ஐடா ஸ்கட்டர்
பல மிஷனரிகள் தங்கள் உயிரை துச்சமாய் எண்ணி இயேசுவின் அன்பை அறிவிக்கும் ஆவலுடன் தமக்கு நேர்ந்த எல்லா பாடுகளையும் சிரித்த முகத்துடன் ஏற்றுக்கொண்டனர். அப்படிப்பட்ட மிஷனரிகளின் வாழ்க்கை வரலாற்றை அறிந்திருக்க வேண்டியது ஒவ்வொரு கிறிஸ்துவனின் கடமையாகும். சிறிது நேரம் செலவழித்தால் ஒரு மிஷனரியின் அறிய வாழ்க்கையை அறிந்து கொள்ளலாம். கர்த்தர் துணை செய்வாராக.
ஐடா ஸ்கட்டர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அறியப் புகுவோர் , அவர் தம் முன்னோர்களைப் பற்றியும் அறிவது அவசியமாகின்றது . ஏனென்றால் , ஜடா அம்மையார் தோன்றிய அந்த ' ஸ்கடர் ' இனமே பிறருக்குழைத்துப் பெருமை பெற்ற இனமாகும் . தமக்கென வாழாது , பிறர்க்குரியவராகிய பெருமக்களைப் பெற்ற இனம் • ஸ்கடர் ' இனம் . இவ்வுண்மைக்கு வரலாற்றுச் சான்றுண்டு . கடந்த கால ஆங்கில , ஸ்காட்டிஷ் வரலாற்றிலேயே தங்கள் முன்னோர்களின் பெயர்கள் இடம் பெற்றிருக்கக் கண்டு , இன்றும் இவ் வினத்தவர் இறும்பூது எய்துகின்றனர் . அவர்கள் ஒவ்வொருவரும் , சீர்கெட்ட சமுதாயத்தைச் செப்பனிட , வெவ்வேறு வகையில் பணியாற்றியுள்ளனர் .
அவர்களில் பலரும் கோட்பாடு ( Missionary ) உடையவராகப்பலநாடுகளுக்கும் சென்று , பணிபுரிந்து , அங்குள்ள மக்களின் உள்ளத்திலே நிலையான இடம் பெற்று விட்டவர்கள் . இங்ஙனம் தொன்று தொட்டுத் தொண்டாற்றி வரும் குடும்பத் தில் பிறந்த ஐடா அம்மையாரின் பாட்டனாரும் , தந்தை யாரும் தொண்டாற்றத் தேர்ந்தெடுத்த நாடு இந்தியா வாகும் . அவர்களின் தொண்டினைத் தொடர்பவர் போன்று ஐடா அம்மையாரும் இங்கேயே தங்கி , செயற்கரும் செயல்கள் செய்து , இங்கேயே உயிரையும் விடுத்தமை பாராட்டிற்குரியதாகும் . இந்தியாவில் இவர்களின் பணியைப் பாராட்டும் . வகையில் துவங்கி வைத்தவர் , ஐடா ஸ்கடரின் பாட்டனாரான ஜான் ஸ்கடர் அவர்களேயாவர் . ஜான் ஸ்கடர் அவர்கள் அமெரிக்காவில் இருந்த ஒரு பெரு நிலக் கிழாரின் மகனாகப் பிறந்தார் . தம் முன்னோர் பலரும் பணிசெய்து கிடப்பதையே பிறவிப் பயன் எனக் கருதி , அவ்வாறே வாழ்ந்ததை அறிந்திருந்தார் ஜான் ஸ்கடர் . எனவே , இளமையிலேயே தாம் மேற் கொள்ளக்கூடிய செயல் பற்றியும் சிந்திக்கலானார் . இறுதியில் , பிணியுற்றவர்க்குதவும் பணியே ஏற்ற தென்று முடிவு செய்தார் . அதற்குரிய தகுதியும் , திறமையும் பெற மருத்துவக் கல்வி பயிலலானார் . நியூயார்க் நகரில் மருத்துவம் பயின்று , தேர்வில் தேர்ச்சியும் பெற்றார் . மருத்துவக் கோட்பாடுடையோராகப் பிறநாடுகள் செல்லும் வாய்ப்பினை எதிர்பார்த்திருந்தார் ஜான் . அவருக்கு அவ் வாய்ப்பினை வலியச் சென்றளிப்பதே போல் , அப்பொழுது குழவிப் பருவத்தில் இருந்த அமெரிக்கக் கோட்பாடுடையோர் அமைப்பொன்று சில கோட்பாடுடையோருடன் அயல்நாடு அனுப்பும் பொருட்டுத் தேர்ச்சி பெற்ற மருத்துவர் ஒருவர் வேண்டுமென்று அறிவித்தது . ஜான் ஸ்கடர் அவர்களை , மருத்துவப் பணியுடன் , கிறித்துவ மதபோதனையும் கவர்ந்தது . அதனால் , கோட்பாடுடையோர் குழுவின் அழைப்பினை ஏற்றுக் கொண்டு , ஒரே நேரத்தில் இரண்டு பணிகளையும் செய்யும் முடிவுடன் அவர் கீழ்த் திசைக்குப் பயணமானார் . அவரது தந்தையாரோ , மகனின் முடிவிற்குப் பெரும் எதிர்ப்புத் தெரிவித்தார் . ஆயினும் , எண்ணிய எண்ணத்தைச் செயலாக்கும் உறுதியில் குன்றாத ஜான் , அதே ஆண்டு ( 1819 ஆம் ஆண்டு ) ஜுன் மாதம் தம் மனைவியுடன் போஸ்டன் ( Boston ) துறை முகத்தில் கப்பலேறினார் . கப்பற் பயணம் முடிந்தது . கடலால் நாற்புறமும் சூழப்பெற்ற இலங்கையில் ஜாஃப்னா என்னும் இடத்தை அடைந்தனர் . ஜான் ஸ்கடரும் அவர்தம் மனைவியாரும் இலங்கையில் சிலநாட்கள் இருந்து விட்டுப் பின்னர் இந்தியாவிற்குப் பயணமாயினர் . இந்தியாவை அடைந்ததும் , ஜான் , நிலைமைகளை ஆராயலானர் . இங்கு ஆற்ற வேண்டிய பணிகள் பலவாக இருக்கக் கண்டார் . மூடக் கொள்கைகள் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டைகளாய் நின்றன . ஜான் , அறியாமை இருளில் ஆழ்ந்து அல்லப்பட்ட மக்களைக் கண்டார் . கணவரை இழந்த கைம்பெண்டிர் உடன் கட்டை ஏறும் கொடுமையைக் கண்டார் ; இறையவர் திருவுருவங்களுக்கு உயிர்ப்பலி தரும் தகாத செயலைப் பார்த்தார் ; திடுக்கிட்டார் ; திகைத்தார் . அவனியெங்கும் அறிவொளி பரப்பிய நாடு , அறியாமை இருளில் மூழ்கித் தவித்ததென்றால் - - ' பெண்ணிற் பெருந்தக்க யாவுள ' என்ற வள்ளுவன் வாழ்ந்த நாடு , பெண்ணுக்குப் பெருமை தர மறுத்த தென்றால் - அனைத்துயிரிடமும் அன்பு கொள்ள வேண்டும் என்ற புத்தனின் புனிதநெறியைப் போற் றிட்ட நாடு , கடவுளின் சினம் தீர்க்க , உயிர்ப்பலி கொடுத்ததென்றால் - நமக்கும் திகைப்பாகத்தானே இருக்கிறது . நிலைமையைப் புரிந்துகொண்ட ஜான் , மருத்துவம் செய்வதுடன் தன் கடமை முடிந்து விடாது என்று எண்ணினார் . எனவே , சீர்திருத்தப் பணிக்கும் தம்மைத் தயாராக்கிக் கொண்டார் . மக்களுக்கு இறைவனைப் பற்றிய தெளிந்த அறிவு ஏற்படுமாறு செய்தலையே முதற் பணியாகக் கொண் டார் . எண்ணியதைச் செயலாக்கக் கிறித்துவமத போதனையையும் மேற்கொண்டார் . மதத்தின் பெயரால் பொருந்தாத நச்சுக் கருத்துக்களைப் பரப்பி , அறிவியல் அறிவும் , ஆராய்ச்சியும் அவனிக்களித்த புதுமைகளை ஏற்கவும் தடையாக நின்ற மக்களுக்கு ஜான் , " அறிவியலும் , மதமும் எதிரெதிர்த் துருவங்களல்ல ; இரண்டும் இணைந்துதான் மனிதனை மனிதனாக்க முடியும் " என்ற உண்மையை உணர்த்தலானார் . இங்கனம் , . மக்களைச் சூழ்ந்து நின்ற அறியாமை என்னும் இருளை அகற்றிய பிறகே , மருத்துவத் துறையிலும் தாம் வெற்றி பெற இயலும் என்று உறுதியாக நம்பினார் ஜான் . ஜான் ஸ்கடர் அவர்களின் மருத்துவத் தொண் டும் பாராட்டும் வகையில் அமைந்தது . இந்தியாவில் அவரது மருத்துவப் பணி முதலில் இடம் பெற்றது தென்னாட்டிலேயே ஆகும் . அவருடைய தன்னலமற்ற தொண்டிற்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த எதிர்ப்புச் சக்திகள் , அவருடைய அடங்காத ஆர்வம் , அயராத உழைப்பு இவற்றின் முன்னால் நிற்க முடியாது நசிந் தொழிந்தன . ஜான் , இந்தியாவில் அப்பொழுது பரவிக் கிடந்த ' காலரா ' போன்ற கொடிய நோய்களைக் களைந்தெறிய. முயன்றார் . அதன் பயனாய்ச் சிறந்த மருந்துகளைக் கண்டு பிடித்தார் . இந்நிகழ்ச்சி நம் மக்களைப் பெரும் வியப்பிற்குள்ளாக்கியது . அவரை முதலில் வெறுத்தவர்கள் விரைவில் அவரைப் பாராட்டவும் முன் வந்தனர் . அயல் நாட்டவர் - அந்நிய மதத்தவர் - என்ற எண்ணத்தால் ஏற்பட்ட அருவருப்புணர்ச்சி அகன்றது . - " முயற்சி திருவினையாக்கும் ” என்பதை ஜானின் வாழ்க்கை விளக்கிற்று . தம் முயற்சியினால் , ஜான் அறுவைச் சிகிச்சையிலும் வல்லவரானார் . அறுவை முறையில் அவர் பெற்ற வெற்றியைக் கண்டு வியப்புற்ற மக்கள் அறுவைச் சிகிச்சை செய்துகொள் வதைக் " கடவுளுக்கு இழைக்கும் பெருந் தீங்காகக் ' ' கருதுவதை விடுத்தனர் . அவரை அணுகி உதவிபெறுவதில் ஆர்வம் காட்டினர் . இவ்வாறு இந்தியாவிற்கு வந்த சில ஆண்டுகளில் , ஜான் , மக்களின் மனத்தில் பெரும் மாற்றத்தைத் தோற்றுவித்தார் . ஜான் , தம்முடைய அயரா உழைப்பாலும் , தணியா ஆர்வத் தாலும் சாதித்த விந்தைகளைக் கண்டு அவரைப் போற்றாதவர்கள் அப்பொழுது நம் நாட்டில் எவரும் இல்லை யெனலாம் . தம்முடைய இலட்சியத்தில் வெற்றி பெறுவதில் பேரார்வம் காட்டிப் பல்லாண்டுகள் பணியாற்றிய ஜானை , 1849 ஆம் ஆண்டில் அவரது மனைவியார் மரணம் எய்திய நிகழ்ச்சி பெரிதும் வருத்தியது . ஆண்டாண்டு - காலமாக அருகிருந்து அயராது உழைத்த அன்பு மனைவியின் மறைவிற்குப் பின்னர் , ஜானுக்கு வாழ்க்கையில் பெரும் சலிப்பேற்பட்டது . உள்ளம் தளர்ந்ததால் உடலும் தளர்ந்தது . ஜான் தாயகம்திரும்பவும் விரும்பாத நிலையில் இருந்தார் . அவரது உடலும் , உள்ளமும் தெளிவு பெறுமாறு செய்தல் வேண்டும் என்று எண்ணிய ஜானின் புதல்வர்கள் , அவரைப் பெரிதும் வற்புறுத்தித் தென்னாப்பிரிக்கா விற்குக் கடற் பயணம் செய்ய இசையுமாறு செய்தனர் . கடற் பயணத்தால் புத்துணர்வு பெற்ற ஜான் , அங்கேயே தமது மதபோதனையை ஆரம்பித்தார் . ஆயிரத்து எண்ணூற்று ஐம்பத்தாறாம் ஆண்டு ஜனவரித் திங்கள் 13 ஆம் நாள் மதபோதனையைத் துவங்கும் முன்னர் சோர்வடைந்தவராய் ஓய்வெடுக்க அமர்ந்தவர் , அந் நிலையிலேயே இயற்கை எய்தினார் . அவருடைய மறைவுச்செய்தி அறிந்து வருந்திய மக்கள் , அவர் முன்னரே விரும்பி வேண்டியிருந்த வண்ணம் அவரது உடலைச் சென்னைக்குக் கொண்டு வரச் செய்தனர் ; அவ்வுடலை அவர் தம் மனைவியாரை அடக்கம் செய்த இடத்திற்கு அருகில் அடக்கம் செய்தனர் . ஜான் ஸ்கடர் அவர்களும் , அவர் தம் மனைவி யாரும் , தாமாற்றிய தன்னேரில்லாத் தனிப் பெருஞ் சிறப்புடைய தொண்டால் இன்றும் நம்மிடையே வாழ்கின்றனர் என்றால் அது மிகையாகாது . அவர்கள் அரும் பணியால் பெரும் பலன் பெற்ற நம் நாட்டவர் , தங்களுடைய நன்றியை உணர்த்தும் வகையில் , அவர்களுடைய தொண்டு துவங்கப் பெற்று நூற்றாண்டுகள் நிறைவு பெற்றதும் ( 1919 ஆம் ஆண்டு ) ஒரு விழாக் கொண்டாடி மகிழ்ந்தனர் . அந் நாளில் , ஸ்கடர் நினைவாக மருத்துவ மனையொன்றினை நிறுவுதற்கு இராணிப்பேட்டையில் அடிக்கல்லும் நாட்டப்பட்டது . இம்மனை , ஸ்கடர் குடும்பத்தவர் திரட்டித் தரும். பொருளைக் கொண்டே அமைக்கப்படல் வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது . பின்னாளில் இம் மருத்துவமனை கட்டி முடிக்கப் பெற்றதும் இப்பெருமக்களின் நினைவாக நடுகல் எழுப்பப்பட்டது . பெற்றெடுத்துப் பேரன்புடன் பேணி வளர்த்த பெற்றோர் - பிறந்த பொன்றை - தம்மை வரவேற்ற வளமான வாழ்வு - அனைத்தையும் துறந்து , ' பிறர்க் குதவ வேண்டும் ' என்ற இலட்சியத்திற்காகத் தம் மைத் தியாகம் செய்தார் ஜான் . எங்கிருந்தோ வந்தவர் , இங்குள்ளோர் இதயத்துறையும் இறைவரானார் . நாமும் அவருடைய வரலாறு உணர்த்தும் வழி சென்று பயன்பட வாழ்வோமாக !
இளமையும் இந்திய மக்களின் உடல் நோயும் , உள்ளத் திருளும் போக்கிட , ஜான் ஸ்கடர் அவர்கள் ஏந்திய ஒளிவிளக்கு , அவரது புதல்வர்கள் கைக்கு மாறியது . ஜான் ஸ்கடரின் மக்களும் , தம் தந்தையார் காட்டிய வழியையே பின்பற்றி ' எம்கடன் பணி செய்து கிடப் பதே ' என்று வாழத் தலைப்பட்டனர் . மருத்துவத் துறையில் ஜான் ஸ்கடரின் புதல்வர்கள் ஆற்றிய தொண்டு , மருத்துவத் துறைக்கும் ' ஸ்கட்டர் ' என்னும் பெயருக்கும் பிரிக்க முடியாத பிணைப்பினை ஏற்படுத்தி யிருக்கிறது . ஜான் ஸ்கடர் அவர்கட்கு ஆண் மக்கள் எழுவரும் , பெண்மக்கள் இருவரும் இருந்தனர் . அவர்களும் , இந்தியாவிலேயே நிலைத்து வாழ முற்பட்டனர் . பெண்கள் இருவரும் இந்தியாவில் வாழ்ந்து வந்த ஆங்கிலக் குடும்பத்தில் மணம் செய்விக்கப்பட்டனர் . ' மற்றவர்கள் , மருத்துவத் துறையில் சிறந்த ஆர்வமும் , ஆற்றலும் உடையவர்களாக இருந்தமையால் , தந்தை யாரைப் போலவே வாழ முயன்றனர் . மருத்துவத் துறையில் எழுவருமே ஈடுபாடுள்ளவர்களாய் இருந்த ' போதிலும் , எழுவரில் இளையவரே ஈடும் இணையும் அற்று விளங்கினார் . இளையவர் பெயரே இரண்டாம் ஜான் ஸ்கடர் என்பது . மருத்துவத்தில் நம் நாடு பெரிதும் பின் தங்கி இருந்தமையால் , ஜான் ஸ்கடர் அவர்கள் சிறந்த முறையில் மருத்துவம் செய்ய வசதிகள் ஏதும் இல்லா மையைக் கண்டார் . எனினும் , முதலாம் ஸ்கடரைப் ' போலவே , இவரும் இவ் விடையூறுகளையெல்லாம் தம்முடைய விடா முயற்சியாலும் , வினைத் திட்பத் தாலும் வென்று , தம்முடைய இலட்சியப் பாதையில் வீரநடை போட்டார் . இவர் தம்முடைய பேரார்வம் ஒன்றையே துணையாகக் கொண்டு , இராணிப்பேட் டையில் மருத்துவ மனையொன்றை ஆரம்பித்தார் . மருத்துவமனையை நாடி வர இயலாத நிலைமையில் இருந்த நோயாளிகளின் இல்லங்கட்கும் சென்று மருத் துவம் செய்தார் . நோய்களின் தன்மையை நுணுகி ஆராய்ந்து , ஏற்ற மருந்துகளைக் கண்டுபிடிக்க முயன்றார் . இச் செயல்களால் மக்கள் அவர்பால் மட்டற்ற அன்பும் , மதிப்பும் கொண்டனர் . ஜான் ஸ்கடர் அவர்கள் , இராணிப்பேட்டையில் பணியாற்றிய நாட்கள் மறக்க முடியாத சிறப்புடை பயனவாகும் . இருபதாம் நூற்றாண்டின் பிளாரன்ஸ் ' நைட்டிங்கேலாகத் திகழ்ந்திட்ட ஐடா அம்மையார் பிறந்ததும் அச் சமயத்தில்தான் . அவர்கள் பிறந்தது 1870 ஆம் ஆண்டு , டிசம்பர்த் திங்கள் 9 ஆம் நாளி லாகும் . ஐந்து ஆண்களுக்குப் பின் பிறந்த ஐடா , . முதல் பெண்ணாதலாலும் , கடைசிக் குழந்தையாதலா லும் , அனைவரின் பேரன்பிற்கும் உரியவரானார் . - - ஐடாவின் இளமைப் பருவம் இராணிப்பேட்டையிலும் , வேலூரிலும் நல்ல முறையில் கழிந்தது . . சிறந்த பண்பாடும் , நிறைந்த அறிவும் உடைய பெற் றோர்களுடனும் , குறும்புத்தனமும் கூரிய அறிவும் கொண்ட சகோதரர்களுடனும் வாழ்ந்த ஐடா , இளமையில் எத்தனையோ சுவையான அனுபவங் களைப் பெற முடிந்தது . ஐடாவின் சகோதரர்கள் , ஐடாவிடம் அளவற்ற அன்பு காட்டினர் . குறும்புத் தனம் நிறைந்த அவர்களுடைய விளையாட்டுக்களில் குழந்தை ஐடாவும் பங்கு கொள்வதுண்டு . அவர்களின் தந்தையார் வழிபாட்டுக் கூட்டம் நடைபெறும் நேரத்தில் மட்டும் குழந்தைகள் குறும்பு செய்வதைக் கண் டிப்பார் ; மற்ற நேரங்களில் எல்லாம் , அவர்களின் செயல் கண்டு மகிழ்வதோடு , தாமும் அவர்களுடன் சேர்ந்து விளையாடுவார் . ஐடாவின் அன்னையும் இப்படிப்பட்ட இயல்பினரே ஆவர் . ஐடாவின் இல்லத்தில் , தந்தை , பெரிய தந்தையர் அனைவருமே மருத்துவர்களாகத் திகழ்ந்தனர் . . எனவே , ஒரு மருத்துவ நிலையமாகவே திகழ்ந்த அக் குடும்பத்தில் , ஐடா பெற்ற அனுபவங்கள் பல . ஐடா வின் தந்தையார் மருத்துவப் பணியுடன் , பல்வேறு பொறுப்புக்களையும் ஏற்றிருந்தார் . பல நேரங்களில் , ஐந்து கோட்பாடுடையோர் ஆற்ற வேண்டிய பணியை ஜான் தாம் ஒருவராகவே முடித்துள்ளார் . அவருடைய மனைவியாரும் , தம் கணவருடன் சேர்ந்து பணிபுரிவது வழக்கம் . ஐடா பிறந்த ஆண்டில் , ஐடாவின் தாயார் , இராணிப்பேட்டை ' மிஷன் ' பள்ளிக்கூடத்தில் நெசவுத் தொழிற் பயிற்சியினைப் புகுத்தினார்கள் . இப்படிக் காலமெல்லாம் பிறருக்கென்றே உழைப்பதில் உறுதி கொண்ட பெருமக்களைப் பெற்றோராகப் பெற்ற ஐடாவும் உயர்ந்த பண்புகளின் உறைவிடமாகத் திகழ்ந்தார் . ஐடா மழலை மாறாச் சிறுமியாக இருந்தபோது , இந்தியாவின் பல பகுதிகளில் கடும் பஞ்சம் தலை காட்டியது . இளையோர் முதல் , முதியோர் வரை ஆயிரக்கணக்கில் பஞ்சத்திற்குப் பலியாயினர் . இல்லாமை என்னும் கொடும்பேயின் கொடிய விளையாட் டினைக் கண்டு இதயமுள்ளோரெல்லாம் கலங்கினர் . “ இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின் இன்மையே இன்னா தது " என்று இல்லாமையின் கொடுமை பற்றிக் குறிப்பிட் டார் வள்ளுவர் பெருமான் . பஞ்சத்தால் பாதிக்கப் பட்டுப் பாழும் பசியைப் போக்க வழியின்றி வருந்திய - - மக்களுக்கு உதவும் முன்னேற்பாடுகள் ஏதும் செய்யப் படவில்லை ; என்றாலும் , அவர்களுக்கு எவ்வாறேனும் வாழ்வுதர , அரசினர் உதவியுடன் , அன்புள்ளம் பெற்ற பெருமக்கள் சிலரின் உதவியு ் கிடைத்தது . இந்தியாவில் ஏழைகளுக்கு வேண்டிய உணவு , உடை முதலியவற்றைத் திரட்டிப் பங்கீடு செய்யும் பணியில் உற்சாகத்துடன் கோட்டாடுடையோர் ஈடுபட்டனர் . ஐடாவின் பெற்றோரும் இப்பணியில் பெரும ஆர்வத்துடன் ஈடுபட முன்வந்தனர் . அச் சமயத்தில் அவர்கள் வேலூரில் வசித்து வந்தனர் . சென்னையி லிருந்து வேலூருக்கு உடைகள் , உணவுப் பொருள்கள் முதலியன வண்டிகளில் அனுப்பப்பட்டன . ஐடாவின் அன்னையாரது மேற்பார்வையின் கீழ் ஏழைகட்கு உணவளிக்கும் வேலை நடைபெற்றது . “ மண்டிணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம் , உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே ' என்று மணி மேகலை கூறுகின்றது . அன்னையின் அன்புள்ளத் தோடு , ஐடாவின் அன்னையார் ஆற்றிய தொண்டும் அப் பாராட்டிற்கு உரியதன்றோ ? சில சமயங்களில் , ஐடாவும் , ஐடாவின் சகோதரர்களும் கூட இவ்வறப் பணியில் ஈடுபடுவதுண்டு . பெரியவர்களின் பசிபோக்கும் பொறுப்பை ஐடாவின் அன்னை ஏற்க , சிறுவர்கட்கு உணவு தரும் வேலையினை இச் சிறுவர்கள் செய்து வந்தனர் . அப்பொழுது ஐடாவிற்கு வயது ஆறு முடிந்திருந்தது . அவ்வயதிலேயே ஐடா பிறர் துயர் நோக்கி நெகிழும் நெஞ்சம் பெற்றிருந்தார் . வயிற்றுக் கொடுமை காரணமாகத் தம்மைப் போன்ற இளம் வயதினர் தம் வயதிற்கு உரிய துடிப்பும் துள்ளலும் இன்றி , ஒடுங்கிக் கிடக்கும் துயர நிலையைக் கண்ட குழந்தை ஐடா , இளகிய உள்ளத்துடன் உணவூட்டி மகிழ்ந்த காட்சியைக் கண்டு , கண்ணீர் பெருக்காதவர் இலர் . இப்படிப்பட்ட கொடுமைகள் உலகில் இடம் பெறவே கூடாது என்று விரும்பிய ஐடாவின் குழந்தை நெஞ் சத்தின் ஒரு மூலையில் , இத்தகு கொடுமைகள் ஒருக் கால் இடம் பெற்றாலும் நேர் நின்று போராடியே திர வேண்டும் என்னும் உணர்வை உண்டாக்கிய நிகழ்ச்சிகள் ' இதுபோல் பல நேர்ந்தன . இன்ப ' வாழ்வு வாழும் வாய்ப்புப் பெற்றவர்கள் , துன்பத்தில் உழல்பவர்களுக்கு உதவ வேண்டும் என்பதே ‘ வாழ்க்கை நெரி ' என்னும் உண்மையை உணரும் வாய்ப்பு ஐடாவிற்கு இளமையிலேயே கிடைத்தது . ஐடாவிற்கு வயது எட்டாகியது . ஏறத்தாழ இருப்தாண்டுகள் இடையறாது உழைத்தமையால் , . தமது உடல்நலம் குன்றி வருவதை ஜான் ஸ்கடர் உணர்ந்தார் ; சிலகாலம் ஓய்வு பெறும் எண்ணமெழப் பெற்றவராய்க் குடும்பத்துடன் அமெரிக்காவிற்குச் செல்ல முடிவு செய்தார் . 1878 ஆம் ஆண்டு ஜானின் குடும்பம் அமெரிக்காவிற்குப் பயணமாயிற்று . தமிழ் நாட்டில் இருந்து வாழ்க்கையைப் பல கோணங்களில் கண்டுணரும் வாய்ப்புப் பெற்ற ஐடாவின் சகோதரர் களும் , குழந்தை ஐடாவும் வேற்றிடம் செல்லும் ஆர்வத்துடன் வேலூரிடம் விடைபெற்றுக் கொண்டனர் .
பல ஆண்டுகள் பிரிந்திருந்த தாய்நாட்டு மண் ணில் மீண்டும் அடி எடுத்து வைத்த ஜான் மகிழ்ந்தார் . . கணவரின் மகிழ்ச்சி கண்டு தாமும் மகிழ்ந்தார் அவர் தம் மனைவியார் . குழந்தைகளும் முற்றிலும் வேறு ' பட்ட சூழ்நிலையைக் கண்ணுற்றுக்களிப்படைந்தனர் . பணமும் , பகட்டும் நிறைந்த அமெரிக்க வாழ்க்கை , அவ்விளஞ் சிறுவர்களின் இதயத்தை ஈர்ப்பதாகவே இருந்தது
நெப்ராஸ்காவில் அவர்கள் வசித்து வந்த இடத்திற்கு அண்மையில் ஒரு பள்ளிக்கூடம் இருந்தது . ' ஐடாவின் சகோதரர்களில் மூத்தவன் ஜானைத் தவிர , மற்றவர்களும் , ஐடாவும் அப் பள்ளியில் சேர்க்கப் பட்டனர் . ஜான் தொலைவிலிருந்த வேறொரு பள்ளி யில் பயின்று வரலானான் . ஐடாவின் வீட்டு ஆஸ்திரே லியக் குதிரை , அவர்கள் ஐவரையும் ( ஐடாவையும் , நான்கு சகோதரர்களையும் ) ஏற்றிச் சென்று பள்ளியில் சேர்க்கும் . முதன் முதலில் குதிரையேறுகையில் ஐடா பட்ட தொல்லைகள் பல . ஆனால் , ஐடாவின் சகோதரர்கள் ஐடா விரைவில் குதிரையேற்றத்தில் சிறந்த பயிற்சியும் , பழக்கமும் பெறுமாறு செய்தார்கள் . இப்படிப்பட்ட துறைகளில் , ஐடாவிற்குப் பயிற்சி தருவதில் ஆர்வம் காட்டியவர்கள் அவர்களே யாவர் . இங்ஙனம் , தங்களைச் சுற்றி எங்கணும் வறுமைத் தொல்லை ஒழிந்திருக்க வளமான வாழ்வு வாழ்ந்தனர் அவர்கள் . நான்கு ஆண்டுகள் நகர்ந்தன . ஒன்றுபட்டு வாழ்ந்த குடும்பம் பிரிந்து சிதறு மாறு நேர்ந்தது . ஐடாவின் தந்தையாரின் தொண்டுள்ளமே அதற்குக் காரணமாயிற்று . இந்தியாவில் ஆற்றிவந்த பணியை உடல்நலக் குறைவால் பாதியில் விட்டுவந்த ஜான் ஸ்கடருக்கு , மீண்டும் இந்தியாவிற்கே செல்ல வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி நின்றது . நான்காண்டுகள் வரையிலும் அவரது உடல்நிலை அதற்கு இடம் தரவில்லை . அதன் பின்னர் , அவரது உடல்நிலை ஓரளவு சீர்பெறவே ஜான் ஸ்கடர் இந்தியாவிற்குத் திரும்புதற் குரிய ஏற்பாடுகளை விரைந்து செய்யலானார் . மனைவி யையும் , மக்களையும் அமெரிக்காவிலேயே விட்டுத் தாம் மட்டும் 1882 ஆம் ஆண்டில் இந்தியாவிற்குப் புறப் பட்டார் . மேலும் இரண்டாண்டுகள் சென்றன . ஐடாவின் அன்னையும் இந்தியா செல்ல விரும்பி னார் . பதினான்கு வயதுப் பெண்ணான ஐடாவைப் பெரிய தந்தையார் ஹென்ரி என்பவரின் பொறுப்பில் விட்டுச் செல்ல முடிவு செய்தார்கள் . அன்று வரை தந்தையின் பிரிவைத் தாயின் பரிவால் தாங்கிக் கொண்டிருந்த ஐடாவைத் தாயின் முடிவு பெரிதும் வருத்திற்று . எனினும் , ஐடா , தமக்கேற்பட்ட வருத்தத்தை மறைத்துக்கொண்டு தாய்க்கு மகிழ்ச்சி யுடன் விடை கொடுத்தனுப்பத் தயங்கவில்லை . தமக் குண்டான துயரத்தை வெளிப்படுத்திப் பிறருக்கும் துயரம் தருவதை விரும்பாத ஐடாவின் பண்பை எப்படிப் பாராட்டுவது ? “ இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான் துன்பம் உறுதல் இலன் ” என்பது குறள்மொழி . ஐடாவும் , இடும்பை இயல்பென உணர்ந்தவராதலால் அவற்றால் கலங்கியதில்லை . எனவே , ஜடாவைப் பெற்றோரின் பிரிவு அதிக நாள் வருத்தவில்லை . எத்தகைய சூழ்நிலைக்கும் ஏற்பத் தம்மை மாற்றிக் கொள்ளும் இயல்புடையவர் ஐடா . ஆகவே , மிக விரைவில் ஹென்ரி அவர்களின் குடும் பத்தில் ஒருவராக மாறிட்டார் .
இவ்வின்பமும் சில நாட்கள் நீடித்தது . மீண்டும் வரும் புயல் வீசியது . துன்பங்கள் வரின் தொடர்ந்தே என்பது உண்மையாயிற்று . ஹென்ரி அவர்களும் ஐடாவை விட்டுப் பிரியும் நாள் வந்தது . இந்தியாவில் செய்துவந்த தொண்டை உடல் நலக் குறைவின் காரணமாக இடையே விட்டு வந்த ஹென்ரிக்கு ஜப்பானிலிருந்து அழைப்பு வந்தது . அவ் வழைப்பை ஆவலுடன் ஏற்றவராய் ஹென்ரி ஜப்பானுக்குச் செல்ல முடிவு செய்தார் . ஐடாவிற்கு ஆதரவாக இருக்கும் தாமும் பிரிந்து விட்டால் நிலைமை என்னாகுமோ என்று எண்ணி வருந்தினார் ஹென்ரி . ஐடாவின் எதிர்காலம் பற்றி எண்ணி எல்லோரும் வருந்திக்கொண்டிருந்த நேரத்தில் ,
ஏற்ற அறிவுரை கூறி உதவிட முன்வந்தார் டுவைட் எல் . மூடி என்னும் பெரியார் . அந் நாளில் ' அறிஞர் ' என்று பலரும் போற்றப் பெருவாழ்வு வாழ்ந்துவந்த மூடி அவர்கள் 1 நார்த்பீல்டில் பெண்களுக்கென்று ஒரு பள்ளிக் கூடம் நிறுவியிருந்தார் . ஐடா அங்குத் தங்கிப் படிப்பது நல்லது என்று இவர் நினைத்தார் . நார்த் பீல்டுக்கு ஐடாவை அனுப்பி விடுமாறு அவர் கூறிய அறிவுரையை அனைவரும் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டனர் . உற்றார் , உயிர் நண்பர் அனைவரையும் விட்டுப் பிரிந்து நார்த்பீல்ட் செல்ல வேண்டும் என்று கேள்விப்பட்ட ஐடா வருந்தவில்லை . சிகாகோவை விட்டு நார்த்பீல்ட் செல்லத் தயாரானார்
நார்த்பீல்ட் , இயற்கையெழிலால் ஈடிணையற்றுத் திகழும் , கண்களையும் , கருத்தையும் கவரும் கவினார்ந்த : காட்சிகள் நிரம்பியது ;
கனெக்டிகட் ( Connecticut ) நதி ' பள்ளத்தாக்கைச் சுற்றி ஓடிக்கொண்டிருந்தது ; சுற்றிலும் குன்றுகள் ; பள்ளத்தாக்கில் பலவகை மரங்கள் . இவையெல்லாம் தகதகக்கும் ஆதவனின் தங்கக் கதிர்பட்டுத் தனிப் பொலிவுடன் திகழ்ந்தன . .
ஐடா நார்த்பீல்டை அடைந்ததும் , இவற்றைத் தான் முதலில் கண்டார் ; கண்டதும் அவர்தம் நெஞ்சம் நன்றியுணர்வால் நிறைந்தது . நார்த்பீல்டுக்குத் தம்மை அனுப்பிய தம் பெரிய தந்தையையும் , மூடி . அவர்களையும் வாழ்த்தினார் . முன்னே , கண்டிராத : இடத்தில் தனியே விடப்பட்டமைக்காக வருந்தி ' வாட்டமுற வேண்டிய பெண் ,
புதிய அனுபவங்களை நுகர உதவியதை எண்ணி வாழ்த்தினாள் என்றால் வியப்புத்தானே உண்டாகும் ! -
- நார்த்பீல்ட் பள்ளியில் ஐடா சேர்க்கப்பட்டார் . . பள்ளி வாழ்க்கை , ஐடாவிற்கு மகிழ்ச்சியையும் , மன வெழுச்சியையும் தருவதாக அமைந்தது . பாடங்களைக் கற்பதில் மட்டுமன்றிக் குறும்புச் செயல்கள் செய்வதிலும் ஐடா முதல்வரானார் . சிறுவயதிலிருந்தே ஐடா விடம் காணப்பட்ட தன்மை இது . இவ்வியல்புகளால் ஜடாவைப் போன்றிருந்த பிளாரன்ஸ் என்னும் பெண் , ஐடாவின் தோழியானாள் . பள்ளியில் எத் தகைய குறும்புத்தனமான செயல் நடைபெற்றாலும் , ஐடாவும் , பிளாரன்சும் அதில் பங்கேற்றவர்களாக -
- ஏன் ? - வித்திட்டவர்களாகவே இருப்பர் . இதனால் பள்ளித் தலைவரின் முன்னர் பலமுறை சென்று நிற்க ' நேர்ந்தது ; தண்டனையும் பெற நேர்ந்தது . ஆனால் , அவை கண்டு அவர்கள் கலங்கியதுமில்லை ; தங்கள் செயலைக் கைவிட்டதுமில்லை . அருகில் இருந்த ஆண்களின் பள்ளியொன்றில் பேராசிரியராய் இருந்த ஒருவர் , ஐடாவின் பள்ளிக் கூட ஆசிரியர்களுக்கு ஜெர்மன் மொழி பயிற்று விக்க வருவதுண்டு . அவர் குதிரை வண்டியில் வருவது வழக்கம் . ஒருநாள் ஐடாவும் , பிளாரன்சும் கட்டப் பட்டிருந்த குதிரையையும் , வண்டியையும் கண்டு விட்டனர் . உடனே , குதிரையை அவிழ்த்துவிட்டு , இருவருமாக அதன் மீதேறிச் சவாரி செய்துவிட்டுத் திரும்பினர் . திரும்பியதும் , குதிரையை மரத்தில் முன் ' போல் கட்டிவிட்டு , உணவு உண்ண விரைந்தனர் . சிறிது நேரத்திற்குள் எவ்வாறோ செய்தியறிந்த பள்ளித் தலைவரிடம் தண்டனையும் பெற்றனர் .
ஐடாவின் இத்தகைய குறும்புச்செயல் ஏதேனும் ஒன்று நிகழாமல் ஒருநாளும் கழிந்ததில்லை என்றே சொல்லலாம் . ஐடா , ஓயாது செய்த குறும்புச் செயல் களிலும் , அவருடைய சிறந்த அறிவே வெளிப்பட்படது . இளமையில் இப்படி இருப்பவர்களே வாழ்க் கையில் புகழ் பெற்றுத் திகழ முடியும் என்பதற்கு ஐடாவின் வரலாறும் ஒரு சான்றாக உள்ளது .
உயர் வகுப்புகளுக்குச் சென்று பயிலும் போதும் ஐடாவின் இவ்வியல்பு மாறவில்லை ; மறையவில்லை . என்றாலும் , இவற்றுடன் ஐடாவின் அறிவும் வியத்தகு முறை பயிலே விரைந்து வளர்ந்து வந்தது .
நார்த்பீல்டில் இருந்த நாட்களில் , ஐடாவிற்கு ஆடம்பர வாழ்க்கையில் விருப்பு ஏற்பட்டது . அங்கிருந்த சூழ்நிலை ஐடாவிற்கு அத்தகைய வாழ்வில் ' கவர்ச்சி ஏற்படுத்தியதும் இயல்பே அல்லவா ? இந்தியாவை விட்டு அமெரிக்காவிற்குச் சென்றபின் ஐடா , " ஒரு கோடீசுவரனின் மகளாகப் பிறந்திருங்தால் எத்துணை நலமாக இருந்திருக்கும் ? " என்று பல முறை எண்ணி ஏங்கியதுடன் , தந்தையிடமே இக்கருத்தை வெளியிட்டுமுள்ளாராம் . அதற்கு விடை யாக ஜான் ஸ்கடர் , ' ' நீ அவ்வாறு பிறந்திருந்தால் , அவ்வளவு பெரும் செல்வத்தைத் தக்க முறையில் " பயன்படுத்த மாட்டாய் என்று இறைவன் எண்ணி யிருக்கலாம் " என்று கூறுவாராம் . பொது வாழ்வில் ஈடுபட்ட பின்னர் இதைப் பற்றி எண்ணிப் பார்க்கும் போதெல்லாம் ஐடா , " தாம் ஒரு பெருஞ் செல்வரின் மகளாகப் பிறந்திருப்பின் , பிறருக்குதவும் வாய்ப்பு கிடைக்காமலே போயிருக்கும் " என்றுணர்ந்து மகிழ்ந் திருக்கின்றார் . என்றாலும் , நார்த்பீல்டில் ஐடாவிற்குப் பகட்டும் , . படாடோபமும் நிறைந்த வாழ்க்கையில் பற்று ஏற்பட்டது என்பது மட்டும் உண்மை . இதை விளக்கும் நிகழ்ச்சி ஒன்றுண்டு .
ஓர் இரவில் ஐடாவும் , வேறு சில பெண்களும் உறக்கம் கொள்ளாமல் உரையாடலில் ஈடுபட் டிருந்தனர் . அவர்கள் தங்களை மறந்து , உரத்த குரலில் பேரார்வத்துடன் பேசிக்கொண்டிருந்தனர் . அவர்களின் பேச்செல்லாம் அவரவர் களின் எதிர்காலம் எப்படியிருக்க வேண்டும் என்பது குறித்தே நிகழ்ந்தன .
அதைத் தொடங்கி வைத்த ஐடா , " நான் பெரியவளானதும் , ஒவ்வொரு நாளும பகற்பொழுது வரை பஞ்சணையில் படுத்த வண்ணம் பலரும் எழுதும் கடிதங்களைப் படிப்பேன் . புதினங்கள் படிப்பேன் ; பானங்கள் அருந்துவேன் ; பகலுணவை முடித்துக்கொண்டு காரில் செல்லுவேன் ; இன்றேல் ' டென்னிஸ் ' விளையாடுவேன் ; ஒவ்வொரு இரவும் , விருந்துகளுக்கும் , விழாக்களுக்கும் செல் வேன் ; விடியற்காலை
3மணியாவதற்குள் ஒரு பொழு தும் வீடு திரும்ப மாட்டேன் " என்று சொல்ல , இடை யில் குறுக்கிட்டாள் வேறொரு பெண் . " நிச்சயமாக இப்பொழுது சொன்னவற்றில் எதையும் செய்யப் போவதில்லை . உன்னுடைய பெற்றோர்களைப் போல் கோட்பாடுடையவளாகத்தான் விளங்கப் போகிறாய் " என்றாள் அப்பெண் . இகழ்ச்சியாகப் பேசிச் சிரித்த அப்பெண்ணைத் தொடர்ந்து மற்றவர்களும் ஐடாவைக் கேலி செய்து மகிழ்ந்தனர் . அடக்க இயலாத ஆத்தி ரத்துடன் ஐடா , " எங்கள் குடும்பத்தில் ஏற்கனவே எண்ணற்ற கோட்பாடுடையோர் இருக்கின்றனர் . எனவே , நான் கோட்பாடுடையவளாக இந்தியாவிற்குச் செல்லப் போவதில்லை . நான் அமெரிக்காவி லேயே தங்கி , செல்வர் ஒருவரை மணந்து , வாழ்க்கையின் இன்பங்களை நுகர்வேன் " என்று ஆணித்தர மாகக் கூற , அங்கிருந்தோர் அதுவே சரி என்று மகிழ்ச்சியாய் ஆரவாரித்தனர் ; ஐடாவின் முடிவைப் பாராட்டினர் . இந்த வேடிக்கையான நிகழ்ச்சி ஐடாவின் அன்றைய மனநிலையை விளக்குவதாக அமையும் . ' இந்தியாவிற்குச் செல்வதில்லை ' என்று முடிவு செய்த ஐடாவை , இந்தியாவிலேயே தங்கச் செய்ய ஊழ் உறுதி எடுத்தது போலும் ! இந்தியாவிலிருந்து ஐடாவின் அன்னைக்கு உடல் நலமில்லை யென்றும் , ஐடாவின் உதவி தேவையென்றும் செய்தி வந்தது . ஐடா தாய்க்குத் தன்னுதவி தேவை என்பதால் இந்தியாவிற்குச் செல்லத் தயாரானார் . பாட்டனாரைப் போல் - தந்தையாரைப் போல் - ஒரு மருத்துவத் தொண்டராக இந்தியாவிற்குத் தாமும் சென்று நிலை பெறும் நாள் நெடுந்தொலைவில் இல்லை என்றுணராத ஐடா அன்னைக்கு உதவப் போகும் அன்பு மகளாக மட்டுமே தம்மைக் கருதிக்கொண்டு இந்தியாவிற்குச் சென்றார் .
ஜான் ஸ்கடரும் அவர் தம் மனைவியாரும் அப்பொழுது தென்னாற்காடு மாவட்டத்துத் திண்டிவனம் பகுதியில் வசித்து வந்தனர் . அப்போது அங்கு மருத்துவ மனையேதும் இல்லை . மருத்துவமனை இல்லை என்பதற்காக மக்கள் நோய் தீர்த்துக் கொள்ளும் வழியறியாது தவிக்கக் கூடாது என்னும் எண்ணத் துடன் , திண்டிவனத்து மக்களின் வீடுகளையே மருத்துவ நிலையமாக்கி மாபெரும் பணியாற்றிக் கொண்டிருந்தார் இரண்டாம் ஜான் ஸ்கடர் அவர்கள் .
திண்டிவனத்தில் ஐடாவைத் தம் தந்தையாரின் தன்னலமற்ற உழைப்புப் பெரிதும் கவர்ந்தது . அதனால் சில வேளைகளில் ஜான் ஸ்கடர் , ஐடாவையும் நோயாளிகளின் வீடுகளுக்கு அழைத்துச் செல்லலானார் . இளகிய இதயம் படைத்த ஐடா , பிணியாளரிடமும் , அவர்கள் குடும்பத்தினரிடமும் உரையாடி மகிழ்ச்சி ஊட்டுவார் .
எனினும் , ஐடாவிற்குத் தாமும் மருத்துவத் துறையில் ஈடுபட வேண்டும் என்னும் ஆர்வம் சிறிதும் எழவில்லை . தந்தையின் பணியைப் பாராட்டி மகிழ்ந்தாலும் , மீண்டும் அமெரிக்காவிற்குச் சென்று வெல்ஸிலி கல்லூரியில் சேர்ந்து பயில வேண்டும் ; வளம் மிக்க வாழ்க்கையைத் தேடிக் கொள்ள வேண்டும் என்பதுதான் அவர்களின் எண்ணமா யிருந்தது . அதைத் தவிர வேறு எதைப் பற்றியும் எண்ணிப் பார்க்கவும் ஐடா விரும்பவில்லை . ஆனால் , நினைப்பவை எல்லாம் நடந்தேறுவது இல்லை .
திண்டிவனத்தில் அன்றிரவு நடந்தேறிய நிகழ்ச்சி இதைத்தான் உணர்த்துகிறது . இந்நிகழ்ச்சி , ஐடா வின் எண்ணத்திலும் , வாழ்க்கையிலும் புதிய திருப்பத்தை ஏற்படுத்துவதாயிற்று .
ஐடா , அறையில் அமர்ந்து , தமது ஆருயிர்த் தோழி ஆனிக்குக் கடிதம் எழுதிக்கொண்டிருந்தார் . உன்னைப் போல் , நானும் ஒரு கோட்பாடுடையோ ளாக வேண்டுமென்று துடிக்கிறேன் ' - என்று ஆனி தனக்கு எழுதியிருந்ததை நினைத்துப் பார்த்தார் . " நான் , உன் கடிதத்தில் குறிப்பிட்டிருப்பது போல் ஒரு கோட்பாடுடையோள் அல்லள் . இனியும் ஆக மாட்டேன் . " - ஐடா கடிதத்தை ஆரம்பித்தார் . மற்றவர்கள் துயர் தீர ஏதாவது ஒரு வகையில் உழைப்பதே மனிதப் பிறவி எடுப்பதன் பயன் என்று எண்ணும் தம் தோழி ஆனியே கோட்பா டுடையோள் ஆவதற்கு ஏற்றவள் என்பது ஐடாவின் எண்ணம் .
எனவே , கடிதத்தைத் தொடர்ந்தார் நீ என்னைப் போன்றவள் அல்லள் . நீ இந்தச் சூழ் நிலையில் இருக்கப் பெரிதும் விரும்புவாய் . இந்தியப் பெண்களின் இல்லந்தோறும் சென்று , இளம் மனைவியருக்கும் , அன்னையருக்கும் உன்னாலான உதவியைச் செய்து வருவதாகக் கற்பனையில் கண்டு நான் மகிழ் கிறேன் . " - கடிதம் நீண்டுகொண் டிருந்தது . அறையை நோக்கி வந்த இருமல் ஒலி , ஐடாவின் இன்ப நினைவுகளைத் தடை செய்தது .
வெளியே சென்ற ஐடா , அந்தணர் ஒருவர் உடலும் , உள்ளமும் சோர்ந்த நிலையில் நின்றுகொண்டிருக்கக் கண்டார் . அவ்வந்தணர் , ஐடாவிடம் , தம் மனைவி மகப்பேறு காரணமாக உறும் வேதனையை விளக்கினார் . தக்க மருத்துவ உதவி அளித்து அவளுக்கு உயிர் கொடுக்க வேண்டும் என்று வேண்டினார் . " அம்மா , அவள் - என் மனைவி - பதினான்கு வயதே நிரம்பப் பெற்ற இளம் பெண் . அவள் மரணத்தின் வாயிலில் நிற்கிராள் . தாங்கள் அமெரிக்காவிலிருந்து வந்திருப்பதாகக் கேள்விப் பட்டேன் . தங்களால் அவளுக்கு உதவ முடியும் என்றே வந்தேன் அம்மா ! " என்று கவலை நிரம்பிய குரலில் பேசினார் . புகழ் பெற்ற மருத்துவரின் மகளும் மருத்துவம் பயின்றவரா யிருப்பார் என்ற அந்த அந்தணரின் நம்பிக்கை ஐடாவிற்குப் புரிந்தது . ஐடா , கனிந்த குரலில் , ' ஐயா ! நீங்கள் அழைத்துச் செல்ல வேண்டியவர் என் தந்தையாரல்லவா ? அவர் தாம் மருத்துவர் . வாருங்கள் . அவரிடம் தங்களை அழைத்துச் செல்கிறேன் ' என்று சொன்னார் . வந்தவரோ ஆத்திரம் அடைந்தார் . ' என் மனைவி ' யின் முகத்தை மாற்றார் காண்பதைவிட , அவள்
மாண்டு மடிவதே மேல் ' என்ற சுடுசொற்களை வீசி விட்டு வந்தவர் திரும்பினார் .
ஐடா திகைத்தார் . அவருடைய மனைவிக்கு உதவும் வகையறியாவிட்டாலும் , தாமும் தந்தையுடன் வந்து இயன்றதைச் செய்வதாக உறுதி கூறினார் . ஆனால் , அயலார் ஒருவர் தம் மனைவிக்கு மருத்துவம் செய்யும் பொருட்டுத் தன்னில்லம் வருவதே தமது குலப் பண்பிற்குப் பொருந்தாது என்று கூறி அவ்வந்தணர் சென்று விட்டார் . ஐடா , வருத்தத்துடன் தந்தையிடம் சென்றார் . . நடந்ததை விளக்கினார் . தந்தை மகளைத் தேற்ற முயன்றார் . அவர்களின் இரத்தத்தில் ஊறிவிட்ட கொள்கைகளை உதறித் தள்ளுவது எளிதாக முடியும் செயல் அல்ல என்று உணர்த்தினார் . அவ்வந்தணரை , . அவரது உறுதியான கொள்கைக்காகப் பாராட்ட வேண்டும் என்றார் .
ஐடாவிற்குத் தந்தையின் பதில் அமைதி அளிக்க வில்லை . மேலும் ஆத்திரமே சேர்ப்பதாயிற்று . ஐடா " வின் நிலைமையைப் புரிந்து கொண்ட ஜான் ஸ்கடர் , . . ' பிறர்படும் துன்பமொன்றைத் துடைத்தெறிய , நாம் ஆற்றக் கூடிய செயல் எதுவுமில்லை என்றால் , அதை மறந்து விடுவதே அறிவுடைமை ' என்று சொல்லி அகன்றார் . ஐடாவை விட அனுபவம் அதிகம் பெற்றவரல்லவா ஜான் ! ஐடா தம் அறைக்குச் சென்றார் . அந்த நிகழ்ச்சியையும் ஆனிக்குக் கடிதத்தில் விளக்கலானார் . சில நிமிடங்கள் சென்றன . மீண்டும் காலடி யோசை . ஐடாவின ் முகம் மலர்ந்தது . முன்பு வந்த' மனிதரே மனம் மாறித் தம்முடைய தந்தையாரை அழைத்துச் செல்ல வந்திருக்கின்றார் என்ற எண்ணத் தால் ஏற்பட்டதே அந்த மலர்ச்சி ! ஆனால் , வந்தவர் ஒரு முகம்மதியர் ; முன் வந்த அந்தணர் அல்லர் .
ஐடாவின் குழம்பிய முகத்தில் தோன்றிய வினாக் குறி கண்ட புதியவர் பேசலானார் . குழந்தை பெறும் ' வேதனையால் துடிக்கும் தன் மனைவிக்கு வாழ்வளிக்க வருமாறு ஐடாவை வேண்டினார் . ' ' நீ மருத்துவரின் மகளென்றாலும் , மருத்துவரில்லையே " - ஐடாவின் ' இதயம் இடித்துரைத்தது . ஐடா , முன் வந்தவருக்குச் சொன்னதையே சொன்னார் . அவரும் ஐடாவின் உரைகேட்டு முன்னவரைப் போன்ற பெருஞ்சினம் ' கொண்டார் . ஐடா , தந்தையுடன் தாமும் வருவதாக உறுதியளித்தும் அவர் ஒப்பவில்லை ; கவலை தோய்ந்த முகத்தோடு திரும்பிச் சென்றார் . செய்வது யாதென்று அறியாமல் திகைத்து நின்ற ஐடாவைத் திரும்பவும் தட்டியெழுப்பிற்று '
புதியவர் ஒருவரின் குரல் . அவரும் , பிரசவ வேதனை யால் வருந்தும் தம் மனைவிக்கு மறுவாழ்வு அளிக்க ஐடா முன்வர வேண்டும் என்று வேண்டி நின்றார் . ஐடா , இரங்கிடும் குரலில் , தம்மால் அவருக்கு உதவ இயலாமையைச் சொல்லி , நிலைமையை விளக்கினார் . தம்முடைய தந்தையால் , அப்பெண் வாழ்வு பெறச் செய்ய முடியும் என்பதையும் உணர்த்தினார் . ஆனால் , அவ்வுரையைச் செவி மடுக்காமல் , " இப்படிப்பட ட இழிவையேற்று என் மனைவி உயிர் வாழ்வதை விட இறந்தொழிவதே எனக்கு இன்பம் தரும் " என்று அவர் கூறிய கனல்கக்கும் மொழிகள் ஐடாவைக் கலங்க வைத்தன புதியவர் போய் விட்டார் . ஆனால் ஐடாவின் உள்ளத்தில் எழுந்த பெரும் புயல் ஓயவில்லை . துயில் கொள்ளத் துடித்தார் ஐடா . முடியவில்லை . அவர்களின் கண்முன்னால் பெண் மருத்துவர் இல்லாக் குறையால் , உயிரிழக்க விருக்கும் மூன்று ' அழகிய ' - ' இளம் ' பெண்களின் முகங்கள் மாறி மாறித் தோன் றின . " துன்ப மொன்றைத் துடைக்க உன்னால் ஏதும் செய்ய முடியாவிட்டால் , அதை மறந்துவிட முயற்சி செய் ' ' என்ற தந்தையின் அறிவுரையைப் பின்பற்றவும் இயலவில்லையே ! அமைதியின்றித் தவித்தார் ஐடா .
அந்த நீண்ட இரவும் கழிந்தது . காலைப் பொழுது மலர்ந்தது . முன்னிரவு நடந்த நிகழ்ச்சியால் உறக்கமிழந்து , குழப்பமும் கவலையும் கொண்டிருந்த ஐடா , பொழுது புலர்ந்ததும் , பிணப்பறை முழங்குவது கேட்டுத் திடுக்கிட்டார் . அடுத்து மூன்று பிணங்கள் ஒன்றன்பின் ஒன்றாக எடுத்துச் செல்லப் படுவதையும் கண்டார் . - - சிறிது நேரத்தில் , முன்னிரவு வந்த மூவரின் மனைவியரே இப்பரிதாப மரணம் யெய்தினர் என்று - அறிய நேர்ந்த ஐடா , துயரத்தின் எல்லைக்கோட்டை அடைந்தவராய்த் திகைத்துச் செயல்மறந்து நின்றார் . தம் அறையில் ஐடா நெடுநேரம் தனிமையில் ஆழ்ந்திருந்தார் . நீண்ட நேரச் சிந்தனைக்குப் பிறகு செல்வமும் செழிப்பும் நிறைந்த அமெரிக்க வாழ்க்கை பற்றிய அவர்களின் ஆசைக் கனவுகள் எங்கோ மறைந்தன . தெளிவானதோர் முடிவுக்கு வந்தவராய் , ஐடா , தம் பெற்றோரிடம் விரைந்தார் . அமெரிக்கா விற்குச் சென்று , மருத்துவப் பயிற்சி பெற்று மீண்டும் இந்தியாவிற்குத் திரும்பி , திக்கற்ற இந்தியப் பெண்களின் தேவையை நிறைவு செய்யத் தாம் முடிவு செய்துவிட்டதாக அறிவித்தார் . பெற்றோரின் நெஞ்சம் பேருவகையும் , பெருமிதமும் எய்தியது . ஒருமித்த குரலில் தாயும் தந்தையும் மகளைப் பாராட்டினர் . ' ' பிறவியின் பயன் பிறர்க்கு உதவுதலே " என்று எண்ணும் அப் பெருமக்கள் , தாம் பெற்ற செல்வமும் தங்கள் வழியைப் பின்பற்றி வருவதைக் கண்டு பூரிப் பெய்தியது வியப்புத் தருவதல்லவே ! ஐடாவிற்கு நல் வாழ்த்துக் கூறினர் . தம்முடைய இலட்சியத்தை ஈடேற்ற இடைவிடாது உழைப்பதே இனி தம்மு டைய கடமை என்றுணர்ந்த ஐடா இந்தியாவை விட்டுச் செல்லுகையில் புதிய உணர்வும் , உறுதியும் பெற்ற ஐடாவாகக் காட்சி தந்தார் .
“ எண்ணித் துணிக கருமம் ; துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு " என்பது செந்தமிழ் மறை காட்டும் செம்மொழி . இவ்வறிவுரையிலிருந்து அணுவும் வழுவாது வாழ்ந்தவர் ஐடா .
ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகே , தாம் ஆற்ற வேண்டிய செயல் இதுவெனத் துணிந்த ஐடா , துணிந்தபின் சோர்வடையவில்லை . ' தம்முடைய - கடமை என்று கடவுளே சுட்டிக் காட்டிய தென ' அவர்கள் நம்பிய அந்தப் பணியைச் செம்மையாகச் செய்து முடிக்க வேண்டும் என்ற ஆர்வம் வளர்ந்தது .
ஐடா 1894 ஆம் ஆண்டில் , நியூயார்க்கில் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து பயில விரும்புவோர்க்கு நடத்தப்படும் நுழைவுத் தேர்வு எழுதி வெற்றி பெற்றார் . பிறகு பிலடெல்பியா மகளிர் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார் .
ஐடா மருத்துவம் கற்கப் புகுந்த அந்த நாள் , மகளிர் மருத்துவத் துறையில் வரவேற்கப்படாத நாள் . அதற்கு ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகட்கு முன் இங்கிலாந்தில் மருத்துவத் தொழிலில் ஈடுபட்ட முதல் பெண்மணியான எலிஸபெத் பிளேக்வெல் என்பார் தமது உடை , முடி முதலிய வற்றை ஆண்களுடையவை போல் மாற்றியமைத்துக் கொள்ளுமாறு நண்பர்களால் வற்புறுத்தப்பட்டார் என்ற உண்மை அந்த நூற்றாண்டிலிருந்த அவல நிலைமையை விளக்கப் போதுமானது .
ஆனால் , “ துணிந்தபின் எண்ணுவம் என்பதிழுக்கு " என்னும் ஐடா இவற்றால் அஞ்சவில்லை . பிலடெல்பியாவில் மூன்றாண்டுகள் படித்தபின் , ஐடா நியூயார்க்கில் கார்னெல் 2 கல்லூரி மருத்துவம் பயிலப் பெண்களுக்கும் வாய்ப்புத் தருகின்றது என்றறிந்து 1898 இல் வேறு சில மாணவியருடன் அங்குச் சென்றார் . கார்னெல் கல்லூரியில் மகளிர் மிகச் சிலரே இருந்த போதிலும் , அவர்களுக்கு வேண்டிய வசதிகள் அனைத்தும் செய்து தரப்பட்டன . அவர்களுக்கு உதவிகள் புரியவும் , ஊக்க மூட்டவும் பேராசிரியர்கள் சிலரை நியமித்தனர் . என்றாலும் , 1 Women ' s Medical Colle உடன் பயின்ற மாணவர்கள் ஐடாவிற்கும் , பிற பெண்களுக்கும் பெருந் தொல்லைகள் கொடுத்தனர் . அன்றிருந்த நிலைமையைக் கண்டவர்கள் , ஐடா ஏறத் தாழ ஐம்பதாண்டுகள் கழித்துத் தாமே தோற்றுவிக்க விருக்கும் மருத்துவக் கல்லூரியில் ஆடவர்களையும் அனுமதிப்பார் என்று எண்ணியிருக்க மாட்டார்கள் .
அப்படிப்பட்ட ஒரு நிலைமை ! ஆனால் , நன்றல்லவற்றை அன்றே மறந்து , நல்லனவற்றையே நாளும் நினையும் ஐடாவிற்குக் கார்னெல் வாழ்க்கையும் கரும்பென இனித்தது . ஐடாவின் மனத்தில் மறையாது நின்ற மூன்று இந்தியப் பெண்களின் இரங்கிடும் முகங்கள் அளவற்ற ஆர்வத்தை மேலும் மேலும் வளர்ப்பதாயின .
கருத் தூன்றிக் கற்றார் . மருத்துவம் பயின்ற நாட்களிலும் , ஐடா இந்தியா வின் நிலைமையை அறிவதில் ஆர்வம் காட்டினார் . இந்தியாவில் , அப்பொழுது பரவியிருந்த பயங்கர நோய்களைப் பற்றியும் , அவற்றைப் போக்க அரசினர் கையாளும் வழிகள் பற்றியும் அறிவதில் விருப்பம் கொண்டார் . காலம் விரைந்தோடிற்று . ஐடாவின் மருத்துவப் படிப்பு முடிந்தது . ஐடா தகுதிபெற்ற மருத்துவராகி விட்டார் . இனி இந்திய நாட்டிற்குச் செல்லுவதே அவர்களின் முடிவு . எனவே , அதற்கான நாளையே எதிர்நோக்கி நின்றார் .
இந்தியாவிற்குச் சென்று தாம் ஆற்றக் கருதி யுள்ள செயலால் , மாதம் ஐம்பது ' டாலர் ' வருவாயும் கிட்டாதென்பதை ஐடா அறியாமல் இல்லை . எனினும் , , சகோதரிகளுடன் பிற ஐடா , இந்தியப் பெண்களுக்கு உற்ற சகோதரியாக இருந்து உதவுவதையே உயர்வுடையதெனக் கருதியமையால் , தமது நலத்தில் நாட்டம் கொள்ளவில்லை . ஐடா , இந்தியாவிற்குப் புறப்படத் தயாராக இருந்த நேரத்தில் , நியூயார்க் நகரிலிருந்த கோட்பா டுடையோர் குழுவிற்கு வேலூரிலிருந்து ஒரு வேண்டு கோள்விடப்பட்டது . வேலூரில் ஒரு மருத்துவமனை ஏற்படுத்தும் எண்ணம் இருப்பதால் , அவ்வெண்ணம் செயலாய் மலர , ஐடா 8 , 000 டாலர்1 திரட்டித் தருமாறு அனுமதிக்கப்பட வேண்டும் என்பதே அவ் வேண்டுகோள் . இதற்கு வித்திட்டவரும் ஒரு பெண் மணியே
ஆவர் . ஐடாவின் தந்தை , ஜான் ஸ்கடர் அவர்கள் இராணிப்பேட்டையில் நடத்தி வந்த மருத்துவ மனையில் ஐடாவின் உறவினரான லூயி ஹார்ட் 2 என்னும் பெண்மணியும் மருத்துவக் கோட் பாளராகப் பணியாற்றிக்கொண் டிருந்தார் . இந்தியப் பெண்களின் நிலை கண்டு ஐடாவைப் போன்று வருந்திய அவ்வம்மையாரே , இராணிப்பேட்டையில் மட்டுமன்றி , வேலூரிலும் பெண்களுக்கென ஒரு மருத்துவமனை நிறுவுதல் வேண்டும் என விழைந்தார் .
அவர்களுடைய விருப்பத்தின் விளைவே இவ் வேண்டு கோள் . வேலூரில் மகளிர்க்கான கோட்பாடுடையோர் மருத்துவமனை யொன்று நிறுவுதற்கு , முன்பணம் திரட்டும் பணிக்குத் தம்மையே தேர்ந்தெடுத் திருக்கின்றார்கள் என்பதறிந்த ஐடா அகமிக மகிழ்ந்தார் . என்றாலும் , “ 8 , 000 டால இதப் பதில் 50 , 000 டாலர்' திரட்டுமாறு பணித்திருக்கலாகாதா ? " என்றெண்ணி , ஐடா வருந்தவும் செய்தார் . 50 , 000 டாலர் திரட்டுவது எளிதான செயல் இல்லையென்றாலும் , ' இயலாது ' என்பதையே எண்ணிப் பார்க்க விரும்பாத ஐடா , அன்றே , தாம் எண்ணியதைச் செயலாக்க முயன்றார் .
ஆனால் , அக் குழு அதற்கு ஒப்பவில்லை ; 8 , 000 டாலர் திரட்டுவதே குழுவின் சட்ட வரம்புக் குட்பட்டதாகும் என்று டாக்டர் ஹென்ரி கோப் என்பவர் அக் குழுவின் சார்பில் அறிவித்தார் . ஐடாவிற்குக் குழுவின் இச்செயல் ஆத்திர மூட்டிற்று ; எனினும் அடங்கிச் செல்ல வேண்டிய நிலைமை ! ' உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் ' என்பதே ஐடாவின் தன்மை . எந்தச் செயலைத் துவங்குவதானா லும் பெரிய அளவில் திட்டம் தீட்டிப் பெரும் பயனே காண விழையும் இயல்பு ஐடாவின் தனிச் சிறப்பு . எனவே , ஐடாவிற்கு அக் குழுவின் முடிவு ஏமாற்றத்தையே ஏற்படுத்திற்று . என்றாலும் , தரப்பட்ட இவ் வாய்ப்பையேனும் பயன்படுத்திக் கொண்டு , இந்தி எனினும் , தொண்டுள்ளம் பெற்ற ஐடாவிற்கு எதிர் பார்த்ததைவிட எளிதாக விரைவில் வெற்றி கிட்டிற்று .
ஐடா , தம்முடைய நண்பர்கள் சிலரின் மூலம் ஹாரியட் டேபர்1 என்னும் அம்மையார் ஒருவரின் நட்பைப் பெற்றிருந்தார் . அவ்வம்மையார் , நியூயார்க்கி லிருந்த கோட்பாடுடையோர் குழு ஒன்றின் தலைவ பராக இருந்தார் . செல்வமும் , செல்வாக்கும் பெற்ற அவ்வம்மையாரின் மூலம் , பொருளுதவி கிட்டும் என்று ஜடா நம்பினார் . எனவே , அவர்களை அணுகி எல்லா விவரங்களையும் விளக்கினார் . ஐடாவின் முயற்சியைப் பாராட்டிய டேபர் அம்மையாரும் தங்களுடைய சங்கத்தில் ஜடா இச் செய்தி பற்றிப் பேசுதற்குரிய ஏற்பாடுகள் செய்வதாகக் கூறி , அதன் மூலம் உதவி பெறலாம் என்றும் உறுதியளித்தார் .
தமது உறுதி மொழியால் ஊக்கமடைந்த ஐடாவை , அவ்வம்மையார் தம்முடைய சகோதரியின் கணவரான ஷெல் என்ப வருக்கு அறிமுகம் செய்து வைத்தார் . பிறகு , ஐடா வின் உள்ளத்தில் புதியதோர் நம்பிக்கையொளி சுடர் விட்டெழப் பெற்றவராய் விடைபெற்று வீடேகினார் .
மறுநாள் பொழுது புலர்ந்ததும் துயில் தெளிந்து எழுந்த ஐடாவை , ஷெல் அவர்கள் தம்மைக் காண விரும்புகின்றார் என்ற செய்தி திகைப்படையச் செய்தது . ஆயினும் , அவரைக் காண விரைந்தார் . அவருடைய அறிமுகமும் நட்பும் ஐடாவிற்கு முன்னாள் தான் கிடைத்திருந்தது .
எனவே , அவர் தம்மையழைத்த காரணம் யாதென்று உய்த்துணர முடியாத வராய் அவரில்லம் சென்ற ஐடாவை , அவருடைய அன்பான வரவேற்பு மேலும் வியப்பில் ஆழ்த்திற்று . ஷெல் அவர்களே பேச்சைத் துவக்கினார் . தம்மு டைய மைத்துனியான பரின் வாயிலாக ஐடா ஆற்றக் கருதியுள்ள அரிய பணி பற்றி அறிந்த தாகவும் , அம் முயற்சி முழு வெற்றியடையத் தாமே முன்னின்று உதவுவதாகவும் அவர் கூறினார் . அவரு டைய கனிவுரை கேட்ட ஐடா பதில் பேச முடியாது அமர்ந்திருந்தார் . ஷெல் மேலும் தொடர்ந்தார் : ' ' என்னுடைய மனைவியின் பெயரால் அம்மனை கட்டப் பெறல் வேண் டும் என்பது எனது ஆவல் ; அம்மனை மிகச் சிறந்த ஒன்றாக அமைய வேண்டும் . ஆகவே 10 , 000 டாலர் தர முடிவு செய்திருக்கிறேன் ” என்றார் .
ஐடா இழந்த நினைவை மீண்டும் பெற நிமிடங் கள் பல ஆயின . தம் நினைவு . பெற்ற ஐடா , ஷெல் அவர்களை மனமாரப் பாராட்டினார் ; நாவார வாழ்த்தி னார் . தமது நன்றியை உணர்த்தினார் . ஷெல் அவர்கள் அத்துடன் நில்லாமல் , மருத்துவ மனை நிறுவுவதற்கேற்ற பிற வசதிகள் வேலூரில் உள்ளனவா என்றும் வினவினார் . பிறகு , வேறு ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டாலும் தாமே அவற்றையும் ஏற்பதாகக் கூறி ஐடாவை மேலும் , மகிழ்வித்தார் . சிந்தை மகிழ்விக்கும் இச் செய்தியுடன் ஐடா
" 50 , 000 டாலர் திரட்டத் தடையாக நின்ற டாக்டர் ஹென்ரி கோப் அவர்களிடம் சென்றார் . சென்றவுடன் அவர்கள் உதட்டிலிருந்து உதிர்ந்த முதல் வார்த்தை
நீங்கள் என்னைத் தடுத்து நிறுத்தியிராவிடில் , . அதோ . . . . . . . . . . . . . . . . அங்கே என்னுடைய 50 , 000 டாலர் இருந்திருக்கும் " என்பதேயாம் . இந்த நிகழ்ச்சி ஐடா வின் உள்ளத்தின் உயர்வைக் காட்டுகிறது . ஷெல் அவர்களின் " னேகொடையான 10 , 000 டாலர் அதைப் போல் பன்மடங்காய் அகக் கண்ணில் காட்சிதர , ஐடா தமது எதிர்காலம் பற்றி ஏதேதோ கனவுகள் காணலானார் . டேபர் அம்மையார் முன்னரே ஏற்பாடு செய்திருந்த கோட்பாடுடையோர் குழுவின் கூட்டத்திற்கு ஐடா பேசச் சென்றார் . "
பொருள் மிகுந்தவர் பொற்குவை தாரீர் ' ' என்று கேட்க எண்ணியிருந்த ஐடா , தமக்குக் கிடைத்த எதிர் பாராத உதவியைப் பற்றி மகிழ்ச்சியுடன் உரை யாற்றினார் . இந்திய நாட்டுப் பெண்கள் வாழ்வுபெறப் போகின்றார்கள் என்பதை உற்சாகத்துடன் தெரி வித்தார் . ஐடா , இச் சங்கத்தில் நிகழ்த்திய நீண்ட சொற் பொழிவு பிற்காலத்தில் பல நன்மைகளைத் தருவதா யிற்று . இந்தியப் பெண்களின் இழிநிலையை உள்ள படி உணர்த்திய ஐடாவின் உரையால் உருகிய உள்ளங்கள் பலவற்றில் , தாங்களும் , அவர்கள் பொருட்டு ஐடாவைப் போல் பணியாற்ற வேண்டும் என்னும் ஆவல் தூண்டிவிடப்பட்டது . ஐடா தென்னகத்திற்கு ஆற்றிய அருந் தொண்டில் பெரும் பங்கேற்ற கெர்ட்டூட் டாட் ' என்னும் அம்மையாரின் நட்பும் அவருக்கு அங்கே தான் கிடைத்தது . இங்ஙனம் பயன் தரும் உரையாற்றிவிட்டுவந்த ஐடா பத்தாயிரம் டாலர் பெற்றுவிட்ட நிறைவோடு இந்தியாவிற்குப் பயணமானார் .
புத்தாண்டு மலர்ந்தது ; தென்னகத்துப் பெண் களுக்குப் புது வாழ்வும் பிறந்தது .
1900 ஆம் ஆண்டு , ஜனவரித் திங்கள் , முதல் நாள் . தாம் ஏற்றுக் கொண்ட பணியை ஆற்றுவதற்கான தகுதியுடன் - மருத்துவப் பட்டத்துடன் - ஐடா அமெரிக்காவை விட்டு இந்தியாவிற்கு வந்து சேர்ந்தார் . குழந்தைப் பருவத்தில் , தமது குறும்புச் செயல் கண்டு மகிழ்ந்த அதே வேலூர் வீட்டை அடைந்தார் . வீணாகிய காலம் மீண்டும் வராது என்பதை அறிந்தவர்கள் ஐடா . ! எனவே ஒரு வினாடியையும் , வீணாக்க விரும்பவில்லை . மருத்துவமனை கட்டப்படும் வரையிலும் காத்திருக்கப் பொறாதவராய் , இருப்பதைக் கொண்டு இயன்றதைச் செய்ய நினைத்தார் . . உள்ளத் திண்மையால் உள்ளியது முடிக்கும் ஐடா ,
தமது வீட்டின் ஒரு சிறு அறையையே மருத்துவ மனையாக்க முனைந்தார் . ' அப்பொழுது ஐடா அம்மையாருக்கு வயது முப்பதே முடிந்திருந்தது . அனுபவம் அதிகம் பெற்றிராத ஐடா , தம்முடைய தந்தையாரின் உதவி யையும் எதிர்பார்த்துத்தான் இந்தியாவிற்கு வந்தார் .
அன்புத் தந்தையின் அறிவும் ஆற்றலும் தமக்கும் பயன்படும் என்ற நம்பிக்கையுடன் வந்த ஐடா , வேலூருக்கு வந்ததும் தந்தையார் உடல் நலம் கெட்டுப் படுக்கையில் கிடப்பது கண்டார் . இது அவருக்கு , ஓர் அதிர்ச்சியாகவே இருந்தது ; என்றாலும் இதனினும் பெரிய அதிர்ச்சி அவர்களை அரவணைக்க அதிக நாள் ஆகவில்லை .
ஐடா , வேலூருக்கு வந்த ஐந்தாம் மாதமே ஜான் ஸ்கடர் இயற்கை எய்தினார் . இலட்சக்கணக்கான மக்களின் இதயத்தை இவ்விழப்பு வருத்திற்று . தாம் மேற்கொண்ட பணியில் வெற்றி பெற , மரணப் படுக்கையில் இருந்தபோதும் அறிவுரை கூறிவந்த - ஆசானாகவும் , அரிய நண்பனாக வும் இருந்து உதவிய அன்புத் தந்தை - தம்மைப் பிரிந்ததால் ஐடா பட்ட வேதனை மிகப் பெரிது . நாட்கள் நகர நகர , ஐடா , தம்முடைய தந்தையார் தமக்கென விட்டுச் சென்ற அறிவுரைகளையே துணை யாகக்கொண்டு தனித்துப் பணியாற்றத் துணிந்தார் .
மெல்ல மெல்ல உள்ளத் தெளிவு பெற்றார் . இரண்டாம் ஜான் ஸ்கடரின் மறைவிற்குப் பின்னர் , மக்கள் ஐடாவிடம் உதவிபெறத் தயங்கினர் . தந்தையாருடன் சேர்ந்து ஐடா பணியாற்றிய நாட் களில் , அவர்தம் கைவன்மையைக் கண்டிருந்தும் மக்கள் அவரை நாடி உதவி பெற முன்வரவில்லை . ஐடா , சிறிது சிறிதாக அந்த மக்களுக்குத் தம் முடைய திறமையைக் காட்டி நம்பிக்கை ஊட்டினார் . விரைவில் ஐடா வெற்றி பெற்றார் . ' முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் ' என்பது உண்மையாயிற்று .
தனித்துத் தொழிலேற்ற ஐடா , இரண்டே ஆண்டுகளில் ஒரே படுக்கையும் ஒரே பணிப் பெண்ணும் ஒரே மருத்துவரும் கொண்ட அவ்வறையில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு மருத்துவம் செய்தார் என்னும் செய்தி யொன்றே ஐடா பெற்ற பெரும் வெற்றியை விளககும் . ஐடா , தந்தையைப் போலவே பிணியாளர் வீடுகளுக்கும் சென்று மருத்துவம் செய்துவந்தார் . ஆகவே , அந்த இரண்டாண்டுகளில் , ஐடாவின் பணி யால் அங்குப் பயனெய்தியவர்கள் பல்லாயிரவராவர் . ஐடா பணியேற்ற சில ஆண்டுகளிலேயே அறுவைச் சிகிச்சையும் மேற்கொண்டார் . அறுவைச் சிகிச்சையில் அவரை நிலைத்து நிற்கச் செய்த நிகழ்ச்சி ஒன்றுண்டு .
அவர் , தாம் முதன் முதலில் செய்ய ஒப்புக்கொண்ட அறுவைச் சிகிச்சையைத் தாமே பயிற்றுவித்த பணிப் பெண்ணின் உதவியுடன் செய்து முடித்தார் . அதன் முடிவு தெரியும் வரையிலும் ஐடா நிலைகொள்ளாது தவித்தார் . இறுதியில் , அது வெற்றி பெற்றதெண்ணிப் பெருமிதம் எய்தினார் ; பேருவகை கொண்டார் . ஐடாவின் தொழிலனுபவத்தில் முதலானதும் முக்கியத்துவம் வாய்ந்ததுமான அவ் வெற்றி மட்டும் கிடைக்காதிருந்தால் , ஐடா அறுவைச் சிகிச்சையில் மீண்டும் ஈடுபட் டிருப்பாரா என்பது ஐயத்திற்குரிய செய்தியாகும் . ஏனெனில் , அறுவை செய்துவிட்டு வெளியே வந்ததும் , ஐடா அம்மையார் , தம் அன்னையிடம் சென்று “ இது வெற்றி பெறாவிடில் நான் இனி இப் பணியில் ஈடுபடவே மாட்டேன் ; இது உறுதி ” என்று உணர்ச்சியுடன் தெரிவித்தாராம் .
இதை எண்ணிப் பார்ப்பவர் , இது ஐடாவிற்கு மட்டுமல்ல , வேலூருக்கே வாய்ந்த ஒரு வெற்றி , இந்தியாவிற்கே ஒரு வெற்றி என்று வெற்றிப்பண்பாட விரைவர் . ஐடா , துவக்கக் காலத்தில் மேற்கொண்ட அரிய பணிகளில் ' பிளேக் ' ' மை ' போன்ற கொடிய நோய்களை எதிர்த்துச் செய்த போராட்டமும் ஒன்றா கும் . பிளேக் நோய் எண்ணற்ற மக்களின் உயிரைப் பலிகொள்ளக் கண்ட மக்கள் , மாரியம்மையின் அருளை காடினரே அன்றி மருத்துவரின் அறிவுரை கேட்க முன்வரவில்லை .
நோய்க்கான அடிப்படைக் காரணங் களை உணர்ந்து , அவற்றைக் களைவதில் ஆர்வம் காட்டாத மக்கள் மாரியம்மைக்குத் தங்கள் மீது எக் காரணம் பற்றியோ ஏற்பட்ட சினத்தின் விளைவே அம்மை நோய் என்று நம்பினார்கள் .
மாரியம்மனுக்கு உயிர்ப்பலி கொடுத்து , ' உள்ளம் இரங்கிடு தாயே ' என்று உருகி வேண்டினார்கள் . " தெய்வத்தின் தாகம் தணிக்க 1,000 ஆட்டுக் கிடாய்களும் வெள்ளாடுகளும் , 1 , 500 கோழிகளும் பலியாக்கப்பட்டன " என்பன போன்ற செய்திகள் அந்நாள் ' மதறாஸ் மெயிலில் ' அன்றாடம் இடம் பெறுபவையாயின . நெஞ்சமுருக்கும்
இந் நிகழ்ச்சி களை நேரிலேயே கண்ட ஐடா நடுங்கினார் ; மனம் நைந்தார் . ஐடாவும் , வேறு சில மருத்துவர்களும் வீடு வீடாகச் சென்று வேண்டியவற்றைச் செய்யலானார்கள் . நோய்வாய்ப் பட்டோரை அழைத்துச் சென்று மருத்துவம் புரியும் நோக்கத்துடன் வந்த அந் நல்லோர்களைப் பல இடங்களிலும் ஏமாற்றமே எதிர் கொண்டழைத்தது . நோயாளிகளை வீட்டின் மறைவான இடங்களில் ஒளியச் செய்து , ' இங்கு நோயுடையோர் இல்லை ' என்று பொய்யுரை புகன்றனர் சிலர் . ' மக்களை மாய்த்திடும் மருந்து கொடுத்துப் பெருகி வரும் மக்கள் தொகையைக் குறைக்கும் வழி தேடுகிறது அரசாங்கம் ' என்று அவதூறு செய்தனர் பலர் . எனவே உதவி செய்யும் நோக்கத்துடன் அவர்கள் பல கிராமங்களுக்குச் சென்றபோது , அவை வெற்றிடங்களாய்க் காட்சி தந்தன . நகரசபை " உறுப்பினர் ஒருவரே , தம் குடும்பத்தினருக்கு நோயென்றதும் , முன்னறிவிப்பின்றி மெல்ல நழுவி விட்டார் . நகர மக்களுக்கு நல்லறிவு புகட்டும் நகர சபை உறுப்பினரின் நிலையே இப்படி என்றால் , மற்றவர்கள் நிலை எப்படியிருந்திருக்கும் என்பதை விளக்க வும் வேண்டுமோ ? -
தங்களுடைய தகாத செயலால் நோய் மேலும் , பரவ வழி செய்து தரும் மக்களைக் கண்டு மனம் வருந்தினாலும் , ஐடாவும் மற்றவர்களும் முயற்சியில் தளரவில்லை . மக்களுக்கு நோய் பரவாது தடுத்தற் குரிய நெறிகளை விளக்கினார்கள் . வீட்டைத் துப்புரவு செய்து தூய்மையோடிலங்கச் செய்திட வேண்டியது . அவசியம் என எடுத்துச் சொன்னார்கள் . தடுப்பு ஊசியின் பெருமையை உணர்த்த முயன்றார்கள் . இந்த மக்களின் மனத்தில் மெல்ல மெல்லத்தான் மாற்றம் ஏற்படுத்த முடியும் என்று அறிந்ததால் அவர்கள் அயராது உழைத்தார்கள் ; வெற்றியும் கண்டார்க ள் .
மருத்துவ மனையின் மலர்ச்சி
ஐடா அம்மையார் இந்தியாவிற்கு வந்து இரண் டாண்டுகளாயின . மருத்துவமனையை நிறுவும் ஏற்பாடுகள் அனைத்தும் ஒருவகையாய் முடிவுற்றன . அந்தப பணியில் மக்களுக்கு மருத்துவ உதவியளிக்க வசதிகள் செய்யப் படவில்லை . எனவே , ஐடா அம்மையார் ஷெல் மருத்துவ மனைக்கு வந்து உதவி பெற்றுச் செல்லும் ஆயிரமாயிரம் மக்களைக் கண்டு அமைதியடையாமல் , அத்தகுவாய்ப்பின்றி வருந்தும் கிராமத்து மக்களை எண்ணி அவதிப்பட்டார் . அவர்களுக்கும் உதவும் வழி குறித்துச் சிந்தனை செய்தார் . இறுதியாக , . மருத்துவம் செய்தற்குரிய வசதிகள் ஏதுமற்ற அக்கிராமங்களுக்குத் தாமும் , மற்ற மருத்துவர்களும் அடிக்கடி சென்று உதவி செய்து விட்டுத் திரும்ப வேண்டும் என்று முடிவு செய்தார் .
தம்முடைய கருத்தை மற்றவர்களுக்கும் தெரிவித்தார் . மற்றவர்கள் ஐடா அம்மையாரின் இயல்பை எண்ணி வியந் தார்கள் ; இதயங் கனிந்த ஒப்புதலையும் , ஒத்துழைப்பையும் தர உறுதி பூண்டார்கள் .
காட்டிய பெருமக்களும் , ஐடா வும் தங்கள் எண்ணம் ஈடேற இருப்பது எண்ணி இணையற்ற இன்ப மெய்தினர் . அவ் விரண்டாண்டுகளில் , ஐடா அம்மையார் இடம் பற்றாக் குறையால் , மருத்துவமனையைச் சிறிய அறையிலிருந்து , பெரிய " அறைக்கு மாற்றியும் , தேடி வரும் அனைவரின் தேவையையும் நிறைவேற்ற இயலாத நிலைமை நிலவக் கண்டு " வருந்தி யிருக்கின்றார் என்றால் , அவர்கள் புதிய மருத்துவ மனையைக் கட்டும் பணியில் காட்டிய ஆர்வம் எப்படிப் பட்டதாயிருக்கும் என்பதை உய்த்துணர " முடியுமன்றோ ?
திரு . ஷெல் அவர்களின அன்புத் தொகை 10 , 000 " டாலரும் , எண்ணற்ற மக்களின் தன்னலமற்ற உழைப் பும் , மருத்துவ மனையாக மலர்ந்தன . புதிய மருத்துவ நிலையம் , வேலூரிலுள்ள பெண்களுக்கும் , குழந்தை களுக்கும் உதவி செய்யும் பொருட்டு , 1902 இல் ' மேரி ' ' டேபர் ஷெல் மருத்துவமனை ' என்னும் பெயருடன் தோன்றியது .
பெண்களுக்கு உதவுவதே இம் மருத்துவ மனையின் முக்கிய நோக்கமாய் அமைந்தது . . மருத்துவமனை திறக்கப்பட்டுச் சிறிது காலம் ஆனதும் - அதற்கு வித்திட்ட பெருமையுடைய டாக்டர் லூயி ' ஹார்ட் அம்மையாரும் வேலூருக்கே வந்து சேர்ந்தார்கள் . ஐடா அம்மையார் , அவர்களை அன்புடன் வர வேற்றுப் பெருமைப் படுத்தினார் . விரைவில் இருவரும் சிறந்த நண்பர்கள் ஆயினர் . மருத்துவ மனையில் நாற்பது படுக்கைகள் இருந்தன . அறுவைச் சிகிச்சைக்கான வசதிகளுமிருந்தன . . ஜடா அம்மையாரையும் , ஹார்ட் அம்மையாரையும் தவிர வேறு சில மருத்துவர்களும் அங்குப் பணியாற்றலாயினர் . துவக்கக் காலத்திலேயே , இத்துணை வசதிகள் இடம் பெற்றிருந்தும் , ' அவையனைத்தும் போதுமானவையல்ல ' என்று சுட்டிக்காட்டும் வகையில் நூற்றுக்கணக்கான மக்கள் நாடோறும் அங்கு - வரலாயினர் . மருத்துவ மனைக்கு உள்ளும் , புறமும் எங்கும் நோயாளிகளின் கூட்டமே காணப்பட்டது . இதனால் வியப்பெய்திய ஐடா அம்மையார் , ஒரு நோயாளியை நோக்கி , " நீங்கள் ஏன் அரசினர் மருத்துவ மனைக்குச் செல்வதில்லை ? " என்று வினவி னார் .
அவரும் உடனே ' நாங்கள் பல நேரங்களில் அங்கும் செல்வதுண்டு ; எனினும் , எங்களிடம் இரக்கம் - காட்டி , அன்புரை பேசி உதவுபவர்கள் இங்கேதான் இருக்கின்றார்கள் . ஆகவே இங்கே வருகிறோம் " என்று தயங்காமல் விடையளித்தார் . அம்மனை பாமர மக்களின் உள்ளத்தைத் தொடுமளவிற்கு ஓர் அன்பு நிலையமாக விளங்கியதை இச் செய்தி உணர்த்தும் . எம் . டி . ஷெல் மருத்துவமனைக்கு வரும் நோயாளி களில் , இடமும் நேரமும் இல்லை என்பதற்காக உதவி பெறாமல் திரும்பிச் சென்றவர் எவருமில்லை . இருக்கின்ற படுக்கைகளே போதாத நிலையில் , பின்னும் - வருபவர்களுக்குக் கட்டில்களுக்கு அடி யில் படுப்பதற் கேற்ற வசதிகள் செய்யப்பட்டன . இவ்வாறு , அங்கிருந்தோர் , தங்களின் இலட்சியப் பாதையில் எதிரிட்ட இடையூறுகளுக் கெல்லாம் ஈடு கொடுத்துப் பீடுநடை போட்டனர் .
பலரும் பாராட்டப் பணிபுரிந்து வந்த அம் மருத்துவ மனையின் வளர்ச்சி கண்டு , ஐடா அம்மை யார் மற்றவர்களைப் போல் மன நிறைவு பெறவில்லை . வேலூரைச் சுற்றியுள்ள சிறிய கிராமங்களில் உள்ள மக்களுக்கு மருத்துவ உதவியளிக்க வசதிகள் செய்யப் படவில்லை . எனவே , ஐடா அம்மையார் ஷெல் மருத்துவ மனைக்கு வந்து உதவி பெற்றுச் செல்லும் ஆயிரமாயிரம் மக்களைக் கண்டு அமைதியடையாமல் , அத்தகு வாய்ப்பின்றி வருந்தும் கிராமத்து மக்களை எண்ணி அவதிப்பட்டார் .
அவர்களுக்கும் உதவும் வழி குறித்துச் சிந்தனை செய்தார் . இறுதியாக , . மருத்துவம் செய்தற்குரிய வசதிகள் ஏதுமற்ற அக்கிராமங்களுக்குத் தாமும் , மற்ற மருத்துவர்களும் அடிக்கடி சென்று உதவி செய்து விட்டுத் திரும்ப வேண்டும் என்று முடிவு செய்தார் . தம்முடைய கருத்தை மற்றவர்களுக்கும் தெரிவித்தார் . மற்ற வர்கள் ஐடா அம்மையாரின் இயல்பை எண்ணி வியந் தார்கள் ; இதயங் கனிந்த ஒப்புதலையும் , ஒத்துழைப் பையும் தர உறுதி பூண்டார்கள் .
இந்தியாவின் இதயமே கிராமங்கள் தாம் . இந்த இதயம் கெட்டு விட்டால் , உயிரோட்ட மேது ? - - இந்த உண்மையைப் பலரும் உணர்ந்தே இருக்கின்றார்கள் ; எனினும் , அவற்றின் வளர்ச்சியில் அக்கறை காட்டத் தயங்குகிறார்கள் . இந்தத் தவற்றைக் கண்டித்த காந்தி யடிகள் விரைவில் இங்கு ' கிராம அரசு ' தோன்ற வேண்டும் என்று விரும்பினார் . அந்தப் பணிக்கு , அனைவரையும் அழைத்திடவும் செய்தார் .
பெண்மணிகள் மருத்துவர்களாம் " என்று வியப்போடு சொல்ல , இச் செய்தி கிராமத்தில் பரவ அதிக நேரம் தேவைப்பட வில்லை . பிறகு , அவர்கள் வரும் நாட்களை ஆவலோடு எதிர்பார்க்கலாயினர் அம்மக்கள் . ஐடா அம்மையாரும் மற்றவர்களும் குறிப்பிட்ட நாட்களில் , குறிப்பிட்ட ஊர்களுக்குச் செல்லலாயினர் . இடையில் குறுக்கிட்ட இன்னல்கள் பல .
குறிப்பாக , போக்குவரவு வசதிகள் இல்லாத நிலைமை அவர் களுக்குப் பெரும் தொல்லையாயிருந்தது . இரயில் வண்டிப் பாதைகள் கிராமங்களில் இல்லை . அவர்களிடம் மோட்டார் வண்டியும் இல்லை . இந்நிலையில் பலகல் தொலைவில் உள்ள கிராமங் - - களுக்குச் செல்வதில் அவர்கள் பட்ட துன்பங்கள் எண்ணற்றவை . எடுத்துக் காட்டாக , வேலூரி லிருந்து இருபத்து நான்கு கல் தொலைவிலிருந்த குடியாத்தம் என்னுமிடத்திற்குச் செல்ல அவர்கள் பட்ட தொல்லைகள் -
வேலூரிலிருந்து காட்பாடி இரயில்வே நிலையத்திற்கு வண்டியில் சென்று , அங்கிருந்து இருபது கல் தொலைவை இரயில் மூலம் - - கடந்து , பின்னர் ஊருக்குள் செல்லக் குதிரை வண்டி யொன்றைப் பயன் படுத்திக் கொள்ள வேண்டும் . இவ்வாறு சென்று பணியாற்றத் துணி வது எளிதான செயல் அல்ல யென்பதை எவரே மறுப்பர் ? அண்மையில் உள்ள இடங்களுக்கு மட்டுமன்றி , சேய்மையிலுள்ள கிராமங்களுக்கும் ஐடா அம்மையார் சென்று உதவலானார் . - வேலூரிலிருந்து வடமேற்காக அறுபத்தைந்து கல்பாலைவில் உள்ள புங்கனு போன்ற கிசுகளும் ஐடாவின் பணியால் பயன்பெற்றன . இந்த ' வெள்ளைக்காரப் பெண்களை ' ஏற்றி வரும் வண்டியைக் கண்ணுற்ற உடனேயே மக்கள் மகிழ்ச்சியால் ஆரவாரம் செய்வர் . வண்டி நிற்குமிடங்களில் வந்து திரளுவர் . கிராம மக்கள் , இப்படி வெள்ளம் போல் திரண்டு கூடும் காட்சியை சந்தை கூடும் நாட்களில் கூடக் காண்பதரிது " என்று , ஐடாவின் பணியை நேரில் கண்ட ஒருவர் பாராட்டிக் கூறியுள்ளார் .
தங்களுக் குண்டான நோயின் தன்மையை எடுத்துச் சொல்லும் ஆற்றல் கூடப் பெற்றிராத அவ்வெளியவர்களை , ஐடாவும் , மற்றவர்களும் அன்போடு அணைத்து , ஆறுதல் மொழி பேசி , மருந் தளிப்பர் . பல நாட்கள் தொடர்ந்து கவனிக்கப்படவேண்டிய நிலையிலுள்ளவர்களை வேலூர் மருத்துவ மனைக்கே அழைத்துச் செல்வர் . இந் நடமாடும் மருத்துவமனை தோன்றிய சில ஆண்டுகளிலேயே வளரலாயிற்று .
1907 இல் ஐடா அம்மையார் தம்முடைய திட்டங்களை நிறைவேற்றுவதற்குப் பொருளுதவி பெறக் கருதி அமெரிக்கா விற்குச் சென்றார் . அத்தருணத்தில் , லூயி ஹார்ட் அம்மையார் குடியாத்தத்தில் ஒரு சிறிய மருத்துவ மனையைக் கட்டி முடித்தார் . ஐடா அம்மையார் அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்குத் திரும்பியதும் , இந்த மருத்துவமனை மேலும் பெரிதாக்கப்பட்டது . மருத்துவ மனையின் அருகில் மருத்துவப் பணியாளர் ஒருவர் நிலையாகத் தங்க சிறு குடில் ஒன்றும் அமைக்கப்பட்டது .
மருத்துவ மனையை மேலும் பெரிதாகக் கட்டும் வேலை பொருளின்மையால்' நின்றது என்றாலும் , குடியாத்தத்தில் ஐடாவின் வேலை பெருமளவு குறைந்தது . ஐடா வராத நாட்களில் அங்குள்ள மருத்துவப் பணியாளரே மருந்துகள் தரவும் முடிந்தது . அமெரிக்காவிற்குச் சென்று திரும்பிய பிறகு , ஐடாவிற்கு மோட்டார் வண்டி ஒன்று அன்பளிப்பாக அனுப்பி வைக்கப்பட்டது . மோட்டார் வண்டி வந்த நாளை ஐடா மிகவும் முக்கியமான நன்னாளாகக் கருதினார் . அதனால் தான் 1909 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் நாள் , ' இன்று புதிய மோட்டார் வண்டி வந்து சேர்ந்தது ' என்று ஐடா பெரிய ஆங்கில எழுத்துக்களில் தமது நாட்குறிப்புப் புத்தகத்தில் குறித்து வைத்தார் . அந்தப் பகுதியில் முதன் முதலாகத் தோன்றிய அந்த மோட்டார் வண்டி ஐடாவின் வேலையை எளி தாக்கியது . அந்த வண்டி தந்த புதிய தொல்லைகளும் சாதாரணமானவை அல்ல . அந்த வண்டி எழுப்பிடும் பெரும் ஒலி கேட்டு , விவரம் அறியாத கிராம மக்கள் அச்சம் கொண்டனர் . வண்டி வரும் இடத்தருகே வரவும் அஞ்சினர் . அவர்கள் அச்சம் தெளியப் பல நாட்களாயின . சில நாட்களில் இந்த வண்டியும் பயனற்ற தாயிற்று . ஒருநாள் , ஐடா , வண்டி ஓடிக்கொண்டே இருக்கையில் , நோயாளி ஒருவனின் பல்லைப் பிடுங்கிக் கொண்டிருக்கக் கண்ட ஒருவர் வியப்போடு ஐடா விடம் ' வண்டியை நிறுத்திவிட்டுச் செய்யக் கூடாதா ? ' என்று கேட்க , ஐடா , ' பல்லைப் பிடுங்க வண்டியை நிறுத்திவிட்டால் மீண்டும் அதை இயக்குவிக்க முடியாதே ' என்று நிலைமையை விளக்கினாராம் . இந் நிகழ்ச்சி வேடிக்கையாகத் தோன்றினாலும் , அவர்கள் , அன்று மேற்கொண்ட செயலை நிறை வேற்றுவதில் இருந்த தொல்லைகளை விளக்கப் போது மானதாகும் . ஐடா அம்மையாரின் வண்டி வந்து நிற்குமிடங் களுக்கு , முன்னதாகவே வந்து , காத்திருந்து உதவி பெற்றுச் சென்றவர்களில் பலர் தொழுநோய்க்கு ஆளானவர்கள் . தொழு நோய்க்கு மருத்துவம் செய்யும் மருத்துவ மனைகள் தென்னிந்தியாவில் - ஏன் ? இந்தியா முழுவதிலுமே - அப்பொழுது அதிகம் இல்லை . இருந்த ஒன்றிரண்டும் சிறந்த வளர்ச்சி பெற்றிருக்கவில்லை . செங்கற்பட்டு மாவட்டத்தில் இருந்த ' லேடி வில்லிங்டன் தொழுநோய் நிவாரண நிலையம் ' இடமில்லாக் காரணம் காட்டி , எண்ணற்ற பிணியாளரைத் திருப்பி அனுப்பிற்று . இவ்வாறு தொழுநோயால் வருந்தியவர்கள் , மருத்துவம் செய்து கொள்ளவும் வழியறியாது விழித்த நேரத்தில் ,
ஐடா அம்மையாரின் ' நடமாடும் மருத்துவமனை ' செய்த உதவி , பெரும் பேருதவியாக அமைந்தது . நூற்றுக் கணக்கான மக்கள் நாள்தோறும் வந்து தொழு நோய் போக்கும் ஊசி போட்டுக்கொண்டு செல்வதைக் கண்டவர்கள் ஐடாவின் அரிய முயற்சியைப் பாராட்டும் வகையறியாமல் , விழித்தனர் . கிராமங் களின் வீதியோரங்களில் , ஐடா அம்மையார் நடத்திய இத் தொழு நோய் எதிர்ப்புப் போராட்டம் ' அவர் தம் வாழ்க்கையில் மேற்கொண்ட போராட் டங்கள் அனைத்தினும் தனிச் சிறப்புடையதாகும் .'
இந்நோய் வளர்ந்து விட்டால் , மருத்துவம் செய்வதாலும் கூடப் பயன் உண்டாகாது என்பது நிலைமை . எனவே இவற்றை வருமுன் தடுத்தலே சிறந்தது என்பதால் , அதற்கான வழிகளை எடுத்துரைக்கச் சொற்பொழிவுகள் நடத்தவும் ஐடா முடிவு செய்தார் . எலவம்பாடி போன்ற கிராமங்களில் இத்தகைய சொற்பொழிவுகள் நடை பெற்றன . இவற்றைக் கேட்டுப் பயன் பெற வெள்ளம் போல் வந்து திரண்டமக்களுக்கு நோய்க் கிருமிகள் , சுத்த மின்மையால் தான் பரவுகின்றன என்னும் உண்மை படங்களின் வாயிலாக விளக்கப்பட்டது . உணவு , உடை , உறைவிடம் , குடிநீர் அனைத்தும் தூய்மையோடிருப்பின் நோய்கள் நம்மை அணுகா என்றறியச் செய்தனர் . இவர்களுடைய கருத்துரைகளைக் கேட்ட நேரத்தில் எல்லாம் மக்கள் ' நோயற்ற வாழ்வு ' கிட்டி விட்டதாக எண்ணி மகிழ்ந்தார்கள் . இதன் மூலம் கிராமங்களில் வாழும் கல்வியற்ற பாமர மக்களுக்கு , அறிவொளி பரப்பும் வழிகாட்டிய பெருமை ஐடாவிற்கும் மற்றவர்களுக்கும் கிடைத்தது .
குடியாத்தத்தில் முடிவு பெறாமல் பாதியில் நின்ற கட்டிடம் , அமெரிக்க மக்களின் பொருளுதவியால் 1934 இல் முழு உருப் பெற்றது . இதற்குப் பிறகே , ஐடா அம்மையாருடைய ' நடமாடும் மருத்துவமனை ' யின் வேலை குறைந்தது . அன்றுவரை அதன் மூலம் அவர்கள் செய்த உதவி யால் நன்மை பெற்று மகிழ்ந் தவர்கள் பலர் . ஐடாவின் கிராமத் தொண்டு அனைவராலும் பாராட்டப்பட்டது . அப்பொழுது மசாச்சுசெட்1 ஸில் 1 . Massachuse இருந்த ஆம் ஹெர்ஸ்ட்1 விவசாயக் கல்லூரியின் தலைவராகவும் , கிராமப் பிரச்சனைகள் குறித்து ஆலோசிக்கும் பொறுப்பேற்றவராகவும் இருந்த கென்யன் எல் - பட்டர் பீல்டு2 என்பவர் ,
வேலூரைச் சுற்றியுள்ள கிராமங்களின் நிலைமையைப் பற்றி ' ஆராய்ந்து வந்த நேரத்தில் , ஐடா அம்மையாரின் செயல் அவரைப் பெரிதும் கவர்ந்தது . ஐடா அம்மை - யாரின் தலைமையில் அக் கிராமங்களில் ஆற்றப்பட்டு வந்த பணியைப் பலபடப் பாராட்டிய அவர் ' ஐடா ஸ்கடர் கிராம மக்களுக்குச் செய்யும் பணியால் நான் பெரிதும் ஈர்க்கப்பட்டேன் ; நான் இதுவரை கண்ட வற்றுள் , திட்டமிட்டுச் செய்யப்பட்ட சிறந்த பலன் தரும் செயல் இதுவென் றெண்ணுகிறேன் ' என்று கூறியிருக்கின்றார் .
ஐடாவின் முயற்சி , இன்றைக்கு மேலும் விரி வடைந்திருக்கின்றது . மருத்துவக் கல்லூரிமாணவர் " கள் இப்பொழுது , ஐடா அன்று மேற்கொண்ட அதே பணியை ஆர்வத்துடன் செய்துவருகின்றனர் . வேலூருடன் தொடர்புடைய மருத்துவ நிலையங்கள் இன்று பல கிராமங்களில் ஏற்படுத்தப்பட் டிருக்கின் றன . கிராம மக்கள் பிணியில்லாப் பெருவாழ்வு வாழ இவை ஆற்றிவரும் தொண்டு பெருந் தொண்டாகும் . தொழுநோயாளருக்கு உதவும் நிலையங்களும் சில கிராமங்களில் உள்ளன . 1957 இல் மருத்துவக் கல்லூரி அமைந்திருக்கும் கல்லூரிக் குன்றுகளில் , ' கிராமிய மருத்துவ நல நிலையம் ' ஒன்று துவக்கப்பட்டது . இதனுடைய முக்கிய நோக்கம் , மாணவர்களை , கிராமப் பிரச்சனைகளில் - குறிப்பாக மருத்துவம் , கல்வி பற்றிய ஜனங்களில் - ஆர்வம் கொள்ளச் செய்வதும் , அவைகளுக்குத் தீர்வு காண்பதற்கான பயிற்சி நடக்க செய்வதுமேயாகும் . இவ்வமைப்பின் வாயிலாகவே இன்று மருத்துவக் கல்லூரி மாணவர்கள் , வைத்தத் தொண்டைப் பாராட்டும் வகையில் பணியாற்றி வருகின்றனர் . இந் நாட்களில் , வேலூரில் இடம்பெற்ற இன்றியமையாத சிறப்புடைய நிகழ்ச்சிகளில் , கெர்ட்ரூட் ' டாட் அம்மையார் அவர்களின் வருகையும் ஒன்றாகும் . டாட் அம்மையாரைப் பற்றி முன்னமேயே குறிப்பிட எடுத்துள்ளோம் . ஹாரியட் டேபர் அம்மையார் அவர்கள் தலைமைப் பொறுப்பேற்று நடத்திவந்த கோட்பாட்டுடையோர் சங்கத்தில் உரையாற்றிய போது ஐடா அம்மையாருக்கு அவர் தம் அறிமுகம் ஏற்பட்டது என்று கண்டோம்
ஐடா அம்மையாரின் உரை கேட்டுத் தாமும் இந்தியப் பெண்களின் இன்பவாழ் விற்காக இயன்றதைச் செய்ய வேண்டும் என்று முடிவு செய்த பலரில் டாட் அம்மையாரும் ஒருவர் . அமெரிக்காவை விட்டு இந்தியாவிற்குச் சென்று , அங்கேயே நிலையாகத் தங்கித் தொண்டாற்ற வேண் டும் என்று அவர் விரும்பினாலும் , அவரால் உடனே விரும்பிய வண்ணம் செய்ய முடியவில்லை ; ஆயினும் , சில நாட்களேனும் தங்கி , இங்குள்ள நிலைமையைக் கண்டறிய வேண்டும் என்னும் ஆவல் ஏற்பட்டது . அதன்படி , இந்தியாவிற்கு வருகை தந்தார் . டாட் அம்மையார் , ஐடா அம்மையாருடன் வேலூரையும் , சுற்றியுள்ள கிராமங்களையும் பார்வை வோர் பத்துப்பேர் ; நாம் செல்லும் ஒவ்வொரு கிரா மத்திலும் , நம்மால் பார்க்கவும் முடியாமல் விடப்படு வோர் நூற்றுக்கணக்கானவர் . இதற்குக் காரணம் நம்மிடம் போதுமான மருத்துவர்களும் , பணியாளர் களும் இல்லாக் குறையே ' என்று ஐடா அடிக்கடி கூறுவார் . இக் குறை நீக்கப்பட வேண்டுமானால் , இந்தியப் பெண்களுக்கு உரிய கல்வியும் , பயிற்சியும் தரப்படல் வேண்டும் என்றும் ஐடா நம்பினார் . மகளிர்க்கு மருத்துவப் பணியாளர் பயிற்சி தர , துவக்கக் காலத்தில் முறையான கல்வித் திட்டம் ஏது மில்லை . ஐடா தாம் சிகிச்சை செய்யும் பொழுது உடன் வைத்துக்கொண்டு பழக்கிய சிலரைத் தவிர , லிலியன் ஹார்ட் என்னும் அம்மையார் சில பெண் களைத் தயார் செய்து உதவினார் .
1907 ஆம் ஆண்டு அமெரிக்காவிற்குச் சென்ற ஐடா , மருத்துவப் பணியாளர் பயிற்சிப் பள்ளிக்குப் பொருளுதவி திரட்டினார் . அமெரிக்கக் கோட்பாடு டையோர் குழு , டிலியா ஹௌடன் என்னும் அம்மையாரைப் பள்ளியில் பயிற்சி தருவதற்கென்று தேர்ந் தெடுத்து அனுப்பியது . ஹௌடன் அம்மையார் இந்தியாவிற்கு வந்ததும் , முறையான கல்வித் திட்ட மும் , பயிற்சித் திட்டமும் இடம் பெற்றன . அப்பொழுது , இப் பள்ளியில் சேர முன்வந்தவர்கள் மூன்றே பெண்கள் . மருத்துவக் கல்வி கற்பிக்க ஒருவர் , பயிற்சி தரும் ஆசிரியர் ஒருவர் , மாணவியர் மூவர் என்னும் நிலையில் துவக்கப்பட்ட இப் பள்ளி யில் , அவ் வாண்டின் இறுதியில் பதினைந்து பெண்கள் சேர்ந்து பயிற்சி பெற்று வந்தனர் என்னும் செய்தி வியப்பூட்டக் கூடியது . இப் பள்ளியில் சேர விரும்பும் பெண்கள் இரண்டாம் படிவம் வரை படித்திருத்தல் வேண்டும் என்றும் வரையறுக்கப்பட்டது . நாட்கள் நகர நகர , மக்களின் எண்ணத்திலும் பரட்சி தோன்றியது . பெண் கல்வியில் ஆர்வம் காட்ட ஆரம்பித்த மக்கள் , மருத்துவப் பணியாளர் பயிற்சிக்கும் பெண்களை அனுப்ப முன்வந்தனர் .
அதனால் , 1932 இல் பள்ளிக்கூட அமைப்பு முறை யில் மாற்ற மேற்பட்டது . பத்தாம் வகுப்பு வரை படித்து முடித்தவர்களே மருத்துவப் பணிப் பெண்களாவதற்குத் தகுதியுடையவர்கள் என்ற புதியதோர் விதி வகுக்கப்பட்டது . விரிவான பயிற்சி முறையும் இடம் பெற்றது . இப் பள்ளியின் பணியைப் பலபடப் பாராட்டிய நல்லோர் , இதன் வளர்ச்சிக்குப் பொருளுதவி செய்ய லாயினர் . அவர்களில் குறிப்பிடத்தக்கவர் பிலிப்ரௌன் என்னும் பெரியார் ஆவர் . அமெரிக்காவில் இருந்த தம் அன்பு மகளுக்குத் திருமணப் பரிசாக ,
4 பணிப் பெண்கள் இல்லம் ' ஒன்றை அவர் அளித்தார் . தம் தந்தை யளித்த மணப் பரிசுகாண , அமெரிக்காவை விட்டு விட்டு அப்பெண் இங்கு வர இயலாதென்றாலும் , அது எண்ணற்ற பேர்களின் இன்னலைப் போக்கப் பயன்படுகின்றது என்னும் நினைவே இன்ப மூட்டும் என்று அத்தந்தை கருதியதிலும் வியப்பில்லையே ! இப் பள்ளிக்கென்று உதவப்பட்ட மருத்துவப் பணிப் பெண்கள் இல்லம் , அவர்களுக்கு உடனே பயன் தரவில்லை . ஏனென்றால் , அப்பொழுதுதான் வளரும் பருவத்திலிருந்தமஜடாவின் மருத்துவப் பள்ளிக்கும் இடம் தேவையாக இருந்தது . எனவே மருத்துவப் பள்ளி மாணவியர் , அவர்களுக்கென்று கட்டப்பெற்ற கல்லூரிக் குன்றுகளில் அமைந்த கட்டிடத்திற்குச் சென்ற பிறகுதான் , மருத்துவப் பணிப் பெண்கள் , இவ் வில்லத்தை உரிமையாக்கிக் கொள்ள முடிந்தது . விரைவில் , பிலிப்ரௌன் அவர்கள் அளித்த கட்டிடத்தில் பல மாறுதல்களைச் செய்து , இடம் பற்றாக் குறையைப் போக்க முயன்ற கல்வித் திட்டம் மாறியது ; பட்டப் படிப்பு இடம் பெற்றது . மருத்துவப் பணிப் பெண்கள் , மற்றத் துறையில் கற்பவர்களைப் போல் , பி . எஸ் . சி . பட்டம் பெற முடிந்தது ,
இப் பட்டம் பெற்று , இதற்குரிய உடையும் , தலை அணியும் அணியும் உரிமை பெற்ற முதல் பெண்கள் இந்தியா முழுவதிலும் வேலூரில் பயின்ற எழுவரேயாவர் . இவ்வாறு , வேலூர்ப் பெண்களுக்கு முதலிடம் பெற்றுத் தந்து , முன்னேற் றப் பாதைக்கு வழிகாட்டிய ஐடா அம்மையாருக்குத் தம்முடைய நன்றிப்பெருக்கை உணர்த்தும் வழியறி யாமல் விழித்தது வேலூர் இதற்கும் முன்னால் , பலரும் மருத்துவப் பணியா ளரைப் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களைத் தயார் செய் யத் திட்டம் ஒன்று செயல்படல் வேண்டும் என்று விழைந்தனர் . அதன்படியே ஐடா அம்மையார் , பெரிதும் முயன்று , ஆசிரியர்களைப் பயிற்றுவிக்கும் திட்டம் ஒன்றைக் கொண்டு வந்தார் .
1945 முதல் இதை “ ஸிஸ்டர் டியூடர் ” படிப்பு என்று கூறலாயினர் . இதன் மூலம் , எங்கெங்கோ உள்ள மருத்துவப் பணியாளர் பயிற்சிப் பள்ளிக்குத் தகுதிவாய்ந்த ஆசிரியர்களை அனுப்புவது எளிதான செயலாயிற்று . எனவேதான் , இவர்கள் பாரெங்கும் போற்றப்படுகின்றனர் . |
மருத்துவக் கல்லூரி 1913 ஆம் ஆண்டு ஹாலந்தில் கூடிய பல நாடு - களின் கோட்பாடுடையோர் குழு ( பெண்களையே கொண்டது ) இந்தியாவில் பெண்களுக்கான கிறித்துவக் கல்லூரி ஒன்றை அமைப்பது குறித்துத் தீவிர - மாகச் சிந்தித்தது . நீண்ட நேரக் கலந்துரையாடலுக்குப் பிறகு , மகளிர்க்கான கிறித்துவக் கலைக் - கல்லூரியை நிறுவச் சென்னை மாநிலம் ஏற்றதா என்று அறிந்து கருத்துத் தெரிவிக்க அமெரிக்கப் - பிரதிநிதியான ஹென்ரி பீபாடி எனனும அன்ரி பீபாடி என்னும் அம்மையார் தேர்ந்தெடுக்கப்பட்டார் . இந்தியாவிற்கு வந்த பீபாடி அம்மையார் , வேலூரையும் ஐடா ஸ்கடரையும் கண்டு மகிழ விரும்பினார் .
வேலூர் மருத்துவ மனையில் ஐடாவைச் சந்தித்தார் . சிலமணிநேர உரையாடலுக்குப் பிறகு ஐடா , " சென்னையில் பெண்களுக்கென ஒரு கலைக் கல்லூரி நிறுவுவதில் உள்ள ஆர்வம் பற்றி அறிவேன் . ஆனால் , - - நான் விரும்புவது , வேலூரில் பெண்களுக்கென்று ஒரு மருத்துவக் கல்லூரி தோற்றுவிக்கப்பட வேண் டும் என்பதே " என்றார் . அதற்கான அவசியத்தையும் , போதுமான இந்தியப் பெண் மருத்துவர்கள் இல்லாமையால் ஏற்படும் தொல்லைகளையும் எடுத்து விளக்கினார் . -' ஆண்டுக் கணக்கில் தம் முள்ளத்தில் புதைந்து கிடந்த ஆவலை
ஐடா வெளியிட்டபோது , பீபாடி அம்மையார் அமைதியாக இருந்தார் . அவர் இந்தியப் பெண்களின் அவல நிலைமையை உணர்ந்துகொண்ட தாகவோ , இந்தியப் பெண்கள் தாங்களே மருத்துவத் தொழில் பயில வேண்டியதன் அவசியத்தைப் போற்றியதாகவோ ஐடாவிற்குத் தோன்றவில்லை . .
அதனால் , ஐடாவின் உள்ளம் புண்பட்டது . மேலும் பேசுவதற்குத் துணிவு இல்லாத போதிலும் , ஐடா , . பீபாடி அம்மையார் தம்மைவிட்டுப் பிரிவதற்கு முன் ஏதேனும் செய்தே தீர வேண்டும் என்று திட்டமிட்ட வராய் அவரை மெல்ல அணுகினார் . நகர்ப்புறத்தே உள்ள அழகிய குன்றுகளையும் , பள்ளத்தாக்கையும் - பார்வையிட்டு விட்டுச் செல்லுமாறு வேண்டினார் . ஐடாவும் , பீபாடி அம்மையாரும் , பீபாடி அம்மை - யாருடன் வந்திருந்த வேறொரு பெண்மணியும் நகர்ப் புறத்தை அடைந்தனர் . ' குன்றுகள் மீதேறிப் பார்க்கலாமே ' என்று ஐடா சொல்ல , மற்ற இருவரும் உடனே ஏற ஆரம்பித்தனர் . குன்றின் மீதேறியதும் , ஐடா சுற்றியுள்ள பள்ளத்தாக்கைச் சுட்டிக் காட்டி " இருநூறு ஏக்கர் பரப்புள்ள இந்த நிலம் ஆடு மாடுகள் தவிர்த்து வேறு எவர்க்கும் பயன்படுவதில்லை ” என்று கூறினார் . ஐடா மேலும் ஏதோ சொல்லக் கருதினார் . ஆயினும் , தம் முள்ளத்தில் எழுந்த எண்ணம் , பீபாடி அம் மையாருக்கும் உண்டாகின்றதா என்று பார்க்க விரும்பியவராய் , பீபாடி அம்மையாரே பேச்சைத் : தொடங்கட்டும் என்ற பொறுத்திருந்தார் .
பீபாடி பேசத் தொடங்கினார் : " தண்ணீர் வசதி உண்டா ? ” – பீபாடி அம்மை பாரின் முதல் கேள்வி . " தண்ணீரா ? " - ஜடா தயங்கித் தயங்கிக் கேட் டார் . " தண்ணீர் இல்லையானால் பாலைவனம் என் றல்லவா பொருள் ? இந்த இரு . நூறு ஏக்கராவிற்கும் தண்ணீர் கிடைக்குமா ? " " அருகிலிருக்கும் கிராமத்து மக்களுடன் பேசியிருக்கிறேன் ; அவர்கள் அங்கொரு ஊற்று இருப்ப தாகச் சொல்லுகின்றனர் . " - ஐடா விடை தந்தார் . " அப்படியெனில் எனக்கொரு எண்ணம் எழுகின்றது " - பீபாடி பெரும் உற்சாகத்துடன் பேசத் தொடங்கினார் . ஜடா வினாக்குறியை விழிகளில் நிறுத்தி , பீபாடியையே உற்றுப் பார்த்தார் . ' ' அந்தப் பிரச்சனையைப் பற்றி நாள் முழுவதும் சிந்தித்தேன் ; இப்பொழுதுதான் வழி புலப்பட்டது . அதுதான் , நீங்கள் காலையில் குறிப்பிட்ட மருத்து வக் கல்லூரியைத் துவங்கும் செயல் . " காலையில் தான் நிலை ையை விளக்கியபொழுது - உம் ' மென்று இருந்த பெண்மணி , இப்பொழுது < உற்சாகத்துடன் பேசுகிறார் . ஐடாவின் வியப்பு வினாடிக்கு வினாடி அதிகமாயிற்று . பீபாடி தொடர்ந்தார் : ' ' டாக்டர் ஸ்கடர் ! நீங் கள் தான் அதை ஆரம்பிப்பவர்களாக இருக்க வேண்டும் . நீங்கள் அந்தக் கல்லூரியை நிறுவப் போகின்றீர்கள் . அந்தக் கல்லூரியை இந்த இடத் தில் - இதே பள்ளத்தாக்கில் - கட்டப் போகின்றீர் - கள் . " " ஆனால் - ' அவசரப்பட்டு , ஆனால் ' என்று சொல்லாதீர் கள் , டாக்டர் ஸ்கடர் ! நீங்களும் , நானும் ஒன்று சேர்ந்தால் நாம் பெரிய மலைகளையும் புரட்டிவிடுவோம் என்று நம்புகிறேன் . உண்மைதானே ? " - பீபாடியின் குரலில் நம்பிக்கை தொனித்தது . ' ' ஆம் - " ஐடாவின் குரலில் அமைதி . ஆனால் அழுத்த மிருந்தது . . . பீபாடியும் , மற்றவர்களும் ஐடாவிடம் விடை பெற்றுக் கொண்டனர் . " அமெரிக்காவிலும் , பிரிட்ட னிலும் உள்ள ஆயிரக் கணக்கான பெண்களின் உதவியை நாம் நிறுவ இருக்கும் பெண்கள் கல்லூரிக் குப் பெறுவோம் . எண்ணியதைச் செயலாக்கு வோம் ” - பீபாடி அம்மையார் உறுதியாகச் சொல்லி விட்டுத்தான் விடைபெற்றுக் கொண்டார் . ஐடா விரைவிலேயே ஐக்கியக் கோட்பாடுடை ( யோர் மருத்துவப் பள்ளி என்கிற பெயரில் அந்த இருநூறு ஏக்கர் நிலப் பரப்பையும் பதிவு செய்தார் . ஆனால் , ஆற்காடு கோட்பாடுடையோர் கூட்டத்தில் , அந்த இடத்தில் கல்லூரி நிறுவத் தடை எழுப்பப்பட் டது . ஆனால் , ஐடா விரைவிலேயே வெற்றி பெற் றார் . மருத்துவக் கல்லூரி பற்றி முடிவு செய்ய ஏற் படுத்தப்பட்ட தென்னிந்திய மருத்துவக் கோட்பா டுடையோர் குழு , ஐடா தே ்ந்தெடுத்த இடமே கல்லூரி நிறுவுவதற்கு ஏற்ற இடம் என்று தெரிவித்தது . அர சினரின் ஒப்புதலும் கிடைத்தது . ஐடாவின் உள்ளம் உவகையுற்றது . " நம்மிடம் திட்டங்கள் உள்ளன ; அரசினரின் இசைவும் கிடைத்துவிட்டது . நிலமிருக்கிறது ; நினைப் பது நிறைவேற நெடுங் லைவு இல்லை " - ஐடா தம் அன்னையிடம் விவரித்துக் கூறினார் . அன்னையோ குறுக்கிட்டு , " கல்லூரிக் கட்டிடம் நிறுவத் தேவைப்படும் பத்து இலட்சம் டாலரைத தவிர ' ' என்று தம் மகளைத் திருத்தினார் . ' ' விரைவில் நாம் வேண்டும் பொருளைப் பெறு வோம் " என்று ஐடா நம்பிக்கையுடன் சொன்னார் . ஆனால் , ஐடா நினைத்தது போல் பொருளுதவி கிடைப்பது எளிதாக இல்லை . 1914 இல் அமெரிக்கா விற்குச் சென்றிருந்த ஐடா எதிர்பார்த்த உதவியைப் பெற முடியாமல் திரும்பி வந்ததைப் போலவே , மற்ற வர்களும் சென்ற இடமெல்லாம் தோல்வியையே கண்டனர் . பீபாடி அம்மையாராலும் பெருமளவு பொருள் திரட்ட முடியவில்லை . முதல் உலகப் பெரும் போர் நடை பெற்றுக் கொண்டிருந்த சமயம் என்பதே பொருளுதவி கிடைக்காததற்குக் காரணம் . ' ' எத்தனை ஆண்டுகள் தான் பொருள் வரட்டும் என்று பொறுமையோடு காத்திருக்க வேண்டும் ? " ஐடா அமைதியின்றித் தவித்தார் . ' ' நாம் வேலையைத் தொடங்குவோம் ; பொருள் கிடைக்கும்பொழுது கிடைக்கட்டும் " - என்னும் முடி வடன் ஐடா , சென்னை மாநில மருத்துவத் துறைத் தலைமை அதிகாரியான கர்னல் பிரிசன் என்பவரை அடைந்தார் . நிலைமையை அவரிடம் விளக்கி , இந்தி ' யப் பெண்களுக்கு மருத்துவத் தொழிலில் பயிற்சிதர அனுமதி தருமாறு வேண்டினார் . அதிகாரி வினாக்களை அடுக்கித் தொடுத்தார் . கர்னல் பிரிசன் : " மருத்துவக் கல்லூரியா துவக்கப் போகிறீர்கள் ? " ஜடா : " மருத்துவக் கல்லூரியல்ல ; அதற்கான தகுதிகளைப் பெற சில ஆண்டுகள் ஆகும் . ஆனால் , நான் விரும்புவது அனுமதி வழங்கப்பட்ட மருத்துவத் தொழில் பயிற்சியாளர் ' படிப்புக்கு மாணவிகளைச் சேர்க்க அனுமதியே யாகும் . இந்தப் படிப்புக்குப் பிறகு சான்றிதழ் 2 மட்டுமே வழங்கப் பெறும் . பட்டம் அளிக்கப்பட மாட் டாது . " பிரிசன் : " கட்டிடம் இருக்கிறதா ? " ஐடா : " விரைவில் பெறுவோம் . ஆனால் , அதற்குள் மருத்துவ மனையின் அருகே ஒரு கட்டிடத்தை வாடகைக்கு எடுத்துக் கொள்ளப் போகிறோம் . " பிரிசன் : " கையில் பொருள் இல்லை ; அல்லவா ? " ஐடா : ' ' திரட்டிக்கொண் டிருக்கிறோம் . " பிரிசன் : " ஆசிரியர்கள் - ' ' ஐடா : “ முதலாண்டு மாணவியருக்கு நானே எல்லாப் பாடமும் கற்பிக்க முடியும் . என்னுடைய உதவி யாளர் உடற்கூற்றுக் கலையை ' ( Anatomy ) க் கற்பிப்பதில் உதவி செய்வார்கள் . மாணவியர் இரசாயனம் கற்க ஊரிஸ் கல்லூரியில் ஏற்பாடு கள் செய்வேன் . அடுத்த ஆண்டு , ஆசிரியர் எண்ணிக்கையை அதிகமாக்கி விட முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு . " ஐடா அம தியாக அளித்த விடைகளைக் கேட்டு கர்னல் பிரிசன் வியப்படைந்தார் . " கட்டிடம் இல்லை ; பொருள் இல்லை ; ஆசிரியர் கள் இல்லை . ஆனால் , இந்தியப் பெண்களுக்கென மருத்துவப் பள்ளி தொடங்குவதற்கு மட்டும் இசைவு கேட்கின்றீர்கள் . டாக்டர் ஸ்கடர் ! இது ஒரு வேடிக்கையான விளையாட்டு ; இல்லையென்றால் மிகப் பெரிய வீரச் செயல் என்று தான் சொல்ல வேண்டும் " - - தமது கருத்தைத் தயங்காமல் உரைத்தார் அவ்வத காரி . ஐடா சோர்ந்து விடவில்லை ; தொடர்ந்து விவா தித்தார் ; வெற்றி பெற்றார் . கர்னல் பிரிசன் , ' ' மருத்துவப் பள்ளியில் சேர மூன்று பெண்கள் கூட விண்ணப்பம் அனுப்ப மாட் டார்கள் . ஆயினும் , தாங்கள் முயன்று ஆறு விண் ணப்பங்கள் பெற முடியுமென்றால் , மருத்துவப் பள்ளி யைத் தங்கள் வி ருப்பப்படித் தொடங்கலாம் " என்று ஐடாவிடம் தெரிவித்தார் . ஐடா , கர்னல் பிரிசனுக்கு நன்றி தெரிவித்து விட்டுச் சென்ற வினாடி முதல் , முழு முயற்சியுடன் மருத்துவப் பள்ளி தொடங்கும் வேலையில் ஈடுபட்டார் . மருத்துவப் பள்ளி பற்றிய அறிவிப்பு வெளியாகியது . சில நாட்களே சென்றன . ஐடாவே வியப்படையும் வகையில் நூற்றைம்பதுக்குமேல் விண்ணப்பங்கள் வந்து குவிந்தன . மருத்துவப் பள்ளியில் சேர மகளிர் முன் வருவார்களா என்றஞ்சிய நிலையகன்று , நூற் றைம்பதுக்கும் மேற்பட்டவரில் எவரைத் தேர்ந் தெடுப்பது என்று குழம்பும் நிலை ஏற்பட்டது . இறுதியாக எல்லாத் தகுதியும் பெற்ற பதினேழு பெண்கள் , புதிய மருத்துவப் பள்ளியில் எல் . எம் . பி . சான்றிதழ் படிப்பு படிப்பதற்குத் தேர்ந்தெடுக்கப் பட்டனர் . பள்ளிக்கூடத்திற்கெனச் சொந்தக் கட்டி டம் எதுவுமில்லை . அதனால் , ஐடா - தேர்ந்தெடுத் கிருந்த வாடகைக் கட்டிடம் ஒன்றே பள்ளிக்கூடத் தின் தேவையை நிறைவு செய்வதாயிற்று . பரிசோதனைகள் நடத்தச் சிறிய கொட்டகை ஒன்றும் அமைக்கப்பட்டது . இரசாயனம் கற்க , மாணவியரை அருகிலிருந்த ஊரிஸ் கல்லூரிக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது . இவ் வேற்பாடுகள் முடிந்ததும் , 1918 ஆம் ஆண் டில் ஐடா , பென்ட்லண்ட் பிரபுவை ' அழைத்துப் பள்ளிக்கூடத்தின் திறப்பு விழாவைக் கொண்டாடி னார் . விரைவில் , மருத்துவப் பணியாளர் பயிற்சிக் கென பிலிப்ரௌன் அவர்கள் வழங்கிய இல்லம் , வாடகைக் கட்டிடத்தின் இடத்தை ஏற்றுக் கொண் எண்ணிய வண்ணம் மருத்துவப் பள்ளியை நிறுவியபின் , ஐடா அம்மையார் எல்லாப் பாடங்களை * யும் தாமே பயிற்றுவிக்கவும் முன்வந்தார் . அப் பொழுது இருந்த கல்வித் திட்டமோ , ஐடா அம்மை யார் படித்த நாளில் இருந்ததற்கு முற்றிலும் வேறு பட் டிருந்தது . எனவே , ஐடா அவர்களுக்கு ஆசிரிய ராவதென்பது - குறிப்பாக , ' அனாடமி ' ஆசிரியராவ தென்பது – அத்துணை எளிதாக இல்லை . எனினும் , ஐடா பெருமுயற்சி செய்து , மாணவியரைக் கவரும் வகையில் கற்பிக்கலானார் . பள்ளி துவங்கியதுமே , மூன்று பெண்கள் நின்றுவிட்டனர் . எனவே , பதி னான்கு பெண்களே இருந்தனர் . ஐடா அம்மையாருக்கும் , அவர்களுடைய மாணவி யருக்கும் இடையில் இருந்த அன்பு , தாய்க்கும் சேய்க் கும் இடையே நிலவும் அன்பை யொத்தது . கல்வி கற்றுத் தரும் நேரங்களில் , கண்டிப்பான ஆசிரியைO 4G FIL _ FI 43 % 2 : 55 AM 64 யாகத் திகழ்ந்த ஐடா , மற்ற நேரங்களில் பெற்ற அன்னையைப் போல் பேரன்பு காட்டியும் , உற்ற நண்பரைப் போல் உவகையூட்டியும் வந்தார் . அவர்களுக்கு ஆசிரியராக இருப்பதை ஐடா வெறும் கடமையாக மட்டும் கருதவில்லை . அவர்கள் அனைவரும் , தாம் கற்கும் ஒவ்வொரு செய்தியையும் நன்குணர்ந்து உள்ளத்தில் பதியச் செய்து கொள்வ , தையே ஐடா விரும்பினார் . ஆகவே , ஒவ்வொரு வார முடிவிலும் அவ் வாரம் நடத்தப்பெற்ற பாடப் பகுதி களில் தேர்வு நடத்தும் முறையை மேற்கொண்டார் . . . அனைவரும் சிறந்த மதிப்பெண் பெறும்வரை , ஒரே பாடப்பகுதியில் தொடர்ந்து தேர்வு நடைபெறும் . இம் முறையால் ஐடாவின் மாணவியர் தேர்வெழுதுவ தன் முழுப் பலனையும் பெற்றுச் சிறந்தனர் . தம் மாணவியர் ஒரு வினாடிப் பொழுதையும் வீணே கழிப்பதை ஐடா விரும்பியதில்லை . பொதுத் தேர்வு நெருங்கிக்கொண் டிருந்த நேரத்தில் , ஒரு சனிக்கிழமை விடுமுறை நாளாக அமைந்தது . விடுமுறை நாளாயிருந்தும் , ஐடா அவர் கள் வகுப்பு நடத்தப் போவதாக அறிவித்திருந் தார் . அதன்படி , குறித்த காலத்தில் ஐடா , வகுப் ' பறைக்குள் நுழைந்தார் . மாணவியர் எழுந்திருந்து , ஐடாவை , வகுப்பெடுக் காமல் விட்டு விடுமாறு வேண்டினர் . ஐடா , அன்று அவர்களுக்கு நடத்தத் திட்டமிட டிருந்த பாடங்கள் பல . எனவே , தாம் கருதியதற்கு மாறாக , அன்றையப் பொழுதை அறவே வீணாக்க விழைந்த மாணவியர்மீது பெருஞ் சினம் கொண்டார் . ஆதலால் , " இன்று என் வகுப்பு , வேண்டா
பொதுத் தேர்வு நெருங்கிக்கொண் டிருந்த நேரத்தில் , ஒரு சனிக்கிழமை விடுமுறை நாளாக அமைந்தது . விடுமுறை நாளாயிருந்தும் , ஐடா அவர் கள் வகுப்பு நடத்தப் போவதாக அறிவித்திருந் தார் . அதன்படி , குறித்த காலத்தில் ஐடா , வகுப் ' பறைக்குள் நுழைந்தார் . மாணவியர் எழுந்திருந்து , ஐடாவை , வகுப்பெடுக் காமல் விட்டு விடுமாறு வேண்டினர் . ஐடா , அன்று அவர்களுக்கு நடத்தத் திட்டமிட டிருந்த பாடங்கள் பல . எனவே , தாம் கருதியதற்கு மாறாக , அன்றையப் பொழுதை அறவே வீணாக்க விழைந்த மாணவியர்மீது பெருஞ் சினம் கொண்டார் . ஆதலால் , " இன்று என் வகுப்பு , வேண்டா மெனில் , இனி என்றுமே உங்களுக்கு என் வகுப்பு கடையாது " என்று கூறி , அறையைவிட் டகன்றாா : அம் மாணவியர் , தங்கள் செயலால் ஐடாவின் உள களம் புண்பட்டதை அறிந்து வருந்தினர் . பரிதாபத திற்குரிய அம் மாணவியர் , விடுமுறை வேண்டும் என்று விரும்பியதும் , தேர்விற்குத் தயார் செய்யும் பொருட் டுத்தான் . பிறகு , அப் பெண்கள் , தங்கள் வகுப்புத் தலைவியை , ஐடாவிடம் அனுப்பி , அவர்களின் மன் பனி ்பை வேண்டினர் . ஐடாவின் அன்னை நெஞ்சம் , அவர்களின் அன்பை உணர்ந்து உருகிற்று . அதன் பிறகு , அன்றைய நிகழ்ச்சியால் தோன்றிய வருத்தம் ( மறைய தேநீர் விருந்திற்கும் ஏற்பாடு செய்யப்பட் டது . இந் நிகழ்ச்சி , ஐடா அம்மையார் தம்முடன் பழகுபவர்கள் காலத்தை வீணாக்குவதைப் பொறுக்க முடியாத இயல்பினர் என்பதைக் காட்டுகிறது . மேலும் , கண்டிப்பும் , கட்டுப்பாடும் நிறைந்த ஆசிரிய ராக இருந்தும் , ஐட தமது அன்பான உள்ளத்தால் , மாணவியரின் மதிப்பையும் , அன்பையும் பெற்றிருக் தார் என்பதும் இதனால் விளங்கும் . ஐடா வகுப்பறையினுள் உள்ளபோது மட்டுமே அவர்களுக்கு ஆசிரியர் . மற்ற நேரங்களில் எல்லாம் அவர்களின் உயிர்த்தோழி போல் பழகுவார் . மாலை நேரங்களில் ' பேட்மின்டன் , ' ' டென்னிஸ் ' முத லிய விளையாட்டுக்கள் விளையாடி மகிழ்ச்சியூட்டு வார் . அவர்களைத் தம்முடன் மோட்டார் வண்டி யில் பல இடங்களையும் சுற்றிப் பார்க்க அழைத்துச் ( செல்வார் . பற்பல செய்திகளையும் குறித்து உரையாடி உவகை பூட்டுவார் . ஒவ்வொரு வார இறுதியிலும் , தம் மாணவியரில் சிலரைத் தம்மில்லத்திற்கு அழை : துச் சென்று தம்முடன் விருந்துண்ணச் செய்வார் . எவரேனும் தம்மை விருந்திற்கோ , விழாவிற்கோ அழைத்திருந்தால் மாணவியரையும் உடன் வரச் செய்வார் . இவற்றால் , அவர்கள் ஐடா பெற்ற இன்பத்தை : யெல்லாம் தாமும் பெற்று மகிழ்ந்தது மட்டுமன்றிப் பொதுவாழ்விலும் தொடர்புகொள்ள முடிந்தது . ஐடா அம்மையாருடன் பழகும் வாய்ப்புப் பெம் றோர் ஐடா மேற்கொள்ளும் செயல் எத்துணை அரிய தாயினும் அதனை அவர்கள் வெற்றியோடு முடிப்பது . உறுதி என்று உணர்ந்திருந்தனர் . ஐடாவின் அரிய தன்மைகளை உணராதவர்கள் தாம் , அவர்கள் ஈடுபடும் செயலின் தன்மையை மட்டுமே மதிப்பிட்டு வெற்றி , தோல்வியை நிச்சயிப்பர் . அவ் வண்ணமே சென்னை யில் இருந்த ஆங்கில அதிகாரி ஒருவர் , ஐடாவின் தனித்தன்மையைப் புரிந்து கொள்ளாமல் , அவர் துவக்கியுள்ள செயலை நிறைவேற்றுவதிலுள்ள தொல் லைகளை மட்டுமே கணக்கிட்டுப் பார்த்து , ஐடா தோல் ' வியைத் தழுவுவது திண்ணம் என்று எண்ணினார் . இத் தவறான எண்ணத்துடன் , ஐடாவிடமே சென்று ' உங்கள் மாணவியர் அனைவருமே தேர்வில் தவறி விட்டாலும் நீங்கள் ஏமாற்றம் அடையலாகாது ' என்று சொன்னார் . ஆறுதல் மொழி போல் அமைந்திருந்த அவருடைய கூற்றின் உட்பொருளை உடனே உணர்ந்து கொண்ட ஐடா வருந்தவில்லை ; வாட்டம் கொள்ளவில்லை . அவர் கூற்றைக் காலம் பொய்யாக கும் என்றுணர்ந்து , ஒரு கனிவான புன்னகையை அவருக்கு விடையாக்கினார் . அந்த அதிகாரியின் அவசர முடிவு பழுதாகும் நாளும் வந்தது . தேர்வு நடைபெற்று , முடிவுகளும் வெளியாயின . ஐடா உட்பட அனைவரையும் வியப்புக்கடலில் மூழ்கச் செய்த செய்தி , ஐடாவின் மாணவியர் அனை வருமே தேர்ச்சியடைந்திருந்தமையே ஆகும் . இறுதி ஆண்டுத் தேர்வெழுதியிருந்த பதினான்கு பெண்களும் தேர்வில் வெற்றி பெற்று விட்டனர் . அவர்களுடன் தேர்வெழுதிய ஆண்கள் நூற்றுக்கு இருபதுபேர் விகிதமே தேறியிருக்க , ஜடாவின் மாணவியர் அனைவருமே தேர்ச்சி பெற்றமை பாராட்டிற்குரிய தன்றோ ? அவர்களுடைய வெற்றியும் சாதாரண சிறப்புடையதாக அமையவில்லை . அப் பதினால்வரில் நால்வர் முதல் வகுப்பில் தேறியிருந்தனர் . ஒரு பெண் ஆப்ஸ்டட்ரிக்ஸ் என்னும் பாடத்தில் மாநில முதல் வளாகத் தேறியிருந்தாள் . இரண்டாம் ஆண்டின் இறுதியில் நடைபெறும் தேர்வில் அனாடமி என்னும் பாடத்தில் ஒரு பெண் சிறந்த மதிப்பெண் பெற்றுப் பரிசுப் பதக்கமும் பெற்றாள் . அவர்கள் வரைந்த படங்கள் கண்காட்சியில் இடம்பெற்றுப் பாராட்டுக் களும் பரிசுகளும் பெற்றன . இங்ஙனம் , ஐடாவிடம் முதன் முதலில் பயின்ற மாணவியர் சாதாரண முறை யில் அல்லாமல் பரிசுகளுடனும் , பாராட்டுக்களுடனும் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும் . ஐடா பள்ளிக்கூடத்தைத் துவக்கச் சிறிது தயக் கத்துடனே ஒப்புதல் அளித்த கர்னல் பிரிசன் அவர் களும் , தேர்வின் முடிவு கண்டதும் உண்டான வியப் புணர்ச்சியை வெளிப்படுத்தி , ' நாங்கள் ( ஆண்கள் ) < அஞ்சுமாறு , இப் பெண்கள் , எங்களால் எட்டியும் பிடிக்க முடியாத நிலைக்குச் சென்றுவிட்டார்களே ! ' என்று வியந்தாராம் . அவரைப் போலவே , பலரும் ' பதினான்கிற்குப் பதினான்கு ; நூற்றுக்கு நூறு வெற்றி ' என்று சொல்லிப் பாராட்டி வியந்தனர் . " ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உஞற்று பவர் " என்று செந்தமிழ்மறை செப்புகின்றது . ஐடாவின் வாழ்க்கை இந்தக் குறளுக்கோர் எடுத்துக் காட்டு எனலாம் . தமது விடாமுயற்சியால் ஐடா பெற்ற இவ் வெற்றி , ஊழையும் உப்பக்கம் காண்ப தியலும் என்பதைத்தானே காட்டுகின்றது ? இந் நிகழ்ச்சியின் மூலம் , தாம் பிறவியிலேயே ஆசிரியராகும் தகுதியும் பெற்றவர் என்று உலகிற்கு உணர்த்திய ஐடா , தம்முடைய முயற்சிக்குப் பொது மக்களின் பாராட்டையும் , பேராதரவையும் தங்க ளுடைய வெற்றியால் பெற்றுத்தந்த மாணவியரை வாழ்த்தினார் . பள்ளிக்கூடத்தை விரிவுபடுத்தும் பணி யில் ஆர்வத்துடன் ஈடுபட்டார் . ஐடா , தாம் தேர்ந்தெடுத்திருந்த 200 ஏக்கர் நிலப் பரப்பில் கல்லூரியை நிறுவவும் , பட்டப் படிப்பைக் கொண்டுவரவும் முயலலானார் . கட்டிடம் கட்டப் பெருந்தொகை தேவைப்பட் டது . நிதி திரட்டும் குழுக்கள் பல நியமிக்கப்பட்டன . அமெரிக்கா , பிரிட்டன் , இந்தியா ஆகிய மூன்று நாடு களிலும் மூன்று செயற்குழுக்கள் கல்லூரியை நிர்வா கம் செய்யும் பொறுப் - ஏற்றன . ' ஆசியாவிற கான கல்லூரி நிதிக்கு 13 / 25 - க்கப் பெண்கள் வழங் கிய பெருந்தொகையில் , வேலூரின் பங்காகக் குறிப் பிடத்தக்க தொகை கிடைத்தது . பீபாடி அம்மையார் அவர்கள் அயராது பெற்ற பொருளுதவியும் , அன் பளிப்பும் முக்கியமாகக் குறிப்பிடத் தக்கவையாகும் . இறுதியாகக் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது . அந்தத் தரிசு நிலத்தில் எழுந்த கம்பீரமான கட்டி படத்தைத் திறந்து வைக்க , கவர்னர் ஜியார்ஜ் ஸ்டேன்லி அவர்கள் அழைக்கப்பட்டார் . 1952 ஆம் ஆண்டு , டிசம்பர்த் திங்கள் இரண்டாம் நாள் நடை பெற்ற புதிய கட்டிடத் திறப்பு விழா , பெருந் திரு விழாவாகக் காட்சியளித்தது . 1933 இல் , மருத்துவப் பணிமகளிர் தங்களுக் கென்று அளிக்கப்பட்ட ஃபிலிப்ரௌன் இல்லத்தைத் தமக்குரித்தாக்கிக் கொள்ள , மருத்துவப் பள்ளி மாணவியர் , புதிய கட்டிடத்திற்குச் சென்றனர் . எல் . எம் . பி . படிப்புக்குப் பதிலாக டி . எம் . எஸ் . ! படிப்பும் அதே ஆண்டு புகுத்தப்பட்டது . அனைவரும் வியந்து பாராட்டும் வகையில் ஐடா - வின் மருத்துவப் பள்ளி வளர்ந்து வந்தது . ஆனால் , ஐடாவோ , பட்டப் படிப்பான எம் . பி . பி . எஸ் . படிப்பைப் புகுத்துவதற்கான தகுதியை இன்னமும் அடைய முடியவில்லையே என்று ஏங்கினார் . ஐடா 1937 ஆம் ஆண்டு கோடைக்கானலிலிருந்து வேலூர் திரும்பிக்கொண் டிருந்தார் . வழியில் சில மணிநேரம் தங்க நேரிட்டபொழுது , ' மதறாஸ் மெயில் ' செய்தித்தாளைப் படிக்க ஆரம்பித்தார் . அதில் ஐடா கண்ட செய்தி ஐடாவைப் பெரும் அதிர்ச் சிக்கு ஆளாக்கியது . அன்றைய சென்னை மாநில சுகாதார அமைச்சர் சென்னை மாநிலம் முழுவதிலும் , மருத்துவத் துறையில் பட்டம் பெற்றவர்களே இனி மருத்துவராதல் முடியும் . டி . எம் . எஸ் . போன்ற சான்றிதழ் படிப்புக்களுக்கு இனி மாணவ மாணவி கள் சேர்க்கப்படக் கூடாது . சென்னைப் பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்ட கல்லூரிகளில் மருத்து வப் பட்டப் படிப்புப் பயிலவே புதிய மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்று அறிவித் கிருந்தார் . அமைச்சரின் அறிவிப்பு ஐடாவைப் பெரும் அதிர்ச்சிக் குள்ளாக்கியது . தம் மாணவியர் உயர்ந்த கல்வியை - தரமான கல்வியைப் - பெற வேண்டுமென்பதில் ஐடா மிகுந்த ஆர்வம் கொண் டிருந்தார் என்றாலும் , அமைச்சரின் அறிவிப்புப்படி உடனடியாக மருத்துவப் பள்ளியைச் சென்னைப் பல்கலைக் கழகத்துடன் இணையும் தகுதி பெற்ற கல் லூரியாக்குவதென்பது இயலாத காரியமாயிற்றே என்றெண்ணி மனம் சோர்ந்தார் . மருத்துவப் பள்ளியைக் கல்லூரியாக உயர்த்தி , வேலூரின் பெருமையையும் அதனோடு உயர்த்த வேண்டுமென்பதில் , ஐடாவும் , மற்றவர்களும் ஆரம்ப நாட்களிலேயே பெரும் ஆர்வம் காட்டினார்கள் . பொருளில்லாக் குறையே இப் பெருஞ் செயலுக்குத் தடையாக இருந்தது . 1938 ஆம் ஆண்டுக்குள் இவ் வரிய செயலை நிறைவேற்ற முடியாதே ! பல்கலைக் கழக இணைப்பைப் பெறுவதற்கு மருத்துவமனை பெரிதாக்கப்பட வேண்டும் ! படுக்கைகளின் எண் ணிக்கை ஐந்நூறாக வேண்டும் ; புதிய ஆசிரியர்கள் வேண்டும் ; உள்ள ஆசிரியர்கள் மேலும் படித்துத் தகுதி பெற வேண்டும் ; இவையனைத்திற்கும் பெரும் பொருள் வேண்டும் . ஐடா தம் வாழ்நாளிலேயேO _ 1 IL Hil 35 % 3 : 18 AM 71 முதன் முறையாகச் செயல் மறந்து செய்வதறியாது ? சோர்ந்து நின்றார் . சில மாதங்களிலேயே , பள்ளியையும் , மருத்துவ மனையையும் பார்வையிட்ட சுகாதார அமைச்சார ” " கட்டிடம் போதுமானது என்றாலும் , ஆசிரியர்களும் , பிற வசதிகளும் போதுமான அளவு இல்லை " என்று குறிப்பிட்டுச் சென்றார் . குழம்பி நின்ற ஐடாவிற்கு , பிரிட்டிஷ் சர்ச் தலைவரான ஹ்யூம் ' அவர்களின் வருகைக்குப் பிறகு , தம் முன் நின்ற பிரச்சனையைத் தீர்க்க வழி ஏற்பட்டது . ஹ்யூம் அவர்கள் ஆண்களுக்கான அனைத்திந்திய கிறித்துவ மருத்துவக் கல்லூரி ஒன்றை நிறுவுவதற்கு . ஏற்ற இடம் குறித்து ஆராய மூன்று மாதங்கள் இந்தியாவில் தங்கியிருந்தார் . வேலூரைப் பார்வை யிட்ட பிறகு , அவருக்கு வேலூர் மருத்துவப் பள்ளிக் கட்டிடத்தையே ஆண் , பெண் இருபாலாருக்கும் உரியதாக்கிவிட்டால் , பள்ளியைக் கல்லூரியாக்குவ ' தற்கு வேண்டிய முயற்சிக்கு எல்லா நாட்டுக் கோட் பாடுடையோர் கழகங்களிலிருந்தும் பொருள் திரட்டு " வது எளிதாகிவிடும் என்னும் எண்ணம் தோன்றியது . அவருக்கு முன்னமேயே , மோட்2 என்னும் அமெரிக் கப் பெரியாரும் இக் கருத்தை எடுத்துச சொல்லியிருந் தார் . பெண்களிடமிருந்து மட்டுமே உதவி பெறும் . நிலை மாறி , ஆண் பெண் இருபாலாருடைய வளர்ச்சி " யிலும் நாட்டம்கொண்ட கோட்பாடுடையோர் கழகங் கள் எல்லாவற்றின் உதவியையும் பெறும்போது , பள்ளியைக் கல்லூரியாக மாற்றுவது எளிதாகிவிடும் என்று ஐடாவும் உணர்ந்தார். ஆண்களும் சேர்ந்து படிக்க அனுமதிக்கப்பட் டால் , ஆண்கள் மருத்துவக் கல்லூரிப் பிரச்சனையும் * எளிதாகிவிடும் ; பெண்கள் பள்ளி , கல்லூரி நிலைமைக்கு உயர்வதும் எளிதாகி விடும் ' என்னும் கருத் தைத் தமது அமெரிக்க நண்பர்கள் ( பெண்கள் ) ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று ஐடா பெரிதும் அஞ்சினார் . இந்த நேரத்தில் தான் , மருத்துவப் பள்ளியின் இருபதாம் ஆண்டு நிறைவு விழாவில் பங்கேற்க , பீபாடி அம்மையார் வேலூருக்கு வந்து சேர்ந்தார் . ஐடா , அவர்களிடம் நிலைமையை விளக்கினர் . பீபாடி அம்மையாரோ , பள்ளிக்கூடம் பெண்களுக் கென்றே - பெண்களாலேயே - தொடங்கப்பட்ட தென்பதை ஐடா நினைவில்கொள்ள வேண்டும் என் றார் . ஐடா , தம் பள்ளியின் வாழ்க்கை முடிந்துவிடு வதைவிட , ஆண்களை அனுமதிப்பது பன்மடங்கு மேலானது என்று கூற , பீபாடி அம்மையார் பெருஞ் சினத்துடன் " இப்படிப் பேசுவது ஐடா ஸ்கடராக இருக்க முடியாது . தேசியக் கிருத்துவக் குழுவைச் சேர்ந்த மோட் அவர்களும் , டாக்டர் ஹ்யூமும் தான் உங்கள் வடிவில் பேசுகின்றார்கள் என்று எண்ணு கிறேன் " என்றார் . பீபாடி அம்மையார் மேலும் தொடர்ந்து , “ அவர்கள் ஆண்களாதலால் , வேலூரில் நாம் நிறுவியுள்ள பத்து இலட்சம் டாலர் பெறுமான முள்ள கட்டிடத்தை ஆண்களுக்கென்று எடுத்துக் கொள்ள ஆசைப்படுவதில் தவறில்லை " என்று கூறி ஜடாவைப் பதிலளிக்க முடியாமல் செய்துவிட்டார் . இ . று தியாக , பீபாடி அம்மையார் , சினம் தணிந்து பொருளுதவி பெறுவதற்காக - பள்ளி யாருக்காக எப்படி நிறுவப்பட்டது என்பதை மறந்து விடக் கூடாது என்று கூறி , " தேவையான இலட்சங்களைப் பெறுவோம் . அதற்கு நமக்கு ஆண்களின் உதவி வேண்டாம் ' ' என்று உறுதியளித்துவிட்டு இந்தியாவை விட்டுச் சென்றார் . 1938 ஜூலை மாதம் பள்ளிக்கூடம் திறக்கப்பட் டது . ஆனால் புதிய மாணவியர் சேர்க்கப்படவில்லை . ஐடாவின் நெஞ்சைச் சுட்ட இத்துயரத் தீயை அணைக்கும் ஆற்றல் எவருக்கும் இல்லை .
ஐடா மீண்டும் அமெரிக்கச் செயற்குழுவிற்குக் கடிதம் எழுதினார் . அக்குழுவோ எதிர்ப்புத் தெரிவித் தது . பெண்களே முன்னின்று - பெண்களுக் கென்று நிறுவிய பள்ளியில் - ஆண்களை அனுமதிப் பது ஐடாவிற்கு மிகவும் உதவி செய்திருக்கிற அமெ ரிக்கச் செயற்குழுவிற்கு மதிப்புத்தர மறுக்கும் செய ' லாகும் என்னும் கருத்துப்பட பீபாடி அம்மையாரிட மிருந்து கடிதம் வந்தது . ஐடா அம்மையார் அமெரிக்காவிலிருந்து வந்த கடிதங்க ைக்கண்டு வேதனையடைந்தார் . அமெரிக்கச் செயற்குழுவிற்குக் கடிதம் ஒன்று வரைந்தார் . " நீங்கள் குறிப்பிடுவது போல் நான் நன்றி மறந்தவ ளாக நடந்து கொள்ளவில்லை . இருபாலாரும் சேர்ந்து பயிலும் கல்லூரியை உங்கள் இசைவின்றி ஆரம் - பிக்க முடியாது என்று மீண்டும் தெரிவிக்கிறேன் . இந்தப் பெரிய பணியில் , இத்தனை ஆண்டுகள் ஒத்துழைத்த பின்னர் , இப்பொழுது நீங்கள் காட்டும் புறக்கணிப்பு என்னை ஆழமாகக் - கடுமையாகப் - - புண்படுத்துகிறது . " ஐடாவின் கடிதம் சுருக்கமாகவே " அமைந்திருந்தது . தங்கள் இசைவின்றி எதையும் ,செய்ய இயலாது என்று ஜடா குறிப்பிட் டிருந்ததைக் கண்ட குழு மகிழ்ந்தது . ஆனாலும் , ஐடாவின் நிலைமையோ முற்றிலும் மாறாக இருந்தது . ஐடா மருத்துவப் பட்டப் படிப்புக்கு முன்னதாக உள்ள இரண்டாண்டுகள் படிப்புக்கு மாணவியரைச் சேர்க்கக் கருதினார் . இரண்டாண்டுக் காலத்தில் - முயன்று பொருள் பெற்று , பட்டப் படிப்பையும் தொடரலாம் என்று திட்டமிட்டார் . சென்னைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் , டாக்டர் , திரு . இலட்சுமணசாமி முதலியார் அவர் - களின் தலைமையில் ஒரு குழு பள்ளியையும் , மருத்துவ * மனையையும் 1941 ஆம் ஆண்டு ஜனவரியில் பார்வை யிட்டது . 1941 ஆம் ஆண்டே பல்கலைக் கழகம் முதலிரண்டாண்டுப் படிப்பைத் துவக்க அனு ' மதி அளித்தது . 1942 இல் பல்கலைக் கழகத்துடன் தாற்காலிக இணைப்புப் பெற்று முதலிரண்டாண்டுப் படிப்புக்கு மாணவியரைச் சேர்த்துக் கொள்ளலாம் - என்று திட்டமிட்டு விட்டு , ஐடா , பணம் திரட்ட அமெரிக்காவிற்குப் பயணமானார் . அமெரிக்காவில் , ஐடா , மருத்துவக் கல்லூரி இருபாலாருக்கும் உரியதாக்கப்பட்டால் , எல்லாக் - கோட்பாடுடையோர் குழுக்களின் ஒத்துழைப்பும் - - கிடைக்கும் என்ற கருத்தையும் வற்புறுத்த முயன்றார் . வழக்கம் போல் , கல்லூரிகளில் - பள்ளிகளில் - மக உளிர் மன்றங்களில் - கிறித்துவச் சங்கங்களில் - ஆலயங்களில் - எல்லாம் ஐடா , விளக்கமான சொற் பொழிவு நிகழ்த்தினார் . மடம் இதற்கும் முன்னரேயே , ஐடா அமெரிக்க நண் பர்களிடமிருந்து இருபது இலட்சம் திரட்டியிருந்தார் .கல்லூரிக் குன்றுகளில் , கட்டிடம் நிறுவப் பொருள் வேண்டி ஐடா அமெரிக்கா வந்திருந்த நாளில் , ராக்ஃ பெல்லர் நிதிக்குழு , ஐடா இருபது இலட்சம் டாலர் முன்பணம் திரட்டினால் , பத்து இலட்சம் டாலர் தமது நிதியிலிருந்து தருவதாகக் கூறியது . அப்போது , இருபது இலட்சம் டாலரையும் , ஐடா அமெரிக்க - - நண்பர்களிடமிருந்து தான் பெற்றார் . எனவே , மீண் டும் பத்து இலட்சம் டாலர் நன்கொடையாகப் பெற வந்திருந்த ஐடாவைப் பலரும் வியப்புடன் நோக்கி னர் . அமெரிக்கச் செய்தித்தாள் ஒன்று , ' பத்து இலட்சம் டாலர் ( நன்கொடை ) வேண்டும் என்று விரும்பும் பெண் அதிசயமானவள் அல்லள் என்றா லும் , மூன்றாவது பத்து இலட்சத்திற்காக முயன்று கொண் டிருக்கும் பெண் ஒரு வியத்தகு படைப்பே என்று எழுதியது . அமெரிக்காவில் பெரும் பொருள் கிடைக்க வில்லை யென்றாலும் , அவர் எதிர்பார்த்ததற்கும் மேலாகப் பொதுமக்களின் அன்பும் , ஆதரவும் கிடைத்தன . இவையே அவர்க்குப் பணம் சேர்க்கும் பணியில் ஆர்வமூட்டுவதாக இருந்தன . பல இடங் களுக்கும் சென்று பொருள் பெற முயன்றார் . மூன் உறாண்டுகளும் முடிந்தன . ஒருமுறை ஐடாடாட் அம்மையாரோடு நிதிதிரட்ட பிளாரிடா என்னும் நகரத்திற்குச் சென்றிருந்தார் . அச் சமயத்தில்தான் , துயரம் தரும் நிகழ்ச்சி இடம் பெற்றது . டாட் அம்மையார் , இணைபிரியாத் தோழியை - ஈடற்ற இன்பம் நல்கிய வேலூரை - தம் முடைய வருகையால் தனிப்பெரும் மகிழ்வெய்திய தாயகத்தை நீத்து இயற்கை எய்தினார் . 1945 ஆம்' ஆண்டு ஜனவரித் திங்களில் அவர் மறைந்தார் .
அவருக்கு அப்போது எண்பத்தாறு வயது முடிங் திருந்தது . இயற்கையான நோய்வாய்ப்பட்டுப் படுக்கை யில் கிடந்த டாட் அம்மையாருக்கு அதுவே இறுதிப் பயணமாக ஆகிவிட்டது என்பதறிந்த ஐடா அலறி னார் ; அரற்றினார் ; துடித்தார் ; துவண்டார் . தோழிக் குத் தோழியாய் அன்னைக்கு அன்னையாய் விளங்கிய டாட் அவர்களின் பிரிவு ஐடாவிற்கு ஈடு செய்ய இயலாத இழப்பாயிற்று . டாட் அம்மையார் வேலூர் மருத்துவமனை , கல் ” லூரி ஆகியவற்றின் வளர்ச்சிக்கும் , வாழ்விற்கும் செய்த பணிகள் பெரும் சிறப்புடையனவாகும் . . உடலுழைப்பால் மட்டுமன்றிப் பொருளுழைப்பாலும் , வேலூரை முன்னேற்றுவித்த பெருமை ஐடா அவர் களைப் போன்றே , டாட் அம்மையாருக்கும் உரியது . 1917 இல் தம்முடைய இன்ப வாழ்வைத் துறந்து , இந்தியாவிற்கு வந்த அம்மையார் , அன்று முதல் நமக்காகவே வாழ்ந்தார் . கெர்ட்ரூட் டாட் , தாம் முன்னால் பார்த்துமிராத பாகப் பெண்கள் படும் துன்பங்களை , ஐடா எடுத்துச் சொல்லக் கேட்ட அளவிலேயே அவர்களுக்கு உதவும் உள்ளக்கிடக்கை பெற்றார் ; அதன்படியே இங்கு வந்து இருபதாண்டுகளுக்கும் மேலாக உழைத்தார் என்றால் , அவர்களின் பெருந்தன்மையை என்ன வென்று போற்றுவது ? ஜடாவைப் போன்றே , டாட் மாணவியர் உள் ளத்தைக் கொள்ளைகொண் டிருந்தார் . தம்முடைய மாணவியர் ஒவ்வொருவரின் பெயரையும் , அவர்கள் செய்யும் ஒவ்வொரு சிறு செயலையும் மறவாமல் நினை' விற் கொள்ளும் டாட் அம்மையாரின் ஆற்றலை எண்ணி வியக்காதவர் இல்லை . இப் பெருந்தகையைப் பிரிந்து ஐடா பட்ட அல்லல் சொல்லும் தரமன்று . ஐடாவும் , டாட் அம்மையாரும் பணவிடைத்தாள்களிலோ , பிறவற் றிலோ கையெழுத்திட நேரிடுகையில் , தங்கள் பெயர்களை இணைத்து ' ஸ்கட்டாட் ' ( Scuddod ) என்று தான் எழுதுவராம் . இதயங்கள் இணைந்தபின் , இரு வரும் பெயர்களை இணைத்துக் கொண்டதில் வியப் பென்ன ? ஐடா அம்மையார் தம்மைவிடப் பதின் மூன்றாண்டுகள் மூத்தவரான டாட் அம்மையாரை ‘ டாட் அம்மா ' ( Mother Dodd ) என்று தான் அழைப் பாராம் . அவர்கள் ஒருவரை யொருவர் கவர்ந்திருந்த மையைக் காட்டும் செய்திகள் இன்னும் பல உண்டு . இவ்வாறு , உணர்வாலும் , செயலாலும் தம்மை ஒத் திருந்த டாட் அம்மையாரின் உயிரற்ற உடலத்துடன் பிளாரிடாவிலிருந்து நியூயார்க்குக்கு அடக்கம் செய் யும் பொருட்டுச் சென்ற ஐடாவின் உளநிலை எப்படி இருந்திருக்கும் என்றெண்ணிப் பார்ப்பவர் உள்ளமும் உருகும் . டாட் அம்மையாரின் மறைவு ஐடாவிற்கு மட்டு மன்றி , அகிலம் முழுவதற்குமே ஈடுசெய்ய இயலாத பெரும் இழப்பாயிற்று . வேலூர் நண்பர்களும் , மாணவர்களும் இச் செய்தி கேட்டு வருந்தினர் . அவர்களில் பலரும் சேர்ந்து நடத்திவந்த ' கோட்டகிரி மருத்துவ நண்பர் கள் சங்கம் ' மக்களுக்கு என்றும் பயன்படும் வகை யில் டாட் நினைவுச் சின்னம் ஒன்றை ஏற்படுத்த முயன்றது . 1947 இல் என்புருக்கி நோய்க்கு ஆளானவர்களுக்கு உதவும் அமைப்பொன்று , டாட் அவர்களின் நினைவாக நிறுவப்பட்டது . அதன் திறப்பு விழாவின்போது , ஐடா அம்மையார் பங்கேற்று விழாவைச் சிறப்பித்ததுமன்றி , பெரும் பொருளையும் அன்பளிப்பாக வழங்கினார் . அமெரிக்காவிலிருந்து , இந்தியாவிற்குத் திரும்பு வதற்கு முன்னமே , வேலூர் மருத்துவக் கல்லூரியில் , புதிய மருத்துவ நூல் நிலையம் ஒன்றை ட்ாட் அம்மை யாரின் நினைவாகத் தோற்றுவிக்க வேண்டும் என்று எண்ணங்கொண் டிருந்த ஐடா , அதற்கென்று பெரும் பொருள் திரட்டிய பிறகே இந்தியாவிற்கு வந்தார் . வேலூர்க்கு மீண்டதும் , தாம் எண்ணியதை முடித்து மகிழ்ந்தார் . இவையனைத்தும் , டாட் அம்மையாரிடம் மக்களுக் கிருந்த மதிப்பையும் , மட்டிலா அன்பையும் புலப்படுத் தும் . மேலும் , வேலூரின் பெருமை மிக்க வரலாற் றிலே அவர்களின் பங்கு எத்துணைப் பெரும் பங்கு என்பதையும் விளக்கும் . போர் நடைபெற்றுக்கொண்டிருந்தநேரம் . பொரு ஆதவி எதிர்பார்த்த அளவு கிடைக்கவில்லை . எனினும் 1942ஆம் ஆண்டே அமெரிக்கச் செயற்குழுவும் , ஆண் களைக் கல்லூரியில் சேர்க்க அனுமதி வழங்கியது . அதே நேரத்தில் , இந்தியாவிலிருந்து முதலி ரண்டாண் டுப் படிப்பிற்கு 25 பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட் இள்ளனர் என்னும் இனிக்கும் செய்தியும் கிடைத்தது . 1944 ஆம் ஆண்டு மருத்துவ மனையில் ஆண்களுக் கெனப் படுக்கைகளும் , பிரிவுகளும் ஏற்படுத்தப் பட்டன . அதே ஆண்டு ஆண் பேராசிரியர்களும் கல்லூரியில் பணியாற் 23 / 25 ம்பித்தனர் . 1945 இல் ஐடா இந்தியாவிற்குத் திரும்பியதும் , மருத்துவப் பட்டப் படிப்பு கற்பிக்கவும் , வேலூர் மருத்துவக் கல்லூரிக்குப் பல்கலைக் கழகம் அனுமதி வழங்கி யுள்ளது என்னும் மகிழ்ச்சி தரும் செய்தி காத் திருந்தது . ஆனாலும் , 1947 இல் முதன் முதலாக ஆண்களைச் சேர்ப்பதற்கு முன்னால் , பல்கலைக் கழகத் துடன் நிலையான இணைப்புப் பெற மருத்துவமனையை விரிவுபடுத்துதல் வேண்டும் ; மற்ற வசதிகளைப் பெருக் குதல் வேண்டும் என்பதை ஐடா நினைவில் பதியவைத் துக்கொண்டார் . ஐடாவிற்கு இத்துணை வெற்றிக் கிடையிலும் வேதனையைத் தந்த நிகழ்ச்சி , பீபாடி அம்மையாரும் , ஆல்சன் அம்மையாரும் , ஆண்களைச் சேர்ப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து செயற் குழுவிலிருந்தே விலகிக்கொண்டமையாகும் . 1947 ஆம் ஆண்டில் பத்து ஆண்கள் கல்லூரியில் சேர்க்கப்பட்டனர் . 1949 இல் ஆண்களுக்கென்று எளிய விடுதி ஒன்றும் எழுப்பப்பட்டது . பின்னர் , ஐடாவின் முயற்சியால் , நல்லதோர் விடுதியும் கட்டப் பட்டது . பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையில் வளர்ந்த இக் கல்லூரி இன்று பார் புகழும் நிலையமாகத் திகழ் கின்றது . எம் . பி . பி . எஸ் . பட்டம் பெற்றவர்கள் • மேலும் படிக்க எம் . டி ; எம் . எஸ் . பட்டப் படிப்புக்கும் டி . ஜி . ஓ . , டி . சி . எச் . போன்ற பல சான்றிதழ் படிப்புக்களுக்கும் இங்கே இன்று வசதிகள் உள்ளன . இந்தியா , அமெரிக்கா , கனடா , பிரிட்டன் , ஆஸ்தி ' ரேலியா , டென்மார்க் போன்ற நாடுகளில் உள்ள பல சர்ச்சுகளும் , கோட்பாடுடையோர் குழுக்களும் இக் கல்லூரியின் வளர்ச்சிக்கு உதவுகின்றன . இந்த அமைப்புக்களின் பிரதிநிதிகள் அடங்கிய குழு ஒன்று இந்தியாவில் இருந்து இக் கல்லூரியின் நிர்வாகப் பொறுப்பைக் கவனித்துக் கொள்ளுகிறது . எண்ணற்ற எதிர்ப்புக்களைத் தாங்கி வளர்ந்த இக் கல்லூரி , இப்பொழுது ஆற்றிவரும் தொண்டின் சிறப்பை அளவிட்டுரைத்தல் இயலாது . இன்று இக் கல்லூரியில் பயின்ற ஆயிரக்கணக்கான மாணவர்கள் , இந்தியாவில் மட்டுமன்றிப் பிற நாடுகள் ளுக்கும் சென்று நற்பணி ஆற்றி , ஐடாவின் இலட்சி யக்கனவை ஈடேற்றிவருகின்றனர் . ஐடாவைப்போல் , கிராம மக்களுக்கு வாழ்வு தருவதில் இவர்களில் பல ருக்கும் உள்ள ஆர்வம் , அகில முழுவதிலும் வியந்து பாராட்டப்படுகின்றது . மக்கள் நோய் நீங்கி நல்வாழ்வு பெற எதைச் செய்ய வேண்டுமென்றாலும் , தயங்காது சென்று செய்யும் நல்லி தயத்தை வேலூர் மருத்துவர்கள் ஐடாவிடமிருந்து பெற்றுள்ளனர் போலும் ! ஆகவே தான் செல்லுமிடமெல்லாம் சிறப்புறுகின்றனர் , சீர்பெறுகின்றனர் .
மருத்துவ மனை வளர்கிறது ;
இன்றைக்கு , வேலூருக்கு வேறெந்த வரலாற்றுப் புகழ் படைத்த ஊர்களையும் விடச் சிறப்பும் பெருமையும் ஏற்பட்டுள்ள தென்றால் , அதற்குக்காரணமாய் இருப்பது ஐடாவின் மருத்துவ நிலையமே ஆகும் . உலகத்தின் எல்லா மூலைகளில் இருந்தும் மக்களை இந் நாட்டிற்கு ஈர்க்க ஒரு காரணமாய் உள்ளதும் இந் நிலையம் ஆகும் .
இலட்சக் கணக்கான மக்களின் இதயத்தை இன்று ஈர்ப்பதாய் உள்ள இந்தக் கிறித்துவ மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ! அறுபது ஆண்டுகளுக்கு முன்னிருந்த நிலைமையை நெஞ்சத் திரையில் படம் பிடித்துப் பார்ப்போர் வியப்பர் .
அன்று , ஒரு சிறிய வீட்டின் சிறிய அறையைத் தான் மருத்துவ உதவி பெற விழைந்த மக்கள் நாடி வந்தனர் . அந்த அறையில் படுக்கை ஒன்று ; பார்க்கும் மருத்துவர் ஒருவர் ; உடன்பணியாற்றுபவரும் ஒருவரே ! ஆனால் , பிணியாளரின் தொகையோ எண்ணத் தொலையாதது . அந்த மருத்துவ இல்லம் , இன்றைக்கு இப்பெரும் மருத்துவ நிலையமாக மாறியது இயற்கைக்கு அப்பாற்பட்டது என்று மனம் மயங்கும் . ஆனால் , உண் மையும் அதுதான் !
ஐடாவிடம் அமைந்திருந்த மாபெரும் ஆற்றலே இப்பெரும் மாறுதலைக் குறுகிய கால இடைவெளியில் ஏற்படுத்தியிருக்கிறது .
1900த்தில் மருத்துவமனை ஒரு சிறிய அறையாக இருந்தது . இரண்டாண்டுகளில் , நாற்பது படுக்கை களும் , பல மருத்துவர்களும் கொண்ட எம் . டி . ஷெல் மருத்துவ மனையாயிற்று . உதவிவேண்டி ஆவலுடன் அணுகுபவர்களுக்கு , அன்போடும் , அக்கறையோடும் மருத்துவம் செய்யும் மனையில் , நாற்பது படுக்கைகள் போதுமானவையல்ல என்பது தெளிவாகியது .
ஆகவே , பெருகிவரும் தேவைகளுக்குத் தீர்வு காண நல்லோர் பலர் முயன்றனர் . அருளுள்ளம் படைத்தோரிடமிருந்து பொருள் சேர்ந்தது . படுக்கைகளின் எண்ணிக்கை அதிக மாயிற்று . பிறவசதிகளும் இடம் பெற்றன . ஒவ்வொரு நோய்க்கும் தனித்தனிப் பகுதிகள் ஏற்படுத்தும் முயற்சி இடம்பெற்றது . தங்களுடைய நெஞ்சத்தில் , நிலையான இடம் பெற்றுவிட்ட பெருமக்களின் நினைவாக . நல்லோர் ஈந்த அன்பளிப்புகள் பல . அவற்றில் , குறிப்பிடத்தக்கவை , ஈவார்ட் ஈனில் , வேயர்ஹார் அறுவைச் சிகிச்சைக்கான விடுதி ஆகியவையாகும் . . .
மசாச்சுசெட்ஸில் இருந்த எலன்கோல் என்னும் பெண் மணியின் . பெருந்தன்மை , அவர்களின் அன்புப் பரி சான ' கோல் டிஸ்பென்சரி ' யின் வடிவில் வெளி ' யானது . இவையும் , இன்னும் பிற வசதிகளும் இடம் பெறவே , 1924 இல் ' கிறித்துவ மருத்துவக் கல்லூரி என்னும் பெயரில் கல்லூரியும் பணியாளர் பயிற்சிப் பள்ளியும் , மருத்துவ மனையும் இணைந்த இந் நிலையம் தோட்டப்பாளையத்தில் இன்றுள்ள இடத்தில் திறந்து வைக்கப்பட்டது .
அடுத்த ஆண்டு , அன்னையை இழந்து நின்ற ஐடாவை , அதை எண்ணி வருந்தவும் விடாமல் , அவர்களின் எண்ணத்தை ' வெள்ளி விழா " ( ஐடாவின் தொண்டு துவங்கி இருபத்தைந்து ஆண்டு கள் ஆனதற்கறிகுறியாகக் கொண்டாடப்பட்டது )
நிகழ்ச்சிகளின் ஆரவாரத்தில் திருப்பியது வேலூர் . தோட்டப்பாளையத்தில் துரித முன்னேற்றம் ஏற்பட்டது . 1923 இல் ஏற்பட்ட முதல் வார்டைத் தொடர்ந்து , இடம்பெற்ற வேறு பல வார்டுகளும் அறுவைச் சிகிச்சைக்கான விடுதிகளும் 1928 இல் திறந்துவைக்கப்பெற்றன .
ஷெல் மருத்துவ மனை கிறித்துவ மருத்துவக் கல்லூரி ' யின் முக்கிய அங்க மாக - கண் தொடர்பான நோய்களுக்கு மட்டுமே மருத்துவம் செய்யும் நிலையமாக - மாற்றப்பட்டது . பத்து ஆண்டுகளில் தோட்டப்பாளையத்தில் இரு நூற்று அறுபது படுக்கைகள் ஏற்பட்டன . ஐடாவின் அயராத முயற்சியால் , வேலூரில் பயன்படுத்துவதற்கெனச் சிறிது இரேடியம் அன்பளிப்பாகத் தரப்பட்டது . இதன் விளைவாய் , 1937 இல் எக்ஸ்ரே , இரேடிய சிகிச்சை நிலையம் ஏற்படுத்தப் பட்டது .
இது ஐடாவின் தனி முயற்சியினாலேயே முடிந்த செயலாகும் . இதைத் தொடர்ந்து , ஐடா தம்முடைய அண்ணன் மகளான ஐடா பி . ஸ்கடர் என் பவரை மேல் நாடுகளுக்கு அனுப்பி , இரேடியத்தைப் பயன்படுத்தும் வகையை மேலும் கண்டறிந்துவரச் செய்தார் . இரேடியச் சிகிச்சையினால் இன்று தீர்த்து வைக்கப்படும் ' தீராத நோய்கள் ' எண்ணற்றவை .
ஐடா , 1941 இல் அமெரிக்காவிற்குச் சென்ற பின்னர் , வேலூரில் இன்னுஞ் சில மாற்றங்கள் இடம் பெற்றன . ஆண்கள் வந்து மருந்துபெற்றுச் செல்லு வதற்காகக் கட்டப்பட்ட கட்டிடம் ஐடா இல்லாததால் , வேறொரு அம்மையாரால் திறந்துவைக்கப்பட்டது .
1944 இல் , முதல் முதலாக , வேலூர் மருத்துவமனைக்கு ஆண் மருத்துவர்கள் வந்து சேர்ந்தனர் . ஆண்கள் தங்கியிருந்து உதவிபெற்றுச் செல்வதற்கான வசதி களும் செய்யப்பட்டன . பெண்கள் மருத்துவமனையின் ஒரு பகுதி இதற்கென்றே எடுத்துக்கொள்ளப்பட்டது இன்றைக்கு இங்கு , ஆண்கள் , பெண்கள் , குழந்தைகள் அனைவருக்கும் மருத்துவம் செய்யும் வசதிகள் மேலும் பெருகியுள்ளன .'
1 1950 ஆம் ஆண்டு , இந்த மருத்துவ மனையின் ' பொன் விழா ' க்கொண்டாடப்பட்டது . அப்போது சென்னை கவர்னராக இருந்த மதிப்பிற்குரிய பவநகர் மாமன்னரும் , அரசியாரும் வருகை தந்து , ஐடாவைப் பாராட்டி மகிழ்ந்தனர் ; விழாவைச் சிறப்பித்தனர் .
பொன் விழாவில் எடுக்கப்பட்ட புள்ளி விவரங்கள் , ஐம்பதாண்டுகளில் ஏற்பட்ட வளர்ச்சியைப் படம் பிடித்துக் காட்டின . இதற்குக் காரணமாயிருந்த ஐடாவை அனைவரும் . வியந்து பாராட்டினர் . மேலும் பத்தாண்டுகள் கடந்தபின் , கிறித்துவ மருத்துவக் கல்லூரியின் பணி விரிவுற்றது . படுக்கைகள் ஏறத்தாழ எண்ணூறாயின ; பணிபுரிவோரின் எண்ணிக்கை பன்மடங்கானது . ஒவ்வோராண்டும் , ஏறத்தாழ மூன்று இலட்சம் மக்களுக்கு இங்கு உதவியளிக்கப்படுகின்றது என்று கணக்கெடுக்கப்பட்டுள்ளது . இவர்களில் , ஏழைகள் இலவசமாகவோ , குறைந்த செலவிலோ குணம் பெற்று மகிழ்கின்றனர் .
இந்தியாவிலேயே , இதயம் , மூளை , மார்பு ஆகிய அங்கங்களின் அறுவைச் சிகிச்சையை முதன் முதலில் தொடங்கிவைத்த மருத்துவ நிலையம் , வேலூர் கிறித் துவ மருத்துவக் கல்லூரிதான் .
அனைத்திற்கும் மேலாக , அன்று ஐடா கிராமிய வீதிகளில் நடத்திய தொழுநோய் எதிர்ப்புப் போராட்டத்தை எளிதாக்கி வெற்றி கண்டுவிட்டார் வேலூர் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த அறிஞர் டாக்டர் பால் பிராண்ட் . தொழுநோயால் உறுப்புக் குறைந்தவர்கள் , மறு படியும் முன்னிருந்த நிலையடையச் செய்ய வேண்டுமென்று விரும்பிய இவர் , பல ஆண்டுகளாக அதற் காண வழிகளைக் காணும் முயற்சியை மேற்கொண் டிருந்தார் . உறுப்புக் குறைவதால் , வேலை செய்ய இயலாமல் வேதனைப் படுபவர்களை , நாட்டின் " நல்ல வேலைக்காரர் ” களாக மாற்றுவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்னரே ஆவல் கொண்டார் இவர் . இம் முயற்சியில் இன்று முழு வெற்றி கண்டுவிட்ட இவர் தொழுநோய் பிடித்தவர்களை இனியும் நாம் நீண்ட காலத்திற்கு விலக்கிவைக்கத் தேவையில்லை . குணப் படுத்தும் வேலையைக் கிராமத்திலேயே நடத்தலாம் . நோய் நீங்கும் முன்னரேயே பலரும் மீண்டும் ' வேலைக் குச் சென்று , தங்கள் ஊதியத்தைப் பெற முடிந்தவர் களாதல் வேண்டும் ” என்று அறுதியிட்டுரைக்கின்றார் . தொழு நோயாளர்களுக்குப் பயன் நிறைந்த புது வாழ்வு தரும் முயற்சியில் வெற்றி பெற்ற முதல்வர் பால் பிராண்ட் அவர்களே .
முதல் மருத்துவ நிலையம் , வேலூர் கிறித்துவ மருத்துவக் கல்லூரியே . எனவே தான் இங்கிலாந்து நாட்டின் அரசியாரது பிறந்தநாள் பட்டங்களைப் பெறுபவர்களி ் பால் பிராண்ட் அவர் களும் ஒருவராகின்றார் . ' ' கமாண்டர்ஷிப் , ஆர்டர்ஸ் ஆப் தி பிரிட்டிஷ் அரசு ” ( சி . பி . இ . ) என்னும் பட்டமே அவர் பெற்ற சிறப்பாகும் . இவரைப் போன்ற அறிஞர்கள் பலரை வேலூர் மருத்துவக் கல்லூரியும் , மருத்துவமனையும் பெற் றுள்ளன . நோயளிகளிடம் இவர்கள் பழகும் முறை யில் , குடும்பப் பாசம் நிலவுவதைக் காணலாம் .
நோயாளிகளின் வினாக்களுக்குப் பொறுமையோடு விடை யளிப்பது இவர்களின் இயல்பு . மருத்துவர்களின்' _ முகம் மாறினால் , நோயாளிகளின் நெஞ்சம் வாடும் என்பதை வேலூர் மருத்துவர்கள் உணர்ந்திருக்கின்றனர் . எனவே , ஓயாது உழைத்தாலும் , அவர்களின் முகத்தில் நிலவும் மலர்ச்சியும் , மகிழ்ச்சியும் ஒரு , போதும் மறைவதில்லை ; குறைவதில்லை . இப்படிப்பட்ட தனிச் சிறப்புக்களால்தான் . . . உலகின் பல பகுதிகளிலிருந்தும் , பிணியாளர் வேலூ ரை - நாடி வருகின்றனர் . எப்படிப்பட்ட நோயும் , வேலூருக்கு வந்தால் தீர்ந்துவிடும் என்னும் அசைக்க முடியாத , ஆணித்தரமான நம்பிக்கை மக்களுக்கு ஏற் . பட்டிருக்கின்றது .
இன்று , இங்கே பணிபுரிய இந்தியாவின் பிற பகுதிகளிலுமிருந்து மட்டுமன்றிப் பிற நாடுகளிலிருந்ததும் நல்லறிஞர்கள் வருகின்றார்கள் . இலங்கையிலும் , இங்கிலாந்திலுமிருந்தும் , அமெரிக்காவிலும் , ஆஸ்தி ரேலியாவிலும் , அயர்லாந்திலுமிருந்தும் , ஜெர்மனியி ' லும் , கனடாவிலும் , டென்மார்க்கிலுமிருந்தும் இங்கு , வந்து தொண்டாற்றுபவர்கள் இதை ஓர் அனைத்து நாடுகள் நிலையமாக்கிப் பெருமை சேர்க்கின்றனர் . இன்று இந்த மருத்துவ நிலையம் , வைரவிழாக் கொண்டாடி விட்ட மாபெரும் நிலையமாக விளங்கு கிறது . பொன்விழாக் கண்டு பூரித்த ஐடா அம்மையார் வைரவிழாவில் பங்கேற்று வாழ்த்துரை வழங்கும் வாய்ப்பிழந்தோமே என்று நல்லோர்கள் கலங்கினாலும் , மருத்துவமனை வாழும் வரையிலும் , ஐடாவும் இலட்சக்கணக்கானோர் இதயங்களில் கொலுவீற்றிருப்பார் என்பது உண்மை . இந்த நிலையத்தின் தேவைக்கு இன்னமும் முடி வேற்படவில்லை . வளர்ச்சிக்கு ஏற்ப நிலையத்தின்தேவைகளும் வளர்ந்து வருதல் இயற்கையே . ' ' நிதி ' மிகுந்தவர் நிதிக்குவை தரட்டும் ; நிதி குறைந்தவர் காசுகள் தரட்டும் ; ஆற்றல் மிக்கவர் உழைப்பினை நலகட்டும் ; எதுவுமற்றோர் இதய வாழ்த்துக்களைக் குவிக்கட்டும் ' ' என்ற நல்ல நோக்கத்துடன் உள்ளனர் இந் நிலையத்தவர் . வளரட்டும் நிலையத்தின் பணி ! மலரட்டும் : பிணியில்லாப் பெருவாழ்வு ! அமையட்டும்.
ஐடா அம்மையாரின் தொண்டு இம் முப்பெரும் நிலையங்களைத் தோற்றுவித்ததுடன் முடிந்து விட . வில்லை . பெண்கள் நலனுக்காகவும் , குழந்தைகள் வாழ்விற்காகவும் , வேறு வழிகளிலும் ஐடா தம்மால் செய்ய இயன்றதை எல்லாம் செய்திருக்கின்றார் . ஐடா அம்மையாருக்கும் , இளமையில் மற்றப் " பெண்களைப் போன்றே மண வாழ்வில் நாட்ட மிருந்தது . ஆயினும் நாட்கள் நகர நகர , ஐடாவின் முன்னின்ற இலட்சியமும் , மேற்கொண்ட முயற்சிகளும் , மணவாழ்வு பற்றியே சிந்திக்க வொட்டாமல் செய்து விட்டன . சீராக ஓடும் ஆற்று நீரில் எப்பொழுதோ தோன்றும் சிறு சலனமாகத்தான் திருமண ஆசை ஐடாவிற்கு ஏற்பட்டது . விரைவில் , திருமணமாகாம லேயே ஐடாவின் குடும்பம் பெரிதாகி ிட்டது ; குழந்தைகள் பலராயினர் .
88 ஆம் . மணவாழ்வில் ஈடுபடாமலேயே , ஐடா ஆயிர் மாயிரம் குழந்தைகளுக்கு அன்னையானார் ! ' என்னு டைய குழந்தை ' என்று சொல்ல ஐடா ஒரு குழந்தை யையும் வளர்த்தார் .
1903 ஆம் ஆண்டு செப்டம்பர்த் திங்களில் முகம் மதியப் பெண்ணொருத்திக்கு அழகான பெண் மக வொன்று பிறந்தது . தம் மருத்துவ மனையில் , தம் உதவியால் பிறந்த அக்குழந்தையை ஐடா அன்றாடம் சென்று பார்த்து வருவது வழக்கம் . ஒருநாள் , ஐடா குழந்தையைக் காணச் சென்றபோது , அந்தத் தாயார் குழந்தையிடம் வெறுப்பை வாரி வீசிக் கொண்டிருந்ததைக் கண்டார் . காரணம் , அக்குழந்தை ' பொல்லாத ' நேரத்தில் பிறந்த ' பெண் ' என்பது தான் . ஐடா அந்த அன்னைக்கு அறிவுரை கூறினார் . ஆனால் , அவ்வன்னையோ , இகழ்ச்சியுடன் ' ' இந்தக் குழந்தையிடம் இவ்வளவு கருணை காட்டும் நீங்களே இதை வளர்ப்பது தானே ' என்று சொல்லி விட , உடனே ஐடா அந்தக் குழந்தையை இரண்டு கைகளாலும் வாரி அணைத்துக்கொண்டார் . மருத்துவ மனையின் பெயரான மேரி டேபர் என்னும் பெயரையே அக் குழந்தைக்குச் சூட்டினார் ஐடாவின் அன்னையார் . மேரி டேபரைப் பெற்ற தாயினும் மேலான அன்பு காட்டி வளர்த்த ஐடா , அவளுக்குப் பதினாறு வயது நிறைந்ததும் , நம் இந்திய வழக்கப்படியே திருமணமும் செய்வித்து மகிழ்ந்தார் .
ஒரு கதை போல் தோன்றும் இந் நிகழ்ச்சி , ஐடாவின் தாய்மைக் குணத்தைக் காட்டும் ஒரு நிகழ்ச்சியாகும் . பெற்றாரோ , உற்றாரோ அற்ற குழந்தைகளும் , மேரி டேபரைப் போல் , பெற்றோரிருந்தும் பேணாது | விடப்பட்ட குழந்தைகளும் , ஐடாவின் அன்னை நெஞ்சைக் கவர்ந்தன . ஆதரிப்பாரின்றி அவல நிலையிலிருந்த இவ் வனாதைக் குழந்தைகளை எண்ணி வரும் ஐடா அம்மையார் ஒருமுறை " ஒரு குழந்தை , எத்தகைய தாழ்ந்த குலத்தில் பிறந்திருந்தாலும் , எத்தகைய பெற்றோருக்குப் பிறந்திருந்தாலும் , நான் அதை ஏற்றுக்கொள்ள மறுக்க மாட்டேன் . ஏனெனில் , அவர்கள் அன்பாலும் , செம்மையான சூழ் . நிலையாலும் சூழப்பட்டிருப்பின் , சிறந்தவர்களாக வளர்வார்கள் என்பதை நாமறிவோம் . நாம் அவர்களை ஏற்க மறுப்போமானால் , அவர்கள் ஆலயங்களுக்கோ , இழிந்த குடும்பங்களுக்கோ விற்கப்பட்டுத் தவறான வழிகளில் வளர்க்கப் படுவார்கள் " என்று கூறியிருக்கின்றார் . இவ்வாறு , அனாதைக் குழந்தை களின் வளர்ப்பில் பெரிதும் அக்கறை காட்டிய ஐடா , டாட் , ஹௌடன் ஆகிய இருவரின் துணையுடனும் , " குழந்தைகள் இல்லம் " ஒன்றை நடத்தி வந்தார் . . . தோட்டப் பாளையத்தில் புதிய மருத்துவமனை கட்டப் பட்டதும் , ஷீபெல் மருத்துவ மனையிலிருந்த பங்களா வில் குழந்தைகள் இல்லத்தை நடத்திவந்தார் . ஏறத் தாழ இருபது ஆண்டுகளுக்கும் மேலாக , இவ் வில்லத்தின் பொறுப்பேற்ற ஐடா , பிறகு பணமில்லாக் குறையால் , கோட்பாடுடையோர் இலவசப் பள்ளிக் கூடத்தின் பொறுப்பில் குழந்தைகளை ஒப்படைத்தார் . ஐடாவின் அன்னையுள்ளத்தின் தன்மையை . அவர்களின் இவ்வரும்பணி விளக்கும் . . குழந்தைகள் நலனில் ஐடா காட்டிய தளராத ஆர்வமே , ' சென்னை பிரசவ குழந்தை நல விடுதி ' ' யின் கிளையொன்றை வேலூரில் துவக்கக் காரணமாக அமைந்தது .
1924 இல் , ஐடாவின் முழு முயற்சியா லேயே தோன்றிய இவ்வமைப்பிற்கு ஐடாவே முதன் முதலில் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் . தாம் , தலைமைப் பொறுப்பிலிருந்து விலகிய பிறகும் , ஐடா , அதன் வளர்ச்சியில் காட்டிய ஆர்வம் குறையவில்லை . அதன் தலைவரைத் தேர்ந்தெடுப்பதிலும் , பிறவற்றி லும் தொடர்ந்து அக்கறை கொண்டிருந்தார் ஐடா . ஐடாவின் எண்ணமெல்லாம் , இந்தியப் பெண்களின் உரிமை வாழ்வைப் பற்றியே இருந்தது . இந்தியப் பெண்கள் உள்ளத்தால் - உணர்வால் - விடுதலை பெறுவதும் , உடல் நலத்துடன் இருப்பதைப் போன்றே இன்றியமையாதது என்பது ஐடாவின் கருத்து . எனவே , ஐடா , இந்தியப் பெண்கள் , தங்கள் சமையலறைக்கு அப்பால் உள்ள உலகத்தைக் கண்டு | மகிழவும் , பிற பெண்களுடன் பேசி மகிழவும் வாய்ப் பேற்படுத்தித் தரும் வகையில் , ' ' வேலூர் பெண்கள் * பொழுதுபோக்குச் சங்கம் " ஒன்றை நிறுவுவதில் பெரும் ஆர்வம் காட்டினார் . மற்றும் பலரின் ஆதரவும் இம் முயற்சிக்குக் கிட்டிற்று . துவக்கத்தில் , சங்கத்தில் சேரஅஞ்சிய பெண்கள் , நாட்கள் செல்லச் செல்ல , அச்சம் தெளிந்து , தயக்கம் தீர்ந்து , விருப்புடன் சங்க உறுப்பினராயினர் . வாரத்தில் பல நாட் குரிய ஒன்று என்பதை மறுப்பது இயலாது , ஐடாவின் முயற்சியும் சேர்ந்து உருப்பெற்ற மற்றோர் அமைப்பு , கோட்டகிரியில் உள்ள ' டாட் நினைவகம் . ' தம்முடைய ஆருயிர்த் தோழி டாட் அவர்களின் மறைவுக்குப் பிறகு , ஐடா டாடின் நினைவுச் சின்னம் ஒன்றை நிறுவுதல் வேண்டும் என்று விரும்பினார் . அதே நேரத்தில் , ' ' கோட்டகிரி மருத்துவ நண்பர்கள் சங்கம் " என்புருக்கி நோயில் இருந்து குணம் பெற்றவர்களுக்கு உதவும் பொருட்டு , கோட்டகிரியில் டாட் நினைவகம் ஒன்றை ஏற்படுத்த முடிவு செய்ததை அறிந்த ஐடா , டாட் அம்மையா ருக்கு ஏற்ற நினைவுச் சின்னம் அதுவே என்று எண்ணினார் .
எனவே பெருந்தொகை யொன்றைக் ' கொடுத்து , அதை நிறுவ உதவியதுடன் , அதன் திறப்பு விழாவையும் சிறப்புற நடத்திவைத்தார் . வே லூரைச் சுற்றிலும் தொழுநோயால் பற்றப் பட்ட மக்கள் நிறைந்த கிராமங்கள் பல இருந்தன . ஆகவே , ' தொழு நோய் தடுப்புப் பரிசோதனைகள் ' நடத்த அந்தக் கிராமங்களுக்கு நடுவில் இருந்த ' காவனூர் என்னுமிடத்தைத் தேர்ந்தெடுத்தனர் . ஐடாவிற்கு இந்தச் செய்தி மகிழ்ச்சியைத் தந்தது . ஏனென்றால் , தொழுநோயை ஒழிப்பதற்கான முயற் சியைவிட , வராமல் தடுப்பதற்கான முயற்சியே நல்ல பயன் தரும் என்பதில் அவர்களுக்க நம்பிக்கை உண்டு . எனவே , 1951 ) இல் " வேலூர் கிராமிய நல விடுதி ' ஒன்றைக் காவனூரில் திறப்பதற்கும் ஐடா உதவிசெய்தார் . விரைவில் , இதுபோன்ற அமைப் யுக்கள் பல ஏற்படுத்தப்பட்டன . ஐடாவின் உதவியால் உருப் பெற்றவைகளுள் மேற் சொன்னவை குறிப்பிடத் தக்கவை எனினும் , இவையல்லாமல் , ஐடாவால் வளர்ந்தவை இன்னும் பல உண்டு , எண்பதைக் கடந்த பின்னரும் கூட , ஐடா விற்கு ஆக்க வேலைகளில் பங்கு கொள்வதில் இருந்த ஆர்வமே பல்வகையான அமைப்புக்கள் தோன்ற ஏதுவாயிற்று எனலாம் .
No comments:
Post a Comment