Sunday, 26 April 2020

மிஷனரி வாழ்க்கை வரலாறு 1018 ஃபேனி க்ராஸ்பி 1820 - 1915

பல மிஷனரிகள் தங்கள் உயிரை துச்சமாய் எண்ணி இயேசுவின் அன்பை அறிவிக்கும் ஆவலுடன் தமக்கு நேர்ந்த எல்லா பாடுகளையும் சிரித்த முகத்துடன் ஏற்றுக்கொண்டனர். அப்படிப்பட்ட மிஷனரிகளின் வாழ்க்கை வரலாற்றை அறிந்திருக்க வேண்டியது ஒவ்வொரு கிறிஸ்துவனின் கடமையாகும். சிறிது நேரம் செலவழித்தால் ஒரு மிஷனரியின் அறிய வாழ்க்கையை அறிந்து கொள்ளலாம். கர்த்தர் துணை செய்வாராக.


1018       ஃபேனி க்ராஸ்பி 1820 - 1915

 பார்வையற்றவர் ஆனால் . புகழ் பெற்றவர் ( Blind but not Bound ) "

 கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி , என் பலவீனங்களைக் குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மை பாராட்டுவேன் . அந்தப்படி நான் பலவீனமாயிருக்கும்போதே பலமுள்ளவனாயிருக்கிறேன் " . ( 2கொரி . 12 : 9,10) இரு கால்களும் முடமான ஒருவனைக் காணும்வரை , சிறுவன் ஒருவன் தனக்கு ஒரு ஜோடி புதுச் செருப்பு வேண்டுமென அழுது கொண்டிருந்தானாம் . நாம் மாற்றுத் திறனாளிகளைக் காணும்போது அவர்களுக்காகப் பரிதபிக்கிறோம் . அவர்களை ஊக்குவிக்கிறோம் . ஆனால் கண் பார்வையற்ற ஃபேன்னி கிராஸ்பியின் வாழ்க்கையோ நமக்கு ஒரு பெருஞ்சவாலாக உள்ளது !

 கடப்பதற்கரிய மிகக் கடினமான தடைகளையும் கடந்து , வெற்றி மற்றும் புகழின் உயரங்களுக்கு ஏறின பெண்மணி ஒருவர் உண்டென்றால் அவர் ஃபிரான்செஸ் ஜேன் கிராஸ்பியாகத்தான் இருக்க வேண்டும் .

 அவர் ஃபேனி ஜெ . கிராஸ்பி என்ற புனைப் பெயரோடு பிரபலமானார் . மேலோக அழகோடும் , தெய்வீகப் பொருளோடும் அமைந்த இவரது கவிதைகளும் , ஞானப்பாடல்களும் முதிர்ச்சியடைந்த ஆண்கள் மற்றும் பெண்கள் கண்களில் கண்ணீர் பெருகச் செய்துள்ளன . 

கிறிஸ்தவ உலகின் தலைச் சிறந்த ஞானப்பாடல் ஆசிரியர்களில் இவரும் ஒருவர் .

 1820 - ம் ஆண்டு மார்ச் 24 - ம் நாள் நியூயார்க் நகரத்தின் தென் கிழக்குப் பகுதியில் பிறந்தார் ஃபேனி கிராஸ்பி . சிறு வயதிலேயே போலி மருத்துவரொருவரின் பெருந்தவறினால் பார்வையற்றவரான ஃபேனி தன் வாழ்நாள் முழுவதும் பார்வையற்றவராகவே இருந்துவிடக் கூடிய நிலை ஏற்பட்டது . இது அவரது ஐந்தாம் வயதில் Dr . வேலன்டைன் மாட்கன் என்கிற பிரசித்திபெற்ற கண் மருத்துவரால் உறுதி செய்யப்பட்டது .

 இப்படிப்பட்டஅங்கவீனக் குறைபாடு இருந்த போதிலும் தனது எட்டாவது வயதில் முதல் கவிதை எழுத ஆரம்பித்தார் ஃபேனி . “ ஓ எத்தனை மகிழ்ச்சியான ஆன்மா நான் ! பார்க்க முடியாதிருந்தும் , இப்பூவுலகில் நான் மனநிறைவுள்ளவளாக இருக்கத் தீர்மானித்து விட்டாள் . பிறர் அனுபவிக்க முடியாத  எத்தனையோ ஆசீர்வாதங்களை நான் அனுபவிக்கிறேன் . நான் பார்வையற்றவளாயிருக்கும் காரணத்திற்காக கதறுவதும் , விம்முவதும் என்னால் முடியாது : நான் அப்படிச் செய்யமாட்டேன் ! " 

- இது தான் அவள் எழுதிய முதல் கவிதை . ஃபேனியின் தகப்பனார் இறந்தபின் அவரது தாயார் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டியதாயிற்று . ஃபேனியின் பாட்டிதான் அவரது வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் . அவரது உதவியுடன் ஃபேனி இயற்கையைப் பற்றியும் , பரலோகத்தைக் குறித்தும் அதிகமாகக் கற்றுக் கொண்டதோடு , எண்ணற்ற வேத வசனங்களையும் மனப்பாடம் செய்தார் .

 இவைகளிலிருந்தே அவர் தமது புகழ்வாய்ந்த ஞானப் பாடல்களுக்கான அகத்தூண்டுதல் , கருப்பொருள்கள் , பாடல் வார்த்தைகள் ஆகியவற்றைப் பெற்றுக் கொண்டார் . பார்வையற்ற ஃபேனிக்கு பாட்டி அவரது கண்களாகத் திகழ முடிவு செய்தார் . 

அவர் ஃபேனியிடம் மேகங்களின் திரட்சியைக் குறித்தும் , அவை தங்களது உருவத்தையும் , வடிவத்தையும் எவ்விதம் மாற்றிக் கொண்டிருக்கின்றன என்பதைப் பற்றியும் பேசினார் . தேவன் உண்டாக்கின அழகான சந்திரனைப் 1835ஆம் ஆண்டு மார்ச் 3 ஆம் தேதியன்று ஃபேனி மகிழ்ச்சியுடன் வண்டியில் ஏறி , நியூயார்க்கிற்குப் பயணம் செய்தார் . அங்கே பார்வையற்றோர் பள்ளியில் 12 ஆண்டுகள் மாணவியாகவும் , 11 ஆண்டுகள் ஆசிரியையாகவும் , மொத்தம் 23 ஆண்டுகள் செலவிட்டார் . தனது குழந்தைப் பருவத்திலிருந்தே கவிதை எழுதும் ஆர்வம் அவருக்குள்ளிருந்தது . அவரது தோழிகளோ , ஆசிரியர்களோ அவரை ஊக்குவிக்கவில்லை . ஆனால் முன் பின் தெரியாத அந்நியர் பலர் அவரை ஊக்குவித்தனர் . 

ஒரு நாள் வில்லியம் கல்லென் பிரையன்ட் என்பவர் ஃபேனியின் பள்ளிக்கு வந்தபோது . அவரது கவிதைகள் சிலவற்றை வாசித்தபின் அவரை ஊக்குவித்தார் . 

ஒரு முறை ஒரு மருத்துவர் இவர்கள் பள்ளிக்கு வந்து கண்பார்வையற்ற மாணவர்களின் தலைகளை பரிசோதித்தார் . அவர் ஃபேனியிடம் வந்த போது . அவர் பாடல் எழுதும் புலமை உள்ளவர் என்றும் , ஒரு நாள் நீங்கள் இந்த வாலிபப் பெண்ணின் பாடல்களைக் கேட்பீர்கள் என்றும் கூறினார் .

 அந்த நேரத்திலிருந்து அவரிடமிருந்த புலமைஆற்றல் பெருக்கெடுத்து ஓடத் தொடங்கியது . பல காலமாக ஞானப் பாடல்களை எழுதுவதே தனது வாழ்வின் பணி என்று ஃபேனி உணர்ந்திருந்ததால் , அவர் சொன்ன வார்த்தைகள் ஃபேனிக்குப் பெரும் மகிழ்ச்சியளித்தன . அந்த மருத்துவரின் வார்த்தைகளால் ஃபேனி அதிகமாக உற்சாகப்பட்டாள் . நியூயார்க் பார்வையற்றோர் பள்ளியில் ஃபேனி இருந்த நாட்களில் குரோவர் கிளீவ்லேண்ட் என்பவர் உயர் கண்காணிப்பாளராயிருந்தார் . அவர் ஃபேனி 16 வயதுடையவராயிருந்த போது அவரது கவிதைகளை எல்லாம் நகல் எழுதிக் கொடுத்து உதவி புரிந்தார் . பின் நாட்களில் குரோவர்  கிளீவ்லேண்ட் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அதிபரான போது , ஃபேனி அதிகமாய் மகிழ்ச்சியடைந்தார் !

 ஃபேனியின் 23வது வயதில் அவரது பள்ளியிலிருந்து ஒரு குழு அமெரிக்கக் ( Congress ) சட்டசபைக்கு அனுப்பப்பட்டபோது அவர் குடியரசு காங்கிரசின் பார்வையற்ற ஒருவிருந்தினரானார் . காங்கிரசுக்குப் புகழாரமாக ஃபேனி இயற்றி வாசித்த கவிதையும் , ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்குப் புகழ்மாலையாக திட நம்பிக்கையுடன் அவர் எழுதி வாசித்த கவிதைகளும் அந்த சபையில் அமர்ந்திருந்தோரின் கன்னங்களில் கண்ணீர் வழிந்தோடச் செய்தன . அதுமுதல் ஜார்ஜ் வாஷிங்டனைத் தவிர மற்ற அனைத்து அமெரிக்க அதிபர்களை அறியவும் பலரோடு இனிய நட்புறவு கொள்ளவும் ஃபேனிக்கு வாய்ப்பு கிடைத்தது .

 1844 - ல் " பார்வையற்ற பெண் மற்றும் அவளின் கவிதைகள் " ( A Blind Girl and other Poems ) என்ற தலைப்புடன் அவரது கவிதைகளின் முதல் வெளியீடு வெளிவந்தது . 

1849 - ல் " Monterey and other poems " என்ற நூல் வெளிவந்தது . 1858இல் “ கொலம்பியாவின் மலர்ச்செண்டு " ( A Wreath of Colmbia ' s Flowers ) வெளியிடப்பட்டது . 

1853 முதல் 1858 வரை அவர் பல பாடல்களை எழுதினார் . அவற்றிற்கு ஜார்ஜ் எஃப் ரூட் என்பவர் இசையமைத்தார் . “ புல்வெளியில் மலரான ரோசலின் ” ( Rosaline the Praise Flower ) “ ஹேஸல் டெல் " ( Hazel dell ) மற்றும் “ காற்றில் வரும் நாதம் ” ( There ' s is Music in theAir ) ஆகியப் பாடல்கள் மிகப் புகழ்பெற்றன . தனது 20வது வயதில் இசையில் ஆர்வமிக்க  பார்வையற்ற மாணவரான அலெக்சாண்டர்வேன் அல்ஸ்டைன் என்பவரை ஃபானி நேசித்தார் . அவரும் ஓர் ஆசிரியரானார் . அவர்களது நட்பு 15 வருடங்கள் நீடித்தது . இறுதியில் ஃபேனியின் 37வது வயதில் அவர்களது திருமணம் நடைபெற்றது . அவர்களது மண வாழ்வு ஒரு மகிழ்ச்சியான வாழ்வாயிருந்தாலும் அவர்களது ஒரே குழந்தை விரைவில் மரித்துவிட்டது .

 “ இயேசுவின் கைகள் காக்க ” ( Safe in the Arms of Jesus ) என்ற புகழ் பெற்ற பாடல் எழுதுவதற்கான உள்ளுந்துதலை ஒருவேளை அவரது குழந்தையின் மரணம் கொடுத்திருக்கலாம் . வில்லியம் பிராட்பரி என்ற புகழ்பெற்ற ஓர் இசையமைப்பாளரை ஃபேனி சந்தித்தபோது ஒரு ஞானப்பாடல் எழுதுமாறு அவர் ஃபேனியை கேட்டுக் கொண்டார் . 

இது 1864 - ல் நிகழ்ந்தது . அது முதல் ஃபேனி ஆயிரக்கணக்கான ஞானப்பாடல்களை இயற்றத் தொடங்கினார் . அவரது 8000 பாடல்களுக்கு இசையமைக்கப்பட்டது . 10கோடி பிரதிகளுக்கும் அதிகமாக அவரது பாடல்கள் அச்சிடப்பட்டன . ஃபேனி 200 புனைப் பெயர்களைப் பயன்படுத்தினார் . 

ஒரு நாளில் 7 ஞானப்பாடல்களை இயற்றினார் . பல இசையமைப்பாளர்கள் அவரது பாடல்களுக்கு இசையமைத்தனர் . 

ஒரு விந்தையான காரியம் என்னவென்றால் , ஃபேனி கிறிஸ்துவிடம் இத்தனை பக்தியுடையவராயிருந்தபோதிலும் , 1851 ஆம் ஆண்டு தனது 31 வயதில் நியூயார்க்கிலுள்ள பழமை வாய்ந்த “ ஜான் ஸ்ட்ரீட் மெத்தடிஸ்டு சபை " ( John Street Methodist Church in NewYork ) யில் நடந்த எழுப்புதல் ஆராதனையில் கலந்து  மனந்திரும்புதலைப் பெறாதிருந்தார் . அதன் பின்பு அதே சபையிலேயே சேர்ந்து கொண்டார் . இதோ அவரது அருமையான பாடல்களில் சில : 

“ புயல் காற்றில் மறைவிடம் " ( A Shelter in the time of Storm ) , “ என் மீட்பர் என்னை முற்றும் நடத்துகிறார் ” ( All the way my Saviour leads me ) , இயேசுவை நம்பி பற்றிக் கொண்டேன் " ( Blessed Assurance ) , “ உம்மிடம் நெருங்கி " ( ' Close to Thee " ) , “ அவர் என் ஆத்துமாவை மறைத்து வைக்கிறார் " ( ' He hideth my soul " ) , “ திவ்ய அன்பின் சத்தத்தை இரட்சகா " ( ' Tam Thine O Lord " ) “ இயேசுவே ! கல்வாரியில் என்னை வைத்துக் கொள்ளும் " ( " Jesus keeps me near the cross " ) , " கெட்டோனை இரட்சியும் " ( " Rescue the perishing " ) போன்றவை . " இயேசுவின் கைகள் காக்க " என்ற பாடலே ஃபேனியின் ஞானப் பாடல்களிலெல்லாம் தலை சிறந்தது என சிலர் கருதினர் . “ எனது பத்தொன்பதாம் வயதில் இருந்ததைக் காட்டிலும் எனது தொண்ணுறாவது வயதில்தான் பரிசுத்த வேதாகமத்தின் மீதும் அதின் பரிசுத்த சத்தியங்களின் மீதும் எனது நேசம் அதிக வலுவுள்ளதாகவும் , விலையேறப் பெற்றதாகவும் இருக்கிறது " என்று தனது 90 வயதில் ஃபேனி கூறினார் . தனது மனநிலை . விருப்பம் , மற்றும் நாவு ஆகியவற்றைக் காத்துக் கொண்டதே அவரது நீண்ட ஆயுளுக்கான இரகசியம் என ஃபேனி கூறினார் . “ என்னிடம் உங்கள் பரிதாப உணர்ச்சியைக் காட்டாதீர்கள் . இவ்வுலகில் உயிர் வாழ்பவர்களுக்குள் நான்தான் மிக மகிழ்ச்சியான நபர் " என அவர் கூறுவதுண்டு . 

அவர் தனது மரணம்வரை சுறுசுறுப்பாய்ச் செயல்படுகிறவராயிருந்தார் . திருமதி . பூத் என்ற பெண்மணியுடன் கனக்டிகட்டில் உள்ள பிரிட்ஜ்போர்ட் என்ற இடத்தில் தனது இறுதி நாட்களைச் செலவிட்டார் . திருமதி . பூத் அவரைப் பராமரித்து வந்தார் . ஃபேனி தனது வாழ்நாட்களின் இறுதி இரவிலே தனது நண்பர் ஒருவருக்கு ஆறுதலான கடிதம் ஒன்றைச் சொல்லச் சொல்ல மற்றொருவர் எழுதினார் . 

மறுநாள் 1915 - ம் ஆண்டு பெப்ரவரி 12 - ம் நாள் தனது சாட்சியை ஃபேனி அம்மையார் பகிர்ந்து கொண்ட போது : ' ' நான் பார்வையற்ற வளாயிருப்பதற்காக சற்றும் வருந்தவில்லை . ஏனெனில் , நான் நித்திய வீட்டிற்கு செல்லும்போது , என் கண்கள் திறக்கப்படும் . அப்பொழுது என் கண்களால் முதன் முதலில் என் இரட்சகரைக் காண்பேன் " என்றாள் .

 தனது 95வது பிறந்த நாளைக் காண்பதற்குச் சற்று முன்பாக , அதிகாலை மூன்று மணியளவில் அவர் தனது மீட்பரின் கரங்களில் போய்ச் சேர்ந்தார் . 

ஃபேனி கிராஸ்பியின் வாழ்க்கைப்பாதை தடைகள் நிறைந்ததும் , கரடுமுரடானதுமாய் இருந்தது . எனினும் அவரது அசைக்க முடியாத விசுவாசமும் , அன்பும் , நீடிய பொறுமையும் . அவர் ஆயிரக்கணக்கான பாடல்கள் மூலம் தேவனுக்குச் சேவைபுரிய வழிவகுத்தன ! 

No comments:

Post a Comment