Saturday, 26 March 2016

சிலுவை தியானம்:- முடிந்து

இயேசு காடியை வாங்கினபின்பு, முடிந்தது என்று சொல்லி, தலையைச் சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார்.  
யோவான் 19 :30

வெற்றியின் குரல்:-

இயேசுவின் மீட்பின் பணி முடிநத்து

விழுந்துபோன மனித குலத்துக்கு மீட்பை சம்பாதிக்கும்படி அனுபவிக்கும்படி அனுபவிக்க வேண்டிய இயேசுவின் பாடுகளும்  வேதனைகளும் முடிந்ததோடு அவருடைய மீட்பின் வேலை நீறைவேறிவிட்டது அவர் நம்முடைய பாவங்களுக்காக தண்டனையை ஏற்றுக்கொண்டு எல்லாருக்கும் இரட்சிப்பின் வழியைத் தந்தார்

நம்முடைய  பாவங்களுக்கான , சாபங்களுக் கான, மீறுதலுக்கான   தண்டனையை  நாம்  அனுபவிக்க  தேவையில்லை,  தண்டனையை  இயேசு சிலுவையில் முடித்து விட்டார்

தேவனுடைய கிருபை எவ்வளவு அருமையானது! அதினால் மனுபுத்திரர் அவரது செட்டைகளின் நிழலிலே வந்தடைகிறார்கள். 
அவரது ஆலயத்திலுள்ள சம்பூரணத்தினால் திருப்தியடைகிறார்கள், அவரது பேரின்ப நதியினால் அவர்களுடைய தாகத்தைத் தீர்க்கிறார். 

 ஜீவஊற்று  அவரிடத்தில் இருக்கிறது, அவருடைய  வெளிச்சத்திலே வெளிச்சம் காண்கிறார்கள். 

கர்த்தர்  அவரை அறிந்தவர்கள்மேல்  அவரது கிருபையையும், செம்மையான இருதயமுள்ளவர்கள்மேல்  அவரது நீதியையும் பாராட்டியருளுவார்
 பெருமைக்காரரின் கால்  உன் மேல்வராமலும், துன்மார்க்கருடைய கை உன்னைப் பறக்கடியாமலும் இருக்கும் 

 இதோ அக்கிரமக்காரர் விழுந்தார்கள், எழுந்திருக்கமாட்டாமல் தள்ளுண்டுபோனார்கள். 
சங்கீதம்36:7-12

No comments:

Post a Comment