சிறுவன் ஹட்சன் தன் தகப்பனார் சொல்லுவதை மிக ஆர்வத்தோடு கேட்பான் . அவர் அவனுக்கு பல காரியங்களைப் பற்றி விவரித்து வந்தார் .
இச்சமயத்தில் அவர்களுடைய பேச்சு சீனநாட்டைப் பற்றியதாக இருந்தது .
உலகின் பல பாகங்களில் புதிய மிஷனெரி இயக்கங்கள் உருவாகி செயல்பட்டு வந்தன .
ஆனால் சீன தேசத்திற்கான மிஷனெரி திட்டங்கள் ஒன்றும் உருவாகி செயல்படவில்லை . ஐந்து ஆண்டுகளுக்கு முன் மரித்துப்போன கடைசி சீன மிஷனெரிக்குப் பிறகு ஒரு மிஷனெரியையும் அனுப்ப முயற்சிகள் எடுக்கப்படவில்லை .
நான்கு அல்லது ஐந்து வயது நிரம்பிய ஹட்சன் இதைக் கேள்விப்பட்டபோது " நான் வாலிபனாகும் போது மிஷனெரியாக சீனாவுக்குச் செல்லுவேன் " என்றான் .
ஆரம்ப பருவம்
இங்கிலாந்து தேசத்தில் 1832ஆம் ஆண்டு மே 21ஆம் நாள் ஹட்சன் டெய்லர் பிறந்தார் .
இவருடைய பெற்றோர் சிறந்த கிறிஸ்தவர்கள் . அதிக மெலிவான தோற்றமும் பெலவீன சரீரமும் உடைய இவன் , கல்வி கற்க அனுப்பப்பட்டான் .
இரண்டாண்டுகள் கல்வி பெற்றபின் 14 வயது வரை லேயே தங்கி பயின்றான் . நான்கு வயதில் அவனுக்கு எபிரேய மொழியின் எழுத்துக்களை அவன் தகப்பன் இக்கார் . சிறு வயதிலேயே உலகின் அருட்பணி தேவையை உணர்ந்தான் . மனந்திரும்புதலும் அழைப்பும் சிறுபிராயம் முதல் ஹட்சன் ஆவிக்குரிய வாழ்க்கையின் சூழ்நிலையில் வளர்க்கப்பட்டான் .
அவ . 14 வயதாய் இருக்கும்போது , ஒரு ஞாயிறு மாலையில் கைப்பிரதி ஒன்றை வாசித்தான் . அதன் தலைப்பு " எல்லாம் முடிந்தது " என்பதாகும் . அதை வாசித்தபோது அவனுக்குள் பாவ உணர்வு வந்தது . இரட்சிப்பின் தேவையையும் உணர்ந்தான் . அந்த நேரமே கிறிஸ்து இயேசுவைத் தன் சொந்த ஆத்தும மீட்பராக ஏற்றுக்கொண்டான் . அவனுடைய தாயார் வெளியூர் சென்று திரும்பியதும் தன் மீட்பின் அனுபவத்தைக் கூறினான் . அவள் தன் மகனிடம் இந்த நிகழ்ச்சி அவளுக்கு முன்பே தெரியும் என்றாள் . ஹட்சன் மிக ஆச்சரியத்துடன் தன் தாயைப் பார்த்து , " எப்படி உங்களுக்குத் தெரியவந்தது " என்றான் . அவள் 70 , 80 மைல்களுக்கப்பால் இருந்தபோது அவளுடைய உள்ளத்தில் மகனைப் பற்றிய மனபாரம் ஏற்பட்டது . ஹட்சன் மனம் திரும்பிய அதே நாளில் அவனுடைய தாயும் ஹட்சன் இரட்சிக்கப்பட வேண்டுமென்று ஊக்கமாய் ஜெபித்தார் . தன் மகனை கர்த்தர் முழுவதுமாக மீட்டுக்கொண்டார் என்ற நிச்சயம் தனக்குள் ஏற்படும் வரை தொடர்ந்து ஜெபித்துக் கொண்டே இருந்தார் . பின் தன் மகனைக் கர்த்தர் இரட்சித்த தற்காக நன்றி செலுத்தி ஸ்தோத்திரம் செய்தார் .
ஒருநாள் பிற்பகலில் ஹட்சன் தன் வேதாகமத்தை வாசித்து படுக்கையருகே முழங்காலில் நின்று கொண்டிருந்தார் . வரும் காலத்தில் தேவன் தம்மை பயன்படுத்த கர்த்தரை நோக்கி வேண்டுதல் செய்து , " ஆண்டவரே நான் என்னவிதமான பணியை எங்கு செய்ய வேண்டுமென்று எனக்குத் திட்டமாய் தெரிவியும் . நீர் எனக்குச் சொல்லும் வரை இந்த அறையிலிருந்து வெளியேற மாட்டேன் " என்று முழங்காலில் இருந்த வண்ணமாக மன்றாடினார் . " எனக்காக சீன தேசத்திற்குப் போ " என்று தேவன் தன்னோடு பேசுவதைத் திட்டவட்டமாய் கேட்டார் . அன்றிலிருந்து அவர் மனம் சீனநாட்டின் பணியின்மேல் நிலைத்து நின்றது . தேவ அழைப்பைப் பெற்ற ஹட்சன் டெய்லர் பிற்காலத்தில் அந்த அழைப்பைப்பற்றி ஒருபோதும் சந்தேகித்ததில்லை . இந்நிகழ்ச்சி அவர் மறுபிறப்படைந்த சில மாதங்களில் நடைபெற்றது .
மிஷனெரி பணிக்கென்று ஆயத்தப்படுதல்
சீனதேசத்தில் திருப்பணி செய்வதற்கென்று தன்னை எல்லா விதங்களிலும் ஆயத்தம் செய்துகொள்ள முயன்றார் ஹட்சன் . சீனதேசத்தைப்பற்றி அவருக்குக் கிடைத்த தகவல்கள் அனைத்தையும் சேகரித்து வாசித்து வந்தார் . ஆழமான ஆவிக்குரிய வாழ்க்கையை வாஞ்சித்து பரிசுத்த ஆவியானவரின் நிறைவுக்காக ஜெபித்து தன்னை ஒப்படைத்தார் .
தேவனோடு இவ்வாறு ஓர் உடன்படிக்கையைச் செய்து கொண்டார் . " தேவனே , என்னை முழுவதுமாய் ஆட்கொண்டு ஆசீர்வதிப்பீரானால் உமக்காக எதையும் சாதிக்க முடியும் . உமது சித்தத்திற்கு ஒப்புக்கொடுத்து , நீர் காட்டும் எதையும் நான் செய்வேன் " என்றார் . தேவனும் அவருடைய இந்த ஜெபத்திற்குப் பதிலளித்து அவருடைய உடன்படிக்கையை உறுதி செய்தார் . '
மிகுந்த பிரயாசத்துடன் லூக்கா எழுதின நற்செய்தி நூலை மொழியில் கற்று புலமை பெற்றார் . ஆசிரியர் உதவி இல்லாமலேயே சீன மொழியைக் கற்றுக்கொண்டார் . அவர் தன்னை மிகக் கட்டுப்பாடான ஒழுக்க வாழ்க்கைக்குக் கொண்டு வந்தார் . கடின உழைப்பும் தேக அப்பியாசமும் செய்து வந்தார் . வாழ்க்கை வசதிகளை உதறித்தள்ளி கிடைத்த தருணங்கள் எல்லாவற்றிலும் தனிமையாகவே வேலை செய்து பழகினார் .
அவருடைய தகப்பனாரின் வணிகத் தொழிலில் ஈடுபட்டிருக்கும்போது , இலத்தீன் , கிரேக்க மொழிகளையும் இறை நூல் , மருத்துவம் , ஆகியவற்றையும் கற்று தேர்ச்சி பெற்றார் . பிற்காலத்தில் அவர் செய்யப்போகும் எல்லாப் பணிகளுக்காகவும் ஆயத்தம் செய்து கொண்டார் .
உலகின் மற்ற பாகங்களில் பணியாற்றும் மிஷனெரி இயக்கங்களோடு தொடர்பு கொண்டு அவை செயல்படும் முறைகளை அறிந்து தம் மனதில் பதித்துக் கொண்டார் .
" சீனர்களின் ஐக்கிய அமைப்பு " பிற்காலத்தில் சீன நாட்டிற்கு நற்செய்தி அறிவிக்கும் கழகமாக மாறியது . அதைப் பற்றிய முழுவிபரங்களையும் தெரிந்து கொண்டார் .
பத்தொன்பதாம் வயதில் மருத்துவத்தில் மேற்கொண்டு படிக்க இலண்டன் நகரம்போய்ச் சேர்ந்தார் . இவ்விடத்தில் ஆவிக்குரிய வாழ்க்கையில் மிகவும் கட்டுப்பாடான கடின வாழ்க்கை முறையை மேற்கொண்டார் . வறுமையும் வாழ்க்கைப் பிரச்சனைகளும் , இவரை கிறிஸ்துவோடு நெருங்கி வாழும்படிச் செய்தது .
தன்னலமற்ற வாழ்க்கையை மேற்கொண்டு தன் வருமானத்தில் மூன்றில் ஒரு பாகத்தைக் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொடுத்து விட்டார் . அச்சமயத்தில் இலண்டனில் நீங்கள் அவரைச் சந்தித்திருப்பீர்களானால் , கடவுள் எப்படி இவரை மிஷனெரி பணித்தளத்தில் பயன்படுத்த முடியும் என்று ஆச்சரியப்பட்டிருப்பீர்கள் . அந்நாட்களில் அவர் மெலிவான தோற்றமும் , ஒதுங்கி வாழும் சுபாவமும் உடையவராய் இருந்தார் . மனித எண்ணத்தின்படி , இவர் ஒரு முன்னோடியான மிஷனெரியாக மாற முடியும் என்பதற்கான தகுதி அவருக்கில்லை .
ஆனால் கடவுளின் வாக்குறுதி " என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ் செய்ய எனக்குப் பெலனுண்டு என்பதாகும் ( பிலி . 4 : 13 ) . கடவுள் ஹட்சன் டெய்லரைப் போன்ற மிக பெலவீன மனிதர்களையே தம்முடைய மகிமைக்காகத் தம்முடைய சித்தத்தில் பயன்படுத்துகிறார் .
இலண்டன் நகரில் ஹட்சன் இருந்த சமயம் , வாலிப பிராயத்தில் அவருடைய விசுவாசம் பலமாய் சோதிக்கப் பட்டது . தினமும் பிரயாண கட்டணத்தைக்கூட அவரால் கொடுக்க முடியவில்லை . அதனால் மருத்துவமனைக்கும் தன் வீட்டிற்கும் நடந்தே போய் வந்தார் . ஒவ்வொரு நாளும் எட்டுமைல் தூரம் நடக்க வேண்டியதிருக்கும் . அவருடைய ஆகாரமும் மிகவும் அற்பமானது . ஒரே ரொட்டியை காலை மற்றும் மதிய உணவுக்கு வைத்துக் கொள்வார் .
ஒரு சமயம் விஷகாய்ச்சலினால் மரித்துப் போன ஒருவனுடைய உடலைப் பரிசோதனை செய்யும்போது அவர் விரல்கள் மூலமாக விஷம் ஏறி வியாதிப்பட்டார் . அநேகமாக மரிக்கும் நிலையை அடைந்துவிட்டார் .
சீனதேசத்து சேவையெல்லாம் வெறும் கனவோ என்று எண்ணத் தோன்றியது . ஆனாலும் விசுவாசத்தில் உறுதியாயிருந்து பூரண சுகம் பெற்றார் . இவ்வித அனுபவங்களின் மூலமாக அவருடைய விசுவாசம் அதிகமாய் பெலப்பட்டது .
சீனநாட்டில் பிரவேசித்தல்
1853ஆம் ஆண்டு , செப்டம்பர் மாதம் ஹட்சன் டெய்லர் சீனாவிற்குப் பிரயாணம் செய்ய கப்பல் ஏறினார் . அவருடைய மூன்று நண்பர்கள் வழியனுப்ப , அவர் தரிசனமும் அழைப்பும் பெற்ற நாட்டிற்குப் பிரயாணப்பட்டார் . " சீன நாட்டிற்கு நற்செய்தி கழகம் " என்ற ஸ்தாபனத்தின் வாயிலாக அனுப்பப் பட்டார் . ஐந்தரை மாதங்கள் பிரயாணத்திற்குப்பின் இருபத்திரெண்டு வயதான இளம் வாலிபனான ஹட்சன் , சீனதேசத்தில் ஷாங்காய் துறைமுகத்தில் வந்து இறங்கினார் . அவருக்கு வாக்களிக்கப்பட்ட நாட்டின் கரையில் அவர் காலடி எடுத்து வைத்தபோது அவர் உள்ளம் பூரித்துப் போனார் .
சீனாவில் உள்நாட்டுப் பகுதியை , சுவிசேஷத்திற்கென்று ஊடுருவிச் செல்லப்போகிறவர் தானே என்று அப்போது அவருக்கு தெரியாது . சீன நாட்டில் அவர் கரையிறங்கியபோது அவரை வரவேற்க ஒருவரும் இல்லை . நண்பர்களும் யாரும் இல்லை . ஷாங்காய் நகரம் புரட்சியாளர்களின் ஆட்சியில் இருப்பது அவருக்கு அப்போதுதான் தெரிய வந்தது . உணவுப் பொருள்களின் விலைகள் உயர்ந்ததாகக் காணப்பட்டது . தனிமையில் வந்து சேர்ந்த வாலிப மிஷனெரிக்கு இவைகள் உற்சாகமூட்டக் கூடியதாக இல்லை . கடவுளின் பேரில் அவருக்கிருந்த விசுவாசமே , அவரைத் தாங்கிப்பிடித்தது .
சீனரை கிறிஸ்துவுக்குள் வழிநடத்த இவர் மிகத் துடிப்பாய் இருந்தார் . மிகக்குறைந்த மொழி அறிவைக் கொண்டே சீன மக்களைச் சந்திக்கவும் , அவர்களுக்கு நற்செய்தி நூல்களையும் , கைப்பிரதிகளையும் கொடுக்கும் படியாக திருப்பணியில் இறங்கினார் . இவ்விதம் மக்களிடையே பழகியதால் , பல புதிய சீன வார்த்தைகளைக் கற்றுக்கொள்ளவும் , அதை உச்சரித்து இலகுவாகப் பேசவும் அவரால் முடிந்தது . முன்னோடியான மிஷனெரிகள் சென்றிராத அநேக பகுதிகளுக்கு இவர் சென்று ஊழியம் செய்தார் . அப்படி உள்நாட்டுப் பிரயாணங்கள் அதிக ஆபத்தைக் கொண்டுவரும் நிலையில் அன்று மக்கள் புரட்சி நடத்தினார்கள் . ஒருமுறை அவருடைய ஊழியத்தின் போது ஓர் உயரமான பலசாலி மனிதனிடம் சிக்கிக்கொண்டார் . அவன் குடிவெறியில் இருந்தான் . தலைமுடியைப் பிடித்து அவரை இழுத்து முரட்டுத் தனமாக அவரை நடத்தினான் . அவரோ மயக்கமாகி விழும் நிலைமைக்கு வந்துவிட்டார் . என்றாலும் ஹட்சன் தன்னை நிதானித்துக் கொண்டு , இலக்கியப் புத்தகங்களை விநியோகித்துக் கொண்டிருந்தார் .
தனக்கு மற்றொரு தருணம் கிடைக்காமல் போகலாம் என்பது அவர் எண்ணம் . அவருடைய எதிரிகள் அவர் புத்தகங்களை விநியோகிப்பதைக் கண்டு அதிக கோபமுற்றனர் . ஓர் அரசாங்க அலுவலரிடம் இழுத்துச் சென்றனர் . அந்த அதிகாரி மிகுந்த மரியாதையாய் அவரை நடத்தி , ஒரு புதிய ஏற்பாட்டை அவரிடமிருந்து பெற்றுக்கொண்டார் . ஹட்சனின் நினைவும் மனமும் உள்நாட்டுச் சீனர்களைப் போய் அடைவதையே இலட்சியமாகக் கொண்டிருந்தது . எண்ணிறந்த சீனமக்கள் உள்நாட்டில் கிறிஸ்துவுக்கென்று ஆதாயப்படுத்தப்படாத நிலையில் இருந்தனர் .
பவுல் அடியாரின் முன்மாதிரியின்படி , " சிலரையாவது இரட்சிக்கும் படியாக நான் எல்லாருக்கும் எல்லாமுமானேன் " என்றபடி இவரும் சீன உடைகளை உடுத்தி , சீன வாழ்க்கை முறையை மேற்கொண்டார் . இவர் சீனருடைய முறைகளைப் பின்பற்றியது ஐரோப்பியர்களுக்கும் மற்ற மிஷனெரிகளுக்கும் பிடிக்கவில்லை . உள்நாட்டு சீனமக்களை ஆதாயப்படுத்த வேண்டுமானால் சீனர்முறைகளை அனுசரிப்பது சிறந்தது என்று ஹட்சன் அறிந்திருந்தார் . அவ்விதம் அவர் அவர்கள் மத்தியில் உழைத்தது பலன் தந்தது . சில மாதங்களில் மனம் திரும்பிய முதல் ஆத்துமாவை ஆதாயப்படுத்தி விட்டார் . பிரச்சனைகள் சூழ்ந்தும் அதைரியப்படவில்லை டெய்லர் தன்னுடைய பணியில் அடிக்கடி சோர்வடைய சோதிக்கப்பட்டார் . எதிர்காலம் அவருக்கு இருளாகவே இருந்தது . அதைக் குறித்து " என் பாதை சமமாகக் காணப்பட்டாலும் ஓர் அடி மாத்திரம் நடத்தப்பட்டேன் . நான் இன்னும் கடவுளுடைய வெளிப்படுத்தலுக்குக் காத்திருக்கவும் அவரை நம்பவும் வேண்டும் . " எல்லாம் நன்மைக்காகவே நடக்கும் " என்று எழுதியுள்ளார் . அவரை அனுப்பி வைத்த மிஷனெரி இயக்கம் அக்கறையில்லாமல் இருந்துவிட்டது . பண உதவிகள் ஒழுங்காய் வந்து பணித்தளம் சேருவதில்லை .
இவர் ட்சுங்கிங் நகரில் ஒரு மருத்துவப்பணித்தளத்தை நிறுவினார் . அதன் மூலமாய் ஆயிரக்கணக்கான ஆத்துமாக்களைச் சந்திக்க முடிந்தது . பிரிட்டிஷ் அரசு அதிகாரிகள் , அவரை உள்நாட்டிற்குள் செல்லாதபடி தடைவிதித்தனர் . அப்படிச் செல்லுவாரானால் ஒரு பெரிய அபராதத் தொகையைக் கட்ட வேண்டு மென்று கட்டளையிட்டனர் . எதிர்பாராத சீனபுரட்சி சம்பவங்கள் , அவருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்பதே அதன் நோக்கம் , ஹட்சன் தன்னைப் பாத காத்துக் கொள்வதைவிட , உள்நாட்டு மக்களுக்கு நற்செய்தியை அறிவிப்பதே அவருக்குப் பிரதானமாய்க் காணப்பட்டது . அவருடைய மன உறுதியிலும் அவர் தளர்ந்து விடவில்லை . பாதுகாப்பைக் காட்டிலும் மக்களைக் கிறிஸ்துவுக்குள் கொண்டுவருவது அவர் நோக்கம் . அவருடைய ஒரே நண்பர் வில்லியம் பர்ண்ஸ் என்பவர் மரித்ததினால் , அவருக்கு அதிர்ச்சியும் , தாங்கமுடியாத துயரமும் ஏற்பட்டது . அவரும் இவரைப்போன்றே ஒரே நோக்கம் உடையவர் . சீனர்களின் மீட்புக்காக திருப்பணியில் ஈடுபட்டவர் . ஹட்சன் இறந்துவிட்ட தன் நண்பனின் கிறிஸ்தவ ஐக்கியத்தினால் உற்சாகத்தையும் , மன உறுதியையும் பெற்றிருந்தார் . 1856ஆம் ஆண்டு பர்ண்ஸ் , உள்நாட்டுப் புரட்சிக்காரர்களால் சிறைபிடிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார் .
இது அவருக்குப் பேரிழப்பாகும் . எல்லா நிலைமைகளிலும் கிறிஸ்து , ஹட்சன் டெய்லரை வழிநடத்தினார் . நிங்போ என்ற துறைமுக நகரில் தன் பணியை ஆரம்பிக்க முடிவு செய்தார் . அந்நகரில் மருத்துவர் எவரும் இல்லை . நிங்போ நகருக்குச் செல்லும் வழியில் அவருடைய வேலைக்காரன் எல்லா உடைமைகளையும் திருடிக்கொண்டு அவரைத் தனியே விட்டு ஓடிப்போனான் . ஆகாரக் குறைவினாலும் , தூக்கமின்மையாலும் ஆயாசப்பட்டவராய் , அதிகக் களைப்படைந்தார் . சரீரம் பெலவீனப்பட்டதால் பாதை ஓரத்தில் மயங்கி விழுந்துவிட்டார் . இந்நிலையிலும் அவருடைய பிரதான நோக்கம் , தன்னைச் சுற்றிலுமுள்ள சீனர்களைப் பற்றியதே ஆகும் . தன் உடமைகளை இழந்ததினால் ஏற்பட்ட தவிப்பு அவரிடம் காணப்பட வில்லை . கிறிஸ்துவை உடனடியாகவே பிரசங்கிக்க ஆரம்பித்து விட்டார் . நிங்போ மொழியில் ஏற்கனவே இருந்த புதிய ஏற்பாட்டுப் புத்தகத்தை மறுபடியும் திருத்தியமைத்தார் .
மரியா டையர் என்ற இளம்பெண்ணை நிங்போ நகரில் சந்தித்து திருமணம் செய்து கொண்டார் . இருவரும் சேர்ந்து நோயுற்றோரைக் கவனிப்பதிலும் , சீனர்களுக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதிலும் ஈடுபட்டனர் . நீண்ட நேர படிப்பு , போதனை செய்வது , பல வேறுபட்ட பருவநிலை களில் நீண்ட பிரயாணங்களை மேற்கொள்ளுவது ஆகியவை டெய்லர் அவர்களின் சுகத்தை பெரிதும் பாதித்தது . ஏழு ஆண்டுகள் இடைவிடாத சேவைக்குப்பின் , அவருடைய சுகவீனத்தின் காரணமாக இங்கிலாந்து தேசம் செல்ல நேரிட்டது . ஓய்வு எடுக்கவும் , நற்சுகம் பெறவும் சுய தேசத்திற்குத் திரும்பிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது .
சீன உள்நாட்டு மிஷன் ஸ்தாபனம்
இலண்டன் நகரில் அவர் தங்கியிருக்கும்போது , மருத்துவ கல்வியை தொடர்ந்து படித்தார் . சீனதேச விளக்கப்படம் ஒன்று அவருக்கெதிராக சுவற்றில் தொங்கவிடப்பட்டிருந்தது . அதில் பதினொரு தனித்தனி பிரதேசங்களையும் , முப்பத் தெட்டு கோடி மக்களையும் சித்தரித்து இருந்தது . இத்தனைக் கோடி மக்களுக்கும் சுவிசேஷத்தைச் சொல்ல , ஒரே ஒரு மிஷனெரிகூட அன்று இருக்கவில்லை . இது அவருக்கு எப்போதும் நினைவூட்டுதலாகவே இருந்தது . சீனதேசத்தின் தேவைகளை கைப்பிரதிகளின் வாயிலாகவும் , சிறுபிரசுரங் களாகவும் எழுதி வந்தார் . இந்த பதினோரு பிரதேசங்களில் பணிபுரிய இருபத்துநான்கு மிஷனெரிகளுக்காக ஜெபித்து வந்தார் . இரண்டு நாள் கழித்து ஒரு சிறு தொகையை விசுவாசத்தினாலே வங்கியில் முதலீடு செய்தார் . சீன உள்நாட்டு மிஷன் ஸ்தாபனத்தின் பேரில் , அந்தத் தொகை வைப்புத் தொகையாக இருப்பில் போடப்பட்டது . விசுவாசத்தின் விளைவாக சீன உள்நாட்டு மிஷன் ஸ்தாபனம் அன்று நாட்டப்பெற்றது . " சிறிய தொகையோடு ஏராளமான கடவுளின் வாக்குத்தத்தங்களும் அன்று மிஷன் ஸ்தாபனத்திற்காக முதலீடு செய்யப்பட்டது " என்று ஹட்சன் சொன்னார் .
தேவன் அவருடைய மன்றாட்டுகளுக்குப் பதில் அருளினார் . பதினோரு மாதங்கட்குப்பின்னர் , பதினாறு மிஷனெரிகளோடு சீன நாட்டிற்கு ஹட்சன் பயணமானார் . அவரோடு சென்ற பதினாறு மிஷனெரிகளும் , அவரைப் போலவே முழுவதுமாய் கர்த்தரைச் சார்ந்து திருப்பணிக்கு ஒப்படைத்தவர்கள் . தேவ வாக்குகளை நம்பி ஏற்றுக்கொண்டு தங்களைத் தத்தம் செய்திருந்தனர் . ஒருவருக்காகிலும் நிச்சயமான மாதச் சம்பளம் கிடைக்கும் என்ற உறுதியில்லை . எந்த இடத்தில் பணி செய்யப் போகிறோம் , அவ்விடத்தில் நிலைமை யாது என்று அறியாத நிலையில் பயணமாயினர் .
சீன நாட்டில் அவர்களை வரவேற்க ஒருவரும் இல்லை . உள் நாட்டுப் பகுதிக்குச் செல்லவே அனைவரும் தீர்மானித்திருந்தனர் . உள்நாட்டில் , வெளிநாட்டவருக்கு பலத்த எதிர்ப்ப இருந்து வந்தது . கப்பல் பிரயாணத்தின் போது , ஹட்சன் குழுவினர் ஆற்றிய திருமறை உரையாடல்கள் மூலமாய் இருபது கப்பல் சிப்பந்திகள் கிறிஸ்துவை தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுகொண்டனர் . கப்பலின் மொத்த ஊழியர் முப்பத்து நான்குபேர் .
" கடல் கடந்து செல்வதால் ஒரு மிஷனெரி உருவாகுவதில்லை . தன் வீட்டிலும் , சுயநாட்டிலும் பயன்படாதிருக்கிற ஓர் ஆள் அயல்நாட்டிலும் கிறிஸ்துவின் சேவையில் பயனுள்ளவராய் இருக்கமாட்டார் " என்று ஹட்சன் அடிக்கடி கூறுவார் .
சீன நாட்டை மறுமுறை வந்தடைதல்
ஷாங்காய் துறைமுகத்தில் வந்து சேர்ந்த அனைத்து மிஷனெரிகளும் , உயிர் ஆபத்துக்களுக்குப் பயப்படாமல் உள்நாட்டிற்குள் போகத் தீர்மானித்தனர் . இந்தக் குழுவிற்கு இளமை மிக்க டெய்லர் , தளபதியாக தலைமை ஏற்று நடத்திச் சென்றார் .
அநேகமுறை அவர்களுக்கு தங்கும் வசதியோ ஏற்ற ஆகாரமோ இருந்ததில்லை . கர்த்தரை நம்பினபடியினால் அவரே அவர்களுடைய தேவை எல்லாவற்றையும் சந்தித்தார் . சிறுபிள்ளைக்கொத்த எளிய விசுவாசமே , டெய்லர் அவர்களின் வெற்றியின் இரகசியமாய் இருந்தது . "
ஒவ்வொரு பிரச்சனையையும் விசுவாசத்தினால் மேற்கொண்டு வெற்றியடைவதே , கர்த்தருடைய பிள்ளைக்கு பலமும் , ஊட்டமும் கொடுக்கக்கூடிய வல்லமையாக மாறுகிறது " என்று ஹட்சன் சொல்லுவார் .
இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் , சீன உள்நாட்டு மிஷன் ஸ்தாபனம் மிகப்பெரிய அளவில் வளர்ந்து சிறப்பான பணியினை செய்து வந்தது . இருநூற்று இருபத்தைந்து மிஷனெரிகளும் , ஐம்பத்தொன்பது ஆலயங்களும் , ஆயிரத்து எழுநூறு விசுவாசிகளையும் கொண்ட ஸ்தாபனமாய் விளங்கிற்று . பயிற்சி நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டன . ஆயிரக்கணக்கான கைப்பிரதிகளும் , சிறு புத்தகங்களும் சீன மக்களுக்கு விநியோகிக்கப்பட்டன .
தெய்வத் திருப்பணியில் இழப்புகளும் உண்டு . ஹட்சன் டெய்லருடைய மனைவியும் மூன்று மக்களும் இறந்துபோயினர் . அவருடைய மனைவி பன்னிரண்டரை ஆண்டுகள் அவருக்கு மிக உதவியாக இருந்தவள் . காலரா வியாதியினால் மரித்துப்போனாள் . அவர் அதிகமாய் நேசித்த அருமை மகள் இறந்தபோது , " எங்கள் இதயங்கள் வெடித்து சிதறுகின்றன . இந்த அனுபவம் எல்லாவற்றிற்கும் மேலாக உயர்ந்து நிற்கின்றன . எங்கள் இயேசு எல்லாவற்றையும் நன்றாய் செய்தார் " என்றும் , அவர் மனைவி இறந்தபோது , " நானோ தனித்து விடப்பட்டவன் அல்ல . முன்னைக்காட்டிலும் கர்த்தர் எனக்கு அதிக நெருக்கமாய் உள்ளார் " என்றும் எழுதி வைத்தார் .
ஹட்சன் இப்படிப்பட்ட பெரும் இழப்புகளைக் கிறிஸ்துவின் நிமித்தம் தைரியத்தோடு தாங்கிக்கொண்டார் . - சீன நாட்டின் திருப்பணித் தேவைகளை எல்லாம் அவர் சென்ற இடமெல்லாம் மக்களுக்கு எடுத்துச் செல்லுவார் . ஆனால் ஒருபோதும் " பணம் தாருங்கள் " என்று கேட்டதே இல்லை .
அவருக்குப் பணமோ , ஊழியர்களோ தேவைப் ட்ட போதெல்லாம் , கர்த்தருக்கே தம் வேண்டுதல்களைத் தெரியப் படுத்தினார் . சீன உள்நாட்டு மிஷன் பணிக்கென்று காணிக்கையெடுக்க அவர் ஒருபோதும் அனுமதித்ததே இல்லை . அவருடைய திட்டமான இந்தக் கொள்கையின் அடிப்படையில்தான் , மிஷன் ஸ்தாபனம் இயங்கி வந்தது .
கடவுளுக்கு மகிமையைக் கொண்டு வருவதே அவரது நோக்கம் . சீன தேசமே எப்போதும் அவர் நினைவு ஹட்சன் டெய்லர் பலமுறை இங்கிலாந்திற்கு வந்தபோதிலும் , அவர் நினைவெல்லாம் சீன நாட்டைப் பற்றியதே .
அதனால் அவர் திருப்பணிக்குத் திரும்பி விடுவார் . இரண்டாவது முறையும் திருமணம் செய்து கொண்டு , சீன தேசத்தில் ஒவ்வொரு பட்டணத்தையும் கிறிஸ்துவுக்கென்று ஆதாயப்படுத்தத் தீர்மானித்தார் . அவருடைய முதுகெலு விபத்தால் ஏற்பட்ட காயத்தினிமித்தம் , பல மாதங் படுக்கையில் இருக்க வேண்டியதாயிற்று , சுகவீன நாட்கள் கடவுள் அவருக்கு தெளிவான வெளிப்பாடுகளைத் தந்தரும் நாட்களாகும் . சீன திருப்பணியின் திட்டமான செயல்ப் நோக்கங்களை வரையறுத்தார் . அதற்கென்று ' தம் மனைவியுடன் அவ ஹட்சன் டெய்லர் 105 பெடன் அமெரிக்க ஐக்கிய நாடுகள் , கனடா , திரேலியா , தென் அமெரிக்கா ஆகிய நாடுகளில் சுற்றுப் ணம் மேற்கொண்டார் . இவ்விடங்களிலெல்லாம் சீன தேசத்தின் ஏராளமான தேவைகளை எடுத்துச் சொன்னாரே வி . பணஉதவியை ஒருபோதும் கேட்டதில்லை . 1900ஆம் படு அவர் இங்கிலாந்தில் இருந்த சமயம் சீன தேசத்தில் பணிசெய்து கொண்டிருந்த எழுபத்தொன்பது மிஷனெரிக் கடும்பங்கள் சீனர்களால் படுகொலை செய்யப்பட்டதைக் கேள்விப்பட்டார் . அவர்களில் இருபத்தொரு பேர் நிலனெரிகளின் பிள்ளைகளாகும் . நான்கு வருடங்கள் கழித்து அவர் தமது இரண்டாவது மனைவியையும் இழந்து விட்டார் .
டெய்லர் இங்கிலாந்து தேசத்தில் தங்கியிருக்க மனமற்றவராய் , 1905ஆம் ஆண்டு தன்னுடைய பதினோராவது பயணத்தை மேற்கொண்டார் . இங்கிலாந்திலிருந்து சீனாவுக்கு சென்ற கடைசிப் பயணமாகவும் அது அமைந்தது . சீன நாட்டில் அவருக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது . அவர் சாங்ஷா பட்டணத்திற்குச் செல்ல விரும்பினார் . அப்பட்டணம் அவருடைய திருப்பணித் திட்டத்தில் இருந்த கடைசி மாநிலத்தின் தலை நகரமாகும் . அந்நகரை சுவிசேஷத்தின் ஆரம்பப் பணிக்கென்று திறந்து விட வந்து சேர்ந்தார் . சாங்ஷா நகரில் அவர் வந்து இறங்கியதுமே , கடவுளோடு ஐக்கியப்படும் படியாகப் பரலோகம் சென்றடைந்தார் . ஹட்சன் டெய்லர் இறக்கும்போது , சீன உள்நாட்டு ஸ்தாபனத்தில் எண்ணூற்று நாற்பத்தொன்பது மிஷனெரிகள் பணியாற்றிக் கொண்டிருந்தனர் . சீனநாடு கம்யூனிஸ்டுகளால் ஆக்கிரமிப்பு செய்யப்படும் வரை , சீன உள்நாட்டு மிஷன் கிறிஸ்துவின் சேவையில் ஈடுபட்டிருந்தது . ஹட்சன் டெய்லர் ் உலக ஐசுவரியம் ஒன்றும் இல்லாதவர் . வறுமையில் வாழ்ந்தவர் . வாழ்க்கை வசதிகளை உதறித்தள்ளி , அநேகரை ஐசுவரியவான்களாக்கத் தன்னை ஏழ்மையாக்கினார் . ஜீவனுள்ள தேவனை முழுவதுமாய் நம்பிச் சார்ந்ததே இவர் வாழ்க்கையின் இரகசியம் . வேத வசனங்களில் காணப்படும் வாக்குகளை எல்லாம் நம்பிக்கையோடு ஏற்றுக்கொண்டவர் . தேவன் எவைகளையெல்லாம் தமது வசனத்தில் வாக்குத்தத்தம் செய்திருக்கிறாரோ , அவைகளை நிச்சயம் செய்வார் என்ற உறுதியோடு பணியாற்றினார் . "
கைகூடாது , நடக்கவே நடக்காது , ஒருவரும் செய்ய முடியாது என்று மனிதன் நினைப்பவைகளைப் பார்த்து விசுவாசம் என்னும் பற்றுறுதி சிரிக்கும் .
கீழ்ப்படிதலும் , கடவுளுடைய சித்தத்தை செய்தலும் , கேள்விகளைக் கேட்டு தாமதிக்கும் மனப் பான்மையைக் கொண்டு வராது " என்னும் பொன்மொழிகளை ஹட்சன் அடிக்கடி கூறுவார் .
விசுவாசமும் கீழ்ப்படிதலும் , கர்த்தருடைய திருப்பணியாளர்களின் வல்ல செயல்களின் இரகசியமாகும் . நீயும் கர்த்தருடைய பணியில் விசுவாசத்தோடு கீழ்ப்படிவாயா ?
அறியப்படாத ஆப்பிரிக்காவிற்கு வழிவகுத்துக் கொடுத்தவர் டேவிட் லிவிங்ஸ்ட
அன்புள்ள அம்மா ! இதோ இந்தப் பணம் நான் ஒரு வாரத்தில் சம்பாதித்தது " என்று டேவிட் மிக உற்சாகத்தோடு தன் தாயின் மடியில் அவனுடைய சம்பளத்தை எடுத்துவைத்தான் .
குடும்பத்தின் வறுமையை ஓரளவு அவனுடைய சம்பாத்தியத்தால் குறைக்க முடிகிறது என்று அவன் உணர்ச்சிவசப்பட்டான் .
" இந்தப் பணத்தை வைத்து என்ன செய்யப்போகிறாய் டேவிட் " என்று அவன் தாய் கேட்க , " அம்மா நீங்கள் அனுமதித்தால் இலத்தீன் மொழியின் இலக்கணப் புத்தகம் வாங்க விரும்புகிறேன் " என்று நிதானமாய் பதிலளித்தான் . அவனுக்குப் படிக்க வேண்டும் என்று அத்தனை ஆர்வம் இருந்தது . ஆனால் வறுமை அவனுக்குக் கல்வி கற்கும் வாய்ப்பை மறுத்து விட்ட து .
ஆரம்ப வாழ்க்கை
1813ஆம் ஆண்டு மார்ச் மாதம் பத்தொன்பதாம் தேதி டேவிட் லிவிங்ஸ்டன் ஸ்காட்லாந்து தேசத்தில் பிறந்தான் . அவனுடைய பெற்றோர் மிக பழைகள் . ஆனால் உண்மை கிறிஸ்தவர்கள் , குழந்தைப் பருவத்தில் டேவிட் கிறிஸ்தவ ஒழுக்கங்களைப் பெற்றோரிடமே கற்றுக்கொண்டான் .
ஒன்பது வயதிலேயே வேதாகமத்தை மிகக் கருத்தோடு படிக்கலானான் . நூற்றுப்பத்தொன்பதாம் சங்கீதம் முழுவதும் அப்போது அவனால்மனப்பாடமாகச் சொல்ல முடியும் . மிகுந்த வறுமையின் காரணமாக அவன் பள்ளிக்குச் சென்று கல்வி கற்க முடிய வில்லை .
பத்தாம் வயதில் ஒரு பஞ்சாலையில் வேலைக்கு அமர்ந்தான் . அங்கு காலை ஆறு மணிமுதல் இரவு எட்டு மணிவரை வேலை செய்ய வேண்டும் . வேலை செய்யும்போது இலத்தீன் மொழி புத்தகத்தைத் தனக்கருகில் திறந்து வைத்துக் கொண்டு படித்துக் கொண்டே வேலை செய்வான் .
வீட்டிற்கு வந்து மிகவும் களைப்பாய் இருந்த போதிலும் நடு இரவு வரை படித்துக் கொண்டிருப்பான் . கடின உழைப்பின் பயனாக இலத்தீன் மொழியில் நன்றாகத் தேர்ச்சி பெற்றான் .
அதன்பின் அறிவியலை கற்க ஆரம்பித்தான் . ஆலையில் திறமையுடன் பணியாற்றியதால் பதவி உயர்வும் , அதிக ஊதியமும் அவனுக்குக் கிடைத்தன . பதவி உயர்வு , ஊதிய உயர்வு இவ்விரண்டும் அவனுக்குக் கல்வி கற்கத் துணைபுரிந்தன . கோடைகாலங்களில் வேலை செய்யவும் , குளிர்காலங்களில் கல்வி கற்கவும் வசதி கிடைத்தது .
கிளாஸ்கோ பல்கலைக் கழகத்தில் கிரேக்க மொழியையும் , மருத்துவமும் கற்று வந்தான் . கோடை காலத்தில் வேலை செய்து கொண்டே இறையியல் நூல்களைக் கற்று வந்தான் . கல்வியில் மேம்பாடு அடைய அவனுக்கு யாருடைய உதவியும் கிடைத்ததில்லை . இத்தனை கடின உழைப்பும் , வாழ்க்கைத் துன்பங்களும் அவனுக்குப் பிற்காலத்தில் பணித்தளத்தில் பாடுகளைச் சகிக்க பயிற்சியாக அமைந்தது .
லிவிங்ஸ்டனுக்கு விளையாட நேரம் இருந்ததில்லை . ஆனால் ஒவ்வொரு நாளும் , ஆற்றோரமாகச் செல்லும் பாதையில் தன் வீட்டிற்கு நடந்து செல்வதை இன்பமாக ரசித்து மகிழுவான் . மீன் பிடிப்பதிலும் அவனுக்கு விருப்பமுண்டு . இயற்கை காட்சிகளைக் கூர்ந்து கவனிப்பான் . பறவைகள் , பலவகை பூக்கள் , மலைகள் , குன்றுகள் ஆகியவைகளைக் கவனித்து அறிவைப் பெருக்கிக் கொள்வான் . பிரயாணத்தின் போது புத்தகங்களைப் படித்துச் செல்வதில் விருப்பமுடையவன் . எல்லாவற்றிற்கும் மேலாக வேதாகமத்தை வாசித்து தியானிப்பதில் அதிக பற்றுடையவன் . இவ்விதம் வேதாகமத்தை எல்லாவற்றையும்விட நேசித்தது , அவனுடைய பிற்கால வாழ்க்கைக்கு பெரிதும் உதவிற்று . வேதாகமமே அவனுடைய கடைசி நாட்களில் அவனுக்கு இணையற்ற துணையாய் இருந்தது .
ஆப்பிரிக்க நாட்டிற்கு அழைப்பு
லிவிங்ஸ்ட ன் அவருடைய இருபதாவது வயதில் கிறிஸ்துவைத் தன் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு , அயல்நாடுகளில் மிஷனெரியாகச் செல்ல தீர்மானித்தார் . ஒரு ஜெர்மானிய மிஷனெரி , மருத்துவம் தெரிந்த தேவ ஊழியர் தேவை என்று லிவிங்ஸ்ட னுக்குக் கடிதம் எழுதினார் . மருத்துவப் பணியைச் சீன நாட்டில் செய்ய அழைத்திருந்தார் . அதனால் லிவிங்ஸ்ட ன் தன் மருத்துவப் படிப்பை முடித்ததும் , சீன நாட்டிற்கு மிஷனெரியாகச் செல்ல முடிவெடுத்தார் . இரண்டாண்டுகள் மருத்துவக் கல்வி பயின்றபின் சீனாவுக்குப் போக ஆயத்தமானார் . கடவுளோ அவருக்காக வேறு திட்டங்களை வைத்திருந்தார் .
நாம் நம்முடைய செயல் திட்டங்களை , கடவுள் கரத்தில் ஒப்படைக்கும்போது , நம் விருப்பம் நிறைவேறாது போயினும் , கர்த்தரின் சித்தம் தவறாது நிறைவேறும் . சீன தேசத்தில் உள்நாட்டு யுத்தம் நடைபெற்றமையால் லிவிங்ஸ்டன் சீனாவிற்குப் போவது தடையாயிற்று . கர்த்தருடைய வழிநடத்துதலுக்காக காத்திருக்கும் போது ராபர்ட் மொஃபட் என்னும் ஆப்பிரிக்க மிஷனெரி ஒருவர் , இலண்டன் நகரில் ஆப்பிரிக்க நாட்டின் தேவைகளைக் குறித்துப் பேசினார் . அவர் சொன்னதாவது : " ஆப்பிரிக்க நாட்டில் ஆயிரக்கணக்கான கிராமங்களில் புகை மண்டலத்தை நான் பார்த்தேன் . அவர்கள் கடவுளற்றவர்கள் , கிறிஸ்துவை அறியாதவர்கள் , உலகில் நம்பிக்கை அற்றவர்கள் . " இந்தப் பேச்சு லிவிங்ஸ்டன் உள்ளத்தில் கிரியை செய்தது . அதனால் ஆப்பிரிக்க நாட்டிற்குப் போக தீர்மானித்தார் . கப்பல் பிரயாணத்தின்போது , நட்சத்திரங்களைக் கணித்து வழி கண்டுபிடிப்பது எப்படி என்ற கலையைக் கற்றுக் கொண்டார் . தென் ஆப்பிரிக்கா நாட்டின் கேப் டவுன் நகர் வந்து இறங்கியதும் வான சாஸ்திரம் கற்றுக்கொண்டார் . இருண்ட காடுகளில் அவர் பிற்காலத்தில் பிரயாணம் செய்ய நேரிட்டபோது , வழி கண்டுபிடிக்க வானசாஸ்திர பயிற்சி அவருக்கு மிகவும் பிரயோஜனமாக இருந்தது .
இருண்ட கண்டத்தில் டேவிட் லிவிங்ஸ்டன்
கேப் டவுன் நகரில் இருந்து எருதுகள் இழுக்கும் கண்டு வண்டியில் எழுநூறு மைல்கள் பிரயாணம் செய்து குருமான் என்ற இடத்தையடைந்தார் . அங்குதான் ராபர்ட் மொபேட் பணியாற்றிக் கொண்டிருந்தார் . அவருடன் தங்கியிருக்கும் போது , கடவுள் பெரியதொரு திருப்பணியை ஆப்பிரிக்க நாட்டில் அவர் செய்ய விரும்புவதாகக் கண்டு கொண்டார் .
ஆப்பிரிக்க நாட்டின் மத்தியப் பிரதேசத்தில் பிரவேசிக்கவும் , அதை சுவிசேஷத்திற்குத் திறந்து விடவும் தீர்மானித்தார் . அதுவரை ஒருவரும் உட்செல்லாத பகுதியை , கிறிஸ்துவின் சிலுவை வீரர்கள் நற்செய்திக்கென்று சென்று அடைய ஆவல் கொண்டார் . இதுவரை எந்த மனிதனும் செய்திராத பெரும்பணியை அவர் செய்ய வேண்டுமென்று கடவுள் அவரை அழைத்திருக்கிறார் என்று பூரணமாய் நம்பினார் . எண்ணற்ற ஆப்பிரிக்க இனமக்கள் மத்தியப் பகுதிகளில் வசிக்கிறார்கள் . அவர்களுக்கும் கிறிஸ்துவின் நற்செய்தி சொல்லப்படவில்லை . சுவிசேஷத்திற்காக செல்லமுடியாத உட்பகுதிகளை தாமே சென்றடையத் தீர்மானித்தார் .
சிங்கத்தை வேட்டையாடுதல்
மோபட்சா என்ற மிக அழகான பள்ளத்தாக்குப் பிரதேசத்தில் , மூன்று ஆண்டுகள் தங்கிப் பணிபுரிய தெரிந்து கொண்டார் . அங்கிருக்கும்போது மேரி மொஃபட் என்பவரை திருமணம் செய்து கொண்டார் . அவள் ராபர்ட் மொஃபட் அவர்களின் குமாரத்தியாவாள் .
மோபட்சா பள்ளத்தாக்கில் சிங்கங்களின் தொல்லை அதிகமாய் இருந்தது . அவை மனிதர்களையும் , ஆடு மாடுகளையும் கொன்று இழுத்துச் சென்றுவிடும் . அங்கு வாழ்ந்த மக்கள் லிவிங்ஸ்டனின் உதவியை நாடினர் . ஒரு சிங்கத்தைக் கொன்றுவிட்டால் மற்றவை அங்கிருந்து ஓடிவிடும் என்று லிவிங்ஸ்டன் அறிந்திருந்தார் .
சில ஆப்பிரிக்க மக்களைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு சிங்க வேட்டைக்குச் சென்றார் . ஒரு சிங்கத்தைச் சுடவே அது அவர்மேல் பாய்ந்து அவர் தோள்பட்டையைக் கிழித்து விட்டது . அதற்குள்ளாக அவருடன் சென்றிந்த மற்றவர்கள் சிங்கத்தைச் சுட்டு வீழ்த்தினர் . இந்தக் காயம் மிகவும் ஆபத்தானதும் , சுகமாக அதிக நாட்களை எடுத்துக் கொண்டதாயும் இருந்தது .
அவருடைய கரம் இதனால் பலவீனப்பட்டு ஊனமுற்றது . தோள்பட்டைத் தழும்பு அவர் சாகும் வரை நிலைத்திருந்தது .
இந்தத் தழும்பை வைத்துதான் அவர் மரித்தபின் அவரது உடலைக் கண்டுபிடிக்க முடிந்தது . அந்த இடத்தில் அநேக ஆப்பிரிக்கர்கள் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டார்கள் . லிவிங்ஸ்ட னும் அந்த இடத்திலேயே அதிக வசதியாக வாழ்ந்திருக்கலாம் .
வடபகுதியை நோக்கிச் செல்லுதல்
லிவிங்ஸ்ட ன் தங்கி பணிபுரிந்த இடத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் பஞ்சம் ஏற்பட்டது . மற்ற மக்களைப் போல அவரும் வெட்டுக்கிளி , சிலவகை தவளைகள் ஆகியவற்றைப் புசித்து வாழ வேண்டியிருந்தது . வட பகுதியை நோக்கிச் செல்ல ஒரு குறிப்பிட்ட இடத்தைத் தேடிக் கொண்டிருந்தார் . வடபகுதிக்குச் செல்ல வேண்டுமானால் மிகப்பெரிய வனாந்திரத்தைக் கடக்க வேண்டுமென்று கேள்விப்பட்டார் . அதுவரை ஒருவரும் அப்பெரிய வனாந்திரத்தைக் கடந்து போனதில்லை என்றும் கேள்விப்பட்டார் . முந்நூறு மைல்கள் பிரயாணம் செய்து , அவ்வனாந்திரத்தைக் கடக்க முடிவெடுத்தார் . தண்ணீர் இல்லாமையால் அநேகமுறை அவர் அவதிக்குள்ளானார் .
ஒருசமயம் அங்கு வாழ்ந்து வந்த மனிதன் ஒருவன் தீக்கோழி முட்டையில் உள்ள தண்ணீரை அவருக்குக் கொடுத்து காப்பாற்றினான் . தீக்கோழி தன் முட்டைகளை மணலில் புதைத்து வைக்கும் .
அநேக நாள் பிரயாணத்திற்குப் பின் நகாமி ஏரியை வந்தடைந்தார் . இதுவே அவருடைய முதல் புவியியல் கண்டுபிடிப்பு . அந்த ஏரியைக் கண்டுபிடித்த முதல் ஐரோப்பியரும் அவரே .
அவர் மறுபடியும் பிரயாணப்பட்டு அநேக ஆபத்துக்களைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது . மூட நம்பிக்கையில் மூழ்கிக்கிடந்த ஆப்பிரிக்க இன மக்களும் , போயர் எனப்பட்ட டச்சுக் காரர்களும் தென் ஆப்பிரிக்காவில் குடியேறினவர்கள் .
இவர்கள் அவருக்கு அதிக ஆபத்தை விளைவித்தனர் . போயர்கள் ஆப்பிரிக்கர்களை அடிமைகளாகப் பிடித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தார்கள். இதை லிவிங்ஸ்டன் கண்டித்தார் .
ஒருசமயம் அவருடைய உடைகள் , உடைமைகள் , புத்தகங்கள் , மருந்துகள் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு ஓடிவிட்டனர் . ஆனாலும் அவர் அவற்றையெல்லாம் பொருட்படுத்தாது இன்னல்களைக் கடந்து சென்று ஜாம்பசி நதியைக் கண்டுபிடித்தார் .
இது ஆப்பிரிக்காவில் மத்திய பாகத்தில் அமைந்துள்ள நதியாகும் . இவ்விடத்திலும் அவரால் தங்கி பணிபுரிய இயலவில்லை . இப்பகுதியில் விஷக்காய்ச்சல் பரவியிருந்ததே இதற்கு காரணம் .
தனியே பிரயாணப்படுதல்
ஆப்பிரிக்க நாட்டின் மத்திய உட்பகுதிக்குள் மேலும் செல்ல விரும்பினார் . அதனால் தன் மனைவி , பிள்ளைகளை இங்கிலாந்து நாட்டிற்குத் திருப்பியனுப்பி விட்டார் . அவர்களால் அத்தனை கடினமான பிரயாணத்தை மேற்கொள்ள முடியாது .
கிறிஸ்துவுக்குப் பணியாற்றுவதில் தாகமுற்றவராய் ஆப்பிரிக்கக் காடுகளில் நுழைந்து , உட்பகுதி மக்களைச் சந்திக்க சென்றார் . ஆப்பிரிக்க நாட்டின் நடுபகுதியை கிழக்கு மேற்காகக் கடந்து செல்ல தீர்மானித்தார் . இந்த நீண்ட பிரயாணம் ஆப்பிரிக்காவின் பூகோள அமைப்பில் புதிய கண்டுபிடிப்பாகும் .
1855 1856 ஆம் ஆண்டுகளில் இந்தக் கண்டுபிடிப்பு பிரயாணத்தை மேற்கொண்டார் . ஆப்பிரிக்க இன மக்கள் பலரை இந்தப் பிரயாணத்தில் அவர் சந்தித்தார் . அவர்கள் அதுவரை வெள்ளை மனிதனைக் கண்டதில்லை . அவருடைய அன்பும் , அனுதாபமும் , மருத்துவ சேவையும் பல ஆப்பிரிக்க இன மக்களை நண்பர்களாக்கிற்று . அவர்கள் மத்தியில் அவர் தங்கி கிறிஸ்துவை பிரசங்கித்து மருத்துவச் சேவையும் புரிந்தார் . சில இன மக்கள் அவரைவிரோதித்தனர் . அதனால் அவர் அநேகமுறை உயிர் தப்பிப் பிழைக்க வேண்டியதாயிற்று .
அடிமை வியாபாரம்
இந்தப் பிரயாணத்தின்போதுதான் , லிவிங்ஸ்டன் ஆப்பிரிக்கர்களை அடிமைகளாக்கி விற்று தொழில் நடத்தும் பயங்கர நிலைமையைக் கண்டு பயந்தார் .
ஆப்பிரிக்கர்களைப் பிடிக்க அவர்கள் வாழும் கிராமத்தைத் திடீரென்று தாக்கி , மக்களைப் பிடித்து அடக்குவார்கள் . ஆண்கள் , பெண்கள் . பிள்ளைகள் அனைவரையும் அடிமைகளாகப் பிடித்து விடுவார்கள் . கிராமத்தைத் தீக்கிரையாக்கி நீண்ட கனத்த மரத்துண்டுகளை அவர்களுடைய தோளின் மேல் வைத்து , கழுத்தை மரத்தோடு இணைத்து விடுவார்கள் . இவ்விதமாகக் காடுகளின் வழியே நடத்தப்பட்டு கடற்கரை நகரங்களில் அடிமைகளாக விற்றுப்போடப்படுவார்கள் . அவர்கள் தப்பிப் போகாதபடி நீண்ட இரும்புச் சங்கிலிகளோடு அத்தனை மக்களும் இணைக்கப்பட்டிருப்பர் . காட்டினுள் நடந்து போகையில் நோய்வாய்ப்படுகிறவர்களையும் , காயப் படுகிறவர்களையும் மரிக்கும்படி அங்கேயே விட்டுச் செல்வர் . மனித எலும்புக்கூடுகள் எங்கும் சிதறிக் கிடக்கும் . அழகிய , செழிப்பான ஆப்பிரிக்க கிராமங்கள் , தரைமட்டமாக்கப்பட்டு தீக்கிரையாகி , அவாந்திரமாகக் காணப்படும் .
இக்கோரக் காட்சிகளும் , கொடிய அடிமை வியாபாரமும் லிவிங்ஸ்ட ன் இதயத்தை நெகிழ வைத்தது . இந்நிலையை " ஆப்பிரிக்காவின் ஆறாத புண் " என வர்ணித்துள்ளார் . இதை எப்படியாவது வேரோடு அழிக்கும் வரை போராடுவேன் என்று தீர்மானித்தார் . அடிமை வியாபாரக் கொடுமையை நிறுத்தவும் சிலுவை வீரர்கள் ஆப்பிரிக்காவின் உட்பகுதி பிரதேசங்கட்குத் தன்னைப் பின்பற்றிவரும் மிஷனெரிகள் செல்லவும் , மார்க்கங்கள் கண்டுபிடிக்க வேண்டுமென உறுதி கொண்டார் . இருண்ட கண்டத்தின் அடர்ந்த காடுகளின் நடுவே பாதை கண்டுபிடிக்க வேண்டியவர் தானே என்பது அவருக்கு நன்றாகத் தெரியும் . பலமுறை அவரை அடிமைகளைப்பிடித்து விற்பனை செய்யும் வியாபாரி எனக் கருதினர் .
ஆப்பிரிக்க மக்கள் அவரைப் பிடித்துத் துன்புறுத்தவும் , கொல்லவும் முயற்சித்தனர் . கர்த்தரின் கரம் அற்புதமாய்க்காப்பாற்றியது .
உபத்திரவங்கள்
ஆப்பிரிக்க இனத்தலைவன் ஒருவன் ஒரு சமயம் லிவிங்ஸ்ட னிடம் , " உங்களுடைய தேசம் இந்நற்செய்தியை எங்களுக்கு ஏன் முன்னமே அறிவிக்கவில்லை ? என் முன்னோர்கள் அனைவரும் சத்தியத்தை அறியாமலே மரித்துப் போனார்களே . நீர் வந்து எனக்குச் சொன்ன நற்செய்தி ஒன்றையும் அவர்கள் அறியாத நிலையில் மரித்து விட்டனரே . இது எப்படி ? " என்று கேட்டான் . இவனே முதன் முதலாக கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டவன் . இக்கேள்வி லிவிங்ஸ்டன் மனதில் ஆழமாய்ப் பதிந்தது .
அன்றிலிருந்து நூற்றுக்கணக்கான ஆப்பிரிக்க இன மக்களைத் தேடிச் சென்றார் . நுழைய முடியாத காட்டுப் பகுதிகளிலும் துரிதமாக முன்னேறிச் சென்றார் . இந்த பணி சுலபமானதல்ல . அவருடைய உடைகள் கிழிந்து கந்தலாயின . பாதங்களில் கொப்பளங்களும் , சரீரத்தில் புண்களும் , காயங்களும் ஏற்பட்டன . சில சமயம் ஆப்பிரிக்கர் அவருக்கு ஆகாரம் விற்க மறுத்துவிடுவர் . அந்த சமயங்களில் பட்டினி கிடப்பார் . கிழங்குகளின் விதைகளைத் தின்று உயிர் வாழ்ந்தார் . தரையில் படுத்துறங்குவார் . கிறிஸ்துவின் நிமித்தம் சரீர பாடுகளுக்குள்ளானார் . முப்பத்தொருமுறை ஆப்பிரிக்க
விஷக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவர் உடல் , எலும்பும் தோலுமாகக் காட்சியளித்தது . காய்ச்சலின் கடுமையால் மனக் குழப்பமும் மறதியும் ஏற்படும் . தன்னுடன் வரும் நபர்களின் பெயர்களை மறந்துவிடுவர் . கிழமை நாட்களைப் பற்றிய நினைவு அற்றுப்போகும் . இவை ஒன்றும் அவரைச் செயலிழக்கச் செய்ய முடியவில்லை . வேதாகமத்தை அடிக்கடி வாசித்து உற்சாகத்தையும் , ஆறுதலையும் அடைவார் .
நாட்குறிப்பில் அவர் " கிறிஸ்துவில் மாத்திரம் நான் ஆறுதல் அடைந்தேன் , எங்கும் செல்ல ஆயத்தமாயுள்ளேன் . ஆனால் அது முன்னேற்றப் பாதையாகவே இருக்க வேண்டும் " என்று எழுதினார் . அவர் கொடுத்த அறைகூவல் என்னவென்றால் , "
அடிமை வியாபாரிகள் ஆப்பிரிக்கர்களைப் பிடிக்க அந்நாட்டிற்குள் பிரவேசிக்க முடியுமென்றால் , கிறிஸ்துவின் அன்பினால் அனுப்பப்பட்ட மிஷனெரிகள் கிறிஸ்துவுக் கென்று ஆப்பிரிக்கரைப் பிடிக்க அந்நாட்டை ஊடுருவிச் செல்ல முடியாமல் இருப்பார்களோ " என்பதே
லிவிங்ஸ்ட ன் உயர்த்தப்படுதல்
ஆப்பிரிக்க கண்டத்தின் நதிகள் , ஏரிகள் இவைகளின் கண்டு பிடிப்பு லிவிங்ஸ்டனைப் புகழ்பெறச் செய்தது . விக்டோரியா நீர்வீழ்ச்சியைக் கண்டு பிடித்தது . இதில் முக்கியமானது . இந்த நீர்வீழ்ச்சியை " ஓசையிடும் மேகம் " என்று வர்ணித்தனர்
ஆப்பிரிக்கர்
அதன் அருகில் ஆப்பிரிக்கர்கள் செல்லவே பயந்தனர் . அவர் இங்கிலாந்துக்குத் திரும்பியதும் பெரிய அளவில் வரவேற்கப்பட்டு பாராட்டப் பெற்றார் . பதினாறு ஆண்டுகள் ஆப்பிரிக்கக் காடுகளில் பணி செய்து , ஒன்பதாயிரம் மைல்கள் பிரயாணத்தில் ஈடுபட்டவர் , நடை பயணமாகவும் , படகிலும் நீண்ட நரங்களைக் கடந்தவர் . ஆப்பிரிக்காவின் பூகோளப் பிரதேசங்களை வெளி உலகிற்கு முதல் முறையாக அறிவித்தவர் இவர் . இத்தனை ஆராய்ச்சிகளுக்காக , அவருக்குத் தங்கப் பதக்கங்களும் , கெளரவப் பட்டங்களும் வழங்கப்பட்டன . திரள் திரளாக மக்கள் கூட்டம் அவரைப் பார்க்கவும் , அவர் சொல்வதைக் கேட்கவும் கூடினர் . செய்தித்தாள்கள் அவரைப் பற்றியும் , ஆப்பிரிக்க நாட்டின் புதிய கண்டுபிடிப்புகளைப் பற்றியும் எழுதியது . அவரும் பிரயாணக் கட்டுரை மற்றும் ஆப்பிரிக்க நாட்டில் புதிய மார்க்கங்களைப் பற்றியும் எழுதி புத்தகமாக வெளியிட்டார் .
மறுமுறை ஆப்பிரிக்க நாடு செல்லுதல்
அரசாங்கத்தின் பிரதிநிதியாக இங்கிலாந்து அரசு அவரை நியமித்தது . அரசு அதிகாரியாக ஆப்பிரிக்க நாடு திரும்பினார் . புதிய இடங்களை ஆராயவும் , மிஷனெரி ஊழியம் தொடர்ந்து செய்யவும் அரசாங்கம் அவருக்கு அனுமதியளித்தது . பல உதவியாளர்கள் தன்னுடன் இருந்தார்கள் என்றாலும் காய்ச்சலினால் அவதிப்பட்டு ஒவ்வொருவராக அவரைவிட்டுப் பிரிந்து போயினர் . மூன்று மாதங்களுக்குப் பின்னர் அவரது மனைவி புதிய பணித்தளத்தில் அவருடன் போய்ச் சேர்ந்தாள் . அவளும் விஷக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்துபோனாள் . அவளை ஒருமரத்தின் கீழ் புதைத்தனர் . அவரது பிரயாண ஆரம்ப நாட்களிலேயே ஒரு பெண் குழந்தை மரித்துப்போனதால் , ஆப்பிரிக்க மண்ணில் புதைத்திருந்தார் . மனைவியின் இழப்பு அவருக்குப் பெரிய இழப்பாக இருந்தது . " இந்த மிகப் பெரிய இழப்பு என் இதயத்தைப் பிளந்து விட்டது " என்று எழுதினார் . எப்போதும் அவருடைய குறிக்கோள் யாதெனில் " உலகக் கவலைகள் , இழப்புகள் எதுவும் என் முன்னால் உள்ள பணியை , நம்பிக்கையற்ற நிலையில் விட்டுவிட அனுமதிக்க மாட்டேன் . என் தேவனாகிய கிறிஸ்துவில் பெலனடைந்து புது உற்சாகத்தோடு முன்னேறிச் செல்வேன் " என்றும் எழுதினார் .
ஆப்பிரிக்க நாட்டில் அவருடைய உயிருக்கு எப்போதும் ஆபத்துகள் நேரிட்ட வண்ணமாகவே இருந்தன
ஒருமுறை காண்டாமிருகம் வேகமாய் அவரை எதிர்த்து இடித்துத் தள்ள ஓடி வந்தது . அவர் அருகில் வந்ததும் சடிதியாய் நின்றுவிட்டது . அவர் நம்பியிருந்த தேவன் அவரைப் பாதுகாத்தார் . இன்னொரு முறை ஓர் ஆப்பிரிக்க எதிரி பத்து அடி தூரத்திலிருந்து ஒரு ஈட்டியை அவர்மேல் எறிந்தான் . அவர் கழுத்தின் ஓரமாய்ப் பாய்ந்து சென்ற ஈட்டி மரத்தில் குத்தி நின்றது . எவ்வகை ஆபத்து நேரங்களிலும் கர்த்தர் அவரோடிருந்தார் . அவர் ஆரம்பித்த பணி முடியும் வரை தேவனுடைய கரம் அவரை ஆச்சரியமாய்ப் பாதுகாத்தது என்று முழங்கினார் .
அடுத்து வந்த பெரிய இழப்பு யாதெனில் , பிரிட்டிஷ் அரசாங்கம் அவர் மறுமுறையும் ஆப்பிரிக்க நாடு திரும்பிய லிவிங்ஸ்ட ன் பின் ஒருபோதும் இங்கிலாந்து நாட்டிற்குச் செல்லவேயில்லை . அவருடைய கடைசி கண்டுபிடிப்புகள் லிவிங்ஸ்ட ன் தனது அறுபதாவது வயதில் ஆப்பிரிக்க நாட்டின் மத்தியப்பகுதியில் தம்முடைய கடைசி ஆராய்ச்சியில் இறங்கினார் . வயது சென்ற நிலையில் பல வருட பாடுகள் நிறைந்த பிரயாணங்கள் , சொந்த வேலைக்காரர்களின் உண்மையற்ற தன்மை , ஆப்பிரிக்க இன மக்களின் விரோத மனப்பான்மை , இவைகளெல்லாம் வெளிப்படையாகக் காணப்பட்டது . அவருக்கு வரும் கடிதங்கள் , பொருள்கள் யாவும் களவாடப்பட்டன . வட அரேபிய வணிகனிடம் தம்முடைய சில உடைமைகளைக் கொடுத்து வைத்திருந்தார் . அதேக நாட்கள் இவரைப் பற்றி அவன் ஒன்றும் கேள்விப்படாததால் அவர் உடைமைகளை யெல்லாம் விற்றுவிட்டான் ,
குறைந்த ஆகாரம் , கந்தலான உடை , உடைமைகளையெல்லாம் இழந்த நிலையில் , வறுமை மிக்க மனிதனாய் , அன்பற்ற ஆப்பிரிக்க மக்கள் மத்தியில் வாழ்ந்து வந்தார் . அவர் அனுப்பும் எல்லாக் கடிதங்களும் கிழித்தெறியப்பட்டன . இவரை விரோதித்த அடிமை வியாபாரிகள் கடிதப் போக்குவரத்தை நிறுத்திவிட்டனர் . மருந்துகள் அடங்கிய அவரது பெட்டியும் எடுத்துச் செல்லப்பட்டுவிட்டது . காய்ச்சலினால் அவர் அவதிப்படும் போது மருந்துகள் இல்லாததால் தம்மைக் குணப்படுத்திக் கொள்ள முடியவில்லை . வெளி உலருடன் அவருக்கிருந்த எல்லா தொடர்புகளும் அறுபட்டுப் போயின . வெளிநாடுகளில் அவரைத் தெரிந்த நண்பர்கள் , அவர் மரித்து விட்டாரென்றே எண்ணியிருந்தனர் .
கர்த்தர் அவரை கைவிடவில்லை . திக்கற்றவராய் விட்டுவிடவும் இல்லை . நியூயார்க் ஹெரால்ட் என்ற அமெரிக்க செய்தித்தாளின் ஆசிரியர் ஹென்றி ஸ்டான்லி என்பவரை லிவிங்ஸ்டனைத் தேடி கண்டு பிடிக்கும்படியாக , ஆப்பிரிக்க நாட்டிற்கு அனுப்பினர் . பல மாதங்கள் ஸ்டான்லி பிரயாணம் செய்து லிவிங்ஸ்டனை உஜ்ஜி என்ற இடத்தில் சென்று சந்தித்தார் . உணவுப் பொருட்கள் , மருந்துகள் ஆகியவற்றை ஸ்டான்லி தன்றுடன் எடுத்து வந்திருந்தார் . லிவிங்ஸ்ட ன் பலமடையவும் சுகம் பெற்று புத்துயிர் பெறவும் ஸ்டான்லியின் சந்திப்பு உதவிற்று . தொடர்ந்து சில மாதங்கள் ஸ்டான்லி அவரோடு தங்கியிருந்தார் . அந்நாட்களில் லிவிங்ஸ்டனின் கிறிஸ்துவைப் போன்ற தியாக வாழ்க்கை , ஸ்டான்லிக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்தது . நாஸ்திகனான ஸ்டான்லி , லிவிங்ஸ்டனோடு தங்கியிருந்ததால் சிறந்த விசுவாசியாக மாறினார் .
ஸ்டான்லி , லிவிங்ஸ்டனைத் தன்னோடு அமெரிக்க தேசத்திற்கு வரும்படி வற்புறுத்தினார் . லிவிங்ஸ்டனைத் தனது எஞ்சிய வாழ்க்கையை வசதியாக வாழவும் , பெரும் புகழும் பெறவும் அமெரிக்க நாட்டிற்கு வரும்படி அழைத்தார் . லிவிங்ஸ்டன் அவரோடு செல்ல மறுத்துவிட்டார் .
தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட தேவப் பணி முற்றுப்பெறாமல் தன்னால் எங்கும் வரமுடியாது என்று கூறிவிட்டார் . லிவிங்ஸ்டனின் இறுதி காலம் ஓராண்டுக் காலம் மேலும் தமது பயணத்தில் ஈடுபட்டிருந்த லிவிங்ஸ்ட ன் , சரீர பெலவீனத்தால் அடிக்கடி சோர்வுற்றார் . அவருடன் இருந்த சில உண்மையுள்ள ஆப்பிரிக்க நண்பர்கள் மூங்கில் கம்புகளால் கட்டப்பட்ட தொட்டிலில் வைத்து அவரைத் தூக்கிச் சென்றனர் . பெரும் மழை , குளிர் ஆகியவற்றால் அவருடைய சுகவீனம் மேலும் அதிகரித்தது . நாட்குறிப்பில் அவரால் எழுத முடியவில்லை . ஆப்பிரிக்க இளைஞர்கள் அவரை அன்போடு கவனித்து வந்தனர் .
ஒரு சிறு குடிசையில் வைத்து அவரைப் பராமரித்தனர் . அவருக்கிருந்த சக்தியும் பெலனும் நாட்கள் செல்லச் செல்ல குறைந்துவிட்டன . மே மாதத்தில் ஒருநாள் காலை ( 1873ஆம் ஆண்டு ) அவருடைய குடிசைக்குள் அவரது நண்பர்கள் பிரவேசித்தபோது , அவர் படுக்கையருகே முழங்காலில் நின்ற வண்ணம் இருந்தார் . கரங்களால் தாங்கப்பட்ட அவரது முகம் தலையணை மேல் சாய்ந்திருந்தது . ஜெப நிலையில் அவரது உயிர் பிரிந்திருந்தது .
ஆப்பிரிக்க நாட்டின் கிறிஸ்துவை அறியாத கணக்கற்ற ஆத்துமாக்களுக்காக ஜெபித்துக் கொண்டே , பரலோகம் சென்றடைந்தார் என்பதில் சிறிதும் ஐயமில்லை . மரிக்கும் தருவாயினும் , ஆப்பிரிக்கர்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று மன்றாடியபடியே உயிர்துறந்தார் .
உண்மையுள்ள அவரது ஆப்பிரிக்க நண்பர்கள் அவருடைய இருதயத்தை எடுத்து ஆப்பிரிக்க நாட்டின் மத்தியப் பகுதியில் புதைத்தனர் . அவரது சரீரத்தைக் கெடாத வண்ணம் பதம் செய்து , தொளாயிரம் மைல்கள் கடற்கரைப் பகுதிக்குச் சுமந்து சென்றனர் . அவரது உடல் இங்கிலாந்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது . சிங்கத்தால் பீறுண்ட அவரது தோள்பட்டை தழும்பை வைத்துதான் அவரது உடல் அடையாளம் கண்டு கொள்ளப்பட்டது
. இங்கிலாந்தின் உயர்ந்த மனிதர்களும் , புகழ் பெற்றவர்களும் அடக்கம் செய்யப்பட்டிருந்த " வெஸ்ட் மினிஸ்டர் அபே " என்னும் இடத்தில் தேச மரியாதையுடன் நல் அடக்கம் செய்யப் பட்டார் . ஆயிரக்கணக்கில் மக்கள் வெள்ளமெனத் திரண்டு வந்து அவருக்குக் கடைசி மரியாதையைச் செலுத்தினர் . அக்கூட்டத்தில் வயது சென்ற ஒரு மனிதன் பரிதாபமான உடைகளோடு , மனம் உடைந்து அழுது கொண்டிருந்தார் .
அவர் ஏன் இப்படி அழுகிறார் என்று கேட்க , " டேவிட் லிவிங்ஸ்ட னும் நானும் ஒரே கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர்கள் . ஓய்வு நாள் பாடசாலையில் ஒன்றாகவே படித்தோம் . பஞ்சாலையில் ஒன்றாகவே வேலை செய்தோம் . அவரோ கடவுளின் வழியைத் தெரிந்து கொண்டு உலகில் ஒப்பற்ற பணியைச் செய்து முடித்தார் . நானோ என் சொந்த வழியைத் தெரிந்து கொண்டு விரும்பப்படாதவனாக அவமரியாதைக்குரியவனாய் வாழ்கிறேன் . தேசம் முழுவதும் அவரை இன்றும் புகழ்ந்து மரியாதை செலுத்துகிறது . என்னை ஒருவரும் அறியமாட்டார்கள் . எதிர்காலமும் எனக்கு ஒன்றுமில்லை . குடிகாரனுடைய பிரேதக் குழியே எனக்காகக் காத்திருக்கிறது " என்று கூறி அழுதார் .
கர்த்தருடைய வார்த்தை இது ; " என்னைக் கனம் பண்ணுகிறவர்களை நான் கனம்பண்ணுவேன் ; என்னை அசட்டை பண்ணு கிறவர்கள் கனஈனப்படுவார்கள் " ( 1 சாமு . 2 : 30 ) .
லிவிங்ஸ்ட ன் கிறிஸ்துவைத் தன் வாழ்நாளில் கனப்படுத்தி உயர்த்தி , ஊழியத்தின் மூலம் அவரை மகிமைப் படுத்தினார் . இன்றைக்கு ஆப்பிரிக்கா கண்டத்தில் நூற்றுக் கணக்கான மிஷனெரிகள் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள் ! எண்ணற்ற தேவாலயங்களில் ஆப்பிரிக்கர்கள் கிறிஸ்துவை வணங்கி ஆராதிக்கிறார்கள் . இருண்ட கண்டத்தின் நடுபாகமாகிய காடுகள் அடர்ந்த பிரதேசத்தில் , சுவிசேஷ ஒளி பிரகாசித்துக் கொண்டிருக்கிறது . ஆப்பிரிக்கர்களை அடிமைகளாகப் பிடித்து விற்று வந்த அடிமை வியாபாரம் அடியோடு நிறுத்தப்பட்டு விட்டது . எல்லாவற்றிற்கும் காரணம் லிவிங்ஸ்டன் கிறிஸ்துவின் அழைப்பை ஏற்று அவருடைய சித்தத்தைச் செய்ய கீழ்ப்படிந்ததே ஆகும் . கர்த்தரால் கட்டப்பட்டு வரும் தேவ மாளிகையில் ஜீவனுள்ள விலையேறப் பெற்ற கல்லாய்ப் பிரகாசிக்கிறார் லிவிங்ஸ்ட ன் . உயிருள்ள கல் ( Living - stone ) என்பது அவரது பெயர் .
அப்பா ! கப்பல் மாலுமி என்னை அழைத்துச் செல்வதாக வாக்களித்துள்ளார் . நாங்கள் அடுத்த வாரம் கடற்பிரயாணம் செய்யப்போகிறோம் " என்று மகன் மிக உற்சாகத்தோடு பேசினான் . அவனது தந்தை தலையை அசைத்து , " மகனே நீ மிகவும் சிறியவன் கப்பல் பிரயாணம் மேற்கொள்ள சில வருடங்கள் நீ காத்திரு . நீ பெரியவனாகும்போது கப்பல் பிரயாணம் செய்யலாம் " என்றார் . ஆலனின் தாயார் படுக்கையறைக்குள் சென்று பார்க்கும் போதெல்லாம் , அவன் வெறும் தரையில் படுத்துறங்குவதைக் காண்பாள் . " மெத்தைப் படுக்கையில் படுத்துறங்காமல் ஏன் தரையில் தூங்குகிறாய் " என்று அவன் தாய் கேட்டால் " நான் கப்பல் மாலுமியாகப் போகிறேன் ; புதிய நாடுகளையும் , இடங்களையும் கண்டுபிடிப்பேன் . அதற்காக இப்போது கடின வாழ்க்கையில் எனக்குப் பழக்கம் ஏற்பட வேண்டும் " எனச் சொல்லுவான் .
மிகச் சிறிய வயதிலேயே கப்பல் மாலுமியாக மாறி தீரச் செயல்கள் புரிய வேண்டும் என்ற எண்ணம் ஆலனின் உள்ளத்தில் பலமாக ஊன்றியிருந்தது . ஆரம்ப வாழ்க்கை 1794 ஆம் ஆண்டு , இங்கிலாந்தில் பிறந்த இவன் மிகச் சிறிய வயதிலேயே தீரச் செயல்கள் புரிவதில் பிரியப்பட்டான் , " மிங்கோ பார்க்கினுடைய பயணங்கள் " என்ற ஆப்பிரிக்க நாட்டின் அதிதீரச் செயல்கள் அடங்கிய கட்டுரைகளைப் படிப்பதில் உற்சாகமடைந்தான் . ஆப்பிரிக்க மொழியின் வார்த்தைகளை எழுதி மனப்பாடம் செய்வான் . முழு உலகையும் சுற்றிப் பயணம் செய்வதைத் தன் வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்டிருந்தான் . குதிரைச் சவாரி செய்வதிலும் நீந்துவதிலும் திறமைசாலியாகக் காணப்பட்டான் .
கடற்படையில் சேருதல்
கார்டினல் கடற்படைப் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்து பதினாறு வயதிலேயே உயர் கல்வி பெற்றுத் தகுதியடைந்தார் . கடற்படையிலே உடனே சேர்ந்து நான்கு வருடங்களில் பதவி உயர்வும் பெற்றார் . வெகு விரைவில் ஒரு கப்பலை ஏற்று நடத்தும் கப்பல் தலைவன் பொறுப்பை ஏற்றுக் கொண்டார் . இதற்குள்ளாக உண்மைக் கிறிஸ்தவளான அவரது தாயாரின் நல்ல போதனைகளைவிட்டு தூர அலைந்து திரிகிறவராகவும் , தன் மனம் போன போக்கில் நடப்பவராகவும் மாறிவிட்டார் . ஒரு நாள் அவருடைய தந்தை எழுதிய தாயைப்பற்றிய சுயசரிதையை வாசித்துக் கொண்டிருந்தார் . அவரது தாய் சேவித்து வணங்கி வந்த தேவனைப்பற்றி அறிய வேண்டும் என்கிற உணர்வு அவர் உள்ளத்தில் ஏற்பட்டது . ஒரு வேதாகமத்தை வாங்கி வாசித்து தியானித்தார் . இளம் மாலுமியான ஆலன் கிறிஸ்துவைத் தன் சொந்த ஆத்ம மீட்பராக ஏற்றுக்கொண்ட ம -
உலகின் பல நாடுகளில் உள்ள துறைமுக நகரங்களுக்குக் கப்பல் தலைவன் பொறுப்பில் அவர் போக வேண்டியிருந்தது . துறைமுகத்தில் கப்பல் நிற்கும்போது நகரங்களுக்குள் சென்று ஊரைச் சுற்றிப் பார்ப்பது அவருக்குப் பிரியம் . உள்ளூர்வாசிகளின் பழக்க வழக்கங்கள் , கலாச்சாரம் ஆகியவற்றை மிக ஆர்வத்தோடு கவனிப்பதில் அவருக்கு விருப்பம் அதிகம் . ஒரு சமயம் கப்பல் பிரயாணத்தில் பசிபிக் தீவுகளில் ஒன்றான தஹிதி தீவில் தங்கவேண்டியிருந்தது . கரையில் இறங்கி நடந்தபோது வெகு அமைதியாகவும் , அவாந்திர வெளியாகவும் காணப்பட்டது . உட்பகுதியில் கிராமத்தை அடைந்தார் . அத்தீவைச் சேர்ந்த மனிதன் ஒருவன் கிராமப் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்து ஓய்வு நாள் பாடசாலையில் கிறிஸ்துவைப் பற்றிப் போதித்துக் கொண்டிருந்தான் . திடீரென்று ஆலனுக்கு அன்று ஞாயிற்றுக் கிழமை என்ற நினைவு வந்தது . அனைத்துத் தீவு மக்களும் கிறிஸ்தவர்கள் என்பதை அறியலானார் . அவர் பார்த்துவந்த மற்ற இடங்களைக் காட்டிலும் இந்த இடம் பெரும் மாறுதலுக்கு உட்பட்டிருந்ததை உணர்ந்தார் . தியாக சிந்தையோடு திருப்பணியாற்றிய மிஷனெரிகளே , இப்பெரிய மாற்றத்திற்குக் காரணம் என்று அறிந்தார் . இப்படிப்பட்ட தீவுகளிலும் மிஷனெரிகள் வந்து பணியாற்றியுள்ளனரே என்று வியந்தார் . இவ்வித மாற்றங்கள் மற்ற நாடுகளிலும் நிகழ முடியுமா என்ற கேள்வி அவரில் எழுந்தது . நிச்சயமாக மாற்றங்கள் நிகழ முடியும் . ஆனால் யார் கிறிஸ்துவைப் பற்றி அவர்களுக்குச் சொல்வார்கள் என்கிற சிந்தையோடு பிரயாணப்பட்டுப் போனார் .
தென் அமெரிக்காவின் தென்கோடியிலுள்ள சில தீவுகளையும் , அவரது கடற்பிரயாணத்தில் பார்க்க நேர்ந்தது . தென் அர்ஜென்டைனா விலுாள படகோனியா என்ற இடத்தில் மிகவும்பழங்குடியினரைச் சந்திக்க நேர்ந்தது அவர்கள் அநாகரீகமான மூடப்பழக்க வழக்கமுள்ளவர்களாகக் காணப்பட்டனர் .
சிறிதும் கடவுளைப் பற்றி அறிவில்லா தவர்கள் . இப்படிப்பட்ட கடற்பிரயாணத்தில் ஏற்பட்ட அனுபவங்களெல்லாம் ஆலன் கார்டினரைச் சிந்திக்க வைத்து , பிரிட்டிஷ் கடற்படையை விட்டு மிஷனெரியாக மாற தூண்டியது .
கார்டினர் தென் ஆப்பிரிக்க நாட்டை அடைதல்
கடவுள் கார்டினரை தென் ஆப்பிரிக்க நாட்டிற்குப் போக வழி நடத்தினார் . அங்குள்ள ஆப்பிரிக்க இன மக்களுக்கு அன்றைய நாளில் ஒருவரும் சுவிசேஷத்தை அறிவிக்க செல்லவில்லை .
ஜூலுஸ் என்ற பழங்குடி இனத்தினர் ஒருவரும் செல்லக் கூடாத உட்பகுதியில் வாழ்ந்து வந்தனர் .
அவர்களைச் சந்திக்க குதிரைமேல் பிரயாணம் செய்து மிகவும் ஆபத்தான வழிகளைக் கடந்து சென்றார் . அடர்ந்த காடுகளையும் , சதுப்பு நிலங்களையும் , வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் ஆறுகளையும் நீந்திச் சென்றார் . ஒரு சமயம் ஆற்றங்கரையில் பசியுள்ளவராகவும் , நனைந்த நிலையிலும் களைப்புடன் படுத்து உறங்கிவிட்டார் .
அச்சமயம் ஒரு பெரிய நீர் யானையின் சத்தத்தைக் கேட்டு விழிப்படைந்தார் . ஜூலுஸ் இனத்தின் அரசன் மிகக் கொடூரமான போர் வீரன் என்றும் , அப்பகுதி மக்கள் அனைவரும் அவனைக் கண்டு மிகவும் பயந்து வாழ்ந்து வந்தனர் என்று அறியலானார் .
அப்படிப்பட்ட மனிதனிடம் இயேசு கிறிஸ்துவினால் வரும் இரட்சிப்பை எடுத்துக் கூறினார் . கார்டினர் தென் ஆப்பிரிக்காவில் பணி செய்ய வந்த போது , அவருடைய உடமைகள் மிகவும் அற்பமானவைகள் . சில உடைகள் , குதிரைச் சேணம் , ஒரு கரண்டி , புதிய ஏற்பாடு ஆகியவைகளே .
தென் ஆப்பிரிக்காவில் , தூதுவராக பிரிட்டிஷ் அரசு அவரை நியமித்தது . அவருடைய அரசப் பணியும் , அருட்பணியும் நடைபெற்று வரும் நேரத்தில் அங்கு உள்நாட்டு யுத்தம் ஆரம்பமாயிற்று . குடியேறியுள்ள வெள்ளை இனத்தவருக்கும் , ஜூலுஸ் குடி மக்களுக்கும் இடையே ஏற்பட்ட போர் முற்றியதால் தென் ஆப்பிரிக்காவை விட்டு கார்டினர் வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டார் .
தென் அமெரிக்காவுக்குச் செல்லுதல்
ஆலன் கார்டினர் , தன்னைக் கர்த்தர் மிஷனரிப் பணிக்கென்று அழைத்ததை நிச்சயமாக நம்பினார் . முன்பு ஒரு காலத்தில் தென் அமெரிக்கப் பகுதியில் சந்தித்த பழங்குடி இன மக்களிடம் பணியாற்ற தன் மனதில் நிர்ணயம் பண்ணிக் கொண்டார் .
1838ஆம் ஆண்டு தன் மனைவி பிள்ளைகளுடன் தென் அமெரிக்காவுக்குப் பயணமானார் . கரையிறங்கி அவர் குடும்பத்தோடு ஒரு கூண்டு வண்டியில் பயணத்தை மேற்கொண்டார் . அராகேணியர் என்கிற தென் அமெரிக்க இனம் ஓரளவு நாகரீகம் அடைந்திருந்தது . அவர்களுக்குக் கிறிஸ்துவை அறிவிக்க நீண்ட பயணத்தைச் செய்ய வேண்டியிருந்தது .
பதினான்கு நாட்கள் , மேடு பள்ளங்கள் நிறைந்த பாதையையும் , ஆறுகளையும் கடந்து சென்றார் . ஆண்டீஸ் மலைகளைத் தாண்டிச் செல்ல கோவேறு கழுதைகளைப் பயன்படுத்தினர் . முடிவில் தாங்கள் பணியாற்ற விரும்பின இடத்தில் சேர்ந்து ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்தனர் .
அவ்வீட்டில் அவர்கள் கொண்டு வந்திருந்த வீட்டுப் பொருட்கள் அனைத்தையும் அடுக்கி ஒழுங்கு செய்தனர் . அச்சமயத்தில் அரா கேணிய இனத்தலைவன் அவர்களிடம் வந்து அவ்விடத்தை விட்டுப் போகும்படி உத்தரவிட்டான் . இவருக்கு முன்னால் வந்த வெள்ளையர்கள் அதிகக் கொடுமை. நிறைந்தவர்களாய் இருந்தபடியால் , இவ்வின மக்கள் வெள்ளையரை வெறுத்தனர் . வெள்ளையர் என்றாலே கொடூரமானவர்கள் என்ற தவறான எண்ணத்தினால் , அவ்வினத்தினர் ஆலன் கார்டினரை மிஷனெரிப் பணியை ஆரம்பிக்கவே அனுமதிக்க வில்லை . முழுவதுமாய்த் தடுத்துவிட்டனர் .
இரண்டாம் முயற்சி
தென் அமெரிக்காவின் தென் கோடியில் ஆலன் முன்பு சந்தித்த மக்களிடம் சென்று பணித்தளத்தை நிறுவினார் . மரங்கள் அற்ற கடற்கரைப் பகுதியில் , அவர்களுக்கென்று ஒரு மர வீட்டைக் கட்டினார் . கிழிந்து போன கூடாரங்களைத் தைப்பது போன்ற தொழிலை அங்குள்ள மக்களுக்குக் கற்றுக் கொடுத்ததால் அவர்களுடைய நம்பிக்கையைப் பெற்றார் . நல்ல நண்பர்களாகப் பழகும் இவ்வின மக்களிடையே தாம் விரும்பின மிஷனெரி இயக்கத்தை நிறுவ விரும்பினார் .
உதவிகளைப் பெறுவதற்காக இங்கிலாந்து நாட்டிற்குத் திரும்பினார் . அவருடைய முயற்சிகளுக்கு உதவியும் உற்சாகமும் கிடைக்கவில்லை . மூன்று ஆண்டுகளுக்குப் பின் படகோனியன் மிஷனெரி சங்கத்தை நிறுவினார் .
தென் அமெரிக்க தென் பகுதிக்கு அவர் மறுபடியும் வருகை தந்தபோது , ஒருபுதிய தலைவன் பதவி ஏற்றிருந்தான் . அவன் அவருக்கு எதிராக செயல்பட்டு , மிஷனெரி தளத்தை அவ்விடத்தில் நிறுவ முடியாதபடி செய்துவிட்டான் . இதனால் கார்டினர் மறுபடியும் இங்கிலாந்து திரும்ப வேண்டியதாயிற்று . அவருடைய உடன் ஊழியர்கள் உற்சாகம் இழந்து சோர்வுற்றனர் .
ஆனால் கார்டினர் சோர்ந்து விடவில்லை . " நான் மறுபடியும் தென் அமெரிக்காவுக்கு திரும்ப மன உறுதி கொண்டுள்ளேன் . எல்லா முயற்சிகளையும் செய்து பார்ப்பேன் . பெயர்க்க முடியாத தடைக் கற்கள் எத்தனை உண்டோ அத்தனையையும் அகற்றுவேன் . அபோரிஜினல் என்ற பங்குடியினரிடையே , ப்ராடஸ்டண்ட் மிஷனெரி இயக்கத்தை நிறுவியே தீருவேன் " என்று தீர்மானித்தார் .
மூன்றாம் முறை கார்டினர்
எடுத்த முயற்சி தென் அமெரிக்காவில் பொலினியா என்ற நாட்டிற்கு இம் முறை சென்றார் . அந்த இடத்தில் பதினாறு கிராமங்களைச் சந்தித்த பின் தலைவனின் அனுமதியைக் கேட்டார் . பணித்தளம் நிறுவ பதினோரு முறை அனுமதி மறுக்கப்பட்டது . அவருடைய கூட்டாளிகளில் அநேகர் காய்ச்சலால் அவதிப்பட்டனர் . மிகவும் கரடு முரடான பாதைகளில் ஆயிரம் மைல்களுக்கு மேலாக பிரயாணம் செய்து இந்த இடத்தை வந்து சேர்ந்த அவர்களுக்கு , சுவிசேஷ நற்செய்திப் பணி செய்ய அனுமதி கிடைக்கவில்லை . மிகுந்த பிரயாசத்துடன் அனுமதி பெற்றார் . அந்நேரத்தில் அங்கு புரட்சிப் போர் வெடித்ததால் கார்டினர் இங்கிலாந்து திரும்ப நேரிட்டது .
நான்காம் முயற்சியும் தோல்வியடைதல்
இங்கிலாந்திலிருந்து , கார்டினர் தன்னுடைய புதிய நண்பர்களுடன் தென் அமெரிக்காவுக்குப் பயணமானார் . ஒரு புதிய தீவில் இறங்கி குடிசைகள் அமைத்தனர் . அத்தீவின் மக்கள் மிகவும் பொல்லாதவர்களும் , திருடர்களு மாயிருந்தனர் . மிஷனரிகள் கொண்டு வந்திருந்த எல்லா உடைமைகளையும் , உணவுப் பொருள்களையும் திருடிச் சென்றுவிட்டனர் . இம்முறையும் ஏமாற்றம் அடைந்தவராய் , அத்தீவை விட்டு வெளியேற வேண்டியதாயிற்று .
ஆலன் கார்டினர் மேற்கொண்ட முயற்சிகள்
கடற்படை தலைவன் பதவியை உதறித்தள்ளி , மிஷனரிப் பணிக்கு தன்னை அர்ப்பணித்து , அநேக ஆண்டுகள் ஆயிற்று . எனினும் அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்ததாகத் தோன்றிற்று . அருட்பணி செய்யவும் , பணித்தளம் நிறுவவும் அவர் எடுத்துக்கொண்ட எல்லா முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன .
எனினும் அவர் பெற்ற அழைப்பையும் விட்டுவிடவில்லை . அதனால் புதிய முறையில் ஊழியம் செய்ய ஏவப்பட்டார் . ஒரு மிஷனெரிக் கப்பலை எடுத்துச் சென்று தென் அமெரிக்கத் தீவுகளில் , பணிக்கென்று பயன்படுத்தினால் மிகுந்த பாதுகாப்பாக இருக்கும் என்று நம்பினார் . அவரும் அவர் குழுவினரும் உடைமைகள் , உணவுப் பொருள்கள் ஆகியவைகளை வைத்துக் கொள்ள வசதியாக இருக்கும் என்று நினைத்தார் . கப்பல் வாங்கத் தேவையான தொகையை மிஷனெரிச் சங்கம் கொடுக்க இயலவில்லை , "
இந்தக் காரியத்தை என் துணிவால் செய்ய முடிவெடுத்துவிட்டேன் . மிஷனெரிச் சங்கம் உதவினாலும் உதவாவிட்டாலும் சரி , நம் இரட்சகர் கொடுத்த கட்டளைக்குக் கீழ்ப்படிகிறவனாய் , உலகின் கடைசிப் பரியந்தமும் சுவிசேஷத்தை அறிவிக்கச் செல்லுவேன் . கட்டளையைப் பெற்ற நாம் கீழ்ப்படிவது முக்கியம் " என்று எழுதினார் .
கார்டினர் அவருடைய சொந்தப் பணத்தைக் கொண்டும் , அவருடைய முயற்சிகளும் ஊக்கம் கொடுத்து அவர்மேல் இரக்கமுற்ற ஓர் அம்மையார் கொடுத்த தொகையைக் கொண்டும் , இரண்டு நடுத்தரக் கப்பல்களை ஆயத்தம் செய்தார் . " பயனியர் " ( முன்னோடி ) " ஸ்பீட்வெல் " ( அதிவேகம் ) என்று பெயர்கள் சூட்டப்பட்ட இரண்டுக் கப்பல்களில் , ஏழு பேரடங்கிய குழுவுடன் தென் அமெரிக்காவுக்குப் பயணமானார் . எல்லா இயந்திரச் சாதனங்களையும் அவர்கள் எடுத்துச் செல்லவில்லை . பின் நாட்களில் இயந்திரச் சாதனங்கள் அவர்களை வந்தடையும்படி ஏற்பாடுகளைச் செய்து விட்டு பயணத்தைத் தொடங்கி விட்டார் .
தென் அமெரிக்காவின் தென் பகுதியில் , நிர்ணயித்த இடத்திற்கு வந்து சேர்ந்தார்கள் . அங்குள்ள கடற்பகுதி மிகுந்த அலைகள் நிறைந்ததாகவும் வேகமாகக் காற்று வீசும் பகுதியாகவும் இருந்தது . அவர்கள் சென்ற கப்பல்கள் கடும் காற்றையும் , அலைகளையும் தாங்கமுடியாத சிறிய கப்பல்களாக இருந்தன . முதல் மாத முடிவில் " பயனியர் " கப்பல் சேதமடைந்து விட்டது . தைரியசாலிகளான மிஷனெரிகள் ஒரு தீவில் கரையிறங்கினார்கள் .
அத்தீவு மக்கள் கொடூரமானவர்களும் , மதிகேடர்களுமாய் இருந்ததால் அத்தீவில் தங்கமுடியவில்லை . எந்தத் தீவுக்கு நிவாரணக் கப்பல் வருமோ , அத்தீவை விட்டு வேறு தீவுக்குப் போக நேரிட்டது . " ஸ்பானியர்ட் " துறைமுகம் அத்தீவுகளில் பிரதான தீவில் அமைந்திருந்ததால் , அங்கு சென்றுவிட முடிவு செய்தனர் .
அவர்களைத் தேடிவரும் நிவாரணக் கப்பலுக்குச் செய்தியை , ஒரு பெரிய பாறையின் மேல் எழுதினர் . " ஸ்பானியர்ட் துறைமுகத்திற்குப் போகிறோம் , அங்கு சந்திக்கவும் " என்று எழுதினர் . கண்ணாடி பாட்டில்களில் மேற்கண்ட செய்தியை எழுதி கரையோர மணலில் புதைத்தனர் . "
உணவுப் பொருள்கள் அனைத்தும் தீர்ந்துவிட்டன . நாங்கள் நோய்வாய்ப்பட்டிருக்கிறோம் . நிவாரண உதவி எங்களுக்கு விரைவில் கிடைக்காவிட்டால் நாங்கள் பட்டினி கிடப்போம் " என்று எழுதப்பட்ட செய்திகளும் பாட்டில்களில் வைக்கப்பட்டன . நிவாரணக் கப்பல் அங்கு வரும்போது அந்தச் செய்திகளை எடுத்துப்படிப்பார்கள் என்று நம்பினர் . உதவி தாமதமாக அவர்களை வந்து அடையும் என்று எதிர்பார்த்தனர் .
கடைசிப் போராட்டம்
பல வாரங்கள் கடந்தும் நிவாரணக் கப்பல் வந்து சேரவில்லை . ஆகாரப் பொருள்கள் அனைத்தும் தீர்ந்துவிட்டன . தலைவன் கார்டினரும் நண்பர்களும் வெளி உலகத் தொடர்பினின்று துண்டிக்கப்பட்டு விட்டனர் . உணவு மில்லை , காப்பாற்றப்படுவோம் என்கிற நம் பிக்கையும் இல்லை . மீன் பிடிப்பது அக்கடலில் சாத்தியமாய் இல்லை . ஏழுபேரும் ஒரு நரியின் மாம்சத்தைப் புசித்துப் பலநாள் வாழ்ந்தனர் . அடுத்து , ஆறு எலிகளையும் , சில விதைகளையும் , காட்டுச் செடியின் தண்டுகளையும் பட்டினியைப் போக்க உட்கொண்டனர் . பட்டினி கிடந்ததோடல்லாமல் " ஸ்கர்வி " என்ற நோயாலும் தாக்கப்பட்டனர் . மிகக் கடினமான இச்சூழ்நிலையில் தன்னுடைய நாள் குறிப்பில் கார்டினர் இவ்விதம் எழுதினார் ; " நான் மிகவும் சோர்வுடன் பலவீனமாகக காணப்படுகிறேன் . நான் முழுவதும் படுத்த நிலையிலேயே இருக்கிறேன் . என் மனக் கவலைகள் அனைத்தையும் என் தேவனிடத்தில் சமர்ப்பித்துவிட்டேன் . அவருடைய நேரம் வரவும் அன்பின் சித்தம் செய்யப்படவும் பூரணமாய் என்னை ஒப்படைத்து விட்டேன் " என்பதே .
கார்டினரும் , அவருடைய இரண்டு நண்பர்களும் உடைந்து போன " பயனியர் " கப்பலை கரைக்கு இழுத்துச் சென்று , அதில் ஒரு கூடாரத்தைப் போட்டுத் தங்கினர் .
மற்றக் குழுவினர் ஒரு மைல் தூரத்தில் கடலில் நின்றிருந்த கப்பலில் தங்கியிருந்தனர் . இவர்கள் அனைவரும் சோர்வுற்று பலவீனப் பட்டதால் , கரைக்கும் கடலில் நின்றிருந்த கப்பலுக்கும் இடையே இருந்த போக்குவரத்து நின்றுவிட்டது . கார்டினர் மறுபடியும் இவ்விதம் எழுதினார் ; " இப்போதும் இச்சிறிய மிஷனெரிக் குழுவை , நல்ல மேய்ப்பனாகிய கிறிஸ்து இதனிலும் மேலான பரலோக பாக்கியத்தைச் சுதந்திரித்துக் கொள்ளவே கூட்டிச் சேர்த்தார் . எங்கள் அனைவருடைய உயிரும் அவருடைய கரத்திலுள்ளது . எங்களைக் காட்டிலும் , மேலானவர்களையும் , சிறந்த பயிற்சி பெற்றவர்களையும் , திறமைமிக்கவர்களையும் , தேவன் எங்களுக்குப் பின் எழுப்புவார் . நாங்கள் நிறுத்தி விட்ட அருட்பணியை அவர்களே தொடர்ந்து செய்வார்கள் " என்பதே . கரையில் நின்றிருந்த உடைந்த கப்பலில் தனியே விடப்பட்டவராகத் தன்னுடைய பிரிவு உபசாரக் கடிதத்தைத் தன் குடும்பத்திற்கு எழுதினார் . குழுவினர் அனைவரும் இறந்து விட்டனர் . தென் அமெரிக்கத் தீவுகளில் , எதிர் காலத்தில் மிஷனெரிப் பணியை எவ்வாறு நடத்திச் செல்வது என்பதைப் பற்றிய செயல் திட்டத்தையும் எழுதி வைத்தார் . பிரிட்டிஷ் கிறிஸ்தவ சமுதாயத்திற்குத் தென் அமெரிக்க இனத்தவரின் சார்பில் " ஒரு வேண்டுகோளையும் " எழுதி வைத்தார் .
அவர் உயிர் பிரியும் கடைசி நிமிடம் வரை , அவர் உள்ளமும் நினைவும் மிஷனெரிப் பணியைப் பற்றியே இருந்தது . முடிவாக 1815 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆறாம் நாள் குழுவின் கடைசி ஆளாக கார்டினர் மரணத்தைத் தழுவினார் .
நிவாரணக்கப்பல் , இருபது நாட்கள் கழித்து வந்து சேர்ந்தது . கிறிஸ்துவுக்கென்று மரித்த , தைரியசாலிகளான ஆறு பேரையும் , கிறிஸ்துவின் சிலுவை வீரரையும் மரித்த நிலையில் கண்ட னர் . மண்ணில் விழுந்து - மரித்த கோதுமை மணி கார்டினரின் மிஷனெரி வாழ்க்கை , ஏனைய மிஷனெரிப்1 போலல்லாமல் வேறுபட்டதாய்க் காணப்பட்டது . அவருடைய மிகுந்த பிரயாசமும் , முயற்சியும் , எவரையும் கிறிஸ்தவர்களாக மாற்றவில்லை .
கிறிஸ்தவ சபையும் ஸ்தாபிக்கப்படவில்லை . அவர் அர்பணித்த வாழ்வும் முயற்சிகளும் வீண்போனது என்று சொல்ல முடியுமா ? இல்லவே இல்லை . கிறிஸ்து கூறுகிறார் , " மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் . கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகா விட்டால் தனித்திருக்கும் . செத்ததேயாகில் மிகுந்த பலனைக் கொடுக்கும் " ( யோவான் 12 : 24 ) .
ஆலன் கார்டினர் கடவுள் தெரிந்தெடுத்த கோதுமை மணி . தென் அமெரிக்க மண்ணில் அவர் விழுந்து மரித்துப்போனார் . அதனால் நிச்சயம் பலன் இருந்தே தீரும் . அவருடைய பரிதாபமான மரண சம்பவத்தைக் கேள்விப்பட்ட அனைத்துத் திருச்சபைகளும் செயல்படத் துவங்கின . அவருடைய அருட்பணி சரித்திரம் எங்கும் பிரசுரிக்கப்பட்டன .
அதன் பலனாக படகோனியன் மிஷனெரி சங்கம் உதயமாயிற்று . எந்தத் தீவுகளில் கார்டினரும் அவர் குழுவினரும் உயிர் துறந்தனரோ அவ்விடத்திலேயே அச்சங்கம் நிறுவப்பட்டது . பிரதான பணித்தளத்தை ஓரிடத்தில் அமைத்துக் கொண்டு , அங்கிருந்து அநேக தீவுகளுக்குச் சென்று வர எல்லா வசதிகளையும் உடைய ஒரு கப்பல் உபயோகத்திற்கு வந்தது . அக்கப்பலின் பெயர் " ஆலன் கார்டினர் " என்பதாகும் .
மிஷனெரிப் பணிக்கென்று அர்ப்பணித்த முன்னோடியானவர்களில் கப்பல் தலைவனான கார்டினரின் மகனும் ஒருவராவார் . அவர் தன் தகப்பனின் ஆவலை இதன்மூலம் பூர்த்தி செய்தார் . கிறிஸ்தவ சபையார் தங்கள் தவறை நினைத்து வருந்தினர் . கார்டினரின் ஒப்பற்ற சேவைக்கு அவர்கள் முழு ஆதரவையும் கொடுக்காததேஅவர்களுடைய தவறாகும் . பல வாலிபர்கள் தங்களை இந்தமிஷனரி சங்கத்தின் சேவைக்கென்று அர்ப்பணித்தனர் . சுவிசேஷம் சென்றடையாத அநேக இடங்களுக்கு சுவிசேஷத்தை எடுத்துச் செல்ல முன் வந்தனர் . தென் அமெரிக்கப் பகுதிகளில் மிஷனெரிப் பணி மிகுந்த ஆர்வத்துடன் நிறுவப்பட்டு தொடர்ந்து செயல்பட்டது . இவைகளையும் இன்னும் அதிகமான பலன்களையும் பெற ,
கடவுளின் கோதுமை மணியான கார்டினர் தென் அமெரிக்க மண்ணில் விழுந்து மரித்ததினால் ஏற்பட்ட மகிமையின் விளைவே ஆகும் ; கிடைக்கப்பெற்ற அளவற்ற ஆசீர்வாதங்களுக்கும் காரணமாகும் .
உன் வாழ்க்கையிலே கனிகள் நிறைந்திருக்க விரும்பு கிறாயா ? உன்னை இயேசுவினிடத்தில் கொடுத்துப்பார் . அவர் உன்னை பயன்படுத்துவார் . கிறிஸ்துவுக்கு முழுவதுமாய் அர்ப்பணிக்கப்பட்ட எந்த வாழ்வும் வீணாவதில்லை . பயனில்லாமல் போவதில்லை . உன்னுடைய வாழ்வும் கனிதரும் வாழ்வாக , பலன் கொடுக்க அநேகருக்கு உபயோகமானதாக இருக்க விரும்புகிறாயா ? அப்படியானால் கிறிஸ்துவுக்கென்று உன் வாழ்க்கையை முழுவதுமாய் கொடுத்துப் பார் . அவருக்கென்று அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு பல நூற்றாண்டுகளாகப் பலன் கொடுத்துக்கொண்டே இருக்கும் . சிலுவையில் மரித்து உயிர்த்த கிறிஸ்துவின் ஜீவன் , உன்னிலும் என்னிலும் ஜீவனைக் கொடுத்து ஈராயிரம் ஆண்டுகளாகப் பலன் பெருக செய்கிறதை உணர்வாயோ ?
நீர் எனக்கு நல்ல படிப்பைத் தந்தால் , என் வாழ்வை உமக்கு அர்ப்பணித்து உமக்கு ஊழியம் செய்வேன் என்று தேவலுடன் ஒரு உடன்படிக்கை செய்தார் பேக்கர் .
குடும்பப் பொறுப்பைச் சுமக்கவேண்டிய ஒருவருக்கு மிஷனெரிப்பணிக்கு அழைப்பு உண்டா ? அவரும் தேவனுக்கு உயர்ந்ததொரு பணி செய்ய முடியுமா ? இக்கேள்விகளுக்குப் பதிலாக அமைவதுதான் கார்ல் பேக்கர் அவர்களின் வாழ்க்கை வரலாறு .
பள்ளிப் படிப்பை முடித்துப் பல வருடங்கள் ஆன பின்னும் தனது மேற் படிப்பினை தொடர முடியாத நிலையிலுள்ள ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர் கார்ல் பேக்கர் . தனது விதவைத் தாயையும் , திருமணமாகாத சகோதரியையும் காப்பாற்ற வேண்டி பட்டறை ஒன்றில் வேலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தமான நிலையிலிருந்தார் அவர் . அந்த ஊதியத்தில் சிறுகச் சிறுக சேர்த்து நூறு டாலர் - ஐ தனது மருத்துவப் படிப்பிற்காக முன் பணமாகக் கொண்டு கல்லூரியில் சேர்ந்தார் .
அப்போது தேவனுடன் ஒரு உடன்படிக்கை செய்தார் . நீர் எனக்கு நல்ல படிப்பைத் தந்தால் , என் வாழ்வை உமக்கு அர்ப்பணித்து உமக்கு ஊழியம் செய்வேன் என்று . 1916 - ம் ஆண்டு 22 - வது வயதில் பிலடெல்பியா மருத்துவ கல்லூரியில் தனது மருத்துவப் படிப்பை படித்துக் கொண்டிருந்தார் அவர் . அப்போது முதலாம் உலகப்போர் ஆரம்பித்ததால் , போரில் காயப்பட்டவர்களுக்கு டாக்டர்களின் உதவி அவசியம் என்பதை உணர்ந்து , மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு இலவசமாகத் தங்கும் அறையும் , உணவும் ஊக்கத்தொகையும் வழங்கினார்கள் . இதனால் எளிதாக தனது மருத்துவப் படிப்பை முடித்தார் கார்ல் பேக்கர் .
1922 - ல் மரியா என்ற பெண்ணைத் திருமணம் செய்தார் . திருமணத்தின்போது மரியா - விடம் தான் தேவனிடம் செய்த உடன்படிக்கையையும் தனது வாழ்வில் முதன்மையானவர் கிறிஸ்து மட்டுமே என்பதையும் தெளிவு படுத்தினார் . அதற்கு மரியாவும் சம்மதித்திருந்தார் .
திருமணத்திற்குப்பின் அமெரிக்காவில் பயர் பட்டணத்தில் மருத்து வராகப் பணிபுரிந்து வந்தார் . அவரது திறமையான சிகிட்சையால் அவருக்குப் பெயரும் புகழும் கிடைத்தது .
தேவனுடன் அவர் செய்திருந்த உடன்படிக்கையை சார்லஸ் ஹார்ல்பேர்ட் என்ற மிஷனெரியிடமிருந்து வந்த ஒரு கடிதம் அவருக்கு மீண்டும் தினைவுபடுத்தியது .
ஆப்பிரிக்காவிலுள்ள காஸ்கோ என்ற பகுதியில் ஊழியம் செய்த தனது மருமகள் எலிசபெத் மோர்ஸ் ஹார்ல்பேர்ட் என்ற மருத்துவ மிஷனெரி திடீரென்று இறந்து போனதால் அந்த பகுதியில் பணி புரிய , ஒரு மருத்துவர் தேவை என்று அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார் .
தேவனுக்குச் செய்த அர்ப்பணிப்பு பேக்கரை அதிகம் உந்தி தள்ளியது என்றா லும் கடைசிநாட்களில் தனது தாயைக் காப்பாற்ற வேண்டிய கடமை உணர்வு அவரை அழைப்புக்குக் கீழ்ப்படிய இயலாமல் தடுத்தது .
எனவே , தன்னால் ஆப்பிரிக்காவிற்கு வர இயலாது எனக் கடிதம் எழுதினார் பேக்கர் . ஆனால் சார்லஸ் ஹார்ல்பேர்ட் சோர்ந்து போகாமல் தொடர்ந்து கடிதம் எழுதி , அவரை ஊக்குவிக் கவே 1928 - ம் ஆண்டு தனது நல்ல வருமானம் , புகழ் தந்த வேலையை விட்டு விட்டு ஆப்பிரிக்கா காடுகளில் பணி செய்ய பயணமானார் .
ஆப்பிரிக்காவில் காஸ்கோ காடுகளிலுள்ள , காட்வா இடத்தில் முதலில் தங்கி பணிசெய்ய ஆரம்பித்தார் . அங்கு மண் குடிசையில் வாழ வேண்டியதிருந்தது . அவரது மனைவி மேரியோ அதை அலங்கரித்து மாளிகையாக மாற்றினார் .
ஆறு வருடம் அங்கு பணி செய்தபின்
1934 - ம் ஆண்டு ஓசா என்ற இடத்தில் சிறிய மருத்துவமனை நிறுவி இட்டுரி காட்டு மக்களுக்கு மருத்துவ உதவி செய்ய ஆரம்பித்தனர் . அனுதினமும் 200 - க்கும் மேற்பட்ட மக்கள் தூரம் இடத்திலிருந்து இவரது மருத்துவமனைக்கு வந்து உடல் ஆரோக்கியம் பெற்றனர் சரீர சுகம் தேடிவரும் மக்களுக்கு சுவிசேஷத்தை அறிவிக்காமல் இவர் அனுப்பியதே இல்லை . உள்ளூர் தீய ஆவிகள் மற்றும் மந்திர வாதிகளின் கட்டுப்பாட்டிலிருந்த கிராம மக்களையும் எளிதாக சுவிசேஷத்திற்கு செவிசாய்க்க வைக்க இவர் மருத்துவ பணியின் மூலம் முடிந்தது . மருத்துவப் பணியில் முழு மூச்சுடன் ஈடுபட்டாலும் ஒவ்வொரு வார இறுதியிலும் சனி , ஞாயிறு முழுவதும் சுவிசேஷ பணிக்காக மட்டுமே ஒதுக்கி வைத்து பணிபுரிந்தார் .
சுவிசேஷத்தை சரியான முறையில் மக்களுக்கு எடுத்துச் சொல்வதில் பேக்கர் தலைசிறந்தவர் . வேத கதைகளை ஆப்பிரிக்கா சூழ்நிலைக்கு ஏற்ப விளக்கக்கூடிய படங்கள் நிறைந்த ஒரு புத்தகத்தை அவரே உருவாக் கினார் . அதை உபயோகித்து , எவரும் மற்றவர் களுக்கு சுவிசேஷத்தை எளிதாக பிரசங்கிக்க முடியும் . இதனை ஆப்பிரிக்க விசுவாசிகளுக்கு இவர் கற்றுக் கொடுத்து , சுவிசேஷத்தை அறிவிக்க அவர்களை ஊக்கப்படுத்தினார் . ஆப்பிரிக்க காட்டு மனிதர்கள் அந்த புத்தகத்தை உபயோகித்து , மற்றவர்களுக்கு சுவிசேஷம் அறிவித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து ஆண்டவரை துதித்தார் .
தனது மருத்துவ பணியை குறித்து இவ்வாறு எழுதுகிறார் . இயேசு கிறிஸ்துவுக்கு யோவான்ஸ்நானன் எப்படி முன்னோடியாக இருந்து வழியை ஆயத்தம் பண்ணினாரோ , அப்படியே எனது மருத்துவ பணியும் இம்மக்களுக்கு நற்செய்தியை நான் சொல்லவும் அவர்கள் அதை கவனமுடன் கேட்கவும் ஆயத்தம் செய்கிறது என்று குறிப்பிட்டார் .
தினமும் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு சுவிசேஷம் சொல்லுவது மட்டுமல்லாமல் , தன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளை முறை ஆவிக்குரிய வாழ்வில் வளர்க்கவும் , அவர்கள் குணமடைந்தபின் , தாங்கள் வாழும் இடத்தில் திருச்சபையில் இணைந்து ஆண்டவரை ஆராதிக்க செய்யவேண்டிய பொறுப்பு தனக்கு உண்டு என்பதை அறிந்து செயல்பட்டார் .
இட்டூர் காடுகளிலுள்ள தொழுநோயாளிகள் கார்ல் பேக்கரின் மருத்துவ பணியை அறிந்து சிகிட்சைக்காக வர ஆரம்பித்தனர் . இவர்கள் வாழ்ந்து ஒரு பயனும் இல்லை என்று சமுதாயத்தில் வெறுத்து ஒதுக்கப்பட்ட தொழுநோயாளிகளுக்கு கார்ல் பேக்கரின் அன்பும் அரவணைப்பையும் உற்சாகத்தையும் வாழ்க்கைக்கு புது அர்த்தத்தையும் தந்தது . அவர்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விசுவாசத்துக்குள் வந்தனர் .
நாளுக்கு நாள் எண்ணிக்கை பெருகவே , 1100 ஏக்கர் நிலத்தில் தொழுநோயாளிகளுக்கான கிராமம் ஒன்றை ஏற்படுத்தி , அதில் 4000 தொழுநோயாளிகள் தங்க வைத்து , மருத்துவ உதவி செய்து வந்தார் . தொழுநோய் பற்றி ஆராய்ச்சியில் ஈடுபடுவோரும் அமெரிக்க தேசத்திலிருந்துகூட வந்து , இங்கு இந்த மக்களுடன் தங்கி , பல உயரிய கண்டு பிடிப்புகளை செய்தனர் .
கார்ல் பேக்கர் ஒவ்வொரு ஆண்டும் 4000 அறுவை சிகிட்சைகளை 500 பிரசவங்களை தனது ஒச்சா மருத் துவமனையில் செய்தார் என்றால் அவர் எவ்வளவு கடினமாக ஒவ்வொருநாளும் உழைத்தார் என்பதே தெரிந்து கொள்ளுங்களேன் .
மனநோயாளிகளை , பிசாசு பிடித்தவர்கள் என்று ஆப்பிரிக்கர்கள் நம்பியதால் குடும்பத்தாராலும் , சமு தாயத்தாலும் ஒதுக்கப்பட்டனர் , தனது மருத்துவ மனையில் தனி பகுதி ஒன்றை ஆரம்பித்து மன நோயாளிகளுக்கு சிகிட்சை செய்தார் . ஆப்பிரிக்காவில் இவரது மருத்துவமனையே மனநோயாளி களுக்காக திறக்கப்பட்ட மருத்துவமனையாகும் .
1960 - ம் ஆண்டு தேச விடுதலைக்காக ஏற்பட்ட புரட்சியின்போது சிம்பாஸ் கொரில்லாக்கள் இவரது மிஷன் வீடு , மருத்துவமனை ஆகியவற்றை நாசப் படுத்தினர் .
பாதுகாப்பிற்காக சிலகாலம் கிழக்கு ஆப்பிரிக்கா நோக்கி இடம் பெயர்ந்த இவர் 70 வயதானதால் ஓய்வெடுத்துக்கொள்ளும்படி இயக்கம் வற்புறுத்திய போதும் அதற்கு மறுத்து , ஆப்பிரிக்கா எனது தாய்வீடு என்றும் , அமெரிக்கா தேசத்திற்கு திரும்பிப் போக தான் விரும்பவில்லை என்றும்
ஒய்ந்திருக்க மறுத்து சுறுசுறுப்புடன் பணிபுரிந்தார் . இன்று என் வாழ்வின் கடைசி நாளாக இருக்குமானால் அதனை படுக்கையில் நான் செலவழிக்க விரும்பவில்லை என்று அடிக்கடி கூறுவார் அவர் , தெளிவாக சொல்லி , புரட்சி ஓய்ந்து சற்று அமைதி திரும்பியதும் ஒச்சா திரும்பினார் .
அங்கு கொரில்லாக்களால் நாசமாக்கப்பட்ட தனது வீடு , மருத்துவமனையை மீண்டும் புதுப் பித்தார் . அதற்கு ஒரு வருடம் பிடித்தபோதும் சோர்ந்து போகாமல் புதிய உற்சாகத்துடன் விளங்கினார் .
1966 - ஆம் ஆண்டு மூன்று முறை பேக்கர் மாரடைப்பினால் தாக்கப்பட்டாலும் , ஓய்ந்திருக்க மறுத்து சுறுசுறுப்புடன் பணிபுரிந்தார் . இன்று என் வாழ்வின் கடைசி நாளாக இருக்குமானால் அதனை படுக்கையில் நான் செலவழிக்க விரும்பவில்லை என்று அடிக்கடி கூறுவார் அவர் . மறக்க முடியாத மாமனிதர்கள் தனது 83 வயது வரை காஸ்கோ பகுதியிலே பணிபுரிந்த அவர் ,
பின்பு அமெரிக்கா திரும்பி , மருத் துவ சுவிசேஷ மையம் என்ற அமைப்பை ஏற்படுத்தி ஆப்பிரிக்கா நாட்டிற்கு ஊழியத்திற்கு செல்லும் மருத்துவர்களை பயிற்றுவிக்கும் பணியை நிறைவேற்றினார் .
60 வருடம் மருத்துவ மிஷனெரியாக ஆப்பிரிக்காவில் பணிபுரிந்த இவரைக் குறித்து ஒரு காஸ்கோ மனிதன் இவ்வாறு கூறினான் ,
பல மிஷனெரிகள் இயேசு கிறிஸ்துவை குறித்து எங்களுக்கு பிரசங்கித்தனர் . போதித்தனர் . ஆனால் கார்ல் பேக்கர் - ரோ இயேசு கிறிஸ்துவை போலவே எங்களுக்கு வாழ்ந்து காட்டினார் என்றான் . தேவையுள்ள இந்த தேசத்தில் உங்கள் கல்வியை , தாலந்தை தேவப்பணிக்கு மூலதனமாக்கி , தேவனுக்கு அநேகரை சிநேகிதராக்கும் தேவப்பணியை நிறைவேற்ற நீங்களும் ஏன் முன்வரக்கூடாது ?
பக்தியை ஊட்டி வளர்த்த பெற்றோரே அர்ப்பணிப்புக்கு எதிர்த்து நிற்கும்போது என்ன செய்வது ? இக்கேள்விகளுக்கு விடைதருகிறது இசபெல் கூன் வாழ்க்கை .
சிறுவயதில் பக்தியாக வளர்க்கப்பட்டு வாலிபத்தில் தடம்புரண்ட ஒருவர் திரும்பவும் தேவனண்டை திரும்ப முடியுமா ? தேவப்பணிக்கு அவருக்கும் அழைப்பு உண்டா ? பக்தியை ஊட்டி வளர்த்த பெற்றோரே அர்ப்பணிப்புக்கு எதிர்த்து நிற்கும் போது என்ன செய்வது , இக்கேள்விகளுக்கு விடைதருகிறது இசபெல் கூன் வாழ்க்கை .
பெல் என்பது அவருடைய செல்லப் பெயர் . அவளது பெயருக்கு ஏற்ப அவள் ஓர் அழகி . பாப் செய்யப்பட்ட அவளுடைய பழுப்பு நிறமுள்ள முடி முதல் , பாதம் வரை கொள்ளை அழகுள்ளவள் ,
1920 களில் அமெரிக்காவில் நடனமோகம் ஓங்கியிருந்தது . நாட்டிய அரங்குகள் , அயிரக்கணக்கில் தோன்றலாயின் சிறுமிகள் முதல் பெரியோர்கள் வரை எல்லாருமே நடனத்தில் கலந்துகொண்டு உல்லாசமாய்க் காலம் கழித்தனர் .
பெல் நடனத்தில் எல்லாரையும் தோற்கடித்து விடுவாள் . இசபெல் 1911 ஆண்டு டிசம்பர் 17 நாள் கனடாவிலுள்ள டொரன்டோவில் பிறந்தார் . இவரது தகப்பனார் ஒரு வியாபாரி , அதோடு பிரஸ்பிடேரியன் சபையில் ஒரு பிரசங்கியார் . தாயார் ஆலய - ஆராதனையில் இசைக்கருவி இசைத்துப் பாடல்களை நடத்துவதில் அக்கறை காட்டுபவர் . இசபெல் சிறுவயதிலேயே பக்தியுடன் வளர்க்கப்பட்டாள் . தினசரித் தேவைகளுக்காக நாம் ஜெபிக்க வேண்டும் என்ற பாடத்தை தனது பெற்றோரிடம் பெல் கற்றிருந்தாள் . படிப்பிலும் அவள் கெட்டிக்காரி , உயர்நிலை வகுப்பில் பெல் மாநிலத்திலேயே முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்று கவர்னர் ஜெனரலின் பதக்கமும் பெற்றாள் . வாலிப வயதை எட்டியபோது இரவில் நடனம் ஆடி , அதிக நேரம் கழித்து வீட்டுக்கு வருவது , ஞாயிற்றுகிழமையும் நடனம் ஆடப்போவது எனக் கொஞ்சம் கொஞ்ச மாக உல்லாசம் அவளைப் பற்றிப்பிடித்தது .
அவளது செயலைத் தாயார் கண்டித்த போது அதிலென்ன தவறு நான் தான் நன்றாகப் படிக்கிறேனே என்று சமாதானம் சொன்னாள் . பெல் படிப்பிலும் , நடனத்திலும் பல விருதுகளைப் பெற்றாள் . கல்லூரி வாழ்வில் விசுவாசத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகி கடவுள் என்று ஒருவர் இல்லை , வேதம் விஞ்ஞானத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது போன்ற கொள்கைகளை நம்ப ஆரம்பித்தாள் ,
இச்சமயத்தில் பென் என்ற வாலிபனால் அவள் ஏமாற்றப்பட்டாள் . 19 வயதான பெல்லுக்கு உலகமே இருண்டு விட்டது போல இருந்தது . அதிக மன வேதனையுடன் , சாப்பிடாமல் , தூங்கமுடியாமல் தவித்த அவளுக்கு விஷம் குடித்து உயிரை மாய்த்துக்கொள்ளும் எண்ணம் திரும்பத் திரும்பவந்தது .
இந்த மனப்போராட்டத்தில் அவள் தன் கைகளை வானத்துக்கு நேராய் உயர்த்தி ஓ தேவனே நீர் அங்கே இருப்பீரானால் உம்மை எனக்கு நிரூபியும் , இந்த படுவேதனை நேரத்தில் எனக்கு சமாதானம் தாரும் , என் வாழ்க்கையை உமக்குக் கொடுக்கிறேன் . எதுவேண்டுமானாலும் , செய்வேன் , எங்கு வேண்டுமாயினும் செல்வேன் என்று சொல்லிவிட்டு சுருண்டு படுத்துக்கொண்டாள் .
அமைதியான தூக்கம் . அன்று அவளை சூழ்ந்து கொண்டது . ஒரு குழந்தையை போல தான் தூங்கினது அவளுக்கு பெரிய வியப்பாக இருந்தது . ஏனெனில் பென்னூடன் உறவை முறித்துக்கொண்ட நாளிலிருந்து ஒருதநாள் கூட அவள் அப்படித் தூங்கியதில்லை , அலமாரியில் தூசிபடிந்திருந்த தனது வேதாகமத்தை எடுத்து வாசிக்க ஆரம்பித்தாள் .
பெல்லின் தாயும் அவளது வாழ்வின் மாற்றத்தை உணர்ந்து , எல்லிஸ் என்பவர் நடத்தும் வேதபாட வகுப்புக்கு அழைத்துச் சென்றாள் . அந்த வேதபாட வகுப்புகள் மூலம் ஆண்டவரைத் தன் இரட்சகராக ஏற்றுக் கொண்டான் பெல் , அவளது ஆவிக்குரிய வளர்ச்சி மெதுவாகவே இருந்தது .
1922 " ஆண்டு பல்கலைக் கழகப் படிப்பை முடித்து ஆசிரியப் பயிற்சி பெற்று , பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்ற ஆரம்பித்தார் . என்றாலும் தேவனிடம் தான் செய்த உடன்படிக்கையை அவள் மறக்கவில்லை பெர்ஸ் என்ற இடத்தில் நடந்த மிஷனெரி மாநாட் டில் பெல் கலந்துக்கொண்டபோது , சீனா தேசத்திற்கு மிஷனெரியாகப் போக உந்தப்பட்டார் .
சீனா உள்நாட்டு இயக்கத்தின் ஸ்தாபகர் ஹட்சன் டெய்லரின் வாழ்க்கை சரிதையும் அவரைக் கவர்ந்தது . ஜேம்ஸ் பிரேசரின் மிஷனெரி பகிர்ந்து கொள்ளுதல் மூலம் விசு மக்களைப்பற்றி அறிந்துகொண்டு அவர்கள் மத்தியில் பணி செய்ய ஆர்வம் கொண்டார் . தனது மிஷனெரி அர்ப்பணிப்பைத் தாயிடம் சொன்னபோது , அவளது தாயார் அதிர்ந்துபோய் உனக்கு எவ்வளவு செலவு செய்து படிக்க வைத் தோம் . இவைகளுக்கெல்லாம் இதுதான் நீ காட்டும் நன்றியா என்று எதிர்ப்பு தெரிவித்தார் . ஏனெனில் பெல்லின் தகப்பனாருக்கும் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டு , செல்வம் முழுவதையும் இழந்தார் . மேலும் அவர்மேல் தொடுக்கப்பட்ட ஒரு வழக்குக்கு , தீர்ப்பு வந்தால் , சிறை தண்டனையோ அல்லது பெருந் தொகையோ அபராதமாக செலுத்த வேண்டியது இருக்கலாம் .
பெல்லின் ஒரே அண்ணனும் வேலை இல்லாமல் இருந்தான் . பெல்மட்டுமே வேலை செய்து வந்தார் . நீ தானே குடும்பத்திற்கு ஆதரவு என்று தாய் அழுதாள் . என்னுடைய உயிரற்ற உடலின் மேல் நடந்து செல்லுவதானால் தீ சீனா செல்லலாம் என்று தாய் சொல்லி விட்டார் . தன் மனைவி யின் மனநிலையை அறிந்த பெல்லின் தகப்பனார் . இக்காரியத்தை மறுபடியும் பேச வேண்டாமென்று பெல்லுக்கு கட்டளையிட்டார் . ஜெபிக்கவும் , வேதத்தை நேசிக்கவும் , அழியும் ஆத்துமாக்களுக்கும் மிஷனெரிகளுக்கும் ஜெயிக்கும்படி கற்பித்த தாயே எதிர்ப்புத் தெரிவிக்கிறாரே என்ன செய்வ தென்று பெல் குழம்பிநின்றார் .
என்றாலும் எல்லாக் காரியங்களுக் காகவும் தீவிரமாக ஜெபித்தார் . இவ்வேளையில் பெல்லின் தாயார் புற்றுநோயால் மரித்து விட்டார் . மரிப்பதற்கு முன் தனது சிநேகிதியிடம் என் மகள் தெரிந்து கொண்ட பணி சிறந்தபணி என்று சொல்லி மரித்தார் . தனது தாயாரின் கடைசி வார்த்தை பெல்லை உற்சாகப்படுத்தியது . பெல் ஊழியத்திற்கு போகும் முன்னே அவரது தந்தைக்கு வழக்கிலிருந்து விடுதலை கிடைத்ததுடன் , அவரது சகோதரனுக்கும் நல்ல வேலை கிடைத்தது .
1926 " சீனா தேசத் துக்கு மிஷனெரியாகப்போன ஜான் என்பவருடன் பெல்லுக்கு திருமணம் நிச்சயமாக்கப்பட்டது . 1928 ஆண்டு அக்டோபர் 11ம் நாள் சீனாவுக்குப் புறப்பட்டார் . சீனா தேசத்தை அடைந்ததும் நவம்பர் 4 ' தேதி ஜாண் கூன் - உடன் இவரது திருமணம் சீனா தேசத்திலே நடந்தது . தனது வீட்டிலிருந்த மரத்தாலான அழகு பொருட்களை எல்லாம் ஒழித்து விட்டு சீனர்கள் பயன்படுத்துவதற்கு ஒப்பான பெஞ்சுகள் போன்றவற்றையே வீட்டில் பயன் படுத்தினார் . சீன மக்களிடம் இன் னும் அதிகம் நெருங்கி பழக வேண்டுமென்று பெல் விரும்பினார் . முதலில் அதிக கடினமாக 8 தெரிந்தாலும் காலப்போக்கில் சீனஎழை மக்களுடன் வாழ்ந்து , அவர்களுடைய எளிய வீட்டிலே , அருகிலே அமர்ந்து அவர்கள் கொடுக்கும் உணவைச் சாப்பிடவும் கற்றுக்கொண்டார் .
பகலில் வீடுகள் சந்தித்தும் , சாயங்காலத்தில் திறந்த வெளிக் கூட்டங்களில் நற்செய்தியைப் பிரசங்கித்தார் . சின மொழியை நன்கு கற்றுக்கொண்டவுடன் லிகமக்கள் வாழும் பகுதிக்கு மாற்றப்பட்டு , அங்கு ஊழியம் செய்ய ஆரம்பித்தார் .
1931 " ஆண்டு ஜப்பானுக்கும் சீனாவுக்கும் இடையே போர் மூண்டது . ஆகவே சிலகாலம் ஹாங்காங் சென்று தங்கிவிட்டு மறுபடியும் சீனா வந்து விசும்க்கள் மத்தியில் பணியினைத் தொடர்ந்தனர் . விசு சபை மலர்ந்தது . கொடூரக் குணமுடைய விசுக்கள் கிறிஸ்தவர்களான பிறகு வியத்தகு மாற்றம் அடைந்தது அநேகரை ஆச்சரியப்பட வைத்தது . மழைக்கால வேதாகமப்பள்ளி என்று மூன்று மாத வேதாகம் வகுப்புகளுக்கு ஏற்பாடு செய தார் . மழைக்காலத்தில் மக்களுக்கு வேலை இல்லாததால் இதில் வந்து படிக்க வசதியாக இருந்தது . வேதாகமப் பள்ளி நடத்த கட்டடம் ஒன்று கட்டப்பட்டது . அதற்கு எப்சிபா ( கடவுளுக்குப் பிரியமான ) என்று பெயரிட்டார் . லிசு மக்களுக்கு இவர் அளித்த பெருங்கொடை இது . இந்த பள்ளியின் மூலம் விசு விசுவாசிகள் சுவிசே ஆர்வமுடையவராயினர் .
சீனாவில் கம்யூனிச ஆட்சி பரவிக்கொண்டிருந்தது . சீனாவின் ஒவ்வொரு பகுதியாக கம்யூனிஸ்டுகள் பிடித்து தங்களது ஆட்சியின் கீழ் கொண்டு வந்து கொண்டிருந்தனர் . என்றாலும் இசபெல் தம்பதியினர் அங்கேயே தொடர்ந்து பணிபுரிந்தனர் . 1951 - ஆண்டு சீன உள்நாட்டு மிஷன் சீனாலை விட்டு அனைத்து மிஷனெரிகளை வெளியேறும்படி உத்தரவிட்டபோதும் தாய்நாடு செல்லாமல் பெல் தம்பதியினர் தாய்லாந்தில் குடியேறி , அங்குள்ள விசுக்களும் , மற்றும் வெள்ளைமியோ , நீலமியோ , வாசு , ஆக்கா ப ோன்ற மக்கள் மத்தியில் தொடர்ந்து பணி செய்தனர் . இவரது மகள் கேத்தரினும் மிஷனெரியாகச் சென்றார் . அதனைக்கண்டு தேவனை துதித்தார் 1957 ஆண்டு மார்ச் 20 நாள் பெல் கிறிஸ்துவின் சமூகத்தில் சேர்ந்தார் .
மரிக்கும் முன் தன் அருகில் நின்ற கணவனை அழைத்து மோட்சத்தின் பொன் மதில்களுக்கு வெளியே நான் என் தலையை நீட்டி விசு சபையை பார்த்துக் கொண்டிருப்பேன் என்று சொன்னார் .
இந்த படுவேதனை நேரத்தில் எனக்கு சமாதானம் தாரும் . என் வாழ்க்கையை உமக்குக் கொடுக்கிறேன் . எதுவேண்டுமானாலும் செய்வேன் , எங்கு வேண்டுமாயினும் செல்வேன் என்று சொல்லிவிட்டு அருண்டு படுத்துக்கொண்டார் . சீனாவில் கம்யூனிச ஆட்சி பரவிக்கொண்டிருந்தது . சீனாவின் ஒவ்வொரு பகுதியாக கம்யூனிஸ்டுகள் பிடித்து தங்களது ஆட்சியின் கீழ் கொண்டு வந்து கொண்டிருந்தனர் . என்றாலும் இசபெல் தம்பதியினர் அங்கேயே தொடர்ந்து பணிபுரிந்தனர் .
பெற்றோரின் எதிர்ப்பின் மத்தியில் கையிலிருந்து 70 டாலர் பணத்துடன் வெனிசுலா என்ற நகரத்திற்குப் புறப்பட்டார் ஒல்சன் .
நமது தலைமுறையில் தேவனுடைய அழைப்பிற்கிணங்கி , அவருடைய சித்தத்தைச் செய்ய முன்வந்த ஓர் இளைஞனை தேவன் - எவ்விதம் பயன் படுத்தினார் என்பதை புரூஸ் ஒல்சன் வாழ்விலிருந்து நாம் கற்றுக்கொள்ள முடியும் .
சிறுவயதிலேயே கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட ஒல்சன் , 15 - ம் வயதில் தென் அமெரிக்காவில் வாழும் கிறிஸ்துவை அறியாத , சுவிசேஷத்தால் சந்திக்கப்படாத மக்களைக் குறித்துக் கேள்விப்பட்டு ஜெபிக்கவும் . அப்பகுதியில் வாழும் மக்களைப் பற்றிய மூல விபரங்களைச் சேகரிக்கவும் தொடங்கினார் .
1961 - ம் ஆண்டு , அவருக்கு வயது 19 , தேவனுடைய அழைப்பின் நிச்சயத்தை உணர்ந்து , உடனே ஊழியத்திற்குப் புறப்பட்டார் .
பெற்றோரின் எதிர்ப்பின் மத்தியில் கையிலிருந்து 70 டாலர் பணத்துடன் வெனிசுலா என்ற நகரத்திற்குப் புறப் பட்டார் ஒல்சன் . வேகமாகக் கையில் இருந்த பணம் கரைய , தேவனையே முற்றிலும் சார்ந்திருந்தார் . தேவனுடைய வழிநடத்துதலின் பேரில் கராசால் நகரில் அத்நாட்டு சுகாதார அமைச்சரை சந்திக்க நேர்ந்தது , அவர் மூலம் தேவன் ஒல்சனுக்கு ஓர் வேலையைக் கொடுத்தார் . அங்கிருக்கும் போது ஒல்சன் ஸ்பானிய மொழியைக் கற்றுத்தேர்ந்தார் .
மோடி லோன் பழங்குடியினர் எவ்வித நாகரிகமுமற்றவர்களாய் , பிறமக்கள் அவர்களைச் சந்திக்க அனுமதிக்காதவர்களாய் வாழ்கின்றனர் எனத் தெரிய வந்தார் .
ஆனால் ஒல்சனுக்கு எப்பொழுதும் அவர்களின் நினைவே , அந்நேரத்தில் அந்தியர் அனைவரும் உடனடியாக வெனிசுலா நாட்டை விட்டு வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது . என்ன செய்வது என அறியாத ஒல்சன் விடுதி ஒன்றில் இர்வின் என்ற நபரைச் சந்தித்தார் . அவர் அந்நாட்டதிபரின் அந்தரங்கச் செயலர் . அவர் மூலம் தேவன் ஒல்சனுக்கு தென் அமெரிக்காவில் தங்கவும் , பழங்குடி மக்கள் மத்தியில் ஊழியம் செய்யவும் உதவினார் .
சில நாட்களிலேயே தன்னுடைய மிஷனெரிப் பயணத்தைத் தொடங்கிய ஒல்சனுக்கு உதவி செய்யவோ , வழிகாட்டவோ யாரும் முன்வரவில்லை , மறுநாள் ஒரு வாலிபனின் உதவியோடு மோடி வோன் பழங்குடியினரைத் தேடி அடர்ந்த காடுகளுக்குள் பயணப்பட்டார் ஒல்சன் . பலநாள் பயனத்திற்குப்பின் மோடி வோன் பழங்குடியினர் வாழும் பாதை இது எனக்கூறி காட்டினுள் ஓடி மறைந்துவிட்டான் அந்த வழிகாட்டி
முன்னேறிச் சென்ற ஓய்சனை நோக்கி பாய்த்துவந்த ஆறடி அம்பு ஒன்று அவரது தொடையை பதம் பாரித்தது . மயங்கி கிழேவிழுந்தார் .
கண் விழித்த போது பலர் ஈட்டியுடன் அவரைச் சூழ்ந்திருந்தனர் . மறுபடியும் அவரை கட்டியாக குத்த ஓங்கிய வாலியனை நடுந்த இன்னொருவன் ஓங்களை தமையனிடம் இழுத்துச் சென்றான் . தலையன் வேட்டைக்குச் சென்றிருந்த படியால் ஒல்சனை 55 அடி அகலமும் 100 அடி நீளமும் , 10 அடி உயரமுமான பிரமான்டக் குடிசையில் புல்லினால் ஆன தொட்டிலில் படுக்க வைத்தனர் . தலைவனின் வருகைக்காக இரண்டு நாட்கள் காத்திருந்தபோது , அவர் கடுமையான வயிற்றுவலியினால் அவதியுற்றார் . எனவே இரவோடிரவாக அங்கிருந்து தப்பி ஆற்றோரமாக சுமார் 10 மைல் தொலை தூரம் நடந்துவந்து அங்கங்களைப் பினால் மறுபடியும் மயங்கி விழுந்தார் . வேட்டைக்கு வந்த சிலரால் அவர் காப்பாற்றப் பட்டு , ஒரு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார் . இரண்டே வாரங்களில் நல்ல சுகம் பெற்று மறுபடியும் படி பரிசுப் பொருட்கள் , மருந்துகளோடு போடியோன் பழங்குடியினரைச் சந்திக்கச் சென்றார் .
மோடியோன் பழங்குடியினர் வாழும் கிராமத்நினருகே சென்று அவர்கள் செல்லும் பாதையில் சிரிய பரிசுப் பொருட்களை வைத்துவிட்டுகாத்திருந்தார் . எப்படியாவது அவர்களது நல்மதிப்பைப் பெற வாஞ்சித்தார் . சிலநாட்கள் கழித்து அவர் வைத்த பரிசுப் பொருட்களுக்குப் பதிலாக நீளமான துணி இரண்டு துண்டுகளாக கிழிக்கப்பட்டும் யுகா என்று அவர்கள் உண்ணும் கிழங்கு ஒன்று இரண்டாக வெட்டப்பட்டும் இருந்தது ,
மறுநாள் பிரயாணப்பட்டுச் சென்ற ஒல்சன் , ஒரு புதருக்குப்பின் ஐந்து பழங்குடி வாலிபர்கள் கையில் அம்புடன் நின்றதைக் கண்டார் . அவர்களைப் பார்த்த ஒவ்சன் பின்வாங்கினார் .
அவர்களோ அம்பைப் பூட்டி அசையாது நின்றனர் . பின்பு ஒலாம் மோடி லோன் வழக்கத்தின்படி புருவங்களை உயர்த்தி பாக்கம் கூறி , அவர்கள் சிரித்தபடி அவர் முன்வந்தனர் . அவர்கள் , முன்பு ஒல்சன் சென்று மோடி வோன் கிராம வாரியர்கள் , அவர்கள் தங்களுக்குள் பேசிய வார்த்தை காள மனப்பாடம் செய்திருந்ததால் , தானும் அதை திரும்பத் திரும்ய கூறினார் . - - பொருள் தெரியாத அவருடைய வார்த்தையின் அர்த்தம் உடனே தலைவனிடம் கூட்டிக்கொண்டு போ என்பதாகும் . எனவே அவர்கள் ஒல்சனை அழைத்துக் கொண்டு பயணப்பட்டனர் . இடையில் ஒல்சன் மஞ்சள்காமாலை நோயினால் அதிகம் அவதியுற்றார் .
மயங்கி விழுந்த ஒல்சனை தூக்கிக் கொண்டு தலைவனிடம் சென்றனர் . ஒரு மனிதன் தன் இனத்தாரை விட்டு வேறு இடத்தில் மரித்தால் அவன் சபிக்கப்பட்டவன் என நம்பும் மோடிலோன் தலைவன் , அவனைக் கொல்லாமல் தானாகவே சாகட்டும் என அவர்கள் வாழும் மாபெரும் பந்தல் போன்ற வீட்டில் படுக்க வைத்தான் . மறுபடியும் அனைவரும் தூங்கும் போது அங்கிருந்து " மெல்ல மெல்ல எழுந்து வெளியே வந்த அவர் . ஒரு ஹெடாப்டர் பறப்பதைக் கவனித்தார் . வெட்ட வெளியில் வெள்ளை மனிதன் படுத்திருப்பதைக் கண்ட விமானி , தாழவந்து அவரைக் காப்பாற்றினார் . இதை ஒளிந்திருந்து பார்த்த மக்கள் ஆகாய ராட்சசக் கழுகு அவரைத் தூக்கிச் சென்று விட்டது என எண்ணினார்கள் . அடுத்த வாரமே நல்ல சுகம் பெற்று மறுபடியும் அதே கிராமத்திற்குச் சென்றார் . அங்கு கண்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்து கொடுத்தார் . கண்நோய் சுகமானதுமே , அக்கிராமத் தலைவன் மற்றும் அனைவரும் அவருக்கு நண்பர்கள் ஆனார்கள் .
இதனால் இவர் ஒரு மந்திரசக்தி படைத்தவர் , மறுபடியும் சாகாமல் வந்துள்ளார் என மரியாதை செய்தனர் . ஒல்சன் பயன்படுத்திய சாதாரணமருந்துகள் அம்மக்களுடைய நோய்களில் இருந்து விடுதலை தந்ததால் மோடிலோன் பழங்குடியினர் மேலும் அவரை நம்புவதற்கும் , ஏற்றுக் கொள்வதற்கும் ஏதுவாக அமைந்தது . மோடிலோன் மக்கள் மகா பெரிய ஒரே குடிசையில் அனைத்து கிராம மக்களுடன் வசிப்பார்கள் .
குடிசையினுள் ஒவ்வொரு குடும் பத்திற்கும் தனித்தனி இடம் கொடுக்கப்பட்டு , சிறுசிறு தடுப்புகளால் பிரிக்கப்பட்டிருக்கும் . அனைவரும் நீண்ட மரக்கொடிகளால் செய்யப்பட்ட தொட்டில்களில்தான் படுப்பர் . கடவுளைப் பற்றி அவர்களது நம்பிக்கை என்ன வெனில் டிபோடிபோ என்பவர் தான் கடவுள் . அவர் நட்சத்திரங்களுக்குப் பின்பு உள்ள மகா பெரிய குடிசையில் வாழ்கிறார் . இக்குடிசைக்கு இஸ்கோரிடா என்பது பெயர் ,
அங்கு செல்ல அனைத்து மக்களுக்கும் மிகுந்த ஆவல் , ஆனால் ஒருவருக்கும் அங்கு செல்ல வழி தெரியாது என்பதாகும் . இதை மையமாக வைத்து ஒல்சன் டி போடிபோ அதாவது கடவுள் மிகவும் அன்பானவர் . அவர் அனைத்து மோடிலோன் மக்களும் தன்னுடன் வாழ ஆசைப்படுகிறார் .
எனவே தன்னுடைய குமாரனாகிய கிறிஸ்து இயேசுவை இவ்வுலகிற்கு அனுப்பினார் . அவர் நம்முடைய பாவங்களுக்காக மரித்து , உயிர்த்தெழுந்தார் . நீங்கள் பாவங்களை அறிக்கையிட்டு அவரை ஏற்றுக்கொண்டால் டிபோ டிபோவின் குடிசைக்குச் செல்லலாம் எனக்கூறினார் .
அவரது பிரசங்கத்திற்கு உடனடியாக விளைவைக் காண முடியவில்லை . காரணம் மோடிலோன் மக்கள் மத்தியில் பாவம் என்ற சொல் காணப்படவில்லை , எனவே அவர்களது தீய பழக்க வழக்கங்களை ஒவ்வொன்றாகச் சுட்டிக்காட்டிய ஒல்சன் இப்படிச் செய்வது டிபோடி போவுக்குப் பிடிக்காது எனக்கூறி பாவத்தை உணர்த்தினார் . படிப்படியாக அவருடைய சொல்லிற்கு அம்மக்கள் கீழ்ப்படிந்தனர் . முதன் முறையாக ஒல்சனை அம்பெய்து கொல்ல முயன்ற வாலிபன் கொராய்ரா மனந்திரும்பி கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டான் . அவனை கொலம்பியா நாட்டிற்குத் தன்னுடன் அழைத்துச் சென்று , அங்குள்ள கிறிஸ்தவர்களிடம் பல உதவிகளைப் பெற்று ஒரு மோட்டார் படகுடன் பல பொருட்கள் , மருந்துகள் , உபகரணங்களுடன் திரும்பினார் .
அந்த இளைஞனுக்கு வேதத்தை இன்னும் ஆழமாகக் கற்றுக் கொடுத்ததோடு மருந்துகளைப் பயன்படுத்த , ஊசிபோட , இயந்திரங் களை இயக்கவும் கற்றுக்கொடுத்தார் .
கொராய்ராவைத் தொடர்ந்து ஏராளமான மோடிலோன் மக்கள் கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளத் தொடங்கினர் . ஒல்சனின் 28 ஆண்டுகாலப் பணிகளின் மூலம் 10 இடங்களில் சுகாதார நிலையங்களும் , 15 வேளாண்மைத் துறை மையங்களும் , 8 இடங்களில் விளைபொருள் விற்பனைச் சந்தைகளும் , 12 பள்ளிகளும் , பல ஆலயங்களும் உருவாகின .
ஆண்டவர் மீது இருந்த விசுவாசமும் , அவருக்குக் கீழ்ப்படிதலும் ஒல்சனை ஒரு சாதனையாளனாக மாற்றியது . அர்ப்பணமிருந்தால் நீங்களும் தேவனால் வல்லமையாய்ப் பயன் படுத்தப்பட முடியும் .
கிறிஸ்துவை நான் நேசிக்கத் துவங்கியபோதே அருட்பணி செய்யவேண்டும் என்பதைத் தவிர் மற்றவை அனைத்தும் இரண்டாம் பட்சமாக ஆகிவிட்டன என்று வெலன் குறிப்பிட்டுள்ளார் .
ஹலன் ரோஸ்னியர் 1925 - ம் ஆண்டு ஹெர்ட்போர்ட்வியரில் முபா ஹெஸ்விபரி என்ற இடத்தில் பிறந்தார் . கேம்ப்ரிட்ஜ் * பல்கலைக் கழகத்தில் படித்து வந்த போது , மெய்யான விசுவாசம் கொண்ட சில மாணவிகளின் அற்புதமான சாட்சியின் வாழ்க்கை இவரைச் சிந்திக்கும்படி செய்தது . இருபது வயதான இவர் தனது போலியான வாழ்க்கையை எண்ணிப் பார்த்து மனம் கலங்கினார் . தானும் மெய்யான சமாதானத்தைப் பெற வேண்டுமென்ற வாஞ்சையால் , கிறிஸ்மஸ் விடுமுறையின் போது , வேறெதிலும் அதிகக் கவனம் செலுத்தாது ஒவ்வொரு நாளும் வேதாகமத்தைக் கவனமாகப் படிக்கத் துவங்கினார் . இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மைச் சுத்திகரிக்கும் . என்ற வசனம் அவரது இருதயத்தைத் தொட்டன .
இவர் மனந்திரும்பி , தனது மாய்மாலமான வாழ்க்கையை அறிக்கையிட்டு , கிறிஸ் துவைத் தன் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டார் .
மீஷனெரியாகச் செல்ல வாஞ்சை
கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட ஹெலன் காலப்போக்கில் தான் ஒரு மிஷனெரி ஆக வேண்டுமென்ற வாஞ்சையைப் பெற்றார் . கிறிஸ்துவை நான் நேசிக்கத் துவங்கிய போதே அருட்பணி செய்ய வேண்டும் என்பதைத் தவிர மற்றவை அனைத்தும் இரண்டாம் பட்சமாக ஆகிவிட்டன என்று ஹெலன் குறிப்பிட்டுள்ளார் .
மருத்துவப் பயிற்சி பெற்றார்
ஹெலன் தனது மிஷனெரி பாரத்தை தன் தகப்பனாரிடம் தெரிவித்தபோது , அவர் அதிர்ச்சியடைந்தார் . தன்னுடைய மகள் ஒரு மருத்துவராக வேண்டும் என்பதே அவருடைய விருப்பமாக இருந்தது . தந்தையின் விருப்பத்தைத் தட்டிக்கழிக்க ஹெலன் விரும்பவில்லை , எனவே அவர் மருத்துவப் பயிற்சி பெற்றாலும் , மருத்துவ அருட்பணியாளராக ஆண்டவருக்கு ஊழியம் செய்ய வேண்டுமென்று தீர்மானித்தார் . ஜெபத்தில் காத்திருந்த அவர் அதுவே தன்னைக் குறித்த தேவனுடைய சித்தம் என்பதைத் திட்டமாக உணர்ந்தார் .
நியூஹாம் கல்லூரியில் படித்து , 1951 ம் ஆண்டு , தனது 21 - ம் வயதில் மருத்துவத்தில் பட்டம் பெற்றார் . உடனடியாக ஆப்பிரிக்க அருட்பணி மையத்துக்கு விண்ணப்பம் அனுப்பி னார் . ( தற்போது இந்த மையம் உலகளாவிய நற்செய்தி அற நிலையம் என்ற பெயரில் உலகமெங்கும் அருட்பணி அமைப்புகளை உருவாக்கி வருகிறது ) .
ஆப்பிரிக்காவுக்குச் சென்றார்
ஆப்பிரிக்க அருட்பணி மையம் இவரை காங்கோ நாட்டில் இபாம்பி என்ற இடத்துக்குச் செல்லும்படிச் சொன்னது . முன் பின் தெரியாத இடமாயிற்றே அவர்களது மொழி தெரியாதே என்பொம் எண்ணித் தயங்காமல் , தன்னை முழுவதுமாகத் தேவனுடையகரங்களில் ஒப்பு கொடுத்து , விசத்தோடு புறப்பட்டார் தனது இருபத்தெட்டாவது வயதில் ஆப்ரிக்கா சென்ற டாக்டர் ஹேயன் பொப்பியில் ஒரு சிறிய மருத்துவ மனையை இயக்கினார் .
அவருக்கு உதவியாக ஒருவருமேயில்லை . மொழி பிரச்சனையும் அவருக்குப் பெரிய இடையூராகக இருந்தது . போது மான மருந்துகளும் கிடைக்கவில்லை இல்வளவு பிரச்சனைகளும் அவருடைய ஆவிக்குரிய வளர்ச்சிக்கு துண்டு கோலாக அமைந்து விட்டன . ஹெலன் இன்னும் அதிகமாகத் தேவனைச் சார்ந்து செயல்படத் துவங் கினார் . தன்னிடம் சிகிச்சைக்காக வந்தவர்களிடம் கிறிஸ்துவைப் பற்றியும் அவர் அருளும் ஆயிக்குரிய குணமாகுதலைப் பற்றியும் ஜெபத்தோடு எடுத்துக் கூறினார் . அதுவரை நற்செய்தியைக் குறித்துக் கேள்விப்பட்டிராத பலர் கிறிஸ்துவை அறிந்து கொள்ள தேவன் கிருபை செய்தார் ஹெலன் தனது ஊழியத்தைத் துவக்கி ஆறுமாதம் கழித்து பதினாறு வயதான ஜான் பாக்காமா , தனக்கு மருத்துவப் பயிற்சியாக்கும்படி ஹெலனிடம் கேட்டுக்கொண்டார் .
அந்த இளைஞனின் வாஞ்சையினால் உள்ளத்தில் தொடப்பட்ட ஹெலன் , மேலும் பல உள்நாட்டுவாசிகளுக்குப் பயிற்சி கொடுத்தால் என்ன ? என்று சிந்திக்கத் துவங்கினார் . இதற்கு வசதியாக உள்ளூர்வாசிகளின் தாய்மொழியாகிய ஸ்வாஹிலி மொழியை , ஜாண் மங்காடியா மூலம் தொலன் கற்றுக் கொண்டார் . உள்ளூர் மொழியை நன்றாகப் பேச கற்றுக் கொண்ட ஹெலன் பயிற்சி பெற்ற உள்ளூர்வாசிகளின் துணையோடு 32 படுக்கைகள் கொண்ட ஒரு மருத்துவமனையையும் கட்டி முடித்தார் . வசதியற்ற காட்டின் நடுவே 5 துணை செவிலியர்களுடன் அமைக்கப்பட்ட இந்த மருத்துவமனை , ஒரு பெரிய சாதனையே , தொடர்ந்து ஐந்தாண்டுகள் காங்கோ நாட்டில் கடுமையாக உழைத்து வந்த ஹெலன் சரீரப்பிரகாரமாசகத் தளர்ந்து போனார் . எனவே ஓய்விற்காகவும் , உயர் படிப்பிற்காகவும் தாய்நாடு சென்றார் .
இரண்டாண்டுகள் இங்கிலாந்தில் தங்கிய ஜெஹலன் அறுவைச் சிகிச்சை செய்வதில் மேற்பட்ட படிப்பையும் பயிற்சியையும் சிறப்பாக முடிந்தார் . சரீரப் பிரகாரமாகவும் , ஆவிக்குரிய ரீதியாகவும் புத்துணர்யைப் பெற்றிருந்த டாக்டர் ஹெலன் 1960ம் ஆண்டின் மத்தியில் ஆப்பிரிக்கா திரும்ப எண்ணியபோது காங்கோ நாட்டின் நிலைமை மிகவும் மோசமாகி விட்டிருந்தது . நீண்ட காலமாகப் பெல்ஜியம் நாட்டுக்கு அடிமைப்பட்டுக் கிடந்த மக்கள் தங்கள் விடுதலையை எதிர்பார்த்துக் காத்திருந்த வேளை அது . காங்கோ நாட்டில் ஏற்பட்ட கலகங்களுக்கும் , வன்முறைகளுக்கும் தப்பி பிழைக் கும்படி வெள்ளைக்காரர்கள் நாட்டைவிட்டு வேகமாக வெளியேறிக் கொண்டிருந்தார்கள் . இப்படிப் பட்ட வேளையிலும் துணிவோடு அந்த நாட்டுக்குச் சென்றார் .
கொடுமைகளுக்கு ஆளானார்
டாக்டர் ஹெலன் இவர் சென்ற 3 வாரத்துக்குள் உள்நாட்டு போர் , காங்கோவில் துவங்கியது . வெள்ளையர் மீதான வன்முறை அதிகரித்தது . மிஷனெரி பணித்தளங்கள் மூடப்பட்டன . மிஷனெரிகளைத் திரும்பி வரும்படி அருட்பணி மையங்கள் கட்டளை யிட்டன . ஆனால் ஹெலன் திரும்பிச் செல்ல மறுத்து விட்டார் . அடுத்த நான்கு ஆண்டுகள் புரட்சி படை வீரர்களின் பல சித்திரவதைகளை விசுவாசத்தோடு சகித்துக் கொண்டார் . இவர் தாக்கப்பட்டார் . அடிக்கப்பட்டார் . அவமானப்படுத்தப்பட்டார் . இறுதியாக சிம்பா படைவீரர்களால் கைது செய்யப்பட்டார் .
ஐந்து மாதங்கள் ஹெலன் சிறை வைக்கப்பட்டார் . என்றாலும் கிறிஸ்துவைப் பற்றிக் கூறி , தன்னுடைய சமாதானத்தை அவர்களோடு பகிர்ந்து கொண்டார் .
தன்னைப் போன்று சரீரப்பிரகாரமாகத் தாக்குதலுக் குள்ளாகி இருந்த மற்ற பெண்களுக்கு ஆறுதலான வேத வசனங்களைக் கூறி கிறிஸ்துவுக்குள் வழி நடத்தினார் . கொடுமைகளுக்கு ஆளான அந்த கைதிகளின் முகாமில் துதிப்பாடல்கள் எழுந்தன .
தன்னைப் பிடித்துச் சித்திரவதை செய்தவர்களின் மொழியை ஹெலன் அறிந்திருந்த படியால் , அவர்களிடம் கிறிஸ்துவைப் பற்றித் துணிவோடு எடுத் துக் கூறினார் . முன்னர் எப்போதும் இல்லாத வகையில் இந்தக் கொடூரமான சூழ்நிலையில்தான் தற்செய்தியைக் கூறுவதற்கான வாய்ப்பை அதிக மாகப் பெற்றுள்ளேன் என்று கூறுகிறார் .
விடுவிக்கப்பட்டார்
1964 - ம் ஆண்டு இறுதியில் சர்வ தேசப்படையினர் ஹெலனை சிறையி லிருந்து விடுவித்தனர் . புத்தாண்டு தினத்தன்று ஹெலன் விமானம் மூலம் இங்கிலாந்து திரும்பி வந்தார் .
சரீரத்தில் வன்முறையினால் அதிகம் பாதிக்கப்பட்ட ஹெலன் , மறுபடியும் ஊழியம் செய்ய காங்கோவுக்கு செல்லத் தயங்கினார் . ஆனால் ஜாண் மங்காடி , மாவிடமிருந்து வந்த ஒரு கடிதம் அவருடைய முடிவை மாற்றியது .
காங்கோ நாட்டுக்குத் திரும்பினார்
ஹெலன் உருவாக்கின மருத்துவ மனை மிகவும் மோசமான நிலை யில் இருக்கிறது என்றும் கவனிப் பாரில்லாமல் நோயாளிகள் தவிக்கிறார்கள் என்றும் உருக்கமான கடிதமொன்றை ஜாண் மங்காடிமா எழுதி அனுப்பியிருந்தார் . கடிதத்தைப் படித்த ஹெலன் , அங்கே திரும்பிச் சென்று நிலைமையைச் சீர் செய்ய வேண்டும் என்ற பாரத்தைப் பெற்றார் . தன்னை விசுவாசத்தில் பலப்படுத்தும்படி ஹெலன் தேவனுடைய உதவியை நாடினார் .
நற்செய்திப் பணி மருத்துவ மையம்
தனது 41 - வது வயதில் 1966ம் ஆண்டு ஹெலன் மறுபடியுமாக காங்கோ நாட்டுக்குத் திரும்பினார் . டாக்டர் படிப்பை முடித் திருந்த ஜாண் மங்காடியா , பருத்துவமனையின் முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டிருந்ததைக் கண்டு ஹெலன் மகிழ்ச்சியடைந்தார் . விசுவாசிகள் , தங்கள் உடைமைகள் அனைத்தையும் கலவரங்களின் போது , பறி கொடுத்திருந்தாலும் , தங்கள் விசுவாசத்தில் பின்வாங்கவில்லை என்பதைக் கண்டு தேவனைத் துதித் தார் , இவைகள் அவரை மறுபடியும் உற்சாகத்தோடு செயல்பட வைத்தது . ஒரு நற்செய்திப் பணி மருத்துவ மையத்தை உருவாக்கினார் . இந்த மையத்தில் ஒரு மருத்துவப் பயிற்சிக் கல்லூரி , அருட்பணி மருத்துவர்கள் வந்து செல்ல ஒரு விமான ஓடுபாதை மற்றும் வட கிழக்கு காங்கோ காட்டுப் பகுதியில் நான்கு சிறு மருத்துவமனைகள் ஆகியவற்றை அமைத்தார் . பல்வேறு அருட்பணி அமைப்புகளின் மருத்துவ முயற்சி களை ஒருங்கிணைப்பதும் , பயிற்சிக் கல்லூரிக்கு அரசு அதிகாரத்தைப் பெறுவதுமே ஹெலனின் நோக்கமாக இருந்தது . விசுவாசத்துடன் செயல்பட்டார் . பத்தாண்டுகளுக்குள்ளாக ஹெலனின் 24 ஆண்டு காலக்கனவுகள் நிறைவேறும்படி தேவன் கிருபை செய்தார் . நாடெங்கும் ஒன்றோடொன்று தொடர்பு கொண்ட சிறு மருத்துவமனைகள் நிறுவப்பட்டன .
1971 - ம் ஆண்டு டாக்டர் ஜாண் மங்காடிமாவை மருத்துவமனையின் இயக்குநராக ஹெலன் நியமித்தார் . இவ்வாறு உள்நாட்டு விசுவாசிக்கு தலைமைப் பொறுப்பைக் கொடுத்தார் . அதே நாள் பயிற்சிக் கல்லூரிக்கு அரசு அங்கிகாரமும் கிடைத்தது . அதற்காக தேவனைத் துதித்தார் . இரண்டு ஆண்டுகள் கழித்து டாக்டர் ஹெலன் தனது 48 - வது வயதில் காங்கோ நாட்டிலிருந்து விடைபெற்றார் .
அறைகூவல் விடுத்து வருகிறார்
காங்கோ நாட்டை விட்டுவந்த போதிலும் ஹெலன் தனது அருட்பணி ஊழியத்தைக் கைவிடவில்லை . உலக அருட்பணி அமைப்பின் பிரதிநிதியாக உலகெங்கும் சென்று விசவாசமுள்ள வாலிபர்களும் , இளம் பெண்களும் அருட்பணி செய்ய முன் வர வேண்டுமென்று அறைகூவல் விடுத்து வருகிறார் .
சுவிசேஷத்தை மற்றவர்களும் அறியச் செய்வதற் காகவே நாம் இந்தக் குறுகிய கால வாழ்க்கையைப் பெற்றுள்ளோம் என்பதே அவரது அறைகூவல் . மருத்துவப் பட்டதாரியான இவர் தன் வாழ்வை கிறிஸ்துவை அறியாதோருக்காக அர்ப்பணித்து ஆற்றிய பணியும் , நம் காலத்தில் வாழும் இவரதுக் வாழ்வும் நமக்குப் மாபெரும் சவால் அல்லவா ?
சருவ லோகாதிபா, நமஸ்காரம்! சருவ சிருஷ்டிகனே, நமஸ்காரம்! தரை, கடல், உயிர், வான் சகலமும் படைத்த தயாபர பிதாவே, நமஸ்காரம். கிறிஸ்தவர்கள் அதிகமாய் விரும்பி பாடும் இந்த துதிப் பாடலை எழுதிய அருள் திரு. மகாராஜன் வேதமாணிக்கம். இவர் கன்னியாகுமரி மாவட்டத்தின் முதல் கிறிஸ்தவர் எனும் பெருமைக்குரியவர். வேதமாணிக்கம் தேசிகரை அறியாத மக்கள் கன்னியாகுமரி மாவட்டத்திலே இல்லை எனலாம்.
இந்த மாவட்டம் 18ம் நூற்றாண்டில் திருவிதாங்கூர் மாகாணம் என்று அழைக்கப்பட்டது. அந்த நாட்களில் கல்வியறிவு பெற்றிராத மக்கள் எண்ணிக்கைக்கு அடங்கா கடவுள்களை வழிபட்டு வந்தனர். கீழ் ஜாதி பெண்கள் மேலாடை அணியக் கூடாது. கணவர் இறந்தால் மனைவிகளும் தீயில் விழுந்து மரிக்க வேண்டும் போன்ற பல சிக்கலான சமூக அமைப்புகளையும், ஜாதிச்சடங்குகளாலும் நிறைந்து காணப்பட்டது இந்த குமரி மாவட்டம். 19ம் நூற்றாண்டில் கிறிஸ்தவம் கன்னியாகுமரி பகுதிக்கு வந்த போதே சிக்கலான சமூக அமைப்புகள் சுமூகமான விடுதலையைக் கண்டது. நாகரீகமும் நலமான வாழ்வு முறையும் மக்களிடம் துளிர்விட தொடங்கியது. குட்டி தெய்வங்களுக்கு முன் கூனிக்குறுகிக் கிடந்த மக்கள், கிறிஸ்து இயேசுவுக்குள் தலை நிமிர ஆரம்பித்தார்கள். பெண்கள் மேலாடை அணிய அனுமதிக்கப்பட்டனர்.
பல கிறிஸ்தவ தேவ ஆலயங்கள் எழும்பினது. மறைதிரு. W.T. றிங்கல்தௌபே மற்றும் மறைத்திரு சார்லஸ் மீட் போன்ற மிஷனரிகளின் வருகையால் பல்வேறு பள்ளிகளும், கல்லூரிகளும் தோன்றின. ஒரு காலத்தில் படிப்பறிவு பெற்றிராத குமரி மாவட்டம் இன்றைக்கு 87.6 % படிப்பறிவு பெற்ற மக்களால் நிரம்பியுள்ளது. இத்தகைய மாபெரும் சமூக உயர்வுக்கு காரணமாய் அமைந்த வேதமாணிக்கம் தேசிகரைப் பற்றி கிறிஸ்தவர்களாகிய நாம் நிச்சயம் அறிந்திருக்க வேண்டும். 1750-ம் ஆண்டுக்கு பின், மதுரநாயகம்-தேவாயி தம்பதியினருக்கு இரண்டாவது மகனாக மயிலாடி என்ற ஊரில் பிறந்தார் வேதமாணிக்கம்.
ஐந்து வயதிலேயே தந்தையை இழந்த வேதமாணிக்கத்தை அவரது தாயார் தெய்வ பக்தியில் வளர்த்தார். சிறுவயதிலேயே சிவ பக்தராகவும், உண்மை, ஆன்மிகம் ஆகியவற்றை தேடும் உயர்ந்த நாட்டம் உடையவராகவும் இருந்தார். 1799ம் ஆண்டு சிதம்பரம் என்ற இடத்தை நோக்கி புண்ணிய பயணம் மேற்கொண்டார். கடவுளை சந்தித்தே ஆகவேண்டும் என்ற நோக்கத்துடன் சென்றார், அங்கு நடைபெற்ற வழிபாடுகள், அவருக்கு வெறுப்பையும், ஏமாற்றத்தையுமே தந்தன. இதனால் மனமுடைந்த அவர் ஓர் தூணில் சாய்ந்து தூங்கிவிட்டார். அப்பொழுது வெண்ணங்கி தரித்த ஒரு தூதன் கனவில் தோன்றி, “நீ செல்ல வேண்டிய இடம் வேறு, புறப்படு, வழிகாட்டுகிறேன்” என்று கூற, அந்த சத்தத்திற்கு கீழ்படிந்து எழுந்து புறப்பட்டார். தஞ்சாவூர் வந்த பொழுது “கோலாப் ஐயர்” மூலமாக மெய் தெய்வமாகிய இயேசுவைப் பற்றி அறிந்து கொண்டார். கனவில் தோன்றிய தூதன் தன்னை சரியான வழியில் நடத்தியிருப்பதை எண்ணி வியப்படைந்தார். சத்தியத்தை அறிந்த அவர் காலம் தாழ்த்தாமல் “கோலாப் ஐயர்” மூலமாக ஞானஸ்நானம் பெற்று புதிய மனிதனானார். 20-வது வயதில், மத்திகோடு சபையைச் சார்ந்த இராகேலை மணம்புரிந்தார் வேதமாணிக்கம்.
தனது உயர் படிப்பை முடித்து அரசு அதிகாரியாக வேலையிலமர்ந்தார். பக்தி, விசுவாசம், மற்றும் சிறப்பாக, ஜெபம் ஆகியவற்றில் அதிக வாஞ்சையுள்ளவராக விளங்கினார். உலகப் பொருளுக்கோ, பணத்திற்கோ மனதில் இடம் கொடாது, மண்தரை போட்ட, ஓலை வேய்ந்த குடிசை வீட்டில் வாழ்ந்து வந்தார். ஒரு நாள் ஆங்கிலேயரான அவரது மேலதிகாரி, அவரை நோக்கி, “வேத மாணிக்கம், நீ வேதம் ஒத வேண்டியவன்; இங்கு எப்படி வேலை செய்யலாம்?” என்று கேட்டார். இக்கேள்வி வேதமாணிக்கத்தின் உள்ளத்தில் பதிந்தது. ஆழ்ந்து சிந்தித்த வேதமாணிக்கம், நற்செய்திப் பணியில் கொண்ட ஆர்வத்தால், உடனே அரசு வேலையை இராஜிநாமா செய்து விட்டு, மிஷனில் ஆசிரியராகவும், பின்னர் மிஷன் பள்ளிகளின் ஆய்வாளராகவும் பணியாற்றினார். சிறிது காலம் மத்திகோடு சபை உபதேசியராக ஊழியம் செய்தபின், 1912-ம் ஆண்டு கல்லுக்கூட்டம் திருச்சபைப் போதகரானார்.
பல பாடல்களை இயற்றி, இன்னிசையுடன் நற்செய்தி அளித்து வந்தார். தன் உறவினர்கள் அனைவருக்கும் கிறிஸ்துவைப் பற்றி அறிவித்து, அவர்களையும் ஞானஸ்நானம் பெற செய்தார். தன்னை ஒறுத்து ஊழியம் செய்த போதகர் வேதமாணிக்கத்தின் ஆலய ஆராதனையில், மக்கள் திரள் கூட்டமாகப் பங்கேற்றனர். அவர் வாலிபர்களை நல்வழிப் படுத்த “சுவிசேஷப் படையெழுச்சி,” என்ற திறந்த வெளிக் கூட்டங்களை நடத்தினார். ஞாயிறு தோறும் மாலை நேரத்தில், பெண்களுக்குச் சிறப்பு வேதப் பயிற்சிக் கூட்டங்களை, வீடுகளில் நடத்தினார். கண்ணியமும், நேர்மையும் நிறைந்த போதகர் வேதமாணிக்கம், ஊர்ப் பிரச்சனைகளைத் தீர்க்கும் ஊர்க்கூட்ட நடுவராகவும் சமுதாயப் பணி செய்தார். ஆண்டவரின் ஊழியப் பாதையில் தன்னுடையது அனைத்தையும் அர்ப்பணம் செய்த வேதமாணிக்கத்தின் குடும்பத்தை ஆண்டவர் ஆசீர்வதித்தார்.
அவரது மூன்று பையன்களுக்கும், மூன்று பெண்பிள்ளைகளுக்கும், தேவன் நல்ல படிப்பு, வேலை, மற்றும் இசை ஞானத்தைத் தந்தார். வயலின் தான் அவர்களின் குடும்ப வாத்தியம். அதில் அவர்கள் அனைவரும் மேதைகளாக விளங்கினார்கள். எனவே, குடும்பமாகப் பல இடங்களுக்குச் சென்று, நற்செய்திக் கூட்டங்கள் மூலமாக கிறிஸ்துவை அறிவித்து வந்தனர். மேலும் ஜெர்மானிய மிஷனரி W.T. றிங்கல்தௌபே அவர்களை கன்னியாகுமரிக்கு அழைத்து கிறிஸ்துவ பணியை செய்ய உருந்துனையாக இருந்தார். பின்னர் இங்கிலாந்து மிஷனரி சார்லஸ் மீட் என்பவருக்கும் ஊழியத்தில் துனையாக இருந்தார்.
1827-ம் ஆண்டு, அருள்திரு. வேதமாணிக்கம் மார்த்தாண்டத்திலுள்ள தனது மனைவியின் தங்கை வீட்டிற்குச் செல்ல பஸ்ஸில் ஏறும்போது தவறி விழுந்ததில், பேருந்தின் சக்கரம் அவரது காலில் ஏறிக் காயம் ஏற்பட்டது. அத்துடன் பயணத்தைத் தொடர்ந்த அவர், மார்த்தாண்டத்தில், மூன்றாம் நாளில் மரணமடைந்தார். அவர் இயற்றிய, “ஆ! இன்ப காலமல்லோ” “ஜீவ வசனம் கூறுவோம்,”என்ற பாடல்களும், திருச்சபைக் கீர்த்தனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. இயேசு தமிழ் மக்களை அதிகம் நேசிக்கின்றார் என்பதற்கு வேதமாணிக்கம் தேசிகருடைய வாழ்க்கை ஓர் சான்றாகும். வேதமாணிக்கம் கர்த்தருடைய சமூகத்தில் இளைப்பாறினாலும் அவர் எழுதிய பாடல்கள் இன்றைக்கும் நம்முடைய இருதயத்தில் தவளுகின்றன. கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்தவர்கள் இன்றைக்கு அதிகளவில் காணப்படுவதற்க்கு வேதமாணிக்கம் தேசிகர் தன்னுடைய வாழ்க்கையை கிறிஸ்துவின் கரத்தில் அர்ப்பணித்தார்.
நீங்களும் வாழ்கையை கர்த்தரிடம் அர்ப்பணித்து, அவருக்கு பிரியமாய் வாழ்ந்தால் உங்களைகொண்டும் கர்த்தர் பெரிய காரியங்களை செய்வார். ஜெபம்: எங்களை அதிகமாய் நேசித்து வழி நடத்தி வரும் இயேசுவே, உம்முடைய கிருபைக்காய் நன்றி. வேதமாணிக்கம் தேசிக்கருக்கு தூதன் மூலம் கனவில் தோன்றி உம்மை வெளிப்படுத்தினது போல எனக்கும் உம்மை வெளிப்படுதினதற்க்காய் நன்றி. நானும் உமக்காய் ஊழியம் செய்து உமக்கு பிரியமாய் வாழுவேன். உமக்காய் சாதிக்க என்னை உமது கரத்தில் தருகிறேன் நல்ல பிதாவே. ஆமேன்..
No comments:
Post a Comment