Thursday, 31 March 2016

பொல்லாதவர்கள் அறுப்புண்டு போவார்கள்

சங்கீதம் 37:9-12

பொல்லாதவர்கள் அறுப்புண்டு போவார்கள், கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ பூமியைச் சுதந்தரித்துக்கொள்வார்கள். 
இன்னுங் கொஞ்சநேரந்தான், அப்போது துன்மார்க்கன் இரான், 

அவன் ஸ்தானத்தை உற்று விசாரித்தாயானால் அவன் இல்லை. 
 சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள் 

 துன்மார்க்கன் நீதிமானுக்கு விரோதமாய்த் தீங்கு நினைத்து, அவன்பேரில் பற்கடிக்கிறான். 
ஆண்டவர் அவனைப்பார்த்து நகைக்கிறார், அவனுடைய நாள் வருகிறதென்று காண்கிறார். 

சிறுமையும் எளிமையுமானவனை மடிவிக்கவும், செம்மை மார்க்கத்தாரை விழப்பண்ணவும், துன்மார்க்கர்பட்டயத்தை உருவி, தங்கள் வில்லை நாணேற்றுகிறார்கள். 

ஆனாலும் அவர்கள் பட்டயம் அவர்களுடைய இருதயத்திற்குள் உருவிப்போம், அவர்கள் வில்லுகள் முறியும்.  

அநேக துன்மார்க்கருக்குள்ள செல்வத்திரட்சியைப்பார்க்கிலும், நீதிமானுக்குள்ள கொஞ்சமே நல்லது. 

No comments:

Post a Comment