Thursday, 30 April 2020

Christian Missionary History Tamil Part 7

கீர்த்தனைக் கவிஞர் ஜான் பால்மர் (1812-1883) பெத்தலையில் பிறந்தவரைப் போற்றித் துதி மனமே, ஓசன்னா பாடுவோம் ஏசுவின் தாசரே, இயேசுவே கிருபாசனப்பதியே, உன்றன் சுயமதியே நெறியென்றுகந்து சாயாதே... இந்த பாடல்களை அறிந்திராத கிறிஸ்தவர்கள் இலர் என்று சொல்லலாம். இந்த பாடல்களை இயற்றிய கன்னியாகுமரி மாவட்டக் கீர்த்தனைக் கவிஞர்களுள் முதன்மையானவரான ஜான் பால்மர்-ன் வாழ்க்கை வரலாறை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

இவர் நாகர்கோவிலிலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவிலுள்ள மயிலாடி என்னும் ஊரில் 1812 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15 ஆம் நாள் பிறந்தார். இவ்வூரில் தான் தென் திருவிதாங்கூரின் முதல் சீர்திருத்த ஆலயம் 1809 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இச்சபை குமரி மாவட்டம் மற்றும் தென்கேரளத் திருச்சபைகளுக்குத் தாய்ச்சபையாக விளங்குகிறது.

ஜான் பால்மரின் தந்தையார் ஞானப்பிரகாசம், தென்திருவிதாங்கூரின் முதல் கிறிஸ்தவரான மகாராசன் வேதமாணிக்கம் தேசிகரின் நெருங்கிய உறவினர். ஆனால் வேதமாணிக்கம் தேசிகரைப் போல் கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளாதவர். வேதமாணிக்கம் தேசிகர் கன்னியாகுமரி மாவட்டத்தின் முதல் கிறிஸ்தவர் எனும் பெருமைக்குரியவர்.

இவருடைய அழைப்பின் பேரிலேயே தரங்கம்பாடியிலிருந்த ஜெர்மன் நாட்டு மிஷனெரி அருள்திரு. ரிங்கல்தௌபே மயிலாடிக்கு வந்து திருப்பணியாற்றினார் என்பது குறிப்பிடத் தக்கது. வேதமாணிக்கம் தேசிகரின் மரபில் வந்த பலரும் மிக உயர்வான நிலையை அடைந்ததுடன் இறைப்பணியுடன் கிறிஸ்தவ இலக்கியப் பணிகளும் செய்துள்ளனர். இவர்களுள் ஜான் பால்மர், தேவவரம் முன்ஷியார், அருள்திரு. சி. மாசிலாமணி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். வேதமாணிக்கம் தேசிகர் கிறிஸ்தவ சமயத்தைத் தழுவியதால் அவரை வெறுத்து

ஞானப்பிரகாசம் ஆத்திரமடைந்து வேதமாணிக்கம் தேசிகரைச் சாபமிட்டு அவருக்கு எட்டு நாட்களுக்குள் நல்லதொரு பாடம் கற்பிப்பதாகக் கூறினார். எட்டு நாட்களுக்குப் பின்பும் தனது சாபம் மகாராசன் வேதமாணிக்கம் தேசிகரை நெருங்காததால் ஆத்திரம் அடைந்த ஞானப்பிரகாசம் முப்பது நாட்களுக்குள்ளாக வேதமாணிக்கம் இவ்வுலகில் உயிருடன் இருக்கமாட்டார் என மீண்டும் சாபமிட்டார். முப்பது நாட்கள் கழிந்த பின்னரும் எதுவும் நடை பெறவில்லை.

வேதமாணிக்கம் தேசிகரின் பின்னிலைமையானது முன்னிலைமையைக் காட்டிலும் ஆன்மீக உற்சாகத்துடன் சிறப்பாகவே அமைந்தது. எனவே, தம் தோல்வியை ஞானப்பிரகாசம் ஒப்புக்கொண்டார். மகாராசன் வேதமாணிக்கம் தேசிகரின் தெய்வமே உண்மையான தெய்வம் என்பதை உணர்ந்து இயேசு கிறிஸ்துவைத் தம் சொந்த மீட்பராக ஏற்றுக் கொண்டார்.

ஞானப்பிரகாசத்திற்குப் பால்மர் எனவும், அவரது மகனுக்கு ஜான் பால்மர் எனவும் அருள்திரு. ரிங்கல்தௌபேயால் திருமுழுக்குக் கொடுக்கப்பட்டது. ஜான் பால்மரின் தந்தையார் மிஷன் வயல்களுக்கு மேற்பார்வையாளராகப் பணிபுரிந்தார். இன்றும் இவரது குடும்பத்தினர் அனைவரும் தங்கள் பெயருடன் பால்மர் என்னும் பெயரை இணைத்துள்ளனர்.


கல்வி:

தமிழிலக்கியத்தில் தேர்ச்சி பெறத் தமிழ்ப் பண்டிதர் திருவம்பலத் திண்ணமுத்தம் பிள்ளையிடம் ஆரம்பக் கல்வியும் தொடர்ந்து நாகர்கோவில் இறையியல் பள்ளியில் திருமறைக் கல்வியும் பயின்றார். தமிழ், ஆங்கிலம், மலையாளம், வடமொழி மற்றும் கிரேக்க மொழி ஆகிய பாடங்கள் அங்கு கற்றுக் கொடுக்கப்பட்டன. ஜான் பால்மர் இறையியலில் அதிக நாட்டம் கொண்டு விளங்கியதால் அவர் தந்தை உயர் கல்விக்காகச் சென்னைக்கும் பின்னர் யாழ்ப்பாணத்திலிருந்த வேதசாஸ்திரக் கல்லூரிக்கும் அனுப்பி வைத்தார். உயர் கல்வியை முடித்து மயிலாடிக்குத் திரும்பிய ஜான் பால்மரை மிஷனெரி அருள்திரு. மால்ட் தமக்கு எழுத்தராக நியமித்தார். தொடர்ந்து நாகர்கோவிலில் புதிதாக நிறுவப்பட்ட அச்சுக்கூடத்தின் பணிகளைக் கவனிக்கும் பொறுப்பாளராகவும் நியமனம் செய்யப்பட்டார்.

ஆரம்பகாலப் பணி: ஜான் பால்மர் 1830 ஆம் ஆண்டு ஜூலை ஐந்தாம் நாள் பேரின்பம் அம்மாளை வாழ்க்கைத் துணைவியாக்கினார். இத்தம்பதியர்க்கு இரண்டு ஆண் பிள்ளைகள் பிறந்தனர். நாகர்கோவிலில் மிஷனெரியாகப் பணி செய்து வந்த அருள்திரு. மால்ட்டுக்கு ஊழியத்தில் துணை செய்யும் பொருட்டு அருள்திரு. ஆடிஸ் அனுப்பப்பட்டபோது அவருக்குத் தமிழ் கற்றுக் கொடுக்கும் பணியில் அமர்த்தப்பட்டார். பின்னர் அருள்திரு. ஆடிஸ் அவர்களுடன் கோயம்புத்தூர் பகுதியில் நற்செய்தி ஊழியத்தை செய்து, ஓராண்டு நற்செய்தி ஊழியத்திற்குப் பின் குடும்பத்துடன் நாகர்கோவிலுக்குத் திரும்பினார்.

1845 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21 ஆம் நாள் இலண்டன் மிஷன் சங்கத்தின் 50ஆவது ஆண்டு விழா மயிலாடியில் நடைபெற்றது. அச்சிறப்புத் திருநாளில் தாழ்த்தப்பட்ட மக்களிடம் ஊழியம் செய்வதற்காகக் "கெம்பீர சத்தம்"என்னும் குழு அமைக்கப் பட்டது. அக்குழுவில் ஜான் பால்மரும் உறுப்பினராய் இருந்தார். அக்குழுவின் முயற்சியினால் நாகர்கோவில் சேகரத்தின் வடபாகத்திலுள்ள புளிக்குடி, காட்டுப்புதூர்,ஞாலம், அரசன்குழி, தாழக்குடி என்னும் கிராமங்களில் சபைகள் நிறுவப் பட்டன. ஜான் பால்மர் கவிபாடுவதுடன் புதிய சபைகளை நிறுவி ஊழியமும் செய்து வந்தார்.


நற்செய்தி ஊழியம்:

பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்தியா முழுவதிலும் குறிப்பாகத் தென்திருவிதாங்கூர் பகுதியில் சாதிக்கொடுமை தலைவிரித்தாடியது. இதன் காரணமாக ஒடுக்கப்பட்ட, உரிமை மறுக்கப்பட்ட மக்கள் கிறிஸ்தவ மதத்தில் சேர்ந்தனர். உயர்சாதிக்காரர்கள் என்று தங்களைக் கூறிக் கொண்டிருந்தவர்கள், ஏழை மக்கள் கிறிஸ்தவ மதத்தில் சேர்வதைப் பேரிழப்பாகக் கருதினர். இச்சூழலில், நாகர்கோவிலிலுள்ள கிருஷ்ணன் கோவில் என்னுமிடத்திற்கு நற்செய்தியைச் சொல்ல ஜான் பால்மர் சென்றார். உயர்சாதி எனத் தங்களைத் தாங்களே சொல்லிக் கொண்ட இந்துக்கள் அப்பகுதியில் அதிகமாக வாழ்ந்து வந்தனர். விக்கிரகங்கள் யாவும் கல், பித்தளை என்று ஜான் பால்மர் சொல்வதைக் கேட்ட அங்குள்ள பூசாரிக்குக் கோபம் ஏற்பட்டு இருவருக்கும் வாக்குவாதம் உண்டாயிற்று. எங்கள் தெய்வங்கள் உண்மையானவை என்பதை அறிந்து கொள்வாய் எனச் சூளுரைத்துச் சபித்தார்.

ஜான் பால்மர் பூசாரியின் சவாலை ஏற்றுக் கொண்டு வீடு திரும்பினார். பூசாரியின் கூற்றுப்படியே அன்றிரவு பேய் ஒன்று பயங்கரத் தோற்றத்துடன் ஜான் பால்மர் முன் தோன்றி "எங்கள் தெய்வங்களைப் பழித்தவன் நீ தானே" என்று அவரது கழுத்தில் தன் பத்து விரல்களையும் பதித்துக் கொல்ல முயன்றது. கவிஞர் உடனே பத்துக் கற்பனைகளை ஒன்றன்பின் ஒன்றாகச் சொல்ல, ஒரு கற்பனைக்கொரு விரலாக பேயின் விரல்கள் அகன்றதாம்.


கீர்த்தனைகள் பாடிய விதம்:

கீர்த்தனைகளை இயற்றுவதிலும், இராகங்களைக் கற்றுக் கொள்வதிலும் மிகுந்த ஆர்வம் கொண்ட ஜான் பால்மர் பக்திப் பரவசம் ஊட்டும் பாடல்களால் இறைவனை மகிமைப்படுத்தி வந்தார். திருவனந்தபுரத்திலுள்ள பத்மநாப சுவாமி கோவிலில் அதிகாலை நடக்கும் வழிபாட்டின்போது நாதசுர இசை ஒலிக்கும். அக்காலத்தில் சாதிக் கட்டுப்பாடும் மதவைராக்கியமும் உச்சகட்டத்தில் இருந்தன.

ஜான்பால்மர் அக்கால இந்துமத ஆலய ஒழுங்குமுறையின்படி இந்துக் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படாத குலத்தைச் சார்ந்தவர். கீர்த்தனைகளை இயற்ற இராகம் மிகவும் இன்றியமையாதது. இராகங்களைக் கற்றுக் கொள்ள அதிகாலை வேளையில் தன் தலையைத் துணியால் மறைத்துக் கொண்டு கோயிலினுட் சென்று, பல புதிய இராகங்களைக் கற்று வந்து அதன் அடிப்படையில் இயேசு கிறிஸ்துவைப் பற்றிய கீர்த்தனைகளை இயற்றுவது இவரது வழக்கம்.

தம் உயிரையும் பொருட்படுத்தாது இறைமகன் இயேசு கிறிஸ்துவின் புகழ்பாட புதிய இராகங்களைக் கற்றுவந்த ஜான்பால்மரின் துணிச்சல் பாராட்டுக்குரியது.


ஜான் பால்மரின் மறைவு:

இத்தகைய இனிய படைப்புகளைக் கிறிஸ்தவத் தமிழ் உலகிற்குப் படைத்துத் தந்த ஜான் பால்மரின் முன்னோர்கள் பக்தி வைராக்கியம் மிகுந்த இந்துக்களாய் வாழ்ந்தவர்கள். சோதிடம்,மருத்துவம், இலக்கியம் போன்ற கலைகளில் ஆழ்ந்த அறிவும் ஈடுபாடும் உடையவர்கள். இவர்கள் தொன்மை வாய்ந்த ஒடுக்கப் பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்.

பல தலைமுறைகளுக்கு முன்னரே காவிரி பாயும் தஞ்சை பகுதியிலிருந்து திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வல்ல நாட்டுப் பகுதியில் சென்று குடியேறியவர்கள். பின்னர் அங்கிருந்து நாஞ்சில் நாட்டுப் பகுதியான மயிலாடிக்குக் குடிபெயர்ந்தனர். வைதீக இந்துக் குடும்பத்தில் பிறந்த ஜான் பால்மரை மகத்துவம் மிக்கக் கீர்த்தனைக் கவிஞராக மாற்றியது மயிலாடி மண்..

எளிய இனிய கிறிஸ்தவக் கீர்த்தனைகளை எழுதிக் கொண்டும், கர்த்தரின் புகழ் பாடிக் கொண்டும் இருந்த கவிஞர் 1883 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 2 ஆம் நாள் தன்னுடைய 71 ஆவது வயதில் இறைவனடி சேர்ந்தார்.

யார் அந்த “அவர்”?

யூதர்களின் அறிவு நிலைய சங்கமாக திகழ்ந்த போலந்து தேசத்தில், சுவால்க்கி என்னும் ஊரில், 1867ம் வருடம் ஆகஸ்ட் 6ம் தேதி யூத ரபிக்கும், பக்தி மிகுந்த யூத பெண்ணிற்கும் மகனாய் பிறந்தார் சாலமோன் கின்ஸ்பர்க்.

18 ம் நூற்றாண்டில் போலந்து தேசம் ரஷ்ய அரசின் ஆளுகையில் இருந்தமையால் படிப்பிற்கான வசதிகள் குறைவாக காணப்பட்டது.

சாலமோன் 6 வயதாக இருக்கும் போதே அவரது தாயாருக்கு அவரை ஜெர்மனியில் படிக்க வைக்கவேண்டுமென ஆவல் கொண்டார். ஆனால் யூத ரபியான அவரது தகப்பனோ யூத மத கலாச்சாரத்தில் அவரை வளர்த்து அவரையும் யூத ரபியாக உருவாக்க ஆவல் கொண்டார்.

தாயாரின் வற்ப்புறுத்துதலால் ஜெர்மனி சென்று, பல கப்பல்களுக்கு அதிபதியான தனது தாத்தா வீட்டில் 14 வயது வரை தங்கி படித்து பின்பு போலந்து சென்றார் சாலமோன்.

ஏசாயா 53 ல் சொல்லப்பட்டுள்ள “அவர்” யார்?: அது கூடாரப்பண்டிகை தினம். யூத ரபிகள் சாலொமோனின் வீட்டில் கூடினார்கள். வேதாகம சம்பவங்களின் அடிப்படையில் ஆராய தொடங்கினார்கள்.

ஏசாயா 53 ம் அதிகாரத்திற்கு நேராய் விவாதம் சென்றது. அறைக்கு வெளியிலிருந்து கேட்டுகொண்டிருந்த சாலொமோன் கின்ஸ்பர்க் அறைக்குள்ளே நுழைந்தார். ஏசாயா 53 ம் அதிகாரத்தில் பெருபாலும் வந்துள்ள “அவர்”, “அவரை”, “அவருக்கு”, “அவர்மேல்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த “அவர்” யார்? என்று தகப்பனிடம் கேட்டார்.

சினமடைந்த தகப்பன் கன்னத்தில் ஒரு அறையை பதிலாய் அளித்தார். இவனை இப்படியே விடக்கூடாது என்று சொல்லி, யூதர்களுக்கான பயிற்சி பள்ளியில் சாலொமோனை சேர்த்தார். லண்டனில் இயேசுவை எற்றுகொள்ளுதல்: இந்த சூழ்நிலையில் பெற்றோருக்கு தெரியாமல் லண்டன் சென்று தூரத்து உறவினர் வீட்டில் தங்கி வேலை தேடும் முயற்சியில் இறங்கினார் சாலொமோன்.

ஒருநாள் வீட்ற்க்கு திரும்புகையில் யூத கிறிஸ்தவர் ஒருவரை வழியில் சந்தித்தார். அவர் அன்று மாலை தன்னுடைய வீட்டில் ஏசாயா 53 அதிகாரத்தை மைய்யமாக கொண்ட வேதபாட வகுப்பு நடக்க இருப்பதாய் தெரிவித்தார். ஏசாயா 53 ம் அதிகாரத்தில் பெருபாலும் வந்துள்ள அந்த “அவர்” யார்? என்ற கேள்விக்கு பதிலறியும் ஆரவ்த்தில் அந்த வகுப்பிற்கு சென்றார். அந்த “அவர்” இயேசு கிறிஸ்துவே என்றும் அவரே மேசியா என்றும் அவருக்கு தெளிவான பதில் கிடைத்தது.

அப்பொழுதே இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு அதை வெளிப்படையாக அறிக்கையும் செய்தார். சாலொமோனுடைய உறவினர்கள் இந்த செய்தியை அவருடைய பெற்றோருக்கு தெரிவித்தார்கள்.


சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கினார்:

சாலொமோனுடைய பெற்றோர் அவருக்கு மிகவும் பிரியமான மாமா ஒருவரை இயேசு கிறிஸ்துவின் மீது சாலொமோன் கொண்டுள்ள விசுவாசத்தை கைவிட்டு தன்னோடு அழைத்து வரும்படி லண்டனுக்கு அனுப்பியிருந்தனர். சாலொமோனோ தன்னுடைய கிறிஸ்துவ விசுவாசத்தை கைவிட மறுத்துவிட்டார்.

இறுதியில் அந்த மாமாவும் அவரோடு வந்திருந்த யூத ரபிகளும் சாலொமோனை சுற்றி நின்று உபாகமம் 28 ம் அதிகாரத்தில் 16 ம் வசனம் முதல் 68 ம் வசனம் வரை சொல்லப்பட்டுள்ள சாபங்களை ஒருமித்து பாட்டாக பாடி பல முறை அவரை சபித்தனர். இதை கேட்க கேக்க சாலொமோனுடைய உள்ளத்தில் பயம் ஆட்கொண்டது.

இந்த நிலையில் திடீரென்று சிலுவையில் அறையுண்ட இயேசுவை தரிசனத்தில் கண்டார். அந்த சிலுவைக்கு மேல் பளிச்சென்று மின்னுகிற ஒரு வசனத்தை கண்டார். “கிறிஸ்து நமக்காக சாபமாகி நியாப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக் கொண்டார்” கலா 3:13 என்ற வசனம் தான் அது. உள்ளத்தில் இருந்த பயம் நீங்கி மகிழ்ச்சி பொங்கியது. குடும்ப உறவு முறிபட கிறிஸ்துவே அவருக்கு தகப்பனாய் மாறினார். யூதர்கள் இரண்டு முறை அவரை கொள்ள முயன்று தாக்கினார். மரணம் ஏற்படாமல் கர்த்தர் காப்பாற்றினார்.

பின்னர் லண்டனிலுள்ள பிரிசிபிட்டேரியன் மிஷன் (PRESBYTERIAN MISSION) ஆலயத்தில் ஞானஸ்நானம் பெற்றார். பிரேசிலுக்கு மிஷனரியாய் சென்ற சாலமோன் கின்ஸ்பர்க்: ஒரு நாள் இந்தியாவில் இருந்து வந்திருந்த மிஷனரியை சந்தித்து பேசிகொண்டிருக்கையில் மிஷனரி தாகம் சாலொமோனுக்கும் ஏற்ப்பட்டது. பிரேசில் நாடு கத்தோலிக்கர்கள் மிகுந்த நாடு. அந்த நாட்டிற்க்கு சத்தியத்தை அறிவிக்க தன்னை அர்ப்பணித்தார். அங்கு சென்ற சிறிது நாட்களிலேயே பிரேசில் மொழியை நன்கு கற்றுக்கொண்டார்.

பின்னர் கத்தோலிக்கர்களின் சிலை வணக்கத்தைக் கண்டித்து பேச ஆரம்பித்தார். “தூய பேதுரு போப் அல்ல” என்றும் “கந்தையும் எலும்புமான மதம்” என்ற தலைப்பில் கத்தோலிக்க சபைக்கு எதிராக கைப்பிரதிகள் அச்சிட்டு விநியோகம் செய்தார்.

கத்தோலிக்க பாதிரியார்கள் அவர் மீது சினம் அடைந்து அவரைக் கொலை செய்ய முயன்றனர். எல்லா வித தீமையினின்றும் இயேசு அவரைக் காத்துக் கொண்டார். எதிர்ப்புகள் சோதனைகள் மத்தியில் சத்தியமாகிய இயேசுவை தைரியமாய் கூறி அநேக மிஷன் மைய்யங்களை உருவாக்கினார்.

தெளிப்பு ஞானஸ்நானமும் முழுக்கு ஞானஸ்நானமும்: இங்கிலாந்தின் சபை (Church of England) வழக்கத்தின்படி மக்களுக்கு தெளிப்பு ஞானஸ்நானம் (Sparkling Babtism) கொடுத்து வந்தார் சாலமோன் கின்ஸ்பர்க்.

இந்த நிலையில் பேப்டிஸ்ட் மிஷனரிகள் அவரை சந்தித்து, தெளிப்பு ஞானஸ்நானம் கொடுப்பது சரியானதல்ல என்பதையும், முழுக்கு ஞானஸ்நானமே (Immersion Babtism) சரியானது என்றும் வேத ஆதாரத்தோடு விளக்கினார்கள். தெளிப்பு ஞானஸ்நானமே சரி என்று நம்பியிருந்த சாலொமோனுடைய கண்களை கர்த்தர் திறந்தார்.

தான் தெளிப்பு ஞானஸ்நானம் கொடுத்த மக்கள் அனைவருக்கும் முழுக்கு ஞானஸ்நானம் கொடுத்தார். இதை அறிந்த இங்கிலாந்து சபை சாலமோன் கின்ஸ்பர்க்கை கடுமையாக கண்டித்தது.

இங்கிலாந்து சபையிலிருந்து வந்த கடிதத்திற்கு பின்வருமாறு பதில் எழுதினார், “ஞானஸ்நானத்தை குறித்து வேதத்தின் அடிப்படையில் அறிந்து கொள்ளும் நல்ல வாய்ப்பு எனக்கு கிடைத்தது. வேதத்தின் பழைய ஏற்ப்பாட்டில் எலிசா தீர்க்கதரிசி குஷ்டரோகியாகிய நாகமானை யோர்தான் நதியில் “ஏழுதரம் ஸ்நானம் பண்ணு” (2 இரா 5:1௦) என்று சொன்னதை வாசிகின்றோம். தேவனுடைய மனுஷன் சொன்னபடி யோர்தானில் எழுதரம் முழுகின பொழுது அவன் சுத்தமானான் (வ.14) என்று வாசிகின்றோம். இதைப் பற்றி எபிரேய கிரேக்க மொழி வல்லுநர் டாக்டர். டேவிட் சி. கின்ஸ்பர்க் (Doctor. David C. Ginsburg) இவ்வாறு கூறியுள்ளார்.

பழைய ஏற்ப்பாட்டில் பயன்படுத்தப்பட்டுள்ள மூழ்கி ஞானஸ்நானம் செய்தல் என்ற அதே எபிரேய வார்த்தை தான் புதிய ஏற்பாடில் கிரேக்க மொழியிலும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடுகின்றார். ஆகவே இதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது” என்று கூறினார். இந்த நிலையில் இங்கிலாந்து சபை அவருக்கு அளித்து வந்த உதவியையும் தொடர்பையும் துண்டித்தது. லண்டனில் அவருக்கு நியமிக்கப்பட்டிருந்த பெண்ணும், திருமண நியமத்தை முறிக்க போவதாக கடிதம் எழுதினாள். எனினும் தனது கோட்பாடிலிருந்து சற்றேனும் விலகவில்லை சாலமோன் கின்ஸ்பர்க்.

“வேதத்தை ஆராய்ந்து படி. முழுக்கு ஞானஸ்நானமே வேதம் அங்கிகரிக்கும் முறை என்பதை உன்னால் விளங்கி கொள்ள முடியாவிட்டால், நமது திருமண நியமத்தை முறித்து கொள்ளலாம்” என்று எந்த தயக்கமுமின்றி பதில் எழுதினார்.


பிரேசில் நாட்டில் மிஷனரிப் பணி:

பிரேசில் நாட்டின் கிராமங்கள் தோறும் சுற்றித் திரிந்து இயேசு கிறிஸ்துவே ஆண்டவர் என்று போதித்து அநேக மக்களை இயேசுவண்டை நடத்தினார் சாலமோன் கின்ஸ்பர்க். சிறைச் சாலைகளுக்கு சென்று கைதிகளுக்கு வேதத்தை போதித்து அநேகரை மனம் திரும்ப செய்தார். இயேசு கிறிஸ்துவின் அன்பை முதன்மைப்படுத்தி பேசி அநேகரை இரட்சிப்பிற்க்குள் வழிநடத்தினார். தனிமனிதனாக உள்ளூர் கிராம மக்களின் துணையோடு அநேக சபைகளை நிறுவினார்.

35 வருட்ங்கள் இவர் செய்த மிஷனரி பணியினால் பாவத்திலும் விக்கிரக ஆராதனையிலும் சிக்குண்டிருந்த அநேக மக்கள் இயேசு கிறிஸ்துவின் அன்பை அறிந்துகொண்டு தங்கள் பாவங்களிலிருந்து விடுதலை பெற்றனர்.

1927ம் வருடம் ஏப்ரல் 1ம் தேதி தான் மிஷனரி பணி செய்த பிரேசில் நாட்டிலேயே கோதுமை மணியாய் வீழ்ந்தார். கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக. ஆமென்

கிறிஸ்துவிடம் நெருக்கி வரும் போதெல்லாம் ஆண்டவரை அறியாத மக்களைக் குறித்த வாஞ்சையே என்னை ஆட்கொள்ளுகிறது என்று கூறிய ஜேம்ஸ் சால்மர்ஸ், நாகரீகமற்ற, மனித மாமிசம் உண்ணும் கொடூர பழங்குடிகள் நிறைந்த பசிபிக் கடலில் உள்ள நியு கினியா தீவிற்கு மிஷனரியாக சென்று துணிவுடன் நற்செய்தியை இறுதியில் பழங்குடி மக்களுக்கு உணவானார். இன்றைக்கு அந்த தீவில் உள்ள மக்களில் 96 சதவீதம் கிறிஸ்தவர்களாக உள்ளனர்.

ஒரு காலத்தில் மனித மாமிசம் சாப்பிட்டவர்கள் இன்றைக்கு ஆவியோடும் உண்மையோடும் இயேசுவை ஆராதித்து வருகின்றார்கள். இதற்காக தந்து உயிரை தியாகம் செய்த மிஷனரி ஜேம்ஸ் சால்மர்ஸ் (James Chalmers) என்பவரது வாழ்க்கை வரலாறை இந்த காட்டுரையில் காண்போம்.

மனித மாமிசம் உண்பவர்கள் நைஜீரியாவில் மனித மாமிசத்தை விற்பனை செய்ததாக உணவு விடுதி உரிமையாளர் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிரியாவில் அதிபர் பஷீர் அல் ஆசாத் ஆட்சிக்கு எதிராகசிரிய விடுதலைப் படைபோர் செய்த போது,விடுதலைப் படையிடம் பிடிபட்ட சிரிய இராணுவச் சிப்பாய் ஒருவரின் இதயத்தை வெட்டியெடுத்து, போராளி ஒருவர் உண்ற சம்பவம் நடந்தேறியது.

அவரது உடலத்தின் மார்பை பிளந்து அவரது இதயத்தை வெளியே எடுக்கும், ஆசாத் படையினருக்கு எதிராகப் போராடிவரும் பரூக் படை என்னும் போராளிகள் குழுவின் தலைவரான அபு சக்கார் என்பவர், ‘பஷீர் நாயின் கைக்கூலிகளான இராணுவமே.. உங்கள் இதயம் மற்றும் ஈரல்களை தின்று விடுவோம் என்று இறைவன் மீது ஆணையிடுகிறோம்’ என்று பலமாகக் கூறியபடி அதனை உண்றார்.

இது போன்ற நிகழ்ச்சிகள் இன்றைக்கும் நாம் வாழும் உலகத்தில் நடக்கின்றன என்றால் அதை மறுக்க முடியாது. இவர்கள் நாகரீகம் அறிந்தும், தீய சக்திகளின் பிடியாலும், குருட்டு மதங்களை பின்பற்றுவதாலும் இது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

இருபதாம் நூற்றாண்டுக்கு முந்தைய நாகரீகம் வளர்ந்திராத நாட்களில், தீவுகளில் வசிக்கும் பழங்குடி மக்களிடமும் மனித மாமிசத்தை உண்ணும பழக்கம் அதிகளவில் காணப்பட்டது.

தற்போது அப்படிப்பட்ட தீவுகளில் வாழ்கின்ற மக்கள், நம்மைப்போல மிகுந்த நாகரீகத்துடன் வாழ்கின்றார்கள். ஒரு காலத்தில் யார் அந்த தீவிற்கு சென்றாலும் நரபலியாகிவிடுவார்கள். ஆனால் இன்றைக்கோ அந்த தீவுகள் எல்லாம், அநேகர் செல்லக்கூடிய சுற்றுலா தளங்களாக மாறிவிட்டது.

இந்த மாற்றத்திற்கு யார் காரணம்? மரணமே ஆனாலும் பரவாயில்லை. கிறிஸ்துவின் அன்பை அவர்களுக்கு அறிவித்தே தீருவோம் என்று, தங்கள் உயிரை பணயம் வைத்து அந்த மக்களிடமாய் கிறிஸ்துவின் அன்பை எடுத்து சென்ற மிஷனரிகளே.

ஜேம்ஸ் சால்மர்ஸ்-ன் இளமைப் பருவம் 1841 ம் வருடம் ஆகஸ்ட் மாதம் 4 ம் தேதி “ஜேம்ஸ் சால்மர்ஸ்” ஸ்காட்லாந்து தேசத்தில் கல்சிற்ப ஆசாரியின் மகனாக பிறந்தார். 18 வயதில் தனது ஊரில் நடைபெற்ற எழுப்புதல் கூட்டத்தில் இரட்சிக்கப்பட்டு இயேசுவின் அன்பை அறிந்து, தமது வாழ்க்கையை மிஷனரியாக அற்பணித்தார். பட்ட படிப்புகளை முடித்தவுடன் தமது 26ம் வயதில் லண்டன மிஷனரி சங்கத்தில் இணைந்தார். “ரரோடோங்கா” தீவில் கிறிஸ்துவின் பணி 1867ம் வருடம்மே மாதம் “ரரோடோங்கா” (Rarotonga) என்ற தீவிற்கு மிஷனரியாக வந்திறங்கினார்

ஜேம்ஸ் சால்மர்ஸ்.கிறிஸ்துவை அறியாத “ரரோடோங்கா” தீவில் வாழ்ந்த பழங்குடி மக்களின் மொழியை வெகு விரைவில் கற்று,அந்த மொழியிலே கிறிஸ்த்துவின் அன்பை அவர்களுக்கு அறிவித்தார். அந்த தீவில் பத்து வருடம் மிஷனரி பணி செய்து இருளின் ஆதிக்கத்தில் இருந்த மக்களை மெய்யான ஒளியாகிய இயேசுவினிடத்தில் சேர்த்தார்.

தீவு நாடான நியு கினியா-வில் கிறிஸ்துவின் பணி 1877 ம் வருடம்தமது 36ம் வயதில் ஆஸ்திரேலியாவுக்கு மேல் வடபகுதியில் அமைந்திருக்கும் தீவு நாடான “நியு கினியா” விற்கு(New Guinea) தனது மனைவியோடு சென்றார்

ஜேம்ஸ் சால்மர்ஸ். அந்த தீவுகளில் வசித்த மக்கள் மனித மாமிசம் உண்பவர்களாக இருந்தனர். ஆபத்து மிகுந்த அந்த மக்களுக்கு சுவிசேஷம் சொல்ல போகையில் தமது கையில் எந்த விதமான ஆயுதங்களையும் எடுத்து செல்ல மாட்டார். ஏனென்றால் கையில் ஆயுதங்களோடு சென்றால் வெள்ளை மனிதன் நம்மை தாக்க வந்திருக்கிறான் என்று சொல்லி ஓடுவார்கள். இல்லையென்றால் தாக்க தொடங்குவார்கள். ஆபத்து நிறைந்த பழங்குடி மக்களின் மேல் கரிசனை கொண்டவராய் கிறிஸ்துவின் அன்பை அநேகருக்கு அறிவித்தார். 105 க்கும் அதிகமான கிராம தீவுகளுக்கு சென்று கிறிஸ்துவின் அறிவித்தார். 90 கிராம தீவுகளில் முதலாவது சென்ற வெள்ளை மனிதனும் இவரே. இயேசுவின் அன்பை எடுத்து சென்றவரும் இவரே ஆவார்.


பழங்குடி மக்களுக்கு உணவாகுதல்

1901 ம் வருடம் ஏப்ரல் 8 ம் தேதி ஈஸ்டர் ஞாயிறாக இருந்தது. முந்தைய நாளில் “கோரிபாரி” (Goaribari Island) என்ற தீவிற்கு படகில் சென்றிருந்த ஜேம்ஸ் சால்மர்சை அத்தீவின் பழங்குடி மக்கள் சூழ்ந்து கொள்ளவே, படகை விட்டு அவர் இறங்காமல் நாளை வருவதாக கூறி தனது பகுதிக்கு வந்தார்.

அடுத்த நாள் ஈஸ்டர் ஞாயிறு ஆராதனைகளை முடித்து விட்டு, கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் நற்செய்தியை அறிவிக்க ஆபத்து நிறைந்த “கோரிபாரி” தீவிற்கு மீண்டும் சென்றார். ஒலிவர் டோம்கின்ஸ் (Oliver Tomkins) என்ற மிஷனரியும் உடன் சென்றார். இவர்களது வருகையால் மிகவும் மகிழ்ந்த அத்தீவின் பழங்குடி மக்கள் இருவரையும் உற்சாக வரவேற்புடன், புதிதாய் அமைக்கப்பட்ட “தூபு” (Dubu) என்று அழைக்கப்படும் கேளிக்கை குடிசைக்கு அழைத்து சென்றனர்.

அந்த இடத்தில் மனிதர்களை சாகும் வரை சண்டையிட வைத்து பின்னர் அவர்களை பலியாக்கி உணவாக உண்பார்கள். இதை அறிந்திராத ஜேம்ஸ் சால்மர்சும், ஒலிவர் டோம்கின்சும் கிறிஸ்துவின் அன்பை அவர்களுக்கு அறிவித்தவன்னமாய் “தூபு” என்ற குடிசைக்கு சென்றனர்.

மரத்தினால் ஆன விக்ரகங்களை சுற்றிலும் அநேக மனித மண்டை ஓடுகள் குவிக்கபட்டிருந்தது. இருவரும் அதை பார்த்துக் கொண்டிருந்த வேளையிலே, எந்தவித எச்சரிப்பும் இன்றி அந்த பழங்குடி மக்கள் அவர்களை தாக்க தொடங்கினர்.

சில நிமிடங்களில் அவர்களது உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு, அருகில் கொதித்து கொண்டிருந்த குழம்பில் போடப்பட்டது. ஜேம்ஸ் சால்மர்சும், ஒலிவர் டோம்கின்சும், இயேசு உயிர்த்தெழுந்த அந்த ஈஸ்டர் நாளில், இயேசுவை அறிவித்துக்கொண்டே அந்த பழங்குடி மக்களுக்கு உணவாக மாறினர்.

ஜேம்ஸ் சால்மர்ஸ் மற்றும் ஒலிவர் டோம்கின்சின் உடல்கள் விதையாகவும், அந்த மக்களுக்கு உணவாகவும் மாறியதை அறிந்து அநேக மிஷனரிகள் “நியு கினியா” தீவை நோக்கி சென்று இயேசுவின் அன்பை அறிவித்தனர்.

அநேக மக்கள் கிறிஸ்துவை தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டனர். அதன் விளைவு, 7 கோடிக்கும் அதிமான மக்கள் வாழும் அந்த தீவுல், இன்றைக்கு 96% கிறிஸ்தவர்களாக மாறியுள்ளனர். “கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியா விட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான், மிகுந்தவிளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.” (யோவான் நற்செய்தி 12: 24) மிக எளிதான ஓர் உவமை, மிக ஆழமான உண்மைகளைக் கூறும் உவமை. கோதுமை மணி படைக்கப்பட்டதற்கு முக்கியமான இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று, அது உணவாக மாறி, வேறொரு உயிரை வளர்க்க வேண்டும். முதலாவதாக நாம் கிறிஸ்துவுக்காய் வாழ்ந்து சாதித்து அநேகருடைய வாழ்வில் கிறிஸ்துவை வளர்க்க வேண்டும். முடிவிலே அது விதையாக மாறி, தன் இனத்தைப் பெருக்க வேண்டும். இந்த இரண்டு காரணங்களும் நிறைவேற, கோதுமை மணி தன் சுய உருவை, உயிரை இழக்க வேண்டும். அதாவது கிறிஸ்துவுக்காய் நாம் உருமாறி பின்னர் விதையாய் மாறவேண்டும். இதற்கு மாறாக, கோதுமை மணியை நாம் அலங்காரப் பொருளாகவும் பயன்படுத்தலாம்.

ஆனால்,அலங்காரப் பொருளாக இருப்பது கோதுமை மணியின் இயல்பும் அல்ல. அதினால் மற்றவர்களுக்கு எந்த பயனும் அல்ல.நீங்களும் நானும் கிறிஸ்துவைப் போல உருமாறி அவருக்காய் வாழ்ந்து சாதிக்க அழைக்கபட்டுள்ளோம். விதையாய் மண்ணில் வீழ்ந்து மிகுந்த விளைச்சலை கொடுக்கும் படியாகவும் அழைக்கபட்டுள்ளோம். எங்களை நேசித்து வழிநடத்தும் தெய்வமே, இயேசுவே,

ஜேம்ஸ் சால்மர்ஸ் போன்று துணிவுடன் உமக்காய் ஊழியம் செய்வேன். கிறிஸ்துவை அறியாத ஜனங்களுக்கு கிறிஸ்துவின் அன்பை அறிவிப்பேன். இயேசுவின் மூலமாய் ஜெபிகின்றேன் பிதாவே. ஆமேன். கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக.

நான் பாவிதான் ஆனாலும் நீர் மாசற்ற இரத்தம் சிந்தினீர் இந்தப்பாடலை அறியாத கிறிஸ்தவர்கள் இருக்க முடியாது. இந்தப் பாடல், ஆத்தும இரட்சிப்பின் பாடல் என்று அழைக்கப்படுகிறது. மிகப் பெரிய தேவ ஊழியரான,பில்லி கிரகாம் அவர்கள், தன்னுடைய கூட்டங்களின் முடிவில், ஆத்துமாக்களை இரட்சிப்புக்கென்று அழைக்கும் போது இந்தப் பாடலை பாடி அழைப்பது வழக்கம்.இந்தப் பாடலை எழுதியவர் சார்லட் எலியாட்(Charlotte Elliot) என்னும் அம்மையார் ஆவார். அவர் தனது 30 வயது வரை மிகவும், சந்தோஷமாய், எதைக் குறித்தும் கவலையில்லாதவராக, உற்சாகமானவராய், பாடிப் பறக்கும் பறவையைப் போல வாழ்ந்து வந்தார்.

அவர் 30 வயதை தாண்டிய போது, அவருக்கு ஒரு வியாதி வந்தது. அது அவரை படுக்கையை விட்டு எழுந்தரிக்க முடியாதபடி, அந்தப் பறவையின் காலை ஒடித்துப் போட்டதுப் போல படுக்கை கிடையாக்கிப் போட்டது. அந்த அம்மையார் மனம் ஒடிந்துப் போனார்கள். தேவன் மேலும் உலகத்தில் உள்ள யாவர் மேலும் அவர்களுக்கு கோபம் வந்தது. சுயபரிதாபம் அவர்களை ஆட்கொண்டது.

அப்பொழுது அவருடைய தகப்பனார், தங்கள் குடும்ப உறவினரும் கர்த்தருடைய ஊழியரும் பாடகருமான டாக்டர், சீசர் மலான் (Dr. Caesar Malan)என்னும் ஊழியரை தங்களது வீட்டிற்கு அழைத்தார். அவர் வந்துப் பேசினால் மகளுடைய இருதயம் மாறும் என்று நினைத்தார். அதுப்போல, அந்த டாக்டரும் வந்து சார்லட்டிடம் பேசிய போது, அவர்கள் தன் இருதயத்திலுள்ள வெறுப்பை எடுத்துக் கொட்டினார்கள். தேவனைப் பற்றிக் குறை கூறினார்கள்.

அதைக் கேட்ட அந்த டாக்டர், ‘நீங்கள் மிகவும் களைத்து இருக்கிறீர்கள், வெறுப்பையும், கோபத்தையும் உள்ளடக்கி, சோர்ந்துப் போயிருக்கிறீர்கள்’ என்றுச் சொன்னார். அப்போது, சார்லட், ‘நான் சந்தோஷத்தை பெற்றுக் கொள்வதற்கு என்னச் செய்ய வேண்டும் என்றுக் கேட்டார்கள். அதற்கு டாக்டர், ‘நீங்கள் கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளவேண்டும்’என்றார்.

அப்போது அவர்கள், ‘நான் என்வாழ்வில் சில காரியங்கள் சரிசெய்ய வேண்டி உள்ளது. அவற்றை சரிசெய்தப் பிறகு நான் கிறிஸ்துவை ஏற்றுக் கொள்கிறேன்" என்றுக் கூறினார்கள். அதற்கு டாக்டர், ‘நீங்கள் இருக்கிற வண்ணமாகவே கிறிஸ்துவிடம் வாருங்கள், அவர் உங்களை ஏற்றுக் கொள்வார். மட்டுமல்ல,உங்கள் வெறுப்பு, கோபத்திற்கு பதிலாக, சந்தோஷத்தையும் சமாதானத்தையம் தருவார்’ என்றுக் கூறினார்.

அப்போதே அந்த அம்மையார், கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டு, அந்த நாளில்தானே இரட்சிக்கப்பட்டார்கள். அன்றிலிருந்து அந்த நாளை தனது ஆவிக்குரிய பிறந்தநாள் என்று ஒவ்வொரு வருடமும் கொண்டாடினர்கள். பதினான்கு வருடங்கள் கழித்து, அவருடைய சகோதரன் ஒரு போதகராக இருந்தவர், அவர் ஏழையான ஊழியர்களின் பிள்ளைகளுக்கு, ஒரு பள்ளியை ஆரம்பிக்க விழைந்தார்.

ஆனால், அவருக்கு போதிய பண உதவி இல்லாததால், என்ன செய்வது என்று சார்லட்டிடம் கேட்டபோது,அவர்கள் ஒரு பாடலை எழுதி அதை வைத்து, நிதியை திரட்டலாம் என்றுக் கூறினார்கள். அப்போது அந்த சீசர் மலான் என்ற டாக்டர் சொன்ன ‘இருக்கிற வண்ணமாகவே கிறிஸ்துவிடம் வாருங்கள்’ என்றுச் சொன்ன வார்த்தைகளை, ஞாபகத்தில் வைத்து, இந்தப் பாடலை எழுதி, அதன் மூலம் பணத்தை திரட்டி, அந்தப் பள்ளியைக் கட்டினார்கள்.

சார்லட் தன் வியாதியிலிருந்து கடைசி வரை சுகமடையவில்லை என்றாலும், கடைசி வரை வீட்டிலேயே சிறைப்பட்டு இருந்தாலும் அவர்களுடைய இருதயம் தன் சிருஷ்டிகராகிய கர்த்தரை நித்தமும் துதித்து, அவர்கள், தன் தேவனிடத்தில் நேசத்தை வைத்திருந்தபடியால், 150 பாடல்களை இயற்றினார்கள்.

அவை ஆங்கில கிறிஸ்தவ வரலாற்றில், ஒரு எழுப்புதலை உருவாக்கிற்று என்பது உண்மை. தங்கள் பெலவீனத்திலும் கர்த்தருக்கென்று பாடல்களை இயற்றி பாடிய அந்தக் கவிக்குயில், தனது 82ஆவது வயதில், நித்தியமான சுகத்தோடு, பெலவீனங்கள் மாறி தான் நேசித்த தேவனோடு என்றென்றும் வாழும்படி பறந்துச் சென்றது.

ஆனால் அவர் இயற்றிய பாடல்கள் பல மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு இன்றளவும் பாடப்பட்டு வருகிறது. அல்லேலூயா!

பாகம் 1

வேதநாயகம் சாஸ்திரியார் நெல்லையை சார்ந்தவர் என்றாலும், பொதுவாக மக்கள் சாஸ்திரியாரை,அவர் வளர்ந்ததும்,வாழ்ந்ததுமான தஞ்சாவூரையே அடையாளமாய் வைத்து இன்றும் அவரை தஞ்சை வேதநாயகம் சாஸ்திரியார் என்றே அழைக்கின்றனர். வேதநாயகம் சாஸ்திரியார் மூலமாய் கிறிஸ்துவ சமுதாயம் பெற்ற பாடல்களை நாம் இன்றளவும் சபைகளில் பாடி வருகின்றோம்.

இவர் 1774 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 7ஆம் தேதி ஞானப்பூ அம்மையாருக்கும், கவிஞர் அருணாசலம் என்ற தேவசகாயம்பிள்ளைக்கும் மகனாக பிறந்தார். அருணாசலம் கிறிஸ்தவராகி தனது பெயரை தேவசகாயம் என்று மாற்றிகொண்டார். வேதநாயகத்திற்கு அவர்களுடைய பெற்றோர் வைத்த பெயர் "வேதபோதகம்" என்பதாகும்.ஆனால் அந்நாளில் அவருடைய சபையின் குருவுனுடைய பெயரும் "வேதபோதகம்" என்றிருந்ததால்

குருவின் பெயரை உச்சரிக்க கூடாது என்று குரு பக்தியின் அடிபடையில் அவரை வேதபோதகம் என்று அழைக்காமல் "வேதநாயகம்" என்று அழைத்தனர். தனது மாணவனின் தந்தை அருணாசலம் கிறிஸ்தவராகி, தேவசகாயமானதால் கொண்ட வெறுப்பை, ஆசிரியர் வேலுப்பிள்ளை, மாணவன் வேதநாயகத்திடம் “எமனுக்குப் படிப்பு வந்தாலும் உனக்கு படிப்பு வராது!” என்று கடிந்து கொண்டார்.

அழுதவண்ணம் வேதநாயகம் தன் தந்தையிடம் சென்றார். அவரோ, மிஷனரிப் போதகர் சுவார்ட்ஸின் போதனையில், மெய் மறந்து உரையாடிக் கொண்டிருந்தார்.

ஊர்ப்பகையால், சிறுவனுக்கு இழைக்கப்பட்ட தீங்கைக் கண்ணுற்ற சுவார்ட்ஸ், “அழாதே ! பராபரன் உன்னை ஆசீர்வதித்து, மேன்மைப்படுத்துவார்” எனத் தேற்றினார். சுவார்ட்ஸ் ஐயரின் இந்த ஆறுதல் ஆசியை, சிறுவன் வேதநாயகம் தன் வாழ்நாள் முழுவதும் மறக்கவில்லை.

தனது 12-வது வயதிலேயே கவிஞனானான். பத்தொன்பதாம் வயதில் தலைமை ஆசிரியரானான். பின்னர் தன் வாழ்நாளெல்லாம் இறைவனைப் புகழ்ந்து பாடி, “சுவிசேடக் கவிராயர்” என்ற சிறப்புப் பட்டமும் பெற்றான்!. பிற்காலத்தில் அவருடைய ஆசிரியர் சொன்ன வார்த்தை வேதநாயகனுடைய வாழ்கையில் பொய்யாகிவிட்டது.

பழமொழிகள் அறிந்த பண்டிதனாகவும், சாஸ்திரங்கள் பல கற்ற சாஸ்திரியகவும் சர்வ வல்லமையுள்ள தேவன் வேதநாயகனை உருவாக்கினார்.

இப்படியாய் வேதநாயகம் சாஸ்திரியரை பலர் இகழ்ந்து பேசினாலும் கர்த்தர் அவரை ஏற்ற வேளையில் அவர்களுக்கு முன்பாக உயர்த்தினார். உங்களை அன்றைக்கு கர்த்தர் தாவீதை அவனுடைய எல்லாச் சத்துருக்களின் கைக்கும், சவுலின் கைக்கும், நீங்கலாக்கி விடுவித்தபோது, அவன் கர்த்தருக்கு முன்பாகப் பாடின பாட்டு: கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் இரட்சகருமானவர். தேவன் நான் நம்பியிருக்கிற துருக்கமும், என் கேடகமும், என் இரட்சண்ணியக் கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமும், என் புகலிடமும், என் இரட்சகருமானவர்; என்னை வல்லடிக்கு நீங்கலாக்கி இரட்சிக்கிறவர் அவரே (2 சாமுவேல் 22:1-3) என்று பாடி கர்த்தருடைய நாமத்தை உயர்த்தியது போல தேவன் இந்த நாளில் உங்களையும் உயர்த்துவாரக. ஆமேன். வேதநாயகம் சாஸ்திரியருடைய வாழ்க்கையின் தொடர்ச்சியை நாளை காணலாம். கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக.


பாகம் 2

ஒரு நாள் வேதநாயகம் தன் பள்ளியில் சக மாணவர்களுடம் பாடம் படித்துகொண்டிருந்தார், அப்பொழுது ஒரு ஆள் உயரத்தில் காணப்பட்ட ஒரு சிலுவை ஆகாயத்திலிருந்து இறங்கி வேதநாயகனுக்கு சமீபமாய் வருவதை கண்டார். இந்த தரிசனத்தை காணும் போது அவருக்கு வயது 9. அந்த தரிசனத்தை பற்றி தன் பாட்டியிடம் வேதநாயகம் சொன்னபோது,

"இது எல்லோருக்கும் கிடைக்க கூடிய தரிசனம் அல்ல, இது இயேசு ஸ்வாமியினுடைய தரிசனம்; உன் வாழ்க்கையில் பெரிய அதிசயங்கள் நடக்கும்” என்றார்கள்,

அன்று முதல் வேதநாயகனுடைய வாழ்க்கை மாறியது. ஒரு முறை ஸ்வார்ட்ஸ் ஐயர் அவர்கள் தஞ்சைக்கு செல்லும் பொது வேதநாயகத்தின் மேல் வைத்திருந்த பிரியத்தால் "நீ என்னுடன் தஞ்சைக்கு வருகிறாயா உன்னை ஒரு சிறந்த மனிதனாக்குவேன் என்றார்" நல்லது ஐயா நான் உங்களுடன் வருகிறேன் என்றார்.

சில நாட்கள் கழித்து தன் தந்தையின் அனுமதியோடு வேதநாயகன் தஞ்சை புறப்பட்டார். ஸ்வார்ட்ஸ் ஐயர் மூலம் வேதநாயகத்திற்கு மனதிலும், ஆன்மாவிலும் உறுதியான அஸ்திபாரம் போடப்பட்டது.

வேதநாயகன் தரங்கம்பாடியில் இருக்கும்போது தாமே ஒரு பாடலை இயற்றி பாடினார். இதை கேட்ட ஸ்வார்ட்ஸ் ஐயரின் உள்ளம் பூரித்தது, அப்பொழுது அவருக்கு வயது 15. 1809 ஆம் ஆண்டு ஞானதீப கவிஞர் என்ற பட்டதை சென்னை சீர்திருத்த சபையினரால் அவருக்கு வழங்கப்பட்டது.

சாஸ்திரியாருக்கு திருமணமான பின்பு நாட்டில் ஏற்ப்பட்ட பஞ்சத்தின் காரணமாக உணவின்றி தவித்தார். அது போன்ற ஒரு சமயத்தில் வயல் வெளியில் தனது பிள்ளைகளுடன் அமர்ந்து வயலின் வாசித்து தேவனை துதிப்பாராம்.

அவ்வாறு உணவின்றி தவித்த வேளையில் சாஸ்திரியார் தேவனை உயர்த்தி இவ்வாறு பாடலை எழுதினார் தேவா இரக்கம் இல்லையோ – இயேசு தேவா இரக்கம் இல்லையோ எல்லாம் அறிந்த பொருளே எங்கள் இல்லாமை நீக்கும் அருளே ஆ . . . ஆ . . . ஆ . . . பொல்லா மனதுடைய கல்லான பாவிகளை - கொடும் கொல்லாதருள் புரியும் நல்லாயன் இயேச நாதா - தேவா 2 . எங்கும் நிறைந்த ஜோதியே ஏழைப் பங்கில் உறைந்த நீதியே ஆ . . . ஆ . . . ஆ . . . சங்கடமான பாவ சங்கீதங்களை நீக்கும் - எங்கள் துங்க இஸ்ரவேலின் வங்கிஷ கீரீடாதிபதி - தேவா

சாஸ்திரியாரின் வீட்டில் , மனைவி , மக்கள் . வேலை செய்பவர்கள் , அவரிடம் கற்க வந்த மாணவர்கள் என்று ஏறத்தாழ 30 பேர் அனுதினமும் அவருடைய வீட்டில் தான் சாப்பிடுவார்கள் . இப்படி அனைவருக்கும் சாப்பாடு போடும் அளவிற்கு அவர் ஒரு பெரும் செல்வந்தரும் அல்லர் . வறுமை உண்டு , ஆனாலும் , தன்னிடம் இருந்த அனைவருக்கும் அன்னமிட்டு பராமரித்து வந்தார்கள் , சாஸ்திரியார் அவர்கள் .

ஒரு நாள் , மாலை வேளையில் சாஸ்திரியாரின் மகள் ஞானதீபம் சாஸ்திரியார் ( முதலாவது பெண் சாஸ்திரியார் இவர்தான் ) , தன்னுடைய தகப்பனாரிடம் , “ ஐயா , இன்று நம் அனைவருக்கும் சாப்பாடு இல்லை , பொருள் வாங்குதவற்குப் பணமும் இல்லை , எனவே , இன்றைக்கு நாம் அனைவரும் உபவாசம் இருந்து ஜெபம் பண்ணி , தண்ணீரைக் குடித்துப் படுத்துக் கொள்வோமா ? ” என்றார் .

உடனே , சாஸ்திரியார் அவர்கள் மிகுந்த துக்கம் நிறைந்தவராக , ஆனால் , அதை ' வெளிக்காட்டாது . தன் மகளிடம் , “ நீ ஒன்றும் கவலைப்படாதேயம்மா . . . நான் அந்த மரியாள் மகனோடு பேசிக் ' கொள்கிறேன் ” என்று கூறிவிட்டு தனிமையில் சென்று ' கண்ணீரோடு ஜெபிக்க ஆரம்பித்தார் . அந்த ' வேளையில் அவர் ஜெபத்திலே , ஆண்டவரைத் ' நோக்கிப் பாடிய பாடல் தான் , *தேவா இரக்கம் ' இல்லையோ ?* என்பதாகும் . அந்தப் பாடலின் ' வரிகள் இப்படியாக வருகின்றது , *எல்லாம் அறிந்த பொருளே* *எம்இல்லாமை நீக்கும் அருளே . . . என்று !* அவர் ஜெபித்து , பாடி முடித்துவிட்டு ' எழுகின்ற வேளையிலே .

வீட்டு வாசலின் முன்பு ' வண்டிச்சத்தம் கேட்டது . இரண்டு மாடு பூட்டிய ' பெரிய கட்டை வண்டிகள் வந்து நின்றது . சாஸ்திரியார் அவர்கள் வெளியே வந்து பார்த்தார் . வண்டி நிறைய பெரிய பெரிய கல்யாண வீட்டில் சமைக்கும் பாத்திரங்கள் , விருந்துச் சாப்பாடு மணம் வேறு மூக்கைத் துளைத்தது . சாஸ்திரியாரைப் பார்த்த வண்டிக்காரன் வண்டியைவிட்டுக் குதித்து இறங்கி , “ ஐயா , நீங்கள் தான் சாஸ்திரியாரா ” என்றார் ? “ ஆமாம் , நான்தான் ” என்றார் சாஸ்திரியார் " . " ஐயா , நான் பக்கத்து ஊரிலிருந்து வருகின்றேன் ,

எங்கள் எஜமானின் வீட்டில் இன்று ஒரு திருமணம் நடைபெற்றது அதற்கு அழைப்பித்தவர்களில் அநேகம் பேர் இன்று வரவில்லை . எனவே விருந்து சாப்பாடு அதிகம் மீதமாகிவிட்டது . எங்கள் எஜமான் பக்கத்து ஊரில் சாஸ்திரியார் ஒருவர் இருப்பார் அவரிடம் கொடுத்து வா என்று அனுப்பினார் ” என்று கூறினார் . சாஸ்திரியார் அவர்களுக்கு என்ன சொல்வ தென்றே தெரியவில்லை , அவர் கண்கள் ஆனந்தத்தால் குளமானது . வண்டிக்காரர் அனைத்து அறுசுவை உணவுகளையும் வீட்டில் இறக்கி வைத்துச் சென்றுவிட்டார் .

சாஸ்திரியார் தன்னோடு இருந்தவர்களைப் பார்த்துச் சொன்னார் , இன்றைக்கு இரவு நாம் மோசமான சாப்பாடு சாப்பிடக்கூடாது என்றுதான் , நம்மிடம் சாப்பாடும் , பணமும் இல்லை . நாம் அறுசுவை உணவு உண்ண வேண்டும் என்பது இறைவனின் சித்தம் என்றார் .

எத்தனை உண்மை ! -- இந்த பாடல் இன்றளவும் சபைகளில் பாடப்பட்டு தேவனுடைய நாமம் உயர்த்தப்பட்டு வருகின்றது. யாரிடம் கையேந்தி நிற்காமல் இறைவன் இயேசுவையே சார்ந்து வாழ்ந்த சாஸ்திரியார் போல நாமும் தேவனுக்கை வைராக்கியமாய் வாழுவோமாக. கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி, மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி, உன் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார்; நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப்போலவும், வற்றாத நீரூற்றைப் போலவும் இருப்பாய் (ஏசாயா 58:11) என்ற வேதவாகியத்தின்படியாய் சாஸ்திரியார் குடும்பத்தை வழிநடத்திய இயேசு இன்றைக்கு நம்மையும் வழிநடத்த போதுமானவராக இருகின்றார். கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக. ---------------------


பாகம் 3

தஞ்சையை அந்நாட்களில் ஆண்டுவந்த சரபோஜி மன்னன், சாஸ்திரியாரின் சிறுவயது நண்பரானார். அவர் சாஸ்திரியாரின் புலமையைப் பாராட்டித் தன் அரசவைக் கவிஞராக வைத்துக் கொண்டார். அவருக்கு மானியமும் வழங்கினார். “குற்றாலக் குறவஞ்சி” என்ற நாடகத்தின் அடிப்படையில் வேதநாயக சாஸ்திரியார், “பெத்லெகேம் குறவஞ்சி” என்ற பாடல் நூலைத் தனது 25-வது வயதிலேயே எழுதி, இயேசு தெய்வத்திற்குப் புகழ்மாலை சூட்டினார்.

இப்பாடல் நூலைத் தன் நண்பன் சரபோஜி மன்னனிடம் பாடிக் காட்டினார். மன்னனும் கேட்டு மகிழ்ந்தார். பின்னர் 1820-ம் ஆண்டு சரபோஜி, மன்னனாக முடிசூட்டப்பட்டபோது, சாஸ்திரியார் அவருக்கு வாழ்த்துப் பா ஒன்றைப் பாடினார். மகிழ்ந்த மன்னன் தான் வணங்கும் தஞ்சைப் பிரகதீஸ்வரர் மீது ஒரு குறவஞ்சி படைக்க, சாஸ்திரியாரை வேண்டினான்.

இதை எதிர்பாராத சாஸ்திரியார் திடுக்கிட்டார். ஏனெனில், அவர் இயேசு ஒருவரையன்றி, வேறொருவரையும் துதித்து ஆராதிப்பதில்லை. தன் பக்தி வைராக்கியத்தின்படி அரசரிடம் அமைதியாகத் தன் நிலையை எடுத்துக் கூறினார். ஆனால், சரபோஜியோ விடுவதாக இல்லை. பாடல்கள் நிறைந்த முழுநூலைப் பாடாவிட்டாலும், ஒரு பல்லவி போன்ற, காப்புச் செய்யுளையாவது, வினாயகர் மீது பாடிக்கொடுக்க வற்புறுத்தினான்.

வேதநாயக சாஸ்திரியாருக்கு மிகவும் இக்கட்டான நிலை. தன்னை மிகவும் மதித்து, ஆதரவளித்துவரும் அரசனின் வேண்டுகோள் ஒருபுறம், ஆனால் மற்றொருபுறம், தன்னையே தியாகம் செய்து, அவரைப் பாவத்திலிருந்து மீட்டெடுத்த அன்பர் இயேசு ஒருவருக்கே செலுத்த வேண்டிய புகழ் ஆராதனை.

மிகுந்த மனப் போராட்டத்துடன், சாஸ்திரியார் தன் வீடு திரும்பினார். வேதனையோடு தனது தர்ம சங்கடமான நிலையை மனைவியிடம் மெதுவாக எடுத்துச் சொன்னார். “ஆண்டவரைப் பாடும் வாயால், இப்படியும் ஒன்றைப் பாடப் போகிறீர்களா?” என்று கவலையுடன் அவர் மனைவி கேட்டார். ஆனால், சாஸ்திரியாரின் உள்ளமோ, ஒரே தெய்வமாகிய, நிகரற்ற இறைவன் இயேசுவின் மீதுள்ள பக்தி வைராக்கியத்தால் பொங்கிப் பாடலாக வழிந்தது. அப்பொழுது எழுதிய பாடலே “இயேசுவையே துதி செய் நீ மனமே இயேசுவையே துதி செய்” என்ற பாடலாகும்.

அடுத்த நாள் மன்னர் அவையில் மிகப்பெரிய கூட்டம் கூடியிருந்தது. சாஸ்திரியார் என்ன பாட்டுப்பாட போகிறார் என்று கேட்பதற்காக. எல்லாரும் சூழ நின்று பார்த்திருக்க, மன்னர் சரபோஜி அவரையே நோக்கி கொண்டிருந்தார்.

மன்னர் கேட்டுக்கொண்டபடியே அவர்கள் தெய்வத்தை பற்றி ஒரு பல்லவியையாவது சாஸ்திரியார் பாடுவார் என்று எதிர்பார்த்திருக்க முன்தினம் இரவில் கர்த்தர் கொடுத்த காலத்தால் அழியாத அந்த பாடலை தைரியமாய் தன்னுடைய கணீர் குரலால் கிறிஸ்துவை உயர்த்தி பாட ஆரம்பித்தார் இயேசுவையே துதிசெய் - நீ மனமே இயேசுவையே துதிசெய் - கிறிஸ்தேசுவையே துதிசெய் நீ மனமே இயேசுவையே துதிசெய் மாசணுகாத பராபர வஸ்து நேசக்குமாரன் மெய்யான கிறிஸ்து இயேசுவையே துதிசெய் நீ மனமே இயேசுவையே துதி செய் என்று தொடர்ந்து மூன்று அடிகளை மனமுருக பாடி முடித்தார். உன்னிப்பாக கேட்டுக் கொண்டிருந்த மன்னரிடமிருந்து கைத்தட்டல் ஆரம்பித்தது. இறைவன் இயேசுவின் மீது சாஸ்திரியார் கொண்டிருந்த ஆழ்ந்த விசுவாசப் பற்றைப் பெரிதும் பாராட்டினான் மன்னர் சரபோஜி. “உம் தெய்வத்தைப் பற்றி நீர் எங்கும் தடையின்றி எடுத்துக் கூற, என் அனுமதி உமக்குண்டு”. என்று கூறினான். இன்றளவும் சபைகளில் இந்த பாடல் பாடப்பட்டு, தேவனுடைய நாமம் மகிமைப்பட்டு வருகிறது. கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக.


பாகம் 4

வேதநாயகம் சாஸ்திரியார் ஒரு முறை இலங்கையிலுள்ள யாழ்ப்பாணத்திற்கு செல்ல நினைத்து,நாகப்பட்டினம் வந்து யாழ்ப்பாணம் செல்லும் தோணியில் ஏறி அமர்ந்தார், வெகுநேரம் ஆகியும் தோணி புறப்படாததினால் தோணி ஏன் புறப்படவில்லை என்று கேட்டார்.

அதற்கு தோணி ஓட்டுபவர் "எப்பொழுது வடகாற்று வீச துவங்குதோ அப்போதான் தோணி புறப்படும் என்றார்",அதற்கு வேதநாயகன் தோணி ஓட்டுபவரை பார்த்து "வடகாற்று எப்போது வரும் என்று கேட்டார்.அதை சொல்ல தெரியாது "என் குல தெய்வத்திற்கு கோழி வெட்டி,கோடாங்கி அடித்து கேட்க வேண்டும் என்றார்,

அதற்கு வேதநாயகன் அதற்கு எல்லாம் நேரம் இல்லை என்று சொல்லி வடபுறம் திரும்பி ஆண்டவரை நோக்கி ஒருபாடலை பாடதொடங்கினர்,அவர் பாடிகொண்டிருக்கும் போதே வடகாற்று வீச துவங்கிவிட்டது.இந்த காட்சியை கண்ட படகோட்டி அப்படியே பிரம்மித்து ஆண்டவரை விசுவாசித்து படகை செலுத்தினர்.

இயேசு கிறிஸ்துவைத் தன் சொந்த ரட்சகராக ஏற்றுக் கொண்ட நாள் முதல், தனது 90-வது வயதில் மரிக்கும்வரை, ஆண்டவர் தனக்குத் தந்த தமிழ்ப் புலமையைக் கொண்டு அவரைத் துதித்து, பல பாடல்களையும், நூல்களையும், பண்ணெடுத்துப் பாடினார். 1864ம் ஆண்டு ஜனவரி மாதம் 24 தேதி தன் ஊழியகாரனாகிய சாஸ்திரியாரை தேவன் இம்மையிலிருந்து, மறுமைக்கு எடுத்துக்கொண்டார். அந்த நாள் ஒரு Easter நாள் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது உடல் தஞ்சையில் உள்ள St.Peter's சர்ச் பின்புறத்திலுள்ள கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. "அவன் மரித்தும் இன்னும் பேசுகிறான்" (எபிரெயர் 11:4 ) என்ற வசனத்திற்கு ஏற்றது போல், சாஸ்திரியாருடைய குடும்பம் இன்றளவும் கர்த்தரைப் பாடி மகிமைப்படுத்தி வருகிறார்கள். சகோதரன் கிளமெண்ட் சாஸ்திரியார் அவர்கள் வயலினில் பாடல்களை வாசித்து, கர்த்தருடைய நாமத்தை மகிமைப்படுத்தி வருகிறார்கள். சங்கை தே.வேதநாயகம் சாஸ்திரியார் மரித்தும் தன் பாடல்கள் மூலம் இன்றும் பேசிக்கொண்டே இருக்கிறார். கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக.

Christian Missionary History Tamil Part 6

முதலூர் "CITY OF REFUGE" என்று அழைக்கப்படுகிறது. இது கிறிஸ்தவர்களுக்காக மட்டுமே உருவாக்கப்பட்ட முதல் மற்றும் முன்னணி கிராமமாகும் முதலூர் உருவாக்கம்: "முதல் கிராமம்" என்று பொருள்படும் முதலூர்,

1799 ஆம் ஆண்டில் பாளையங்கோட்டையில் இருந்து அண்மையில் மதம் மாறிய ஒரு குழுவால் நிறுவப்பட்டது, கிராமத்தின் முதல் குடியேற்றக்காரரான டேவிட் சுந்தரநந்தனின் முயற்சியால், முற்றிலும் கிறிஸ்தவ குடியேற்றத்தை உருவாக்க முயன்றார்.

டேவிட் சுந்தரநந்தனின் அயராத உழைப்பு மற்றும் இராணுவ ' கேப்டன் எவரெட் தாராள நன்கொடையுடன். ஆகஸ்ட், 1799 இல் ஒரு செவ்வக நிலம் Rev. ஜீனாய்க் என்ற பெயரில் வாங்கப்பட்டது.

முதலூரில் மாற்றப்பட்ட கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களால் தொடர்ந்து தாக்கப்பட்டனர். இவர்களைத் தடுக்க, டேவிட் சுந்தரநந்தன் முதலூரின் இளைஞர்களுடன் சேர்ந்து “சிலம்பம்” கற்றுக் கொடுத்தார், சிலம்பம் அணிக்கு “தாடிகம்பு சேனா” என்று பெயரிடப்பட்டது. எனவே, டேவிட் சுந்தரந்தன் "தாடிகம்பு டேவிட் சுந்தரந்தன்" என்று அழைக்கப்படுகிறார்.

முதலூரில் சிறந்த வடிகால் அமைப்புடன் ஐந்து நேரான தெருக்கள் உள்ளன. கிழக்கு-மேற்கு ஐந்து வீதிகள் மற்றும் வடக்கு-தெற்கு குறுக்கு வீதிகள் இங்கிலாந்தில் கிராம உருவாக்கத்தை ஒத்திருக்கின்றன.

செயின்ட் மைக்கேல் மற்றும் ஆல் ஏஞ்சல்ஸ் சர்ச் உருவாக்கம்: கிராமத்தில் முதல் தேவாலயம் 1799 ஆம் ஆண்டில் பனை ஓலையால் கட்டப்பட்டது,

ஆனால் கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களால் எரிக்கப்பட்டது. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு,

Rev சத்தியநாதன் இரண்டாவது தேவாலயத்தை கட்டினார்.

மூன்றாவது தேவாலயம் 1816 ஆம் ஆண்டில் செங்கல் மற்றும் சுண்ணாம்பு கலவை கொண்டு கட்டப்பட்டது. டேவிட் சுந்தரநந்தனுக்குப் பிறகு, Rev எச்.பி. நார்மன் முதலூருக்கு ஒரு சிறந்த சேவையை வழங்கினார். அவர் ஒரு சிறந்த கட்டிடக் கலைஞராக இருந்ததால், இரண்டு ஆண்டுகளுக்குள் மேற்கத்திய வடிவத்தில் ஒரு பெரிய தேவாலயத்தை கட்டினார். இது 2000 க்கும் மேற்பட்டவர்களை வைத்திருக்கும் திறன் கொண்டது.

1883 நவம்பர் 30 ஆம் தேதி புனித ஆண்ட்ரூவின் நாளில் Rev பிஷப் சார்ஜென்ட் இந்த தேவாலயத்தை அர்ப்பணித்தார். தேவாலயத்தின் நீளம் 152 அடி மற்றும் அகலம் 63 அடி. பலிபீடம் அற்புதமான அழகு மற்றும் தரையிலிருந்து நான்கு அடி உயரம் கொண்டது,

இது பாடகர்களுக்கான பிரத்யேக இடமாகும் Rev எச்.பி. நார்மன் குறைந்த கதைகளுடன் தட்டையாக இருந்தார். எனவே, முதலூர் மக்கள் ஏழு தளங்களுடன் 193 அடி உயர கோபுரத்தை கட்டினர்.

கோபுரத்தின் உச்சியில் தங்க சிலுவையுடன் ஒரு கிரீடம் கல் வைக்கப்பட்டது. புதிய தேவாலய கோபுரம் 1929 இல் அர்ப்பணிக்கப்பட்டது. முதலூர் தேவாலயத்தில் சில தனித்துவமான கட்டடக்கலை வடிவமைப்புகள் உள்ளன.

விவிலிய_ எண் கணிதத்தின் படி, ஏழு எண் “முழுமையின் முழுமை” அல்லது “முழுமை” என்பதைக் குறிக்கிறது. தேவாலய கோபுரத்தில் ஏழு தளங்கள் உள்ளன.

உள் தேவாலயத்தில் ஒவ்வொரு பக்கத்திலும் ஏழு வளைவுகள் கொண்ட ஏழு தூண்கள் உள்ளன.

பலிபீடத்தில் சரியாக ஏழு படிகள் உள்ளன. பலிபீட சிலுவையின் ஒவ்வொரு பக்கத்திலும் ஏழு மெழுகுவர்த்திகள், ஏழு பதக்க விளக்குகள் மற்றும் ஒரு கண்ணாடி ஹெப்டகன் (ஏழு பக்க பலகோணம்) பலிபீடத்தை அலங்கரிக்கின்றன. சமூக மேம்பாடு: அதன் அஸ்திவாரத்திலிருந்து, முதலூர் நன்கு வளர்ந்த உள்கட்டமைப்பைப் பெற்றுள்ளது.

1803 முதல் கல்வி கிடைத்தது, 1891 இல் ஒரு அஞ்சல் சேவை, 1940 இல் பொது போக்குவரத்து, 1965 இல் ஆரம்ப சுகாதார சேவை மற்றும் 1970 இல் முதல் வங்கி (கனரா வங்கி). தொலைத்தொடர்பு சேவை 1990 இல் தொடங்கப்பட்டது. முதலூர் பஞ்சாயத்து 1955 இல் அமைக்கப்பட்டது.

சுவி . தாவீது சுந்தரானந்தனார் உபதேசியார் * முதலூர் கி . பி . 18ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அப்பொழுது - தாழ்த்தப்பட்டவர்களாகக் கருதப்பட்ட நாடார் குலத்தின் நற்செய்தியை பறைசாற்ற கடவுளால் தெரிந்தெடுக்கப்பட்டவர் அவ்வின மக்களின் தலைவர் என்று ஐரோப்பாவில் அறியப் அவ்வினத்தின் * முதல் கிறிஸ்தவ உபதேசியார் .

* நெருக்கடி இன்னல்கள் பிரச்சனைகளில் இருந்து கிறிஸ்தவர்களைப் பாதுகாத்தவர் , சாயர்புரம் நாசரேத் , சமாரியா , பெத்லகேம் , எருசலேம் , கடாட்சபுரம் அன்பின் நகரம் , சுவிசேஷபுரம் போன்ற பல கிறிஸ்தவ குடியேற்றங்களின் முன்னோடி , முதலூரின் தந்தை என்று அழைக்கப்படும் * தாவீது . சுந்தரானந்தன் *

சாத்தான்குளத்திற்கும் முதலூருக்கும் இடையில் உள்ள காலன்குடி என்னும் சிற்றூரைச் சார்ந்தவர் . இவரது இயற்பெயர் சின்னமுத்து . இளம் வயதிலேயே பெற்றோர் இறந்துவிட , அவரும் அவரது சகோதரியும் விஜயராமபுரம் என்ற சிற்றூரில் வசித்துவந்த அவரது தாய்மாமா அத்தையினால் வளர்க்கப்பட்டனர் . இளம்வயதிலே மிகவும் புத்திக்கூர்மைமிக்கவராய்த் திகழ்ந்த சுந்தரானந்தன் , மருத்துவம் , தத்துவம் , ஜோதிடம் ஆகியவற்றில் மிக்க ஆர்வம் காட்டினார் .

ஆனால் அவரின் போக்கு அவரது அத்தைக்கு பிடிக்கவில்லை . அவரது 17வயதில் , ஒருநாள் கொடுத்த வேலையை செய்ய தவறியதற்காக அவரது அத்தை அவரை தயிர்கடையும் மத்தால் அடித்துவிட்டார் . அதனால் வருத்தமுற்ற சுந்தரானந்தன் வீட்டைவிட்டு வெளியேறி கருப்பட்டி ஏற்றிச் சென்ற வண்டியின் பின்னால் இராஜபாளையம் சென்றார் .

அங்கிருந்து தஞ்சாவூர் சென்றார் . அங்கு அருட்திரு சுவார்ட்சுடன் தொடர்பு ஏற்பட்டு இயேசுவை ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு உதவியாக இருந்தார் .

* 1798ம் ஆண்டு நெல்லைப் பகுதிகளில் ஊழியம் * செய்து வந்த - சத்தியநாதன் தன் ஊழியத்திற்கு உதவியாக ஒரு உபதேசியாரை அனுப்பும்படி சுவார்ட்சு ஐயரை வேண்ட , சுவார்ட்சு ஐயரவர்கள் தாவீதை அங்கு உதவியாக அனுப்பினார் . தமது 21 வயதில் தாவீது மீண்டும் நெல்லை வந்தார் . கிளாரிந்தாவின் மேற்பார்வையில் நடைபெற்று வந்த பள்ளியில் ஒரு வாரம் பணி செய்துவிட்டு தான் வளர்ந்த ஊராகிய விஜயராம் புரத்திற்குச் சென்றார் .

மரித்துவிட்டார் என்று கருதப்பட்ட சுந்தரானந்தன் , வீடு திரும்பியது அவரது உறவினர்களுக்கு மகிழ்ச்சியைக் கொண்டு வந்தது . தாவீதும் காலம் தாழ்த்தாது கிறிஸ்துவில் தான் கொண்டிருக்கும் விசுவாசத்தையும் கிறிஸ்துவில் தான் கண்ட இன்பத்தையும் தன் உறவினரோடும் இனத்தாரோடும் பகிர்ந்துகொண்டார் .

பின் பாளையங்கோட்டைக்குத் திரும்பி , 1797ம் ஆண்டு மார்ச் 22ம் தேதி சத்தியநாதனுடன் மீண்டும் விஜயராமபுரத்துக்கு வந்தார் . தாவீதின் இனத்தார் அவர்களை மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்று கிறிஸ்துவின் ' ' சுவிசேஷத்தை ஆவலுடன் கேட்டனர் . தொடர்ந்து அப்பகுதியில் * 16 ' நாட்கள் * செய்த ஊழியத்தின் பயனாக நான்கு குடும்பங்கள் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டனர் . விஜயராமபுரத்தில் பள்ளிகூடம் ஒன்றும் ஆரம்பிக்கப் பட்டது . புதிதாக கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகியது .

இவர்கள் தங்கள் - விசுவாசத்திற்காக கிறிஸ்தவரல்லாதவர் களிடமிருந்து எதிர்ப்பை சந்திக்க வேண்டியிருந்தது . விஜயராமபுரத்தில் இருந்த அவர்களின் சிறு ஆலயம் இருமுறை தீக்கிரையாக்கப்பட்டது . அவமானம் , நிந்தை , கேலிபேச்சுகள் பெருகின . இந்த இடர்களிலிருந்து நீங்கி கிறிஸ்தவர்கள் நிம்மதியாக ஓரிடத்தில் வாழ வேண்டுமென்று தாவீது விரும்பினார் .

இந்த இக்கட்டான சூழ்நிலையில் இராணுவ ' கேப்டன் எவரெட் என்பவர் தாவீதுக்கு உதவ முன்வந்தார் . அவரளித்த பணத்தைக் கொண்டு அடையல் என்ற கிராமத்தின் அருகில் ஓர் இடத்தை தாவீது வாங்கினார் இப்புதிய நிலத்தில் ஒரு புதிய ஜெப அறையைக் கட்டினார் . கிணறு ஒன்றையும் தோண்டினார் .

கிறிஸ்தவர்கள் இப்புதிய இடத்தில் குடியேறுமாறு அழைப்புக் கொடுத்தார் . விஜயராமபுரம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டவர்கள் 1799 - ல் இங்கு குடியேறினர்

* இப்புதிய குடியிருப்பு முதலூர் என்று ! அழைக்கப்பட்டது * முற்றிலும் கிறிஸ்தவர்கள் அடங்கிய முதல் கிராமமாகையால் அப்பெயர் பெற்றது . 1800ல் முதலூரின் மக்கட்தொகை 200 ஆக பெருகியது . தாவீது , முதலூரின் உபதேசியராக பணியாற்றினார் . கிறிஸ்தவர்களுக்கு துன்பம் ஏற்பட்ட பொழுதெல்லாம் இன்னல்களை தாங்க இயலாது கிராமங்களில் இருந்து முதலூரில் குடியேறினார்கள் மேலும் தாவீதின் அயராத உழைப்பால் அவரது இனமக்கள் பலர் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டனர் .

ஏப்ரல் 1802க்கும் ஜூன் 1803க்கும் இடையில் பாக்கியநாதன் 70 கிராமங்களை சார்ந்த 5382 பேருக்கு ஞானஸ்நானம் கொடுத்தார் . திருச்சபை வளர்ந்து பெருகியது . மீண்டும் துன்பக் காலம் ஆரம்பித்தது . முதலூர் மற்றும் அப்பகுதியைச் சார்ந்த கிறிஸ்தவர்கள் காரணமின்றி துன்புறுத்தப்பட்டார்கள் .

1803 ம் ஆண்டு மே 22 - ம் நாள் முதலூர் ஆலயம் தீக்கிரையாக்கப்பட்டது . பல இன்னல்கள் மத்தியிலும் முதலூர் கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவுக்கு சாட்சியாக நின்றனர் . தொடர்ந்து பலர் கிறிஸ்துவண்டை சேர்ந்தனர் . நாளடைவில் கிறிஸ்தவர்களுக்கு நேரிட்ட துன்பம் அதிகமானது . தாவீதால் அநீதியைப் பொறுத்துக் கொள்ள இயலவில்லை .

தம் மக்களைக் கொடுமையிலிருந்து காக்க வேண்டும் என்று தாவீது எண்ணினார் . முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும் என்று எண்ணின் தாவீது * தடிக்கம்புக்காரர் * என்ற கிறிஸ்தவ இளைஞர் குழுவை ஆரம்பித்தார் . எங்கெல்லாம் கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்பட்டனரோ அங்கு தடிக்கம்புக்காரர் சென்று கிறிஸ்தவர்களுக்கு பாதுகாப்பு அளித்து விட்டு திரும்புவர் .

ஆனால் இந்தக் காரியம் கடும் விமர்சனத்திற்குள்ளானது . . தாவீதுக்கும் பிற ஊழியர்களுக்கும் இடையே கருத்து வேறுபாட்டை வளர்த்தது . சுற்றுப்புறத்தில் இருந்த கிறிஸ்தவரல்லாத மற்ற மதத்தினர் தாவீதின் இந்த தடிக்கம்புக்காரர் குழுவிற்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்பினர் . அவரைக் கொல்வதற்கும் வகைதேடினர் .

1806ம் ஆண்டு பெத்லகேம் என்ற ஊரில் தாவீது இறந்து கிடந்தார் . * குட்டம் கிராமத்து மக்கள் தாவீதுக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்தனர் * , அதன் விளைவாக அவர் இறந்தார் என்று கிறிஸ்தவர்கள் நம்பினர் . எப்படியாயினும் நம் மண்ணில் இருந்து கிறிஸ்துவுக்காய் எழுந்த மற்றும் வீழ்ந்த முதல் வித்து தாவீது சுந்தரானந்தம் என்பது மறக்க முடியாத உண்மை .

கோகிலா – கிளாரிந்தா ஆன கதை ! எரியும் சிதையில் இருந்து மீண்ட பார்ப்பன பெண் !

கிளாரிந்தா அம்மையார் (1746-1806) : 18ஆம் நூற்றாண்டின் மத்தியில் CAPT.HARRY LYTTLETON என்ற ஆங்கில அதிகாரி தஞ்சாவூரில் பணிபுரிந்த அந்த நாட்களில் கணவன் இறந்த பின் மனைவி உடன்கட்டை ஏறும் “சதி” என்ற வழக்கம் இருந்துள்ளது. அம்மாதிரியான ஒரு கொடுமையான சம்பவம் நடைபெறுவதிலிருந்து

ஒரு பிராமண பெண்ணை அந்த ஆங்கில அதிகாரி காப்பாற்றி பாளையங்கோட்டைக்கு அழைத்து வந்துள்ளார். அந்த பெண் பின்பு கிறிஸ்தவ சமய பணிகளில் தன்னை ஈடுபடுத்தி கொண்டார். அவரது நினைவிடம் அமைக்கப்பட்ட இடத்திலேயே அவர் பெயரில் சிற்றாலயம் கட்டப்பட்டு “ROYAL CLARINDA” என்று அழைக்கப்படுகிறது. — at Clarinda Church Palayamkottai.


கோகிலா .கிளாரிந்தா ஆன கதை !

(இது ஒரு திருநெல்வேலி சீமையில் இடம்பெற்ற வரலாறு ) எரியும் சிதையில் இருந்து ஒரு பார்ப்பன பெண்ணை கதாநாயகன் மாதிரி அவளை புயலென குதிரையில் வந்து காப்பாற்றி தூக்கி சென்றவன் ஹென்றி லிட்டில்டன் என்ற கிழக்கிந்தியக்கம்பெனி படையின் ராணுவ அதிகாரி.

ஒரு இளம்பெண்ணை உயிரோடு எரிக்கிறார்களே என்ற மனிதாபிமானத்தோடு தான் அவன் காப்பாற்றி தனது வீட்டிற்கு அழைத்து சென்றான். கோகிலாவின் உறவினர்கள் கொதித்து எழுந்தார்கள். அவளை சமூக புறக்கணிப்பு செய்தார்கள். இருவருக்கும் காதல் ஏற்பட்டது. .

ஆனால், அன்றைய பாதிரியார் ச்வார்ட்சு அவளுக்கு ஞானஸ்நானம் கொடுக்க மறுத்தார். காரணம் கோகிலா மராட்டிய ராஜ வம்சத்தை சேர்ந்த பிராமணப்பெண் தஞ்சாவூரில் 1770 இல் மகாராஷ்டிர மன்னர்களின் ஆட்சி இருந்த காலம். கோகிலாவின் கணவன் தஞ்சை அரண்மனையில் முக்கிய அதிகாரி.

என்ன நேரமோ..அவன் திடுதிப்பென்று செத்துப் போனான். அக்கால வழக்கப்படி கோகிலாவை உடன்கட்டை ஏற செய்ய ஏற்பாடுகள் நடந்தன. கோகிலாவோ இளம் வயது. சிதையில் தீமூட்டி அவளை உள்ளே தள்ளியபோது, நம்ம தமிழ்ப் பட கதாநாயகன் போல ஹென்றி லிட்டில்டன் என்ற கிழக்கிந்தியக்கம்பெனி படையின் ராணுவ அதிகாரி.காப்பாற்றினான்.

பின்னாளில் பாளையங்கோட்டைக்கு லிட்டில்டன் மாற்றலாகி வந்தார். அவரோடு கிளாரிந்தாவும் வந்து சேர்ந்தார். இருவரும் வாழ்வில் இணைந்து விட்டார்கள்.

கொஞ்ச நாளில் லிட்டில்டன் இறந்து விட்டார். அதன்பிறகு கிளாரிந்தா கிருஸ்தவ இறைப்பணியை செய்ய தொடங்கி விட்டார். தான் வாழ்ந்த வீட்டருகே ஒரு தேவாலயத்தை தனது சொந்தப் பணத்தில் கட்டினார். அருகே பொதுமக்கள் பயன்படுத்த ஒரு கிணறு வெட்டினார். தென்னிந்தியாவில் இவர் கட்டிய இந்த தேவாலயமே தென்னிந்திய திருச்சபையின் முதல் தேவாலயம்.

1783 இல் துவங்கி, 1785 இல் முடிந்தது. முன்னாளில் ஞானஸ்நானம் கொடுக்க மறுத்த அதே சுவார்ட்சு பாதிரியார் தான் இந்த தேவாலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் என்பது வினோதம் தான்.

இந்த கிளாரிந்தா அம்மையார் நிறுவிய முதல் திருச்சபை பதிவேட்டில் 40 பேர் கொண்ட பட்டியல் இருக்கிறது. 1780 இல் எழுதப் பட்டது. கிளாரிந்தாவில் தொடங்கி அவரது சமையல்காரி சாராள், யோவான் உள்ளிட்டோர் உள்ளனர். இவர்கள் 13 வகை சாதியினர். இந்தப் பட்டியலில் அக்காயி என்றொரு பிச்சைக்காரியின் பெயரும் அடங்கும்.

இந்த கோகிலா என்ற கிளாரிந்தா கட்டிய தேவாலயம் இன்றும் இருக்கிறது. இவர் வீட்டின் அருகே தோண்டிய கிணறு இன்றும் பாப்பாத்தி கிணறு என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கிணற்றில் குப்பையைக் கொட்டி இப்போது பாழடித்து விட்டனர் மக்கள்.

இந்த கிளாரிந்தா தான் முதன்முதலில் குழந்தைகள் கல்வி பயில ஒரு பள்ளிக்கூடத்தை நிறுவி, ஆசிரியர்களுக்கு தனது கையில் இருந்து சம்பளம் வழங்கினார். அக்கால நாவலாசிரியர் அ.மாதவையா கிளாரிந்தா என்ற ஆங்கில நாவல் எழுதி இருக்கிறார். அதில் கோகிலா பற்றிய பல விபரங்கள் உள்ளன.

குளோரிந்தா பிறந்த குலத்தினால் புறக்கணிக்கப்பட்டவள் தான் திருநெல்வேலிக்கு முதல் ஊழியக்காரி ஞானஸ்நானம் பெற்ற குளோரிந்தா சுவிசேஷத்தை அறிவித்து வந்தார் அநேகரை கிறிஸ்துவின் மந்தையில் இணைக்க விரும்பினார் . தன்னுடைய வீட்டிற்கு வந்தவர்களிடம் சுவிசேஷத்தை அறிவித்தார் . குளோரிந்தாவின் வீடு வாஞ்சையை அறிந்திருந்த சுவார்ட்ஸ் பாளையங்கோட்டை திருச்சபையின் பொறுப்பைக் குளோரிந்தாவிடம் ஒப்புக் கொடுத்தார் .

ஆண்டவரின் ஊழியத்தை உண்மையோடு செய்தார் குளோரிந்தா , குளோரிந்தாவின் ஊழியத்தினால் திருச்சபை வளர்ந்து பெருகியது . சுவிசேஷத்தை அறிய அநேகர் அவருடைய வீட்டிற்கு வந்தார்கள் . வெளியே சென்றும் அவர் சுவிசேஷத்தை அறிவித்தார்

* முதல் சபை டாப்பு * ( பதிவேடு ) குளோரிந்தா ஞானஸ்நானம் பெற்று இரண்டு ஆண்டுகள் கடந்து சென்றன . 1780ஆம் ஆண்டு சபையில் 40 அங்கத்தினர் இருந்தார்கள் .

1780 ஆண்டு முதல் சபை டாப்பு எழுதப்பட்டது குளோரிந்தாவின் பெயர் சபை டாப்பில் முதலாவதாக எழுதப்பட்டது .

* குளோரிந்தா தான் பிறந்த பிராமணக் குலத்தினால் புறக்கணிக்கப்பட்டவள் .

* குளோரிந்தா ஆரம்பித்த சபையில் 40 பேரில் 13 இனத்தைச் சேர்ந்தவர்கள் இருந்தார்கள் .

அந்த நாற்பது பெயர்கள் .

  1. குளோரிந்தா பிராமண சாதி
  2. சாராள்
  3. ஹென்றி லிட்டில்டன்
  4. ஜாண்
  5. மனைவி மேரி
  6. மகள் சூசன்னா
  7. மகள் கிறிஸ்டினா
  8. தாவீது .
  9. சாலொமோன்
  10. பாஸ்கல்
  11. மனைவி பாலி
  12. மகன் சாமுவேல்
  13. தாவீது வடுகர் சாதி
  14. மனைவி பட்டி
  15. பிச்சை முத்துப் பண்டிதர் - சலவைத் தொழிலாளி சாதி
  16. நாகல நாயக்கர் , வலங்கை மறித்தான் - பறையர் சாதி
  17. ஞானமுத்து ஈழவர் சாதி
  18. மாசிலாமணி பிள்ளை
  19. ஞானமுத்து சவளக்காரன்
  20. நல்லதம்பி ஆசாரி - தச்சர்
  21. கேவசகாயம் பிள்ளை - கிருநெல்வேலி நகர்
  22. மனைவி ஞானப்பூ
  23. மகள் சூசையம்மாள்
  24. மகன் வேதநாயகம் ( வேதநாயகம் சாஸ்திரியார் )
  25. மகள் பாக்கியம்
  26. மகன் சுவிசேஷமுத்து
  27. ஞானப்பிரகாசம் செட்டியார்
  28. குருபாதம் ஆசாரி
  29. அக்காயி - பிச்சைக்காரி
  30. ராயப்பன் - குதிரைக்காரன்
  31. ராயப்பன் - பள்ளர் சாதி
  32. ராயப்பன் - மறவர் சாதி
  33. * * - - பிராமண சாதி
  34. மகள் பெட்ஸி வாலிமூர்
  35. வளர்ப்பு மகன் சாமு வேல்
  36. வேலைக்காரி - சின்னம்மாள்
  37. மகன் ராயப்பன்
  38. மகள் சவரியம்மாள்
  39. சுவாமிதாசன் - பணிக்கர் சாதி
  40. பாக்கியநாதன் - சவளக்காரன்

உன்னதமான தேவனுடைய ஊழியர்களின் தொகுப்பிலிருந்து திரட்டியது

15 வயதில் இறக்க வேண்டிய பெண்ணான கிளாரிந்தா, தனது 60 ஆவது வயதில் பாளையங்கோட்டையில் இறந்தார். சென்னை மாகாணத்தில் தென்னிந்திய திருச்சபை வரலாற்றை எழுத வேண்டும் எனில், கோகிலா என்ற கிளாரிந்தாவின் வாழ்க்கையில் இருந்து தான் தொடங்கவேண்டும். 25.2.1796 இல் இவரது நினைவு நாள் .

ஹென்றி மார்ட்டின்: 1781 – 1812

ஆண்டவருக்காக நான் எரிந்து போகட்டும் என்று கூறிய ஹென்றி மார்ட்டின் 1781-ம் ஆண்டு இங்கிலாந்து தேசத்திலுள்ள கார்ன்வல் என்ற இடத்தில் பிறந்தவர்.

செல்வச் செழிப்புள்ள வியாபாரியின் மகனான இவர் சிறு பிராயத்திலேயே சகல வசதிகளையும் பெற்றிருந்தார். பளிப்படிப்பிற்குப் பின், கேம்பிரிட்ஜ் பல்கலை கழகத்தில் நுழைந்த இவர் கணிதத்தில் முதல் மாணவனாகத் தேறினார். வாலிப வயதில் ஆண்டவரைத் தேடாமல் வாழ்ந்து வந்த இவரை அன்புத் தந்தையின் மரணம் ஆவிக்குரிய தேடலை ஏற்படுத்தியது. இவரது சகோதரியின் ஜெபங்களும், போதகரின் ஆலோசனைகளும், டேவிட் பிரய்னார்ட் எழுதிய புத்தகமும் ஹென்றி மார்ட்டின் தன்னை ஆண்டவரிடம் பூரணமாக அர்ப்பணிக்க உதவியது. ஆவிக்குரிய வாழ்வில் வளர்ந்து வந்த ஹென்றி மார்டினை, டேவிட் பிரய்னார்ட், வில்லியம் கேரி போன்ற மிஷனெரிகளின் வாழ்க்கை வரலாறு கவர்ந்தது.

அதனால் தானும் ஒரு மிஷனெரியாகச் செல்ல வேண்டுமென வாஞ்சை கொண்டார். மிஷனெரிப் பணிக்காக, தன்னை ஆயத்தப் படுத்திக்கொள்ள ஒவ்வொரு நாளும் பலமணி நேரத்தை ஜெபத்திலும் தியானத்திலும் செலவழித்தார். இந்த உலகத்தை வெறுத்து, தேவனை மட்டும் மகிமைப்படுத்தும் நோக்கம் கொண்டவனாக தான் இருக்கவேண்டும் என்று தீர்மானித்தார்.

அவர் திருமணம் செய்ய விரும்பிய லிடியா என்ற பெண், மிஷனெரியாக வர விருப்பம் கொள்ளவில்லை என்பதை அறிந்ததும் திருமணத்தை கைவிட்டுவிட்டு தேவ அழைப்புக்குக் கீழ்ப்படியத் தீர்மானித்தார். நெருங்கிய நண்பன் ஒருவனின் உதவியுடன் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் தலைவரான சார்லஸ் கிரண்ட் என்பவரைச் சந்தித்தபோது மார்ட்டினை கிழக்கிந்தியக் கம்பெனியின் போதகராக நியமித்து இந்தியாவிற்கு மிஷனெரியாக அனுப்ப வாக்குப் பண்ணினார்.

அவரது வாக்குப்படி 1805-ம் ஆண்டு மார்ட்டின் ஒரு ஆங்கிலிக்கன் போதகராகக் குருப்பட்டம் பெற்றார். அடுத்த மாதமே கிழக்கிந்தியக் கம்பெனியின் கப்பலில் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டார். ஒன்பது மாத கப்பல் பிரயாணத்திற்குப் பிறகு இந்தியா வந்தடைந்தார். அப்போது, அவருக்கு வயது இருபது நான்கு. கல்கத்தாவில் கரையிறங்கிய மார்ட்டின்

ஆயிரக்கணக்கான குழந்தைகளை பட்டினி மரணத்திலிருந்து காப்பாற்றி ஆதரித்து வரும் டேவிட் பிரவுனை சந்தித்து, அவருடன் தங்கியிருந்தார். சில வாரங்களுக்குப் பிறகு ஒருநாள் தன்னுடைய தோட்டத்தில் உட்கார்ந்திருந்தபோது தெய்வ சிலைகளைத் தேரோட்டமாக இழுத்துவரும் பெரும் கூட்டத்தைப் பார்த்தார். கூட்டத்தின் நெருக்கடியில் ஒரு சிறுவன் அந்த தேரின் சக்கரத்தின் அடியில் விழுந்து நசுங்கியபோது மார்ட்டின் நிறுத்துங்கள் என்று உரத்த சத்தமாகக் கத்தினார். ஆனால் அதை யாரும் கண்டு கொள்ளவில்லை. மேலும் சிலர் தானாகவே அந்த சக்கரத்தின் அடியில் விழுந்து தங்களைப் பலியாக்கிக் கொண்டதையும் பார்த்து அதிர்ந்து போனார்.

இவர்களது மூடநம்பிக்கையை எப்படி மாற்றுவது? என்று அதிக பாரம்கொண்ட அவர் தற்கால மிஷனெரி ஊழியத்தின் தந்தை என்று அழைக்கப்பட்ட வில்லியம்கேரியிடம் சென்றார். பதிமூன்று வருட மிஷனெரி அனுபவம் கொண்ட மூத்த மிஷனெரியான கேரி மூலம் ஆண்டவரது வார்த்தை மட்டுமே மக்களை மூடப்பழக்கவழக்கத்திலிருந்து விடுவிக்க முடியும் என்பதை அறிந்துகொண்டார்.

டேவிட் பிரவுனின் தோட்டத்தின் அருகிலுள்ள ஆற்றங்கரையில் கணவனது இறந்த உடலுடன் விதவையான மனைவியும் உயிருடன் எரிக்கப்படுவதையும் அடிக்கடி மார்டின் பார்த்தார்.

இந்த மூடநம்பிக்கைகள் மாறவேண்டுமாயின் விரைவில் இந்திய மக்களின் கையில் சத்திய வேதம் கொடுக்கப்படவேண்டும் என எண்ணினார். அதற்கென ஹென்றி மார்ட்டின் வங்காளம், சமஸ்கிருதம், பாரசீகம், இந்துஸ்தான் அராபிய மொழிகளைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தார். பாட்னா என்ற இடத்தில் அரசாங்க சபைப்போதகராக, காலை நேரங்களில் பணி புரிந்துவிட்டு சாயங்கால நேரத்தில் வேதத்தை இந்துஸ்தானி, பாரசீகம், அராபிய மொழியில் மொழிபெயர்க்க ஆரம்பித்தார். அதோடு இந்தியர்களை வேதத்தை கற்கச்செய்ய சிறு பிள்ளைகளுக்கும் பெண்களுக்கும் பள்ளிகள் அமைத்து எழுதப்படிக்க கற்றுக்கொடுத்தார். ஊழியம் நிமித்தமாக மார்ட்டின் பல மைல் தூரம் நடந்து சென்றார்.

அவரது உயர் அதிகாரிகள் நீங்கள் இப்படி அதிக வெப்பமான இந்தக் கால சூழ்நிலையில் தெருவில் நடக்கக் கூடாது. அது வெள்ளை மனிதரான உங்களுக்கு மதிப்பும் இல்லை என்றனர். அதற்குப் பதிலாக மார்ட்டின் என் ஆண்டவர் இயேசு கிறிஸ்து எப்போதும் நடந்து சென்றே ஊழியம் செய்தார். நான் அவருடைய ஊழியக்காரன் மட்டுமே என்றார்.

அன்றிருந்து இந்திய மக்கள் தொகையான அறுபது மில்லியன் மக்களுக்கு இந்த நற்செய்தி கிடைக்க வேண்டும் என்ற பாரத்துடன் இந்தியில் இரவு நேரங்களில் புதிய ஏற்பாட்டை மொழி பெயர்த்தார். ஒரு அதிகாரத்தை மொழி பெயர்க்க 10 மணி நேரம் ஆனது. கடின உழைப்பின் பயனாக இந்தி மொழியில் புதிய ஏற்பாடு வெளியிடப்பட்டது.

அதற்குப்பின் அராபிய மொழியில் வேதம் இருந்தால் இந்தியர் மட்டுமல்ல அராபியர், பார்ஸிகன், சீரியர், சீன, ஆப்பிரிக்கத் தேசத்தின் பெரும் பகுதியினர், மற்றும் துருக்கி மக்களுக்கு நற்செய்தியைக் கையில் கொடுக்கமுடியுமே என்ற சவாலுடன் அராபிய பாரசீக மொழிகளளக் கற்று அதில் வேதத்தை மொழிபெயர்க்க ஆரம்பித்தார்.

தரித்திரருக்கு சுவிசேஷத்தை அறிவியுங்கள் என்ற வசனத்தின்படி, ஒரு சமயம் 400 பிச்சைக்கார‌ர்களை அழைத்து அவர்களுக்கும் நற்செய்தியைப் பிரசங்கித்தார். அவர்களில் பலர் சாதுக்கள், பணம், அரிசியை எதிர்பார்த்து வந்த இவர்கள் இயேசு கிறிஸ்துவைப் பற்றி கேள்விப்பட்டனர். சில வாலிப முகமதிய சகோதரர்கள் இந்த வெள்ளை மனிதன் பிச்சைக்காரர்களுக்கு என்ன சொல்கிறார் என்று ஒளிந்திருந்து கேட்டு கிறிஸ்துவை அறிந்துகொண்டனர்.

பல முகமதியருடன் நெருங்கிப்பழகி அளவளாவியும் சுவிசேஷத்தைப் போதித்தார். முகமதியர்கள் மத்தியிலும் சிறந்த ஊழியம் செய்தார். அதன் பயனாகச் சில முகமதியர்கள் கிறிஸ்தவ மதத்தைத் தழுவி, சிறந்த கிறிஸ்தவத் தொண்டர்களாகப் பணியாற்றினார்கள். தீனாப்பூரில் ஐந்து பள்ளிக்கூடங்களை நிறுவினார். இதன் மூலம் அநேக ஏழைப் பிள்ளைகள் படிப்பறிவு பெற்றனர்.

இவருடைய முயற்சியால் ஒரு ஆலயம் கட்டப்பட்டு 1806 ம் ஆண்டு மார்ச் மாதம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. கிறிஸ்துவின் உவமைக்கு விளக்கம் ஒன்றை இந்தியில் எழுதி வெளியிட்டார். ஜெபப்புத்தகத்தையும் இந்தியில் மொழிபெயர்த்தார். மார்ட்டினின் கடின உழைப்பும், இந்திய தெருக்களின் புழுதியும் அவரது நுரையீரலை பாதிக்க ஆரம்பித்தன. இந்தியாவின் வெப்பமும் அவரை அதிகம் பாதித்தது. ஓய்வே எடுக்காமல் அதிக கடினமாக அவர் உழைத்தார். பதினெட்டு மாதத்தில் அராபிய பாரசீக மொழியில் புதிய ஏற்பாட்டை மொழி பெயர்த்தார்.

அவரது உடல் அதிக பெலவீனப்பட்டபோது, டாக்டர்கள் அவரிடம் நீர் உடனே இந்தியாவை விட்டு வெளியேறி உமது தாய்நாடு செல்லவேண்டும் என்றார்கள். ‘இந்தியாவை விட்டு வெளியேறி பாரசீகம் போக விரும்புகிறேன். நான் மொழி பெயர்த்த பாரசீக புதிய ஏற்பாட்டை அதே மொழிபேசும் மக்களுக்குக் கொடுத்து அதைத் திருத்தம் செய்ய விரும்புகிறேன்’ என்றார். டாக்டரோ ‘நீர் அங்கு வாழவே முடியாது. நரகத்தைப் போன்று அதிக வெப்பம் உள்ள பகுதி அது’ என்றார். தேவனுக்காக பெரிய காரியத்தைச் செய்வதே எனது நோக்கம் என்று கூறிவிட்டு பெர்சியாவை நோக்கிப் பயணமானார் அவர்.

இந்துமகா சமுத்திரத்தைக் கடந்து பெர்சியாவின் புஷ்ஷிர் என்ற இடத்தை அடந்தபோது எரிபந்தமாக எரிகிற அந்த வெப்பமான சூழ்நிலை அவருக்கு அதிகத் தலைவலியைத் தந்தது. பெர்சியாவின் பண்டிதர்களிடம் தனது புதிய ஏற்பாட்டைக் கொடுத்தபோது, ஒரு பள்ளிச் சிறுவன் இதனை மொழி பெயர்த்துள்ளதுபோல இருக்கிறது என்று சொல்லி அங்குள்ள பெரிசிய நண்பர்கள் அதனைத் திருத்தம் செய்ய முன் வந்தனர். பலமணி நேரம் அவர்களுடன் தரையில் உட்கார்ந்து திருத்தம் செய்யும் பணியை மேற்கொண்டார்.

அங்கு சிலவேளைகளில் வெப்பம் 126 டிகிரியை தொட்டது. வெப்பம் தாங்கமுடியாமல் ஷிராஜ் என்ற மலைபாங்கான நகரில் 1811-ம் ஆண்டு சென்று தங்கி, தனது பணியைத் தொடர்ந்தார். ஒன்பது மாதங்களின் கடின உழைப்பினால் ஒரு நேர்த்தியான பாரசீக மொழி புதிய ஏற்பாட்டை வெளியிட்டார். பெர்சிய வேதாகமத்தை பெரிசியாவின் அதிபதி ஷாவிடம் கொடுத்து ஒப்புதல் பெற விரும்பினார். 600 மைல் தொலைவிலுள்ள டேகரான் என்ற இடத்தில் அந்த அதிபதி இருந்தார். மார்ட்டின் அதிக பெலவீன சரீரத்துடன் 30 நாட்கள் பயணப்பட்டு அவரைப் பார்க்கச் சென்றார்.

அதிபதியை சந்திக்க அங்கு இருந்த வைசிராய் அனுமதி மறுத்துவிட்டார். டெப்பிரிஜ் என்ற இடத்திலுள்ள பிரிட்டிஷ் தூதுவரிடம் கொடுக்க அனுமதி தரப்பட்டது. சுமார் 400 மைல் தூரத்தை 30 நாட்கள் பயணம் செய்து டெப்பிரிஜ் என்ற இடத்தை அடைந்தார். அதிக காய்ச்சலுடன் மரணத்தை நெருங்கிவிட்ட மார்ட்டின் பாரசீக புதிய ஏற்பாட்டை பிரிட்டிஷ் தூதுவரிடம் ஒப்புதலுக்காக பத்திரமாக ஒப்படைத்தார். அதன்பின் தனது சரீர சுகத்திற்காக இங்கிலாந்து திரும்ப முயற்சித்தபோது கான்ஸ்டாண்டி னோபிளிலிருந்து 250 மைல் தூரத்திலிருந்த தோகட் என்ற இடத்தில் தனது 31-ம் வயதில் (1812-ம் ஆண்டு) தேவனுடைய இராஜ்யம் சென்றடைந்தார்.

தரிசனங்களை தரிசாக மாறாவிடாது காக்கும் தரிசன வீரர்கள் நீண்ட நாட்கள் வேண்டுமானால் வாழாமலிருக்கலாம். ஆனால் அவர்கள் நிறைவேற்றி முடித்த பணி வாழையடி வாழையாக, நின்று மக்களை இயேசுவின் பக்கம் திருப்பவே செய்கிறது. ஆம்! ஹென்றி மார்ட்டின் மொழிபெயர்த்த வேதாகமம் இன்னும் அநேகரை தேவனண்டை திருப்பும் பணியை ஓய்வு ஒழிவு இன்றி செய்கிறது.

கால்டுவெல் என்று அழைக்கப்படும் ராபர்ட் கால்டுவெல் அவர்கள் திராவிட மொழி நூலின் தந்தை எனப் போற்றப்படுபவர். திராவிட மொழிகளின் தனித்துவத்தை நிலைநிறுத்தியதில் பெரும்பங்கு இவருடையதே.


இளமைக் காலம்

இவர் 1814 ஆம் ஆண்டு மே மாதம் அயர்லாந்தில் பிறந்தார். இளமையிலேயே சமயப் பற்று மிக்கவராகக் காணப்பட்டார். தொடக்கத்தில் தானாகவே கல்வி பயின்ற இவர், பின்னர் கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் இணைந்து கல்வி பயின்றார். அங்கே அவருக்கு ஒப்பியல் மொழி ஆய்வில் ஆர்வம் ஏற்பட்டது. 24 வயதாக இருந்தபோது லண்டன் மிஷனரி சொசைட்டிஎன்னும் கிறிஸ்தவ மதக் குழுவினருடன் சேர்ந்து, மதத்தைப் பரப்புவதற்கென்று

1838 ஜனவரி 8 ஆம் தேதி சென்னைக்கு வந்து தமது மதப்பணியைத் தொடங்கினார். பின்னர் இவர்நற்செய்தி பரப்புவதற்கான சபை (Propagation of the Gospel Mission) எனும் குழுவினருடன் இணைந்து கொண்டார். தனது பணிக்குத் தமிழ் மொழி அறிவு முக்கியம் என்பதை உணர்ந்த கால்டுவெல், தமிழை முறைப்படி பயிலத் தொடங்கினார்.


மொழியியல் ஆய்வுகள்

1841ல் குரு பட்டம் பெற்றுத் திருநெல்வேலி சென்று அங்கே இடையன்குடி என்னும் ஊரில் தங்கி 50 ஆண்டுகள் தமது மதப்பணியுடன் சேர்த்து தமிழ்ப்பணியும் செய்தார்.இவர் ஆங்கில மொழியில் ஆக்கிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூல் உலகெங்கும் இவருக்கு மிகுந்த புகழ் ஈட்டித்தந்தது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகள் எல்லாம் ஓரினத்தைச் சேர்ந்தவை என்பதை இந் நூல் மூலம் உலகம் ஒப்ப விளக்கிச் சொன்னார்.

திராவிட மொழிக் குடும்பம் ஒன்று இருப்பது பற்றிக் கண்டு பிடித்தது இவரல்ல எனினும், அதற்கான சான்றுகளை ஒருங்கிணைத்து உறுதிப்படுத்தியவர் இவரே.”

வரலாற்று ஆய்வுகள் திருநெல்வேலியில் பணியாற்றிய காலத்தில் அதன் வரலாறு பற்றி ஆய்வுகள் செய்துள்ளார். தகவல் சேகரிப்புக்காகச் சங்க இலக்கியங்களின் ஏட்டுப் பிரதிகளைப் படித்தது மட்டுமன்றி, அகழ்வாய்வுகளில் ஈடுபட்டுப் பல பண்டைய கட்டிடங்களின் அடிப்படைகளையும், ஈமத் தாழிகள், நாணயங்கள் முதலானவற்றையும் வெளிக் கொணர்ந்துள்ளார்.

மீன் சின்னம் பொறிக்கப்பட்ட பாண்டிய நாட்டுக் காசுகள் பல இவ்வாய்வுகளில் கிடைத்துள்ளன. இந்த ஆய்வுகளின் பெறுபேறாக “தின்னவேலி மாவட்டத்தின் அரசியல் மற்றும் பொது வரலாறு (A Political and General History of the District of Tinnevely) என்னும் நூலை எழுதினார்.

இது 1881 ஆம் ஆண்டில் மதராஸ் அரசினால் வெளியிடப்பட்டது. இது பற்றிக் குறிப்பிட்ட ராபர்ட் எரிக் ஃபிரிக்கென்பர்க் (Robert Eric Frykenberg) என்பார், தொல்லியல், கல்வெட்டியல், இலக்கியம் ஆகிய மூலங்களிலிருந்தான தகவல்களைக் கொண்டு எழுதப்பட்ட இந்நூல் தனி நூல்களுள் முழுமைத் தன்மையில் முதன்மையானது என்றார்.

கால்டுவெல் இயற்றிய தமிழ் நூல்கள் நற்கருணை தியான மாலை (1853)தாமரைத் தடாகம் (1871)ஞான ஸ்நானம் (கட்டுரை)நற்கருணை (கட்டுரை) உலக வரலாற்றை மாற்றியமைத்ததில் நூல்கள் பெரும்பங்கு வகிக்கின்றன.காரல்மார்க்சின் மூலதனம் எனும் நூல் அவ்வகையில் அனைவராலும் போற்றப்படும்நூலாக உள்ளது.

அதுபோலத் தமிழக வரலாற்றில் – தமிழ் வரலாற்றில் மிகப்பெரும்மறுமலர்ச்சியை உண்டாக்கிய நூல் எனில் அது இராபர்ட் கால்டுவெலின் “திராவிடமொழிகளின் ஒப்பிலக்கணம்’ எனும் நூலாகும். அந்த நூலையும் அதன் ஆசிரியரானகால்டுவெல்லையும் மதிப்பதற்குக் காரணம் தமிழர்களின் உள்ளத்திலும், உலகஅளவில் தமிழ்பற்றி ஆராய்ந்த அறிஞர்களின் உள்ளத்திலும் புதிய வெளிச்சத்தைஅந்நூல் பாய்ச்சியமையே ஆகும்.

வடமொழியைத் “தேவ பாஷை’ எனவும் தமிழை “நீச்சபாஷை’ எனவும் தாழ்த்தி, தமிழ் இலக்கியங்கள் யாவும் வடமொழி வழிவந்தவைஎன நேராகவும் உரைகளின் வழியாகவும் வடமொழிச் சார்பாளர்கள் பதிவு செய்தனர்.இக்காலகட்டத்தில் தமிழர்களுக்குத் தன்னம்பிக்கை ஊட்டி மொழித்துறையிலும், அரசியல் துறையிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய நூல் கால்டுவெலின்திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் ( 1856, 1875 ) எனும் நூல் ஆகும்.

தமிழ்மொழிமிகச்சிறந்த செவ்வியல்மொழி எனவும் தமிழ்ச்சொற்கள் செம்மொழிகளான கிரேக்கம், இலத்தீனில் இடம்பெற்றுள்ளன எனவும் தமிழ்மொழியிலிருந்து பிறந்தவையேதெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு மொழிகள் எனவும் இவையாவும் ஒரேகுடும்பத்தைச் சார்ந்தவை எனவும் திராவிட மொழிகளைத் திருந்திய மொழிகள்திருந்தாத மொழிகள் என இருவகைப்படுத்தியும் தம் ஆய்வு முடிவுகளைக்கால்டுவெல் வெளிப்படுத்தியவர்.

தமிழ் வடமொழியின் துணையின்றித் தனித்துஇயங்கும் ஆற்றல் உடையது என அழுத்தம் திருத்தமாகச் சான்று காட்டிநிறுவியவர். இதுநாள் வரை தமிழ்ப்பகைவரால் தமிழ் மீது பூசி மெழுகியிருந்தஅழுக்குகளைத் துடைத்துப் பளிச்செனத் தமிழின் பெருமையை ஒளி பெறச்செய்ததால்கால்டுவெல் பெருமகனாரைத் தமிழ்உலகம் என்றும் போற்றக் கடமைப்பட்டுள்ளது.


கால்டுவெல்லின்வருகை

கிறித்தவ மதப்பரப்புப் பணியை அடிப்படையாகக் கொண்டது. எனினும்கால்டுவெல் தமிழகத்தில் ஏறத்தாழ 53 ஆண்டுகள் வாழ்ந்து தமிழ்மொழி, வரலாறு, சமூக முன்னேற்றம், சமய வளர்ச்சிக்குப் பாடுபட்டதால் அவரின் வரலாறுஅனைவராலும் அறியத்தகுந்த வரலாறாக அமைந்துள்ளது.

கால்டுவெல் அவர்கள்அயர்லாந்து நாட்டில் உள்ள “கிளாடி’ எனும் ஆற்றின்கரையில் அமைந்த சிற்றூரில்பிறந்தவர்(1814). இளமையில் அறிவார்வம் கொண்ட தம் மகனை அழைத்துக் கொண்டுபெற்றோர் தம் தாய்நாடான ஸ்காட்லாந்துக்குச் சென்று “கிளாஸ்கோ’ நகரில்வாழ்ந்தனர். 16 ஆண்டுக்குள் ஆங்கில மொழியில் அமைந்த பல இலக்கியங்களைக்கால்டுவெல் கற்றுத் தேர்ந்தார். தம் மகனைக் கவின்கலைக் கல்லூரியில்பெற்றோர் சேர்த்தனர். ஓவியக்கலையைக் கால்டுவெல் கற்றுத்தேர்ந்தாலும் அதனைவாழ்க்கைத் தொழிலாக்கிக் கொள்ளவில்லை. கால்டுவெல் தம் இருபதாம்அகவையில் இறைப்பணி செய்வதற்காக இலண்டன் நகரில் அமைந்த சமயத்தொண்டர்சங்கத்தில் சேர்ந்தார். அச்சங்கத்தின் சார்பாகக் கிளாஸ்கோபல்கலைக்கழகத்தில் மாணவராகச் சேர்ந்து ஐரோப்பிய மொழிகளில் அமைந்தநூல்களையும் சமய நூல்களையும் கற்றார்.இதன் பயனாக இரண்டுந அச்செம்மொழியின் பெருமையைமாணவர்களுக்கு நிறைவடையும்படிப் பயிற்றுவித்தார். கால்டுவெல்பெருமகனாருக்கு மொழியியலில் ஆர்வம் உண்டாக்கியது அப்பேராசிரியரின்வகுப்புரைகளே ஆகும

். இலண்டன் சமயப்பரப்புக் கழகத்தின் சார்பாகச்சமயப் பணிக்கு என 1838ல் “அன்னமேரி’ என்னும் கப்பலில் ஏறி இந்தியாவுக்குப்பயணம் செய்தார். கடலில் பயணம் செய்தபோது இவர் ஏறிவந்த கப்பல் மீது பிரெஞ்சுகப்பல் ஒன்று மோதிச் சிதைந்தது. பலர் மடிந்தனர். சிலர் உயிர் பிழைத்தனர்.பழுதுற்ற கலத்தைப் “பிளிமத்’ என்னும் துறைமுகத்தில் செப்பனிட்டனர்.தென்னாப்பிரிக்கா வழியாகக் கப்பல் வரவேண்டியிருந்ததால் நான்கு மாதம் பயணம்செய்து சென்னைக்கு வந்தார். அவ்வாறு வரும்போது சி.பி. பிரெளன் என்னும்குடிமைப்பணி அதிகாரியுடன் நட்புகொண்டார். அவர் முன்பே ஆந்திராவில் பணிபுரிந்ததால் தெலுங்கு, வடமொழி அறிந்து இருந்தார்.

அவர் வழியாகக் கால்டுவெல்அம்மொழிகளைக் கற்றார். கடலில் பயணம் செய்தபோது கால்டுவெல்லுக்கு முன்புஇருந்த இருமல் நோய் நீங்கியது. கால்டுவெல் சென்னைக்கு வந்ததும் “துருவர்’எனும் தமிழ்கற்ற அறிஞரைக் கண்டு மகிழ்ந்தார். வின்சுலோ, போப், பவர், ஆண்டர்சன் முதலானவர்கள் பின்னாளில் நண்பர்களாயினர்.சென்னை மாநகரில்மூன்று ஆண்டுகள் தங்கிய கால்டுவெல் ஏறத்தாழ நானூறு கல்தொலைவில் உள்ளதிருநெல்வேலிக்கு நடந்து செல்லத் தீர்மானித்தார். நடந்து செல்லும்போதுமக்களின் வாழ்க்கைமுறை, பழக்கவழக்கம், மொழி முதலானவற்றை அறியலாம் எனநினைத்தார். சிதம்பரத்தில் இருந்த நடராசர் கோயிலைக் கண்டு மகிழ்ந்தார்.மயிலாடுதுறை வழியாகச் சென்று தரங்கம்பாடியில் சில நாள் தங்கினார். டேனிஷ்மி­ன் செய்யும் பணிகளை அறிந்தார். பின்பு குடந்தை வழியாகத் தஞ்சாவூர்சென்றார். பெரியகோயிலையும் மாராட்டிய மன்னர் அரண்மனையையும் கண்டுமகிழ்ந்தார்.அங்கு வாழ்ந்த வேதநாயகரைக் கண்டு

உரையாடினார்.திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை அழகையும் திருவரங்கச் சிறப்பையும் கண்டுமகிழ்ந்தார். பின்பு நீலமலை சென்றார். அங்கு ஸ்பென்சர் எனும் தந்தையாரைக்கண்டு அவரின் விருந்தினராக ஒரு மாதம் தங்கி இளைப்பாறினார்.

நீலமலையிலிருந்துஇறங்கி, கோவை வழியாக மதுரை வந்தார். வரும் வழியில் மக்கள் அவரைப் பலவாறுஇழித்தும், பழித்தும் பேசினர். ஒருநாள் நடந்து செல்லும்போது மழைவரத்தொடங்கியது. இரவுப் பொழுதில் தங்கிச்செல்ல நினைத்தார். சத்திரம், சாவடிஉண்டா என வினவிய போது அரசின் சத்திரம் உள்ளது எனவும் அது ஆங்கிலேயர்க்குஇல்லை எனவும் கூறினர். மழையில் நனைந்து துன்பப்பட்ட கால்டுவெல்லைக் கண்டுமாட்டுத் தொழுவத்தில் தங்கும்படி சொன்னார்கள்.

சத்திரத்தில் இடம்கிடைக்காததாலும் மாட்டுத் தொழுவத்தில் தங்க மனம் விருபாததாலும் ஒருவீட்டின் திண்ணையில் தங்கி இரவுப் பொழுதைக் கழித்தார். மதுரை வந்தடைந்தபின்பு திருமங்கலத்தில் சமயத்தொண்டு புரிந்த திரேசியர் அவர்களைக் கண்டுஉரையாடினார். பின்பு நெல்லை வழியே பாளையங்கோட்டை சென்றடைந்தார் (நவம்பர் 1841).

பின்பு நாசரேத்தில் (நவம்பர் 28) தங்கி இறைவழிபாடு நிகழ்த்தி ஒருவிரிவுரையும் செய்தார்.பின்பு முதலூரில் ஞாயிற்றுக்கிழமை விரிவுரையயான்றுநிகழ்த்தினார். அருகில் இருந்த இடையன்குடியைப் பாதை தெரியாமல் நெடுந்தூரம்சுற்றி அடைந்தார். அந்த ஊரே அவர் பணிபுரியும் இடமாகவும், கடைசிக் காலத்தில்நிலைகொள்ளும் இடமாகவும் அமைந்தது.இடையன்குடி என்பது பெரும்பாலும்பனைமரங்கள் நிறைந்த பகுதியாகும். கூரைவீடுகளே மிகுதி. கள்ளியும் முள்ளியும்நிறைந்த பகுதி. அங்குக் கால்டுவெல் குடியிருப்புகளையும் கோயிலையும்உருவாக்கினார். எழுதவும் படிக்கவும் மக்களுக்குக் கற்றுத் தந்தார்.

அப்பகுதியில் வாழ்ந்த நாடார் இன மக்களைக் கல்வியறிவுப் பெற்றவராகமாற்றினார்.1847ல் அங்கு ஆலயப்பணியைத் தொடங்கி 32 ஆண்டுகளுக்குப் பிறகு 1880-இல் அப்பணி நிறைவுற்றது. சென்னை மாநில ஆளுநராக இருந்த நேப்பியார்அவர்கள் கால்டுவெல்லின் திருப்பணிகளைக் காண விரும்பி இடையன்குடியில்ஒருவாரம் தங்கினார்.

500 உருபா அன்பளிப்பாக வழங்கியதையும் அறியமுடிகிறது. இடையன்குடியில்மூன்று மாதம் இளவேனில் காலமாகவும் 9 மாதம் கடும் வெப்பம் நிறைந்தகாலமாகவும் விளங்கும். இடையன்குடியில் வாழ்ந்தபோது வெப்பம் தாளாமல்கால்டுவெல் துன்பப்பட்டுள்ளார். அக்காலங்களில் தமிழ் இலக்கியங்களின் பக்கம்கால்டுவெல்லின் கவனம் திரும்பியது.

திருக்குறள், சீவகசிந்தாமணி, நன்னூல்முதலிய நூல்களைக் கற்றார். உடல் வெப்பம் தணிக்க அருகே உள்ள கடற்கரையில்உவரி என்னும் காயல்பகுதிக்குச் சென்றார். உவரித்துறை பழம்பெருமை வாய்ந்ததைஉணர்ந்தார். அங்கிருந்த இளஞ்சுனையில் வெயிற்காலத்தில் தங்கி வாழ்ந்தார்.

கோடைக் காலங்களில் திருக்குற்றாலம், அசம்புமலை, கொடைக்கானல் மலைகளில்தங்கியிருந்துள்ளார். கால்டுவெல் “தமிழில் கிறித்தவ வழிபாட்டு நூல்’ உருவாக்கும் குழுக்களில் இடம்பெற்று அப்பணியைச் சிறப்புடன்செய்துள்ளார்.மேலும் கிறித்தவ மறைநூலை மொழிபெயர்க்கும் பன்னிருவர் குழுவில்இடம்பெற்றுத் திறம்படப் பணியாற்றியுள்ளார். கால்டுவெல் தமிழகத்தின்திருநெல்வேலி பற்றி, அயல்நாட்டவரின் குறிப்புகளைக் கொண்டு வரலாற்று நூல்எழுதியுள்ளார். பழைய ஈபுரு மொழியில் வழங்கும் துகி என்னும் சொல் தமிழின்தோகை என்னும் சொல்லின் திரிபு எனவும்,அரிசி என்பது கிரேக்க மொழியில் அருசாஎன வழங்குவதையும் கால்டுவெல் குறிப்பிட்டுள்ளார்.கொற்கைத் துறைமுகம் பற்றியஆய்வுகளையும் கால்டுவெல் செய்துள்ளார். கொற்கையின் அருகே இருந்த அக்கசாலை (பொற்காசு செய்யும் இடம்) என்ற ஊரின் சிறப்பு அறிந்து மகிழ்ந்தார். மேலும்கொற்கையின் அகழாய்வுப் பணியைத் தம் சொந்த முயற்சியில் செய்துள்ளார்.

ஆறடிக்குகீழ் மணற்பாறையும், அதன் பிறகு கடற்கரைக் குறுமணலும் கடல்சங்கும்சிப்பிகளும் மூழ்கிக் கிடந்ததை உலகிற்கு வெளிப்படுத்தினார்.இன்றுள்ளகொற்கைக்கு அப்பால் 5 கல்லில் கடல் உள்வாங்கி உள்ளது என்று குறிப்பிட்டார்.பழங்காயல் என்னும் ஊரையும் ஆய்வு செய்தார்.

இவ்வூரும் பண்டைய கடற்கரைத்துறைமுகமாக இருந்திருக்க வேண்டும் என உணர்ந்தார். மேலும் மகாவம்சம்முதலான நூல்களின் துணைகொண்டு ஈழத்தமிழக உறவுகளையும் கால்டுவெல்எழுதியுள்ளார்.பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்திய மொழிகள் பற்றியபலகட்டுரைகளை மேல்நாட்டு அறிஞர்கள் எழுதினர். அவ்வகையில்பழந்தமிழ்ச்சொற்களைப் பழங்கன்னடச் சொற்களோடும் பழைய தெலுங்குச் சொற்களோடும்கால்டுவெல் ஒப்புநோக்கிய போது அடிச்சொற்கள் ஒத்திருப்பதைக் கண்டார்.

ஏறத்தாழ 15 ஆண்டுகள் கடுமையாக உழைத்துத் தென்னிந்திய மொழிகளுக்கு இடையேஉள்ள உறவுகளை ஒப்பிட்டுத் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் எனும் நூலைத்தந்தார். தென்னிந்திய மொழிக் குடும்பத்தில் 6 மொழிகள் திருந்திய மொழிகள்எனவும் 6 மொழிகள் திருந்தாத மொழிகள் எனவும் குறிப்பிட்டார். மேலும்வடசொற்களை அகற்றினாலும் தமிழ்மொழி வளம் குன்றாது தழைத்து இனிது வழங்கும்என்று குறிப்பிட்டுள்ளார்.

கால்டுவெல்லின் பணிகளைக் கண்ட கிளாஸ்கோபல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. கால்டுவெல்லின்ஆய்வுகளில் மொழி ஆய்வு அனைவராலும் போற்றப்படுகிறது. அவர்தம் காலத்தில்தொல்காப்பியம்

முதலான நூல்கள் பதிப்பிக்கப் படாததால் கால ஆய்வுகள் குறித்தஇவர் செய்திகளில் பிழையுள்ளதை அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.

இராபர்ட்கால்டுவெல்லின் மொழி ஆராய்ச்சிப் பணிகளை மொழிஞாயிறு பாவாணர் அவர்கள் தம்நூல்களில் வாய்ப்பு அமையும் இடங்களில்எல்லாம் நன்றியுடன் போற்றிமதித்துள்ளார்.””திராவிடம் வடமொழிச் சாற்பற்றதென்றும், உலக முதன்மொழிக்குமிக நெருங்கியதென்றும், வடசொல்லென மயங்கும் பலசொற்கள் தென்சொற்களேயயன்றும், வடமொழியில் பல தமிழ்ச்சொற்கள் கலந்துள்ளனவென்றும், முதன்முதல்எடுத்துக்காட்டி, மொழிநூற் சான்றுகளால் நிறுவியவர் கால்டுவெல்கண்காணியரே…

இவர் தமிழ்மொழியைச் சிறப்பாய் ஆராய்ந்தது போன்றே மலையாளமொழியைச் சிறப்பாயாராய்ந்தவர் டாக்டர் குண்டட் ஆவர். இவ்விருவர்க்கும்திராவிடவுலகம், விதப்பாய்த் தமிழுலகம் பட்டுள்ள கடன்மாரிக்குப்பட்டுள்ளதேயயனினும் பொருந்தும் “”(ஒப்பியன் மொழிநூல், ப.84), எனவும் “….தமிழ் என்பதன் திரிபே திராவிடம் என்பது புலனாம். ஆயினும்கால்டுவெலார் இவ்வெளிய முறையில் உண்மையைக் காணாமல், இயற்கைக்கு மாறாகத்தலைகீழாய்நோக்கி, திராவிடம் என்னுஞ் சொல்லே தமிழென்று திரிந்ததாக முடிவுசெய்துவிட்டார்.” (தமிழ்வரலாறு, ப.33) எனவும்

“கால்டுவெல் ஐயர்கடைப்பிடித்த கொடிவழி மொழிநூலையே கையாளல் வேண்டும்’ (த.இ.வ. ப. 48) எனவும்பாவாணர் குறிப்பிடுவார். கால்டுவெல் அவர்கள் 18 மொழிகளைக் கற்றவர்.பல்வேறு வரலாற்று நூல்களையும் இலக்கியங்களையும் கற்றவர். சமய அறிவுநிரம்பப்பெற்றவர். எனவே தம் அறிவு முழுமையும் பயன்படுத்தி மொழி நூலையும்வரலாற்று நூலையும் சமய நூலையும் உருவாக்கித் தமிழர் உள்ளங்களில் நீங்காதஇடம் பெற்றவர்.

இவர் இயற்றிய திருநெல்வேலி சரித்திரம் என்னும் நூல்அக்காலத்தில் இருந்த போர்ச்சுகீசிய, டச்சு, பிரெஞ்சு, ஆங்கிலேயர்கள்தமிழ்நாட்டில் நிலைகொண்டு வாழ்வதற்குச் செய்த முயற்சிகளையயல்லாம்மிகச்சரியாகப் பதிவு செய்துள்ளது.அக்காலத்தில் இருந்த படைத்தளபதிகள், சமயத்தொண்டர்கள் எழுதிய மடல்கள், நூல்கள், குறிப்புகள், வாய்மொழிச் செய்திகள், அகழாய்வுச் செய்திகள் இவற்றைத் துணைக்கொண்டு வரலாற்று நூலை எழுதியுள்ளார். கால்டுவெல்தம்

29ஆம் அகவையில் நாகர்கோவிலில் வாழ்ந்த மால்ட் என்பவரின் மகளான எலிசா (21 அகவை) என்னும் மங்கையை மணந்தார். எலிசா ஆங்கிலமும் தமிழும்நன்கறிந்தவர்.இடையன்குடியில் பெண்கள் கல்விபெற எலிசா பணிபுரிந்தவர்.பிணியுற்றவர்களுக்கு மருத்துவம் பார்த்தார்.எலிசா வழியாகக் கால்டுவெல்பேச்சுத் தமிழைக் கற்றார்.

கால்டுவெல்லுக்கு மூன்று மக்கள் எனவும் நான்குமக்கள் எனவும் கருத்து வேறுபாடு உண்டு. அம்மக்களுள் ஆடிங்கிதன் (புddஷ்ஐஆமிலிஐ) என்பவர் மருத்துவராகப் பணிபுரிந்தவர். முதல் மகள்திருச்சியில் “வியத்தர்’ என்பவரை மணந்தாள். இளைய மகள் “லூயிசா’ ஆங்கிலப்படைவீரனை மணந்தாள். எனினும் (28-10-1872இல்) மறைந்தாள்.

கால்டுவெல் வாழ்க்கைஎளிமையானது.பெரும்பாலும் நடந்து செல்வதையே வழக்கமாகக் கொண்டிருந்தார்.ஊர்களில் கிடைக்கும் காய்கனிகளை உண்டு வாழ்ந்தார். வெயில் கொடுமைக்கு அஞ்சிகூரைவீடுகளில் தங்கியிருப்பார். அமர்ந்து படிப்பார். காலை மாலை உலாவுவார்.மூட்டைப்பூச்சிகளுக்கு அஞ்சி இரவில் பனைநாற்கட்டிலில் வீட்டு முற்றத்தில்உறங்குவார். பெரும்பான்மையான நாள்களில் சுற்று வட்டாரத்தில் சமயப்பணிபுரிந்துவிட்டு ஏழாம்நாள் இடையன்குடி வருவார். தாம் பணி செய்த பகுதிகளில் 1877ஆம் ஆண்டு ஏற்பட்ட தாதுவருடப் பஞ்சத்தில் வாடிய மக்களுக்குப் பேருதவிசெய்தார்.

கால்டுவெல் தமிழகத்தில் தங்கியிருந்தபோது மூன்றுமுறை தம் நாடுசென்று வந்துள்ளார். ( 1. 1854-57, 2. 1873-75, 3. 1883-84). கால்டுவெல்திருநெல்வேலி ஆயராக கி.பி. 1877-இல் திருநிலைப்படுத்தப் பட்டார். 1891 சனவரியில் 31-ஆம் ஆண்டு தம் பணியிலிருந்து ஓய்வுபெற்றுக் கொடைக்கானல்சென்று தங்கியிருந்தார்.

அக்காலங்களில் கொடைக்கானல் செல்ல சரியான பாதைவசதியில்லை. அம்மை நாயக்கனூரில் இருந்து கடும் பாறை வழியாகச் சென்றார்.ஒருநாள் குளிரால் நடுக்கம் கொண்டார். ஏழாம்நாள் நோய் வலுவுற்று

1891 ஆகத்துமாதம் 28-ஆம் நாள் இயற்கை எய்தினார். அவர்தம் உடல் இடையன்குடிக்குக்கொண்டுவரப்பட்டு அவர் எடுப்பித்த கோயிலில் அடக்கம் செய்யப்பட்டது. கால்டுவெல்பெருமகனார் தம்மைப் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

“”நான் அயர்லாந்துதேசத்தில் பிறந்தேன்; ஸ்காட்லாந்து நாட்டில் வளர்ந்தேன். ஆங்கில நூல்களில்ஆழ்ந்தேன். எனினும் என்வாழ்நாளில் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாகஇந்தியப்பெருநாடும்,அந்நாட்டு மக்களுமே என் கருத்தை முழுவதுமாகக்கவர்ந்துகொண்டதால் நான் இந்தியர்களுள் ஒருவனாயினேன்.

இந்தியர்களுள் ஒருவராகஇருந்தாலும் தமிழர்களின் புதிய வரலாற்றுக்கு மூலநூல் தந்ததால் தமிழ்பற்றிப் பேசும்பொழுதெல்லாம் கால்டுவெல் பெயரை நம் உதடுகள் ஒலிக்கும்.

பாகம் 1

கிறிஸ்துவுக்காய் இரத்த சாட்சியாக மரித்த புனித பொலிகார்ப்பின் வாழ்க்கை வரலாற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றோம். பொலிகார்ப்பின் வாழ்க்கை வரலாறு நிச்சயமாக உங்களுக்கு பயனுள்ளதாக அமையும்.

86 வருடம் நன்மை செய்த இயேசுவை எப்படி மறுதளிப்பேன் இயேசுவின் சீடரான யோவானின் ஆவிக்குரிய மகன்களில் (சீஷர்களில்) ஒருவரான பொலிகார்ப் (Polycorp) கி.பி 69-ல் பிறந்து ஸ்மைர்னா பட்டணத்தில் வாழ்ந்து வந்தார். இன்றைய துருக்கியில் உள்ள லிஸ்மிர் (Lzmir, Turkey) அந்த நாட்களில் ஸ்மைர்னா (Smyrna) என்று அழைக்கப்பட்டது. இந்த ஸ்மைர்னா பட்டணத்தில் அப்போஸ்த்தலராகிய பவுல் கிறிஸ்துவை அறிவித்து இருந்த்தால் ஒரு சிறு கூட்ட கிறிஸ்தவர்கள் அந்த பட்டணத்தில் இருந்தார்கள்.

இந்த ஸ்மைர்னா சபையானது கிறிஸ்துவின் நிமித்தம் துன்புறுத்தப்பட்ட ஆசியாவின் ஏழு சபைகளுள் ஒன்றாகும். அப்போஸ்த்தலராகிய யோவான் எழுதிய வெளிப்படுத்தின புத்தகத்தில் 1:11 - ல் அதை நாம் வாசிக்கலாம். கிறிஸ்து மரித்து உயிர்த்த முதல் நூற்றாண்டில் அநேக கிறிஸ்துவர்கள் ரோமானிய அரசர்களால் துன்புறுத்தப்பட்டனர். அப்போஸ்தலர்கள் இரத்த சாட்சியாக மரித்தனர். இந்த கால கட்டத்தில் தான் இயேசுவின் சீடரான யோவான் பத்மூ தீவில் இருந்து விடுதலை செய்யப்பட்டு எபேசு பட்டணத்தில் வந்து தன்னுடைய இறுதி நாட்களில் சபையினரை விசுவாசத்தில் திடப்படுத்தினார்.

இந்த எபேசு பட்டணமானது ஸ்மைர்னா பட்டணத்திற்கு அருகில் இருந்த படியால் அநேக கிறிஸ்த்தவர்கள் யோவானின் போதகங்களை கேட்க்க வருவதுண்டு. இந்த பிரகாரமாக வந்து கிறிஸ்துவை சொந்த இரத்ச்சகராக ஏற்றுக்கொண்டவர் தான் பொலிகார்ப். இவர் யோவானின் சீடர்களில் ஒருவரானார். பின் நாட்களில் யோவான் பொலிகார்பை ஸ்மைர்னா திருச்சபையின் பிஷப்பாக (தலைவராக அல்லது ஆயராக) ஏற்படுத்தினார்.

கிறிஸ்துவின் மீதான விசுவாசத்தில் கிறிஸ்தவர்கள் நிலைத்திருக்க இவர் மிகவும் உழைத்தார். இளம் வயதிலிருந்து முதிர் வயது வரை கிறிஸ்துவ சேவை செய்த்தால் இவரது பெயரை அறியாதவர் அந்த நாட்களில் இல்லை.

பாகாள் தெய்வங்களை வழி படுபவர்கள் கூட இவரது பேரில் நல்ல மரியாதை வைத்திருந்தனர். ஆனாலும் தங்கள் தங்கள் தெய்வங்கள் கிறிஸ்துவர்களால் நிராகரிக்கப்படுவதை உணர்ந்த இவர்கள் பொலிகார்ப்பின் விசாரிக்கும்படி ரோமஆட்சியாளர்களிடம் முறையிட்டனர். இதை அறிந்த ஸ்மைர்னா சபை மக்கள் அவரை தலைமரைவாகும்படி வற்புறுத்தினர். பொலிகார்ப்போ இறுதி வரை மந்தையை மேய்க்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். 86 வயது நிரம்பிய பொலிகார்பின் மரணம் நெருங்கிவிட்டதை தேவனும் கனவில் வெளிப்படுத்தினார். இவர் மரிப்பதர்க்கு மூன்று நாட்களுக்கு முன்பதாக இவரது தலையணை தீயில் எரிவதை கனவில் கண்டார். அதன்பின்பு தான் தீயால் எரிக்கப்பட்டு இரத்த சாட்சியாய் மரிக்க வேண்டும் என்ற தேவ சித்த்த்தை அவர் சபை மக்களுக்கு வெளிப்படுத்தினார்.

நாம் மரணத்திற்கு அருகாமையில் செல்ல செல்ல நித்திய மேன்மையின் அருகில் செல்கிறோம் என்று சபை மக்களை தைரியபடுத்தினார். இப்படியாக மரணத்திற்கு தப்பிக்க அதிக வழிகள் இருந்தும் தேவசித்தம் தன்னில் நிறவேற தன்னை ஒப்புக்கொடுத்தார். கிறிஸ்துவுக்காய் இரத்த சாட்சியாக மரித்த புனித பொலிகார்ப்பின் வாழ்க்கை வரலாற்றின் தொடர்ச்சியை அடுத்த பாகத்தில் காணலாம். கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக. ஆமென்


பாகம் 2

86 வருடம் நண்மை செய்த இயேசுவை எப்படி மறுதலிப்பேன் கிறிஸ்துவுக்காய் இரத்த சாட்சியாக மரித்த புனித பொலிகார்ப்பின் வாழ்க்கை வரலாற்றின் தொடர்ச்சி... ரோமப் பேரரசன் மார்க்கூஸ் அவ்ரேலியுஸ் (Marcus Aurelius) ஆட்சியின் ஆறாம் ஆண்டில் ரோம போர்ச்சேவகர்களால் பொலிகார்ப் கைது செய்யப்பட்டார். அன்பின் அப்போஸ்தலனாகிய யோவானின் சீடரல்லவா இந்த பொலிகார்ப். தன்னை கைது செய்ய வந்தவர்களுக்கு உணவும் தண்ணீரும் கொடுத்து உபசரித்தார். இதை கண்ட சேவகர்கள் இப்படிப்பட்ட நல்ல மனிதர்களை ஏன் கைது செய்து அழைத்து வர சொல்கிறார்கள் என்று வியந்தனர்.

இந்த சேவகர்களிடம் தனக்கு ஒரு மணி நேரம் ஜெபிக்க நேரம் தருமாறு பொலிகார்ப் வேண்டிக்கொண்டு ஜெபித்து சபையினரிடம் இருந்து விடைபெற்று ரோமபுரிக்கு சென்றார். அந்த நாட்களில் கிறிஸ்துவை வெளியரங்கமாக அறிக்கை செய்பவர்கள் அநேகர் கூடியிருக்கும் மைதானத்தில் மிருகங்களுக்கு இறையாக்கப்படுவார்கள். இல்லையேல் தீக்கிரையாக்கப் படுவார்கள்.

இந்த மைதானத்திற்குள் எண்பத்தாறு வயது நிரம்பிய முதிர் வயதான பொலிகார்ப் அழைத்து செல்லப்படும் போது பரலோகத்தில் இருந்து "திடங்கொண்டு இந்த மனிதர்களோடு விளையாடு" என்ற குரல் கேட்கின்றது.

ரோம ஆளுநர் பொலிகார்பிடம் "கிறிஸ்துவை மறுதலித்து ரோமானிய கடவுளை வணங்கி ஜீவனை காத்துகொள்ளுமாறு" வற்புறுத்தினார். கிறிஸ்துவைப் பழித்து பேசினால் விடுதலை என்ற ஆசை வார்த்தைகளுக்கு இவர் இணங்கவில்லை. பொலிகார்பிடம் இருந்து வந்த விசுவாச வார்த்தைகள் "எண்பத்தாறு வருடம் நான் சேவித்து வரும் இயேசு இந்நாள் வரை எனக்கெந்த தீமையையும் செய்யவில்லை. இப்படியிருக்க எப்படி நான் என்னை இரட்சித்த இயேசு இராஜனை மறுதலிக்க முடியும்?" என்று கேட்டார்.

இதை கேட்டவுடன் அரங்கத்தில் கூடியிருந்த மக்கள் அவரை தீக்கிரையாகும்படி கூக்குரலிட்டனர். தீக்கிரையாகி இரத்த சாட்சியாக தான் மரிக்கவேண்டும் என்று ஏற்கனவே சொல்லிருந்தபடியாக இது நடந்தது. தனது கடைசி நேரத்திலும் கிறிஸ்துவை சாட்சியாய் அறிவித்து அந்த மக்கள் மனமாறும்படியாக கதறினார்.

இறுதியில் அவர் கைகள் கட்டப்பட்டு அவர்மேல் நெருப்பு வைக்கபட்டது. அந்த நெருப்பில் அவர் அவியாமல் அவரது உடல் தங்கம் போல மின்னியது. கொளுந்துவிட்டு எறிந்த தீயின் மத்தியில் தேவனை அவர் துதிப்பதை பார்த்த அநேகர் இயேசுவை மெய்தெய்வமாக ஏற்றுக்கொண்டனர்.

இதனால் கோபம் கொண்ட ரோம ஆளுநர் ஈட்டியால் அவரை குத்தி கொலை செய்ய சேவகர்களுக்கு கட்டளையிட்டான். இப்படியாக பொலிகார்ப் இரத்த சாட்சியாக மரித்தார். இவரது நினைவாக வருடம்தோறும் அவர் இறந்தநாளை கிறிஸ்தவர்கள் நினவுகூர்ந்து வருகின்றனர். பிப்ரவரி 23-ம் நாள் இவரது நினைவு நாள் அனுசரிக்கப்படுகின்றது.

இவர் இரத்த சாட்சியாக மரித்தாலும் இன்றளவும் கிறிஸ்தவர்களின் உள்ளங்களில் வாழ்ந்து கொண்டிருகின்றார். நாமும் கிறிஸ்துவுக்காக தைரியத்தோடு ஊழியம் செய்வோம். தேசத்தை சுதந்தரிப்போம். கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக. ஆமென்

ஆர்தன்கேனன் மார்காசிஸ். அவர் தான் நாசரேத்தின் தந்தை என அழைக்கப்படும் ஆர்தன்கேனன் மார்காசிஸ். ஒரு மாபெரும் மனித நேயர்! மதம் கடந்து மனிதர்கள் நலனுக்காக தன்னலம் அற்று செயலாற்றிய உன்னதர். பிரார்த்திக்கும் உதடுகளை விட செயலாற்றும் கைகளை நம்பினவர்.

மக்கள் வளர்ச்சி பெற வேண்டுமென்றால் சும்மா பிரார்த்தனையில் மட்டும் இருக்கல் ஆகாது தன்சார்பாக வாழ வேண்டும் என்ற நோக்கில் பல அமைப்புகளை உருவாக்கியவர்

மிஷனறி ஆர்தன் கேனன் மார்காசிஸ் இங்கிலாந்தை சேர்ந்த பெற்றோரின் எட்டு பிள்ளைகளில் கடைக்குட்டியாக 24-12-1852 அன்று இங்கிலாந்திலுள்ள லெமிங்டனில் பிறந்தார். கிறிஸ்தவ நெறியில் வளர்க்கப்பட்டவர். கல்வியில் சிறந்து விளங்கிய இவர், முதலில் இறையியலும் பின்பு மருத்துவவும் கற்று தேர்ந்தார்.

மருத்துவத்தில் மேற்படிப்பு படிக்கும் வேளையில் கால்டுவெல் பிஷப்பை சந்திக்கின்றார். இந்தியாவில், தமிழகத்தில் தென்கோடியில் அடர்ந்த காட்டில் திருநெல்வேலியில் சேவையாற்ற மிஷனறி தேவைப்படுவதாக தெரிவித்ததும் மருத்துவத்தில் தான் மேற்கொள்ள இருந்த மேற்படிப்பை உதறி தள்ளி விட்டு, யேசு நாதரின் சேவகராக இந்தியாவை நோக்கி தனது 22 வது வயதில் பயணத்தை ஆரம்பித்தார்.

குழந்தைப்பருவத்தில்இருந்தே ஆஸ்த்மா நோயால் பாதிப்படைந்த ஆர்தன்கேனன் மார்காசிஸ் உடல்நிலை எதிர்மறையாக இருந்தாலும் இறைவனின் பெயரால் செய்ய போகும் மனித சேவைக்கு தடங்கலாக ஒரு போதும் எடுத்துக் கொள்ளவில்லை. உன்னை போல் உன் அயலானை நேசி, கடவுளை நேசிப்பது என்பது மனிதனை சேவிப்பது ஊடாக என்ற நெறியில் ஆழ்ந்து நம்பிய ஆர்தன் கேனன் மார்காசிஸ் தன் சேவையை இடையன்குடியிலும் துவங்கி பின்பு நாசரேத்தில் தொடர்கின்றார்

மார்காசிஸ் என்ற மனிதரின் செயல்பாடுகள் நாசரேத்தை சேர்ந்த கிறிஸ்தவர்களை மட்டும் முன் நிறுத்தி இருக்கவில்லை. சுற்றியுள்ள பல கிராம மக்கள் நலனையும், சுயசார்பையும், மேம்பாட்டையும் கருத்தில் கொண்டே இருந்தது. வெறும் ஏழு மைல் பரப்பளவில் இருந்த இந்த ஊரில் 1803 ல் முதன் முதலில் எட்டு குடும்பம் மட்டுமே கிறிஸ்தவம் தழுவியது. நாசரேத்தின் அடையாளமாக திகழும் உயர்ந்த கோபுரம் கொண்ட தூய யோவான் ஆலயம் பனை ஓலைகளால் 1803 ல் கட்டப்பட்டது.

1830 அடைக்கலம் ஐயரால் மார்காஸிஸ் ஐயர் காலத்தில் புதுப்பிக்கப்பட்டது. பிரம்மாண்டமாக ஒரு ஆலயம் கட்டப்பட வேண்டும் என்ற ஆர்தன் கேனன் மார்காசிஸ் ஐயர் ஆசைப்பட்டாலும் அவர் காலத்திற்கு பின் 1920ல் தான் தற்போது காணும் ஆலயம் கட்டி முடிக்கப்பட்டது.

நாசரேத்தில் உள்ள லூக் மருத்துவ மனை 1870 ல் டாக்டர் ஜெ. எம் ஸ்ட்ராச்சனால் ஆர்தன் கேனன் மார்காசிஸ் ஐயரின் தலைமையில் துவங்கப்பட்டது. இந்த மருத்துவமனையின் சேவையை சுற்று வட்டாரத்திலுள்ள 20-30 கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட மக்கள் பயண்படுத்தி வருகின்றனர். யேசுவின் சுவிசேஷகர் லூக்காவின் நினைவாக பிற்காலத்தில் 1892 ஆண்டுவாக்கில் லூக் மருத்துவமனை என்ற பெயர் மாற்றப்பட்டது.

தாமிரபரணி வெள்ளப்பெருக்கால் மக்கள் பாதிப்படந்தது மட்டுமல்லாது; கொள்ளை நோயால் கால்வாசி மக்கள் மாண்டனர். இச்சமயம் ஆதரவற்று அனாதையாக்கப்பட்ட குழந்தைகளுக்கு என ஆர்தர் மார்காஸின் 1877ல் ஒரு அனாதை ஆசிரமம் துவங்கினார்.

அரசும் 70க்கு மேற்பட்ட குழந்தைகளை இவரின் மேற்பார்வையில் வளர்க்க கொடுத்தது.இந்த குழந்தைகள் வாழ்க்கை வளம் பெற வேண்டும் என்ற கூறிய நோக்கில் அடுத்த வருடமே தொழில் கல்வி பாடசாலையும் ஆரம்பித்தார். அங்கு நெய்தல், மர, இரும்பு வேலைப்பாடுகள் கற்று கொடுக்கப்பட்டது. இந்த குழந்தைகளை பராமரிப்பது வளர்ப்பது எளிதாக இருக்கவில்லை. அவர்களை சிறந்த நெறியில் வளர்த்தார்.

கல்யாண வயது வந்த பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைத்தார். 1884 ல் முதன்முதலாக தையல் இயந்திரத்தை அறிமுகப்படுத்தியதுடன் தையல் கற்று கொடுக்கும் பள்ளியையும் ஆரம்பித்தார். வெறும் தொழில் கல்வி என்று மட்டுமே நிறுத்தாது 1877 ல் ஆசிரியர் பயிற்சி பள்ளி ஒன்றையும் ஆரம்பித்தார். மக்கள் சேவையில் அத்துடன் திருப்தி அடையவில்லை.

’ஆங்கிலோ வெனாக்குலர் பள்ளி’ என்ற பெயரில் 1882ஆம் ஆண்டு ஆண் குழந்தைகளுக்கான இடை நிலை பள்ளி ஆரம்பித்தார்.. இந்த பள்ளி மெட்ராஸ் மாகாணத்திலுள்ள மிகச்சிறந்த பள்ளி என்ற பாராட்டை 1885 ல் பெற்றது.

ஆண்களுக்கான மேல்நிலைப் பள்ளி இடையன்விளையில் ஆரம்பிக்க வேண்டும் என இருந்த கால்ட்வெல் பிஷப்பின் விருப்பத்தை மீறி; 1889 ல் நாசரேத் பள்ளியை உயர்நிலை பள்ளியாக உயர்த்தியதால் கால்டுவெல் பிஷப்பின் எதிர்ப்பையும் சந்தித்தார்.

மனக்கசப்பில் இருந்த பிஷப் 1892 வாக்கில் நாசரேத் உயர்நிலை பள்ளியை சில காலம் மூட உத்தரவிட்டார். ஆண் குழந்தைகளுக்கு மட்டுமல்ல கல்வி; பெண் குழந்தைகளும் சமநிலையை எட்ட வேண்டுமெனில் கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கில் பெண் குழந்தைகளுக்காக சிறந்த பாடசாலை வேண்டும் என ஆர்வம் கொண்டார். அதன் விளைவாக பொது கல்வி திட்டத்தில் 1886 ல் பெண் குழந்தைகளுக்கு என பள்ளிக்கூடம் ஆரம்பித்தார்.

1888 ஆம் ஆண்டு, முதல் செட் மாணவிகள் மெட்ரிக் கல்வி பெற்று வெளியேறினர். இந்த பள்ளி தான் முதன் தென் இந்தியாவில் பெண்களுக்கான கல்விக்கூடமாக விளங்கியது. இதன் தரமான கல்வி சூழல் மெட்ராஸ் மாகாணத்தால் பாராட்டும் பெற்றது. இந்த நிறுவனங்களை எல்லாம் வரும் காலம் சிறப்பாக நடத்த வேண்டும் என்றால் சிறந்த தலைமையை உருவாக்க வேண்டிய தேவையையும் மனதில் கொண்டு இறையியல் கல்லூரியும் 1890 துவங்கினார்.

ஆர்தன் கேனன் மார்காசிஸ் நாசரேத் என்ற சிற்றூரை அவரின் குழந்தை போல் பாராமரித்து வளர்த்தி கொண்டு வந்தார். கல்வியோடும் மருத்துவ மனையோடும் மட்டும் அவருடைய சேவையை நிறுத்தி கொள்ளவில்லை.

இயற்கை வளங்களுடன் மக்கள் வாழ வேண்டும் என்ற நோக்கில் வாளயடியில் இருந்து நாசரேத் வரை தெருவோரம் ஆலமரம் அரசமரம் , வேம்பு மரங்களை நட்டு உருவாக்கினார். தபால் சேவைக்கு என 25-12-1894 அன்று தாபால் அலுவலகம் துவங்கினார்.

நாசரேத்திலுள்ள 5 வது தெரு மார்காசிஸ் திட்டத்தில் உருவாக்கப்பட்டதாகும். திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் இரயில் தடம் நாசரேத் வழி செல்லும் படியாக அமைத்தார். வயதானவர்களும் கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கில் வயதனவர்களுக்கான பாடசாலைகளை 1880 ல் நாசரேத் மற்றும் சுற்றுப்புற கிராமங்களிலும் துவங்கினார்,

நலிந்த மக்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கில் ’எஸ் பி ஜி’ நாசரேத் மரண உதவி நிதி (“S.P.G. Nazareth Christian Death Aid-Fund”) என்ற அமைப்பை 1884 ல் துவங்கினார்.

அடுத்த ஆறு வருடத்திற்கு உள்ளாக இதன் மூலம் பெறப்பட்ட 66,331 ரூபாயை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பகிர்ந்து அளித்தார். அதே போன்று எஸ் பி. ஜி விதவை அமைப்பு (“S.P.G. Widows’ Association”) மூலம் நலிந்த விதவைகளுக்கு உதவினார். குடும்பத்தில் யாரேனும் இறந்தால் வட்டியில்லா கடம் கொடுப்பது வழியாக அந்த குடும்பத்தை பணநெருக்கடியில் இருந்து மீட்கும் நோக்கில் ”த்ரிஃப்ட் சமூக நிதி” (Thrift Fund Society) என்ற அமைப்பையும் உருவாக்கியிருந்தார். இப்படியாக நாசரேத் என்ற ஊரை ஒரு நெடிய வளர்ச்சி பாதையில் நடத்தி சென்றவர் ஆவார் ஆர்தர் கேனன் மார்காசிஸ்.

உயிர்பிரியும் தருவாயிலும் உன்னத ஊழியம் – ஜான் ஹார்ப்பர்

1912, ஏப்ரல் 15, அதிகாலை வேளை… “ஆண்டவராலும் மூழ்கடிக்க முடியாத கப்பல்” என்று புகழ் பெற்ற “டைட்டானிக்” என்ற கப்பல், அட்லான்டிக் கடலில் இருந்த பனிப்பாறையில் மோதி மூழ்க ஆரம்பித்தது. பயணிகள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த நேரம். என்ன நடக்கிறது என்பதை அவர்கள் அறியவில்லை. பனிப்பாறை வெட்டியதில் கப்பல் ஏறத்தாழ இரண்டாகப் பிளந்துவிட்டது. கப்பலின் தலைவர், ஒரு துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கிச் சுட்டார். சப்தம் கேட்டு விழித்த பிறகு தான், பயணிகள் தாங்கள் எத்தகைய ஆபத்தில் சிக்கியிருக்கிறோம் என்பதை உணர்ந்தனர். அதில் பயணித்தவர்கள் நூறோ, இருநூறோ அல்ல. 1528 பேர். எங்கும் அலறல் ஒலி. உயிர் மீட்சி படகுகள் மற்றும் ஜாக்கெட்களைத் தேடி அவர்கள் அங்குமிங்கும் ஓடினர். பிழைப்போம் என்ற நம்பிக்கை பயணிகளுக்கு அறவே போய் விட்டது.

அப்போது, கப்பலில் பயணித்த பாடல் குழுவினர், “ஆண்டவரே! எங்களை உம் அருகில் சேர்த்துக் கொள்ளும்” என்று பொருள்படும்படியான பாடலைப் பாடினர். பல பயணிகள் அவர்கள் அருகே வந்து நின்று அவர்களும் இணைந்து பாடினர்.

அந்தக் கப்பலில் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஜான் ஹார்ப்பரும், அவரது எட்டு வயது மகள் நானா மற்றும் அவரது மனைவி சகோதரி ஜெசி லெயிட்டக் ஆகியோரும் பயணம் செய்தனர். அந்த மகள் மீது அவருக்கு பாசம் அதிகம். அவர் கப்பலின் தலைவனைச் சந்தித்தார். கெஞ்சிக்கூத்தாடி ஒரு உயிர் மீட்சிப் படகைப் பெற்றார். அதில் மகளையும், ஜெசியையும் ஏற்றி, மகளுக்கு முத்தமிட்டு “குட்பை” சொல்லி அனுப்பிவிட்டார். அதன்பின் அவருக்கு ஒரு உயிர் மீட்சி ஜாக்கெட் கிடைத்தது. அதை அணிந்து கொண்டு அவர் தப்பியிருக்கலாம். ஆனால், அங்குமிங்கும் ஓடிய அவர், அந்தக் கடைசி நேரத்திலும் தனது ஊழியத்தைக் கைவிடவில்லை. “இயேசு கிறிஸ்துவை விசுவாசியுங்கள். அப்பொழுது நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள்” என்று சப்தமிட்டார்.

கப்பல் இப்போது முழுமையாக மூழ்கும் நிலைக்குச் சென்றுவிட்டது. வேறு வழியின்றி ஜாக்கெட்டை அணிந்து கொண்டு கடலில் குதித்தார். அவரருகே ஸ்காட்லாந்தைச் சேர்ந்த “அக்கியுலா வெப்” என்ற இளைஞன் உயிரைக் காக்க நீந்திக் கொண்டிருந்தான். பனிக்கடலாக இருந்ததால் அவனால் நீண்டநேரம் தாக்குப் பிடிக்க முடியவில்லை.

இன்னும் சிறிது நேரத்தில் மூழ்கி விடுவான் என்ற நிலையில், “தம்பி! நீ இரட்சிக்கப்பட்டிருக்கிறாயா?” என்று கேட்டார். “இல்லை” என்றான் அவன். “அப்படியானால் இதை நீ பிடி,” என்று தன் ஜாக்கெட்டை கழற்றி அவனருகே வீசினார்.” “இதை நீ அணிந்து கொள், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி. அப்போது, நீ இரட்சிக்கப்படுவாய். என்னைக் குறித்து நீ கவலைப்படாதே. நான் கீழ் நோக்கி மூழ்கிக் கொண்டிருந்தாலும், மேலே போகிறேன்,” என்றார்.

அந்த இளைஞன் அதை அணிந்து கொண்டான். சற்று நேரத்தில் கடலில் அவர் மூழ்கிவிட்டார். “அந்தக் கப்பல் மூழ்காமல் இருந்திருக்குமானால் ஹார்ப்பர் சிகாகோ நகரிலுள்ள ஒரு சபையில் பிரசங்கம் மட்டுமே செய்திருப்பார். ஆனால், தேவனோ அவரது தியாகத்தை வெளிப்படுத்தும் வகையில், தன்னுயிரைக் கொடுத்து பிற உயிரைக் காக்கும் மனப்பாங்கை அவரது மரணத்தின் மூலம் தந்துள்ளார்.

“ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை. நான் உங்களுக்குக் கற்பிக்கிற யாவையும் நீங்கள் செய்வீர்களானால், என் சிநேகிதராயிருப்பீர்கள்” (யோ 15:13-14). இயேசுவின் சிநேகிதராயிருக்க விரும்பினால் உயிர் பிரியும் தருவாயிலும் அழிகின்ற ஆத்துமாக்களை காப்பாற்ற வேண்டும்.

ஹானிங்டன் (1847-1885) ஜேம்ஸ் ஹானிங்டன் (JAMES HANNINGTON) இங்கிலாந்தில் சுசெக்ஸ் (SUSSEX) என்னும் பகுதியில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர். படிப்பை முடித்து ஒரு வங்கியில் பணியாளராக இருந்தார். பின்னர் இறையியலைக் கற்றுகொள்வதில் ஆர்வமுள்ளவராக இறையியல் கல்லூரியில் சேர்ந்து படித்தார். பின்னர் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை அறிவிக்கும் நற்செய்தி ஊழியத்தில் தன்னை முற்றிலுமாக இணைத்துக் கொண்டார்.

1875 ல் ஹங்ட்பையர் என்ற அவரது சொந்த ஊரிலே தூய ஜார்ஜ் ஆலயத்தின் பொறுப்பாளராக ஊழியம் செய்தார். பின்னர் இங்கிலாந்து நாட்டின் சர்ச் மிஷனரி சொசைட்டியில் சேர்ந்து, அதின்மூலம் ஆப்ரிக்காவிலுள்ள ஜாம்பியா நாட்டிற்கு மிஷனரியாக சென்றார். அந்த நாட்டை ஐரோப்பியர்கள் அடிமை வியாபார மைய்யமாக வைத்திருந்தனர். மேலும் அந்தநாடு மிகக் கொடூரமும், பாலியல் நோய்கள், மலேரியா, டைபாய்டு போன்ற நோய்களின் பிறப்பிடமாகவும் இருந்தது. அங்கு ஊழியம் செய்பவர்களுக்கு பல இன்னல்கள் இருந்ததன. இந்த நிலையில் ஜாம்பியா சென்ற ஜேம்ஸ் ஹானிங்டன் வியாதிப்பட்டதால் இங்கிலாந்து திரும்பும் நிலையாயிற்று.

1883 ம் ஆண்டு ஜேம்ஸ் ஹானிங்டன், கேன்டர்பரி ஆர்ச் பிஷப்பாக (ARCH BISHOP OF CANTERBURY) உயர்த்தப்பட்டார். பின்னர் அங்கிருந்து உகண்டா தேசத்தின் மிஷனரி பணித்தளதிற்க்கு பொறுப்பாளராக அனுப்பப்பட்டார். அங்கு சென்று விக்டோரியா நயன்சா என்ற புகழ் பெற்ற அருவிக்கு அருகாமையில் புதிய பணித்தளத்தை தொடங்கினார். உள்ளூர்வாசிகளுக்கு பள்ளிகளை நிறுவினார். மக்கள் மத்தியில் ஜேம்ஸ் ஹானிங்டனின் செல்வாக்கு உயர ஆரம்பித்தது. கிறிஸ்துவின் நற்செய்தியும் பரவ ஆரம்பித்தது. கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளும் மக்கள் பெருகினார்கள். அவர் அணைத்து மக்கள் மீது பாரபட்சமின்றி அன்பைக் காட்டினார். சிறியோர் முதல் பெரியோர் வரை அவரை நேசித்தார்கள்.

இவரது வளர்ச்சியில் பொறாமை கொண்ட சிற்றரசன் வாங்கா (MWANCA) பல பொய்யான குற்றங்களை வனைந்து அவரை சிறையில் அடைத்தான். சிறையில் அடைப்பதற்கு அந்த சிற்றரசன் தெரிந்து கொண்ட இடம் ஒரு அசுத்தமான குடிசை. அவ்விடம் விஷப் பூசிகளினாலும், எலிகளாலும் நிறைந்து இருந்தது. பேராயர் ஒரு வாரத்திற்குள்ளாகவே குடிசையிலே வியாதிப்பட்டு இறந்து விடுவார் என அச்சிற்றரசன் எண்ணினான்.

ஆனால் பேராயர் ஜேம்ஸ் ஹானிங்டனோ மரிக்கவில்லை. இந்த அற்புதத்தை பொறுத்துக் கொள்ள இயலாத அச்சிற்றரசன் அவரை வெளியேற்றி கொலை செய்ய உத்தரவிட்டான்.

1885 ஆம் ஆண்டு அக்டோபர் 29 ம் நாள், பேராயர் ஜேம்ஸ் ஹானிங்டனை பொது மேடையில் நிறுத்தி ஈட்டியால் குத்தி அவரைக் கொன்றனர். அவர் குத்தப்படும் போது “உகாண்டாவில் கிறிஸ்தவம் பிரவேசிக்கும் வழியை என் இரத்தத்தால் விலைக்கு வாங்கி விட்டேன். கிறிஸ்தவம் இனி எளிதில் உகாண்டா தேசத்தில் வளரும் என்று சிற்றரசன் வாங்காவிற்க்கு சொல்லுங்கள்” என்று தனது மரண வேளையில் சொன்னார்.

இந்த சம்பவம் உலகம் முழுவதும் உள்ள ஆங்கலிக்கன் திருச்சபைகளை வெகுவாய் உலுக்கிற்று. அவருடைய மரணத்தை தொடர்ந்து இங்கிலாந்தில் மிஷனரி வாஞ்சையுள்ள அநேகர் எழுந்தார்கள். அவர்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் உகாண்டாவிற்கு செல்ல மனப்பூர்வமாக முன் வந்தார்கள். அவர்களிலும் அநேகர் ஜேம்ஸ் ஹானிங்டன் போலவே இரத்த சாட்சியாக மரித்தார்கள்.

ஜேம்ஸ் ஹானிங்டன் தரிசனத்தில் கண்டது போலவே இன்று உகாண்டாவின் 90% மக்கள் கிறிஸ்தவர்களாக மாறியிருகின்றார்கள். மிஷனரிகள் புதைக்கபடுவதில்லை, விதைக்கபடுகின்றார்கள் என்ற கூற்று எவ்வளவு பெரிய உண்மை. உகாண்டாவில் மிஷனரிகள் சிந்திய இரத்தம் வீன்போகவிலை. ஜேம்ஸ் ஹானிங்டனின் தரிசனமும் விருதாய் மாறிவிடவில்லை.

இருண்ட கண்டத்தினுள் மெய்யான ஒளியாம் இயேசு இன்றளவும் பிரகாசித்துக் கொண்டிருக்கின்றார். இதை வாசிக்கின்ற நீங்கள் இயேசுவுக்காய் பிரகாசிக்க ஆயத்தமாய் இருக்கின்றீர்களா? சிந்திப்போம் உடனடியாய், செயல்படுவோம் இயேசுவிக்காய். கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக. ஆமென்

Wednesday, 29 April 2020

Christian Missionary History Tamil Part 5

சிறுவன் ஹட்சன் தன் தகப்பனார் சொல்லுவதை மிக ஆர்வத்தோடு கேட்பான் . அவர் அவனுக்கு பல காரியங்களைப் பற்றி விவரித்து வந்தார் .

இச்சமயத்தில் அவர்களுடைய பேச்சு சீனநாட்டைப் பற்றியதாக இருந்தது .

உலகின் பல பாகங்களில் புதிய மிஷனெரி இயக்கங்கள் உருவாகி செயல்பட்டு வந்தன .

ஆனால் சீன தேசத்திற்கான மிஷனெரி திட்டங்கள் ஒன்றும் உருவாகி செயல்படவில்லை . ஐந்து ஆண்டுகளுக்கு முன் மரித்துப்போன கடைசி சீன மிஷனெரிக்குப் பிறகு ஒரு மிஷனெரியையும் அனுப்ப முயற்சிகள் எடுக்கப்படவில்லை .

நான்கு அல்லது ஐந்து வயது நிரம்பிய ஹட்சன் இதைக் கேள்விப்பட்டபோது " நான் வாலிபனாகும் போது மிஷனெரியாக சீனாவுக்குச் செல்லுவேன் " என்றான் .


ஆரம்ப பருவம்

இங்கிலாந்து தேசத்தில் 1832ஆம் ஆண்டு மே 21ஆம் நாள் ஹட்சன் டெய்லர் பிறந்தார் .

இவருடைய பெற்றோர் சிறந்த கிறிஸ்தவர்கள் . அதிக மெலிவான தோற்றமும் பெலவீன சரீரமும் உடைய இவன் , கல்வி கற்க அனுப்பப்பட்டான் .

இரண்டாண்டுகள் கல்வி பெற்றபின் 14 வயது வரை லேயே தங்கி பயின்றான் . நான்கு வயதில் அவனுக்கு எபிரேய மொழியின் எழுத்துக்களை அவன் தகப்பன் இக்கார் . சிறு வயதிலேயே உலகின் அருட்பணி தேவையை உணர்ந்தான் . மனந்திரும்புதலும் அழைப்பும் சிறுபிராயம் முதல் ஹட்சன் ஆவிக்குரிய வாழ்க்கையின் சூழ்நிலையில் வளர்க்கப்பட்டான் .

அவ . 14 வயதாய் இருக்கும்போது , ஒரு ஞாயிறு மாலையில் கைப்பிரதி ஒன்றை வாசித்தான் . அதன் தலைப்பு " எல்லாம் முடிந்தது " என்பதாகும் . அதை வாசித்தபோது அவனுக்குள் பாவ உணர்வு வந்தது . இரட்சிப்பின் தேவையையும் உணர்ந்தான் . அந்த நேரமே கிறிஸ்து இயேசுவைத் தன் சொந்த ஆத்தும மீட்பராக ஏற்றுக்கொண்டான் . அவனுடைய தாயார் வெளியூர் சென்று திரும்பியதும் தன் மீட்பின் அனுபவத்தைக் கூறினான் . அவள் தன் மகனிடம் இந்த நிகழ்ச்சி அவளுக்கு முன்பே தெரியும் என்றாள் . ஹட்சன் மிக ஆச்சரியத்துடன் தன் தாயைப் பார்த்து , " எப்படி உங்களுக்குத் தெரியவந்தது " என்றான் . அவள் 70 , 80 மைல்களுக்கப்பால் இருந்தபோது அவளுடைய உள்ளத்தில் மகனைப் பற்றிய மனபாரம் ஏற்பட்டது . ஹட்சன் மனம் திரும்பிய அதே நாளில் அவனுடைய தாயும் ஹட்சன் இரட்சிக்கப்பட வேண்டுமென்று ஊக்கமாய் ஜெபித்தார் . தன் மகனை கர்த்தர் முழுவதுமாக மீட்டுக்கொண்டார் என்ற நிச்சயம் தனக்குள் ஏற்படும் வரை தொடர்ந்து ஜெபித்துக் கொண்டே இருந்தார் . பின் தன் மகனைக் கர்த்தர் இரட்சித்த தற்காக நன்றி செலுத்தி ஸ்தோத்திரம் செய்தார் .

ஒருநாள் பிற்பகலில் ஹட்சன் தன் வேதாகமத்தை வாசித்து படுக்கையருகே முழங்காலில் நின்று கொண்டிருந்தார் . வரும் காலத்தில் தேவன் தம்மை பயன்படுத்த கர்த்தரை நோக்கி வேண்டுதல் செய்து , " ஆண்டவரே நான் என்னவிதமான பணியை எங்கு செய்ய வேண்டுமென்று எனக்குத் திட்டமாய் தெரிவியும் . நீர் எனக்குச் சொல்லும் வரை இந்த அறையிலிருந்து வெளியேற மாட்டேன் " என்று முழங்காலில் இருந்த வண்ணமாக மன்றாடினார் . " எனக்காக சீன தேசத்திற்குப் போ " என்று தேவன் தன்னோடு பேசுவதைத் திட்டவட்டமாய் கேட்டார் . அன்றிலிருந்து அவர் மனம் சீனநாட்டின் பணியின்மேல் நிலைத்து நின்றது . தேவ அழைப்பைப் பெற்ற ஹட்சன் டெய்லர் பிற்காலத்தில் அந்த அழைப்பைப்பற்றி ஒருபோதும் சந்தேகித்ததில்லை . இந்நிகழ்ச்சி அவர் மறுபிறப்படைந்த சில மாதங்களில் நடைபெற்றது .


மிஷனெரி பணிக்கென்று ஆயத்தப்படுதல்

சீனதேசத்தில் திருப்பணி செய்வதற்கென்று தன்னை எல்லா விதங்களிலும் ஆயத்தம் செய்துகொள்ள முயன்றார் ஹட்சன் . சீனதேசத்தைப்பற்றி அவருக்குக் கிடைத்த தகவல்கள் அனைத்தையும் சேகரித்து வாசித்து வந்தார் . ஆழமான ஆவிக்குரிய வாழ்க்கையை வாஞ்சித்து பரிசுத்த ஆவியானவரின் நிறைவுக்காக ஜெபித்து தன்னை ஒப்படைத்தார் .

தேவனோடு இவ்வாறு ஓர் உடன்படிக்கையைச் செய்து கொண்டார் . " தேவனே , என்னை முழுவதுமாய் ஆட்கொண்டு ஆசீர்வதிப்பீரானால் உமக்காக எதையும் சாதிக்க முடியும் . உமது சித்தத்திற்கு ஒப்புக்கொடுத்து , நீர் காட்டும் எதையும் நான் செய்வேன் " என்றார் . தேவனும் அவருடைய இந்த ஜெபத்திற்குப் பதிலளித்து அவருடைய உடன்படிக்கையை உறுதி செய்தார் . '

மிகுந்த பிரயாசத்துடன் லூக்கா எழுதின நற்செய்தி நூலை மொழியில் கற்று புலமை பெற்றார் . ஆசிரியர் உதவி இல்லாமலேயே சீன மொழியைக் கற்றுக்கொண்டார் . அவர் தன்னை மிகக் கட்டுப்பாடான ஒழுக்க வாழ்க்கைக்குக் கொண்டு வந்தார் . கடின உழைப்பும் தேக அப்பியாசமும் செய்து வந்தார் . வாழ்க்கை வசதிகளை உதறித்தள்ளி கிடைத்த தருணங்கள் எல்லாவற்றிலும் தனிமையாகவே வேலை செய்து பழகினார் .

அவருடைய தகப்பனாரின் வணிகத் தொழிலில் ஈடுபட்டிருக்கும்போது , இலத்தீன் , கிரேக்க மொழிகளையும் இறை நூல் , மருத்துவம் , ஆகியவற்றையும் கற்று தேர்ச்சி பெற்றார் . பிற்காலத்தில் அவர் செய்யப்போகும் எல்லாப் பணிகளுக்காகவும் ஆயத்தம் செய்து கொண்டார் .

உலகின் மற்ற பாகங்களில் பணியாற்றும் மிஷனெரி இயக்கங்களோடு தொடர்பு கொண்டு அவை செயல்படும் முறைகளை அறிந்து தம் மனதில் பதித்துக் கொண்டார் .

" சீனர்களின் ஐக்கிய அமைப்பு " பிற்காலத்தில் சீன நாட்டிற்கு நற்செய்தி அறிவிக்கும் கழகமாக மாறியது . அதைப் பற்றிய முழுவிபரங்களையும் தெரிந்து கொண்டார் .

பத்தொன்பதாம் வயதில் மருத்துவத்தில் மேற்கொண்டு படிக்க இலண்டன் நகரம்போய்ச் சேர்ந்தார் . இவ்விடத்தில் ஆவிக்குரிய வாழ்க்கையில் மிகவும் கட்டுப்பாடான கடின வாழ்க்கை முறையை மேற்கொண்டார் . வறுமையும் வாழ்க்கைப் பிரச்சனைகளும் , இவரை கிறிஸ்துவோடு நெருங்கி வாழும்படிச் செய்தது .

தன்னலமற்ற வாழ்க்கையை மேற்கொண்டு தன் வருமானத்தில் மூன்றில் ஒரு பாகத்தைக் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொடுத்து விட்டார் . அச்சமயத்தில் இலண்டனில் நீங்கள் அவரைச் சந்தித்திருப்பீர்களானால் , கடவுள் எப்படி இவரை மிஷனெரி பணித்தளத்தில் பயன்படுத்த முடியும் என்று ஆச்சரியப்பட்டிருப்பீர்கள் . அந்நாட்களில் அவர் மெலிவான தோற்றமும் , ஒதுங்கி வாழும் சுபாவமும் உடையவராய் இருந்தார் . மனித எண்ணத்தின்படி , இவர் ஒரு முன்னோடியான மிஷனெரியாக மாற முடியும் என்பதற்கான தகுதி அவருக்கில்லை .

ஆனால் கடவுளின் வாக்குறுதி " என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ் செய்ய எனக்குப் பெலனுண்டு என்பதாகும் ( பிலி . 4 : 13 ) . கடவுள் ஹட்சன் டெய்லரைப் போன்ற மிக பெலவீன மனிதர்களையே தம்முடைய மகிமைக்காகத் தம்முடைய சித்தத்தில் பயன்படுத்துகிறார் .

இலண்டன் நகரில் ஹட்சன் இருந்த சமயம் , வாலிப பிராயத்தில் அவருடைய விசுவாசம் பலமாய் சோதிக்கப் பட்டது . தினமும் பிரயாண கட்டணத்தைக்கூட அவரால் கொடுக்க முடியவில்லை . அதனால் மருத்துவமனைக்கும் தன் வீட்டிற்கும் நடந்தே போய் வந்தார் . ஒவ்வொரு நாளும் எட்டுமைல் தூரம் நடக்க வேண்டியதிருக்கும் . அவருடைய ஆகாரமும் மிகவும் அற்பமானது . ஒரே ரொட்டியை காலை மற்றும் மதிய உணவுக்கு வைத்துக் கொள்வார் .

ஒரு சமயம் விஷகாய்ச்சலினால் மரித்துப் போன ஒருவனுடைய உடலைப் பரிசோதனை செய்யும்போது அவர் விரல்கள் மூலமாக விஷம் ஏறி வியாதிப்பட்டார் . அநேகமாக மரிக்கும் நிலையை அடைந்துவிட்டார் .

சீனதேசத்து சேவையெல்லாம் வெறும் கனவோ என்று எண்ணத் தோன்றியது . ஆனாலும் விசுவாசத்தில் உறுதியாயிருந்து பூரண சுகம் பெற்றார் . இவ்வித அனுபவங்களின் மூலமாக அவருடைய விசுவாசம் அதிகமாய் பெலப்பட்டது .


சீனநாட்டில் பிரவேசித்தல்

1853ஆம் ஆண்டு , செப்டம்பர் மாதம் ஹட்சன் டெய்லர் சீனாவிற்குப் பிரயாணம் செய்ய கப்பல் ஏறினார் . அவருடைய மூன்று நண்பர்கள் வழியனுப்ப , அவர் தரிசனமும் அழைப்பும் பெற்ற நாட்டிற்குப் பிரயாணப்பட்டார் . " சீன நாட்டிற்கு நற்செய்தி கழகம் " என்ற ஸ்தாபனத்தின் வாயிலாக அனுப்பப் பட்டார் . ஐந்தரை மாதங்கள் பிரயாணத்திற்குப்பின் இருபத்திரெண்டு வயதான இளம் வாலிபனான ஹட்சன் , சீனதேசத்தில் ஷாங்காய் துறைமுகத்தில் வந்து இறங்கினார் . அவருக்கு வாக்களிக்கப்பட்ட நாட்டின் கரையில் அவர் காலடி எடுத்து வைத்தபோது அவர் உள்ளம் பூரித்துப் போனார் .

சீனாவில் உள்நாட்டுப் பகுதியை , சுவிசேஷத்திற்கென்று ஊடுருவிச் செல்லப்போகிறவர் தானே என்று அப்போது அவருக்கு தெரியாது . சீன நாட்டில் அவர் கரையிறங்கியபோது அவரை வரவேற்க ஒருவரும் இல்லை . நண்பர்களும் யாரும் இல்லை . ஷாங்காய் நகரம் புரட்சியாளர்களின் ஆட்சியில் இருப்பது அவருக்கு அப்போதுதான் தெரிய வந்தது . உணவுப் பொருள்களின் விலைகள் உயர்ந்ததாகக் காணப்பட்டது . தனிமையில் வந்து சேர்ந்த வாலிப மிஷனெரிக்கு இவைகள் உற்சாகமூட்டக் கூடியதாக இல்லை . கடவுளின் பேரில் அவருக்கிருந்த விசுவாசமே , அவரைத் தாங்கிப்பிடித்தது .

சீனரை கிறிஸ்துவுக்குள் வழிநடத்த இவர் மிகத் துடிப்பாய் இருந்தார் . மிகக்குறைந்த மொழி அறிவைக் கொண்டே சீன மக்களைச் சந்திக்கவும் , அவர்களுக்கு நற்செய்தி நூல்களையும் , கைப்பிரதிகளையும் கொடுக்கும் படியாக திருப்பணியில் இறங்கினார் . இவ்விதம் மக்களிடையே பழகியதால் , பல புதிய சீன வார்த்தைகளைக் கற்றுக்கொள்ளவும் , அதை உச்சரித்து இலகுவாகப் பேசவும் அவரால் முடிந்தது . முன்னோடியான மிஷனெரிகள் சென்றிராத அநேக பகுதிகளுக்கு இவர் சென்று ஊழியம் செய்தார் . அப்படி உள்நாட்டுப் பிரயாணங்கள் அதிக ஆபத்தைக் கொண்டுவரும் நிலையில் அன்று மக்கள் புரட்சி நடத்தினார்கள் . ஒருமுறை அவருடைய ஊழியத்தின் போது ஓர் உயரமான பலசாலி மனிதனிடம் சிக்கிக்கொண்டார் . அவன் குடிவெறியில் இருந்தான் . தலைமுடியைப் பிடித்து அவரை இழுத்து முரட்டுத் தனமாக அவரை நடத்தினான் . அவரோ மயக்கமாகி விழும் நிலைமைக்கு வந்துவிட்டார் . என்றாலும் ஹட்சன் தன்னை நிதானித்துக் கொண்டு , இலக்கியப் புத்தகங்களை விநியோகித்துக் கொண்டிருந்தார் .

தனக்கு மற்றொரு தருணம் கிடைக்காமல் போகலாம் என்பது அவர் எண்ணம் . அவருடைய எதிரிகள் அவர் புத்தகங்களை விநியோகிப்பதைக் கண்டு அதிக கோபமுற்றனர் . ஓர் அரசாங்க அலுவலரிடம் இழுத்துச் சென்றனர் . அந்த அதிகாரி மிகுந்த மரியாதையாய் அவரை நடத்தி , ஒரு புதிய ஏற்பாட்டை அவரிடமிருந்து பெற்றுக்கொண்டார் . ஹட்சனின் நினைவும் மனமும் உள்நாட்டுச் சீனர்களைப் போய் அடைவதையே இலட்சியமாகக் கொண்டிருந்தது . எண்ணிறந்த சீனமக்கள் உள்நாட்டில் கிறிஸ்துவுக்கென்று ஆதாயப்படுத்தப்படாத நிலையில் இருந்தனர் .

பவுல் அடியாரின் முன்மாதிரியின்படி , " சிலரையாவது இரட்சிக்கும் படியாக நான் எல்லாருக்கும் எல்லாமுமானேன் " என்றபடி இவரும் சீன உடைகளை உடுத்தி , சீன வாழ்க்கை முறையை மேற்கொண்டார் . இவர் சீனருடைய முறைகளைப் பின்பற்றியது ஐரோப்பியர்களுக்கும் மற்ற மிஷனெரிகளுக்கும் பிடிக்கவில்லை . உள்நாட்டு சீனமக்களை ஆதாயப்படுத்த வேண்டுமானால் சீனர்முறைகளை அனுசரிப்பது சிறந்தது என்று ஹட்சன் அறிந்திருந்தார் . அவ்விதம் அவர் அவர்கள் மத்தியில் உழைத்தது பலன் தந்தது . சில மாதங்களில் மனம் திரும்பிய முதல் ஆத்துமாவை ஆதாயப்படுத்தி விட்டார் . பிரச்சனைகள் சூழ்ந்தும் அதைரியப்படவில்லை டெய்லர் தன்னுடைய பணியில் அடிக்கடி சோர்வடைய சோதிக்கப்பட்டார் . எதிர்காலம் அவருக்கு இருளாகவே இருந்தது . அதைக் குறித்து " என் பாதை சமமாகக் காணப்பட்டாலும் ஓர் அடி மாத்திரம் நடத்தப்பட்டேன் . நான் இன்னும் கடவுளுடைய வெளிப்படுத்தலுக்குக் காத்திருக்கவும் அவரை நம்பவும் வேண்டும் . " எல்லாம் நன்மைக்காகவே நடக்கும் " என்று எழுதியுள்ளார் . அவரை அனுப்பி வைத்த மிஷனெரி இயக்கம் அக்கறையில்லாமல் இருந்துவிட்டது . பண உதவிகள் ஒழுங்காய் வந்து பணித்தளம் சேருவதில்லை .

இவர் ட்சுங்கிங் நகரில் ஒரு மருத்துவப்பணித்தளத்தை நிறுவினார் . அதன் மூலமாய் ஆயிரக்கணக்கான ஆத்துமாக்களைச் சந்திக்க முடிந்தது . பிரிட்டிஷ் அரசு அதிகாரிகள் , அவரை உள்நாட்டிற்குள் செல்லாதபடி தடைவிதித்தனர் . அப்படிச் செல்லுவாரானால் ஒரு பெரிய அபராதத் தொகையைக் கட்ட வேண்டு மென்று கட்டளையிட்டனர் . எதிர்பாராத சீனபுரட்சி சம்பவங்கள் , அவருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்பதே அதன் நோக்கம் , ஹட்சன் தன்னைப் பாத காத்துக் கொள்வதைவிட , உள்நாட்டு மக்களுக்கு நற்செய்தியை அறிவிப்பதே அவருக்குப் பிரதானமாய்க் காணப்பட்டது . அவருடைய மன உறுதியிலும் அவர் தளர்ந்து விடவில்லை . பாதுகாப்பைக் காட்டிலும் மக்களைக் கிறிஸ்துவுக்குள் கொண்டுவருவது அவர் நோக்கம் . அவருடைய ஒரே நண்பர் வில்லியம் பர்ண்ஸ் என்பவர் மரித்ததினால் , அவருக்கு அதிர்ச்சியும் , தாங்கமுடியாத துயரமும் ஏற்பட்டது . அவரும் இவரைப்போன்றே ஒரே நோக்கம் உடையவர் . சீனர்களின் மீட்புக்காக திருப்பணியில் ஈடுபட்டவர் . ஹட்சன் இறந்துவிட்ட தன் நண்பனின் கிறிஸ்தவ ஐக்கியத்தினால் உற்சாகத்தையும் , மன உறுதியையும் பெற்றிருந்தார் . 1856ஆம் ஆண்டு பர்ண்ஸ் , உள்நாட்டுப் புரட்சிக்காரர்களால் சிறைபிடிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார் .

இது அவருக்குப் பேரிழப்பாகும் . எல்லா நிலைமைகளிலும் கிறிஸ்து , ஹட்சன் டெய்லரை வழிநடத்தினார் . நிங்போ என்ற துறைமுக நகரில் தன் பணியை ஆரம்பிக்க முடிவு செய்தார் . அந்நகரில் மருத்துவர் எவரும் இல்லை . நிங்போ நகருக்குச் செல்லும் வழியில் அவருடைய வேலைக்காரன் எல்லா உடைமைகளையும் திருடிக்கொண்டு அவரைத் தனியே விட்டு ஓடிப்போனான் . ஆகாரக் குறைவினாலும் , தூக்கமின்மையாலும் ஆயாசப்பட்டவராய் , அதிகக் களைப்படைந்தார் . சரீரம் பெலவீனப்பட்டதால் பாதை ஓரத்தில் மயங்கி விழுந்துவிட்டார் . இந்நிலையிலும் அவருடைய பிரதான நோக்கம் , தன்னைச் சுற்றிலுமுள்ள சீனர்களைப் பற்றியதே ஆகும் . தன் உடமைகளை இழந்ததினால் ஏற்பட்ட தவிப்பு அவரிடம் காணப்பட வில்லை . கிறிஸ்துவை உடனடியாகவே பிரசங்கிக்க ஆரம்பித்து விட்டார் . நிங்போ மொழியில் ஏற்கனவே இருந்த புதிய ஏற்பாட்டுப் புத்தகத்தை மறுபடியும் திருத்தியமைத்தார் .

மரியா டையர் என்ற இளம்பெண்ணை நிங்போ நகரில் சந்தித்து திருமணம் செய்து கொண்டார் . இருவரும் சேர்ந்து நோயுற்றோரைக் கவனிப்பதிலும் , சீனர்களுக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதிலும் ஈடுபட்டனர் . நீண்ட நேர படிப்பு , போதனை செய்வது , பல வேறுபட்ட பருவநிலை களில் நீண்ட பிரயாணங்களை மேற்கொள்ளுவது ஆகியவை டெய்லர் அவர்களின் சுகத்தை பெரிதும் பாதித்தது . ஏழு ஆண்டுகள் இடைவிடாத சேவைக்குப்பின் , அவருடைய சுகவீனத்தின் காரணமாக இங்கிலாந்து தேசம் செல்ல நேரிட்டது . ஓய்வு எடுக்கவும் , நற்சுகம் பெறவும் சுய தேசத்திற்குத் திரும்பிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது .



சீன உள்நாட்டு மிஷன் ஸ்தாபனம்

இலண்டன் நகரில் அவர் தங்கியிருக்கும்போது , மருத்துவ கல்வியை தொடர்ந்து படித்தார் . சீனதேச விளக்கப்படம் ஒன்று அவருக்கெதிராக சுவற்றில் தொங்கவிடப்பட்டிருந்தது . அதில் பதினொரு தனித்தனி பிரதேசங்களையும் , முப்பத் தெட்டு கோடி மக்களையும் சித்தரித்து இருந்தது . இத்தனைக் கோடி மக்களுக்கும் சுவிசேஷத்தைச் சொல்ல , ஒரே ஒரு மிஷனெரிகூட அன்று இருக்கவில்லை . இது அவருக்கு எப்போதும் நினைவூட்டுதலாகவே இருந்தது . சீனதேசத்தின் தேவைகளை கைப்பிரதிகளின் வாயிலாகவும் , சிறுபிரசுரங் களாகவும் எழுதி வந்தார் . இந்த பதினோரு பிரதேசங்களில் பணிபுரிய இருபத்துநான்கு மிஷனெரிகளுக்காக ஜெபித்து வந்தார் . இரண்டு நாள் கழித்து ஒரு சிறு தொகையை விசுவாசத்தினாலே வங்கியில் முதலீடு செய்தார் . சீன உள்நாட்டு மிஷன் ஸ்தாபனத்தின் பேரில் , அந்தத் தொகை வைப்புத் தொகையாக இருப்பில் போடப்பட்டது . விசுவாசத்தின் விளைவாக சீன உள்நாட்டு மிஷன் ஸ்தாபனம் அன்று நாட்டப்பெற்றது . " சிறிய தொகையோடு ஏராளமான கடவுளின் வாக்குத்தத்தங்களும் அன்று மிஷன் ஸ்தாபனத்திற்காக முதலீடு செய்யப்பட்டது " என்று ஹட்சன் சொன்னார் .

தேவன் அவருடைய மன்றாட்டுகளுக்குப் பதில் அருளினார் . பதினோரு மாதங்கட்குப்பின்னர் , பதினாறு மிஷனெரிகளோடு சீன நாட்டிற்கு ஹட்சன் பயணமானார் . அவரோடு சென்ற பதினாறு மிஷனெரிகளும் , அவரைப் போலவே முழுவதுமாய் கர்த்தரைச் சார்ந்து திருப்பணிக்கு ஒப்படைத்தவர்கள் . தேவ வாக்குகளை நம்பி ஏற்றுக்கொண்டு தங்களைத் தத்தம் செய்திருந்தனர் . ஒருவருக்காகிலும் நிச்சயமான மாதச் சம்பளம் கிடைக்கும் என்ற உறுதியில்லை . எந்த இடத்தில் பணி செய்யப் போகிறோம் , அவ்விடத்தில் நிலைமை யாது என்று அறியாத நிலையில் பயணமாயினர் .

சீன நாட்டில் அவர்களை வரவேற்க ஒருவரும் இல்லை . உள் நாட்டுப் பகுதிக்குச் செல்லவே அனைவரும் தீர்மானித்திருந்தனர் . உள்நாட்டில் , வெளிநாட்டவருக்கு பலத்த எதிர்ப்ப இருந்து வந்தது . கப்பல் பிரயாணத்தின் போது , ஹட்சன் குழுவினர் ஆற்றிய திருமறை உரையாடல்கள் மூலமாய் இருபது கப்பல் சிப்பந்திகள் கிறிஸ்துவை தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுகொண்டனர் . கப்பலின் மொத்த ஊழியர் முப்பத்து நான்குபேர் .

" கடல் கடந்து செல்வதால் ஒரு மிஷனெரி உருவாகுவதில்லை . தன் வீட்டிலும் , சுயநாட்டிலும் பயன்படாதிருக்கிற ஓர் ஆள் அயல்நாட்டிலும் கிறிஸ்துவின் சேவையில் பயனுள்ளவராய் இருக்கமாட்டார் " என்று ஹட்சன் அடிக்கடி கூறுவார் .


சீன நாட்டை மறுமுறை வந்தடைதல்

ஷாங்காய் துறைமுகத்தில் வந்து சேர்ந்த அனைத்து மிஷனெரிகளும் , உயிர் ஆபத்துக்களுக்குப் பயப்படாமல் உள்நாட்டிற்குள் போகத் தீர்மானித்தனர் . இந்தக் குழுவிற்கு இளமை மிக்க டெய்லர் , தளபதியாக தலைமை ஏற்று நடத்திச் சென்றார் .

அநேகமுறை அவர்களுக்கு தங்கும் வசதியோ ஏற்ற ஆகாரமோ இருந்ததில்லை . கர்த்தரை நம்பினபடியினால் அவரே அவர்களுடைய தேவை எல்லாவற்றையும் சந்தித்தார் . சிறுபிள்ளைக்கொத்த எளிய விசுவாசமே , டெய்லர் அவர்களின் வெற்றியின் இரகசியமாய் இருந்தது . "

ஒவ்வொரு பிரச்சனையையும் விசுவாசத்தினால் மேற்கொண்டு வெற்றியடைவதே , கர்த்தருடைய பிள்ளைக்கு பலமும் , ஊட்டமும் கொடுக்கக்கூடிய வல்லமையாக மாறுகிறது " என்று ஹட்சன் சொல்லுவார் .

இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் , சீன உள்நாட்டு மிஷன் ஸ்தாபனம் மிகப்பெரிய அளவில் வளர்ந்து சிறப்பான பணியினை செய்து வந்தது . இருநூற்று இருபத்தைந்து மிஷனெரிகளும் , ஐம்பத்தொன்பது ஆலயங்களும் , ஆயிரத்து எழுநூறு விசுவாசிகளையும் கொண்ட ஸ்தாபனமாய் விளங்கிற்று . பயிற்சி நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டன . ஆயிரக்கணக்கான கைப்பிரதிகளும் , சிறு புத்தகங்களும் சீன மக்களுக்கு விநியோகிக்கப்பட்டன .

தெய்வத் திருப்பணியில் இழப்புகளும் உண்டு . ஹட்சன் டெய்லருடைய மனைவியும் மூன்று மக்களும் இறந்துபோயினர் . அவருடைய மனைவி பன்னிரண்டரை ஆண்டுகள் அவருக்கு மிக உதவியாக இருந்தவள் . காலரா வியாதியினால் மரித்துப்போனாள் . அவர் அதிகமாய் நேசித்த அருமை மகள் இறந்தபோது , " எங்கள் இதயங்கள் வெடித்து சிதறுகின்றன . இந்த அனுபவம் எல்லாவற்றிற்கும் மேலாக உயர்ந்து நிற்கின்றன . எங்கள் இயேசு எல்லாவற்றையும் நன்றாய் செய்தார் " என்றும் , அவர் மனைவி இறந்தபோது , " நானோ தனித்து விடப்பட்டவன் அல்ல . முன்னைக்காட்டிலும் கர்த்தர் எனக்கு அதிக நெருக்கமாய் உள்ளார் " என்றும் எழுதி வைத்தார் .

ஹட்சன் இப்படிப்பட்ட பெரும் இழப்புகளைக் கிறிஸ்துவின் நிமித்தம் தைரியத்தோடு தாங்கிக்கொண்டார் . - சீன நாட்டின் திருப்பணித் தேவைகளை எல்லாம் அவர் சென்ற இடமெல்லாம் மக்களுக்கு எடுத்துச் செல்லுவார் . ஆனால் ஒருபோதும் " பணம் தாருங்கள் " என்று கேட்டதே இல்லை .

அவருக்குப் பணமோ , ஊழியர்களோ தேவைப் ட்ட போதெல்லாம் , கர்த்தருக்கே தம் வேண்டுதல்களைத் தெரியப் படுத்தினார் . சீன உள்நாட்டு மிஷன் பணிக்கென்று காணிக்கையெடுக்க அவர் ஒருபோதும் அனுமதித்ததே இல்லை . அவருடைய திட்டமான இந்தக் கொள்கையின் அடிப்படையில்தான் , மிஷன் ஸ்தாபனம் இயங்கி வந்தது .

கடவுளுக்கு மகிமையைக் கொண்டு வருவதே அவரது நோக்கம் . சீன தேசமே எப்போதும் அவர் நினைவு ஹட்சன் டெய்லர் பலமுறை இங்கிலாந்திற்கு வந்தபோதிலும் , அவர் நினைவெல்லாம் சீன நாட்டைப் பற்றியதே .

அதனால் அவர் திருப்பணிக்குத் திரும்பி விடுவார் . இரண்டாவது முறையும் திருமணம் செய்து கொண்டு , சீன தேசத்தில் ஒவ்வொரு பட்டணத்தையும் கிறிஸ்துவுக்கென்று ஆதாயப்படுத்தத் தீர்மானித்தார் . அவருடைய முதுகெலு விபத்தால் ஏற்பட்ட காயத்தினிமித்தம் , பல மாதங் படுக்கையில் இருக்க வேண்டியதாயிற்று , சுகவீன நாட்கள் கடவுள் அவருக்கு தெளிவான வெளிப்பாடுகளைத் தந்தரும் நாட்களாகும் . சீன திருப்பணியின் திட்டமான செயல்ப் நோக்கங்களை வரையறுத்தார் . அதற்கென்று ' தம் மனைவியுடன் அவ ஹட்சன் டெய்லர் 105 பெடன் அமெரிக்க ஐக்கிய நாடுகள் , கனடா , திரேலியா , தென் அமெரிக்கா ஆகிய நாடுகளில் சுற்றுப் ணம் மேற்கொண்டார் . இவ்விடங்களிலெல்லாம் சீன தேசத்தின் ஏராளமான தேவைகளை எடுத்துச் சொன்னாரே வி . பணஉதவியை ஒருபோதும் கேட்டதில்லை . 1900ஆம் படு அவர் இங்கிலாந்தில் இருந்த சமயம் சீன தேசத்தில் பணிசெய்து கொண்டிருந்த எழுபத்தொன்பது மிஷனெரிக் கடும்பங்கள் சீனர்களால் படுகொலை செய்யப்பட்டதைக் கேள்விப்பட்டார் . அவர்களில் இருபத்தொரு பேர் நிலனெரிகளின் பிள்ளைகளாகும் . நான்கு வருடங்கள் கழித்து அவர் தமது இரண்டாவது மனைவியையும் இழந்து விட்டார் .

டெய்லர் இங்கிலாந்து தேசத்தில் தங்கியிருக்க மனமற்றவராய் , 1905ஆம் ஆண்டு தன்னுடைய பதினோராவது பயணத்தை மேற்கொண்டார் . இங்கிலாந்திலிருந்து சீனாவுக்கு சென்ற கடைசிப் பயணமாகவும் அது அமைந்தது . சீன நாட்டில் அவருக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது . அவர் சாங்ஷா பட்டணத்திற்குச் செல்ல விரும்பினார் . அப்பட்டணம் அவருடைய திருப்பணித் திட்டத்தில் இருந்த கடைசி மாநிலத்தின் தலை நகரமாகும் . அந்நகரை சுவிசேஷத்தின் ஆரம்பப் பணிக்கென்று திறந்து விட வந்து சேர்ந்தார் . சாங்ஷா நகரில் அவர் வந்து இறங்கியதுமே , கடவுளோடு ஐக்கியப்படும் படியாகப் பரலோகம் சென்றடைந்தார் . ஹட்சன் டெய்லர் இறக்கும்போது , சீன உள்நாட்டு ஸ்தாபனத்தில் எண்ணூற்று நாற்பத்தொன்பது மிஷனெரிகள் பணியாற்றிக் கொண்டிருந்தனர் . சீனநாடு கம்யூனிஸ்டுகளால் ஆக்கிரமிப்பு செய்யப்படும் வரை , சீன உள்நாட்டு மிஷன் கிறிஸ்துவின் சேவையில் ஈடுபட்டிருந்தது . ஹட்சன் டெய்லர் ் உலக ஐசுவரியம் ஒன்றும் இல்லாதவர் . வறுமையில் வாழ்ந்தவர் . வாழ்க்கை வசதிகளை உதறித்தள்ளி , அநேகரை ஐசுவரியவான்களாக்கத் தன்னை ஏழ்மையாக்கினார் . ஜீவனுள்ள தேவனை முழுவதுமாய் நம்பிச் சார்ந்ததே இவர் வாழ்க்கையின் இரகசியம் . வேத வசனங்களில் காணப்படும் வாக்குகளை எல்லாம் நம்பிக்கையோடு ஏற்றுக்கொண்டவர் . தேவன் எவைகளையெல்லாம் தமது வசனத்தில் வாக்குத்தத்தம் செய்திருக்கிறாரோ , அவைகளை நிச்சயம் செய்வார் என்ற உறுதியோடு பணியாற்றினார் . "

கைகூடாது , நடக்கவே நடக்காது , ஒருவரும் செய்ய முடியாது என்று மனிதன் நினைப்பவைகளைப் பார்த்து விசுவாசம் என்னும் பற்றுறுதி சிரிக்கும் .

கீழ்ப்படிதலும் , கடவுளுடைய சித்தத்தை செய்தலும் , கேள்விகளைக் கேட்டு தாமதிக்கும் மனப் பான்மையைக் கொண்டு வராது " என்னும் பொன்மொழிகளை ஹட்சன் அடிக்கடி கூறுவார் .

விசுவாசமும் கீழ்ப்படிதலும் , கர்த்தருடைய திருப்பணியாளர்களின் வல்ல செயல்களின் இரகசியமாகும் . நீயும் கர்த்தருடைய பணியில் விசுவாசத்தோடு கீழ்ப்படிவாயா ?

அறியப்படாத ஆப்பிரிக்காவிற்கு வழிவகுத்துக் கொடுத்தவர் டேவிட் லிவிங்ஸ்ட

அன்புள்ள அம்மா ! இதோ இந்தப் பணம் நான் ஒரு வாரத்தில் சம்பாதித்தது " என்று டேவிட் மிக உற்சாகத்தோடு தன் தாயின் மடியில் அவனுடைய சம்பளத்தை எடுத்துவைத்தான் .

குடும்பத்தின் வறுமையை ஓரளவு அவனுடைய சம்பாத்தியத்தால் குறைக்க முடிகிறது என்று அவன் உணர்ச்சிவசப்பட்டான் .

" இந்தப் பணத்தை வைத்து என்ன செய்யப்போகிறாய் டேவிட் " என்று அவன் தாய் கேட்க , " அம்மா நீங்கள் அனுமதித்தால் இலத்தீன் மொழியின் இலக்கணப் புத்தகம் வாங்க விரும்புகிறேன் " என்று நிதானமாய் பதிலளித்தான் . அவனுக்குப் படிக்க வேண்டும் என்று அத்தனை ஆர்வம் இருந்தது . ஆனால் வறுமை அவனுக்குக் கல்வி கற்கும் வாய்ப்பை மறுத்து விட்ட து .


ஆரம்ப வாழ்க்கை

1813ஆம் ஆண்டு மார்ச் மாதம் பத்தொன்பதாம் தேதி டேவிட் லிவிங்ஸ்டன் ஸ்காட்லாந்து தேசத்தில் பிறந்தான் . அவனுடைய பெற்றோர் மிக பழைகள் . ஆனால் உண்மை கிறிஸ்தவர்கள் , குழந்தைப் பருவத்தில் டேவிட் கிறிஸ்தவ ஒழுக்கங்களைப் பெற்றோரிடமே கற்றுக்கொண்டான் .

ஒன்பது வயதிலேயே வேதாகமத்தை மிகக் கருத்தோடு படிக்கலானான் . நூற்றுப்பத்தொன்பதாம் சங்கீதம் முழுவதும் அப்போது அவனால்மனப்பாடமாகச் சொல்ல முடியும் . மிகுந்த வறுமையின் காரணமாக அவன் பள்ளிக்குச் சென்று கல்வி கற்க முடிய வில்லை .

பத்தாம் வயதில் ஒரு பஞ்சாலையில் வேலைக்கு அமர்ந்தான் . அங்கு காலை ஆறு மணிமுதல் இரவு எட்டு மணிவரை வேலை செய்ய வேண்டும் . வேலை செய்யும்போது இலத்தீன் மொழி புத்தகத்தைத் தனக்கருகில் திறந்து வைத்துக் கொண்டு படித்துக் கொண்டே வேலை செய்வான் .

வீட்டிற்கு வந்து மிகவும் களைப்பாய் இருந்த போதிலும் நடு இரவு வரை படித்துக் கொண்டிருப்பான் . கடின உழைப்பின் பயனாக இலத்தீன் மொழியில் நன்றாகத் தேர்ச்சி பெற்றான் .

அதன்பின் அறிவியலை கற்க ஆரம்பித்தான் . ஆலையில் திறமையுடன் பணியாற்றியதால் பதவி உயர்வும் , அதிக ஊதியமும் அவனுக்குக் கிடைத்தன . பதவி உயர்வு , ஊதிய உயர்வு இவ்விரண்டும் அவனுக்குக் கல்வி கற்கத் துணைபுரிந்தன . கோடைகாலங்களில் வேலை செய்யவும் , குளிர்காலங்களில் கல்வி கற்கவும் வசதி கிடைத்தது .

கிளாஸ்கோ பல்கலைக் கழகத்தில் கிரேக்க மொழியையும் , மருத்துவமும் கற்று வந்தான் . கோடை காலத்தில் வேலை செய்து கொண்டே இறையியல் நூல்களைக் கற்று வந்தான் . கல்வியில் மேம்பாடு அடைய அவனுக்கு யாருடைய உதவியும் கிடைத்ததில்லை . இத்தனை கடின உழைப்பும் , வாழ்க்கைத் துன்பங்களும் அவனுக்குப் பிற்காலத்தில் பணித்தளத்தில் பாடுகளைச் சகிக்க பயிற்சியாக அமைந்தது .

லிவிங்ஸ்டனுக்கு விளையாட நேரம் இருந்ததில்லை . ஆனால் ஒவ்வொரு நாளும் , ஆற்றோரமாகச் செல்லும் பாதையில் தன் வீட்டிற்கு நடந்து செல்வதை இன்பமாக ரசித்து மகிழுவான் . மீன் பிடிப்பதிலும் அவனுக்கு விருப்பமுண்டு . இயற்கை காட்சிகளைக் கூர்ந்து கவனிப்பான் . பறவைகள் , பலவகை பூக்கள் , மலைகள் , குன்றுகள் ஆகியவைகளைக் கவனித்து அறிவைப் பெருக்கிக் கொள்வான் . பிரயாணத்தின் போது புத்தகங்களைப் படித்துச் செல்வதில் விருப்பமுடையவன் . எல்லாவற்றிற்கும் மேலாக வேதாகமத்தை வாசித்து தியானிப்பதில் அதிக பற்றுடையவன் . இவ்விதம் வேதாகமத்தை எல்லாவற்றையும்விட நேசித்தது , அவனுடைய பிற்கால வாழ்க்கைக்கு பெரிதும் உதவிற்று . வேதாகமமே அவனுடைய கடைசி நாட்களில் அவனுக்கு இணையற்ற துணையாய் இருந்தது .


ஆப்பிரிக்க நாட்டிற்கு அழைப்பு

லிவிங்ஸ்ட ன் அவருடைய இருபதாவது வயதில் கிறிஸ்துவைத் தன் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு , அயல்நாடுகளில் மிஷனெரியாகச் செல்ல தீர்மானித்தார் . ஒரு ஜெர்மானிய மிஷனெரி , மருத்துவம் தெரிந்த தேவ ஊழியர் தேவை என்று லிவிங்ஸ்ட னுக்குக் கடிதம் எழுதினார் . மருத்துவப் பணியைச் சீன நாட்டில் செய்ய அழைத்திருந்தார் . அதனால் லிவிங்ஸ்ட ன் தன் மருத்துவப் படிப்பை முடித்ததும் , சீன நாட்டிற்கு மிஷனெரியாகச் செல்ல முடிவெடுத்தார் . இரண்டாண்டுகள் மருத்துவக் கல்வி பயின்றபின் சீனாவுக்குப் போக ஆயத்தமானார் . கடவுளோ அவருக்காக வேறு திட்டங்களை வைத்திருந்தார் .

நாம் நம்முடைய செயல் திட்டங்களை , கடவுள் கரத்தில் ஒப்படைக்கும்போது , நம் விருப்பம் நிறைவேறாது போயினும் , கர்த்தரின் சித்தம் தவறாது நிறைவேறும் . சீன தேசத்தில் உள்நாட்டு யுத்தம் நடைபெற்றமையால் லிவிங்ஸ்டன் சீனாவிற்குப் போவது தடையாயிற்று . கர்த்தருடைய வழிநடத்துதலுக்காக காத்திருக்கும் போது ராபர்ட் மொஃபட் என்னும் ஆப்பிரிக்க மிஷனெரி ஒருவர் , இலண்டன் நகரில் ஆப்பிரிக்க நாட்டின் தேவைகளைக் குறித்துப் பேசினார் . அவர் சொன்னதாவது : " ஆப்பிரிக்க நாட்டில் ஆயிரக்கணக்கான கிராமங்களில் புகை மண்டலத்தை நான் பார்த்தேன் . அவர்கள் கடவுளற்றவர்கள் , கிறிஸ்துவை அறியாதவர்கள் , உலகில் நம்பிக்கை அற்றவர்கள் . " இந்தப் பேச்சு லிவிங்ஸ்டன் உள்ளத்தில் கிரியை செய்தது . அதனால் ஆப்பிரிக்க நாட்டிற்குப் போக தீர்மானித்தார் . கப்பல் பிரயாணத்தின்போது , நட்சத்திரங்களைக் கணித்து வழி கண்டுபிடிப்பது எப்படி என்ற கலையைக் கற்றுக் கொண்டார் . தென் ஆப்பிரிக்கா நாட்டின் கேப் டவுன் நகர் வந்து இறங்கியதும் வான சாஸ்திரம் கற்றுக்கொண்டார் . இருண்ட காடுகளில் அவர் பிற்காலத்தில் பிரயாணம் செய்ய நேரிட்டபோது , வழி கண்டுபிடிக்க வானசாஸ்திர பயிற்சி அவருக்கு மிகவும் பிரயோஜனமாக இருந்தது .


இருண்ட கண்டத்தில் டேவிட் லிவிங்ஸ்டன்

கேப் டவுன் நகரில் இருந்து எருதுகள் இழுக்கும் கண்டு வண்டியில் எழுநூறு மைல்கள் பிரயாணம் செய்து குருமான் என்ற இடத்தையடைந்தார் . அங்குதான் ராபர்ட் மொபேட் பணியாற்றிக் கொண்டிருந்தார் . அவருடன் தங்கியிருக்கும் போது , கடவுள் பெரியதொரு திருப்பணியை ஆப்பிரிக்க நாட்டில் அவர் செய்ய விரும்புவதாகக் கண்டு கொண்டார் .

ஆப்பிரிக்க நாட்டின் மத்தியப் பிரதேசத்தில் பிரவேசிக்கவும் , அதை சுவிசேஷத்திற்குத் திறந்து விடவும் தீர்மானித்தார் . அதுவரை ஒருவரும் உட்செல்லாத பகுதியை , கிறிஸ்துவின் சிலுவை வீரர்கள் நற்செய்திக்கென்று சென்று அடைய ஆவல் கொண்டார் . இதுவரை எந்த மனிதனும் செய்திராத பெரும்பணியை அவர் செய்ய வேண்டுமென்று கடவுள் அவரை அழைத்திருக்கிறார் என்று பூரணமாய் நம்பினார் . எண்ணற்ற ஆப்பிரிக்க இனமக்கள் மத்தியப் பகுதிகளில் வசிக்கிறார்கள் . அவர்களுக்கும் கிறிஸ்துவின் நற்செய்தி சொல்லப்படவில்லை . சுவிசேஷத்திற்காக செல்லமுடியாத உட்பகுதிகளை தாமே சென்றடையத் தீர்மானித்தார் .


சிங்கத்தை வேட்டையாடுதல்

மோபட்சா என்ற மிக அழகான பள்ளத்தாக்குப் பிரதேசத்தில் , மூன்று ஆண்டுகள் தங்கிப் பணிபுரிய தெரிந்து கொண்டார் . அங்கிருக்கும்போது மேரி மொஃபட் என்பவரை திருமணம் செய்து கொண்டார் . அவள் ராபர்ட் மொஃபட் அவர்களின் குமாரத்தியாவாள் .

மோபட்சா பள்ளத்தாக்கில் சிங்கங்களின் தொல்லை அதிகமாய் இருந்தது . அவை மனிதர்களையும் , ஆடு மாடுகளையும் கொன்று இழுத்துச் சென்றுவிடும் . அங்கு வாழ்ந்த மக்கள் லிவிங்ஸ்டனின் உதவியை நாடினர் . ஒரு சிங்கத்தைக் கொன்றுவிட்டால் மற்றவை அங்கிருந்து ஓடிவிடும் என்று லிவிங்ஸ்டன் அறிந்திருந்தார் .

சில ஆப்பிரிக்க மக்களைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு சிங்க வேட்டைக்குச் சென்றார் . ஒரு சிங்கத்தைச் சுடவே அது அவர்மேல் பாய்ந்து அவர் தோள்பட்டையைக் கிழித்து விட்டது . அதற்குள்ளாக அவருடன் சென்றிந்த மற்றவர்கள் சிங்கத்தைச் சுட்டு வீழ்த்தினர் . இந்தக் காயம் மிகவும் ஆபத்தானதும் , சுகமாக அதிக நாட்களை எடுத்துக் கொண்டதாயும் இருந்தது .

அவருடைய கரம் இதனால் பலவீனப்பட்டு ஊனமுற்றது . தோள்பட்டைத் தழும்பு அவர் சாகும் வரை நிலைத்திருந்தது .

இந்தத் தழும்பை வைத்துதான் அவர் மரித்தபின் அவரது உடலைக் கண்டுபிடிக்க முடிந்தது . அந்த இடத்தில் அநேக ஆப்பிரிக்கர்கள் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டார்கள் . லிவிங்ஸ்ட னும் அந்த இடத்திலேயே அதிக வசதியாக வாழ்ந்திருக்கலாம் .


வடபகுதியை நோக்கிச் செல்லுதல்

லிவிங்ஸ்ட ன் தங்கி பணிபுரிந்த இடத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் பஞ்சம் ஏற்பட்டது . மற்ற மக்களைப் போல அவரும் வெட்டுக்கிளி , சிலவகை தவளைகள் ஆகியவற்றைப் புசித்து வாழ வேண்டியிருந்தது . வட பகுதியை நோக்கிச் செல்ல ஒரு குறிப்பிட்ட இடத்தைத் தேடிக் கொண்டிருந்தார் . வடபகுதிக்குச் செல்ல வேண்டுமானால் மிகப்பெரிய வனாந்திரத்தைக் கடக்க வேண்டுமென்று கேள்விப்பட்டார் . அதுவரை ஒருவரும் அப்பெரிய வனாந்திரத்தைக் கடந்து போனதில்லை என்றும் கேள்விப்பட்டார் . முந்நூறு மைல்கள் பிரயாணம் செய்து , அவ்வனாந்திரத்தைக் கடக்க முடிவெடுத்தார் . தண்ணீர் இல்லாமையால் அநேகமுறை அவர் அவதிக்குள்ளானார் .

ஒருசமயம் அங்கு வாழ்ந்து வந்த மனிதன் ஒருவன் தீக்கோழி முட்டையில் உள்ள தண்ணீரை அவருக்குக் கொடுத்து காப்பாற்றினான் . தீக்கோழி தன் முட்டைகளை மணலில் புதைத்து வைக்கும் .

அநேக நாள் பிரயாணத்திற்குப் பின் நகாமி ஏரியை வந்தடைந்தார் . இதுவே அவருடைய முதல் புவியியல் கண்டுபிடிப்பு . அந்த ஏரியைக் கண்டுபிடித்த முதல் ஐரோப்பியரும் அவரே .

அவர் மறுபடியும் பிரயாணப்பட்டு அநேக ஆபத்துக்களைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது . மூட நம்பிக்கையில் மூழ்கிக்கிடந்த ஆப்பிரிக்க இன மக்களும் , போயர் எனப்பட்ட டச்சுக் காரர்களும் தென் ஆப்பிரிக்காவில் குடியேறினவர்கள் .

இவர்கள் அவருக்கு அதிக ஆபத்தை விளைவித்தனர் . போயர்கள் ஆப்பிரிக்கர்களை அடிமைகளாகப் பிடித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தார்கள். இதை லிவிங்ஸ்டன் கண்டித்தார் .

ஒருசமயம் அவருடைய உடைகள் , உடைமைகள் , புத்தகங்கள் , மருந்துகள் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு ஓடிவிட்டனர் . ஆனாலும் அவர் அவற்றையெல்லாம் பொருட்படுத்தாது இன்னல்களைக் கடந்து சென்று ஜாம்பசி நதியைக் கண்டுபிடித்தார் .

இது ஆப்பிரிக்காவில் மத்திய பாகத்தில் அமைந்துள்ள நதியாகும் . இவ்விடத்திலும் அவரால் தங்கி பணிபுரிய இயலவில்லை . இப்பகுதியில் விஷக்காய்ச்சல் பரவியிருந்ததே இதற்கு காரணம் .


தனியே பிரயாணப்படுதல்

ஆப்பிரிக்க நாட்டின் மத்திய உட்பகுதிக்குள் மேலும் செல்ல விரும்பினார் . அதனால் தன் மனைவி , பிள்ளைகளை இங்கிலாந்து நாட்டிற்குத் திருப்பியனுப்பி விட்டார் . அவர்களால் அத்தனை கடினமான பிரயாணத்தை மேற்கொள்ள முடியாது .

கிறிஸ்துவுக்குப் பணியாற்றுவதில் தாகமுற்றவராய் ஆப்பிரிக்கக் காடுகளில் நுழைந்து , உட்பகுதி மக்களைச் சந்திக்க சென்றார் . ஆப்பிரிக்க நாட்டின் நடுபகுதியை கிழக்கு மேற்காகக் கடந்து செல்ல தீர்மானித்தார் . இந்த நீண்ட பிரயாணம் ஆப்பிரிக்காவின் பூகோள அமைப்பில் புதிய கண்டுபிடிப்பாகும் .

1855 1856 ஆம் ஆண்டுகளில் இந்தக் கண்டுபிடிப்பு பிரயாணத்தை மேற்கொண்டார் . ஆப்பிரிக்க இன மக்கள் பலரை இந்தப் பிரயாணத்தில் அவர் சந்தித்தார் . அவர்கள் அதுவரை வெள்ளை மனிதனைக் கண்டதில்லை . அவருடைய அன்பும் , அனுதாபமும் , மருத்துவ சேவையும் பல ஆப்பிரிக்க இன மக்களை நண்பர்களாக்கிற்று . அவர்கள் மத்தியில் அவர் தங்கி கிறிஸ்துவை பிரசங்கித்து மருத்துவச் சேவையும் புரிந்தார் . சில இன மக்கள் அவரைவிரோதித்தனர் . அதனால் அவர் அநேகமுறை உயிர் தப்பிப் பிழைக்க வேண்டியதாயிற்று .


அடிமை வியாபாரம்

இந்தப் பிரயாணத்தின்போதுதான் , லிவிங்ஸ்டன் ஆப்பிரிக்கர்களை அடிமைகளாக்கி விற்று தொழில் நடத்தும் பயங்கர நிலைமையைக் கண்டு பயந்தார் .

ஆப்பிரிக்கர்களைப் பிடிக்க அவர்கள் வாழும் கிராமத்தைத் திடீரென்று தாக்கி , மக்களைப் பிடித்து அடக்குவார்கள் . ஆண்கள் , பெண்கள் . பிள்ளைகள் அனைவரையும் அடிமைகளாகப் பிடித்து விடுவார்கள் . கிராமத்தைத் தீக்கிரையாக்கி நீண்ட கனத்த மரத்துண்டுகளை அவர்களுடைய தோளின் மேல் வைத்து , கழுத்தை மரத்தோடு இணைத்து விடுவார்கள் . இவ்விதமாகக் காடுகளின் வழியே நடத்தப்பட்டு கடற்கரை நகரங்களில் அடிமைகளாக விற்றுப்போடப்படுவார்கள் . அவர்கள் தப்பிப் போகாதபடி நீண்ட இரும்புச் சங்கிலிகளோடு அத்தனை மக்களும் இணைக்கப்பட்டிருப்பர் . காட்டினுள் நடந்து போகையில் நோய்வாய்ப்படுகிறவர்களையும் , காயப் படுகிறவர்களையும் மரிக்கும்படி அங்கேயே விட்டுச் செல்வர் . மனித எலும்புக்கூடுகள் எங்கும் சிதறிக் கிடக்கும் . அழகிய , செழிப்பான ஆப்பிரிக்க கிராமங்கள் , தரைமட்டமாக்கப்பட்டு தீக்கிரையாகி , அவாந்திரமாகக் காணப்படும் .

இக்கோரக் காட்சிகளும் , கொடிய அடிமை வியாபாரமும் லிவிங்ஸ்ட ன் இதயத்தை நெகிழ வைத்தது . இந்நிலையை " ஆப்பிரிக்காவின் ஆறாத புண் " என வர்ணித்துள்ளார் . இதை எப்படியாவது வேரோடு அழிக்கும் வரை போராடுவேன் என்று தீர்மானித்தார் . அடிமை வியாபாரக் கொடுமையை நிறுத்தவும் சிலுவை வீரர்கள் ஆப்பிரிக்காவின் உட்பகுதி பிரதேசங்கட்குத் தன்னைப் பின்பற்றிவரும் மிஷனெரிகள் செல்லவும் , மார்க்கங்கள் கண்டுபிடிக்க வேண்டுமென உறுதி கொண்டார் . இருண்ட கண்டத்தின் அடர்ந்த காடுகளின் நடுவே பாதை கண்டுபிடிக்க வேண்டியவர் தானே என்பது அவருக்கு நன்றாகத் தெரியும் . பலமுறை அவரை அடிமைகளைப்பிடித்து விற்பனை செய்யும் வியாபாரி எனக் கருதினர் .

ஆப்பிரிக்க மக்கள் அவரைப் பிடித்துத் துன்புறுத்தவும் , கொல்லவும் முயற்சித்தனர் . கர்த்தரின் கரம் அற்புதமாய்க்காப்பாற்றியது .


உபத்திரவங்கள்

ஆப்பிரிக்க இனத்தலைவன் ஒருவன் ஒரு சமயம் லிவிங்ஸ்ட னிடம் , " உங்களுடைய தேசம் இந்நற்செய்தியை எங்களுக்கு ஏன் முன்னமே அறிவிக்கவில்லை ? என் முன்னோர்கள் அனைவரும் சத்தியத்தை அறியாமலே மரித்துப் போனார்களே . நீர் வந்து எனக்குச் சொன்ன நற்செய்தி ஒன்றையும் அவர்கள் அறியாத நிலையில் மரித்து விட்டனரே . இது எப்படி ? " என்று கேட்டான் . இவனே முதன் முதலாக கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டவன் . இக்கேள்வி லிவிங்ஸ்டன் மனதில் ஆழமாய்ப் பதிந்தது .

அன்றிலிருந்து நூற்றுக்கணக்கான ஆப்பிரிக்க இன மக்களைத் தேடிச் சென்றார் . நுழைய முடியாத காட்டுப் பகுதிகளிலும் துரிதமாக முன்னேறிச் சென்றார் . இந்த பணி சுலபமானதல்ல . அவருடைய உடைகள் கிழிந்து கந்தலாயின . பாதங்களில் கொப்பளங்களும் , சரீரத்தில் புண்களும் , காயங்களும் ஏற்பட்டன . சில சமயம் ஆப்பிரிக்கர் அவருக்கு ஆகாரம் விற்க மறுத்துவிடுவர் . அந்த சமயங்களில் பட்டினி கிடப்பார் . கிழங்குகளின் விதைகளைத் தின்று உயிர் வாழ்ந்தார் . தரையில் படுத்துறங்குவார் . கிறிஸ்துவின் நிமித்தம் சரீர பாடுகளுக்குள்ளானார் . முப்பத்தொருமுறை ஆப்பிரிக்க

விஷக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவர் உடல் , எலும்பும் தோலுமாகக் காட்சியளித்தது . காய்ச்சலின் கடுமையால் மனக் குழப்பமும் மறதியும் ஏற்படும் . தன்னுடன் வரும் நபர்களின் பெயர்களை மறந்துவிடுவர் . கிழமை நாட்களைப் பற்றிய நினைவு அற்றுப்போகும் . இவை ஒன்றும் அவரைச் செயலிழக்கச் செய்ய முடியவில்லை . வேதாகமத்தை அடிக்கடி வாசித்து உற்சாகத்தையும் , ஆறுதலையும் அடைவார் .

நாட்குறிப்பில் அவர் " கிறிஸ்துவில் மாத்திரம் நான் ஆறுதல் அடைந்தேன் , எங்கும் செல்ல ஆயத்தமாயுள்ளேன் . ஆனால் அது முன்னேற்றப் பாதையாகவே இருக்க வேண்டும் " என்று எழுதினார் . அவர் கொடுத்த அறைகூவல் என்னவென்றால் , "

அடிமை வியாபாரிகள் ஆப்பிரிக்கர்களைப் பிடிக்க அந்நாட்டிற்குள் பிரவேசிக்க முடியுமென்றால் , கிறிஸ்துவின் அன்பினால் அனுப்பப்பட்ட மிஷனெரிகள் கிறிஸ்துவுக் கென்று ஆப்பிரிக்கரைப் பிடிக்க அந்நாட்டை ஊடுருவிச் செல்ல முடியாமல் இருப்பார்களோ " என்பதே


லிவிங்ஸ்ட ன் உயர்த்தப்படுதல்

ஆப்பிரிக்க கண்டத்தின் நதிகள் , ஏரிகள் இவைகளின் கண்டு பிடிப்பு லிவிங்ஸ்டனைப் புகழ்பெறச் செய்தது . விக்டோரியா நீர்வீழ்ச்சியைக் கண்டு பிடித்தது . இதில் முக்கியமானது . இந்த நீர்வீழ்ச்சியை " ஓசையிடும் மேகம் " என்று வர்ணித்தனர்


ஆப்பிரிக்கர்

அதன் அருகில் ஆப்பிரிக்கர்கள் செல்லவே பயந்தனர் . அவர் இங்கிலாந்துக்குத் திரும்பியதும் பெரிய அளவில் வரவேற்கப்பட்டு பாராட்டப் பெற்றார் . பதினாறு ஆண்டுகள் ஆப்பிரிக்கக் காடுகளில் பணி செய்து , ஒன்பதாயிரம் மைல்கள் பிரயாணத்தில் ஈடுபட்டவர் , நடை பயணமாகவும் , படகிலும் நீண்ட நரங்களைக் கடந்தவர் . ஆப்பிரிக்காவின் பூகோளப் பிரதேசங்களை வெளி உலகிற்கு முதல் முறையாக அறிவித்தவர் இவர் . இத்தனை ஆராய்ச்சிகளுக்காக , அவருக்குத் தங்கப் பதக்கங்களும் , கெளரவப் பட்டங்களும் வழங்கப்பட்டன . திரள் திரளாக மக்கள் கூட்டம் அவரைப் பார்க்கவும் , அவர் சொல்வதைக் கேட்கவும் கூடினர் . செய்தித்தாள்கள் அவரைப் பற்றியும் , ஆப்பிரிக்க நாட்டின் புதிய கண்டுபிடிப்புகளைப் பற்றியும் எழுதியது . அவரும் பிரயாணக் கட்டுரை மற்றும் ஆப்பிரிக்க நாட்டில் புதிய மார்க்கங்களைப் பற்றியும் எழுதி புத்தகமாக வெளியிட்டார் .


மறுமுறை ஆப்பிரிக்க நாடு செல்லுதல்

அரசாங்கத்தின் பிரதிநிதியாக இங்கிலாந்து அரசு அவரை நியமித்தது . அரசு அதிகாரியாக ஆப்பிரிக்க நாடு திரும்பினார் . புதிய இடங்களை ஆராயவும் , மிஷனெரி ஊழியம் தொடர்ந்து செய்யவும் அரசாங்கம் அவருக்கு அனுமதியளித்தது . பல உதவியாளர்கள் தன்னுடன் இருந்தார்கள் என்றாலும் காய்ச்சலினால் அவதிப்பட்டு ஒவ்வொருவராக அவரைவிட்டுப் பிரிந்து போயினர் . மூன்று மாதங்களுக்குப் பின்னர் அவரது மனைவி புதிய பணித்தளத்தில் அவருடன் போய்ச் சேர்ந்தாள் . அவளும் விஷக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்துபோனாள் . அவளை ஒருமரத்தின் கீழ் புதைத்தனர் . அவரது பிரயாண ஆரம்ப நாட்களிலேயே ஒரு பெண் குழந்தை மரித்துப்போனதால் , ஆப்பிரிக்க மண்ணில் புதைத்திருந்தார் . மனைவியின் இழப்பு அவருக்குப் பெரிய இழப்பாக இருந்தது . " இந்த மிகப் பெரிய இழப்பு என் இதயத்தைப் பிளந்து விட்டது " என்று எழுதினார் . எப்போதும் அவருடைய குறிக்கோள் யாதெனில் " உலகக் கவலைகள் , இழப்புகள் எதுவும் என் முன்னால் உள்ள பணியை , நம்பிக்கையற்ற நிலையில் விட்டுவிட அனுமதிக்க மாட்டேன் . என் தேவனாகிய கிறிஸ்துவில் பெலனடைந்து புது உற்சாகத்தோடு முன்னேறிச் செல்வேன் " என்றும் எழுதினார் .

ஆப்பிரிக்க நாட்டில் அவருடைய உயிருக்கு எப்போதும் ஆபத்துகள் நேரிட்ட வண்ணமாகவே இருந்தன

ஒருமுறை காண்டாமிருகம் வேகமாய் அவரை எதிர்த்து இடித்துத் தள்ள ஓடி வந்தது . அவர் அருகில் வந்ததும் சடிதியாய் நின்றுவிட்டது . அவர் நம்பியிருந்த தேவன் அவரைப் பாதுகாத்தார் . இன்னொரு முறை ஓர் ஆப்பிரிக்க எதிரி பத்து அடி தூரத்திலிருந்து ஒரு ஈட்டியை அவர்மேல் எறிந்தான் . அவர் கழுத்தின் ஓரமாய்ப் பாய்ந்து சென்ற ஈட்டி மரத்தில் குத்தி நின்றது . எவ்வகை ஆபத்து நேரங்களிலும் கர்த்தர் அவரோடிருந்தார் . அவர் ஆரம்பித்த பணி முடியும் வரை தேவனுடைய கரம் அவரை ஆச்சரியமாய்ப் பாதுகாத்தது என்று முழங்கினார் .

அடுத்து வந்த பெரிய இழப்பு யாதெனில் , பிரிட்டிஷ் அரசாங்கம் அவர் மறுமுறையும் ஆப்பிரிக்க நாடு திரும்பிய லிவிங்ஸ்ட ன் பின் ஒருபோதும் இங்கிலாந்து நாட்டிற்குச் செல்லவேயில்லை . அவருடைய கடைசி கண்டுபிடிப்புகள் லிவிங்ஸ்ட ன் தனது அறுபதாவது வயதில் ஆப்பிரிக்க நாட்டின் மத்தியப்பகுதியில் தம்முடைய கடைசி ஆராய்ச்சியில் இறங்கினார் . வயது சென்ற நிலையில் பல வருட பாடுகள் நிறைந்த பிரயாணங்கள் , சொந்த வேலைக்காரர்களின் உண்மையற்ற தன்மை , ஆப்பிரிக்க இன மக்களின் விரோத மனப்பான்மை , இவைகளெல்லாம் வெளிப்படையாகக் காணப்பட்டது . அவருக்கு வரும் கடிதங்கள் , பொருள்கள் யாவும் களவாடப்பட்டன . வட அரேபிய வணிகனிடம் தம்முடைய சில உடைமைகளைக் கொடுத்து வைத்திருந்தார் . அதேக நாட்கள் இவரைப் பற்றி அவன் ஒன்றும் கேள்விப்படாததால் அவர் உடைமைகளை யெல்லாம் விற்றுவிட்டான் ,

குறைந்த ஆகாரம் , கந்தலான உடை , உடைமைகளையெல்லாம் இழந்த நிலையில் , வறுமை மிக்க மனிதனாய் , அன்பற்ற ஆப்பிரிக்க மக்கள் மத்தியில் வாழ்ந்து வந்தார் . அவர் அனுப்பும் எல்லாக் கடிதங்களும் கிழித்தெறியப்பட்டன . இவரை விரோதித்த அடிமை வியாபாரிகள் கடிதப் போக்குவரத்தை நிறுத்திவிட்டனர் . மருந்துகள் அடங்கிய அவரது பெட்டியும் எடுத்துச் செல்லப்பட்டுவிட்டது . காய்ச்சலினால் அவர் அவதிப்படும் போது மருந்துகள் இல்லாததால் தம்மைக் குணப்படுத்திக் கொள்ள முடியவில்லை . வெளி உலருடன் அவருக்கிருந்த எல்லா தொடர்புகளும் அறுபட்டுப் போயின . வெளிநாடுகளில் அவரைத் தெரிந்த நண்பர்கள் , அவர் மரித்து விட்டாரென்றே எண்ணியிருந்தனர் .

கர்த்தர் அவரை கைவிடவில்லை . திக்கற்றவராய் விட்டுவிடவும் இல்லை . நியூயார்க் ஹெரால்ட் என்ற அமெரிக்க செய்தித்தாளின் ஆசிரியர் ஹென்றி ஸ்டான்லி என்பவரை லிவிங்ஸ்டனைத் தேடி கண்டு பிடிக்கும்படியாக , ஆப்பிரிக்க நாட்டிற்கு அனுப்பினர் . பல மாதங்கள் ஸ்டான்லி பிரயாணம் செய்து லிவிங்ஸ்டனை உஜ்ஜி என்ற இடத்தில் சென்று சந்தித்தார் . உணவுப் பொருட்கள் , மருந்துகள் ஆகியவற்றை ஸ்டான்லி தன்றுடன் எடுத்து வந்திருந்தார் . லிவிங்ஸ்ட ன் பலமடையவும் சுகம் பெற்று புத்துயிர் பெறவும் ஸ்டான்லியின் சந்திப்பு உதவிற்று . தொடர்ந்து சில மாதங்கள் ஸ்டான்லி அவரோடு தங்கியிருந்தார் . அந்நாட்களில் லிவிங்ஸ்டனின் கிறிஸ்துவைப் போன்ற தியாக வாழ்க்கை , ஸ்டான்லிக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்தது . நாஸ்திகனான ஸ்டான்லி , லிவிங்ஸ்டனோடு தங்கியிருந்ததால் சிறந்த விசுவாசியாக மாறினார் .

ஸ்டான்லி , லிவிங்ஸ்டனைத் தன்னோடு அமெரிக்க தேசத்திற்கு வரும்படி வற்புறுத்தினார் . லிவிங்ஸ்டனைத் தனது எஞ்சிய வாழ்க்கையை வசதியாக வாழவும் , பெரும் புகழும் பெறவும் அமெரிக்க நாட்டிற்கு வரும்படி அழைத்தார் . லிவிங்ஸ்டன் அவரோடு செல்ல மறுத்துவிட்டார் .

தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட தேவப் பணி முற்றுப்பெறாமல் தன்னால் எங்கும் வரமுடியாது என்று கூறிவிட்டார் . லிவிங்ஸ்டனின் இறுதி காலம் ஓராண்டுக் காலம் மேலும் தமது பயணத்தில் ஈடுபட்டிருந்த லிவிங்ஸ்ட ன் , சரீர பெலவீனத்தால் அடிக்கடி சோர்வுற்றார் . அவருடன் இருந்த சில உண்மையுள்ள ஆப்பிரிக்க நண்பர்கள் மூங்கில் கம்புகளால் கட்டப்பட்ட தொட்டிலில் வைத்து அவரைத் தூக்கிச் சென்றனர் . பெரும் மழை , குளிர் ஆகியவற்றால் அவருடைய சுகவீனம் மேலும் அதிகரித்தது . நாட்குறிப்பில் அவரால் எழுத முடியவில்லை . ஆப்பிரிக்க இளைஞர்கள் அவரை அன்போடு கவனித்து வந்தனர் .

ஒரு சிறு குடிசையில் வைத்து அவரைப் பராமரித்தனர் . அவருக்கிருந்த சக்தியும் பெலனும் நாட்கள் செல்லச் செல்ல குறைந்துவிட்டன . மே மாதத்தில் ஒருநாள் காலை ( 1873ஆம் ஆண்டு ) அவருடைய குடிசைக்குள் அவரது நண்பர்கள் பிரவேசித்தபோது , அவர் படுக்கையருகே முழங்காலில் நின்ற வண்ணம் இருந்தார் . கரங்களால் தாங்கப்பட்ட அவரது முகம் தலையணை மேல் சாய்ந்திருந்தது . ஜெப நிலையில் அவரது உயிர் பிரிந்திருந்தது .

ஆப்பிரிக்க நாட்டின் கிறிஸ்துவை அறியாத கணக்கற்ற ஆத்துமாக்களுக்காக ஜெபித்துக் கொண்டே , பரலோகம் சென்றடைந்தார் என்பதில் சிறிதும் ஐயமில்லை . மரிக்கும் தருவாயினும் , ஆப்பிரிக்கர்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று மன்றாடியபடியே உயிர்துறந்தார் .

உண்மையுள்ள அவரது ஆப்பிரிக்க நண்பர்கள் அவருடைய இருதயத்தை எடுத்து ஆப்பிரிக்க நாட்டின் மத்தியப் பகுதியில் புதைத்தனர் . அவரது சரீரத்தைக் கெடாத வண்ணம் பதம் செய்து , தொளாயிரம் மைல்கள் கடற்கரைப் பகுதிக்குச் சுமந்து சென்றனர் . அவரது உடல் இங்கிலாந்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது . சிங்கத்தால் பீறுண்ட அவரது தோள்பட்டை தழும்பை வைத்துதான் அவரது உடல் அடையாளம் கண்டு கொள்ளப்பட்டது

. இங்கிலாந்தின் உயர்ந்த மனிதர்களும் , புகழ் பெற்றவர்களும் அடக்கம் செய்யப்பட்டிருந்த " வெஸ்ட் மினிஸ்டர் அபே " என்னும் இடத்தில் தேச மரியாதையுடன் நல் அடக்கம் செய்யப் பட்டார் . ஆயிரக்கணக்கில் மக்கள் வெள்ளமெனத் திரண்டு வந்து அவருக்குக் கடைசி மரியாதையைச் செலுத்தினர் . அக்கூட்டத்தில் வயது சென்ற ஒரு மனிதன் பரிதாபமான உடைகளோடு , மனம் உடைந்து அழுது கொண்டிருந்தார் .

அவர் ஏன் இப்படி அழுகிறார் என்று கேட்க , " டேவிட் லிவிங்ஸ்ட னும் நானும் ஒரே கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர்கள் . ஓய்வு நாள் பாடசாலையில் ஒன்றாகவே படித்தோம் . பஞ்சாலையில் ஒன்றாகவே வேலை செய்தோம் . அவரோ கடவுளின் வழியைத் தெரிந்து கொண்டு உலகில் ஒப்பற்ற பணியைச் செய்து முடித்தார் . நானோ என் சொந்த வழியைத் தெரிந்து கொண்டு விரும்பப்படாதவனாக அவமரியாதைக்குரியவனாய் வாழ்கிறேன் . தேசம் முழுவதும் அவரை இன்றும் புகழ்ந்து மரியாதை செலுத்துகிறது . என்னை ஒருவரும் அறியமாட்டார்கள் . எதிர்காலமும் எனக்கு ஒன்றுமில்லை . குடிகாரனுடைய பிரேதக் குழியே எனக்காகக் காத்திருக்கிறது " என்று கூறி அழுதார் .

கர்த்தருடைய வார்த்தை இது ; " என்னைக் கனம் பண்ணுகிறவர்களை நான் கனம்பண்ணுவேன் ; என்னை அசட்டை பண்ணு கிறவர்கள் கனஈனப்படுவார்கள் " ( 1 சாமு . 2 : 30 ) .

லிவிங்ஸ்ட ன் கிறிஸ்துவைத் தன் வாழ்நாளில் கனப்படுத்தி உயர்த்தி , ஊழியத்தின் மூலம் அவரை மகிமைப் படுத்தினார் . இன்றைக்கு ஆப்பிரிக்கா கண்டத்தில் நூற்றுக் கணக்கான மிஷனெரிகள் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள் ! எண்ணற்ற தேவாலயங்களில் ஆப்பிரிக்கர்கள் கிறிஸ்துவை வணங்கி ஆராதிக்கிறார்கள் . இருண்ட கண்டத்தின் நடுபாகமாகிய காடுகள் அடர்ந்த பிரதேசத்தில் , சுவிசேஷ ஒளி பிரகாசித்துக் கொண்டிருக்கிறது . ஆப்பிரிக்கர்களை அடிமைகளாகப் பிடித்து விற்று வந்த அடிமை வியாபாரம் அடியோடு நிறுத்தப்பட்டு விட்டது . எல்லாவற்றிற்கும் காரணம் லிவிங்ஸ்டன் கிறிஸ்துவின் அழைப்பை ஏற்று அவருடைய சித்தத்தைச் செய்ய கீழ்ப்படிந்ததே ஆகும் . கர்த்தரால் கட்டப்பட்டு வரும் தேவ மாளிகையில் ஜீவனுள்ள விலையேறப் பெற்ற கல்லாய்ப் பிரகாசிக்கிறார் லிவிங்ஸ்ட ன் . உயிருள்ள கல் ( Living - stone ) என்பது அவரது பெயர் .

அப்பா ! கப்பல் மாலுமி என்னை அழைத்துச் செல்வதாக வாக்களித்துள்ளார் . நாங்கள் அடுத்த வாரம் கடற்பிரயாணம் செய்யப்போகிறோம் " என்று மகன் மிக உற்சாகத்தோடு பேசினான் . அவனது தந்தை தலையை அசைத்து , " மகனே நீ மிகவும் சிறியவன் கப்பல் பிரயாணம் மேற்கொள்ள சில வருடங்கள் நீ காத்திரு . நீ பெரியவனாகும்போது கப்பல் பிரயாணம் செய்யலாம் " என்றார் . ஆலனின் தாயார் படுக்கையறைக்குள் சென்று பார்க்கும் போதெல்லாம் , அவன் வெறும் தரையில் படுத்துறங்குவதைக் காண்பாள் . " மெத்தைப் படுக்கையில் படுத்துறங்காமல் ஏன் தரையில் தூங்குகிறாய் " என்று அவன் தாய் கேட்டால் " நான் கப்பல் மாலுமியாகப் போகிறேன் ; புதிய நாடுகளையும் , இடங்களையும் கண்டுபிடிப்பேன் . அதற்காக இப்போது கடின வாழ்க்கையில் எனக்குப் பழக்கம் ஏற்பட வேண்டும் " எனச் சொல்லுவான் .

மிகச் சிறிய வயதிலேயே கப்பல் மாலுமியாக மாறி தீரச் செயல்கள் புரிய வேண்டும் என்ற எண்ணம் ஆலனின் உள்ளத்தில் பலமாக ஊன்றியிருந்தது . ஆரம்ப வாழ்க்கை 1794 ஆம் ஆண்டு , இங்கிலாந்தில் பிறந்த இவன் மிகச் சிறிய வயதிலேயே தீரச் செயல்கள் புரிவதில் பிரியப்பட்டான் , " மிங்கோ பார்க்கினுடைய பயணங்கள் " என்ற ஆப்பிரிக்க நாட்டின் அதிதீரச் செயல்கள் அடங்கிய கட்டுரைகளைப் படிப்பதில் உற்சாகமடைந்தான் . ஆப்பிரிக்க மொழியின் வார்த்தைகளை எழுதி மனப்பாடம் செய்வான் . முழு உலகையும் சுற்றிப் பயணம் செய்வதைத் தன் வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்டிருந்தான் . குதிரைச் சவாரி செய்வதிலும் நீந்துவதிலும் திறமைசாலியாகக் காணப்பட்டான் .


கடற்படையில் சேருதல்

கார்டினல் கடற்படைப் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்து பதினாறு வயதிலேயே உயர் கல்வி பெற்றுத் தகுதியடைந்தார் . கடற்படையிலே உடனே சேர்ந்து நான்கு வருடங்களில் பதவி உயர்வும் பெற்றார் . வெகு விரைவில் ஒரு கப்பலை ஏற்று நடத்தும் கப்பல் தலைவன் பொறுப்பை ஏற்றுக் கொண்டார் . இதற்குள்ளாக உண்மைக் கிறிஸ்தவளான அவரது தாயாரின் நல்ல போதனைகளைவிட்டு தூர அலைந்து திரிகிறவராகவும் , தன் மனம் போன போக்கில் நடப்பவராகவும் மாறிவிட்டார் . ஒரு நாள் அவருடைய தந்தை எழுதிய தாயைப்பற்றிய சுயசரிதையை வாசித்துக் கொண்டிருந்தார் . அவரது தாய் சேவித்து வணங்கி வந்த தேவனைப்பற்றி அறிய வேண்டும் என்கிற உணர்வு அவர் உள்ளத்தில் ஏற்பட்டது . ஒரு வேதாகமத்தை வாங்கி வாசித்து தியானித்தார் . இளம் மாலுமியான ஆலன் கிறிஸ்துவைத் தன் சொந்த ஆத்ம மீட்பராக ஏற்றுக்கொண்ட ம -

உலகின் பல நாடுகளில் உள்ள துறைமுக நகரங்களுக்குக் கப்பல் தலைவன் பொறுப்பில் அவர் போக வேண்டியிருந்தது . துறைமுகத்தில் கப்பல் நிற்கும்போது நகரங்களுக்குள் சென்று ஊரைச் சுற்றிப் பார்ப்பது அவருக்குப் பிரியம் . உள்ளூர்வாசிகளின் பழக்க வழக்கங்கள் , கலாச்சாரம் ஆகியவற்றை மிக ஆர்வத்தோடு கவனிப்பதில் அவருக்கு விருப்பம் அதிகம் . ஒரு சமயம் கப்பல் பிரயாணத்தில் பசிபிக் தீவுகளில் ஒன்றான தஹிதி தீவில் தங்கவேண்டியிருந்தது . கரையில் இறங்கி நடந்தபோது வெகு அமைதியாகவும் , அவாந்திர வெளியாகவும் காணப்பட்டது . உட்பகுதியில் கிராமத்தை அடைந்தார் . அத்தீவைச் சேர்ந்த மனிதன் ஒருவன் கிராமப் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்து ஓய்வு நாள் பாடசாலையில் கிறிஸ்துவைப் பற்றிப் போதித்துக் கொண்டிருந்தான் . திடீரென்று ஆலனுக்கு அன்று ஞாயிற்றுக் கிழமை என்ற நினைவு வந்தது . அனைத்துத் தீவு மக்களும் கிறிஸ்தவர்கள் என்பதை அறியலானார் . அவர் பார்த்துவந்த மற்ற இடங்களைக் காட்டிலும் இந்த இடம் பெரும் மாறுதலுக்கு உட்பட்டிருந்ததை உணர்ந்தார் . தியாக சிந்தையோடு திருப்பணியாற்றிய மிஷனெரிகளே , இப்பெரிய மாற்றத்திற்குக் காரணம் என்று அறிந்தார் . இப்படிப்பட்ட தீவுகளிலும் மிஷனெரிகள் வந்து பணியாற்றியுள்ளனரே என்று வியந்தார் . இவ்வித மாற்றங்கள் மற்ற நாடுகளிலும் நிகழ முடியுமா என்ற கேள்வி அவரில் எழுந்தது . நிச்சயமாக மாற்றங்கள் நிகழ முடியும் . ஆனால் யார் கிறிஸ்துவைப் பற்றி அவர்களுக்குச் சொல்வார்கள் என்கிற சிந்தையோடு பிரயாணப்பட்டுப் போனார் .

தென் அமெரிக்காவின் தென்கோடியிலுள்ள சில தீவுகளையும் , அவரது கடற்பிரயாணத்தில் பார்க்க நேர்ந்தது . தென் அர்ஜென்டைனா விலுாள படகோனியா என்ற இடத்தில் மிகவும்பழங்குடியினரைச் சந்திக்க நேர்ந்தது அவர்கள் அநாகரீகமான மூடப்பழக்க வழக்கமுள்ளவர்களாகக் காணப்பட்டனர் .

சிறிதும் கடவுளைப் பற்றி அறிவில்லா தவர்கள் . இப்படிப்பட்ட கடற்பிரயாணத்தில் ஏற்பட்ட அனுபவங்களெல்லாம் ஆலன் கார்டினரைச் சிந்திக்க வைத்து , பிரிட்டிஷ் கடற்படையை விட்டு மிஷனெரியாக மாற தூண்டியது .


கார்டினர் தென் ஆப்பிரிக்க நாட்டை அடைதல்

கடவுள் கார்டினரை தென் ஆப்பிரிக்க நாட்டிற்குப் போக வழி நடத்தினார் . அங்குள்ள ஆப்பிரிக்க இன மக்களுக்கு அன்றைய நாளில் ஒருவரும் சுவிசேஷத்தை அறிவிக்க செல்லவில்லை .

ஜூலுஸ் என்ற பழங்குடி இனத்தினர் ஒருவரும் செல்லக் கூடாத உட்பகுதியில் வாழ்ந்து வந்தனர் .

அவர்களைச் சந்திக்க குதிரைமேல் பிரயாணம் செய்து மிகவும் ஆபத்தான வழிகளைக் கடந்து சென்றார் . அடர்ந்த காடுகளையும் , சதுப்பு நிலங்களையும் , வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் ஆறுகளையும் நீந்திச் சென்றார் . ஒரு சமயம் ஆற்றங்கரையில் பசியுள்ளவராகவும் , நனைந்த நிலையிலும் களைப்புடன் படுத்து உறங்கிவிட்டார் .

அச்சமயம் ஒரு பெரிய நீர் யானையின் சத்தத்தைக் கேட்டு விழிப்படைந்தார் . ஜூலுஸ் இனத்தின் அரசன் மிகக் கொடூரமான போர் வீரன் என்றும் , அப்பகுதி மக்கள் அனைவரும் அவனைக் கண்டு மிகவும் பயந்து வாழ்ந்து வந்தனர் என்று அறியலானார் .

அப்படிப்பட்ட மனிதனிடம் இயேசு கிறிஸ்துவினால் வரும் இரட்சிப்பை எடுத்துக் கூறினார் . கார்டினர் தென் ஆப்பிரிக்காவில் பணி செய்ய வந்த போது , அவருடைய உடமைகள் மிகவும் அற்பமானவைகள் . சில உடைகள் , குதிரைச் சேணம் , ஒரு கரண்டி , புதிய ஏற்பாடு ஆகியவைகளே .

தென் ஆப்பிரிக்காவில் , தூதுவராக பிரிட்டிஷ் அரசு அவரை நியமித்தது . அவருடைய அரசப் பணியும் , அருட்பணியும் நடைபெற்று வரும் நேரத்தில் அங்கு உள்நாட்டு யுத்தம் ஆரம்பமாயிற்று . குடியேறியுள்ள வெள்ளை இனத்தவருக்கும் , ஜூலுஸ் குடி மக்களுக்கும் இடையே ஏற்பட்ட போர் முற்றியதால் தென் ஆப்பிரிக்காவை விட்டு கார்டினர் வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டார் .


தென் அமெரிக்காவுக்குச் செல்லுதல்

ஆலன் கார்டினர் , தன்னைக் கர்த்தர் மிஷனரிப் பணிக்கென்று அழைத்ததை நிச்சயமாக நம்பினார் . முன்பு ஒரு காலத்தில் தென் அமெரிக்கப் பகுதியில் சந்தித்த பழங்குடி இன மக்களிடம் பணியாற்ற தன் மனதில் நிர்ணயம் பண்ணிக் கொண்டார் .

1838ஆம் ஆண்டு தன் மனைவி பிள்ளைகளுடன் தென் அமெரிக்காவுக்குப் பயணமானார் . கரையிறங்கி அவர் குடும்பத்தோடு ஒரு கூண்டு வண்டியில் பயணத்தை மேற்கொண்டார் . அராகேணியர் என்கிற தென் அமெரிக்க இனம் ஓரளவு நாகரீகம் அடைந்திருந்தது . அவர்களுக்குக் கிறிஸ்துவை அறிவிக்க நீண்ட பயணத்தைச் செய்ய வேண்டியிருந்தது .

பதினான்கு நாட்கள் , மேடு பள்ளங்கள் நிறைந்த பாதையையும் , ஆறுகளையும் கடந்து சென்றார் . ஆண்டீஸ் மலைகளைத் தாண்டிச் செல்ல கோவேறு கழுதைகளைப் பயன்படுத்தினர் . முடிவில் தாங்கள் பணியாற்ற விரும்பின இடத்தில் சேர்ந்து ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்தனர் .

அவ்வீட்டில் அவர்கள் கொண்டு வந்திருந்த வீட்டுப் பொருட்கள் அனைத்தையும் அடுக்கி ஒழுங்கு செய்தனர் . அச்சமயத்தில் அரா கேணிய இனத்தலைவன் அவர்களிடம் வந்து அவ்விடத்தை விட்டுப் போகும்படி உத்தரவிட்டான் . இவருக்கு முன்னால் வந்த வெள்ளையர்கள் அதிகக் கொடுமை. நிறைந்தவர்களாய் இருந்தபடியால் , இவ்வின மக்கள் வெள்ளையரை வெறுத்தனர் . வெள்ளையர் என்றாலே கொடூரமானவர்கள் என்ற தவறான எண்ணத்தினால் , அவ்வினத்தினர் ஆலன் கார்டினரை மிஷனெரிப் பணியை ஆரம்பிக்கவே அனுமதிக்க வில்லை . முழுவதுமாய்த் தடுத்துவிட்டனர் .


இரண்டாம் முயற்சி

தென் அமெரிக்காவின் தென் கோடியில் ஆலன் முன்பு சந்தித்த மக்களிடம் சென்று பணித்தளத்தை நிறுவினார் . மரங்கள் அற்ற கடற்கரைப் பகுதியில் , அவர்களுக்கென்று ஒரு மர வீட்டைக் கட்டினார் . கிழிந்து போன கூடாரங்களைத் தைப்பது போன்ற தொழிலை அங்குள்ள மக்களுக்குக் கற்றுக் கொடுத்ததால் அவர்களுடைய நம்பிக்கையைப் பெற்றார் . நல்ல நண்பர்களாகப் பழகும் இவ்வின மக்களிடையே தாம் விரும்பின மிஷனெரி இயக்கத்தை நிறுவ விரும்பினார் .

உதவிகளைப் பெறுவதற்காக இங்கிலாந்து நாட்டிற்குத் திரும்பினார் . அவருடைய முயற்சிகளுக்கு உதவியும் உற்சாகமும் கிடைக்கவில்லை . மூன்று ஆண்டுகளுக்குப் பின் படகோனியன் மிஷனெரி சங்கத்தை நிறுவினார் .

தென் அமெரிக்க தென் பகுதிக்கு அவர் மறுபடியும் வருகை தந்தபோது , ஒருபுதிய தலைவன் பதவி ஏற்றிருந்தான் . அவன் அவருக்கு எதிராக செயல்பட்டு , மிஷனெரி தளத்தை அவ்விடத்தில் நிறுவ முடியாதபடி செய்துவிட்டான் . இதனால் கார்டினர் மறுபடியும் இங்கிலாந்து திரும்ப வேண்டியதாயிற்று . அவருடைய உடன் ஊழியர்கள் உற்சாகம் இழந்து சோர்வுற்றனர் .

ஆனால் கார்டினர் சோர்ந்து விடவில்லை . " நான் மறுபடியும் தென் அமெரிக்காவுக்கு திரும்ப மன உறுதி கொண்டுள்ளேன் . எல்லா முயற்சிகளையும் செய்து பார்ப்பேன் . பெயர்க்க முடியாத தடைக் கற்கள் எத்தனை உண்டோ அத்தனையையும் அகற்றுவேன் . அபோரிஜினல் என்ற பங்குடியினரிடையே , ப்ராடஸ்டண்ட் மிஷனெரி இயக்கத்தை நிறுவியே தீருவேன் " என்று தீர்மானித்தார் .


மூன்றாம் முறை கார்டினர்

எடுத்த முயற்சி தென் அமெரிக்காவில் பொலினியா என்ற நாட்டிற்கு இம் முறை சென்றார் . அந்த இடத்தில் பதினாறு கிராமங்களைச் சந்தித்த பின் தலைவனின் அனுமதியைக் கேட்டார் . பணித்தளம் நிறுவ பதினோரு முறை அனுமதி மறுக்கப்பட்டது . அவருடைய கூட்டாளிகளில் அநேகர் காய்ச்சலால் அவதிப்பட்டனர் . மிகவும் கரடு முரடான பாதைகளில் ஆயிரம் மைல்களுக்கு மேலாக பிரயாணம் செய்து இந்த இடத்தை வந்து சேர்ந்த அவர்களுக்கு , சுவிசேஷ நற்செய்திப் பணி செய்ய அனுமதி கிடைக்கவில்லை . மிகுந்த பிரயாசத்துடன் அனுமதி பெற்றார் . அந்நேரத்தில் அங்கு புரட்சிப் போர் வெடித்ததால் கார்டினர் இங்கிலாந்து திரும்ப நேரிட்டது .


நான்காம் முயற்சியும் தோல்வியடைதல்

இங்கிலாந்திலிருந்து , கார்டினர் தன்னுடைய புதிய நண்பர்களுடன் தென் அமெரிக்காவுக்குப் பயணமானார் . ஒரு புதிய தீவில் இறங்கி குடிசைகள் அமைத்தனர் . அத்தீவின் மக்கள் மிகவும் பொல்லாதவர்களும் , திருடர்களு மாயிருந்தனர் . மிஷனரிகள் கொண்டு வந்திருந்த எல்லா உடைமைகளையும் , உணவுப் பொருள்களையும் திருடிச் சென்றுவிட்டனர் . இம்முறையும் ஏமாற்றம் அடைந்தவராய் , அத்தீவை விட்டு வெளியேற வேண்டியதாயிற்று .


ஆலன் கார்டினர் மேற்கொண்ட முயற்சிகள்

கடற்படை தலைவன் பதவியை உதறித்தள்ளி , மிஷனரிப் பணிக்கு தன்னை அர்ப்பணித்து , அநேக ஆண்டுகள் ஆயிற்று . எனினும் அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்ததாகத் தோன்றிற்று . அருட்பணி செய்யவும் , பணித்தளம் நிறுவவும் அவர் எடுத்துக்கொண்ட எல்லா முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன .

எனினும் அவர் பெற்ற அழைப்பையும் விட்டுவிடவில்லை . அதனால் புதிய முறையில் ஊழியம் செய்ய ஏவப்பட்டார் . ஒரு மிஷனெரிக் கப்பலை எடுத்துச் சென்று தென் அமெரிக்கத் தீவுகளில் , பணிக்கென்று பயன்படுத்தினால் மிகுந்த பாதுகாப்பாக இருக்கும் என்று நம்பினார் . அவரும் அவர் குழுவினரும் உடைமைகள் , உணவுப் பொருள்கள் ஆகியவைகளை வைத்துக் கொள்ள வசதியாக இருக்கும் என்று நினைத்தார் . கப்பல் வாங்கத் தேவையான தொகையை மிஷனெரிச் சங்கம் கொடுக்க இயலவில்லை , "

இந்தக் காரியத்தை என் துணிவால் செய்ய முடிவெடுத்துவிட்டேன் . மிஷனெரிச் சங்கம் உதவினாலும் உதவாவிட்டாலும் சரி , நம் இரட்சகர் கொடுத்த கட்டளைக்குக் கீழ்ப்படிகிறவனாய் , உலகின் கடைசிப் பரியந்தமும் சுவிசேஷத்தை அறிவிக்கச் செல்லுவேன் . கட்டளையைப் பெற்ற நாம் கீழ்ப்படிவது முக்கியம் " என்று எழுதினார் .

கார்டினர் அவருடைய சொந்தப் பணத்தைக் கொண்டும் , அவருடைய முயற்சிகளும் ஊக்கம் கொடுத்து அவர்மேல் இரக்கமுற்ற ஓர் அம்மையார் கொடுத்த தொகையைக் கொண்டும் , இரண்டு நடுத்தரக் கப்பல்களை ஆயத்தம் செய்தார் . " பயனியர் " ( முன்னோடி ) " ஸ்பீட்வெல் " ( அதிவேகம் ) என்று பெயர்கள் சூட்டப்பட்ட இரண்டுக் கப்பல்களில் , ஏழு பேரடங்கிய குழுவுடன் தென் அமெரிக்காவுக்குப் பயணமானார் . எல்லா இயந்திரச் சாதனங்களையும் அவர்கள் எடுத்துச் செல்லவில்லை . பின் நாட்களில் இயந்திரச் சாதனங்கள் அவர்களை வந்தடையும்படி ஏற்பாடுகளைச் செய்து விட்டு பயணத்தைத் தொடங்கி விட்டார் .

தென் அமெரிக்காவின் தென் பகுதியில் , நிர்ணயித்த இடத்திற்கு வந்து சேர்ந்தார்கள் . அங்குள்ள கடற்பகுதி மிகுந்த அலைகள் நிறைந்ததாகவும் வேகமாகக் காற்று வீசும் பகுதியாகவும் இருந்தது . அவர்கள் சென்ற கப்பல்கள் கடும் காற்றையும் , அலைகளையும் தாங்கமுடியாத சிறிய கப்பல்களாக இருந்தன . முதல் மாத முடிவில் " பயனியர் " கப்பல் சேதமடைந்து விட்டது . தைரியசாலிகளான மிஷனெரிகள் ஒரு தீவில் கரையிறங்கினார்கள் .

அத்தீவு மக்கள் கொடூரமானவர்களும் , மதிகேடர்களுமாய் இருந்ததால் அத்தீவில் தங்கமுடியவில்லை . எந்தத் தீவுக்கு நிவாரணக் கப்பல் வருமோ , அத்தீவை விட்டு வேறு தீவுக்குப் போக நேரிட்டது . " ஸ்பானியர்ட் " துறைமுகம் அத்தீவுகளில் பிரதான தீவில் அமைந்திருந்ததால் , அங்கு சென்றுவிட முடிவு செய்தனர் .

அவர்களைத் தேடிவரும் நிவாரணக் கப்பலுக்குச் செய்தியை , ஒரு பெரிய பாறையின் மேல் எழுதினர் . " ஸ்பானியர்ட் துறைமுகத்திற்குப் போகிறோம் , அங்கு சந்திக்கவும் " என்று எழுதினர் . கண்ணாடி பாட்டில்களில் மேற்கண்ட செய்தியை எழுதி கரையோர மணலில் புதைத்தனர் . "

உணவுப் பொருள்கள் அனைத்தும் தீர்ந்துவிட்டன . நாங்கள் நோய்வாய்ப்பட்டிருக்கிறோம் . நிவாரண உதவி எங்களுக்கு விரைவில் கிடைக்காவிட்டால் நாங்கள் பட்டினி கிடப்போம் " என்று எழுதப்பட்ட செய்திகளும் பாட்டில்களில் வைக்கப்பட்டன . நிவாரணக் கப்பல் அங்கு வரும்போது அந்தச் செய்திகளை எடுத்துப்படிப்பார்கள் என்று நம்பினர் . உதவி தாமதமாக அவர்களை வந்து அடையும் என்று எதிர்பார்த்தனர் .


கடைசிப் போராட்டம்

பல வாரங்கள் கடந்தும் நிவாரணக் கப்பல் வந்து சேரவில்லை . ஆகாரப் பொருள்கள் அனைத்தும் தீர்ந்துவிட்டன . தலைவன் கார்டினரும் நண்பர்களும் வெளி உலகத் தொடர்பினின்று துண்டிக்கப்பட்டு விட்டனர் . உணவு மில்லை , காப்பாற்றப்படுவோம் என்கிற நம் பிக்கையும் இல்லை . மீன் பிடிப்பது அக்கடலில் சாத்தியமாய் இல்லை . ஏழுபேரும் ஒரு நரியின் மாம்சத்தைப் புசித்துப் பலநாள் வாழ்ந்தனர் . அடுத்து , ஆறு எலிகளையும் , சில விதைகளையும் , காட்டுச் செடியின் தண்டுகளையும் பட்டினியைப் போக்க உட்கொண்டனர் . பட்டினி கிடந்ததோடல்லாமல் " ஸ்கர்வி " என்ற நோயாலும் தாக்கப்பட்டனர் . மிகக் கடினமான இச்சூழ்நிலையில் தன்னுடைய நாள் குறிப்பில் கார்டினர் இவ்விதம் எழுதினார் ; " நான் மிகவும் சோர்வுடன் பலவீனமாகக காணப்படுகிறேன் . நான் முழுவதும் படுத்த நிலையிலேயே இருக்கிறேன் . என் மனக் கவலைகள் அனைத்தையும் என் தேவனிடத்தில் சமர்ப்பித்துவிட்டேன் . அவருடைய நேரம் வரவும் அன்பின் சித்தம் செய்யப்படவும் பூரணமாய் என்னை ஒப்படைத்து விட்டேன் " என்பதே .

கார்டினரும் , அவருடைய இரண்டு நண்பர்களும் உடைந்து போன " பயனியர் " கப்பலை கரைக்கு இழுத்துச் சென்று , அதில் ஒரு கூடாரத்தைப் போட்டுத் தங்கினர் .

மற்றக் குழுவினர் ஒரு மைல் தூரத்தில் கடலில் நின்றிருந்த கப்பலில் தங்கியிருந்தனர் . இவர்கள் அனைவரும் சோர்வுற்று பலவீனப் பட்டதால் , கரைக்கும் கடலில் நின்றிருந்த கப்பலுக்கும் இடையே இருந்த போக்குவரத்து நின்றுவிட்டது . கார்டினர் மறுபடியும் இவ்விதம் எழுதினார் ; " இப்போதும் இச்சிறிய மிஷனெரிக் குழுவை , நல்ல மேய்ப்பனாகிய கிறிஸ்து இதனிலும் மேலான பரலோக பாக்கியத்தைச் சுதந்திரித்துக் கொள்ளவே கூட்டிச் சேர்த்தார் . எங்கள் அனைவருடைய உயிரும் அவருடைய கரத்திலுள்ளது . எங்களைக் காட்டிலும் , மேலானவர்களையும் , சிறந்த பயிற்சி பெற்றவர்களையும் , திறமைமிக்கவர்களையும் , தேவன் எங்களுக்குப் பின் எழுப்புவார் . நாங்கள் நிறுத்தி விட்ட அருட்பணியை அவர்களே தொடர்ந்து செய்வார்கள் " என்பதே . கரையில் நின்றிருந்த உடைந்த கப்பலில் தனியே விடப்பட்டவராகத் தன்னுடைய பிரிவு உபசாரக் கடிதத்தைத் தன் குடும்பத்திற்கு எழுதினார் . குழுவினர் அனைவரும் இறந்து விட்டனர் . தென் அமெரிக்கத் தீவுகளில் , எதிர் காலத்தில் மிஷனெரிப் பணியை எவ்வாறு நடத்திச் செல்வது என்பதைப் பற்றிய செயல் திட்டத்தையும் எழுதி வைத்தார் . பிரிட்டிஷ் கிறிஸ்தவ சமுதாயத்திற்குத் தென் அமெரிக்க இனத்தவரின் சார்பில் " ஒரு வேண்டுகோளையும் " எழுதி வைத்தார் .

அவர் உயிர் பிரியும் கடைசி நிமிடம் வரை , அவர் உள்ளமும் நினைவும் மிஷனெரிப் பணியைப் பற்றியே இருந்தது . முடிவாக 1815 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆறாம் நாள் குழுவின் கடைசி ஆளாக கார்டினர் மரணத்தைத் தழுவினார் .

நிவாரணக்கப்பல் , இருபது நாட்கள் கழித்து வந்து சேர்ந்தது . கிறிஸ்துவுக்கென்று மரித்த , தைரியசாலிகளான ஆறு பேரையும் , கிறிஸ்துவின் சிலுவை வீரரையும் மரித்த நிலையில் கண்ட னர் . மண்ணில் விழுந்து - மரித்த கோதுமை மணி கார்டினரின் மிஷனெரி வாழ்க்கை , ஏனைய மிஷனெரிப்1 போலல்லாமல் வேறுபட்டதாய்க் காணப்பட்டது . அவருடைய மிகுந்த பிரயாசமும் , முயற்சியும் , எவரையும் கிறிஸ்தவர்களாக மாற்றவில்லை .

கிறிஸ்தவ சபையும் ஸ்தாபிக்கப்படவில்லை . அவர் அர்பணித்த வாழ்வும் முயற்சிகளும் வீண்போனது என்று சொல்ல முடியுமா ? இல்லவே இல்லை . கிறிஸ்து கூறுகிறார் , " மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் . கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகா விட்டால் தனித்திருக்கும் . செத்ததேயாகில் மிகுந்த பலனைக் கொடுக்கும் " ( யோவான் 12 : 24 ) .

ஆலன் கார்டினர் கடவுள் தெரிந்தெடுத்த கோதுமை மணி . தென் அமெரிக்க மண்ணில் அவர் விழுந்து மரித்துப்போனார் . அதனால் நிச்சயம் பலன் இருந்தே தீரும் . அவருடைய பரிதாபமான மரண சம்பவத்தைக் கேள்விப்பட்ட அனைத்துத் திருச்சபைகளும் செயல்படத் துவங்கின . அவருடைய அருட்பணி சரித்திரம் எங்கும் பிரசுரிக்கப்பட்டன .

அதன் பலனாக படகோனியன் மிஷனெரி சங்கம் உதயமாயிற்று . எந்தத் தீவுகளில் கார்டினரும் அவர் குழுவினரும் உயிர் துறந்தனரோ அவ்விடத்திலேயே அச்சங்கம் நிறுவப்பட்டது . பிரதான பணித்தளத்தை ஓரிடத்தில் அமைத்துக் கொண்டு , அங்கிருந்து அநேக தீவுகளுக்குச் சென்று வர எல்லா வசதிகளையும் உடைய ஒரு கப்பல் உபயோகத்திற்கு வந்தது . அக்கப்பலின் பெயர் " ஆலன் கார்டினர் " என்பதாகும் .

மிஷனெரிப் பணிக்கென்று அர்ப்பணித்த முன்னோடியானவர்களில் கப்பல் தலைவனான கார்டினரின் மகனும் ஒருவராவார் . அவர் தன் தகப்பனின் ஆவலை இதன்மூலம் பூர்த்தி செய்தார் . கிறிஸ்தவ சபையார் தங்கள் தவறை நினைத்து வருந்தினர் . கார்டினரின் ஒப்பற்ற சேவைக்கு அவர்கள் முழு ஆதரவையும் கொடுக்காததேஅவர்களுடைய தவறாகும் . பல வாலிபர்கள் தங்களை இந்தமிஷனரி சங்கத்தின் சேவைக்கென்று அர்ப்பணித்தனர் . சுவிசேஷம் சென்றடையாத அநேக இடங்களுக்கு சுவிசேஷத்தை எடுத்துச் செல்ல முன் வந்தனர் . தென் அமெரிக்கப் பகுதிகளில் மிஷனெரிப் பணி மிகுந்த ஆர்வத்துடன் நிறுவப்பட்டு தொடர்ந்து செயல்பட்டது . இவைகளையும் இன்னும் அதிகமான பலன்களையும் பெற ,

கடவுளின் கோதுமை மணியான கார்டினர் தென் அமெரிக்க மண்ணில் விழுந்து மரித்ததினால் ஏற்பட்ட மகிமையின் விளைவே ஆகும் ; கிடைக்கப்பெற்ற அளவற்ற ஆசீர்வாதங்களுக்கும் காரணமாகும் .

உன் வாழ்க்கையிலே கனிகள் நிறைந்திருக்க விரும்பு கிறாயா ? உன்னை இயேசுவினிடத்தில் கொடுத்துப்பார் . அவர் உன்னை பயன்படுத்துவார் . கிறிஸ்துவுக்கு முழுவதுமாய் அர்ப்பணிக்கப்பட்ட எந்த வாழ்வும் வீணாவதில்லை . பயனில்லாமல் போவதில்லை . உன்னுடைய வாழ்வும் கனிதரும் வாழ்வாக , பலன் கொடுக்க அநேகருக்கு உபயோகமானதாக இருக்க விரும்புகிறாயா ? அப்படியானால் கிறிஸ்துவுக்கென்று உன் வாழ்க்கையை முழுவதுமாய் கொடுத்துப் பார் . அவருக்கென்று அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு பல நூற்றாண்டுகளாகப் பலன் கொடுத்துக்கொண்டே இருக்கும் . சிலுவையில் மரித்து உயிர்த்த கிறிஸ்துவின் ஜீவன் , உன்னிலும் என்னிலும் ஜீவனைக் கொடுத்து ஈராயிரம் ஆண்டுகளாகப் பலன் பெருக செய்கிறதை உணர்வாயோ ?

நீர் எனக்கு நல்ல படிப்பைத் தந்தால் , என் வாழ்வை உமக்கு அர்ப்பணித்து உமக்கு ஊழியம் செய்வேன் என்று தேவலுடன் ஒரு உடன்படிக்கை செய்தார் பேக்கர் .

குடும்பப் பொறுப்பைச் சுமக்கவேண்டிய ஒருவருக்கு மிஷனெரிப்பணிக்கு அழைப்பு உண்டா ? அவரும் தேவனுக்கு உயர்ந்ததொரு பணி செய்ய முடியுமா ? இக்கேள்விகளுக்குப் பதிலாக அமைவதுதான் கார்ல் பேக்கர் அவர்களின் வாழ்க்கை வரலாறு .

பள்ளிப் படிப்பை முடித்துப் பல வருடங்கள் ஆன பின்னும் தனது மேற் படிப்பினை தொடர முடியாத நிலையிலுள்ள ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர் கார்ல் பேக்கர் . தனது விதவைத் தாயையும் , திருமணமாகாத சகோதரியையும் காப்பாற்ற வேண்டி பட்டறை ஒன்றில் வேலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தமான நிலையிலிருந்தார் அவர் . அந்த ஊதியத்தில் சிறுகச் சிறுக சேர்த்து நூறு டாலர் - ஐ தனது மருத்துவப் படிப்பிற்காக முன் பணமாகக் கொண்டு கல்லூரியில் சேர்ந்தார் .

அப்போது தேவனுடன் ஒரு உடன்படிக்கை செய்தார் . நீர் எனக்கு நல்ல படிப்பைத் தந்தால் , என் வாழ்வை உமக்கு அர்ப்பணித்து உமக்கு ஊழியம் செய்வேன் என்று . 1916 - ம் ஆண்டு 22 - வது வயதில் பிலடெல்பியா மருத்துவ கல்லூரியில் தனது மருத்துவப் படிப்பை படித்துக் கொண்டிருந்தார் அவர் . அப்போது முதலாம் உலகப்போர் ஆரம்பித்ததால் , போரில் காயப்பட்டவர்களுக்கு டாக்டர்களின் உதவி அவசியம் என்பதை உணர்ந்து , மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு இலவசமாகத் தங்கும் அறையும் , உணவும் ஊக்கத்தொகையும் வழங்கினார்கள் . இதனால் எளிதாக தனது மருத்துவப் படிப்பை முடித்தார் கார்ல் பேக்கர் .

1922 - ல் மரியா என்ற பெண்ணைத் திருமணம் செய்தார் . திருமணத்தின்போது மரியா - விடம் தான் தேவனிடம் செய்த உடன்படிக்கையையும் தனது வாழ்வில் முதன்மையானவர் கிறிஸ்து மட்டுமே என்பதையும் தெளிவு படுத்தினார் . அதற்கு மரியாவும் சம்மதித்திருந்தார் .

திருமணத்திற்குப்பின் அமெரிக்காவில் பயர் பட்டணத்தில் மருத்து வராகப் பணிபுரிந்து வந்தார் . அவரது திறமையான சிகிட்சையால் அவருக்குப் பெயரும் புகழும் கிடைத்தது .

தேவனுடன் அவர் செய்திருந்த உடன்படிக்கையை சார்லஸ் ஹார்ல்பேர்ட் என்ற மிஷனெரியிடமிருந்து வந்த ஒரு கடிதம் அவருக்கு மீண்டும் தினைவுபடுத்தியது .

ஆப்பிரிக்காவிலுள்ள காஸ்கோ என்ற பகுதியில் ஊழியம் செய்த தனது மருமகள் எலிசபெத் மோர்ஸ் ஹார்ல்பேர்ட் என்ற மருத்துவ மிஷனெரி திடீரென்று இறந்து போனதால் அந்த பகுதியில் பணி புரிய , ஒரு மருத்துவர் தேவை என்று அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார் .

தேவனுக்குச் செய்த அர்ப்பணிப்பு பேக்கரை அதிகம் உந்தி தள்ளியது என்றா லும் கடைசிநாட்களில் தனது தாயைக் காப்பாற்ற வேண்டிய கடமை உணர்வு அவரை அழைப்புக்குக் கீழ்ப்படிய இயலாமல் தடுத்தது .

எனவே , தன்னால் ஆப்பிரிக்காவிற்கு வர இயலாது எனக் கடிதம் எழுதினார் பேக்கர் . ஆனால் சார்லஸ் ஹார்ல்பேர்ட் சோர்ந்து போகாமல் தொடர்ந்து கடிதம் எழுதி , அவரை ஊக்குவிக் கவே 1928 - ம் ஆண்டு தனது நல்ல வருமானம் , புகழ் தந்த வேலையை விட்டு விட்டு ஆப்பிரிக்கா காடுகளில் பணி செய்ய பயணமானார் .

ஆப்பிரிக்காவில் காஸ்கோ காடுகளிலுள்ள , காட்வா இடத்தில் முதலில் தங்கி பணிசெய்ய ஆரம்பித்தார் . அங்கு மண் குடிசையில் வாழ வேண்டியதிருந்தது . அவரது மனைவி மேரியோ அதை அலங்கரித்து மாளிகையாக மாற்றினார் .

ஆறு வருடம் அங்கு பணி செய்தபின்

1934 - ம் ஆண்டு ஓசா என்ற இடத்தில் சிறிய மருத்துவமனை நிறுவி இட்டுரி காட்டு மக்களுக்கு மருத்துவ உதவி செய்ய ஆரம்பித்தனர் . அனுதினமும் 200 - க்கும் மேற்பட்ட மக்கள் தூரம் இடத்திலிருந்து இவரது மருத்துவமனைக்கு வந்து உடல் ஆரோக்கியம் பெற்றனர் சரீர சுகம் தேடிவரும் மக்களுக்கு சுவிசேஷத்தை அறிவிக்காமல் இவர் அனுப்பியதே இல்லை . உள்ளூர் தீய ஆவிகள் மற்றும் மந்திர வாதிகளின் கட்டுப்பாட்டிலிருந்த கிராம மக்களையும் எளிதாக சுவிசேஷத்திற்கு செவிசாய்க்க வைக்க இவர் மருத்துவ பணியின் மூலம் முடிந்தது . மருத்துவப் பணியில் முழு மூச்சுடன் ஈடுபட்டாலும் ஒவ்வொரு வார இறுதியிலும் சனி , ஞாயிறு முழுவதும் சுவிசேஷ பணிக்காக மட்டுமே ஒதுக்கி வைத்து பணிபுரிந்தார் .

சுவிசேஷத்தை சரியான முறையில் மக்களுக்கு எடுத்துச் சொல்வதில் பேக்கர் தலைசிறந்தவர் . வேத கதைகளை ஆப்பிரிக்கா சூழ்நிலைக்கு ஏற்ப விளக்கக்கூடிய படங்கள் நிறைந்த ஒரு புத்தகத்தை அவரே உருவாக் கினார் . அதை உபயோகித்து , எவரும் மற்றவர் களுக்கு சுவிசேஷத்தை எளிதாக பிரசங்கிக்க முடியும் . இதனை ஆப்பிரிக்க விசுவாசிகளுக்கு இவர் கற்றுக் கொடுத்து , சுவிசேஷத்தை அறிவிக்க அவர்களை ஊக்கப்படுத்தினார் . ஆப்பிரிக்க காட்டு மனிதர்கள் அந்த புத்தகத்தை உபயோகித்து , மற்றவர்களுக்கு சுவிசேஷம் அறிவித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து ஆண்டவரை துதித்தார் .

தனது மருத்துவ பணியை குறித்து இவ்வாறு எழுதுகிறார் . இயேசு கிறிஸ்துவுக்கு யோவான்ஸ்நானன் எப்படி முன்னோடியாக இருந்து வழியை ஆயத்தம் பண்ணினாரோ , அப்படியே எனது மருத்துவ பணியும் இம்மக்களுக்கு நற்செய்தியை நான் சொல்லவும் அவர்கள் அதை கவனமுடன் கேட்கவும் ஆயத்தம் செய்கிறது என்று குறிப்பிட்டார் .

தினமும் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு சுவிசேஷம் சொல்லுவது மட்டுமல்லாமல் , தன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளை முறை ஆவிக்குரிய வாழ்வில் வளர்க்கவும் , அவர்கள் குணமடைந்தபின் , தாங்கள் வாழும் இடத்தில் திருச்சபையில் இணைந்து ஆண்டவரை ஆராதிக்க செய்யவேண்டிய பொறுப்பு தனக்கு உண்டு என்பதை அறிந்து செயல்பட்டார் .

இட்டூர் காடுகளிலுள்ள தொழுநோயாளிகள் கார்ல் பேக்கரின் மருத்துவ பணியை அறிந்து சிகிட்சைக்காக வர ஆரம்பித்தனர் . இவர்கள் வாழ்ந்து ஒரு பயனும் இல்லை என்று சமுதாயத்தில் வெறுத்து ஒதுக்கப்பட்ட தொழுநோயாளிகளுக்கு கார்ல் பேக்கரின் அன்பும் அரவணைப்பையும் உற்சாகத்தையும் வாழ்க்கைக்கு புது அர்த்தத்தையும் தந்தது . அவர்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விசுவாசத்துக்குள் வந்தனர் .

நாளுக்கு நாள் எண்ணிக்கை பெருகவே , 1100 ஏக்கர் நிலத்தில் தொழுநோயாளிகளுக்கான கிராமம் ஒன்றை ஏற்படுத்தி , அதில் 4000 தொழுநோயாளிகள் தங்க வைத்து , மருத்துவ உதவி செய்து வந்தார் . தொழுநோய் பற்றி ஆராய்ச்சியில் ஈடுபடுவோரும் அமெரிக்க தேசத்திலிருந்துகூட வந்து , இங்கு இந்த மக்களுடன் தங்கி , பல உயரிய கண்டு பிடிப்புகளை செய்தனர் .

கார்ல் பேக்கர் ஒவ்வொரு ஆண்டும் 4000 அறுவை சிகிட்சைகளை 500 பிரசவங்களை தனது ஒச்சா மருத் துவமனையில் செய்தார் என்றால் அவர் எவ்வளவு கடினமாக ஒவ்வொருநாளும் உழைத்தார் என்பதே தெரிந்து கொள்ளுங்களேன் .

மனநோயாளிகளை , பிசாசு பிடித்தவர்கள் என்று ஆப்பிரிக்கர்கள் நம்பியதால் குடும்பத்தாராலும் , சமு தாயத்தாலும் ஒதுக்கப்பட்டனர் , தனது மருத்துவ மனையில் தனி பகுதி ஒன்றை ஆரம்பித்து மன நோயாளிகளுக்கு சிகிட்சை செய்தார் . ஆப்பிரிக்காவில் இவரது மருத்துவமனையே மனநோயாளி களுக்காக திறக்கப்பட்ட மருத்துவமனையாகும் .

1960 - ம் ஆண்டு தேச விடுதலைக்காக ஏற்பட்ட புரட்சியின்போது சிம்பாஸ் கொரில்லாக்கள் இவரது மிஷன் வீடு , மருத்துவமனை ஆகியவற்றை நாசப் படுத்தினர் .

பாதுகாப்பிற்காக சிலகாலம் கிழக்கு ஆப்பிரிக்கா நோக்கி இடம் பெயர்ந்த இவர் 70 வயதானதால் ஓய்வெடுத்துக்கொள்ளும்படி இயக்கம் வற்புறுத்திய போதும் அதற்கு மறுத்து , ஆப்பிரிக்கா எனது தாய்வீடு என்றும் , அமெரிக்கா தேசத்திற்கு திரும்பிப் போக தான் விரும்பவில்லை என்றும்

ஒய்ந்திருக்க மறுத்து சுறுசுறுப்புடன் பணிபுரிந்தார் . இன்று என் வாழ்வின் கடைசி நாளாக இருக்குமானால் அதனை படுக்கையில் நான் செலவழிக்க விரும்பவில்லை என்று அடிக்கடி கூறுவார் அவர் , தெளிவாக சொல்லி , புரட்சி ஓய்ந்து சற்று அமைதி திரும்பியதும் ஒச்சா திரும்பினார் .

அங்கு கொரில்லாக்களால் நாசமாக்கப்பட்ட தனது வீடு , மருத்துவமனையை மீண்டும் புதுப் பித்தார் . அதற்கு ஒரு வருடம் பிடித்தபோதும் சோர்ந்து போகாமல் புதிய உற்சாகத்துடன் விளங்கினார் .

1966 - ஆம் ஆண்டு மூன்று முறை பேக்கர் மாரடைப்பினால் தாக்கப்பட்டாலும் , ஓய்ந்திருக்க மறுத்து சுறுசுறுப்புடன் பணிபுரிந்தார் . இன்று என் வாழ்வின் கடைசி நாளாக இருக்குமானால் அதனை படுக்கையில் நான் செலவழிக்க விரும்பவில்லை என்று அடிக்கடி கூறுவார் அவர் . மறக்க முடியாத மாமனிதர்கள் தனது 83 வயது வரை காஸ்கோ பகுதியிலே பணிபுரிந்த அவர் ,

பின்பு அமெரிக்கா திரும்பி , மருத் துவ சுவிசேஷ மையம் என்ற அமைப்பை ஏற்படுத்தி ஆப்பிரிக்கா நாட்டிற்கு ஊழியத்திற்கு செல்லும் மருத்துவர்களை பயிற்றுவிக்கும் பணியை நிறைவேற்றினார் .

60 வருடம் மருத்துவ மிஷனெரியாக ஆப்பிரிக்காவில் பணிபுரிந்த இவரைக் குறித்து ஒரு காஸ்கோ மனிதன் இவ்வாறு கூறினான் ,

பல மிஷனெரிகள் இயேசு கிறிஸ்துவை குறித்து எங்களுக்கு பிரசங்கித்தனர் . போதித்தனர் . ஆனால் கார்ல் பேக்கர் - ரோ இயேசு கிறிஸ்துவை போலவே எங்களுக்கு வாழ்ந்து காட்டினார் என்றான் . தேவையுள்ள இந்த தேசத்தில் உங்கள் கல்வியை , தாலந்தை தேவப்பணிக்கு மூலதனமாக்கி , தேவனுக்கு அநேகரை சிநேகிதராக்கும் தேவப்பணியை நிறைவேற்ற நீங்களும் ஏன் முன்வரக்கூடாது ?

பக்தியை ஊட்டி வளர்த்த பெற்றோரே அர்ப்பணிப்புக்கு எதிர்த்து நிற்கும்போது என்ன செய்வது ? இக்கேள்விகளுக்கு விடைதருகிறது இசபெல் கூன் வாழ்க்கை .

சிறுவயதில் பக்தியாக வளர்க்கப்பட்டு வாலிபத்தில் தடம்புரண்ட ஒருவர் திரும்பவும் தேவனண்டை திரும்ப முடியுமா ? தேவப்பணிக்கு அவருக்கும் அழைப்பு உண்டா ? பக்தியை ஊட்டி வளர்த்த பெற்றோரே அர்ப்பணிப்புக்கு எதிர்த்து நிற்கும் போது என்ன செய்வது , இக்கேள்விகளுக்கு விடைதருகிறது இசபெல் கூன் வாழ்க்கை .

பெல் என்பது அவருடைய செல்லப் பெயர் . அவளது பெயருக்கு ஏற்ப அவள் ஓர் அழகி . பாப் செய்யப்பட்ட அவளுடைய பழுப்பு நிறமுள்ள முடி முதல் , பாதம் வரை கொள்ளை அழகுள்ளவள் ,

1920 களில் அமெரிக்காவில் நடனமோகம் ஓங்கியிருந்தது . நாட்டிய அரங்குகள் , அயிரக்கணக்கில் தோன்றலாயின் சிறுமிகள் முதல் பெரியோர்கள் வரை எல்லாருமே நடனத்தில் கலந்துகொண்டு உல்லாசமாய்க் காலம் கழித்தனர் .

பெல் நடனத்தில் எல்லாரையும் தோற்கடித்து விடுவாள் . இசபெல் 1911 ஆண்டு டிசம்பர் 17 நாள் கனடாவிலுள்ள டொரன்டோவில் பிறந்தார் . இவரது தகப்பனார் ஒரு வியாபாரி , அதோடு பிரஸ்பிடேரியன் சபையில் ஒரு பிரசங்கியார் . தாயார் ஆலய - ஆராதனையில் இசைக்கருவி இசைத்துப் பாடல்களை நடத்துவதில் அக்கறை காட்டுபவர் . இசபெல் சிறுவயதிலேயே பக்தியுடன் வளர்க்கப்பட்டாள் . தினசரித் தேவைகளுக்காக நாம் ஜெபிக்க வேண்டும் என்ற பாடத்தை தனது பெற்றோரிடம் பெல் கற்றிருந்தாள் . படிப்பிலும் அவள் கெட்டிக்காரி , உயர்நிலை வகுப்பில் பெல் மாநிலத்திலேயே முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்று கவர்னர் ஜெனரலின் பதக்கமும் பெற்றாள் . வாலிப வயதை எட்டியபோது இரவில் நடனம் ஆடி , அதிக நேரம் கழித்து வீட்டுக்கு வருவது , ஞாயிற்றுகிழமையும் நடனம் ஆடப்போவது எனக் கொஞ்சம் கொஞ்ச மாக உல்லாசம் அவளைப் பற்றிப்பிடித்தது .

அவளது செயலைத் தாயார் கண்டித்த போது அதிலென்ன தவறு நான் தான் நன்றாகப் படிக்கிறேனே என்று சமாதானம் சொன்னாள் . பெல் படிப்பிலும் , நடனத்திலும் பல விருதுகளைப் பெற்றாள் . கல்லூரி வாழ்வில் விசுவாசத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகி கடவுள் என்று ஒருவர் இல்லை , வேதம் விஞ்ஞானத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது போன்ற கொள்கைகளை நம்ப ஆரம்பித்தாள் ,

இச்சமயத்தில் பென் என்ற வாலிபனால் அவள் ஏமாற்றப்பட்டாள் . 19 வயதான பெல்லுக்கு உலகமே இருண்டு விட்டது போல இருந்தது . அதிக மன வேதனையுடன் , சாப்பிடாமல் , தூங்கமுடியாமல் தவித்த அவளுக்கு விஷம் குடித்து உயிரை மாய்த்துக்கொள்ளும் எண்ணம் திரும்பத் திரும்பவந்தது .

இந்த மனப்போராட்டத்தில் அவள் தன் கைகளை வானத்துக்கு நேராய் உயர்த்தி ஓ தேவனே நீர் அங்கே இருப்பீரானால் உம்மை எனக்கு நிரூபியும் , இந்த படுவேதனை நேரத்தில் எனக்கு சமாதானம் தாரும் , என் வாழ்க்கையை உமக்குக் கொடுக்கிறேன் . எதுவேண்டுமானாலும் , செய்வேன் , எங்கு வேண்டுமாயினும் செல்வேன் என்று சொல்லிவிட்டு சுருண்டு படுத்துக்கொண்டாள் .

அமைதியான தூக்கம் . அன்று அவளை சூழ்ந்து கொண்டது . ஒரு குழந்தையை போல தான் தூங்கினது அவளுக்கு பெரிய வியப்பாக இருந்தது . ஏனெனில் பென்னூடன் உறவை முறித்துக்கொண்ட நாளிலிருந்து ஒருதநாள் கூட அவள் அப்படித் தூங்கியதில்லை , அலமாரியில் தூசிபடிந்திருந்த தனது வேதாகமத்தை எடுத்து வாசிக்க ஆரம்பித்தாள் .

பெல்லின் தாயும் அவளது வாழ்வின் மாற்றத்தை உணர்ந்து , எல்லிஸ் என்பவர் நடத்தும் வேதபாட வகுப்புக்கு அழைத்துச் சென்றாள் . அந்த வேதபாட வகுப்புகள் மூலம் ஆண்டவரைத் தன் இரட்சகராக ஏற்றுக் கொண்டான் பெல் , அவளது ஆவிக்குரிய வளர்ச்சி மெதுவாகவே இருந்தது .

1922 " ஆண்டு பல்கலைக் கழகப் படிப்பை முடித்து ஆசிரியப் பயிற்சி பெற்று , பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்ற ஆரம்பித்தார் . என்றாலும் தேவனிடம் தான் செய்த உடன்படிக்கையை அவள் மறக்கவில்லை பெர்ஸ் என்ற இடத்தில் நடந்த மிஷனெரி மாநாட் டில் பெல் கலந்துக்கொண்டபோது , சீனா தேசத்திற்கு மிஷனெரியாகப் போக உந்தப்பட்டார் .

சீனா உள்நாட்டு இயக்கத்தின் ஸ்தாபகர் ஹட்சன் டெய்லரின் வாழ்க்கை சரிதையும் அவரைக் கவர்ந்தது . ஜேம்ஸ் பிரேசரின் மிஷனெரி பகிர்ந்து கொள்ளுதல் மூலம் விசு மக்களைப்பற்றி அறிந்துகொண்டு அவர்கள் மத்தியில் பணி செய்ய ஆர்வம் கொண்டார் . தனது மிஷனெரி அர்ப்பணிப்பைத் தாயிடம் சொன்னபோது , அவளது தாயார் அதிர்ந்துபோய் உனக்கு எவ்வளவு செலவு செய்து படிக்க வைத் தோம் . இவைகளுக்கெல்லாம் இதுதான் நீ காட்டும் நன்றியா என்று எதிர்ப்பு தெரிவித்தார் . ஏனெனில் பெல்லின் தகப்பனாருக்கும் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டு , செல்வம் முழுவதையும் இழந்தார் . மேலும் அவர்மேல் தொடுக்கப்பட்ட ஒரு வழக்குக்கு , தீர்ப்பு வந்தால் , சிறை தண்டனையோ அல்லது பெருந் தொகையோ அபராதமாக செலுத்த வேண்டியது இருக்கலாம் .

பெல்லின் ஒரே அண்ணனும் வேலை இல்லாமல் இருந்தான் . பெல்மட்டுமே வேலை செய்து வந்தார் . நீ தானே குடும்பத்திற்கு ஆதரவு என்று தாய் அழுதாள் . என்னுடைய உயிரற்ற உடலின் மேல் நடந்து செல்லுவதானால் தீ சீனா செல்லலாம் என்று தாய் சொல்லி விட்டார் . தன் மனைவி யின் மனநிலையை அறிந்த பெல்லின் தகப்பனார் . இக்காரியத்தை மறுபடியும் பேச வேண்டாமென்று பெல்லுக்கு கட்டளையிட்டார் . ஜெபிக்கவும் , வேதத்தை நேசிக்கவும் , அழியும் ஆத்துமாக்களுக்கும் மிஷனெரிகளுக்கும் ஜெயிக்கும்படி கற்பித்த தாயே எதிர்ப்புத் தெரிவிக்கிறாரே என்ன செய்வ தென்று பெல் குழம்பிநின்றார் .

என்றாலும் எல்லாக் காரியங்களுக் காகவும் தீவிரமாக ஜெபித்தார் . இவ்வேளையில் பெல்லின் தாயார் புற்றுநோயால் மரித்து விட்டார் . மரிப்பதற்கு முன் தனது சிநேகிதியிடம் என் மகள் தெரிந்து கொண்ட பணி சிறந்தபணி என்று சொல்லி மரித்தார் . தனது தாயாரின் கடைசி வார்த்தை பெல்லை உற்சாகப்படுத்தியது . பெல் ஊழியத்திற்கு போகும் முன்னே அவரது தந்தைக்கு வழக்கிலிருந்து விடுதலை கிடைத்ததுடன் , அவரது சகோதரனுக்கும் நல்ல வேலை கிடைத்தது .

1926 " சீனா தேசத் துக்கு மிஷனெரியாகப்போன ஜான் என்பவருடன் பெல்லுக்கு திருமணம் நிச்சயமாக்கப்பட்டது . 1928 ஆண்டு அக்டோபர் 11ம் நாள் சீனாவுக்குப் புறப்பட்டார் . சீனா தேசத்தை அடைந்ததும் நவம்பர் 4 ' தேதி ஜாண் கூன் - உடன் இவரது திருமணம் சீனா தேசத்திலே நடந்தது . தனது வீட்டிலிருந்த மரத்தாலான அழகு பொருட்களை எல்லாம் ஒழித்து விட்டு சீனர்கள் பயன்படுத்துவதற்கு ஒப்பான பெஞ்சுகள் போன்றவற்றையே வீட்டில் பயன் படுத்தினார் . சீன மக்களிடம் இன் னும் அதிகம் நெருங்கி பழக வேண்டுமென்று பெல் விரும்பினார் . முதலில் அதிக கடினமாக 8 தெரிந்தாலும் காலப்போக்கில் சீனஎழை மக்களுடன் வாழ்ந்து , அவர்களுடைய எளிய வீட்டிலே , அருகிலே அமர்ந்து அவர்கள் கொடுக்கும் உணவைச் சாப்பிடவும் கற்றுக்கொண்டார் .

பகலில் வீடுகள் சந்தித்தும் , சாயங்காலத்தில் திறந்த வெளிக் கூட்டங்களில் நற்செய்தியைப் பிரசங்கித்தார் . சின மொழியை நன்கு கற்றுக்கொண்டவுடன் லிகமக்கள் வாழும் பகுதிக்கு மாற்றப்பட்டு , அங்கு ஊழியம் செய்ய ஆரம்பித்தார் .

1931 " ஆண்டு ஜப்பானுக்கும் சீனாவுக்கும் இடையே போர் மூண்டது . ஆகவே சிலகாலம் ஹாங்காங் சென்று தங்கிவிட்டு மறுபடியும் சீனா வந்து விசும்க்கள் மத்தியில் பணியினைத் தொடர்ந்தனர் . விசு சபை மலர்ந்தது . கொடூரக் குணமுடைய விசுக்கள் கிறிஸ்தவர்களான பிறகு வியத்தகு மாற்றம் அடைந்தது அநேகரை ஆச்சரியப்பட வைத்தது . மழைக்கால வேதாகமப்பள்ளி என்று மூன்று மாத வேதாகம் வகுப்புகளுக்கு ஏற்பாடு செய தார் . மழைக்காலத்தில் மக்களுக்கு வேலை இல்லாததால் இதில் வந்து படிக்க வசதியாக இருந்தது . வேதாகமப் பள்ளி நடத்த கட்டடம் ஒன்று கட்டப்பட்டது . அதற்கு எப்சிபா ( கடவுளுக்குப் பிரியமான ) என்று பெயரிட்டார் . லிசு மக்களுக்கு இவர் அளித்த பெருங்கொடை இது . இந்த பள்ளியின் மூலம் விசு விசுவாசிகள் சுவிசே ஆர்வமுடையவராயினர் .

சீனாவில் கம்யூனிச ஆட்சி பரவிக்கொண்டிருந்தது . சீனாவின் ஒவ்வொரு பகுதியாக கம்யூனிஸ்டுகள் பிடித்து தங்களது ஆட்சியின் கீழ் கொண்டு வந்து கொண்டிருந்தனர் . என்றாலும் இசபெல் தம்பதியினர் அங்கேயே தொடர்ந்து பணிபுரிந்தனர் . 1951 - ஆண்டு சீன உள்நாட்டு மிஷன் சீனாலை விட்டு அனைத்து மிஷனெரிகளை வெளியேறும்படி உத்தரவிட்டபோதும் தாய்நாடு செல்லாமல் பெல் தம்பதியினர் தாய்லாந்தில் குடியேறி , அங்குள்ள விசுக்களும் , மற்றும் வெள்ளைமியோ , நீலமியோ , வாசு , ஆக்கா ப ோன்ற மக்கள் மத்தியில் தொடர்ந்து பணி செய்தனர் . இவரது மகள் கேத்தரினும் மிஷனெரியாகச் சென்றார் . அதனைக்கண்டு தேவனை துதித்தார் 1957 ஆண்டு மார்ச் 20 நாள் பெல் கிறிஸ்துவின் சமூகத்தில் சேர்ந்தார் .

மரிக்கும் முன் தன் அருகில் நின்ற கணவனை அழைத்து மோட்சத்தின் பொன் மதில்களுக்கு வெளியே நான் என் தலையை நீட்டி விசு சபையை பார்த்துக் கொண்டிருப்பேன் என்று சொன்னார் .

இந்த படுவேதனை நேரத்தில் எனக்கு சமாதானம் தாரும் . என் வாழ்க்கையை உமக்குக் கொடுக்கிறேன் . எதுவேண்டுமானாலும் செய்வேன் , எங்கு வேண்டுமாயினும் செல்வேன் என்று சொல்லிவிட்டு அருண்டு படுத்துக்கொண்டார் . சீனாவில் கம்யூனிச ஆட்சி பரவிக்கொண்டிருந்தது . சீனாவின் ஒவ்வொரு பகுதியாக கம்யூனிஸ்டுகள் பிடித்து தங்களது ஆட்சியின் கீழ் கொண்டு வந்து கொண்டிருந்தனர் . என்றாலும் இசபெல் தம்பதியினர் அங்கேயே தொடர்ந்து பணிபுரிந்தனர் .

பெற்றோரின் எதிர்ப்பின் மத்தியில் கையிலிருந்து 70 டாலர் பணத்துடன் வெனிசுலா என்ற நகரத்திற்குப் புறப்பட்டார் ஒல்சன் .

நமது தலைமுறையில் தேவனுடைய அழைப்பிற்கிணங்கி , அவருடைய சித்தத்தைச் செய்ய முன்வந்த ஓர் இளைஞனை தேவன் - எவ்விதம் பயன் படுத்தினார் என்பதை புரூஸ் ஒல்சன் வாழ்விலிருந்து நாம் கற்றுக்கொள்ள முடியும் .

சிறுவயதிலேயே கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட ஒல்சன் , 15 - ம் வயதில் தென் அமெரிக்காவில் வாழும் கிறிஸ்துவை அறியாத , சுவிசேஷத்தால் சந்திக்கப்படாத மக்களைக் குறித்துக் கேள்விப்பட்டு ஜெபிக்கவும் . அப்பகுதியில் வாழும் மக்களைப் பற்றிய மூல விபரங்களைச் சேகரிக்கவும் தொடங்கினார் .

1961 - ம் ஆண்டு , அவருக்கு வயது 19 , தேவனுடைய அழைப்பின் நிச்சயத்தை உணர்ந்து , உடனே ஊழியத்திற்குப் புறப்பட்டார் .

பெற்றோரின் எதிர்ப்பின் மத்தியில் கையிலிருந்து 70 டாலர் பணத்துடன் வெனிசுலா என்ற நகரத்திற்குப் புறப் பட்டார் ஒல்சன் . வேகமாகக் கையில் இருந்த பணம் கரைய , தேவனையே முற்றிலும் சார்ந்திருந்தார் . தேவனுடைய வழிநடத்துதலின் பேரில் கராசால் நகரில் அத்நாட்டு சுகாதார அமைச்சரை சந்திக்க நேர்ந்தது , அவர் மூலம் தேவன் ஒல்சனுக்கு ஓர் வேலையைக் கொடுத்தார் . அங்கிருக்கும் போது ஒல்சன் ஸ்பானிய மொழியைக் கற்றுத்தேர்ந்தார் .

மோடி லோன் பழங்குடியினர் எவ்வித நாகரிகமுமற்றவர்களாய் , பிறமக்கள் அவர்களைச் சந்திக்க அனுமதிக்காதவர்களாய் வாழ்கின்றனர் எனத் தெரிய வந்தார் .

ஆனால் ஒல்சனுக்கு எப்பொழுதும் அவர்களின் நினைவே , அந்நேரத்தில் அந்தியர் அனைவரும் உடனடியாக வெனிசுலா நாட்டை விட்டு வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது . என்ன செய்வது என அறியாத ஒல்சன் விடுதி ஒன்றில் இர்வின் என்ற நபரைச் சந்தித்தார் . அவர் அந்நாட்டதிபரின் அந்தரங்கச் செயலர் . அவர் மூலம் தேவன் ஒல்சனுக்கு தென் அமெரிக்காவில் தங்கவும் , பழங்குடி மக்கள் மத்தியில் ஊழியம் செய்யவும் உதவினார் .

சில நாட்களிலேயே தன்னுடைய மிஷனெரிப் பயணத்தைத் தொடங்கிய ஒல்சனுக்கு உதவி செய்யவோ , வழிகாட்டவோ யாரும் முன்வரவில்லை , மறுநாள் ஒரு வாலிபனின் உதவியோடு மோடி வோன் பழங்குடியினரைத் தேடி அடர்ந்த காடுகளுக்குள் பயணப்பட்டார் ஒல்சன் . பலநாள் பயனத்திற்குப்பின் மோடி வோன் பழங்குடியினர் வாழும் பாதை இது எனக்கூறி காட்டினுள் ஓடி மறைந்துவிட்டான் அந்த வழிகாட்டி

முன்னேறிச் சென்ற ஓய்சனை நோக்கி பாய்த்துவந்த ஆறடி அம்பு ஒன்று அவரது தொடையை பதம் பாரித்தது . மயங்கி கிழேவிழுந்தார் .

கண் விழித்த போது பலர் ஈட்டியுடன் அவரைச் சூழ்ந்திருந்தனர் . மறுபடியும் அவரை கட்டியாக குத்த ஓங்கிய வாலியனை நடுந்த இன்னொருவன் ஓங்களை தமையனிடம் இழுத்துச் சென்றான் . தலையன் வேட்டைக்குச் சென்றிருந்த படியால் ஒல்சனை 55 அடி அகலமும் 100 அடி நீளமும் , 10 அடி உயரமுமான பிரமான்டக் குடிசையில் புல்லினால் ஆன தொட்டிலில் படுக்க வைத்தனர் . தலைவனின் வருகைக்காக இரண்டு நாட்கள் காத்திருந்தபோது , அவர் கடுமையான வயிற்றுவலியினால் அவதியுற்றார் . எனவே இரவோடிரவாக அங்கிருந்து தப்பி ஆற்றோரமாக சுமார் 10 மைல் தொலை தூரம் நடந்துவந்து அங்கங்களைப் பினால் மறுபடியும் மயங்கி விழுந்தார் . வேட்டைக்கு வந்த சிலரால் அவர் காப்பாற்றப் பட்டு , ஒரு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார் . இரண்டே வாரங்களில் நல்ல சுகம் பெற்று மறுபடியும் படி பரிசுப் பொருட்கள் , மருந்துகளோடு போடியோன் பழங்குடியினரைச் சந்திக்கச் சென்றார் .

மோடியோன் பழங்குடியினர் வாழும் கிராமத்நினருகே சென்று அவர்கள் செல்லும் பாதையில் சிரிய பரிசுப் பொருட்களை வைத்துவிட்டுகாத்திருந்தார் . எப்படியாவது அவர்களது நல்மதிப்பைப் பெற வாஞ்சித்தார் . சிலநாட்கள் கழித்து அவர் வைத்த பரிசுப் பொருட்களுக்குப் பதிலாக நீளமான துணி இரண்டு துண்டுகளாக கிழிக்கப்பட்டும் யுகா என்று அவர்கள் உண்ணும் கிழங்கு ஒன்று இரண்டாக வெட்டப்பட்டும் இருந்தது ,

மறுநாள் பிரயாணப்பட்டுச் சென்ற ஒல்சன் , ஒரு புதருக்குப்பின் ஐந்து பழங்குடி வாலிபர்கள் கையில் அம்புடன் நின்றதைக் கண்டார் . அவர்களைப் பார்த்த ஒவ்சன் பின்வாங்கினார் .

அவர்களோ அம்பைப் பூட்டி அசையாது நின்றனர் . பின்பு ஒலாம் மோடி லோன் வழக்கத்தின்படி புருவங்களை உயர்த்தி பாக்கம் கூறி , அவர்கள் சிரித்தபடி அவர் முன்வந்தனர் . அவர்கள் , முன்பு ஒல்சன் சென்று மோடி வோன் கிராம வாரியர்கள் , அவர்கள் தங்களுக்குள் பேசிய வார்த்தை காள மனப்பாடம் செய்திருந்ததால் , தானும் அதை திரும்பத் திரும்ய கூறினார் . - - பொருள் தெரியாத அவருடைய வார்த்தையின் அர்த்தம் உடனே தலைவனிடம் கூட்டிக்கொண்டு போ என்பதாகும் . எனவே அவர்கள் ஒல்சனை அழைத்துக் கொண்டு பயணப்பட்டனர் . இடையில் ஒல்சன் மஞ்சள்காமாலை நோயினால் அதிகம் அவதியுற்றார் .

மயங்கி விழுந்த ஒல்சனை தூக்கிக் கொண்டு தலைவனிடம் சென்றனர் . ஒரு மனிதன் தன் இனத்தாரை விட்டு வேறு இடத்தில் மரித்தால் அவன் சபிக்கப்பட்டவன் என நம்பும் மோடிலோன் தலைவன் , அவனைக் கொல்லாமல் தானாகவே சாகட்டும் என அவர்கள் வாழும் மாபெரும் பந்தல் போன்ற வீட்டில் படுக்க வைத்தான் . மறுபடியும் அனைவரும் தூங்கும் போது அங்கிருந்து " மெல்ல மெல்ல எழுந்து வெளியே வந்த அவர் . ஒரு ஹெடாப்டர் பறப்பதைக் கவனித்தார் . வெட்ட வெளியில் வெள்ளை மனிதன் படுத்திருப்பதைக் கண்ட விமானி , தாழவந்து அவரைக் காப்பாற்றினார் . இதை ஒளிந்திருந்து பார்த்த மக்கள் ஆகாய ராட்சசக் கழுகு அவரைத் தூக்கிச் சென்று விட்டது என எண்ணினார்கள் . அடுத்த வாரமே நல்ல சுகம் பெற்று மறுபடியும் அதே கிராமத்திற்குச் சென்றார் . அங்கு கண்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்து கொடுத்தார் . கண்நோய் சுகமானதுமே , அக்கிராமத் தலைவன் மற்றும் அனைவரும் அவருக்கு நண்பர்கள் ஆனார்கள் .

இதனால் இவர் ஒரு மந்திரசக்தி படைத்தவர் , மறுபடியும் சாகாமல் வந்துள்ளார் என மரியாதை செய்தனர் . ஒல்சன் பயன்படுத்திய சாதாரணமருந்துகள் அம்மக்களுடைய நோய்களில் இருந்து விடுதலை தந்ததால் மோடிலோன் பழங்குடியினர் மேலும் அவரை நம்புவதற்கும் , ஏற்றுக் கொள்வதற்கும் ஏதுவாக அமைந்தது . மோடிலோன் மக்கள் மகா பெரிய ஒரே குடிசையில் அனைத்து கிராம மக்களுடன் வசிப்பார்கள் .

குடிசையினுள் ஒவ்வொரு குடும் பத்திற்கும் தனித்தனி இடம் கொடுக்கப்பட்டு , சிறுசிறு தடுப்புகளால் பிரிக்கப்பட்டிருக்கும் . அனைவரும் நீண்ட மரக்கொடிகளால் செய்யப்பட்ட தொட்டில்களில்தான் படுப்பர் . கடவுளைப் பற்றி அவர்களது நம்பிக்கை என்ன வெனில் டிபோடிபோ என்பவர் தான் கடவுள் . அவர் நட்சத்திரங்களுக்குப் பின்பு உள்ள மகா பெரிய குடிசையில் வாழ்கிறார் . இக்குடிசைக்கு இஸ்கோரிடா என்பது பெயர் ,

அங்கு செல்ல அனைத்து மக்களுக்கும் மிகுந்த ஆவல் , ஆனால் ஒருவருக்கும் அங்கு செல்ல வழி தெரியாது என்பதாகும் . இதை மையமாக வைத்து ஒல்சன் டி போடிபோ அதாவது கடவுள் மிகவும் அன்பானவர் . அவர் அனைத்து மோடிலோன் மக்களும் தன்னுடன் வாழ ஆசைப்படுகிறார் .

எனவே தன்னுடைய குமாரனாகிய கிறிஸ்து இயேசுவை இவ்வுலகிற்கு அனுப்பினார் . அவர் நம்முடைய பாவங்களுக்காக மரித்து , உயிர்த்தெழுந்தார் . நீங்கள் பாவங்களை அறிக்கையிட்டு அவரை ஏற்றுக்கொண்டால் டிபோ டிபோவின் குடிசைக்குச் செல்லலாம் எனக்கூறினார் .

அவரது பிரசங்கத்திற்கு உடனடியாக விளைவைக் காண முடியவில்லை . காரணம் மோடிலோன் மக்கள் மத்தியில் பாவம் என்ற சொல் காணப்படவில்லை , எனவே அவர்களது தீய பழக்க வழக்கங்களை ஒவ்வொன்றாகச் சுட்டிக்காட்டிய ஒல்சன் இப்படிச் செய்வது டிபோடி போவுக்குப் பிடிக்காது எனக்கூறி பாவத்தை உணர்த்தினார் . படிப்படியாக அவருடைய சொல்லிற்கு அம்மக்கள் கீழ்ப்படிந்தனர் . முதன் முறையாக ஒல்சனை அம்பெய்து கொல்ல முயன்ற வாலிபன் கொராய்ரா மனந்திரும்பி கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டான் . அவனை கொலம்பியா நாட்டிற்குத் தன்னுடன் அழைத்துச் சென்று , அங்குள்ள கிறிஸ்தவர்களிடம் பல உதவிகளைப் பெற்று ஒரு மோட்டார் படகுடன் பல பொருட்கள் , மருந்துகள் , உபகரணங்களுடன் திரும்பினார் .

அந்த இளைஞனுக்கு வேதத்தை இன்னும் ஆழமாகக் கற்றுக் கொடுத்ததோடு மருந்துகளைப் பயன்படுத்த , ஊசிபோட , இயந்திரங் களை இயக்கவும் கற்றுக்கொடுத்தார் .

கொராய்ராவைத் தொடர்ந்து ஏராளமான மோடிலோன் மக்கள் கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளத் தொடங்கினர் . ஒல்சனின் 28 ஆண்டுகாலப் பணிகளின் மூலம் 10 இடங்களில் சுகாதார நிலையங்களும் , 15 வேளாண்மைத் துறை மையங்களும் , 8 இடங்களில் விளைபொருள் விற்பனைச் சந்தைகளும் , 12 பள்ளிகளும் , பல ஆலயங்களும் உருவாகின .

ஆண்டவர் மீது இருந்த விசுவாசமும் , அவருக்குக் கீழ்ப்படிதலும் ஒல்சனை ஒரு சாதனையாளனாக மாற்றியது . அர்ப்பணமிருந்தால் நீங்களும் தேவனால் வல்லமையாய்ப் பயன் படுத்தப்பட முடியும் .

கிறிஸ்துவை நான் நேசிக்கத் துவங்கியபோதே அருட்பணி செய்யவேண்டும் என்பதைத் தவிர் மற்றவை அனைத்தும் இரண்டாம் பட்சமாக ஆகிவிட்டன என்று வெலன் குறிப்பிட்டுள்ளார் .

ஹலன் ரோஸ்னியர் 1925 - ம் ஆண்டு ஹெர்ட்போர்ட்வியரில் முபா ஹெஸ்விபரி என்ற இடத்தில் பிறந்தார் . கேம்ப்ரிட்ஜ் * பல்கலைக் கழகத்தில் படித்து வந்த போது , மெய்யான விசுவாசம் கொண்ட சில மாணவிகளின் அற்புதமான சாட்சியின் வாழ்க்கை இவரைச் சிந்திக்கும்படி செய்தது . இருபது வயதான இவர் தனது போலியான வாழ்க்கையை எண்ணிப் பார்த்து மனம் கலங்கினார் . தானும் மெய்யான சமாதானத்தைப் பெற வேண்டுமென்ற வாஞ்சையால் , கிறிஸ்மஸ் விடுமுறையின் போது , வேறெதிலும் அதிகக் கவனம் செலுத்தாது ஒவ்வொரு நாளும் வேதாகமத்தைக் கவனமாகப் படிக்கத் துவங்கினார் . இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மைச் சுத்திகரிக்கும் . என்ற வசனம் அவரது இருதயத்தைத் தொட்டன .

இவர் மனந்திரும்பி , தனது மாய்மாலமான வாழ்க்கையை அறிக்கையிட்டு , கிறிஸ் துவைத் தன் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டார் .


மீஷனெரியாகச் செல்ல வாஞ்சை

கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட ஹெலன் காலப்போக்கில் தான் ஒரு மிஷனெரி ஆக வேண்டுமென்ற வாஞ்சையைப் பெற்றார் . கிறிஸ்துவை நான் நேசிக்கத் துவங்கிய போதே அருட்பணி செய்ய வேண்டும் என்பதைத் தவிர மற்றவை அனைத்தும் இரண்டாம் பட்சமாக ஆகிவிட்டன என்று ஹெலன் குறிப்பிட்டுள்ளார் .


மருத்துவப் பயிற்சி பெற்றார்

ஹெலன் தனது மிஷனெரி பாரத்தை தன் தகப்பனாரிடம் தெரிவித்தபோது , அவர் அதிர்ச்சியடைந்தார் . தன்னுடைய மகள் ஒரு மருத்துவராக வேண்டும் என்பதே அவருடைய விருப்பமாக இருந்தது . தந்தையின் விருப்பத்தைத் தட்டிக்கழிக்க ஹெலன் விரும்பவில்லை , எனவே அவர் மருத்துவப் பயிற்சி பெற்றாலும் , மருத்துவ அருட்பணியாளராக ஆண்டவருக்கு ஊழியம் செய்ய வேண்டுமென்று தீர்மானித்தார் . ஜெபத்தில் காத்திருந்த அவர் அதுவே தன்னைக் குறித்த தேவனுடைய சித்தம் என்பதைத் திட்டமாக உணர்ந்தார் .

நியூஹாம் கல்லூரியில் படித்து , 1951 ம் ஆண்டு , தனது 21 - ம் வயதில் மருத்துவத்தில் பட்டம் பெற்றார் . உடனடியாக ஆப்பிரிக்க அருட்பணி மையத்துக்கு விண்ணப்பம் அனுப்பி னார் . ( தற்போது இந்த மையம் உலகளாவிய நற்செய்தி அற நிலையம் என்ற பெயரில் உலகமெங்கும் அருட்பணி அமைப்புகளை உருவாக்கி வருகிறது ) .


ஆப்பிரிக்காவுக்குச் சென்றார்

ஆப்பிரிக்க அருட்பணி மையம் இவரை காங்கோ நாட்டில் இபாம்பி என்ற இடத்துக்குச் செல்லும்படிச் சொன்னது . முன் பின் தெரியாத இடமாயிற்றே அவர்களது மொழி தெரியாதே என்பொம் எண்ணித் தயங்காமல் , தன்னை முழுவதுமாகத் தேவனுடையகரங்களில் ஒப்பு கொடுத்து , விசத்தோடு புறப்பட்டார் தனது இருபத்தெட்டாவது வயதில் ஆப்ரிக்கா சென்ற டாக்டர் ஹேயன் பொப்பியில் ஒரு சிறிய மருத்துவ மனையை இயக்கினார் .

அவருக்கு உதவியாக ஒருவருமேயில்லை . மொழி பிரச்சனையும் அவருக்குப் பெரிய இடையூராகக இருந்தது . போது மான மருந்துகளும் கிடைக்கவில்லை இல்வளவு பிரச்சனைகளும் அவருடைய ஆவிக்குரிய வளர்ச்சிக்கு துண்டு கோலாக அமைந்து விட்டன . ஹெலன் இன்னும் அதிகமாகத் தேவனைச் சார்ந்து செயல்படத் துவங் கினார் . தன்னிடம் சிகிச்சைக்காக வந்தவர்களிடம் கிறிஸ்துவைப் பற்றியும் அவர் அருளும் ஆயிக்குரிய குணமாகுதலைப் பற்றியும் ஜெபத்தோடு எடுத்துக் கூறினார் . அதுவரை நற்செய்தியைக் குறித்துக் கேள்விப்பட்டிராத பலர் கிறிஸ்துவை அறிந்து கொள்ள தேவன் கிருபை செய்தார் ஹெலன் தனது ஊழியத்தைத் துவக்கி ஆறுமாதம் கழித்து பதினாறு வயதான ஜான் பாக்காமா , தனக்கு மருத்துவப் பயிற்சியாக்கும்படி ஹெலனிடம் கேட்டுக்கொண்டார் .

அந்த இளைஞனின் வாஞ்சையினால் உள்ளத்தில் தொடப்பட்ட ஹெலன் , மேலும் பல உள்நாட்டுவாசிகளுக்குப் பயிற்சி கொடுத்தால் என்ன ? என்று சிந்திக்கத் துவங்கினார் . இதற்கு வசதியாக உள்ளூர்வாசிகளின் தாய்மொழியாகிய ஸ்வாஹிலி மொழியை , ஜாண் மங்காடியா மூலம் தொலன் கற்றுக் கொண்டார் . உள்ளூர் மொழியை நன்றாகப் பேச கற்றுக் கொண்ட ஹெலன் பயிற்சி பெற்ற உள்ளூர்வாசிகளின் துணையோடு 32 படுக்கைகள் கொண்ட ஒரு மருத்துவமனையையும் கட்டி முடித்தார் . வசதியற்ற காட்டின் நடுவே 5 துணை செவிலியர்களுடன் அமைக்கப்பட்ட இந்த மருத்துவமனை , ஒரு பெரிய சாதனையே , தொடர்ந்து ஐந்தாண்டுகள் காங்கோ நாட்டில் கடுமையாக உழைத்து வந்த ஹெலன் சரீரப்பிரகாரமாசகத் தளர்ந்து போனார் . எனவே ஓய்விற்காகவும் , உயர் படிப்பிற்காகவும் தாய்நாடு சென்றார் .

இரண்டாண்டுகள் இங்கிலாந்தில் தங்கிய ஜெஹலன் அறுவைச் சிகிச்சை செய்வதில் மேற்பட்ட படிப்பையும் பயிற்சியையும் சிறப்பாக முடிந்தார் . சரீரப் பிரகாரமாகவும் , ஆவிக்குரிய ரீதியாகவும் புத்துணர்யைப் பெற்றிருந்த டாக்டர் ஹெலன் 1960ம் ஆண்டின் மத்தியில் ஆப்பிரிக்கா திரும்ப எண்ணியபோது காங்கோ நாட்டின் நிலைமை மிகவும் மோசமாகி விட்டிருந்தது . நீண்ட காலமாகப் பெல்ஜியம் நாட்டுக்கு அடிமைப்பட்டுக் கிடந்த மக்கள் தங்கள் விடுதலையை எதிர்பார்த்துக் காத்திருந்த வேளை அது . காங்கோ நாட்டில் ஏற்பட்ட கலகங்களுக்கும் , வன்முறைகளுக்கும் தப்பி பிழைக் கும்படி வெள்ளைக்காரர்கள் நாட்டைவிட்டு வேகமாக வெளியேறிக் கொண்டிருந்தார்கள் . இப்படிப் பட்ட வேளையிலும் துணிவோடு அந்த நாட்டுக்குச் சென்றார் .


கொடுமைகளுக்கு ஆளானார்

டாக்டர் ஹெலன் இவர் சென்ற 3 வாரத்துக்குள் உள்நாட்டு போர் , காங்கோவில் துவங்கியது . வெள்ளையர் மீதான வன்முறை அதிகரித்தது . மிஷனெரி பணித்தளங்கள் மூடப்பட்டன . மிஷனெரிகளைத் திரும்பி வரும்படி அருட்பணி மையங்கள் கட்டளை யிட்டன . ஆனால் ஹெலன் திரும்பிச் செல்ல மறுத்து விட்டார் . அடுத்த நான்கு ஆண்டுகள் புரட்சி படை வீரர்களின் பல சித்திரவதைகளை விசுவாசத்தோடு சகித்துக் கொண்டார் . இவர் தாக்கப்பட்டார் . அடிக்கப்பட்டார் . அவமானப்படுத்தப்பட்டார் . இறுதியாக சிம்பா படைவீரர்களால் கைது செய்யப்பட்டார் .

ஐந்து மாதங்கள் ஹெலன் சிறை வைக்கப்பட்டார் . என்றாலும் கிறிஸ்துவைப் பற்றிக் கூறி , தன்னுடைய சமாதானத்தை அவர்களோடு பகிர்ந்து கொண்டார் .

தன்னைப் போன்று சரீரப்பிரகாரமாகத் தாக்குதலுக் குள்ளாகி இருந்த மற்ற பெண்களுக்கு ஆறுதலான வேத வசனங்களைக் கூறி கிறிஸ்துவுக்குள் வழி நடத்தினார் . கொடுமைகளுக்கு ஆளான அந்த கைதிகளின் முகாமில் துதிப்பாடல்கள் எழுந்தன .

தன்னைப் பிடித்துச் சித்திரவதை செய்தவர்களின் மொழியை ஹெலன் அறிந்திருந்த படியால் , அவர்களிடம் கிறிஸ்துவைப் பற்றித் துணிவோடு எடுத் துக் கூறினார் . முன்னர் எப்போதும் இல்லாத வகையில் இந்தக் கொடூரமான சூழ்நிலையில்தான் தற்செய்தியைக் கூறுவதற்கான வாய்ப்பை அதிக மாகப் பெற்றுள்ளேன் என்று கூறுகிறார் .


விடுவிக்கப்பட்டார்

1964 - ம் ஆண்டு இறுதியில் சர்வ தேசப்படையினர் ஹெலனை சிறையி லிருந்து விடுவித்தனர் . புத்தாண்டு தினத்தன்று ஹெலன் விமானம் மூலம் இங்கிலாந்து திரும்பி வந்தார் .

சரீரத்தில் வன்முறையினால் அதிகம் பாதிக்கப்பட்ட ஹெலன் , மறுபடியும் ஊழியம் செய்ய காங்கோவுக்கு செல்லத் தயங்கினார் . ஆனால் ஜாண் மங்காடி , மாவிடமிருந்து வந்த ஒரு கடிதம் அவருடைய முடிவை மாற்றியது .


காங்கோ நாட்டுக்குத் திரும்பினார்

ஹெலன் உருவாக்கின மருத்துவ மனை மிகவும் மோசமான நிலை யில் இருக்கிறது என்றும் கவனிப் பாரில்லாமல் நோயாளிகள் தவிக்கிறார்கள் என்றும் உருக்கமான கடிதமொன்றை ஜாண் மங்காடிமா எழுதி அனுப்பியிருந்தார் . கடிதத்தைப் படித்த ஹெலன் , அங்கே திரும்பிச் சென்று நிலைமையைச் சீர் செய்ய வேண்டும் என்ற பாரத்தைப் பெற்றார் . தன்னை விசுவாசத்தில் பலப்படுத்தும்படி ஹெலன் தேவனுடைய உதவியை நாடினார் .


நற்செய்திப் பணி மருத்துவ மையம்

தனது 41 - வது வயதில் 1966ம் ஆண்டு ஹெலன் மறுபடியுமாக காங்கோ நாட்டுக்குத் திரும்பினார் . டாக்டர் படிப்பை முடித் திருந்த ஜாண் மங்காடியா , பருத்துவமனையின் முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டிருந்ததைக் கண்டு ஹெலன் மகிழ்ச்சியடைந்தார் . விசுவாசிகள் , தங்கள் உடைமைகள் அனைத்தையும் கலவரங்களின் போது , பறி கொடுத்திருந்தாலும் , தங்கள் விசுவாசத்தில் பின்வாங்கவில்லை என்பதைக் கண்டு தேவனைத் துதித் தார் , இவைகள் அவரை மறுபடியும் உற்சாகத்தோடு செயல்பட வைத்தது . ஒரு நற்செய்திப் பணி மருத்துவ மையத்தை உருவாக்கினார் . இந்த மையத்தில் ஒரு மருத்துவப் பயிற்சிக் கல்லூரி , அருட்பணி மருத்துவர்கள் வந்து செல்ல ஒரு விமான ஓடுபாதை மற்றும் வட கிழக்கு காங்கோ காட்டுப் பகுதியில் நான்கு சிறு மருத்துவமனைகள் ஆகியவற்றை அமைத்தார் . பல்வேறு அருட்பணி அமைப்புகளின் மருத்துவ முயற்சி களை ஒருங்கிணைப்பதும் , பயிற்சிக் கல்லூரிக்கு அரசு அதிகாரத்தைப் பெறுவதுமே ஹெலனின் நோக்கமாக இருந்தது . விசுவாசத்துடன் செயல்பட்டார் . பத்தாண்டுகளுக்குள்ளாக ஹெலனின் 24 ஆண்டு காலக்கனவுகள் நிறைவேறும்படி தேவன் கிருபை செய்தார் . நாடெங்கும் ஒன்றோடொன்று தொடர்பு கொண்ட சிறு மருத்துவமனைகள் நிறுவப்பட்டன .

1971 - ம் ஆண்டு டாக்டர் ஜாண் மங்காடிமாவை மருத்துவமனையின் இயக்குநராக ஹெலன் நியமித்தார் . இவ்வாறு உள்நாட்டு விசுவாசிக்கு தலைமைப் பொறுப்பைக் கொடுத்தார் . அதே நாள் பயிற்சிக் கல்லூரிக்கு அரசு அங்கிகாரமும் கிடைத்தது . அதற்காக தேவனைத் துதித்தார் . இரண்டு ஆண்டுகள் கழித்து டாக்டர் ஹெலன் தனது 48 - வது வயதில் காங்கோ நாட்டிலிருந்து விடைபெற்றார் .


அறைகூவல் விடுத்து வருகிறார்

காங்கோ நாட்டை விட்டுவந்த போதிலும் ஹெலன் தனது அருட்பணி ஊழியத்தைக் கைவிடவில்லை . உலக அருட்பணி அமைப்பின் பிரதிநிதியாக உலகெங்கும் சென்று விசவாசமுள்ள வாலிபர்களும் , இளம் பெண்களும் அருட்பணி செய்ய முன் வர வேண்டுமென்று அறைகூவல் விடுத்து வருகிறார் .

சுவிசேஷத்தை மற்றவர்களும் அறியச் செய்வதற் காகவே நாம் இந்தக் குறுகிய கால வாழ்க்கையைப் பெற்றுள்ளோம் என்பதே அவரது அறைகூவல் . மருத்துவப் பட்டதாரியான இவர் தன் வாழ்வை கிறிஸ்துவை அறியாதோருக்காக அர்ப்பணித்து ஆற்றிய பணியும் , நம் காலத்தில் வாழும் இவரதுக் வாழ்வும் நமக்குப் மாபெரும் சவால் அல்லவா ?

சருவ லோகாதிபா, நமஸ்காரம்! சருவ சிருஷ்டிகனே, நமஸ்காரம்! தரை, கடல், உயிர், வான் சகலமும் படைத்த தயாபர பிதாவே, நமஸ்காரம். கிறிஸ்தவர்கள் அதிகமாய் விரும்பி பாடும் இந்த துதிப் பாடலை எழுதிய அருள் திரு. மகாராஜன் வேதமாணிக்கம். இவர் கன்னியாகுமரி மாவட்டத்தின் முதல் கிறிஸ்தவர் எனும் பெருமைக்குரியவர். வேதமாணிக்கம் தேசிகரை அறியாத மக்கள் கன்னியாகுமரி மாவட்டத்திலே இல்லை எனலாம்.

இந்த மாவட்டம் 18ம் நூற்றாண்டில் திருவிதாங்கூர் மாகாணம் என்று அழைக்கப்பட்டது. அந்த நாட்களில் கல்வியறிவு பெற்றிராத மக்கள் எண்ணிக்கைக்கு அடங்கா கடவுள்களை வழிபட்டு வந்தனர். கீழ் ஜாதி பெண்கள் மேலாடை அணியக் கூடாது. கணவர் இறந்தால் மனைவிகளும் தீயில் விழுந்து மரிக்க வேண்டும் போன்ற பல சிக்கலான சமூக அமைப்புகளையும், ஜாதிச்சடங்குகளாலும் நிறைந்து காணப்பட்டது இந்த குமரி மாவட்டம். 19ம் நூற்றாண்டில் கிறிஸ்தவம் கன்னியாகுமரி பகுதிக்கு வந்த போதே சிக்கலான சமூக அமைப்புகள் சுமூகமான விடுதலையைக் கண்டது. நாகரீகமும் நலமான வாழ்வு முறையும் மக்களிடம் துளிர்விட தொடங்கியது. குட்டி தெய்வங்களுக்கு முன் கூனிக்குறுகிக் கிடந்த மக்கள், கிறிஸ்து இயேசுவுக்குள் தலை நிமிர ஆரம்பித்தார்கள். பெண்கள் மேலாடை அணிய அனுமதிக்கப்பட்டனர்.

பல கிறிஸ்தவ தேவ ஆலயங்கள் எழும்பினது. மறைதிரு. W.T. றிங்கல்தௌபே மற்றும் மறைத்திரு சார்லஸ் மீட் போன்ற மிஷனரிகளின் வருகையால் பல்வேறு பள்ளிகளும், கல்லூரிகளும் தோன்றின. ஒரு காலத்தில் படிப்பறிவு பெற்றிராத குமரி மாவட்டம் இன்றைக்கு 87.6 % படிப்பறிவு பெற்ற மக்களால் நிரம்பியுள்ளது. இத்தகைய மாபெரும் சமூக உயர்வுக்கு காரணமாய் அமைந்த வேதமாணிக்கம் தேசிகரைப் பற்றி கிறிஸ்தவர்களாகிய நாம் நிச்சயம் அறிந்திருக்க வேண்டும். 1750-ம் ஆண்டுக்கு பின், மதுரநாயகம்-தேவாயி தம்பதியினருக்கு இரண்டாவது மகனாக மயிலாடி என்ற ஊரில் பிறந்தார் வேதமாணிக்கம்.

ஐந்து வயதிலேயே தந்தையை இழந்த வேதமாணிக்கத்தை அவரது தாயார் தெய்வ பக்தியில் வளர்த்தார். சிறுவயதிலேயே சிவ பக்தராகவும், உண்மை, ஆன்மிகம் ஆகியவற்றை தேடும் உயர்ந்த நாட்டம் உடையவராகவும் இருந்தார். 1799ம் ஆண்டு சிதம்பரம் என்ற இடத்தை நோக்கி புண்ணிய பயணம் மேற்கொண்டார். கடவுளை சந்தித்தே ஆகவேண்டும் என்ற நோக்கத்துடன் சென்றார், அங்கு நடைபெற்ற வழிபாடுகள், அவருக்கு வெறுப்பையும், ஏமாற்றத்தையுமே தந்தன. இதனால் மனமுடைந்த அவர் ஓர் தூணில் சாய்ந்து தூங்கிவிட்டார். அப்பொழுது வெண்ணங்கி தரித்த ஒரு தூதன் கனவில் தோன்றி, “நீ செல்ல வேண்டிய இடம் வேறு, புறப்படு, வழிகாட்டுகிறேன்” என்று கூற, அந்த சத்தத்திற்கு கீழ்படிந்து எழுந்து புறப்பட்டார். தஞ்சாவூர் வந்த பொழுது “கோலாப் ஐயர்” மூலமாக மெய் தெய்வமாகிய இயேசுவைப் பற்றி அறிந்து கொண்டார். கனவில் தோன்றிய தூதன் தன்னை சரியான வழியில் நடத்தியிருப்பதை எண்ணி வியப்படைந்தார். சத்தியத்தை அறிந்த அவர் காலம் தாழ்த்தாமல் “கோலாப் ஐயர்” மூலமாக ஞானஸ்நானம் பெற்று புதிய மனிதனானார். 20-வது வயதில், மத்திகோடு சபையைச் சார்ந்த இராகேலை மணம்புரிந்தார் வேதமாணிக்கம்.

தனது உயர் படிப்பை முடித்து அரசு அதிகாரியாக வேலையிலமர்ந்தார். பக்தி, விசுவாசம், மற்றும் சிறப்பாக, ஜெபம் ஆகியவற்றில் அதிக வாஞ்சையுள்ளவராக விளங்கினார். உலகப் பொருளுக்கோ, பணத்திற்கோ மனதில் இடம் கொடாது, மண்தரை போட்ட, ஓலை வேய்ந்த குடிசை வீட்டில் வாழ்ந்து வந்தார். ஒரு நாள் ஆங்கிலேயரான அவரது மேலதிகாரி, அவரை நோக்கி, “வேத மாணிக்கம், நீ வேதம் ஒத வேண்டியவன்; இங்கு எப்படி வேலை செய்யலாம்?” என்று கேட்டார். இக்கேள்வி வேதமாணிக்கத்தின் உள்ளத்தில் பதிந்தது. ஆழ்ந்து சிந்தித்த வேதமாணிக்கம், நற்செய்திப் பணியில் கொண்ட ஆர்வத்தால், உடனே அரசு வேலையை இராஜிநாமா செய்து விட்டு, மிஷனில் ஆசிரியராகவும், பின்னர் மிஷன் பள்ளிகளின் ஆய்வாளராகவும் பணியாற்றினார். சிறிது காலம் மத்திகோடு சபை உபதேசியராக ஊழியம் செய்தபின், 1912-ம் ஆண்டு கல்லுக்கூட்டம் திருச்சபைப் போதகரானார்.

பல பாடல்களை இயற்றி, இன்னிசையுடன் நற்செய்தி அளித்து வந்தார். தன் உறவினர்கள் அனைவருக்கும் கிறிஸ்துவைப் பற்றி அறிவித்து, அவர்களையும் ஞானஸ்நானம் பெற செய்தார். தன்னை ஒறுத்து ஊழியம் செய்த போதகர் வேதமாணிக்கத்தின் ஆலய ஆராதனையில், மக்கள் திரள் கூட்டமாகப் பங்கேற்றனர். அவர் வாலிபர்களை நல்வழிப் படுத்த “சுவிசேஷப் படையெழுச்சி,” என்ற திறந்த வெளிக் கூட்டங்களை நடத்தினார். ஞாயிறு தோறும் மாலை நேரத்தில், பெண்களுக்குச் சிறப்பு வேதப் பயிற்சிக் கூட்டங்களை, வீடுகளில் நடத்தினார். கண்ணியமும், நேர்மையும் நிறைந்த போதகர் வேதமாணிக்கம், ஊர்ப் பிரச்சனைகளைத் தீர்க்கும் ஊர்க்கூட்ட நடுவராகவும் சமுதாயப் பணி செய்தார். ஆண்டவரின் ஊழியப் பாதையில் தன்னுடையது அனைத்தையும் அர்ப்பணம் செய்த வேதமாணிக்கத்தின் குடும்பத்தை ஆண்டவர் ஆசீர்வதித்தார்.

அவரது மூன்று பையன்களுக்கும், மூன்று பெண்பிள்ளைகளுக்கும், தேவன் நல்ல படிப்பு, வேலை, மற்றும் இசை ஞானத்தைத் தந்தார். வயலின் தான் அவர்களின் குடும்ப வாத்தியம். அதில் அவர்கள் அனைவரும் மேதைகளாக விளங்கினார்கள். எனவே, குடும்பமாகப் பல இடங்களுக்குச் சென்று, நற்செய்திக் கூட்டங்கள் மூலமாக கிறிஸ்துவை அறிவித்து வந்தனர். மேலும் ஜெர்மானிய மிஷனரி W.T. றிங்கல்தௌபே அவர்களை கன்னியாகுமரிக்கு அழைத்து கிறிஸ்துவ பணியை செய்ய உருந்துனையாக இருந்தார். பின்னர் இங்கிலாந்து மிஷனரி சார்லஸ் மீட் என்பவருக்கும் ஊழியத்தில் துனையாக இருந்தார்.

1827-ம் ஆண்டு, அருள்திரு. வேதமாணிக்கம் மார்த்தாண்டத்திலுள்ள தனது மனைவியின் தங்கை வீட்டிற்குச் செல்ல பஸ்ஸில் ஏறும்போது தவறி விழுந்ததில், பேருந்தின் சக்கரம் அவரது காலில் ஏறிக் காயம் ஏற்பட்டது. அத்துடன் பயணத்தைத் தொடர்ந்த அவர், மார்த்தாண்டத்தில், மூன்றாம் நாளில் மரணமடைந்தார். அவர் இயற்றிய, “ஆ! இன்ப காலமல்லோ” “ஜீவ வசனம் கூறுவோம்,”என்ற பாடல்களும், திருச்சபைக் கீர்த்தனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. இயேசு தமிழ் மக்களை அதிகம் நேசிக்கின்றார் என்பதற்கு வேதமாணிக்கம் தேசிகருடைய வாழ்க்கை ஓர் சான்றாகும். வேதமாணிக்கம் கர்த்தருடைய சமூகத்தில் இளைப்பாறினாலும் அவர் எழுதிய பாடல்கள் இன்றைக்கும் நம்முடைய இருதயத்தில் தவளுகின்றன. கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்தவர்கள் இன்றைக்கு அதிகளவில் காணப்படுவதற்க்கு வேதமாணிக்கம் தேசிகர் தன்னுடைய வாழ்க்கையை கிறிஸ்துவின் கரத்தில் அர்ப்பணித்தார்.

நீங்களும் வாழ்கையை கர்த்தரிடம் அர்ப்பணித்து, அவருக்கு பிரியமாய் வாழ்ந்தால் உங்களைகொண்டும் கர்த்தர் பெரிய காரியங்களை செய்வார். ஜெபம்: எங்களை அதிகமாய் நேசித்து வழி நடத்தி வரும் இயேசுவே, உம்முடைய கிருபைக்காய் நன்றி. வேதமாணிக்கம் தேசிக்கருக்கு தூதன் மூலம் கனவில் தோன்றி உம்மை வெளிப்படுத்தினது போல எனக்கும் உம்மை வெளிப்படுதினதற்க்காய் நன்றி. நானும் உமக்காய் ஊழியம் செய்து உமக்கு பிரியமாய் வாழுவேன். உமக்காய் சாதிக்க என்னை உமது கரத்தில் தருகிறேன் நல்ல பிதாவே. ஆமேன்..