ஏமி கார்மைக்கேல் அம்மையாரின் வரலாறு பிறப்பு :
16 டிசம்பர் 1867 மிஷினரி தளம்: இந்தியா, இலங்கை இறப்பு : 18 சனவரி 1951
*அன்பில்லாமல் கொடுக்கலாம். ஆனால் கொடுக்காமல் அன்பாயிருக்க முடியாது.*-ஏமி தனது வாழ்வை இந்தியாவை நேசித்து கொடுத்த உத்தம தாயின் வரலாறு.
*இளம்பருவம்: *ஏமி கார்மைக்கேல் 1867 ஆம் ஆண்டு கவுண்டி டவுன் என்ற இடத்திற்கு அருகில் உள்ள மில்லிஸ்லே எனும் கிராமத்தில் பிறந்தார். இவரின் தகப்பனார் பெயர் டேவிட், தாயின் பெயர் கேத்ரின் என்பதாகும்.
இந்த தம்பதியருக்கு 7 பிள்ளைகள் இருந்தனர். ஏமி கார்மைக்கேல் எல்லாருக்கும் மூத்த மகளாகப் பிறந்தார். தனது தந்தையின் மரணத்திற்குப் பிறகு ராபர்ட் வில்சன் என்பவரால் தத்து எடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டார். இவரே ஏமிக்கு ஆசிரியராக இருந்து அறிவு புகட்டினார்.ஏமிக்கு கண்கள் பழுப்பு நிறத்தில் இருந்தது. அவர் சொந்த நாட்டில் உள்ளவர்களுக்கு பெரும்பாலும் நீல நிறத்தில்தான் கண்கள் இருக்கும். இதனால் ஏமி இயேசுவிடம் அடிக்கடி தன் கண்ணின் நிறத்தை மாற்றும்படி ஜெபிப்பாராம். ஆனால் ஆண்டவர் ஏதும் செய்யாதபடியால் வருத்தத்துடன் இருப்பாராம்.
ஆனால் தான் ஊழியத்திற்கு இந்தியா வந்தபின்பு தன் கண்களின் நிறம் இந்தியர்களின் கண்கள் போல பழுப்பு நிறத்தில் இருப்பதைக் கண்டு ஆண்டவருக்கு நன்றி செலுத்தினார்.ஏமிக்கு ஊழிய வாஞ்சை அதிகமாயிருந்தது.ஆனால் அவர் பல விதங்களில் மிஷனரி பணிக்கு செல்ல இயலாதவராய் இருந்தார். அவர் நியூரால்ஜியா எனும் கொடிய நரம்பு வியாதியால் பாதிக்கப்பட்டிருந்தார்.அது அவருடைய முழு சரீரத்தையும் பலவீனப்படுத்தி, சகிக்க முடியாத வலியினால் பல நாட்கள் படுக்கையில் இருக்க வைத்தது.
*ஊழியப் பாதை:*
1880 ஆம் ஆண்டில் ஏமி ஞாயிறு பள்ளி ஒன்றை ஆரம்பித்தார். சிறியதாய் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஊழியம் பிறகு 500 பேருக்கு மேல் சேர்ந்ததால் மாணவர்கள் அமர இடம் இல்லாத அளவிற்கு வளர்ந்தது.பிறகு சிலரின் பண உதவியுடன் வேறு இடத்தில் இந்த ஞாயிறு பள்ளி நடைபெற்றது.
1887 ஆம் ஆண்டு நடைபெற்ற கெஸ்விக் கூடுகையில் திரு.ஹட்சன் டெய்லர் மிஷனரி வாழ்க்கையைக் குறித்தும் அதன் தேவைப் பற்றியும் பேசுவதைக் கேட்டார். ஏமியைத் தத்து எடுத்து வளர்த்த ராபர்ட் வில்சன் இந்த கெஸ்விக் கூடுகையின் துணை நிறுவனராயிருந்தார். ஹட்சனின் பிரசங்கத்தின் மூலம் ஏமி தான் மிஷனரி ஊழியத்திற்கு அழைக்கப்பட்டிருப்பதை உணர்ந்தார். உடனே ஊழியத்திற்குத் தன்னை முழுமையாக ஒப்புக்கொடுத்தார். உடனே அவர் ‘China Inland Mission’ என்ற மிஷனரி அமைப்பில் விண்ணப்பித்து லண்டன் நகருக்கு மிஷனரி பயிற்சிக்காக சென்றார். *இந்தியாவில் ஏமியின் ஊழியங்கள்:* தொடக்கத்தில் ஏமி ஜப்பானுக்கே பயணம் செய்தார். ஆனால் உடல்நிலைக் காரணமாக அவர் திரும்ப நேரிட்டது. பின்பு சில காலம் அவர் இலங்கையில் ஊழியம் செய்தார்.பின்பு அவர் இந்தியாவிலுள்ள பெங்களூர் பட்டணத்திற்கு வந்தார். ஆண்டவர் கொடுத்த பாரத்தின் காரணமாக இந்தியாவிலேயே ஊழியம் செய்ய முழுமையாய் ஒப்புக்கொடுத்தார். *டோனாவூர் ஐக்கியம்: *பின்பு அவர் தமிழ்நாட்டிற்கு வந்தார். ஏமியுடைய பெரும்பாலான ஊழியம் வாலிப பெண்களுக்கு மத்தியில் இருந்தது. இவர் மூலமாய் அநேக வாலிப பெண்கள் விபச்சாரத்திலிருந்து மீட்கப்பட்டனர். அதோடல்லாமல் அநேக குழந்தைகளை எடுத்து வளர்கக ஆரம்பித்தார். இதனால் ‘டோனாவூர் ஐக்கியம்‘ என்ற அமைப்பை டோனாவூரில் நிறுவினார். ஏமியின் வழிநடத்துதலால் ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட் குழந்தைகளுக்கு அவர் அமைப்பு அடைக்கலமாய் இருந்தது.இந்திய கலாச்சாரத்தைக் கனப்படுத்தும்படி இந்த அமைப்பில் உள்ள அனைவரும் சேலை உடுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்த அமைப்பில் தத்தெடுக்கப்படும் குழந்தைகளுக்கு இந்திய பெயரே அளிக்கப்பட்டது. ஏமியும் சேலை அணிவதை வழக்கமாகக் கொண்டு ஒரு இந்தியர் போலவே வாழ்ந்தார். தமிழர்களின் தோல் வண்ணத்தைப் பெற காப்பி நிறத்தால் தன் தோலை சாயம் பூசினார்.இவரிடம் மிஷனரி வாழ்க்கை என்றால் என்ன என்று கேட்டதற்கு ‘மிஷனரி வாழ்க்கை என்பது மரணத்திற்கு ஏதுவானது’ என்று பதில் கூறினார். அந்த அளவிற்கு அவர் மிஷனரி பணிக்காகத் தன்னை அர்ப்பணித்தார். இவரின் ஊழியத்தால் கவரப்பட்ட ராணி மேரி 1912-ல் டோனாவூரில் ஒரு மருத்துவமனை நிறுவ நிதியுதவி அளித்தார்.1918-ல் சிறுவர்களுக்கான ஆதரவு இல்லத்தை நிறுவினார்.இந்த சிறுவர்கள் பெரும்பாலும் இவரால் மீட்கப்பட்ட (விபச்சாரத்திற்க்கு வலுக்கட்டாயமாக்கப்பட்டவர்களின் குழந்தைகள்) ஆவார்கள். *இறுதி நாட்கள்* 1932 ஆம் ஆண்டு ஏமி அம்மையார் கீழே விழுந்ததால் ,பலமாக காயப்பட்டார். அதன் விளைவாக மரணம் வரை படுக்கையிலே இருக்க நேரிட்டது.ஆனால் அம்மையார் அந்த காலக்கட்டத்தில் 16 க்கும் மேற்பட்ட புத்தகங்களை வெளியிட்டார்.1951 ஆம் ஆண்டு ஏமி தன்னுடைய 83 ஆம் வயதில் மரணமடைந்தார்.அவர் தன்னுடைய கல்லறையில் நினைவுக்கல் ஏதும் பதிக்கக்கூடாது என கேட்டுக்கொண்டார்.ஆனால் அவர் அன்பாய் நேசித்த குழந்தைகள் , அவருடைய கல்லறையில் பறவைகள் இளைப்பாற ஓரிடத்தை உருவாக்கி அதில் ‘அம்மா‘ என்ற சொல்லைப் பதிக்கும்படிக் கேட்டுக்கொண்டார். இந்திய தேசம் 1948 ஆம் ஆண்டு ‘தேவதாசி’ முறையை ஒழித்தது. ஏமியின் பெருமுயற்சியே இதற்கு வித்திட்டது.இன்றும் கூட டோனாவூர் ஐக்கியம் சிறப்பாக செயல்பட்டுவருகின்றது
* நற்குணசீலி " ( The Virtuous One ) " மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு , பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி , உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது " ( மத் . 5 : 16 ) தேவன் இரகசியமாகப் பேசுவதைக்கூட உணர்ந்து கொள்ளும் கூர்மையான இதயத்தைப் பெற்றிருத்தல் கிறிஸ்தவ வாழ்க்கைக்கு இன்றியமையாததொன்று . தேவனது மெல்லிய அமர்ந்த சத்தத்தைக் கேட்டறிந்து அதற்குக் கீழ்ப்படிந்து வாழ்ந்தவர் கிளாடிஸ் அயில்வார்ட்
அம்மையார் . சாதாரண வீட்டுப் பணிப் பெண்ணை ஆண்டவர் தனது பணியில் பயன்படுத்த முடியுமா?படிப்பில் பின்தங்கிய ஒரு பெண் அயல் நாட்டிற்குச் சென்று அருட்பணியாளராக சேவை செய்ய முடியுமா இது போன்ற கேள்விகளுக்கு பதிலை தொடர்ந்து படியுங்கள் . ரோமர் 11 : 29ல் கூறப்பட்டுள்ள “ தேவனுடைய கிருபை வரங்களும் , அவர்களை அழைத்த அழைப்பும் மாறாதவைகளே ” என்ற சத்தியத்திற்கு கிளாடிஸ் அயில்வார்ட் அவர்களின் வாழ்க்கை ஓர் உயிருள்ள சாட்சியாகும
். 1902 பெப்ரவரி 24 - ல் பிறந்த இவர் தனது 14ஆம் வயதிலேயே ஒரு பணிப்பெண்ணாக வேலை செய்ய ஆரம்பித்தார் . ஓர் எளிய குடும்பத்தைச் சார்ந்த இவருக்கு சாதாரண கல்வியே கிடைத்தது . தனது 18ஆம் வயதில் கிளாடிஸ் ஓர் எழுப்புதல் கூட்டத்தில் கலந்து கொண்டார் . அக்கூட்டத்தில் ஆண்டவருக்கு ஊழியம் செய்ய முன்வருவோர் யார் என செய்தியாளர் அறைகூவல் விடுத்தார் . இதைக் கேட்டவுடன் பணிக்களம் சென்று , அருட்பணி செய்ய வேண்டும் என்கிற ஆவல் அவருடைய இதயத்தை நிரப்பியது . சீனாவில் நற்செய்தியைப் பிரசங்கிக்க வேண்டும் என்பதே தன்னைக் குறித்த தேவ அழைப்பு என்பதை அவர் உறுதியாக அறிந்து கொண்டார் .
அவர் தனது வாலிப வயதில் சீன உள்நாட்டு அருட்பணி இயக்கத்தின் லண்டன் மாநகர மையத்தில் ( China Inland Mission ) பணி கிடைக்கும் வரை பணிப்பெண் வேலையைத் தொடர்ந்து செய்து வந்தார் . அவர்களது எதிர்பார்ப்புகளை கிளாடிஸால் நிறைவேற்ற இயலவில்லை . ஆனால் கிளாடிஸ் தேவனுக்குப் பணி புரியும் தனது தீர்மானத்தில் உறுதியுள்ளவராக , தான் செய்து வந்த வேலையின் மூலம் சிறிது பணம் சேர்த்து வைத்தார் . அவர் தனது 30 - வது வயதில் , திருமதி . ஜீனி லாசன் என்கிற 73 வயது நிரம்பிய ஒரு மிஷனெரி தன்னுடன் பணிபுரிய ஓர் இளம் பெண்ணைத் தேடிக் கொண்டிருக்கிறார் எனக் கேள்விப்பட்டார் . திருமதி . லாசன் , கிளாடிஸை ஏற்றுக் கொண்டார் . ஆனால் சீனாவுக்குச் செல்ல கிளாடிஸின் கப்பல் செலவுக்கு லாசன் அம்மையாரால் பணம் கொடுக்க இயலவில்லை . கிளாடிஸ்தான் சேமித்து வைத்திருந்த பணத்தைப் பயன்படுத்தி , சீனாவுக்கும் ரஷ்யாவுக்குமிடையே யுத்தம் நடந்து கொண்டிருந்த அந்த நாட்களில் இரயில் மூலம் ஐரோப்பா மற்றும் ரஷ்யா வழியாகப் பயணம் செய்தார் .
1932ல் அவர்கள் யாங்செங் என்கிற பட்டணத்திற்கு வந்து சேர்ந்தார்கள் . அந்த நகரமானது பொருட்களை ஏற்றிச் செல்லும் வண்டித்தொடர்கள் ( Caravans ) இரவில் நிறுத்திச் செல்லும் இடமாக இருந்தது . திருமதி . ஜீனியும் , கிளாடிஸும் அந்தப் பட்டணத்தில் பயணியர் விடுதியை ஆரம்பிப்பதன் மூலம் அங்கு வரும் பயணிகளுக்கு நற்செய்தியை இன்னும் சிறப்பாக அறிவிக்க முடியும் என எண்ணினர் . எனவே , அவர்கள் வாழ்ந்து வந்த கட்டடத்தைப் பழுதுபார்த்து , அதைப் பயணியர் விடுதியாக மாற்றி , பயணிகளுக்கும் வண்டிகளை இழுத்து வந்த மிருகங்களுக்கும் உணவு அளித்தனர் . ஒரு வண்டித் தொடர் அவர்களது விடுதியை நெருங்கும்போது , கிளாடிஸ் ஓடிச்சென்று , முதலாவது வரும் வண்டியை இழுக்கும் மிருகத்தின் கடிவாளத்தைப் பிடித்துக்கொண்டு , அதைத் தங்களது வளாகத்திற்குள் நடத்துவார் . மீதமுள்ள மிருகங்களும் அவைகளை நடத்துபவர்களும் பின் தொடர்ந்து வருவார்கள் . ஒரு நியாயமான கட்டணத்தில் நல்ல உணவும் , படுக்கை வசதியும் மற்றும் மிருகங்களுக்கான பராமரிப்பையும் மிஷனெரிகள் அளித்தனர் .
மாலை வேளைகளில் பயணிகளுக்கு இலவசமாக நற்செய்தி மற்றும் வேதாகம சரித்திரங்களைச் சொல்லி , அவர்களை மகிழ்வித்தனர் . அதிவிரைவில் அவர்கள் இந்த சரித்திரங்கள் மற்றப் பயணிகளுடன் பகிர்ந்து கொண்டனர் . கிறிஸ்துவிடமும் திரும்பினர் . கிளாடிஸ் தொடர்ந்துட வாய்ப்பைப் பயன்படுத்தி , தன்னுடைய சீனமொழி அறிவை வளர்த்து வந்தார் . எதிர்பாராத விதத்தில் திருமதி . லாசன் அவர்கள் கீமே விழுந்ததால் வெகு சீக்கிரத்தில் இறந்துவிட்டார்கள் . இப்போது யாங் என்ற ஒரு சீனதேச கிறிஸ்தவ சமையல்காரருடன் சேர்ந்து , கிளாடிஸ் அந்தப் பயணியர் விடுதியை நடத்த வேண்டியதாயிற்று . சில வாரங்கள் சென்றபின் யாங்செங் நகரத் தலைவர் தனது வாகனத்தில் வந்து , கிளாடிஸ் அவர்களுக்கு சீனப் பெண்களின் கால்களைப் பரிசோதிக்கும் வேலையைத் தந்தார் . பெண்களின் பாதங்கள் சிறியதாக இருப்பதே அழகு என சீனர்கள் நம்பியதால் பெண்களின் பாதங்களைக் கட்டிவைக்கும் மூடப் பழக்கம் சீனாவில் இருந்தது . சீன அரசாங்கம் சீனப் பெண்களின் கால்களைக் கட்டுதல் என்ற பழைய சீன பழக்கத்தை தடை செய்திருந்தது . எனவே , கால்கள் கட்டப்படாத , பெண்கள் தங்கும் பகுதிகளுக்குச் சென்று , அவ்வேலையைச் செய்ய ஒரு பெண் தேவைப்பட்டது . இந்த வேலைக்கு கிளாடிஸ் பொருத்தமானவராக இருந்தார் . இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி , கிளாடிஸ் நற்செய்தியைத் தாராளமாகப் பகிர்ந்து கொண்டார் .
ஒரு முறை சிறைக் கைதிகளிடையே ஏற்பட்ட பிரச்சனையைத் தீர்ப்பதற்காக அந்த சீன நகரத் தலைவர் கிளாடிஸை அழைத்தார் . கிளாடிஸ் சிறைக் கைதிகளை அமைதிப்படுத்தி , அவர்களது கருத்துகளை , சீனத் தலைவருக்கு எடுத்துரைத்தார் . இதன் விளைவாக , சிறைச்சாலையில் நெசவாலைகளும் , மாவு அரைக்கும் இயந்திரமும் நிறுவப்பட்டு , சிறைக் கைதிகள் வேலை செய்து , பணம் சம்பாதித்து , கூடுதலாக உணவு வாங்குவதற்கு வாய்ப்பு கிட்டியது . கிளாடிஸின் உதவி செய்யும் மனப்பான்மையையும் பயமற்ற தன்மையையும் கண்ட மக்கள் அவருக்கு “ நற்குணசீலி " ( The Virtuous one ) என்று பொருள்படும் “ அய் - வை - டெ " என்ற பெயரை அவருக்குச் சூட்டினார்கள் .
ஒரு முறை ஒரு பெண் , உடல் முழுவதும் புண்கள் நிறைந்திருந்த ஒரு குழந்தையை இழுத்துக் கொண்டு செல்வதை கிளாடிஸ் கவனித்தார் . அக்குழந்தை அந்தப் பெண்ணின் சொந்தக் குழந்தை அல்ல என்றும் , பிச்சை எடுப்பதற்காக அந்தப் பெண் அந்தக் குழந்தையை பயன்படுத்தினாள் எனவும் தெரிய வந்தது . கிளாடிஸ் அந்தப் பெண் குழந்தையை 9 பென்ஸ் கொடுத்து விலைக்கு வாங்கி , அந்தப் பிள்ளைக்கு “ நைன் பென்ஸ் " என்று பெயரிட்டார் . விரைவில் இன்னும் ஒரு சிறிய அனாதைக் குழந்தை “ லெஸ் ” என்ற பெயருடன் கிளாடிஸின் குடும்பத்தில் சேர்க்கப்பட்டது . யாங்செங் தலைவர் எப்போதும் கிளாடிஸை தனது அரண்மனைக்கு வரவேற்று , அடிக்கடி உரையாற்றி வந்தார் .
ஆனால் அவர் கிளாடிஸின் மதத்தை விரும்பவில்லை . 1936ஆம் வருடம் கிளாடிஸ் அதிகாரப்பூர்வமான ஒரு சீனக் குடிமகளாக மாறினார் . 1938ல் சீனாவுக்கும் ஜப்பானுக்கும் யுத்தம் ஆரம்பித்தது . ஜப்பானிய விமானங்கள் யாங்செங் பட்டணத்தின் மீது குண்டு வீசித் தாக்கின . தப்பிப் பிழைத்தவர்கள் மலைகளுக்கு ஓடினர் . யாங்செங் நகரம் ஜப்பானிய படையினரால் கைப்பற்றப்பட்டது . அந்நகரத் தலைவர் சிறைக் கைதிகளை என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து கிளாடிஸிடம் ஆலோசனை கேட்டார் . கிளாடிஸின் ஆலோசனைப்படி ஒவ்வொருவரிடமும் உறுதிப் பத்திர வாக்குறுதி பெற்றுக் கொண்டு கைதிகள் எல்லோரும் விடுதலை செய்யப்பட்டனர் . ஜப்பானிய தாக்குதல் நடந்து கொண்டிருந்த வருடங்களில் கிளாடிஸின் பயணியர் விடுதியானது 20 அனாதைகளுக்கும் 30 முதல் 40 காயம் அடைந்த சீனப் போர் வீரர்களுக்கும் ஒருபுகலிடமாக இருந்தது .
சீன எதிர்ப்பாளர்களில் ஒருவரான கர்னல் லின்னன் கிளாடிஸைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்கு ஜப்பான் ஒரு வெகுமதியை அறிவித்து உள்ளது என்பதைக் கூறி அவரை எச்சரித்தார் . எனவே , கிளாடிஸ் ஜப்பானியரிடமிருந்து தப்புவதற்காகத் தன்னிடம் இருந்த நூறு குழந்தைகளோடு நூறு மைல்களுக்கு அப்பால் இருந்த சியான் என்ற சீனப் பகுதிக்குப் பயணமானார் . 27 நாட்கள் மலைகளின் வழியாகப் பயணம் செய்து , கிளாடிஸும் குழந்தைகளும் சியானில் இருந்த அனாதை விடுதியை அடைந்தனர் . அவர்கள் மஞ்சள் நதியை தெய்வாதீனமாகக் கடந்து , சியான் சென்றடைந்தவுடன் , கிளாடிஸ் காய்ச்சலினாலும் அளவுக்கதிகமான களைப்பினாலும் சுருண்டு விழுந்தார் .
அவர் குணம் அடைந்த பின்பு , சியானில் தன்னுடைய ஊழியத்தைத் தொடர்ந்தார் . கிளாடிஸ் அங்கு ஒரு சபையை ஆரம்பித்து , கிராமங்களிலும் , சிறைச்சாலைகளிலும் , வியாதியுள்ளவர்கள் மத்தியிலும் நற்செய்தியை அறிவித்தார் . திபெத்திய எல்லையின் அருகில் உள்ள ஜெசுவான் என்ற இடத்தில் தொழுநோயாளிகளுக்கான ஒரு குடியிருப்பை கிளாடிஸ் ஏற்படுத்தினார் . யுத்தத்தின்போது அடைந்த காயங்களால் அவரது உடல் மிகவும் பலவீனப்பட்டது .
1947ல் கிளாடிஸும் மற்ற மிஷனெரிகளும் சீனாவைவிட்டு வெளியேறக் காலம் முழுவதும் அவருக்கு சேவை செய்ய அவளைப் பயன்படுத்தினார் . வாசிக்கிற நீங்களும் உங்கள் வாழ்வை ஆண்டவருக்கு அர்ப்பணம் செய்ய ஆயத்தமா ? 21 - ஆம் நூற்றாண்டில் தேவனுக்கு ஊழியஞ்செய்தல் என்பது பல்வேறு கோணங்களில் வளர்ச்சியடைந்துள்ளது . நாம் கிளாடிஸ் அம்மையாரைப் போல சமுதாயத்தின் சரீரப்பிரகாரமான மற்றும் ஆவிக்குரிய தேவைகளைப் பூர்த்தி செய்யும் பணியில் முன்னேறிச் செல்வோம்
பொங்கிவழியும் அன்பு ( Love Overflowing )"
மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ , அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் " . ( மத் . 25 : 40 )
பண்டைக்காலமுதல் இந்தியா ஆணாதிக்கம் மிகுந்த சமுதாயத்தைக் கொண்டது ; ஒரு பெண் தனது உரிமைகளுக்காகக் குரல் எழுப்புவது என்பது கனவாகவே இருந்து வந்தது . பெண்களுக்கும் சம உரிமை அளித்த கர்த்தர் இயேசுவைப் பின்பற்றி , இந்தியாவில் பெண்களின் மேம்பாட்டுக்காக முன்னோடியாக நின்று பாடுபட்டவர் பண்டித இராமாபாய் .
பண்டித இராமாபாய் 1858ஆம் ஆண்டு கர்நாடிய மாநிலத்திலுள்ள மங்களூர் மாவட்டத்தில் ஒரு வைதீக பிராமணக் குடும்பத்தில் பிறந்தார் . அவரது தகப்பனார் மகாராஷ்டிராவைச் சேர்ந்த உயர்குல இந்து மதத்தைச் சார்ந்தவர் . பக்தி நிறைந்த இந்தக் குடும்பம் புண்ணியத் தலங்களுக்கு யாத்திரையாகச் சென்று அங்குள்ள புனித நதிகளில் நீராடி வந்தனர் . அவரது தகப்பனார் ஆனந்த சாஸ்திரி இந்து மத சொற்பொழிவுகளை நடத்தி வந்ததோடு , தனது மனைவிக்கும் . மகள் இராமாபாய்க்கும் வேதங்களைக் கற்றுக் கொடுத்தார் . பெண்களான தன் மனைவிக்கும் . மகளுக்கும் வேதங்களைக் கற்றுக் கொடுத்தபடியால் பிராமண மதவாதிகளால் அவர் உபத்திரவப்படுத்தப்பட்டார் . மிகுந்த தான தர்மங்களைச் செய்ததினால் இந்தக் குடும்பம் தனது செல்வங்களையெல்லாம் இழந்தது . விரைவில் தேசத்தில் ஒரு பஞ்சம் உண்டாயிற்று . அவர்கள் பல இடங்களுக்குச் சென்று , வேதங்களை உபதேசித்து அதினால் கிடைத்த தர்மம் மற்றும் காணிக்கைகளை வைத்துத் தங்கள் வாழ்க்கையை நடத்தினர் . ஆயினும் . இராமாபாயின் தாய் . தகப்பனார் மற்றும் சகோதரி பட்டினியால் மரித்துப் போனார்கள் . இராமாபாயும் அவரது சகோதரனும் மாத்திரம் தப்பிப் பிழைத்து , பல மைல்கள் கால்நடைப்பயணம் செய்து ,
இறுதியில் 1878 - ல் கல்கத்தா நகரம் சென்றடைந்தனர் . அங்கு இராமாபாய் சமஸ்கிருத மொழியில் சரளமாகச் சொற்பொழிவுகளை நடத்துவதைக் கண்ட சமஸ்கிருத பண்டிதர்கள் மிகவும் வியப்படைந்து , அவருக்குப் “ பண்டிதை " என்ற பட்டத்தை அளித்து கனப்படுத்தினர் . கல்கத்தா நகரில் சில கிறிஸ்தவ விசுவாசிகளோடு ஏற்பட்ட தொடர்புகளினால் இராமாபாய் கிறிஸ்தவ ஆராதனை மற்றும் ஊழியத்தினால் ஈர்க்கப்பட்டார் . அவருக்கு 22 வயதானபோது நன்கு கல்வி கற்ற ஒரு வங்காள மனிதரை மணந்தார் . வழக்கறிஞராயிருந்த அவர் இராமாபாய் கிறிஸ்தவத்தில் கொண்டிருந்த ஆர்வத்துக்கு மிகவும் எதிர்ப்பு தெரிவித்தார் . திருமணமான இரண்டாண்டுகளில் அவர் காலரா நோயினால் மரித்துப் போனார் .
பிறகு இராமாபாய் தன் கைக்குழந்தை மனோரமாவுடன் பூனாநகரத்திற்குச் சென்றார் . திரு . ஆலன் என்ற பாப்திஸ்து சபை மிஷனெரி அவருக்கு கிறிஸ்துவைப் பற்றிக் கூறி ஆதியாகமபுத்தகத்திலுள்ள படைப்பின் வரலாற்றையும் கற்றுக் கொடுத்தார் . தான் படித்த வேத நூல்களினின்று இது முற்றிலும் வேறுபட்டதாயிருக்கக் கண்ட இராமாபாயின் இருதயத்தில் பரிசுத்த வேதத்தைக் குறித்து ஓர் ஆர்வம் உண்டானது .
ஹர்போர்டு என்ற மற்றொரு மிஷனெரி இராமாபாய்க்கு ஒரு மராத்திமொழி புதிய ஏற்பாட்டைக் கொடுத்தார் . அதை அவர் வாசித்தார் . இந்து மத நம்பிக்கையில் பெண்கள் இழிவான படைப்புகளாக நடத்தப்பட்டதை அறிந்த இவர் பெண்கள் மேம்பாட்டுக்காகப் போராடுவதற்குத் தனக்கு இன்னும் கல்வியும் பயிற்சியும் அவசியம் என்பதை உணர்ந்தார் .
எனவே 1883ஆம் ஆண்டு இராமாபாய் இங்கிலாந்திற்குச் சென்றார் . அங்கு ஆங்கிலிக்கன் திருச்சபையின் சகோதரிகள் ( Sisters of the Church of England ) செய்து வந்த சேவைகளைப் பார்க்க அவர்களது பல்வேறு மையங்களுக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார் . வாழ்க்கையில் சீரழிந்த , நலிந்து போன பெண்கள் நடுவில் செய்யப்பட்ட சேவைகள் இராமாபாயை மிகவும் கவர்ந்தன .
அதன் பிறகு 1886ஆம் ஆண் 28வர் அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்குச் சென்றார் . கிறிஸ்தவ சமயக்கால் ஈர்க்கப்பட்ட இராமாபாய் ஞானஸ்நானம் பெற்று , ஆங்கிலிக்கன் திருச்சபையில் திடப்படுத்தலும் பெற்றுக் கொண்டார் . இவ்விதம் இராமாபாய் நிபந்தனையில்லாமல் முற்றிலுமாக மீட்பரிடம் சரணடைந்து , தன்னுடைய பாவங்களை மன்னித்து , தன்னைத் தேவன் தம்முடைய பிள்ளையாக ஏற்றுக்கொள்ளும்படி வேண்டிக் கொண்டார் . அது ஒரு மகிமையான மனமாற்றம் ;
அவர் இரட்சிப்பின் சந்தோஷத்தினால் நிறைக்கப்பட்டார் . பின்னர் அவர் பல மிஷனெரி ஆராதனைகளில் கலந்து கொண்டதுடன் , பக்திப் பரவசமூட்டும் பல புத்தகங்களையும் வாசித்தார் .
இந்தியாவில் ஏன் வெகுசில மிஷனெரி ஸ்தாபனங்களே உள்ளன என்று இராமாபாய் ஆச்சரியப்பட்டார் . ஆண்டவருடைய மெல்லிய அமர்ந்த சத்தம் அவரைக் கடிந்து கொண்டது . இந்தியாவில் ஒரு விசுவாச மிஷனெரி ஸ்தாபனத்தை தொடங்கும் நபராக நீ ஏன் இருக்கக் கூடாது எனக் கர்த்தர் அவரிடம் கேட்டார் . இந்தியாவில் விதவைகள் மற்றும் குழந்தைகளின் இழிவான வாழ்க்கையிலிருந்து அவர்களை மீட்க இராமாபாய் விரும்பினார் . எனவே “ சாரதா சதன் ” என்ற பெயரில் அடைக்கலம் தரும் ஓர் இல்லத்தைத் திறந்தார் .
சமுதாயத்தால் தள்ளப்பட்ட , பசியாயிருந்த , கொடுமைப்படுத்தப்பட்ட , வீடு வாசலில்லாத பெண்கள் அந்த இல்லத்திற்கு வந்தார்கள் . இராமாபாய் அவர்களுக்கு ஒரு அன்புள்ள தாயாக , தோழியாக , ஆசிரியையாக மாறினார் . அவர்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளும்படி கட்டாயப்படுத்தப்படவில்லை ஆனால் இராமாபாயின் சிறந்த மாதிரியான வாழ்க்கையை பார்த்துப் பலர் கிறிஸ்துவைத் தங்கள் இரட்சகராக அறிந்து கொண்டனர் .
கோவில்களில் இந்து பூசாரிகள் அடிமைகளாகவைத்திருந்த அநேக பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளையும் இராமாபாய் மீட்டார் . இந்த ஊழியம் விரிவடைந்து , விரைவில் சாரதா சதனில் எல்லாப் பெண்களுக்கும் போதுமான இடவசதி இல்லாமற் போனது . எனவே பூனா நகரில் கேட்கான் என்ற இடத்தில் நிலம் வாங்கப்பட்டு , இதைப்போன்ற மற்றுமொரு இல்லம் கட்டப்பட்டது . அந்த இல்லத்திற்கு “ மீட்பு " எனப் பொருள்படும் “ முக்தி " என்று பெயரிடப்பட்டது . முக்தி இல்லம் நிறுவப்படுவதற்காகவும் அதன் ஊழியத்திற்காகவும் மிகுதியான ஜெபம் ஏறெடுக்கப்பட்டது . இல்லத்திற்கு வந்த பெண்கள் பிற்காலத்தில் இல்லத்தை விட்டுச் சென்றபின் வேலை தேடிக் கொள்வதற்காக அவர்களுக்குப் பயனுள்ள தொழில்கள் கற்பிக்கப்பட்டன .
அவர்கள் செவிலியர்களாகவும் , நெசவாளர்களாகவும் , தோட்ட வேலை செய்பவர்களாகவும் , வீடு பராமரிப்பவர்களாகவும் மற்றும் வேதாகமஆசிரியர்களாகவும் மாறினார்கள் . இரண்டு இல்லங்களிலும் மிகத் துரிதமான வளர்ச்சி ஏற்பட்டு , விரைவில் இரண்டாயிரம் பெண்கள் அங்கு இருந்தனர் . அவர்கள் தையல் , பால் பண்ணை பராமரித்தல் , கயிறு திரித்தல் மற்றும் ரொட்டி தயாரித்தல் போன்ற வேலைகளையும் கற்றுக் கொண்டனர் . இளம் விதவைகளுக்கும் அடைக்கலம் கொடுக்கப்பட்டது . ஒரு முறை 300 பெண்கள் தேவையிலிருந்தனர் . இராமாபாய்க்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை . மத்திய இந்தியாவில் ஏற்பட்ட ஒரு கொடூரமான பஞ்சம் , இளம் வயதில் தானும் தன் பெரிய சகோதரனும் பட்ட கொடுமையான பாடுகளை இராமாபாய்கு நினைவூட்டியது .
ஆனால் அவர் ஜெபம் பண்ணத் தொடங்கினார் . விரைவில் தேவைகளைப் பற்றி கேள்விபட்ட அநேகக் கிறிஸ்தவர்கள் தங்கள் பணத்தினால் உதவி செய்ய முன் வந்தனர் . தன் ஊழியத்தில் எதிர்கொண்ட எல்லாப் பிரச்னைகளையும் இராமாபாய் தேவனுடைய ஆலோசனையுடன் மேற்கொண்டார் . முக்தி மிஷனை நடத்த அவர் நூறு பேரை நியமனம் செய்து , அவர்களது உதவியுடன் இல்லங்களை அருமையாக நடத்தி வந்தார் .
அற்பமான ஆரம்பங்களிலிருந்து இரு இல்லங்களும் மிகப் பெரியவைகளாக வளாந்தன . 1896இல் நிறுவப்பட்ட முக்தி மிஷன் பல்வேறு அம்சங்களையுடையதாய் விளங்கியது . அவரது ஊழியங்களில் மணமாகாத தாய்மார்களுக்கான இல்லம் ஒன்றும் அடங்கும் . இராமாபாயின் ஊழியங்களில் ஒரு பாலா பள்ளிப் பயிற்சி ( Kindergarten Training ) , பார்வையற்ற பெண்க ளுக்கான இல்லம் மற்றும் பள்ளி . ஒரு மருத்துவமனை மற்றும் சிறு சிகிச்சைக் கூடங்கள் ( Dispensaries ) , பல்வேறு தொழிற்கூடங்கள் மற்றும் ஒரு அச்சுக் கூடம் ஆகியவையும் உட்படும் .
அநேகமாக . இவர்தான் உலகிலேயே முதல் வேதாகமபெண் மொழிபெயர்ப்பாளர் எனலாம் . ஒரு எபிரேய மராத்தி இலக்கணமும் எழுதினார் . ' ஸ்திரி தாமநீதி என்ற பெண்களுக்கான சிறந்த நன்னெறி மற்றும் நீதிநெறிகளடங்கிய புத்தகமொன்றையும் எழுதினார் . 1922 இல் இராமாபாய் தனது நித்திய வெகுமதியைப்பெற தனது ஆண்டவரிடம் சென்றடைந்தார் . ' தேவன் எனக்கு என்னவெல்லாம் செய்தாரோ அதையெல்லாம் உங்களுக்கும் அவரால் செய்ய முடியும் " என்று எப்போதும் அவர் கூறுவதுண்டு . கேட்கானிலுள்ள முக்தி மிஷன் இன்றும் வீடு வாசலில்லாத , சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு அடைக்கலம் கொடுத்துக் கொண்டிருக்கிறது . அவரது வாழ்க்கை உண்மையாகவே பிறருக்காகவே எரிந்து முடிந்த ஒரு மெழுகுவர்த்தி . தனது சொந்த தேசத்தின் கலாச்சாரம் மற்றும் வேர்களை ஒரு போதும் மறுதலிக்காத பெண்மணி அவர் . அவரைப் பொறுத்தவரை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக சேவை செய்வது என்பது வெறும் சமூக சேவை மாத்திரமல்ல ; அது தேவ பக்திக்குரியதுமாகும் .
அவரது அன்பு மற்றும் உறுதியுடன் கூடிய அயராத உழைப்பின் மூலம் தன் காலத்திலிருந்த அநேக தடைச் சுவர்களை அவர் தகர்த்தெறிந்தார் . குறுகிய மனப்பான்மை என்னும்மதில்களை அவர் உடைத்தெறிந்தார் . ' முக்தி மிஷன் " என்பது இந்திய விசுவாசத்தால் நடத்தப்பட்ட ஓர் இந்தியப் பெண்ணின் இதயத்தில் உதித்ததொன்றாகும் என்று பிஷப் ஸ்டீபன் நீல் மொழிந்தார் . இயேசு கிறிஸ்து திரும்ப வரும்போது , உயிர்த்தெழுதலில் எந்தப் பெண்களுக்காக மற்றும் குழந்தைகளுக்காக பண்டித இராமாபாய் தனது வாழ்க்கையைத் தியாகம் செய்தார்களோ , அந்தப் பெண்களும் குழந்தைகளும் எழும்பி . அவரைப் “ பாக்கியவதி " என்று புக ழுவார்கள் . தேவன் அவரது வாழ்க்கைக்கென்று ஒரு நோக்கத்தைக் கொடுத்து , அவரைப்பயன்படுத்தினார் . தன்னுடைய சொந்த மக்களால் வெறுத்துத் தள்ளப்பட்ட ஒருவள் எவ்விதம் கடவுளுக்கும் சமுதாயத்திற்கும் தொண்டாற்ற முடிந்தது ? இதன் இரகசியம் : அவள் தன் வாழ்க்கையைமுயவல் : கிறிஸ்துவின் கரத்தில் ஒப்படைத்தாள் . கிறிஸ்து அவளுக்கு ஒரு நோக்கத்தை கொடுத்து , அவளது வாழ்வை அநேகருக்குப் பயனுள்ளதாக மாற்றினார் . “ என்னைப் பயன்படுத்தின அதே தேவன் உங்களையும் பயன்படுத்துவார் " - இது தான் இராமாபாயின் இறுதி வார்த்தைகள் . உங்களை தேவன் பயன்படுத்த வேண்டுமா ? உங்கள் ஒரே வாழ்க்கையை தேவன்கரத்தில் ஒப்புக்கொடுங்கள் .
பார்வையற்றவர் ஆனால் . புகழ் பெற்றவர் ( Blind but not Bound ) "
கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி , என் பலவீனங்களைக் குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மை பாராட்டுவேன் . அந்தப்படி நான் பலவீனமாயிருக்கும்போதே பலமுள்ளவனாயிருக்கிறேன் " . ( 2கொரி . 12 : 9,10) இரு கால்களும் முடமான ஒருவனைக் காணும்வரை , சிறுவன் ஒருவன் தனக்கு ஒரு ஜோடி புதுச் செருப்பு வேண்டுமென அழுது கொண்டிருந்தானாம் . நாம் மாற்றுத் திறனாளிகளைக் காணும்போது அவர்களுக்காகப் பரிதபிக்கிறோம் . அவர்களை ஊக்குவிக்கிறோம் . ஆனால் கண் பார்வையற்ற ஃபேன்னி கிராஸ்பியின் வாழ்க்கையோ நமக்கு ஒரு பெருஞ்சவாலாக உள்ளது !
கடப்பதற்கரிய மிகக் கடினமான தடைகளையும் கடந்து , வெற்றி மற்றும் புகழின் உயரங்களுக்கு ஏறின பெண்மணி ஒருவர் உண்டென்றால் அவர் ஃபிரான்செஸ் ஜேன் கிராஸ்பியாகத்தான் இருக்க வேண்டும் .
அவர் ஃபேனி ஜெ . கிராஸ்பி என்ற புனைப் பெயரோடு பிரபலமானார் . மேலோக அழகோடும் , தெய்வீகப் பொருளோடும் அமைந்த இவரது கவிதைகளும் , ஞானப்பாடல்களும் முதிர்ச்சியடைந்த ஆண்கள் மற்றும் பெண்கள் கண்களில் கண்ணீர் பெருகச் செய்துள்ளன .
கிறிஸ்தவ உலகின் தலைச் சிறந்த ஞானப்பாடல் ஆசிரியர்களில் இவரும் ஒருவர் .
1820 - ம் ஆண்டு மார்ச் 24 - ம் நாள் நியூயார்க் நகரத்தின் தென் கிழக்குப் பகுதியில் பிறந்தார் ஃபேனி கிராஸ்பி . சிறு வயதிலேயே போலி மருத்துவரொருவரின் பெருந்தவறினால் பார்வையற்றவரான ஃபேனி தன் வாழ்நாள் முழுவதும் பார்வையற்றவராகவே இருந்துவிடக் கூடிய நிலை ஏற்பட்டது . இது அவரது ஐந்தாம் வயதில் Dr . வேலன்டைன் மாட்கன் என்கிற பிரசித்திபெற்ற கண் மருத்துவரால் உறுதி செய்யப்பட்டது .
இப்படிப்பட்டஅங்கவீனக் குறைபாடு இருந்த போதிலும் தனது எட்டாவது வயதில் முதல் கவிதை எழுத ஆரம்பித்தார் ஃபேனி . “ ஓ எத்தனை மகிழ்ச்சியான ஆன்மா நான் ! பார்க்க முடியாதிருந்தும் , இப்பூவுலகில் நான் மனநிறைவுள்ளவளாக இருக்கத் தீர்மானித்து விட்டாள் . பிறர் அனுபவிக்க முடியாத எத்தனையோ ஆசீர்வாதங்களை நான் அனுபவிக்கிறேன் . நான் பார்வையற்றவளாயிருக்கும் காரணத்திற்காக கதறுவதும் , விம்முவதும் என்னால் முடியாது : நான் அப்படிச் செய்யமாட்டேன் ! "
- இது தான் அவள் எழுதிய முதல் கவிதை . ஃபேனியின் தகப்பனார் இறந்தபின் அவரது தாயார் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டியதாயிற்று . ஃபேனியின் பாட்டிதான் அவரது வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் . அவரது உதவியுடன் ஃபேனி இயற்கையைப் பற்றியும் , பரலோகத்தைக் குறித்தும் அதிகமாகக் கற்றுக் கொண்டதோடு , எண்ணற்ற வேத வசனங்களையும் மனப்பாடம் செய்தார் .
இவைகளிலிருந்தே அவர் தமது புகழ்வாய்ந்த ஞானப் பாடல்களுக்கான அகத்தூண்டுதல் , கருப்பொருள்கள் , பாடல் வார்த்தைகள் ஆகியவற்றைப் பெற்றுக் கொண்டார் . பார்வையற்ற ஃபேனிக்கு பாட்டி அவரது கண்களாகத் திகழ முடிவு செய்தார் .
அவர் ஃபேனியிடம் மேகங்களின் திரட்சியைக் குறித்தும் , அவை தங்களது உருவத்தையும் , வடிவத்தையும் எவ்விதம் மாற்றிக் கொண்டிருக்கின்றன என்பதைப் பற்றியும் பேசினார் . தேவன் உண்டாக்கின அழகான சந்திரனைப் 1835ஆம் ஆண்டு மார்ச் 3 ஆம் தேதியன்று ஃபேனி மகிழ்ச்சியுடன் வண்டியில் ஏறி , நியூயார்க்கிற்குப் பயணம் செய்தார் . அங்கே பார்வையற்றோர் பள்ளியில் 12 ஆண்டுகள் மாணவியாகவும் , 11 ஆண்டுகள் ஆசிரியையாகவும் , மொத்தம் 23 ஆண்டுகள் செலவிட்டார் . தனது குழந்தைப் பருவத்திலிருந்தே கவிதை எழுதும் ஆர்வம் அவருக்குள்ளிருந்தது . அவரது தோழிகளோ , ஆசிரியர்களோ அவரை ஊக்குவிக்கவில்லை . ஆனால் முன் பின் தெரியாத அந்நியர் பலர் அவரை ஊக்குவித்தனர் .
ஒரு நாள் வில்லியம் கல்லென் பிரையன்ட் என்பவர் ஃபேனியின் பள்ளிக்கு வந்தபோது . அவரது கவிதைகள் சிலவற்றை வாசித்தபின் அவரை ஊக்குவித்தார் .
ஒரு முறை ஒரு மருத்துவர் இவர்கள் பள்ளிக்கு வந்து கண்பார்வையற்ற மாணவர்களின் தலைகளை பரிசோதித்தார் . அவர் ஃபேனியிடம் வந்த போது . அவர் பாடல் எழுதும் புலமை உள்ளவர் என்றும் , ஒரு நாள் நீங்கள் இந்த வாலிபப் பெண்ணின் பாடல்களைக் கேட்பீர்கள் என்றும் கூறினார் .
அந்த நேரத்திலிருந்து அவரிடமிருந்த புலமைஆற்றல் பெருக்கெடுத்து ஓடத் தொடங்கியது . பல காலமாக ஞானப் பாடல்களை எழுதுவதே தனது வாழ்வின் பணி என்று ஃபேனி உணர்ந்திருந்ததால் , அவர் சொன்ன வார்த்தைகள் ஃபேனிக்குப் பெரும் மகிழ்ச்சியளித்தன . அந்த மருத்துவரின் வார்த்தைகளால் ஃபேனி அதிகமாக உற்சாகப்பட்டாள் . நியூயார்க் பார்வையற்றோர் பள்ளியில் ஃபேனி இருந்த நாட்களில் குரோவர் கிளீவ்லேண்ட் என்பவர் உயர் கண்காணிப்பாளராயிருந்தார் . அவர் ஃபேனி 16 வயதுடையவராயிருந்த போது அவரது கவிதைகளை எல்லாம் நகல் எழுதிக் கொடுத்து உதவி புரிந்தார் . பின் நாட்களில் குரோவர் கிளீவ்லேண்ட் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அதிபரான போது , ஃபேனி அதிகமாய் மகிழ்ச்சியடைந்தார் !
ஃபேனியின் 23வது வயதில் அவரது பள்ளியிலிருந்து ஒரு குழு அமெரிக்கக் ( Congress ) சட்டசபைக்கு அனுப்பப்பட்டபோது அவர் குடியரசு காங்கிரசின் பார்வையற்ற ஒருவிருந்தினரானார் . காங்கிரசுக்குப் புகழாரமாக ஃபேனி இயற்றி வாசித்த கவிதையும் , ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்குப் புகழ்மாலையாக திட நம்பிக்கையுடன் அவர் எழுதி வாசித்த கவிதைகளும் அந்த சபையில் அமர்ந்திருந்தோரின் கன்னங்களில் கண்ணீர் வழிந்தோடச் செய்தன . அதுமுதல் ஜார்ஜ் வாஷிங்டனைத் தவிர மற்ற அனைத்து அமெரிக்க அதிபர்களை அறியவும் பலரோடு இனிய நட்புறவு கொள்ளவும் ஃபேனிக்கு வாய்ப்பு கிடைத்தது .
1844 - ல் " பார்வையற்ற பெண் மற்றும் அவளின் கவிதைகள் " ( A Blind Girl and other Poems ) என்ற தலைப்புடன் அவரது கவிதைகளின் முதல் வெளியீடு வெளிவந்தது .
1849 - ல் " Monterey and other poems " என்ற நூல் வெளிவந்தது . 1858இல் “ கொலம்பியாவின் மலர்ச்செண்டு " ( A Wreath of Colmbia ' s Flowers ) வெளியிடப்பட்டது .
1853 முதல் 1858 வரை அவர் பல பாடல்களை எழுதினார் . அவற்றிற்கு ஜார்ஜ் எஃப் ரூட் என்பவர் இசையமைத்தார் . “ புல்வெளியில் மலரான ரோசலின் ” ( Rosaline the Praise Flower ) “ ஹேஸல் டெல் " ( Hazel dell ) மற்றும் “ காற்றில் வரும் நாதம் ” ( There ' s is Music in theAir ) ஆகியப் பாடல்கள் மிகப் புகழ்பெற்றன . தனது 20வது வயதில் இசையில் ஆர்வமிக்க பார்வையற்ற மாணவரான அலெக்சாண்டர்வேன் அல்ஸ்டைன் என்பவரை ஃபானி நேசித்தார் . அவரும் ஓர் ஆசிரியரானார் . அவர்களது நட்பு 15 வருடங்கள் நீடித்தது . இறுதியில் ஃபேனியின் 37வது வயதில் அவர்களது திருமணம் நடைபெற்றது . அவர்களது மண வாழ்வு ஒரு மகிழ்ச்சியான வாழ்வாயிருந்தாலும் அவர்களது ஒரே குழந்தை விரைவில் மரித்துவிட்டது .
“ இயேசுவின் கைகள் காக்க ” ( Safe in the Arms of Jesus ) என்ற புகழ் பெற்ற பாடல் எழுதுவதற்கான உள்ளுந்துதலை ஒருவேளை அவரது குழந்தையின் மரணம் கொடுத்திருக்கலாம் . வில்லியம் பிராட்பரி என்ற புகழ்பெற்ற ஓர் இசையமைப்பாளரை ஃபேனி சந்தித்தபோது ஒரு ஞானப்பாடல் எழுதுமாறு அவர் ஃபேனியை கேட்டுக் கொண்டார் .
இது 1864 - ல் நிகழ்ந்தது . அது முதல் ஃபேனி ஆயிரக்கணக்கான ஞானப்பாடல்களை இயற்றத் தொடங்கினார் . அவரது 8000 பாடல்களுக்கு இசையமைக்கப்பட்டது . 10கோடி பிரதிகளுக்கும் அதிகமாக அவரது பாடல்கள் அச்சிடப்பட்டன . ஃபேனி 200 புனைப் பெயர்களைப் பயன்படுத்தினார் .
ஒரு நாளில் 7 ஞானப்பாடல்களை இயற்றினார் . பல இசையமைப்பாளர்கள் அவரது பாடல்களுக்கு இசையமைத்தனர் .
ஒரு விந்தையான காரியம் என்னவென்றால் , ஃபேனி கிறிஸ்துவிடம் இத்தனை பக்தியுடையவராயிருந்தபோதிலும் , 1851 ஆம் ஆண்டு தனது 31 வயதில் நியூயார்க்கிலுள்ள பழமை வாய்ந்த “ ஜான் ஸ்ட்ரீட் மெத்தடிஸ்டு சபை " ( John Street Methodist Church in NewYork ) யில் நடந்த எழுப்புதல் ஆராதனையில் கலந்து மனந்திரும்புதலைப் பெறாதிருந்தார் . அதன் பின்பு அதே சபையிலேயே சேர்ந்து கொண்டார் . இதோ அவரது அருமையான பாடல்களில் சில :
“ புயல் காற்றில் மறைவிடம் " ( A Shelter in the time of Storm ) , “ என் மீட்பர் என்னை முற்றும் நடத்துகிறார் ” ( All the way my Saviour leads me ) , இயேசுவை நம்பி பற்றிக் கொண்டேன் " ( Blessed Assurance ) , “ உம்மிடம் நெருங்கி " ( ' Close to Thee " ) , “ அவர் என் ஆத்துமாவை மறைத்து வைக்கிறார் " ( ' He hideth my soul " ) , “ திவ்ய அன்பின் சத்தத்தை இரட்சகா " ( ' Tam Thine O Lord " ) “ இயேசுவே ! கல்வாரியில் என்னை வைத்துக் கொள்ளும் " ( " Jesus keeps me near the cross " ) , " கெட்டோனை இரட்சியும் " ( " Rescue the perishing " ) போன்றவை . " இயேசுவின் கைகள் காக்க " என்ற பாடலே ஃபேனியின் ஞானப் பாடல்களிலெல்லாம் தலை சிறந்தது என சிலர் கருதினர் . “ எனது பத்தொன்பதாம் வயதில் இருந்ததைக் காட்டிலும் எனது தொண்ணுறாவது வயதில்தான் பரிசுத்த வேதாகமத்தின் மீதும் அதின் பரிசுத்த சத்தியங்களின் மீதும் எனது நேசம் அதிக வலுவுள்ளதாகவும் , விலையேறப் பெற்றதாகவும் இருக்கிறது " என்று தனது 90 வயதில் ஃபேனி கூறினார் . தனது மனநிலை . விருப்பம் , மற்றும் நாவு ஆகியவற்றைக் காத்துக் கொண்டதே அவரது நீண்ட ஆயுளுக்கான இரகசியம் என ஃபேனி கூறினார் . “ என்னிடம் உங்கள் பரிதாப உணர்ச்சியைக் காட்டாதீர்கள் . இவ்வுலகில் உயிர் வாழ்பவர்களுக்குள் நான்தான் மிக மகிழ்ச்சியான நபர் " என அவர் கூறுவதுண்டு .
அவர் தனது மரணம்வரை சுறுசுறுப்பாய்ச் செயல்படுகிறவராயிருந்தார் . திருமதி . பூத் என்ற பெண்மணியுடன் கனக்டிகட்டில் உள்ள பிரிட்ஜ்போர்ட் என்ற இடத்தில் தனது இறுதி நாட்களைச் செலவிட்டார் . திருமதி . பூத் அவரைப் பராமரித்து வந்தார் . ஃபேனி தனது வாழ்நாட்களின் இறுதி இரவிலே தனது நண்பர் ஒருவருக்கு ஆறுதலான கடிதம் ஒன்றைச் சொல்லச் சொல்ல மற்றொருவர் எழுதினார் .
மறுநாள் 1915 - ம் ஆண்டு பெப்ரவரி 12 - ம் நாள் தனது சாட்சியை ஃபேனி அம்மையார் பகிர்ந்து கொண்ட போது : ' ' நான் பார்வையற்ற வளாயிருப்பதற்காக சற்றும் வருந்தவில்லை . ஏனெனில் , நான் நித்திய வீட்டிற்கு செல்லும்போது , என் கண்கள் திறக்கப்படும் . அப்பொழுது என் கண்களால் முதன் முதலில் என் இரட்சகரைக் காண்பேன் " என்றாள் .
தனது 95வது பிறந்த நாளைக் காண்பதற்குச் சற்று முன்பாக , அதிகாலை மூன்று மணியளவில் அவர் தனது மீட்பரின் கரங்களில் போய்ச் சேர்ந்தார் .
ஃபேனி கிராஸ்பியின் வாழ்க்கைப்பாதை தடைகள் நிறைந்ததும் , கரடுமுரடானதுமாய் இருந்தது . எனினும் அவரது அசைக்க முடியாத விசுவாசமும் , அன்பும் , நீடிய பொறுமையும் . அவர் ஆயிரக்கணக்கான பாடல்கள் மூலம் தேவனுக்குச் சேவைபுரிய வழிவகுத்தன !
மறைவிடம் தந்த மங்கை ( Boldness in Bondage )
" சுவிசேஷத்தினிமித்தம் நான் பாதகன்போலக் கட்டப்பட்டு , துன்பத்தை அனுபவிக்கிறேன் ; தேவ வசனமோ கட்டப்பட்டிருக்க வில்லை " ( 2தீமோ . 2 : 9 )
பொதுவாக இளவயதினரின் வாழ்க்கை சவால் நிறைந்ததும் துணிகரச் செயல்கள் மிகுந்ததுமாய்க் காணப்படும் .
ஆனால் காரி டென் பூம் அம்மையாரின் வாழ்க்கையின் நோக்கம் 45 வயதுக்கு மேலேயே செயல்பட ஆரம்பித்தது . தனக்கும் , தனக்கு அன்பான வர்களுக்கும் ஆபத்துண்டாக்கும் வகையில் , தேவ மக்களைக் காப்பாற்றிய இணையற்ற இடத்தைப் காரிடென்பூம் மிஷனெரிகளுக்குள் ஓர் இணையற்ற இடத்தை பெற்றுள்ளார் .
பெற்றோரின் நான்கு பிள்ளைகளில் எல்லோருக்கும் இளையவளாக 1892 ஏப்ரல் 15 ஆம் நாள் காரி இல் பிறந்தார் . 1837 - ல் தன் தாத்தா தொடங்கிய கடையில் தந்தையைப் போலவே கைக்கடிகாரம் செய்யும் கொமிலில் ஈடுபட்டு , நெதர்லாந்து ( ஹாலந்து ) தேசத்தின் முதல் பெண் கைக்கடிகாரம் செய்பவரானார் .
1923 - ல் பெண்கள் சங்கங்கள் உருவாக இவர் உதவினார் . பின்னாட்களில் இது , முக்கோண சங்கம் ( Triangle Club ) என்ற பெயர் பெற்று விளங்கியது . இவர் தனது தந்தை மற்றும் மூத்த சகோதரியுடன் வாழ்ந்து வந்தார் . 48 வயதில்கூட மணமாகாதிருந்தார் .
இவருடைய குடும்பத்தினர் டச்சு மறுமலர்ச்சி சபையின் ( Dutch Reformed Church ) அங்கத்தினர்களாக இருந்தனர் . ஹார்லெம் என்ற இடத்தில் இவர்கள் வாழ்ந்து வந்தபோது இவருடைய தாயார் பக்கவாத நோயினால் மரித்து விட்டார்கள் .
இந்நகரில் பாதிக்கும் மேற்பட்டோர் இவருடைய தந்தைக்கு அறிமுகமானவராக இருந்தனர் . அப்போது ஹாலந்து தேசம் நாஸிகளிடம் ( Nazis ) சரணடைந்திருந்தது . தங்கள் இல்லங்களிலிருந்து வெளியேற்றப்பட்டிருந்த யூத மக்களுக்குத் தற்காலிகமாகத் தங்குமிடம் அளித்த அன்புச் செயல்களில் ஆரம்பித்தது காரியின் ரகசிய டச்சு பூமிக்கடி பணி .
ஒரு நாள் மிடுக்கான உடையணிந்திருந்த ஒரு பெண்மணி கையில் ஒரு கைப்பெட்டியுடன் டென்பூம் அவர்களின் இல்லத்திற்கு வந்தார் . அவர் ; தான் ஒரு யூதப் பெண் எனவும் , " பல மாதங்களுக்கு முன்பே கைது செய்யப்பட்டுவிட்டார் என்றும் தனது மகன் மறைவிடத்திற்கு சென்றுவிட்டான் என்றும் கூறினார் . நாஸி ஆக்கிரமிப்பாளர்கள் தனது வீட்டிற்கு வந்து சென்றதாகவும் , தான் தன் வீட்டிற்குத் திரும்பிப் போக பயப்படுவதாகவும் கூறி , காரியின் குடுபத்தினருடன் தாம் தங்கியிருக்க அனுமதிக்குமாறு கெஞ்சிக் கேட்டுக் கொண்டார் . அவர்களும் சம்மதித்தனர் . விரைவில் டென் பூம் இல்லம் டேஷ்யூபிலட்ஸ் ( Deschuilplaats ) அல்லது மறைவிடம் ( Hiding Place ) எனப்பெயர் பெற்றது
இவ்வாறு அடைக்கலம் புகுந்தோருக்கு கிராமப்புறத்தில் தங்கும் இடங்களை காரி கண்டுபிடித்தார் . ஒன்றரை ஆண்டுகளில் ஹாலந்து முழுவதும் பரவி செல்லக் கூடிய பூமிக்கடி சுரங்கம் இல்லம் ஒரு மையமாக மாறிவிட்டது . தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட யூதருக்காக மரிப்பதைத் தனது குடும்பத்தின் மிகப் பெரிய மேன்மையாக கருதுவதாகக் இவரது தகப்பனார் தெரிவித்தார் .
1944 பிப்ரவரி 28 அன்று நாஸிகளுக்கு ரகசிய தகவல் தருபவர் ஒருவர் யூதருக்கு உதவுபவர் போல் நடித்துக் கொண்டு காரியின் கடிகார கடைக்கு வந்தார் . காரி அவருக்கு உதவி செய்ய சம்மதித்தார் . அவனோ காரி அறியுமுன்னே கெஸ்டப்போ ( Gestapo ) என்ற ரகசிய காவல் துறையிடம் டென்பூம் குடும்பத்தினரைக் காட்டிக் கொடுத்துவிட்டான் . அவர்கள் காரியின் இல்லத்திற்கு வந்து காரியையும் , அவரது குடும்பத்தினரையும் கைதுசெய்தனர் . காரியின் தகப்பனார் காஸ்பர் ( Gasper ) தான் கைதான பத்து நாட்களுக்குள்ளே ஷெனிஜென் ( Schenenigen ) சிறையில் மரித்துவிட்டார் .
காரியும் அவரது சகோதரி பெட்ஸியும் 10 மாதங்களில் உமன்று வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டனர் . அவர்கள் கடைசியாக வைக்கப்பட்டிருந்தது மிகவும் கொடூரமான ரேவன்ஸ்ப ர்க் ( Ravenbruck ) என்ற சித்திரவதை முகாம் . சிறையிலிருந்த நாட்களில் இவர்கள் முறுமுறுப்பதற்குப் பதிலாகத் தங்களுடன் இருந்த கைதிகளுக்கு இயேசுவின் அன்பைப் பகிர்ந்து கொண்டனர் . காரி சகோதரிகள் பகிர்ந்த சாட்சியின் நிமித்தமாக அநேக பெண்கள் கிறிஸ்துவிடம் வந்தார்கள் .
பெட்ஸி தனது 59 ஆம் வயதில் வியாதிப்பட்டு . ரேவன்ஸ்ப ர்க் முகாமில் மரித்தார் .
சித்திரவதை ( Concentration Camp ) முகாமிற்குள் ரகசியமாக கடத்திச் செல்லப்பட்டிருந்த வேதப் புத்தகத்தை பயன்படுத்தி நடத்திய ஒரு மாலை நேர ஆராதனை பின்வருமாறு அமைந்தது எனக் காரி எழுதுகிறார் :
" துவக்கத்தில் பெட்ஸியும் நானும் இந்தக் கூட்டங்களை மிகுந்த பயத்துடன் நடத்தினோம் . ஆனால் ஒவ்வொரு இரவும் செல்லச் செல்ல ஒரு காவலாளியும் அருகில் வராதிருந்தபடியால் அதிக தைரியம் கொண்டோம் . மேலும் , பலர் எங்களுடன் சேர்ந்துகொள்ள விரும்பியதால் . மாலை நேர பெயர்ப் பட்டியல் பதிவுக்குப் பின் இரண்டாவது ஆராதனையை ஆரம்பித்தோம் .
இந்த இராணுவ சிறை முகாம் 28 - ல் நடைபெற்ற இந்த ஆராதனை மற்ற ஆராதனைகள் போன்றவை அல்ல . ஒரே கூடுகையில் மரியாள் ஆண்டவரை உயர்த்திப் பாடும் பாடலை ( Magnificat ) ரோமன் கத்தோலிக்கக் குழுவினர் லத்தீன் மொழியில் பாடுவார்கள் : லுத்தரன் குழுவினர் ஒரு பாமாலைப் பாடலை மெல்லிய குரல ல் பாடுவார்கள் : கிழக்கத்திய பாரம்பரிய சபைப்பெண்கள் ( Eastern Orthodox Women ) ஒரு ஜெபத்தைச் சொல்லுவார்கள் . ஒவ்வொரு வினாடியும் எங்களைச் சுற்றிலும் உள்ள கூட்டம் பெருகிப்பெருகி , அருகிலுள்ள நடை பாதைகளிலும் அவைகளின் ஓரங்களிலும் மக்கள் நிற்பார்கள் " . “ இறுதியாக , நானோ அல்லது பெட்ஸியோ வேதத்தை திறப்போம் ஹாலந்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே டச்சு மொழி வேத வாக்கியங்களை புரிந்துகொள்ள முடியும் . ஆகவே , வேத வாக்கியங்களைச் சத்தமாக ஜெர்மன் மொழியில் மொழி பெயர்ப்போம் . அதன் பின் ஜீவன் தருகிற வேத வாக்கியங்கள் பிரஞ்சு , போலந்து , ரஷிய , மற்றும் செக்கோஸ்லாவாகியா மொழிகளில் மொழிபெயர்க்கப பட்டு , இறுதியில் டச்சு மொழியில் மறுபடியும் சொல்லப்படும் . சிறிய விளக்குகளின் கீழ் நடைபெற்ற இந்த மாலை நேரக் கூட்டங்கள் பரலோகத்தின் முன்னோட்ட அனுபவங்களாகக் காணப்பட்டன . "
1944 ஆம் ஆண்டு டிசம்பா 16 ஆம் நாள் பெட்ஸி இறக்கும்போது தன் சகோதரி காரியிடம் அவள் கூறிய இறுதி வார்த்தைகள் : " நாம் இங்கு கற்றுக் கொண்டவைகளை மற்றவர்களுக்குச் சொல்ல வேண்டும் இந்த ஆழ்ந்த பள்ளத்தாக்கின் அனுபவத அவரது வயதையொத்த பெண்கள் எல்லாம் கொலை செய்யப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன் இது நடந்தது
அவா ஹாலம் ஊருக்குத திருமபிச சென்று தான முன் செய்து வந்தபடியே கைக்கடிகாரம் செய்யும் தொழிலில் ஈடுபட முயன்றார் . ஆனால அது முன்போல தனக்கு திருபதி அளிக்கவிலலை எனபதைக பாடுகொண்டார் . அவரது 53 வது வயதில் உ மேற்கொண்டு , அடுத்த 33 ஆண்டுகள் உ வயதில் உலகளாவிய ண்டுகள் உலகெங்கிலும் பது . இயேசுவே ஜெயம் 60 நாடுகளுக்கும் மேலாகப் பயணம் பதியைப் பறைசாற்றினார் . பெற்றவர் என்கிற நற்செய்தியைப் பறைசாற்றி ராணி காரிக்கு நைட் ( Knight ) பட்டம் பலப்படுத்தினார் . எருசலேமிலுள்ள “ யூதர்களின் ஹாலந்தின் ராணி காரிக்கு நைட் கொடுத்து கௌரவப்படுத்தினார் . எருசலேமிலுள் பேரழிவு அருங்காட்சியகத்தில் ” ( The Holocaust M he Holocaust Museum in alem ) உள்ள நீதியின் தோட்டத்தில் ( Garden a Righteousness ) காரியின் குடும்பத்தார் காப்பாளர்களின் நினைவாக ஒரு மரத்தை நடும்படியாக காரி கேட்டு : கொள்ளப்பட்டார் . காரி எழுதிய மிகவும் பிரசித்தி பெண் " மறைவிடம் " ( The Hiding Place ) என்ற நூலை “ த வேர்ல்டு வைடு பிக்சர்ஸ் ” நிறுவனம் திரைப்படமாகத் தயாரித்தது . 1972 - ஆம் ஆண்டு “ கைடு போஸ்ட் " ( Guide Post ) என்று பத்திரிக்கையில் “ நான் இன்னமும் மன்னிப்பதற்குக் கற்றுக் கொண்டு வருகிறேன் " என்ற கட்டுரைளுவெளிவந்தது . அதில் மியூனிச் நகரிலுள்ள ஓர் ஆலயத்தில் காரி தான் முன்பு அறிந்திருந்த ஒரு மனிதனை சந்தித்ததைப் பற்றி எழுதியிருந்தார் . “ அவனது தலை வழுக்கை விழுந்திருந்தது . திடகாத்திரமான உடலைப் பெற்ற அவன் சாம்பல் நிற மேற்சட்டை அணிந்திருந்தான் . அது 1947 ஆம் ஆண்டு நான் ஹாலத்திலிருந்து தோற்கடிக்கப்பட்டிருந்த ஜெர்மனிக்கு “ தேவன் மன்னிக்கிறார் " என்ற நற்செய்தியோடு சென்றிருந்தேன் . அந்த மனிதன் என்னை நோக்கி வருவதைக் கண்டேன் . ஒரு வினாடி நான் அவனது மேற்சட்டையையும் மர நிறத் தொப்பியையும் கண்டேன் ; ஆனால் அடுத்த வினாடி நீலநிறச் சருடை 381 5 % 5 10 : 58 PM குறுக்கான இரு எலும்புகள் மற்றும் மண்டை ஓடு சின்ன பொறிக்கப்பட்ட இராணுவத் தொப்பியும் என் கண்களுக்குத் தெரிந்தன . ஆம் , நாங்கள் அனுப்பப்பட்டிருந்த ரேவன்ஸ்பர்க் சித்திரவதை முகாமில் அவன் காவலனாக இருந்தவன் " அவன காரியிடம் வந்து ,
தன் கரத்தை நீட்டி , மன்னிப்பு வேண்டினான் . தான் செய்ய வேண்டிய மிக மிகக் கடினமான காரியத்தைக் குறித்து தனது உள்ளத்தில் இருந்த போராட்டத்தைக் காரி உணர்ந்தார் . " இயேசுவே உதவி செய்யும் " என்று கார் மௌனமாக ஜெபம் செய்தார் . “ என் கரத்தை நான் உயர்த்த முடியும் . எனக்கு வேண டிய உணர்வுகளை நீர் தாரும் " என்று ஜெபம் செய்து , காரி தன் கரத்தை உயர்த்தி அவனது கரத்தைப் பற்றிக் கொண்டார் .
தேவனின் அன்பு மின்சாரம் போல் அவருடைய தோளில் ஆரம்பித்து . கரத்தின் வழியாகப் பாய்ந்தோடி அவர்கள் இருவரது இணைந்த கரங்களுக்குள் ஊடுருவிச் சென்றது .
காரி கண்ணீ ருடன் , “ சகோதரனே நான் உன்னை என் முழு இருதயத்தோடு மன்னிக்கிறேன் ! ” என்றாள் . இந்த அளவிற்கு தேவனுடைய அன்பை ஆழ்ந்தவிதத்தில் அதற்கு முன் ஒருபோதும் தான் உணர்ந்ததில்லை என அவர் குறிப்பிடுகிறார் .
காரி 1983 ஏப்ரல் 15 அன்று கலிபோர்னியாவில் உள்ள ஆரஞ்சுப் பட்டணத்தில் தனது 91 வது பிறந்த நாள் அன்று இப்பூவுலகை விட்டுக் கடந்து சென்றார் .
இதனால் யூதப் பாரம்பரியப்படி அவர் ஆசீர்வதிக்கப்பட்ட நபர் எனக் கருதப்படுகிறார் . பிறருக்காகவே வாழும் வாழ்க்கை கிறிஸ்துவின் போதனை களுக்கு ஓர் சாட்சியாக உள்ளது . காரி டென் பூம் சுவிசேஷத்தைப் பறைசாற்றியது மட்டுமல்ல , அவரது மரணம்வரை சுவிசேஷத்தை வாழ்ந்து காட்டினார் . கடினமான சூழ்நிலைகளிலும் அவரிடம் காணப்பட்ட தைரியம் , நமது விசுவாசத்தைப் பலப்படுத்தி நமக்குப் புத்துணர்வளிக்கின்றது .
மரண மலைகளின் அரசி ( Living water on the mountains of Death )
ஈவ்லின் பிராண்ட் அல்லது ' கிரானி பிராண்ட் ' என்று அநேகரால் அன்போடு அழைக்கப்பட்ட பெண்மணி தன்னுடைய பாதையில் சந்தித்த எண்ணற்ற மக்களின் இதயத்தில் நித்திய விதைகளை விதைத்தார்கள் . அவர்களுடைய வேலை , சேலம் மலைகளில் அதிகமாக இருந்தது .
மேலும் சுவிசேஷம் அறிவித்தலுக்குத் தடையாக நின்ற இந்த விசித்திர மலைகளின் சவாலை சந்திப்பதற்காகவே தன்னுடைய வாழ்வை அர்ப்பணித்தார்கள்
அவர்களுடைய மகன் டாக்டர் . பால் பிராண்ட் பணியாற்றிய வேலூர் சி . எம் சி மருத்துவமனையின் உள்ளேயும் , வெளியேயும் இவர் நன்க அறிமுகமான நபராக விளங்கினார் .1879ம் ஆண்டு லண்டனிலுள்ள செல்வச் செழிப்பான விக்டோரியன் குடும்பத்தில் பதினொரு குழந்தைகளில் ஒருவராக பிறந்தார் பிராண்ட் . மேன்மையான காரியங்களை வாஞ்சிப்பதும் , விரும்புவதும் போன்ற அரிதான தன்மைகளை சிறுவயது முதலே வெளிப்படுத்தினார் .
தனது 11வது வயதிலேயே தனக்கு ஞானஸ்நானம் கொடுக்கும்படி கேட்டார் . இவருடைய தகப்பனார் இவருக்கு மேலான எல்லா கல்வியையும் அளித்தார் . ஆனால் அவருடைய இருதயமோ அமைதியின்றி காணப்பட்டது . மேலும் , அந்நாட்களிலே மேலை நாடுகளில் யாவருக்கும் அறிமுகமாகத் தொடங்கிய மிஷனெரி தரிசனத்தினால் அவள் ஈர்க்கப்பட்டாள் . -
சென்னை மற்றும் சேலம் மாவட்டங்களில் தென்னிந்திய பாப்திஸ்து சங்கத்தின் வேலைக்காக இரண்டு இளம் வயதினரான ஈவ்லின் மற்றும் ஜெசிமேன் பிராண்ட் இருவரும் தங்கள் வாழ்வைத் தத்தம் செய்தனர் .
ஈவ்லினுடைய தகப்பனார் அவளுடைய விருப்பத்தை விட்டுவிடச் செய்ய முயன்றார் . மேலும் , அவளுக்கு மாத்திரமல்ல , அவளுடைய சகோதரிகள் யாவருக்கும் அவர்களது வாழ்நாள் முழுவதும் உதவி செய்ய விரும்புவதாகவும் கூறினார் .
பல தாமதங்களும் அவளுக்கு மனச்சலிப்பையூட்டின . இறுதியில் அவர் கடற்பயணம் மேற்கொண்டு தன்னுடைய முப்பது வயதிற்கு மேல் 1911ம் ஆண்டு இந்தியா வந்து சேர்ந்தார் . ஜெசியும் கூட மிஷனெரி பணித்தளம் செல்லுவதற்கு வற்புறுத்தல்களுக்கு மத்தியில் போராடி , கடைசியில் ஆயத்தமானார் .
மிஷனெரிகளுக்கான மருத்துவப் பயிற்சி ஒன்றை லிவிங்ஸ்டன் கல்லூரியில் முடித்த அவர் 1907ம் ஆண்டு இந்தியாவிற்குப் பயணமானார் . தமிழ் மொழியைக் கற்பதற்காக சென்னைக்கு அனுப்பப்பட்டார் . ஈவ்லினும் அங்கே போக வேண்டியதாயிற்று . இப்படியாக , சில நேரங்களில் அவர்கள் தீர்மானித்தபடி அவர்கள் ஒருவரையொருவர் சந்திக்க நேர்ந்தது .
சேந்தமங்கலம் என்ற ஊரில் தான் நிறுவின மருத்துவமனையில் ஜெசி வேலை செய்து வந்தார் . அந்த வறண்ட சமவெளியில் வேலை செய்யும் போதே சேலம் பகுதியிலிருந்து கொல்லி மலையை அடிக்கடி நோக்கிப் பார்த்தார் . மரணத்தின் மலைகள் என்ற பெயருக்கேற்றபடி காணப்பட்ட மலைகளை எவ்விதம் ஊடுருவிச் செல்வது என்று வியந்து நின்றார் .
எதிர்பாராத விதமாக கொல்லி மலைகளுக்குச் செல்வதற்குக் கிடைத்த சந்தர்ப்பத்திற்கான நிகழ்ச்சி ஜெசியின் கண்களைத் திறந்தது .
சீதபேதியினால் அவதிப்பட்ட முதியவர் ஒருவர் கொல்லிமலையிலிருந்து அவருடைய மருத்துவமனைக்கு வந்தார் . ஜெசி அவரை சுகமாக்கினார் , அந்த மனிதன் கொல்லிமலையை வந்து பார்க்கும்படி அழைப்பு கொடுத்தான் . ஜெசியும் அவருடைய உடன் வேலையாட்களும் அங்கே சென்றபோது , மக்கள் அவர்களை அங்கு வந்து பணி செய்யுமாறு மன்றாடினர் .
ஆண்டவர் கொடுத்த இந்த தருணத்தைப் பயன்படுத்திக்கொள்ள ஜெசி விரும்பினார் . கொல்லிமலையில் இருந்த மலேரியா காய்ச்சலைப் பற்றி அறிந்திருந்த போதிலும் ஈவ்லின் அந்த மலைகளின் சவாலை எதிர்த்துப் போராடுவதற்கு நம்பிக்கை கொண்டாள் . ஜெசி காலரா தொற்று வியாதியோடு போராடினார் . ஈவ்லின் டைஃபாய்டு காய்சலினால் பாதிக்கப்பட்டுத் தன்னோடு வந்த சிநேகிதியுடன் வீடு திரும்பினாள் .
இந்த நேரத்தில் அவளுக்கு ஜெசியின் கடிதங்கள் ஆறுதலைத் தந்தன . நீண்ட நாட்களுக்கு முன்பாகவே அவர்கள் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது . ஜெசி அவளுக்காக மலையில் கட்டிய வீடு இன்றும் அங்கே இருக்கிறது .
சேந்தமங்கலத்தில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர் . ஈவ்லின் பிராண்ட் தன் கணவருடன் இணைந்து , தனது மலை ஊழியத்தைத் தொடங்கினார் . இவர்களுடைய ஊழியத்தின் கட்டத்திலும் இவர்களைத் தடை செய்து வந்த மந்திரவாதியும் பூசாரியுமாகிய ஒரு மனிதனுடன் இவர்களுக்குக் கிடைத்த அனுபவம் மறக்க முடியாத ஒன்று . எல்லா இடங்களிலிருந்தும் நோயாளிகள் ஜெசியிடம் வருவதைக்கண்டு அவன் பொறாமைகொண்டு மந்திரசக்தியினால் ஜனங்களை குணமாக்க முயற்சி செய்தான் . அதற்குப் பின் உலகம் முழுவதும் பரவிய இன்புளுயன்ஸா வியாதி 1919ல் மலை மக்களையும் தாக்கியது . பூசாரியும் அவனுடைய மனைவியும் கூட அந்நோயால் பாதிக்கப்பட்டனர் . அவர்களுடைய 9 மாதக் குழந்தை தனித்து விடப்பட்டாள் .
ஈவ்லின் அவர்களைச் சென்று பார்த்தாள் , பூசாரி தன் குழந்தையை எடுத்து வளர்க்கும்படி கெஞ்சினான் . தான் உயிரோடு இருந்தால் இயேசுவை வணங்குவதாகவும் கூறினான் . நோயினால் பெற்றோர்கள் இறந்துவிடவே பிராண்ட் தம்பதியர் அக்குழந்தையை எடுத்துக் கொண்டுபோய் ரூத் எனப் பெயரிட்டு வளர்த்தனர் .
சிறிது காலம் சென்ற பின்பு அவர்களுக்குப் பால் மற்றும் கோப்னி என்கிற குழந்தைகள் பிறந்தனர் . இருவரும் அவர்களுடைய அருட்பணி ஊழியத்தில் பிரிக்க முடியாத அங்கங்களாக இருந்தனர் . பிராண்ட் தம்பதியர் விடுமுறைக்குச் சென்றபோது தங்கள் குழந்தைகள் இருவரையும் இங்கிலாந்திலுள்ள திருமணமாகாத ஈவ்லினின் இரண்டு சகோதரிகளிடம் விட்டுவிட்டனர் .
அதன்பின்னர் அவர்கள் தந்தையைப் பார்க்கவில்லை . 1929ம் ஆண்டு திருநெல்வேலி மிஷனின் நிலைமையைக் குறித்து விசாரிக்கும்படி ஜெசி அனுப்பப்பட்டார் . அதன் பின்னர் ஈவ்லினும் அவளுடைய கணவரும் ஒய்வெடுக்க ஊட்டிக்குச் சென்றனர் . ஜெசி அங்கே பிளாக் வாட்டர் ( Black Water ) காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு , 1929 , ஜூன் 15 - ம் நாள் உயிரிழந்தார் .
கணவரது இழப்பினால் துயரத்தினால் அவர் பாதிக்கப்பட்டிருந்தாலும் தன் ஊழிய அர்ப்பணத்தை விட்டு அவர் பின்வாங்கவில்லை .
இந்த சூழ்நிலையில் அவர்களுடைய உறவினரான ரூத் என்னும் பெண் லண்டனில் தான் படித்துக் கொண்டிருந்த மருத்துவக் கல்லூரியிலிருந்து வெளியே வந்து ஈவ்லினுடன் தங்கினாள் . ஈவ்லினுக்கு சென்னையில் வேலை செய்ய மாறுதல் கிடைத்த பின்னர் இங்கிலாந்து சென்று . தன் குழந்தைகளைப் பார்த்தார்கள் . திரும்பிவந்த பின்பு , மிஷனெரி ஸ்தாபனத்தின் எதிர்ப்புகளுக்கிடையே ஆறு ஆண்டுகள் மலை ஊழியத்தைத் தொடர முயற்சி செய்தார் . மிஷனெரி ஸ்தாபனத்திலிருந்து தனது அறுபதுகளின் இடையில் - ஒய்வு பெறுமுன்னர் இன்னும் ஓர் ஆண்டு , வேலை செய்வதற்குக் கேட்டுக் கொண்டார்கள் . இது ஒரு புதிய அத்தியாயத்தை அவர்களுடைய வாழ்வில் தொடங்கக் காரணமாக அமைந்தது .
அது 1974 வரை , அதாவது அவர்களுடைய 95வது வயதில் மரணம் அடையும் வரை தொடர்ந்தது .
ஈவ்லினுடைய மகன் பால் பிராண்ட் டாக்டர் ஆனார் . மகள் கோனி ஆப்ரிக்காவில் தன் கணவரோடு குடியேறினார் . ஈவ்லினுக்கு 70 வயதான போது ஜெசியின் கனவு நனவானது . அவர்கள் பாட்டி என்று அழைக்கப்பட்டாலும் உள்ளத்தில் இளமையாகவே உணர்ந்தார் . அவர்கள் மலைக் குதிரை ஒன்றின் மீதேறி கிராமம் கிராமமாகச் சென்றார்கள் . அவள் அங்கே தங்கிக் கல்வி கற்றுக் கொடுத்து , மருத்துவ சேவையும் செய்தார்கள் .
ஆனால் அவர்கள் சரீரம் மெலிவுற்றாலும் கைவிடப்பட்ட குழந்தைகள் மீட்கப்பட்டனர் . மலைப்பாதையில் அவரை தூக்கிச் சென்றபோது அவரது தலை பாறையில் மோதி அடிபட்டது . அதன்பின்பு அவர்கள் சமநிலையைப் பெறமுடியவில்லை . எங்கு சென்றாலும் மூங்கில் குச்சியை ஊன்றியே நடந்து சென்றார்கள் . இருந்தபோதிலும் அவர்களுடைய இல உற்சாகமாகவே இருந்தது .
பிராண்ட் அம்மையாரின் முயற்சியினால் ஐந்து மலைப் பிரதேசங்களில் சுவிசேஷம் அறிவிக்கப்பட்டது . ஒவ்வொரு பிரதேசத்திலும் ஒரு அருட்பணி அமைப்பு நிறுவப்பட்டது . இவர்களது பதினைத்து வருட இடைவிடாத உழைப்பின் காரணமாக கினியா என்ற புழு கல்வராயன் மலைப் பகுதியிலிருந்து முற்றிலும் அழிக்கப்பட்டது . உடைந்த எலும்புகளோ , காய்ச்சலோ . அவர்களுடைய பெலவீனமோ ஊழியத்தின் பாதையிலிருந்து பிராண்ட் அம்மையாரை பிரித்துவிட முடியவில்லை . 1974ம் ஆண்டு நவம்பர் 6ம் நாள் பிராண்ட் அம்மையார் கீழே விழுந்தார்கள் . பேச்சு குழம்பியது . நினைவு தவறியது . டிசம்பர் 18ம் நாள் அமைதியாக இவ்வுலகத்தை விட்டுக் கடந்து சென்றுவிட்டார்கள் . எவரும் கிறிஸ்துவை அறிவித்த எல்லா இடங்களிலும் அவர்களது பணிமிகுந்த கனிகளைத் தந்துள்ளது . லண்டன் மாநகரின் சொகுசான வாழ்வைத் துறந்து , தென்னிந்தியாவின் கொல்லி மலைப் பழங்குடி இனத்தவருக்கென்று தன் வாழ்வை ஊற்றிவிட்ட ஈவ்லின் பிரேண்டு நம்மனைவருக்கும் மாபெருஞ்சவால் !
உறுதியான விசுவாசம் ( Tough faith in Bundelkhand )
பண்டல்கண்டில் டாக்டர் . கிரேஸ் அவர்களுக்கு தோஜிபாய் என்ற பாட்டி இருந்தார்கள் . அவர் டிக்கா கிராமத்திற்கு அருகிலுள்ள காடுகளின் வழியே நௌகாங் என்னுமிடத்திலிருந்த மிஷனெரிகளின் தங்கும் விடுதிக்கு தனது 5 பிள்ளைகளை அனுப்பி வைத்தார்கள் .
அதன் விளைவாக மிஷனெரிகளோடு முழுக் குடும்பமும் தங்குவதற்கு ஒரு வீடு கிடைத்தது .
இந்த கிரேஸ் 1907ம் ஆண்டு மே 31 நாள் தோஜிபாயின் மகள் ஹர்பிபாய்க்கும் பள்ளி ஆசிரியரான அவளுடைய கணவருக்கும் மத்திய பிரதேசத்திலுள்ள பண்டல்கண்டில் மகளாகப் பிறந்தார் .
மகன் பிறப்பான் என்ற நம்பிக்கையிலிருந்த அந்த குடும்பத்திற்கு பெண் குழந்தை பிறந்தபோது எஸ்தா என்ற மருத்துவ மிஷனெரி தேவனுக்கு நன்றி சொல்லும்படி தைரியம் அளித்தார் . பின்பு அக்குழந்தைக்கு கிரேஸ் என்று பெயர் சூட்டினார் . அழகாயிருந்த தங்கையைப் பார்த்து அவள் சகோதரி சாந்தி மிகுந்த சந்தோஷமடைந்தாள் . இவர்களுடைய தகப்பனார் இறந்தபோது ஹர்பிபாய் பணித்தளத்திற்கு இடம் பெயர்ந்தார்கள் .
கிரேஸுக்கு ஒன்பது வயதாயிருக்கும் போது அவர்களுக்கு இயேசுவை அறிமுகம் செய்துவைத்த மிஸ் டெலியாவும் மரித்துப் போனார்கள் . தான் வளர்ந்து நன்றாகப் படித்து மிஷனெரி நர்ஸ் எஸ்தருக்கு மருத்துவத்தில் உதவி செய்ய கிரேஸ் தீர்மானம் பண்ணினாள் . அவளுடைய உறவினர்களில் அநேகர் காச நோயினால் மரித்துப் போனார்கள் . அவளுடைய தாய் தன் குடும்பத்திற்கு உதவும் படி கடினமாக வேலை செய்தாள் . கிரேஸ் படிப்பில் சிறந்து விளங்கி ,
1924ல் உயர் நிலைப்பள்ளிப் படிப்பை முடித்தாள் . டெல்லியிலுள்ள செயின்ட் ஸ்டீபன் மருத்துவமனையில் மருந்தாளர் படிப்பிற்காகச் சென்றபோது அவளுடைய சகோதரிக்கு போதகரோடு திருமணம் நடைபெற்றது . அவள் ஒழுக்கமுடையவளாகவும் வேலையில் அதிக கவனமுள்ளவளாகவும் தீர்மானங்கள் எடுத்து அதில் உறுதியாய் இருப்பதிலும் திறமைசாலியாக விளங்கினாள்
ஒரு சுவிசேஷக் கூட்டத்தில் மிஷனெரி ஒருவர் செய்தியளித்த போது கிரேஸ் ஆண்டவரை ஏற்றுக் கொண்டாள் . தேவ அன்பைக் குறித்த செய்தியானது அவளுடைய இதயத்தைத் தொட்டது . அவன் முன்னால் சென்று , தன்னை தேவனுடைய பிள்ளையாக ஏற்றுக் கொண்டு வழி நடத்தும் படி வேண்டினாள் . அவளுடைய மாறுதல் தெளிவானதாகவும் , அவளுடைய விசுவாசம் தனிப்பட்ட வாழ்வில் ஆழமானதாகவும் காணப்பட்டது . சத்தர்பூரில் மருத்துவரோடு சேர்ந்து வேலை செய்யும் படி கிரேஸ் தீர்மானம் பண்ணினாள் .
1925 - ல் மருத்துவர் வந்து சேர்ந்த போது , சிறிய மருத்துவமனையில் அவரோடு வேலை செய்தாள் . 1926 ல் சிறப்பு கௌரவத்தோடு மருந்தாளருக்கான படிப்பை முடித்த பின்பு 1928 வரை செயின்ட் ஸ்டீபன் மருத்துவமனையில் தங்கினாள் .
டாக்டர் ரூத் அவளை 4 ஆண்டுகள் மருத்துவப் படிப்பை மேற்கொள்ள ஊக்குவித்தார்கள் . அதினால் திட்டமிடப்பட்ட பண்டல்கண்ட் கிறிஸ்தவ மருத்துவமனைக்கு ஒரு பண்டல்கன்ட் மருத்துவர் கிடைக்க முடியும் என்று கூறினார்கள் .
மருத்துவமனை கட்டப்பட வேண்டுமென்ற நீண்டநாள் கனவு நிறைவேறியபோது , அந்த மருத்துவமனையைக் காண வைஸ்ராயும் மகாராணி , மகாராஜாவும் வருகை தந்தனர் . 1930 . டிசம்பர் 23ல் எல்லா பணி மையங்களிலிருந்தும் பிரதிநிதிகள் அர்ப்பணிப்பு ஆராதனைக்கு வந்து சேர்ந்தார்கள் . டாக்டர் . கிரேஸ் மருத்துவப் பயிற்சியை முடித்த பின்பு சத்தர்பூர் மருத்துவமனையில் அந்தப் பகுதியின் முதல் பண்டல்கண்ட் மருத்துவராக 1933 நவம்பர் 12ல் பொறுப்போற்றார் . அவருக்கு உதவித் தொகையாக மாதம் 60 ரூபாய் கொடுக்கப்பட்டது . அதில் மருத்துவப் படிப்பிற்கான கடனில் ரூ 25 திரும்ப செலுக்க வேண்டியிருந்தது . பாக்டர் கிரேஸ் அவர்கள் அர்ப்பணிப்போடும் ஒழுக்கத்துடனும் அறியாமைக்கு எதிராகவும் , வியாதிகளுக்கு எதிராகவும் போராடி வேலை செய்து , மக்களை ஒளிக்குள் கொண்டுவர தீர்மானித்தார்கள் .
சில சூழ்நிலைகளினிமித்தமாக , கிரேஸின் சகோதரியின் குடும்பம் வேறு இடத்திற்குச் செல்ல நேரிட்டது . டாக்டர் . கிரேஸ் அங்கேயே தங்கியிருந்து , தன்னுடைய மக்களுக்கு சேவை செய்ய விரும்பினார் . டாக்டர் கிரேஸின் இடைவிடாத கண்காணிப்பினால் மூட நம்பிக்கையை கைவிட்டுவிட்டு , சுகாதாரமான சூழ்நிலையில் முன்னேற்றமடைந்ததைக் காணமுடிந்ததது .
டாக்டர் கிரேஸ் அந்த மருத்துவமனையில் பல அனுபவங்களைக் கடந்து சென்றபின் மலேசியாவில் ராணுவ பொறியாளராகப் பணிபுரியும் டேனியல் என்பவரோடு அவளது திருமணம் நடைபெற்றது . திருமணத்திற்குப் பிறகு டாக்டர் கிரேஸ் சத்தர்பூருக்குத் திரும்பினாள் . அவளுடைய கணவர் மலேசியா விலிருந்து இந்தியாவிற்கு வந்து சைக்கிள் கடை ஒன்றை தொடங்கி , மருத்துவமனைக்கு எதிராக ஒரு வீட்டையும் கட்டினார் . 1949 - ல் புதிய மருத்துவர் டாக்டர் எஸ்றா தனது நர்ஸ் மனைவி பிரான்சிஸுடன் சத்தர்பூர் வந்த போது மருத்துவமனையின் எல்லாப் பொறுப்புகளையும் ஏற்றுக் கொண்டார் .
மேலும் அம்மருத்துவமனையை ஆண் நோயாளிகளையும் உள்ளடக்கிய பொது மருத்துவமனையாக மாற்றினார் . அவர் விடுமுறைக்கு சென்றபோது டாக்டர் கிரேஸ் தனக்கு அதிக வேலைப் பளு இருப்பதை உணர்ந்தாள் . அதினால் அவளுடைய இரத்த அழுத்தம் அதிகரித்தது . மருத்துவமனை செயல் திட்டக்குழுவினர் அவளுடைய வேலைப்பளு அதிகம் என்பதை கண்டனர் . டாக்டர் எஸ்றா விடுமுறை முடித்து திரும்பி வந்தவுடன் கிரேஸ் சிறிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாள் .
இதனால் மனக்கசப்பு ஏற்பட்டு , உள்ளம் உடைந்த கிரேஸ் பண்டல்கண்டிலும் தன் சபையிலும் இருக்கவே தீர்மானித்தாள் . அதன் பிறகு கடைத் தெருவில் தன் சொந்த மருத்துவமனையை திறந்து வைத்து தன் வேலையைத் தொடங்கினார் . ஜனங்கள் வந்ததினால் அவர்களுக்கு சேவை செய்வதில் இதயம் மகிழ்ந்தாள் கிரேஸ் . தனது சபைக்கும் ஆசீர்வாதமாக இருந்து , பல குழுக்களிலும் சேவை செய்தாள் . வேலூரிலுள்ள இந்திய நற்செய்தி ஐக்கியத்தின் ஆவிக்குரிய கூட்டத்தில் 1958ல் பங்கு பெற்றாள் . அங்கு ஒரு சகோதரியோடு சேர்ந்து ஜெபித்து , தன்னுடைய கசப்பையும் , காயமடைந்த உணர்வுகளையும் அறிக்கை செய்தாள் . சமாதானம் அவள் உள்ளத்தில் வந்தது .
அதன் பிறகு வித்தியாசமானவளாகக் காணப்பட்டாள் . அவளது உறுதியான விசுவாசம் வெற்றியைச் சுதந்தரித்தது .
ஒரு சமயம் அவள் முன்பு வேலை செய்த மருத்துவ மனையிலிருந்து வந்து குழப்பமான மருத்துவ சிகிச்சைக்கு ஆலோசனை கேட்டனர் . தன்னுடைய அனுபவம் மற்றும் நிபுணத்துவத்தினால் அவர்களுக்கு உடனே உதவி செய்தாள் கிரேஸ் . ஒரு பெரிய மருத்துவமனைக்கு டாக்டர் தேவைப்பட்டதால் வாரம் ஒரு முறை சென்று வந்தாள் . அங்கே மருத்துவப் பட்டப்படிப்பு படிக்கத் தீர்மானித்த மற்றொரு பண்டல்கண்ட் பெண்ணைச் சந்தித்தாள்
1958ல் அவளுடைய கணவரும் , அவளும் ஒரு சிறுவனைத் தத்தெடுத்து அவனுக்குக் கிதியோன் எனப் பெயரிட்டனர் . இயேசுவை இரட்சகராக ஏற்றுக் கொண்ட அவன் , வளர்ந்த போது , வாலிபர்களின் தலைவனானான் . அவன் எலக்ட்ரீஷியன் படிப்பை முடித்தபின் குல்பகாரில் அலுவலகத்தில் பணிபுரியும் பெண்ணை டாக்டர் கிரேஸ் அவனுக்கு நிச்சயம் செய்தாள் . கிதியோன் 1979ல் திருமணம் செய்து கொண்டு தான் வளர்ந்த அதே அனாதை இல்லத்திற்கு பணிபுரியச் சென்றான் .
1980ம் ஆண்டு நவம்பர் 6ம் தேதி டாக்டர் கிரேஸ் ஆலயத்திற்கு வரவில்லை . முந்தின இரவில் கொள்ளையர்கள் வந்து அவளையும் அவளது கணவரையும் கொன்று போட்டிருந்தார்கள் . அவளுடைய பேத்தியான கிரேஸ் பிறந்ததைப் பார்ப்பதற்கு டாக்டர் கிரேஸ் உயிருடன் இல்லை . அவளுடைய உறுதியான விசுவாசத்தின்மூலம் அவளையும் , அவளுடைய வெற்றியையும் அறிந்தவர்களுக்கும் டாக்டர் கிரேஸ் ஊக்கமளித்துக் கொண்டிருக்கிறார் . ஆவிக்குரிய போராட்டத்தில் துன்பப்படுகிறவர்களுக்கு அவள் ஊக்கமளிப்பவளாக இருக்கிறாள் . மக்களைப் பாவப்பிடியினின்றும் , வியாதிகளினின்றும் விடுவிப்பதற்காகத் தன் வாழ்நாள் முழுவதையும் செலவழித்த டாக்டர் கிரேஸின் வாழ்க்கை வரலாற்றை வாசிக்கும் ஒவ்வொருவர் உள்ளத்தையும் சேவை மனப்பான்மை பற்றிப் பிடிப்பதாக !
கிறிஸ்துவின் தைரியமான வீரர் ( A Brave Soldier of Christ ) ஸ்காட்லாந்து தேசத்தில் 1848ல் டிசம்பர் 2ம் தேதி காலணிகள் செய்பவருடைய மகளாய் மேரி மிச்செல் ஸ்லெஸ்சர் பிறந்தார் . அவளுடைய தாய் ஒரு நல்ல கிறிஸ்தவப் பெண்மணி ; அவர்கள் அவளுக்கு ஜெபிக்க கற்றுத் தந்தார்கள் . அவளுடைய தகப்பனார் திடீரென போதைக்கு அடிமையானதினால் எந்த வேலையிலும் நிலையாக நிற்பதில்லை அவர்களுடைய குடும்பத்தில் சண்டை சச்சரவுகளும் , ஏழ்மையும் காணப்பட்டது .
பதினொரு வயதாயிருக்கும் போதே தொழிற்சாலைகளில் வேலை செய்து கொண் . இரவில் பள்ளிக்குப் போக வேண்டியிருந்தது . அவளுடைய வாழ்க்கை தன்னையே வெறுக்கக் கூடியதாய் இருந்தது , எனவே கடினமான இந்த வாழ்க்கை பிற்காலத்தில் மிஷனரியாக வாழ்வதற்கு பேருதவியாய் இருந்தது . அந்நாட்களில் ஸ்காட்லாந்து மக்கள் டேவிட் லிவிங்ஸ்டனுடைய மரணத்தைக் குறித்து கேள்விப்பட்டார்கள் .
மேரி ஆப்பிரிக்காவிற்கு மிஷனெரியாய்ச் செல்ல தீர்மானம் செய்தாள் . அவளுடைய தாயார் மிஷனொரியாக அவளை அனுப்ப விரும்பினார்கள் . மேரியும் வெளி நாட்டு மிஷனெரி ஸ்தாபனத்திற்கு மனு ஒன்றை அனுப்பினாள் , அவள் ஏற்றுக் கொள்ளப்பட்டு , எடின்பர்க்கிற்கு மூன்று மாத பயிற்சிக்காக வரவழைக்கப்பட்டாள் .
நைஜீரியாவிலுள்ள காலபார் என்னுமிடத்திற்கு தன்னை மிஷனெரியாக அனுப்பும்படி பிரஸ்பிட்டேரியன் சபையைக் கேட்டுக் கொண்டாள் . 1876ல் அவள் கப்பற் பயணம் மேற்கொண்டு காலபாருக்கு சென்ற போது டியூக் நகரத்தில் ஒரு ஆசிரியையாகப் பொறுப்பேற்றாள் .
எஃபிக் உள்ளூர் மொழியைக் கற்றுக் கொண்டு , ஆசிரியை வேலை செய்வதில் சந்தோஷமடைந்தார் எனினும் தனது மிஷனெரிப் பணியை ஆரம்பிக்கும் படி தீர்மானம் பண்ணினாள் . டியூக் நகர மிஷனெரிகள் வெற்றிகரமாக நடைபெற்ற பணியில் மகிழ்ச்சியடைந்தனர் . அவர்கள் மோசமான மூடப்பழக்க வழக்கங்களை முடிவுக்கு கொண்டு வர முடிந்தது .
இதன் விளைவாக வேத போதனைகள் தான் ஞானத்தை கொடுக்கிறது என்பதை கிராமத்தலைவர்கள் அறிந்தார்கள் . உள்ளூர் மக்கள் மொழியை மேரி கற்றதினால் மொழிபெயர்ப்பாளர் இன்றியே அவளால் கிராமத்திற்குள் செல்ல முடிந்தது . அநேகர் இதிலுள்ள ஆபத்தைக் குறித்து எச்சரித்தபோதிலும் , மக்களை அறிந்து கொள்வதற்கு இது தான் சிறந்த வழி என்பதை மேரி கண்டு கொண்டாள் .
ஓல்டுடவுன் என்ற இடத்தில் அவளுக்கு புதிய வேலை கொடுக்கப்பட்டது , அங்கே அவளுடைய விருப்பப்படி வாழ முடிந்தது . ஜனங்களை கிறிஸ்துவுக்காக ஆதாயம் செய்வதையே தன் நோக்கமாக கருதிய அவள் அவர்கள் மத்தியில் அவர்களைப் போல வாழ்வதே சிறந்த வழி என்பதை உணர்ந்தாள் . கால்களில் செருப்போ , தலையில் தொப்பியோ அணியாமல் அம் மக்களின் உணவை உண்டு , அவர்களைப் போலவே தரையில் படுத்து உறங்கினாள் . |
வெள்ளைக்காரர்கள் விவகாரத்தில் தலையிடுவதில் மேரியின் ஆலோசனையை அடிக்கடி கேட்டு வந்தார் ஓல்டுடவுனில் இருந்த கிறிஸ்தவ தலைவர் ஒருவர் . உள்ளூர் மக்களோடு வேலை செய்வதில் மேரியும் அவருடைய உதவியை கேட்டாள் . ஓல்டுடவுனில் மேரியின் ஊழியம் வெற்றியாயிருந்தபோதும் மிகவும் உட்பகுதியில் வாழ்ந்து வந்த ஒகோயோங் இனத்தைக் குறித்த கரிசனை அவளுக்கு இருந்தது . கர்த்தர் அங்கே செல்ல அவளை வழி நடத்தினார் . ஆனால் , அங்குச் சென்றால் மரித்துவிடுவாய் என்று மக்கள் எச்சரித்தார்கள் . இறுதியில் ஓல்டுடவுனிலுள்ள இராஜா ஈயோ ஒரு படகில் சிலருடைய பாதுகாப்போடு அவளை அனுப்பி வைத்தார் .
அப்பகுதி மற்ற இடங்களை விட மிகவும் கொடுமை நிறைந்ததாக இருந்தது . அன்பு என்றால் என்னவென்பதை அறியாத ஓகோயோங் இன மக்களுக்கு கிறிஸ்துவின் அன்பை கொண்டு சென்றாள் மேரி . விக்கிரகங்கள் தேவையற்றவையென்றும் , ஒரே ஒரு தேவன் தான் உண்டு என்பதையும் அவர்களுக்குக் கூறினாள் .
மேரி அவர்களைக் குறித்து பயமடையாததால் அவர்கள் ஆச்சரியமடைந்தார்கள் , தங்கள் வேலைகளை நிறுத்திவைத்து விட்டு அவள் வார்த்தையைக் கேட்க ஆவலுள்ளவர்களாயிருந்தார்கள் . மேரியின் பணி மிகவும் கடினமாயிருந்தது .
இந்தப் பகுதியில் பிரச்சனைகள் எழும்பின . ஒவ்வொரு நாளும் இம்மக்கள் வேலை செய்யாமல் இருக்கிறதினால் குடிக்கிறார்கள் ; இதனால் வீணான சண்டைகள் ஏற்படுகிறது என்பதை உணர்ந்த மேரி தன்னுடைய தேனீர் பாத்திரம் , துணிகள் , பழைய தையல் எந்திரம் ஆகியவற்றைக் காண்பித்தாள் . அவர்கள் அவற்றைப் பார்த்து ரசித்தபோது , அவர்கள் எடுக்கும் பனை எண்ணெய் மற்றும் மரவள்ளிக் கிழங்குகளை அருகிலுள்ள வியாபாரிகளிடம் எடுத்துச் சென்றால் , இவைகளைக் காட்டிலும் நல்ல பொருட்களை வாங்க முடியும் என்று கூறினாள் .
எனவே , இம்மக்களின் தலைவர்களும் , போர் வீரர்களும் டியூக் டவுனையும் , ஓல்டு டவுனையும் நோக்கிப் புறப்பட்டனர் . ஓல்டுடவுனின் இராஜாவாகிய ஈயோ அவர்களுக்கு நல்ல விருந்தளித்து , பரிசுப் பொருட்களும் கொடுத்தனுப்பினார் .
மேலும் ' வெள்ளை அம்மா ' வின் கடவுள் தான் உண்மையான கடவுள் என்றும் அவர்களிடம் கூறினான் . அந்த சந்திப்பின் விளைவாக ஓகோயோ பகுதியானது வெளியிலிருந்து வருபவர்களுக்கு திறக்கப்பட்டது . வணிகர்களும் போர்வீரர்களும் அரசியல் நிபுணர்களும் 400 ஆண்டுகளாக செய்ய முடியாததை மேரி செய்து முடித்தாள் .
இந்தப் பழங்குடி இன மக்கள் உழைப்பின் மேன்மை குறித்து அறிந்து' கொண்டனர் . இது அவர்கள் வாழ்வில் பெரும் மாறுதலை ஏற்படுத்தியது . ஒரு இரண்டு கொடூரமான உள் நாட்டுப் படைகள் ஒன்றுக் கொன்று போர் செய்வதை தடுத்து நிறுத்தியதோடு , ஒருவரைக் குற்றவாளி என்று சந்தேகித்துத் துன்புறுத்தும் கொடூரப்பழக்கத்திற்கும் முற்றுப்புள்ளிவைத்தாள் மேரி .
நாட்கள் செல்லச் செல்ல விக்கிரகங்கள் மறைந்து , ஆலயங்கள் கட்டப்பட்டன . அவர்களுடைய சச்சரவுகளைத் தீர்ப்பதற்கு நீதி மன்றம் ஏற்படுத்தப்பட்டது , மேரி தான் அதன் முதல் நீதிபதியாயிருந்தாள் . விடுமுறைக்காக ஸ்காட்லாந்து சென்று திரும்பி வந்த போது அடிமை வியாபாரத்தில் பிரபலமானவர்கள் மற்றும் நரமாமிசம் உண்ணும் மக்களிடம் பயமின்றிப் பழகினாள் . வயது முதிர்ந்தபோதும் உற்சாகத்துடன் பணிபுரிந்து ,
சைக்கிளில் பயணம் செய்து , கிராமங்களுக்குச் சென்று வந்தாள் . கிறிஸ்துவின் அன்பைக் கூறினாள் . சில சமயங்களில் கட்டை வண்டியில் வைத்து மனிதர்கள் இழுத்துச் சென்றனர் . ஆங்கில அதிகாரிகள் அந்தப் பழங்குடி இன மக்களிடம் அவளுக்கு இருந்த செல்வாக்கைக் கண்டு , அந்தப் பகுதியின் பிரதிநிதியாக அவளை நியமனம் செய்தனர் . இவ்வாறாக பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் முதல் பெண் மாஜிஸ்டிரேட் ஆனார் .
இந்தப் பதவியை பிரிட்டிஷ் அதிகாரிகளின் செல்வாக்கை பெறவும் ஆப்பிரிக்க மக்களை ஆண்டவருக்குள் நடத்தவும் பயன்படுத்தினார் . மேரி ஸ்லெஸ்சர் செய்த வேலை நாகரீகப் பகுதியிலிருந்து வெகுதூரம் இருந்ததால் ஆரம்பத்தில் அவைகள் யாராலும் கவனிக்கப்படவில்லை .
பின்னர் அநேகர் அதைக் குறித்து கேள்விப்பட்டனர் . நைஜீரியாவில் அவள் செய்த வேலைக்காக பிரிட்டிஷ் மன்னர் வெள்ளி சிலுவை அளித்து மேரியை கௌரவித்தார் . உண்மையும் உத்தமுமான ஊழியர்களை தேவன் கனம் பண்ணுகிறார் என்பதற்கு மேரி ஒரு சாட்சி .
தன்னுடைய ஏழு வளர்ப்புப் பிள்ளைகளோடு ஒகோயோங்கிலிருந்து புறப்பட்ட இவள் இட்டு பகுதியிலும் மற்றும் மிகவும் உட்புறமான பகுதிகளில் விசேஷமாக , இபோ மக்கள் மத்தியிலும் ஊழியங்களைச் செய்தார் . மேரியின் வளர்ப்பு பிள்ளைகளில் மூத்த மகளான ஜேனி அவளுடைய ஊழியத்திற்கு மிகவும் உதவியாக விளங்கினாள் . தன்னுடைய கடைசி பத்து ஆண்டுகளில் தொடர்ந்து முன்னோடி ஊழியங்களைச் செய்தாள் .
அவளுக்கு பின் ஊழியத்திற்கு வந்தவர்கள் எளிதாக , தங்கள் வேலைகளை நிறைவேற்ற முடிந்தது . ஏனென்றால் ஆரம்ப கால ஊழியங்களில் மேரி அநேக காரியங்களை செய்து முடித்திருந்தாள் . எஞ்சியிருந்த காலங்களில் தன்னால் இயன்ற எல்லாவற்றையும் செய்தாள் . அவள் மிகவும் பெலவீனமடையும்வரை நடந்து கொண்டேயிருந்தாள் . ஸ்காட்லாந்திலுள்ள அவரது சிநேகிதிகள் ஓய்வெடுக்கும்படி அவரை அழைத்தனர் . ஆயினும் நர மாமிசப்பட்சினிகள் மத்தியில் ஊழியத்தை செய்து முடிக்க தேவன் அவளுக்கு உதவினார் .
1915ல் தன்னுடைய 66வது வயதில் மண் குடிசையில் மரித்தார் . அவளுடைய உடலை நதி மூலம் எடுத்து வருவதற்காக டியூக் நகரத்திலிருந்து படகு ஒன்றை அரசாங்கம் அனுப்பியது . அவள் பணி செய்த முதல் பணிக்களத்தின் அருகில்' இருந்த மலை மேல் அவளது உடல் அடக்கம் செய்யப்பட்டது . ஆப்பிரிக்க ஆதிவாசி இனங்களோடு தன்னை அடையாளப் படுத்திக்கொண்ட ஸ்காட்லாந்து மங்கை மேரி ஸ்லெஸ்சர் , அவர்களுக்குக் கிறிஸ்துவின் அன்பைப் பகிர்ந்ததுடன் உழைப்பின் மேன்மையையும் கற்றுக்கொடுத்தார் . ஒரு பெண்ணாகிய அவர் நாட்டின் பெருந்தலைவர்கள் கூடச் செய்ய இயலாத அரும்பெரும் பணிகளையும் சீர்திருத்தங்களையும் அம்மக்களுக்காகச் செய்து முடித்தார் . இறுதி மூச்சுவரை அவர்களுக்காக உழைத்த மேரி ஸ்லெஸ்சரைப் பரலோகம் பொற்கரம் நீட்டி வரவேற்றிருக்கும் !
ஸ்வீடனிலுள்ள பிலதெல்பியா பெந்தெகொஸ்தே சபை உலகத்தின் பல நாடுகளுக்கு மிஷனெரிகளை அடிக்கடி அனுப்பிக் கொண்டிருந்த நாட்களில் ஒரு சிறப்பு மிஷனெரி ஆராதனை நடந்து கொண்டிருந்த போது ஸயர் என்று இப்போது அழைக்கப்படுகிற பெல்ஜியன் காங்கோவுக்குச் சென்று ஊழியம் செய்யும் பாரத்தை இரண்டு இளம் தம்பதியினர் பெற்றனர் .
1921ல் ஸ்வீடனிலுள்ள ஸ டாக்ஹோம் என்னுமிடத்தில் இது நடைபெற்றது . டேவிட் , ஸ்வேயா ஃபிளட் , ஜோயல் , மற்றும் பெர்தா எரிக்சன் என்பவர்களே அம்மிஷனெரிகள் .
ஸ்வேயா , 4 அடி 8 அங்குல உயரம் உடையவள் என்றாலும் , ஸ்வீடனில் புகழ் பெற்ற பாடகியாயிருந்தாள் . இந்த இரண்டு தம்பதியினரும் எல்லாவற்றையும் தியாகம் செய்து , நற்செய்தியை அறிவிப்பதற்குத் தங்கள் வாழ்வை செலவிட்டனர் . பெல்ஜியன் காங்கோவிற்கு வந்தவுடன் உள்ளூர் மிஷனெரி பணி மையத்திற்குச் சென்றனர் .
' அவர்கள் தேவனிடத்தில் வைத்த அன்பு மற்றும் அர்ப்பணிப்பினிமித்தமாக தேவனுடைய வழிநடத்துதலை ஏற்று . காங்கோவின் உட்பகுதியில் நற்செய்தி அறிவிக்கச் சென்றனர் . டேவிட் மற்றும் ஸ்வேயா தம்பதியர் காங்கோ காடுகளின் பாதையில் சென்றபோது தங்களுடைய இரண்டு வயது மகனை முதுகில் சுமந்து சென்றனர் . மலேரியா காய்ச்சலினால் அனைவரும் தாக்கப்பட்ட போதும் , சுவிஷேசப் பணியிலிருந்து அவர்களை எதுவும் தடுத்து நிறுத்த முடியவில்லை .
கடைசியாக , அவர்கள் என்டோலரா என்னும் கிராமத்திற்கு வந்து சேர்ந்தனர் . அவர்களுடைய உள்ளூர் கடவுள்கள் கோபப்படுவார்கள் என கிராமத்தலைவன் அவர்களை உள்ளே நுழைய அனுமதிக்கவில்லை . அவர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படாததால் அரை மைல் தூரத்தில் ஓர் இடத்தைக் கண்டுபிடித்து , அவர்கள் வசிப்பதற்கென மண் வீடுகள் கட்டினர்
. அந்த கிராமத்திலிருந்து கோழிகளையும் , முட்டைகளையும் விற்பதற்காக வாரத்திற்கு ஒருமுறை ஒரு சிறுவன் வந்து அவர்களோடு தொடர்புகொள்ள அனுமதி அளிக்கப்பட்டது வேறு எந்த ஆப்ரிக்கரோடும் தொடர்பு கொள்ள முடியாவிட்டாலும் இந்த சிறுவனையாவது கிறிஸ்துவண்டை வழிநடத்த வேண்டுமென ஸ்வேயா விரும்பினார் .
அவனுடன் அன்புடன் பேசி , கிறிஸ்துவிடம் அவனை வழி நடத்துவதில் வெற்றியும் கண்டாள் . எரிக்சன் தம்பதியர் மலேரியாவால் மிகவும் பாதிக்கப்பட்டதால் மத்திய மிஷனெரி பணிமையத்திற்குத் திரும்பிவிட்டனர் . ஸ்வேயா தம்பதியரும் மிகவும் நோய்வாய் ப்பட்டனர் . ஸ்வேயா தான் கருத்தரித்திருப்பதை அறிந்த போது அவர்கள் கிராமத் தலைவனிடம் சென்று பிரசவ நேரத்தில் உதவி செய்யுமாறு கேட்டனர் . ஒரு மருத்துவப் பெண் கிராமத்திலிருந்து வந்து அவளுக்கு உதவி செய்ய அனுமதிக்கப்பட்டாள் . ஸ்வேயா அழகிய ஆரோக்கியமான பெண் குழந்தையைப் பெற்றெடுத்தாள் . அவர்கள் அவளுக்கு அயினா என பெயரிட்டார்கள் . அவள் அவர்களுக்கு மிகுந்த ஆறுதலாக இருந்தாள் .
ஆனால் பிரசவத்தின்போது ஸ்வேயா மிகுதியான இரத்தத்தை இழந்துவிட்டதால் குழந்தை பிறந்த பதினேழாவது நாளில் இறந்து போனாள் .
27 வயது நிரம்பிய மனைவியை இழந்ததினால் டேவிட் ஃபிளட் தாங்கமுடியாத அதிர்ச்சியடைந்தார் . அவளை அடக்கம் செய்தார் . ஆனால் இழப்பை தாங்கிக் கொள்ள முடியவில்லை . எனவே , குழந்தையை எடுத்துக் கொண்டு மத்திய மிஷனெரி அலுவலகம் சென்று , அந்தக் குழந்தையை எரிக்சன் தம்பதியரிடம் கொடுத்துவிட்டு , தேவன் என் வாழ்க்கையைபாழாக்கிவிட்டார் என்று கூறி தன் மகனோடு சுவீடன் திரும்பினார் . எரிக்சன் தம்பதியினரும் சீக்கிரத்தில் இறந்து போய்விடவே ஒரு அமெரிக்க மிஷனெரி தம்பதியரிடம் எய்னா கொடுக்கப்பட்டாள் .
அவர்கள் அவருக்கு ஆகி என்று மறு பெயரிட்டனர் . அவள் மூன்று வயதாயிருந்தபோது அமெரிக்காவிற்குக் கொண்டு சென்றனர் . அங்கே அவர்கள் தங்கி சபையில் போதகப் பணியைச் செய்துவந்தனர் . ஆகி தென் டகோடாவில் வளர்ந்தாள் . பின் மினியபொலிஸில் உள்ள வட மத்திய வேதாகமக் கல்லூரியில் படித்தாள் . அங்கே டூவி ஹர்ஸ்ட் என்பவரை சந்தித்து , மணந்து கொண்டாள் .
இவர் சியாட்டிலிருந்த ஒரு கிறிஸ்தவக் கல்லூரியின் தலைவராயிருந்தார் . ஆகி ஒரு மிஷனெரி தம்பதியர் மூலம் தன்னுடைய இளமைக் காலத்தைக் குறித்தும் தன் தகப்பனைக் குறித்தும் கேள்விப்பட்டார் .
ஒரு நாள் வேற்றுமொழி பத்திரிக்கை ஒன்று அவளுக்குக் கிடைத்தது . அதில் ஸ்வேயா ஃபிளட் என்ற பெயருடன் பதிக்கப்பட்ட கல்லறையின் படத்தைக் கண்டாள் . மொழியெர்ப்பாளர் ஒருவர் அதனை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார் அந்தக் கதையானது ' என் டோலரா ' வுக்கு சென்ற ஸ்வேயா மற்றும் டேவிட் ஃபிளட் தம்பதியருடைய கதை . அதில் , ஸ்வேயா மூலம் ஆண்டவரிடம் வழி நடத்தப் பட்ட சிறுவன் அநேக வாலிபர்களையும் கிராமத் தலைவன் உட்பட பல முதியவர்களையும் கிறிஸ்துவுக்கு நேராக வழிநடத்தியதையும் குறித்து எழுதப்பட்டிந்தது . ஸ்வேயாவால் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட அந்தச் சிறுவன் 600 பேருக்கும் மேற்பட்ட கிராமஜனங்களை இயேசுவண்டைவழிநடத்தினான்
இந்தக் காலங்களில் ஆகியின் தகப்பனார் மறுமணம் பரிந்து கொண்டு ஸ்வீடனில் வாழ்ந்து வந்தார் . அவருக்கு நான்கு பிள்ளைகள் இருந்தனர் . அவர் நாஸ்திகனாகவும் . குடிகாரனாகவும் மாறியிருந்தார் . ஆகி ஸ்வீடனுக்கு போய் அவருடைய அறைக்குள் சென்று தன்னைப்பற்றியும் , ஸ்வேயா மூலம் நடந்தவற்றையும் அன்புடன் கூறினாள் .
அவளுடைய தகப்பனார் கண்ணீர்விட்டு ஆண்டவரோடு ஒப்புரவானார் . சிறிது காலம் கழித்து மரித்துப் போனார் . லண்டனில் நடந்த ஒரு கூட்டத்தில் ஆகி கலந்து கொண்டபோது பெல்ஜியன் காங்கோவிலிருந்து வந்திருந்த கிறிஸ்தவத் தலைவரை சந்தித்தாள் . அவர் காங்கோவிலுள்ள தேசிய திருச்சபையின் கண்காணிப்பாளர் ஆவார் . ஆகி அவரிடம் ஸ்வேயா ஃபிளட் அவர்களை குறித்து கேள்விப்பட்டிருக்கிறீர்களா ? என்று கேட்டாள் .
அவர் ஆச்சரியப்படும் விதமாக ஸ்வேயாவின் ஊழியத்தால் ஆண்டவரை ஏற்றுக் கொண்டு , முழு கிராமத்தையும் கிறிஸ்துவிடம் வழி நடத்திய அந்தச் சிறுவன் நான் தான் என்று கூறினார் . ஆகி யாரென்பதை அறிந்தபோது அவளை அன்புடன் அணைத்துக் கொண்டு , தாயின் கல்லறையைக் காணவும் , ஸ்வேயாவின் ஊழியத்தினால் சந்திக்கப்பட்ட ஆத்துமாக்களை சந்திக்கவும் வரும்படி அழைத்தார் . அந்த அழைப்பின்பேரில் ஆகியும் அவளுடைய கணவரும்பெல்ஜியன் காங்கோ சென்றனர் .
அங்கே திரள் கூட்ட கிராமத்தினர் அவர்களை மகிழ்ச்சியோடு வரவேற்று , அவளுடைய தாயின் கல்லறைக்கு அழைத்துச் சென்றனர் . ஆகி சிறுவயதாயிருந்தபோது மலைப் பாதையில் அவளை தொட்டிலில் சுமந்து செல்ல அவள் தந்தை நியமித்த மனிதனையும் சந்தித்தாள் . அவரும் அவளை அன்புடன் அணைத்துக் கொண்டார் . அந்தப் போதகரும் வெள்ளைநிறச் சிலுவை அடையாளத்தைக் கொண்ட அவளுடைய தாயின் கல்லறையைக் காண அவளுடன் சென்றார் .
ஆகி அந்த மண்ணில் முழங்கால் படியிட்டு , தன்னுடைய தாய் அவ்விடத்தில் செய்த ஊழியங்களுக்காக ஆண்டவருக்கு நன்றி செலுத்தினாள் . அந்த நாளில் அக்கிராமத்தில் நடந்த சபை ஆராதனையிலும் பங்கு பெற்றாள் .
யோவான் 12 : 24 ' மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் , கோதுமைமணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும் . செத்ததேயாகில் மிகுந்த பலனைக் கொடுக்கும் ' என்ற வசனத்தை போதகர் அன்று வாசித்தார் . " கண்ணீரோடு விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள் . அள்ளித்தூவும் விதையைச் சுமக்கிறவன் அழுதுகொண்டு போகிறான் , ஆனாலும் தான் அறுத்த அரிகளைச் சுமந்து கொண்டு கெம்பீரத்தோடே திரும்பி வருவான் " ( சங்கீதம் 126 : 5 , 6 ) எனும் வசனங்களை நினைவுகூர்ந்தவளாய் , தன் தாயைப் போல தியாகமான சேவைசெய்ய மீண்டும் ஒருமுறை தன் வாழ்வை தேவ பணிக்க அர்ப்பணித்தாள் .
ஸ்வீடனிலிருந்து பெல்ஜியன் காங்கோவுக்குத் தன் கணவருடன் மிஷனெரியாகச் சென்ற ஸ்வேயா , கிராமத்தினுள் அனுமதிக்கப்படாததால் , ஊருக்கு வெளியே மண்வீடு கட்டி வசித்தார் . பல இடர்பாடுகளுக்கிடையில் , வாரம் ஒரு முறை மட்டுமே சந்தித்த ஒரே வாலிபனைக் கிறிஸ்துவிடம் வழிநடத்தி , அவன் மூலமாக நூற்றுக்கணக்கானோரை இயேசுவின் மந்தையில் சேர்த்து , இளம் வயதிலேயே கிறிஸ்துவிடம் சென்ற ஸ்வேயா ஃபிளட் நம் நெஞ்சங்களில் என்றும் நிலைத்திருக்கின்றார் .
ஏழைகளை உயர்த்துதல் ( Uplifting the Poor )
1910 - ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26 - ம் நாள் மாசிடோனியாவிலுள்ள ஸ்கோப்ஜே என்னுமிடத்தில் நிக்கோலா மற்றும் டிரானாஃபைல் பொஜாக்ஷியு தம்பதியினரின் மூன்றாவது மகளாகப் பிறந்தார் கல்கத்தாவின் அன்னை தெரசா . பெற்றோர் இவருக்கு சூட்டிய பெயர் ஏக்னஸ் கோன்ஷா பொஜாக்ஷியு . அல்பேனியாவைச் சேர்ந்த இவரது பெற்றோர் வணிகர்கள் . இவர் 9 வயதாக இருந்தபொழுது இவரது தந்தையார் இறந்து விட்டார் . இவர் ஸ்கோப்ஜியிலுள்ள ஒரு பொதுப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது எவளாநாட்டு அருட்பணியில் ஆர்வம் காட்டி , பள்ளிக்குழுவில் அங்கத்தினராக இருந்து , மதம் சார்ந்த காரியங்களில் மிகவும் அக்கறை காட்டினார் .
தனது 12 வது வயதில் ஏழைகள் மத்தியில் பணிபுரியவும் இயேசுவின் அன்பைப் பகிர்ந்து கொள்ளவும் அழைப்பைப் பெற்றார் . யுகாஸ்லாவ் ஜெசுட் மிஷனெரிகள் வங்க தேசத்தில் நடத்தி வந்த பணிகள் மீது தனது இளம் வயதிலேயே நாட்டம் கொண்டார் .
இவர் தனது 18 - வது வயதில் தனது வீட்டை விட்டு , ஐரிஸ் கன்னிகைகள் குழுவில் சேர்ந்தார் . அந்நாட்களில் ஐரிஸ் கன்னிகை குழுவினரான லோரெட்டா சகோதரிகள் கல்கத்தாவில் பணிபுரிந்து வந்தார்கள் . ஏக்னஸ் என்ற அன்னை தெரசா அயர்லாந்திலும் , டார்ஜிலிங்கிலும் பயிற்சி பெற்றபின் , தனது முதலாவது மத உறுதிமொழியை 1928 - ம் ஆண்டும் , இறுதி மத உறுதிமொழியை 1937 - ஆம் ஆண்டும் எடுத்துக் கொண்டார் .
இவருக்கு கொடுக்கப்பட்ட முதல் வேலை கல்கத்தாவில் உள்ள ஒரு பெண்கள் பள்ளியில் முதல்வராக இருப்பதுடன் , அங்கு ஆசிரியப்பணியும் செய்வது . இந்தப் பள்ளி சேரிகள் அருகில் இருந்தது . அச்சமயம் அன்னை தெரெசாவிற்கு இரண்டாவது அழைப்பு வந்தது . அதாவது அழைப்பிற்குள் இன்னொரு அழைப்பு .
தான் தங்கியிருந்த கான்வென்டைவிட்டு , வெளியே வந்து ஏழைகள் மத்தியில் நேரடியாக பணிபுரிய அவரது உள் உணர்வு அவரை உந்தித்தள்ளியது . அதன் பிறகு 1948 ஆம் ஆண்டில் லோராட்டோ கன்னிகைகள் பிரிவில்இருந்து விலகி கல்கத்தா ஆர்ச் பிஷப்பின் கீழ் இருந்து புதிய பணியை ஆரம்பிக்க போப்பிடமிருந்து அனுமதியும் பெற்றார் .
அன்னை தெரெஸா ஏழைகள் மத்தியில் பணிபுரிய பாட்னாவிலுள்ள அமெரிக்கன் மெடிக்கல் மிஷனரி சிஸ்டர்ஸ் மூலம் தீவிர மருத்துவ பயிற்சி பெற்றார் . இவர் சேரியிலுள்ள பள்ளி செல்லாத பிள்ளைகளை அழைத்து அவர்களுக்குக் கல்வி புகட்டும் பணியினைத் தொடங்கினார் .
அனேக தன்னார்வ ஊழியர்களையும் , பண உதவியையும் ஈர்த்தது . மிஷனெரிஸ் ஆப் சாரிட்டி என்ற இவருடைய குழுவானது கல்கத்தா ஆர்ச் பேராயத்தில் ஒரு மத சார்பான குழுவாக அங்கீகாரம் பெற்றது . இதன் உறுப்பினர்கள் முதல் மூன்று உறுதிமொழிகளான எளிமை , பரிசுத்தம் , கீழ்ப்படிதல் என்பவற்றுடன் நான்காவது உறுதிமொழியாக ' ஏழைகளுக்கு பணி செய்வது ' என்பதையும் எடுத்துக்கொண்டனர் .
அன்னை தெரெசாவின் , மிஷனெரிஸ் ஆப் சாரிட்டி குழுவிற்கு நல்ல விளம்பரம் கிடைத்தது . இதனை அன்னை அவர்கள் தங்கள் பணி விரிவடையச் செய்ய பயன் படுத்திக் கொண்டார்கள் . அவர்கள் 1957ஆம் ஆண்டு தொழு நோயாளிகள் மத்தியில் பணியை ஆரம்பித்து , அவர்களது கல்விப் பணியையும் விரிவடையச் செய்தார் . கலகத்தாவில் 9 ஆரம்பப்பள்ளிகள் நடத்தப்பட்டன . அனாதை மற்றும் கைவிடப்பட்ட குழந்தைகளுக்காக ஓர் இல்லமும் திறக்கப்பட்டது . வெகு சீக்கிரத்தில் இந்தியாவின் 22 நகரங்களில் இந்தப் பணி விரிவடைந்தது . அன்னை அவர்கள் இலங்கை , ஆஸ்திரேலியா ,தான்சானியா , வெனிசுலா , இத்தாலி போன்ற நாடுகளுக்குப் பயணம் செய்து , புதிய அமைப்புகளையும் தொடங்கினார் .
அன்னை தெரசா பார்ப்பதற்கு மிகச் சிறிய தோற்றமுடையவர் . ஆனால் மிகவும் சுறுசுறுப்புடன் பணி புரிபவர் . அவர்களுடைய மடிந்த தோலுடன் கூடிய முகமும் , கறுப்புக் கண்களும் மற்றவர்களின் கவனத்தை ஈர்த்தது . ஏனென்றால் , பிரகாசமும் , வல்லமையும் நிறைந்த அவருடைய முகம் பொறுமையையும் அமைதியையும் வெளிக் காட்டியது .
இவர்களுடைய பணியானது 1970ம் ஆண்டுகளில் ஏமன் . ஜோர்டன் , லண்டன் , இங்கிலாந்து மற்றும் நியுயார்க் நாடுகளில் பரவியது . போப் ஜான் அவர்களிடமிருந்து அங்கீகாரமும் சமாதான பரிசு போன்ற விருதுகளும் , ஜோசப் கென்னடி ஜீனியர் பவுண்டேஷன் மூலம் பண உதவியும் வரத் தொடங்கின . ஆதரவாளர்கள் , நன்கொடையாளர்கள் அவ்வப்போது வந்து பார்வையிட்டு , சகோதரிகளை ஆதரித்ததோடு , புதிய ஊழியங்களைத் தொடங்கவும் ஊக்குவித்தனர் . 1979 - ல் உலகில் இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் 200க்கும் மேற்பட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வந்தன . அதே ஆண்டில் அன்னை தெரெசாவிற்கு சமாதானத்திற்காக நோபல் பரிசு கிடைத்தது .
1972 - ல் Nehru Prize for Promotion of International Peace and understanding நேரு விருதும் ,
1978 - ல் பால்ஸன் விருதும் ,
1980 - ல் பாரத ரத்னா விருதும் கிடைத்தன . அன்னை தெரெசா தன் மிஷனெரி ஆப் சாரிட்டி குழுவினரை ரஷ்யாவுக்கு
1988ம் ஆண்டு அனுப்பி , எய்ட்ஸ நோயாளிகளுக்கென ஓர் இல்லத்தை சான்பிரான்சிஸ்கோ ( கலிபோர்னியா ) விலும் ஆரம்பித்தார் . தன் சொந்த நாடான அல்பேனியாவிற்கு 1991ம் ஆண்டு சென்று , அதன் தலைநகரான திரானாவில் ஓர் இல்லத்தைத் தொடங்கினார் . தற்சமயம் இந்தியாவில் மட்டும் 168 இல்லங்களில் இவர்களது பணி நடைபெற்று வருகின்றது . இவரது குழு அடைந்த விரிவாக்கத்திற்கும் பெற்ற புகழ்ச்சிக்கும் அன்னை தெரெசா அவர்களே காரணம் என்று ஆர்வலர்கள் கூறுகின்றனர் .
நாட்டிலுள்ள ஏழ்மைக்கும் வறுமைக்கும் அரசியல் அமைப்புகளே காரணம் என்று குறை கூறாமல் தன் சேவையைத் தொடர்ந்தார் . மாறாத அன்பே அவரது முதல் விதி . சமுதாயத்தில் ஏழ்மையையும் துன்பங்களையும் உண்டாக்கும் அமைப்புகளின் தீமைக்கு எதிராக கோபத்தை வெளிப்படுத்துவதோ படுத்தாமலிருப்பதோ சீர்திருத்தவாதி களுக்கும் இறைவனுக்கும் இடையிலான செயல்பாடு என்று அவர் கருதினார் .
சமதாயத்தில் ஏற்றத் தாழ்வுகளையும் வேதனைகளையும் கண்டுத் தங்கள் கோபத்தை வெளிக்காட்டும் சமூதாய சீர்திருத்தவாதிகளை கடவுள் பார்த்துக் கொள்வார் என்ற நோக்கத்தோடு ஏழைகளின் மீது அன்பு செலுத்தி தன் பணியினை அமைதியாகத் தொடர்ந்து செய்து அவர்கள் துயர் துடைத்து பராமரித்து வந்தார் .
1980 , 1990 - களில் இவரது உடல் பெலவீனமடையத் தொடங்கியது . 1983ம் ஆண்டு போப் ஜான் பால் 2 அவர்களைக் காணச் சென்ற பொழுது இருதயக் கோளாறு ஏற்பட்டது .
1989ம் ஆண்டு மிகப்பெரிய அளவில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதின் விளைவாக , இதயத் துடிப்பை சீராக்க பேஸ் மேக்கர் ( Pace Maker ) என்ற கருவி அவருடைய இருதயத்தில் பொருத்தப் பட்டது . அன்னை அவர்கள் சரீர பெலவீனத்திலிருந்ததால் அவர்களுக்கு அடுத்ததாக 63 வயதான சிஸ்டர் நிர்மலா மிஷனெரிஸ் ஆப் சாரிட்டியின் தலைவராக 1997ல் அறிவிக்கப்பட்டார் . அன்னை தெரெசா சிஸ்டர் நிர்மலாவிற்கு ஆலோசகராக இருந்து வந்தார் . 1997 , ஆகஸ்ட் மாதம் தனது 87 வயது பிறந்த நாளை கொண்டாடின அன்னை தெரசா அவர்கள்
1997 செப்டம்பர் 5ம் நாள் மீண்டும் மாரடைப்பு வந்ததினால் இந்த மண்ணுலக வாழ்வை விட்டு விண்ணுலக வாழ்விற்குச் சென்றுவிட்டார் . அவருடைய இறப்பு உலகம் முழுவதிலும் பெரிய இழப்பாக கருதப்பட்டது . இது ஈடுசெய்ய முடியாத ஒன்று என்று எல்லோரும் கலங்கும் வேளையாக மாறியது . ஏழை மக்கள் அன்னை தெரெசாவையே நோக்கினர் . ஈடு செய்ய முடியாத ஒன்றை நாம் இழந்துவிட்டோம் என்று கூறினர் . அன்னை தெரெசா அவர்கள் ஒரு பெரிய பாரம்பரியத்தை விட்டுச் சென்றுள்ளார் . கத்தோலிக்கத் திருச்சபையின் பாரம்பரியமான மத மதிப்பீடுகளின் குறியீடாகக் கருதப்பட்டார் . புனிதராக கருதப்பட்டார் .
பல புத்தகங்களும் பாராட்டுக் கட்டுரைகளும் 1980 - 1990களில் இவரை ஒரு புனிதராகக் காட்டின . இவர் தான் செய்தவற்றின் கவனத்தை தன்னைவிட்டகற்றித் தன் குழுவின் பணியாகவும் தன்னை ஊக்குவித்த இறைவனின் பணியாகவுமேகாட்ட விரும்பினார்
1980களின் இடையிலிருந்து மிஷனெரி ஆப் சாரிட்டியானது சகோதரர்களையும் , சகோதரிகளையும் கொண்டதாக மாறியது . அவர்கள் அன்னை தெரசா எழுதிய சட்ட அமைப்பையும் வழிகாட்டுதலையும் பின்பற்றுகின்றனர் .
அன்னை தெரசா என்று மாபெரும் பெயருக்குக் காரணமாக அமைந்த ஏழைகள் மீதான அவரது அன்பு குறித்த பிரகாசமான நினைவுகள் அவர்களோடு எப்போதும் இருக்கின்றன . அவருடைய நோக்கு இன்றைய உலகில் நீக்கப்பட வேண்டிய மிக முக்கியமான காரியத்தின் மேல் இருந்தது . அதாவது , இவ்வுலகில் கைவிடப்பட்டு தேவையில் துன்புறும் ஏழை மக்களின் துயரத்தை நீக்கி அவர்களை உயர்த்தும் பணியே அவரது இன்றியமையாத பணியாக இருந்தது , ஏழைகள் , தொழுநோயாளிகள் , எய்ட்ஸ் நோயாளிகள் மற்றும் சாகுந்தறுவாயிலிருந்தோர் ஒவ்வொருவரிலும் இயேசுவைக் கண்டார் அன்னை தெரெசா .
" மிகவும் சிறியவராகிய இவர்களில் ஒருவனுக்கு எதைச் செய்தீர்களோ அதை எனக்கே செய்தீர்கள் " என்ற இயேசுவின் பொன்மொழிகளை உணர்ந்து செயல்பட்ட அன்னை தெரெசாவைப் பின்பற்ற அர்ப்பணித்துள்ளோர் எத்தனை பேர் ? சிந்திப்பீர் , செயல்படுவீர் !
No comments:
Post a Comment