Friday, 4 November 2016

சங்கீதம் 148 :7-14

பூமியிலுள்ளவைகளே, கர்த்தரைத் துதியுங்கள், மகாமச்சங்களே, சகல ஆழங்களே,அக்கினியே, கல்மழையே, உறைந்தமழையே, மூடுபனியே, அவர் சொற்படி செய்யும் பெருங்காற்றே, கர்த்தரைத் துதியுங்கள், மலைகளே, சகல மேடுகளே, கனி மரங்களே, சகல கேதுருக்களே, கர்த்தரைத் துதியுங்கள், காட்டுமிருகங்களே, சகல நாட்டு மிருகங்களே, ஊரும் பிராணிகளே, இறகுள்ள பறவைகளே, கர்த்தரைத் துதியுங்கள், பூமியின் ராஜாக்களே, சகல ஜனங்களே, பிரபுக்களே, பூமியிலுள்ள சகல நியாயாதிபதிகளே, கர்த்தரைத் துதியுங்கள், வாலிபரே, கன்னிகைகளே, முதிர்வயதுள்ளவர்களே, பிள்ளைகளே, கர்த்தரைத் துதியுங்கள். அவர்கள் கர்த்தரின் நாமத்தைத் துதிக்கக்கடவர்கள், அவருடைய நாமம் மாத்திரம் உயர்ந்தது, அவருடைய மகிமை பூமிக்கும் வானத்திற்கும் மேலானது. அவர் தம்முடைய பரிசுத்தவான்கள் யாவருக்கும், தம்மைச் சேர்ந்த ஜனமாகிய இஸ்ரவேல் புத்திரருக்கும் கொண்டாட்டமாக, தம்முடைய ஜனத்திற்கு ஒரு கொம்பை உயர்த்தினார், அல்லேலூயா. சங்கீதம் 148 :7-14

No comments:

Post a Comment