Wednesday, 10 June 2020

சிறுகதை 255,-270








255             சவப்பெட்டி காணிக்கை

பிரேசில் நாட்டின் ஒரு கிராமத்தில் இருந்த பழைய தேவாலயத்தின் சுவர்களும் கூரையும் மிகுந்த சிதிலமடைந்து இடிந்து விழும் நிலையில் இருந்தது. ஒரு ஞாயிறு ஆராதனைக்கு பின் ஆலயத்தின் பாதிரியார், "நம் ஆலயத்தை செப்பனிடும் பணிக்கு நம்மிடம் போதிய பண வசதி இல்லை, ஆகவே அதற்குத் தேவையான பணத்தை நாம் சேர்பதற்காக ஒரு Special fund raising programme-ஐ (Sale) நடத்தலாம் என முடிவு செய்துள்ளேன். உங்கள் அனைவரின் ஒத்துழைப்பும் தேவை. அன்றைய தினம்
 சம்பளம் வாங்குபவர்கள் பணமாகவும், வியாபாரம்/ தொழில் செய்பவர்கள், தாங்கள் வியாபாரம்/தொழில் செய்யும் சம்மந்தபட்ட பொருட்களையே, ஆலயத்தில் காணிக்கையாக கொண்டு வந்து வைத்தால் அதனை நாம் ஏலம் விட்டு அதன்மூலம் வருமானத்தையும் சேர்த்துக் கொள்ளலாம். கடவுள் உங்களை  ஆசீர்வதித்தற்கு ஏற்ப பொருட்களை வந்து படைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.
         பாதிரியார் குறிப்பிட்ட அந்த நாள் வந்தது, காய்கறி வியாபாரம் செய்பவர்கள் காய்கறியும், ஆடை வியாபாரம் செய்பவர்கள் ஆடையும், ஹார்ட்வேர்ஸ் வியாபாரம் செய்பவர்கள் அதற்கேற்றாற் போன்ற பொருட்களையும், மாத சம்பளம் வாங்குபவர்கள் பணத்தையும் வந்து படைத்தனர். சபையார் அவரவர் வசதிக்கு ஏற்ப செய்தனர், அப்போது கோயிலின் முகப்பு வாசலை கண்ட சபையாருக்கு அதிர்ச்சியும் ஆச்சரியமும் ஏற்பட்டது,  காரணம் ஏலத்திற்கு வந்த பொருட்களில் ஒரு புத்தம் புதிய அழகிய சவப்பெட்டியும் (Coffin box) இருந்தது. நமது ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில்  அடக்க ஆராதனை நடைபெறாதே, யார் இறந்து விட்டது? என்ன இது புதிதாக முளைத்துள்ளது? இதுவும் ஏலத்திற்கா? இதை யார் ஏலம் எடுப்பார்கள்? என ஒருவரை ஒருவர் கேட்டு முணுமுணுத்தனர். அப்போது அங்கு வந்த கோயில்பிள்ளையிடம் விசாரித்தனர். அதற்கு அவர் "அதோ கட்டம் போட்ட சட்டை போட்டுக் கொண்டு நிற்கிறாரே, அவர் கொண்டு வந்து வைத்துள்ள காணிக்கை பொருள் இது. அவர் ஒரு சவப்பெட்டி செய்யும் ஆச்சாரி (carpenter)" என்றார். சபையார் அனைவரும் அவரை ஒரு மாதிரி ஏளனமாக
 பார்த்தனர், ஆனால் அவர் எதையும் கண்டுகொள்ளவில்லை. பாதிரியார் சொன்னதுபோல், நீங்கள் என்ன தொழில் செய்து பிழைக்கிறீர்களோ, அதில் காணும் பொருட்களை படையுங்கள் என்றார்,  நான் சவப்பெட்டி (Coffin box) செய்து பிழைப்பு நடத்துகிறேன் அதனால் சவப்பெட்டியையே காணிக்கையாக வைத்துள்ளேன், என்றார்  
          ஆராதனை முடிந்தவுடன் ஏலம் தொடங்கியது. எல்லா பொருட்களையும் சபையார் போட்டி போட்டுக்கொண்டு ஏலம் எடுத்தனர். இறுதியாக அந்த சவப்பெட்டியை ஏலத்திற்கு எடுத்து வந்து நிறுத்தினர். அனைவரும் திகைத்து அமைதியாக ஒருவரை ஒருவர் பார்த்தனர், யார் முகத்திலும் ஈயாடவில்லை. அங்கு ஒரே மயான அமைதி. யார் இதை ஏலம் கேட்டு வாங்கப் போகிறார்கள் என்று எல்லாருக்கும் ஒரே Tension. யாருமே சவப்பெட்டியை வாங்கலைனனா என்ன செய்வார்கள்? 
       அப்பொழுது திடீரென சவப்பெட்டி செய்பவரின், வயதான நண்பர் ஒருவர் எழுந்து, அந்த சவப்பெட்டியை 15 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் கேட்டு விட்டு, அதனை பாதிரியாருக்கு அன்பளிப்பாக கொடுப்பதாக கூறினார், உடனே பாதிரியார் முறைத்து எழுந்தாரே பார்க்கலாம். எப்படியோ உடன் சுதாரித்துக்கொண்டு அதை 30 ஆயிரத்திற்கு அவர் ஏலம் கேட்டு அதனை P.C secretary க்கு தாம் அளிப்பதாகக் கூறினார். P.C secretary சட்டென துடித்தெழுந்து சவப்பெட்டியை 50,000 ரூபாய்க்கு ஏலம் கேட்டு அதனை உபதேசியாருக்கு அளிப்பதாக கூறினார், உடனே உபதேசியார் "என்ன Secretary என்னை சாக சொல்றீங்களா" என கோபமாக கேட்டு எழுந்து, சவப்பெட்டியை 80 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் கேட்டு அதனை அவர் அருகில் அமர்ந்திருந்த Treasurer-க்கு அளிப்பதாகக் கூறினார்.  Treasurer எழுந்து சவப்பெட்டியை ஒரு லட்சம் ரூபாய்க்கு ஏலம் கேட்டு மற்றொருவருக்கு என்றும், அந்த மற்றவர் எழுந்து அதற்குமேல் தொகை கோரி அடுத்தவர் என்று கூறவே, இப்படி மாறி மாறி சவப்பெட்டி, ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாயில் வந்து நின்றது.1தரம், 2தரம் என, கடைசியாக மாட்டினவர்கள் முழி பிதுங்கி கடுப்பாகி செய்வதறியாது நின்றனர்.  
     அப்பொழுது புதிதாக அந்த ஊருக்கு சுற்றுறுலா வந்திருந்த மிகுந்த செல்வந்தர் ஒருவர் எழுந்து அந்த சவப்பெட்டியை 2 லட்சம் ரூபாய்க்கு ஏலம் கேட்டு, அதனை சவப்பெட்டி செய்யும் அந்த ஆச்சாரிக்கே அன்பளிப்பாக கொடுப்பதாக கூறினார். அந்த ஆச்சாரியும் சந்தோஷமாக அதனை ஏற்றுக்கொண்டு புன்முறுவலுடன் தான் காணிக்கையாக படைத்த சவப்பெட்டியை தன் வீட்டிற்குச் சுமந்து சென்றார். அவரை கேவலமாக நோக்கிய கண்கள் தரையை குத்தி நின்றது. சல்லி காசும் போடாமல் எல்லாரையும் காட்டிலும்  பெரிய தொகையை ரூ 2லட்சம் Contribute பண்ணின அந்த நபரை பார்ப்பதற்கே வெட்கி தலை குனிந்து நின்றனர். 

         கடவுளின் ஊழியத்தை நீங்கள் பல வழிகளில் செய்யலாம்/தாங்கலாம். அவைகளை சிலர் ஏளனமாகவும், சிறுமையாகவும் நோக்கலாம். உங்கள் மனதை கர்த்தர் அறிவார். நீங்கள் உங்களின், பெருமைக்காக/சுயவிளம்பரத்திற்காக,  கட்டாயமாகவும், விசனமாகவும் போலியாக மனமில்லாமல் செய்யும் சேவைகளை/ஊழியத்தை அவர் ஒருநாளும் ஏற்கமாட்டார். God wants you just the way you are. He will turn your shame into honour.



256     கர்த்தருக்குப் பயந்து தீமைக்கு விலகு ! 

தேவ ஊழியர் ஒருவரிடம் ஒரு அன்பான தாய் தன் மனதின் பாரங்களை இவ்வாறு பகிர்ந்து கொண்டார்கள் : 

ஐயா ஒரு வாலிய பையன் என் வாலிப மகளுக்கு நல்ல வேலை வாங்கித் தருகிறேன் என்று அவளுடன் பேசிப் பேசி அவள் மனதைக் கலைத்து விட்டான் . என் மகள் கள்ளம் கபடற்றவள் . அவளால் மனிதர்களின் சூழ்ச்சியைப் புரிந்து கொள்ள முடியவில்லை .

 நாங்கள் இதனால் மிகுந்த மனக்கலக்கம் அடைந்திருக்கிறோம் . நிம்மதியே இல்லை என்று கூறினார்கள் . தேவ ஊழியர் ஜெபித்த போது : “ வெள்ளம் போல் சத்துரு வரும்போது கர்த்தருடைய ஆவியானவர் அவனுக்கு விரோதமாய்க் கொடியேற்றுவார் ' ஏசாயா 59:19 ) என்ற வசனத்தை கர்த்தர் வாக்குத்தத்தமாகக் கொடுத்தார் . இந்த வசனத்தைப் பிடித்துக் கொண்டு , 

விசுவாசத்தோடு தொடர்ந்து ஜெபியுங்கள் . கர்த்தர் கிரியை செய்வார் என்று ஆலோசனை சொல்லி ஊழியர் அவர்களை அனுப்பி வைத்தார் . அவர்களும் அப்படியே ஜெபித்து வந்தார்கள் . மகளிடம் இதைப்பற்றி ஒன்றும் பேசாமல் அவளிடம் மிகுந்த அன்பு செலுத்தினார்கள் . 

பெற்றோரின் அன்பு ஒருபுறம் . அந்தப் பையனுடன் கொண்ட தொடர்பு மறுபுறம் மகளை நெருக்கியது . அந்தப் பையனுடனான நட்பை தொடரவும் முடியாமல் , முறிக்கவும் முடியாமல் தடுமாறினாள் . 

நாட்கள் கடந்தன . மறுபடியும் ஒரு நாள் அந்தத்தாய் தேவ ஊழியரிடம் ஜெபிக்க வந்தார்கள் . அவர் ஜெபித்தபோது பரிசுத்த ஆவியானவர் ஒரு காரியத்தை வெளிப்படுத்தினார் . அம்மா . உங்கள் மகளிடம் ஒரு பொம்மை கொடுக்கப்பட்டிருக்கிறது . அந்தக் குறிப்பிட்ட பொம்மையில் பில்லிசூனியம் உள்ளது . எனவே அதை உடனே அகற்றி , சுட்டெரித்துப் போடும்படி ஆவியானவர் சொல்கிறார் என்று சொன்னார் . 

வீட்டுக்கு வந்தவுடன் தாய் தன் மகளிடம் : “ உன்னிடம் ஏதாவது புது பொம்மை இருக்கிறதா ? அது உனக்கு யார் கொடுத்தார்கள் " என்று கேட்டார்கள் .

 தன்னிடம் அந்தச் சிறிய பொம்மை இருப்பது தாய்க்கு எப்படித் தெரியும் என்று ஆச்சரியப்பட்ட மகள் : வேலை வாங்கித் தருவதாகக் கூறிய அந்தப் பையன்தான் எனக்கு அந்தப் பொம்மையைப் பரிசாகக் கொடுத்திருக்கிறான் என்றாள் . 

அந்தப் பொம்மையில் பில்லி சூனியம் ( witchcraft ) வைக்கப்பட்டுள்ளதை பரிசுத்த ஆவியானவர் தேவ ஊழியர் மூலம் வெளிப்படுத்தியதைப் பற்றித் தாய் சொன்னார்கள் . மகள் அதிர்ச்சியுற்றாள் . தனக்கு எதிராக உருவாக்கப்பட்ட சதியினைப் புரிந்து கொண்ட அந்த வாலிப மகள் பொம்மையைத் தாயிடம் கொடுத்தாள் . தாய் அதை நெருப்பினால் சுட்டெரித்துப் போட்டார்கள் . 

மகள் தெளிவு பெற்றாள் . வேண்டாத அந்த நட்பைத் துண்டித்துக்கொண்டாள் . கண்ணீருடன் இயேசுவிடம் ஜெபித்து மன்னிப்பைப் பெற்றுக் கொண்டாள் . மகிழ்ச்சியடைந்த பெற்றோர் தேவனுக்கு நன்றி செலுத்தினார்கள் . 

கர்த்தருடைய கிருபையால் விரைவில் பக்தியுள்ள நல்ல ஒரு குடும்பத்தில் இரட்சிக்கப்பட்ட ஒரு நல்ல மணமகனை அவளுக்குத் தெரிந்து கொண்டார்கள் . திருமணம் சிறப்பாக நடைபெற்றது . இன்றும் அவர்கள் மகிழ்ச்சியோடு வாழ்கிறார்கள் .

 இதை வாசிக்கும் அன்பான வாலிபப் பிள்ளைகளே . உங்கள் பெற்றோரின் தூய்மையான அன்பையும் , பாசத்தையும் உதாசீனப்படுத்தி , தவறான வழிகளைத் தெரிந்து கொள்ளாதபடிக்கு எச்சரிக்கையிருங்கள் . கர்த்தருக்குப் பயந்து தீமைக்கு விலகுங்கள் . தினமும் வேதம் வாசித்து ஜெபிக்க மறவாதிருங்கள் . 

வேதமே வெளிச்சம் . ஜெபமே ஜெயம் . நீங்கள் வேத வசனங்களின்படி எச்சரிப்படைந்து உங்கள் வழிகளைக் காத்துக்கொண்டால் , சாத்தான் உங்களை வழிதப்பச் செய்ய முடியாது . பரிசுத்த ஆவியானவர் நித்தமும் உங்களைச் சரியான வழியில் நடத்துவார் . உங்கள் எதிர்காலம் நிச்சயமாய் ஆசீர்வாதமாயிருக்கும் . 

தீங்கு நாட்கள் வராததற்கு முன்னும் , எனக்குப் பிரியமானவைகள் அல்ல என்று நீ சொல்லும் வருஷங்கள் சேராததற்கு முன்னும் மகா பரிசுத்தமுள்ள உன் சிருஷ்டிகராகிய தேவனை நினைத்து , அவருடைய மேலான கற்பனைகளைக் கைக்கொள்ளவது அவசியம் . சேனைகளின் கர்த்தரையே பரிசுத்தம் பண்ணுங்கள் ; அவரே உங்கள் பயமும் , அவரே உங்கள் அச்சமுமாயிருப்பாராக . ( ஏசாயா 8:13 ) .



257                  வீட்டு ஜெபக்குழுக்கள்  
                            ( Home Prayer Cells ) " 

பால்யாங்கிசோ கொரியாவில் சபையை நிறுவி ஊழியம் செய்ய ஆரம்பித்தபோது அவருக்கு வயது 28. 

அந்தக் காலக் கட்டத்தில் அவர் இருதயம் மிகவும் பலவீனமாக இருப்பதாகவும் , பிரசிங்கிப்பதை விட்டு விட்டு வேறு வேலை எதையாவது செய்வதுதான் ஒரே வழி என்றும் டாக்டர்கள் கூறிவிட்டார்கள் .

 சரீரம் மிகவும் பலவீனப்பட்டு சபை ஊழியத்தைச் சுறுசுறுப்பாகச் செய்ய இயலாத நிலையில் அவர் இருந்தார் .

 ஆனாலும் கர்த்தர் கொடுத்த ஊழியத்தைச் செய்யாமல் பின்வாங்கக் கூடாது என்று தீர்மானித்தார் . அவர் மூலமாக கொரியா தேசத்தில் பெரிய சபையைக் கட்டி எழுப்பப் போவதாகவும் , அவரைப் படிப்படியாகக் குணமாக்கப் போவதாகவும் கர்த்தர் அவருக்கு வாக்குக் கொடுத்திருப்பதை நினைத்து தைரியம் கொண்டார் . 

அவர் படுக்கையில் படுத்துக் கொண்டு , என்னுடைய பெரிய சபையை நான் தனிமையாக எவ்வாறு நிர்வகிக்கப் போகிறேன் என்று ஒரு நாள் சிந்தித்துக் கொண்டிருந்தார் . 

அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் : ' என் ஜனங்கள் வெளியேறி வளரட்டும் ' என்று பேசினார் 

. ' ஆண்டவரே என்ன சொல்லுகிறீர் ' என்று கேட்டார் . அவர் தொடர்ந்து ' என் ஜனங்கள் பால்யாங்கிசோவின்  ஆளுகையிலிருந்து வெளியே புறப்பட்டுப்போய் , வளரட்டும் ' என்றார் .

 தொடர்ந்து ' அவர்கள் தங்கள் சொந்தக் கால்களில் நின்று ஊழியம் செய்ய உதவி செய் ' என்றார் . 

இந்தக் காரியத்தைக் குறித்து அவர் வேதத்தை ஆராய்ந்து பார்க்க இந்த வார்த்தைகள் அவரைத் தூண்டின .

 அப்போஸ்தலர் 2 : 46,47 வசனங்களை வாசித்த போது , 

ஆதிசபையில் இரண்டு விதமான கூட்டங்கள் நடைபெற்றதைப் பற்றிக் கவனித்தார் . ஆதி 

 சீஷர்கள் தேவாலயத்தில் அனுதினமும் கூடி , தேவனை ஆராதித்தார்கள் . அது மட்டுமல்லாமல் , வீடுகள் தோறும் அப்பம்பிட்டு ஐக்கியம் பாராட்டினார்கள் . இது அவரது கவனத்தை ஈர்த்தது . அது வரை சபை என்பது ஒரு பொதுவான கட்டிடம் ( ஆலயம் ) என்பதே அவருடைய எண்ணமாயிருந்தது . 

ஆனால் ஒரு வீடு சபையாக மாற முடியும் என்று அவர் ஒரு போதும் எண்ணியதேயில்லை . அவர் அதுவரை அறிந்திராத ' வீட்டு ஊழியம் ' ஒன்றும் இருக்கிறது என்பதை அன்று அறிந்து கொண்டார் . 

அவர் தொடர்ந்து வேதத்தை வாசித்த போது , லீதியாளின் வீட்டில் கூடி வந்த சபையைப் பற்றியும் ( அப் 16:40 ) ; ஆக்கில்லா . பிரிஸ்கில்லாள் வீட்டில் கூடிவந்த சபையைப் பற்றியும் ( ரோமர் 16 : 3-5 ) , பிலேமோனின் வீட்டில் கூடிய சபையைப் பற்றியும் ( பிலேமோன் 1 : 2 ) கவனத்தைச் செலுத்தினார் . 

எனவே சபை மக்களை உற்சாகப்படுத்தி வீடுகளில் ஜெபக் கூட்டங்கள் நடத்துவதைத்தான் பரிசுத்த ஆவியானவர் எனக்கு உணர்த்துகிறார் என்பதையும் , அது வேதத்தின் அடிப்படையில் தான் இருக்கிறது என்பதையும் அவர் புரிந்து கொண்டார் .




258  உருவத்தை பார்த்து


10 வயது வாலிபன் இரயில் ஜன்னல் வழியே
பார்த்து கத்தினான்."அப்பா இங்கே பாருங்கள்,"
மரங்கள் எல்லாம் நமக்கு பின்னால் ஓடுகின்றன
என்று!"
அவனருகில் இருந்த அவனது அப்பா
சிரித்துக்கொண்டார்.

ஆனால் அவர்கள் அருகில் இருந்த இளம்
தம்பதியினர் அவனைப் பார்த்து பரிதாப
பட்டுக்கொண்டனர். மறுபடியும் அந்த
வாலிபன் கத்தினான்.

"அப்பா மேலே பாருங்கள், ' மேகங்கள்
நம்மோடு வருகின்றன..; என்றான்.
இதைக்கேட்டு தாங்க முடியாத
தம்பதியினர் வாலிபனின் தந்தையிடம் "நீங்கள்
ஏன் உங்கள் மகனை ஒரு நல்ல டாக்டரிடம்
காட்டக் கூடாது என்றனர்" அதற்கு அந்த
வயதான அப்பா சிரித்துக்
கொண்டே சொன்னார். "நாங்கள் டாக்டரிடம்
இருந்துதான் வந்து கொண்டிருக்கிறோம்.

என் மகன் பிறவிக் குருடு .இன்றைக்கு
தான்அவனுக்கு பார்வை கிடைத்தது என்றார்."

அன்பு நண்பர்களே., உண்மையில் ஒவ்வொரு
மனிதனுக்கும் ஒரு கதை உண்டு. மற்றவரை
தீர்மானிக்க
நினைத்தால் நாம் உண்மையை
இழந்துவிடலாம். சில
நேரங்களில் உண்மை நம்மை ஆச்சிரிய பட
வைக்கலாம்.

'உருவத்தை பார்த்து யாரும் யாரையும்
எடைபோடதிற்கள.


259    கணிப்பு

ஒரு அழகான சிறுமி தன் கைகளில் இரண்டு
ஆப்பிள் வைத்திருந்தாள்.. 

அங்கு வந்த
அவளின் தாய் , நீ இரண்டு ஆப்பிள்
வைத்திருக்கே ஒன்று எனக்கு கொடு என்றாள்.

தன் தாயை ஒரு வினாடி பார்த்த அந்த சிறுமி,
பின் உடனே ஒரு ஆப்பிளை கடித்து விட்டாள்..
பின் உடனே இரண்டாவது ஆப்பிளையும்
கடித்து விட்டாள்..
தாயின் முகத்தில் இருந்த சிரிப்பு உறைந்து
போனது. தன் ஏமாற்றத்தை வெளிப்படுத்த
முடியாமல் தவித்தாள்.

உடனே அந்த சிறுமி, தாயிடம்
சொன்னாள்..அம்மா இந்த ஆப்பிள் தான்
இனிப்பாக இருக்கு நீ எடுத்துக்க என்றாள்....
நட்புக்களே, நீஙகள் யாராக வேண்டுமானாலும்
இருக்கலாம். எவ்வளவு அனுபவமும்
இருக்கலாம்..அறிவு வீஸ்தீரமாகவும்
இருக்கலாம். ஆனால் ஒருவரை பற்றி
கணிப்பதை சற்று தள்ளிப்போட்டு கணிக்கவும்.
அடுத்தவருக்கு போதுமான அளவு
இடைவெளி கொடுத்து அவரை அறியவும்.
நீங்கள் அவரை பற்றிக்கொண்ட கண்ணோட்டம்
தவறாகவும் இருக்கலாம்.
எதையும் மேலோட்டமாக பார்த்து கணிக்காமல்
,அவசரப்படாமல் ஆழ யோசித்து கணியுங்கள்..
மனக்கணக்கு தவறலாம்..மனிதரை பற்றிய
கணக்கு தவறக்கூடாது.
.


260     உண்மையைப் பலி கொடுத்து


ஒரு விவசாயி ஒரு குதிரையையும், ஒரு
ஆட்டையும் வளர்த்து வந்தான்.
அந்தக் குதிரையும் ஆடும் சிறந்த நண்பர்களாக
இருந்தன.

ஒரு நாள் அந்தக் குதிரை வைரஸ் நோயால்
பாதிக்கப்பட்டது.
அதனால், அந்த விவசாயி குதிரைக்குச்
சிகிச்சை அளிக்க மருத்துவரை அழைத்து
வந்தான்..
மருத்துவர் அந்த குதிரையின் நிலையைப்
பார்த்து,
“நான் மூன்று நாட்கள் வந்து மருந்து
தருகிறேன். அந்த மருந்தைக் குதிரைக்குச்
சாப்பிடக் கொடுங்கள். அதைச் சாப்பிட்ட
குதிரை எழுந்து நடந்தால் சரி,
இல்லையெனில் அதனைக் கொன்றுவிட
வேண்டியது தான்” என்று சொல்லியபடி
குதிரைக்கான மருந்தைக் கொடுத்துச்
சென்றார்.

இவர்களது உரையாடலை அந்த ஆடு கேட்டுக்
கொண்டிருந்தது. விவசாயியும் அந்தக்
குதிரைக்கு மருத்துவர் கொடுத்த மருந்தைக்
கொடுத்தான். மறுநாள் வந்த மருத்துவர்,
குதிரையைப் பார்த்து விட்டு, அன்றைய
மருந்தைக் கொடுத்துச் சென்றார்.
அந்த மருந்தையும் குதிரைக்குக் கொடுத்தான்,

அந்த விவசாயி.பின்பு சிறிது நேரம்
கழித்து,அங்கு வந்த ஆடு, அந்தக்
குதிரையிடம், "நண்பா, நீ எழுந்து நடக்க
முயற்சி செய்.
நீ நடக்கா விட்டால் அவர்கள் உன்னைக்
கொன்று விடுவார்கள்" என்று அந்த
குதிரையை ஊக்குவித்தது.
மூன்றாம் நாளும் மருத்துவரும் வந்தார்.
அவர் குதிரைக்கு மருந்து கொடுத்து விட்டு,
அந்த விவசாயிடம் "நாளை குதிரை
நடக்கவில்லையெனில், அதனைக் கொன்றுவிட வேண்டும்.

இல்லாவிட்டால், அந்த வைரஸ் பரவி,
மற்றவர்களுக்கும் பரவிவிடும்." என்று
சொல்லிச் சென்றார்.
இதைக் கேட்ட ஆடு, அந்த மருத்துவர்
சென்றதும், குதிரையிடம் வந்து,
“நண்பா!
எப்படியாவது எழுந்து நடக்க முயற்சி செய்.
நீ நடக்க முடியாமல் போனால் உன்னைக்
கொன்று விடுவார்கள்” என்று சொல்லியது.
அந்தக் குதிரையும் முயற்சி செய்து மெதுவாக
எழுந்து நடக்கத் தொடங்கியது. தற்செயலாக
அந்தப் பக்கமாக வந்த விவசாயி அசந்து
போகும்படியாக குதிரை ஓடியது.
மறுநாள் அந்த விவசாயி மருத்துவரை
அழைத்து வந்து குதிரையைக் காண்பித்தான்.

அவன் மருத்துவரிடம், "என் குதிரை நன்றாகக்
குணமடைந்து விட்டது. அது நன்றாக ஓடத்
தொடங்கி விட்டது. இதற்கு நீங்கள் கொடுத்த
மருந்துதான் காரணம்.

என் குதிரையைப் பிழைக்க வைத்த உங்களுக்கு
நல்ல விருந்து ஒன்று கொடுக்க வேண்டும்.
இந்த ஆட்டை வெட்டிப் பிரியாணி செய்து
கொண்டாடி விடுவோம்” என்றான்.

குதிரை ஆட்டின் ஊக்கத்தால் எழுந்து
நடந்தாலும் மருத்துவர் கொடுத்த
மருந்தால்தான் குதிரை குணமடைந்ததாகத்தான் விவசாயி நினைத்தான்....
இப்படித்தான் இந்த உலகில் யாரால் நன்மை
கிடைத்தது என்பதை உணராமல், பலரும்
உண்மையைப் பலி கொடுத்துக்
கொண்டிருக்கிறார்கள்.


261 பணம்

தோளில் தன் மகனை தூக்கிக் கொண்டு
பேருந்தில் சென்றார் அவர். முகத்தில் ஏனோ
ஒரு கவலை. 'டிக்கெட்' என்று நடத்துனர்
கேட்ட போது பதில் எதுவும் பேசவில்லை.

'யோவ் எங்கயா போகணும்'னு கண்டக்டர்
டென்ஷன் ஆக, நடுங்கும் கைகளில் இருந்த
காசினை வெடுக்கென்று பிடுங்கிக்கொண்டு,
'காலங்காத்தால வந்துட்டானுங்க' என்று
முணுமுணுத்துக்கொண்டே நகர்ந்தார்
கண்டக்டர்..

ஜன்னல் ஓரத்தில் அமர்திருந்தாலோ என்னவோ
காற்றும் தூசியும் கண்ணில் பட்டு கண்
கலங்கினார். தோளில் கிடந்த துண்டை
எடுத்து கண்களை துடைத்துக்கொண்டு,
தொடர்ந்து மௌனமாகவே பயணித்துக்
கொண்டிருந்தார். அவருடன் வந்திருந்த
மற்றொரு நபர் அவரை இறுக்க
பற்றிக்கொண்டிருந்தார். ஏதோவொரு துயரச்சம்பவம் அவர் வாழ்வில் நடந்திருக்கிறது
என்று தெரிந்தது.

நான் இறங்கும் இடம் வந்துவிட்டது. பேருந்தை
விட்டு இறங்க மனமில்லை. அவர்கள் வாழ்வில்
என்ன நடந்திருக்கும். ஏன் இப்படி சோகமாக
இருக்கிறார்கள் என்று எண்ணிக்கொண்டே
பேருந்தை விட்டு இறங்கினேன். நான் இறங்கிய அதே பஸ் ஸ்டாப்பில் அவர்களும் இறங்கினார்கள். மனம் சற்று நிம்மதி அடைந்தது. அவர்கள் பற்றி எதையேனும்தெரிந்து கொள்ளலாம் என்று மனது விரும்பியது.. அவர்களை பின்தொடர்ந்தேன்..

தோளில் பிள்ளையை சுமந்து கொண்டு
நடக்கத் தொடங்கினர் இருவரும். சிறிது தூரம் அவர்கள் பின்னால் சென்ற எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது..

தன் மகனை தோளில் தூக்கிகொண்டு அவர்கள்சென்ற இடம் சுடுகாடு. சில நெருங்கிய சொந்தங்கள் அங்கு கூடி இருந்தனர்.அவர்களை பார்த்ததும் தூக்கி வந்த தன்மகனை கீழே கிடத்தி ,தலையிலையும் நெஞ்சிலையும் அடித்துக்கொண்டு கதறி
அழுதார்.

எதனால் அந்த நபரின் மகன் இறந்தார், என்ன
காரணம் என்று எனக்கு எதுவும்
தெரியவில்லை, ஆனால் ஒன்று மட்டும்
தெளிவாகப் புரிந்தது. இறுதிச் சடங்கைகூடதிருவிழா போல் கொண்டாடும் இந்தக்
காலத்தில், இறந்து போன தன் மகனை பாடைகட்டி தூக்கி வரும் அளவுக்கு கூட அவரிடம்பணம் இல்லை என்று.

உயிருக்குயிரான தன் மகனை தோளில்
சுமந்துக் கொண்டு, துக்கத்தை நெஞ்சில்
புதைத்துக்கொண்டு, கண்டக்டருக்கு
தெரியாமல் இறந்து போன தன் மகனை
மயானம் வரை தன் தோளில் சுமந்து வந்த
அந்த தந்தையின் வலி, இன்னமும் என் மனதில்
நீங்காமல் இருக்கிறது.

உயிரோடு இருக்கும் வரை தான் பணம் தேவை
என்று நினைத்தேன். மரணித்த பின்னரும் பணம்
தேவைப்படுகிறது இந்த உலகத்தில்..



262    மது அருந்தி விட்டு வாகனம் ஓட்ட வேண்டாம் 

இது கோயம்புத்தூரில் நடந்த ஒரு உண்மை சம்பவம் படிக்க தவறாதீர்கள் ......

ஒரு பெரிய வணிக அங்காடியில்
ஒரு ஐந்து வயது மதிக்கத் தக்க சிறுவன்
பணம் செலுத்துபவரிடம் உரையாடிக்
கொண்டிருந்தான் பணம் பெறுபவர்,
உன்னிடம் இந்தபொம்மை வாங்குவதற்கு தேவையானபணம் இல்லை என்று சொன்னார். அந்தசிறுவன் இந்த பணம்
போதாதா என்று வினவினான்.

அவர் மீண்டும் பணத்தை எண்ணி விட்டு இல்லடா செல்லம்குறைவாக உள்ளது என்றார். அந்தசிறுவன் அந்த
பொம்மையை கையிலேயே பிடித்திருந்தான்.

நான் அந்த சிறுவனிடம் அந்த
பொம்மை யாருக்கு தர போகிறாய்
என்று கேட்டேன். அதற்கு அந்த
சிறுவன் அது தன் தங்கைக்கு ரொம்ப
பிடித்ததாகவும் அவள் பிறந்தநாள்
அன்று அவளுக்கு பரிசளிக்க
போவதாகவும் கூறினான். 

மேலும் அவன்பேச தொடர்ந்தபோது என் இதயம்நின்று விட்டது போல் உணர்தேன். 

அவன்கூறியது "இந்த பொம்மையை என் அம்மாவிடம் கொடுத்தால் அவர்கள் என்
தங்கையிடம் கொடுத்து விடுவார்கள், என்
தங்கை கடவுளிடம் சென்று விட்டாள்.
என் அம்மாவும் கடவுளிடம் செல்ல
இருக்கிறார்.

நான் என் தந்தையிடம் இந்த
பொம்மை வாங்கி வரும் வரை அம்மா
கடவுளிடம் செல்ல வேண்டாம்
என்று கூறி விட்டு வந்தேன்.
எனக்கு என் தங்கையும் அம்மாவும்
ரொம்ப பிடிக்கும். அம்மா கடவுளிடம்
செல்ல வேண்டாம் என்று அப்பாவிடம்
கேட்டேன், ஆனால் அம்மா கடவுளிடம்
செல்லும் நேரம் வந்துவிட்டதாக
கூறினார்.

மேலும் அவன் கையில் அவனுடைய
புகைப்படம் ஒன்றை வைத்து இருந்தான்
அதை தன் அம்மாவிடம் கொடுத்தால்
அவர்கள் தன் தங்கையிடம்
அதை கொடுப்பார்கள், அதனால் அவள்
தன்னை மறக்காமல் இருப்பாள் என்றும்
கூறினான்.

நான் என்னிடம் இருந்த
பணத்தை அவனுக்கு தெரியாமல் அவன்
வைத்திருந்த பணத்துடன் சேர்த்து,
மீண்டும் எண்ணி பார்க்கலாம்
என்று சொன்னேன். அவனும் இசைந்தான்,நாங்கள் எண்ணிய போது போதிய பணத்திற்கு மேல் இருந்தது அவன்கடவுளுக்கு நன்றி கூறினான்.

நான் கனத்த மனதுடன்
அங்கிருந்து நகர்ந்தேன் பின்னர் உள்ளூர்
தினசரி பத்திரிக்கை ஒன்றில்
படித்தது என் நினைவிற்கு வந்தது,


மகிழ்வுந்தில்(car) பயணம் செய்த
அம்மா மற்றும் மகள் மீது ஒரு திறந்த
சரக்கு வண்டி(truck)
மோதி விபத்துக்குள்ளானது என்றும்
அதன் ஓட்டுனர்
குடித்து இருந்ததாலேயே விபத்து நிகழ்ந்தது என்றும்
வந்த அந்த செய்தி மேலும் மகள் சம்பவ
இடத்திலேயே இறந்ததாகவும் தாய்
உயிருக்கு போராடும் நிலையில்
மருத்துவமனையில் அனுமதிக்க
பட்டார் என்றும் அவர் சயித்திய (coma)
நிலையில் உள்ளார் என்றும் வந்த அந்த
செய்தி இந்த சிறுவன் அவர்கள் மகனா?

இரண்டு நாள் கழித்து தினசரி பத்திரிக்கையில் அந்த செய்தி விபதுக்குள்ளான பெண்
இறந்து விட்டாள் என்று.நான் அவரது இறுதி சடங்கிற்கு சென்றேன்
அச் சிறுவனின் அம்மா சடலமாக
கிடந்தாள் , கையில் சிறுவனின்
புகைப்படமும் அந்த பொம்மையும்
இருந்தது. அங்கிருத்து கனத்த
இதயத்துடன் திரும்பினேன் அந்த
சிறுவனின் தன் அம்மாவிடமும்
தங்கையிடம் வைத்திருந்த அன்பும்
பாசமும் அப்படியே உள்ளது. 

ஆனால்ஒரு குடிகாரன் குடி போதையில் வாகனம்ஒட்டியதால் ஒரு நொடியில் அந்த
குடும்பம் சிதைந்து விட்டது

தயவு செய்து மது அருந்தி விட்டு வாகனம் ஓட்ட வேண்டாம் உங்கள் இதயத்தை இது தைத்திருந்தால் பகிருங்கள் ...



263 புகை பிடிக்கும்பழக்கத்தை

ஒரு போக்குவரத்து சமிக்ஞையில் ஒரு
ஊனமுற்ற சிறுமி நின்று கொண்டிருந்தாள் அங்கு ஒரு கார் வந்து நின்றது. அந்த சிறுமி சிறிது நேரம் அந்த காரில் உள்ள நபரை உற்று பார்த்துக்கொண்டிருந்தாள்.
பின்னர் அந்த காருக்கு அருகில் சென்று கதவை தட்டினால். ஜன்னலின் கண்ணாடி
திறக்கப்பட்டது. அங்கு புகை பிடித்தபடி ஒரு நபர் அமர்த்திருந்தார். கிழிந்த ஆடைகளுடன்கையில் தடியுடன் இருந்த சிறுமியை பார்த்து என்னமா ?? காசு வேணுமா?? என்றுகேட்டார்.சிறுமியிடம் இருந்து பதில் வரவில்லை. அந்த சிறுமி காரில் இருந்த அனைவரையும் சுற்றி சுற்றி பார்த்தாள். காருக்குள் ஒரு
கைக்குழந்தையுடன் ஒரு பெண் அமர்திருந்தாள்.இந்தா பொண்ணு உனக்கு என்ன வேணும்? என்று கேட்டார்.
எனக்கு எதுவும் வேணாம் அய்யா..
உங்க பசங்களுக்கு நீங்க எல்லாத்தையும்
கொடுக்கணும்னு ஆசை படுறீங்களா அய்யா ? என்று கேட்டாள்.
ஆமா ஏம்மா இப்படி கேக்குற? என்று கேட்டார்? உங்க பசங்களுக்கு எல்லாத்தையும் கொடுங்க ஆனா என்ன மாதிரி அவளுக்கும் வறுமையை கொடுத்துறாதீங்க அய்யா.
இன்னைக்கு நீங்க என்ன பிச்சைக்காரின்னு நினைச்சமாரி நாளைக்கு உங்க மகளை யாரும்
நினைத்து விட கூடாது இந்த புகை பிடிக்கும்பழக்கத்தை இன்றோடு விட்டுத்தள்ளுங்கள்
அய்யா. உங்களைப் போன்ற ஒரு அப்பா எனக்கு இருந்ததால் தான் நான் இன்று உங்கள் முன்நிற்கிறேன் ஒரு அனாதையாய் ஒருபிச்சைக்காரியை போல்.இந்த நிலை உங்கள் மகளுக்கும்
வரவேண்டுமா? என்று கேட்டாள் அந்த சிறு பெண்.சட்டென்று சிகரட்டை கிழே போட்டார். என்ன அய்யா ? சிகரட் சுட்டுருச்சா ? என்று அந்த சிறுமி கேட்க்க..
"இல்ல அம்மா நீ சொன்ன வார்த்தைகள் தான் என்னை சுட்டு விட்டது என்றார்."
தயவு கூர்ந்து புகை பிடிப்பதை இன்றோடு
நிறுத்துங்கள்.




264 வியாபாரத்துல

செட்டி நாட்டு வீதியொன்றில் கீரை
விற்றுகொண்டு செல்கிறாள் ஒரு பெண். வீட்டு
வாசலில் மகனோடு அமர்ந்திருந்த தாய், கீரை
வாங்க அவளை கூப்பிடுகிறாள்." ஒரு கட்டு
கீரை என்ன விலை....?"" ஓரணாம்மா""ஓரணாவா....? அரையணாதான் தருவேன்.

அரையணான்னு சொல்லி நாலு கட்டு
கொடுத்திட்டு போ""இல்லம்மா வராதும்மா"."
அதெல்லாம் முடியாது. அரையணாதான்".
பேரம் பேசுகிறாள் அந்த தாய்.பேரத்திற்கு ஒத்துக்கொள்ளாத அந்த பெண் கூடையை
எடுத்துக்கொண்டுசிறிது தூரம்
சென்றுவிட்டு"மேல காலணா போட்டு
கொடுங்கம்மா" என்கிறாள்"முடியவே
முடியாது. கட்டுக்கு அரையணாதான்
தருவேன்"... என்று பிடிவாதம் பிடித்தாள்.

கீரைக்காரி சிறிது யோசனைக்கு பிறகு
"சரிம்மா
உன் விருப்பம்" என்று கூறிவிட்டு நாலு கட்டு
கீரையை கொடுத்துவிட்டு ரெண்டணா காசை
வாங்கி கொண்டு கூடையை தூக்கி தலையில்
வைக்க போகும் போது கீழே சரிந்தாள்."என்ன
டியம்மா காலை ஏதும் சாப்பிடல...?" என்று
அந்த தாய் கேட்க"இல்லம்மா போய்தான் கஞ்சி
காய்ச்சிணும்""சரி. இரு இதோ வர்றேன்." என்று
கூறிவிட்டு வீட்டுக்குள் சென்றவள்,
திரும்பும்போது ஒரு தட்டில் ஆறு இட்லியும்,
சட்னியோடு வந்தாள். " இந்தா சாப்ட்டு போ"
என்று கீரைக்காரியிடம்கொடுத்தாள்.

எல்லாவற்றையும் பார்த்துகொண்டிருந்த அந்த
தாயினுடைய மகன்" ஏம்மா அரையணாவுக்கு
பேரம் பேசுனிங்க.. ஒரு இட்லி அரையணான்னு
வச்சுகிட்டாக்கூட ஆறு இட்லிக்கு
ரெண்டரையணா வருதும்மா.....?என்று
கேட்கஅதற்கு அந்த தாய்,

"வியாபாரத்துல
தர்மம் பார்க்ககூடாது,தர்மத்துல வியாபாரம்
பார்க்ககூடாதுப்பா" என்று கூறினாள்.........
இது தான் உண்மையில் மனித நேயம் .....




265   *கண்ணுக்குத் தெரியாத கயிறுகள்!*

*உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்*;
 ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை.    (1 யோவான் 2:15)

ஞானி ஒருவர் தெருவில் வந்து கொண்டிருந்தார். எதிரே ஒரு விவசாயி தன் பசுவைக் கையிற்றால் கட்டி அழைத்து வந்தார். ஞானி சிரித்துக்கொண்டே, விவசாயியிடம் கேட்டார், “நீ பசுவுடன் வருகிறாயா? பசு உன்னுடன் வருகிறதா?”

குழம்பிப் போன விவசாயி, “இது என்ன கேள்வி? பசுதான் என்னோடு வருகிறது”' என்றார்.

உடனே ஞானி, “அப்படியானால் கயிறு எதற்கு? விட்டுவிடு!”என்றார்.

“கயிற்றை விட்டால் பசு ஓடி விடுமே?” என்றான் விவசாயி.

“அப்படியானால் அதுதான் உன்னைப் பிணைத்துள்ளது. நீ அதைப் பிணைக்கவில்லை” என்றார் ஞானி. விவசாயிக்கு அவர் சொன்னது புரியவில்லை.

ஞானி விளக்கினார், “பசு உன்னுடன் வருவதாயிருந்தால் நீ கட்டை அவிழ்த்து விட்டாலும் அது உன்னுடன் வர வேண்டும். ஆனால் நிலைமை அப்படி இல்லை. கட்டை அவிழ்த்தால் அது ஓடிவிடும். அது ஓடினால் அதைத் துரத்திக் கொண்டு நீ ஓடுவாய். உண்மையில் நீதான் கட்டப்பட்டுள்ளாய்” என்றதும், விவசாயிக்கு ஏதோ புரிந்தது.

மொபைல் போன் உட்பட, எல்லாம் நம் கட்டுப்பாட்டில்தான் உள்ளதென நினைக்கிறோம். ஆனால், உண்மையில் கதையே வேறு! இந்த லாக்-டவுன் நாட்களில் இணையத் தொடர்பு மட்டும் இல்லாமல் போயிருந்தால்? அழிவுகள் பலமடங்காகி இருக்கும். 

அந்த அளவுக்கு கண்ணுக்குத் தெரியாத கயிறுகளால் கட்டப்பட்டு இருக்கிறோம். யோசித்துப் பார்த்து, சரி செய்யவேண்டியது பல உண்டு. 

*அகிலத்தின் கயிறுகளை அவிழ்த்துவிட்டு, தேவ அன்பின் கயிறுகளால் கட்டப்படுவோம்!



267 நீங்கள்தான் அந்தச் சோம்பேறிகள்

ஒரு பழைய கிராமம். அதில் ஒரு கல்மண்டபம். அங்கே எப்போதும் மூன்று சோம்பேறிகள் உட்கார்ந்துகொண்டு வழிப்போக்கர்களை வம்புக்கிழுத்து நேரத்தைப் போக்கடித்துக் கொண்டிருப்பார்கள். ஒருநாள் அந்த வழியே ஒரு வெளியூர்க்காரர் வந்தார். சோம்பேறிகள் வழக்கம்போல் பேச்சு கொடுக்கத் தொடங்கினார்கள்.


ஒரு சோம்பேறி சொன்னான், “நேரம் போகவேண்டுமல்லவா. நமக்குள் ஒரு பந்தயம் வைத்துகொள்வோம். ஆளுக்கொரு கதை சொல்ல வேண்டும். அதை மற்றவர்கள் நம்ப வேண்டும். நம்பாவிட்டால் கதை கேட்டவர் கதை சொன்னவருக்கு அடிமை. சரிதானே ?”

வழிப்போக்கர் ஒப்புக் கொண்டார். கல் மண்டபத்தில் இருந்த ஒரு ஊர்க்காரர் ஒருவர் முன்னிலையில் கதை சொல்லத் தொடங்கினார்கள்.

முதல் சோம்பேறி சொன்ன கதை இது.

“ஒருநாள் பக்கத்துக் காட்டுக்குள்ளே ஒரு வகையான மருத்துவக் குணம் கொண்ட மரத்தின் காய்களைத் தேடிப்போனேன். அந்த மரத்தைத் தேடிக் கண்டுபிடிக்கவே ரொம்ப நேரம் ஆகிவிட்டது. அது உயரமான மரம். மரத்தில் ஏறிக் காய்களைப் பறித்துக்கொண்டிருக்கும்போதே இரவு நேரம் வந்துவிட்டது. ஒரே இருட்டு. கீழே இறங்க வழி தெரியவில்லை”.

வழிப்போக்கர் கேட்டார், “ அடடே என்ன செய்தீர்கள்?”

முதல் சோம்பேறி சொன்னான், “ வேறென்ன செய்ய? மரத்தின் மேலேயே தூங்கிவிட முடிவு செய்தேன்”.

“நல்ல முடிவு… நல்ல முடிவு…”

“ஆனால் அதில் ஒரு பிரச்சினை . எனக்குக் கட்டிலில் படுத்தால்தான் தூக்கம் வரும்”.

“அப்படியா? அப்புறம் என்ன செய்தீர்கள்?”

“ வேறென்ன செய்ய? கீழே இறங்கி, வீட்டுக்கு வந்து கட்டிலை எடுத்துக் கொண்டு போய், மரத்தில் படுத்துத் தூங்கினேன்.”

வழிப்போக்கர் சொன்னார், “பலே, பலே. . நல்லவேலை செய்தீர்கள்”.
ஊர்க்காரர் கேட்டார், “ இதை நீங்கள் நம்புகிறீர்களா?”
வழிப்போக்கர் சொன்னார்,

“ நிச்சயமாக…”
இரண்டாம் சோம்பேறி கதை சொல்லத் தொடங்கினான்.

“அப்போது நான் என் அம்மாவின் வயிற்றில் இருந்தேன். என் அம்மா அப்பாவிடம் வீட்டில் இருந்த கொய்யா மரத்தில் இருந்து கொய்யாப்பழம் பறித்து தரச் சொன்னார். அப்பா முடியாது, எனக்கு வேறு வேலை இருக்கிறது” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். எனக்கு வருத்தமாகப் போய்விட்டது. அம்மாவின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்று முடிவு செய்தேன்.

இரவு எல்லாரும் தூங்கியபின் அம்மாவின் வயிற்றில் இருந்து இறங்கி வந்து, வீட்டுக்கு வெளியே இருந்த கொய்யா மரத்தைப் பார்த்தேன். கொய்யாப்பழம் உயரத்தில் இருந்தது. உடனே மரத்தை வெட்டிச் சாய்த்து, கொய்யாப்பழத்தை அம்மா முன்னால் வைத்தேன். மரத்தையும் துண்டுதுண்டாக வெட்டி திண்ணையில் அடுக்கினேன். பிறகு அம்மா வயிற்றில் தூங்க போய்விட்டேன்.”வழிப்போக்கர் சொன்னார், “ ஆகா… ஆகா… என்ன ஒரு தாய்ப்பாசம்”.

ஊர்க்காரர் கேட்டார்,

“ இந்த கட்டுக்கதையை நீங்கள் நம்புகிறீர்களா?”

வழிப்போக்கர், “ நம்பாமலா? என்ன ஒரு தாய்ப்பாசம்” என்றான்.

மூன்றாவது சோம்பேறி கதை சொல்லத் தொடங்கினான்.

“ ஒரு நாள் நான் காட்டுக்கு முயல் வேட்டையாடப் போனேன். காடெல்லாம் அலைந்தும் ஒரு முயல்கூடக் கிடைக்கவில்லை. ஒரு புதரின் பின்னால் மறைந்து முயலுக்காகக் காத்திருந்தேன்.

அப்போது என் பின்புறமிருந்து ஒரு கர்ஜனை கேட்டது. திரும்பிப் பார்த்தேன். ஒரு சிங்கம். “அட ச்சீ… போ… நான் முயலுக்காகக் காத்திருக்கிறேன்” என்றேன். சிங்கத்திற்குக் கோபம் வந்துவிட்டது. அது கடித்து என் தலையை விழுங்கிவிட்டது.

“எனக்கோ அதைவிட ரொம்ப கோபம். கத்தியை எடுத்தேன். சிங்கத்தின் வயிற்றைக் கிழித்தேன். என் தலையை வெளியே எடுத்து கழுத்தில் மாட்டிக்கொண்டேன்…”

“அப்புறம் . .?”

“அப்புறமென்ன ? ஒரு முயலை வேட்டையாடி வீட்டுக்குக் கொண்டுவந்தேன்”.

வழிப்போக்கர் சொன்னார், “என்ன வீரம்… என்ன வீரம்…”

ஊர்க்காரர் கேட்டார், “ இதை நீங்கள் நம்புகிறீர்களா?”

வழிப்போக்கர் சொன்னார்,

“ஆமா… ஆமா…”.

கடைசியாக வழிப்போக்கர் ஒரு கதை சொல்ல ஆரம்பித்தார்,

“ ஒரு நாள் நான் பக்கத்து ஊர் சந்தைக்குப் போனேன். போகிற வழியில் ஒரு மனிதர் அடிபட்டுக் கிடப்பதைப் பார்த்து அவருக்கு வேண்டிய உதவிகளைச் செய்து அவர் உயிரைக் காப்பாற்றினேன். அவர் ஒரு மந்திரவாதி. அவர் போகும்போது எனக்கு மூன்று அவரை விதைகளைத் தந்து விட்டுப் போனார்.

நான் அந்த விதைகளை வீட்டுத் தோட்டத்தில் ஊன்றி வைத்தேன். மறுநாள் காலையில் பார்த்தால் அவை முழுச் செடிகளாக வளர்ந்திருந்தன. மதியம் பார்த்தால் மூன்று பூக்கள் பூத்திருந்தன.

மாலையில் அவை தரையில் உதிர்ந்து மூன்று மனிதர்களாக மாறிவிட்டன. அவர்கள் என்னிடம் வந்து ‘நாங்கள் உங்களுடைய அடிமைகள்’என்றனர்.

“அன்று முதல் அவர்கள் மூவரும் என்னிடம் அடிமைகளாக வேலை செய்து வந்தனர். ஆனால் அவர்கள் மூவரும் படு சோம்பேறிகள். ஒரு நாள் அவர்கள் மூவரும் ஊரைவிட்டு ஓடிவிட்டார்கள். அவர்களைத் தேடித்தான் நான் இந்த ஊருக்கு வந்தேன். நீங்கள்தான் அந்தச் சோம்பேறிகள்” என்று கதையை முடித்தார்.

ஊர்க்காரர் வாய்விட்டுச் சிரிக்கத் தொடங்கினார்…

சோம்பேறிகள் கதையை நம்பாவிட்டால் முதலில் போட்ட ஒப்பந்தப்படி மூவரும் வழிப்போக்கருக்கு அடிமைகள். நம்பினாலோ கதைப்படி மூவரும் வழிப்போக்கனுக்கு அடிமைகள். என்ன செய்வார்கள் அந்தச் சோம்பேறிகள்?.

என் அன்பு வாசகர்களே,
ஞானியாயினும், முட்டாளாயினும், சுறுசுறுப்புள்ளவனாயினும், சோம்பேறியாயினும் தன்னுடைய காரியத்தை மட்டும் செய்ய வேண்டும் பிறருடைய காரியத்தில் அவர்கள் அனுமதியில்லாமல் மூக்கை நுழைத்தால் இதுபோல் விழிபிதுங்கி நிற்க வேண்டியதுதான். 

உதாரணமாக ஒரு தெருவில் நடந்து போகும்போது நாம் யாரையும் தொந்தரவு செய்யாமல் அமைதியாக நடந்து சென்றால் யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை அதுவே ஒரு ஓரத்தில் படுத்திருக்கின்ற நாயை தொந்தரவு செய்தால் அது சும்மா விடுமோ??? இல்லை. மூச்சிரைக்க ஓட வேண்டிய நிலை ஏற்படும். அதுபோலவே பிறருடைய காரியங்களில் அவர்களின் அனுமதி இல்லாமல் இடைபடும் பட்சத்தில் நம் ஜீவனையே பணையம் வைக்க நேரிடும்.  வேதம் சொல்கிறது,

17 வழியே போகையில் தனக்கடாத வழக்கில் தலையிடுகிறவன் நாயைக் காதைப் பிடித்திழுக்கிறவனைப்போலிருக்கிறான். 

நீதிமொழிகள் 26:17

இக்கதையில் அந்த சோம்பேறிகள் தன் வழியே சென்ற வழிப்போக்கனை அடிமை படுத்த எண்ணி இறுதியில் அவர்களே அடிமையானார்கள். எனவே மற்றவர்களின் காரியத்தில் அனாவசியமாக தலையிடுவதை தவிர்ப்போம் நம் ஜீவனை இரட்சித்துக்கொள்வோம்.



268    அடங்கியது ஆத்திரமா ? 

' கோபத்தை நெகிழ்ந்து , உக்கிரத்தை விட்டுவிடு ; பொல்லாப்புச் செய்ய ஏதுவான எரிச்சல் உனக்கு வேண்டாம் ' ( சங் 37 : 3 ) 

பலத்த காற்று ! பெரும் மழை ! ஆள் நடமாட்டம் குறைந்த பகுதி ! பொழுது சாயும் நேரம் ! சாலை ஓரமாய் மெல்ல ஊர்ந்து வந்த பாம்பு ஒன்று , பகல் முழுவதும் சாப்பிட எதுவும் அகப்படாததால் , அகோர பசியில் தவித்துப் போயிருந்தது . சுற்றும் முற்றும் பார்த்த பாம்பு அருகிலிருந்த மர ஆசாரியின் பூட்டப்பட்ட கடைக்குள் நுழைந்தது . 

ஏதாவது சாப்பிட கிடைக்குமா என்று தேடியபடி உள்ளே சென்ற பாம்பு , ஒரு இடத்தில் மொத்தமாக பொருட்கள் குவித்து வைக்கப்பட்டிருந்ததை பார்த்தது . அங்கு தனக்கு ஏதாவது இரை அகப்படுமா என்று வேகமாக அவ்விடத்தை நோக்கி நகர்ந்தது . 

அப்படி அது செல்லும்போது அங்கிருந்த கோடாரியின் கூர்மையான பகுதியின் மேல் அதன் சரீரம் உரசியதால் காயம் ஏற்பட்டது . 

ஆத்திரமடைந்த பாம்பு , கோபத்தில் சீறிய படி முழு வேகத்தோடு அந்த கோடாரியை கடித்தது . அடுத்த நிமிடம் பாம்பின் வாயிலிருந்து இரத்தம் சொட்ட ஆரம்பித்தது .

 இன்னும் ஆக் ரோஷத்தோடு கோபம் பல மடங்கு மேலோங்க , கோடாரியை சுற்றி வளைத்துக்கொண்டு பலங்கொண்டமட்டும் அதை நெருக்கியது . மறுநாள் எப்போதும்போல கடையை திறந்த மர ஆசாரிக்கு , பயங்கர அதிர்ச்சி ! 

பார்ப்பதற்கே பயங்கர தோற்றமளித்த  பாம்பு கோடாரியை சுற்றியபடி இறந்து கிடந்தது . யாரோ தாக்கியதால் அந்த பாம்பு சாக வில்லை , தன்னுடைய மூர்க்க கோபத்தினிமித்தம் தன்னைத் தானே சாகடித்துக் கொண்டது என்ற உண்மை அவர் வாழ்நாள் பாடமானது .

 ஆலோசனை : 

' உன் மனதில் சீக்கிரமாய்க் கோபங்கொள்ளாதே ; மூடரின் நெஞ்சிலே கோபம் குடிகொள்ளும் ' ( பிர .7 : 9 ) ,

 கோபத்தை சொல்லிலோ , செயலிலோ கொட்டி சம்பந்தப்பட்டவரை புண்படுத்தி பாதித்துவிட்ட பெருமிதத்திற்குப்பின்னே உங்கள் சமாதானத்தையும் , சுகத்தையும் நீங்களே பாதித்துவிட்ட பரிதாபம் புதைந்திருக்கிறது .

 செய்முறைப் பயிற்சி ; உங்களை நீங்களே பாதிக்காதிருக்க கோபத்தை அடக்கும் விவேகத்தை பயிற்சியுங்கள் ( நீதி .19 : 71 ) , கோபப்பட்ட தருணங் களையும் , ஆத்திரத்தையும் ஆக்கிரோஷத்தையும் வெளிப்படுத்திய விதத்தையும் கண்முன் கொண்டு வந்து , அதை அடக்கும்படி பயன் படுத்தியிருக்க வேண்டிய விவேகத்தை பரிசீலனை செய்யுங்கள் .






164   இந்த கோணத்தில்  வாழ்கையை 

மாலையில் நடைப் பயிற்சியை
முடித்துக் கொண்டு அந்த தம்பதியினர்
வீட்டுக்கு நடந்து வந்து
கொண்டிருந்தனர். வரும் வழியில் ஒரு
கயிற்றுப் பாலம் ஒன்று இருந்தது.

சற்று இருட்டியதால் இருவரும்
வேகமாக நடக்கத் தொடங்கினர். திடீரென
மழைச் சாரலும் வீசியது. வேகமாக
நடந்து கொண்டிருந்தவர்கள்
ஓடத்தொடங்கினர். கணவர் வேகமாக
ஓடினார்.

கயிற்றுப் பாலத்தை கணவன் கடந்து
முடிக்கும் போது தான் மனைவி
பாலத்தினை வந்தடைந்தார். மழைச்
சாரலோடு கும்மிருட்டும் சேர்ந்து
வந்ததால் மனைவி பாலத்தை கடக்க
பயப்பட்டாள்.

அதோடு மின்னலும்
இடியும் சேர்ந்து கொள்ள பாலத்தின்
ஒரு பக்கத்தில் நின்று கணவனை
துணைக்கு அழைத்தால். இருட்டில்
எதுவும் தெரியவில்லை. மின்னல்
மின்னிய போது கணவன் பாலத்தின்
மறுபக்கத்தில் நின்று கொண்டிருப்பது
தெரிந்தது.
தன்னால் முடிந்த வரை சத்தமிட்டு
கணவனை அழைத்தாள்.

கணவன்
திரும்பிப் பார்க்கவில்லை. அவளுக்கு
அழுகையாய் வந்தது. இப்படி பயந்து
அழைக்கிறேன். என்ன மனிதர் இவர்
திரும்பி கூட பார்க்கவில்லையே என
மிகவும் வருந்தினாள். மிகவும் பயந்து
கொண்டே கண்களை மூடிக் கொண்டு
கடவுளிடம் பாரத்தைப் போட்டு மெல்ல
மெல்ல பாலத்தை கடந்தாள்.

பாலத்தை கடக்கும் போது இப்படி ஒரு
இக்கட்டான நிலமையில் கூட உதவி
செய்யாத கணவனை நினைத்து
வருந்தினாள். ஒரு வழியாக பாலத்தை
கடந்துவிட்டாள். கணவரை
கோபத்தோடு பார்க்கிறாள்.

அங்கு
கணவர் மழையில் ஒரு பக்கம் உடைந்து
தொங்கிக்கொண்டிருந்த கயிற்றுப்
பாலத்தை தாங்கிப் பிடித்துக்
கொண்டிருந்தார்.
சில சமயம் கணவர் குடும்பத்திற்கு
எதுவும் செய்யாமல் மௌனமாக
இருப்பதாக தோன்றும்.

ஆனால்
உண்மையிலேயே அவர் தன்
குடும்பத்தை தாங்கிப் பிடித்துக்
கொண்டுதான் இருப்பார். தூரத்தில்
பார்க்கும் போது அன்பு இல்லாதவர்
போல இருந்தாலும் அருகில் சென்று
பார்க்கும் போது தான் அவரின் அன்பு
தெரியவரும்.

வாழ்க்கை ஒரு விசித்திரமான விந்தை.
தூரத்தில் இருப்பது தெளிவாக
தெரிந்தாலும்
அருகில் வரும்போதே பொருள்
புரிகிறது.

இந்த கோணத்தில் என்றாவது வாழ்கையை பார்த்தது உண்டா நாம்?

269      சுயத்தை வெறுத்தல் Crucial

  " அப்படியே நீங்களும் உங்களைப் பாவத்திற்கு மரித்தவர்களாகவும் , நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்குள் தேவனுக்கென்று பிழைத்திருக்கிறவர்களாகவும் எண்ணிக்கொள்ளுங்கள் , " ரோமர் 6 :11

. விசுவாச வீரரான ஜார்ஜ் முல்லரிடம் ஒருமுறை வாலிபன் ஒருவன் சென்று " உங்கள் ஊழிய வெற்றிக்கு காரணம் என்ன " என்று கேட்டான் அதற்கு அவர் கிறிஸ்துவோடு சிலுவையில் அறையப்பட்டேன் . என் சுயம் மரித்தது . அதுவே என் ஊழிய வெற்றிக்கு காரணம் என்றார் . 

அப்போது அந்த வாலிபன் ஐயா சுயத்திற்கு மரிப்பது என்றால் என்ன என்று கேட்டான் . 

அதற்கு அவர் தம்பி , கல்லறைக்கு போய் அங்கே எழுதப்பட்டிருக்கும் மரித்தவர்களின் பெயரை வாசித்து , அவர்களை உன் மனம் போல வாய்க்கு வந்தபடியெல்லாம் பழித்துப் பேசு , பிறகு கொஞ்ச நேரம் கழித்துப் புகழ்ந்து பேசு , பிறகு என்னிடம் வா என்று சொல்லி அனுப்பினார் . 

அப்படியே இந்த வாலிபன் கல்லறைக்கு சென்று அவர்களைப் பழித்தும் , புகழ்ந்தும் பேசி விட்டு , திரும்பி வந்தான் . முல்லர் கேட்டார் . “ நீ கடினமாய் பேசினபோது , கல்லறைக்குள் அடக்கம் பண்ணப்பட்டவர்கள் உன் மேல் சீறினார்களா ? எனக் கேட்டார் . “ இல்லை அவர்கள் ஒரு பதிலும் பேசவில்லை என்றான் " 

நீ புகழ்ந்தபோது பெருமையடைந்து உன்னை பாராட்டினார்களா என்றார் இல்லை ,
 அப்பொழுதும் ஒன்றும் பேசவில்லை என்றான் .

 " சுயம் மரித்தல் என்பது அதுதான் மற்றவர்களுடைய புகழுரை நம்மை பெருமையடையவும் செய்யக் கூடாது . கடுஞ்சொற்கள் நம்மை பாதிக்கவும் கூடாது . ஜீவனைத் தந்த கிறிஸ்துவின் உதவியோடு எதையும் பெற்று கொள்வதுதான் சுயம் மரித்தல் என்று முல்லர் கூறினார் . 

கிறிஸ்தவ வாழ்க்கை என்பது சுயம் நம்மை விட்டு நீங்கி , கிறிஸ்து நமக்குள் வாழ்கிற அனுபவம் ஆகும் . அதாவது பழைய ஜென்ம சுபாவங்கள் நம்மிடமிருந்து வெளிப்படாமல் , கிறிஸ்துவின் சுபாவங்கள் வெளிப்பட வேண்டும் . 

எத்தனைதான் ஆவிக்குரியவர் என்று எண்ணப்பட்டாலும் ஒருவருடைய ஜென்ம சுபாவங்கள் மாறுவது மிகவும் கடினமாகவே காணப்படுகிறது . வெளிப்படும் சுபாவத்தின் அடிப்படையில் நம்மிடம் இன்னும் சுயம் வாழ்கிறதா அல்லது கிறிஸ்து வாழ்கிறாரா என அறிந்து கொள்ளலாம் . 

நம்மில் பலர் ஆவிக்குரியவர்களாக பக்தி வாழ்க்கை வாழ்கிறோம் . ஆலயம் செல்கிறோம் . ஞாயிறு பள்ளியில் பங்கு பெறுகின்றோம் . ஆனால் குடும்பத்தில் , சமுதாயத்தில் , படிக்கும் இடத்தில் , நமக்கு தர வேண்டிய முக்கியத்துவமும் மரியாதையும் சற்றுக் குறைந்து விட்டால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை . நம்முடைய நற்செயல்கள் கண்டு கொள்ளப்படாமல் போகும் போதும் . நாம் அதிகமாய் சோர்ந்து விடுகிறோம் .

 அதுபோல நாம் பாராட்டப்படும் போதும் , ஒரு கூட்ட ஜனங்களுக்கு முன் கௌரவிக்கப்படும்போதும் கிறிஸ்து இரண்டாவது இடத்திற்கு தள்ளப்படுகிறார் . நான் என்ற எண்ணமே மேலோங்கி பெருமை தலை தூக்குகிறது . பிறரால் இகழப்படும்போது சோர்ந்து விடுவதும் , பாராட்டப்படும் போது , பெருமை அடைவதும் கிறிஸ்துவுக்குள் இருக்கும் பிள்ளைகளுக்கு உகந்ததல்ல .

 நாம் கிறிஸ்துவின் சிலுவையின் முன்னால் ஜீவபலியாய் ஒப்புக்கொடுக்கும் போது நம் சிந்தனை இவ்விரண்டுக்கும் சாய்கிறதாய் இருக்க முடியாது . அருமை தம்பி , தங்கையரே , நாம் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றி வர விரும்பும் போது அவர் நமக்கு கொடுக்கும் முதல் நிபந்தனை தன்னைத்தான் வெறுக்க வேண்டும் என்பதே . 

அப்படியே நம்மை வெறுக்கும் போது , எந்தவித புகழ்ச்சியும் , இகழ்ச்சியும் நம்மை பாதிக்காது கிறிஸ்துவே நம்மில் உயர்த்தப்படுவார் . 

மேலே கொடுக்கப்பட்டுள்ள வசனமாகிய ரோமர் 6 : 11 - ன் முதற் பத்தியில் அப்படியே நீங்களும் உங்களை பாவத்திற்கு மரித்தவர்களாகவும் என்று பார்க்கின்றோம் . 

நாம் நம் சுயத்தை வெறுக்கும் போது , அதோடு கூடமனந்திரும்பும் அனுபவத்தையும் பெறுகிறோம் . 

 மனந்திரும்பும் முன்புவரை நாம் பாவமாகிய பழைய எஜமானனுக்கு ஊழியம் செய்கிறவர்களாயிருந்தோம் . பாவத்தில் நிலைத்து பாவத்தை சந்தோஷமாக பருகுகிறவர்களாயிருந்தோம் . கிறிஸ்துவின் சிலுவைக்கு முன்பாக விழுந்து ' நான் ஒரு பாவி ' என்று உணர்ந்து உங்கள் பாவங்களை அவரிடம் அறிக்கையிட்டு மனந்திரும்புவீர்களானால் பாவங்களை மன்னித்து உங்களை தமது பிள்ளைகளாக ஏற்றுக் கொள்கிறார் .

 இப்பொழுது நீங்கள் புதிதான ஜீவனுள்ளவர்களாகப் பாவத்துக்கு மரித்தவர்களாக காணப்படுகிறீர்கள் ஒரு காலத்தில் கண்களின் இச்சைப்படி நீங்கள் வாழ்ந்தது உண்மைதான் . ஆனால் இன்றைக்கு நீங்கள் பாவத்துக்கு நீங்கி விடுதலை பெற்றிருக்கிறீர்கள் .

 மரித்தவன் பாவத்துக்கு நீங்கி விடுதலையாக்கப்பட்டிருக்கிறானே . ரோமர் 6 : 7 . 

என்று வேதம் நமக்கு கூறுகிறது . இனி நம் வாழ்க்கை கிறிஸ்துவோடு இணைந்த தாயிருக்கும் . உங்கள் சுயம் அவரோடு கூட சிலுவையில் அறையப்பட்டது . அவரை உங்கள் மீட்பராக , இரட்சகராக கண்டுக்கொள்ள தேவன் உதவி செய்கிறார் . இவ்விதமாக நீங்கள் மாற்றப்பட்டிருக்கிறீர்களா ? 

உள்ளான இருதயத்தில் மனமாற்றம் இல்லாமல் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் பழைய மனுஷனை ஒழித்து , உங்களை புதிய மனுஷனாக வெளிப்படுத்த முடியாது . முந்தின நடக்கைக்குரிய மோசம் போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனுஷனை நீங்கள் களைந்து போட்டு உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாகச் சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக் கொள்ளுங்கள் என பவுலடியார் எபேசியர் 4 : 22-24ல் கூறுகிறார் . 

அன்பு வாலிபத் தம்பி . தங்கையரே , சுயத்தை வெறுத்தால் கிறிஸ்து இயேசுவுக்கு நேராய் மனந்திரும்பலாம் . அவரின் மன்னிப்பைப் பெற்று மனமாற்றமடையலாம் . அவருடைய சாயலான புதிய சுபாவங்களைப் பெறலாம் . கிறிஸ்துவையும் அவருடைய வார்த்தைகளையும் நேசித்து அவரைப் பின்பற்ற முடியும் . பரிசுத்த ஆவியானவர் அனுதினமும் நம் வாழ்வை நடத்துவார் . நித்தியத்தை சுதந்தரிக்கச் செய்வார் . ஆமேன் . 


270 கத்தரிக்காய் ஓட்டம்!

அந்த ஊர்ல ஒரு பெரிய்ய்ய்ய்ய காய்கறித் தோட்டம் இருந்துச்சாம். அந்தத் தோட்டத்துல நிறைய்ய்ய்ய்ய்ய காய்கறிகள் இருந்துச்சாம். அதில், பர்பிள் நிற கத்தரிக்காய்களும் முளைச்சிருந்துச்சாம். அதுல மூணு கத்தரிக்காய்கள் குளோஸ் ஃப்ரெண்ட்ஸ் (Close Friends) செடியில், அடுத்தடுத்து இருந்த மூணும் ஊஞ்சல் மாதிரி ஆடி விளையாடுமாம்.

டெய்லியும்(Daily) காலையில ஷவர்ல குளிக்கிறது, மண்ல இருக்கிற சத்துகளைச் சாப்பிடறது, சூரிய ஒளியில காயுறதுனு ரொம்ப என்ஜாய் பண்ணிட்டிருந்துச்சுங்க.

பக்கத்து ஊர் விவசாயிக்கு பர்பிள் கத்தரிக்காயைத் தன் தோட்டத்துல விளைவிக்க ரொம்ப நாளா ஆசை. அந்தக் கத்தரிக்காய் வெளைஞ்ச ஊரைத் தேடி வந்தாராம். இதைத் தெரிஞ்சுகிட்ட மூணு பர்பிள் கத்தரிக்காயும் பயந்துபோச்சாம்.

‘‘இந்த மனுசங்க ரொம்ப மோசம்பா. நம்மள கொழம்புல தூக்கிப்போட்டு சாப்ட்ருவாங்க. அந்த விவசாயிக்கு நம்ம விதை வேணுமாம். நம்மளை  காயப்போடுவாங்களாம். வாங்க, நாம மூணு பேரும் தப்பிச்சு ஓடிருவோம்''னு ஒரு கத்தரிக்காய் சொல்லவும், மத்த ரெண்டும் ‘சரி'னு சொல்லிச்சுங்களாம்.

அந்தச் செடியிலிருந்து கட் பண்ணிட்டு குதிச்சு, கண்ணுமண்ணு தெரியாத அளவுக்கு ஓட்டம் பிடிச்சதுங்க.

வயல், ரோடு தாண்டி, காட்டுக்குள்ளே ஓடறப்போ, ஏதோ பெரிய கல் தடுக்க, மூணும் பறந்துபோய் விழுந்துச்சுங்களாம். திரும்பிப் பார்த்தா, அது கல் இல்லே... காட்டு ராஜா சிங்கம்.

‘‘யாருடா என் மேலே இடிச்சது?''ன்னு கோபத்தோடு கத்தரிக்காய்களைத் தொரத்துச்சாம் சிங்கம்.

‘‘ஆஹா.. மனுசங்ககிட்ட தப்பிக்க நெனைச்சு சிங்கத்துகிட்ட மாட்டிகிட்டோம்டா... ஸ்பீடா ஓடுங்க... இல்லே சட்னிதான்'னு ஓடுச்சுங்க. 

சிங்கத்தைப் பார்த்துக்கிட்டே ஓடினதில்,  தூங்கிட்டிருந்த சிறுத்தையின் மூக்கு மேலே விழுந்துச்சுங்க.

‘ஹாச்ச்ச்சு'னு தும்மி முழிச்ச சிறுத்தையும் கத்தரிக்காய்களைத் துரத்த ஆரம்பிச்சது. ‘‘ஆஹா... நாம இன்னிக்கு நிஜமாவே சட்னிதான்'னு இன்னும் வேகமா ஓடின மூணு கத்தரிக்காய்களும் வழியில இருந்த ஒரு பள்ளத்தில் இறங்கிடுச்சுங்க.

‘‘அச்சோ... முடியலப்பா!  மனுசங்ககிட்டேயிருந்து தப்பிக்க நினைச்சு, சிங்கம், சிறுத்தைனு சிக்கி, இப்போ பள்ளத்துல கெடக்கோமே... பேசாம தோட்டத்துக்கே போயிடலாம்டா... நேரத்துக்குத் தண்ணீ, வெயில், சாப்பாடுனு இருந்தோம். இப்படியே ஓடிட்டிருந்தா, ஒல்லிப்பிச்சானா(Lean) மாறிடுவோம்'’னு ஒரு கத்தரிக்காய் சொல்லிச்சு.

‘‘சரி, நம்மளை தொரத்தின சிங்கமும் சிறுத்தையும் என்ன ஆச்சுன்னு பார்க்கலாம்'’னு வெளியே தலையை நீட்டிச்சு இன்னொரு கத்தரிக்காய்.

சிங்கமும் சிறுத்தையும் கோபமா நின்னுட்டிருந்துச்சுங்க.

‘‘இப்போ மேலே போனா அவ்வளவுதான். கொஞ்ச நேரம் பொறுத்திருந்து பார்ப்போம். ரெண்டும் அலுத்துப்போய் கிளம்பினதும் தோட்டத்துக்குப் போவோம்’’னு சொல்லிச்சு மூணாவது கத்தரிக்காய்.

அப்புறமென்ன... சிங்கமும் சிறுத்தையும் காத்திருந்து காத்திருந்து தூங்கினதும், மெதுவாக மேலே வந்துச்சுங்க.

மறுபடியும் காடு, ரோடு, வயல் என ஓடி தோட்டத்துக்கே வந்து சேர்ந்தப்போ, நடுராத்திரி ஆகிடுச்சாம். 

கத்தரிக்காய்களுக்கு ஒரே களைப்பு. தங்கள் செடியிடம் போய், ‘‘செடியே... செடியே... எங்களை மறுபடியும் உன்னோடு சேர்த்துக்க’’ன்னு கெஞ்சிக் கூத்தாடிப்பார்த்தாங்க.... 

‘‘என்ன விளையாடறீங்களா? நினைச்சா கிளம்பறதுக்கும் நினைச்சா ஒட்டிக்கிறதுக்கும் இது என்ன பொம்மை விளையாட்டா? இயற்கை விஷயம் கண்ணுங்களா. தோட்டக்காரர் வந்து தேவையான கத்தரிக்காய்களைப் பறிச்சுட்டுப் போய்ட்டார். இனி உங்களை என்னால ஒட்டவெச்சுக்க முடியாது ஸாரி''ன்னு சொல்லிடுச்சு செடி.

மூணு கத்தரிக்காய்களுக்கும் ரொம்ப வருத்தமாப் போச்சு.  ‘என்ன செய்யறது?’ன்னு நைட் ஃபுல்லா அழுதுட்டே தூங்கிடுச்சுங்க.

மறுநாள்... ‘அவங்க அவங்களுக்குன்னு ஒரு கடமை இருக்குப்பா. அதுக்காகத்தான் இயற்கை படைக்குது. அதை நாம செஞ்சுதான் ஆகணும். விதையைக் கொடுக்க பயந்துதானே ஓடினீங்க. இப்படியே இருங்க. காய்ஞ்சு போய்  மண்ணுக்குள்ளே போவீங்க. மறுபடியும் செடியா மொளைச்சு நீங்க மூணு பேரும் இன்னும் பல கத்தரிக்காய்களா மாறுவீங்க. பலருக்கும் உபயோகமா இருப்பீங்க’’ன்னு செடி சொல்லிச்சாம்.

அந்தக் கத்தரிக்காய்கள் அதே மாதிரி மண்ணுக்குள் புதைஞ்சுதுங்களாம். கொஞ்ச நாளில் அங்கே ஒரு செடி துளிர்க்க ஆரம்பிச்சது. அதன் ஒவ்வொரு இலையும் சந்தோஷமா சிரிக்க ஆரம்பிச்சது.

எனதருமை வாசகரே, 
இந்த கதையில மூணு கத்தரிக்காவும் அவங்க நினச்சத செய்யனும்னு நினச்சுது. ஆனா அவங்களுக்கு எங்க போனும் என்ன செய்யனு தெரியல. அதுங்க சின்னதா இருக்குறபோ யாரும் அவங்களுக்கு சொல்லிக் கொடுக்கல. ஆகையால் அதுங்களுக்கு சரினு பட்டத செஞ்சிதுங்க அதனால பெரிய பெரிய ஆபத்துல மாட்டிகிச்சுதுங்க. 

நம்ம பைபிள்ள சாலெமோன் மாமா என்ன சொல்றாங்க

பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து: அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான். 
நீதிமொழிகள் 22:6

நம்ம பசங்களுக்கு நல்லது எது? கெட்டது எது?னு தெரியாது. அத பெற்றோர்  நம்ம தான் சொல்லி குடுக்கணும். ஆனா பெற்றோருக்கு இப்போ இத சொல்லி குடுக்க நேரமே இல்ல. பசங்களுக்கு அத கேக்குரதுனாவே ரொம்ப கடுப்பா இருக்கு. ஏனா நாம நம்ம பசங்களுக்குனு டைம் குடுக்குறது இல்ல அதனால அவங்களும் அதுல விருப்பபடுறது இல்ல. ஆகையால் நமக்கு டைம் இருக்கறப்போ பசங்களை கூப்பிட்டு பேசுங்க, நல்லத சொல்லி குடுங்க. சின்னதுல இருந்தே வசனத்தை படிக்க வைங்க. நம்மலால நம்ம பசங்கள கடைசி வர பாத்துக்க முடியாது ஆனா நம்ம சின்னதுல நம்ம பசங்களுக்கு சொல்லி குடுக்குற வசனங்கள் கிழவன் (கிழவி) ஆனாலும் கூடவே இருக்கும். 

எனவே பெற்றோராகிய நாம் நம்முடைய நாட்கள் வரை பிள்ளைகளை நல்ல வழியில் நடத்துவோம், முதிர்வயதிலும் அவர்களை நல்வழியில் நடத்த தேவன் போதுமானவராய் இருக்கிறார்.

#நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்



_ஒரு பையன் முட்டை

No comments:

Post a Comment