சீனாவின் தென்மேற்குப் பகுதிக்கு தனது இருபத்திரண்டாவது வயதிலேயே ஊழியம் செய்ய இங்கிலாந்திலிருந்துச் சென்றவர் ஜேம்ஸ் பீரேசர் . உறைபனி தவழும் செங்குத்தான மலைகளையும் , துஷ்ட மிருகங்கள் உலாவும் காடுகளையும் கடந்து லிசு என்ற இனத்தவர் வாழும் சீனாவின் தென் மேற்குப் பகுதிக்கு தனது இருபத்திரண்டாவது வயதிலேயே ஊழியம் செய்ய இங்கிலாந்திலிருந்துச் சென்றவர் ஜேம்ஸ் பிரேசர் .
1886 - ஆம் ஆண்டு லண்டன் மாநகரில் பிறந்த ஜேம்ஸ் ஒரு கிறிஸ்தவ விசுவாசக் குடும்பத்தில் பிறந்து , கிறிஸ்தவ நெறிகளில் வளர்க்கப்பட்டார் .
தன்னுடைய பள்ளிப் படிப்பில் சிறந்து விளங்கிய இவர் , லண்டன் பல்கலைக் கழக மெட்ரிகுலேஷன் தேர்வில் இங்கிலாந்து நாட்டின் சிறந்த மாணவர்களில் ஒருவராகத் தேர்ச்சி பெற்றார் .
லண்டனின் இம்பீரியல் கல்லூரியில் 1906 ஆம் ஆண்டு பொறியியல் பட்டப்படிப்பில் சேர்ந்தார் . கல்லூரி நாட்களில் பக்திக்கடுத்த காரியங்களில் அதிக சிரத்தை காட்டியதோடு ஓய்வுநாள் பள்ளி ஊழியத்திலும் ஈடுபட்டு வந்தார் .
தான் ஒரு முழுநேர ஊழியனாகச் செல்லவேண்டும் என்பதைப் பற்றி அவர் ஒருநாளும் நினைத்துப் பார்க்கவில்லை . தான் ஒரு தலை சிறந்த பொறியியல் வல்லுநராக ஆக வேண்டு மென்ற வாஞ்சையே அவரது உள்ளத்தில் நிறைந்திருந்தது .
ஆனால் அவரது பக்தியுள்ள தாயாரான ஆனி பிரேசர் தனது பிள்ளைகளில் ஒருவராவது மிஷனெரியாக மாற வேண்டு மென்று ஊக்கமாக ஜெபித்து வந்தார் . ஜேம்ஸ் தான் எதிர்பார்த்தது போலவே தனிச்சிறப்பான வகையில் பொறியியல் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றார் .
அப்போது அவர் வாசித்த ஒரு சிறு புத்தகம் அவருடைய வாழ்க்கைப் பாதையையே மாற்றி அமைத்துவிட்டது .
அப்படிச் சொல்லாதீர்கள் " என்று தலைப்பிட்ட அந்த சிறு புத்தகம் சீனாவில் அருட் பணியாளராக ஊழியம் செய்த ஒருவரால் மிஷனெரி ஊழியத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி எழுதப்பட்டி ருந்தது .
இருபதாம் நூற்றாண்டு துவங்கிவிட்ட பின்னரும் இன்னும் உலகத்தில் பெரும்பாலானோர் இரட்சிப்பின் செய்தியைக் கேள்விப்பட மிஷனெரிப்பணி என்பது போதகர்களும் சபைகளும் மட்டுமே கவனிக்க வேண்டியகாரியங்கள் எனறு செலலாதீர்கள் என்று அப்புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தார் . -
ஜேம்ஸ் இத்தகைய மனோ பாவத்தைத்தான் கொண்டிருக்தார் . எனவே அப்புத்தகத்தை வாசித்தது முதல் அவர் அருட்பணிபயணங்களைப் பற்றி சிந்திக்கத் துவங்கினார் . மிஷனெரிகளின் வாழ்க்கை வரலாறுகனை வாசிக்கத் துவங்கினார் . சீன உள் நாட்டு அருட்பணி சங்கத்தை நிறுவி , சீனா வில் வல்லமையாக ஊழியம் செய்த ஹட்ரன் டெய்லரின் வாழ்க்கை வரலாறு அவர் உள்ளத்தை அதிகம் தொட்டது .
1976 ஆம் ஆண்டு ஒரு கிறிஸ்தவப் பயிற்சி முகாமில் பி . டி . ஸ்டட்டைச் சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றார் . வாழியத் துக்காகத் தன்னை தேவன் அழைக்கிறார் என்பதை ஜேம்ஸ் பரியாகமாக உணர்ந்தார் .
ஒரு நாள் தனது வீட்டின் மேலறையில் ஜெபிக்கும்போது சீனா நாட்டு மக்களைப்பற்றிய அதிக பாரம் அழுத்தவே தன்னை ஊழியத்துக்கு அர்ப்பணித்தார் . ஜெபித்து முடித்து தன் தாயின் அருகே வந்து நான் முழுநேர ஊழியத்துக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறேன் என்று உற்சாகத்தோடு கூறினார் .
முழங்காற்படியிட்ட ஆனி பிரேசர் தனது நீண்டகால ஜெபம் கேட்கப்பட்டதற்காக தேவனைத் துதித்தார் .
அதுமுதல் ஊழியத்திற்காகத் தன்னை ஆயத்தப் படுத்திக் கொள்ளும் பணியில் ஈடுபட்ட அவர் தன்னைச் சுற்றி வாழும் மக்களுக்கு இயேசுவைச் சொல்லும் ஆத்தும ஆதாயப்பணியில் ஈடுபடத் துவங்கினார் .
ஜேம்ஸ் பிரேசர் ஊழியத்துக்காகப் புறப்படும் நாளும் வந்தது . ஜேம்சை வழியனுப்பி வைக்கத் தாயாரான ஆனிபிரேசரும் , சகோதரியான மில்லி சண்டும் வந்திருந்தார்கள் . அவர்கள் மறுபடியும் ஒருவரையொருவர் சந்திக்க பல வருடங்கள் ஆகலாம் என்பதையும் , ஏன் அவர்கள் எழுதும் அன்பின் கடிதங்கள் வந்து சேர பல மாதங்கள் ஆகும் என்பதையும் அறிந்திருந்தனர் . என்றாலும் ஆனி பிரேசர் விசுவாசத் தோடு தன் மகனைத் தொலைதூர ஊழியத்துக்கு அனுப்பிவைத்தார் . அன்பான ஜிம் , இன்று நான் லண்டன் நகரிலேயே அதிக மகிழ்ச்சியான பெண்ணாக இருக்கிறேன் என்று ஆனிபிரேசர் எழுதிக் கொடுத்த காகிதத்தை ஜேம்ஸ் தன் சட்டைப்பையில் பத்திரப்படுத்திக் கொண்டார் .
சீன நாட்டின் தென்மேற்குப் பகுதியில் பர்மிய நாட்டு எல்லைக்கு அருகேயிருந்த டெங்குவே என்ற சிறிய பட்டணத்தில் அவரது ஊழியப் பயணம் ஆரம்ப மானது . அங்கு முதல் ஆறுமாதம் சீன மொழியைக் கற்றார் . இந்தப் பகுதியில் சீனர்கள் மட்டுமின்றி ஹான் , கக்கின் , லிசு போன்ற பழங்குடி இனத்தவர்களும் வாழ்ந்து வந்தனர் . எளிய ஆடையுடன் வடக்கே மலைப்பகுதியிலிருந்து ஆறு நாட்கள் பயணம் செய்து டெங்குவே வந்த ஒரு நான்கு பேர் தங்கள் மலைப் பகுதியில் வந்து ஊழியம் செய்ய அழைத்தனர் .
சீன மொழியில் பயிற்சி பெற்று பிரசங்கம் செய்யும் அளவு தேர்ச்சி பெற்ற நிலையில் லிசு இனத்தவரை நோக்கி தனது பயணத்தைத் தொடர்ந்தார் . வாய்ப்பு வரட்டும் என்று காத்திருப்பது சாத்தானின் சோதனைகளில் ஒன்று என்றும் ஊழியத்துக்கான வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கும்படி வேதாகமம் ஒருபோதும் நமக்குப் போதிக்கவில்லை . கைக்குச் கிட்டும் காரியங்களில் ஊழியம் செய்யும்படியே கட்டளையிடுகிறது என்று தனது டைரியில் எழுதி வைத்தார் ஜேம்ஸ் பிரேசர் ,லிசு மக்களை நோக்கிப் பயணத்தைத் துவங்கும்போது ஜேம்சுக்கு வயது இருபத்திரண்டு மட்டுமே . வெகு நாள் பயணத்திற்குப் பிறகு பாவோஷானுக்கு அருகேயுள்ள மலைத் தொடர்கள் உள்ள பகுதியை வந்தடைந்தார் . அப்பகுதியில் இலட்சத் துக்கும் மேற்பட்ட லிசு பழங்குடியினர் வசித்து வந்தனர் . இவர்கள் நற் செய்தியை அதுவரை கேள்விப்பட்ட தில்லை . எந்த மிஷனெரியும் அங்கு சென்று ஊழியம் செய்ததும் கிடையாது .
இந்த லிசு பழங்குடியினர் மலைச் சரிவுகளில் வசித்து வந்தபடியால் சீனர்கள் இவர்களைக் குரங்கு மனிதர்கள் என்றே அழைத்தனர் . ஆனால் இவர்களே சீனாவின் பூர்வக்குடிகள் என்று வரலாறு தெரிவிக்கிறது .
பின்னர் மங்கோலிய ஆக்கிரமிப்பின்போது சீனாவின் தென்மேற்குப் பகுதியிலிருக்கும் மலைப் பகுதிக ளுக்கு இவர்கள் விரட்டப்பட்டுவிட்டனர் . ஜேம்ஸ் முதலாவது இவர்களது மொழியைக் கற்க ஆரம்பித்ததோடு தாய் மொழியில் அவர்களுக்கு சுவிசேஷத்தைச் சொல்ல ஆரம்பித்தார் .
தனது தாயாருக்கு எழுதிய கடிதமொன்றில் தாய் நாட்டிலுள்ள கிறிஸ்தவர்கள் கூட தங்கள் பரிந்துரை ஜெபங்களின் மூலம் மிஷனெரி பணியில் ஈடுபட முடியும் எனவும் விலைமதிப்புள்ள ஆத்துமாக்களை ஆதாயப்படுத்தும் ஊழியத்தில் தேவன் தன்னையும் வல்லமையாகப் பயன்படுத்த ஜெபிக்கும்படியும் அவர் எழுதி இருந்தார் .
1913 - ஆம் ஆண்டு ஏப்ரல் 20ஆம் நாள் டெங்குவே நீர்வீழ்ச்சிக்கு அருகே தனது முதல் ஞானஸ்நான ஆராதனையை நடத்தினார் அவர் . அதில் தனது சமையல்காரரோடு கூட ஒரு ஆசிரியரும் , தண்ணீர் சுமப்பவரான டாஸ் என்பவரும் ஞானஸ்நானம் பெற்றார்கள் .
பிரேசர் தனது உடைப் பழக்கத்திலும் லிசு பழங்குடி களின் ஆடை அலங்காரத்தையே பின்பற்றினார் . இப்போது அவரால் லிசு மொழியில் சரளமாகப் பேச முடிந்தது . சுவிசேஷத்தால் கவரப்பட்ட லிசு இனத்தவர் தாங்கள் அம்மட்டும் வணங்கி வந்த பேய் மேடையைக் கொளுத்திவிட்டு , இயேசுவை ஏற்றுக்கொண்டனர் .
பிரேசர் அவர்களுடைய உணவிலும் , பழக்கவழக்கங்களிலும் பங்குகொண்டு தன்னுடைய நட்புறவை பலப் படுத்திக்கொண்டார் . மழை பெய்யும் வேளைகளி லும் , குளிர்ந்த இரவுகளிலும் கழுதைகள் , பன்றிகள் கோழிகள் அனைத்தும் வீட்டுக்குள்ளேதான் இருக்கும்
இவற்றுக்கு நடுவே அமர்ந்துதான் உணவை சாப்பிடவேண்டும் .
பிரேசர் ஒருபோதும் அம்மக்களை இதற்காக விமரிசித்த தில்லை . எனக்கு லிசு விசுவாசிகளைக் கொடுங்கள் . நான் பன்றிக் கொட் டகையில்கூட மெய்யாகவே மகிழ்ச்சியாக இருப்பேன் என்று பிரேசர் ஒரு சமயம் கூறினார் . பிரேசர் பணிமூலம் 129 குடும் பங்களைச் சேர்ந்த 600 - க்கும் மேற் பட்டவர்கள் ஆதாயம் பண்ணப் பட்டனர் . மாட்டில்ட் ஹில் என்ற இடத்தில் சிற்றாலயமும் கட்டப்பட்டது . லிசு மொழியில் வேதத்தையும் மொழி பெயர்க்க ஆரம்பித்து மாற்கு , யோவான் சுவிசேஷத்தை முதலில் மொழிபெயர்த்து முடித்தார் '
பிரேசர் . பல தன்னார்வ லிசு நற்செய்தியாளர்களை ஏற்படுத்தி , அவர்களும் ஊழியம் செய்ய பயிற்சி கொடுத்தார் . முன்னோடி மிஷனெரி ஊழி யத்தில் மூழ்கியிருந்த ஜேம்ஸ் பிரேசருக்கு தனது மணவாழ் வைப்பற்றி தீவிரமாய் யோசிக்க நேரம் இருக்க வில்லை . தனது 43 வது வயதில் ( 1929 - ஆம் ஆண்டு ) ஊழியத்தம்பதியரான பிராஸ்க்டைமண்ட் தம்பதியினரின் மக ளான ராக்சியை தன் வாழ்க்கைத் துணையாகத் தெரிந்தெடுத்து மணந்து கொண்டார் இவர்கள் குடும்பமாக ஊழியம் செய்தனர் .
கேத்ரின் எய்லின் என்ற இரண்டு பெண் மக்களை தேவன் தந்து ஆசீர்வதித்தார் . தனது பணிமீது பெரும் மதிப்பு வைத்திருந்த ஜேம்ஸ் பிரேசர் எப்படிப்பட்ட அருமையான பணி இது ! நான் வேதாகமமொழி பெயர்ப்புப் பணியையும் , வேதாகமப் போதனை ஊழியத்தையும் நேசிக்கிறேன் என்று தனது தாயா ருக்கு எழுதிய கடிதத்தில் குறிப் பிட்டார் . குக் தம்பதியினருடன் சேர்ந்து , லிசு மொழியில் முழு புதிய ஏற்பாட்டையும் மொழிபெயர்த்து முடித்தார் . திடீரென மலேரியா ஜுரம் கண் டது . ஜேம்ஸ் பிரேசருக்கு அதை அவர் கண்டறிவதற்குள் மலேரியா கிருமிகள் அவரது மூளையைத் தாக்கி இருந்தன தொடர்ந்து இரண்டு நாட்கள் கடுமையான காய்ச்சலினால் கஷ்டப்பட்ட அவர் சுய நினைவிழந்தார் .
1938 ஆம் ஆண்டு செப்டம்பர் 25 - ம் நாள் ஜேம்ஸ் தனது 52 - ம் வயதில் இவ்வுலக ஓட்டத்தை முடித்து தான் ஆசையாக நேசித்த பரமனின் பாதத்தில் இளைப்பாறச் சென்றார் . பாலோஷான் ஆலயத்தில் நடந்த அவரது அடக்க ஆராதனை முழுவதுமாக லிசு மொழியிலேயே நடத்தப்பட்டது . பாலோஷனில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான லிசு பழங்குடிகள் பாடிய துதிப்பாடல்கள் சுற்றிலுமிருந்த மலைகள் பள்ளத்தாக்குகள் எங்கும் எதிரொலித்து ஜேம்ஸ் பிரேசரின் ஊழிய வாழ்க்கையைச் சாட்சிபகர்ந்தன . இவரால் ஆண்டவருக்குள் வழிநடத்தப்பட்ட லிசு இனத்தவர் , பின்னர் புரட்சியாளர்களால் கொடுமைப் படுத்தப்பட்ட வேளையில்கூட தங்கள் திட விசுவாசத்திலிருந்து பின்வாங்கவில்லை . இன்றும் இந்த இனத்தவரில் பலர் மியான்மாரிலும் சீனாவிலும் சாட்சியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள் .
கட்டடம் கட்டும் பொறியியல் பட்டப்படிப்பு முடித்த ஒரு ஜேம்ஸ் பிரேசர் தேவனுக்கு தன்னை அர்ப்பணித்தபோது பாவத்தில் கட்டப்பட்டிருந்த லிசு மக்களை கட்டவிழ்க்க தேவன் பயன்படுத்திய தோடு அம்மக்கள் மத்தியில் தேவ ராஜ்யத்தைக் கட்டியெழுப்பும் சிற்பியாக மாற்றினார் . அவரால் திருப்பப்பட்ட லிசுமொழி வேதாகமம் இன்றும் நிரந்தர ஊழியன் போல் அம்மக்கள் மத்தியில் செயலாற்றிவருகிறது . இன்றைய ஜேம்ரைசர்களுக்கதேவன் எக்கமாயக காத்துக்கொண்டிருக்கிறார் . .
தொழு நோயாளிகளின் ஊழியர் "ஜோசப் டேன்யன்" ஜோசப் டேன்யன் என்பவர் பெல்ஜியம் நாட்டைச் சார்ந்த ஒரு கத்தோலிக்க பாதிரியார். 1873-ம் ஆண்டு ஹவாய் தீவிலுள்ள தொழு நோயாளிகளுக்கு மத்தியில் ஊழியம் செய்வதற்காக, அவர் அனுப்பப்பட்டார். அதிக உற்சாகத்தோடு அங்கு வந்தார். ஒவ்வொரு தொழு நோயாளியிடமும் நட்பை வளர்க்க வேண்டும் என்று எண்ணத்துடன் வந்தார். ஆனால் மக்களோ, அவரை விட்டு விலகினர். அவர் ஒரு சிற்றாலயத்தைக் கட்டினார். அங்கே ஆராதனை நடத்தினார். தன் முழு அன்பையும் தொழு நோயாளிகளிடம் ஊற்றினார்.
ஆனால் அவை எல்லாம் வீணாயிற்று. அவருடைய ஊழியத்திற்கு அளவே இல்லை. 12 வருடங்களாக இவ்வாறு போராடி ஊழியம் செய்தார். ஆனால் ஒன்றும் பயனில்லை. கடைசியாக அவர் அந்த இடத்தை விட்டு வெளியேற தீர்மானித்தார். கப்பல் ஏறுவதற்கு தளத்தில் மன வேதனையோடு நின்றுக் கொண்டிருந்தார். அப்பொழுது அவர் தன்னுடைய உள்ளங்கைகளை உற்றுப் பார்த்தார். அங்கு சில வெள்ளப் புள்ளிகள் காணப்பட்டன. அவை உணர்ச்சி இன்றி இருந்தன. அவர், தானும் ஒரு தொழு நோயாளி என்பதை உணர்ந்தார். டேனியன், தானும் இவர்களை போல தொழுநேயாளி ஆனதை குறித்து சற்றும் கவலை படவே இல்லை, தொழு நோயாளிகள் வசிக்கும் இடத்துக்கு மீண்டும் சென்றார்.
தன்னுடைய ஊழியத்தை மீண்டும் தொடங்கினார். அவரும், தொழு நோயாளி என்ற செய்தி, எங்கும் பரவியது. அவருடைய வீட்டைச் சுற்றி பலர் வந்தனர். அவருடைய நிலைமை, தங்களைப் போல் ஆயிற்றே என உணர்ந்தனர். அந்த வாரம், ஞாயிறு அன்று. அவருக்கு மிகப் பெரிய ஆச்சரியம் காத்திருந்தது. சிற்றாலயம் நிரம்பி வழிந்தது. அன்பின் ஆழத்தைக் குறித்து அவர் பிரசங்கித்தார். அவர் இறையியலுக்கு அப்பால் போதித்தார். அவருடைய ஊழியம் வெற்றிகரமாக அமைந்தது... இன்று உங்கள் அன்பின் நிறைவை பெற்றுக் கொள்பவர்களே..!! நாளை அவர்களுடைய விசுவாசத்தைக் கேள்விப்பட்டு மகிழுவார்கள்...!! ***ஒருவனுடைய விசுவாசம் எவ்வளவு பெரியது என்பதை விட அவன் கொண்ட (அன்பு) எவ்வளவு பெரியது என்பதே சிறந்தது. வேதம் என்ன கூறுகிறது தெரியுமா..? இப்பொழுது "விசுவாசம்,நம்பிக்கை,அன்பு". இந்த மூன்றும் நிலைத்திருக்கின்றன. இவைகளில் "அன்பே" பெரியது.
தேவன் இந்நூத்தாண்டிலும் மாற்றமுடியாத மக்கள் கூட்டங்களை தம் சுவிசேஷத்தால் விந்தையான மாற்றத்திற்குள் கொண்டு வருகிறார் .
தேவன் பழங்காலத்தில் மட்டுமல்ல இந்நூற்றாண்டிலும் மாற்றமுடியாத மக்கள் கூட்டங்களை தம் சுவிசேஷத்தால் விந்தையான மாற்றத்திற்குள் கொண்டுவருகிறார் . அதற்கு சாவி இனமக்கள் ஒரு தத்ரூபமான சாட்சி .
கனடா நாட்டில் இயற்கை வளமிக்க அல்பாடா நகரத்தின் அருகில் மும்மலை என்ற இடத்தில் அமைத்திருந்த புகழ் பெற்ற பிராரி வேதாகமக் கல்லூரி , கலாச்சாரம் கடந்து சென்று பணியாற்றும் மிஷனெரிகளை உலகெங்கிலும் அனுப்பிவந்தது .
தொலைதூர மிஷனெரிப்பணி ஐக்கியத்தின் சார்பில் ( Re gions Beyond Missonary Union )
1955 - ம் ஆண்டு நடத்திய மிஷனெரி அறைகூவல் கூடுகை ஒன்றில் திரு . எபினேசர் ஜி . வயின் அவர்கள் சிறப்பு : செய்தி வழங்கினார் .
இந்தோனேசியாவில் கிறிஸ்துவை அறிந்திடாத நானுறுக்கும் அதிகமான பழங்குடிகள் வாழ்வதாகவும் அவர்கள் மத்தியில் மிஷனெரிப்பணி செய்யவேண்டியதன் அவசியத்தைப் பற்றியும் அவர் கூறியது கூடியிருந்த பிராரி வேதாகமக் கல்லூரி மாணவர்களை அதிகம் தொட்டது . அப்படித் தொடப்பட்டவர்களில் டான் ரிச்சர்ட் சனும் ஒருவர் .
ஆஸ்திரேலியாக் கண்டத்திற்கு மேல் பகுதியில் சுமார் ஒரு லட்சம் சதுர மைல் பரப்பளவுள்ள பெரிய ஒரு தீவு உள்ளது . இதை நியூகினியா என்றும் அழைப்பர் . இங்குள்ள பழங்குடி மக்களின் இனங்களில் ஒன்றான சாவி மக்கள் மத்தியில் 1962 - ம் ஆண்டு மார்ச் மாதம் 19 - ம் தேதி இளந் தம்பதிகளாக டான் ரிச்சர்ட்சனும் அவரது மனைவி காரலும் நியூகினியாவின் பிரி மாயன் என்ற இடத்தை வந்தடைந்தனர் .
1962 , ஜூன் 6 - ம் தேதி காலை 7 மணிக்கு டான் ரிச்சர்ட்சன் தேவையான சாதனங்களுடன் படகு ஒன்று மூலம் சாவி மக்களைத்தேடி பயணமானார் . அடர்ந்த காடுகளின் நடுவே பாய்ந்த குரோன் கெல் ஆற்றுடன் பல சிற்றாறுகள் வந்து இணைந்தன . ஒவ்வொரு சிற்றாறு செல்லும் பாதையும் மிகவும் அடர்ந்த காடுகளாக விளங்கின . அவைகள் பழங்குடி மக்கள் வாழும் இடமாகத் திகழ்ந்தன . பழங்குடியினர் மரங்களில் மடுகள் அமைத்து வாழ்ந்துவந்தனர் . சாவி இனமக்கள் நரமாமிசம் உண்ணுகிறவர்களாகவும் , மனிதத் தலையை வேட்டையாடுபவர்களாகவும் காணப்பட்டனர் .
நண்பர்களாகப் பழகி , பின்பு வஞ்சித்துக் கொன்று சாப்பிடுவதை வீரதீரச்செயலாக எண்ணினர் . மறக்க முடியாத மாமனிதர்கள் எந்த நாகரிகமும் அறியாத கற்கால மனிதர்களாக சாலி இன சமுகம் வாழ்ந்து வந்தது .
டான் ரிச்சர்ட்சன் சாவி இன மக்கள் மத்தியில் சென்றபோது , அடர்த்தியான மரங்கள் அவரைப்பார்த்து நகைப்பது போலவும் , டான் " இது உன்னுடைய கனடா நாடு போன் நல்ல , மிகவும் டேஷ்ணமான , சதுப்புநிலமாக , பெரும்மழைப்பிரதேசமாக இடுப்பளவு சேறாக , ஆறு அங்குல நீளமுள்ள முட்புதராக உள்ள இடம் .
இரத்தம் உறிஞ்சும் அட்டைகள் , முதலைகள் வாழும் இடம் , மலேரியா , யானைக்கால்நோய் , மஞ்சள்காமாலை நிறைந்த இடம் , உன்னால் , உன் மனைவியால் இங்கே வாழமுடியாது , போய்விடு என்று அவை பயமுறுத்துவது போலவும் இருந்தது .
ஆனால் டான் ரிச்சர்ட்சன் தேவன் தன்னை அழைத்ததையும் , அவர் உண்மையுள்ளவர் என்பதையும் நினைவில் பதித்து பயத்தை விரட்டி முன் சென்றார் . தன் உயிரை பணயமாக வைத்து பணியாற்றவும் தொடங்கினார் .
1963 - ம் ஆண்டு ஜூலை 4 - ம் தேதி டான் ரிச்சர்ட்சன் தனது மனைவி , மூத்த மகன் ஸ்டீபன் ( ஒன்றரை வயது ) , மற்றும் பிறந்து 15 நாட்கள் ஆன பச்சிளம் குழந்தையுடன் படகில் செல்கையில் குரேன்கெல் ஆற்றில் படகு கவிழ்ந்துவிட்டது , டானின் மனைவி காரல் தன் இரண்டு பிள்ளைகளுடன் ஆழமான ஆற்றில் மூழ்கிவிட்டாள் . அந்த நதி , முதலைகள் நிறைந்தது . டான் ஆண்டவரே உதவி செய்யும் என அலறி மூழ்கிக்கொண்டிருந்த மனைவி , பிள்ளைகளை ஒவ்வொருவராக இருளடைந்த அந்த ஆற்றிலிருந்து மீட்டு படகில் ஏற்றினார் .
சங் . 145 : 19 - ன்படி ' கர்த்தர் தமக்குப் பயந்தவர்களுடைய விருப்பத்தின்படி , செய்து , அவர்கள் கூப்பிடுதலைக் கேட்டு , அவர்களை இரட்சிக்கிறார் . " இது டான் ரிச்சர்ட்சனுடைய வாழ்வில் நிறைவேறியது .
கடின உழைப்பால் டான் சாவி மக்களுடைய மொழியைக் கற்றார் . சாவி மக்களுடைய கவாச்சாரத்தைப் புரிந்துகொண்டு சுவிசேஷத்தை அறிவித்தார் . இயேசு கிறிஸ்துவின் அன்பை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில் லை . மாறாக இயேசுவைக் காட்டிக்கொடுத்த நிகழ்ச்சியில் ஆர்வம் காட்டினர் .
அவர்களுடைய கலாச்சாரத்தின் யூதாஸ் ஸ்காரியோத்தே கதாதாயகனாக விளங்கினான் . ஹேனாம் , காமூர் , யோவி என்ற மூன்று கிராம மக்களும் அடிக்கடி ஒருவரோடொருவர் சண்டையிட்டுவந்தனர் . - டான் காரியல் மிஷனரிதம்பதியினர் எவ்வளவு முயர்ச்சி எடுத்தும் அவர்கள் சண்டையை தடுக்க முடியவில்லை . எனவே ரிச்சர்ட்சன் தன் மனைவியுடன் வேறிடம் செல்லத் தீர்மானித்தார் . அதை சாவி மக்களிடம் கூற , அதிக வருத்தமடைந்த அவர்கள் ஒருவருடன் ஒருவர் சமாதான மாக இருக்க முடிவு செய்து தங்கள் கலாச்சார அடிப்படையில் சமா தானச் சடங்கினைத் துவக்கினார் .
அவர்களுடைய சமாதான உடன் படிக்கை எப்படியெனில் , ஒரு கிராமத் தலைவர் தங்களுடைய சிறு குழந்தையை எடுத்து எதிரியாகக் கருதப்படும் மற்றொரு தலைவனிடம் கொடுத்துவிடுவார்கள . அது போல எதிரித் தலைவனும் ஒரு சிறு குழந்தையை பதிலாக இவர்களிடம் கொடுப்பான் . இக்குழந்தைகள் உயிரோடிருக்கும் நாள் வரைக்கும் தங்கள் சமாதான ஒப்பந்தத்தின்படி போரை நிறுத்தி அமைதியாக வாழ்வார்கள் . டான் குடும்பம் முன்னிலை . இரு கிராம மக்களும் ஒன்று கூடியிருக்கையில் திடீரென ஒரு இளைஞன் தன்னுடைய மனைவியின் மார்பில் இருந்த குழந்தையைப் பறித்து ஓடிச் சென்று எதிரித் தலைவன் கரத்தில் கொடுக்க , எதிரித் தலைவனும் தன் தரப்பில் ஒரு குழந்தையைப் பதிலுக்குத் தர சமாதான ஒப்பந்தம் நிறைவேறியது . சுவிசேஷத்தை அறிவிக்க வழிதெரியாத டான் காரலுக்கு இந்த ' சமாதானக் குழந்தை ' நிகழ்ச்சி சுவிசேஷம் கூற ஒரு வழிமுறையாக இருந்தது . இந்த “ சமாதானக் குழந்தை " என்ற ஒப்புமையைக் கொண்டு மனுக் குலத்துக்கு தேவன் அருளின தெய்வீக சமாதானக் குழந்தை இயேசு என சாவி இன மக்களுக்கு அறிவித்தார் .
இப்போது கிறிஸ்துவின் மானுட விஜயத்தின் நோக்கம் அவர்களுக்கு சட்டெனப்புரிந்து போனது . அவர்கள் சுவிசேஷத்தை உடனே ஏற்றுக்கொண்டு திருச்சபை யில் இணைந்தனர் . 1962 முதல் 1972 வரை செய்த ஊழியம் பலன் கொடுக்க ஆரம்பித்தது . " சமாதான இல்லம் " ( House of Peace ) என்ற பெயரில் வட்டவடிவில் காட்டு மரங்களினாலும் , புல்லினாலும் வேய்ந்த பிரமாண்டமான ஆலயத்தை மே 1972 ல் பிரதிஷ்டை செய்தார் டான் .
பின்பு அந்த சாவி இன விசுவாசிகளுக்கு ஊழியப் பயிற்சி அளித்து அவர்களே பொறுப்பெடுக்கச்செய்து , திருச்சபை ஊழியங்களை விட்டு தான் புதிய இனமக்கள் மத்தியில் ஊழியத்தைத் தொடரப் புறப்பட்டுச்சென்றார் .
ஒரு டான் தேவனுக்குக் கீழ்ப்படிந்ததினாலே நரமாமிச பட்சிகளான சாவி இனமக்கள் மலர்ச்சி அடைந்தனர் . நம்முடைய பாரத நாட்டில் எத்தனை ஜாதி மக்கள் இவ்விதம் கிறிஸ்துவை அறியாது இருக்கிறார்கள் . இவர்களுக்கு சமாதானத்தான் சுவிசேஷத்தை சொல்ல முன்வருவீங்களா?
தேவ ஒத்தாசையால் ஒரு புதிய திட்டத்துடன் இந்தியாவுக்கு வந்து , அதை செயல்படுத்தி உயர்ஜாதி மக்களை சுவிசேஷத்திற்குச் செவிசாய்க்கச் செய்தார் டப் .
இந்தியாவில் உள்ள உயர்ந்தஜாதி மக்களை சுவிசேஷத்தால் சந்திக்க புதிய தரிசனத்துடன் 1830 - ம் ஆண்டு கல்கத்தாவில் அடிவைத்தார் அலெக்ஸாண்டர் டப் . இவர் இந்தியாவிற்கு வருமுன் செல்வந்தர்கள் , உயர்குல மக்கள் , சுவிசேஷத்திற்குச் செவிசாய்க்க வாய்ப்புகள் குறைவாக இருந்தது .
கிராம சூழ்நிலையில் உள்ள மக்களும் , தாழ்ந்தகுல மக்களும் சுவிசேஷத்திற்கு காட்டின வாஞ்சை இவர்களிடம் இல் லை . இதனை மிஷனெரிகளின் கடிதங்கள் , அறிக்கைகள் மூலம் அறிந்துக்கொண்ட டப் தேவ ஒத்தாசையால் ஒரு புதிய திட்டத்துடன் இந்தியாவுக்கு வந்து , அதை செயல்படுத்தி வெற்றியும் கண்டார் .
1806 ம் ஆண்டு ஏப்ரல் 25 - ம் தேதி ஸ்காட்லாந்து தேசத்தில் பிறந்து வளர்ந்து ஆண்ட்ரூஸ் பல்கலைகழகத்தில் வேதாகமப் பட்டமும் , அறிவியல் படிப்பில் பட்டமும் பெற்றார் .
இவரது வாலிப வயதில் 1820 - ம் ஆண்டு ஸ்காட்லாந்தில் உயிர்மீட்சியும் , மிஷனெரி பாரமும் தீ போல பரவியது . இந்நேரத்தில் தான் 23 வயதான வாலிபன் டப் தன்னை கடல் கடந்து சென்று செய்யும் மிஷனெரிப் பணிக்குத் தன்னை அர்ப்பணித்தார் . மேலும் இவர்தான் ஸ்காட்லாந்து திருச்சபையின் கடல்கடந்து சென்ற முதல் மிஷனெரியும் ஆகும் . இந்தியாவிற்கு கப்பற்பயணம் மேற்கொண்டபோது இரு கப்பற்சேதத்தை இவர் சந்தித்தார் . அதில் ஒன்றில் தன்னுடைய எல்லாப் புத்தகங்களையும் , சான்றிதழ்களையும் உடைமைகளையும் இழந்தார் .
இழப்பின் மத்தியிலும் மனத்தளர்ச்சியடையாமல் பயணத்தைத் தொடர்ந்தார் . இந்தியா வந்தவுடன் தனது புதிய தரிசனமான மேற்கத்தியக் கலை அறிவியற் கல்வியுடன் ஆங்கிலமும் , வேதாகமமும் சொல்லித்தந்து அதன்மூலம் உயர்குல மக்களின் மூடநம்பிக்கைகளை ஒழித்து அவர்களது அறிவுக்கண்களைத் திறந்து இயேசுவே இரட்சகர் என்பதை அவர்களுக்கு அறிவிப்பதை செயல்ப ஆயத்தமானார் .
இதன்மூலம் இந்தியாவில் கிறிஸ்தவத்தை ஸ்திரமாக நிலைநாட்ட முடியும் என்பது அவரது அசையாத நம்பிக்கை .
இந்த மிஷனெரித் தரிசனத்தை அப்போது இந்தியாவில் இருந்த மிஷனெரிகளும் , கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகளும் வன்மையாகக் குறை கூறியபோதும் இவர் மனந்தளராமல் இந்தியா வந்த சிலமாதங்களிலேயே ஒரு ஆங்கிலப்பாளியை ஆலமரத்தடியில் ஐந்து மாணவர்களுடன் கல்கத்தாவில் ஆரம்பித்தார் . ஆரம்பித்து ஒரு வாரம் முடிவதற்குள் 300 மாணவர்கள் சேர்ந்துவிட்டனர் . ஒருகூட்ட உயர்குல வங்காளி மொழிபேசும் இளைஞர்கள் அதிக ஆர்வம் காட்டினர் . மேற்கத்தியக் கலை , அறிவியல் , ஆங்கிலம் சொல்லிக்கொடுக்கப்பட்டாலும் கிறிஸ்தவ மதப் போதனையே அடிப்படையாகவும் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் இருந்தது . அனுதினமும் ஜெபத்துடன் பள்ளி ஆரம்பிக்கப்பட்டு , வேதத்தில் ஒருபகுதி வாசிக்கப்பட்டு , விளக்கமும் கொடுக்கப்பட்டது . பாடத்திட்டத்தில் வேதம் ஒரு பாடமாகச் சொல்லிக் கொடுக்கப் பள்ளி ஆரம்பித்து மூன்று வருடத்திற்குள் நான்குபேர் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு ஞானஸ்தானம் பெற்றனர் .
இதனைப் பார்த்து பயந்து சிலர் பள்ளியை விட்டு வெளியேறினாலும் ஆர்வம் உள்ள அநேகரைத் தேவன் , அவரது பள்ளிக்கு அழைக்க வந்தார் . பள்ளி ஆரம்பித்து பத்தாவது ஆண்டில் இவது பள்ளியில் 800 மாணவர்கள் படித்தனர் . அடுப்பெரிக்கும் பெண்களுக்கு படிப்பெதற்கு ? என கேள்வி இருந்த காலத்தில் உயர்குலப் பெண்களுக்காக ஒரு தனிப் பள்ளியையும் நிறுவினார் . இது பல செல்வ சீமாட்டிகளை ஈர்த்தது . நாட்கள் ஆக ஆக ஆயிரக்கணக்கான மாணவர்கள் இவரது பள்ளியில் பயின்றனர் . இவரது ஊழிய நாட்களிலே நன்கு படித்த திறமையுள்ள உயர்குல மக்களில் 33 பேர் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு அவரைப் பின்பற்றினார்கள்
இந்த சிறிய கூட்டம் சமுதாயத்தில் அதிகத் தாக்கத்தை ஏற்படுத்துகிறதாகவும் அதில் சிலர் மிஷனெரிகளாகவும் போதகர்களாகவும் முக்கியமான திருச்சபை தூண்களாகவும் விளங்கினார்கள் என்பதும் டப் ஊழியத்தின் பெரிய வெற்றியாகும் .
இவரது மிஷனெரித் தரிசனமான கவ்வியுடன் சுவிசேஷம் என்பதற்கு வயது முதிர்ந்த மிகவும் மதிப்பிற்குரிய மிஷனெரி வில்லியம் கேரியும் , படித்த பரந்த மனப்பான்மை கொண்ட சமுதாயத் சீர்திருத்தவாதியுமான ராம் மோகன்ராய் - யும் அதிக ஆதரவு அளித்தனர் .
இவர்களது உதவியாலும் சிறந்த கல்வியினாலும் உயர்குல மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டு சதி , உடன்கட்டை ஏறுதல் , குழந்தைத் திருமணம் போன்ற சமுதாயத் தீமை களை எதிர்த்துப் போராட ஒரு கூட்ட மக்கள் எழும்பினார்கள் . இந்த பள்ளியினாலேயே . டப்பிற்கு ஊழியமே வாழ்க்கையாக இருந்ததினால் குடும்பத்தில் பல தியாகங்களைச் செய்ய வேண்டியிருந்தது .
1839 ம் ஆண்டு தனது நான்கு பிள்ளைகளையும் தனது தேசத்தில் ஒரு கைம்பெண்ணின் மேற்பார்வையில் விட்டு வந்தார் . அப்போது அவரது கடைசி மகன் ஒரு வயதுகூட நிரம்பாத குழந்தையாக இருந்தான் .
பதினொரு ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களைப் பார்க்கும் வாய்ப்பை டப் பெற்றபோது அவரது கடைசி மகன் 11 வயது நிரம்பி வளர்ந்திருப்பதையும் தனது பெற்றோரின் வருகை அவனுக்கு அவ்வளவு அதிக சந்தோஷத்தையும் எதிர்பார்ப்பையும் தராமல் இருப்பதைப் பார்த்து அவர் வருத்தமடைந்தார் .
தனது இந்திய மிஷனெரிப் பணிக்காக தனது குடும்பத்தையே தியாகம் செய்தார் . இவர் வாழ்ந்த நூற்றாண்டில் இவர் ஒரு வெற்றியுள்ள மிஷனெரியாகவும் , வாக்குவன்மை நிறைந்த ( Missionary Orator ) மிஷனெரியாகவும் திகழ்ந்தார் . இங்கிலாந்து , அயர்லாந்து , ஸ்காட்லாந்து , வேல்ஸ் , அமெரிக்கா போன்ற பல்வேறு நாடுகளில் பயணம் செய்து தனது ஊழியத்திற்காக ஜெப , பண உதவிகளைத் திரட்டினார் .
நன்கு சொற்பொழிவாற்றல். தாலந்து படைத்த இவரை அமெரிக்கா தேசத்தின் காங்கிரஸ் சபையில் பிரசங்கம் செய்யவும் தனது அனுபவத்தை President - யிடம் தனியாகப் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பையும் பெற்றார் .
இவரது முன்னேற்றப்பணியினால் 100 - க்கும் மேற்பட்ட வாலிபர்கள் வெளிநாட்டுக்கு மிஷனெரியாகப் பணியாற்ற முன் வந்தனர் . 10 , 000 - க்கும் மேற் பட்டவர்கள் பணத்தினால் இப்படிப்பட்ட ஊழியத்தை தாங்க முன்வந்தனர் .
இந்த மிஷனெரி முறையான கல்வியையும் சுவிசேஷத்தையும் சேர்த்துத் தரும் முறையை ( Com bining Education And Evangelism ) உலகம் முழுவதும் பின்பற்றத் தொடங்கினார்கள் .
இதற்குச் சாட்சியாக நமது தமிழகமெங்கும் மிஷனெரிகள் வந்து பணிபுரிந்தபோது ஒரு ஆலயத்தையும் அத்துடன் ஒரு பள்ளியையும் கட்டியதை இன்றும் நாம் பார்க்கலாம் .
பள்ளிகள் மூலம் சிறுவயதிலேயே ஆண்டவரை ஏற்றுக்கொள்ளவும் அவரில் வளரவும் இந்த முறை ஏதுவாக அமைந்தது . இன்றும் நமது பணித்தளங்களில் பள்ளிகள் ,
சிறுவர் விடுதிகள் மூலம் ( குஜராத்தில் ) ஆண்டவரை ஏற்றுக்கொண்டு , வளர்ந்து மிஷனெரிகளாகவும் , திருச்சபைத் தலைவர்களாகவும் இன்று எழும்பி இருப்பதும் இந்த மிஷனெர முறையின் விளைவே . டப் போன்றவர்களுக்குத் தேவன் தந்த தரிசனத்தின்படி செல்வந்தர்கள் , உயர்குல மக்கள் மத்தியில் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து அநேகரை ஆண்டவருக்குள் வழிநடத்தினார் .
( Urbanisation ) பட்டணங்களில் குடியேறுதல் அதிகரித்துவரும் இந்நாட்களிலும் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் இன்றைய பெற்றோர் , மாணவர்கள் மத்தியிலும் நமது சுவிசேஷ பணித்திட்டம் என்ன ? நமது பணித்தளங்கள் , நகரங்களில் நாகரீகமாக செல்வச்செழிப்பு மிக்க மக்களைச் சந்திக்க ஆண்டவர் நம்மை டப் - ஐப் - போல அழைப்பாரானால் நம்மை 7 அர்ப்பணிப்போமா ?
ராமநாதபுரம் வட்டாரத்தில் சிறப்பான ஊழியம் செய்த மேனாட்டு மிஷனரி ஜே . ஏம் . ஸ்ட்ரான் . ஒரு நாள் அவருக்குக் கிடைத்த தரிசனம்
உரையாடல் ரூபத்திலிருந்தது . "ஸ்ட்ரான் . நீ நாளை நடக்கும் பாம்பன் கோயில் கொடைவிழாவிற்கு மாலையில் போ . " "
ஐயா , ஆண்டவரே ! அந்த மக்கள் குடித்து வெறித்துக் கும்மாள மிடுவார்கள் . பச்சை இரத்தம்குடித்துக் கொச்சையாக ஆடுவார்கள் . அங்கு போனால் ஆபத்து " என்றார் மிஷனரி . " இல்லை . நீ கட்டாயம் போக வேண்டும் . திரளான மக்கள் கூடுவார்கள் . உன்னை அனுப்பிகிறவர் நானல்லவா . பயப்படாதே . "
ஸ்ட்ரான் ஐயர் தயங்கினார் . ஆயினும் தரிசனத்தை அலட்சியம் செய்யக் கூடாதே என்று தடுமாறினார் .
1865 ஆம் ஆண்டு டிசம்பர் 23ம் தேதி . பாம்பன் நகரிலுள்ள அம்மன் கோயிலில் கொடைவிழா நடந்தது . பெரும் விழாவாக நடக்கும் . சாராயம் குடம் குடமாகப் புரளும் . பலர் கள்ளில் குளித்து மூழ்குவர் . இன்னும் பலர் களி நடம் புரிந்து ஆடுவர் .
ஆடு கோழிகளை வெட்டி ஆங்காங்கு தலைகள் உருளும் . இரத்தம் புரண்டு ஓடும் . வில்லுப் பாட்டு ஓங்கார ஒலி எழுப்பும் . மிஷனரி தரிசனத்தை நினைத்தவராக சிந்தனையில் ஆழ்ந்தார் .
காலரா என்னும் கொள்ளை நோய் பாம்பன் நகரிலும் , சுற்றியுள்ள கிராமங்களிலும் கோரத்தாண்டவமாடியது
1864ஆம் ஆண்டில் எந்த ஆண்டையும் விடப் பயங்கரமாக மூர்க்க வெறி கொண்டது . கூட்டம் கூட்டமாக மக்கள் மாண்டனர் . தேவ ஊழியர் ஸ்ட்ரான் பாம்பன் பட்டணத்தில் குடி இருந்தார் .
அவர் ஒரு மருத்துவ மிஷனரி . மருந்து மாத்திரைகள் கொடுத்து வியாதியைக் குணமாக்குவதில் கைதேர்ந்த வைத்தியராயிருந்தார்
பேதி என்னும் கொடிய நோயால் மக்கள் பீதியடைந்தனர் . சுகாதாரமின்றி விகார விளைவுகள் நேர்ந்தன
ஸ்ட்ரான் , காலரா தாக்குண்டவர்களை நேரில் சந்தித்து சிகிச்சை செய்தார் . ஆரோக்கியமாக வாழக் கற்றுக் கொடுத்தார் . “ சுத்தம் சுகம் தரும் ” என்று சுத்தத் தமிழில் பேசி பலரைக் காப்பாற்றினார் .
அவரது வைத்தியத்திற்குப் பைசா வாங்கியதில்லை . அர்ப்பணிப்போடு ஊழியம் செய்தார் . உபதேசிமார் , பிரசங்கிமார் , மூப்பர்கள் . . . அனைவரும் நன்கு உதவி செய்தார்கள் . மதப் பாகுபாடின்றி ஓடி ஓடி உழைத்தார் .
காலராவிற்கு இரையாகாமல் பல உயிர்களைக் காப்பாற்றினார் . பாரத்தோடு பிரார்த்தனையும் ஏறெடுத்தார் .
குளிரும் , மழையும் , புயலும் காற்றும் சீறி வீசியது . துணையை இழந்து தவிப்போர் , பிள்ளைகளை இழந்த பெற்றோர் . இப்படியாய் பலர் பாவப்பட்ட மக்களாயினர் .
ஸ்ட்ரான் , பாதிக்கப்பட்ட மக்களிடம் ஓடி ஆறுதல் கூறினார் . மக்கள் நேய பக்தியுடன் துக்கம் விசாரித்தார் . அவர்களின் வாழ்வாதாரங்களை கவனித்தார் .
“ உயிர் தந்த உத்தமர் என்று மக்கள் அவரைப் போற்றினார்கள் . அவர் சொல் கேட்டார்கள் . இத்த குசூழலில் பாம்பன் கோயில் கொடை விழா வந்தது . சிறு தெய்வ வழிபாடுகளை ஆங்காரத்தோடும் ஆரவாரத்தோடும் கொண்டாடினர் .
கோயில் பெருங்கூட்டத்தால் விம்மி , நெளிந்தது . கொட்டு மேளங்கள் , கும்ப விளையாட்டுகள் , வில்லுப் பாட்டுகள் , விநோத ஈட்டி எய்தல்கள் , தீப்பந்தங்கள் , தோரணங்கள் , பூ மாலைகள் , சூடம் சாம்பிராணிப் புகைகள் . . . மாறுபாடான மணங்கள் குமட்டின .
இன்னும் பலர் கிடா வெட்டவும் , சேவல்களைக் கொல்லவும் ஆயத்தமாகக் காத்திருந்தனர் . ஆட்டுக் கடாக்களும் , சேவல்களும் , அபயமிட்டு அழுதன . பெண்களின் குலவைக் குரலும் , பம்பைமேள இரைச்சலும் விண்ணை முட்டின . இன்னொரு பக்கம் சண்டைகளும் , சச்சரவுகளுமாக சந்தைக் கூட்ட இரைச்சலாய் காதுகளை உடைத்தன .
திடீரென்று கூட்டம் அமைதலானது . கொட்டு முழக்கங்கள் நின்றன . அமைதி , சாந்தி , நிசப்தம் , எங்கும் மௌனம் ஏன் ? என்ன நடந்தது ?
ஸ்ட்ரான் ஐயர் அங்கு வந்து நின்றார் . தரிசனத்திற்குக் கீழ்ப்படிந்தார் .
எண்ணற்ற உயிர்களைக் காத்த கண் கண்ட கடவுள் நிற்பதுபோல் மக்கள் அவரைக் கண்டனர் . ஆரவாரமான தோற்றம் தூய வெண்ணிற அங்கி ஒளி நிறைந்த கண்கள் அவர் மக்களைப் பார்த்து கை கடப்பி வணங்கினார் .
பூசாரிகள் தங்கள் ஈட்டிகளையும் , வல்லயங்களையும் , அருவாள்களையும் , ஆயுதங்களையும் கிழே போட்டுவிட்டு மரியாதையுடன் நின்றனர் . அனைவரையும் அமரும்படி பெரிய பூசாரி சொன்னார் .
மிஷனரி , பூசாரியிடம் நான் சில நிமிடங்கள் பேசலாமா ? ' என்று கேட்டார் . மக்கள் வணங்கியவாறு மரியாதையுடன் கேட்டனர் . " கடவுள் வீண் பலிகளை விரும்பமாட்டார் . அவர் கருணை உள்ளவர் . இயேசு பெருமான் நம் ஒவ்வொருவருக்காகவும் சிலுவையில் இரத்தம் சிந்தினார் . எனவே நல்வாழ்வு என்னும் இரட்சிப்பை இலவசமாகத் தந்திருக்கிறார் . ஆடு கோழிகளுக்கு விடுதலை கொடுப்போம் காலரா போன்ற வியாதிகளைத் தடுத்து நிறுத்துவோம் .
யாவரும் விட்டிற்குப் போங்கள் கடவுள் உங்களைக் காத்து ஆசிர்வதிக்கட்டும் . . . எல்லோரும் எழுந்து வீட்டிற்குச் சென்றனர் . கிடாக்கள் கொம்புகளை ஆட்டித்துள்ளின . ஆடுகள் ஆனந்தமாகக் குதித்து ஆடின . சேவல்கள் கொக்கரக்கோ என்று சுடவின . " ஐயர் சொல்வது உண்மை . துரை வாழ்க ! என்று மக்கள் ஒலிகளை எழுப்பினர் . புத்தாண்டை புத்துணர்வோடு வரவேற்றனர் .
ஆதாரம் : மறையவிருந்த மாணிக்கக் கற்கள்
பதினெட்டாம் நூற்றாண்டின் கொடிய நோயாக கருதப்பட்ட தொழுநோயை இன்றைக்கு நமது சமுத்யத்தில் காணபது அரிது.. ஒரு காலத்தில் சமுதாயம் இவர்களை ஊருக்கு வெளியே தள்ளி வைத்திருந்தது. ஆனால் இன்றைக்கு தொழுநோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்களை நமது சமுதாயத்தில் ஏற்றுக் கொள்ளுகிறோம். உண்மையாகவே நமது சமுதாயத்தில் நல்ல மாற்றம் ஏற்ப்பட்டுள்ளது என்பதில் சந்தேகம் இல்லை. இந்த மாற்றத்திற்கு யார் காரணம்? இயேசுவின் அன்பால் ஈர்க்கப்பட்ட மிஷனரிகளே காரணம் என்றால் அது மிகையாகாது. அப்படிப்பட்ட ஒரு மிஷனரியின் வாழ்க்கை வரலாறு.
வெல்லஸ்லி பெய்லியின் இளமை வாழ்க்கை
வெல்லஸ்லி பெய்லி (Wellesley Bailey) அயர்லாந்து தேசத்தில் அபேலெய்க்ஸ் (Abbeylieux) என்னும் ஊரில் 1846 ம் வருடம் ஏப்ரல் 28 ம் தேதி நில அதிபருக்கு மகனாக பிறந்தார். உலக பிரகாரமாகவும் உல்லாசமாகவும் வாழ்வதையே தனது நோக்கமாக கொண்டிருந்தார் பெய்லி. சிறு குழந்தையாய் இருக்கையில் தொடர்ந்து சபைக்கு சென்ற பெய்லி தனது இருபதாம் வயதில் சபைக்கு செல்லும் பழக்கத்தை அறவே விட்டிருந்தார். அந்த நாட்களில் அயர்லாந்து தேசத்தில் ஏற்ப்பட்ட கடும் பஞ்சம் காரணமாக அநேகர் வெளிதேசங்களில் தஞ்சம் புகுந்தனர். 1866 ம் வருடம் பெய்லி ஆஸ்திரேலியா சென்று நன்கு சம்பாதித்து வாழ முடிவு செய்து கிரேவ்சென்ட் (Gravesend) என்ற துறைமுக நகருக்கு சென்றார். அவர் செல்ல வேண்டிய கப்பல் பனிமூட்டம் காரணமாக பல தாமதமானது.
அந்த சமயம் பெய்லியின் சிறுவயது தோழியான அலைஸ் கிரகாம் (Alice Grahame) சொல்லிய “நேரம் கிடைக்கும் பொழுது கட்டாயமாக சபைக்கு செல்” என்ற வார்த்தை அவருக்கு நினைவுக்கு வந்தது. அந்த பகுதியில் இருந்த சபையின் ஞாயிறு ஆராதனையில் கலந்து கொண்டார். அன்றைய செய்தி வேளையில் கூறிய, “குருடரை அவர்கள் அறியாத வழியிலே நடத்தி, அவர்களுக்குத் தெரியாத பாதைகளில் அவர்களை அழைத்துக்கொண்டு வந்து, அவர்களுக்கு முன்பாக இருளை வெளிச்சமும், கோணலைச் செவ்வையுமாக்குவேன்; இந்தக் காரியங்களை நான் அவர்களுக்குச் செய்து, அவர்களைக் கைவிடாதிருப்பேன்” (ஏசாயா 42:16) என்ற வசனம் பெய்லியை அதிகமாய் அசைத்தது. சிறு குழந்தையாய் இருக்கையில் சபைக்கு சென்றிருந்தாலும் இரட்சிப்பின் அனுபவத்தை பெற்றிராத பெய்லி அன்றைக்கு கர்த்தர் தன்னோடு பேசுவதை உணர்ந்தார். மேக மூட்டம் களைய கப்பலில் ஆஸ்திரேலியாவை நோக்கி புறப்பட்டார்.
வெல்லஸ்லி பெய்லியின் இந்திய பயணம்
ஆஸ்திரேலியாவில் இரண்டு வருடம் கடினமாக உழைத்தும் லாபம் ஒன்றும் காணமுடியவில்லை. ஏமாற்றத்துடன் அயர்லாந்து திரும்பின்னார் பெய்லி. தன்னை கிறிஸ்து அவரது பணிக்காய் முன்குறித்துள்ளார் என்பதை உணர்ந்த பெய்லி, இந்தியாவில் காவல் துறையில் பணியாற்றிய தனது சகோதரனிடத்தில் செல்ல முடிவெடுத்தார். பின்னர் அமெரிக்கன் பிரஸ்பிட்டரியன் மிஷனில் (American Presbyterian Mission) சேர்ந்தார். பஞ்சாப் மாநிலத்தின் அம்பாலா என்ற ஊரில் சென்று ஆசிரியப் பணி செய்யுமாறு உத்தரவு பெற்று இந்தியா நோக்கி பயணமானார். அம்பாலா பட்டணம் இன்றைக்கு ஹரியானா மாநிலத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. 1869 ம் வருடம் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திற்கு வந்தார் பெய்லி. இந்தியாவில் காவல் துறையில் பணியாற்றிய தனது சகோதரன் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டதால் தனி மரமாய் இந்தியாவில் காலடி எடுத்து வைத்தார்.
டாக்டர்.மோரிசன் (Dr JH Morrison) என்பவரோடு இனைந்து ஹிந்தி மொழியை கற்றுக்கொள்ள மிஷன் பணித்தது. டாக்டர்.மோரிசன் அம்பாலா அமெரிக்க மிஷனின் தலைவராக இருந்தார்.அந்த நாட்களில் தொழு நோய் இந்தியாவில் அதிகளவில் பரவி இருந்தது. தொழுநோயாளிகளை சமுதாயம் ஊருக்கு புறம்பே தள்ளி வைத்திருந்தது. டாக்டர்.மோரிசன் அவர்களுக்கென சிறு குடிசைகளை ஏற்ப்படுத்தி அவர்களை பராமரித்து வந்தார். ஒருநாள் தொழுநோயாளிகள் வசிக்கும் குடிசைகளுக்கு பெய்லியையும் அழைத்து சென்றார். அதுவரை தொழுநோயாளிகளைப் பற்றி வேதத்தில் மட்டுமே வாசித்திருந்த பெய்லி, சூம்பின கைகளோடும், முகம் முழுவதும் புன்களோடும், குருடர்களாகவும் இருந்த மக்களைக் கண்டு வேதனையடைந்தார். தொழுநோய் தொற்றிக்கொண்ட மனிதர்களின் வாழ்க்கையை சீர்படுத்த இயேசு தம்மை தெரிந்து கொண்டிருப்பதை தெளிவாக உணர்ந்தார் பெய்லி. தொழுநோயாளிகளை தொடர்ந்து பராமரித்து வந்த பெய்லி, 1871 ம் வருடம் அக்டோபர் மாதம் தனது சிறுவயது தோழியான அலைஸ் கிரகாம் (Alice Grahame) என்பரை திருமணம் செய்தார். இந்த திருமணம் பாம்பே கதிட்ராளில் வைத்து நடைபெற்றது. திருமணத்திற்கு பின்னர் இருவருமாக இணைந்து தொழுநோயாளிகளை பராமரித்தனர்.
தி லெபோரசி மிஷன் மலர்தல்
திருமணமாகி இரண்டு வருடங்களில் அலைஸ் கிரகாமின் உடல் நிலை மோசமாகிவிட்டது. இதினால் 1873 ம் வருடம் அமெரிக்க மிஷன் ஸ்தாபனத்தில் இருந்து விலகி தங்களுடைய சொந்த தேசமாகிய அயர்லாந்திற்கு பயணித்தனர் தம்பதியினர். அவர்களுடைய நினைவு முழுவதும் இந்தியாவில் தாங்கள் விட்டு வந்த தொழுநோயாளிகளை குறித்தே இருந்தது. அநேகருக்கு தொழுநோயாளிகளின் தேவைகளை குறித்து அறிவித்து அவர்களுக்கு உதவுமாறு பல முயற்சிகளை எடுத்தார் பெய்லி. அலைஸின் சிநேகிதிகளான பிம் சிஸ்டர்ஸ் வருடத்திற்கு முப்பது யூரோ தருவதாக வாக்களித்தனர். இந்நிலையில் அலைஸின் உடல் நிலையும் முன்னேறவே, 1875 ம் வருடம், அயர்லாந்தில் இருந்து மீண்டும் இந்தியா வந்து “தி லெபோரசி மிஷன்” என்ற தொழுநோயாளிகளை பாதுக்காக்கும் அமைப்பை தொடங்கினார். முப்பது யூரோ தருவதாக வாக்களித்த பிம் சிஸ்டர்ஸ், தொழுநோயாளிகளின் தேவைகளை அறிந்து அநேகரிடம் உதவிகளைப் பெற்று தொள்ளாயிரம் யூரோக்களை வருடத்திற்கு கொடுத்து உதவினர்.
தொழுநோய் மிஷனின் வளர்ச்சி
1886-ம் வருடம் தமப்தியினர் இந்தியா முழுவதும் சுற்றுபயணம் செய்து தொழுநோயாளிகளின் தேவைகளை அறிந்து கொண்டனர். இந்தியாவில் தொடங்கிய பணியானது நாளடைவில் பர்மா, சீனா, ஜப்பான், தென் அமெரிக்கா, தென் ஆப்ரிக்கா, சுமத்ரா தீவுகள் மற்றும் கொரியா நாடுகளில் விரிவடைந்தது. ஒருநாளில் ஆஸ்திரேலியா சென்று நன்கு சம்பாதித்து வரமுடியாத பெய்லி, தேவனின் சித்தத்திற்கு செவி சாய்த்து நடக்கையில் தேவன் அவரை உலகம் போற்றும் அளவில் உயர்த்தினார். ஐம்பது வருடத்திற்கும் அதிகமாக தொளிநோயளிக்காக உழைத்த பெய்லி 1937 ம் வருடம் தமது தொண்ணுற்று ஒன்றாம் வயதில் இறைவனது விண்ணரசில் இணைந்தார்.
வெல்லஸ்லி பெய்லியின் சாதனை
பதினெட்டாம் நூற்றாண்டில் உலகத்தில் 15 மில்லியனாக இருந்த தொழுநோயாளிகள் எண்ணிக்கை இத்தமபதியினர் மேற்கொண்ட பணியின் மூலமாக பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் 2 மில்லியனாக குறைந்தது. இன்றைக்கு முப்பதுக்கும் மேற்ப்பட்ட நாடுகளில் இயங்கும் இந்த தொழுநோயாளிகளுக்கான காப்பகத்தில் 23௦௦ க்கும் அதிகமானோர் பணிசெய்து கிறிஸ்துவின் நாமத்தை மகிமைப்படுத்தி வருகிறார்கள்.
மிஷனரியின் வாழ்விலிருந்து நமது வாழ்விற்கு
ஆண்டவரே நீர் என்னை தெரிந்தெடுப்பதை உணர்ந்து உமது பணி செய்ய, உமது கரங்களில் என்னை தருகிறேன் என்று அர்பணித்து செயல்பட்ட வெல்லஸ்லி பெய்லி, உலக அளவில் தொழுநோய் பரவுதலை குறைத்து, இயேசுவின் அன்பை அதிகப்படுத்தினார். நாமும் நம்மை அர்ப்பணிப்போம். கிறிஸ்துவிக்காய் சாதிப்போம். ஆமேன்
கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக. ஆமேன்
சாராள் டக்கர் சேவை செய்வதற்கு ஊனம் ஒரு தடையேயில்லை , மனமிருந்தால் மார்க்கம் உண்டு என்பார்கள் . ஆம் . நமது நல்ல எண்ணங்களும் , நல்ல செயல்களுமே பிறர் வாழ்வை உயர்த்தும் உன்னத கருவிகளாகும் . 1887ஆம் ஆண்டு ஜான் டக்கர் என்ற மிஷனெரி பாளையங்கோட்டையில் பணிபுரிந்து கொண்டிருந்தார் . இவர் ஆத்தும் அறுவடை வீரர் . தன் சொல் , செயல் அனைத்திலும் இயேசுவைப் பிறருக்குக் காண்பித்து , மக்களைநற்செய்தியின் பாதையில் நலமாக வழிநடத்திக் கொண்டிருந்தார் . இவருக்கு ஒரு சகோதரி . பெயர் சாராள் டக்கர் . கால் ஊனமுற்றவர் . கால் ஊனமே தவிர , மனம் ஊனமில்லை . - இவரைச் சுற்றிலும் எப்பொழுதுமே தோழிகள் பட்டாளம் நிறைந்திருக்கும் . ஏனெனில் இவர் அன்புடன் பேசும் வார்த்தைகளை அவர்கள் தம்மை மறந்து கேட்டுக் கொண்டிருப்பர் . தேன் சொட்டும் வார்த்தைகளுக்குச் சொந்தக்காரர் இவர் . கருணையே நிறைந்தவர் .
ஒருநாள் ஜான் டக்கர் தன் சகோதரிக்கு ஒரு கடிதம் எழுதினார் . அக்கடிதத்தில் , " தமிழ்நாட்டுப் பெண்கள் கல்வியறிவு இல்லாமல் நாயிலும் , பேயிலும் மிகவும் இழிவாக நடத்தப்படுகிறார்கள் . அவர்களின் அவல நிலையைச் சொல்ல வார்த்தைகளே இல்லை " என்று குறிப்பிட்டிருந்தார் . சாராள் டக்கர் இக்கடிதத்தைத் தன் தோழிகளுக்கு வாசித்துக் காட்டினார் தோழிகள் அனைவரும் சாராளின் தீர்மானத்தை எதிர்நோக்கிக் காத்திருந்தனர் அனைவரும் முழங்காற்படியிட்டனர் . தமிழ்நாட்டுப் பெண்களின் நலனுக்காகத் தங்களை அர்ப்பணித்தனர் . தங்கள் வருமானத்தின் பகுதியை இம்மக்களின் நலனுக்காக செலவிட தீர்மானித்தனர் . இவர்கள் தீர்மானத்தில் பேரிடி விழுந்தது . அந்தோ ! அவ்வருடமே சாராள் டக்கர் இவ்வுலகம் விட்டுவிண்ணகம் சென்றார் . சிநேகிதிகள் கூடினர் . அழுவதற்குப் பதில் ஆர்வம் கொண்டனர் . 268 பவுன் 17 சில்லிங் பணம் சேர்ந்தது . ஜான் டக்கர் ஐயருக்கு அனுப்பி வைக்கப்பட்ட " காாாள்டக்கர் ஸ்தாபனம். உருவானது . இன்றும் திருநெல்வேலியில் அநேக ஆசிரியர்களைப் பயிற்றுவிக்கும் , ஆசிரியர் பயிற்சிப்பள்ளி இதனால் உருவானது .
கிறிஸ்துவிடம் நெருக்கி வரும் போதெல்லாம் ஆண்டவரை அறியாத மக்களைக் குறித்த வாஞ்சையே என்னை ஆட்கொள்ளுகிறது என்று கூறிய ஜேம்ஸ் சால்மர்ஸ், நாகரீகமற்ற, மனித மாமிசம் உண்ணும் கொடூர பழங்குடிகள் நிறைந்த பசிபிக் கடலில் உள்ள நியு கினியா தீவிற்கு மிஷனரியாக சென்று துணிவுடன் நற்செய்தியை அறிவித்து. இறுதியில் பழங்குடி மக்களுக்கு உணவானார். இன்றைக்கு அந்த தீவில் உள்ள மக்களில் 96 சதவீதம் கிறிஸ்தவர்களாக உள்ளனர். ஒரு காலத்தில் மனித மாமிசம் சாப்பிட்டவர்கள் இன்றைக்கு ஆவியோடும் உண்மையோடும் இயேசுவை ஆராதித்து வருகின்றார்கள்.
இதற்காக தந்து உயிரை தியாகம் செய்த மிஷனரி ஜேம்ஸ் சால்மர்ஸ் (James Chalmers) என்பவரது வாழ்க்கை வரலாறை இந்த காட்டுரையில் காண்போம். மனித மாமிசம் உண்பவர்கள் நைஜீரியாவில் மனித மாமிசத்தை விற்பனை செய்ததாக உணவு விடுதி உரிமையாளர் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிரியாவில் அதிபர் பஷீர் அல் ஆசாத் ஆட்சிக்கு எதிராகசிரிய விடுதலைப் படைபோர் செய்த போது,விடுதலைப் படையிடம் பிடிபட்ட சிரிய இராணுவச் சிப்பாய் ஒருவரின் இதயத்தை வெட்டியெடுத்து, போராளி ஒருவர் உண்ற சம்பவம் நடந்தேறியது. அவரது உடலத்தின் மார்பை பிளந்து அவரது இதயத்தை வெளியே எடுக்கும், ஆசாத் படையினருக்கு எதிராகப் போராடிவரும் பரூக் படை என்னும் போராளிகள் குழுவின் தலைவரான அபு சக்கார் என்பவர், ‘பஷீர் நாயின் கைக்கூலிகளான இராணுவமே.. உங்கள் இதயம் மற்றும் ஈரல்களை தின்று விடுவோம் என்று இறைவன் மீது ஆணையிடுகிறோம்’ என்று பலமாகக் கூறியபடி அதனை உண்றார்.
இது போன்ற நிகழ்ச்சிகள் இன்றைக்கும் நாம் வாழும் உலகத்தில் நடக்கின்றன என்றால் அதை மறுக்க முடியாது. இவர்கள் நாகரீகம் அறிந்தும், தீய சக்திகளின் பிடியாலும், குருட்டு மதங்களை பின்பற்றுவதாலும் இது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். இருபதாம் நூற்றாண்டுக்கு முந்தைய நாகரீகம் வளர்ந்திராத நாட்களில், தீவுகளில் வசிக்கும் பழங்குடி மக்களிடமும் மனித மாமிசத்தை உண்ணும பழக்கம் அதிகளவில் காணப்பட்டது. தற்போது அப்படிப்பட்ட தீவுகளில் வாழ்கின்ற மக்கள், நம்மைப்போல மிகுந்த நாகரீகத்துடன் வாழ்கின்றார்கள். ஒரு காலத்தில் யார் அந்த தீவிற்கு சென்றாலும் நரபலியாகிவிடுவார்கள்.
ஆனால் இன்றைக்கோ அந்த தீவுகள் எல்லாம், அநேகர் செல்லக்கூடிய சுற்றுலா தளங்களாக மாறிவிட்டது. இந்த மாற்றத்திற்கு யார் காரணம்? மரணமே ஆனாலும் பரவாயில்லை. கிறிஸ்துவின் அன்பை அவர்களுக்கு அறிவித்தே தீருவோம் என்று, தங்கள் உயிரை பணயம் வைத்து அந்த மக்களிடமாய் கிறிஸ்துவின் அன்பை எடுத்து சென்ற மிஷனரிகளே. ஜேம்ஸ் சால்மர்ஸ்-ன் இளமைப் பருவம் 1841 ம் வருடம் ஆகஸ்ட் மாதம் 4 ம் தேதி “ஜேம்ஸ் சால்மர்ஸ்” ஸ்காட்லாந்து தேசத்தில் கல்சிற்ப ஆசாரியின் மகனாக பிறந்தார். 18 வயதில் தனது ஊரில் நடைபெற்ற எழுப்புதல் கூட்டத்தில் இரட்சிக்கப்பட்டு இயேசுவின் அன்பை அறிந்து, தமது வாழ்க்கையை மிஷனரியாக அற்பணித்தார். பட்ட படிப்புகளை முடித்தவுடன் தமது 26ம் வயதில் லண்டன மிஷனரி சங்கத்தில் இணைந்தார். “ரரோடோங்கா” தீவில் கிறிஸ்துவின் பணி 1867ம் வருடம்மே மாதம் “ரரோடோங்கா” (Rarotonga) என்ற தீவிற்கு மிஷனரியாக வந்திறங்கினார் ஜேம்ஸ் சால்மர்ஸ்.கிறிஸ்துவை அறியாத “ரரோடோங்கா” தீவில் வாழ்ந்த பழங்குடி மக்களின் மொழியை வெகு விரைவில் கற்று,அந்த மொழியிலே கிறிஸ்த்துவின் அன்பை அவர்களுக்கு அறிவித்தார்.
அந்த தீவில் பத்து வருடம் மிஷனரி பணி செய்து இருளின் ஆதிக்கத்தில் இருந்த மக்களை மெய்யான ஒளியாகிய இயேசுவினிடத்தில் சேர்த்தார். தீவு நாடான நியு கினியா-வில் கிறிஸ்துவின் பணி 1877 ம் வருடம்தமது 36ம் வயதில் ஆஸ்திரேலியாவுக்கு மேல் வடபகுதியில் அமைந்திருக்கும் தீவு நாடான “நியு கினியா” விற்கு(New Guinea) தனது மனைவியோடு சென்றார் ஜேம்ஸ் சால்மர்ஸ். அந்த தீவுகளில் வசித்த மக்கள் மனித மாமிசம் உண்பவர்களாக இருந்தனர். ஆபத்து மிகுந்த அந்த மக்களுக்கு சுவிசேஷம் சொல்ல போகையில் தமது கையில் எந்த விதமான ஆயுதங்களையும் எடுத்து செல்ல மாட்டார்.
ஏனென்றால் கையில் ஆயுதங்களோடு சென்றால் வெள்ளை மனிதன் நம்மை தாக்க வந்திருக்கிறான் என்று சொல்லி ஓடுவார்கள். இல்லையென்றால் தாக்க தொடங்குவார்கள். ஆபத்து நிறைந்த பழங்குடி மக்களின் மேல் கரிசனை கொண்டவராய் கிறிஸ்துவின் அன்பை அநேகருக்கு அறிவித்தார். 105 க்கும் அதிகமான கிராம தீவுகளுக்கு சென்று கிறிஸ்துவின் அறிவித்தார். 90 கிராம தீவுகளில் முதலாவது சென்ற வெள்ளை மனிதனும் இவரே. இயேசுவின் அன்பை எடுத்து சென்றவரும் இவரே ஆவார். பழங்குடி மக்களுக்கு உணவாகுதல் 1901 ம் வருடம் ஏப்ரல் 8 ம் தேதி ஈஸ்டர் ஞாயிறாக இருந்தது. முந்தைய நாளில் “கோரிபாரி” (Goaribari Island) என்ற தீவிற்கு படகில் சென்றிருந்த ஜேம்ஸ் சால்மர்சை அத்தீவின் பழங்குடி மக்கள் சூழ்ந்து கொள்ளவே, படகை விட்டு அவர் இறங்காமல் நாளை வருவதாக கூறி தனது பகுதிக்கு வந்தார். அடுத்த நாள் ஈஸ்டர் ஞாயிறு ஆராதனைகளை முடித்து விட்டு, கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் நற்செய்தியை அறிவிக்க ஆபத்து நிறைந்த “கோரிபாரி” தீவிற்கு மீண்டும் சென்றார். ஒலிவர் டோம்கின்ஸ் (Oliver Tomkins) என்ற மிஷனரியும் உடன் சென்றார்.
இவர்களது வருகையால் மிகவும் மகிழ்ந்த அத்தீவின் பழங்குடி மக்கள் இருவரையும் உற்சாக வரவேற்புடன், புதிதாய் அமைக்கப்பட்ட “தூபு” (Dubu) என்று அழைக்கப்படும் கேளிக்கை குடிசைக்கு அழைத்து சென்றனர். அந்த இடத்தில் மனிதர்களை சாகும் வரை சண்டையிட வைத்து பின்னர் அவர்களை பலியாக்கி உணவாக உண்பார்கள். இதை அறிந்திராத ஜேம்ஸ் சால்மர்சும், ஒலிவர் டோம்கின்சும் கிறிஸ்துவின் அன்பை அவர்களுக்கு அறிவித்தவன்னமாய் “தூபு” என்ற குடிசைக்கு சென்றனர். மரத்தினால் ஆன விக்ரகங்களை சுற்றிலும் அநேக மனித மண்டை ஓடுகள் குவிக்கபட்டிருந்தது. இருவரும் அதை பார்த்துக் கொண்டிருந்த வேளையிலே, எந்தவித எச்சரிப்பும் இன்றி அந்த பழங்குடி மக்கள் அவர்களை தாக்க தொடங்கினர். சில நிமிடங்களில் அவர்களது உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு, அருகில் கொதித்து கொண்டிருந்த குழம்பில் போடப்பட்டது. ஜேம்ஸ் சால்மர்சும், ஒலிவர் டோம்கின்சும், இயேசு உயிர்த்தெழுந்த அந்த ஈஸ்டர் நாளில், இயேசுவை அறிவித்துக்கொண்டே அந்த பழங்குடி மக்களுக்கு உணவாக மாறினர். ஜேம்ஸ் சால்மர்ஸ் மற்றும் ஒலிவர் டோம்கின்சின் உடல்கள் விதையாகவும்,
அந்த மக்களுக்கு உணவாகவும் மாறியதை அறிந்து அநேக மிஷனரிகள் “நியு கினியா” தீவை நோக்கி சென்று இயேசுவின் அன்பை அறிவித்தனர். அநேக மக்கள் கிறிஸ்துவை தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டனர். அதன் விளைவு, 7 கோடிக்கும் அதிமான மக்கள் வாழும் அந்த தீவுல், இன்றைக்கு 96% கிறிஸ்தவர்களாக மாறியுள்ளனர். “கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியா விட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான், மிகுந்தவிளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.” (யோவான் நற்செய்தி 12: 24) மிக எளிதான ஓர் உவமை, மிக ஆழமான உண்மைகளைக் கூறும் உவமை.
கோதுமை மணி படைக்கப்பட்டதற்கு முக்கியமான இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று, அது உணவாக மாறி, வேறொரு உயிரை வளர்க்க வேண்டும். முதலாவதாக நாம் கிறிஸ்துவுக்காய் வாழ்ந்து சாதித்து அநேகருடைய வாழ்வில் கிறிஸ்துவை வளர்க்க வேண்டும். முடிவிலே அது விதையாக மாறி, தன் இனத்தைப் பெருக்க வேண்டும். இந்த இரண்டு காரணங்களும் நிறைவேற, கோதுமை மணி தன் சுய உருவை, உயிரை இழக்க வேண்டும். அதாவது கிறிஸ்துவுக்காய் நாம் உருமாறி பின்னர் விதையாய் மாறவேண்டும். இதற்கு மாறாக, கோதுமை மணியை நாம் அலங்காரப் பொருளாகவும் பயன்படுத்தலாம். ஆனால்,அலங்காரப் பொருளாக இருப்பது கோதுமை மணியின் இயல்பும் அல்ல.
அதினால் மற்றவர்களுக்கு எந்த பயனும் அல்ல.நீங்களும் நானும் கிறிஸ்துவைப் போல உருமாறி அவருக்காய் வாழ்ந்து சாதிக்க அழைக்கபட்டுள்ளோம். விதையாய் மண்ணில் வீழ்ந்து மிகுந்த விளைச்சலை கொடுக்கும் படியாகவும் அழைக்கபட்டுள்ளோம். எங்களை நேசித்து வழிநடத்தும் தெய்வமே, இயேசுவே, ஜேம்ஸ் சால்மர்ஸ் போன்று துணிவுடன் உமக்காய் ஊழியம் செய்வேன். கிறிஸ்துவை அறியாத ஜனங்களுக்கு கிறிஸ்துவின் அன்பை அறிவிப்பேன். இயேசுவின் மூலமாய் ஜெபிகின்றேன் பிதாவே. ஆமேன்.
நீங்கள் என்னை அம்பு எய்து , சுட்டுக் கொன்று போடலாம் . ஆனால் நானோ உங்களுடைய உண்மையான நண்பன் . நான் நேசித்து சேவிக்கிற என் ஆண்டவர் இயேசுவிடம் என்னை அதி சீக்கிரத்தில் அனுப்புகிறீர்கள் என்பதைத் தவிர மரணம் என்னை ஒன்றும் செய்யாது . உங்கள் மத்தியில் மரிக்க நான் பயப்படவில்லை " என முழங்கினார் ஜான் பேட்டன் .
பயங்கர ஆயுதங்களோடு மிருகத்தனமாகத் தன்னைத் தாக்க வந்த மிலேச்சர்கள் நடுவில் தைரியமாய் நின்றார் ஜான் பேட்டன் . அன்பும் இரக்கமும் அவர் முகத்தில் காணப்பட , அமைதியும் தைரியமும் உள்ளவராய் முழங்கால்படியிட்டார் .
கிறிஸ்துவின் அன்பைக் கூற வந்த இத்தெய்வத் தூதுவரை எந்நேரத்திலும் கொல்ல ஆயத்தமாயிருந்தனர் அம்மிலேச்சர்கள் .
ஆரம்ப வாழ்க்கை :
ஜான் பேட்டன் 1824ஆம் ஆண்டு , ஸ்காட்லாந்தில் தெய்வ பயமிக்க பெற்றோர்களுக்குப் பிறந்தவர் . ஜெபவீரரான அவருடைய தகப்பன் வாணிகம் செய்து வந்தார் . அவர்களுடைய இல்லத்தில் ஓர் அறை " பரிசுத்த ஸ்தலம் " என்று அழைக்கப்பட்டது . ஒருநாளில் மூன்று முறை ஜானின்தகப்பனார் அவ்வறைக்குள் சென்று , தன் உள்ளத்தை தேவனுக்கு முன்பாக ஊற்றி விடுவார் . தன் குடும்பத்திற்காகவும் , ஸ்காட்லாந்து நாட்டிற்காகவும் , உலகம் முழுமைக்காகவும் ஊன்றி ஜெபிப்பார் .
தகப்பனின் சிறந்த தெய்வீக ஜெபவாழ்க்கை ஜானுக்கு சவாலாக அமைந்தது . அவனுடைய பிற்கால வாழ்க்கையில் தன் தகப்பனைப் போல கிறிஸ்துவோடு நடக்க , தீர்மானிக்க உதவியது . ஜானின் தாயார் சிறந்த விசுவாசமும் , பக்தியுமுள்ள பெண்ணாக விளங்கினார் .
ஒரு சமயம் ஜானின் தகப்பனார் வெளியூர் சென்றிருந்தபோது , வீட்டில் உணவுப்பொருட்கள் தீர்ந்து போனது . அதைக்கண்டு தாய் பசியோடு ஆகாரம் வேண்டி நிற்கும் தன் அருமை மக்களோடு ஜெபித்து , அவர்களைப் படுக்கைக்கு அனுப்பினார் . " நாளைக் காலை தேவன் நமக்கு ஏராளமான ஆகாரத்தை அனுப்புவார் ' என்று உறுதிகூறி , தன் பிள்ளைகளைப் படுக்கைக்கு அனுப்பினார் .
ஜானின் தகப்பனார் உண்மை நிலை அறியாமலேயே ஏராளமான உணவுப்பொருட்களை அடுத்த நாள் காலை அனுப்பியிருந்தார் . அதைக்கண்டு அதிசயித்த தன் பிள்ளைகளைப் பார்த்து ஜானின் தாயார் , " அருமை மக்களே ! உங்கள் தேவைகளை யெல்லாம் ஜெபத்தில் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள் . பரமபிதாவை நேசியுங்கள் . நன்மையான யாவற்றையும் உங்களுக்குத் தந்து , பிதா தம்மை மகிமைப்படுத்துவார் " என்றார் .
இந்த நிகழ்ச்சியை ஜான் ஒருபோதும் மறக்கவில்லை . பன்னிரெண்டாம் வயதில் ஜான் தன் தகப்பனுக்கு வாணிபத்தில் உதவி செய்தும் , கிரேக்க , லத்தீன் மொழிகளைக் கற்றும் அறிந்தார் . இயந்திரங்களையும் , இயந்திர சாதனங்களையும் அவர் பயின்று கொண்டது , பிற்காலத்தில அவர் மிஷனெரியாகப் பணிபுரியும் போது பேருதவியாக இருந்தது . இவைகளுக்கு முன்னதாகவே ஜான் , கிறிஸ்துவைத் தன் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டு , தன்னை ஒரு நற்செய்திப் பணியாளனாக ஆயத்தம் செய்ய ஆவல் கொண்டார் .
கிளாஸ்கோ நகரத்தில் இறையியல் கல்லூரியில் சேரும் வாய்ப்பு அவருக்குக் கிட்டியது . தன்னைப் பயிற்றுவிக்க வீட்டை விட்டு வேதாகமக் கல்லூரியில் சேர்ந்தார் . கிளாஸ்கோ நகரத்தில் வாழ்க்கை மிகக் கடினமானது . ஜான் மருத்துவம் , இறை நூல் ஆகியவற்றைப் படித்துக் கொண்டே , அங்குள்ள ஒரு பள்ளியில் ஆசிரியனாகப் பணி செய்தார் . தன் வாழ்க்கைச் செலவை ஈடுகட்ட உழைத்தார் . நகரின் ஒருபிரிவில் உள்ள தாழ்த்தப்பட்டோருக்காக சேவை செய்யும் கிளாஸ்கோ நகர மிஷனெரி ஸ்தாபனத்தில் சேர்ந்து கிறிஸ்தவ சேவையில் ஈடுபட்டார் .
அநேக ஆண்டுகள் இந்த ஊழியம் அவருக்கு மனச்சோர்வைக் கொண்டு வந்தது . என்றாலும் , தொடர்ந்து திருப்பணி செய்து வந்தார் .
பெரிய அளவில் கர்த்தருடைய திராட்சைத் தோட்டத்தில் பணிபுரியுமுன் , ஒரு சிறிய இடத்தில் பணிபுரிந்து தன் உண்மையை நிரூபித்துக் காட்டினார் .
பத்து ஆண்டுகளுக்குப் பின்னரே , அவருடைய உண்மை ஊழியம் பலன்தர ஆரம்பித்தது . கிறிஸ்துவுக்கென்று அநேகரை ஆதாயப் படுத்தினார் . அவர்களில் அநேக குடிகாரர்கள் , வேலையற்று சோம்பித் திரிகிறவர்கள் , கடவுளைச் சபிக்கிறவர்கள் . ஆனாலும் , இத்தனை உழைப்பின் மத்தியிலும் தன் கல்லூரிப் படிப்பை ஜான் பேட்டன் தொடர்ந்து கற்று வந்தார் .
பிற நாடுகளில் கிறிஸ்துவை அறியாது அழிந்து கொண்டு இருக்கும் ஜன சமுதாயத்தைப் பற்றி பல ஆண்டுகளாக ஜானுக்கு மனபாரம் இருந்து வந்தது . வெளிநாடுகளில தெய்வப்பணி செய்ய , கடவுளின் அழைப்பு தனக்கு உண்டு என்பதை உணர்ந்த அச்சமயம் , நியூஹெப்ரிட்ஸ் என்னும் வேகளில் மிஷனெரி தேவையைப் பற்றிக் கேள்விப்பட்டார் .
அங்கு ஏற்கெனவே பணியாற்றிக் கொண்டிருந்த மிஷனெரியுடன் சேர்ந்து உழைக்க அழைப்புப் பெற்றார் . வேறு பாரும் போக விரும்பாத நிலையில் தேவ அழைப்பு ஜானுக்குக் கிடைத்தது . " இதுவரை வேறு எவரும் ஒப்புக் கொடுக்காததால் நீயே எழுந்து உன்னை அர்ப்பணி " என்ற தெய்வ தூண்டுதலை உடனே ஏற்று ஜான் தன்னை அர்ப்பணித்தார் . மிஷனெரி சங்கமும் ஏற்றுக்கொண்டது . ஆனால் கிளாஸ்கோ நகர மிஷன் ஸ்தாபனம் அவரை வெளிநாடு செல்ல அனுமதிக்கவில்லை .
அவருக்கு அறிமுகமானவர்களும் , நண்பர்களும் , அவரைப் புரிந்து கொள்ள முடியாமல் தவித்தனர் . ஏற்கெனவே நல்லதொரு திருப்பணியைச் செய்து வருகிறார் . ஏன் இவர் மிலேச்சர்களிடம் செல்ல வேண்டும் என்று நினைத்தார்கள் . ஒரு வயோதிபர் : " போக வேண்டாம் , இளைஞனே நரமாமிசப் பட்சினிகள் உன்னைத் தின்றுவிடுவார்கள் " என்றார் .
அதற்கு ஜான் பேட்டன் சிரித்தபடியே பதிலளித்தார் ; " பெரியவரே , நீங்கள் வயது சென்று சில நாட்களில் மரித்து அடக்கம் செய்யப் படலாம் . மண்ணுக்கடியில் புழுக்கள் அரித்து சாப்பிடும் . நான் கிறிஸ்து இயேசுவை கனப்படுத்தி கீழ்ப்படிந்து அவரைச் சேவிக்கும்போது மனிதர் சாப்பிட்டால் என்ன ? புழுக்கள் அரித்தால் என்ன ? " என்றார் .
ஜானின் பெற்றோர் அவரைத் தெய்வ நடத்துதலுக்குக் கீழ்ப்படிந்து ஊழியத்தைத் தெரிந்து கொள்ளும்படி விரும்பினார்கள் . ஜான் பேட்டன் தன் மனைவியுடன் நியூஹெப்ரிட்ஸ் செல்ல , 1858ஆம் ஆண்டு கப்பல் ஏறினார் . அப்போது அவருக்கு வயது 34 .
நியூஹெப்ரிட்ஸ் நரமாமிசப் பட்சினியரின் தீவுக்கூட்டம்
தென்பசிபிக் கடலில் , ஆஸ்திரேலியாவிலிருந்து 1400 மைல்கள் வடகிழக்காக அமைந்துள்ள தீவுகளின் கூட்டமே இந்த நியூஹெப்ரிட்ஸ் எனப்படும் இடம் . இங்கு வாழ்ந்து வந்த மக்கள் மிலேச்சர்களாகவும் , பண்பாடு அற்றவர்களாகவும் இருந்தனர் . பயங்கர கொடுமைகள் புரிந்து மனித மாமிசத்தைப் புசிக்கிறவர்களாகவும் காணப்பட்டனர் .
ஒரு ஆளைக் கொல்வது அவர்களுக்கு சர்வ சாதாரணம் . அதிக கொலைகளைச் செய்ததினால் தைரியசாலிகளாவது அல்ல . அசுத்த ஆவிகளைப் பற்றிய பயமே அவர்களைக் கொலை செய்யத் தூண்டியது . அசுத்த ஆவிகளிடமிருந்து தங்களைப் பாதுகாக்க அநேக விக்கிரகங்களையும் , மந்திரங்களையும் , மந்திரவாதிகளையும் ஏற்படுத்தியிருந்தனர் . இந்த மந்திரவாதிகள் அதிக அதிகாரத்தையும் , செல்வாக்கையும் பெற்றிருந்தனர் . இயற்கை மரணம் உண்டு என்பதையே அறியாதிருந்தனர் .
ஒருவன் மரித்துவிட்டால் அது பில்லிசூனியத்தால் ஏற்பட்டது என்று நம்பினர் . ஒருவன் மரித்தவுடன் எல்லாரும் கூடி " யார் இந்த மரணத்தை வருவித்தது " என்று தீர்மானிப்பார்கள் . செத்துப் போனவனுக்கு எதிரியாக இருந்த ஒருவனைக் கடைசியில் கண்டுபிடித்து , அவனைச் சுட்டுத்தள்ள அவர்கள் தலைவன் ஒரு இளைஞனுக்கு கட்டளையிடுவான் . ( அத்தீவுகளுக்கு வரும் வியாபாரிகளிடமிருந்து , இந்த மிலேச்சர்கள் துப்பாக்கியைப் பெற்றிருந்தனர் ) . எதிரியாக நினைத்தவனைச் சுட்டுக் கொன்ற வாலிபனை , சுடப்பட்டு இறந்தவனின் நண்பர்கள் சுட முயற்சிப்பார்கள் .
இப்படியாக இத்தீவின் மிலேச்ச இனமக்கள் அனைவரும் அழியும்வரை ஒருவரையொருவர் சுட்டுக் கொல்வார்கள் . ஒருவன் இறந்ததால் ஏற்பட்ட இழப்பு , அவ்வினத்தையே அழிக்கும் திலையை ஏற்படுத்திவிடும் . கணவன் மரிப்பானேயாகில் மனைவியையும் கழுத்தை நெறித்துக் கணவனுடைய பிரேதக் குழியிலேயே போட்டுவிடுவார்கள் . வயதான முதியவர்கள் அவர்களுக்குப் பாரமாக இருப்பதால் அடித்துக் கொன்று விடுவார்கள் . பேய்களையும் , முன்னோர்களின் ஆவிகளையும் வணங்கினர் .
கிறிஸ்துவைப் பற்றி ஒரு போதும் கேள்விப்படாதவர்கள் . கிறிஸ்தவ மிஷனெரிகள் இப்படிப்பட்ட மக்களுக்குச் சுவிசேஷத்தை எடுத்துச் சென்றனர் .
முதல் மிஷனெரிகள் அங்கு இறங்கியவுடனே , அடித்துக் கொல்லப்பட்டு புசிக்கப் பட்டனர் . அவர்களைத் தொடர்ந்து சென்ற மற்ற மிஷனெரிகளும் கொல்லப்பட்டனர் . அல்லது விரட்டப் பட்டனர் .
ஆனால் ஜான் பேட்டன் இத்தீவுகளுக்கு வருகை தந்தபோது இரண்டு மிஷனெரி தம்பதிகள் இத்தீவுகளில் தங்கி , பெரிய ஆபத்துகளுக்கு மத்தியிலும் ஊழியம் செய்து வந்தனர் . மனந்திரும்பிய ஒரு சிலரே இருந்தனர் .
- " டான்னா " எனப்படும் ஒரு தீவு , நியூஹெப்ரிட்ஸ் தீவுக்கூட்டங்களில் ஒன்றாகும் . இங்கு வேதவசனமாகிய விதையை ஊன்றும்படி எடுத்த எல்லா முயற்சிகளையும் முறியடித்தனர் மந்திரவாதிகள் . இம்மந்திரவாதிகள் சுவிசேஷம் சொல்லப்பட பெரிய தடையாயிருந்தனர் . தீவு மக்கள் நற்செய்தியை நம்பி ஏற்பார்களானால் தங்களுடைய சகல ஆதிக்கமும் அழிந்து விடும் என்று அறிந்திருந்தனர் .
இயற்கையின் சீற்றங்களும் இன்னல்களும் நேரும்போது , அதற்கு மிஷனெரிகளே காரணம் என்று சொல்லி அவர்களைக் கொலை செய்ய ஏவினர் . வெள்ளைக்கார வியாபாரிகளும் இத்தீவு மக்களைமிஷனெரிகளுக்கு எதிராகத் தூண்டிவிட்டனர் .காரணம் யாதெனில் , இங்கு வரும் வியாபாரிகள் தீவு மக்களை ஏமாற்றி , தீவுச் செல்வங்களை அபகரித்துச் சென்றனர் .
இப்படிப்பட்ட தீவில்தான் ஜான் பேட்டனும் , அவர் மனைவியும் வந்து இறங்கினர் . டான்னா தீவில் கால் வைத்ததும் பேட்டன் அவர்கள் , பல வர்ணங்களைத் தங்கள் மேல் பூசிக்கொண்டு இருந்த காட்டு மிராண்டிகள் அமைதலாய் இருப்பதைக் கண்ணுற்றார் . அத்தீவு மக்கள் அவரையும் , அவர் கொண்டு வந்திருந்த பொருள்களையும் பார்ப்பதில் அதிக ஆர்வமுள்ளவர்களாய் இருந்தனர் . பேட்டன் தம்பதிகள் மரவீட்டைத் தங்களுக்கு அமைப்பதில் ஈடுபட்டிருக்கும் பொழுது , ஒரு மைல் தள்ளி நரமாமிச விருந்து நடனம் நடந்து கொண்டிருந்தது .
மிகுந்த மனபாரத்தோடு இத்தீவின் மக்களின் இரட்சிப்புக்காகப் பாடுபட்டார் பேட்டன் . டான்னா தீவின் மக்கள் பேசும் மொழிக்கு எழுத்து வடிவம் இல்லை . ஜான் சைகை மூலமே அவர்களோடுப் பேசினார் . மிகுந்த பிரயாசப்பட்டு இரண்டு கேள்விகளுக்கு டான்னா மொழியில் வார்த்தையைக் கண்டுபிடித்தார் . அவை , " இது என்ன ? " , " உன் பெயர் என்ன ? " என்பதே .
தொடர்ந்து இவ்விரு கேள்விகளையே கேட்டு பேட்டன் அத்தீவு மக்களின் மொழியிலுள்ள பல பெயர்களையும் சொற்களையும் அறிந்து கொண்டு அவர்கள் மொழியைக் கற்றுக் கொண்டார் .
உபத்திரவங்கள் :
பேட்டன் தம்பதியருக்கு டான்னாவில் தங்கியிருக்கும் போது ஒருமகன் பிறந்தான் . அது அவர்களுக்கு அளவற்ற மகிழ்ச்சியைக் கொடுத்தது . ஆனால் மூன்று வாரங்களுக்குள் தாய் விஷக்காய்ச்சலால் தாக்கப்பட்டு மரித்துப்போனாள் . மகனும் ஒரு வாரத்திற்குள் மரித்துப் போனான் . பேட்டனும சுகவீனம் அடைந்து விட்டார் . எனினும் , தானே தன் அருமை மனைவியையும் , மகனையும் அடக்கம் செய்ய குழி தோண்ட வேண்டியதாயிற்று . தாங்க முடியாத துக்கம் , மனவேதனை என்று பேட்டன் அச்சூழ்நிலையை வர்ணித்துள்ளார் ,
கிறிஸ்துவில் மாத்திரம் என் ஐக்கியம் நிலைத்திராதிருந்தால் ஒரு மனநோயாளியாக மாறியிருப்பேன் என்றார் . டான்னா தீவு ஊழியத்தில் , பேட்டனுடைய உயிருக்கு எப்போதும் ஆபத்துக்கள் சூழ்ந்து இருந்தன . அநேக முறை அத்தீவில் மழை இல்லாதபோதும் , வியாதிகள் அத்தீவு மக்களைத் தாக்கும் போதும் , பேட்டன் தான் அதற்கு காரணமானவர் என்று சொல்லி , கொலை செய்ய முயற்சித்தனர் .
கர்த்தருடைய பாதுகாக்கும் கரம் அவரோடு தொடர்ந்து இருந்ததினால் அவரை உயிர்ச்சேதங்களுக்கு மீட்டு இரட்சித்தது . இதுவுமல்லாமல் பேட்டன் வைத்திருந்த பொருள்களைத் திருடவும் , அபகரிக்கவும் செய்தனர் . படுக்கை , போர்வை , துணிகளை எடுத்துச் சென்றுவிட்டனர் .
ஒருமுறை சமையல் பாத்திரங்கள் அனைத்தையும் எடுத்துச் சென்றுவிட்டனர் . பேட்டன் தீவு தலைவனை அணுகி , கெஞ்சி மன்றாடியதின் விளைவாக , அவருடைய வெந்நீர் பாத்திரம் ( கெட்டில் ) மூடி இல்லாமல் திருப்பிக் கொடுக்கப்பட்டது .
ஒருநாள் பிரிட்டிஷ் யுத்தக் கப்பல் அத்தீவுக்கு அருகில்வர , அந்த மக்கள் பேட்டனிடம் ஓடிவந்து , " கப்பல் கேப்டன் உன்னுடைய பொருட்களை நாங்கள் திருடி விட்டோமா என்று கேட்பானா ? " என்று கேட்டனர் . அதற்கு பேட்டன் , " ஆம் , அவன் அப்படிக் கேட்டால் நான் உண்மையைச் சொல்லத்தானே வேண்டும் " என்றார் . பேட்டன் அப்படி சொன்னவுடனே திருடப்பட்ட அவருடைய எல்லா பாத்திரங்களும் திரும்பி வந்து விட்டன .
டான்னா தீவு மக்கள் நஹாக் என்ற தீய சடங்கு செய்வதுண்டு . வேண்டாத ஒருவனை மரிக்கும்படிச் செய்யப்படும் ஒரு சடங்காகும் . அச்சடங்கைச் செய்ய சாகடிக்கத் தீர்மானித்த மனிதன் ருசிபார்த்த ஆகாரம் தேவை .
பேட்டன் , கடித்து ருசி பார்த்த சில பழங்களை அவர்களிடம் கொடுத்தார் . அதை வைத்துக் கொண்டு பேட்டன் மரிக்கும்படியாக தீய சடங்கை நடத்தினர் . ஆனால் , அவரோ எந்தத் தீங்கும் நேராதவராய் இருந்தார் .
இந்த நிகழ்ச்சி இரண்டு மந்திரவாதிகளின் மனதில் கிரியை செய்தது . அவர்கள் இயேசுவின் ஒப்பற்ற தியாக செய்திக்குச் செவி சாய்த்தனர் . வெள்ளைக்கார கப்பல் வியாபாரிகளும் தீவு மக்களைத் தூண்டிவிட்டு கொலை செய்யச் சொன்னார்கள் .
ஏனெனில் பேட்டன் , துப்பாக்கி போன்ற தீய தளவாடங்களை வாங்க வேண்டாமென்றும் , புகையிலை , மதுபானங்களைப் பெற்றுக் கொள்ள வேண்டாமென்றும் தடுத்திருந்தார் . ஒவ்வொரு முறையும் அவருடைய உயிரைப் பறிக்க மேற்கொண்ட முயற்சிகளையெல்லாம் , எல்லாம் வல்ல தேவன் முறியடித்தார் .
அம்மை நோயால் பாதிக்கப்பட்டிருந்த சிலரை , கப்பலில் வந்த வெள்ளை வியாபாரிகள் அத்தீவில் இறக்கிவிட , அம்மை நோய் வேகமாக பரவி அத்தீவு மக்களில் மூன்றில் ஒரு பங்கை மரிக்கும்படிச் செய்தது . இதற்கு பேட்டனே காரணம் என்று குற்றம் சாட்டிக் கொலை செய்ய எத்தனித்தனர் .
ஒருநாள் பேட்டன் , தன் மரவீட்டைப் பழுதுபார்த்துக் கொண்டு இருக்கும்போது , தீவுத்தலைவன் தன் ஆட்களோடு வந்து அவரைச் சூழ்ந்து கொண்டான் . சிறிது நேரம் அவரைப் பார்த்துக் கொண்டே இருந்தபின் , துப்பாக்கிகளை பேட்டன் தலைக்கு நேராக நீட்டினர் . அவர் தப்பிக்க முடியாத நிலையில் ஜெபம் மாத்திரமே செய்தார் .
" என் நாமத்தினால் எதைக் கேட்டுக் கொள்வீர்களோ , அதை நான் செய்வேன் " என்ற வசனமே அவருடைய நினைவுக்கு வந்தது . அவர் திடமனதடைந்து , தன்னைத் தீமை அணுகாமல் கர்த்தர் பாதுகாப்பார் என்று அறிந்து கொண்டார் . முதல் வெடியை வெடிக்க அந்த முரடர்கள் அவர்களுக்குள்ளே ஒருவரையொருவர் தூண்டிவிட்டனர் . ஆனால் முடியவில்லை . பின்வாங்கிப்போய் விட்டனர் . இம்முறையும் தேவன் தமது ஊழியனைப் பாதுகாத்துக் கொண்டார் .
மிஷனெரிக் கப்பல் வாங்கப்படுதல்
ஒய்வுநாள் பாடசாலை பிள்ளைகளின் காணிக்கை , ஜெபங்களின் மூலமாக பேட்டன் அவர்கள் ஒரு மிஷனெரி கப்பலை வாங்கும் முயற்சியில் ஈடுபட்டார் .
வளர்ந்து வரும் பலத்த எதிர்ப்புகளை மேற்கொள்ள முடியாதவராய் , பேட்டன் டான்னா தீவைவிட்டு வெளியேறினார் . ஆஸ்திரேலியா நாட்டில் பிரயாணம் செய்து ஒரு மிஷனெரி கப்பலை வாங்க நிதி திரட்டினார் . தீவுகளில் ஊழியம் செய்ய மிஷனெரிக் கப்பல் மிக அவசியத் தேவையாக இருந்தது . அவருடைய மன்றாட்டுகள் எல்லாம் ஆஸ்திரேலியா நாட்டின் ஓய்வுநாள் பாடசாலையில் கொடுக்கப்பட்டன . அவருடைய வேண்டுதல்களுக்கு இணங்க சிறிய சிறிய காணிக்கைகளும் , நிதிகளும் சேர்க்கப்பட்டு , " டேஸ்பிரிங் " என்ற கப்பலை மிஷனெரி உபயோகத்திற்கு என்று வாங்கினார் .
நியூ ஹெப்ரிட்ஸ் தீவுகளில் திருப்பணியாற்ற எண்ணிப் பார்க்கவும் முடியாத சிறுபிள்ளைகளின் காணிக்கையும் , ஜெபமும் ஒப்பற்ற ஓர் ஊழியத்தைச் செய்வதற்கான கப்பலை வாங்கும் படி செய்தது . வாலிபரும் , பிள்ளைகளும் அவர்களுடைய அற்பமான காணிக்கைகளாலும் ஜெபங்களாலும் ஒரு பெரிய மிஷனெரி ஊழியத்தை ஆதரிக்க முடியும் என்று நிரூபித்ததை இந்நிகழ்ச்சியின் மூலம் நாம் அறிந்து கொள்ளுகிறோம் அன்றோ !
அனீவாதீவில் ஊழியம்
ஜான் பேட்டன் மறுமுறை திருமணம் செய்து கொண்டு , நியூஹெப்ரிட்ஸ் தீவுகளுக்குப் பயணமானார் . இம்முறை அனீவா என்ற தீவைச் சென்றடைந்தார் . அனீவா தீவு மக்கள் அவரை அன்புடன் வரவேற்றபோது , ஊழியம் வியாபித்துப் பரவியது . முதிர்வயதுள்ள அத்தீவுத் தலைவன் இரட்சிக்கப் பட்டான் . பேட்டன் தம்பதியர் அத்தீவு மக்களுக்கு உடையணிய கற்றுத் தந்தார்கள் .
ஒரு சமயம் சிறிய மரத்துண்டில் பேட்டன் செய்தி எழுதி , தன் மனைவிக்கு , ஒரு தலைவன் மூலம் அனுப்பினார் . அவர் மனைவியும் அச்செய்தியைப் படித்து விட்டு பேட்டன் விரும்பிய பொருளைக் கொடுத்து அனுப்பினாள் . " சிறிய மரத்துண்டு பேசுகிறதே " என்று அறியாமையிலிருந்த தலைவன் ஆச்சரியப்பட்டுப் போனான் . இந்நிகழ்ச்சியை வைத்து பேட்டன் அவனுக்கும் மற்றவர்களுக்கும் மரத்துண்டில் எழுதப்பட்ட செய்தியை வாசித்துக் காண்பித்து , அத்தீவு மக்களும் எழுதப்படிக்கக் கற்றுக் கொள்ளும்படிச் செய்தார் . அனீவா என்னும் தீவு ஏழுமைல் நீளமும் , இரண்டு மைல் அகலமுமுடைய சிறிய தீவாகும் . தீவின் அனைத்துப் பழங்குடியினரும் கிறிஸ்துவுக்கென்று வழிநடத்தப்பட்டு அவரால் மீட்கப்பட்டார்கள் .
இது எப்படி நடந்தது என்றால் அனீவா நல்ல குடிநீர் வசதியற்ற ஒரு தீவாக இருந்தது . பேட்டன் அவர்கள் பலமுறை ஜெபித்து ஒரு கிணறு தோண்டும் முயற்சியில் தானே இறங்கினார் . தீவு மக்கள் இதைப் புரிந்து கொள்ள முடியவில்லை . அவர்கள் எப்படி மழை பூமிக்கடியிலிருந்து வரும் என்று விளங்கிக் கொள்ள முடியாத நிலையில் இருந்தனர் . கிணறு தோண்டப்படும் இடத்தின் அருகே வர பயந்தார்கள் . அவர்கள் எல்லாரும் தங்கள் கைகளைக் கோர்த்துக் கொண்டு , ஒவ்வொருவராய் உள்ளே எட்டிப் பார்த்தனர் . பேட்டன் அவர்கள் தான் தோண்டிய கிணற்று நீரை ருசி பார்க்கச் சொன்னார் . தீவுத்தலைவன் தண்ணீரைப் பெற்றுக் கொண்டு ஆட்டி ஆட்டு முகர்ந்து பார்த்தான் . கடைசியில் வாயில் ஊற்றிக் கொண்டு ருசி பார்த்தான் .
அவன் ஆச்சரியத்தில் மூழ்கினவனாய் யேகோவாவே உண்மையான தெய்வம் " என்று ஆரவாரித்தான் . பேட்டன் அவர்களும் , " யேகோவா என் தெய்வம் . அவரே உங்களுக்கு இந்த நல்ல நீரைக் கொடுத்தார் ' ' என்றார் .
உடனே தீவுத் தலைவனின் ஆணைப்படி எல்லா விக்கிரகங்களும் கொளுத்தப்பட்டு புதைக்கப்பட்டன . தீவின் அனைத்து மக்களும் கிறிஸ்து இயேசுவின் இரட்சிப்புக்குள்ளாக வந்தனர் .
1899ஆம் ஆண்டு , அனீவா மொழியின் புதிய ஏற்பாட்டை பேட்டன் பிரசுரித்தார் . அந்த ஆண்டு முடிவிற்குள் 25 முதல் 30 தீவுகளில் மிஷனெரிகள் கிறிஸ்துவின் சாட்சிகளாய் , மிலேச்சர்களான காட்டுமிராண்டிகள் மத்தியில் பணிபுரிய வந்து விட்டனர் .
கிறிஸ்துவின் ஒளி பரவிற்று . முதுமை அடைந்த நிலைமையிலும் , தெய்வ தூதுவர் ஜான் பேட்டன் அவர்கள் " நரமாமிசப் பட்சினிகளுக்கென்று என் உயிருள்ளவரை உழைப்பேன் " என்று தீர்மானித்தார் . நியூ ஹெப்ரிட்ஸ் தீவுகளின் இரட்சிப்புக்கென்று ஆஸ்திரேலியாவில் இருந்து கொண்டே ஜெபிப்பார் . மற்றவர்களை ஜெபிக்கத் தூண்டுவார் .
பொருளாதார தேவைகளைத் தேடி அனுப்புவார் . அவரும் தீவுகளுக்குச் சென்று திருப்பணியில் ஈடுபடுவார் . அவருடைய மகனும் டான்னா தீவில் தங்கி ஊழியம் செய்து கொண்டு இருந்தார் . முன்பு பேட்டனை வெளியேற்றிய அத்தீவார் , கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ள ஆரம்பித்தனர் . முடிவில் நூற்றுக்கணக்கான மிலேச்சர்களும் நரமாமிசபட்சினிகளும் கிறிஸ்துவினிடம் வருவதைப் பார்த்தபின் ,
1907ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் நாள் மகிமைக்குள் பிரவேசித்தார் . அப்போது அவருக்கு வயது 88 . இன்று ஐந்து புராட்டஸ்டண்டு , மிஷனெரி இயக்கங்கள் நியூஹெப்ரிட்ஸ் தீவுகளில் பணிபுரிந்து வருகின்றன . டான்னா தீவையும் சேர்த்து எல்லாத் தீவுகளிலும் ஜான் பேட்டன் அவர்களின் அயராத உழைப்பின் பயனாக ஏராளமான கிறிஸ்தவ மக்கள் இன்றும் கிறிஸ்துவை வணங்கிப் போற்றுகிறார்கள் .
டேவிட் வா ! வனத்திற்குள் சென்று நாம் விளையாடி மகிழ்ச்சியடையலாம் " என்று நண்பர்கள் அழைத்ததற்கு , சிறுவன் டேவிட் அவர்களோடு போக முடியாதவனாய் மரத்தின் கீழே உட்கார்ந்திருந்தான் . அவன் பெலவீன சரீரம் உடையவன் . வீரச்செயல்களை அவனால் எடுத்துச் செய்ய முடியாது . டேவிட்டின் நண்பர்கள் புது அனுபவங்களையும் , சாதனைகளையும் தேடித் திரியும்போது , அவனால் அவர்களோடு செல்ல முடியாதவனாய் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தான் . ஏன் அத்தனை இளைத்த உடம்பு ?
எப்போதும் மரத்துண்டின் மீது உட்கார்ந்து மற்ற நண்பர்களின் விளையாட்டுகள் , தீரச் செயல்கள் இவைகளைத்தான் பார்த்துக்கொண்டு , இருக்க வேண்டுமோ ? கடவுளின் மேலான சித்தத்தை சிறுவன் டேவிட் அப்போது அறியாதிருந்தான் .
சிறுவன் டேவிட் டேவிட் பிரெய்னார்ட் , 1718ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20ஆம் தேதி அமெரிக்க ஐக்கிய நாடுகளில் பிறந்தவன் . மிகவும் இளைத்த மெலிவான சிறுவனாகக் காணப்பட்டான் . அவன் மற்ற பையன்களைப்போல ஓடி ஆடி விளையாட முடியாது .
அவனில் காணப்பட்ட மிக அமைதலான சுபாவத்திற்கு இதுவே காரணமாக இருக்கலாம் . ஆரம்ப வயதிலேயே தன் ஆத்ம மீட்பைப் பற்றி கவலைப்பட்டவன் . மரிக்க பயந்தவன் . ஆனால் மகிழ்ச்சியாயிருக்கவும் மரித்தபின் பரலோகம் செல்லவும் வாஞ்சித்த ஓர் இளைஞன் .
எனினும் மனந்திரும்புதல் என்னவென்று அவனுக்குத் தெரியாது . அவனுடைய 9ஆம் வயதில் தகப்பன் மரித்துப் போனார் . 14 வயதில் தன் தாயையும் இழந்தான் . சிறுவயதிலேயே அநாதையாக விடப்பட்ட பிரெய்னார்ட் மனம் சோர்ந்து ஆவிக்குரிய வாழ்க்கையின் நோக்கம் அற்றவனாய் காணப்பட்டான் .
புதுவாழ்வடைதல்
பிரெய்னார்ட் வாலிப வயதில் தன்னை தீய நண்பர்களிடம் இருந்து காத்துக் கொண்டான் . அதிக நேரம் ஜெபத்தில் தரித்திருந்தான் . வேதம் வாசித்து தியானிப்பதில் அதிக நேரம் செலவழித்தான் .
ஒவ்வொரு ஞாயிறு மாலையிலும் , மற்ற வாலிபரோடு சேர்ந்து , வேத ஆராய்ச்சியில் ஈடுபட்டான் . ஆழமான ஆவிக்குரிய வாழ்க்கை நடத்த முயற்சித்தான் . ஞாயிறு மாலையில் , அன்று கேட்ட தேவ செய்தியை மறுபடியும் நினைவில் கொண்டு வந்து ஆழமாய் மனதில் பதிய வைப்பான் . இவ்விதம் செய்வதனால் , தன்னில் சுயநீதியை நிலைநாட்டினானே அன்றி கிறிஸ்துவைத் தன் சொந்த இரட்சகராக அறிந்திருக்கவில்லை
தன் மனதில் மெய் சமாதானத்தையும் பெற்றிருக்கவில்லை . ஒருநாள் தேவ கோபாக்கினை தன்மேல் இருப்பதாக உணர்ந்தார் . மனநிம்மதியை இழந்துவிட்டார் . அன்றிலிருந்து அனுதினமும் மதக்கோட்பாடுகளை வெகு ஜாக்கிரதை அனுசரிக்க ஆரம்பித்துவிட்டார் . ஆனாலும் குற்ற உணர்வு அவரை மிகவும் வாட்டியது .
தன்னை கைவிடப்பட்டவனாக எண்ணினார் . தன் நற்கிரியைகளில் சார்ந்திருப்பதிலிருந்து அவரை விடுவித்துக்கொள்ள முடியவில்லை . கிறிஸ்துவையே முழுவதும் சார்ந்து நம்புவதில் அவருடைய சுயநீதி தடையாய் இருந்தது . முடிவில் தூய ஆவியானவர் முழுமையாய் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள உதவி செய்தார் . எவ்வித நிபந்தனையுமின்றி கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார் .
21ஆம் வயதில் புதிய வாழ்க்கையில் பிரவேசித்தார் . மறுபிறப்பின் அனுபவத்தைப் பெற்றார் . கல்லூரி படிப்பு - ஏல் கல்லூரியில் சேர்ந்து படிக்க பிரெய்னார்ட் திட்டமிட்டார் .
மறுபிறப்படைந்த இரண்டாவது மாதத்தில் கல்லூரி படிப்பை ஆரம்பித்தார் . பல சோதனைகள் மத்தியில் தூய வாழ்க்கை நடத்த முடியாது என்று பயந்தார் . கர்த்தருடைய வார்த்தையை தியானித்து ஜெபித்ததினால் அவர் அதிகமாய் ஆசீர்வதிக்கப்பட்டார் . கடவுளோடு ஐக்கியப்பட அதிக நேரத்தைச் செலவழித்தார் . கிறிஸ்துவைச் சேவிப்பதில் நாட்டம் கொண்டார் . படிப்பில் நல்ல கவனம் செலுத்தியதால் அவர் சிறப்பு மாணவனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் .
சரீர பெலவீனத்தால் நோய்வாய்ப்பட்டு , அநேகமுறை கல்வி கற்பதில் தடை ஏற்பட்டது . ஒருசமயம் கடின படிப்பினால் அதிக நோய்வாய்ப்பட்டு , வீட்டிற்குச் சென்று ஓய்வெடுக்க அனுமதிக்கப்பட்டார் .
காசநோயினால் பீடிக்கப்பட்டு இரத்தம் கக்கியதால் பெலவீனம் ஏற்பட்டது . வியாதிப்படுக்கையில் கிறிஸ்துவோடு அதிக நேரம் ஜெபிக்க வாய்ப்பிருந்தது . கடவுளோடு கொள்ளும் ஒரு மணி நேர உறவினால் வரும் பேரானந்தம் உலக இன்பங்களை யெல்லாம் விட மிக சிறந்தது . எவ்வளவுக்கதிகமாய் கிறிஸ்துவோடு உள்ள நமது ஐக்கியத்தின் இரகசியத்தை நாம்கற்றுக்கொள்ள வேண்டியதாய் இருக்கிறது . எல்லா சூழ்நிலைகளிலும் வெற்றியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கை அதனால் சாத்தியமாகிறது .
தேவ ஊழியத்திற்கு அழைப்பு
கல்லூரிப்படிப்பில் மூன்றாவது ஆண்டில் இருக்கும் போது கல்லூரியை விட்டு வெளியேற எதிர்பாராத துயர சூழ்நிலை ஏற்பட்டது . அவரது வாழ்க்கையில் இது ஒரு பெரிய ஏமாற்றமே . மற்ற சக மாணவர்கள் கல்லூரிப் படிப்பை முடித்து பட்டங்களைப் பெறும்போது அவர் தம் நாள் குறிப்பில் எழுதியதாவது : " இந்நாளில் நானும் கல்லூரியில் பட்டங்களைப் பெற்றிருக்க வேண்டும் . ஆனால் கடவுளே அதை எனக்குத்தர மறுத்து விட்டார் . அதே நேரத்தில் கிறிஸ்துவை அறியாத மக்களைப் பற்றிய ஒரு மனபாரத்தையும் கவலையையும் கர்த்தர் கொடுத்தார் " என்பதே .
அந்தகாரத்தில் இருக்கும் மக்களைக் குறித்து குறிப்பாக கவலை கொண்டார் . சிவப்பு இந்தியர் அல்லது அமெரிக்க இந்தியர்கள் என அழைக்கப்பட்ட ஆதி இனமக்களிடத்தில் திருப்பணி செய்ய மிஷனெரிகள் இல்லை . அவர்கள் கிறிஸ்துவை ஒருபோதும் அறிந்திராதவர்கள் . பலமுறை தன் நீண்ட ஜெபங்களில் இம்மக்களின் இரட்சிப்புக்காகப் போராடி , கிறிஸ்துவின் வழி நடத்துதலுக்காகக் காத்திருந்து நற்செய்தியை எடுத்துச் செல்ல ஆயத்தமாயிருந்தார் . " அமெரிக்க இந்தியர்களிடம் உம்மை மிஷனெரியாக அனுப்ப விரும்புகிறோம் . உம்முடைய உதவியைப் பெரிதும் வரவேற்கிறோம் " என்று நியூயார்க் போதகர் ஒருவரால் பிரெய்னார்டுக்கு கடிதம் அனுப்பப்பட்டது .
உட மிஷனெரியாகச் செல்ல விரும்பிய பிரெய்னார்ட் , முழு பெலத்தோடு காணப்படவில்லை . அமெரிக்க இந்தியர்களிடம் மிஷனெரியாகச் செல்லுகிறவர்கள் , அடர்ந்தகாடுகளையும் மிக ஆபத்தான காட்டாறுகளையும் , நீரோடைகளையும் கடந்து செல்ல வேண்டும் . இவர் எப்படி இத்தனை ஆபத்துகளையும் கடந்து செல்வார் ?
" கடவுள் அவரை மிஷனெரியாக அனுப்புவாரென்றால் அவருக்குத் தேவையான பெலனையும் , வல்லமையையும் அவர் கொடுப்பார் " என்று அவருடைய நண்பர்கள் கூறினார்கள் .
அமெரிக்க இந்தியர்களுக்கு மிஷனெரியாகச் சேவை செய்ய பிரெய்னார்ட் தன் மனதைத் திடப்படுத்தித் தீர்மானித்து விட்டார் . அமெரிக்க இந்தியர்கள் மத்தியில் திருப்பணி டேவிட் பிரெய்னார்ட் தன்னுடைய 24ஆம் பிறந்த நாளன்று நாள்குறிப்பில் , " என் வாழ்நாளை கிறிஸ்துவின் மகிமைக்காக தத்தம் செய்து செலவழிக்கப்பட ஒப்படைக்கிறேன் " என்று குறிப்பிட்டுள்ளார் . அடுத்த ஆண்டு அடர்ந்தகாடுகள் மத்தியில் தனியாக வாழ்ந்து , நாகரீகமற்ற இந்திய மக்களுக்கு கிறிஸ்துவை அறிவிக்க சென்றுவிட்டார் . புத்தகங்கள் , கூடுதலாக இருந்த உடைகள் ஆகியவற்றை விற்று விட்டார் .
வெளி உலகினின்று தன்னை பிரித்துக்கொண்டு , மகிழ்ச்சி தரக்கூடிய அந்த ஒரே இடத்தை நாடிச் சென்றார் . காடுகள் , மலைச்சரிவுகள் , பள்ளத்தாக்குகள் ஆகிய இடங்களில் வாழ்ந்து கொண்டிருந்த இந்தியர்கள் இருப்பிடத்திற்கு வந்து சேர்ந்தார் .
நாள் குறிப்பில் தனக்கு ஏற்பட்ட தீரச் செயல்களையும் அபூர்வ நிகழ்ச்சிகளையும் குறித்து வைக்க ஆரம்பித்தார் . இதிலிருந்துதான் அவருடைய வனவாழ்க்கையைப் பற்றிய உண்மைகளை அறிந்து கொள்கிறோம் . ஆபத்துகளும் , கடின வாழ்க்கை முறையும் பிரெய்னார்ட் அவர்கள் , அநேக முறை குளிருக்கும் , பசிக் கொடுமைக்கும் உட்பட்டார் . வாழ்க்கை வசதிகள் ஒன்றையும் 4G KILRIL 49 % 10 : 11 AM அவர் பெற்றிருக்கவில்லை . சோர்வு , சுகவீனம் , கடின வாழ்க்கை முறை இவற்றைத் தாங்கிக் கொண்டவராக திருப்பணியில் முன்னேறிச் சென்றார் . கொட்டும் பெருமழையில் ஓர் இரவு முழுவதும் பயணம் செய்தும் , ஒரு குடிசையோ , கூடாரமோ , மறைவிடமோ அவருக்கு தென்படவில்லை . மிக ஆபத்தான பாதைகளில் நடந்தும் , குதிரையின் மீதும் பிரயாணம் செய்வார் .
எப்போதுமே அவருடைய பிரயாணங்கள் மிகுந்த ஆபத்துக்கள் நிறைந்ததாகவே இருந்தன . ஒருவரும் சென்றடைய முடியாத சில இனமக்களிடம் செல்லுவதற்காக , மலைகளையும் செங்குத்தான பாறைகளையும் , இரவு நேரங்களில் கடக்க வேண்டியதாயிருந்தது . ஆபத்துக்கள் நிறைந்த சதுப்பு நிலப் பிரதேசங்களையும் , வனவிலங்குகள் வசிக்கும் காடுகளையும் கடந்து சென்றார் . ஒருநாள் கடுமையான இருளில் தன் மொழிப்பெயர்ப்பாளருடன் , ஒரு மலைப்பிரதேசத்தைக் கடந்து செல்ல முயற்சித்தார் . மலைகளுக்கு கீழே மிக ஆழமான மலை அருவிகளும் , ஆறுகளும் பாய்ந்து கொண்டிருந்தன . குதிரைகள் தடுமாறி தவறுமானால் , பலநூறு அடிகள் கீழே விழ ஏதுவாகும் . ஆழமான ஆறுகளில் விழுந்தாலும் தப்ப முடியாது . அன்று இரவில் குதிரையின் மேல் பிரெய்னார்ட் பிரயாணம் செய்து கொண்டிருக்கும்போது , பாறைகளின் இடுக்கில் குதிரையின் கால் சிக்கிக் கொண்டது . வலி தாங்கமுடியாமல் குதிரை துடிக்கவே பிரெய்னார்ட் தூக்கியெறியப்பட்டு தரையில் விழுந்தார் . தெய்வாதீனமாக கீழே புரண்டு ஓடும் ஆற்றில் விழாமல் தப்பினார் . கட்டுக்கடங்காமல் புரண்டு ஓடும் நீர் ஓடைகளைக் கடக்கும்போது ஜெபித்துக் கொண்டே தேவ ஒத்தாசையைப் பெற்று நடந்து செல்வார் . பலமுறை அவருக்கேற்ற ஆகாரம் கிடைக்காது . பத்து முதல் 15 மைல்கள் பிரயாணப்பட்டு ஒரு ரொட்டியை வாங்க வேண்டியதிருக்கும் . அப்படி வாங்கப்பட்ட ரொட்டியும் , சாப்பிடும் முன் புளிப்பாகி பூஷணம் பூத்து விடும் . சில சமயங்களில் அந்த ரொட்டியும் கிடைக்காமல் போய்விடும் . பலகைகள்மேல் பரப்பிபோடப்பட்ட வைக்கோல் , புல்மீது படுத்து உறங்குவார் .
அதிகத் தனிமையில் இருந்தபோது , அவருடைய மொழிப்பெயர்ப்பாளருடன் மாத்திரம் உரையாட முடியும் . மனபாரங்களைப் பகிர்ந்து கொள்ளும் கிறிஸ்தவ சகோதரர்கள் அவருக்கில்லை . அவரோடு ஜெபிக்கவும் யாருமில்லை . " எனக்கோ எவ்வித ஆறுதலும் இல்லை . என் அனைத்து ஆறுதல் தேறுதல்களும் கடவுளிடம் மட்டுமே உள்ளது " என்று நாள் குறிப்பில் எழுதி வைத்திருந்தார் .
சிவப்பு இந்தியர்கள் பிரெய்னார்ட் தான் ஊழியம் செய்யத் தெரிந்து கொண்ட இந்தியர்கள் , அநாகரீகமான ஆதிவாசிகள் , மூடநம்பிக்கையால் கட்டப்பட்டிருந்தவர்கள் . பறவைகள் , மிருகங்கள் , மரங்கள் , பருவகாலங்கள் ஆகியவற்றை வணங்கி வந்தனர் . அவர்களுடைய வணக்கமுறைகள் விநோதமானது .
ஆதிவாசிகளின் பூசாரிகள் , பிரெய்னார்ட்டின் மீது கோபமுற்றனர் . அவர் சாகவும் நோய்வாய்ப்படவும் மூடநம்பிக்கை செயல்களால் முயன்றனர் . கட்டுப்படுத்த முடியாத நடனங்கள் , பெரும் கூச்சல்கள் போட்டு , அவரை வீழ்த்த எண்ணினர் . அவரோ எவ்வித தீங்கும் நேரிடாமல் தைரியமாய் நின்று , கிறிஸ்துவே பூரண வல்லமையுடையவர் என்று அறிவித்தார் . அவர்கள் வணங்கும் எல்லா தெய்வங்கள் பேரிலும் , கிறிஸ்துவே அதிகாரமுடையவர் என்று சாட்சி பகர்ந்தார் .
ஒருநாள் ஒரு பூசாரி தோல் உடை உடுத்தி கிளிஞ்சல்களாலும் , இலைகளாலும் அலங்கரித்துக் கொண்டு அவரிடம்வந்தான் . " என்னுடைய இன மக்களைச் சந்தித்து , அவர்கள் பூர்வீக மதத்தையே பின்பற்ற வேண்டும் என்று போதிப்பேன் என்றான் .
டேவிட் அவனுக்குக் கிறிஸ்துவைப் பிரசங்கித்தார் . அந்த முதிய பூசாரி மிகக் கவனமாய் கேட்டான் . உள்ளத்தில் உணர்த்தப்பட்டவனாய் , இனி பரலோகப் பிதாவை மாத்திரமே சேவிப்பேன் என்று தீர்மானித்தான் .
சிவப்பிந்திய மக்களிடம் பரவச நடன நிகழ்ச்சி ஒன்று உண்டு . அதுவே அவர்களுக்கு அதிக உற்ச்சாகத்தைத் தரும் போர் நடனமாகும் . வெட்டவெளியில் பெருந்தீயை வளர்த்து அதைச் சுற்றிலும் நடனமாடும் நிகழ்ச்சியாகும் . இளம் போர் வீரர்களும் , வயோதிப பூசாரிகளும் , தீயைச் சுற்றி சுற்றி வருவார்கள் . ஜூவாலை உயர எழும்பும்போது , அவர்களும் உயரமாக குதிப்பார்கள் . மேலும் கீழுமாகக் குதித்து நடனம் புரிவார்கள் . பேரிரைச்சலும் கூச்சலும் இருக்கும் . ஓர் இரவு முழுவதும் நடனமாடிகளிப்பர் . பல முறை டேவிட் இந்நடனக் காட்சியை மறைந்திருந்தவாறே பார்த்துக் கொண்டிருப்பார் .
அடுத்தநாள் அவர்களுக்கு சுவிசேஷத்தை அறிவித்தார் . கண்ணீரோடு செய்த சேவையும் திருப்பணியும் எண்ணற்ற இடையூறுகள் ஏற்பட்டும் , பிரெய்னார்ட் எப்படியாவது அமெரிக்க இந்தியர்கள் இரட்சிக்கப்பட வேண்டும் என்று வாஞ்சித்தார் . மிகுந்த கரிசனையோடு தனியாகவே காடுகளுக்குள் சென்று , பலமணி நேரம் இம்மக்களின் இரட்சிப்புக்காக ஜெபிப்பார் .
அழுகையோடு மனபாரத்துடன் மன்றாடுவார் . அநேகமுறை உபவாசித்து ஜெபிப்பதுண்டு . சில சமயங்களில் அவருக்கேற்படும் பலத்த எதிர்ப்புகளைத் தாங்க முடியாதவராய் மனச்சோர்வு அடைவதுமுண்டு ,
ஒரு சமயம் தன் நாள் குறிப்பில் " எனக்கு எந்த ஒரு காரியமும் முக்கியம் வாய்ந்ததாகத் தெரிவதில்லை .என்னுடைய இதய தூய்மையும் , பேய் அடிமைத்தனத்தில் வாழும் மக்களுடைய மாற்றமுமே அதிக முக்கியம் வாய்ந்ததாகக் கருதுகிறேன் " என்றும் , மற்றொருமுறை ' ' எவ்விடத்தில் எவ்விதம் வாழ்ந்தேன் என்பதைப் பற்றி எனக்கு அக்கறையில்லை , என்னென்ன உபத்திரவங்களைக் கடந்து போனேன் என்பதைப் பற்றியும் எனக்குக் கவலையில்லை . ஆனால் கிறிஸ்துவுக்கென்று ஆத்துமாக்களை ஆதாயப் படுத்தினேன் என்பதே பிரதானம் . இதுவே என் வாழ்க்கையின் குறிக்கோளும் நோக்கமுமாகும் " என்று குறிப்பிட்டுள்ளார் .
மிகுந்த சரீர சுகவீனத்திலும் , பாடு துன்பங்கள் மத்தியிலும் அவருடைய திருப்பணி தொடர்ந்தது . ஒரு சமயம் வெட்ட வெளியில் தங்கி உறங்கியதால் அதிக சுகவீனம் அடைந்தார் . காய்ச்சலும் , சரீர வேதனையும் மிகுதியானதினால் , இரத்தம் அவர் வாயினின்று வெளிப்பட்டது . அநேகமாக மரணத்தை நெருங்கிவிட்டார் .
ஆனாலும் ஒரு வாரத்திற்குப் பின் டேவிட்டின் உடல்நிலைத் தேறி தன் பணியைத் தொடர் முடிந்தது . ஒவ்வொரு நாளிலும் பிரசங்கம் செய்து முடிந்தவுடன் அதிக களைப்புடன் காணப்படுவார் . காய்ச்சல் அதிகமாகும் . எதுவும் செய்ய இயலாதவராய் படுத்து விடுவார் .
அதிகமாக இரத்தம் கக்க நேரிடும் . இப்படியே அவர் வாழ்க்கையில் பெலன் சிறிது சிறிதாகக் குன்றிப் போனாலும் , இந்தியர்களை அவர் நேசித்ததினால் அவர்களுடைய இரட்சிப்புக்கென்று தன்னையே பலியாக வார்த்து விட்டார் . அவருக்கு மற்ற பல நற்தருணங்கள் பணி செய்ய கிடைத்தன . இப்படிப்பாடுகள் நிறைந்த வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டுமா ? சொந்த நகருக்கு அருகாமையிலேயே வசதியுள்ள பெரிய சபையின போதகராகப் பணியாற்ற அழைப்புப் பெற்றார் . வசதியுள்ள சபைகளை விரும்பிச் சென்றிருக்கலாம் . உபத்திரவங்கள் நிறைந்த சிவப்பிந்தியர் சேவைக்குத் தன்னை அர்ப்பணிக்கா திருந்திருந்தால் , உலகம் டேவிட்டைப் பற்றி கேள்விப் பட்டிருக்கவே முடியாது . பலன்கள் " கண்ணீரோடே விதைக்கிறவர்கள் , கெம்பீரத்தோடே அறுப்பார்கள் " ( சங் . 126 : 5 ) என்ற கடவுளின் வாக்குப்படி ,
அநேக நாட்கள் இரவும் , பகலும் பிரயாசப்பட்டு உழைத்த அவருடைய பணி பலன்தர ஆரம்பித்தது . உபவாச ஜெபங்களும் , கண்ணீரின் வேண்டுதல்களும் கனிகொடுக்க ஆரம்பித்தன . பரிசுத்த ஆவியானவர் வல்லமையாய் கிரியை செய்ய ஆரம்பித்து , அவர்மேல் இறங்கினார் . பிரெய்னார்ட் பிரசங்கித்த எல்லா இடங்களிலும் உள்ள சிவப்பு இந்தியரையும் ஆவியானவர் ஆட்கொண்டார் . பரிசுத்த ஆவியானவரின் மகா வல்லமையான செயல்கள் 1745ஆம் ஆண்டு இந்தியர் மத்தியில் நடைபெற்றன . தீய பாவ வாழ்க்கையில் வாழ்ந்து சுவிசேஷத்தை எதிர்த்த அனைவரும் , பாவ உணர்ச்சி பெற்றுமனம்மாறி கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டனர் .
ஐரோப்பிய வெள்ளை இனத்தவர்களும் , இவ்வற்புத ஊழியத்தைக் காண வந்தார்கள் . பிரெய்னார்ட் சிவப்பு இந்தியருக்கு என்னதான் கூறுகிறார் என்று கேட்க வந்த ஐரோப்பியரும் மனந்திரும்பி கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டனர் .
ஒருநாள் சிவப்பு இந்திய இளம்பெண் ஒருவள் , அற்புத மனமாற்றம் நடைபெறுகிற நிகழ்ச்சியை அறிய ஆவலாய் பிரெய்னார்ட் இருந்த இடத்தைத் தேடி வந்தாள் . பிரெய்னார்ட் அவளுக்குத் தான் பிரசங்கித்து வந்த கிறிஸ்துவே உண்மையான ஒரே தெய்வம் என்றும் , மனந்திரும்புதல் நம்மைத் தாய வாழ்வுக்கு வழிநடத்தும் என்றும் கூறினார்
அவளோ கேலியாக சிரித்து அவரைப் பரியாசம் பண்ணினாள் , என்றாலும் அவர் நடத்தின கூட்டத்தில் பங்குகொண்டாள் . மிகக் கவனமாய் நற்செய்தியைக் கேட்கவே பாவ உணர்ச்சி பெற்று அழ ஆரம்பித்தாள் . அவளால் உட்காரவோ , நிற்கவோ முடியவில்லை . அத்தனைக்கதிகமாய் பாவ உணர்வு அவள் நிலைமையை எடுத்துக்காட்டியது . முடிவில் கிறிஸ்துவைத் தன் சொந்த இரட்சகரும் ஆண்டவருமாக ஏற்றுக்கொண்டாள் . கர்த்தருடைய கிருபை இரக்கங்களுக்காக அழுது புலம்புவதும் சிவப்பு இந்திய மக்கள் சத்தமிட்டு அழுது பாவ உணர்வு அடைவதும் பிரெய்னார்ட் நடத்திய எல்லாக் கூட்டங்களிலும் நடைபெற்ற காட்சியாக அமைந்தது மலைக்காடுகளில் வாழ்ந்து வந்த எல்லா சிவப்பிந்திய இனமக்களும் ஏராளமாய் வந்து பிரெய்னார்ட் அவருடைய பிரசங்கத்தைக் கவனமாய் கேட்டனர் . "
கடவுளுடைய புத்தகத்தையுடைய வெள்ளைப் பிரசங்கியார் " என்று அவர் எல்லாராலும் அறியப்பட்டார் . சிறுவர்களும் வந்து அவர் கூறுவதைக் கேட்டனர் . மிகக் குறுகிய வாழ்க்கை டேவிட் பிரெய்னார்ட் 29 வயது நிரம்பியவரானார் . இருண்ட குளிர் காடுகளில் திருப்பணி செய்ய தன்னை அர்ப்பணித்தபோது , தான் அதிக நாள் உயிர் வாழ முடியாது என்பது அவருக்கு நன்றாகத் தெரியும் . நற்செய்தியைக் கேள்விப்படாத சிவப் பித்தியருக்குச் சுவிசேஷத்தை அறிவிப்பது தன் கடமை ; சரீர சுகத்தை விட பிரதானமானது என்றும் கருதினார் . இவ்விதம் தன் சுகத்தைப் பொருட்படுத்தாது உழைப்பில் ஈடுபட்டதினால் என்றுமே சுகப்படுத்த முடியாத காசநோயின் பிடியில் சிக்கினார் .
சிறிது சிறிதாக அவருடைய ஜீவ இரத்தம் கொட்டப்பட்டது . மரணப்படுக்கையில் படுத்திருக்கும்போது தாங்கமுடியாத சார் பதனையையும் , துயரத்தையும் சகித்தார் , கடைசிநேரத்திலும் தன் சகோதரனிடம் சிவப்பு இந்தியரின் ஆவிக்குரிய வாழ்க்கை மேம்பாட்டைக் குறித்தே உரையாடிக் கொண்டிருந்தார் . சிவப்பிந்தியரை அவ்வளவாய் நேசித்து அன்புகூர்ந்தார் . வரப்போகும் கிறிஸ்து இயேசுவைப் பற்றிய சிந்தனையும் , நினைவும் எப்போதும் அவர் மனதில் நின்றது . மிக மெல்லிய குரலில் " நிச்சயமாகவே கிறிஸ்து வரப்போகிறார் . தாமதம் செய்யார் . நானும் தேவதூதரோடு சேர்ந்து என் தேவனை மகிமைப்படுத்துவேன் " என்று பேசினார் .
அவ்வாறு அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே 1747ஆம் ஆண்டு அக்டோபர் 9ஆம் நாள் 29 ஆம் வயதில் டேவிட் பிரெய்னார்ட் தான் சேவித்து வந்த ஆண்டவரை தரிசிக்கவும் , மகிமைப்படுத்தவும் தேவதூதரோடு சேர்ந்து துதித்து ஆர்ப்பரிக்கவும் கிறிஸ்துவின் சமூகத்தை அடைந்தார் . மிகக்குறுகிய வாழ்வே ஆனாலும் , அது முழுவதும் ஆண்டவருக்கென்று அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு . அந்த வாழ்க்கை எத்தனை நாள் ஜீவித்திருந்ததோ அத்த நாட்களும் பூரண உபயோகமும் ஆசீர்வாதமுமாகத் - செய்யப்பட்டது . அவர் மரித்த பின்னும் அவரு வாழ்க்கை வரலாறு நாள் குறிப்புகளின் வாயில் அறியப்பட்டு உணரப்பட்டன . இவரைப் பின்பற்றி வில் கேரி , ஹென்றி மார்ட்டின் ஆகிய தலைசிறந்த மிஷனெ அயல்நாடுகளில் அருட்பணியாளர்களாகத் தங்களை ஒப்பு கொடுத்தனர் . மிஷனெரிப் பணிக்கென நீயும் உன் தத்தம் செய்வாயா ? முமாகத் தத்தம் ன்பற்றி வில்லியம் தே மிஷனெரிகள் களை ஒப்புக் நீயும் உன்னைத்தத்தம் செய்வாயா.
ஜார்ஜ் Uglow போப் 24 ஏப்ரல் 1820 இல் பிறந்தார் Bedeque , பிரின்ஸ் எட்வர்ட் தீவில் கனடா . அவரது தந்தை கார்ன்வால், பேட்ஸ்டோவைச் சேர்ந்த ஜான் போப் (1791-1863), ஒரு மிஷனரியான வணிகர், 1818 இல் இளவரசர் எட்வர்ட் தீவுக்கு குடிபெயர்ந்தார், மற்றும் வடக்கு கார்ன்வாலின் ஸ்ட்ராட்டனைச் சேர்ந்த கேத்தரின் உக்லோ (1797-1867). குடும்பம் 1826 ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் பிளைமவுத் திரும்புவதற்கு முன்பு செயின்ட் வின்சென்ட் நோவா ஸ்கோடியாவுக்கு குடிபெயர்ந்தது, அங்கு ஜான் போப் ஒரு வளமான வணிகர் மற்றும் கப்பல் உரிமையாளரானார். [1] ஜார்ஜ் உக்லோ போப் மற்றும் அவரது தம்பி வில்லியம் பர்ட் போப் ஆகியோர் பரி மற்றும் ஹாக்ஸ்டனில் உள்ள வெஸ்லியன் பள்ளிகளில் படித்தனர் மற்றும் பதினான்கு வயதில் ஜார்ஜ் தென்னிந்தியாவில் மிஷனரி சேவையில் சேர்ந்தார்.
[2] அவர் தென் இந்தியாவுக்கு 1839 இல் வந்து Sawyerpuram அருகே தூத்துக்குடி நற்செய்தி பரப்புதல் சங்கம் என்பது. போப் இங்கிலாந்தில் ஒரு இளைஞனாக தமிழ் மொழியைப் படிக்கத் தொடங்கினார், இந்தியா மற்றும் போப் பயணத்தின் போது போப் பின்னர் தமிழ் , சமஸ்கிருதம் மற்றும் தெலுங்கு அறிஞராக மாறினார்.
1841 ஆம் ஆண்டில் அவர் இங்கிலாந்தின் திருச்சபையால் நியமிக்கப்பட்டார், மேலும் அவர் மற்றொரு ஆங்கிலிகன் பாதிரியாரின் மகள் மேரி கார்வரை மணந்தார்.
போப் திருநெல்வேலி பிராந்தியத்தில் பணிபுரிந்தார், அங்கு கிறிஸ்டியன் பிரீட்ரிக் ஸ்வார்ட்ஸ் போன்ற பிற மிஷனரிகளுடனும் உரையாடினார்.
1845 ஆம் ஆண்டில், தூத்துக்குடியில் மேரி இறந்தார், போப் மெட்ராஸுக்கு குடிபெயர்ந்தார். அவர் ஜி. வான் சோமரனின் மகள் ஹென்றிட்டா பேஜை மணந்தார், அவர்கள் 1849 இல் இங்கிலாந்துக்குச் சென்றனர்.
இந்த காலகட்டத்தில் அவர் ஆக்ஸ்போர்டு கத்தோலிக்க இயக்கத்தில் கார்டினல் ஹென்றி எட்வர்ட் மானிங் , பேராயர் அகழி , பிஷப் சாமுவேல் வில்பர்போர்ஸ் , பிஷப் ஜான் லோன்ஸ்டேல் உள்ளிட்ட பல நபர்களுடன் பணியாற்றினார். ,
தஞ்சைக்குத் திரும்புகிறார
1851 ஆம் ஆண்டில், செயின்ட் பீட்டர்ஸ் பள்ளியில் கற்பித்த அவர், மற்ற மிஷனரிகளுடன் முரண்பட்டார். 1855 ஆம் ஆண்டில், ஸ்வார்ட்ஸின் சீடராகவும், மகாராஜா செர்போஜியின் நீதிமன்றத்தில் ஒரு கவிஞராகவும் இருந்த ஒரு தமிழ் பாதிரியார் வேதநாயகம் சாஸ்திரி பகிரங்கமாக அடித்து நொறுக்கப்பட்டார்,
இதன் விளைவாக ஆங்கிலேய தேவாலயத்திலிருந்து தமிழ் தேவாலயம் பிரிக்கப்பட்டதன் மூலம் போப் பதவி விலகினார். ஆங்கிலிகன் தமிழ் மதகுருக்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக அவர் சாயர்புரத்தில் ஒரு செமினரியை நிறுவினார், ஆனால் இதுவும் சிக்கலில் சிக்கியது, மேலும் அவர் 1859 இல் ஒட்டகாமுண்டுக்கு செல்ல முடிவு செய்தார். இங்கே அவர் ஐரோப்பிய குழந்தைகளுக்காக ஒரு இலக்கணப் பள்ளியை நிறுவினார் (இது 1859 முதல் 1870 வரை ஓடியது) இப்போது அது வீடு அரசு கலை பள்ளி மற்றும் ஸ்டோன்ஹவுஸ். ஸ்டோன்ஹவுஸ் குடிசையில் உள்ள இலக்கணப் பள்ளி மெட்ராஸ் பிஷப்பால் 1858 ஜூலை 2 ஆம் தேதி போப் அதிபராகத் திறக்கப்பட்டது.
அவர் மேலும் ஹோலி டிரினிடி சர்ச் நிறுவப்பட்டது ஊட்டி . போப் தமிழர்களால் மரியாதையுடன் போப் அய்யர் என்று குறிப்பிடப்பட்டார்.
போப் தனது கண்டிப்புக்கு புகழ் பெற்றார், மேலும் 1870 இல் பெங்களூரில் உள்ள பிஷப் காட்டன் பள்ளியின் முதல்வராக நியமிக்கப்பட்டார். பெங்களூரில் உள்ள ஆல் செயிண்ட்ஸ் சர்ச்சின் முதல் போதகராகவும் இருந்தார்.
1881 ஆம் ஆண்டில், போப் இந்தியாவை விட்டு வெளியேறி ஆக்ஸ்போர்டில் குடியேறினார், அங்கு அவர் தமிழ் மற்றும் தெலுங்கில் விரிவுரையாளராக ஒரு அடையாளத்தை வெளிப்படுத்தினார்
(1884). அவர் 1886 இல் க orary ரவ எம்.ஏ. மற்றும் 1906 இல் ராயல் ஆசியடிக் சொசைட்டியின் தங்கப் பதக்கத்தைப் பெற்றார் . அவர் பிப்ரவரி 11, 1908 அன்று இறந்தார்.
1907 மே 26 அன்று அவர் தனது கடைசி பிரசங்கத்தை நிகழ்த்தினார் . இங்கிலாந்தின் மத்திய ஆக்ஸ்போர்டில் உள்ள ஜெரிகோவில் அமைந்துள்ள செயின்ட் செபுல்க்ரே கல்லறையில் போப் அடக்கம் செய்யப்பட்டார் .
அவரது மரணத்திற்குப் பிறகு, அவரது இரண்டாவது மனைவி ஹென்றிட்டா மற்றும் இரண்டு மகள்கள் ஓய்வூதியம் பெற்றனர். ஹென்றிட்டா 11 செப்டம்பர் 1911 அன்று இறந்தார், போப்பின் அருகில் அடக்கம் செய்யப்பட்டார். இவர்களில் மூன்று மகன்கள் இந்தியாவில் தொடர்ந்து பணியாற்றினர். ஜான் வான் சோமரன் போப் பர்மாவில் கல்வியில் பணியாற்றினார், ஆர்தர் வில்லியம் உக்லோ போப் இந்தியாவிலும் சீனாவிலும் ரயில்வே பொறியாளராக பணியாற்றினார்; லெப்டினன்ட்-கேணல் தாமஸ் ஹென்றி மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் கண் மருத்துவம் பேராசிரியராக மருத்துவ சேவையில் பணியாற்றினார் .
நெல்லை மாவட்டத்தில் ஓர் ஊர் மூலைக்கரை . முன்னாட்களில் கடையனோடை வட்டம் . அவ்வூரில் ராமன் ராட்சசப்பிம்பம் . அவர்தான் ஊரின் தலைவர் .
கோயில் களில் கொடை நடக்கும்போது சாமியாடியும் , பேயாடியும் அவரே . வாயாடியும் வம்படியுமாக வாழ்ந்த அவருக்குப் பெரும்பொருள் சேர்ந்தது .
செங்கலும் சாந்தும் கொண்டு சொந்தச் செலவில் ஒரு கோயில் கட்டினார் . அதற்கு அவரே ஆசாரியும் , பூசாரியும் ஆனார் .
நித்தமும் நிமித்தம் பார்த்தலும் , பில்லி சூனியம் வைத்தலும் , அஞ்சனம் கூறுதலும் , ஜோதிடம் சொல்லுதலுமே அவரது முழுத் தொழிலாக இருந்தது . குறி சொல்வதே அவருக்குக் கைவந்த கலை .
எனவே அத்தொழிலை அதிகக் கூர்மைப்படுத்தினார் . கடந்தகால வருங்கால நிகழ்வுகளைக் கூறுவதில் கைதேர்ந்தவர் என்ற பெரும் பேரில் ஒரு தாய் ராமரிடம் குறி கேட்க மகளைக் கூட்டி வந்தார் .
நீண்ட நாட்களாகக் காய்ச்சலில் கஷ்டப்பட்ட தன் மகளைக் கூட்டி வந்தார் . " தண்ணிக்குப் போனதுண்டு , அம்மா உன் மகள் தண்ணிக்குப் போனதுண்டு , தவளை குதித்ததுண்டு - அங்கே பயந்ததுண்டு ஆறு மாசக்காய்ச்சல் வந்ததுண்டு குண் . . . டுண் . . . டுண் . என்று உடுக்கு அடித்துக் குறி சொன்னார் .
" தவளையால்தான் என் புள்ளைக்கு இந்த வியாதி வந்திருக்கு ” என்று அந்த ஏழைத்தாய் புலம்பிக்கொண்டே திரிந்தாள் . கொஞ்ச நாட்களாகவே " நான் சொல்வதெல்லாம் பொய் தானே ” என்று பூசாரிக்கு உள்மனம் வருந்த ஆரம்பித்தது .
ஒருநாள் ராமர் பாளையங்கோட்டை போயிருந்தார் . கோட்டைக் கடைப் பக்கம் ஒரு கூட்டம் நடந்து கொண்டிருந்தது . அங்கு சென்று அமர்ந்து கேட்டார் .
அந்த நாள் 1891ஆம் ஆண்டு மே மாதம் , வளர்த்தியான ஒரு வெள்ளைக்காரர் நற்செய்தி கூறிக்கொண்டிருந்தார் . மழலைத் தமிழில் சுவைபடப் பேசினார் . “
இதோ இருளிலிருக்கும் மக்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள் . ஏமாத்துகளும் , எத்துப்புரட்டுகளும் எரிந்து சாம்பலாகும் . பட்டிகள் தோறும் பள்ளிகள் வைப்போம் , ஆலயங்கள் நாட்டுவோம் . புதிய வெளிச்சம் கிராமங்கள் தோறும் புகும் என்று பேசினார் .
ராமரின் உள்ளம் நடுக்கம் எடுத்தது . இரண்டாவது ஓர் இளைஞர் இன்னும் நறுக்காகப் பேசினார் . “ மூட நம்பிக்கைகளை மூட்டை மூட்டைகளாகக் கட்டி பாவப்பட்ட மக்களை வறுமையில் மூழ்கடிக்கும் ஐயாமார்களே உங்களுக்கு ஐயோ ! அவர்கள் நாகாக்கினைக்குத் தப்பார்கள் . அருமை மக்களே , கர்த்தர் உங்களை வேடனுடைய கண்ணிக்கும் , பாழாக்கும் கொள்ளை நோய்க்கும் தப்புவிப்பார் என்று பேசி துண்டுப்பிரதிகளை இலவசமாகக் கொடுத்தார் .
" காலராவிற்குத் தப்பும் வழி " கல்விக் கண்ணைத் திறப்போம் " * இயேசுவே உலகிற்கு ஒளி " “ இரட்சிப்பு இலவசம் ' முதலிய பிரதிகளை ராமர் வாங்கிச்சென்று ஆர்வத்தோடு படித்தார் .
பலத்த சோதனைகள் அவரைச் சூழ்ந்தன . அன்று இரவு தூக்கம் இல்லாமல் சிந்தனையில் சிக்கினார் . “ நான் பொய்யாகக் குறிசொல்லி இன்னும் எத்தனை நாட்கள் மாய்மால் ஜீவியம் செய்வது " தனக்குள்ளே கேள்விகேட்டு மனம் உழண்டார் . “ நான் சொன்ன ஜோஸ்யம் , குறி அனைத்தும் அப்பட்டமான பொய்தானே ? போலித்தனமான செப்பிடு வித்தைகள் எத்தனை நாளைக்கு நிலைக்கும் , ” ராமர் கடும் சோதனைக்குள் தடுமாறினார் . - " மந்திரத்தில் மாங்காயும் , தந்திரத்தில் தேங்காயும் காய்க்காது . என் உள்ளமே , என்னைப் பார்த்து நீ கள்ளன் , கள்ளன் என்று தாக்குவதுபோல திருச்சயை சரிதைக் கதைகள் குத்திக் கொண்டிருந்தது .
தைரியமாய் உண்மையைச் சொல்லிவிட்டால் என்ன ? ஐயோ , என் பிழைப்பு போய்விடுமே . பரவாயில்லை . ராமர் சீறிச் சிளந்து எழுந்தார் . மிஷனரியிடமிருந்து வாங்கி வந்த " புதிய ஏற்பாடு " என்றும் நூலை அங்குமிங்கும் படித்தார் .
" சோதனைகளை ஜெயிக்கிற மனுஷன் பாக்கியவான்
ஒரு வெளிச்சம் ஊருக்குள் புகுவதுபோலவும் , கார் இருள் அகன்று ஓடுவதுபோலவும் சொப்பனம் கண்டு கலங்கினார் .
மூன்றாம் நாள் காலை வேளை . 1891 ஜீன் மாதம் குளித்து வெள்ளை வேட்டி கட்டி , பட்டுத்துண்டை மேலே போர்த்தினார் . தெருவுக்குள் புகுந்தார் . பெரிய விட்டுத்திண்ணையில் அமர்ந்தார் .
ஒரு கூட்டம் அவரைச் சூழ்ந்தது , நான் குறி சொன்னதெல்லாம் பொய் , ஜோஸ்யம் ஏமாற்று , மக்களே என்னை மன்னியுங்கள் என்று சொல்லி கையெடுத்துக் கும்பிட்டார் . " புதிய வெளிச்சம் எனக்குள் புகுந்துவிட்டது . குருட்டாட்டமான மடத்தனங்களைக் குழி தோண்டி மூடுவோம் . கண்ணை விற்றுச் சித்திரம் வாங்கும் கண்மூடித்தனங்களை மண்மூடிப் புதைப்போம் என்று சத்தமாக அலறினார் .
ஊர் முழுவதும் செய்தி பரவியது . விக்கிரக வெறியர்கள் சிலர் " ராமன் ரத்தம் கக்கி செத்துவிடுவான் என்று எதிர்பார்த்தார்கள் . அப்படி ஒன்றும் நடக்கவில்லை .
ராமர் முகம் பிரகாசித்தது . தெருத்தெருவாக நற்செய்தி கூறி சாட்சியாக நின்றார் .
" சத்தியம் என்னை விடுதலை செய்தது என்று சத்தியமாகக் கூறினார் .
ஐந்து குடும்பங்கள் புதிய ஒளிக்குள் வந்தார்கள் . ராமர் அவர்களைக் கூட்டிக்கொண்டு கடையனோடை ஆபிரகாம் ஐயரைப் பார்த்தார்கள் . அவர் நாசரேத் மர்காஷிஸ் மிஷனெரியிடம் அழைத்துச் சென்றார் . 1891 ஜீன் மாதம் ஐந்து குடும்பங்களைக்கொண்ட ஒரு சபை உருவானது . அதுதான் முலைக்கரையின் மூத்த ஆதிச்சபையாகும் . சோதனைகளை வென்ற ராமர் முதல் சபையின் மூப்பரானார் . ஆதாரம் :
“ மறையவிருந்த மாணிக்கக் கற்கள் ” பாகம் இரண்டு .
“அவர்கள் என்னையும்கூட எரிப்பார்கள்.கர்த்தருக்கு விருப்பமானால் அதுவும் நடக்கட்டும்... இங்கிலாந்தில் சபை சீர்திருத்தம் ஏற்பட முக்கிய காரணமாக இருந்தது வேதத்தின் ஆங்கில மொழி பெயர்ப்பே. ஆங்கிலத்தில் வேதம் மொழி பெயர்க்கப்பட்டு அதிவேகமாக மக்களுடைய கரங்களை எட்டியதும் அவர்களுடைய இருண்டிருந்த ஆத்மீகக் கண்கள் திறக்கத் தொடங்கின. ஆங்கிலத்தில் வேதத்தை மொழிபெயர்க்கும் பணியை ஆரம்பித்து வைத்தவர் வில்லியம் டின்டேல். ஏழு மொழிகளைப் பேசும் வல்லமை கொண்டிருந்த டின்டேல் எபிரேய, கிரேக்க மொழிகளில் அதிக பாண்டித்தியம் உள்ளவராக இப்பணிக்குத் தகுந்தவராக இருந்தார். குளொஸ்டர் என்னும் இடத்தில் 1495 அளவில் பிறந்த டின்டேல் 1510 – 1521 வருடங்களில் ஒக்ஸ்பர்ட், கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகங்களில் பயின்றார்.
இக்காலத்தில் அநேக மதகுருக்களுக்கு வேத அறிவே இல்லாமலிருந்ததை உணர்ந்த டின்டேல், ஊர்ப் பையனும் வாசித்துப் புரிந்து கொள்ளும் வகையில் ஆங்கிலத்தில் வேதத்தைத் தன் நாட்டு மக்களுக்கு அளிக்கத் தீர்மானித்தார். ஆனால் அன்று அதிகாரத்தைத் தன் கரத்தில் வைத்திருந்த ரோமன் கத்தோலிக்க சபை ஆங்கிலத்தில் மட்டுமல்ல, வேறு எந்த மொழியிலும் வேதத்தை மொழி பெயர்க்க அனுமதி தராது என்பதை அவர் அறிந்திருந்தார். அவ்வாறு வேதத்தை இலத்தீன் மொழியில் இருந்து இன்னுமொரு மொழியில் மொழி பெயர்ப்பது சட்டத்திற்கு எதிரான செயலாக இல்லாமலிருந்தாலும் அக்காலத்தில் ஆண்டவருடைய ஜெபத்தையும், பத்துக் கட்டளைகளையும், அப்போஸ்தலருடைய விசுவாச அறிக்கையையும் தங்களுடைய பிள்ளைகளுக்கு ஆங்கிலத்தில் போதித்த காரணத்திற்காக ஏழு பேர் உயிரோடு எரிக்கப்பட்டிருந்தனர். மதகுரு ஒருவருடைய துணையும் பாதுகாப்பும் இல்லாமல் மொழி பெயர்ப்பு வேலையில் ஈடுபட முடியாதென்று உணர்ந்த டின்டேல் லண்டன் பிசப் டன்ஸ்டலின் துணையை நாடி லண்டனுக்கும் 1523இல் சென்றார்.
ஆனால் அரச நிலவரங்களால் அத்தகைய உதவியை அளிக்க பிசப் டன்ஸ்டல் தயங்கினார். இங்கிலாந்தில் இருந்து மொழிபெயர்ப்பு வேலையில் ஈடுபடுவது முடியாத காரியமென்று உணர்ந்த டின்டேல் 1524 இல் ஜெர்மனிக்குப் போகத் தீர்மானித்தார். அரசருடைய அனுமதியையும் பெறாமல் ஜெர்மனியில் விட்டன்பர்க் என்ற இடத்தை அடைந்தார் டின்டேல். ஜெர்மனியை அடையுமுன் இரகசியமாக புதிய ஏற்பாட்டை மொழிபெயர்த்து முடித்திருந்தார் டின்டேல். விட்டன்பர்க்கில் இருந்து கொலோனை அடைந்த டின்டேல் தனது மொழிபெயர்ப்பை அச்சிடும் பணியில் ஈடுபட்டார். அச்சுப்பணி பாதி முடியுமுன்பே அது அச்சிடப்படுகின்றது என்பதை அறிந்த கத்தோலிக்கர்கள் டின்டேலுக்கு பெருந்துன்பத்தை விளைவித்தனர்.
இதனால் கொலோனில் இருந்து தனது மொழி பெயர்ப்போடு எதிரிகளிடம் இருந்து தப்பி டின்டேல் வேர்ம்ஸ் என்ற இடத்தை அடைந்தார். அங்கே இறுதியாக தனது வேத மொழி பெயர்ப்பை அச்சிட்டு முடித்தார். வேர்ம்ஸிலேயே டின்டேலின் முதல் புதிய ஏற்பாட்டுப் பிரதி வெளியானது. அரசனுடையதும், அதிகாரிகளுடையதும் கட்டுப்பாடுகள் அனைத்தையும் மீறி இப்புதிய ஏற்பாடு இங்கிலாந்தை 1526 இல் அடைந்தது. ஜெர்மனியில் இருந்த இங்கிலாந்து வியாபாரிகள் மூலமாக டின்டேலின் புதிய ஏற்பாடு கடத்தப்பட்டு இங்கிலாந்தின் நகரங்கள், கிராமங்கள் எல்லாம் பரவத்தொடங்கியது. பிசப் டின்ஸ்டல் இப்பிரதிகளைக் கைப்பற்றி அழிக்க பெரு முயற்சி செய்தார். இதைக் கேள்விப்பட்ட டின்டேல், “புதிய ஏற்பாட்டை எரிப்பதன் மூலம் நான் எதிர்பார்க்காததை அவர்கள் செய்துவிடவில்லை; அவர்கள் என்னையும்கூட எரிப்பார்கள். கர்த்தருக்கு விருப்பமானால் அதுவும் நடக்கட்டும்” என்றார்.
இவ்வெதிர்ப்புகள் எல்லாவற்றிற்கும் மத்தியில் ஆரம்பத்தில் வெளியிடப்பட்ட பிரதிகள், அதன் மறுபதிப்புகள், திருத்தப்பதிப்புகள் என்று டின்டேலின் புதிய ஏற்பாடு இங்கிலாந்தின் நாடு நகரங்கள் எல்லாம் பரவத் தொடங்கியது. கத்தோலிக்க மதகுருக்கள் இதைத் தடுப்பதற்கு ஒரு வழி கண்டுபிடித்தனர். பணம் கொடுத்து அனைத்துப் பிரதிகளையும் வாங்கினால் அவை மக்களை அடைவதைத் தடுத்துவிடலாம் என்று முடிவு செய்து அவ்வாறே செய்தனர். இதனால் இப்பிரதிகளை இங்கிலாந்திற்குக் கொண்டு வந்த வியாபாரிகளால் நன்றாகப் பணம் சம்பாதிக்க முடிந்தது. மதகுருக்கள் எரிப்பதற்கும் அதிக புதிய ஏற்பாடுகள் கிடைத்தன.
டின்டேல் புதிதாக ஒரு திருத்திய புதிய ஏற்பாட்டை வெளியிடுவதற்குத் தேவையான பணமும் கிடைத்தது. இப்புதிய ஏற்பாடு என்றுமில்லாத வகையில் இங்கிலாந்து மக்களின் கண்களுக்கும் காதுகளுக்கும் நல்ல வேத விருந்தளித்தது. 1611 இல் இங்கிலாந்தில் வெளியிடப்பட்டு இன்றும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வரும் கிங் ஜே ம்ஸ் வேதம் (King James Version) தொண்ணூறு வீதம் டின்டேலின் மொழி பெயர்ப்பைப் பயன்படுத்தி எழுதப்பட்டது. டின்டேல் தனது எதிரிகளின் கரங்களில் பிடிபடாமல் தொடர்ந்து எழுதியும், மொழிபெயர்ப்பு வேலைகளைத் தொடர்ந்தும் வந்தார். இறுதியில் அவர் சிறைபிடிக்கப்பட்டு பிரசல்ஸில் ஒரு கோட்டையில் வைக்கப்பட்டார். சிறை பிடிக்கப்பட்டு பதினாறு மாதங்களுக்குப் பின்பு ஆகஸ்ட் 1536 இல் டின்டேலுக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
தன் செயல்களுக்காக மன்னிப்பு கேட்கும்படி டின்டேலை அவரது எதிரிகள் வற்புறுத்தினர். அக்டோபர் மாதத்தில் கத்தோலிக்கர்கள் டின்டேலை சித்திரவதை செய்து உயிரோடு எரித்தனர். இறப்பதற்கு முன் டின்டேல், இங்கிலாந்து அரசரின் கண்கள் திறக்க வேண்டும் என்று ஜெபித்து மடிந்தார். சத்தியத்திற்காக தங்கள் உயிரைப்பலி கொடுத்த அநேக கிறிஸ்தவர்களில் டின்டேலும் ஒருவர். வேதத்தை நாம் கையிலெடுக்கும் ஒவ்வொரு வேளையும் அவ்வேதத்திற்காகவும், சத்தியத்திற்காகவும் தம் உயிரைத் தந்த டின்டேலை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும் —
அவள் சொல்வதைத் தாண்டி களைத்துப்போயிருந்தாள்; இன்னும் தூக்கம் வராது. பின்னர் அவள் அதைக் கேட்டாள், பாலைவனம். ஒரு பாடல். ஒரு பரந்த, காணப்படாத பாடகர் முழுமையான இணக்கத்துடன் பாடுவதைப் போல இது ஒலித்தது.
அவர் இதற்கு முன்பு பல முறை பாடலைக் கேட்டிருப்பார், ஆனால் இதுபோன்று ஒருபோதும் பாடியதில்லை. வார்த்தைகள் அழகாக தெரிந்திருந்தன, ஆனால் இப்போது அவை பலமான இனிமையான சக்தியுடன் வந்தன, அவளால் கடைசியாக ஓய்வெடுக்க முடிந்தது.
"அவர் இஸ்ரேலைக் கவனிக்கிறார், தூங்கவில்லை. ... அவர் தூங்குவதில்லை, தூங்குவதில்லை .... அவர் தூங்குவதில்லை, தூங்குவதில்லை ...."
இது ஒரு தேவதூதர் பாடகரா? சீனா உள்நாட்டு மிஷனின் கீழ் சீனாவுக்கு மிஷனரியான மில்ட்ரெட் கேபிள் ஒருபோதும் அறிந்திருக்கவில்லை. கடவுளின் முன்னுரிமையும் அவனது அக்கறையுள்ள சக்தியும் தன்னைச் சுற்றிலும் இருந்தன என்பதையும், அடியில் அவனுடைய நித்திய ஆயுதங்கள் என்பதையும் அவள் அறிந்திருந்தாள். அவள் பயம் மறைந்தது.
அவர்கள் கோபி பாலைவனத்தை விட்டு வெளியேறி இங்கிலாந்துக்குத் திரும்ப வேண்டியது அவசியம் என்பதை அறிந்த மில்ட்ரெட் மற்றும் அவரது மிஷனரி தோழர்கள், லிட்டில் பீக்கிங் என்ற இடத்திலிருந்து தப்பித்து, சுதந்திரத்திற்காக தங்கள் கோடு போடுகிறார்கள்.
ஆனால் அது அவர்களின் சிறிய கழுதை வரையப்பட்ட வண்டியில் மெதுவாகச் சென்றது, மற்றும் பிரிகேண்டுகளின் பட்டைகள் மலைகளில் பதுங்கியிருந்தன. பாழடைந்த, வெறிச்சோடிய கிராமங்கள் வழியாக இரவும் பகலும் பெண்கள் அழுத்தி, இரவின் மறைவின் கீழ்
குறுகிய நீளத்திற்கு மட்டுமே ஓய்வெடுத்தனர்.
அவர்கள் தங்கள் யாத்ரீகப் பாடலைப் பாடினார்கள் - அவர்கள் பயணித்த ஆண்டுகளில் அவர்கள் அடிக்கடி பாடிய வார்த்தைகள்: "உமிழும், மேகமூட்டமான பில்லார், என் பயணத்தை எல்லாம் என்னை வழிநடத்தட்டும் ... இஸ்ரேலியர்கள் தங்கள் பயணத்தில் வெளியேறுவதைப் போலல்லாமல்"
நான் பரலோகத்திற்கு கீழ்ப்படியவில்லை எகிப்தின் பார்வை இருப்பினும், அவர்கள் கண்களால் பார்க்கக்கூடிய மேகமூட்டமான, உமிழும் தூண் இல்லை. ஆனால் அவர்களுக்கு தெய்வீக வழிகாட்டுதல், பரிசுத்த ஆவியானவர் இருந்தார்கள்.
"வலுவான விடுதலையாளர், வலுவான விடுதலையாளரே, நீ இன்னும் என் பலமாகவும் கேடயமாகவும் இரு" என்று வார்த்தைகளை அவர்களின் யாத்ரீகப் பாடலுக்கு ஓடினார். கண்களை மூடிக்கொண்டிருந்த வார்த்தைகள் மில்ட்ரெட்டின் மனதில் தங்களைத் தாங்களே வாசித்தன. அவள் மிகவும் சோர்வாக இருந்தாள் .
.. "நான் ஜோர்டானின் விளிம்பில் மிதிக்கும்போது, என் பதட்டமான அச்சங்கள் குறையும்படி கேட்டுக் கொண்டேன்," அவர்கள் பெரிய கோபி பாலைவனம், உள் மங்கோலியா மற்றும் கன்சு, சிங்கியாங் மற்றும் தொலைதூர மேற்கு புறநகர்ப் பகுதிகள் வழியாக பயணிக்கையில் அடிக்கடி ஜெபித்தார்கள்.
சீன துர்கெஸ்தான். தரிசு மலைகள், பாழடைந்த வனப்பகுதி, பதுங்கியிருக்கும் பிரிகண்ட்ஸ், இரக்கமற்ற ஆட்சியாளர், தண்டர்போல்ட் எல்லாம் அவள் மனதில் இருந்து மங்கிவிட்டன.
"கர்த்தர் உமது கீப்பர். உருமிச்சி கிராமத்தில், மில்ட்ரெட், எவாஞ்சலின் பிரஞ்சு, மற்றும் ஃபிரான்செஸ்கா பிரஞ்சு ஆகியோர் ஒரு சிறிய காது கேளாத சீனப் பெண்ணை அவர்களுடன் அழைத்துச் செல்வதற்கான அனுமதி குறித்து வார்த்தைக்காகக் காத்திருந்தனர் - அவர்கள் தெருக்களில் இருந்து அழைத்துச் சென்ற மற்றும் பயணம் செய்த ஒரு குழந்தை அவர்களுடன். அவர்கள் வெளியேற மாட்டார்கள்- .. கர்த்தர் உங்களைப் பாதுகாப்பார் .... " அவளை வெளியே. டாப்ஸ்வ் டாப்ஸி என்று பெயரிட்ட குழந்தையை அவர்களால் கைவிட முடியவில்லை, அந்த நாட்களில் காத்திருந்த காலத்தில் பதற்றத்தை உணர்ந்தார். சமநிலையில் தொங்கியது அவளுடைய விதி என்று அவளுக்குத் தெரிந்தது. பின்னர் அது நடந்தது -
ரஷ்ய துணைத் தூதரகம் தேவையான அனுமதியைப் பெற்றது, மூன்று பெண்களும் பாதுகாப்பற்ற சிறிய இடுப்பும் வெளியேற இலவசம். மீண்டும் காணப்படாத ஆனால் உமிழும் தூண் நகர்கிறது என்பதை பெண்கள் அறிந்தார்கள், அவர்கள் செய்ய வேண்டியது எல்லாம் பின்பற்ற வேண்டும். இந்த பெண்கள் எதை விட்டுச் சென்றார்கள்? ஐந்து முறை அவர்கள் கோபி பாலைவனத்தை அறிந்திருந்தனர், சிநேஸ் மொழியில் பைபிள்களைக் கண்டனர் மற்றும் விநியோகித்தனர். கூடாரங்களில் வசிப்பது, மோசமான உணவை உண்ணுதல், எப்போதும் கழுதை வண்டியில் பயணம் செய்வது, அவர்கள் பிரிகேண்ட்களால் பிடிக்கப்பட்டனர்,
சில சமயங்களில் கம்யூனிஸ்ட் குழுக்களால் பிடிக்கப்பட்டனர்,
ஆனால் கடவுள் எப்போதும் அவற்றை பிரசங்கித்தார், பெரும்பாலும் அற்புதமான வழிகளில். அவர்கள் 2,700 வீடுகளுக்குள் நுழைந்து, இரட்சகரைப் பற்றி சொல்லவும், 656 கூட்டங்களை நடத்தவும், வேதத்தின் 40,000 பகுதிகளை வழங்கவும் 1936 ஆம் ஆண்டில், மோசமான அரசியல் நிலைமைகள் மூன்று பெண்களையும் கோபி பாலைவனத்தை விட்டு வெளியேற நிர்பந்தித்தன. அடுத்த ஆண்டுகளில், மில்ட்ரெட் பிரிட்டிஷ் மற்றும் வெளிநாட்டு பைபிள் சொசைட்டி எட்டிக்காக வெகுதூரம் பயணம் செய்தார், மத்திய ஆசியாவின் பாலைவனங்களில் பரவலாக விநியோகிக்கப்பட்ட அதே புத்தகத்தின் செய்தியை அறிவித்தார். மில்ட்ரெட் கேபிளைப் பற்றி சொல்லலாம், "நான் பரலோக பார்வைக்கு கீழ்ப்படியவில்லை" என்று அவள் வெறுமனே சொன்னது போலவே.
குற்றம் செய்ததால் பிடிக்கப்பட்டு, தண்டனை கிடைத்ததால் அடைக்கப்பட்டு, சிறைச் சாலையில் காலங்களைக் கழிப்பவர்களை சமூகம் பொருட்படுத்துவதில்லை. ஆனால் சர்வவல்ல தேவனாகிய கர்த்தர் அவர்களை மறப்பதில்லை. இன்று சிறை ஊழியம் பல நாடுகளிலும், பல சபைகளிலும் தொடர்ந்து நடத்தப்ப்ட்டு வரும் உன்னத ஊழியம். அவைகள் எல்லாவற்றுக்கும் முன்னோடியாய்த் திகழ்வது எலிசபெத் ஃப்ரை ஆரம்பித்த ஊழியமே.
அகில உலகுக்கு எலிசபெத் ஃப்ரை ஒரு சிறை சீர்திருத்தக்காரர் என்று மட்டுமே தோன்றினாலும் கிறிஸ்தவ வட்டாரத்தில் அவர் சிறைக் கைதிகளின் மிஷனெரி என்றே கருதப்படுகிறார்
இங்கிலாந்து நாட்டில் மிகவும் செல்வாக்குள்ள குடும்பத்தில் பிறந்த எலிசபெத் வாலிபப் பருவத்தில் இயேசுவை ஏற்றுக் கொண்டார்.
நார்விக் பட்டணத்தில் தன்னுடைய ஊழியத்தைத் துவக்கினார். ஆரம்பத்தில் நார்விக் நகரின் ஏழை எளியவர்களைச் சந்தித்து அவர்களுக்கு வேதாகமத்தைக் கற்றுக் கொடுப்பதும், ஏழைக் குழந்தைகளுக்கு ஞாயிறு பாட சாலை நடத்துவதும் அவருடைய ஊழியமாக இருந்தது.
திருமணமான பின்பு எலிசபெத் ஃப்ரை எஸ்ஸெக்ஸ் என்னும் நகரில் ஊழியத்தைத் தொடர்ந்தார். சுகவீனர்களைப் பராமரிக்கவும். சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கவும் துவங்கினார். ஆனால் அந்த ஊழியத்தில் திடீரென ஒரு திருப்பம் ஏற்பட்டது.
19-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் நியூகேட் என்று அழைக்கப்ப்டும் சிறைச்சாலையில் சீர்கெட்ட நிலைமைகள் இருப்பதாக அறிந்த எலிசபெத் உடனே செயல்பட ஆரம்பித்தார். நூற்றுக்கும் மேற்பட்ட பெண் கைதிகள் மிகச்சிறிய அறைகளில் அடைக்கப்பட்டிருந்தனர். எவ்வித சுகாதாரமும் இல்லாமல் அழுக்கிலும், பயங்கரக் குளிரிலும் அவர்கள் வாடிக் கொண்டிருப்பதைக் கண்டவுடன், எலிசபெத் நகரத்தின் மேலதிகாரிகளைத் தொடர்பு கொண்டார். அதுவரை கைதிகளைப் பற்றிய அக்கறை யாருக்குமே இல்லை.
நாளடைவில் எலிசபெத்தின் கோரிக்கைகள் கேட்கப்பட்டது. சிறைச்சாலையின் நிலைமையில் மாறுதல்கள் ஏற்படத் தொடங்கின.
ஒவ்வொரு நாள் காலையிலும், மாலையிலும் குறித்த நேரத்தில் ஜெபமும், வேத வாசிப்பும் நடத்தப்பட்டது. தையற் கல்வியும் கற்றுக் கொடுக்கப்பட்டது. இதுவரை வாழ்வை விரக்தியுடன் கழித்த கைதிகள் தையற் தொழிலில் ஆர்வமுடன் ஈடுபட்டனர்.
அதில் கிடைத்த வருமானம் அவர்களை நேர்மையுடனும், சுய மரியாதையுடனும் நடக்க உதவியது. எலிசபெத் ஃப்ரை செய்த மற்றுமொரு முக்கிய சீர்திருத்தம் உண்டு.
அந்த நாட்களில் லண்டன் நகரிலிருந்து கைதிகளைக் கப்பலில் ஏற்றி வெகு தூரத்தில் இருக்கும் ஆஸ்திரேலியா நாட்டிலுள்ள சிறைகளுக்குக் கொண்டு போய் விடுவது வழக்கம். அப்படிக் கொண்டு போகும் போது பெண் கைதிகளை அதிகாரிகள் மிகவும் ஈனமாக நடத்தினார்கள். நீண்ட கடல் யாத்திரையின்போது கூட கைதிகளின் விலங்குகளைக் கழற்றவில்லை. நோயுள்ளோருக்கு எந்தவித மருத்துவ சிகிட்சைகளையும் அளிக்கவில்லை. ஆஸ்திரேலியாவை அடைந்த பின்பும் கைதிகள் அடிமைகளாகவே வாழ்ந்தனர்.
இவைகளை அறிந்த எலிசபெத் ஃப்ரை அரசாங்க அதிகாரிகளிடம் முறையிட ஆரம்பித்தார். அவருடைய விடாமுயற்சியினால், மேலே கூறப்பட்ட கொடுமைகள் கொஞ்சம் கொஞ்சமாகத் தடுத்து நிறுத்தப்பட்டன. நியூகேட்டில் ஆரம்பித்த சிறை சீர்திருத்தங்கள் விரைவில் நாட்டிலுள்ள மற்ற சிறைச்சாலைகளிலும் வலியுறுத்தப்பட்டது.
எலிசபெத் ஃப்ரையின் கனிந்த இதயத்தைக் கைதிகள் கண்கூடாகக் கண்டனர். ஒவ்வொரு தடவையும் கைதிக் கப்பல்கள் இங்கிலாந்திலிருந்து புறப்படும்போது, எலிசபெத் அங்கு சென்று எல்லாருக்கும் ஆளுக்கு ஒரு வேதாகமமும், கம்பளி உடைகள் பின்னுவதற்கு வேண்டிய நூல்களையும், ஊசிகளையும் கொடுத்து அன்புடன் வழியனுப்பிவிட்டு வருவார்.
இப்படி ஒன்றிரண்டு தடவைகள் அல்ல, 25 வருடங்களாக ஊழியம் செய்தார். பெண்கள் அதிகமாக வெளியே செல்வதை சமுதாயம் விரும்பாத காலக் கட்டத்தில் எலிசபெத் ஃப்ரையைத் துணிச்சலுடன் செயல்பட வைத்தது, கர்த்தர் மீது அவர் வைத்த அளவற்ற அன்பும், பயனுள்ள சேவையைச் செய்ய வேண்டும் என்ற உறுதியும் தான்.
அவரை அவ்வாறான ஊழியத்திற்கு அழைப்பித்தது. கட்டுண்டவர்களை விடுதலையாக்க வந்த கர்த்தராகிய இயேசுவை காவலில் அடைக்கப்பட்டவர்களுக்கு நாம் அறிவிக்கும்போது, ‘காவலில் இருந்தேன், என்னைப் பார்க்க வந்தீர்கள்’ என்று சொல்லி மகிழுவார். சிறை ஊழியங்களுக்காக ஜெபிப்போம்! .
No comments:
Post a Comment