Sunday, 26 April 2020

மிஷனரி வாழ்க்கை வரலாறு 1016 கிளாடிஸ் அயில்வார்ட் 1902 -

பல மிஷனரிகள் தங்கள் உயிரை துச்சமாய் எண்ணி இயேசுவின் அன்பை அறிவிக்கும் ஆவலுடன் தமக்கு நேர்ந்த எல்லா பாடுகளையும் சிரித்த முகத்துடன் ஏற்றுக்கொண்டனர். அப்படிப்பட்ட மிஷனரிகளின் வாழ்க்கை வரலாற்றை அறிந்திருக்க வேண்டியது ஒவ்வொரு கிறிஸ்துவனின் கடமையாகும். சிறிது நேரம் செலவழித்தால் ஒரு மிஷனரியின் அறிய வாழ்க்கையை அறிந்து கொள்ளலாம். கர்த்தர் துணை செய்வாராக.


1016   கிளாடிஸ் அயில்வார்ட் 1902 -

 1970 1 * நற்குணசீலி " ( The Virtuous One ) " மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு , பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி , உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது " ( மத் . 5 : 16 ) தேவன் இரகசியமாகப் பேசுவதைக்கூட உணர்ந்து கொள்ளும் கூர்மையான இதயத்தைப் பெற்றிருத்தல் கிறிஸ்தவ வாழ்க்கைக்கு இன்றியமையாததொன்று . தேவனது மெல்லிய அமர்ந்த சத்தத்தைக் கேட்டறிந்து அதற்குக் கீழ்ப்படிந்து வாழ்ந்தவர் கிளாடிஸ் அயில்வார்ட்

 அம்மையார் . சாதாரண வீட்டுப் பணிப் பெண்ணை ஆண்டவர் தனது பணியில் பயன்படுத்த முடியுமா?படிப்பில் பின்தங்கிய ஒரு பெண் அயல் நாட்டிற்குச் சென்று அருட்பணியாளராக  சேவை செய்ய முடியுமா இது போன்ற கேள்விகளுக்கு பதிலை தொடர்ந்து படியுங்கள் .   ரோமர் 11 : 29ல் கூறப்பட்டுள்ள “ தேவனுடைய கிருபை வரங்களும் , அவர்களை அழைத்த அழைப்பும் மாறாதவைகளே ” என்ற சத்தியத்திற்கு கிளாடிஸ் அயில்வார்ட் அவர்களின் வாழ்க்கை ஓர் உயிருள்ள சாட்சியாகும

் . 1902 பெப்ரவரி 24 - ல் பிறந்த இவர் தனது 14ஆம் வயதிலேயே ஒரு பணிப்பெண்ணாக வேலை செய்ய ஆரம்பித்தார் . ஓர் எளிய குடும்பத்தைச் சார்ந்த இவருக்கு சாதாரண கல்வியே கிடைத்தது . தனது 18ஆம் வயதில் கிளாடிஸ் ஓர் எழுப்புதல் கூட்டத்தில் கலந்து கொண்டார் . அக்கூட்டத்தில் ஆண்டவருக்கு ஊழியம் செய்ய முன்வருவோர் யார் என செய்தியாளர் அறைகூவல் விடுத்தார் . இதைக் கேட்டவுடன் பணிக்களம் சென்று , அருட்பணி செய்ய வேண்டும் என்கிற ஆவல் அவருடைய இதயத்தை நிரப்பியது . சீனாவில் நற்செய்தியைப் பிரசங்கிக்க வேண்டும் என்பதே தன்னைக் குறித்த தேவ அழைப்பு என்பதை அவர் உறுதியாக அறிந்து கொண்டார் . 

அவர் தனது வாலிப வயதில் சீன உள்நாட்டு அருட்பணி இயக்கத்தின் லண்டன் மாநகர மையத்தில் ( China Inland Mission ) பணி கிடைக்கும் வரை பணிப்பெண் வேலையைத் தொடர்ந்து செய்து வந்தார் . அவர்களது எதிர்பார்ப்புகளை கிளாடிஸால் நிறைவேற்ற இயலவில்லை . ஆனால் கிளாடிஸ் தேவனுக்குப் பணி புரியும் தனது தீர்மானத்தில் உறுதியுள்ளவராக , தான் செய்து வந்த வேலையின் மூலம் சிறிது பணம் சேர்த்து வைத்தார் . அவர் தனது 30 - வது வயதில் , திருமதி . ஜீனி லாசன் என்கிற 73 வயது நிரம்பிய ஒரு மிஷனெரி தன்னுடன் பணிபுரிய ஓர் இளம் பெண்ணைத் தேடிக் கொண்டிருக்கிறார் எனக் கேள்விப்பட்டார் . திருமதி . லாசன் , கிளாடிஸை ஏற்றுக் கொண்டார் . ஆனால் சீனாவுக்குச் செல்ல கிளாடிஸின் கப்பல் செலவுக்கு லாசன் அம்மையாரால் பணம் கொடுக்க இயலவில்லை . கிளாடிஸ்தான் சேமித்து வைத்திருந்த பணத்தைப் பயன்படுத்தி , சீனாவுக்கும் ரஷ்யாவுக்குமிடையே யுத்தம் நடந்து கொண்டிருந்த அந்த நாட்களில் இரயில் மூலம் ஐரோப்பா மற்றும் ரஷ்யா வழியாகப் பயணம் செய்தார் .

 1932ல் அவர்கள் யாங்செங் என்கிற பட்டணத்திற்கு வந்து சேர்ந்தார்கள் . அந்த நகரமானது பொருட்களை ஏற்றிச் செல்லும் வண்டித்தொடர்கள் ( Caravans ) இரவில் நிறுத்திச் செல்லும் இடமாக இருந்தது . திருமதி . ஜீனியும் , கிளாடிஸும் அந்தப் பட்டணத்தில் பயணியர் விடுதியை ஆரம்பிப்பதன் மூலம் அங்கு வரும் பயணிகளுக்கு நற்செய்தியை இன்னும் சிறப்பாக அறிவிக்க முடியும் என எண்ணினர் . எனவே , அவர்கள் வாழ்ந்து வந்த கட்டடத்தைப் பழுதுபார்த்து , அதைப் பயணியர் விடுதியாக மாற்றி , பயணிகளுக்கும் வண்டிகளை இழுத்து வந்த மிருகங்களுக்கும் உணவு அளித்தனர் . ஒரு வண்டித் தொடர் அவர்களது விடுதியை நெருங்கும்போது , கிளாடிஸ் ஓடிச்சென்று , முதலாவது வரும் வண்டியை இழுக்கும் மிருகத்தின் கடிவாளத்தைப் பிடித்துக்கொண்டு , அதைத் தங்களது வளாகத்திற்குள் நடத்துவார் . மீதமுள்ள மிருகங்களும் அவைகளை நடத்துபவர்களும் பின் தொடர்ந்து வருவார்கள் . ஒரு நியாயமான கட்டணத்தில் நல்ல உணவும் , படுக்கை வசதியும் மற்றும் மிருகங்களுக்கான பராமரிப்பையும் மிஷனெரிகள் அளித்தனர் .

 மாலை வேளைகளில் பயணிகளுக்கு இலவசமாக நற்செய்தி மற்றும் வேதாகம சரித்திரங்களைச் சொல்லி , அவர்களை  மகிழ்வித்தனர் . அதிவிரைவில் அவர்கள் இந்த சரித்திரங்கள் மற்றப் பயணிகளுடன் பகிர்ந்து கொண்டனர் . கிறிஸ்துவிடமும் திரும்பினர் . கிளாடிஸ் தொடர்ந்துட வாய்ப்பைப் பயன்படுத்தி , தன்னுடைய சீனமொழி அறிவை வளர்த்து வந்தார் . எதிர்பாராத விதத்தில் திருமதி . லாசன் அவர்கள் கீமே விழுந்ததால் வெகு சீக்கிரத்தில் இறந்துவிட்டார்கள் . இப்போது யாங் என்ற ஒரு சீனதேச கிறிஸ்தவ சமையல்காரருடன் சேர்ந்து , கிளாடிஸ் அந்தப் பயணியர் விடுதியை நடத்த வேண்டியதாயிற்று . சில வாரங்கள் சென்றபின் யாங்செங் நகரத் தலைவர் தனது வாகனத்தில் வந்து , கிளாடிஸ் அவர்களுக்கு சீனப் பெண்களின் கால்களைப் பரிசோதிக்கும் வேலையைத் தந்தார் . பெண்களின் பாதங்கள் சிறியதாக இருப்பதே அழகு என சீனர்கள் நம்பியதால் பெண்களின் பாதங்களைக் கட்டிவைக்கும் மூடப் பழக்கம் சீனாவில் இருந்தது . சீன அரசாங்கம் சீனப் பெண்களின் கால்களைக் கட்டுதல் என்ற பழைய சீன பழக்கத்தை தடை செய்திருந்தது . எனவே , கால்கள் கட்டப்படாத , பெண்கள் தங்கும் பகுதிகளுக்குச் சென்று , அவ்வேலையைச் செய்ய ஒரு பெண் தேவைப்பட்டது . இந்த வேலைக்கு கிளாடிஸ் பொருத்தமானவராக இருந்தார் . இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி , கிளாடிஸ் நற்செய்தியைத் தாராளமாகப் பகிர்ந்து கொண்டார் . 

ஒரு முறை சிறைக் கைதிகளிடையே ஏற்பட்ட பிரச்சனையைத் தீர்ப்பதற்காக அந்த சீன நகரத் தலைவர் கிளாடிஸை அழைத்தார் . கிளாடிஸ் சிறைக் கைதிகளை அமைதிப்படுத்தி , அவர்களது கருத்துகளை , சீனத் தலைவருக்கு எடுத்துரைத்தார் . இதன் விளைவாக , சிறைச்சாலையில் நெசவாலைகளும் , மாவு அரைக்கும் இயந்திரமும் நிறுவப்பட்டு , சிறைக் கைதிகள் வேலை செய்து , பணம் சம்பாதித்து , கூடுதலாக உணவு வாங்குவதற்கு வாய்ப்பு கிட்டியது . கிளாடிஸின் உதவி செய்யும் மனப்பான்மையையும் பயமற்ற தன்மையையும் கண்ட மக்கள் அவருக்கு “ நற்குணசீலி " ( The Virtuous one ) என்று பொருள்படும் “ அய் - வை - டெ " என்ற பெயரை அவருக்குச் சூட்டினார்கள் .

 ஒரு முறை ஒரு பெண் , உடல் முழுவதும் புண்கள் நிறைந்திருந்த ஒரு குழந்தையை இழுத்துக் கொண்டு செல்வதை கிளாடிஸ் கவனித்தார் . அக்குழந்தை அந்தப் பெண்ணின் சொந்தக் குழந்தை அல்ல என்றும் , பிச்சை எடுப்பதற்காக அந்தப் பெண் அந்தக் குழந்தையை பயன்படுத்தினாள் எனவும் தெரிய வந்தது . கிளாடிஸ் அந்தப் பெண் குழந்தையை 9 பென்ஸ் கொடுத்து விலைக்கு வாங்கி , அந்தப் பிள்ளைக்கு “ நைன் பென்ஸ் " என்று பெயரிட்டார் . விரைவில் இன்னும் ஒரு சிறிய அனாதைக் குழந்தை “ லெஸ் ” என்ற பெயருடன் கிளாடிஸின் குடும்பத்தில் சேர்க்கப்பட்டது . யாங்செங் தலைவர் எப்போதும் கிளாடிஸை தனது அரண்மனைக்கு வரவேற்று , அடிக்கடி உரையாற்றி வந்தார் . 

ஆனால் அவர் கிளாடிஸின் மதத்தை விரும்பவில்லை . 1936ஆம் வருடம் கிளாடிஸ் அதிகாரப்பூர்வமான ஒரு சீனக் குடிமகளாக மாறினார் . 1938ல் சீனாவுக்கும் ஜப்பானுக்கும் யுத்தம் ஆரம்பித்தது . ஜப்பானிய விமானங்கள் யாங்செங் பட்டணத்தின் மீது குண்டு வீசித் தாக்கின . தப்பிப் பிழைத்தவர்கள் மலைகளுக்கு ஓடினர் . யாங்செங் நகரம் ஜப்பானிய படையினரால் கைப்பற்றப்பட்டது . அந்நகரத் தலைவர் சிறைக் கைதிகளை என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து கிளாடிஸிடம் ஆலோசனை கேட்டார் . கிளாடிஸின் ஆலோசனைப்படி ஒவ்வொருவரிடமும் உறுதிப் பத்திர வாக்குறுதி பெற்றுக் கொண்டு கைதிகள் எல்லோரும் விடுதலை செய்யப்பட்டனர் . ஜப்பானிய தாக்குதல் நடந்து கொண்டிருந்த வருடங்களில் கிளாடிஸின் பயணியர் விடுதியானது 20 அனாதைகளுக்கும் 30 முதல் 40 காயம் அடைந்த சீனப் போர் வீரர்களுக்கும் ஒருபுகலிடமாக இருந்தது . 

சீன எதிர்ப்பாளர்களில் ஒருவரான கர்னல் லின்னன் கிளாடிஸைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்கு ஜப்பான் ஒரு வெகுமதியை அறிவித்து உள்ளது என்பதைக் கூறி அவரை எச்சரித்தார் . எனவே , கிளாடிஸ் ஜப்பானியரிடமிருந்து தப்புவதற்காகத் தன்னிடம் இருந்த நூறு குழந்தைகளோடு நூறு மைல்களுக்கு அப்பால் இருந்த சியான் என்ற சீனப் பகுதிக்குப் பயணமானார் . 27 நாட்கள் மலைகளின் வழியாகப் பயணம் செய்து , கிளாடிஸும் குழந்தைகளும் சியானில் இருந்த அனாதை விடுதியை அடைந்தனர் . அவர்கள் மஞ்சள் நதியை தெய்வாதீனமாகக் கடந்து , சியான் சென்றடைந்தவுடன் , கிளாடிஸ் காய்ச்சலினாலும் அளவுக்கதிகமான களைப்பினாலும் சுருண்டு விழுந்தார் .

 அவர் குணம் அடைந்த பின்பு , சியானில் தன்னுடைய ஊழியத்தைத் தொடர்ந்தார் . கிளாடிஸ் அங்கு ஒரு சபையை ஆரம்பித்து , கிராமங்களிலும் , சிறைச்சாலைகளிலும் , வியாதியுள்ளவர்கள் மத்தியிலும் நற்செய்தியை அறிவித்தார் . திபெத்திய எல்லையின் அருகில் உள்ள ஜெசுவான் என்ற இடத்தில் தொழுநோயாளிகளுக்கான ஒரு குடியிருப்பை கிளாடிஸ் ஏற்படுத்தினார் . யுத்தத்தின்போது அடைந்த காயங்களால் அவரது உடல் மிகவும் பலவீனப்பட்டது . 

1947ல் கிளாடிஸும் மற்ற மிஷனெரிகளும் சீனாவைவிட்டு வெளியேறக்  காலம் முழுவதும் அவருக்கு சேவை செய்ய அவளைப் பயன்படுத்தினார் . வாசிக்கிற நீங்களும் உங்கள் வாழ்வை ஆண்டவருக்கு அர்ப்பணம் செய்ய ஆயத்தமா ? 21 - ஆம் நூற்றாண்டில் தேவனுக்கு ஊழியஞ்செய்தல் என்பது பல்வேறு கோணங்களில் வளர்ச்சியடைந்துள்ளது . நாம் கிளாடிஸ் அம்மையாரைப் போல சமுதாயத்தின் சரீரப்பிரகாரமான மற்றும் ஆவிக்குரிய தேவைகளைப் பூர்த்தி செய்யும் பணியில் முன்னேறிச் செல்வோம் .

No comments:

Post a Comment