Saturday, 26 March 2016

இயேசு கிறிஸ்துவின் மரணம்



ரோமர் 5: 12  ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று. 

ரோமர் 5: 17  அல்லாமலும், ஒருவனுடைய மீறுதலினாலே அந்த ஒருவன்மூலமாய், மரணம் ஆண்டுகொண்டிருக்க, கிருபையின் பரிபூரணத்தையும் நீதியாகிய ஈவின் பரிபூரணத்தையும் பெறுகிறவர்கள் இயேசு கிறிஸ்து என்னும் ஒருவராலே ஜீவனை அடைந்து ஆளுவார்களென்பது அதிக நிச்சயமாமே. 

ரோமர் 5: 21  ஆதலால் பாவம் மரணத்துக்கு ஏதுவாக ஆண்டுகொண்டதுபோல, 

கிருபையானது நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் நீதியினாலே நித்தியஜீவனுக்கு ஏதுவாக ஆண்டுகொண்டது. 

1. எல்லாருக்காகவும் ஒருவரே மரித்திருக்க எல்லாரும் மரித்தார்கள். 2கொ5:14. 

2. எல்லாரையும் மீட்கும் பொருளாகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார் 1தீமோ2:6. 

3. ஒவ்வொரு வருக்காகவும் மரணத்தை ருசிபார்க்கும்படிக்கு. எபிரேயர் 2:9 

4. பிழைத்திருக்கிறவர்கள் இனி தங்களுக்கென்று பிழைத்திராமல் தேவனுக்கென்று பிழைக்கும்படி அவர் எல்லாருக்காகவும் மரித்தார்.  2கொ5:15. 

5.  நாம் பெலனற்றவர்களா யிருக்கையில்  அகக்கிரமகாக இயேசு கிறிஸ்து மரித்தார். ரோமர் 5:6 

6. இயேசு கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே தேவன் நம்மேல்வைத்த அன்பை விளங்கப்பண்ணினீர்கள். ரோமர் 5:8 

7. இயேசு கிறிஸ்து வினுடைய மரணத்தினாலே தேவனோடே ஒப்புறவாக்கப்படடோம். ரோமர் 5:10. தேவனைப்பற்றி மேன்மை பாராட்டுகிறோம். 5:11. 

8. நாம் இனி பாவத்திற்கு ஊழியம் செய்யாதபடிக்கு நம்முடைய பழைய மனுஷன் அவரோடேகூடச் சிலுவையில் அறையப்பட்டான். ரோமர் 6:6. 

9. அவர் மரித்தது பாவத்திற்கென்று ஒரே தரம் மரித்தார். ரோமர் 6:10. 
வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்தார். 
1 கொ15:3. 

10. நாம் தேவனுக்கென்று கனிகொடுக்கும்படி நியாயப்பிரமாணத்திற்கு அவரோடே மரித்தோம்.  ரோமர் 7:4 

11. நாம் புதுமையான ஆவியின்படி ஊழியஞ்செய்யத்தக்கதாக நம்மைக் கட்டியிருந்த நியாயப்பிரமாணத்துக்கு அவரோடே நாம் மரித்தோம். 
ரோமர் 7:6 

12. நம்மை இப்பொழுது இருக்கும் பொல்லாத பிரபஞ்சத்தினின்று விடுவிக்கும்படி நம்முடைய பிதாவாகிய தேவனுடைய சித்தத்தின்படியே நம்முடைய பாவங்களுக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார். கலாத்தியர் 1:4 

13. கிறிஸ்து வுடனேகூட உலகத்தின் வழிபாடுகளுக்கு மரித்தோம். கொ2:20 

14.  மரணத்துக்கு அதிகாரியான பிசாசானவனை தமது மரணத்தினாலே அளிக்கும்படிகு. எபிரேயர் 2:14. 

15. ஜீவ காலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திலிருந்தவர்களை விடுவிக்கும்படி. எபிரேயர் 2:15. 

16. நாம் பாவங்களுக்கு செத்து நீதிக்கு பிழைக்கும்படி. 1பேதுரு 2:24. 

17. இயேசு கிறிஸ்து ஒரேதரம் பலியிடப்பட்டதினாலே நாம் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறோம். எபிரேயர் 10:10. 

18. இயேசு கிறிஸ்து வினுடைய ஒரே பலியினாலே பரிசுத்தமாக்கப்படுகிறவர்களை என்றென்றைக்கும் பூரணப்படுத்தியிருக்கிறார். எபிரேயர் 10:14.

No comments:

Post a Comment