஆன்மீக ஆலோசகர் கூட்டம் உள்ளது . அவர் ஆவிக்குரிய சத்தியங்களை ஆழமாகச் சொல்வதில் சமர்த்தர் . அகில உலக நற்செய்தியாளர் . உன் உல்லாசக்காரில் முதலில் அங்குபோய் வருவோம் ” என்றார் .அதற்கு அவள் , “ நான் ஏற்கனவே முடிவு செய்துவிட்டேன் . ' கருப்புக் காட்டழகி எனப்படும் சுற்றுலா தலத்திற்கு முதலில் போய் வருகிறேன் . மாலையில் அந்த மலைப்பிரதேச அழகு கொள்ளைகொள்ளும் . ஆறுமணிக்கு மேல் ஆயத்தமாயிருங்கள் . உங்கள் கிழட்டுக்காரில் கூட்டத்திற்குப் போகலாம் ' ' என்றாள் . பதிலுக்குக் கணவன் " முதலில் தேவனுடைய . . . . முதலில் . . . முதலில் . . . என்று முணு முணுத்தாரே தவிர அதற்குமேல் ஒன்றும் பேச வாய்வா வில்லை . உல்லாசப் பயணிகளை ஈர்க்கும் வனப்பு மிகுந்த மலையடிவாரத்தில் காரை பார்க்கிங் செய்துவிட்டு நகர்ந்தாள் . டமார் என்று ஒரு சத்தம் கேட்டது . மலை உச்சியிலிருந்து உருண்டு வந்த ஒரு டன் எடையுள்ள ஒரு பாராங்கல் கார்மீது விழுந்தது . கார் சப்பி அப்பளமானது . ஹைட மி அதிர்ந்தாள் . ஆ . . . என் அழகுக்கார் . . . என்று கூப்பாடு போட்டாள் . அங்கு ஓடிவந்த அனைவரும் , அரைநிமிடம்தான் . உங்கள் தலை தப்பியது . அரை நிமிடம் தாமதித்திருப்பீர்களானால் உங்கள் உயிர் போயிருக்கும் . முதலில் கடவுளுக்கு நன்றி கூறுங்கள் . இதைவிட அழகுக்கார் வாங்கலாம் என்று ஆறுதல் கூறினார்கள் . கல் சிதறி விழுந்ததில் அடுத்து நின்ற கார் டிரைவருக்குப் பலத்த காயம் . ஹைடி நிம்மதிப் பெருமூச்சுடன் கடவுளை நினைத்தாள் . " முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள் ; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும் ” ( மத் . 6 : 33 ) . - - -

 142                          இடம் பிடிக்க . .

 . . நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் நடந்த நூதனமனிதர் . 1969 ஜுலை 24ஆம் தேதி அந்தப் பேறு அவருக்குக் கிடைத்தது . அவர் பூமியில் கால் வைத்ததும் பத்திரிகையாளர் அவரைச் சூழ்ந்து கேள்விகள் கேட்டனர் . அவரது பதிலில் :  அருளும் , பொருளும் இருப்பதினால் இங்கு குறிப்பிடுகிறேன் . நிலவில் கால் வைத்தவுடன் முதலில் என்ன உணர்ந்தீர்கள் ? 

முதலில் இறைவனின் படைப்பை எண்ணிவியந்தேன் . 

இரண்டாவதாக இப்படி சாதனைபுரிய வாய்ப்பு அளித்த நாகா விஞ்ஞானிகளுக்கு நன்றி கூறினேன் . 

மூன்றாவதாக பூமியிலிருந்து லட்சக்கணக்கான மைல்களுக்கு அப்பாலுள்ள நிலவில் இடம் பிடித்த என்னால் என் வீட்டுப் பக்கத்திலுள்ள ஏழை எளிய மக்களின் உள்ளத்தில் இடம் பிடிக்க முடியாது போயிற்றே என்று வருந்தினேன் .

 ' நமக்கு அவ்வித உணர்வு உண்டா ? " நன்மையை செய்யப்படியுங்கள் , நியாயத்தைத் தேடுங்கள் .  ” ( ஏசா . 1 : 17 ) . 


143               வர்க்கப்போராளி 

பாலியத்தில் நான் மிகப் பயந்தாளி வாலிபத்தில் பயங்கர வர்க்கப்போராளி நூற்றுக்கு மேலான நூற்களின் படைப்பாளி நுவலரும் இறை இலக்கியப் பேச்சாளி அடிக்கடி சென்னை - நெல்லை குடியிருப்பு அதிகப்படிப்பும் எழுத்துமே முழு இணைப்பு வேளைக்கு உணவு தரும் பிள்ளைகளின் பங்களிப்பு வேண்டியதை அருளும் இறைவனின் கண்காணிப்பு நான் ஒரு இனிப்பு நோயாளி எண்பத்தெட்டு வயது முதுமையின் வயசாளி அனுபவக் கதைகள் கூறும் எழுத்தாளி அயராது எழுதும் கடின உழைப்பாளி பண்ணைக் கொத்தடிமையைச் சாடிய பகையாளி பள்ளிப்படிப்பைத் தடுத்த முதலாளிக்கு எதிராளி நெல்லைக் கம்யூனிஸ்ட் சதிவழக்கில் குற்றவாளி நெடுஞ்சிறையில் மூன்றாண்டுகள் வாடிய சிறைப்புள்ளி நீதிமன்றத்தில் விடுதலையான சுத்தவாளி நலம் நாடாமல் எழுதிக் குவித்த ( இலக்கியக் ) கொடையாளி சமூகக் கதைகள் , நாவல்கள் தந்த மொழித் திறனாளி கிறிஸ்தவக் கம்யூனிஸ்ட்டாக வாழ்ந்து காட்டும் புதுமைப்பேர்வளி .


 144                  . தப்பினேன் ! 

சென்னை வேளச்சேரி மகன் கவிஞர் தியாரூ வீட்டில் தங்கி இருந்தேன் . அன்று காமாட்சி மருத்துவமனைக்குப் பரிசோதனைக்காகச் செல்ல வேண்டியிருந்தது . முந்தின நாள் எடுத்த இரத்தப்பரிசோதனையில் ' சுகர் ' அதிகமாக ஏறி இருந்தது . பிள்ளைகள் மிகவும் பயந்தார்கள் . ' யூரின் , ப்ளட் , கொலஸ்ட்ரால் , பல்ஸ் , பி . பி . முதலிய அனைத்து சோதனை களும் செய்ய இரத்தம் , சிறுநீர் எடுத்துச் சென்றார்கள் . அனைத்து ரிசல்ட்களும் இன்று காலை பத்து மணிக்கு மருத்துவ மனையில் கிடைக்கும் . அதன்பின்பு மருத்துவர்களின் ஆலோசனைப்படி சிகிச்சை தொடரும் . அதிகாலையில் எழுந்து பாத்ரூம் சென்றபோது இரு வட்டப்பாச்சான்கள் மிதிபட்டு அரைகுறை உயிரோடு ஊசலாடின . அதனை வத்தல் பாச்சான் என்றும் சொல்வோம் . நான் திரும்பி வந்த ஒரு மணி நேரத்திற்குள் ஒரு பாச்சானை எறும்புகள் சூழ்ந்துகொண்டன . வட்டப்பாச்சான் ஆடாமல் அசையாமல் அமைதலாகக் கிடந்தது . அவ்வளவுதான் . எறும்புப்படை அதனை அமுக்கிவிட்டது . தேரோட்டம்போல பாச்சானை எறும்புகள் இழுத்துச் சென்றன . அடுத்த பாச்சான் தப்பித்துக்கொண்டது . எறும்புகள் நெருங்கும்போது துள்ளியது , சுதாரித்தது . உயிர் தப்பியது . மணி பத்தாயிற்று . மருத்துமனைக்கு விரைந்தோம் . மருத்துவர் கூட்டம் சூழ்ந்தது . சம்பந்தப்பட்ட பெரிய டாக்டர் வந்தார் . ரிப்போர்ட்களை கையில் வைத்துக்கொண்டு , “ ஜேக்கப் ஸார் , எல்லாம் நார்மல் . சுகர் மட்டும் . கூடி இருக்கிறது . அதுவும் நார்மலுக்கு வந்தபிறகுதான் அடுத்த சிகிச்சையை ஆரம்பிக்கவேண்டும் . அடுத்த வாரமும் சுகர் டெஸ்ட் பண்ணிட்டு வாங்க " என்றார் . தப்பித்தோம் , பிழைத்தோம் என்று மகிழ்ச்சியில் வீடுவந்து சேர்ந்தோம் . எறும்புப் படையிடமிருந்து தப்பித்த வத்தல் பாச்சான் மெத்த மகிழ்வில் உலா வந்தது . நானும் டாக்டரிமிருந்து தப்பித்துக்கொண்ட குதூகலத்தில் பேரானந்தம் கொண்டேன் . அன்றைய நாள்காட்டி 7 . 7 . 2012 என்று சொல்லி நகைத்தது .   

145                ஆராதிக்க ஒருவர் . . 

. இரக்ககுணம் கொண்ட ஓர் ஆங்கிலத்துரை இருந்தார் . அவர் மிகுந்த மனிதாபிமானி . பெரும் பணக்காரர் . அவருக்கு ஒரு நற்செயல் புரியவேண்டும் என்ற நல்லெண்ணம் உதித்தது . அது மனிதர்களை அடிமைச் சந்தையில் விற்று வாங்கும் மகா கொடியகாலம் . அந்த வெள்ளைக்கார பிரபு அடிமைச் சந்தைக்குச் சென்றார் . ஒரு நீக்ரோவை இருபது தங்க நாணயம் கொடுத்து விலைக்கு வாங்கினார் . அவனை தனக்கு அடிமையாக வைத்துக்கொள்ளாமல் விடுதலை செய்தார் .

 நீக்ரோ பயந்து நடுங்கி வியந்தான் . அவனுக்கு நல்ல தொகை கொடுத்து நிலமும் கொடுத்தார் . அதில் பயிர் செய்து சுதந்திரமாக வாழும்படி சொன்னார் . அவன் விவசாயம் செய்தான் . கடுமையாக உழைத்தான் . நல்ல லாபமும் கிடைத்தது . ஆனாலும் அவனுக்கு மகிழ்ச்சி இல்லை . 

சுதந்திரத்தை அனுபவிக்க முடியவில்லை . ஆங்கில பிரபு அந்த அடிமைக்குத் திருமணம் செய்துவைத்தார் . ஆயினும் அவனது ஏக்கம் தீரவில்லை . “ எனக்கொரு எஜமானன் இல்லையா ? " என்று தனக்குள்ளே கேட்டு தூக்கம் வராமல் தவித்தான் . 

ஒருநாள் எழுந்தான் . தன்னை சுதந்திர புருஷனாக்கிய ஆங்கில மகானிடமே சென்றான் . " ஐயா , நான் உமக்கு அடிமை . ஆராதிக்க எனக்கு ஒரு எஜமானன் வேண்டும் " என்றான் .

 ஆங்கில பிரபுவிற்கு ஆச்சரியமாயிருந்தது . தம் குறைபாட்டை உணர்ந்தார் . தம் ரத்தம் சிந்தி நம்மை மீட்டுக்கொண்ட ஏசுவைக் காட்டினார் . அவரே நம் ஆராதனைக்குரிய பெரியார் , எல்லாருக்கும் எஜமான் என்று கற்றுக் கொடுத்தார் . 

இப்பொழுது நீக்ரோ குதூகலமாகக் குடும்ப வாழ்க்கை நடத்தினார் .


 146                அவள் என் எதிரி 

“ கமலம் பாட்டி கொடுத்துவைத்தவள் . நல்ல பிள்ளைகள் கணவர் இறந்த பிறகும் பாளை நகரிலுள்ள வீட்டிலேயே இருந்து கொண்டாள் . மக்கமார் எவ்வளவோ கட்டாயப்படுத்திக் கூப்பிட்டும் மறுத்துவிட்டாள் . பக்கத்து ஊர்களிலுள்ள மூன்று பிள்ளைகள் அடிக்கடி வந்து கவனித்துக் கொள்கிறார்கள் ” என்று ஊரே கமலம் பாட்டியை மெச்சிப்பேசியது . அப்பொழுது கமலம் வயது 75 கணவர் கன்னா வயது எண்பது . மூத்த மூன்று பிள்ளைகளும் பம்பாய் , பெங்களூர் , சென்னை பட்டணம் என்று தூர இடங்களில் இருந்தார்கள் . ஆறு மக்களும் குழந்தைப் பேறுடன் நல்ல வசதியாக வாழ்கிறார்கள் . கன்னா கலெக்டர் ஆபிசில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர் . கமலம் முனிசியல் ஆபிசில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர் . கன்னாவின் முதலாமாண்டு நினைவுநாள் வந்தது . பிள்ளைகள் யாவரும் குடும்பமாக வந்துவிட்டார்கள் . காலை பத்து மணிக்குக் கல்லறைக்குப்போய் அப்பாவின் நினைவாக ஆண்டவனை வழிபட்டு அஞ்சலித்து வருவர் . அப்பாவுக்குப் பிரியமான சிகரெட் , டைரி , பேனா , சில ஆங்கில நாவல்கள் யாவையும் கமலம்மாள் சேகரித்து வைத்திருந்தார் . இப்படிச் செய்வது கமலம்மாவுக்குப் பிரியமாயிருந்தது . அப்பாவுக்குப் பிரியமான திருநெல்வேலி அல்வா , மணியாச்சி முறுக்கு இவைகளை மூத்தமகன் வாங்கி வந்திருந்தான் . அப்பாவுக்குப் பிரியமான நண்பர்களுக்கெல்லாம் சொல்லிவிட்டீங்களாம்மா ? ' என்று மூத்தமகள் சரோ கேட்டாள் . ஒவ்வொன்றாகப் பட்டியலிட் போர்த்துக் கொண்டார்கள் . நாகர் கோவில் கல்லறைச் சிற்பிகள் - " கல்லறையைப் பளிங்குக் கற்களால் கட்டி முடித்துவிட்டார்கள் . அனைத்தும் முடிந்து இருகார்களில் யாவரும் வெளியே வந்தார்கள் . கல்லறையின் மெயின் கேட்டைத் தாண்டும்போது ஓர் அம்மா ரோஜாப்பூ மாலையுடன் காரிலிருந்து இறங்கினார் . அப்பாவின் இளம் வயதுக் காதலி கனகம்மாள் , ஓய்வுபெற்ற பேராசிரியர் . " நாம் அந்தம்மாவையும் மறந்திட்டோம் . ரோஜாப்பூ மாலை வாங்கவும் மறந்திட்டோமே " என்றான் இளைய மகள் . " மறக்கல்லடா , அவள் என் எதிரி ” என்றாள் அம்மா .



147                      புது ஷூ 

மதன் எட்டாம் வகுப்புப் படிக்கும் எழை மாணவன் , படிப்பில் படுகெட்டி , பிரகாசமான முகம் . அவன் சிரித்தால் உலகமே உள்ளடங்கும் . அவ்வளவு ஈர்ப்பு சக்தி அந்தச் சிரிப்புக்கு உண்டு . நெல்லை மாவட்டத்தில் ஓர் சிற்றூர் அவன் ஊர் .

 அவன் ஆறாம் வகுப்புப் படிக்கும்போது குற்றாலத்தில் நடந்த மாணவர் ஆவிக்குரிய கூட்டத்தில் கலந்து கொண்டான் . அங்குதான் அவன் வாழ்வில் பெரிய மாற்றம் ஏற்பட்டது . உண்மையே பேசுவேன் . உயர்வையே பாடுவேன் , ஏசுவை நேசிப்பேன் , எப்போதும் சந்தோஷமாய் இருப்பேன். மக்களுக்கு உதவி செய்வேன் . மற்ற மாணவர்களோடு அன்பாயிருப்பேன் இப்படிச் சில நற்பண்புகளைப் பலமாகப் பதித்துக்கொண்டான் . நடைமுறை வாழ்க்கையிலும் செய்துகாட்டினான் .

 ஆசிரியர்களும் அவன் மீது அளவு கடந்த அன்பு காட்டினார்கள் . தெருவில் ஓர் அம்மா முகத்தைத் தொங்க விட்டவாறு நடந்துசெல்கிறார்கள் . " அம்மா ஏன் கவலைப்படுறீங்க . உங்க கவலைகளைக் கடவுள் மேல போடுங்க . அவர் பார்த்துக்குவார் என்று சொல்லி வாய்விட்டுச் சிரிப்பான் .

 அந்தச் சிரிப்பில் அந்தம்மாவின் கவலைகள் தூள் பறந்துவிடும் . அவன் யார் யாரைச் சந்திக்கிறானோ அவர்கள் மனத்தில் ஆழமாகப் பதிந்து விடுவான் . பள்ளியில் அவனுக்கென்று ஒரு சிறு பட்டாளம் உண்டு . விந்தையான சிறுவனாயிருந்தான் .

 வேதவசனங்களைப் பாராயணமாகப் படித்து இடத்துக்கேற்ப பொருத்தமாகச் சொல்வான் . ஆனால் அவன் வீட்டில் வறுமை குடி கொண்டிருந்தது . வறுமையிலும் அவன் செம்மையாக இருப்பான் . சுத்தமாக உடுத்துவான் . யார் எந்த வேலையைச் சொன்னாலும் சிரித்த முகத்துடன் செய்துகொடுப்பான் . பிரதி பலனை எதிர்பார்க்க மாட்டான் . 

அதே தெருவில் வசிக்கும் போஸ்ட் மாஸ்டர் பொன்னுசாமி நல்ல வசதி படைத்தவர் . அவருக்கு மதன்மீது அதிக மதிப்பும் கரிசனையும் இருந்தது . " மதன் உண்மையிலேயே இரட்சிப்பின் அனுபவம் பெற்ற நல்ல பையன் . கிறிஸ்தவர்கள் அவனிடம் படிக்கவேண்டும் ” என்று பொன்னுசாமி மதன் பற்றிப் பேசுவார் .

 சில நாட்களாகவே மதன் நொண்டி நடப்பது போலிருந்தது . அவன்காலில் அணிந்திருந்த காலணிகளின் வார் பிய்ந்து பழுதுபட்டிருந்தது . எனவே கிந்திக் கிந்தி நடந்தான் . பொன்னுசாமி அவனைப் பார்த்துப் பரிகாசமாகக் கேட்டார் . " தம்பி ஏசப்பாதான் உனக்கு எல்லாம் என்கிறாய் . ஏன் கிழிந்த ஷீவைப் போட்டு நடக்கிறாய் . உன் ஏசப்பா உனக்கு வாங்கித்தரல்லியா ? " என்றார் .

 மதன் கடகட என்று சிரித்தான் . பின்பு உடனே சுடச்சுடப் பதில் சொன்னான் . " அங்கிள் ஏசப்பா யாருட்டயோ சொல்லிட்டார் . அந்த ஆள் மறந்திருக்கார் என்று கணீர் எனக் கூறினான் . 

மதனின் பதில் பொன்னுச்சாமியின் இதயத்தில் இடி விழுவது போன்றிருந்தது . " மதன் தம்பிக்கு புது ஷூ வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று பல நாட்களுக்கு முன்பே தீர்மானித்தேன் . ஆனால் மறந்தே விட்டேன் " என்று நினைந்து உள்மனதில் குத்துண்டார் . "

 நன்மை செய்யவும் , தானதர்மம் பண்ணவும் மறவாதிருங்கள் " என்ற வேதவசனம் அவர் முகத்தில் வந்து முட்டியது . உடனே மதனைக் கடைக்குக் கூட்டிச் சென்று புது ஷூ வாங்கிக் கொடுத்தார் .

 மதன் தம்பிக்கு ஒரு குறையுமில்லை . அவன் புதுமையான நற்செய்தியாளன் . அவன் சிரிப்பு மகா சக்தி வாய்ந்தது . " குழந்தைகளுடைய வாயினாலும் , பாலகருடைய வாயினாலும் துதி உண்டாகும்படிச் செய்தீர் " ( மத் . 21 : 16 ) . 




148                இரகசியம் என்ன ?

 நல்லமுத்து ஓர் எளிய விவசாயி , ஐம்பது செண்டு பரப்புள்ள ஒரு சிறு துண்டு நிலம்தான் அவருக்கு இருந்தது . அதைக்கொண்டு அவரது மனைவியும் ஏழு பிள்ளைகளும் வாழ்ந்தார்கள் . அவர்கள் ஆண்டவனை ஆராதிக்கிற - மானுட மாண்புமிக்க ஒரு குடும்ப மாயிருந்தபடியால் அவர்கள் வீட்டில் எப்போதும் சமாதானமும் சந்தோஷமும் குடிகொண்டிருந்தது . இரவில் நடக்கும் குடும்ப ஜெபம் குதூகலமான ஓர் இன்ப வேளையா யிருந்தது . பாட்டும் படிப்பும் , வேதவாசிப்பும் வியாக்கியானமும் சேர்ந்து வீடு சிரிப்பும் களிப்புமாயிருக்கும் . இரவு குடும்ப ஜெபத்தில் பிள்ளைகள் வேதவசனங்களை மனப்படமாகச் சொல்வதும் , பெற்றோர் தங்கள் அன்றாட அனுபவங்களைச் சாட்சியாகக் கூறுவதும் மாட்சிமிகு காட்சியாகும் . 


அவர்களின் அண்டைவீடு செல்லப்பா குடும்பம் . வசதிகளும் , வாய்ப்புகளும் , நிலபுலன்களும் நிறைந்த செழிப்பான இல்லம் . கணவனும் , மனைவியும் , இரண்டு பிள்ளைகளும் உள்ள சிறிய குடும்பம் . ஆனால் அந்த வீட்டில் சண்டையும் சச்சரவும் , கூச்சலும் குழப்பமும் ஓயாது இருந்தன . சமாதானம் , சந்தோஷம் என்பது மருந்துக்கும் இல்லாதிருந்தது . 

ஒருநாள் பக்கத்துவீட்டு நல்லமுத்துவிடம் செல்லப்பா கேட்டார் . " உங்கள் வீட்டில் எல்லா நாளும் ஆனந்தமும் , ஆர்ப்பாட்டமும் அமர்க்களப் படுகிறது . குறைந்த வருவாயில் ஒரு பெரிய குடும்பத்தை எப்படி நடத்துகிறீர்கள் . அந்த இரகசியத்தை எங்களுக்கும் கொஞ்சம் சொல்லுங்களேன் ? ” என்றார் . 

அதற்கு அந்த ஏழை விவசாயி நல்லமுத்து சொன்னார் : " எனது நிலத்தின் விளைவு சொற்பம்தான் . ஆனால் அது பலத்த ஆசீர் வாதமாக உள்ளது . எப்படியெனில் என்னிடம் உள்ள சிறிய அகப்பையால் எனக்குக் கிடைக்கும் அனைத்தையும் அள்ளி ஆண்டவரது பாத்திரத்தில் போட்டு விடுகிறேன் . அவர் வைத்திருக்கும் அகப்பை பெரியது . அவர் அள்ளிப் போடும் போது எங்கள் வெறும் பாத்திரங்கள் நிரம்பி வழிகின்றன . செழிப்பிற்கும் களிப்பிற்கும் குறைவே இல்லை ” என்றார் .

 " கொடுங்கள் , அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும் ” ( லூக் . 6 : 38 ) .


 





149              . நிந்திக்க வந்தவன் . . .


 . . மாஸ்கோவில் உள்ள ஒரு மாபெரும் கலையரங்கம் . அதில் சிலுவையில் இயேசு என்ற நாடகம் நடந்தது . அதில் அலெக்சாந்தர் என்ற மிகப் பிரசித்தி பெற்ற காமெடியன் நடித்தான் . அவன் தெய்வ நிந்தனை கூறி நடிப்பதில் வல்லவன் . கடவுளை தூஷிப்பதும் , நையாண்டி செய்வதும் அவருக்குக் கை வந்த கலை . அவன் ஒரு பச்சை நாத்திகன் .

 அத்தகைய ஒருவர் இயேசு படத்தில் எப்படி நடிப்பார் ? ' இப்படி ஒரு கேள்வி மக்களுக்குள் எழுந்தது . இயேசுவை பரிகசிக்கும் ஒரு பெருங்கூட்டம் நாடகம் பார்க்க அலை மோதியது . 

முதல் காட்சி ஆரம்பமானது . ஆலயத்தின் பரிசுத்த ஸ்தலம் , பலிபீடம் . மதுபானப்பாட்டில்கள் சிலுவைக்காட்சி போன்று அடுக்கி வைக்கப்பட்டிருந்தன . இரண்டாவது காட்சி ' பகல் காட்சிகளில் கிறிஸ்துவைக் கிண்டல் பண்ணி மக்களை குலுங்கக் குலுங்கச் சிரிக்க வைக்கும் அலெக்சாண்டர் எப்படி இந்தக் காட்சியில் நடிப்பார் ? ' ஜனங்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருந்தனர் .

 அலெக்சாண்டர் நீண்ட பாதிரி அங்கியுடன் பெரிய பைபிளை தூக்கிச் சுமந்தவாறு பௌயமாக நடந்து வந்தான் . பைபிளை எடுத்து இயேசுவின் மலைப்பிரசங்கத்திலிருந்து சில வசனங்களை வாசித்தான் : " சந்தோஷப்பட்டுக் களிகூருங்கள் , பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும் . " “ நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள் . ” " நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள் .  உங்கள் வெளிச்சம் மற்றவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது . 

" பின்பு அங்கியைக் கழற்றி எரிந்தான் . பலிபீடத்தின் சிலுவையைப் பரிகாசமாகப் பார்த்தான் . திடீரென்று திமிர்வாதம் பிடித்தவன் போல் கால்களை அசைக்க , ஆட்ட முடியாதவாறு நின்றான் . அந்த அதிகாரம் முழுவதையும் பக்தியோடு படித்து முடித்தான் . "

 பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறது போல , நீங்களும் பூரண சற்குணராயிருக்கக் கடவீர்கள் . " நாத்திக ஆதரவாளர்கள் விழித்து நின்றார்கள் . வேதவாக்கியங்களைப் பிழை இல்லாமல் உயிர்ததும்ப அழகாக வாசிப்பதைப் பார்த்துத் திகைத்தார்கள் . அவரை மேடையிலிருந்து அரங்கினுள் வந்து விடும்படி அவசரப்படுத்தினார்கள் . ஏசினார்கள் . ஆனால் , அவன் , “ பிதாவே , உமது ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்று சத்தமிட்டுக் கத்தினார் . சிலுவையில் மனம் மாறிய திருடனைப்போல உணர்ச்சியு ன் உரத்த குரலில் சொன்னான் . நிந்திக்க வந்தவன் சிந்திக்க ஆரம்பித்தான் . 

தூய ஆவியானவர் அவனைத் தொட்டார் . பரிசுத்த ஆவியால் நிறைந்திருந்தான் . அவன் கண்களில் பிரகாசம் மின்னியது . மக்கள் கூட்டம் திகைத்து நின்றது . திரை விழுந்தது . அலெக்சாண்டர் எதிர்பாரா நிலையில் சுகவீனமானபடியால் நிகழ்ச்சிகள் நிறுத்தப்படுகின்றன ' என்று அறிவிக்கப்பட்டது . " 

என் வார்த்தை அக்கினியை போலும் , கன்மலையை நொறுக்கும் சம்மட்டி போலும் இருக்கிறதல்லவா ? ” என்று கர்த்தர் சொல்லுகிறார் - ( எரே 23 : 29)

 


150               நிழல் முகம்

அந்த மனிதர் தெளிவாகத் தீர்மானித்துவிட்டார் . அவரது வேட்டியும் , பெல்ட்டும் , சீறும் சிங்கங்களின் படம் போட்ட சேட்டும் சிங்களச் சீமை யிலிருந்து வருபவராகக் காட்டியது . ஐம்பது வயது மதிக்கத்தக்க அவா அரசு மருத்துவமனை நோக்கி நடந்தார் . உள்ளே நுழையும்போது காவலாளி தடுத்தார் . " அம்மா பாலம்மாவைப் பார்க்க வேண்டும் . " அப்பொழுது அங்கு வந்த தாதி தங்கம் , " பாலம்மாவையா . . . . அவங்க மகனா நீங்க ? பாவம் அநாதை பேஷண்ட் போல கிடக்காங்க . வாங்க ஏங்கூட வாங்கையா . . . " கூட்டிச் சென்றாள் . தூத்துக்குடி தர்ம ஆஸ்பத்திரி திருவிழாக் கூட்டம் போல் நிரம்பிவழிந்தது . உள் நோயாளிகள் வார்ட் , 25 ஆவது பெட் . பாலம்மா ஒரு கோழிக் குஞ்சுபோல சுருண்டு முடங்கி சுய நினைவற்றுக் கிடந்தாள் . " பாலம்மா . . . பாலம்மா . . . . உங்கள் மகன் கொழும்பிலிருந்து வந்துட்டாங்க . . . பாலம்மா . . " தாதி மிகுந்த உற்சாகத்தில் சத்தம்போட்டுச் சொன்னாள் . கடுமையான மாரடைப்பு வந்தபடியால் மயக்கமருந்து கொடுத்து , பாலம்மா கண்விழிக்க முடியாமல் அசைவற்றுப் படுத்திருந்தாள் . உடலில் ஏதோ ஒரு மூலையில் மட்டும் உயிர் ஊசலாடிக்கொண்டிருந்தது . " அம்மா , உங்கள் மகன் பாக்கியநாதன் வந்திருக்கேன் . என்னை மன்னியுங்கம்மா " அம்மாவின் கையைப் பிடித்தான் . அவள் கை லேசாக அசைந்தது . மெதுவாக அவன் கையைப்பற்றிக் கொண்டாள் . அந்தத் தாயின் முகத்தில் மின்வெட்டுப்போல ஒரு பிரகாசம் பரவியது . நர்ஸ் ஒரு நாற்காலியைத் தூக்கிப்போட்டு , “ உட்காருங்கையா ” என்றாள் . பாலம்மா , மகன் கையை இருக்கமாகப் பற்றிக்கொண்டாள் . பக்கத்து நோயாளியைப் பார்க்க வந்த பெற்றோரிடம் தாதி தங்கம் பேசினாள் : " இந்தம்மாவை வீட்டுக்குக் கொண்டுபோகச் சொல்லி டாக்டர்கள் சொல்லிட்டாங்க . யாரும் வந்து கவனிப்பாறே இல்ல . இரண்டு பையன் , ஒரு  மூத்தமகன் தவிர மற்ற இருவரும் ஈரோடு , கோவைன்னு பிழைக்கப்போய் அங்கே குடும்பமாயிட்டாங்க . மூத்தமகன் கொழும்பிற்குப்போய் மூன்று மாதங்கள் பணம் அனுப்பினான் . பிறகு தகவலே இல்ல . அவன் தமிழ் தீவிரவாதியாகி 1983ஆம் ஆன வத்திருப்பான்னு சிலர் சொன்னாங்களாம் . இந்தம்மாவை மருத்துவ மனையில் சேர்த்த நாளிலிருந்து பாக்கியநாதன் , பாக்கியநாதன் , பாக்கியநாதன்னு ஏங்கிக் இருந்தாங்க . இந்த மூணு நாளா கண்முழிக்கவே இல்ல , குடிப்பினையும் கிடையாது . இன்னக்கி வந்த மகன் ரெண்டு மாதத்திற்கு முன்பு வந்திருக்கக் கூடாதா ? என்று விபரமாக விரித்துப் பேசினாள் . இரவுப் பொறுப்பிலிருந்த தாதி தங்கம் அடிக்கடி வந்து பார்த்துச் சென்றாள் . பாலம்மாவின் கணவன் மணியும் கொழும்பு இனக்கலவரத்திற்குப் பலியானவரே . பாலம்மா கூலி வேலைசெய்து பிள்ளைகளை வளர்த்துப் படிக்கவைத்துப் பறக்காட்டினாள் . ஆனால் மூத்தமகன் நினைவிலே வியாதிப்பட்டான் . கோயில் கிராமத் திலுள்ள பரோபகாரிகள் சிலர் அவ்வப்போது உதவி செய்தார்கள் . யாராவது கொழும்பிலிருந்து வந்தால் பாலம்மா ஓடிப்போய் மகன் பாக்கியநாதன் பற்றிக் கண்ணீரோடு கேட்பாள் . சமீபத்தில் மகன் பாக்கியநாதனைப் பார்த்ததாகக் கொழும்பிலிருந்து வந்த ஒருவர் சொன்னார் . பாலம்மாவிற்குப் புது உயிர் பிறந்தது . பட்ட மரம் துளிர்ந்தது போன்றிருந்தது . ஈராயிரமாம் ஆண்டிற்குப் பிறகும் ஈழத்தில் இனக்கலவரம் வலுத்தது . பாலம்மா பதினைந்து கிலோ மீட்டர் நடந்தே சென்று தூத்துக்குடி கடற்கரையில் நின்று , “ பாக்கியநாதன் , அம்மா வந்திருக்கேன் , என்னைக் கூட்டிட்டுப்போ . . . " என்று அரற்றி அழுது கடலுக்குள் பாய்ந்தாள் . போலீஸ் இழுத்துச் சென்று கிராமத்தில் கொண்டுவிட்டது . பாலம்மா பைத்தியம் பிடித்தவள் போலானாள் . தங்கம் நர்ஸ் பாலம்மாமீது பாவப்பட்டு தனி அன்புகொண்டாள் . சூடாக ஒரு தம்ளர் பால் கொண்டுவந்து மகன் கையில் கொடுத்து ஊட்டும்படி சொன்னாள் .  பாலம்மா கண்விழித்து மகன் முகத்தைப் பார்த்துவிட வேண்டுமே ' என்ற ஆசை தங்கத்திற்கு அதிகமாக இருந்தது . அதற்காக பிரார்த்தனை செய்தாள் . அதிகாலை ஐந்துமணி . மகன் கையைப் பிடித்தவாறே மகிழ்ச்சியோடு பாலம்மாவின் உயிர் பிரிந்திருந்தது . அவள் முகம் பிரகாசித்தது . நர்ஸ் தங்கம் சொன்னாள் : " பத்து நாட்களுக்கு முன்பு வந்திருந்தால் உங்கம்மாவைப் பாதுகாத்திருக்கலாம் . இப்போதும் பரவாயில்லை . அவஸ்தைப்படாமல் அமைதியோடும் சமாதானத்தோடும் உயிர்போயிருக்கிறது . இது பெரிய காரியம் என்றாள் . " அதற்காகத்தான் நான் வந்தேன் . என் பணி முடிந்தது . நான் வரட்டுமா ? " என்றார் மகன் . " அப்போ நீங்க அவங்க மகன் இல்லையா ? ” தாதி தங்கம் பரபரப்புடன் கேட்டாள் . அவர் சொன்னார் : " நர்சம்மா , தினமும் மாலை நேரங்களில் நோயாளிகளையும் , கைதிகளையும் , சந்தித்து ஆறுதல் கூறுவதை ஊழியமாகச் செய்து வருகிறேன் . நான் வாலிபத்தில் கொழும்பு சென்று நிறைய சம்பாதித்தேன் . வீட்டிற்கு ஒழுங்காகப் பணம் அனுப்பினேன் . இப்பொழுது வசதியாக வாழ்கிறேன் . ஒரு நாள் இந்தப்பக்கம் வரும்போது பாலம்மாவைப்பற்றி அறிந்தேன் . மகன் பாக்கியநாதன் எனக்குத் தெரியும் . கொழும்பில என் நண்பன் . பாலத் துறையில் ஒன்றாய் இருந்தோம் . பின்பு தீவிர தமிழ் புலியாகி விட்டான் . சமீபத்தில் சிங்கள இராணுவம் நடத்திய பயங்கர இனக் கலவரத்தில் பாக்கியநாதன் சுட்டுக் கொல்லப்பட்டான் . இந்தச் செய்தி ஒரு நண்பன் மூலம் எனக்குக் கிடைத்தது . பாக்கியநாதனின் ஆத்மா சாந்தியடைய இந்தம்மாவின் மகனாக நடித்தேன் ” என்றார் . நர்ஸ் நடுங்கிப்போனாள் . பிரமித்து நின்றாள் . ' தியாகங்கள் எத்தனை வகைகளில் உள்ளன ? ' என்று எண்ணிய நர்ஸ் அந்த நிழல் முகத்தை நினைந்து சிந்தனையில் ஆழ்ந்தாள் . 

219,-230

219        குரங்கின் கண்ணோட்டத்தில் மனிதன் 

மூன்று குரங்குகள் ஒரு தென்னை மரத்தின் மீது உட்கார்ந்து | பேசிக்கொண்டிருந்தன . 

ஒரு குரங்கு மற்ற இரண்டு குரங்குகளிடம் இப்படிச்சொன்னது “ நான் சொல்வதைக் கவனமாகக் கேளுங்கள் . நான் ஒரு பயங்கரமான கதை கேள்விப்பட்டேன் . அது உண்மை யாக இருக்க முடியாது . அதாவது நம்முடைய கௌரவமிக்க இனத்திலிருந்துதான் மனிதன் வந்தானாம் ! 

எத்தனை வெட்கக் கேடான , கேவலமான ஒரு அபிப்பிராயம் பாருங்கள் . ஒரு குரங்குகூட இதுவரை தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்ததில்லை , தன்னுடைய குழந்தைகள் எப்படியும் போகட்டுமென்று ஒரு நாளும் விட்டதில்லை . எந்த ஒரு தாய்க்குரங்கும் தன்னுடைய குட்டிகளை தனியே விட்டுவிட்டு தன்னறிவு தெரியாமல் குடித்து வெறித்ததில்லை . தன்னுடைய குட்டிகளை ஒருபோதும் மற்றவர் களிடம் கொடுத்ததில்லை . எந்தக் குட்டிக்குரங்கும் தன்னுடைய தாயார் யார் என்று அறியாமலிருந்ததில்லை . 

மற்றுமொரு காரியம் , எந்த குரங்கும் தன்னுடைய பழமரத்தைச் சுற்றி வேலி அடைக்காது , பழங்கள் அழுகி கெட்டுப்போய் வீணாகப் போனாலும் மற்றவர்கள் யாரும் அதை ருசி பார்த்துவிடக்கூடாது என்று நினைப்பதே இல்லை . அப்படி நான் வேலியடைத்தால் பசியின் காரணமாக உன்னை திருடுவதற்கு தூண்டுகிறேன் என்றுதான் அர்த்தம் . 

மற்றுமொரு காரியம் குரங்கு செய்வதே இல்லை . இரவு வேளையில் வெளியே சென்று துப்பாக்கியையோ , தடியையோ அல்லது கத்தியையோ கொண்டு அப்பாவி மனிதனின் உயிரைக் கொல்லுவதில்லை . 

ஆமாம் . மனிதன் ஒரு கைப்பிடி மண்ணால் உண்டாக்கப்பட்டவன் . ஆகவே என் சகோதர குரங்குகளே மனிதன் நம்மிலிருந்து உண்டானவனல்ல என்பது நிச்சயம் . "

 “ மாடு தன் எஜமானையும் , கழுதை தன் ஆண்டவனின் முன்னணையையும் அறியும் ; இஸ்ரவேலோ அறிவில்லாமலும் , என் ஜனம் உணர்வில்லாமலும் இருக்கிறது " ( ஏசாயா 1 : 3 )
220 எக்காலத்திலும் துதிப்பேன்

" கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்திரிப்பேன் ; அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும் . ” ( சங் .34 : 1 ) . சில ஆண்டுகளுக்கு முன்பாக ஸ்காட்லாந்து நாட்டில் தேவனால் இரட்சிக்கப்பட்ட ஒரு வாலிபனிருந்தான் . அவனது நாக்கில் சில புண்கள் வந்து அவைகள் குணமாகாமல் நீண்ட நாட்களாக மிகவும் சிரமப்பட்டான் . ஆகவே மருத்துவமனை சென்று மருத்துவ ஆலோசனை பெறவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது . மருத்துவர் அவனை மிகக் கவனமாகப் பரிசோதனை செய்தார் .

 முடிவில் அவனது நாக்கு புற்றுநோயால் ( Cancer ) மிகவும் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கண்டறிந்தார் . மருத்துவர் பாதிக்கப்பட்ட வாலிபனிடத்திலும் அவனோடு வந்திருந்த அவனது பெற்றோர்களிடமும் மிகவும் பரிவோடு நோயைக் குறித்தான காரியங்களை விளக்கினார் . “ அவனது ஜீவனைக் காப்பாற்ற வேண்டுமானால் அவனது நாக்கை முற்றுமாய் துண்டித்து எடுப்பதைத் தவிர வேறுவழியில்லை ” என்றும் “ அப்படி எடுத்துவிடும்போது அவனால் பேசமுடியாது ” என்பதையும் அவர்களுக்குச் சொல்லவேண்டிய முறையில் சொன்னார் . 

பெற்றோர் அதிர்ச்சியுள்ளவர்களாக செய்வதறியாது திகைத்துநின்றனர் . வாலிபன் பெற்றோர் முகத்தைப் பார்த்தான் . அவனுக்கு என்ன ஆறுதல் சொல்ல முடியும் என்று அவர்களுக்குத் தெரியவில்லை . இந்த நிலையில் மருத்துவர் “ அறுவை சிகிக்சை உடனடியாகச் செய்யப்படவேண்டும் ' என்று வலியுறுத்தினார் . அவன் இனி பேசமுடியாது என்பதை நினைத்துப் பார்க்க முடியவில்லை . அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடுகள் ஆயிற்று . அவனை அறுவை சிகிச்சை அறைக்கு அழைத்துச் சென்றனர் . அவனது பெற்றோரும் உடன் சென்றனர் . 

ஆனால் அவனது பெற்றோரை வெளியே அனுப்புவதற்கு முன்பாக அந்த வாலிபனை மருத்துவர் ஒரு கேள்விகேட்டார் . “ நீ ஏதாவது சொல்லிக் கொள்ள விரும்புகிறாயா ? ஏனெனில் நீ பேசுவது இதுவே கடைசி முறையாக இருக்கும் ” என்றார் மருத்துவர் . 

சில நொடிகள் அவனது சிந்தையில் தேவனைக் குறித்து எண்ண அலைகள் உண்டாயின . தன்னை இரட்சித்து தனனைக் கருத்தாய் இம்மட்டும் காத்த , அற்புதமாய் நடத்திய தேவனை வாயினால் புகழ்ந்து பாட விரும்பினான் . எல்லோரும் அவனையே உற்று நோக்கிக் கொண்டிருந்தனர் . அவனது முகத்தில் நிறைந்த புன்முறுவல் தோன்றி அவனது முகத்தில் ஒரு பிரகாசத்தைக் காணமுடிந்தது . அவனது இருதயம் பரலோக சந்தோஷத்தால் நிறைந்து சிறப்பான ஒரு பாடலை பாட ஆரம்பித்தான் . 

ஒரு ஊற்று இரத்தத்தால் நிரம்பியிருக்கிறது .

 அது இம்மானுவேலரின் நாளங்களிலிருந்து பாய்ந்தவை 

பாவிகள் அந்த இரத்த வெள்ளத்தில் மூழ்கி எழும்பும்போது 

பாவக்கறையாவும் களைந்து போகிறது .

 There is a fountain filled with blood 
Drawn from Immanuel's veins ; 
And sinners plunged beneath that flood , Lose all their guilty stains

 உள்ளுணர்வோடு பாடலின் இரண்டாவது சரணத்தைப் பாடினான் . 

மரித்துக் கொண்டிருந்த கள்ளன் களிகூர்ந்தான் 

அந்த இரத்த ஊற்றைக் கண்டு கொண்டதால் , 

ஒருவேளை அவனைப்போலவே அற்பனாக இருந்தாலும் 

என்னுடைய பாவங்களும் கழுவப்பட்டன .

 The dying thief rejoiced to see 
That fountain in that day ; 
And there may I , though vile as he
 Wash all my sins away . 

அவனது பாடலைக்கேட்டு அங்கு நின்றவர்களின் கண்கள் கண்ணீரால் நிரம்பின . அவன் பாடிய பாங்கிலிருந்து தன்னுடைய இரட்சகர் மீது எவ்வளவு பெரிய அன்பு வைத்திருக்கிறான் என்பது மிகத் தெளிவாயிற்று .

 மரித்துக் கொண்டிருக்கும் ஆட்டுக்குட்டியே ! உம்முடைய இரத்தம்

 என்றும் அதன் வல்லமையை இழப்பதில்லை . 

தேவனுடைய சபையை மீட்கும் பொருளைக் கொண்டு 

இரட்சிக்கப்பட்டு பாவமற்ற நிலையை எட்டும் வரை ....

. Dear dying Lamb , Thy precious blood Shall never lose its power ; Till all the ransomed Church of God Be saved to sin no more .

 கடைசி சரணத்திற்கும் வந்துவிட்டான் .

 இந்த ஏழையின் மழலைச் சொற்களையும் தெற்று நாவையும்

 கல்லறையில் மவுனமாக வைக்கும்போது

 இனிமையும் மேன்மையுமான பாடல்களைப்பாடி 

உம்முடைய இரட்சிப்பின் வல்லமையைப் பாடுவேன் .

 When this poor lisping , stammering tongue
 Lies silent in the grave , 
Then in a nobler , sweeter song ,
 I'll sing Thy power to save . 

அவனுக்கு மயக்க மருந்து செலுத்தப்பட்டது ( Anasthesia ) மருத்துவர்கள் அறுவை சிகிச்சையைச் செய்தனர் . செய்து முடித்த பின்னரும் அவன் சுயநினைவுக்கு திரும்பவே இல்லை . அவன் சதாகாலமும் தன்னுடைய மீட்பரை மகிமைப்படுத்தி புகழ்ந்துபாட பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டான் . 

அவன் பாடிய பாடலின் கடைசி சரணத்தில் பாடியது போல கல்லறையில் மவுனமானான் , 

ஆனாலும் மேன்மையான பாடலைப் பாடுகிறான் . 

அன்பானவர்களே , நீங்கள் உங்கள் நாவை எவ்வாறு பயன்படுத்து கிறீர்கள் ? உங்களுடைய பெற்றோருக்கு , ஆசிரியர்களுக்கு விரோதமாக முறுமுறுக்கிறீர்களா ? முறையிட்டுக் கொண்டே இருக்கிறீர்களா ? பொய் பேசுகிறீர்களா ? எதிர்த்துப் பேசுகிறீர்களா ? அவதூறாகப் பேசுகிறீர்களா ? வதந்திகளைக் கிளப்புகிறீர்களா ? இப்போதே விட்டுவிடத் தீர்மானியுங்கள் . 

பேசுவதற்கு இதுவே கடைசி தருணம் என்பதை அறிந்த போதும் அவன் மனம் பதறவில்லை . ஆனால் கிறிஸ்துவைப் புகழ்ந்து பாடினான் . உங்களுடைய முழு இருதயத்தோடும் அவரைப் புகழ்ந்து பாடுங்கள் . " நமது தேவனைத் துதிக்கும் புதுப்பாட்டை அவர் என் வாயிலே கொடுத்தார் ; அநேகர் அதைக் கண்டு , பயந்து , கர்த்தரை நம்புவார்கள் ” 
( சங் .40 : 3) 



221           கொடுங்கள் 

பால் , தனியார் நிறுவனம் ஒன்றில் நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றிக் கொண்டிருந்தார் . அவருடைய மூத்த சகோதரர் பாலுக்கு ஒரு கார் தேவை என்பதை உணர்ந்து அழகான கார் ஒன்றை வெகுமதியாக வாங்கிக்கொடுத்தார் . பால் அந்த காரில்தான் அலுவலகம் செல்வார் . ஒரு நாள் அலுவலக வேலை முடித்து வீட்டிற்கு திரும்ப காரை எடுக்க வரும்போது கார் அருகில் ஏழைப் பையன் ஒருவன் அந்தக் காரை ஆச்சரியமாக பார்த்துக்கொண்டிருந்தான் . “

 இந்தக் கார் மிகவும் பளபளப்பாக அழகாக இருக்கிறது இது உங்கள் காரா ? என்று அச்சிறுவன் கேட்டான் . பால் " ஆமாம் " என்று தலையசைத்து “ என் மூத்த சகோதரர் இதை எனக்கு வெகுமதியாக வாங்கிக்கொடுத்தார் ” என்று மகிழ்ச்சியோடு பதிலளித்தார் . உடனே “ எனக்கு ஒரு ஆசை . . . ” என்று தயக்கத்தோடு ஏதோ சொல்ல ஆரம்பித்தான் . தனக்கும் அப்படி ஒரு சகோதரன் இருந்தால் நன்றாக இருக்குமே என்று எண்ணுகிறான் போலும் என்று பால் நினைத்தார் .

 ஆனால் அவனுடைய பதில் பாலுக்கு மிகுந்த ஆச்சரியமளித்தது . “ நான் அப்படிப்பட்ட அண்ணனாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறேன் . அதுதான் என்னுடைய ஆசை " என்றான்

 அச்சிறுவன் . “ நான் உங்கள் காரில் சிறிது தூரம் பயணம் செய்யலாமா ? ” என்று ஆசையோடு கேட்டான் . பால் அதை ஏற்றுக் கொண்டு “ சரி ஏறிக்கொள் ” என்று முன் கதவைத் திறந்து கொடுத்தார் . அவன் முகத்தில் மகிழ்ச்சி மலர்ந்தது . பால் காரை ஓட்ட ஆரம்பித்தார் . சிறிது தூரம் சென்றதும் காரை நிறுத்தச் சொன்னான் .

 “ இந்தப் பகுதியில்தான் என் வீடு இருக்கிறது . சிறிது உள்ளே செல்லவேண்டும் . என்னை என் வீட்டு முன்னால் இறக்கிவிடுங்களேன் ” என்று அச் சிறுவன் கேட்டான் . அவன் தனது அயலகத்தார் மத்தியில் காரில் போய் இறங்குவதை பெருமையாக எண்ணி அவ்வாறு கேட்கிறான் என்று பால் நினைத்தார் . 

எனினும் அவனது விருப்பப்படியே காரை அவனது வீட்டின் முன்பாகவே கொண்டுபோய் நிறுத்தினார் . இவன் இறங்கி “ ஐயா , கொஞ்சம் பொறுத்திருங்கள் " என்று சொல்லி வீட்டிற்குள் ஓடினான் . ! 

பால் பொறுத்திருந்தார் . வீட்டிற்குள்ளிருந்த முற்றிலும் முடமான தனது சிறிய தம்பியை முதுகில் சுமந்து வந்து வீட்டின் வாசற்படியில் உட்கார வைத்து . அவனிடத்தில் " அதோ பார் , அந்தக்கார் அவருடைய மூத்த சகோதரர் அவருக்கு வெகுமதியாகக் கொடுத்ததாம் . அதேபோல நானும் என்றாவது ஒருநாள் உனக்கு இதே போன்ற ஒரு காரை வாங்கித் தருவேன் " என்று சொன்னான் .

 இதைக் கேட்ட பாலின் இருதயம் நெகிழ்ந்தது . காரை விட்டு இறங்கிவந்து முடமான அந்தப் பையனைத் தனது காரில் வைத்தார் . அவனது அண்ணனையும் ஏறிக்கொள்ளச் சொன்னார் . சிறிது தூரம் அவர்களைக் கார் பயணம் செய்ய வைத்து மீண்டும் வீட்டிற்குக் கொண்டு வந்துவிட்டார் . வீடு திரும்புபோது பாலின் சிந்தனை முழுவதும் அந்த ஏழைப் பையனின் மீதே இருந்தது . ஏழ்மையிலும் முடமான தன் தம்பியின் மீது அவனுக்குள்ள அன்பும் கரிசனையும் அவரது இருதயத்தைத் தொட்டது . 

அவனது திராணிக்கும் மிஞ்சி தனது முடமான தம்பி நினைத்த இடத்திற்குச் செல்வதற்கு கார் வாங்கிக் கொடுக்க வேண்டுமென்ற ஆழ்ந்த விருப்பம் எவ்வளவு பெரியது என்பதை பால் சிந்தித்துப் பார்த்தார் . “ வாங்குவதை விட , கொடுப்பதே ஆசீர்வாதமானது " என்பதை உணர்ந்தார் . மற்றவர்களுக்காக இரங்குகிற இருதயத்தை ஆண்டவர் கனப்படுத்துகிறார் . ஆகவே தான் ஆண்டவராகிய இயேசு “ இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள் ; அவர்கள் இரக்கம் பெறு வார்கள் ” ( மத் . 5 : 7 ) என்று கூறினார் . “ கொடுங்கள் அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும் ” ( லூக் 4 : 38 )

 தேவனுடைய வார்த்தை 2009 ஜனவரி



222            பாவம் ஒரு பொறி

 குளிர்காலத்தின் தொடக்கம் . ஒரு கூட்டம் வனவாத்துகள் ( wild ducks ) வடக்கேயிருந்து தெற்கே நோக்கி ஒரு ஒழுங்கின்படி பறந்து சென்று கொண்டிருந்தன . வடிவில் வரிசை தவறாமல் சென்று கொண்டிருந்தன . பூமியிலிருந்து அந்தக் காட்சியைக் கண்டவர்கள் வியந்தார்கள் , குளிர்காலத்தில் இடம்பெயர்ந்து தங்களுக்கு பாதுகாப்பான வெப்பநிலை உள்ள இடத்திற்குச் செல்கின்றன . காலத்தைக் குறித்த அறிவும் , எங்கு செல்லுகிறோம் என்ற அவைகளுக்கிருக்கும் தரிசனத்தையும் வியக்காமல் இருக்கமுடியாது . 

சிருஷ்டி கர்த்தரின் படைப்புகளில் எவ்வளவு அற்புதங்கள் ! ஒழுங்கின் படி வரிசையில் சென்ற வாத்துகளுள் வாலி என்ற வாத்துக்கு பூமியில் அதன் கண்ணைக் கவரும் ஒரு காட்சியைக் கண்டுவிட்டது . 

ஒரு களஞ்சியப்பண்ணையைச் சுற்றி ஒரு கூட்டம் பழக்கப்பட்ட வாத்துகள் ( Tamed Ducks ) " குவாக் , குவாக் " என்ற மகிழ்ச்சியின் குரலோடு அசைந்து அசைந்து நடந்துகொண்டிருந்தன . அவைகளுக்குப் பிரியமான தானியங்கள் போடப்பட்டிருந்தன . அவற்றை உண்டு மகிழ்ந்தன . இந்தக் காட்சியைக் கண்டதும் இந்தக் கூட்டத்தோடு போய் சேர்ந்து கொள்ள வேண்டும் , அந்தத் தானியங்களை ருசிக்க வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது . 

திடீரென்று அந்த ஒழுங்கு வரிசை யிலிருந்து பிரிந்து தரையை நோக்கிப் பறந்து களஞ்சியப் பண்ணையில் வந்து இறங்கிவிட்டது . மற்ற வாத்துகளெல்லாம் தெற்கே நோக்கி அதே ஒழுங்கில் பறந்துகொண்டிருந்தன . 

“ சில மாதங்களுக்குள் அவைகள் வடக்கே நோக்கித் திரும்பும்போது நான் அவைகளோடு சேர்ந்து கொள்வேன் என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டது .

 தானியங்களை ஆசையோடு தின்றது . அதற்கு பெரிய மகிழ்ச்சி . மற்ற வாத்துகளோடு சேர்ந்து மகிழ்ச்சியாகக் களித்தது . மாதங்கள் கடந்து சென்றன . வாலி வானத்தை உற்றுநோக்க ஆரம்பித்தது . ஏனெனில் அவைகள் வடக்கே திரும்பும் காலம் நெருங்கிற்று .

 தங்களது சொந்த இடத்திற்கு அவைகள் திரும்பும் . ஒரு நாள் தான் சார்ந்திருந்த வாத்துக்கூட்டம் வடக்கே நோக்கி ஒழுங்கின்படி வரிசையாகப் பறந்து வருவதைக் கண்டுகொண்டது . " என் கூட்டத்தின் அழகே தனிதான் . இந்த இடம் சுத்தமாகவே இல்லை , சகதியும் வாத்துகளின் எச்சமுமே நிறைந்து கிடக்கின்றன . இப்பொழுது என் சரீரமே அழுக்காகி விட்டது " என்று சொல்லி கொண்டு தனது கூட்டத்தோடு பறக்க ஆரம்பித்தது . தனது சிறகு அடித்து உயர எழும்பியது , அந்தோ பரிதாபம் சிறிது உயரத்திற்கு மேல் அதற்கு பறக்க முடியாமல் " தடார் " என்று களஞ்சியப் பண்ணைக்குள்ளேயே விழுந்தது . தானியத்தை உண்டு களித்து உடல் கனத்துப் போயிற்று . பறக்கும் பழக்கம் இல்லாது போய் விட்டபடியால் இறக்கைகள் பலமிழந்துபோயின . மீண்டும் தான் வெறுத்த அதே களஞ்சியத்தைச் சுற்றிய வாழ்க்கைத் தொடர்ந்தது . 

“ நிச்சயமாக என் கூட்டத்தார் தெற்கே நோக்கி வரும்போது நான் அவர்களோடு சேர்ந்து கொள்ளுவேன் " என்று தன்னைத்தானே ஆறுதல் படுத்திக் கொண்டது . சில மாதங்களில் தான் சார்ந்திருந்த கூட்டம் அழகாக வானில் தெற்கே நோக்கி பறந்துசென்றன . வாலி அண்ணாந்து பார்த்து மகிழ்ச்சி யடைந்தது . ஆனால் இப்பொழுது பறக்க முயற்சித்தாலும் சிறிது உயரம் கூட பறக்க முடியவில்லை . அதன் உடல் அமைப்பே மாறிபோயிற்று .  இனிமேல் வன வாத்துகளோடு வானில் பறக்கமுடியாது என்ற நிலை ஆயிற்று . குளிர்காலமும் கோடை காலமும் மாறி மாறி வந்தன . வன வாத்துகள் தெற்கே நோக்கிச் செல்வதையும் வடக்கே திரும்புவதையும் பார்க்கத்தான் முடிந்ததே தவிர வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை .

 கனத்த சரீரம் , கனத்த இருதயம் இதுவே வாழ்வாயிற்று . இப்பொழுது நிரந்தரமாகவே களஞ்சியப் பண்ணை வாத்தாகவே மாறிவிட்டது , 

இயேசு கிறிஸ்துவை பின் பற்றுகிறவர்களாகிய நாமும் சில வேளைகளில் வாலி என்ற வனவாத்தைப் போல தனக்குத் தகாத காட்சியைக் கண்டு சர்க்கப்பட்டு தன்னுடைய பாதையை விட்டு விலகியதுபோல நாமும் வழிவிலகி விடுகிறோம் . இயேசுவுக்குக் கீழ்ப்படிந்து ஒரு ஒழுங்கின் படி நடந்து கொண்டிருந்த நாம் அந்த ஒழுங்கில் தொடர்வதை விட்டு சாத்தானின் கவர்ச்சிக் காட்சியின் சோதனையில் விழுந்து விடுகிறோம் .

 இப்பொழுது அந்த வாலி என்ற வனவாத்தைப்போல திரும்பப்போய் தன் கூட்டத்தோடு சேர்ந்துகொள்ள வேண்டுமென்று விரும்பினாலும் சேர்ந்து கொள்ள முடியாத நிலையில் சிக்கி களஞ்சியப் பண்ணை வாத்தாக மாறியது போன்ற நிலையாயிற்று . 

பாவம் இதைப் போன்றுதான் . பாவம் மனிதனை சிக்கவைக்கும் ஒரு பொறி ( Trap ) நாம் விரும்புகிறதைச் செய்யாமல் விரும்பாததைச் செய்ய வைத்துவிடும் . காலப்போக்கில் இயேசுவைக் குறித்த சிந்தையே அற்றுப்போகிறது . தொடர்பு அற்றுப் போகிறது “ உன்னதமானவரின் பிள்ளைகள் ( Children of the most high ) என்று பெயர் பெற்றிருந்த நாம் கீழ்படியாமையின் பிள்ளைகள் ( Children of Disobedience ) என்ற பெயரைப் பெற்றுக்கொண்டு சாத்தானின் பிள்ளைகளாக மாறினோம் . 

வனவாத்து ( wild Quck ) களஞ்சியப் பண்ணை வாத்தாக ( Barnyard Duck ) மாறிய நிலையாயிற்று . 


தேவனுடைய வார்த்தை 2009 மார்ச்




223  மேலானவைகளை நாடுங்கள் 

" நான் பொன்னிலும் பசும் பொன்னிலும் அதிகமாய் உமது கற்பனைகளில் பிரியப்படுகிறேன் ” ( சங் . 119 : 127 ) உலகம் முழுவதும் வேதாகமத்தை வினியோகிக்கும் “ கிதியோன் " ( THE GIDEONS ) உலகளாவிய தொடர்புள்ள பெரிய நிறுவனம் . இந்நிறுவனத்தின் ஒரு குழுவினர் அப்போதிருந்த பிரிக்கப்படாத சோவியத் ரஷ்யாவுக்குச் சென்றனர் . 

அவர்கள் எதிர்பார்ப்புக்கும் மாறாக வேதாகமத்தை வினியோகம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது . எனினும் அரசு நிர்ணயிக்கும் பகுதியில் மட்டும் வினியோகிக்கும் அனுமதி கிடைத்தது . அதையே ஏற்றுக்கொண்டு அக்குழுவினர் குறிக்கப்பட்ட நகரங்களில் , பள்ளிகளில் வினியோகிக்க அவர்களுடைய வாகனத்தில் சென்றனர் .

 இக்குழுவினருடன் காவல்துறை அதிகாரி ஒருவரும் வேதாகம வினியோகத்தை மேற்பார்வை செய்யும் பொருட்டு நியமிக்கப்பட்டிருந்தார் . வினியோகிக்க வேண்டிய ஒரு நகரிலுள்ள பள்ளியண்டை வந்த போது அங்கு நிறுத்தாமல் கடந்து சென்று வேறு ஒரு இடத்திற்குப்  போகும்படி காவல்துறை அதிகாரி சொன்னார் .

 தவிர்க்க முடியாத சூழ்நிலையில் கிதியோன் குழுவினர் கடந்து சென்றனர் . சுமார் 7 கி . மீ . க்கு அங்குள்ள குறிக்கப்படாத வேறு ஒரு பள்ளியின் முன்பாக நிறுத்தி வேதாகமத்தை வினியோகிக்கச் சொன்னார் . இந்த காவல்துறை அதிகாரி 

நம்மை ஏதோ பிரச்சனையில் சிக்கவைக்கப் போகிறார் என்று எண்ணி பயந்தனர் . ஆனால் எந்த பிரச்சனையு மின்றி வேதாகமங்களை வினியோகித்து முடித்தனர் . 

அதன் பின்னர் முன்பு குறிக்கப்பட்ட நகரிலுள்ள பள்ளிக்குச் சென்றனர் . கிதியோன் குழுவின் தலைவர் காவல்துறை அதிகாரியிடம் தயக்கத்தோடு “ ஏன் குறிக்கப்படாத ஒரு பள்ளியில் வேதாகமம் விநியோகிக்க சொன் னீர்கள் " என்று கேட்டார் . “

 என்னுடைய இரண்டு பிள்ளைகளும் இந்தப் பள்ளியில் படிக்கின்றனர் . அவர்கள் இருவரும் வேதாகமத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்பினேன் . இப்படியொரு வாய்ப்பு கிடைக்குமோ , கிடைக்காதோ என்று எண்ணி இங்கே அழைத்து வந்தேன் " என்று சொன்னார் . அவருடைய பதில் அவருக்கு மிகுந்த ஆச்சரியமானதாகயிருந்தது . 

தான் அறியாவிட்டாலும் தன்னுடைய பிள்ளைகள் அறிந்துகொள்ள வேண்டுமென்று நினைக்கிறாரே ! தேவனுடைய வார்த்தை பொன்னிலும் , பசும்பொன்னிலும் விலையேறப் பெற்றது ( சங் . 19 : 10 ) .

 இந்தக் காவல்துறை அதிகாரி இதன் மதிப்பை அறிந்து கொண்டபடியால் தன் பிள்ளைகளுக்குப் பெற்றுத் தருவதில் கவனமாயிருந்தார் . நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவைக் கொடுக்கிறீர்களா ? மேலானதைக் கொடுங்கள் அப்பொழுது பூமியிலுள்ளவைகளையல்ல மேலானதை நாடுவார்கள் ( கொலோ . 3 : 2 ) .





224.    நீங்கள் கிறிஸ்துவின் மனைவியா ?


 பல ஆண்டுகளுக்கு முன்பாக நியுயார்க் நகரில் நடந்த ஒரு சம்பவம் . உடம்பையே நடுங்க வைக்கும் குளிர் எல்லோரையும் உலுக்கிக் கொண்டி ருந்தது . அந்தக் குளிரிலும் கந்தல் உடையில் , வெறுங்காலுடன் ஒரு சிறு பையன் நடுங்கிக்கொண்டே காலணிக் கடையின் ( Shoe Mart ) வெளியே நின்று ஜன்னல் வழியாக உற்று நோக்கிக் கொண்டிருந்தான் . 

பெருஞ் செல்வந்தரான பெண்மணி இரண்டு குதிரைகள் பூட்டிய தன்னுடைய இரதத்தில் ( Chariot ) அந்தப் பக்கம் வந்தாள் . சிறுவனின் பரிதாப நிலை அவள் கண்ணில்பட்டது . உடனே இரதத்தை நிறுத்தச்சொன்னாள் . இரதத்தைவிட்டு இறங்கி பரிவோடு அந்தச் சிறுவனிடத்தில் சென்றாள் . "

 தம்பி , ஜன்னல் வழியாக நீ என்னத்தைப் பார்த்துக் கொண்டிருக் கிறாய் ? என்று கனிவோடு அந்தப் பெண்மணி கேட்டாள் . * குளிரிலிருந்து என் கால்களைக் காத்துக்கொள்ள என் இயேசு வினிடத்தில் நான் ஒரு ஜோடி ஷூ ( Shoe ) கேட்டிருக்கிறேன் . அவர் எதை எனக்குத் தரப்போகிறார் என்று பார்த்துக் கொண்டிருக்கிறேன் " என்று ஒரு நிச்சயத்தோடு பதிலளித்தான் . 

அந்தப் பதில் அந்தப் பெண்மணியை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது . இயேவினிடத்தில் தான் கேட்டதைப்  பெற்றுக்கொள்வோம் என்ற உறுதியான விசுவாசம் இந்தச் சிறுவனுக்கு இருக்கிறதே என்று ஆச்சரியப்பட்டாள் ( மாற் . 11 : 24 ) , தன்னுடைய விசு வாசத்தின் அளவை ( Level of Faith ) ஒப்பிட்டுப்பார்த்தாள் . கருணையோடு அவன் கையைப் பற்றிக்கொண்டு காலணிக் கடையின் உள்ளே அழைத்துச் சென்றாள் . 

ஒரு செல்வச் சீமாட்டி கந்தலுடையிலுள்ள சிறுவனைச் கையில் பிடித்துக்கொண்டு உள்ளே வந்தக் காட்சியைக்கண்டு அங்கிருந்த விற்பனையாளர்களுக்கெல்லாம் ஆச்சரியம் . அப்பெண் மணிக்கு உதவி செய்ய விற்பனையாளர்கள் மிகுந்த மரியாதையுடன் முன்வந்தனர் . “

 இச்சிறுவனுக்கு 6 ஜோடி உல்லன் சாக்ஸ் வேண்டும் என்று கேட்ட மாத்திரத்தில் அதை எடுக்க விற்பனையாளர் விரைந்தார் . இன்னொருவரிடம் “ எனக்கு உங்கள் உதவி தேவை . செய்வீர்களா ? " என்று அப்பெண்மணி கேட்டாள் . " செய்வதற்கு ஆயத்தமாயிருக்கிறோம் என்ன செய்யவேண்டும் ' ' என்று விற்பனையாளர் சொன்னார் . 

ஒரு அகன்ற பாத்திரத்தில் ( Basin ) தண்ணீரும் ஒரு துண்டும் ( towel ) வேண்டும் என்று கேட்டாள் . கடையின் பிற்பகுதியிலேயே அதை ஒழுங்கு செய்துகொடுத்தனர் . அச்சிறுவனை அப்பெண்மணி ஒரு நாற்காலியில் உட்காரவைத்து , தான் அணிந்திருந்த கையுறையைக் கழட்டிவிட்டு அவனுடைய கால்களைச் சுத்தமாகக் கழுவி துண்டால் துடைத்தாள் . சிறுவனுக்குப் பெரிய வியப்பு . 

இயேசுதான் தம்முடைய சீடர்களுடைய கால்களைக் கழுவித்துடைத்தார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன் ( யோவா . 13 : 4 - 9 ) . அப்படிச் செய்வதை இப்பொழுதுதான் என் கண்களால் காண்கிறேன் என்ற எண்ணங்கள் அவனுடைய சிந்தையில் ஓடின . உல்லன் சாக்ஸ் ஆயத்தமாக இருந்தது . அதை அப்பெண்மணி அச்சிறுவனின் காலில் அணிவித்தாள் . ஷூவும் ஆயத்தமாயிற்று . விற்பனையாளர் அவனது காலில் அணிவித்தார் .

 முன்பின் அறிமுகமில்லாத இவர்கள் புறக்கணிக்கப்பட்ட நிலையிலிருக்கும் என்மீது இவ்வளவு கரிசனையுள்ளவர்களாக இருக்கிறார்களே என்று அவன் ஆச்சரியத்தில் மூழ்கிப்போனான் . அப்பெண்மணி “ இப்பொழுது உனக்குச் சந்தோஷம் தானா ? " என்று புன்சிரிப்போடு கேட்டாள் . அப்பெண்மணியை அவ்வளவு நேரமும் வியப்போடு பார்த்துக்கொண்டே இருந்த அச்சிறுவன் நீங்கள் இயேசுவின் மனைவியா ? " என்று கேட்டான் . 

அந்தக் கேள்விக்கு அப்பெண்மணிக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் திகைத்துப்போனாள் . " இல்லை என்றும் சொல்ல முடியவில்லை . ஏனென்றால் கிறிஸ்துவின் மணவாட்டியாகத் தன்னை ஆயத்தப் படுத்திக்கொண்டிருந்தாள் . " ஆம் என்றும் சொல்ல முடியவில்லை . ஏனென்றால் அவள் மணவாட்டியாக இன்னும் ஆயத்தமாக இல்லையே என்ற சிந்தனையிலேயே இருந்தாள் .

 அதற்குள்ளாக அச்சிறுவன் " நீங்க இயேசுவுக்குச் சொந்தக்காரங்களா ? என்று கேட்டான் . " இயேசுவின் வருகையின் போது நிச்சயமாக அவருக்கு மணவாட்டியாக இருப்பேன் . இப்பொழுது நான் மணவாட்டியாக ஆயத்தமாகிக்கொண்டிருக்கிறேன் " என்று தைரியமாகச் சொன்னாள் . 

அவன் புன்முறுவலோடு நின்றான் நான் உங்களைக் கற்புள்ள கன்னிகையாகக் கிறிஸ்து என்னும் ஒரே புருஷனுக்கு ஒப்புக்கொடுக்க நியமித்தபடியால் , உங்களுக்காகத் கேவவைராக்கியமான வைராக்கியங்கொண்டிருக்கிறேன் " ( 2 கொரி 11 : 2 ) .

 தேவனுடைய வார்த்தை 2007 ஆகஸ்ட் 64



225         சிறிதாக்கப்பட்ட சிலுவை 

ஒரு மோட்சப்பயணி வாக்குத்தத்தம் செய்யப்பட்ட மகிமையான தேசத்தை நோக்கி பயணம் செய்துகொண்டிருந்தான் . தன்னுடைய எஜமானின் பாரமாக சிலுவை ஒன்றை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டு சுமந்துகொண்டு சென்றான் . பயணத்தில் ஏற்பட்ட களைப்பு காரணமாக நல்ல நிழலைக் கண்டதும் களைப்பு நீங்க சிறிது இளைப்பாறிச் செல்லலாம் என நிழலில் ஓய்வெடுத்தான் . ஓய்வாகப் படுத்திருக்கும்போது 

அருகிலுள்ள காட்டில் ஒருவன் மரம் வெட்டிக்கொண்டிருப்பதைக் கவனித்தான் . “ நண்பனே , உன்னுடைய கோடாரியைக் கொஞ்சம் தா . என்னுடைய பிரயாணத்தில் என்னுடைய சிலுவை மிகப் பாரமாக உள்ளது . ஆகவே அதைச்சிறிது வெட்டி பாரத்தை குறைத்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன் " என்று மரம் வெட்டுகிறவனை பார்த்து கேட்டான் . அவன் எந்த தயக்கமுமின்றி தன்னுடைய கோடாரியைக் கொடுத்தான் , மோட்சப் பயணி தான் நினைத்ததுபோல சிலுவையின் நீளத்தை வெட்டிக் குறைத்து சிறிதாகி பாரத்தைக் குறைத்துக்கொண்டான் . 

சிலுவையின் பாரம் குறைவாகயிருந்தபடியால் பிரயாணம் எளிதாக யிருந்தது . வெகு சீக்கிரமே வாக்குத்தத்தம் செய்யப்பட்ட தேசத்தின் அருகாமையில் வந்துவிட்டான் . அந்த மகிமையைக் கண்டதும் அவனது மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை . என் இயேசுவை முகமுகமாக காணப் போகிறேன் என்பதை எண்ணும்போது பேரானந்தத்தை அடக்கிக்கொள்ள முடியவில்லை . 

ஆனால் அவன் மிக நெருங்கிவந்தபோது , அந்த மகிமை நிறைந்த இடத்தைக் கடக்க என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துக் கொண்டிருந்தபோது “ உன் சிலுவையை இணைப்பு பாலமாக வைத்து நிலப்பிளவைத் தாண்டிவா ” என்ற சத்தத்தைக் கேட்டான் . 

இந்த யோசனை என் புத்திக்கு எட்டாது போய்விட்டதே என அவன் தன்னை நொந்து கொண்டயன் . கடக்கும் வழினைத் தெரிந்து கொண்டதில் அவனுக்கு பெரிய மகழிச்சி ,ஆனால் சிலுவையை இணைப்புப் பாலமாக வைத்தபோது சிலுவையின் நீளம் குறைவாகயிருந்தபடியால் நிலப்பரப்புகளை இணைக்க முடியவில்லை . அதிலும் மிகக் கொடூரமான காரியம் என்னவென்றால் , பாரமாக இருக்கிறது என்று எந்த அளவுக்கு சிலுவையின் நீளத்தைக் குறைத்தானோ அதே அளவுதான் நிலப்பிளவை இணைப்பதற்குத் தேவைப்பட்டது . 

“ ஐயோ , என் சிலுவையை வெட்டி குறைக்காமலிருந் திருப்பேனானால் நான் மகிமையின் தேசத்திற்குள் இப்போது போயிருப்பேனே , பாரத்தைக் குறைக்க எண்ணி நீளத்தை வெட்டிக் குறைத்து இப்போது என் பிரயாணமெல்லாம் வீணாகிவிட்டதே . நான் இனி எப்படி அந்த தேசத்திற்குள் போகமுடியும் ” எனக் கதறி அழுதான் .

 திடீரென கண் விழித்து எழுந்தான் . அப்போதுதான் தான் கண்டது கனவு என விளங்கிக் கொண்டான் . தன் அருகிலிருந்த பாரச்சிலுவையை மார்போடு இறுக அணைத்துக் கொண்டான் . எந்தச் சூழ்நிலையிலும் எனக்குக் கொடுக்கப்பட்ட சிலுவையை நான் குறைக்க நினைக்க மாட்டேன் என்று தீர்மானித்தான் . பயணத்தைத் தொடர்ந்தான் . சிலுவை பாரமானதாக இருந்தாலும் இப்போது மகிமையின் தேசத்தைக் குறித்ததான சரியான தரிசனம் இருந்தபடியால் அவனுக்கு அது இலகுவாகயிருந்தது . "

 சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்கு பைத்தியமாயிருக்கிறது . இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவ பெலனாயிருக்கிறது " ( 1 கொரி . 1 : 18 ) .

 தேவனுடைய வார்த்தை 1996 ஜூலை


226      முன் தெரிந்துகொண்டவர்

லண்டன் சாலையில் வாகனங்கள் வேகமாக சென்றுகொண்டிருந்தன. ஒரு கார் பல மணிநேரமாக பழுதடைந்து நின்று கொண்டிருந்தது. அதன் உரிமையாளர் பலவழிகளில் அதை சரிசெய்ய முயன்றார். ஆனால், ஒரு சிறிய அளவிற்கு கூட பயன் தரவில்லை. பக்கத்தில் உதவி செய்ய யாருமில்லை, ஒர்க் ஷாப் அருகே எதுவுமில்லை அவருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. 

அப்பொழுது ஒருகார் அவர் அருகே வந்து நின்றது. அதிலிருந்து வயதான முதியவர் ஒருவர் இறங்கி வந்தார். அருகில் வந்து, என்ன பிரச்சினை? என்று கேட்டார்.

 ஏற்கனவே எரிச்சலோடிருந்த அவருக்கு முதியவர் அப்படி கேட்டது மேலும் எரிச்சலூட்டியது, கோபத்துடன் அவரைப் பார்த்து, நான் இந்த காரின் உரிமையாளர் மட்டுமல்ல, காரை பழுது பார்ப்பதில் நிபுணர், எனக்கே இது புரியவில்லை, நீர் வயதானவராகவும் இருக்கிறீர், உமக்கென்ன தெரியும்? என்று கேட்டார், 

ஆனாலும் இந்த முதியவர் வற்புறுத்தியதால் வேண்டாவெறுப்பாக அவரிடம் கார் சாவியை கொடுத்தார். 

முதியவர் காரை முழுவதும் நோட்டமிட்டார். கார் இஞ்சினில் ஒரே ஒரு வயரை சரி செய்தார். இப்பொழுது காரை start செய்யுங்கள் என்றார். 

என்ன ஆச்சரியம்! பல மணிநேரமாக பழுதடைந்து நின்றுகொண்டிருந்த அந்த கார் ஒரே நிமிடத்தில் சரியாகி விட்டது. அந்த காரின் உரிமையாளருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

 முதியவரின் கைகளை பற்றிக்கொண்டு, ஐயா என்னை மன்னித்து விடுங்கள் உங்களை தவறாக எண்ணிவிட்டேன். ஐயா நீங்கள் யார்? என்று கேட்டார். அதற்கு அந்த முதியவர் புன்முறுவலுடன், இந்த காரை தயாரிக்கும் Henry Ford நான் தான் என்றார். கார் உரிமையாளருக்கு பேச்சே வரவில்லை.

Henry Ford தனது காரில் ஏறிக்கொண்டே, காரை உருவாக்கிய எனக்கு, அதில் ஏற்படும் பிரச்சினைகள் என்னவென்று தெரியாதா? என்று கேட்டார்.

 என்னைக் குறித்து அக்கறை கொள்ள யாருமேயில்லை, என் பிரச்சினைகளை புரிந்து கொள்ளக்கூட யாருமில்லை என்று கண்ணீர் வடிக்கின்றீர்களா? உங்களை பார்த்துதான் இயேசப்பா கூறுகின்றார், "உன்னை என் உள்ளங்கைகளில் வரைந்திருக்கிறேன்."

 ஒரு காரை உருவாக்கின ஒருவருக்கு அதன் பிரச்சினைகள் தெரியுமானால், இந்த அண்டசராசரங்களையே படைத்த நம் தேவனுக்கு, தாயின் கருவில் உருவாக்கும் முன்னே நம்மை தெரிந்துகொண்ட நம் தேவனுக்கு நம் பிரச்சினைகள் எம்மாத்திரம்? 

எனவே கவலையைவிடுங்கள், கண்ணீரை துடைத்துக் கொள்ளுங்கள். உங்களை தன் உள்ளங்கைகளில் வரைந்த தேவன் ஒரு போதும் உங்களை மறக்கமாட்டார்."

 *இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன்* ".
 *ஏசா 49:16*  ஆமென்!




227   அவசரபுத்தி_அழிவைத்தரும்...

பரந்து வாசம் என்பது மிகப் பெரிய காடு. அந்தக் காட்டில் செங்குந்தன் என்ற ஒரு வேடன் இருந்தான்.

அவன் மிகவும் அவசர புத்திக்காரன். அவனுக்கு அடிக்கடி கோபமும், ஆத்திரமும் வரும். எந்த நேரமும் அவன் முகம் உர்ரென்றுதான் இருக்கும்.

அந்தக் காட்டில் ஒரு பருந்து இருந்தது. அது சாதாரணப் பருந்து போன்றதல்ல, பெரிய பறவை வானில் 'பறக்கும் போது சுமார் ஐம்பது மைல் சுற்றளவில் உள்ள பகுதிகள்  அதன் கண்களுக்குத் தெரியும். 

ஒருமுறை 
இரவில் அந்தப் பறவை மரத்துக்கிளை ஒன்றில் உறங்கிக் கொண்டு இருந்தது. அப்போது அம்மரத்தடியில் படுத்திருந்த செங்குந்தன் மீது அப்பறவையில் மூச்சுப்பட்டது. தனக்கு இத்தனை சுகமான காற்று வருகிறதே என நினைத்த அவன் சற்று நேரம் கண்ணயர்ந்தான்.

திடீரெனச் செங்குந்தனுக்கு ஒரு சந்தேகம் வந்தது. இது நிஜமான காற்று என்றால் எல்லாத் திசைகளிலும் சீராக வீச வேண்டுமே! இது நேராக இந்த மரத்தடியில படுத்திருக்கும் நமக்கு மட்டும் கிடைப்பானேன் என்று நினைத்தான். 

உடனே மரத்தில் ஏதோ ஒரு பெரிய பறவையோ மிருகமோ ஒளிந்திருக்கிறதெனக் கண்டுபிடித்து விட்டான்.

உடனே சத்தமின்றி எழுந்து மரத்தில் ஏறினான். உறங்கிக் கொண்டிருந்த பருந்தைத் தன் வலையை வீசிப் பிடித்துவிட்டான். பிடிப்பட்ட பருந்து துடித்தது. துள்ளியது.வேறு வழியின்றி, பின்பு பேசாமல் கண்ணீர் வடித்தது. வேடன் உடனே அதைத் தன் வீட்டிற்குக் கொண்டு வந்தான்.

அதை வலையிலிருந்து விடுவித்தான். பின்னர்,ஒரு கையில் அரிவாளை எடுத்து வெட்டத் துணிந்தான்.

அப்போது அந்தப் பறவை திடீரெனப் பேசத் துவங்கியது."வேடனே என்னைக் கொன்று விடாதே, என்னால் உனக்குப் பல நன்மைகள் கிடைக்கும்” என்றது. இதைக் கேட்டதும் வேடன் திடுக்கிட்டான்.

இது
 ஏதோ விசித்திரமான பறவைதான். கட்டாயம் இதை உயிருடன் வைத்து இருந்தால், நமக்கு நன்மை கிடைக்கும் என்று எண்ணினான். எனவே அதனை

வெட்டாமல் "உன்னால் எனக்கு என்ன நன்மை கிடைக்கும்" என்று கேட்டான். உடனே பருந்து “வேடனே எனக்கு வானில் இருந்து பார்த்தால் காட்டின் பெரும் பகுதியை ஒரே சமயத்தில் பார்க்க முடியும். 

 எந்த இடத்தில்
பறவைகளும் விலங்குகளும் நிறைய உள்ளன எனப் பார்த்து வந்து உனக்குச் சொல்வேன்."

"நீ வெயிலில், மழையில் அலையாமல் நேராக அங்கு போய் அவைகளைப் பிடித்துக் கொள்ளலாம்" என்றது.

"அதோடு நான் இப்படிச் செய்வதால் தினமும் உனக்கு நல்ல வேட்டை கிடைக்கும். உன் உயிருக்கு ஆபத்து ஏற்படாது. எப்படியென்றால் விலங்குகள் உறங்குமிடம்,பதுங்கியுள்ள இடம், அலைகின்ற இடம் என்று அவை உள்ள
நிலைகளையும் முன் கூட்டியே உனக்கு நான் சொல்வேன். 

எனவே முன்னேற்பாடுடன் சென்று அவைகளை எளிதில் பிடிக்கலாம்” என்றது. வேடனும் அதற்கு ஒப்புக் கொண்டான்.

“ஆனால் நீ என்னை ஏமாற்றிவிட்டு ஓடிவிட மாட்டாயா?என்று பருந்திடம் கேட்டான். "சத்தியம் செய்தால் அதை உயிரினும் மேலாகக் காப்போம்!' என்றது பருந்து, அதன்படி 

'வேடன் மறுநாள் வேட்டைக்குப் புறப்படும் முன்னர் வானில் உயரப் பறந்தது. தன் கூரிய கண்களால் பூமியைக் கவனமாகப் பார்த்து வந்தது.

பின் வேடன் முன் இறங்கி மிருகங்கள் அதிகம் உள்ள இடம், அந்த மிருகங்கள் உள்ள சூழ்நிலை இவைகளை நன்கு விளக்கியது. அது கூறியபடி சென்ற இடத்தில் வேடனுக்கு எளிதாக மிருகங்கள் கிடைத்தன.அவைகளை வேடன் கொன்று தூக்கி வந்தான். 

நன்கு சமைத்துச் சாப்பிட்டான். பருந்து அது கண்டு மகிழ்ந்தது. இப்படியே பல காலம் சென்றது. 

வேடனும் பருந்தும் நல்ல நண்பர்களானார்கள். பருந்து நாளடைவில் வேடன். தனக்குப் போடுவதைத் தின்றுவிட்டு அவனுடனேயே தங்கத் துவங்கியது.

ஒரு நாள் வேடன் பல காலமாக ஒரே இடத்தில் அமர்வதும் பின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் போய் வேட்டையாடுவதுமாய் இருந்ததால் மிகவும் சலிப்படைந்தான்,

எனவே இன்று தானே வேட்டைைையத் தேடிச் செல்வதாகக் கூறிப் புறப்பட்டான். பருந்து எவ்வளவோ மறுத்தும் அவன் கேட்காமல் புறப்பட்டான். அது நல்ல வெயில் காலம்.

எனவே! பறவைகளும் விலங்குகளும் புதர்களில் சென்று பதுங்கிக் கொண்டன. சிறிது உலாவுவதும் பதுங்குவதுமாக இருந்தன. வெகுதூரம் நடந்த வேடனுக்குப் பழக்கம் விட்டுப்
போனதில் களைப்பாக இருந்தது. தாகம் நாவை வறட்டியது.தொண்டை நீர் காய்ந்து எரிவது போல் இருந்தது. நடக்க முடியாமல் தடுமாறியபடி நடந்தான்.

ஒரு பெரிய நிழலான மரத்தடி கண்ணில் பட்டது. அந்த நிழலில் போய்ச் சுருண்டு படுத்தான். சுற்றிலும் நீர் நிலைகளே இல்லை. 

எனவே தான் சாவது உறுதி என்றெண்ணிப் படுத்துவிட்டான். திடீரென அவனது முகத்தில் ஒரு துளி நீர் சொட்டியது. 

மரத்தில் இருந்துதான் சொட்டுசொட்டாக நீர் சொட்டிக் கொண்டு இருந்தது. உடனே இறைவனின் கருணை அது என்று மகிழ்ந்த செங்குந்தன் ஒரு வாதா மரத்தின்

இலையை ஒடித்து அதனைக் குப்பிபோலச் சுருட்டினான்.பின் அந்தக் குப்பி போன்ற இலையால் சொட்டு சொட்டாக வடியும் நீரைப் பிடித்தான்.

அது அரைக் குப்பி ஆனதும் தொண்டையை நனைக்கவேனும் நீர் கிடைத்ததே என்றெண்ணி அதனைப் பருகத் தன் வாயருகே கொண்டு போனாள். அப்போது எங்கிருந்தோ பறந்து வந்த பருந்து அதனைத் தனது இறக்கைகளால் தட்டிவிட்டது. 

இலை 
கைதவறிக் கீழே விழ அதில் நிறைந்திருந்த நீர் எல்லாம் மண்ணில் சிந்தியது.மண் அதனை உறிஞ்சிக் கொண்டது.

வேடனுக்கு ஏற்பட்ட கோபத்திற்கும் ஆத்திரத்திற்கும் அளவேயில்லை. எதையும் யோசிக்காமல் தன் வாளை உருவினான், ஒரே வெட்டாக அந்தப் பறவையை வெட்டி இரண்டு துண்டுகளாக்கினான். 

துரோகப் பறவையே! தாகத்தால் நான் சாகும் நிலையில் இருக்கிறேன். நீ கிடைத்த சொட்டு நீரையும் தட்டிவிட்டாயே! என் கையால் நீ செத்தது சரிதான்" என்று கூறினான். 

பின்பு 
நீருக்கு என்ன செய்வது என்று நினைத்தான். மீண்டும் சொட்டு சொட்டாக வடியும் நீரைப் பிடிக்க நினைத்தான். ஆனால் இன்னும்

பல மணி நேரம் அப்படிப் பொறுமையாக அந்த நீரைப் பிடித்துக் குடிக்க இயலாதெனத் தோன்றியது. 

எனவே மரத்தில் அந்தச் சொட்டு நீர் எங்கிருந்து வருகிறது என்று கண்டு அங்குள்ள நீரை மொத்தமாகப் பருக நினைத்தான்,

எனவே தன் காலடியில் கிடந்த இறந்து போன பருந்தை எட்டி உதைத்துவிட்டு விறுவிறுவென மரத்தில் ஏறினான்.

அங்கு அவன் கண்ட காட்சி இரத்ததை உறையச் செய்தது. ஆமாம், அங்கு ஒரு பெரிய மலைப்பாம்பு செத்து அழுகிப் போய் ஒரு கிளையில் கிடந்தது.அதன் அழுகிய உடலில் இருந்து சொட்டிய விஷ நீர்தான் அவன் குடிக்க நினைத்தது.

அதனை உணர்ந்த செங்குந்தன் அந்த நீரைத்தான் குடித்திருந்தால் இந்நேரம் செத்து இருப்போமே என்று நடுங்கினான். தன் உயிர் காத்த தோழனைக் கொன்று விட்டோமே என்று வருந்தினான், கதறினான்.

பருந்து தன்னைக் காப்பாற்றிய உண்மையை உணர்ந்தான்.ஆத்திரத்தில் தன் உற்ற துணையை முழுமையாக இழந்தான் வேடன். அதன் பின் முன்போலக் காடு மேடெல்லாம் அலைந்தும் உணவு கிடைத்தும் கிடைக்காமலும் வாடினான். ஒவ்வொரு நிமிடமும் தன் அவசர முன்கோப் புத்தியால் பருந்தை இழந்ததை எண்ணிக் கண்ணீர் விட்டான்.

என் அன்புக்குாியவா்களே, 
அவசர புத்தியும், ஆத்திர குணமும் செங்குந்தனுக்கு ஏற்படுத்திய இழப்பை பார்த்தீர்களா? எனவே சிந்தித்துச் செயல்படும் குணத்தை வளர்த்துக் கொள்ளுங்கள், சரியா?

பைபிளில்  ஒரு சம்பவம்... 
ஈசாக்கு ரெபேக்காளின் குமாரா் ஏசா, யாக்கோபு. இவா்கள் வாழ்வில் நடந்த  விஷயம்.. 

ஒருநாள் ஏசா வெளியிலிருந்து களைத்து வந்தபோது, யாக்கோபு கூழ் சமைத்துக் கொண்டிருந்தான். 

அப்பொழுது ஏசா யாக்கோபை நோக்கி: அந்தச் சிவப்பான கூழிலே நான் சாப்பிடக் கொஞ்சம் தா, இளைத்திருக்கிறேன் என்றான். இதனாலே அவனுக்கு ஏதோம் என்கிற பேர் உண்டாயிற்று. 

அப்பொழுது யாக்கோபு: உன் சேஷ்ட புத்திரபாகத்தை இன்று எனக்கு விற்றுப்போடு என்றான். 

அதற்கு ஏசா: இதோ, நான் சகாப்போகிறேனே, இந்தச் சேஷ்ட புத்திரபாகம் எனக்கு என்னத்திற்கு என்றான். 
ஆதியாகமம் 25:32

அப்பொழுது யாக்கோபு: இன்று எனக்கு ஆணையிட்டுக்கொடு என்றான்; அவன் யாக்கோபுக்கு ஆணையிட்டு, தன் சேஷ்ட புத்திரபாகத்தை அவனுக்கு விற்றுப்போட்டான். 

அப்பொழுது யாக்கோபு ஏசாவுக்கு அப்பத்தையும் பயற்றங்கூழையும் கொடுத்தான். அவன் புசித்துக் குடித்து எழுந்திருந்து போய்விட்டான். இப்படி ஏசா தன் சேஷ்ட புத்திரபாகத்தை அலட்சியம்பண்ணினான். 
(ஆதியாகமம் 25:29-34)

அவசரப்பட்டு  சேஷ்டபுத்திரபாகத்தை கூழுக்காக விற்றுப்போட்டான். சேஷ்டபுத்திரபாகத்தை அற்பமாய் நினைத்தான்.  அது அவனுடைய சந்ததியினர் ஆசீா்வாதத்திற்கு எவ்வளவு  பிரயோஜனமானது என்று கூட நினையாமல் அற்ப கூழுக்காக  எதிர்காலத்தை சூனியமாக்கிவிட்டான்.  

இதைக் குறித்து எபிரேய நிருப ஆசிாியா் இவ்வாறாக எழுதுகிறார்... 

ஒருவனும் தேவனுடைய கிருபையை இழந்துபோகாதபடிக்கும் யாதொரு கசப்பான வேர் முளைத்தெழும்பிக் கலக்கம் உண்டாக்குகிறதினால் அநேகர் தீட்டுப்படாதபடிக்கும்
ஒருவனும் வேசிக்கள்ளனாகவும், ஒருவேளைப் போஐனத்துக்காகத் தன் சேஷ்டபுத்திரபாகத்தை விற்றுப்போட்ட ஏசாவைப்போலச் சீர்கெட்டவனாகவும் இராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள். 

ஏனென்றால், பிற்பாடு அவன் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக்கொள்ளவிரும்பியும் ஆகாதவனென்று தள்ளப்பட்டதை அறிவீர்கள். அவன் கண்ணீர்விட்டு, கவலையோடே தேடியும் மனம் மாறுதலைக் காணாமற்போனான். 
எபிரேயர் 12:15 -17)

தேவன் உங்களுக்கு தரும் எதையும் அற்பமாய்ய் நினைக்காதீா்கள். தேவன், கா்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சிலுவை  மரணத்தினாலே தந்த  இரட்சிப்பு, ,அபிஷேகம், ஊழியங்கள், வரங்கள், கிருபை ஆகிய எதையும் அற்பமாக நினையாமல்  அவைகளினால் தான் கிடைக்கும். பரலோகத்திற்கு போவதற்கே இவைகளர  மூலமாகத்தான் என எண்ணுங்கள்.  

இயேசு உங்களை அழைத்ததின் நோக்கத்தை  அறிந்து  அதை நினைத்து எத்தனை  சோதனை பசிமயக்கம்,வேதனைகள்,நாசமோசங்கள்ஆகிய எது வந்தாலும் ஆண்டவாின் அபிஷகத்தில் நிறைந்திருங்கள்.எந்த  எதிா்மறையான  எண்ணங்களும், கசப்பான வேரும்  உங்கள் மனதில் வராமல் ஆவியானவா் பாதுகாப்பாா்.

அ்வசரப்பட்டு வார்த்தைகளை எடுத்து எறிந்து விடாதீர்கள். மறுபடியும் சேர்க்க முடியாது.  காலமெல்லாம் வாதித்துக் கொண்டேயிருக்கும்.  அதை மறக்கமுடியாது.  

நிதானம், யோசித்து செயல்படுதல்  விவேகமாய் பேசுதல் ஆகிய நற்பண்புகளை எதிரான சூழ்நிலையில் ஆவியானவா்  உங்களுக்கு கற்றுக் கொடுப்பாா். 

நீங்கள் ,கிறிஸ்துவுக்குள்
தேறினவராயிருப்பீா்களென்றால்  தேவன் எத்தனை அதிகமாய் உங்களை நினைத்து  சந்தோஷப்படுவாார  என்று எண்ணிப் பாருங்கள்.!!

நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் !!!



228      கல்லில் ஒரு குதிரை

 ஒரு சிறந்த சிற்பியும் அவருடைய உதவியாளரும் சிற்பம் வடிக்கத் தேவையான புதிய கற்களைத் தேடிச் சென்றனர் . ஒரு கடினமான சொர பாரப்பான ஆழகற்ற பெரிய பாறையைக் கண்டவுடன் சிற்பி சட்டென நின்றார் . “

 நான் இதில் மிக அழகியதான ஒரு குதிரையைக் காணகிறேன் என்றார் அவர் . உதவியாளர் சற்று திகைப்புற்று , " ஆனால் குருவே , இவ்வகைக் கற்கள் மிகவும் கடினமானவை ஆயிற்றே . இதில் வேலை செய்வதனால் உங்கள் நேரம் முழுவதும் செலவாகிவிடுமே என்றார் .

 தனது குரு இதில் தவறு செய்துவிட்டதாகவே கருதினார் அவர் . சிற்பியோ அமைதியாக அக்கல்லையே தெரிந்தெடுத்தார் . கற்பாறை பட்டரைக்கு வந்தவுடன் பணி துவங்கியது . வேலை மிகக் கடினமானதும் , மிகவும் மெதுவாகவும் நடைபெற்றது . பல நாட்களாகியும் வேலையில் முன்னேற்றத்தை உதவியாளரால் காண இயலவில்லை .

 பாறையை இங்குமங்குமாக வீணாகச் செதுக்குவது போலவே காணப்பட்டது . அவர் தனது குருவின் ஞானத்தையும் , திறமையையும் சந்தேகிக்கத் தொடங்கினார் . அடிக்கடி சிற்பியிடம் இவ்வேலையை விட்டுவிட்டு வேறு ஏதாவது உருப்படியாகச் செய்யும்படி வேண்டலானார் .

 அந்தக் கைதேர்ந்த சிற்பியோ சற்றும் சளைக்காமல் , “ நான் ஒரு அழகிய குதிரையை இக கல்லில் காண்கின்றேன் என்றே பதிலளித்து வந்தார் . சில நாட்களுக்குப் பின்பு உதவியாளரின் பொறுமைக்கு முடிவு ஏற்பட்டது .

 அவர் தனது குருவைவிட்டு விலகிச் சென்றுவிட்டார் . சில ஆண்டுகளுக்குப் பின் தனது முன்னாள் குருவின் பட்டரையின் வழியே சென்ற அந்த உதவியாளர் , மரியாதையினிமித்தம் உள்ளே சென்றார் . நுழை வாயிலில் ஒரு அழகான குதிரையின் சிலை கெம்பீரத்தோற்றத்துடன் நின்று கொண்டிருந்ததைக் கண்டு வியந்து நின்றார் . 

இதுவரை இவ்வளவு ஓர் சிலையை அவர் கண்டதில்லை . அங்குவந்த சிற்பியிடம் , " இவ்வளவு அழகிய குதிரையை உருவாக்கு வதற்கு எந்தக் கல்லை நீங்கள் உபயோகித்தீர்கள் ? " என்று அவர் வினவினார் . “ பல வருடங்களுக்கு முன்பு நீங்களும் நானும் இணைந்து பாடுபட்டு உழைத்தோமே அதே கல்தான் இது ” என்று சிற்பி பதிலளித்தார் .

 அப்பொழுதுதான் உதவியாளருக்குப் புரிந்தது : ஒரு சிற்பி எந்த ஒரு கல்லிலும் ஒரு முழுமை பெற்ற சிற்பத்தையே காண்கின்றான் எனும் இரகசியம் ! 

நமது கர்த்தராகிய தேவனும் நம்மை இவ்வாறே காண்கிறார் என்பதை நாம் விளங்கிக்கொள்வோமாக . பாவத்தின் வஞ்சனையினாலும் , மாம்சீகக் கிரியைகளினாலும் நம் வாழ்க்கை கடினப்பட்டதாகவும் , எவ்வித சீர்திருத்தத்திற்கும் ஒத்துவராததைப் போலவும் காணப்படக்கூடும் . ஆயினும் சர்வ வல்லமையுள்ள நமது தேவன் நம்மைப் பூரணப்பட்ட ஒரு பரிசுத்தவானைப் போலவே காண்கிறார் .

 நமது வாழ்க்கையின் முடிவில் நாம் எப்படிக் காணப்படுவோம் என்பது அவருக்கு முன்பே தெரியும் . நம்மில் காணப்படும் தீமையான பகுதிகளையெல்லாம் ஒரு கைதேர்ந்த சிற்பியைப்போல அவர் செதுக்கி எடுப்பதற்கு நாம் ஒத்துழைப்புத் தந்தால் போதும் . 

அவரது வேலையை அவர் நம்மில் செய்து முடிக்கும் போது . நாம் முற்றிலும் இயேசுவின் சாயலில் மாற்றப்பட்டிருப்போம் ! " உங்களில் நற்கிரியையைத் தொடங்கினவர் அதை இயேசு கிறிஸ்துவின் நாள் பரியந்தம் முடிய நடத்திவருவாரென்று நம்பி , நான் உங்களை நினைக்கிறபொழுதெல்லாம் என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன் ” ( பிலி . 1 : 5 , 6 ) .

 தேவனுடைய வார்த்தை 1997 ஏப்ரல் 


229   நாளை பார்த்துக் கொள்ளலாம்



 முற்காலத்தில் கிரீஸ் நாட்டை ஆண்ட மன்னர்களுள் அர்கியஸ் என்ற மன்னரும் ஒருவர் . அவர் உலகில் என்னென்ன சிற்றின்பங்கள் உண்டோ அவை எல்லாவற்றையும் அனுபவிப்பதில் பேராசையுள்ளவர் . 

நாட்டின் மக்களின் நலனில் சிறிதேனும் அக்கரையின்றி இன்பத்தில் மூழ்கிக் கிடப்பதே அவரது வேலையாக இருந்தது . தான் நாட்டை ஆளவேண்டிய மன்னர் என்ற பொறுப்பற்றவராக தன் காலத்தைக் கழித்தார் . 

அவரது அரண்மனையில் மட்டுமல்ல நாடு முழுவதும் பொறுப்பற்ற ஆட்சியின் விளைவாக சீர்கேடுகள் நிறைந்தது . ஒழுக்கமுள்ளவர்கள் , நியாயமற்றவர்கள் வாழ்வது கடினம் என்ற நிலை உருவாகியது . அந்நாட்டு மக்களின் பொறுமை எல்லையைத் தாண்டியது .

 நாடு பேரழிவுக்குத் தப்பவேண்டுமானால் மன்னனை அழிப்பதே நலம் என்று ஒரு கூட்டத்தார் தீர்மானித்தனர் . மன்னரைக் கொல்ல சதித்திட்டம் தீட்டினர் . திட்டத்தை நிறைவேற்ற ஏற்றவேளையை எதிர்நோக்கிக் கொண்டிருந்தனர் . மக்களில் பெரும்பான்மையோர் தனக்கு விரோதமாக இருக்கிறார்கள் என்ற அறிவற்றவராக தன்னைக் கொலை செய்யத் திட்டமிடுகின்றனர் என்பதையும் அறியாதவராக வழக்கம்போல இன்பமான கேளிக்கை களிலேயே மன்னர் காலத்தைக் கழித்தார் . 

ஏதென்ஸ் நகரில் மன்னரின் மிக நெருங்கிய நண்பர் ஒருவர் இருந்தார் . மன்னருக்கு விரோதமான சதித்திட்டத்தைக் குறித்து அறிந்துகொள்ளும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது . உடனே மன்னருக்கு விரோதமான சதித்திட்டத்தைக் குறித்தும் , அதிலிருந்து தப்பித்துக்கொள்ளும் வழிவகைகளைக் குறித்தும் விரிவான கடிதம் ஒன்றை எழுதி , தனது நம்பகமான உதவி யாளர் மூலமாக மன்னருக்கு அனுப்பி வைத்தார் . 

நண்பரின் உதவியாளர் மன்னரின் அரண்மனை வந்து சேர்ந்த அன்றும் மன்னர் பெரிய விருந்தில் ஈடுபட்டிருந்தார் . அரண்மனை உதவி யாளர்கள் , கடிதம் யாரிடமிருந்து வந்திருக்கிறது என்பதை விளங்கிக் கொண்டு , கடிதம் கொண்டுவந்தவரை விருந்து மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர் . 

மன்னர் அவர்களே , ஏதேன் சிலுள்ள உங்களது நண்பரிடமிருந்துதருக்கு ஒரு அவசரக் கடிதம் கொண்டு வந்திருக்கிறேன . இதிலுள்ள அபாயகரமான காரியத்தை நீங்கள் உடனடியாக வாசிக்குமாறு உங்களைக் கேட்டுக்கொண்டனர் " என்று சொல்லி கடிதத்தைக் கொடுத்தார் . 

மன்னரோ மதுமயக்கத்தில் தள்ளாடினவராக கடிதத்தைக வாசிக்கும் மனநிலையில் இல்லை . " அபாயகரமான காரியமா ? என்ன அபாயகரமான அபாயம் . என்னுடைய நாட்டிலா ? என்று கேள்விகளை அடுக்கிக் கொண்டு அலட்சியமாக பேசி , “ இந்த அபாயத்தை நாளை பார்த்துக் கொல என்று அலட்சியச் சிரிப்பை ஒலித்துக்கொண்டு கடிதத்தைத் தூக்கி எறிந்தார் .

 அந்த நிலையில் கடிதத்தை எடுக்கக் கூட உதவியாளாகள் அஞ்சினார்கள் . மிகுந்த அக்கறையோடும் , கரிசனையோடும் எழுதிய நண்பரின் கடிதம் விருந்து மண்டபத்தில் தரையில் கிடந்தது . விருந்தின் உல்லாசம் உச்சகட்டத்தை நெருங்கிய வேளையில் சதிகாரர்கள் விருந்து மண்டபத்திற்குள் விருந்து பரிமாறும் பணியாட்களைப்போல நுழைந்து , மன்னரின் மீது பாய்ந்து அதே இடத்தில் குத்திக்கொலை செய்தனர் .

 மன்னர் இரத்த வெள்ளத்தில் பரிதாபமாகச் சாய்ந்தார் . நண்பரின் கடிதத்திலும் இரத்தம் தெறித்து தரையில் கிடந்தது . எது நடக்கக்கூடாது என்ற எச்சரிக்கையை அக்கடிதம் தாங்கி வந்ததோ அது மன்னரின் உலக இன்ப மயக்கத்தால் நடந்து முடிந்தது . அவரது அழிவில் முடிந்தது . மன்னர் சொன்ன " நாளை என்ற நாள் அவருக்கு வரவேயில்லை . 

“ பாவஞ் செய்கிற ஆத்துமாவே சாகும் ” ( எசே . 18 : 14 ) “ பாவத்தின் சம்பளம் மரணம் ( ரோம் . 6 : 23 ) என்று வேதம் நம்மை எச்சரிக்கிறது . ஆனாலும் “ நான் துன்மார்க்கனுடைய மரணத்தை விரும்பாமல் துன்மார்க்கன் தன் வழியை விட்டுத் திரும்பிப் பிழைப்பதையே விரும்புகிறேன் ( எசே . 33 : 11 ) என்று அன்புள்ள தேவன் நம்மைக் குறித்துக் கரிசனையுள்ளவராய் இருக்கிறார் .  அவருடைய ( காத்தா ) கிருபையின் ஐசுவரியத்தின்படியே இவருடைய ( இயேசு ) இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் ( இயேசு ) நமக்கு உண்டாயிருக்கிறது ( எபே . 1 : 7 ) என்று வேகம் நாம் நமது பாவத்தில் அழிந்துவிடாதிருக்கும்படி , பாவமன்னிப் பாதிய மீட்பின் நற்செய்தியை நமக்கு ஆலோசனையாகத் தந்து அழிவுக் தப்பித்துக்கொள்ளும் வழியைக் காட்டுகிறது . 

அர்கியஸ் மன்னரின் வ நமக்கு எச்சரிக்கையாக அமையட்டும் . அன்பின் கடிதத்தை அலட்சியம் செய்ததின் விளைவு மன்னரின் செய்ததின் விளைவு மன்னரின் கொடூர முடிவில் முடிந்தது . இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக்குறித்து நாம் கவலையற்றிருப் போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவோம் " ( எபி . 2 : 4 ) , 


230               நன்றி ஓடுகளே!

ஒரு காட்டில் ஆமையும், நத்தையும் நண்பர்களாய் இருந்தன. அவை இரண்டுக்கும் நீண்டகாலமாக, ஒரு மனக்குறை இருந்தது. தங்களால் வேகமாக நடக்கவோ, தாவிக் குதித்து ஓடவோ முடியவில்லை என்ற மனக்குறைதான் அது.
ஒருநாள், அவை இரண்டும் நடந்து சென்றுகொண்டிருந்த போது, ஓர் அழகிய வெள்ளை நிற முயல் தாவிக் குதித்து, ஓடி வருதைக் கண்டன.

"முயலே நில்!'' என்றது ஆமை. முயல் நின்றது.
"நீ எப்படி இவ்வளவு வேகமாய் தாவிக் குதித்து ஓடுகிறாய்?'' என்று கேட்டது நத்தை.


"இது என்ன கேள்வி! உங்களுக்கு இருப்பதுபோல், என் முதுகில் கனமான ஓடு இல்லை. அந்தச் சுமை இல்லாததால், வேகமாக ஓடுகிறேன்!'' என்று சொல்லி விட்டு, முயல் அந்த இரண்டையும் இளக்காரமாகப் பார்த்தது.
"ஆமாம்! நீங்கள் உங்கள் ஓடுகளைக் கழற்றிப் போட்டுவிட்டால், என்னைப் போல் வேகமாக ஓடலாம். வேகமாக ஓடுவதில், ஓர் அலாதியான சுகம் இருக்கிறது தெரியுமா... அனுபவித்துப் பாருங்கள்!'' என்றது முயல்.
"ஓஹோ! எங்களின் வேகக் குறைவுக்கு எங்கள் ஓடுதான் காரணமா?''

"ஆமாம்! நீங்கள் உங்கள் ஓடுகளைக் கழற்றிப் போட்டுவிட்டால், என்னைப் போல் வேகமாக ஓடலாம். வேகமாக ஓடுவதில், ஓர் அலாதியான சுகம் இருக்கிறது தெரியுமா... அனுபவித்துப் பாருங்கள்!'' என்றது முயல்.

நத்தைக்கும் ஆமைக்கும் இடத்திலேயே தங்கள் முதுகு ஓடுகளைக் கழற்றிப் போட்டுவிட வேண்டும் என்ற ஆவல் பிறந்தது. அவற்றைக் கழற்ற முயன்றபோது, திடீரென புதர் மறைவில் ஏதோ அசையும் ஓசை கேட்டது.
ஆமையும், நத்தையும் ஆபத்தை உணர்ந்து, தங்கள் ஓடுகளைக் கழற்றும் முயற்சியைக் கைவிட்டன.
சட்டென, புதர் மறைவிலிருந்து ஓரு ஓநாய் வெளிப்பட்டு, முயலை நோக்கிப் பாய்ந்தது.
ஆமையும், நத்தையும், விருட்டென்று தங்கள் உடலை ஓடுகளுக்குள் இழுத்துக் கொண்டு, உயிர் பிழைத்தன.


ஓநாய் முயலைப் பிடித்தது.
சிறிது நேரம் சென்ற பிறகு ஓடுகளை விட்டு வெளியே வந்த ஆமையும், நத்தையும் முயலின் ரத்தத்தைப் பார்த்து, உறைந்து போயின. தாங்கள் வேகமாய் ஓடுவதைவிட, உயிர் பிழைத்து வாழ்வதே முக்கியமானது என்பதை உணர்ந்தன. தங்கள் எதிரியிடமிருந்து காப்பாற்றிய தங்கள் ஓடுகளுக்கு அவை நன்றி கூறின.

என் அன்பு வாசகர்களே,
நமக்கு இருப்பதை மட்டுமே வைத்துக்கொண்டு அதில் திருப்தியாய் வாழ வேண்டும் மற்றவர்களுக்கு அது இருக்கிறது இது இருக்கிறது என்று அவர்கள் போல் வாழ விரும்பினால் நமக்கு இருப்பதும் போய்விடும் என்பதே இக்கதையின் கருத்து.

இக்கதையில் ஆமைக்கும், நத்தைக்கும் உறைவிடம், பாதுகாப்பு என் எல்லாமே அதன் மேலுள்ள ஓடுதான். அதை களைய நினைத்தபோது அதன் உயிரே பறிபோகும் நிலை உருவானது. மேலும் முயலோ அவர்கள் மேலுள்ள ஓட்டை களைய சொன்னது. இதுபோலத்தான் அநேகர் நம் வாழ்வில் வந்து அப்படி செய்தால் இப்படி ஆகலாம் இப்படி செய்தால் அப்படியாகலாம் என்று ஆசை வார்த்தை கூறி நமக்கு அரணும், கோட்டையுமாய் இருக்கிற காரியங்களை நம்மை விட்டு அகற்றி நம்மை நிர்கதியாக்கி இறுதியில் நம்மை விட்டு கடந்து சென்று விடுவர். அவர்க்ளை நம்பி நாம் செய்த எல்லா காரியங்களும் விருதாவாய் போய்விடும்.

தனக்கு ஆபத்து வரப்போகிறது என்று அறிந்ததும் அதிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்பவன் விவேகி. தாவீது சவுல் ராஜாவிற்கு பயந்து காட்டில் ஒளிந்துக்கொள்கிறான். ஏன் தாவீதை விட சவுல் பலசாலியா இல்லை, தாவீதின் படை சவுலின் படையை விட வலிமை குறைந்ததா இல்லை எனில் ஏன் தாவீது ஓடி ஒளிந்தான், காரணம், தேவன் சவுலை அபிஷேகம் பண்ணியிருந்தார் அது மாத்திரமல்ல தாவீது சவுலைக் கொன்றால் இஸ்ரவேல் ஜனங்கள் சிதறிப் போய் விடுவர் என்ற விவேகம் இருந்ததினால் தான் இப்படி ஓடி ஒளிந்தார். 

அதை தாவீதின் குமாரனாகிய சாலெமோன் ஞானி இவ்வாறு கூறுகிறார்

12 விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்து கொள்ளுகிறான்: பேதைகளோ நெடுகப்போய்த் தண்டிக்கப்படுகிறார்கள்.

நீதிமொழிகள் 27:12

எனவே விவேகத்தோடு நடப்போம், ஆபத்திற்கு மறைந்து வாழ்வோம்.

நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!!!!