Wednesday, 2 November 2016

சங்கீதம் 147 :1-10

மமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமம நீ கர்த்தரைத் துதி. நம்முடைய தேவனைக் கீர்த்தனம்பண்ணுகிறது நல்லது, துதித்தலே இன்பமும் ஏற்றதுமாயிருக்கிறது. கர்த்தர் எருசலேமைக் கட்டுகிறார், துரத்துண்ட இஸ்ரவேலரைக் கூட்டிச் சேர்க்கிறார். இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார், அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார். அவர் நட்சத்திரங்களின் இலக்கத்தை எண்ணி, அவைகளுக்கெல்லாம் பேரிட்டு அழைக்கிறார். நம்முடைய ஆண்டவர் பெரியவரும் மகா பெலமுள்ளவருமாயிருக்கிறார், அவருடைய அறிவு அளவில்லாதது. கர்த்தர் சாந்தகுணமுள்ளவர்களை உயர்த்துகிறார், துன்மார்க்கரைத் தரைமட்டும் தாழ்த்துகிறார். கர்த்தரைத் துதியுடன் பாடிக் கொண்டாடு, நம்முடைய தேவனைச் சுரமண்டலத்தால் கீர்த்தனம் பண்ணு. அவர் வானத்தை மேகங்களால் மூடி, பூமிக்கு மழையை ஆயத்தப்படுத்தி, மலைகளில் புல்லை முளைப்பிக்கிறார். அவர் மிருகஜீவன்களுக்கும் கூப்பிடுகிற காக்கைக் குஞ்சுகளுக்கும் ஆகாரங்கொடுக்கிறார். அவர் குதிரையின் பலத்தில் விருப்பமாயிரார், வீரனுடைய கால்களில் பிரியப்படார். சங்கீதம் 147 :1-10

No comments:

Post a Comment