Friday, 12 June 2020

சிறுகதை 271-280

271              அவர்தான் என் முதலாளி"*


_ஒரு பையன் முட்டை கூடைகளுடன் மிதிவண்டியில் சென்றான்_ _கல் தடுக்கி மிதிவண்டியுடன் விழுந்துவிட்டான்_  
 _முட்டைகள் அனைத்தும் உடைந்து      விட்டன கூட்டம் கூடி விட்டது_                                                        *வழக்கம்போல்  இலவச உபதேசங்கள்.:.*                                   *பாத்துபோக கூடாதா?* "
" _என்னடா... கவனம் இல்லாம   சைக்கிள்_ _ஓட்டுற?" அப்போது ஒரு பெரியவர் அங்கு வந்தார்_ 
 _அடடா...ஒரு சின்ன பையன் இப்படி விழுந்து விட்டானே_ !! _அவனது முதலாளிக்கு இவன்தானே பதில்                              சொல்லணும்?_ _ஏதோ என்னால் முடிந்த உதவி என என ஒரு பத்து ரூபாயை குடுத்தார்_ _இங்கே இருப்பவர்கள் நல்ல மனிதர்கள

் உபதேசம்_மட்டுமில்ல ஆளுக்கு     கொஞ்சம் பணமும் தருவார்கள்_  _வாங்கிகொள்' என்றார்._ _மக்களும் இவரது செய்கை பேச்சை பார்த்து பணம் தந்தார்கள்_ 
 _முட்டை உடைந்ததைவிட அதிக பணம் சேர்ந்து விட்டது_  _பையனுக்கு மகிழ்ச்சி அனைவரும் கலைந்து_ _சென்றுவிட்டார்கள்_  
 _அப்போது ஒருவர் அந்த பையனிடம் " தம்பி, அந்த பெரியவர் இல்லேன்னா_ _உன் முதலாளிகிட்டே என்ன பாடு படுவயோ என்றார்_                                                         _பையன் சிரித்துக்கொண்டே சொன்னான்  அந்தப் பெரியவர் தான்_                                                                                  *சார் என் முதலாளி"*



272               தேடல்


இவ்வுலகில் வாழ்கின்ற அனைவரும் ஒவ்வொன்றை தேடி செல்கின்றனர். சில பணத்தை தேடி செல்கின்றனர், சிலர் பொருளைத் தேடி செல்கின்றனர் வேறு சிலர் மனம்போன போக்கில் வாழ்கின்றனர். ஆனால் நம் தேவனை மாத்திரம் தேட முடியவில்லை. ஏனெனில் அதற்குரிய நேரம் இருப்பதில்லை. உலக காரியங்களை பார்ப்பதற்கே நேரம் சரியாக இருக்கிறது சிலருக்கோ அதுவும் இல்லை.

எதை தேட வேண்டும்? நாம் தேடுவதால் கிடைக்கும் பலன் என்ன? என்பதை இக்கதையின் மூலம் காண்போம்.....


பழங்குடி மக்கள் வாழும் ஒரு காடு. அங்கிருந்த குடிசையொன்றில் ஒரு மனிதரும் அவரது நான்கு மகன்களும் வாழ்ந்து வந்தனர்.

மூத்தவன் கூர்ங்கண்ணன். கூரிய பார்வையுடையவன். 

அடுத்தவன் நற்செவியன். எவ்வளவு சிறிய ஒலியையும் கேட்டு அது எவ்வளவு தொலைவிலிருந்து வருகிறது, யாருடையது என்று கூறிவிடுவான்.

 மூன்றாவது மகன் வல்லவன். புலி, சிங்கம் போன்ற கொடிய விலங்குகளுடனும் சண்டையிட்டு வெல்லக் கூடியவன். 

நான்காவது மகன் மிகவும் சிறுவன்.

ஒருநாள் காட்டுக்கு வேட்டையாடச் சென்ற தந்தை வீட்டுக்குத் திரும்பவில்லை. பிள்ளைகள் அனைவரும் வருத்தப்பட்டனர். ஆனால் ஒருவருக்காவது தந்தையைத் தேடிச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் வரவில்லை. தந்தை வந்துவிடுவார் என்று நம்பிப் பேசாமல் இருந்துவிட்டனர். சில நாட்களில் காட்டு மிருகங்களால், தந்தை அடிபட்டு இறந்திருக்கலாம் என்ற முடிவுக்கும் வந்துவிட்டனர்.

கடைக்குட்டி மகன் மட்டும் அப்பா எங்கே? என்று கேட்டு அழுது கொண்டிருந்தான். அப்பாவைப் பார்க்க வேண்டுமென்று தனது சகோதரர்களை நச்சரிக்க ஆரம்பித்தான்.

அவனது தொந்தரவைத் தாங்கமுடியாமல் அண்ணன்மார் மூவரும் தந்தையைத் தேடிப் புறப்பட்டனர்.

காட்டுக்குள் சென்று கொண்டிருந்தனர். கூர்ங்கண்ணன் சில காலடித் தடங்களைப் பார்த்தான். “”இது நமது தந்தையின் காலடித் தடம். இந்த வழியாகத்தான் அப்பா சென்றிருக்க வேண்டும்” என்றான். மேலே சென்றனர்.

இப்பொழுது அடர்ந்த அந்தக் காட்டுக்குள்ளிருந்த மெல்லியதாக ஒரு குரல் கேட்பதாக நற்செவியன் கூற, இன்னும் முன்னேறிச்சென்றனர்.

அங்கே புலி ஒன்றுடன் தந்தை சண்டையிட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தனர். உடனே மூன்றாவது மகன் வல்லவன் பாய்ந்து, புலியுடன் சண்டையிட்டு அதைக் கொன்று, தந்தையைக் காப்பாற்றினான்.

அனைவரின் கண்களிலும் ஆனந்தம் பொங்கியது. தந்தையுடன் வீடு திரும்பினர்.

வீட்டுக்கு வந்ததும் கூர்ங்கண்ணன்,”"நான் அப்பாவின் காலடித் தடங்களைக் கண்டதால்தான் அவரை மீட்டுக் கொண்டு வந்தோம்” என்றான்.

நற்செவியன் கூறினான், “”நான் அப்பாவின் குரலைத் துல்லியமாகக் கேட்டதால்தான் அவரைக் காப்பாற்ற முடிந்தது!”

“”நான் என் உயிரையும் பொருட்படுத்தாமல் அந்தப் புலியுடன் சண்டை செய்யவில்லையென்றால் அப்பாவின் உயிரைக் காப்பாற்றியிருக்க முடியாது!” என்று தோளைத் தட்டிக் கொண்டு கேட்டான் வல்லவன்.

கடைக்குட்டி மகன் சொன்னான், “”அப்பாவைத் தேடுங்கள், தேடுங்கள் என்று நான் உங்களைத் தொந்தரவு செய்திருக்காவிட்டால் நீங்கள் எப்படி அப்பாவைக் கண்டுபிடித்திருப்பீர்கள்” என்று.

உண்மையும் அதுதானே! தேடினால்தானே கண்டடைய முடியும்?

என் அன்பு வாசகர்களே,
எந்த ஒரு காரியமும் தேடினால் தான் கிடைக்கும் என்பதே இக்கதையின் கருத்து.

இக்கதையில் வருவதுபோல் நமக்கு ஒரு ஆசை ஒரு ஏக்கம் இருந்தால் மட்டும் தான் நாம் தேவனை தேடுவோம். இல்லையென்றால் அந்த நேரத்தை வேறு எதுவது ஒரு‌ காரியத்தில் செலவிடுவோம். அப்படி செய்வதால் நாம் தேவனை தேடும் போது அவர் நமக்கு தென்படுவதில்லை.

நமக்கு ஒன்றுமில்லாத சமயத்தில் தேடுவதில் எந்த பயனுமில்லை. எல்லாம் இருக்கின்றன சமயத்தில் தேவனை முழு இருதயத்தோடும் தேடுவது தான் உண்மையான கிறிஸ்தவம் அதை தான் வேதம் இவ்வாறு கூறுகிறது


முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்.

மத்தேயு 6:33

எனவே நாம் ‌தேவனுடைய ராஜ்யத்தையும் நீதியையும் தேடுவோம் ஆசீர்வாதத்தை கூட பெற்றுக் கொள்வோம்.

மேலும் நான் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும், தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள், தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்.

லூக்கா 11:9

நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!!!!



273         உயிர் இருக்கும் வரையே

ஒரு குடும்ப தலைவர் இறந்து விட்டார்.
அவருக்கு வயது 40 கூட ஆகவில்லை.
அவரது மனைவி, 9 வயதான மகன், பெற்றோர் அனைவரும் உடலின் அருகே அமர்ந்து கதறி அழுது கொண்டிருந்தனர்.
.
இந்தக் குடுமபத்துக்கே குருஜியாக விளங்குபவர் அப்போது அங்கு வந்தார்.
அவரைக் கண்டதும் அவர்கள் மேலும் பெரிதாக அழ ஆரம்பித்தனர்..!
.
இறந்தவரின் மனைவி சொன்னாள்..
”குருஜி.! இவ்வளவு இளம் வயதில் என்னையும் என் மகனையும் நிர்க்கதியாக விட்டுப் போய் விட்டாரே..?
நான் என்ன செய்வேன்..? அவர் உயிருடன் வருவாரறென்றால் அதற்காக நான் எதுவும் செய்வேன்..!” என்றார்..!
.
குருஜி அவர்கள் அனைவருக்கும் ஆறுதல் சொல்லி சமாதானப் படுத்த முயன்றார்.. ஆனால் அவர்கள் சோகம் குறையவில்லை...
.
கடைசியில் அவர் கேட்டார்
”ஒரு கோப்பை தண்ணீர் கொண்டு வாருங்கள்”
தண்ணீர் வந்தது. அவர் கோப்பையை உடலின் அருகில் வைத்துத் தானும் அமர்ந்தார்.
பின் சொன்னார்..

”இறந்தவர் உயிருடன் திரும்பி வர வேண்டும் என நினைப்பவர், இந்தத் தண்ணீரை அருந்தலாம்.
இறந்தவர் திரும்பி வருவார். ஆனால் அதற்குப் பதில் நீரை அருந்தியவர் மரணமடைவார்..!” என்றார்..!
.
அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். ஆனால் யாரும் முன் வரவில்லை.
அவர் இறந்தவரின் தந்தையைக் கேட்டார்”
ஐயா.! நீங்கள் உங்கள் மகனுக்காக உங்கள் உயிரைக் கொடுக்க மாட்டீர்களா.?”
.
தந்தை சொன்னார்
”நான் இறந்து விட்டால் என் மனைவிக்கு யார் ஆதரவு.?அவளுக்காக நான் வாழ வேண்டும்”
.
தாயைக் கேட்க அவள் சொன்னாள்
”அடுத்த மாதம் என் மகளுக்குப் பேறுகாலம். நான் இறந்து விட்டால் அவளுக்கு யார் உதவுவது.?”
.
மனைவி சொன்னாள்
”நான் இறந்தால் என் பையனை யார் கவனித்து வளர்ப்பது.? அவனுக்காக நான் வாழ வேண்டும்”
.
குருஜி பையனைப் பார்த்துக்கேட்டார்
”குழந்தாய், உன் தந்தைக்காக நீ உயிர் விடுவாயா.?”
.
அவன் தாய் உடனே அவனை இழுத்து அணைத்துக் கொண்டு சொன்னாள்
”குருஜி, உங்களுக்கென்ன பைத்தியமா.?அவன் ஒரு குழந்தை. இனிமேல் தான் அவன் வாழ்க்கையே இருக்கிறது. அவனைப் போய் நீங்கள் கேட்கலாமா.?”
.
குருஜி சொன்னார்
”உங்கள் அனைவருக்கும் ஏதாவது கடமை, பொறுப்பு இருக்கிறது என்று நீங்கள் சொல்கிறீர்கள்.
அப்படியானால் இவருக்கு இங்கு வேலையில்லை என்றாகிறது. எனவே தான் கடவுள் அவனை எடுத்துக் கொண்டார் . இப்போது இறுதி யாத்திரைக்கான ஏற்பாடுகளைக் கவனியுங்கள்” சொல்லி விட்டு அவர் சென்று விட்டார்..!
”உயிர் இருக்கும் வரையே அன்பு, பாசம் எல்லாம்”
“பின் மிஞ்சுவது மகிழ்ச்சியான நாட்களின் நினைவுகள் மட்டுமே..!!”.
எனவே வாழும் வரை புன்னகைக்கும் முகத்தோடு மகிழ்வாய் வாழ முயற்சிப்போம்



274           ஜெபமின்மை

நற்செய்தியாளர் ஒருவர் அமெரிக்காவிலுள்ள மிகப்பெரிய பாவத்தைக் குறித்து அறிவிக்கப் போகிறேன் என்று விளம்பரப்படுத்தினார். குறிப்பிட்ட இடத்தில் திரளான மக்கள் கூடி விட்டனர். 'எதை மிகப்பெரிய பாவம் என்று சொல்லப் போகிறார்' என்பதை அறிந்து கொள்ள ஆர்வமிக்கவர்களாக இருந்தனர். 

அமெரிக்காவில் நடக்கும் தொடர் கொலைகளைக் குறித்துப் பேசுவாரோ என்று சிலர் நினைத்தனர். போதை மருந்துக்கு அடிமையாக்கப்பட்டிருக்கும் இளைஞர் சமுதாயத்தைக் குறித்து சொல்லப் போகிறாரோ என்று சிலர் நினைத்தனர். அமெரிக்காவில் நிலவி வரும் பலவிதமான ஒழுக்க கேடுகளை குறித்து, பேசப் போகிறாரோ என்று சிலர் நினைத்தனர். இவ்விதமான எதிர்பார்ப்போடு மக்கள் கூடியிருந்தனர்.

நற்செய்தியாளர் பிரசங்கிக்க ஆரம்பித்தார். ஜெபமின்மையே அமெரிக்காவில் நடக்கும் எல்லாப் பாவங்களுக்கும் காரணம் என்பதை முக்கியப்படுத்தி பேசினார். மக்கள் ஜெபிக்காதபோது, இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதி  மேற்கொள்ளுவான். 

இந்நிலை தொடரும்போது, சாத்தான் குறிப்பாக இளைஞர்களை துணிகரமான பாவங்களை செய்யத் தூண்டுவான். குடும்ப நல் உறவுகளை  உடைத்து சிதறடிப்பான். குடும்ப ஐக்கியம் குலைக்கப்படும், குழப்பங்கள் உருவாகும், பிரச்சனைகள் பெரிதாகும், இதை தொடர்ந்து எல்லாவித பாவங்களும் உட்பிரவேசிக்கும் என்று விளக்கினார்.

ஆம், நாம் ஆலய ஆராதனையில் கிரமமாய் பங்கெடுப்பது குறித்தோ, வைராக்கியமாய் ஊழியம் செய்வதைக் குறித்தோ சாத்தான் கவலைப்பட மாட்டான். ஆனால் நாம் எந்த அளவு ஜெபத்தில் கவனமாயிருக்கிறோம் என்பதைப் பார்த்தால் சாத்தான் கலங்கி விடுவான். 

சாத்தானுடைய அம்புகள் ஜெபத்தைத்தான் குறி வைக்கின்றன. நாம் ஜெபிக்காமல், ஊழியம் செய்யலாம், ஜெப ஜீவியம் இல்லாதவர்கள் தேவனை ஆரவாரமாய் ஆராதிக்கலாம். தேவனோடு ஜெபத்தின மூலம் நெருங்கிய உறவு வைத்திராமல் நாம் செய்யும் அனைத்தும் எந்த வித மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்பதை நன்கு அறிந்த பிசாசானவன் எல்லாவற்றிற்கும் அடிப்படை காரணமாக ஜெபத்தையே குறி வைக்கிறான். 

ஜெபத்தை தடுப்பதற்கே எல்லாவிதத்திலும் முயற்சி செய்வான். அந்த ஜெபத்தை தடுத்து விட்டால், எல்லாவித பாவத்தையும் உட்புகுத்தி விடலாம், மனச்சாட்சியை மழுங்கச் செய்து இதயத்தை உணர்வற்றதாக்கி விடுவதுதான் அவனது நோக்கம். 'ஜெபமே முக்கியம்' 'ஜெபமே ஜெயம்' ஜெபமே பாவத்திலிருந்து நம்மை தப்புவிக்கும்' என்றெல்லாம் சொல்கிறோம், பாடுகிறோம் இன்றிலிருந்து நாம்; ஜெபிக்க ஒரு தீர்மானம் எடுப்போமா? நாம் ஜெபிக்கும்போது, கிறிஸ்தவ ஒழுங்கிற்காகவோ, கடமைக்காகவோ செய்யலாம், அல்லது தகப்பன் பிள்ளை உறவோடு ஆண்டவரோடு பேசலாம், அதாவது நம்முடைய இருதயம் எப்படி இருக்கிறதோ அதனை அப்படியே அவரிடம் கொட்டி விடுவதாகும். 

ஜெபம் வெறும் வார்த்தைகளாய் இராமல் இருதயத்தின் ஏக்கமாய் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஜெபம் உயிருள்ளதாகவும், சிறுபாவம் இருதயத்தில் நுழைந்தாலும் அதை உணர்த்துவதாகவும், தேவனோடுள்ள உறவை கட்டி எழுப்புவதாகவும் இருக்கும்.

பிரியமானவர்களே, குடும்ப ஜெபத்திலும் குழு ஜெபத்திலும் திருப்தி அடைந்து நின்று விடாதீர்கள்.  ஒரு அதிகாரியிடம் குழுவாக சென்று ஒரு விண்ணப்த்தை சொல்வதற்கும், தனியாக சென்று உள்ளத்தில் உள்ளதை உணர்வு பூர்வமாக சொல்வதற்கும் வித்தியாசம் உண்டல்லவா? அதுபோல தனி ஜெபமே ஒருவனை தேவ உறவில் வளரச்செய்து பாவத்தை சுட்டிக்காட்டி கண்ணிகளில் விழாமல் சோதனைக்கு தப்பிக்க வழிவகுக்கும். ஜெபமே நமது உயிர் மூச்சாக இருக்கட்டும், ஜெபமே நம் ஜீவனாக மாறட்டும். ஆமென், அல்லேலூயா. (1 சாமுவேல் 12:23). 



275         உங்கள்_தைாியத்தை 
                   விட்டுவிடாதீா்கள். . 

முன் ஒரு காலத்தில் சாந்தவர்மா என்ற அரசன் திருவஞ்சூர் என்ற சிறிய நாட்டை ஆண்டு கொண்டிருந்தான்.

சாந்தவர்மா மிகவும் நல்லவன். நீதிக்குக் கட்டுப்பட்டவன். அநியாயம் செய்பவர் யாராக இருந்தாலும் அவனைக்கொன்று விடுவான். 

மக்களுக்கு நல்ல ஆட்சி அளிக்க வேண்டும், நாட்டு மக்கள் பயமின்றி சுபீட்சமாக வாழவேண்டும். அதுதான் அவனது லட்சியம். 
அந்த லட்சியத்துக்காக உயிர் கொடுக்கவும் தயங்க மாட்டான். 

அம்மன்னனை மக்கள் மிகவும் அன்புடன் நேசித்தனர். அமைதியாக இருந்த மக்களுக்குத் திடீரென சோதனை ஏற்பட்டது.

திருவஞ்சூர் நாட்டில் ஒரு மந்திரி இருந்தான். அவன் பெயர் கேளுத்தம்பி. கேளுத்தம்பி மிகவும் கொடியவனாக இருந்தான். அவன் அரசனுக்குத் தெரியாமல் மக்களிடம் கொள்ளையடித்து வந்தான். இந்த சமாச்சாரம் தெரிந்த போது நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்துவிட்டது. ஒருநாள் மந்திரி கேளுத்தம்பியை அழைத்து அரசன் ஆத்திரப்பட்டான்.

"என் நாட்டைச் சீரழியச் செய்துவிட்டாய். இனிமேல் இது நடக்காது. நான் கடுமையான நடவடிக்கை எடுக்கப்போகிறேன்,"  என்று கூறிக்கொண்டு எழுந்தான் அரசன். ஆனால் கொடியவனான மந்திரி ஏற்கனவே சேனாதிபதி போன்ற பொறுப்புள்ள அதிகாரிகளைக் கைக்குள் போட்டுக்கொண்டான். அரசன் எழுந்தவுடன் மந்திரி அரசன் மீது பாய்ந்து சண்டை போட்டான்.

அரசனும் கடுமையாகச் சண்டையிட்டும் பலனில்லை. மந்திரியும் சேனாதிபதியும் சேர்ந்து அரசனைக் கொன்று விடுவதற்காக முயன்றபோது அரசன் சாமர்த்தியமாக அங்கிருந்து தப்பி ஓடினான். 

அரசனுடன் விசுவாசமுள்ள பத்துப் படை வீரர்களும் நாட்டைவிட்டுத் தப்பி ஓடினர்.அரசன் போனதும் மந்திரி கேளுத்தம்பி அரசன் ஆன செய்தி கேட்டு மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

இனிமேல் அவன் தங்களைக் கொடுமைப்படுத்துவானோ என்று நினைத்து மக்கள் பயந்து நடுங்கினர். மக்கள் பயந்ததைப் போல் கொடுங்கோல் ஆட்சி மக்களைத் துன்புறுத்தியது.இளைஞர்களும் பெண்களும் புதிய ஆட்சிக்குப் பயந்து வீடுகளில் இருந்து வெளியே தலை காட்டவே பயந்தனர்.

நாட்டை விட்டுத் தப்பி ஓடிய சாந்தவர்மாவும் பத்து வீரர்களும் காட்டுக்குள் புகுந்தனர். வெகுதூரம் நடந்ததால் அனைவரும் சோர்வடைந்தனர். பசி அவர்களை வாட்டியது. பசியால் துவண்டு போன அவர்களால் தொடர்ந்து நடக்க முடியவில்லை. இரவு வந்தது பசியும் தாகமும் அவர்களைத் தாக்கியதால் இரவில் நடக்க முடியாமல் அனைவரும் மரத்தடியில் படுத்துக் கொண்டனர். 

சோர்வடைந்த அனைவரும் சீக்கிரம் தூங்கிவிட்டனர். காலையில் சூரிய ஒளி
முகத்தில பட்டுச் சூடேறியபோது அனைவரும் தூக்கத்தில் இருந்து விழித்துக் கொண்டனர். அப்போது சற்றுத் தொலைவில் பெரிய அரண்மனை போன்ற வீடு ஒன்று
தெரிந்தது. 

அதைக் கண்ட அனைவருக்கும் மகிழ்ச்சி ஏற்பட்டது. அந்த வீட்டிற்குச் சென்றால் சாப்பிடுவதற்கு ஏதாவது கிடைத்துவிடும் என்ற ஆவலில் அவர்கள் அந்த வீட்டை நோக்கி நடந்தனர்.அது ஒரு செல்வந்தரின் அரண்மனை. அரசனும். வீரர்களும் அந்த வீட்டுக்குச் சென்று வாசலில் காத்திருந்தனர்.

அப்போது ஒருவன் வெளியே வந்தான். அவனைப் பார்த்த அரசன் “சாப்பிட்டுப் பல நாட்கள் ஆகிவிட்டது. எனவே சாப்பிட
ஏதாவது கொடுங்கள்" என்று கேட்டுக் கொண்டான். 

அதைக் கேட்ட அவன் அனைவரையும் பார்த்துவிட்டு வீட்டுக்குள் சென்று விட்டான். சற்று நேரத்தில் கொடுவாள் மீசையுடன்
கம்பீரமாகக் காட்சியளித்த ஒருவன் வெளியே வந்தான்.அவன் முகத்தில் கருணை என்ற குணம் மருந்துக்குக் கூட இல்லை.  

அவன் அரசன் மற்றும் வீரர்களைக் கண்டு மெளனமாக "உம் என்ன வேண்டும்?” என்று கேட்டுவிட்டு பக்கத்தில் இருந்த நாற்காலியில் கம்பீரமாக உட்கார்ந்தான்.

"ஐயா; நாங்கள் வெகு தொலைவில் இருந்து வருகிறோம் ஆகாரம் ஏதாகிலும் கொடுத்தீர்களானால் நன்றியுடையவர்கள் ஆக இருப்போம்". பல நாட்கள் சாப்பிடவில்லை. எனவே ஏதாவது சாப்பிடக் கொடுங்கள் என்றான் அரசன். 

அதைக் கேட்ட வீட்டுக்காரன் பலமாகச் சிரித்தான். “யோவ் இது என்ன தர்மசத்திரமா வர்றவங்களுக்குத் எல்லாம் தண்டச் சாப்பாடு போடுவதற்கு?” என்று அரசனும் மற்றவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். "ஐயா பசியால் வாடுபவர்களுக்கு உணவு அளிப்பது ஆண்டவனுக்குச் செய்யும் பணி அல்லவா?.

எங்களைப் பசி வாட்டுகிறது, ஏதாவது கொஞ்சம் சாப்பாடு கொடுங்கள்” என்று கெஞ்சினான் அரசன். அதைக்கேட்ட மீசைக்காரன் மீண்டும் பலமாகச் சிரித்தான். "இத பாருங்க உங்களுக்கு எல்லாம் சாப்பாடு போடுமளவுக்கு எனக்கு வசதி இல்லை. எனவே அதோ அந்த வீட்டுக்குப் போங்க. அந்த வீட்டில் பெரிய பணக்காரர்கள்தான் இருக்கிறார்கள். அங்கு சென்றால் சாப்பிட்டுவிட்டு அங்கேயே தங்கிவிடலாம்" என்று யோசனை கூறினான் அவன். அதைக் கேட்ட அரசனும் படை வீரர்களும் அந்த வீட்டை நோக்கி விரைந்தனர்.

அந்த வீட்டுக்குச் சென்ற அரசன் அந்த வீட்டை நோட்டமிட்டான். அந்த வீட்டைப் பார்த்தால் பணக்காரர்களின் வீடாகத் தெரியவில்லை. ஆனால் ஒரு காலத்தில், பணக்காரர்களாக  வாழ்ந்த குடும்பம்தான் என்று முடிவு செய்தான். வீட்டு வாசலுக்கு சென்ற அரசன். "இங்கே யாரும் இல்லையா?” என்று கேட்டான். சற்று நேரத்தில் இளைஞன் ஒருவன் வெளியே வந்தான். வீட்டுக்கு வெளியே சிலர் நின்றிருப்பதைக் கண்டு திடுக்கிட்டான். “என்ன வேண்டும்?, நீங்கள் எல்லோரும் யார்?” என்று கேட்டான் அந்த இளைஞன்.

அரசன் நடந்ததைக் கூறித் தங்களுக்கு உணவு வழங்கும்படி கேட்டுக் கொண்டான். அத்துடன் தங்களை இங்கே அனுப்பி வைத்தவர் பக்கத்து வீட்டுக்காரர்தான். என்றும் கூறினான். 

அதைக் கேட்ட இளைஞன் அந்த வீட்டைப் பார்த்தான். தான் ஏழையாகி விட்டதால் தன்னைக் கிண்டல் செய்வதற்காகதான் தன் வீட்டுக்கு அனுப்பி வைத்து இருக்கிறான். பசியாக வந்தவர்களுக்கு உணவு போட வேண்டுமே என்று நினைத்துக் கவலைப்பட்டான்.

அதற்குக் காரணம் அவர்களுக்கு உணவு வழங்குவதற்கு அவனிடம் எதுவுமில்லை. அவனும் அவன் தாயாரும் பட்டினியாக இருந்த போதுதான் அரசனும் படை வீரர்களும் வந்திருக்கிறார்கள். "நீங்கள் சாப்பிட்டு வெகு நாட்கள் ஆகிவிட்டதால்,சற்று நேரத்தில் உணவு வழங்குகிறேன். அதுவரை! பொறுமையாக இருங்கள்," என்று கூறிவிட்டு உள்ளே சென்றுவிட்டான் இளைஞன். 

இளைஞன் தங்களுக்கு உணவு வழங்கச் சம்மதித்துவிட்டதைக் கண்டு அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். வீட்டுக்குள் சென்ற இளைஞனிடம், "மகனே நீ என்ன இப்படியா மடத்தனமாகப் பேசுவது. பதினோரு பேருக்குச் சாப்பாடு போட இங்கே வசதி உண்டா? இன்று நாம் கூடப் பட்டினியாக இருப்பது உனக்குத் தெரியாதா?"என்று தாயார் கேட்டாள்.

"அம்மா! அப்பாவைக் கொன்று நமது சொத்துக்களை அபகரித்த பக்கத்து வீட்டு நீலகண்டான் இருக்கிறானே. அவன்தான் இவர்களை அனுப்பி வைத்து இருக்கிறான். 
நமது ஏழ்மையை அவன் இப்படி கிண்டல் செய்து இருக்கிறான்” என்று கண்கலங்க கூறினான் இளைஞன். "மகனே நாம் இவர்களுக்கு எப்படி சாப்பாடு போடுவது?" என்று வியப்புடன் கேட்டாள் தாயார்.

“அம்மா என்னிடம் அப்பாவின் தங்கச் சங்கிலி இருக்கிறதே. அதை விற்று அந்தப் பணத்தில் உணவு போடுவோம், இது நமது மானப்பிரச்சினை மட்டுமல்ல. பல நாட்கள் பசியால் துவண்டு போனவர்களுக்கு உணவு அளித்தால் ஆண்டவன் நம்மைக் கட்டாயம் காப்பாற்றுவார்" என்றான் அவன்.

அவன் வெளியே சென்று அரசனிடம் 
"ஐயா சற்று நேரம் உட்காருங்கள். நான் உடனே வருகிறேன். உங்கள் பசியைப் போக்குவதுதான் என் லட்சியம்" என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டான். அப்போது அரசனும் மற்றவர்களும் மரத்தடி நிழலில் படுத்து ஓய்வு எடுத்தனர்.

இளைஞனும் தாயாரும் தடல்புடலாகச் சமையல் செய்து முடித்தனர். பிறகு தூங்கிக் கொண்டிருந்தவர்களை எழுப்பி சாப்பிடும்படி  சொன்னார்கள். அனைவரும் மகிழ்ச்சியுடன் சாப்பிட்டார்கள். “ஆகா அருமையான சாப்பாடு" என்று அரசனும் மற்றவர்களும் பாராட்டினர். அதைக் கேட்ட தாயாரும்,இளைஞனும் மகிழ்ச்சி அடைந்தனர். அனைவரும் சாப்பிட்ட பின் எழுந்தனர்.

 "தம்பி உனக்கு நாங்கள் எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை? நீங்கள் சாப்பாடு போடாமல் இருந்திருந்தால் இந்நேரம் பசியால் செத்து இருப்போம். எனவே உங்களுக்குப் பாிசளிக்க என்னிடம் இந்த வாளைத் தவிர ஒன்றும் இல்லை, என்று கூறி தன்னிடமிருந்த வாளை இளைஞனுக்குப் பரிசாக வழங்கினான் அரசன். “இந்த வாளை வைத்துக் கொண்டு நான் என்ன செய்வது?” என்று கேட்டான் இளைஞன். 
"இந்தவீட்டைப் பார்த்தால் ஒரு காலத்தில் நீங்கள் செல்வந்தர்கள் ஆக இருந்தீர்கள் என்பது எனக்குத் தெரிகிறது. எனவே நீங்கள் இழந்த செல்வங்களை இந்த வாளை வைத்துக் கொண்டு திரும்பப் பெறலாமே! என்றான் அரசன். அப்போது தான் இளைஞனுக்குத் தன் தந்தையைக் கொன்று சொத்துக்களைப் பறித்த பக்கத்து வீட்டு நீலகண்டன் பற்றிய நினைவு வந்தது. "நான் ஒருவன் மட்டும் இந்த வாளுடன் சென்றால் எப்படி இழந்த செல்வத்தை திரும்பப் பெற முடியும்?" என்று கேட்டான் இளைஞன்.

அதைக்கேட்ட அரசன், “இளைஞனே உங்களுடன் நானும் என் பத்துப் படை வீரர்களும் வருகிறோம். என்று, கூறினான். இளைஞனுக்குத் தெம்பு வந்தது. அவன் தாயாரைப் பார்த்தான், அவள் பார்வை மகனுக்குத் தைரியம் கொடுத்தது. 
இளைஞர் பக்கத்து வீட்டு நீலகண்டன் என்ற துரோகியைப் பார்த்தான். அவன் வீட்டு வாசலில் கம்பீரமாக உட்கார்ந்து இருந்தான். ஒரு காலத்தில் இளைஞனின் தந்தையிடம் கையாள் ஆக இருந்த நீலகண்டன் சூழ்ச்சி செய்து சொத்துக்களை முழுவதும் அபகரித்தான்.

நீலகண்டன் தன் சொத்துக்களை அபகரித்து விட்டானே என்று கவலைப்பட்டார் இளைஞனின் தந்தை. ஒருநாள் இதைப்பற்றி நீலகண்டனிடம் கேட்டார் தந்தை. அதைக் கேட்டதால் நீலகண்டனுக்குக் கோபம் வந்தது.அவன் வாளை உருவி இளைஞனின் தந்தையைக் கொன்று விட்டான்.

பிறகு இளைஞனையும் அவன் தாயாரையும் அரண்மனை போன்ற வீட்டிலிருந்து விரட்டி அடித்தான். இந்த நிகழ்ச்சி அனைத்தும் இளைஞன் மனதில் திரைப்படம் போல்காட்சியளித்தது. அரசன் பரிசளித்த வாளைப் பலமாகப் பிடித்தான். அப்போது அவனுக்குத் தைரியம் வந்தது. தான் வீரன்தான் என்ற உணர்வு அவனுக்கு ஏற்பட்டது. அவன் வாளுடன் நீலகண்டன் வீட்டை நோக்கி ஓடினான்.

அதைக் கண்டு திடுக்கிட்டுப் போனான் நீலகண்டன். "சின்னப் பையனுக்கு இவ்வளவு திமிரா? இவனையும் இவன் தந்தையைப் போல மேல் உலகத்துக்கு அனுப்ப வேண்டும்!" என்று கத்திக் கொண்டே இளைஞன் மீது பாய்ந்து தாக்கினான். இளைஞன் அரசன் பரிசளித்த வாளால் நீலகண்டனுடன் கடுமையாக மோதினான். அப்போது வேறு பல அடியாட்களும் ஆயுதங்களுடன் அங்கே வந்து சண்டையில் கலந்து கொண்டனர்.

அதுவரை அமைதியாக நின்றுகொண்டிருந்த அரசனும், படைவீரர்களும் களத்தில் குதித்தனர். சண்டை மூண்டது.சிறிது நேரத்தில் நீலகண்டன் இளைஞனால் கொல்லப்பட்டான்.மற்ற அடியாட்களும் கொல்லப்பட்டனர். இளைஞன் வெற்றி பெற்றுவிட்டான். அவன் தந்தையின் சொத்துக்களை மீட்டான். அரசனுக்கு மற்ற படை வீரர்களுக்கும் நன்றி சொன்னான். பிறகு அவனும் தாயாரும் பழையபடி சீரும் சிறப்புமாக வாழத் தொடங்கினர். தாங்களும் தங்கள் வீரர்களும் எங்களுடன் தங்கி விடுங்கள் என்று அரசனிடம் கூறினான். “மகனே எனக்கு இன்னும் பல வேலைகள் உண்டு. நான் இழந்த என்னுடைய திருவாஞ்சூர் நாட்டைத் திரும்பப் பெறவேண்டும். உன்தந்தையை ஒரு கயவன் விரட்டியதுபோல் என்னை என் மந்திரி விரட்டினான். அவன் நாட்டு மக்களைக் கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறான். அவனை விரட்டி மக்களைக் காப்பாற்றுவது என் கடமை. 

எனவே உன் வேண்டுதலைக் கேட்டு இங்கே தங்க முடியவில்லை” என்று வருத்தத்துடன் கூறினான் அரசன். "மன்னா உங்கள் லட்சியம் நிறைவேற நானும் உதவுகிறேன். என்னையும் தங்களுடன் அழைத்துச் செல்லுங்கள்," என்றான் இளைஞன். 

"வீரனான நீ இதுவரை கோழையாக இருந்துவிட்டாய். ஆனால் இன்று நீ வீரனாகி விட்டாய். எனவே உன்னை அழைத்துச் செல்வதில் எனக்கு மகிழ்ச்சிதான்” என்றான் அரசன்.

"கோழையாக இருந்த என்னை வீரனாக்கிய பெருமை தங்களைச் சாரும், தாங்கள் விருந்துக்கு வரவில்லை என்றால் நான் இன்னும் கோழையாக இருந்து வறுமையில் வாடிக்கொண்டு இருந்திருப்பேன்.  எனவே நீங்கள் அளித்த வீரம் உங்களுக்கே பயன்படட்டும்" என்றான் இளைஞன்.
அவன் தாயாரிடம் விடை பெற்று அரசனுடன் புறப்பட்டான்.

திருவாஞ்சூர் நாட்டுக்கு இளைஞன் மற்றும் படை வீரர்களுடன் சென்ற அரசன் தன் நண்பரின் வீட்டில் ரகசியமாகத் தங்கினான். 

"நண்பனே நாட்டு நிலவரம் எப்படி இருக்கிறது?" என்று ஆவலுடன் கேட்டான் அரசன்.
"நிலமை படுமோசம், மக்கள் அனைவரும் மந்திரி கேளுத் தம்பியால் மிகவும் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்!”என்று வருத்தத்துடன் கூறினான்.

அதைக்கேட்ட அரசன் சற்று நேரம் மௌனமாக இருந்துவிட்டான். "நான் என் நாட்டை உடனே பிடித்துவிட வேண்டும். அதற்காக நம்மீது விசுவாசம் உள்ள படை வீரர்களைத் திரட்ட வேண்டும்."என்றான் அரசன். “அப்படியே செய்கிறேன். நான் இப்போதே யாருக்கும் சந்தேகம் ஏற்படுத்தாமல் அரண்மனைக்குச் செல்கிறேன்," என்றான் நண்பன். 

அவன் அரண்மனைக்குச் சென்று தன் நண்பன் ஒருவனை அழைத்து ரகசியமாகப்
பேசினான். அரசன் வந்துவிட்டதை அறிந்து அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அரசன் மீது விசுவாசம் வைத்துள்ள அனைத்துப் படை வீரர்களும் அரசனுக்காக உயிர் விடவும்
தயாராகி விட்டனர். எல்லா ஏற்பாடுகளும் முடித்துவிட்டபின் அரசன் தன் படை வீரர்களையும் இளைஞனையும் அருகில் அழைத்து "நாம் போருக்குப் புறப்படும் நேரம் ஆகிவிட்டது.எனவே உடனே புறப்படுங்கள். யாரும் மந்திரியின் படைபலம் கண்டு அஞ்சக் கூடாது" என்றான். அனைவரும் புறப்பட்டுவிட்டனர். 

மந்திரி எதிர்பாராத வேளையில் படை வீரர்களும் வீராவேசமாகப் போரிட்டனர்.
பெரும்பான்மையான படைவீர்கள் அரசனுக்காகப் போராடத் தொடங்கினர். மந்திரியும் சேனாதிபதியும், கடுமையாகப் போரிட்டும் பலனில்லை. பலமணி நேரம் தொடர்ந்த சண்டையில் மந்திரியும் சேனாதிபதியும் உயிரிழந்தனர். அதைக் கண்டு வீரர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அரசன் சாந்தவர்மா தான் இழந்த
அரச பதவியை மீண்டும் பெற்றான். இளைஞன் அரசனுடன் நின்று வீராவேசமாகப் போரிட்டுப் பல எதிரிகளை வெட்டி வீழ்த்தினான்.

இளைஞனின் வீரம் கண்டு அரசனே ஆச்சரியப்பட்டான்.போர் முடிந்தது. நாட்டு மக்கள் மகிழ்ச்சியில் துள்ளினர். அரசன் இளைஞனை அழைத்து “இளைஞனே உன் வீரம் கண்டு நான் மகிழ்ச்சி அடைந்தேன். இவ்வளவு திறமைசாலியான நீ சாதாரணக் குடி மகனாக இருக்கலாமா? எனவே இன்று முதல் நீதான் என் மந்திரி. உன்னுடைய அரிய சேவை இந்த நாட்டு மக்களுக்குப் பயன்படட்டும்” என்றான். 

அதைக் கேட்ட இளைஞன் இருகரம் கூப்பி அரசனை வணங்கினான்..

என் அன்புக்குாியவா்களே, 
நமக்குத் தெரியாமல் பல திறமைகள் நம்மிடம் உறங்கிக் கிடப்பதுண்டு. அதைப் பிறர் சுட்டிக்
காட்டிய பிறகுதான் நாம் உணருகிறோம். உணர்ந்த பிறகு நமது திறமைகளை மேலும் சீரடையச் செய்வது நமது கடமை ஆகும்.

கோலியாத் இஸ்ரவேல் நாட்டுக்கு விரோதமாய் படைபெலத்தோடு நிற்கையில்  இஸ்ரவேல் படைவீரா்களும், ராஜாவும் பயந்து ஓடினாா்கள் 
அவா்களுக்கு  ராட்சதனாகிய கோலியாத்தோடு போாிட  முடியவில்லை.  அவன் ஒரு பெரிய ராட்சதன். 

தாவீது என்ற ஏதேச்சையாய் இராணுவத்தில் பணியாற்றிய தன்சகோதரா்களை காண வந்த போது அவன் கோலியாத்தின்  கொக்காிப்பைக் கேட்டான். அவனுக்குள் பயம் வரவில்லை.  

அதற்கு பதிலாக அவனுக்குள் இருந்த பக்திவைராக்கியத்தின்  அபிஷேகம் அவனுக்குள் கிாியை செய்தது. தன் கையில் பட்டயம் இல்லாதிருந்தும் தன் ஆடு மேய்க்கும் போது வைத்திருக்கும் கவணையும் கூழாங்கல்லையும் எடுத்துகொண்டு கவணில் கல்லை வைத்து  அவன் மேல் எறிந்த போது  அவன் நெற்றியில் பட்டு பதிந்துபோய் கீழே விழுந்தான்.  

அவ்ளோ பொிய ராட்சதன் கோலியாத்தை வீழ்த்த ஒரு சிறிய கூழாங்கல்லே போதும். அவன் கீழே விழுந்த போது அந்த ராட்சதனின் பட்டயத்தையே  எடுத்து அவனைக் கொன்றுபோட்டான். 

எனவே அரசன் மீண்டும் அரசவையில் அமர்ந்து ஆட்சிபண்ணினது போலவே  நீங்கள் எதையெல்லாம் இழந்து போனீா்களோ அவைகளையெல்லாம்  கட்டாயம் பெற்றுக் கொள்வீா்கள்.  உங்களுக்குள் இருக்கும் ஆவியானவா் உங்களுக்கு சகலவிதத்திலும் உதவிசெய்வாா் என்பது நிச்சயம்  !!

#நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் 


🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵

குட்டி இதயங்கள் குட்டிக் கதை 

🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵

276                ஓட்டத்தின் ராஜா

ஒரு காட்டில் சிங்க ராஜாவின் பிறந்த நாள் . காடே அல்லோல கல்லோலப் பட்டது . எங்கும் அலங்காரங்கள் , விழாக்கோலமாய் அமர்க்களப் பட்டது . 
                ஆடல் , பாடல் , கலை நிகழ்ச்சிகள் என்று எங்கு பார்த்தாலும் கேளிக்கைகள் . அதிகாலை முதலே விருந்து துவங்கி விட்டது . காட்டு மிருகங்கள் எல்லாமே குதூகலமாகத் திரிந்தன . 
               வழக்கமாய் சிங்க ராஜாவின் பிறந்த நாளில் இவையெல்லாம் நடப்பது வழக்கந்தான் என்றாலும் , சிங்க ராஜா அதிகமாய் விரும்புவது அந்த நாளில் நடக்கும் ஓட்டப் பந்தயத்தைத்தான் . ஓட்டப் பந்தயம் என்றால் ராஜாவுக்குக் கொள்ளைப் பிரியம் . ஒவ்வொரு மிருகத்துக்குமே ஓடுகிற திறன் அவசியம் என்று சிங்க ராஜா வலியுறுத்தியது .
                 ஒவ்வொரு ஆண்டிலும் பல மிருகங்கள் கலந்து கொண்டாலும் , வழக்கமாய் முதல் பரிசு பெறுவது மான்தான் . மிகுந்த கவனத்துடன் புயல் காற்றைப் போல ஓடி முதல் பரிசை வென்றுவிடும் .
                 இந்த முறை போட்டியை இன்னும் சுவாரஸ்யமாக்க ராஜா ஒரு சிறப்புப் பரிசை அறிவித்தது . முதல் பரிசு பெறுகிற மிருகத்துக்கு ' ஓட்டத்தின் ராஜா ' என்ற சிறப்புப் பெயரும் சூட்டி ஒரு கிரீடத்தையும் அணிவிக்கப் போவதாக அறிவித்தது . 
                இந்த அறிவிப்பைக் கேட்டதும் எல்லா மிருகங்களுக்குமே ஆசை வந்துவிட்டது . பின்னே ராஜாவால் சிறப்புப் பெயர் சூட்டப்பட்டு , முடிசூட்டப்பட வாய்ப்புக் கிடைப்பது எத்தனை பெரிய பாக்கியம் ? 
               வருடா வருடம் மான் மட்டுமே ஜெயித்துக் கொண்டிருப்பதைக் கண்டு நரிக்கு வயிறெல்லாம் எரிந்தது . இந்த வருடமும் மான் ஜெயித்தால் கிரீடம் , பட்டம் எல்லாம் அதற்கே சொந்தமாகிவிடும் . 
" நான் ஜெயிக்கிறோனோ இல்லையோ , மான் தோற்க வேண்டும் . அதற்கு இந்த ஆண்டில் ராஜா கொடுக்கும் பரிசு கிடைக்கவே கூடாது . ஏதாவது செய்து இம்முறை மானுக்கு வெற்றி கிடைக்காதபடி செய்துவிடவேண்டும் " என்று சதித்திட்டம் ஒன்றைத் தீட்டியது .
                 கடந்த ஆண்டில் மானைத் தோற்கடிக்க அதன் ஓடுபாதையில் முள்ளைப் போட்டு வைத்துப் பார்த்தது . ஆனால் மானின் உறுதியான குளம்புகள் முட்களையெல்லாம் நொறுக்கி விட்டன. ஒருமுறை கல்லை வீசி வைத்துப்பார்த்தது . மான் துள்ளி ஓடியதில் கல் எதுவும் அதன் கால்களில் கூடப் படவில்லை . ஒரு முறை ஒரு தேளை வழியில் காத்திருந்து கொட்டச் சொன்னது . மானின் கால் பட்டு அதுவும் கூழாகி விட்டது .
                 இப்படி எத்தனையோ சூழ்ச்சிகள் செய்தும் மானிடம் எடுபடவில்லை . ஒரு அளவுக்கு மேல் ஏதாவது செய்யப் போய் , மானுக்கு சந்தேகம் வந்து , அது ராஜாவிடம் புகார் சொல்லிப் பிடிபட்டு விட்டால் அவ்வளவுதான் . நரியின் கதை முடிந்து விடும் . எனவே இம்முறை வேறொரு வகையில் யோகித்தது .
                 போட்டிக்கான நேரம் நெருங்கிக் கொண்டு இருந்தது . திடீரென்று நரிக்கு ஒரு யோசனை பளிச்சிட்டது . உடனே ஓடிப்போய்த் தன் நண்பன் பாம்பை சந்தித்தது . பாம்பும் நரியைப் போலவே வஞ்சக புத்தி கொண்டதுதான் . நரி , பாம்பிடம் தனது திட்டத்தை விவரித்தது . பாம்பும் சந்தோஷமாக ஒப்புக் கொண்டது . 
                மான் போட்டிக்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கும் இடத்துக்குப் பாம்பு சென்று மானிடம் பேச்சுக் கொடுத்தது . 
" நண்பா .வழக்கம் போல  இந்த வருஷமும் நீதான் ஜெயிக்கப் போற . ராஜா கொடுக்கப் போற பரிசு இந்த வருஷமும் உனக்குத்தான் " என்றது 
                மானுக்கு சந்தோஷம் . 
" நன்றி நண்பா " என்றது . பாம்பு சொன்னது ,
" ஒவ்வொரு வருஷமும் நீ ஓடுற அழகைப் பாக்குறதுக்காகவே வந்துடுவேன் . காலே தரைல படாம , காத்துல பறக்குற மாதிரி நீ ஓடுற  ஓட்டம் இருக்கே ! அதுக்கே ஒரு தனிப் பரிசு கொடுக்கணும் . ஒட்டகச்சிவிங்கி ஓடும் பாரு பப்பரப்பான்னு காலைப் பரப்பிக்கிட்டு .  கழுதை ஓடுறதைப் பாரேன் கொஞ்ச நேரத்துக்கு ஒரு தடவை தலையைத் தூக்கி காள் காள்னு கத்திக்கிட்டு . நீர்யானை பத்தி சொல்லவே வேண்டாம் . நாலு பேரு ஓட வேண்டிய இடத்துல அது மட்டுமே ஆட்டி ஆட்டிக்கிட்டு ஓடிக்கிட்டு கிடக்கும் . உன்னை மாதிரி விதிமுறையை மதிச்சு , அழகா யாருமே ஓடுறதே இல்லை . நீ வேணா கவனிச்சுப் பாரேன் . சரி. நண்பா போட்டி ஆரம்பிக்கப் போகுது . வாழ்த்துகள் " என்று சொல்விட்டுக் கிளம்பியது .
                 மானுக்கு ரொம்பப் பெருமையாக இருந்ததுடன் , புதிய செய்தியாகவும் இருந்தது . 
" பாம்பு சொன்ன மாதிரி மத்த மிருகங்கள் எப்படி ஓடுதுன்னு பாக்கணும் " என்று நினைத்துக் கொண்டது . 
                பந்தயம் துவங்குவதற்கான மணி ஒலித்தது . மிருகங்களெல்லாம் பரபரப்பாக மைதானத்தில் கூடின . நரி இந்த முறை ஓடுதளத்தில் எந்த சூழ்ச்சியும் செய்யாததால் மானுக்கு அடுத்த ஓடுதளத்தில் நிற்காமல் இரண்டு இடங்கள் தள்ளியே நின்றது . ஓட்டப் பந்தய வீரர்களை உற்சாகப் படுத்தும் விதமாக சிங்க ராஜாவும் கொஞ்ச தூரம் அவைகளுடன் ஓடுவதற்காக அதுவும் வந்து நின்று கொண்டது . யானை பிளிறி ஓட்டப் பந்தயத்தைத் துவக்கி வைத்தது . 
                   மின்னலைப் போலவும் , வில்லில் இருந்து புறப்படும் அம்பு போலவும் மிருகங்கள் பாய்ந்து ஓடின . மானும் தன்னுடைய வழக்கமான வேகத்தை ஆரம்பித்தது . சிறிது நேரம் ஓடிய பின் பாம்பு சொன்னது நினைவுக்கு வந்தது . சொல்லி வைத்தாற்போல அதற்கு இந்தப் பக்கம் காண்டா மிருகமும் , அந்தப் பக்கம் ஒட்டகச்சிவிங்கியும் ஓடிக் கொண்டிருந்தன .
               பாம்பு சொன்னது சரிதான் . இரண்டுமே ஓடுவது ஒரு ஒழுங்கே இல்லாமல் வேடிக்கையாகத்தான் இருந்தது . சற்று தொலைவில் கழுதையும் கண்ணில் பட்டது . அதுவும் பாம்பு சொல்லியிருந்தபடியே அவ்வப்போது கனைத்தபடியேதான் ஓடிக் கொண்டிருந்தது . மானுக்கு இவற்றையெல்லாம் பார்த்து அடக்க முடியாத சிரிப்பு வந்து விட்டது . 
                இப்போது மான் , ஓடிக் கொண்டிருந்த எல்லா மிருகங்களையும் நோட்டமிட்டது . எதுவுமே ஒழுங்காகவே ஓடவில்லை . திடீரென்று மானுக்குத் தான் ஓட்டத்தில் பின்தங்கி இருக்கிறோமென்ற உணர்வு வந்தது . பதறியடித்து வேகத்தை துரிதப் படுத்தியது . அதற்குள் சிறுத்தை வெற்றி இலக்கை எட்டிவிட்டது .
                மானுக்குக் கண்கள் எல்லாம் இருண்டுவிட்டது . இத்தனை வருடமாய்க் காத்து வந்த வெற்றிக் கோப்பை பறிபோய்விட்டது . அத்துடன் இந்த ஆண்டில் சிறப்பாய்க் கிடைக்க வேண்டிய கிரீடமும் , விருதும் கூடப் போய்விட்டன . 
              பாம்பும் , நரியும் சிரித்தபடியே தன்னை சுட்டிக்காட்டிப் பேசிக் கொண்டிருந்ததை மான் பார்த்தது .  
" பாம்போட பேச்சைக் கேட்டு மத்தவங்க எப்படி ஓடுறாங்கன்னு பாத்து இப்ப என்னோட ஓட்டத்துல தோத்துப் போயிட்டேனே ! "  என்று அழுதபடி , அவமானம் தாளாமல் அந்த இடத்தை விட்டே ஓடிப்போனது .

செல்லமே!
மற்றவர்களின் ஓட்டத்தை விமர்சிக்க ஆரம்பித்துவிட்டால் நமக்கான ஓட்டத்தில் தோற்றுப் போவோம் . இந்தக் காலங்களில் சத்துரு இந்த உத்தியைத்தான் கையாண்டு நல்ல ஓட்டக்காரர்களையும் விழத்தள்ளிவிடுகிறான் . 

கலாத்தியர் 6 : 1 சொல்வது போல
" சகோதரரே, ஒருவன் யாதொரு குற்றத்தில் அகப்பட்டால், ஆவிக்குரியவர்களாகிய நீங்கள் சாந்தமுள்ள ஆவியோடே அப்படிப்பட்டவர்களைச் சீர்பொருந்தப்பண்ணுங்கள். நீயும் சோதிக்கப்படாதபடிக்கு உன்னைக்குறித்து எச்சரிக்கையாயிரு ".
நம்மைக் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் .


" சகோதரரே, நீங்கள் நியாயந்தீர்கப்படாதபடிக்கு ஒருவருக்கொருவர் விரோதமாய் முறையிடாதிருங்கள். இதோ, நியாயாதிபதி வாசற்படியில் நிற்கிறார் ". யாக்கோபு 5 :9.



277                         மன்னிப்பு


ஒரு குடியானவனுக்கு பூமிக்குரிய கடைசி நேரம் வந்தது. போதகர் வரவழைக்கப்பட்டார். அவன் மனைவி, பிள்ளைகள் யாவரும் படுக்கையைச் சூழ நின்று கொண்டிருந்தார்கள்.

போதகருக்கு அந்தக் குடியானவனைப் பற்றி நன்றாகத் தெரியும். அவனுக்கும், அவன் அயலானுக்கு வயல் நிலத்திலுள்ள எல்லைக் கோடு பற்றி, காலாகாலமாய் சண்டை நடந்துகொண்டு வந்ததை போதகர் அறிவார். 

எனவே, போதகர் மெதுவாய் ஆரம்பித்தார். "ஐயா நீங்கள் உங்கள் அயலானை மன்னிக்க வேண்டும். மன்னித்தால் மட்டுமே, தூய்மையான மனச்சாட்சி உங்களுக்குக் கிடைக்கும்.

"எப்படி மன்னிக்க முடியும்? என் நிலத்தில் அரை ஏக்கர் நிலத்தை அவன் எடுத்துக்கொண்டானே" என்று பொங்கினான், குடியானவன்.

"நீங்கள் மன்னித்தால், இந்த அரை ஏக்கர் நிலத்திற்குப் பதிலாக ஆயிரம் ஏக்கர் நிலத்தைக் கர்த்தர் பரலோகத்தில் உங்களுக்குத் தந்தருளுவார். மன்னிக்காவிட்டால், நீங்கள் நரகத்திலல்லவா, கஷ்டப்பட வேண்டும்?"

குடினானவன் தன் மகனை அழைத்தான், "மகனே, நான் அயலானை மன்னித்து விடுகிறேன். இல்லாவிட்டால் நரகத்திற்குத் தப்ப முடியாது. ஆனால் நீ மன்னிக்காதே! நீ பெலசாலி, அவனை இரண்டில் ஒன்று பார்த்துவிடு" என்று சொன்ன அவன், போதகரிடம் திரும்பி, "போதகரே நான் அயலானை மன்னித்துவிட்டேன், பரலோகத்தில் ஆயிரம் ஏக்கர் நிலம் கிடைக்குமா?" என்று கேட்டான்.

போதகரோ அந்த மனிதனின் கல்லான இருதயத்தின் நிமித்தம், மிகுந்த வருத்தத்துடன் எந்த ஒரு பதிலும் கூறாமல் சென்றுவிட்டார்.

நீங்கள் மன்னிக்கும் போது, மறந்துவிடும் குணத்தோடு கூட, அன்பு செலுத்தும் சுபாவமும் வேண்டும். கர்த்தர் உங்களை மன்னிக்கும்போது, உங்கள் பாவத்தை கடலின் ஆழத்தில் போட்டு விடுகிறார். அப்படியே நீங்களும் மன்னிப்பீர்களா?

"மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மைவிட்டு விலக்கினார்" (சங்கீதம் 103:12)



278.    காரியங்களை வாய்க்க செய்வார்.  


" *ஆபிரகாம் அந்த இடத்துக்கு யேகோவாயீரே என்று பேரிட்டான்; அதினாலே கர்த்தருடைய பர்வதத்திலே பார்த்துக்கொள்ளப்படும் என்று இந்நாள்வரைக்கும் சொல்லப்பட்டு வருகிறது* ". 
 *ஆதியாகமம் 22:14* 

இங்கிலாந்திலே 1904ஆம் ஆண்டில் வால்டர் மார்ட்டின் என்னும் போதகர் ஒருவரின் மனைவி சிவிலா மார்ட்டின் அவர்கள் எழுதிய ஆண்டவர் உன்னை பார்த்துக் கொள்வார் (God will take care of You) என்கிற பாடல் மிகவும் புகழ் பெற்றது. அந்த பாடலை அவர் எழுதியதன் பின்னணி மிகவும் அற்புதமானது. 

ஒரு நாள் வெளியூர் கூட்டமொன்றில் போதகர் செய்தி கொடுக்க வேண்டியதாயிருந்தது. திடீரென்று அவருடைய மனைவி சிவிலா நோய்வாய்ப்பட்டார். போதகர் மனைவியை வைத்தியர்களிடம் காட்டியபோது, அவர்கள் அவர் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக கூறினர். கூட்டத்திற்கு செல்வதா அல்லது மனைவியை பார்த்துக் கொண்டு வீட்டில் இருப்பதா என்று மனக்குழப்பத்தோடு அவர் இருந்தார்.

அப்போது அவரது ஒன்பது வயது மகன் அவரிடம், அப்பா நீங்க்ள தைரியமாக கூட்டத்திற்கு செல்லுங்கள், கர்த்தர் அம்மாவை கவனித்துக் கொள்வார் என்று கூறினான். இந்த வார்த்தை போதகர் வால்டர் மாட்டினை மட்டுமல்ல, வியாதி படுக்கையிலிருந்த அவரது மனைவியையும் பெலப்படுத்தியது.

 மனைவியிடம் விடைபெற்று அவர் கூட்டத்திற்கு பிரசங்கிக்க சென்றார். அவர் திரும்ப வந்தபோது அவரது மனைவி அற்புத சுகத்தை பெற்றிருந்தார்கள். அவரது மனைவி மகன் சொன்ன வார்த்தையின் அடிப்படையில் இந்தப்பாடலை எழுதினர். போதகர் அந்த பாடலுக்கு இசையமைத்தார். அந்த பாடல் இன்றளவும் புகழ் பெற்று விளங்குகிறது.
 
என் அருமை தேவஜனமே,  நான் இனி என்ன செய்யப் போகிறேன், என் எதிர்காலம் என்ன என்று திகைத்து, தவித்துக் கொண்டிருக்கிறீர்களோ? நம் தேவனுக்கு யெகோவாயீரே என்ற பெயர் உண்டு. 

அவர் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார். நாம் கலங்கி நிற்க தேவையில்லை. அந்தந்த நேரம் வரும்போது அவர் அருமையாக காரியங்களை வாய்க்க செய்வார். நம் தேவைகளை, நம் பிரச்சனைகளை, நம் அங்கலாய்ப்புகளை தேவன் பார்த்துக் கொள்வார்.

 அவர் பார்த்துக்கொள்ளும்போது, அவர் கவனித்துக் கொள்ளும்போது நாம் கவலைப்பட வேண்டியது இல்லையல்லவா. எல்லாவற்றையும் கவனித்துக் கொள்ளும் கர்த்தரிடம் நம் எதிர்காலங்களை, நம் எதிர்ப்பார்ப்புகளை அர்பணிப்போம். அவர் எல்லாவற்றையும் நன்மையாக மாற்றி, ஏற்ற வேளையில் கிருபைகளை கொடுத்து நம்மை வாழ வைப்பார். ஆமென்!


279      உன்னால்_முடியாது_டா

ஒருமுறை சாத்தான் பரிசுத்தவான்களை அழிக்க வேண்டும் என்று முடிவுவெடுத்து, இயற்கையிடம் சென்று முறையிட்டான்.

இயற்கையோ சரி நான் அழிக்கின்றேன் என்றது...

அதினால் இயற்கையானது சூரியனிடம் சென்று சூரியனே 
இந்த பரிசுத்தவான்களை சுட்டெரித்து அழித்து♨விடு என்றது,

அப்பொழுது சூரியன் ஏற்கனவே யோசுவா என்ற ஒரு பரிசுத்தவான் என்னை அசையாமல் ஆடாமல் வானத்தில் ஒரு நாள் முழுவதும் நிற்க வைத்து விட்டான்..

ஆதலால் பரிசுத்தமான மனிதனை என்னால் ஏதும் செய்ய முடியாது என்றது...

இயற்கை கடலிடம் சென்று, 
கடலே நீயாவது, இந்த பரிசுத்தவான்களை அழித்து விடக் கூடாதா ?  என்றது 

அப்பொழுது அது என்னால் முடியாது, ஏற்கனவே மோசே என்ற ஒரு பரிசுத்தவான், சாதாரண ஒரு கோலை வைத்துக்கொண்டு, என்னை 
"இரண்டாகப்" பிளந்ததை, 
நான் இன்னும் மறக்கவில்லை. அவர்கள் வழிபடும் நம்மையெல்லாம் படைத்த இயேசு  நாதர் இரையாதே அமைதலாயிரு என ஒரு முறை என்னை அதட்டி அமைதியாக்கி மற்றும் என் மீது நடந்த போனது போதாதென்று
பேதுரு என்ற தன் சீஷனையும் கூட 
என் மேல் நடக்கச் செய்து என் "கொட்டத்தை" அடக்கியது 
எனக்கு இன்னும் மறக்கவில்லை..!!தேவ மனுஷனுக்கு விரோதமாக என்னால் "செயல்பட" முடியாது என்றது..

வேதனையோடு நெருப்பிடம் சென்ற இயற்கை , நெருப்பே உன் எரிக்கும் சக்தியால்இந்த பரிசுத்தவான்களை அழிக்கக் கூடாதா ?? என்றது, 

அப்படி தான் ஒரு முறை சாத்ராக் மேசாக் ஆபத்நேகோ என்ற மூன்று பரிசுத்தவான்களை அழிக்க நினைத்தேன்,ஆனால் என் நெருப்பு வாசனை கூட அவர்கள் மேல் வீசவில்லை, அன்றிலிருந்து பரிசுத்தவான்களை கண்டாலே எனக்கே ஒரு "பயம்" தான் என்றது...!!

இயற்கை மிகுந்த வேதனையோடு மழையிடம் சென்று, மழையே நீயாவது பரிசுத்தவான்களை அழிக்கக் கூடாதா ?? எனக்கு உதவி செய்யக் கூடாதா..???என்றது, 

அதற்கு மழை ஒரு முறை இஸ்ரவேல் தேசத்திற்கு மழையே பெய்யாமல் இருந்து கடும் பஞ்சத்தை உண்டாக்கினேன்,ஆனால் எலியா என்ற ஒரு பரிசுத்தவான் உள்ளங்கை மேகத்தில் என்னை கொண்டு வந்து வெள்ளத்தையே உண்டாக்கி விட்டான், 
பரிசுத்தவான்களை என்னால் ஏதும் செய்ய முடியாது என்றது....!!

அப்பொழுது இயற்கை மிகுந்த கோபம் கொண்டு பரிசுத்தவான்களை அழிக்க வேறு எந்த வழியும் இல்லையா ??அவர்களை அழிக்க முடியவே முடியாதா ?? என்றது ??

அப்பொழுது  சிருஷ்டிகள் யாவும் பரிசுத்தவானை அசைக்கவும் அழிக்கவும் 
 ஒரு நாளும் முடியவே முடியாது. மாறாக அவன் இயேசு என்ற நாமத்தைக் 
கொண்டு நம்மையே அசைத்து விடுவான் 
என்றன.

சேனைகளின் தேவனாகி கர்த்தரையே முழுமனதார விசுவாசித்து, 
அவர் சத்தத்துக்கு செவிக்கொடுத்து கீழ்ப்படிந்து வாழ்ந்து வரும் பரிசுத்தவான்களை, இயற்கையாலும் சாத்தானாலும் எந்த சக்தியாலும் 
அசைக்கவும் முடியாது..!!!, 
அழிக்கவும் முடியாது....

கடவுளுக்காக_சாதிக்க_விரும்பினால் _இந்தப்_பாடலைக்_கேளுங்கள்

https://youtu.be/mFbsdjmgnq0
https://youtu.be/mFbsdjmgnq0
https://youtu.be/mFbsdjmgnq0

நீ தண்ணீர்களைக்கடக்கும்போது 
நான் உன்னோடு இருப்பேன்
நீ ஆறுகளைக் 
கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய்
அக்கினிஜுவாலை  உன் பேரில் பற்றாது. 
-- ஏசாயா 43 :2 

*கிறிஸ்துவுக்குள் அன்பான தேவ ஊழியர்களுக்கும், அன்பு சகோதர, சகோதரிகளுக்கும், அன்பின் வாழ்த்துக்கள்.* 

    கடைசி கால எழுப்புதலுக்கு நேராகதேவன் நம்மை ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கிறார். இன்னும் சில காலங்களுக்குள்ளாக (நாட்களுக்குள்ளாக) இந்த தேசம் மாபெரும் எழுப்புதலை சந்தித்தே ஆகும். கர்த்தருடைய ஊழியமும் திருச்சபையும் எலிசாவின் நாட்களை போல இரண்டு மடங்கான வல்லமைகளோடு திரளான தேவ ஜனங்களால் நிரம்பி வழியப்போகிறது.

இந்த தேசம் தாங்கி கொள்ள முடியாத அளவு தேவ ஜனங்களின்    திரட்சியை சந்திக்கப் போகிறது. 
மாபெரும் எழுப்புதலை உருவாக்கக்கூடிய தேவ திட்டத்தில் இளம் ஊழியர்களாகிய நமக்கு பெரும் பங்கை தேவன் நியமித்து வைத்திருக்கிறார்.

 இளம் ஊழியர்களாகிய நாம் இணைந்து ஜெபத்திலே உறுதியாய் தரித்திருக்க வேண்டியது அவசியம். 

   




280     உழைத்து வாழ வேண்டும்

பிரபு என்ற தொழிலாளி வசித்தான். அவன் மனைவி பெயர் ஜீவனா.

 ஒரு தொழிற்சாலையில் வேலை செய்தான். தினமும் அவன் தவறாமல் வேலைக்குச் செல்வான். வேலை செய்து கிடைக்கும் கூலியுடன் மாலையில் வீடு திரும்புவான். அதை அவன் மனைவியிடம் கொடுப்பான். 

பிரபுவுக்கு குறைந்த கூலியே கிடைக்கும். ஆனால், அவன் மனைவியிடம் அதற்காக மனம் கோணமாட்டாள். அவள் குறைந்த வருமானத்திலும் சிக்கனமாக குடும்பத்தை நடத்தினாள். அவர்கள் சந்தோஷமாக வாழ்க்கை நடத்தினர். கூலி மிகக் குறைவாக கிடைக்கிறதே என்று பிரபு அடிக்கடி கவலைப்படுவான்.

அவன் மனைவி அவனைத் தேற்றுவாள். ஒரு நாள் பிரபு வேலைக்காக வெளியூர் செல்லத் திட்டமிட்டான். அதை தன் மனைவியிடம் தெரிவித்தான். “”வெளியூர் செல்ல வேண்டாம். இங்கே கிடைக்கும் கூலியை வைத்து சிக்கனமாக வாழலாம்,” என்று கூறிவிட்டாள் மனைவி. 

ஒரு நாள் பிரபு பக்கத்து ஊரில் உள்ள தன் நண்பன் வீட்டுக்கு சென்றான். வீடு திரும்பும்போது நன்றாக இருட்டிவிட்டது. பிரபு காட்டு வழியாக தன் வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தான். எங்கும் நல்ல இருள் பரவிக் கிடந்தது. காட்டில் நின்ற மரங்கள் எல்லாம் பயங்கரமாக ஆட்டம் போட்டன. நெஞ்சு திடுக்திடுக்கென்று கண்ணனுக்கு அடித்தது. அவன் திகிலோடு நடந்து கொண்டிருந்தான்.
     
அப்போது பின்னால் யாரோ சிலர் திமுதிமுவென்று ஓடி வரும் சத்தம் கேட்டது. பிரபு மிகவும் பயந்து விட்டான். பிரபு அஞ்சி நடுங்கினான். வேகமாக ஓடிச் சென்று அருகில் இருந்த மரத்தின் மீது ஏறி ஒளிந்து கொண்டான். மேலே இருந்து யார் வருகிறார்கள் என்று கவனித்தான்.

 அப்போது சில திருடர்கள் அந்த மரத்தின் அடிக்கு வந்தனர். அவர்கள் ஒரு பெரிய மூட்டையில் பணத்தைக் கட்டி வைத்திருந்தனர். அவர்கள் பேசுவதை பிரபு உற்று கவனித்தான்.
    
 “”நாம் எல்லாரும் சேர்ந்துதான் இந்தப் பணத்தைக் கொள்ளையடித்தோம். இப்போது நேரம் மிகவும் இருட்டாக இருக்கிறது. எனவே, இந்த பணத்தை ஒரு மரப் பொந்தில் மறைத்து வைப்போம். நாளை காலை வந்து பணத்தை பங்கிட்டு எடுத்துக் கொள்ளலாம்,” என்றான்.மற்ற திருடர்கள் அதை ஆமோதித்தனர்.

 பின்னர் பண மூட்டையை ஒரு மரப் பொந்தில் வைத்து மூடினர். அனைத்து திருடர்களும் அங்கிருந்து திரும்பிச் சென்றுவிட்டனர்.பயம் தெளிந்தது. அவன் மரத்தின் மீது இருந்து திருடர்கள் போய் விட்டார்களா என்பதை கவனித்தான்.

 பின்னர் மரத்தில் இருந்து கீழே இறங்கி வந்தான். திருடர்கள் மரப் பொந்தில் ஒளிந்து வைத்த பண முடிப்பை எடுத்தான். பிரபுவுக்கு மகிழ்ச்சி தாங்கமுடியவில்லை.
     
இதற்கு முன் அவன் இவ்வளவு பணத்தை கண்ணால் பார்த்தது கூட இல்லை. இனி வேலைக்கு செல்ல வேண்டாம் என்று அவன் சந்தோஷப்பட்டுக் கொண்டான். பண முடிப்பைத் தூக்கிக் கொண்டு வேகமாக வீட்டை நோக்கி நடந்தான்.

வீட்டை நெருங்க நெருங்க மீண்டும் அவனுக்கு பயம் ஏற்பட்டது. திருட்டுப் பணத்தை எடுத்து வந்ததற்கு அவன் மனைவி திட்டுவாளோ என்று பயந்தான். எனவே, வீட்டுக்கு வெளியே ஒரு மூலையில் பண முடிப்பை புதைத்து வைத்தான். 

சில நாட்கள் கழித்து மனைவியிடம் சொல்லலாம் என்று நினைத்துக் கொண்டான். பின்னர் வீட்டுக்குள் போனான். 

பிரபு வரவுக்காக ஜீவனா கவலையுடன் காத்திருந்தாள். பிரபுவைக் கண்டதும், “”ஏன் இவ்வளவு நேரம்?” என்று கேட்டாள்.“”நண்பனிடம் பேசிக் கொண்டிருந்ததில் நேரம் ஆகிவிட்டது,” என்று கூறினான்.திருட்டு பணமுடிப்பை எடுத்து வந்ததைப் பற்றி புவனாவிடம் அவன் கூறவே இல்லை. 

பின்னர் சாப்பிட்டுவிட்டு படுத்தார்கள். ஜீவனா தூங்கிய பின் கண்ணன் மெதுவாக எழுந்தான் வெளியே வந்தான். புதைத்து வைத்திருந்த திருட்டு பண முடிப்பை தோண்டி எடுத்தான். அதை வெளிச்சம் உள்ள பகுதிக்கு கொண்டு சென்றான். பண முடிப்பை பிரித்தான். பணத்தை வெளியே எடுத்து எண்ணினான், அதில் ஐந்தாயிரம் ரூபாய் இருந்தது.
     
பணத்தை அப்படியே மூட்டை கட்டினான். ஓசைபடாமல் வீட்டுக்குள் சென்றான். பணத்தை ஒரு பானையில் வைத்து மூடினான். பின்னர் சந்தடி செய்யாமல் வந்து படுத்துக் கொண்டான். தூக்கம் வரவில்லை. பெரும் பணக்காரனாகிவிட்ட மகிழ்ச்சியில் அவன் கனவு கண்டு கொண்டிருந்தான். அந்த பணத்தை வைத்து என்ன தொழில் செய்யலாம் என்று யோசிப்பதிலேயே பொழுதை கழித்தான்.

மறுநாள் காலையில் எழுந்ததும் அவன் வேலைக்கு புறப்படவில்லை.
     “வேலைக்குப் போகவில்லையா?” என்று கேட்டாள் ஜீவனா.
     “வேலைக்குப் போகவில்லை,” என்று கூறிவிட்டதைக் கேட்ட ஜீவனா திடுக்கிட்டாள்.

     “வேலைக்குப் போகாமல் எப்படி சாப்பிட முடியும். நாம் பட்டினி கிடந்து சாக வேண்டியதுதான்,” என்று கூறினாள்.

     “ஒன்றும் சாக வேண்டாம்,” என்று சொன்னான் பிரபு.

     “அப்படியெனில் என்ன செய்யப் போகிறீர்கள்?” என்று ஒன்றும் புரியாமல் கேட்டாள். “வியாபாரம் செய்து பணம் சம்பாதிக்கப் போகிறேன்,” என்று கூறினான்.

     “வியாபாரம் செய்ய முன் பணம் வேண்டுமே?” என்றாள்.பிரபு, “”நான் எங்காவது கடன் வாங்குவேன். அது பற்றி உனக்கு என்ன?” என்று எடுத்தெரிந்து பேசினான்.

கணவனின் போக்கு வியப்பாக இருந்தது. திடீரென்று அவனுக்கு என்ன ஆகிவிட்டது என்று அவளுக்கு புலப்படவில்லை. சிறிது நேரத்தில் ஜீவனாவுடன் அவன் சண்டை போட்டான். அவளை அடித்து உதைத்தான். ஜீவனா அழுதுக் கொண்டே தன் தந்தை வீட்டுக்குச் சென்று விட்டாள். 

பிரபு அன்று பகல் முழுவதும் பல இடங்களுக்கு சுற்றித் திரிந்தான்.பலரை சந்தித்து வியாபாரம் செய்ய யோசனை கேட்டான். வியாபாரம் செய்ய வேண்டுமென்றால் பத்தாயிரம் ரூபாயாவது வேண்டும் என்று பலரும் சொல்லிவிட்டனர். பிரபு கவலை அடைந்தான். அவனிடம் ஐந்தாயிரம் ரூபாய் மட்டுமே இருந்தது. மீதி ஐந்தாயிரம் பெற என்ன செய்யலாம் என்று அவன் யோசித்தான்.

அன்று இரவு அவனுக்கு தூக்கமே வரவில்லை. இனிய இயல்புகள் அவனை விட்டு மறைந்துவிட்டன. பணம் பணம் என்று அவன் புலம்பிக் கொண்டே இருந்தான்.

     வியாபாரம் செய்ய மேலும் ஐந்தாயிரம் ரூபாய்க்கு என்ன செய்யலாம் என்று யோசித்து யோசித்தே பொழுதைக் கழித்தான். ஒருவழியும் தெரியவில்லை. கடைசியாக மீண்டும் ஒரு முறை மரப் பொந்தில் சென்று பார்ப்பது என்று முடிவு செய்து கொண்டான். 

மறுநாள் இரவு அவன் காட்டுக்குச் சென்றான். முன்பு திருடர்கள் பணம் வைத்திருந்த மரத்தின் அடியில் சென்று சுற்றும் முற்றும் யாராவது இருக்கிறார்களா என்று பார்த்தான். பின்னர் ஓசைபடாமல் மரப் பொந்துக்குள் கையை விட்டான்.

     அப்போது பின்னால் இருந்து யாரோ “கும் கும்’ என்று அவன் முதுகில் குத்தி “மடேர்’ என மண்டையில் ஓங்கி அடித்தான். பிரபு வலி பொறுக்க முடியாமல் “”அய்யோ அம்மா…” என்று சத்தம் போட்டான். தொடர்ந்து “படார் படார்’ என அடி விழுந்தது. 

பயத்தில் கண்ணை திறந்து பார்த்தான் பிரபு. அப்போது நான்கு திருடர்கள் அவனைச் சுற்றி நின்று கொண்டிருந்தனர். ஒரு திருடன் பயங்கர மீசையை முறுக்கி கொண்டு, “”டேய் முட்டாளே! எங்களிடமே திருடப் பார்க்கிறாயா? உன்னை சும்மா விடுவோமா?” என்றபடியே ஓங்கி கன்னத்தில் பளாரென அறைந்தான். பிரபு வலி தாங்க முடியாமல் அலறித் துடித்தான். தொடர்ந்து கும் கும் குத்துக்கள் விழுந்தன.

     “பணத்தை எங்கேடா வைத்திருக்கிறாய்?” என்று கேட்டு உதைத்தனர். “அய்யோ என்னை அடிக்காதீர்கள். விட்டு விடுங்கள் அந்தப் பணத்தை நான் தந்து விடுகிறேன்!” என்றான். 

திருடர்கள் அவனை உதைத்து பிரபுவின் வீட்டுக்கு இழுத்துச் சென்றனர். அங்கிருந்த பண முடிப்பை பிரபு திருடர்களிடம் எடுத்துக் கொடுத்தான். திருடர்கள் நன்றாக அடித்து உதைத்து அவன் கையை முறித்தனர். பிரபு “அய்யோ அம்மா’ என்று அலறித் துடித்துக் கொண்டிருந்தான். 

மறு நாள் அவன் மனைவி ஜீவனா இதைக் கேள்விப்பட்டு ஓடி வந்தாள். அவனது நிலை கண்டு வருந்தினாள். பின்னர் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றாள்.

     தன் தீய எண்ணத்துக்காக மனம் வருந்தினான் பிரபு. மனைவியிடம் மன்னிப்பு கேட்டான். அதன் பின் உழைக்காமல் வரும் செல்வத்தை அவன் விரும்புவதில்லை. 

தினமும் வேலைக்கு சென்று சம்பாதித்தான். அதில் அவர்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.
      வாழ்வில் அதிக பணம் சேர்க்க முயல்வது தவறல்ல. ஆனால், அதை உழைத்து சேர்க்க வேண்டும். உழைத்து பணத்தை செலவிடுவதில்தான் மகிழ்ச்சி இருக்கிறது. உழைக்காமல் கிடைக்கும் பணத்தால் பிரச்னைகள்தான் அதிகமாகும். எனவே உழைத்து வாழ வேண்டும்.

என் அன்பு வாசகர்களே,
மற்றவர்களிடத்தில் உண்மையாய் இருக்கிறோமோ இல்லையோ நம் சொந்த மனைவியினிடத்தில் உண்மையாய் இருக்க வேண்டும். அநேகர் தங்கள் வருமானம் இவ்வளவு என்பதைக்கூட தங்கள் மனைவியிடம் கூறுவதில்லை. கணவனின் வருமானம் எவ்வளவு என்பது தெரிந்தால்தான் மனைவி அதற்கேற்றாற்போல் குடும்பத்தை நிர்வாகிக்க முடியும்.

ஆனால் கணவர்களோ தங்கள் சொந்த மனைவியிடம் Ego காரணமாக உண்மையான சம்பளத்தை சொல்லதில்லை. சம்பளம் மட்டுமல்ல சில நேரங்களில் தனக்கு நேரிட்ட கெட்டவைகளை பகிர்ந்து கொள்ளவதில்லை. தனக்கு நேரிட்ட நன்மையான காரியங்களை பகிரும் கணவர்கள் தீங்கை பகிர்வதில்லை ஏனெனில் தன்னுடைய கஷ்டம் தன்னோடு போகட்டும் என்று. ஆனால் ஈருடலும் ஓருயிருமாய் வாழ்க்கையை நடத்துகிற பொழுது எல்லாவற்றையும் ஒளிவும் மறைவும் இல்லாமல் மனைவியிடம் பகிர்ந்துக்கொள்ள வேண்டும்.

அவ்வாறு பகிரும்போது தான் இக்கட்டான சூழ்நிலையில் ஒருமித்து ஒரு தீர்வை எட்ட முடியும். மனைவியிடம் எந்தவொரு காரியத்தை மறைக்கிறோமோ, மறைத்து கணவன் மட்டும்  அந்த காரியத்தை நடப்பிக்க முயற்சித்தால் நிச்சயம் நடைபெறாது. 

வேதத்தில் விசுவாசிகளின் தகப்பனாகிய ஆபிரகாமிடம் ஈசாக்கை பலியிட தேவன் பலியிட கட்டளையிட்ட போது அதை தன்‌ மனைவியாகிய சாராளிடம் சொல்லாமல் மறைத்து தானும் ஈசாக்கும் பலியிட சென்றார்கள். ஆனால் நடந்தது என்ன??. ஆபிரகாமினால் ஈசாக்கை பலியிட முடிந்ததா?? இல்லை. ஆபிரகாமுடைய விசுவாசத்தை சோதிப்பதற்காக தேவன் இவ்வாறு ஏற்ப்படுத்தியிருந்தாலும் சாராளிடம் ஆபிரகாம் உண்மையை சொல்லியிருந்தால் அதற்கு தேவன் மாற்றுவழி ஏதாகிலும் சொல்லியிருப்பார்.

இக்கதையிலும் தான் எடுத்துவந்த பணத்தின் காரியத்தை மனைவியிடம் சொல்லியிருந்தால் நிச்சயம் அவனை நல்வழிப்படுத்தி உண்மையாய் வாழ வழிவகை செய்திருப்பாள். ஆனால் இறுதியில் தர்ம அடி வாங்க வேண்டிய சுழ்நிலை ஏற்ப்பட்டது. வேதம் சொல்கிறது,

28 அப்படியே, புருஷர்களும் தங்கள் மனைவிகளைத் தங்கள் சொந்த சரீரங்களாகப் பாவித்து, அவர்களில் அன்புகூரவேண்டும். தன் மனைவியில் அன்புகூருகிறவன் தன்னில்தான் அன்புகூருகிறான். 
எபேசியர் 5:28

எனவே மனைவியிடம் அன்புகூறுவோம் ஒரே சரீரமாக பாவிப்போம் ஆசீர்வாதத்தை அனுபவிப்போம்.

நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்


No comments:

Post a Comment