பிரட்ஃபோர்டிலுள்ள மசக்குசெட்ஸ் என்னுமிடத்தில் 1789 - ம் ஆண்டு டிசம்பர் 22ம் நாள் பிறந்த ஆனி ஹேஸல்டைன் ஜட்சன் இளமைப்பருவத்திலேயே ஆன்மீகக் காரியங்களில் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார் . பிரட்ஃபோர்டு அகாடமியில் படித்த அவர் முழுமையான ஒருகல்வியைப் பெற்றார் .
அந்த அகாடமியில் எழுப்புதல் ஏற்பட்ட போது ஹேனா மோர் எழுதிய “ பெண் கல்வியின் நவீனமுறைகள் கண்டனம் " என்ற கட்டுரையைப் படிக்க நேர்ந்தது . இந்தக் கட்டுரையானது ஒரு பயனுள்ள வாழ்க்கையைத் தேடுவதற்கு ஆனிக்குத் தூண்டுதலாக அமைந்தது . அவளுடைய படிப்பை முடித்ததிலிருந்து திருமணம் வரை அவள் ஓர் ஆசிரியையாக இருந்தாள் .
வெளிநாட்டு ஊழியத்திற்கு மிஷனெரிகளை அனுப்பும் அமெரிக்கா குழு கூட்டத்தை நடத்திய சபையில் ஆனியின் தகப்பனார் ஜான் ஹேஸல்டைன் ஒரு மூப்பராக இருந்தார் .
1810 - ம் ஆண்டு அதோனிராம் ஜட்சன் அன்டோவர் இறையியல் கல்லூரியில் அருட்பணி சேவைக்காக ஆயத்தமாகிக் கொண்டிருந்தபோது ஆனியும் அவரது குடும்பத்தினரும் அதோனிராம் ஜட்சனை அங்கு முதலாவதாக சந்தித்தனர் .
1812 - ல் அவர்கள் இந்தியாவிற்கு ஒரு அருட்பணி பயணத்திற்காகப் புறப்படுவதற்கு இரு வாரங்களுக்கு முன்பு அவள் ஜட்சனை மணம்புரிந்தாள் . அருட்பணியாளராகப் பிற நாடுகளுக்குப் பயணம் செய்த முதல் பெண் இவரே .
இத்தம்பதியர் செராம்பூரில் சிறிது காலம் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர் . ஏனெனில் , கிறிஸ்தவத்தை மாகாணத்திற்குள் கொண்டு வருவதற்கு கிழக்கிந்திய கம்பெனியிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியது .
ஆனி மூன்று முறை கருத்தரித்தாள் . இந்தியாவிலிருந்து பர்மாவிற்கு பிரயாணத்தை மேற்கொண்டபோது முதலாவது கருச்சிதைவு ஏற்பட்டது . இரண்டாவதாக 1815ல் பிறந்த குழந்தை ரோஜர் எட்டுமாதத்தில் இறந்தான் . மூன்றவதாக பிறந்த மரியா ஆறு மாதத்தில் இறந்தாள் .
மிஷனெரி ஊழியத்தில் அவள் மிகவும் உதவியாயிருந்தாள் . அவளது குழந்தை பிறப்புகள் மிகவும் கடினமாக இருந்தது . சீதோஷ்ன நிலையும் அவளை மிகவும் களைப்படையச் செய்ததால் நீண்ட ஓய்வுக்காக அவள் தன் சொந்த நாடு திரும்ப நேரிட்டது .
கல்லீரலில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக 1822 முதல் 1823வரை அமெரிக்காவில் இருந்தாள் . அங்கும் அவள் தன் நேரத்தை வீணாகக் கழிக்காமல் மிஷனெரிப் பணியின் வளர்ச்சிக்காக விரிவான உரைகளை ஆற்றினாள் . பர்மியர்களின் அருட்பணி குறித்த ஒரு சரித்திரத்தையும் எழுதினாள் .
அது அமெரிக்காவிலும் மேலை நாடுகளிலும் பெருமதிப்பைப் பெற்றது . 1823ல் பர்மாவிற்கு திரும்பி வந்தபோது மிஷனரிப் பணியின் வேலைகள் நன்றாக நடைபெறுவதை கண்டாள் .
அடுத்த ஆண்டு வங்காளத்தில் இருந்த ஆங்கிலேயருக்கும் பர்மிய அரசாங்கத்துக்குமிடையே போர்மூண்டது . அதனால் அவர்கள் வாழ்க்கை மிகுந்த துயரத்திற்குள்ளானது . மிஷனெரிகள் ஒற்றர்களாகக் கருதப்பட்டனர் . அதனால் இவளுடைய கணவர் வீட்டிற்குள்ளேயே பிடிக்கப்பட்டு " மரண சிறைச்சாலை " என்றழைக்கப்படும் இடத்தில் வைக்கப்பட்டார் . தன்னுடைய கணவருக்கு உதவி செய்யும்படி சிறைச்சாலைக்கு வெளியில் ஒரு குடிசை வீட்டில் தங்கினார் ஆனி .
திருமதி ஜட்சன் காவலர்களின் கீழ் வைக்கப்பட்டாள் . அவளது மிஷன் வீட்டிலிருந்து எல்லாப் பொருட்களும் எடுத்துப் போகப்பட்டன , அவளுடைய ஆடைகளும் கொண்டுபோகப்பட்டன . காவலர்கள் அவளைக் கொடூரமாகத் துன்புறுத்தினர் . அவள் கடைசியாக அந்தப் பட்டணத்தின் கவர்னருக்கு மனு ஒன்றை அனுப்பினாள் , கீழ்மட்ட அதிகாரிகளுக்குப் பணம் கொடுத்ததின் மூலம் தன்னுடைய கணவருடைய சிறைவாசகக் கொடுமைகள் சிலவற்றிலிருந்துஅவரை காப்பாற்ற முடிந்தது .
ராணுவஜெனரலை கௌரவிக்க ஜட்சனை பலி கொடுக்கும்படி வேறு பட்டணத்திற்குக் கொண்டு சென்றனர் . அதிர்ஷ்டவிதமாக , அந்த ஜெனரல் மீது தேச துரோகக் குற்றம் சாட்டப்பட்டு அவர் கொல்லப்பட்டார் . ஜட்சனின் உயிர் காக்கப்பட்டது .
ஒன்றரை வருடங்களாக திருமதி ஜட்சன் தன் கையில் குழந்தையோடு ஒரு சிறைச்சாலையிலிருந்து மற்றொரு சிறைச்சாலைக்கு தன் கணவரைப் பின் தொ ர்ந்து சென்றார் . அரசாங்கம் ஜட்சனுக்கு உணவளிக்கத் தவறியபோது அவருக்கு உணவு கொடுத்தார் .
மேலும் ஜட்சன் விடுதலையாக்கப்பட தன்னால் இயன்றதையெல்லாம் செய்தாள் . கவர்னருடைய மனதில் திருமதி ஜட்சனுக்கு செல்வாக்கு இருந்ததினால் பல முறை ஜட்சனுக்கு மற்றவர்களோடு சேர்த்து மரணதண்டனை விதிக்கப்பட்டாலும் , மற்றவர்கள் கொல்லப்படும் போது ஜட்சன் காப்பாற்றப்பட்டார் .
இந்த நாட்களில் அவள் குழந்தைத் திருமணத்தைப் பற்றியும் பெண் சிசுக்கள் கொல்லப்படுவதைக் குறித்தும் எந்தவித உரிமையும் இல்லாத திருமணமான பர்மியப் பெண்களின் கொடுமைகள் குறித்தும் எழுதினாள் . ஆங்கிலேயர் மற்றும் பர்மியர் இடையே சமாதானம் அறிவிக்கப்பட்டபோது அவளுடைய கணவர் விடுதலை செய்யப்பட்டார் . அதன் பிறகு கீழ் பர்மாவில் அம் ஹெர்ஸ்ட் என்னுமிடத்தில் தங்கி தங்கள் வேலையைத் தொடங்கினார்கள் .
ஆன் தன் சரீரத்தில் சுகத்தையும் மனதில் சமாதானத்தையும் பெறும்படி முயற்சி செய்தாள் ; ஆனால் அவளது நிலை மிகவும் மோசமானது . | இரண்டு மாதங்களுக்குப் பின்பு 1826 அக்டோபர் 24ல் பெரிய அம்மைநோய் தாக்கியதால் இவ்வுலகத்தைவிட்டு மறைந்தார் . பர்மிய மொழியில் வேத போதனை . தானியேல் , யோபு புத்தகங்களின் பர்மிய மொழி பெயர்ப்பு ஆகியவை அவள் எழுதியவற்றில் அடங்கும் .
1819ல் உள்ளூர் ஆசிரியரின் உதவியோடு தாய்லாந்து பாஷையில் மத்தேயு சுவிசேஷத்தை மொழி பெயர்த்தார் . " தாய் " பாஷையில் வேதாகப் பகுதியை மொழிபெயர்ந்த முதல் புராட்டஸ்டண்ட் பெண்மணி இவள்தான் . பர்மிய மொழியின் இலக்கணத்தை எழுதுவதற்கும் உதவி | செய்தார் . மேலும் பர்மியர்களுக்குப் பயன்படும் விதத்தில் பல மொழிபெயர்ப்புகளை இவர் செய்தார் . அமெரிக்க பாப்டிஸ்ட் பத்திரிக்கை ஒன்று இவளுடைய கடிதங்களை அமெரிக்காவில் வெளியிட்டனர் .
அவள் இறந்த பின்பு அவற்றை தியானப் பகுதிகளாக வெளியிட்டனர் . இது ஜட்சனுக்கும் , ஆனுக்கும் அமெரிக்காவில் புகழைத் தேடித் தந்தது . இவள் எழுதியவைகள் 19 - ம் நூற்றாண்டிலேயே அமெரிக்கர்களுக்கு “ அருட்பணியில் மிஷனெரி மனைவியின் ஈடுபாடு ” என்பது சட்டபூர்வமானது .
ஆனியின் வாழ்க்கை குறித்து திருமதி . எமிலி ஜட்சன் எழுதிய புத்தகம் 1850ல் நியூயார்க் பட்டணத்தில் வெளியிடப்பட்டது . இவளைக் குறித்து ஏறக்குறைய 16வாழ்க்கை சரிதைகள் வெளியிடப்பட்டுள்ளன . அவற்றில் புகழ்பெற்ற வாழ்க்கை வரலாறு ஒன்று
1830ம் ஆண்டிலிருந்து 1860 ஆண்டுவரை ஒவ்வொரு ஆண்டும் புதிய பதிப்பாக வருடந்தோறும் அச்சிடப்பட்டது . இப்புத்தகம் உலகம் முழுவதும் அறியப்பட்ட ஒரு புத்தகம் என யூனிடேரியன் லிடியா மேரி சைல்ட் ( Unitarian Lydia Mary Child ) வர்ணித்தது . பர்மாவிலுள்ள புத்தர் கோவில்கள் அழிந்து போனாலும் . பர்மாவின் சபைகளில் ஆன் ஹேஸல்டைன் ஜட்சனுடைய பெயர் ஒருநாளும் மறக்கப் படுவதில்லை .
முதல் பெண் மிஷனெரியாக வெளிநாடு பர்மாவுக்குச் சென்று . உடல் நலன் குன்றிய போதும் , கணவன் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு கடினப்பாதைகளைக் கடந்தபோதும் , கர்த்தருக்காக வைராக்கியமாகச் செயல்பட்ட திருமதி . ஜட்சன் , இயேசுவுக்கென்று தியாக ஊழியம் செய்ய வாஞ்சிக்கும் பெண்களனைவருக்கும் ஒரு சிறந்த முன்மாதிரி ! வேத புத்தகத்தின் சில பகுதிகளை பர்மிய மொழியில் மொழிபெயர்த்ததுடன் , பர்மியருக்கு நற்செய்தி அறிவித்தலைப் புத்தகம் வாயிலாக உலகறியச் செய்த இப்பெண்மணி கிறிஸ்தவ வரலாற்றில் சிறப்பு வாய்ந்தவர் ஆவார் .
திருமதி . எஸ்தர் வில்லியம்ஸ் அவர்களின் நினைவு இந்தியாவிலும் மற்றும் பல இடங்களில் உள்ளவர்களின் மனதிலும் நீங்கா இடம் பெற்றுள்ளது . தியாகமும் . சேவையும் நிறைந்த இவர்களின் வாழ்க்கை அவருடைய பெயருக்கேற்ப மின்னும் நட்சத்திரம் போன்றிருக்கிறது .
அமெரிக்க ஐக்கிய நாட்டில் எஸ்தர் ஃபால்க்னர் என்ற பெயருடன் ஒரு கிறிஸ்தவ குடுபத்தில் பிறந்தார் . ஆஸ்பரி இறையியல் கல்லூரியில் படித்து ஆண்டவருடைய அழைப்பிற்குக் கீழ்ப்படிந்து , இந்தியாவிற்கு வந்த பின் இவருடைய வாழ்க்கை மிகவும் பிரசித்தம் அடைந்தது .
1948ம் ஆண்டு இந்தியா வந்து சேர்ந்த பின் , கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டத்திலுள்ள ஹோஸ்கோட்டா என்ற சிறிய கிராமத்திற்கு அனுப்பப்பட்டார் . எஸ்தர் போதிக்கும் மிஷனெரியாக ( World Gospel Mission ) உலக சுவிசேஷ இயக்கம் மூலம் இந்தியாவிற்கு அனுப்பப்பட்ட இவர் இங்குள்ள மக்களைப் போல் தன் வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டு , கன்னட மொழியையும் கற்றுக் கொண்டு இந்திய மக்களைப்போல் வாழ்ந்தார் .
கன்னட மொழியை சரளமாகப் படிக்கவும் பேசவும் கற்றபின் , மக்கள் மத்தியில் தன் பணியை ஆற்ற ஆரம்பித்தார் . ஞாயிறு பள்ளி பாட திட்டங்களை கன்னடத்தில் மொழி பெயர்க்க எளிதாக இருந்தது . பிறகு பங்காரபேட்டை தென்னிந்திய வேதாகமக் கல்லூரியில் கன்னட மொழியில் புலமை பெற்றிருந்ததால் ஆசிரியராக சேர்ந்தார்கள் .
அவர்கள் எதைச் செய்தாலும் திறம்பட செய்து , ஓர் சிறந்த முன் மாதிரி ஆசிரியையாக இருந்தார் . அவர்களுடைய உடை , பழக்கம் வழக்கம் , அணுகுமுறை , மாணாக்கர்களிடம் வைத்திருந்த தொடர்பு , பயிற்றுவிப்பதில் உபகரணங்களைப் பயன்படுத்தும் விதம் போன்ற திறமைகள் அவர் ஓர் சிறந்த ஆசிரியை என்பதை உறுதி செய்தது . இடது கையால் எழதும் பழக்கம் உள்ளவர் . வகுப்பறையில் உரை ஆற்றும்போதும் கல்லூரி சிற்றாலயத்தில் செய்தி கொடுக்கும்போதும் இவர் மிக மென்மையாகவும் , எளிமையாகவும் பேசுவார் . இது அநேகருடைய உள்ளத்தை தொட்டது .
அவர் பணியாற்றிய தென்னிந்திய வேதாகமக் கல்லூரியின் ஆண்டு விழாக்களில் அருமையான நாடகங்களை முன்னின்று நடப்பித்து , அதன் மூலம் மிஷனெரி அறைகூவலை மாணவர்களுக்கு அளித்து வந்தார் . அந்த நாட்களில் மிஷனெரி ஜெபக் குழு அவர்களுடைய இறையியல் கல்லூரியில் ஒவ்வொரு வாரமும் கூடி வந்தது . Greasy the Robber என்ற ரஷ்ய கவிதையையும் , பண்டித இரமாபாய் போன்ற நாடகங்களையும் மிகவும் திறம்பட இயக்கினார் .
SIBS - ல் நடைபெற்று வந்த மிஷனெரி ஜெபக்குழுவின் தாக்கத்தினால் மாணவர்கள் தாங்கள் பணி புரிந்த திருச்சபைகளில் மிஷனெரி சங்கங்களை ஆரம்பிக்க முடிந்தது . எஸ்தர் அம்மையாரிடம் படித்த அனேக மாணர்கள் கிறிஸ்துவுக்கு வாலிபர் இயக்கம் ( YFC ) , சிறுவர் நற்செய்தி ஐக்கியம் ( CEF ) , மற்றும் ( Bible Centerd Ministry ) ஊழியங்களில் பங்கு பெற்று , வேதாகமத்தை பயிற்றுவிக்கும் பணியினைத் தொடர்ந்தார்கள் . வாலிபர்கள் தங்கள் தாலந்துகளைப் பயன்படுத்தும்படி எஸ்தர் அம்மையார் உற்சாகப்படுத்தினார்கள் . இவர்கள் உற்சாகப்படுத்தியதின் விளைவாக ஒரு மாணவன் Bible Reflection என்ற SIBS செய்தி மடலில் ஒழுங்காக படங்களை வரைந்து வந்தது குறிப்பிடத்தக்கது . விடுமுறை வேதாகமப்பள்ளி இயக்கத்தின் மூலம் சிறுவர்கள் மத்தியில் எஸ்தர் அம்மா அயராமல் உழைத்தார்கள் . இதன் மூலம் அநேகர் தொடப்பட்டு , ஆண்டவருக்குள் வந்தனர் . விடுமுறை வேதாகமப் பள்ளிக்காக மூன்று ஆண்டு பாடத் திட்டத்தை இந்திய சிறுவர்களுக்கு ஏற்றவாறு தயாரித்தார்கள் . பிகினர் , பிரைமரி மற்றும் ஜூனியர் ஆகிய மூன்று வயதினர்களுக்காக அருமையான பாடத்திட்டத்தை இவர்கள் எழுதினார்கள் .
இந்தப் பாடத்திட்டமானது மிஷனெரி தரிசனம் கொடுக்கும் வகையில் எழுதினார்கள் . தொடக்க நிலையிலுள்ள பிகினர் சிறுவர்களுக்குக் கூட மிஷனெரி தரிசனத்தின் முக்கியத்துவம் மிகவும் மென்மையாக புகுத்தப்பட்டுள்ளது . முதல் பகுதியில் ' கடவுளின் அன்பு உனக்கு ' என்றும் , இராண்டாவது பகுதியில் ' உன் அன்பு கடவுளுக்கு ' என்றும் மூன்றாவது பகுதியில் ' போய் உன் நண்பர்களிடம் கடவுள் உன்னை நேசிக்கிறார் என்று சொல் ' என்றும் மூன்று படிகளில் எளிதில் புரிந்து செயல்படுத்தும் வகையில் எஸ்தர் அம்மையார் எழுதியுள்ளார்கள் . நண்பர் சுவிசேஷ ஜெபக்குழு , இந்திய அருட்பணி இயக்கம் போன்ற மிஷனெரி இயக்கங்கள் உருவாக்கப்பட இந்தப் போதனை வித்தாக மாறியது . ஆஸ்பரி செமினரியில் எஸ்தர் படித்தக் கொண்டிருந்த பொழுது மேரி என்ற அறைத் தோழியும் நெருங்கிய நண்பர்களாக இருந்தார்கள் . கல்லூரி வாழ்க்கை முடிந்த பிறகும் இருவரும் நண்பராக இருக்க வேண்டும் என்று அவர்களுக்குள் ஓர் உடன்பாடும் இருந்தது . ஜக்கியம் தொடர வேண்டும் என்றும் விரும்பினார்கள் . சுவிசேஷகர் Rev . எட்வின் லாக்வுட் என்பவரை மேரி மணந்து கொண்டார் . இந்தத் தம்பதிகளுக்கு 4 மகன்கள் பிறந்தார்கள் . கடைசியாக ஒரு பெண் குழந்தையும் பிறந்தது . இந்தக் குழந்தைக்கு தனது சினேகிதி ஞாபகார்த்தமாக எஸ்தர் என்று பெயரிட்டாள் . அவர்கள் இளம் வாலிப வயதில் லூக்கேமியா என்ற இரத்தப் புற்று நோய் வந்து அதிகமாக ஜெபித்தும் கடைசியில் இறந்துபோனாள் .
இந்தக் குழந்தையின் நினைவாக அவளுடைய கதையை வண்ணப்பட கவிதை புத்தகமாக வடிவமைத்தார் எஸ்தர் அம்மையார் . 1960களின் இடைப் பகுதியில் இப்புத்தகம் சுமார் 4000 பிரதிகள் அச்சடிக்கப்பட்டது . இந்தக் கதை சிறுவர்கள் மத்தியில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி , ' எஸ்தர் சிறுமி ' அனேகர் உள்ளங்களில் உயிருடன் இருக்கவும் வழி செய்தது . மேலும் , பெங்களூரிலுள்ள ரிச்மண்ட் டவுண் மெதடிஸ்டு ஆலயத்தில் அவள் நினைவாக ஒரு ஜெப அறையை கட்ட உதவினார் எஸ்தர் அம்மையார் . 1971 - ம் ஆண்டு எஸ்தர் ஃபால்கனர் Rev . Dr . தியோடர் வில்லியம்ஸ் அவர்களை மணம் முடித்தார் . இப்படியாக இவர் எஸ்தர் வில்லியம்ஸ் ஆக மாறினார் . Rev . Dr . தியோடர் வில்லியம்ஸ் இந்திய அருட்பணி இயக்கத்தின் ஸ்தாபகராகவும் , ரிச்மண்ட் டவுன் மெதடிஸ்டு சபைப் போதகராகவும் பணி புரிந்து வந்தார் . இந்த சமயத்தில் எஸ்தர் அம்மையார் அவருக்குப் பக்கபலமாக இருந்தார் . உடன் மிஷனெரிகளின் தாயாக இருந்து செயல்பட்டார் . எஸ்தர் அம்மையாரின் அடக்க ஆராதனையில் Rev . Dr . வில்லியம்ஸ் எஸ்தர் அம்மாவைப் பற்றி ' எனது வலது கரம் போன்றவர் . என் ஆசிரியை , எனது கட்டுரைகள் மற்றும் புத்தகங்கள் பிரசுரத்திற்குச் செல்லுமுன் எஸ்தர் அவர்கள் படித்து திருத்தி அனுப்புவார் ; எந்தக் கட்டுரையும் அவர்கள் படித்து திருத்துவதற்கு முன் அச்சிட அனுப்பப்படவில்லை ' என்று குறிப்பிட்டார்கள் .
ஊழியத்தினிமித்தம் அநேக நாட்கள் வெளியூர் சென்று , திரும்பி வந்து ஓய்வு எடுக்கும்போது தன் கணவரை யாரும் தொந்தரவு செய்யாமல் பார்த்துக் கொள்வார் எஸ்தர் அம்மையார் . உபசரிப்பதிலும் , ஆலோசனை மற்றும் அறிவுரை கூறி ஆற்றுவதிலும் வல்லவர் இவர் . Rev . Dr . வில்லியம்ஸ் மற்றும் அனேகருக்கு வழிகாட்டியாகவும் , உறுதுணையாகவும் இருந்தவர் .
அருமையாக சேலை அணிந்து இந்தியப் பெண்மணிகளுடன் தன்னை ' இணைத்துக் கொண்டார் . மேற்கத்திய நாட்டு உடையை அவர் அணிந்திருந்ததை யாரும் கண்டதில்லை . எல்லா சூழ்நிலைகளுக்கும் தன்னைப் பக்குவப்படுத்திக் கொண்டார் . Sacrifice or Investment என்ற நூலை எழுதி , அதில் ஐ . இ . எம் . வரலாறு மற்றும் 1965 முதல் 1990 வரையிலான அருட்பணி அனுபவங்களை எழுதியுள்ளார்கள் .
எஸ்தர் அம்மையார் தன் வாழ்வில் ஒருபோதும் , குறிப்பாக தனது வாழ்வின் இறுதி நாட்களில் சில மாதங்கள் வேதனையின் வழியாக சென்றபோதும் தேவனுக்கு விரோதமாக முறுமுறுக்கவில்லை . தனது உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையிலும் அவர்கள் ஆண்டவரையும் , அன்புக் கணவரையும் அடையாளம் கண்டு கொள்ள மறக்கவில்லை . இவருடைய கணவரும் , நெருங்கிய உறவினர்களும் , ஐ . இ . எம் . நண்பர்களும் இவர்களை இறுதி வரை அன்புடன் கவனித்து வந்தனர் . இறுதியாக தனது 92 வது வயதை நிறைவு செய்தபின் 2009 , மே28ம் தேதி , மறுமைக்குள் தேவசந்நிதியில் சென்றடைந்தார் இவர் . அடுத்த நாள் இவரது ஞாபகர்த்த ஸ்தோத்திர ஜெபக்கூட்டம் ரிச்மண்ட் டவுண் மெதடிஸ்டு ஆலயத்தில் நடைபெற்றது . அப்பொழுது இவரது உறவினர் திருமதி . ஷாலினி ஹட்சன் இவ்வாறு கூறினார்கள் .
' எஸ்தர் பிரகாசமான நட்சத்திரம் ; இந்த நட்சத்திரம் இந்திய தேசத்தில் உதித்து தன்வாழ்நாட்களில் அநேகருக்கு வெளிச்சமாக வாழ்ந்து அங்கேயே தன் வாழ்வை முடித்தது .
எஸ்தர் அம்மையாரின் வாழ்வும் , ஊழியமும் நமக்கு ஓர் சவால் ஒருமுன்மாதிரி .
இந்தியாவின் பல நற்செய்தி இயக்கங்கள் தோன்ற அடித்தளம் அமைத்த திருமதி . எஸ்தர் வில்லியம்ஸின் சேவையை இந்தியர்கள் ஒருபோதும் மறக்க முடியாது . பல்லாயிரக்கணக்கான சிறுவர்களைக் கிறிஸ்துவிடம் வழிநடத்தும் விடுமுறை வேதாகமப்பள்ளி பாடத்திட்டங்கள் எழுதிய இவ்வம்மையாருக்காகக் கர்த்தரைத் துதிப்போம் !
எல்லாம் இயேசுவுக்கே ! ( All for Thee )
* எந்தன் ஜீவன் இயேசுவே சொந்தமாக ஆளுமே ! ' என்ற புகழ் பெற்ற பாடலை எழுதியது வேறுயாருமல்ல . அற்புதமான வாழ்க்கை வாழ்ந்த பிரான்சஸ் ரிட்லே ஹேவர்கல் என்ற பெண்மணி தான் . ' லிட்டில் குய்க் சில்வர் ' என்று தன் தகப்பனரால் அழைக்கப்பட்ட , தேவதையைப் போன்ற இவள் தன் வாழ்வின் பிந்தைய காலங்களில் தன்னுடைய விலையேறப் பெற்ற தைலக்குப்பியை தன்னுடைய ராஜாவாகிய இயேசுவின் பாதங்களில் உடைத்தாள் !
Rev . ஹென்றி ஹேவர்கல் மற்றும் அவரது மனைவி ஜேன் தம்பதியினருக்கு 6 - வது மகளாக 1836 - ம் ஆண்டு வேர்செஸ்டர்ஷைரில் பிறந்தார் பிரான்ஸஸ் ஹேவர்கல் . இவளது தகப்பனார் இசையில் தேறியவராயிருந்தபடியால் இவளும் இரண்டு வயதிலேயே இசையில் ஆர்வம் கொண்டு , இனிமையாகப் பாட தன் தகப்பனாரிடம் கற்றுக் கொண்டாள் . மூன்று வயதிலேயே புத்தகங்கள் வாசிப்பாள் . மிருகங்கள் மீது இவளுக்கு அலாதி பிரியம் . நான்கு வயதிலேயே வேதாகமத்தைப் படிக்கவும் ஒன்பது வயதிலேயே இவளது சகோதரன் ஃபிராங்க மற்றும் பல நண்பர்களுக்கு நீண்ட கடிதம் எழுதவும் இவள் பழகினாள் . எழு வயதில் கவிதைகள் அடங்கிய புத்தகம் ஒன்று எழுதினாள் ,
பதினோரு வயதாயிருந்த போது நீண்ட காலம் சுகவீனமாயிருந்த இவளது தாயாார் மரித்ததினால் அதிக துக்கத்தில் மூழ்கினாள் . தன் துக்கத்தை மேற்கொள்ள முயற்சித்து . ஓக்ஹாம்டனிலுள்ள மிரியாம் என்ற தன் மூத்த சகோதரியுடன் தங்கினாள் .
" ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு உன்னுடைய இதயத்தை கொடு என்றும் உன் தாலந்துகளை கிறிஸ்துவுக்காக செலவிடு " என்றும் கேட்டுக கொண்ட தனது தாயின் கடைசி வார்த்தைகளை அவள் ஒரு போதும் மறந்து போகவில்லை . பிரான்ஸஸ் தன் இருதயத்திலே தன் தாயைக் காம் துக்கத்தை சுமந்து கொண்டிருந்ததாலதான் தேவனை நேசிக்கவில்லையோ என நினைத்தாள் .
அவள் - படுக்கையிலிருந்து விழிக்கும்போது , ஆண்டவர் மீது தன்நம்பிக்கை இருக்கும்படி ஜெபித்துக் கொண்டிருப்பாள் .
1850 - ம் ஆண்டு ஆகஸ்டு 15 - ம் நாள் பள்ளிக்கு அனுப்பப்பட்டபோது , அங்கே செல்வி குக் என்ற ஆசிரியை இவளுக்கு நெருங்கிய தோழியாக இருந்தாள் . இந்த ஆசிரியையின் மூலம் இயேசு கிறிஸ்துவின் மேல் நம்பிக்கை வைத்து , 1851 - ம் ஆண்டு அதாவது 14 - ம் வயதில் அவரை தன் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டாள் .
பிரான்ஸஸ் தன் பள்ளியை விட்டு வந்தபின் , ஒர ஜெர்மன் தேசத்து போதகர் வீட்டில் சில காலம் தங்கினாள் . அங்கே ஜெர்மானிய புத்தகங்களை வாசிப்பதில் ஆர்வம் கொண்டாள் . “ இவள் அசாதாரணமானவள் என்றும் புத்தகங்களை அதிகம் படித்துக் கற்றுக் கொள்பவள் ' என்றும் இவரைக் குறித்துக் கூறப்பட்டுள்ளது .
18 அல்லது 19 வயதில் பல வகையான காரியங்களைக் குறித்து இவள் எழுதினாள் . 22 வயதாயிருந்தபோது புதிய ஏற்பாடு முழுவதையும் சங்கீதங்களையும் ஏசாயா புத்தகத்தையும் மனப்பாடமாக அறிந்திருந்தாள் . 27 - வது வயதில் கவிதை எழுதுவதில் வெற்றி கண்டாள் . 1870 - ம் ஆண்டில் இவளது அன்புக்குரிய தகப்பனார் மரித்துவிட்டார் .
அதன் பிறகு தெய்வீக வாக்குகள் இவளது வாழ்வில் அதிக உண்மையாயிருந்தை இவள் உணர்ந்தாள் .
1873 - ம் ஆண்டு “ எல்லாம் இயேசுவுக்கே " என்ற சிறிய புத்தகத்தை படித்தபோதுதான் ஆவிக்குரிய அனுபவம் இவருக்குள் பிரகாசிக்க ஆரம்பித்தது . அதிலிருந்து உண்மையான அர்ப்பணிப்பின் ஆசீர்வாதத்தையும் பிரித்தெடுக்கப்பட்ட வாழ்க்கையின் அர்த்தத்தையும் புரிந்து கொண்டாள் . தான் எழுதின சில பாடல்களுக்கு - இசையமைக்கும்படி பிரபல இசையமைப்பாளர் ஃபெர்டினண்ட் ஹில்லர் என்பவரிடம் கொடுத்தாள் .
இவளுடைய பாடல்களின் சிறப்பை உணர்ந்த அவர் முறையாக பயிற்சி பெற்றுக் கொள்ளும்படி பிரான்ஸஸை உற்சாகப்படுத்தினார் . இவளுக்கு இனிமையான குரல் வளம் இருந்ததால் இசை விழாக்களில் தனிப்பாடல் பாட பல முறை அழைக்கப்பட்டாள் . மக்களுக்கு வாய்ப்பாடல் பாடம் கற்றுக் கொடுத்தாள் .
மேலும் , கவிதை எழுதுதல் , இசை இவற்றுடன் பாடுவதையும் தொடர்ந்து கற்றுக் கொண்டு வந்தாள் . " எந்தன் ஜீவன் இயேசுவே சொந்தமாக ஆளுமே " என்ற பாடல் ஓர் அனுபவத்தின் மூலம் பிறந்தது .
ஒருமுறை பிரான்ஸஸ் தன் சினேகிதர்களுடைய வீட்டிற்குச் சென்றபோது , அந்த வீட்டில் பத்து பேர் இருந்தனர் . அநேகர் இவர்களுக்காக ஜெபித்திருந்தும் அவர்கள் கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளவில்லை . ஒரு சிலர் கிறிஸ்தவர்களாக இருந்தனர் . ஆனால் அவர்கள் தங்கள் இரட்சிப்பில் சந்தோஷமாக இல்லை . அந்த வீட்டிலுள்ளவர்கள் எல்லோரையும் தனக்கு கொடுக்க வேண்டுமென பிரான்ஸஸ் ஆண்டவரிடம் ஜெபித்தாள் .
அவர்களை விட்டு வருவதற்கு முன் , அவர்கள் ஒவ்வொருவரும் ஆவிக்குரிய நன்மையைப் பெற்றிருந்தனர் . " உமக்காக என் ஜீவனைத் தந்து விட்டேன் " ( I gave my life to Thee ) என்ற பாடல் இவர் எழுதிய மற்றொரு பிரபலமான பாடல் . ஒரு சுவரில் இயேசு கிறிஸ்துவின் சித்திரத்தின் கீழே " உமக்காக என் ஜீவனைத் தந்து விட்டேன் " என்ற வாசகத்தைக் கண்டபோது இந்தப் பாடலை இவள் எழுதினாள் . இந்த பாடல் வரிகள் இவளுக்கு திருப்தியளிக்காமல் போகவே , அதை அடுப்பில் போட்டுவிட்டாள் . அந்தக் காகிதம் எரியாமற் போகவே , அதை மீண்டும் எடுத்து , தன் தகப்பனாரிடம் காட்டினாள் . தகப்பனார் இதைப்படித்துவிட்டு , இந்த வார்த்தைகளை தேவன் பயன்படுத்துவார் என்று கூறினார் . பின்னர் அந்தப் பாடலுக்கு பிலிப் P . பிலிஸ் என்பவரால் இசையமைக்கப்பட்டது .
இன்று நமது திருச்சபைகளிலே அதிகமாகப் பாடப்படும் பாடலாக இது விளங்குகிறது . பிரான்ஸஸின் தந்தை அவளுக்கு அநேக காரியங்களைக் கற்றுத் தந்தார் .
விஷேசமாக , அவளுடைய பணத்தை ஆண்டவருக்குக் கொடுக்க வேண்டுமென கற்றுத் தந்தார் . தான் எழுதிய பாடல்களுக்குப் பணம் பெறும்போதெல்லாம் அதை ஆண்டவருக்கென்று கொடுத்தாள் . தேவனிடத்தில் காத்திருக்கும் போதுதான் பாடல்கள் எழுதுவதற்கான உள்ளுணர்வைப் பெறுவதாக அவள் எப்பொழுதும் கூறுவாள் .
இசையை முறையாகக் கற்றுக் கொண்டிருக்கும்போதே பாடகர் குழுக்களையும் இவள் வழிநடத்தி வந்தாள் . 1873 - ம் ஆண்டு இவர் அதிக சுகவீனமடைந்ததினால் ஓய்வெடுக்கும்படி சுவிட்சர்லாந்து செல்ல நேரிட்டது .
இவள் சுகமடைந்து திரும்பி வந்தபோது இவளுக்குத் தெரியாத எண்ணற்ற மக்களிடமிருந்து கடிதங்கள் வந்து குவிந்திருப்பதைக் கண்டாள் . துக்கம் , வருத்தம் மற்றும் இழப்பின்போது இவளது பாடல்கள் இதயத்தைத் தொட்டன என இக்கடிதங்க ளில் எழுதியிருந்தது . " Tam Trusting on Thee Lord Jesus " , " I gave my life for Thee " , " Tell it out among theNations " , " Who is on Lord ' s side ? " , " Takemy life and let it be " ஆகியவை பிரான்ஸஸ் எழுதிய பிரபலமான பாடல்கள் .
பல ஆயிரங்களுக்கும் அதிகமான பாடல்கள் எழுதின ஃபேனி கிராஸ்பி அவர்களை பிரான்ஸஸ் நேரில் சந்திக்காதிருந்தாலும் இவர்கள் ஒருவரையொருவர் பாராட்டி , ஒருவர் பாடலை இன்னொருவர் விரும்பினர் .
1874 - ம் ஆண்டு அமெரிக்காவில் இவளுடைய பாடல்களை வெளியிட்டவரின் வியாபாரம் சரிந்ததினால் , இவளது மார்கெட் சரிந்து இவளது எழுத்து மற்றும் பாடல பணிக்கு அமெரிக்காவின் கதவு அடைக்கப்பட்டது போன்றிருந்தது . இருப்பினும் இவள் சொன்னது : “
அமெரிக்கா செல்லக் கூடிய தருணத்தை இழந்தாலும் அதைக் குறித்து நான் வருத்தப்படவில்லை ; ஆண்டவர் சித்தம் நடக்கட்டும் " இது ஒரு பெருமூச்சாக அல்ல : மகிழ்ச்சிப் பாடலாகவே வந்தது என எழுதியிருந்தாள் .
பிரான்சிஸ் எப்போதும் சுகவீனமாகவே காணப்பட்டாள் . 42 வயதானபோது அவள் தன் வாழ்வின் முடிவை நெருங்கிவிட்டாள் என மருத்துவர் அவளிடம் கூறினர் . இதற்காக அவள் மகிழ்ச்சியடைந்தாள் .
1879 மே 21 - ம் நாள் மழையில் அதிகமாக நனைந்து வீட்டுக்குத் திரும்பிய பிரான்ஸஸுக்குக் காய்ச்சல் வந்து கஷ்டப்பட்டாள் . அந்த நேரத்தில் ஆண்டவரை நேரடியாக பார்ப்பது போல தொடர்ந்து மேலே பார்த்துக் கொண்டிருந்தாள் . அவள் பாட முயற்சி செய்தாள் ஆனால் பாட முடியவில்லை . அவளுடைய சகோதரன் கர்த்தருடைய கரத்தில் அவள் ஆவியை ஒப்புவித்தபோது அவள் மரித்துவிட்டாள் .
பிரான்ஸஸ்தன் பணியை நிறைவேற்றிய பின்ராஜாதிராஜாதன் மகளைத் தன் வீட்டிற்கு அழைத்துக் கொண்டார் . தன் ஆவி , ஆத்துமா . உடல் , பொருள் அனைத்தையும் கிறிஸ்துவுக்கென்று அர்ப்பணித்திருந்த பெண்மணி பிரான்ஸஸ் ஹேவர்கல்லின் தெய்வீகப் பாடல்கள் நம் உள்ளங்களைக் கொழுந்துவிட்டு எரியச் செய்யவதுடன் , நம் தாலந்துகளைக் கர்த்தருக்கென்று செலவிட நம்மை ஊக்குவிக்கின்றன !
டாக்டர். ஜான் ஸ்கட்டர் (சீனியர்)
உலகத்தின் பல மூலைகளுக்கும் கிறிஸ்துவின் அன்பை எடுத்து சென்றவராவர். இவரது மரபு வழியில் வந்த அடுத்த நான்கு தலைமுறையில் 42 மிஷனரிகள் எழும்பி அனைவரும் சேர்ந்து 1100க்கும் அதிகமான வருடங்கள் இறைப்பணியும் மருத்துவப்பணியும் செய்து இயேசுவின் அன்பை உலகத்திற்கு காண்பித்துள்ளனர்.
டாக்டர்.ஜான் ஸ்கட்டரின் (சீனியர்) ஏழாவது மகனாகிய “ஜான் ஸ்கட்டர் II” –க்கு பிறந்தவர் தான் வேலூரில் உள்ள கிறிஸ்டியன் மெடிக்கல் காலேஜ் – ஐ நிறுவிய டாக்டர். ஐடா ஸ்கட்டர்.
தமிழ் மக்களுக்கு டாக்டர்.ஜான் ஸ்கட்டரின் குடும்பத்தினர் ஆற்றிய அருட்பணியால் திண்டிவனம், வேலூர், இராணிப்பேட்டை, குடியாத்தம் ஆகிய இடங்களில் அநேக மக்கள் கிறிஸ்த்துவை ஏற்றுக்கொண்டனர்.
காலரா, பிளேக். மஞ்சள் காமாலை போன்ற உயரி கொல்லி நோயினால் மரணத்தை நோக்கி ஓடிகொண்டிருந்த தமிழ் மக்களுக்கு ஸ்கட்டர் குடும்பத்தினர் செய்த மருத்துவப்பணிகள் இன்றளவும் தமிழ்நாட்டின் வேலூரில் தொடர்ந்து வருகிறது. இளமையும், கர்த்தரின் அழைப்பும் டாக்டர்.ஜான் ஸ்கட்டர் அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி மாகாணத்தில் உள்ள ப்ரீஹோல்ட் (FREEHOLD) என்ற ஊரில் ஜோசப் (வக்கீல்) – மரியா ஸ்கட்டர் என்ற தம்பதியினருக்கு 1793-ம் வருடம் செப்டம்பர் 3 தேதி செல்வ மகனாகய் பிறந்தார்.
New York College of Physicians and Surgeons கல்லூரியில் 1813-ம் வருடம் தமது மருத்துவ படிப்பை முடித்து தனது மருத்துவ வாழ்க்கைப் பயணத்தை தொடங்கினார். 1813-ம் வருடம் ஹாரியட் என்ற பெண்ணை திருமணம் செய்தார். அந்த நாட்களில் அதிகளவு மருத்துவர்கள் இல்லாத காரணத்தினால் மருத்துவர்களுக்கு நல்ல வரவேற்ப்பு இருந்தது. அதுமட்டுமில்லாமல் ஜான் ஸ்கட்டரின் திறமையும் கனிவோடு நோயாளிகளை கவனிக்கும் திறமையும் அநேகரை கவர்ந்ததால்
வருடத்திற்கு 2000$ சம்பாதிக்கும் அளவுக்கு மிகப்பெரிய மருத்துவரானார். ஐந்து வருடங்கள் அமெரிக்காவிலேயே மருத்துவராக பணி செய்ததால் செல்வமும் புகழும் டாக்டர்.ஜான் ஸ்கட்டருக்கு குவிய தொடங்கியது.
ஆயினும் கடவுள் பக்தி மிகுந்தவராய் Reformed Church க்கு சென்று கொண்டிருந்தார். அந்த நாட்களில் அநேகரை மனம் திரும்பதலுக்கு நேராய் நடத்தினார்.
1819-ம் வருடத்தில் ஒருநாள் நோயாளியை சந்திக்க ஒருவரின் வீட்டிற்கு அவர் சென்றிருந்த பொழுது, அங்கு வரவேற்ப்பறையிலிருந்த ஒரு துண்டு தாளின் (Pamphlet) செய்தியாகிய "அறுபது கோடி மக்களின் மனமாற்றத்திற்கு சபைகள் என்ன செய்ய வேண்டும்" என்பதை கண்டார். அதன்மூலம் இந்தியா மற்றும் சிலோனின் மக்களுக்கு தேவைப்பட்ட மருத்துவ பணியை குறித்து அறிந்தார்.
அந்த கணமே நமது அருமை இரட்சகர் இயேசுவின் குரலையும் கேட்டார்: அது என்னவெனில் “என் பிதா அனுப்பினதைப்போல நான் உன்னை அனுப்புகிறேன்”.அதற்க்கு ஜான் ஸ்கட்டர், “அனுப்பும் ஆண்டவரே நான் போகிறேன்’ என்றார்.
இதற்கு ஜான் ஸ்கட்டரின் தகப்பனார் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தார். செல்வ மைந்தன் உலக பெருவாழ்வை நீத்துவிட்டு, வறுமையை உவந்தேற்றுகொண்டு, கடல் கடந்து கண்கானா நாட்டுக்கு சென்று, பசியால் வாடி வதக்கி, கொடிய வெயிலின் கோரப்பிடியில் நலிந்தும் மெலிந்தும் மிஷனரியாக பணியாற்றுவதா? கூடவே கூடாது என ஜான் ஸ்கட்டரின் கையை பிடித்து கெஞ்சி மன்றாடினார் தகப்பன்.
ஆனால் ஜான் ஸ்கட்டரோ தமது தப்பனின் கைகளை உதறிவிட்டு ஆண்டவர் இயேசுவின் கரங்களை பற்றிக்கொண்டார். தம் கனவரின் தீர்மானத்தை மனமகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு தமது இரண்டு வயது பாலகனுடன் இலங்கையை நோக்கி புறப்பட்டார்
ஜான் ஸ்கட்டரின் மனைவி ஹாரியட் ஸ்கட்டர். ஜுன் 8, 1819-ம் வருடம், 26 வயது நிரம்பிய ஜான் ஸ்கட்டர் தனது மனைவி ஹாரியட் ஸ்கட்டர் மற்றும் தனது இரண்டு வயது மகள் மரியாளுடன் இந்துஸ் கப்பலில் ஏறினார்.
1819-ம் வருடம் கல்கத்தாவில் வந்து சேர்ந்தனர் ஸ்கட்டர் தம்பதியினர். ஆறுமாத கால நெடும் கடல் பயணத்தில் கப்பலில் பணி செய்தவர்களுக்கு நற்செய்தியை அறிவித்தார் ஜான் ஸ்கட்டர்.
பின்னர் கல்கத்தாவில் மிஷனரியாக ஊழியம் செய்துகொண்டிருந்த வேதமொழிபெயர்ப்பாளரும் மிஷனரிகளின் தந்தை எனவும் அழைக்கப்பட்ட “வில்லியம் கேரி-யை” செராம்பூரில் சந்தித்தார்.
அதன் பின்னர் அவர் வாழ்வில் வேதனைகள் சூலத்தொடங்கியது. தனது இரண்டு வயது மகள் மரியா கேத்தரின் வயற்று போக்கினால் அக்டோபர்25-ம் தேதி மரித்தாள். இந்த சூழ்நிலையில் ஜான் ஸ்கட்டர் இவ்வாறு எழுதினார், “கடினமான சோதனை தான் என்றாலும் முறுமுறுப்பதில்லை. இயற்கையான சோகங்கள் வர வேண்டும். ஒருவேளை நாங்கள் திரும்பி சென்றால் எனது பெற்றோர்கள் எம்மை மன்னித்தது ஏற்றுக்கொள்ளலாம்.
இல்லை. திருச்சபையின் தலையாகிய கிறிஸ்து என்னை அமெரிக்காவிலிருந்து அழைத்து இந்த மக்கள் மத்தியில் வாழ வைப்பதற்காக நன்றி சொல்கிறேன். அழிந்து போகும் ஆத்துமாவை ஆண்டவர் இயேசுவிடம் சேர்க்கும் பணியை தகுதியற்ற அடியவனிடம் இறைவன் தந்துள்ளார்” என்றார்.
பின்னர் அதே வருடம் டிசம்பர் மாதம் ஸ்கட்டர் தம்பதியினர் சிலோன் வந்து சேர்ந்தனர். யாழ்ப்பாணம் பகுதியில் மருத்துவப்பணி செய்ய மிஷன் மூலம் நியமிக்கப்பட்டனர் . யாழ்ப்பாணத்தில் ஸ்கட்டர் தம்பதியினர், 1819-1836 சிலோனில் புத்தர்கள் அதிகமாக இருந்தாலும் யாழ்பானத்தில் அதிக அளவு இந்து மக்கள் காணப்பட்டனர்.
உற்சாகமாக மக்களுக்கு மருத்துவ பணியை துவங்கிய ஸ்கட்டர் தம்பதியினருக்கு மீண்டும் ஒரு சோதனை காத்திருந்தது. 1820-ம் வருடம் பிப்ரவரி மாதம் ஸ்கட்டர் தம்பதியினருக்கு இரண்டாவது ஒரு ஆண் குழந்தை பிறந்து ஒரு வாரத்திற்குள்ளாகவே பிப்ரவரி 25 ல் மரித்துப்போனது.
ஆனாலும் ஸ்கட்டர் தம்பதியினர் தங்களுடைய மிஷனரி அழைப்பில் உறுதியாய் நின்றனர். அதற்கு பின்னர் இத்தம்பதியினருக்கு எட்டு ஆண் குழந்தைகளும் இரண்டு பெண் குழந்தைகளும் பிறந்தனர். எட்டு ஆண்களில் ஒருவரான சாமுவேல் ஸ்கட்டர் இறையியல் காலூரியில் படிக்கும் பொழுது நீரில் மூழ்கி இறந்துவிட்டார்.
மற்ற ஏழு மகன்களும், இரண்டு மகள்களும் தங்களது படிப்பை அமெரிக்காவில் முடித்து பின்னர் தென்இந்தியாவில் மருத்துவ மிஷனரிகளாக இறைப்பணியாற்றினர்.
1820-ம் வருடம் யாழ்ப்பாணத்தில் உள்ள பண்டத்தரிப்பு என்னுமிடத்தில் மிஷன் ஸ்டேஷன், மருத்துவனை மற்றும் பள்ளியை நிறுவினார். பண்டத்தரிப்பு என்னுமிடத்தில் அவைகள் தங்குவதற்கு ஓலையால் வேயப்பட்ட வீடு கொடுக்கப்பட்டது. அமெரிக்காவின் மிகப்பெரிய மருத்துவர் ஜான் ஸ்கட்டர் என்பதை மறந்து கிறிஸ்துவிற்க்காக பாடுகளை சகித்து ஊழியத்தை அனுதினமும் செய்து வந்தார். ஜான் ஸ்கட்டர் தான் அமெரிக்காவில் இருந்து வெளிதேசத்திற்கு முதல் மருத்தவ மிஷனரியாக வந்தவர்.
அவரது கொள்ள்கை என்னவென்றால், மருந்துகள் மூலம் ஒருவரது உடலைக் காப்பாற்றி பின்னர் ஆத்துமாவை காக்க வல்ல இரட்சகரை அறிவிப்பது தான்”.பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் காலரா, மலேரியா, பிளேக், மஞ்சள் காமாலை போன்ற உயிர் கொல்லி நோய்கள் அதிகமாய் பரவின. அந்த நோய்களிலிருந்து அநேகரை காப்பாற்றி இரட்சகரை அறிவித்தனர்
ஸ்கட்டர் தம்பதியினர். மருத்துவமனையும் பள்ளியும் மட்டுமின்றி திருச்சபைகளையும் நிறுவினார் ஜான் ஸ்கட்டர். தொடர்ந்து 19 வருடங்கள் யாழ்ப்பாணத்தில் மருத்துவ மிஷனரியாக பணியாற்றி இயேசுவின் நற்செய்தியை அநேக மாக்களுக்கு அறிவித்தனர்.
1821-ம் ஜான் ஸ்கட்டர் தமிழ் மொழியை நன்கு கற்று அநேகருக்கு தமிழில் நற்செய்தியை அறிவிக்க தொடங்கினார். அனுதினமும் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளையும் கவனித்து வந்தார். அந்நாட்களில் அச்சு இயந்திரம் அதிகளவு இல்லாத காரணத்தினால் பனை ஓலையில் மைகொண்டு இயேசுவின் அன்பை எளிதி அநேக பகுதிகளுக்கு சென்று கொடுத்து வருவார்.
அனுதினமும் காலையில் குறையாது 60 நோயாளிகள் அவரது மருத்துவமனைக்கு வருவார்கள். அவர்களுக்கு சிகிச்சை அளித்த பின்பு கைகளால் ஓலையில் எழுதிய சுவிஷேச நற்செதியை அநேக மக்களுக்கு கொடுப்பார்.
அவரது மருத்துவ மற்றும் ஊழியத்தின் மத்தியில் 23 பள்ளிகளை யாழ்பாணம் பகுதியில் நிறுவினார். அதுமட்டுமில்லாமல் 16 ஆண் குழந்தைகளையும் 3 பெண் குழந்தைகளையும் தத்தெடுத்து வளர்த்து வந்தார்.
இந்தியாவில் ஸ்கட்டர் தம்பதியினர்
1836-ம் வருடம் மெட்ராஸுக்கு இடம் மாற்றப்பட்ட ஜான் ஸ்கட்டர் தமது நண்பர் வின்ஸ்லோ உடன் இணைந்து பிரிண்டிங் பிரஸ் ஒன்றை நிறுவி சுவிஷேச துண்டு பிரதிகளை (Pamphlet) தமிழில் அச்சிட்டு வெளியிடும் ஊழியத்தை தொடங்கினார். தான் எப்படி ஒரு சிறிய துண்டுபிரதி மூலமாய் இரட்சிப்பின் அனுபவத்தை பெற்றோமோ அதேபோல அநேக மக்களுக்கு துண்டு பிரதி மூலம் சுவிசேஷம் அறிவிக்கப்பட வேண்டுமென விரும்பினார். துண்டு பிரதிகள் மூலம் சுவிசேஷம் அறிவிக்கும் முறையை ஆசியா கண்டத்திற்குள் அறிமுக படுத்தி அதன் மூலம் அநேக ஆத்துமாக்களை கிறிஸ்த்துவுக்குள் அழைத்து வந்தார்.
சென்னையில் உள்ள சிந்தாதிரிப்பேட்டையில் தங்கி ஆறு வருடம் மருத்துவ ஊழியத்தொடு துண்டு பிரதி ஊழியத்தையும் செய்தார். இந்தியா முழுவதிலும் துண்டு சுவிஷேச துண்டு பிரதிகளை மக்களிடம் கொடுக்க வேண்டுமென்று சொல்லி அநேக மொழிகளில் அநேக தலைப்புகளில் சுவிஷேச பிரதியை அச்சிட்டார் ஜான் ஸ்கட்டர். மெட்ராஸில் இருந்து காஞ்சிபுரம் மற்றும் வாலஜாவிற்கு அடிக்கடி பயணம் செய்து ஊழியம் செய்து வந்தார்.
11 மணி நேரம் வெயிலில் நின்று பிரசங்கம் செய்து துண்டு பிரதிகளை கொடுத்து ஊழியம் செய்ததால் டாக்டர். ஜான் ஸ்கட்டரின் உடல்நிலை பாதிக்கப்பட்டது.
1842-ம் வருடம் உடல் சுகவீனம் காரணமாக அமெரிக்கா சென்று குணமடைந்த பின்பு 1846-ம் வருடம் மீண்டும் இந்தியா வந்து மதுரையில் தங்கி இரண்டு வருடம் மருத்துவ பணியோடு சுவிஷேச பணியையும் செய்தார்.
சபைகளில் நிலவி வந்த ஜாதி பார்க்கும் முறைக்கு எதிராக போரிட்டு கிறிஸ்த்துவின் சபையில் அணைவரும் சமம் என்ற கொள்கையை நிலை நாட்டினார் ஜான் ஸ்கட்டர்.
ஸ்கட்டர் தம்பதியினரின் இறுதி நாட்கள் 1849-ம் வருடம் மீண்டும் மெட்ராஸில் மருத்துவ பணியோடு ஊழியம் செய்ய நியமிக்கப்பட்டார். அந்நாட்களில் ஹாரியட் ஸ்கட்டரின் உடல் நிலை பாதிக்கப்பட்டு 1849-ம் வருடம் நவம்பர் 29-ம் தேதி தமது 54-ம் வயதில் இறைவனிடம் சேர்ந்தார்.
மரிப்பத்தர்க்கு முன்னமாக ஹாரியட் அம்மையார் கண்களை துறந்து “மகிமையான பரலோகம், மகிமையான இரட்சிப்பு” என்று சொல்லி கண்களை மூடியுள்ளார். ஜான் ஸ்கட்டரை இது மிகவும் பாதித்தாலும் தமக்கு நியமிக்கப்பட்ட மருத்துவ பணியை செய்து, சுவிஷேச துண்டு பிரதிகளை மக்களிடம் கொடுத்து 1854-ம் வருடம் வரை இறைப்பணி செய்து வந்தார்.
ஒரு நாளைக்கு இரண்டு பிரசங்கள் செய்து வந்த ஜான் ஸ்கட்டர், மனைவி இறந்த பிறகு வேதனையின் மத்தியிலும் ஒரு நாளைக்கு மூன்று பிரசங்கள் வரை செய்து வந்தார்.
1855-ம் வருடம் தென்அமெரிக்காவிற்கு மருத்துவ மிஷனரியாக சென்றார். உற்சாகமாய் ஊழியம் செய்த ஜான் ஸ்கட்டர், 1855-ம் வருடம் ஜனவரி மாதம் 13-ம் தேதி இரவு நித்திரையில் இறைவனடியில் சேர்ந்தார். அவரது உடல் மெட்ராஸுக்கு கொண்டுவரப்பட்டு தமது மனைவியின் கல்லறை அருகிலே புதைத்து பின்னர் ராணிபேட்டையில் அவர்களது தோட்டத்தில் கோதுமை மணியாய் விதைக்கப்பட்டது.
திருச்சபையானது பிரித்தானியர் ஆட்சி காலத்தில் அதாவது 1814 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29 ஆம் திகதி அன்று ஆழமான தைரியமான அர்ப்பணிப்புடனும், இலங்கை மண்ணில் இயேசுவின் அன்பை எடுத்து சொல்லவும் ஆரம்பிக்கப்பட்டது. இதற்கு கடவுளின் கிருபை மிஷனரிகள் மேல் பெரிதாக இருந்த படியால் அவர்களால் இது இயலுமான காரியமாய் ஆயிற்று.
வில்லியம் கேரி வேத புத்தகத்தைப் பல மொழிகளில் மொழிபெயர்த்து , உலகின் மூன்றில் ஒரு பகுதிக்கு கொடுத்து உதவியவர் . " இன்றைய மிஷனெரி இயக்கங்களின் தந்தை " என்ற நிலையை அடைந்தவர்
வில்லியம் கேரி என்று அவரை அவரது சிறு வீட்டில் செருப்பு செப்பனிடும் வாலிபனாகக் கண்டவர்கள் எவரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் .
*சிறுவனான கேரி :
வில்லியம் கேரி சிறுவனாக இருக்கும் போதே தன்னுடைய விடாமுயற்சிக்கு ஓர் எடுத்துக்காட்டாக விளங்கினார் . ஒரு தீரச்செயலைச் செய்ய ஆரம்பித்து அதை விடாது தொடர்ந்து செய்து முடிப்பார் . தீரச்செயல்களில் மிகவும் விருப்பம் கொண்டவர் . ஒருமுறை ஒரு மரத்தின் உச்சியில் இருக்கும் குருவிக்கூட்டை ஆராய்ந்து பார்ப்பதற்காக அவர் மரத்தில் ஏறியபோது அவர் வழுக்கி கீழே விழுந்தார் . கரம் , கால்களில் அடிபட்ட அவருக்குக் கட்டுகள் போட்டு அவரை அவரது தாயார் படுக்கையிலே படுக்க வைத்தார் . ஆனால் சிறுவனான கேரியினாலே தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை . அவர் மறுபடியும் சென்று மரத்தில் ஏறி அந்தக் குருவியின் கூட்டைக் கையிலே கொண்டு வருவதை அவர்தாயார் கண்டார் .
வில்லியம் விளையாட்டுப் போட்டிகளிலும் , பிரயாணம் செய்வதிலும் அதிக விருப்பம் கொண்டவர் . புதிய நிலப்பகுதிகளைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியாளரான கொலம்பஸ் என்பவரைத் தன் வாழ்க்கையின் இலட்சியத் தலைவராகக் கொண்டு அவரைப்பற்றி கேரி புகழ்ந்து பேசுவது உண்டு . ஆகவே , அவருடன் பழகும் சிறுவர்கள் அவருக்குக் கொலம்பஸ் என்று பட்டப்பெயர் இட்டு அழைத்தனர் .
இயற்கையை மிகவும் நேசிக்கும் சிறுவனாக இருந்தார் . ஆங்காங்கே தான் காணும் பறவைகள் , பூச்சிகள் , செடிகள் முதலியவற்றை எடுத்து அவைகளை ஆராய்ந்து பார்ப்பதும் உண்டு . ஆனால் அவர் தீரச்செயல்களையும் , பிரயாணங்களையும் குறித்த புத்தகங்களை மிகவும் விரும்பிப் படிப்பவராக இருந்தார் . பல மொழிகளைப் படித்துக் கற்றுக்கொள்வதிலே விருப்பமும் அக்கறையும் காட்டுபவராக கேரி விளங்கினார் . சிறுவனாக இருக்கும்போதே லத்தீன் மொழியை அவர் படிக்க ஆரம்பித்துவிட்டார் .
செருப்புத்தைக்கும் செம்மான் கேரி
பன்னிரண்டு வயது சிறுவனாய் இருக்கும்போது கேரி தன் பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டார் . அவர் பதினான்கு வயதாக இருக்கும்போது அவருடைய தந்தையார் செருப்புத் தைக்கும் செம்மான் ஒருவருக்கு உதவியாளனாக கேரியை அமர்த்தினார் . அந்த நாட்களிலே கேரிக்கு மார்க்க சம்பந்தமான காரியங்களில் சிறிதும் விருப்பம் இல்லாதிருந்தது .
அவர் ஓர் ஆலயத்தின் பாடகர் குழுவிலே சேர்ந்து பாடல்களைப் பாடினார் . ஒரு சிறந்த கிறிஸ்தவ குடும்பத்திலே அவர் பிறந்திருந்தார் என்பதெல்லாம் உண்மைதான் , ஆனால் தனது பாடகர் நண்பர்களுடன் சேர்ந்து பல சமயம் தவறாக ஆணையிடுவது , பொய் சொல்வது , கீழ்தரமான கதைகளைப்பேசுவது இவைகளில் அவர் விருப்பம் காட்டினார் .
வார்டு என்னும் வாலிபன் அவரோடு சக பயிற்சியாளனாக செருப்புக் கடையில் பயிற்சி பெற்று வந்தான் . வார்டின் ஆழமான அசைக்க முடியாத கிறிஸ்தவ ஜீவியத்தின் நற்சாட்சி வில்லியம் கேரியினைத் தொட்டது . வில்லியம் அவ்வப்போது ஜெபிக்க ஆரம்பித்தார் . ஒரு முறை வில்லியம் தன்னுடைய எஜமானனின் நாணயம் ஒன்றினை எடுத்துச் செலவழித்துவிட்டு அதற்குப் பதிலாக ஓர் உடைந்த செல்லாத நாணயத்தை வைத்துவிட்டார் . ஆனால் அவருடைய எஜமான் அதைக் கண்டு பிடித்து எல்லாருக்கும் முன்பாக அவரை அவமானப்படுத்தி விட்டார் . இந்த அனுபவம் கேரி தன் இதயத்தை ஆண்டவருக்கு ஒப்புக்கொடுக்க நடத்தியது .
வில்லியம் பாவத்தைக் குறித்து ஆழமாக உணர்த்தப் பட்டார் . இதை அறிந்த அவருடைய போதகர் அவரை அழைத்து இயேசு கிறிஸ்துவைத் தன்வாழ்க்கையிலே ஏற்றுக்கொள்வதின் மூலமாக மட்டுமே அவர் பிள்ளையாக முடியும் என்பதை அவருக்கு விவரித்தார் . அதுமட்டுமல்ல , நல்ல பிள்ளையாக வாழ்க்கை நடத்துவதோ அல்லது ஒழுங்காக ஆலயத்திற்கு செல்வதோ ஒருவனை கிறிஸ்துவின் பிள்ளையாக மாற்றாது என்பதையும் அவருக்குத் தெளிவாக விவரித்தார் . இவைகள் எல்லாவற்றையும் கேட்க , கேட்க அவர் மிகவும் ஆழமாகத் தொடப்பட்டபடியினாலே மிகவும் அதிகமாகக் கதறி அழுதார் .
மனவேதனை அடைந்த அவர் முழங்காலில் நின்று , " கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே , என்னுடைய உள்ளத்தில் வந்து என்னுடைய பாவங்கள் எல்லாவற்றையும் கழுவியருளும் , இப்பொழுது நான் உம்மை ஏற்றுக் கொள்ள ஆயத்தமாக இருக்கிறேன் " என்று கூறினார் . அப்போதே இயேசு கிறிஸ்து அவருடைய இருதயத்திலே வந்தார் . அவர் புது சிருஷ்டியாக மாற்றப்பட்டார்.
வில்லியம் புதிய செருப்புகளைத் தைப்பதும் பழையவைகளைப் பழுது பார்ப்பதுமான வேலையோடு நில்லாமல் இங்கிலாந்து தேசத்தில் உள்ள மோல்டன் என்னும் பட்டணத்தின் ஒரு சிற்றாலயத்தில் போதகராகப் பணி ஏற்றார் . " இயேசு கிறிஸ்துவின் இராஜ்யத்தை விரிவடையச் செய்வதே என்னுடைய முதன்மையான பணி " என்றும் , " நான் செருப்புகளை செப்பனிடுவதும் , செருப்புகளைத் தைப்பதும் என்னுடைய செலவின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு மட்டுமே " என்றும் அவர் அடிக்கடிக் கூறிக்கொள்வதுண்டு .
அவர் செருப்புகளைத் தைத்துக்கொண்டிருக்கும்போது அவர் பக்கத்திலே ஒரு புத்தகத்தை வைத்து வாசித்துக் கொண்டிருப்பார் . இவ்விதமாக அவர் கிரேக்கு , இலத்தீன் மொழிகளைக் கற்றார் . இது மட்டுமல்லாமல் அவர் எபிரெயம் , பிரெஞ்சு , இத்தாலியம் , டச்சு ஆகிய மொழிகளையும் கற்றுக்கொண்டே இருந்தார் . எபிரெய மொழியைக் கற்பதற்காக 15 கிலோ மீட்டர் தூரம் நடக்கவும் முன்வந்தார் .
போதகரான வில்லியம் :
கேப்டன் குக் என்பவருடைய கடற்பயணங்கள் என்று சொல்லப்படும் ஒரு புத்தகத்தை வில்லியம் கேரி படித்ததன் மூலமாக தென்கடல் தீவுகளில் அநேகமாயிரம் மக்களுக்கு நற்செய்தி அறிவிக்கப்பட வேண்டிய அவசியத்தை அந்நாட்களில் உணர்ந்தார் . தானே ஒரு பெரிய உலகப் படத்தை வரைந்து , அதைச் செருப்புத் தைக்கும் தன்னுடைய பட்டறையின் சுவற்றிலே மாட்டி வைத்து , அதில் உள்ள ஒவ்வொரு தேசத்திலும் உள்ள மக்கள் தொகையையும் அந்த மக்களைப் பற்றிய குறிப்புகளையும் அதிலே குறித்து வைத்திருந்தார் . ஒவ்வொரு நாள் காலையிலும் அவர் இத்தேசப் படத்திற்கு முன்பாக முழங்கால்படியிட்டு , அதிலேஉள்ள கிறிஸ்து அல்லாத தேசங்களின் மக்களுக்காக ஜெபிக்க ஆரம்பித்தார் .
இவ்விதமாக ஜெபிப்பதன் மூலம் ஆண்டவருடைய நற்செய்தியைக் கேட்காத மக்களுக்கு நற்செய்தியை எடுத்துச் செல்ல வேண்டு மென்ற ஒரு நிரந்தரமான பாரம் அவருடைய உள்ளத்திலே எழுந்தது . இயேசு கிறிஸ்துவைப் பற்றி அறியாத மக்களுக்காக ஜெபிக்க ஒரு ஜெபக்குழுவை கேரி அமைத்தார் . மேலும் மிஷனெரி பணிகளுக்கான தேவைகள் பற்றி தன் உடன் ஊழியர்களுடன் பகிர்ந்து கொண்டார் . இவைகளைப் பற்றி அவர் தொடர்ந்து எழுதினார் .
ஓர் ஊழியர்களுடைய கூட்டத்திலே கேரி பாரம் நிறைந்த உள்ளத்தோடு எழுந்து நின்று " ஆண்டவரை அறியாதவர்கள் மத்தியிலே சுவிசேஷம் அறிவிக்க வேண்டியது நமது கடமை ; அதை நாம் கட்டாயமாகப் பரிசீலிக்க வேண்டும் " என்று அவர் சொன்னபோது , ஒரு வயது முதிர்ந்த ஊழியர் எழுந்து மிகவும் சத்தமாக , " வாலிபனே , நீ உட்காரு . கடவுள் மனந்திரும்பச் செய்ய வேண்டுமென்றால் , நம்முடைய உதவியின்றியே அவரால் அதைப் பரிப சூரணமாகச் செய்ய முடியும் " என்று மிகவும் கோபமாகக் கூறினார் . இதன் மூலமாக தன் உடன் ஊழியர்களுக்கு முன்பாக கேரி மிகவும் அவமதிக்கப்பட்டார் .
இருந்தாலும் தன் இளமை தொட்டே அவர் எடுத்த எந்தக் காரியத்தையும் தொடர்ந்து முடிக்க முயற்சி செய்ததைப் போலவே இந்த முயற்சியையும் அவர் விடவில்லை . தொடர்ந்து முயற்சித்தார் . 1791ம் ஆண்டு வில்லியம் கேரி போதகராக அபிஷேகம் செய்யப்பட்டார் . அவருடைய உடன் போதகர்கள் மத்தியிலே வில்லியம் கேரி மிகச் சிறந்த முறையிலே மதித்துப் போற்றப்பட்டார் .
பாப்டிஸ்து சபை போதகர்களுடைய ஆண்டு நிறைவுக் கூட்டம் ஒன்றில் 1792ம் ஆண்டில் வில்லியம் கேரி ஆண்டவருடைய செய்தியைக் கொடுப்பதற்காக அழைக்கப்பட்டார் . " கடவுளிடம் இருந்து பெரிய காரியங்களை எதிர்பார் ; கடவுளுக்காக பெரிய காரியங்களைச் சாதிக்கப்பார் " என்பதே அவருடைய செய்தியின் மையமாக இருந்தது . இந்தக் கருத்தே அவர் வாழ்க்கை முழுவதிலும் அவர் குறிக்கோளாகவும் மாறி விட்டது . இந்தக் கூட்டத்தின் விளைவாக " பாப்டிஸ்து மிஷனெரி சங்கம் " ஆரம்பிக்கப்பட்டது .
அச்சங்கம் உடனடியாக ஒரு மிஷனெரியை வெளிநாட்டுக்கு அனுப்புவதற்கு முன்வந்தது . இந்தியாவில் வில்லியம் கேரி : கேரி ஒரு மிஷனெரியாக செல்வதற்கான வழி இப்போது திறந்துவிட்டது . ஆனால் எங்கு மிஷனெரியாகச் செல்வது என்ற கேள்வி எழுந்தது . மேற்கு ஆப்பிரிக்கா அல்லது தென் கடல் தீவுகளுக்கு மிஷனெரியாகச் செல்லலாம் என்ற எண்ணம் கேரியினிடத்தில் இருந்தது .
ஆனால் ஆண்டவர் கேரிக்காக இந்தியாவைத் தம் மனதிலே வைத்திருந்தார் . ஆகவே , டாக்டர் தாமஸ் என்ற ஒரு மனிதனைக் கேரியைச் சந்திக்கும்படியாக அனுப்பினார் . டாக்டர் தாமஸ் என்பவர் இந்தியாவில் இருந்தவர் . இந்தப் பெருமகனாருடைய வாழ்க்கையின் மூலமாகவும் , இருதய பாரத்தின் மூலமாகவும் அதிகமாகக் கவரப்பட்ட கேரி இந்தியாவிற்கு மிஷனெரியாக அவருடன் கூடச் செல்வதற்காக தீர்மானம் செய்து கொண்டார் .
பாப்டிஸ்து மிஷனெரி சங்கத்தின் தலைவரும் இன்னும் அவரோடு சேர்ந்த ஒரு சிலரும் கேரியைத் தங்களுடைய ஜெபத்தாலும் பொருளாலும் தாங்குவதாக அவரிடத்தில் வாக்குறுதி கொடுத்தனர் . மிஷனெரியாக கேரி இந்தியாவிற்கு வந்தபோது அவர் 33 வயது நிரம்பியவராக இருந்தார் . ஒரு சில சிக்கல்களைக் கடந்து ஆழமான முறையிலே திருப்பணி பற்றிய திட்டங்களை அவர்கள் வகுத்த பின்னர் வில்லியம் கேரி தன் குடும்பத்துடனும் டாக்டர் தாமஸுடனும் 1793ம் ஆண்டு ஜுன் மாதம் 13ம் தேதி கப்பல் ஏறினார் .
நீண்ட பிரயாணத்திற்குப் பின்பு நவம்பர் மாதத்தில் கல்கத்தாவில் வந்து இறங்கினார்கள் . கேரியோடு அவர் மனைவியும் , நான்கு பிள்ளைகளும் , அவருடைய மைத்துனியும் இருந்தார்கள் . இந்தியாவின் மக்களைக் கிறிஸ்துவுக்காக ஆதாயப்படுத்த வேண்டும் என்ற அவருடைய ஆவல் இவர்களில் யாருக்குமே இருந்ததாகத் தெரியவில்லை . இந்தியா செல்லும் தன்னைத் தாங்குவதற்கு ஒருசிலர் பின்னணியில் இருந்தாலும் , தன் கரத்தில் வெகு சொற்ப பணம்தான் இருந்தது . இப்படிப்பட்ட சூழ்நிலையில் வில்லியம் கேரி அயல்நாடான இந்தியாவுக்குச் செல்வது அவருக்கு ஏதோ புத்தி மாறாட்டம்தான் என்று அவரது நண்பர்களும் , உறவினர்களும் எண்ணி கலங்கினர் .
ஆனால் வில்லியம் கேரியோ உறுதியான நம்பிக்கையுடனும் , ஆழமான பாரத்துடனும் காணப்பட்டார் . தனது நீண்ட கடற் பிரயாணத்திலேயே வில்லியம் கேரி வங்காள மொழியைக் கற்க ஆரம்பித்தார் . பிறகு அவர் இந்துஸ்தானி , பாரசீகம் , மராத்தி , சமஸ்கிருதம் ஆகிய மொழிகளையும் கற்றார் . இந்தியா வந்து இறங்கிய உடனேயே அவர் இந்திய மக்களோடு வங்க மொழியில் பேசவும் , ஆண்டவருடைய வார்த்தையைப் பிரசங்கிக்கவும் , வேத வசனங்களை மொழி பெயர்க்கவும் ஆரம்பித்தார் . நிச்சயமாகவே ஆண்டவர் கேரியினைத் தம்முடைய உயர்ந்த திட்டத்திற்காக நடத்தினார் . மொழிகளைக் கற்கும் வாஞ்சையை அவருக்குக் கொடுத்தார் .
இந்தியாவில் அவர் வாழ்ந்த முதல் வருடத்தில் அவருடைய குடும்பத்தின் மக்கள் அனைவருமே ஒருவர் பின் ஒருவராக நோய்வாய்ப்பட்டனர் . அவருடைய அருமையான ஐந்து வயது மகன் பீட்டர் இறந்து போனான் . இந்து , முஸ்லீம் வேலை ஆட்கள் புதைகுழி வெட்ட முன்வரவில்லை . தன்னுடைய சுகவீனத்தில் ஏற்பட்ட பலவீனத்தோடு கேரி தாமாகவே புதைகுழி வெட்டினார் . அந்தச் சமயத்தில் இரண்டு பேர் அவருக்கு உதவி செய்ய முன்வந்தனர் . அதைக் கண்ட கேரி நன்றிப் பெருக்கோடு கண்ணீர் வடித்தார் . தன் குடும்பத்தைக் காப்பாற்ற ஒரு சாயத் தொழிற்சாலையின் பொறுப்பாளராக கேரி வேலை செய்ய ஆரம் பித்தார் .
அது மட்டுமல்ல , வேத வசனங்களை அச்சடிப்பதற்கு ஓர் அச்சுக்கூடமும் ஆரம்பித்தார் . வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டத்தினால் குறுகிய காலத்தில் கேரி தனது வேலையை இழந்தார் . தொடர்ந்து அவரது அச்சுக் கூடமும் தீக்கிரையானது என்றாலும் , இச்சம்பவங்கள் கேரி எந்த விதத்திலும் மனந்தளர்ந்து போகச் செய்யவில்லை . அவருடைய உள்ளத்தில் அடிக்கடி எழுந்த ஒரே கேள்வியானது , " நான் எவ்வகையில் இந்தியாவுக்கு உதவமுடியும் " என்பதே .
கடவுள் கேரியை பயன்படுத்திய விதம் :
கேரி ஏழு ஆண்டுகள் கடுமையாக உழைத்தார் . அந்த ஊழியத்தின் முதல் கனியான கிறிஸ்னு பால் என்னும் ஒரு தச்சனுக்கு கேரி ஞானஸ்நானம் கொடுத்தார் . ஒரு கிறிஸ்தவனாக மாறுவதற்கு அநேக பாடுகளைக் கடந்து வந்த போதிலும் கிறிஸ்னு பால் உண்மையான ஒரு கிறிஸ்தவனாக நிலைத்திருந்தான் . அவன் வாழ்க்கையின் மூலமாக இன்னும் பலரைகிறிஸ்துவுக்குள் வழிநடத்தினான் .
1798ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து இன்னும் நான்கு பேர் வந்து கேரியோடு கூட ஊழியத்தில் பங்குபெற்றார்கள் . செராம்பூர் என்ற இடத்தில் அவர்கள் ஒரு பெரிய அருட்பணி மையத்தை ஏற்படுத்தினர் . அங்கிருந்து இந்தியாவினுடைய பல பாகங்களுக்குச் சென்று கிறிஸ்துவைப் பிரசங்கித்தனர் .
மேலும் ஆண் பெண்களுக்காகத் தனித்தனிப் பள்ளிகளை ஏற்படுத்தினர் . சிறிய புத்தகங்களையும் வேத புத்தகங்களையும் அச்சிட ஒரு பெரிய அச்சுக்கூடமும் வைத்திருந்தனர் . 1800 ஆம் ஆண்டு செராம்பூர் கல்லூரியினைக் கேரி நிறுவினார் . மேலும் ஓர் அனாதை இல்லத்தையும் ஒரு தொழுநோய் மருத்துவமனையையும் ஏற்படுத்தினார் .
கேரி இந்தியாவில் ஊழியம் செய்த 22 ஆண்டு காலத்தில் 765 பேர் கிறிஸ்துவுக்காக ஆதாயப்படுத்தப்பட்டனர் . கேரி மரிப்பதற்கு முன்னால் இந்தியாவில் 26 சபைகள் எழும்பின . கல்கத்தாவில் உள்ள அரசாங்கக் கல்லூரியில் கேரி வங்கமொழி பேராசிரியராக நியமிக்கப்பட்டிருந்தார் . பின்னர் சமஸ்கிருதத்தையும் , மராட்டியையும்கூட அவர் அதே கல்லூரியில் போதித்தார் .
30 ஆண்டுகள் பேராசிரியராகப் பணிபுரிந்தார் . அவருடைய வருவாயில் பெரும் பகுதியை கடவுளுடைய ஊழியத்திற்கென்றே பயன்படுத்தினார் . ஒரு சிறிய பகுதியை மட்டும் தன் செலவுக்காக வைத்துக்கொண்டார் . புதிய ஏற்பாடு முழுவதும் வங்காள மொழியில் 1800ஆம் ஆண்டு மொழிபெயர்க்கப்பட்டது . தனது மரணத்திற்கு முன்பாக இவர் புதிய ஏற்பாட்டை நாற்பதுக்கு மேலான மொழிகளிலும் , இருபதுக்கு மேலான மொழிகளில் முழு வேதாகமத்தையும் மொழிபெயர்த்திருந்தார்.
இதன்படி உலகில் மூன்றில் ஒரு பகுதி மக்களுக்கு வேதாகமத்தை மொழிபெயர்த்துக் கொடுத்தார் . இவரது வேண்டுகோளுக்கிணங்க , அரசாங்கம் இறந்த கணவனோடு அவனது மனைவியையும் உயிரோடு எரிக்கும் " உடன்கட்டை ஏறுதல் " என்னும் பழக்கத்தை எதிர்த்து , ஒரு சட்டத்தை இயற்றி அதற்குத் தடை விதித்தது .
அதுமட்டுமல்ல , உயிர்பலியாக பச்சிளங்குழந்தைகளை கங்கை நதியிலே தூக்கி எரியும் பழக்கமும் தடை செய்யப்பட்டதற்கு இவரே காரணமாய் இருந்தார் . இப்படியாக மாபெரும் சாதனைகளைப் புரிந்த கேரி தன்னை ஒரு பயனற்ற ஊழியன் என்றும் , சிறிதளவே பயன்பட்டவன் என்றும் கூறினார் . " நான் மறைந்த பின்பு கலாநிதி கேரியைப் பற்றி நீங்கள் எதுவும் பேசாமல் கேரியின் இரட்சகரைப் பற்றியே பேச வேண்டும் " என்று தன்னுடைய இறுதி நாட்களில் தன்னைச் சந்திக்க வந்த நண்பர் ஒருவரிடத்தில் கூறினார் .
வங்க மொழியில் புதிய ஏற்பாட்டின் 8ம் பதிப்பினை அவர் முடித்தபின்பு தனது 72ம் வயதில் " என்னுடைய வேலை முடிந்தது . ஆண்டவருடைய சித்தத்திற்குக் காத்திருப்பதைவிட இதற்குமேல் இனி நான் செய்வதற்கு ஒன்றும் இல்லை " என்றார் .
இரு ஆண்டுகளுக்குப் பிறகு 1834ஆம் ஆண்டு ஜுன் மாதம் அவர் மரித்தார் . அவருடைய உடல் தாம் நேசித்த இந்தியாவிலேயே இளைப்பாறுதலுக்காக அடக்கம் செய்யப்பட்டது . தன்னுடைய தாய் நாட்டிற்கு ஒருமுறைகூட திரும்பிச் செல்லாதபடி 41 ஆண்டுகள் அவர் கடுமையாக இந்தியாவிலே உழைத்தார் .
அவருடைய திருப்பணியின் கனிகளானது இன்றும் நம்முடைய கண்களால் காணக்கூடிய நிலையில் உள்ளன . இவ்விதமாக திறம்பட அரியதோர் சேவையினைச் செய்த இவரை " இந்திய அருட்பணியின் தந்தை " என்று அழைப்பது 10 / 10 பொருத்தமாகும் .
பிறப்பு : இங்கிலாந்திலுள்ள பெட்போர்டு அருகிலுள்ள எல்ஸ்டோ ( Elstow ) என்ற இடத்தில் 1628 - ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தாமஸ் மற்றும் மார்கரட் ( Margaret ) , பனியன் என்பவர்களுக்கு வன் பனியன் பிறந்தார் .
ஆரம்ப வாழ்க்கை !
ஜான் பனியன் ஏழைக் குடும்பத்தில் பிறந்ததால் , உயர்கல்வி பெற இவருக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை . பள்ளிப் படிப்பை இடையிலே விட்டுவிட்டு தன் தந்தையுடன் சேர்ந்து பாத்திரங்களை பழுது பார்த்து விற்பனை செய்யும் தொழிலை செய்து வந்தார் .
இராணுவ வாழ்க்கை :
தன் இளம்பிராயத்தில் ஒரு தீய மனிதனாக வாழ்ந்து வந்தார் . வாழ்க்கையில் நிம்மதியில்லை . 16 வயதிலேயே இராணுவத்தில் சேர்ந்தார் . ஒருமுறை அரசாங்க ஆணைப்படி இவர் எல்லையில் நடைபெறும் போருக்குச் செல்லப் பணிக்கப்பட்டார் . அதற்கு அவர் ஆயத்தமாகி வரும் நிலையில் , கடைசி நேரத்தில் இவருக்குப் பதிலாக வேறொரு நபர் அனுப்பப்பட்டார் அந்த நபர் போரின் முதல் நாளே சண்டையில் மரணமடைந்தார் . மயிரிழையில் தான் உயிர் தப்பினது ஏனோ ? என அதிகமாகச் சிந்தித்தார் .
மனம் திரும்புதல் :
ஜான் தனது 19 - ஆவது வயதில் ஒரு விசுவாசியான கிறிஸ்தவப் பெண்ணைத் திருமணம் செய்தார் . அவள் அடிக்கடி கிறிஸ்துவைப்பற்றி ஜானிடம் பேசுவாள் . அவளைப் பிரியப்படுத்த ஜான் கோயிலுக்கு போக ஆரம்பித்தார் . ஆனால் , முற்றிலும் ஆண்டவருக்கு ஒப்புக் கொடுக்கவில்லை . ஒருநாள் வழியில் மூன்றுப் பெண்கள் இயேசு கிறிஸ்துவைப்பற்றி சொல்லிக் கொண்டிருப்பதை நின்று கவனித்தார் . அவர்கள் மூலம் சுவிசேஷத்தைக் கேட்ட ஜான் . வீட்டில் சென்று வேதத்தை அதிகம் வாசிக்க , வாசிக்க , தான் ஒரு பாவி என்று அதிகம் உணர்த்தப்பட்டார் .
ஒருநாள் அதிக சுகவினப்பட்டு , சோர்வுடன் இருந்தபோது , மார்ட்டின் லூதரின் புத்தகத்தைப் படித்தபோது , தன்னை கிறிஸ்துவுக்கு முற்றிலும் ஒப்புக் கொடுத்தார் . சில நாட்களில் ஜான் பனியனின் மனைவி இறந்து போனார் . அதிக வேதனையுள்ள பனியன் . தனது இரட்சகர் மட்டுமே இறுதிவரை தனக்கு உதவி செய்ய முடியும் என்று உணர்ந்து , தன்னை அவருக்கு சமூலமாய் அர்ப்பணித்தார் .
பாத்திரங்களை பழுது பார்க்கும் வீடுகளில் தனது தொழிலைச் செய்து கொண்டே . இயேசுவையும் அறிவிக்க ஆரம்பித்தார் . பலர் ஆண்டவரை ஏற்றுக் கொண்டனர் .
ஊழிய வாழ்க்கை :
அந்தக் காலத்தில் இங்கிலாந்து தேசத்தில் போதகர்கள் தவிர மற்ற எவரும் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கக் கூடாது என்றொரு சட்டம் இருந்தது . ஆனால் , ஜான் மாற்கு 16 : 15 - இல் உள்ள கர்த்தரின் பிரதான கற்பனைக்குக் கீழ்ப்படிந்து , சுவிசேஷத்தை பிரசங்கித்து வந்தார் சில வருடத்திற்குப் பின் இதே சட்டம் கடுமையாக்கப்பட்டது . போதகர் அல்லாத வேறு யாராவது சுவிசேஷத்தைப் பிரசங்கித்தால் , சிறையில் அடைக்கப்பட்டு , கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர் . ஜான் தேவனுக்குக் கீழ்ப்படிதலை தனது வாழ்வில் முதன்மையாகக் கருதி , பாழியத்தை நிறுத்தாது செய்து வந்தார் .
ஒருநாள் ஜான் தனது பிரசங்கத்தை ஆரம்பித்தவுடனே காவலரால் சிறைப்பிடிக்கப்பட்டு , நீதிபதியின் முன் நிறுத்தப்பட்டார் . நீதிபதி இவரிடம் இனி சுவிசேஷத்தை பிரசங்கிக்க மாட்டேன் என்று உறுதி கூறினால் , உன்னை விடுவிக்கிறேன் என்று கூறினார் . ஆனால் , அப்படி உறுதியளிக்க மறுத்துவிடவே . முதலில் 3மாதத்தண்டனை அவருக்கு அளிக்கப்பட்டது . அதற்குப் பதிலுரைத்த ஜான் பாய பான் விடுவிக்கப்பட்டால் , தேவ உதவியால் நாளை பிரசங்கிப்பேன் என்ற - சிறையிருப்பு 3 மாதத்தில் முடியாமல் 12 வருடமாக நீடித்தது .
அவருக்கு விடுதலை கிடைத்திட ஒரே ஒரு நிபந்தனை . அதாவது நான் இனி பிரசங்கிக்கமாட்டேன் என்ற ஒரே ஒரு உறுதிமொழி அவர் வழங்க வேண்டும் என்றுக் கூறப்பட்டது . சிறிய இருண்ட அறையில் 50 பேருடன் இவர் தங்க வேண்டியதிருந்தது . இதனால் , நோய்கள் வேகமாகப் பரவி , பலர் அதே அறையில் மரித்தனர் . தனது குடும்பத்தையும் , நான்கு பிள்ளைகளையும் பிரிந்து , வெளி உலகத்தையே பார்க்காமல் 12 வருடம் சிறையில் கழித்தார் . சிறையில் இவருடன் கொலைகாரர்கள் . துஷ்டர்கள் என கிறிஸ்துவை அறியாதவர்கள் இருந்தனர் . இவர்களுக்கு சுவிசேஷத்தைச் சொல்லி , அநேகரை நீதியுக்குட்படுத்தினார் . சிறையிலே இவர்கள் கூடி ஜெபிக்க ஆரம்பித்தனர் . சிறையில் ஒரு நிமிடமும் வீணாக்காமல் வேத வசனத்தை வாசிப்பது . ஜெபிப்பது , எழுதுவது என்று செலவழித்தார் . அங்குதான் அவர் “ மோட்ச பிரயாணம் என்ற தலைசிறந்த புத்தகத்தை எழுதி முடித்தார் . ) இறுதி காலம் : தனது 43 - ஆவது வயதில் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார் .
பெட்ஃபோர்டு என்ற இடத்தில் பாப்திஸ்து திருச்சபையின் போதகராகி , 16 வருடம் அங்கு ஊழியம் செய்தார் . சபை போதகராக மட்டுமின்றி . பல இடங்களுக்கும் பயணம் செய்து , கல்லூரி மாணவர் கள் மத்தியிலும் , தெருக் கூட்டங்களிலும் சுவிசேஷத்தை அறிவித்தார் . பல நேரங்களில் மிரட்டப்பட்டதோடு , மறுபடியும் சிறைவாசம் செல்ல வேண்டியதிருந்தது .
எனினும் , சோர்ந்து போகாமல் சுவிசேஷத்தை பிரசங்கித்தார் . 1688 - ஆம் ஆண்டு , ஆகஸ்ட் 13 - ம் தேதி , சுகவீனமடைந்து , தனது 59 - ஆவது வயதில் மரித்தார் . பூமியில் தான் ஆசையாய் சேவித்த ஆண்டவரை பரலோகத்தில் முகமுகமாய் தரிசிக்கவும் . சேவிக்கவும் சென்று விட்டார் . அவர் உருவாக்கின “ மோட்ச பிரயாணம் " என்ற புத்தகம் இன்றும் அநேகரை ஆண்டவரண்டை வழி நடத்தி வருகிறது . வேதப் புத்தகத்திற்கு அடுத்தபடியாக , 130 - க்கும் அதிகமான மொழிகளில் , மொழியாக்கம் செய்யப்பட்ட இப்புத்தகம் எல்லோராலும் விரும்பி வாசிக்கப்படுகிறது . -
அவள் சொல்வதைத் தாண்டி களைத்துப்போயிருந்தாள்; இன்னும் தூக்கம் வராது. பின்னர் அவள் அதைக் கேட்டாள், பாலைவனம். ஒரு பாடல். ஒரு பரந்த, காணப்படாத பாடகர் முழுமையான இணக்கத்துடன் பாடுவதைப் போல இது ஒலித்தது. அவர் இதற்கு முன்பு பல முறை பாடலைக் கேட்டிருப்பார், ஆனால் இதுபோன்று ஒருபோதும் பாடியதில்லை. வார்த்தைகள் அழகாக தெரிந்திருந்தன, ஆனால் இப்போது அவை பலமான இனிமையான சக்தியுடன் வந்தன, அவளால் கடைசியாக ஓய்வெடுக்க முடிந்தது.
"அவர் இஸ்ரேலைக் கவனிக்கிறார், தூங்கவில்லை. ... அவர் தூங்குவதில்லை, தூங்குவதில்லை .... அவர் தூங்குவதில்லை, தூங்குவதில்லை ...." இது ஒரு தேவதூதர் பாடகரா?
சீனா உள்நாட்டு மிஷனின் கீழ் சீனாவுக்கு மிஷனரியான மில்ட்ரெட் கேபிள் ஒருபோதும் அறிந்திருக்கவில்லை. கடவுளின் முன்னுரிமையும் அவனது அக்கறையுள்ள சக்தியும் தன்னைச் சுற்றிலும் இருந்தன என்பதையும், அடியில் அவனுடைய நித்திய ஆயுதங்கள் என்பதையும் அவள் அறிந்திருந்தாள். அவள் பயம் மறைந்தது. அவர்கள் கோபி பாலைவனத்தை விட்டு வெளியேறி இங்கிலாந்துக்குத் திரும்ப வேண்டியது அவசியம் என்பதை அறிந்த மில்ட்ரெட் மற்றும் அவரது மிஷனரி தோழர்கள், லிட்டில் பீக்கிங் என்ற இடத்திலிருந்து தப்பித்து, சுதந்திரத்திற்காக தங்கள் கோடு போடுகிறார்கள். ஆனால் அது அவர்களின் சிறிய கழுதை வரையப்பட்ட வண்டியில் மெதுவாகச் சென்றது, மற்றும் பிரிகேண்டுகளின் பட்டைகள் மலைகளில் பதுங்கியிருந்தன. பாழடைந்த, வெறிச்சோடிய கிராமங்கள் வழியாக இரவும் பகலும் பெண்கள் அழுத்தி, இரவின் மறைவின் கீழ் குறுகிய நீளத்திற்கு மட்டுமே ஓய்வெடுத்தனர்.
அவர்கள் தங்கள் யாத்ரீகப் பாடலைப் பாடினார்கள் - அவர்கள் பயணித்த ஆண்டுகளில் அவர்கள் அடிக்கடி பாடிய வார்த்தைகள்: "உமிழும், மேகமூட்டமான பில்லார், என் பயணத்தை எல்லாம் என்னை வழிநடத்தட்டும் ... இஸ்ரேலியர்கள் தங்கள் பயணத்தில் வெளியேறுவதைப் போலல்லாமல்" நான் பரலோகத்திற்கு கீழ்ப்படியவில்லை எகிப்தின் பார்வை இருப்பினும், அவர்கள் கண்களால் பார்க்கக்கூடிய மேகமூட்டமான, உமிழும் தூண் இல்லை. ஆனால் அவர்களுக்கு தெய்வீக வழிகாட்டுதல், பரிசுத்த ஆவியானவர் இருந்தார்கள். "வலுவான விடுதலையாளர், வலுவான விடுதலையாளரே, நீ இன்னும் என் பலமாகவும் கேடயமாகவும் இரு" என்று வார்த்தைகளை அவர்களின் யாத்ரீகப் பாடலுக்கு ஓடினார். கண்களை மூடிக்கொண்டிருந்த வார்த்தைகள் மில்ட்ரெட்டின் மனதில் தங்களைத் தாங்களே வாசித்தன. அவள் மிகவும் சோர்வாக இருந்தாள் . ..
"நான் ஜோர்டானின் விளிம்பில் மிதிக்கும்போது, என் பதட்டமான அச்சங்கள் குறையும்படி கேட்டுக் கொண்டேன்," அவர்கள் பெரிய கோபி பாலைவனம், உள் மங்கோலியா மற்றும் கன்சு, சிங்கியாங் மற்றும் தொலைதூர மேற்கு புறநகர்ப் பகுதிகள் வழியாக பயணிக்கையில் அடிக்கடி ஜெபித்தார்கள். சீன துர்கெஸ்தான். தரிசு மலைகள், பாழடைந்த வனப்பகுதி, பதுங்கியிருக்கும் பிரிகண்ட்ஸ், இரக்கமற்ற ஆட்சியாளர், தண்டர்போல்ட் எல்லாம் அவள் மனதில் இருந்து மங்கிவிட்டன.
"கர்த்தர் உமது கீப்பர். உருமிச்சி கிராமத்தில், மில்ட்ரெட், எவாஞ்சலின் பிரஞ்சு, மற்றும் ஃபிரான்செஸ்கா பிரஞ்சு ஆகியோர் ஒரு சிறிய காது கேளாத சீனப் பெண்ணை அவர்களுடன் அழைத்துச் செல்வதற்கான அனுமதி குறித்து வார்த்தைக்காகக் காத்திருந்தனர் - அவர்கள் தெருக்களில் இருந்து அழைத்துச் சென்ற மற்றும் பயணம் செய்த ஒரு குழந்தை அவர்களுடன். அவர்கள் வெளியேற மாட்டார்கள்- .. கர்த்தர் உங்களைப் பாதுகாப்பார் ....
" அவளை வெளியே. டாப்ஸ்வ் டாப்ஸி என்று பெயரிட்ட குழந்தையை அவர்களால் கைவிட முடியவில்லை, அந்த நாட்களில் காத்திருந்த காலத்தில் பதற்றத்தை உணர்ந்தார். சமநிலையில் தொங்கியது அவளுடைய விதி என்று அவளுக்குத் தெரிந்தது. பின்னர் அது நடந்தது - ரஷ்ய துணைத் தூதரகம் தேவையான அனுமதியைப் பெற்றது, மூன்று பெண்களும் பாதுகாப்பற்ற சிறிய இடுப்பும் வெளியேற இலவசம். மீண்டும் காணப்படாத ஆனால் உமிழும் தூண் நகர்கிறது என்பதை பெண்கள் அறிந்தார்கள், அவர்கள் செய்ய வேண்டியது எல்லாம் பின்பற்ற வேண்டும். இந்த பெண்கள் எதை விட்டுச் சென்றார்கள்?
ஐந்து முறை அவர்கள் கோபி பாலைவனத்தை அறிந்திருந்தனர், சிநேஸ் மொழியில் பைபிள்களைக் கண்டனர் மற்றும் விநியோகித்தனர். கூடாரங்களில் வசிப்பது, மோசமான உணவை உண்ணுதல், எப்போதும் கழுதை வண்டியில் பயணம் செய்வது, அவர்கள் பிரிகேண்ட்களால் பிடிக்கப்பட்டனர், சில சமயங்களில் கம்யூனிஸ்ட் குழுக்களால் பிடிக்கப்பட்டனர், ஆனால் கடவுள் எப்போதும் அவற்றை பிரசங்கித்தார், பெரும்பாலும் அற்புதமான வழிகளில்.
அவர்கள் 2,700 வீடுகளுக்குள் நுழைந்து, இரட்சகரைப் பற்றி சொல்லவும், 656 கூட்டங்களை நடத்தவும், வேதத்தின் 40,000 பகுதிகளை வழங்கவும் 1936 ஆம் ஆண்டில், மோசமான அரசியல் நிலைமைகள் மூன்று பெண்களையும் கோபி பாலைவனத்தை விட்டு வெளியேற நிர்பந்தித்தன. அடுத்த ஆண்டுகளில், மில்ட்ரெட் பிரிட்டிஷ் மற்றும் வெளிநாட்டு பைபிள் சொசைட்டி எட்டிக்காக வெகுதூரம் பயணம் செய்தார், மத்திய ஆசியாவின் பாலைவனங்களில் பரவலாக விநியோகிக்கப்பட்ட அதே புத்தகத்தின் செய்தியை அறிவித்தார். மில்ட்ரெட் கேபிளைப் பற்றி சொல்லலாம், "நான் பரலோக பார்வைக்கு கீழ்ப்படியவில்லை" என்று அவள் வெறுமனே சொன்னது போலவே.
ஒரு குருவானவர் வீட்டில் சிறுவர் குழு ஒன்று ' என்னுடைய சுவிசேஷத்தைப் போய் பிரசங்கி என்று கர்த்தர் சொல்லுகிறார் " என்ற பாடலைப் பாடிக் கொண்டிருந்தது . அது ஒரு ஞாயிறு பள்ளியோ ? சிறுவர்களுக்கான கூட்டமோ அல்ல . பாடலுக்குப் பின் நான்கு வயதுபையன் ஒருவன் நாற்காலியின் மீது ஏறி நின்றான் . அந்தக் கூட்டத்திற்கு மிகவும் பக்தி வினயமாக அருளுரை ஆற்றினான் .
இந்தச் சிறு பிள்ளைகள் " சபை விளையாட்டு " விளையாடிக் கொண்டிருந்தார்கள் . அதில் குருவானவரின் மகனான அதோனிராம் ஜட்சன் அருளுரை ஆற்றினான் .
இளமைப் பருவம் :
அதோனிராம் ஜட்சன் 1788ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் ஒன்பதாம் நாளில் பிறந்த இவர் இளமையிலேயே திறமைசாலியாக விளங்கினார் .
அறிவும் திறமையும் கொண்ட மாணவன் :
மூன்று வயதிலேயே இவர் தெளிவாகப் படிக்க கற்றுக் கொண்டார் . வேதப் புத்தகத்தின் ஒரு முழு அதிகாரத்தையும் ஒரு நாள் இவர் வாசிக்கக் கேட்ட இவர் தந்தை பெரும் வியப்புக்குள்ளானார் . கணிதத்தில் அவருக்குப் பெருவிருப்பம் உண்டு . பத்து வயதிலேயே ஒரு கணித மேதையாக விளங்கினார் . மேலும் அவர் லத்தீன் , கிரேக்க மொழிகளில் கருத்துள்ள இறையியல் புத்தகங்களையும் படித்தார் . கிரேக்க மொழியில் இவருக்கு இருந்த திறமை குறிப்பிடத்தக்கது . 16ஆம் வயதில் ப்ரௌன் பல்கலை கழகத்தில் இவர் அடி எடுத்து வைத்து 19ஆம் வயதில் தன் வகுப்பில் முதல்வராகப் பட்டம் பெற்றார் . தன்னுடைய கல்லூரி நாட்களில் தன்னைப் போன்ற திறமையான ஒரு நண்பனைக் கண்டார் .
ஆனால் அந்த நண்பனோ ஆண்டவரை விசுவாசியாதவனாக இருந்தான் . அந்த இளைஞன் வேதாகமத்தையோ அல்லது வேத அற்புதங்களையோ நம்பவில்லை . அந்த நண்பனாலே கவரப்பட்ட அதோனிராம் ஜட்சன் தானும் வேதத்தை நம்பாத ஒருவனாக மாறியதால் , கடவுளை ஒருவன் தனிப்பட்ட முறையிலே அறிந்து கொள்ள முடியாது என்று கூறினார் . இதனால் அவருடைய பெற்றோர் மிகவும் புண்பட்டார்கள் . ஜட்சன் தன்னுடைய பட்டப்படிப்பிற்குப் பிறகு தான் ஒரு சிறந்த வழக்கறிஞராக அல்லது நாடக ஆசிரியராக வர வேண்டும் என்ற தணியாத ஆவல் கொண்டார் . ஆகவே , அவர் நியூயார்க் பட்டணத்தில் உள்ள ஒரு நாடகக் குழுவில் சேர்ந்தார் .
கடவுளை கண்ட முறை :
இளைஞரான அதோனிராமின் வாழ்க்கையில் எந்தவிதமான குறிக்கோளும் இல்லாததினால் அவர் மிகவும் நிம்மதி அற்றவராகக் காணப்பட்டார் . நாடகக் குழுவில் சேர்ந்தும் அவர் திருப்தி அடைய முடியவில்லை . கிறிஸ்து அற்ற ஒரு மனிதனின் பாடுகளையும் , வேதனைகளையும் அவர் அனுபவித்தார் . ஒரு இரவிலே தான் தங்கியிருந்த ஒரு கிராமப் புறத்து விடுதியில் தன் அறையின் பக்கத்திலே மரணத்தோடு போராடிக் கொண்டிருக்கும் ஒரு மனிதனின் அவலக்குரலைக் கேட்டார் . இரவு விழித்திருந்து மனக்குழப்பத்துடன் அதைக் கேட்டுக் கொண்டிருந்தார் . அடுத்த நாள் காலை வேளையில் அவர் யார் என்று விசாரித்தபோது ப்ரௌன் யூனிவர் சிட்டியிலே தன்னுடைய இணைபிரியாத தோழனாக வாழ்ந்த அந்த மனிதனே இப்படி இறந்தான் என்றுகேட்டு அதிகமாகப் பீதியடைந்தார் .
அந்த மனிதன் மரிப்பதற்கு ஆயத்தமாக இல்லை என்பதை உணர்ந்தார் . இந்த உணர்வு இவரை மேலும் சிந்திக்கச் செய்தது . நிம்மதி இன்றி தவித்தார் . ஆறு வாரங்களுக்குப் பிறகு இயேசு கிறிஸ்துவை தன் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டார் . அதன்பின் ஆழ்ந்த நிம்மதியைக் கண்டடைந்தார் .
கடவுளின் அழைப்பு :
தன்னுடைய வாழ்க்கையிலே மாற்றம் கண்டபிறகு இனி கடவுளைப் பிரியப்படுத்துவது மட்டுமே தன்னுடைய விருப்பமாகக் கொண்டார் . " இது கடவுளைப் பிரியப் படுத்துமா ? " என்ற வாசகத்தை தன்னுடைய அறையின் எப்பக்கமும் எழுதி வைத்தார் . இவர் தன் வாழ்க்கையில் இதுவரை கொண்டிருந்த ஆசைகளை விட்டுவிட்டு இனிமேல் தன் எதிர்கால வாழ்க்கையில் கடவுளைப் பிரியப்படுத்துவதே தன் வாழ்க்கையில் விருப்பமாக இருக்க வேண்டும் என்று விரும்பினார் . அவர் வாசித்த ஒரு புத்தகம் அவருடைய சிந்தனைகளை மிஷனெரிப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள திசை திருப்பிற்று . அவர் சிறு பிள்ளையாக இருக்கும்போது " உலகம் எங்கும் புறப்பட்டுப் போங்கள் " என்று பாடிய பாடல் அவரை அதிகமாகக் கவர்ந்து பற்றிக் கொண்டது . அதுமட்டுமல்ல , இவர் விருப்பமெல்லாம் தான்
ஒரு வெளிநாட்டு மிஷனெரியாகச் செல்ல வேண்டும் என்பதாக மாறிவிட்டது . அவரை அனுப்புவதற்காக மிஷனெரி சங்கம் அமெரிக்காவில் அந்த நாட்களில் இல்லாதபடியால் எப்படிச் செல்வது என்ற பிரச்சனை ஏற்பட்டது . இதுபற்றி அவர் மளக்கமாக ஜெபித்தார் . மிஷனெரி பற்றிய தன்னுடைய ஆழமான கருத்துக்களை அருட்பணி வாஞ்சை நிரம்பிய தனது நான்கு நண்பர்களோடு பகிர்ந்து கொண்டு ஐந்து பேருமாக சேர்ந்து இதற்காக ஜெபிக்க ஆரம்பித்தார்கள் . அவர்களுடைய ஜெபங்களுக்குக் கடவுள் பதில் அளித்தார் . 1870 ஆம் ஆண்டு அமெரிக்க அருட்பணி இயக்கம் எற்படுத்தப்பட்டது . இலண்டன் மிஷனெரி சங்கம் அமெரிக்காவின் மினெரிகளைத் தாங்குவதற்கு முன்வருமா என்பதை அறிவதற்காக , ஜட்சன் இலண்டன் மாநகரத்திற்கு அனுப்பப்பட்டார் .
அப்போது பிரான்சுக்கும் , பிரிட்டனுக்கும் இடையே போர் நடந்து கொண்டிருந்தது . ஆகவே , ஜட்சன் பயணம் செய்த கப்பல் எதிரிகளால் பிடிபட்டது . அவர் ஒரு பாழடைந்த சிறிய அறைக்குள் கைதியாகத் தள்ளப்பட்டார் . தன்னைக் கைதியாக்கினவர்களுக்கு இயேசு கிறிஸ்துவைப் பற்றி சொல்வதற்கு தனக்கு பிரஞ்சுமொழி தெரியவில்லையே என்று ஜட்சன் அதிகமாக வேதனை அடைந்தார் . முன்பின் அறியாத ஒர் அமெரிக்கன் ஒருநாள் ஜட்சன் அடைக்கப் பட்டிருந்த சிறைக்கு வந்து ஜட்சனை ராணுவ உடைகளினாலே மறைத்து அவரை வெளியே கொண்டு வந்து விட்டு விட்டார் . அவர் இலண்டன் அருட்பணி செயற்குழுவிற்குக் கொண்டு சென்ற பரிந்துரைகளை அது எற்றுக் கொள்ளவில்லை என்பதை அவர் இங்கிலத்தை அடைந்ததும் கண்டறிந்தார் . என்றாலும் அமெரிக்க அருட்பணியின் செயற்குழு அவரைத் தாங்க முன்வந்தது .
முன்பின் அறியாத பூமியில்
அதோனிராம் ஜட்சன் , ஆன் ஹா செல்டின் என்ற அம்மையாரை 1812ஆம் ஆண்டு மணந்தார் . பிறகு மிஷனெரிப் பணி செய்யும் பொருட்டாக இந்தியா நோக்கிப் பயணமானார் . ஆனால் அவருக்கான கடவுளுடைய திட்டங்கள் அவரை இன்னொரு தேசத்திற்கு நேராகத் திசை திருப்பியது . அக்காலத்தில் அதிகாரத்திலிருந்த கிழக்கிந்தியக் கம்பெனியார் இந்தியாவில் மிஷனெரி பணி நடைபெறுவதை விரும்பவில்லை . ஆகவே , நான்கு மாத நெடுங்கடல் பயணத்திற்கு பிறகு இந்தியா வந்திறங்கிய ஜட்சன் தம்பதியரை அவர்கள் உடனே அமெரிக்கா திரும்பிச் செல்ல வேண்டும் என்று கட்டளையிட்டனர் . இது அவர்களை அதிகமாகச் சோர்ந்து போகச் செய்தது . கடவுள் அவர்களை மிஷனெரியாகச் செல்ல வேண்டும் என்று அழைக்க வில்லையா ? ஆகவே , அவர்கள் இந்தியாவிலேயே தங்க வேண்டும் என்று தீர்மானித்தார்கள் . ஆயினும் பர்மாவில் உள்ள ரங்கூன் சென்று இறங்கும் வரைக்கும் அவர்கள் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குக் கட்டாயமாகக் கப்பல் பயணம் செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது . இப்படியாக கடவுள் அவர்களுக்கென்று தெரிந்தெடுத்த இடம் பர்மாவாக மாறியது . அந்நாட்களில் பர்மா :
அந்நாட்களில் பர்மா ,
சர்வாதிகாரியான ஒரு மன்னனால் ஆட்சி செய்யப்பட்டு வந்தது . மக்கள் அவனுக்கு அடிமைகளாகவே இருந்தனர் . மிஷனெரிகளுக்கு அவன் ஓர் எதிரியாகவே விளங்கினான் . புத்தமதம் பர்மாவின் தேசிய மதமாக இருந்தது . அது பெரும் அளவில் அங்கு பரவியிருந்தது . ஒரு கிறிஸ்தவன்கூட பர்மாவில் கிடையாது . கிறிஸ்துவைப் பற்றி அங்கு ஒருவரும் ஒருபோதும் கேள்விப் பட்டதே கிடையாது . கிறிஸ்து தங்கள் உள்ளங்களில்
இல்லாதபடியினால் துக்கம் நிறைந்த முகத்தோடும் , பாரம் நிறைந்த இருதயத்தோடும் அங்குள்ள மக்கள் அங்கும் இங்குமாக நடந்து திரிந்து கொண்டிருந்தார்கள் . இவ்விதமான மக்களைப் பார்த்த ஜட்சனும் அவரது மனைவியாரும் அதிகமாக வேதனை அடைந்தார்கள் . அந்த மக்களுக்குக் கிறிஸ்துவைப் பற்றிச் சொல்லும் வாய்ப்பிற்காக அவர்கள் மிகவும் அதிகமாக சிரத்தை எடுத்து அந்த நாட்டு மொழியைக் கற்க ஆரம்பித்தார்கள் . ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு ஜட்சனின் மனைவி இந்தியாவில் உள்ள சென்னைக்கு மருத்துவ உதவிக்காகச் சென்றார் . அங்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது . ஆனால் எட்டுமாத காலத்திற்குப் பிறகு அந்தக் குழந்தை இறந்து விட்டது . இதனால் அவர்கள் பெரிதும் வேதனை அடைந்தனர் .
கடுமையான உழைப்பு :
பர்மியர்களுக்கு அவர்களுடைய மொழியிலேயே கடவுளுடைய வார்த்தை கிடைக்கும் என்றால் அவர்களால் இரட்சிப்பை கண்டடைய முடியும் என்பதை அதோனிராம் நம்பினார் . ஆகவே , அவர் ஒருநாளில் 14 மணி நேரம் வரை பர்மிய மொழியை ஆழமாகக் கற்று வேதாகமத்தை மொழிபெயர்க்க ஆரம்பித்தார் . ஒரு சிறிய அச்சிடும் கருவியை வைத்துக் கொண்டு அதன்மூலம் அவர் துண்டுப் பிரதிகளையும் வேதாகமத்தின் பகுதிகளையும் அச்சிடத் துவங்கினார் . அச்சிடும் தொழில் அறிந்திருந்த திரு . ஹாக் என்னும் புதிய மிஷனெரி தன்னுடைய மனைவியோடு அங்கு வந்து சேர்ந்தார் . எனவே , மத்தேயு எழுதின நற்செய்தி நூல் வெகுவிரைவாக அச்சிடப்படுவதற்கான வேலைகள் துவக்கப் பட்டன . இரண்டு ஆண்டுகள் கடுமையாக உழைத்தார் .
பிறகு ஒருநாள் ஜட்சனிடம் ஒருவர் வந்து தனக்குப் படிப்பதற்கு இன்னும் கிறிஸ்துவைப் பற்றி எழுதப்பட்ட பகுதிகள் தேவை என்று கேட்டார் . மத்தேயு நற்செய்தி நூலில் ஐந்து பக்கங்கள் மட்டுமே அச்சமயம் ஆயத்தமாக இருந்தது . அந்தப் பகுதியினை ஜட்சன் அவருடைய கரத்தில் கொடுத்தார் . பொதுமக்கள் கூடுவதற்கென்று ஓர் இடத்தை ஜட்சன் அமைத்து அதில் அவர் பர்மிய மொழியில் பிரசங்கம் பண்ணினார் .
இரவு நேரங்களில் அவர் அதிக நேரம் மக்களுக்காக ஜெபித்துக் கொண்டிருப்பார் . இவர் பேசுவதைக் கேட்பதில் அநேகர் அக்கறை காட்டினார்கள் . அவர்களில் ஒருசிலர் புத்தமத குருக்களாகவும் இருந்தார்கள் . ஜட்சன் பர்மாவில் வந்து இறங்கி ஆறு ஆண்டுகள் கடந்த பின்னரே " மௌங் நவ் " என்ற மனிதன் ஆண்டவரை ஏற்றுக்கொண்டு ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ள முன் வந்தான் . துன்பம் , மரணம் வரினும் தான் தைரியமாக அதை ஏற்றுக்கொள்ள முன் வந்தான் . படிப்படியாக இன்னும் சிலர் முன்வந்தார்கள் . ஆக , ரங்கூன் நகரத்தில் உண்மையான பதினெட்டு கிறிஸ்தவர்கள் தோன்றினார்கள் . அந்த நாட்களிலே ஆன் அதிகமாக சுகவீனம் அடைந்ததினாலே சிகிச்சைக்காக அமெரிக்க தேசத்துக்கு அனுப்பப்பட்டார் .
ஜட்சன் தன்னுடைய போதனைகளையும் மொழிபெயர்ப்புகளையும் தொடர்ச்சியாக செய்து கொண்டு வந்தார் . இவர் இறுதியாக புதிய ஏற்பாட்டை மொழி பெயர்த்து முடித்தார் . அப்போது புதிய சக்ரவர்த்தி ஒருவர் பதவி ஏற்றார் . தனது வேலைக்கு அனுமதி பெறும்படி அந்த சக்கரவர்த்தியைக் காணச் சென்றார் .
சிறைக்கூடத்தில் :
சக்கரவர்த்தி இருந்த இடமாகிய ஆவா பட்டணத்திற்கு ஜட்சனும் அவர் மனைவியும் சென்றபோது அவர்கள் அங்கே சரியான முறையில் வரவேற்கப்படவில்லை . பிரிட்டனுக்கும் , பர்மாவுக்கும் இடை /ே8 யுத்தம் நடந்தபடியால் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் எல்லாரும் ஒற்றர்களாக எண்ணப்பட்டார்கள் . ஜட்சன் கைது செய்யப்பட்டு 0 மாதங்களாக சிறைக்கூடத்தில் வைக்கப்பட்டார் . சிறைக்கூடம் எல்லாவிதமான கொடுமைகளுக்கும் , அசுத்தமான நிலை களுக்கும் உரியது . ஜட்சனுடைய கால்கள் விலங்கிடப் பட்டன . நடுவே நீண்ட கோல் ஒன்று செலுத்தப்பட்டு தூக்கி வைக்கப்பட்டபடியினாலே அவர் தலை , தோள் ஆகியவை மட்டுமே தரையில் படத்தக்கதாக வைக்கப்பட்டார் , சங்கிலிகள் அவர் கால்களில் உள்ள சதையை அதிகமாகக் கிழித்தபடியினாலே வலியின் வேதனையால் துன்பப்படுத்தப் பட்டார் . அவருக்கு எந்தவிதமான ஆகாரமோ தண்ணிரோ கொடுக்கப்படவில்லை . காலையில் ஒருசில நிமிடங்கள் மட்டுமே அவர் சுத்தமான காற்றை சுவாசிப்பதற்கும் , உடற்பயிற்சிக்கென்றும் சிறைக்கூடத்தை விட்டு வெளியே அனுமதிக்கப்படுவார் .
சிறிது நேரம் கழித்து மறுபடியுமாக சிறைக்கூடத்தில் அடைத்து விடுவார்கள் . இவ்விதமான சங்கடமான நிலையில் அவர் வைக்கப்பட்டார் . அவருக்கு உணவையும் , தண்ணீரையும் ஆன் அம்மையார் கொண்டு வந்தார்கள் . அனுதினமும் அதிகாரிகளைப் பார்த்து தன் கணவனை விடுவிக்கும்படியாக அதிகமாக மன்றாடினார்கள் . இறுதியாக ஜட்சன் ஒரு திறந்த கூடத்திற்கு மாற்றப்பட்டார் . அவர் மனைவி ஆன் அம்மையார் தினமும் இருள் கவ்வும் வேளையில் அவரைச் சந்தித்து வந்தார் . அவர்கள் இதுவரையும் மொழிபெயர்த்திருந்த வேதாகமப் பகுதிகளை பர்மிய அரசாங்கம் அழித்துவிடும் என்ற எதிர்ப்பார்ப்பு இருந்தது . எனவே , ஆன் அம்மையார் அந்த மொழிபெயர்ப்பு பிரதிகளை எல்லாம் சேர்த்து ஒரு தலையணைப்போல் தைத்து சிறைச்சாலைக்குக் கொண்டு வந்து ஜட்சனிடம் கொடுத்தார் . மிகக் கவனத்துடனும் ,
பொறுப்புடனும் ஜட்சன் தன் தலைக்குச் சீராக இதம் அளிக்கும் தலையணைபோல் இரவு பகலாகப் பத்திரமாக அதை வைத்துக் கொண்டார் . ஆன் அம்மையாருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது . அருமையாக தான் பெற்றெடுத்த அக்குழந்தையை அதன் தந்தை காண சிறைக்கூடத்திற்குக் கொண்டு வந்தார் . ஆனால் , ஜட்சன் காவல் நிறைந்த இருளான சிறைக்கூடத்துள் அடைக்கப்பட்டிருந்தார் . சிறைக்கூடத்தின் கதவுகள் அல்லது அங்கே உள்ள சிறிய இடைவெளியின் வழியாக வரும் காற்றையே சுவாசிக்க வேண்டிய நிலையில் இருந்தார் . சிலநாள் கழித்து அவரும் அவரோடு இருந்த சிறைக் கைதிகளும் திடீர் என்று சற்று தூரத்திற்கு அப்பால் உள்ள ஒரு கிராமத்திற்குக் கொண்டு போகப்பட்டார்கள் . காய்ச்சலினாலும் , நோயினாலும் ரத்தம் வடியும் கால்களோடும் இருந்த இவர்கள் மிகவும் வேதனையோடு நடந்தே சென்றனர் . ஆன் அம்மையாரும் தன் குழந்தையுடன் அவர்களைப் பின்தொடர்ந்தார் . அந்தக் கிராமப்புறத்தில் இருந்த ஒரு தானியக் கூடத்தில் ஆன் அம்மையார் தங்க அனுமதிக்கப்பட்டார் .
பாடுகளின் தொடர்ச்சி :
இருபது மாதங்கள் பெரும்பாடுபட்ட பிறகு ஜட்சன் பர்மிய அரசின் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்ற அனுமதிக்கப்பட்டார் . ஆறு வாரங்கள் அவர் இந்தப் பணியைச் செய்தபிறகு வீட்டுக்குச் செல்ல அனுமதி கிடைத்தது . ஆனால் அவர் வீடு சென்றபோது அவருக்குக் காத்திருந்த காட்சி அவர் மனதை அதிகமாக உருக வைத்தது . வீட்டின் ஓர் அறையிலே ஒரு பர்மியப் பெண் அரை பட்டினியாகக் கிடந்த ஒரு பிள்ளையோடு இருந்தாள் . அடுத்த அறையிலே ஆன்
1 HILFI 71 % 10 : 07 AM அம்மையார் கடுமையான காய்ச்சலினால் பீடிக்கப் பட்டவராகப் படுத்திருந்தார் . ஆன் அம்மையார் குணம் அடைந்த பின்னர் , குடும்பமாக ஆம்கஸ்ட்டு என்ற இடத்திற்கு மாறிச் சென்றார்கள் . அங்கே அம்மையாரை விட்டுவிட்டு ஜட்சன் பிரிட்டிஷ் கமிஷனர் அவர்களுக்கு உதவி செய்வதற்காக ஆவா பட்டணத்திற்குச் சென்றார் . ஜட்சன் அங்கு இருக்கும்போது ஆன் அம்மையார் இறந்த செய்தி அவருக்குக் கிடைத்தது . மனைவியின் இறுதி நேரத்தில் உடன் இருக்க முடியாத நிலையினை எண்ணி ஜட்சன் துக்கப்பட்டார் . சில மாதங்களுக்குள் தன் அருமையான பெண் குழந்தையையும் இழந்தார் .
இந்நிகழ்ச்சி அவருடைய துக்கத்தை இன்னும் அதிகப்படுத்துவதாகவே இருந்தது . துக்கத்தாலே பாரம் அடைந்த அவர் தன் சரீரத்திலேயும் அதிகமாகத் தொய்ந்து போனார் . இந்நிலைமையில் இருந்த ஜட்சன் மக்கள் கூட்டத்திலிருந்து தன்னைத்தானே தனிமைப் படுத்திக் கொண்டு அண்மையில் இருந்த காட்டில் ஒரு சிறிய குடிசை அமைத்து அதில் சில காலம் தங்கியிருந்தார் . இச்சூழ்நிலையிலும் நடந்த எல்லாக் காரியங்கள் மூலமாக தன்னை ஆண்டவர் தமது அருகில் அதிகமாகச் சேர்த்துக் கொள்வதற்கான ஒரு வாய்ப்பாகத் தான் ஏற்படுத்தி இருக்கிறார் என்று ஜட்சன் உணர்ந்தபடியால் , அவர் ஆண்டவருடைய அழைப்பையோ அவர் தனக்குச் செய்த காரியங்களைப் பற்றியோ கேள்விகள் கேட்கவில்லை . அதன்பிறகு அவர் மௌல்மீன் என்ற ஊரில் ஆண்டவருடைய வார்த்தையைப் பிரசங்கிக்கவும் தொடர்ந்து ஆண்டவருடைய வார்த்தையை மொழிபெயர்க்கவும் ஆரம்பித்தார் . பின்பு சபையும் அங்கே உண்டானது . 1834ஆம் ஆண்டு முழு வேதாகமமும் பர்மிய மொழியில் வெளிவந்தது . 1840ஆம் ஆண்டு அது முழுவதுமாகத் திருத்தி அமைக்கப்பட்டது .
அதுமட்டுமல்லாமல் , 100க்கும் அதிகமான மக்களுக்கு கானஸ்நானமும் அளிக்கப்பட்டது . கடுமையான உழைப்பினால் அவர் பலம் முழுமையும் குன்றி , காசநோயினால் பாதிக்கப்பட்டார் .
இறுதி ஓட்டம் :
33 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னரே ஜட்சன் தனது தாய்நாடாகிய அமெரிக்காவுக்குத் திரும்பிச் சென்றார் . என்றாலும் அவர் அங்கே அதிகநாள் தங்கியிருக்க விரும்பவில்லை . மீண்டும் அவர் பர்மாவுக்குத் திரும்பினார் . திரும்பியவர் திரும்பவும் தன் தாய்நாட்டைக் காணவே இல்லை . அவர் பர்மிய மொழியில் ஒரு சொல்லகராதியை அமைத்து முடித்தார் . தனக்கு சுகம் கிடைப்பதற்காக அவ்வப்போது கடல் யாத்திரை செய்தார் . அவ்விதமாக , 1850ஆம் ஆண்டு செய்த கடம்பயணப் ஒன்றில் அவர்பவித்தார் " இந்த பர்மாவில் சிலுவை நிரந்தரமாக நாட்டப்படும் வரைக்கும் நான் இந்த இடத்தைவிட்டுச் செல்வது இல்லை " என்று இளைஞனாக இருக்கும் போதே வைராக்கியமாகத் தீர்மானித்து இருந்தார் .
அதன் பயனாக 30 ஆண்டுகள் கழிந்த பிறகு பர்மாவில் 63 ஆலயங்களும் , 163 அருட்பணியாளர்களும் ஊழியர்களும் , ஆண்டவரை ஏற்றுக்கொண்ட 7000க்கும் மேலானவர்களும் இருந்தார்கள் . இயேசு கிறிஸ்துவை தங்கள் வாழ்க்கையிலே சொந்த இரட்சகராக ஏற்காதவர்கள் நித்திய தண்டனைக்கு உட்பட்டவர்கள் என்பதை ஜட்சன் பூரணமாக நம்பினார் . ஆகவே , அவர் தனக்கு இருந்த மேலான வசதிகள் , தன்னுடைய * சியங்கள் , தனக்கு அருமையானவர்கள் எல்லாரையும் விட்டு விட்டு , துன்பம் , வேதனை , கொடுமைகள் இவைகள் எல்லாவற்றையும் மகிழ்ச்சியோடு
ஏற்றுக்கொண்டார் . பர்மிய மக்களுக்கு இயேசு கிறிஸ்துவை எடுத்துரைப்பதற்கு முன்வந்தார் . " நான் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவன் , ஏற்றுக் கொண்டவள் " என்று அறிக்கை செய்கிற நீ , உன்னுடைய நண்பர்கள் நடுவிலே , இன்னும் பிற நாடுகளிலே உள்ள மக்கள் மத்தியிலே ஆண்டவரை அறியாதவர்களாய் இருப்பவர்களைப் பற்றிய ஒரு கரிசனை நிறைந்த நிலைமையிலே இருக்கிறாயா ? ஆண்டவரை அறியாத மக்கள் இருக்கும் ஓர் இடத்திற்கு , ஒரு நாட்டிற்கு நீ செல்ல வேண்டும் என்று ஆண்டவர் உன்னைத் திட்டமாக அழைத்தால் நீ அங்கு செல்ல ஆயத்தமா ?
மென்மையான ஆடையினூடே பனிக் குளிரானது பாய்ந்து கொண்டிருந்தது. கற்களும் முட்களும் அவரது கால்களைக் கிழித்துக்கொண்டிருந்தன. என்றாலும் பனியால் மூடிய மலைகள்மீது அவர் நடந்து கொண்டே இருந்தார். அவருடைய இரத்தம் கசியும் பாதங்கள் அவருக்குப் பின்னால் வெண்மையான பனியின்மீது அடிச்சுவட்டை ஏற்படுத்திக்கொண்டிருந்தன. ஒரிடத்தில் அவர் உட்கார்ந்து தன் கால்களின் புண்களைக் கட்ட ஆரம்பித்தார். அவ்வழியே அவருக்குப் பின்னாக வந்த ஒருவர் அவரைப் பார்த்து நின்று அவரோடு பேச ஆரம்பித்தார். ஐயா எப்படி இருக்கிறீர்கள்? என்று கேட்டார். அதற்கு என்னுடைய அருமை இரட்சகராம் இயேசு கிறிஸ்துவில் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று சாது சந்தர் சிங் பதில் கூறினார்.
ஏன் நீங்கள் இரத்தம் கசியும் வெறும் கால்களால் மலைமீது இவ்விதமாகப் பயணம்செய்யவேண்டும்? கல்வாரி சிலுவையிலே தம் கால்களில் இரத்தம் சிந்தின அவரை மக்களுக்குக் காண்பிப்பதற்காக இவ்விதமாகச் செல்கிறேன் என்று பதிலளித்தார். சிலுவையில் அறையுண்ட இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியை திபெத் நாட்டிற்கு இன்னும் ஆண்டவரைப் பற்றிக் கேள்விப்பட்டிராத இடங்களுக்கும் எடுத்தச் செல்வதற்காகத் தனக்குக் கிடைத்த தெய்வீக அழைப்பை சாது சுந்தர் சிங் முழுவதும் நம்பி அதைச் செயல்படுத்தினார். இளமைப் பருவம் சாது சுந்தர் சிங் என்று பொதுவாக அழைக்கப்படும் சுந்தர் சிங் 1889ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 3ம் தேதி பஞ்சாப் மாசிலத்தில் உள்ள ராம்பூர் என்ற இடத்தில் பிறந்தார்.
இவர் பெற்றோர் சீக்கிய மார்க்கத்தைச் சோந்தவர்களாய் இருந்தனர். அவருடைய தாயார் மத நம்பிக்கையில் மிகவும் பக்தி நிறைந்தவராய் இருந்தார். காலையில் சுந்தர் எழுந்த உடனே முதன் முதலாகத் தேவையான நேரத்தைக் கடவுளிடத்தில் பிரார்த்தனை செய்வதில் செலவழிக்கவேண்டும் என்றும், அதன் மூலம் ஆன்மீக ஆகாரத்தையும் ஆசிகளையும் பெற்று அதன் பின்னரே அவர் காலை ஆகாரத்தை உண்ணவேண்டும் என்று அவரது தாய் மிகவும் வலியுறுத்தினார். தன் மகனை மிகவும் அதிகமாக நேசித்ததினால் தன்னுடைய மகனும் தங்களுடைய மார்க்கத்தை அதிகமாக நேசித்து அதிலே ஒரு பக்தி நிறைந்த சாதுவாக மாறவேண்டும் என்று விரும்பினார்.
இளமைப் பருவத்திலிருந்தே சுந்தர் இந்து மார்க்கத்தின் புனித நூல்களை, குறிப்பாக பகவத் கீதையை ஆழ்ந்து படித்தார். அவர் ஏழு வயதாக இருக்கும்போது அதை மனப்பாடம் செய்யவும் ஆரம்பித்தார். அவருக்கு மிகவும் அருமையாக இருந்த ஒரு நண்பனின் மறைவு புறமதத்தின் புனிதப் புத்தகங்களைப் படிக்கும்படி தூண்டிற்று. அநேக சமயங்களில் வீட்டில் அனைவரும் நித்திரைக்குச் சென்றபின்பு சீக்கியர்களின் புனித புத்தகமாகிய கிரந்தத்தையோ, அல்லது இந்து மத நூல்களையோ அல்லது முஸ்லீம்களுடைய குரானையோ அவர் நுட்பமாகப் படிப்பார். ஆவிக்குரிய வாழ்க்கையில் திருப்தி காணவேண்டும் என்னும் வாஞ்சை ஆயிரக்கணக்கான மக்களுக்கு உண்டு. அதே வாஞ்சை சுந்தரையும் பற்றிக்கொண்டது. ஜீவிக்கும் கிறிஸ்துவைச் சந்தித்தல் சுந்தர் படித்துக் கொண்டிருந்த கிராமத்து மிஷன் பள்ளிக்கூடத்தில்தான் முதன் முதலாக அவருக்குக் கிறிஸ்து மார்க்கத்தோடு தொடர்பு ஏற்பட்டது. வேதபுத்தகத்திலிருந்து வசனத்தை வாசிக்கச்சொன்னபோது அவருடைய உள்ளம் அதை எதிர்த்துக் குமுறியது. புதிய ஏற்பாட்டைப் பகிரங்கமாக் கிழித்து எறிந்ததின்மூலம் கிறிஸ்து மார்க்கத்தினை எதிர்க்கும் எல்லா மாணவர்களுக்கும் அவர் தலைவரானார்.
விரைவில் அவர் அந்த மிசன் பள்ளிக்கூடத்தை விட்டு அரசு பள்ளிக்கூடத்தில் போய்ச் சேர்ந்தார். மேலும் தொடர்ந்து கிறிஸ்து மார்க்கத்தையும் கிறிஸ்தவ விசுவாசத்தையும் அவர் ஆழமாகக் கண்டித்தார். பல சமயங்களில் தெருவில் அல்லது திறந்த வெளியில் நின்று பிரசங்கிக்கும் மிஷனறிமார்கள் மீது கற்களையோ அல்லது சேற்றையோ எடுத்து வீசும்படியாக முரடர்களை அவர் தூண்டிவிடுவதும் உண்டு. அதுமட்டுமல்லாமல் அவர் புதிய ஏற்பாட்டை பகிரங்கமாகப் பலா முன்னிலையில் தீயிட்டுக் கொளுத்தியதும் உண்டு. கிறிஸ்தவ மார்க்கத்தையும் எதிர்த்துப் போராடினார். அதனால் அவருடைய இருயத்தில் குழப்பமும் அமைதியின்மையும் ஏற்பட்டது.
இறுதியில் அவர் வேதத்தை வாசிக்க ஆரம்பித்தார். உண்மையான சமாதானத்தைக் கண்டுபிடிக்கவேண்டும் அல்லது தன் வீட்டின் பக்கத்தில் கடந்து செல்லும் ரயில் முன் விழுந்து உயிரை மாய்த்துக்கொள்ளவேண்டும் என்று உறுதிபூண்டார். ஒருநாள் அதிகாலை மூன்று மணிக்கெல்லாம் அவர் எழுந்தார். குளித்து விட்டு கடவுளே, உண்மையான கடவள் ஒருவர் உண்டு என்றால் உம்மை எனக்குக் காண்பியும், இரட்சிப்பிற்கு உரிய வழியையும் சாந்தியையும் நீர் எனக்குத் தரவேண்டும் என்று சொல்லி அவர் ஜெபிக்க ஆரம்பித்தார். உடனே அந்த அறையில் ஒரு பேரொளி வீசியது. அதில் அவர் மிகவும் வெறுத்து வந்த இயேசு கிறிஸ்துவின் சாயலைக் கண்டார்.
அவர் தமது ஆணிகள் பாய்ந்த கரத்தைச் சுந்தருக்குக் காண்பித்து நீ ஏன் என்னைத் துன்பப்படுத்துகிறாய்? நான் உன்னுடைய இரட்சகர் என்று சொன்னார். இப்பொழுதே சுந்தரின் இதயம் மாபெரும் மகிழ்ச்சியினால் நிரம்பியது. அதுவரையில் தன் வாழ்க்கையில் நாடி தவித்துக் கொண்டிருந்த ஆவிக்குரிய தாகமும் தணிந்ததை அவர் உணர்ந்தார். அவர் வாழ்க்கை முழுவதும் மாறியது. அவர் அடைந்த இந்த மகத்தான பரவசமான அனுபவத்திலிருந்து அவரைச் சந்தேகப்பட வைக்கவோ அல்லது மாற்றவோ யாராலும் முடியவில்லை. துன்பப்படுவதற்காக அழைப்பு இவ்விதமான இந்தப் புதிய அனுபவத்தைப் பெற்ற சுந்தர் உடனடியாக தனது தந்தையிடம் சென்று தான் ஒரு கிறிஸ்தவனாகி விட்டதைக் கூறினார்.
அவருடைய தந்தை இதை முதலில் நம்பவில்லை. ஆனால் பிறகு அவருடைய குடும்பம் முழுவதுமே சுந்தர் கிறிஸ்தவனாக மாறுவதற்கு எடுத்த தீர்மானத்தைக் கண்டு அதிர்ச்சியுற்றது. தன்னுடைய தாயாரின் மார்க்கத்திற்கு எந்த விதமான களங்கமும் ஏற்படுத்திவிடக்கூடாது என்று சுந்தரை அவரது தந்தையார் மிகவும் அதிகமாகக் கெஞ்சிக் கேட்டுக்கொண்டார். அவருடைய செல்வந்தரான மாமா ஒருவர் தன்னுடைய பெரிய மாளிகைக்கு அழைத்துச் சென்று அங்கே குவியல் குவியலாக வைக்கப்பட்ட பணத்தையும், வைரத்தையும், பலவிதமான விலையுயர்ந்த கற்களையும் அவருக்குக் காட்டினார்.
சுந்தர் புதிதாக ஏற்றிருக்கிற இந்த விசுவாசத்தைக் கைவிடுவதானால் ஏற்றிருக்கிற இந்த விசுவாசத்தைக் கைவிடுவாரானால் இவை எல்லாம் கொடுப்பதாக கூறினார். ஆனால் இயேசு கிறிஸ்துவின் அன்பு மிகவும் வலிமையுடன் ஆழமாக இருந்தது. சுந்தரின் இருதயம் இயேசுவை மறுதலிக்கவில்லை. சுந்தர் வீட்டை விட்டுத் துரத்தப்பட்டார். உண்பதற்கோ உணவோ, தங்குவதற்கு உறைவிடமோ இல்லை. ஒரு மரத்தின் அடியில் தங்கினார். பிறகு மீண்டும் அவர் வீட்டிற்குள் அனுமதிக்கப்பட்டார். ஆனால் வீட்டுக்கு வெளியில் வைத்து உணவு கொடுக்கப்பட்டது. தாழ்த்தப்பட்ட வேலை ஆட்களோடு அவர் தங்குவதற்கு அனுமதிக்கப்பட்டார்.
இயேசு கிறிஸ்துவுக்காக இனி தொடர்ந்து அவர் அனுபவிக்கப்போகிற பாடுகளுக்கு இது ஆரம்ப கட்டமாகும். என்றாலும் மனதிலே பரிபூரண மகிழ்ச்சியோடு தனது நாயகராம் இயேசு கிறிஸ்துவுக்காக எதையும் பொறுமையோடு ஏற்றுக்கொண்டார். கடைசியாக நஞ்சு கொடுக்கப்பட்டு வீடடிலிருந்தே துரத்தப்பட்டு நோய்வாய்ப்பட்டார். இறக்கும் நிலையையும் அடைந்தார். என்றாலும் அவரிடம் அன்புகொண்ட ஆண்டவர் தம் சித்தத்தைச் சுந்தரிலே நிறைவேற்ற மரணப் பிடியிலிருந்து விடுவித்தார். இந்தக் கொடி நோயிலிருந்து சுந்தர் விடுபட்டார். இவர் லூதியானாவில் இருந்த மிஷனறிகளிடத்தில் சென்று அவர்களோடு தங்கினார். வேதவசனங்களைக் கற்க ஆரம்பித்தார்.
சுந்தர் தம் 16ம் பிறந்த தினத்தன்று சிம்லா நகரத்தில் ஞானஸ்நானம் பெற்றார். ஆழமான சிந்தனைக்கும் உறுதியான ஜெபத்திற்கும் பின்னர் சாது சுந்தர் சிங் தன்னைப் பரிபூரணமாக கிறிஸ்துவின் கரத்தில் அர்ப்பணித்தார். அவர் ஒரு கிறிஸ்தவ சாதுவாக மாறினார். தனிப்பட்ட முறையிலே தனக்குச் சொந்தம் என்று வைத்திருக்க உடைமைகள், தன்னுடைய புத்தகங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு அவர் காவிஉடை அணிந்துகொண்டார். வெறும் கால்களோடும் கையில் ஏந்திய வேதபுத்தகத்தின் பகுதியான புதிய ஏற்பாட்டோடும் எந்தவிதமான மனிதரின் உதவியும் இல்லாத நிலைமையில் தன்னை ஆட்கொண்ட கிறிஸ்துவுக்கா அவர் புறப்பட்டுச் சென்றார்.
நானோ நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சிலுவையைக் குறித்தேயல்லாமல் வேறொன்றையுங்குறித்து மேன்மை பாராட்டாதிருப்பேனாக. அவரால் உலகம் எனக்குச் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறது. நானும் உலகத்திற்குச் சிலுவையிலறையப்பட்டிருக்கிறேன் (கலா.6:14) என்ற வசனத்தைத் தன்னுடைய வாழ்க்கையில் குறிக்கோளாக அவர் ஏற்றுக்கொண்டார். என்மீது உள்ள அன்பினால் இயேசு கிறிஸ்து தம்மைத் தியாகம் பண்ணினார். அதைப் போலவே நானும் இயேசு கிறிஸ்துவின்மேல் உள்ள என்னுடைய அன்பினால் என்னைத் தியாகம் செய்யவேண்டும் என்று அடிக்கடி கூறுவது உண்டு.
சுந்தர் ஒரு சாது தனது வாலிபத்தின் துவக்கத்தில் சுந்தர் தனது எஐமானாகிய இயேசு கிறிஸ்துவுக்காகப் பட்டினி, குளிர், சுகவீனம், மற்றும் சிறைவாசத்தையுங்கூட அனுபவித்து விட்டார். தனது எஐமானின் அன்பைப் கேட்டிராத மக்களுக்கு அதனை அறிவிக்கும்படி அவர் ஆண்டுதோறும் பஞ்சாப், காஸ்மீர், ஆப்கானிஸ்தான், நேபாளம், திபெத் ஆகிய இடங்களுக்கு மலைகள், காடுகள் வழியாகத் தன்னந்தனியாகப் பிரயாணம் செய்தார். பல வேளைகிளல் பகை, எதிர்ப்பு இவற்றைச் சந்தித்ததுண்டு. பசியோடு விரட்டப்பட்ட நிலமையில் அவர் காடுகளுக்கு உள்ளாகச் சென்று அங்கே தங்குவது உண்டு. குளிர்ந்த காற்றிற்கும் மழைக்கும் தன்னைத் தப்பவிப்பதற்காகக் காடுகளிலே உள்ள குகைகளில் அவர் தங்குவது உண்டு.
பல வேளைகளில் அவர் தான் தங்கயிருக்கும் குகைகளைக் காட்டு மிருகங்களோடு பகிர்ந்து கொள்வதும் உண்டு. ஒருநாள் காலையில் ஒரு சிறுத்தை தான் தங்கியிருந்த குகையில் தனக்குச் சமீபத்தில் உறங்கிக் கொண்டிருப்பதை அவர் பார்த்தார். மற்றொரு முறை ஒரு வேங்கைப்புலியோடுகூட அவர் படுத்து உறங்கியதையும் அறிந்தார். ஒரு நாள் அதிகாலையில் தன்னுடைய போர்வையின் கீழே ஏதோ ஒன்று இருப்பதுபோல, உணர்ந்த அவர் அது என்ன என்று பார்த்தபோது, குளிரால் பாதிக்கப்பட்ட ஒரு பெரிய நல்ல பாம்பு அனல் பெறுவதற்காக அவரோடுகூடப் படுத்திருந்ததையும் அறிந்தார். இமயமலைப் பகுதிகளில் உள்ள கணவாய் வழியாகப் பிரயாணம்பண்ணுவது என்றாலும் அவர் எப்போதுமே வெறுங்கால்களோடுதான் தன் பிரயாணத்தை மேற்கொண்டார்.
ஆனபடியினால், கற்கள், பனிக்கட்டிகள் போன்றவற்றினால் அவர் கால்கள் கிழிக்கப்பட்டு அவர் கால்களில் இரந்து இரத்தம் கசிந்து கொண்டே இருக்கும். ஆகவே அவர் இரத்தம் கசியும் கால்களை உடைய அப்போஸ்தலன் என்று அழைக்கப்பட்டார். பல வேளைகளில் பலவிதமான முறைகளில் அவர் துன்பப்படுத்தப்படும்போதும், அவர் மகிழ்ச்சியோடும் பொறுப்போடும் இருப்பதைக் கண்ட அநேகர் அவருடைய நற்செய்தியை ஏற்றுக்கொள்ள முன்வந்தனர். ஒரு சமயம் ஒரு கிராமத்துக்குச் சென்று அங்கிருந்த மரத்தடியில் உட்கார்ந்து பாடல்கள் பாட ஆரம்பித்தார்.
அதி சீக்கிரத்தில் ஒரு பெரிய கூட்டம் கூடிவிட்டது. ஆனால் அவர் இயேசு கிறிஸ்துவைப் பற்றி அங்கு பேசுவதைக் கேட்ட உடனே அந்தக் கூட்டம் அவர்மேல் கோபம் கொண்டது. அக்கூட்டத்தில் குரூப்பராம் என்ற ஒருவன் மிகவும் மூர்க்கம்கொண்டு, சாதுவைப் பலமாகத் தாக்கினபடியினால் அவர் உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து கீழே விழுந்தார். அவர் கைகளும், முகமும் , கன்னங்களும் கீழே கிடந்த பாறைகளினால் காயப்பட்டு இரத்தம் கசிய ஆரம்பித்தது. என்றாலும் மிகவும் சாந்தமாக அவர் எழுந்து அந்த மக்களின் மன்னிப்புக்கா ஜெபம்செய்து விட்டு, மறுபடியும் ஆண்டவரின் அன்பைப் பற்றிக் கூற ஆரம்பித்தார். இவரது சாந்தம் குரூப்பராம் என்பவனை ஆழமாகத் தொட்டது.
பின்பு அவன் ஒரு விசுவாசியாக மாறினான். கொள்ளைக்காரனின் உறைவிடமான ஒரு காட்டினை ஒருமுறை சுந்தர; சிங் கடந்து செல்ல நேரிட்டது. தீடிரென்று அவரை நோக்கி திருடர் நால்வர் பாய்ந்து வந்தனர். ஒருவன் கையிலே கூர்மையான கத்தியை வைத்திருந்தான். தனக்கு முடிவு வந்துவிட்டது என்று எண்ணிய சுந்தர் மௌனமாக ஜெபிக்க ஆரம்பித்தார். இவ்விதமாக அவர் ஜெபிப்பதைக் கண்ட அவன் அச்சரியப்பட்டு அவர் யார் என்று விசாரித்தான். தான் ஒரு கிறிஸ்தவ சாது என்றார்.
அத்துடன் தன்னுடைய கையில் உள்ள புதிய ஏற்பாட்டைத் திறந்து ஐசுவரியவான், லாசரு பற்றி எழுதியிருக்கிற பகுதியை வாசித்து விளக்கினார். கத்தியோடு அவரை நெருங்கிய அந்த மனிதனில் ஆழமான பாவ உணர்வு ஏற்பட்டது. அவன் சுந்தரைத் தனது குகைக்கு அழைத்துச் சென்று அங்கு அவன் கொன்று குவித்திருந்த மனிதர்களின் எலும்புக்கூடுகளை அவருக்குக் காண்பித்து, இத்தனை கொலைகளுக்கும் தான்தான் பொறுப்பு என்று துக்கத்தோடு கூறினான். சுந்தர் இயேசு கிறிஸ்துவின் மூலமாக அவனுக்கு கொடுக்கப்பட்டுள்ள மன்னிப்பினை ஏற்றுக்கொள்ளும்படியாகக் கூறி அவனை இரட்சிப்பிற்குள் நடத்தினார்.
திபெத் நாட்டில் சுந்தர்
கிறிஸ்துவையே கேள்விப்பட்டிராத கடினமான அபாயம் நிறைந்த இடங்களுக்கெல்லாம் சுந்தர் தீர்மானத்துடனும் தைரியத்துடனும் சென்றார். அவருடைய இருதயமும் எண்ணமும் திபெத்தின்மேல்தான் அதிகமாக இருந்தது. பேய்களுக்கப் பயப்படுவதிலும், பில்லி சூனியங்கள் செய்வதிலும், பல மூடநம்பிக்கைகளிலும் திபெத் மூழ்கியிருந்தது. லாமாக்கள் என்ற மதத்தலைவர்களால் திபெத் நாட்டின் ஏழை மக்கள் அதிகமாக ஒடுக்கப்பட்டார்கள்.
திபெத் மக்கள் புத்த மார்க்கத்தைத் தழுவியவாகளாக இருந்தார்கள். பலவிதமான ஜெபங்கள் எழுதப்பட்டிருந்த சக்கரங்களைச் சுற்றுவதும், ஜெபங்கள் எழுதப்பட்டிருந்த கொடிகளைக் காற்றிலே பறக்க விடுவதுமேதான் அவர்கள் ஜெபிப்பதற்குரிய ஒரே வழி என்று எண்ணினர். இவர்கள் ஒருபோதும் இயேசு கிறிஸ்துவைப் பற்றிக் கேள்விப்படாதவர்கள். ஆகவே சுந்தர் பலமுறை திபெத் நாட்டிற்குச் சென்றார். ஒருமுறை கடல் மட்டத்திலிருந்து 16 000 அடி உயரம் உள்ள குளிர் நிறைந்த ஒரிடத்தில் திறந்த வெளியில் படுத்து உறங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அவருக்கு நேரிட்ட எல்லா துன்பத்திலும் என்னுடைய இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவுக்காக நான் பாடு அனுபவிப்பது ஒரு மாபெரும் மகிழ்சியின் இரகசியம் என்று சுந்தர் கூறுவார்.
இந்த மாபெரும் மகிழ்ச்சியின் இரகசியம் என்ன என்றால் என்னுடைய எல்லாவித துன்பங்களிலும் ஆத்துமாக்களுக்கான கடும் உழைப்புகளிலும் என்னுடைய ஆறுதல், நம்பிக்கை, ஊக்கம் அனைத்தும் கிறிஸ்துவின் சிலுவையே அன்றி வேறல்ல. எனக்காக கிறிஸ்து பரலோகத்தைவிட்டு இறங்கி சிலுவை பாரத்தைச் சுமந்தார். ஆகையால் நான் கிறிஸ்துவுக்காக ஆத்துமாக்களை ஆதாயம் பண்ணுவதில் பாடுபடுவது ஒரு பெரிய காரியம் அல்ல என்று கூறினார். நேபாளத்தில் சிறைச்சாலை அனுபவம் எப்படிப்பட்டதாய் இருந்தது என்று கூறும்போது கிறிஸ்துவின் பிரசன்னம் அச்சிறைச்சாலையில் என்னோடு கூட இருந்தபடியினாலே அது ஆசீர்வாதமான ஒரு மோட்சமாக இருந்தது என்றும் கூறினார். உலகத்திற்கு அவரது அறைகூவல் அவர் பட்ட பாடுகளும் அவரது ஒப்பற்ற அனுபவங்களும் விரைவில் வெளி உலகின் கவனத்திற்கு வந்தது. உலகின் பல பாகங்களிலும் உள்ள கிறிஸ்தவ மக்களின் சிந்தனை இந்த இந்திய அப்போஸ்தலர் மீது பதிய ஆரம்பித்தது.
கிறிஸ்தவர்களுக்கும் மற்றவர்களுக்கும் பிரசங்கிக்கவேண்டும் என்ற அழைப்பு அவருக்கு இந்தியாவின் எல்லா பாகங்களிலுமிருந்து வந்தது. அவர் சென்ற இடங்களில் எல்லாம், தன்னைத்தான் வெறுத்து தன் சிலுவையை எடுத்துக்கொண்டு சிலுவை நாதரைப் பின்பற்றவேண்டும் என்பதையே அறைகூவலாகவும், மிசனறி அழைப்பாகவும் கூறினார். இவரது மிஷனறி அறைகூவல்கள் அநேகரை ஜெபிப்பதற்கும், செயல்படுவதற்கும் தூண்டி விட்டது. சிலோன், பர்மா, மலேயா, சீனா, ஐப்பான் ஆகிய நாடகளுக்கச் சென்று பிரசங்கித்தார். மேலும் இங்கிலாந்து, அமெரிக்கா, அஸ்திரேலியா இன்னும் ஒரு சில ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்று நற்செய்தி வழக்கினார்.
அவர் எங்கெங்கே சென்றாரோ அங்கெல்லாம் அவரைக் கண்ட மக்கள் அவரில் இயேசு கிறிஸ்துவின் சாயலைக் கவனித்தார்கள். ஒருமுறை அவர் பேசிக்கொண்டிருந்த ஒரு கூட்டத்தில் ஒரு சிறுமி இவர் இயேசு கிறிஸ்துவா? என்று கேட்டாளாம். ஆத்துமாக்களைக் குறித்த பாரத்திலும், தூய்மையாகத் தன்னைக் காத்துக்கொள்வதிலும் சுந்தர் நிச்சயமாகவே தன்னுடைய அருமைநாதராம் இயேசு கிறிஸ்துவைப் பிரதிபலித்துக் காணப்பித்தார். அவரது இறுதி வார்த்தைகள் பிரயாணத்தின் கடினத்தையும் அதிலே ஏற்படவிருக்கும் அபாயங்களையும் நான் முழுவதுமாக உணர்கிறபோதிலும், நான் இன்றைக்கு திபெத் நோக்கிப்பிரயாணம் செய்கிறேன்.
ஏனென்றால் நான் என்னுடைய கடமையை முழுமையாக நிறைவேற்றவேண்டும் என்று 1929ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18ம் திகதி தன்னுடைய நண்பர்களுக்கு எழுதிய குறிப்பிலே எழுதியிருந்தார். திபெத் சென்று விட்டுத் திரும்பி வருவதற்கான சமயம் கடந்துவிட்டது. ஆனால் அவரோ வரவில்லை. எந்தவிதமான செய்தியும் அவரிடத்தில் இருந்து கிடைக்கவில்லை. ஒருவேளை அவர் பிரயாணத்தில் மலைச் சிகரங்களைக் கடந்து செல்லும்போது ஏதோ ஒரு பாதாளத்தில் விழுந்து இறந்திருக்கலாம். அல்லது ஓர் ஆழமான கிணற்றிலே தூக்கிப் போடப்பட்டிருக்கலாம். அல்லது யாக் என்னும் எருமையின் நனைந்த தோலுக்குள்ளாக வைத்துக் கட்டப்பட்டு சுருட்டப்பட்டு அவருடைய எலும்புகள் முறிக்கப்பட்ட நிலையில்
அவர் ஓர் இரத்த சாட்சியாக மரித்திருக்கலாம். அவரது முடிவு எப்படியாக இருந்தாலும் இந்தியாவின் அப்போஸ்தலராகிய சாது சுந்தர் சிங் தனது ஜீவகிரிடத்தைப் பெற்றுக்கொண்டார் என்பது மட்டும் உறுதியானது.
நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும். சங்கீதம் 23:4
ஒரு சமயம் தேவ பக்தன் சாதுசுந்தர்சிங் அவர்கள் கர்நாடகா மாநிலத்திலுள்ள ஒரு பட்டணத்துக்கு பிரசங்கிப்பதற்காக வந்திருந்தார். அங்குள்ள ஒரு பழைய மிஷன் பங்களாவில் அவரும், அவரது மொழிபெயர்ப்பாளரும் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அவர்களை அங்கு தங்கச் சொன்ன மனிதர் இரவில் அந்த இரண்டு பேரும் கட்டிலிலேயேதான் இருக்க வேண்டும் என்றும், எக்காரணத்தைக் கொண்டும் அவர்கள் கட்டிலிலிருந்து கீழே இறங்கக் கூடாது என்றும் திட்டமாக கேட்டிருந்தார். காரணம், அந்த இடத்தில் பாம்புகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாகவும், அவர்கள் தங்கியிருந்த அறைக்குள் கூட பாம்புகள் வரக்கூடும் என்று சொல்லி அவர்களை எச்சரித்து வைத்திருந்தார்.
இரவில் சாதுசுந்தர்சிங்கும், அவருடைய மொழிபெயர்ப்பாளனும் தங்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த தனி தனி கட்டிலில் படுத்துக்கொண்டனர். இரவின் மிகவும் பிந்திய நேரத்தில் தாங்கள் படுத்திருந்த அறையில் பாம்பு ஒன்று ஊர்ந்து செல்லும் சத்தம் கேட்டு மொழிபெயர்ப்பாளன் எழுந்து தனது டார்ச் விளக்கைப் போட்டுப் பார்த்தார். உண்மைதான், பாம்பு ஒன்று அவர்கள் அறையில் ஊர்ந்து சென்றுகொண்டிருந்தது. அவர் மிகவும் பயந்து போய் சாதுசுந்தர்சிங் பாதுகாப்பாக தனது கட்டிலில் படுத்திருக்கின்றாரா என்று பார்க்க அவரது கட்டிலை டார்ச் விளக்கு போட்டு பார்த்தபோது அவர் கட்டிலில் காணப்படவில்லை.
அவர் அந்த அறையின் ஒரு மூலையில் முழங்கால்களில் நின்று தனது ஆண்டவரோடு ஆழ்ந்த ஜெபநிலையில் உறவாடிக்கொண்டிருந்தார். அவருடைய முகம் தேவப்பிரசன்னத்தால் பிரகாசித்துக் கொண்டிருந்ததை மொழிபெயர்ப்பாளர் ஆச்சரியத்துடன் கண்டார். உண்மைதான், பூமியில் எந்த ஒரு காரியமும் ஆண்டவரோடு உறவாடி மகிழ்ந்து ஆனந்திப்பதிலிருந்து சுந்தரை தடுத்து நிறுத்த இயலவில்லை. பாம்புகளின் நடமாட்டம் குறித்து அந்த மிஷன் வீட்டு மனிதர் எத்தனைதான் எடுத்துச் சொன்னாலும் சுந்தர் அதை சற்றும் காதில் போட்டுக்கொள்ளாமல் தனது நேச கர்த்தரோடு வழக்கம்போல ஜெப தியானத்தில் மூழ்கிவிட்டார். மரண இருளில் நடந்தாலும் கூட தேவன் தன்னோடு இருக்கின்றார்.
எந்த ஆபத்தும் தன்னை அனுகாது என்று சாதுசுந்தர்சிங் அவர்கள் தேவன் மேல் கொண்டிருந்த விசுவாசம் எத்தனை பெரியது. நாமும் தேவ பக்தன் சாதுசுந்தர்சிங் போல சூழ்நிலைகளை கண்டு பயப்படாமல் எல்லா நிலையிலும் தேவனோடு இணைந்திருப்போம். அதிசயம் காண்போம். .
மழை பெய்து கொண்டு இருந்தது . விளக்குகள் ஏற்றி வைக்கப்பட்டிருந்தன . தெருவின் வழியாக பதினாறு வயது நிரம்பிய ஒரு பெண் போய்க்கொண்டிருந்தாள் . முரட்டுக் குணம் உடைய இளைஞர் கூட்டம் ஒன்று அவளைப் பின்தொடர்ந்தது . அவர்கள் அவளைச் சூழ்ந்து கொள்ளும்வரை அவள் அதனைக் கவனிக்கவில்லை . அந்தக் கூட்டத்தின் தலைவன் ஒரு நீண்ட கயிற்றில் சில ஈயத்துண்டுகள் , தகடுகளைக் கட்டி அதைத் தலைக்கு மேலாகச் சுழற்றியபடி அவள் அருகில் சென்றது மட்டுமல்லாமல் , " நீ உன்னுடைய ஞாயிறு பள்ளியினை நிறுத்திவிட்டு எங்களைச் சும்மா விடும் வரைக்கும் உனக்கு ஒரு பாடம் கற்பிக்கப் போகிறோம் " என்று கூறினான் . உறுதியான தீர்மானத்தோடு மேரி தனது நிலையிலே நின்றுகொண்டு " நீ விரும்புவதைச் செய்யலாம் " என்றாள் . அவள் அருகே மிகவும் நெருங்கி , அந்த ஈயத்துண்டுகளை மிகவும் வேகமாகச் சுழற்றினான் . ஆனால் மேரி தைரியமாக அவ்விடத்திலேயே நகராமல் நின்றாள் . கடவுளின் வேலையைச் செய்வதால் அவர் தன்னைக் காத்துக் கொள்வார் என்ற தைரியம் அவளுக்கு இருந்தது .
அந்தப்பக்கத்தில் உள்ள சேரியிலே உள்ள சிறுவர்களுக்கும் சிறுமிகளுக்கும் அவளவேதபாட வகுப்புகள் நடத்திக் கொண்டிருந்தாள் . அங்குள்ள முரட்டுத்தனமான பையன்களுக்கு அது பிடிக்கவில்லை . ஆகவே , இந்த வகுப்புகளைச் சீர்குலைக்க வேண்டும் என்று தீர்மானித்தே இவ்வாறு இடையூறு செய்தனர் .
ஆனால் மேரி தைரியமாக அசையாமல் நின்றதைக் கண்டபோது , அவர்களுக்கு அவள்மீது இருந்த வெறுப்பு நீங்கி அவளது தைரியத்தினாலே அவர்கள் கவரப்பட்டார்கள் . ஆகவே , அந்தக் குழு முழுவதும் அன்று முதல் ஞாயிறு வகுப்பிற்குச் செல்ல ஆரம்பித்தது .
அதன் விளைவாக அந்தக் கூட்டத்தின் தலைவன் தன்னுடைய வாழ்க்கையில் ஒரு திருப்பத்தைக் கண்டான் .
சிறுமியான மேரி :
மேற்கூரிய நிகழ்ச்சியில் சொல்லப்பட்டிருக்கும் சிறுமியான மேரி ஸ்லெஸர்
1848ஆம் ஆண்டு டிசம்பர் 2ஆம் நாள் ஸ்காட்லாந்து தேசத்தில் பிறந்தாள் . அவளுடைய பெற்றோர் மிகவும் ஏழ்மையான நிலையில் இருந்த படியினாலே பதினோரு வயது நிரம்பியவளாகும் போதே தன்னுடைய குடும்பத்தைத் தாங்குவதற்காக அருகில் இருந்த தொழிற்சாலையில் பணிபுரிய வேண்டிய நிலை ஏற்பட்டது .
காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் அவள் தொழிற்சாலையில் வேலை செய்துவிட்டு , அதன்பிறகு ஓர் இரவு பாடசாலைக்குச் சென்று படித்து வந்தாள் . ஒரு புத்தகத்தைத் தன்னோடு எடுத்துச் செல்வாள் . வேலை செய்யும் போதும் சிலசமயம் தன் பாடங்களைப் படிப்பாள் . இவ்விதமாகவே தன்னுடைய வேதாகமத்தையும் எடுத்துச் சென்று படிப்பாள் . அந்த நாட்களில் கர்த்தருடைய பிரசன்னம் மிக அருகில் இருந்ததை அவள் உணர்ந்தாள் . அதுமட்டும் அல்ல , அவ்வப்போது ஆண்டவர் அவளோடு பேசுவதையும் அவள் தெளிவாக உணர்ந்தாள் . வயதான ஓர் அம்மாள் கூறிய செய்தியின் மூலமாக ஆண்டவரைத் தன் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டாள் .
மேலும் ஆண்டவரை அதிகமாக நேசித்தாள் . யோவான் எழுதிய நற்செய்தி நூலை மிகவும் பிரியமாக வாசிப்பது உண்டு . பல சமயங்களில் தனது தூக்கத்தை மறந்து அவள் புத்தகங்களை வாசித்துக் கொண்டிருப்பாள் .
அவருடைய தந்தை ஒரு குடிகாரனாக இருந்த படியினால் குடும்ப வாழ்க்கை என்பது சுமூகமாக இல்லை . குடிவெறியிலே வீட்டிற்கு வரும் தகப்பன் அடிக்கடி தனது தாயாரை அடித்துத் துன்புறுத்துவதைக் கண்டாள் . அந்த வேளைகளில் மேரி கண்ணீரோடும் , துயரத்தோடும் பயத்திலே ஆதரவு அற்ற நிலையிலே வீட்டை விட்டு வெளியே துரத்தப்பட்டு இருளிலே அலைய நேர்ந்தது .
என்றாலும் இவ்விதமான எல்லா அனுபவங்களும் , அவளுடைய எதிர்கால வாழ்க்கையின் அனுபவங்களுக்கும் , வாழ்க்கையின் வேலைகளுக்கும் முன்னோடியாக அவளைப் பயிற்றுவித்தன . மேரியின் தாயார் மிகவும் பக்தி நிறைந்த ஒரு கிறிஸ்தவப் பெண் . அடிக்கடி இந்த அம்மையார் தன்னுடைய பிள்ளைகளை அழைத்து இயேசு கிறிஸ்துவின் அன்பையும் , ஆப்பிரிக்காவில் உள்ள பிள்ளைகளுக்குக் கிறிஸ்துவின் அன்பைப் பற்றித் தெரியாது என்பதையும் எடுத்துச் சொல்வார்கள் . தன்னுடைய தாயிடம் இருந்துதான் மிஷனெரி பணிக்கான ஓர் ஆழ்ந்த பாரத்தை மேரி பெற்றுக்கொண்டாள் .
அவள் தன் தாயாரைப் பார்த்து " அம்மா நான் ஆப்பிரிக்கச் சிறுவர்களுக்கு நற்செய்தி அறிவிக்க ஒரு மிஷனெரியாகச் செல்வேன் " என்று அடிக்கடி சொல்வது உண்டு . இந்தப் பிள்ளைகள் தங்கள் விளையாட்டு வேளையில் கூட பிரசங்கம் செய்து விளையாடுவது உண்டு . தனது மனதில் ஆப்பிரிக்கப் பிள்ளைகளாகப் பலரை நினைத்துக் கொண்டு அவர்களுக்குச் சுவிசேஷத்தை மேரி சொல்வது உண்டு . இந்த பிள்ளைகள் ஆப்பிரிக்காவைப் பற்றித் தெளிவான விபரங்களை அறிந்திருந்தபடியினால் , அவர்களுடைய மூத்த சகோதரனான இராபட் மிஷனெரியாக ஆப்பிரிக்கா செல்வார் என்று தாயாரும் எதிர்பார்த்திருந்தார்கள் .
ஆனால் அவ் விதமாக நடைபெறவில்லை . மேரி 14 வயதாக இருக்கும்போது அவளுடைய தகப்பனால் ராபர்ட் உட்பட அவளது இரண்டு சகோதரர்களும் எதிர்பாராத விதத்தில் மரணம் அடைந்தார்கள் . குடும்பத்தை முழுவதுமாகப் பராமரிக்கும் பாரம் மேரியின்மேல் விழுந்தது . இந்தப் பொறுப்பை நிறைவேற்றுவதற்காகத் தன்னையே தியாகம் செய்யும் வாழ்க்கையினை அவள் ஏற்க வேண்டிய நிலை ஏற்பட்டது . இக்கடுமையான துன்பங்களின் மூலமாக மேரி முன்னிலும் அதிகமான தைரியமும் , பொறுமையும் உடையவளானாள் .
ஆப்பிரிக்காவிற்கு அழைப்பு :
தான் ஒரு மிஷனெரியாவதற்கு முன்னதாகவே மேரி முழு மனதோடு ஆண்டவருக்காகத் தன் சொந்தப் பட்டணத்தில் சாட்சியாய் விளங்கினாள் . நாம் ஆண்டவருக்குப் பணிபுரிய தூர இடங்களுக்குச் செல்லுமுன் , நம்முடைய சொந்த ஊரிலும் இனத்தாரிடத்திலும் ஆண்டவருக்கு சாட்சியாக இருக்க வேண்டும் . மேரி ஒரு நாளைக்குப் பத்துமணி நேரம் தொழிற்சாலையில் வேலை செய்வாள் . என்றாலும் , தன்னுடைய ஒய்வு நேரத்திலெல்லாம் கடவுளுக்கு எவ்வளவு சிறப்பாக பணிபுரிய முடியுமோ அவ்வளவு சிறப்பாகப் பணிபுரிவாள் . இவ்விதமாக - ஆண்டுகள் கடந்தன . ஆனால் அந்த ஆண்டுகளில் , ஆப்பிரிக்காவின் காடுகள் , அவற்றில் உள்ள குடிசைகள் எல்லாம் எப்போதுமே அவள் மனக்கண்முன் காட்சி அளித்துக் கொண்டே இருந்தன . ஆப்பிரிக்காவில் மிஷனெரியாகப் பணியாற்றிய டேவிட் லிவிங்ஸ்டன் ஆப்பிரிக்காவிலேயே இறந்துவிட்டார் என்ற துயரச் செய்தி ஸ்காட்லாந்து தேசத்தில் பரவியது .
அந்த இடத்திற்கு இனி யார் சென்று அந்தப் பணியைத் தொடர்வார்கள் என்ற கேள்வியும் எழுந்தது . இந்த அறைகூவல் ஆப்பிரிக்காவிற்குச் செல்வதற்கான மேரியின் அழைப்பினை உறுதி செய்தது . ஆப்பிரிக்கா செல்வதற்கு இப்படி ஓர் அழைப்பு இருப்பதை மேரி தன் தாயாரிடம் கூறினாள் . அவளுடைய தாயார் மகிழ்ச்சியாக சம்மதித்தார் . உடனே மேரி மிஷனெரி சங்கத்திற்கு ஓர் கடிதம் எழுதினாள் . அவளது விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டதாயும் , அவள் ஆப்பிரிக்காவிலே கலாபார் என்ற இடத்திற்கு மிஷனெரியாக நியமிக்கப்பட்டு இருப்பதாகவும் மிஷனெரி சங்கத்திலிருந்து பதில் வந்தது .
1876ஆம் ஆண்டு மேரிஸ்லெஸர்கப்பலின் மேல் தளத்தில் நின்று நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் கையசைத்து விடைபெற்று மிஷனெரியாக ஆப்பிரிக்கா புறப்பட்டாள் . அந்தக் கப்பலில் விஸ்கி , மதுபானம் அடங்கிய பெட்டிகள் அதிகமாக வைக்கப்பட்டிருந்தன . அதைக் கண்ட மேரி , " ஐயோ ! ஆப்பிரிக்காவிற்குப் பெட்டி பெட்டியாக மதுபானப் பொருட்கள் செல்லுகின்றன . ஆனால் அங்கு செல்ல ஒரே ஒரு மிஷனெரிதானா ? " என்று ஆச்சரியத்தோடு கூறினாள் . கடல் பிரயாணத்தின்போது அவளோடு பிரயாணம் செய்த ஒருவர் ஆப்பிரிக்காவைப் பற்றி அதிகமான குறிப்புகளை அவளுக்குக் கொடுத்தார் . எவ்விதமாக ஆப்பிரிக்கா அடர்த்தியான காடுகளினால் மூடப்பட்டு இருக்கிறது , எந்த ஒரு வெள்ளையனுமே பார்த்திராத வேகமான ஆறுகள் ஓடுகின்றன . காட்டாறுகள் வேகமாக எழும் பிக் குடிசைகளையும் , மரங்களையும் வேரோடு அடித்துக் கொண்டு செல்கின்றன என்பதையும் விளக்கினார் . அதுமட்டுமின்றி அடர்த்தியான காடுகளில் பெரும் யானைகள் , சிறுத்தைகள் , புலிகள் , பயங்கரமான பாம்புகள் எல்லாம் இருக்கின்றன என்றும் நதிகளில் நீர்யானைகள் , முதலைகள் ஏராளமாய் இருக்கின்றன என்றும் விவரித்தார் .
ஆப்பிரிக்காவில் மேரி :
ஆப்பிரிக்காவில் டு யூக் டவுன் என்ற கடற்கரைப் பட்டணத்தை மேரி அடைந்து அங்கு நான்கு ஆண்டுகள் பணிபுரிந்தாள் . அந்த நாட்டு மொழியினைக் கற்றுக் கொள்வதற்கும் அந்த மக்களைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கும் அது அவளுக்குப் பெரும் உதவியாக இருந்தது . அந்த நாட்டில் உள்ள ஆப்பிரிக்கச் சிறுவர் சிறுமியருடன் நன்முறையில் பழக ஆரம்பித்தாள் . அவர்களோடு மிகவும் நட்புடன் பழகியதால் அவர்களுடைய நல்லெண்ணத்தையும் , நல்மதிப்பையும் பெற்றுக் கொண்டாள் . ஆனால் அவளுடைய உள்ளத்திலோ ஆப்பிரிக்காவின் காடுகள் நிறைந்த உள் பகுதிகளுக்குச் செல்ல வேண்டும் , அங்கே ஆண்டவரை அறியாத மக்களுக்கு ஆண்டவரைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்ற விருப்பம் மேலிட்டு இருந்தது .
இருண்ட கண்டம் :
ஆப்பிரிக்கா எதனால் " இருண்ட கண்டம் " என்று அழைக்கப்படுகிறது என்பதை வெகுவிரைவில் புரிந்து கொண்டாள் மேரி . அங்கே பாவம் , கொடுமை , அசுத்தம் முதலிய தீமைகள் நிறைந்த ஒரு நிலைமை காணப்பட்டது . அடிமை வியாபாரம் தாராளமாக நடந்து கொண்டிருந்தது . ஆண்களும் , பெண்களும் , பிள்ளைகளும் ஈவிரக்கம் இன்றி பிடிக்கப்பட்டு அடிமைகளாக விற்கப்பட்டு மிருகங்களை காட்டிலும் மோசமாக நடத்தப்பட்டார்கள் . அங்கிருந்த மக்கள் குளங்களிலும் , மரங்களிலும் பல வித அசுத்த ஆவிகள் இருக்கிறதாக நினைத்துப் பயந்திருந்தார்கள் . வேறு சிறுமலை வாசிகள் சண்டையிடுவதிலும் , குடித்து வெறித்துக் கூத்தாடுவதிலும் தங்கள் வாழ்க்கையையும் , காலத்தையும் விரயமாக்கிக் கொண்டிருந்தார்கள் .
இன்னும் அதில் பலர் மனிதரைத் தின்னும் நரமாமிச பட்சினிகளாய் இருந்தார்கள் . தங்களுடைய தெய்வங்களைப் பிரியப்படுத்துவதற்காக மிருகங்களின் இரத்தத்தைச் சிந்து கிறவர்களாகவும் இருந்தார்கள் . ஆப்பிரிக்கத் தலைவன் ஒருவன் இறந்தால் அவனுடைய ஆவிக்குத் துணையாக இருப்பதற்கு அவனுடைய மனைவிகள் , பிள்ளைகள் அனைவருடைய தலைகளும் வெட்டப்பட்டவர்களாய் அவனோடுகூடப் புதைக்கப்படுவர் . ஆண்களுக்கும் , பெண்களுக்கும் அவர்கள் செய்த குற்றத்திற்காக நஞ்சைக் குடிக்கச் செய்தல் , கொதிக்கும் எண்ணெயில் கையைத் தோய்க்கச் செய்தல் முதலியவை தண்டனையாக இருந்தன . ஏதேனும் ஒரு குடும்பத்தில் இரட்டைப் பிள்ளைகள் பிறந்தால் இவை பேய்களினால் வந்தவை என்று அவர்கள் போதிக்கப்பட்டபடியினால் உடனடியாக அந்தக் குழந்தைகளை வெட்டி சிறுத்தைப் புலிகளுக்கு முன்பதாகத் தூக்கி எறிந்து விடுவார்கள் . இவ்விதமாக அவர்களைப் பெற்ற தாய்மார்களும் தனியாக வாழ்வதற்காகத் தனியாக காடுகளுக்குள் விரட்டியடிக்கப் படுவார்கள் . இவர்களில் ஒருவரும் கிறிஸ்துவின் அன்பைப் பற்றி ஒருபோதும் அறியவில்லை . இயேசு கிறிஸ்துவின் மூலமாக அவர்களுக்குப் பாவத்திலிருந்து விடுதலையும் , மகிழ்ச்சியும் பரிசுத்தமுள்ள வாழ்க்கையும் உண்டு என்பதை அவர்கள் ஒருபோதும் உணரவில்லை .
" அம்மா ஸ்லெஸர் "
ஒரு தாயாருக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்திருக்கிறது என்பதைக் கேள்விப்பட்ட மேரி அந்தக் குழந்தைகளுக்கு நேரிடும் நிலையை அறிந்தவளாக வேகமாக அந்தக் குடிசைக்கு ஓடினாள் . அங்கே அந்தக் குடிசையில் இருந்த ஒரு மூதாட்டியிடம் , அந்தக் குழந்தைகளை அவர்கள் என்ன செய்ய போகிறார்கள் என்று கேட்டாள் . அந்தக் குழந்தைகளின் முதுகை ஒடித்து அவர்களைப் பக்கத்தில் உள்ள புதரிலே தூக்கி எறியப் போவதாக அக்கிழவி கூறினாள் .
உடனே மேரி அந்தக் குழந்தைகளைத் தன் வீட்டிற்கு எடுத்துச் சென்று வளர்க்க ஆரம்பித்தாள் . எப்படியோ அந்த இரண்டு குழந்தைகளில் ஒன்றாகிய ஆண் குழந்தை , அதன் உறவினர்களால் திருடப்பட்டு கொல்லப்பட்டுவிட்டது . ஆனால் மேரி பெண் குழந்தையை மிகவும் பரிவுடனும் , கவனத்துடனும் தத்து எடுத்து ஆப்பிரிக்க குடும்பத்தின் தன்னுடைய முதல் மகள் என்று வளர்த்தாள் . மேரி அவ்விடத்து மக்களின் குடிசைகளில் வாழ்ந்து , அவர்களின் உணவாகிய மீன் , கிழங்கு , பழங்களையே சாப்பிட்டு வந்தாள் .
அந்த மக்களுக்கு உடைகளைத் தயாரித்தும் , எழுத படிக்கப் போதிக்கும் ஆசிரியையாகவும் , பிணிகளைத் தீர்க்கும் செவிலித்தாயாகவும் சேவை செய்து வந்தாள் . அவர்களுக்குள் ஏற்படும் சண்டைகளைத் தீர்த்து வைக்கும் தலைவியாக , தாயன்போடு அவர்களை அரவணைத்து சரியான வாழ்க்கைப் பாதையில் நடத்தினபடியால் , அவளை அம்மக்கள் " அம்மா " என்றே அழைத்தனர் . " அம்மா ஸ்லெஸர் " என்ற பெயர் நிலைத்து விட்டடது . -
மேரிக்கு ஆப்பிரிக்காவின் உட்பகுதிக்குச் செல்ல அதிக ஆவலாய் இருந்தது . உட்பகுதி மக்கள் கடற்பகுதி மக்களுக்கு எதிரிகளாக இருந்தனர் . கொடுமை செய்பவர்களாயும் இருந்தனர் . மிஷனெரி சங்கமும் அவளை , உட்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரித்து தடைசெய்திருந்தது .
. ஆனாலும் அவள் ஓர் இரவு உட்பகுதிக்குள் செல்லப் புறப்பட்டு விட்டாள் . தன்னோடு மூன்று ஆப்பிரிக்க ஆண் பிள்ளைகளையும் , ஒரு சிறிய பெண்ணையும் , ஒரு குழந்தையையும் அழைத்துச் சென்றாள் . இருண்ட காடுகளின் வழியே புகுந்து ஓர் உட்பகுதி கிராமத்தை அடைந்தாள் . - அச்சிறிய கிராமத்தில் அவளும் அவளோடு சென்ற மக்களும் , மூங்கில்களினால் ஆன ஒரு குடிசையைப் போட்டனர் . குடிசைக்குள் போதிய இடம் இல்லாததால் பாத்திரங்களையும் , மண்பாண்டங்களையும் குடிசைக்கு வெளியே தொங்கவிட்டனர் .
ஒரு சிறிய ஆலயத்தையும் கட்ட ஆரம்பித்தனர் . அப்புதிய கிராம மக்களுக்கு மேரி உடைகளைக் கொடுத்து , படிக்கவும் , தைக்கவும் கற்றுக் கொடுத்தாள் . சமையல் முறைகளையும் படித்துக் கொள்ள உதவி செய்தாள் . இயேசுவின் இனிய கதைகளைத் தவறாமல் சொல்லி வந்தாள் . மேரி பலமுறை அநேக மைல்கள் நடந்து சென்று உட்பகுதி ஆப்பிரிக்க இன மக்களில் எழும்பும் சிறிய சண்டைகளைத் தீர்த்து வைப்பாள் . ஒருநாள் அவ்வின அவளுக்கு ஆப்பிரிக்கக் குடும்பத்தில் அநேக பிள்ளைகள் இருப்பதை உணர்ந்தாள் .
இரட்டைக் குழந்தைகள் , அநாதைகள் , மீட்கப்பட்ட அடிமைகள் என்று பலர் அவளால் பாதுகாக்கப்பட்டிருந்தனர் . மேரி தன்னுடைய பல பொறுப்புகளில் ஈடுபட்டு இருக்கும்போது , வாரத்தில் அன்று என்ன கிழமை என்று கூட மறந்து விடுவாள் . அவளுடைய நண்பர்கள் செய்யும் ஜெபங்களும் , வேண்டுதல்களும் அவளுக்கு உதவியாகவும் , ஊழியத்தில் ஊக்கம் கொடுப்பவையாகவும் அமைந்தன .
ஆப்பிரிக்காவின் மேல் மேரியின் கரிசனை :
உடல் நலக்குறைவால் மேரி ஸ்காட்லாந்து நாட்டிற்கு திரும்பிப் போக வேண்டியதாக இருந்தது . உடல் நலம் தேறியவுடன் தன்னைத் திரும்ப ஆப்பிரிக்க நாட்டிற்கு அனுப்ப வேண்டு மென்று வேண்டிக்கொண்டாள் . தன்னை அனுப்பா விட்டால் " கடலில் நீந்திச் சென்றாவது ஆப்பிரிக்காவை அடைவேன் ; ஏனென்றால் கிறிஸ்து இல்லாமல் ஆப்பிரிக்க மக்கள் மரிக்கின்றனர் ; நான் போக வேண்டும் " என்று சொல்லி ஆப்பிரிக்க நாட்டைத் திரும்ப வந்தடைந்தாள் .
அடிமை வியாபாரம் நடக்கிற இடங்களிலும் , நரமாமிசப் பட்சினிகள் என்று அழைப்படுகின்றவர்கள் மத்தியிலும் எவ்வித பயமுமின்றி , கிறிஸ்துவின் சேவையில் ஈடுபட்டாள் . முதுமைப் பிராயத்திலும் உற்சாகத்தோடு பணிபுரிந்தாள் . சைக்கிளில் பிரயாணம் செய்து கிராமங்களில் சேவை செய்தாள் . சில சமயங்களில் அவளை நாற்காலியில் உட்கார வைத்துச் சுமந்து செல்வர் . இவ்விதம் மேரி வயது சென்ற நிலைமையிலும் , ஆப்பிரிக்க மக்களை நேசித்து அவர்களுக்குப் பணி செய்து வந்தாள் .
பிரிட்டிஷ் அரசாங்கம் , மேரியை ஆப்பிரிக்காவின் அந்தப் பகுதிகளுக்கு நீதிபதியாக நியமித்தது . பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் முதல் பெண் நீதிபதியாக நியமனம் பெற்றவர் மேரி ஸ்லெஸர் அவர்களே . தனக்குக் கிடைத்த உயர்பதவியை கிறிஸ்துவுக்கு என்று பயன்படுத்தினார்கள் . ஆப்பிரிக்க நாட்டுக் குடி மக்களும் , அங்கு பணிபுரிந்து வந்த பிரிட்டிஷ் அதிகாரிகளும் கிறிஸ்துவை ஏற்க வேண்டும் என்ற நோக்கத்தோடு அங்கு நீதிபதியாகப் பணியாற்றினார்கள் . அவர்களுடைய திருப்பணியும் , ஆப்பிரிக்க மக்களுக்குச் செய்த சேவையும் அன்று வெளிஉலகிற்கு தோன்றவில்லை . நாகரீகம் அற்ற இடத்தில் மறைந்து கிடந்தது . ஒருவரும் அறியா நிலையில் இருந்த மேரியின் கிறிஸ்தவ பண்புகளும் , சேவையும் வெளி உலகு அறிய ஆரம்பித்தது . பிரிட்டிஷ் சாம்ராஜ்ய சக்ரவர்த்தி மேரி ஸ்லெஸரை கௌரவிக்கவும் , சேவைகளைப் பாராட்டவும் முன்வந்தார் . அரசாங்க விருதுகளில் " வெள்ளிச் சிலுவை " என்ற விருதை அவர்களுக்கு அணிவித்துப் பாராட்டி கௌரவித்தார் .
தம்மை மகிமைப் படுத்திய மகளைக் கிறிஸ்துவும் கனப்படுத்தி உலகின் உயர் பதவிகளை அடையச் செய்தார் என்பதே உண்மை .
மகிமையில் பிரவேசித்தல் :
மேரி ஸ்லெஸர் தன் சுய தேசத்திற்குத் திரும்பிப் போகவில்லை . கடைசி மூச்சு வரை பணி புரிய ஆப்பிரிக்காவிலேயே இருந்து விட்டார்கள் . பலவீனம் , முதுமை , நோய்வாய்ப்படுதல் போன்ற இவைகள் ஒன்றும் அவர்களின் பணியை தடைசெய்ய முடியவில்லை . நடமாட முடியாத நிலையிலும் படுக்கையில் இருந்தவாறே ஜெபித்துக் கொண்டே இருப்பார்கள் . அவர்களுடைய நினைவு களெல்லாம் பரலோகத்தைப் பற்றியதாகவே இருந்தது .
இறுதியில் 1915ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 13ஆம் நாள் பாடி ராஜாவின் சந்நிதியை அடைந்தார்கள் . வெகு உண்மையாய் தான் சேவித்த கிறிஸ்துவிடம் பலனையும் , கிரீடத்தையும் பெற பரலோகம் சென்றார்கள் . அவர்களுடைய வாழ்நாள் முழுவதும் உறுதுணையாக இருந்த பரிசுத்த வேதாகமம் பல போராட்டங்களை ஜெயிக்க உதவியது . அவர்களோடு படுக்கையில் கிடந்த அவ்வேதாகமம் முழுவதும் , குறிப்பு எழுதப்பட்டும் , கோடுகள் வரையப் பட்டும் காணப்பட்டது .
அவர்களின் உடைமையெல்லாம் உடைகள் , புத்தகங்கள் , கடிக கட்டுகள் ஆகிய மிக அற்பமான சில பொருள்களே ஆகும் . உண்மையாகவே , அநேகரை ஐசுவரியவான்களாக்கும் பொருட்டு , தன்னைத் தரித்திரர் ஆக்கினார்கள் . அநேகர் புதுவாழ்வு காண தன்வாழ்வை அர்ப்பணித்தார்கள் . ஸ்காட்லாந்து தேசத்து மேரி , பயந்த சுபாவமும் , மெலிவான தோற்றமும் உடையவர் . கிறிஸ்துவுக்கு மகிமையும் , உலக மக்களுக்குப் பயனும் உள்ள வாழ்க்கையை வாழ்ந்து காட்டினார் .
மேலான பரலோக பாக்கியம் பெற தன் நேசர் இயேசுவுக்கு எல்லாவற்றிலேயும் கீழ்ப்படிதலுள்ள வரானார் . உன்னுடைய வாழ்க்கையும் அநேகருக்கு ஆசீர்வாதமும் , பயனும் உள்ளதாக மாறும் . உன்னுடைய பலவீனங்கள் , பிரயாசைகள் , தாலந்துகளெல்லாம் பரம இராஜாவின் அழைப்பிற்கும் , ஆதீனத்திற்கும் அர்ப்பணிக்கப்படுமானால் , எத்தனை மாறுதல்கள் நிகழும் ! மக்களில் , சமுதாயத்தில் , திருச்சபையில் வியக்கத்தகும் மாற்றங்களை உன்னால் ஏற்படுத்த முடியும் . கிறிஸ்துவின் அன்பின் அழைப்பை இன்றே ஏற்பாயோ ? கீழ்ப்படிவாயோ ? ஆம் கிறிஸ்து உன்னை ஒப்பற்ற ஆசீர்வாதமாக மாற்றுவார் .
மறக்க முடியாத மாமனிதர்கள் வெறுத்தொதுக்கப்பட்ட ஒரு மக்கள் கூட்டத்திற்காக அமரிக்கையாக வாழ்ந்து ஆண்டவருக்காக அரிய காரியங்களை அவர்கள் மத்தியில் செய்தவர் ஆான் எலியெட் .
ஜாண் எலியெட் என்ற தேவ ஊழியரைப் பற்றி அநேகருக்குத் க தெரிந்திருக்க வாய்ப்பில்லை . வெறுத்தொதுக்கப்பட்ட ஒரு மக்கள் கூட்டத்திற்காக அமரிக்கையாக வாழ்ந்து ஆண்டவருக் காக அரிய காரியங்களை அவர்கள் மத்தியில் செய்தவர் இவர் . அமெரிக்காவிலுள்ள மசாசுசெட்ஸ் பகுதியிலுள்ள செவ்விந்தியர் நடுவில் மிஷனெரியாகப் பணி செய்தார் . 16ம் நூற்றாண்டில் அமெரிக்காவைக் கண்டுபிடித்து , இங்கிலாந்து தேசத்திலிருந்தும் மற்றும் ஐரோப்பா தேசங்களிலிருந்தும் மக்கள் அங்கு குடியேறின நாட்கள் அவை .
அப்பகுதியில் குடியேறிய வெள்ளையர்கள் அங்கிருந்த பூர்வக் குடிகளான செவ்விந்தியர்களை காட்டுமிராண்டிகள் எனவும் , நாகரிகம் அறியாதவர்கள் எனவும் கூறி வெறுத்தனர் . அவர்கள் தங்கள் குடியிருப்புகளிலிருந்து ஒதுக்கியும் வைத்து இருந்தனர் . அவர்களுடன் பேசுவதை , உறவு வைத்துக்கொள்வதை அருவருப்பாக எண்ணினர் .
ஏன் , ஒருசிலர் அவர்களை பேய்கள் என்று கூட எண்ணினர் . வேறு சிவர் வேடிக்கையாக மனித மூளை கொண்ட ஊளையிடும் ஓநாய்கள் என்று கிண்டலடித்தனர் . ஆனால் ஜாண் எலியெட்டுக்கோ அந்த செவ்விந்தியர்கள் கடவுளைக் கண்டறிய வேண்டிய தேவையிலிருக்கும் ஆத்துமாக்களாகத் தென்பட்டனர் .
தேவ அன்பினால் கவரப்பட்டவர்களுக்கு ஏனையோரின் புறத்தோற்றமோ நாகாரிகமற்ற அவர்களது செயல்பாடோ அவர்களோடு ஒன்றரக் கலப்பதற்குத் தடையாகிவிட முடியாதே , பாவியாகிய என்னை மீட்க பரலோகம்விட்டு தேவன் இந்த பாழ் உலகிற்கு வந்தார் , நானும் இம்மக்களுக்கு அந்த இயேசுவைத் தர எந்த தியாகத்திற்கும் அஞ்சக்கூடாது என்ற எண்ணம் கொண்டார் .
எனவே ஜாண் எலியெட் அந்த செவ்விந்தியர்களை நேசித்து அவர்களுடன் நெருங்கிப் பழகி நேசம் காட்டினார் . அந்த நேசத்தின் மூலம் ஆத்மநேசர் இயேசு கிறிஸ்துவை அந்த செவ்விந்திர்களுக்கு அறிவிக்கத் தீவிரமாய் முயற்சித்தார் .
1604ம் ஆண்டு இங்கிலாந்திலுள்ள விட்ஃபோர்டு என்ற இடத்தில் பிறந்த இவர் இங்கிலாந் திலுள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக ஜீசஸ் கல்லூரியில் பயின்றார் . தனது பட்டபடிப்பிற்குப் பின் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்தார் .
தன்னுடன் ஆசிரியராக அதே பள்ளியில் பணிபுரிந்த தாமஸ் ஹூக்கர் என்பவர் அவ்வேலையை உதறிவிட்டு அமெரிக்காவிற்கு ஊழியத்திற்காக சென்றார் . தாமஸ் ஹூக்கரின் வாழ்வினால் கவரப்பட்டிருந்த ஜாண் எவியெட்டும் அவரைப் பின்பற்றி
1631 ம் ஆண்டு அமெரிக்காவிற்கு மிஷனெரியாகச் சென்றார் . ஒரு வருடத்திற்குப் பிறகு இவரது நண்பர் ஆனிமம் போர்டும் இவரோடு இணைந்து கொள்ளவே செல்விந்தியர்கள் மத்தியில் தங்கள் பணியைத் துவக்கினர் .
செய்விந்தியரான ஜோப் நெகௗன்பவர் உதவியுடன் செவ்விந்தியர்களின் மொழியைக் கற்றுத்தேர்ந்தார் .
2 வருடத்திற்குள் செவ்விந்தியருக்கு அவர்களது தாய் மொழியிலேயே பிரசங்கிக்கும் அளவுக்கு மொழி ஞானம் பெற்றார் . அவரது பொழிப் புலமை செவ்விந்தியர்களது தாய் மொழியில் வேதத்தை மொழி பெயர்த்துத் தரும் ஆர்வத்தையும் அவருக்கு வாட்டியது .
முதலில் 10 கற்பனைகள் , கர்த்தருடைய ஜெயம் ஆகியவற்றை செவ்விந்தியரின் மொழியில் மொழி பெயர்த்தார் . இதைக் கண்ட ஏனைய ஆங்கிலேயர்கள் இவரைப் பார்த்து பிரித்தனர் .
இந்த முட்டாள் செவ்விந்தியர்களுக்கு நாகரீக பாஷையான ஆங்கிலத்தை கற்றுக் கொடுப்பதை விட்டுவிட்டு அவர்களது மட்டமான பாஷையை நீ படிப்பதும் அதில் வேதத்தை மொழி பெயர்ப்பதும் வேடிக்கையாக இருக்கிறது என்றனர் . ஆனால் ஜாண் எனியெட் இளக்கரித்துப் போக வில்லை . என் ஆண்டவர் எனது தாய் மொழியில் பேசவேண்டும் என நான் எதிர்பார்க்கும் போது இந்த செவ்விந்தியர்கள் மட்டும் அப்படி எதிர்பார்ப்பதில் என்ன தவறு என திருப்பிக் கேட்டார் . மேலும் தேவன் தன்னை வேதத்தை அவர்கள் தாய் மொழியில் தரும் இந்தப் பணிக்கே அழைத்திருக்கிறார் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொண்டார் .
சார்லஸ் அருளி அருகில் வாழும் செவ்விந்தியர் மத்தியில் பணிபுரிய எண்ணி அப்பகுதியைத் தனது பணிக்கள் UNாக ஏற்படுத்திக் கொண்டார் .
தங்களது தாய் மொழியில் கடவுளின் அன்பைச் சொல்லும் எலியெட்டின் பிரசங்கம் அநேக செவ்விந்தியரைக் கவர்ந்திழுத்தது . ஜாண் எலியெட் பணி மூலம் ஒரு கூட்ட மக்கள் ஆண்ட வரை ஏற்றுக்கொண்டனர் . அந்த மக்களின் வாழ்வின் மாற்றத்தைக் கண்ட ஏனைய மக்கள் அப்பகுதியைக் கிறிஸ்தவ நகரம் ' என்று அழைக்கத் தொடங்கினர் . அந்த பகுதியில் வாழ்ந்த மக்கள் சமூக விரோத செயல்கள் அனைத்தையும் நிறுத்தி விட்டு தூய்மையுடனும் , ஒற்றுமையுட னும் வாழத் தொடங்கிய தோடு ஜாண் எலியெட்டுக்கு எல்லாக் காரியத்திலும் கீழ்ப்படிந்து வாழ்த் தனர் .
ஆங்கிலேய அரசின் சட்டமும் ஆங்கிலேயரின் கெடுபிடியும் சாதிக்கமுடியாத ஒன்றைக் கிறிஸ்து வின் சுவிசேஷம் மூலம் ஜாண் எலியெட் சாதித்துவிட்டார் .
ஒரு காலத்தில் மனிதப் பிசாசுகள் என்றும் , மனிதமூளை கொண்ட ஓநாய்கள் என்றும் எனையோரால் அழைக்கப்பட்ட இம்மக்களுக்கும் ஜெபிக்கும் செவ்விந்தியர்கள் என்ற பெயர் ஏற்பட்டது .
சார்யன் நதியோரம் மக்கள் மலர்ச் சிகண்டு விட்டதைத் தொடர்ந்து நாட்டின் பகுதியில் வாழும் ் ஜெபிக்கும் செவ்விந்தியர்கள் என்ற பெயர் ஏற்பட்டது .
சார்யன் நதியோரம் மக்கள் மலர்ச் சிகண்டு விட்டதைத் தொடர்ந்து நாட்டின் பகுதியில் வாழும் செவ்விந்தி யரை ஆதாயப்படுத்தும் தோக்குடன் அப்பகுதிக்கு நகர்ந்தார் எளியெட்
முதலில் இவரை விநோநமாகப் பார்த்த அப்பகுதியினர் நாளாக நாளாக இவருடன் என் ஆண்டவர் எனது தாய் மொழியில் பேசவேண்டும் என நான் எதிர்பார்க்கும்போது இந்த வித்தியர்கள் மட்டும் அப்படி எதிர்பார்ப்பதில் என்ன தவறு வேதத்தை அவர்கள் தாய் மொழியில் தருவதே எனது அழைப்பு என பரிந்துகொண்டார் .
ஜாண் எலியெட்டின் 50 ஆண்டுகால ஊழியத்தால் 100 பேர் கிறிஸ்துவின் அன்பினால் கவரப்பட்டிருந்தனர் . 14 கிராமங்கள் மலர்ச்சி கண்டிருந்தது . இரண்டு இடங்களில் ஆலயங்கள் எழுந்திருந்தது . செவ்விந்தியர் மொழியில் வேதாகமம் பிறந்தது . நட்பாக பழகத் தொடங்கினர் .
கிறிஸ்துவின் மாதிரியாக வாழ்ந்ததின் மூலம் அம் மக்களின் நெஞ்சிலும் இடம்பிடித்தார் . அப்பகுதியில் வாழ்ந்த 800 பேரும் ஜாண் எலியெட்டைத் தங்கள் தந்தையாக எண்ணி மதிக்கத் தொடங்கினர் . வேதத்தின் சட்டங்களை அவர்கள் வாழ்க்கையில் கைக்கொள்ளச் செய்து யாவரும் வியக்கும் ஒரு வாழ்க்கையை அவர்களை வாழச் செய்தார் . இதனால் நாட்டிக் நகரம் மாதிரி நகரம் என்றானது .
மற்ற ஆங்கிலேயர்களால் , புற ஜாதிகள் ; வேண்டப்படாதவர்கள் என ஒதுக்கித் தள்ளிவிடப்பட்ட செவ்விந்தியர்களை சுவிசேஷத்தால் செதுக்கி சீர்படுத்தி ஒளி வீசும் வைரங்களாக மாற்றி காண்பித்தார்
ஜாண் எலியெட் . ஆவிக்குரிய வாழ்வில் அவர்கள் உயர வழி காட்டியது மட்டுமல்லாமல் வாழ்க்கைத் தொழில்களையும் அவர்களுக்குக் கற்றுக்கொடுத்தார் . விவசாயம் செய்யவும் மர வேலைப் பாடுகளை நேர்த்தியாகச் செய்யவும் வீட்டைச் சுற்றி கல் தூண்களால் வேலி அமைக்கவும் கற்றுக் கொடுத்தார் . நாகரீக வாசனையையும் , வாழ்க்கைத் தொழிலையும் அவர்களுக்குக் கொடுத்தார் . நாகரீகமற்றவர்கள் என்று கருதப்பட்ட நாட்டிக் மக்கள் தாங்களாகவே விவசாயம் , மர வேலைப்பாடு போன்றவற்றில் ஈடுபாடுபட்டார்கள் .
இவரது முக்கிய ஜெபங்களில் ஒன்று இவர்கள் மத்தியில் பள்ளிகளை ஏராளம் எழுப்பும் ஆண்ட வரே என்பதாகும் . அதன் விளைவு செவ்விந்தியர் களுக்கு என ஒரு கல்லூரியும் , பள்ளியும் ராக்ஸ்பரி என்ற இடத்தில் தோன்றியது . இந்தியர்களையே பயிற்றுவித்து ஆசிரியராக ஊழியக்காரராக ஏற்படுத் தினார் . மறக்க முடியாத மாமனிதர்கள் அதோடு தனது பத்து வருடக் கடின உழைப் பாலும் , தனது உதவியாளரான ஜாப் - ன் உதவியாலும் முழு வேதத்தையும் 1659 - ம் ஆண்டு மொழிபெயர்த்து முடித்தார் . அமெரிக்காவிலுள்ள லண்டன் வேதாக மச்சங்கத்தில் முதல் முதலில் ஜாண் எலியெட் மொழி பெயர்ப்பு செய்த செவ்விந்தியருக்கான வேதாகமமே அச்சடிக்கப்பட்டது . செவ்விந்திய இலக்கண நூல் , செவ்விந்தியருக்கான முதல் பாடப்புத்தகம் ஆகிய புத்தகங் களையும் அவர் வெளியிட்டார் . ஜாண் எலியெட்டின் 50 ஆண்டுகால ஊழியத் தால் 1100 பேர் கிறிஸ்துவின் அன்பினால் கவரப்பட்டி ருந்தனர் . 14 கிராமங் கள் மலர்ச்சி கண்டிருந்தது . இரண்டு இடங்களில் ஆலயங்கள் எழுந் திருந்தது . செவ்விந்தியர் மொழியில் வேதாகமம் பிறந்தது .
நாகரீகம் தெரியாதவர்கள் , மனித வர்க்கத்திற்கே லாயக்கற்றவர்கள் என்று சொல்லப்பட்ட செவ்விந் தியருக்கு சுவிசேஷ ஒளியை எடுத்துச்சென்று ஏனையோருக்கு நிகராசு அவர்களை உயர்த்தி விட் டார் ஜாண் எலியெட் ஜெபிக்கும் மக்கள்ளு எனவும் தேவன் ஆட்சி செய்யும் பூமிளு எனவும் பிறர் வியக்கும்வண்ணம் மாற்றத்தை நிகழ்த்திக் காண்பித் தார் . இந்தியாவிலும் இவ்விதம் நாகரீகம் தெரியாதவர்கள் என மனிதர்களால் வெறுக்கப்படும் மக்கள் கூட்டம் ஏராளம் இருக் கிறது . அவர்களது வாழ் வும் ஜாண் எலியெட் போன்றவர்களுக்காய் காத்திருக்கிறது .இவரது முக்கிய ஜெபங்களில் ஒன்று இவர்கள் மத்தியில் பள்ளிகளை ஏராளம் எழுப்பும் ஆண்டவரே என்பதாகும் . அதன் விளைவு செவ்விந்தியர்களுக்கு என ஒரு கல்லூரியும் . பள்ளியும் ராக்ஸ்பரி என்ற இடத்தில் தோன்றியது . செவ்விந்தியர்களையே பயிற்றுவித்து ஆசிரியராக ஊழியக்காரராக ஏற்படுத்தினார் .
.“அவர்கள் என்னையும்கூட எரிப்பார்கள்.கர்த்தருக்கு விருப்பமானால் அதுவும் நடக்கட்டும்... இங்கிலாந்தில் சபை சீர்திருத்தம் ஏற்பட முக்கியகாரணமாக இருந்தது
வேதத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பே. ஆங்கிலத்தில் வேதம் மொழிபெயர்க்கப்பட்டு அதிவேகமாக மக்களுடைய கரங்களை எட்டியதும் அவர்களுடைய இருண்டிருந்தஆத்மீகக் கண்கள்
திறககத் தொடங்கின.ஆங்கிலத்தில் வேதத்தை மொழிபெயர்க்கும்பணியை ஆரம்பித்து வைத்தவர் வில்லியம்டின்டேல். ஏழு மொழிகளைப் பேசும் வல்லமைகொண்டிருந்த டின்டேல் எபிரேய, கிரேக்கமொழிகளில் அதிக பாண்டித்தியம் உள்ளவராகஇப்பணிக்குத் தகுந்தவராக இருந்தார்.
குளொஸ்டர் என்னும் இடத்தில் 1495 அளவில் பிறந்தடின்டேல் 1510 – 1521 வருடங்களில் ஒக்ஸ்பர்ட்,கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகங்களில் பயின்றார்.இக்காலத்தில் அநேக மதகுருக்களுக்கு வேதஅறிவே இல்லாமலிருந்ததை உணர்ந்த டின்டேல்,ஊர்ப் பையனும். வாசித்துப் புரிந்து கொள்ளும்வகையில் ஆங்கிலத்தில் வேதத்தைத் தன் நாட்டுமக்களுக்கு அளிக்கத் தீர்மானித்தார். ஆனால் அன்று அதிகாரத்தைத் தன் கரத்தில்வைத்திருந்த ரோமன் கத்தோலிக்க சபை ஆங்கிலத்தில் மட்டுமல்ல, வேறு எந்த மொழியிலும்வேதத்தை மொழி பெயர்க்க அனுமதி தராது என்பதை அவர் அறிந்திருந்தார். அவ்வாறுவேதத்தை இலத்தீன் மொழியில் இருந்துஇன்னுமொரு மொழியில் மொழி பெயர்ப்பது சட்டத்திற்கு எதிரான செயலாகஇல்லாமலிருந்தாலும் அக்காலத்தில்ஆண்டவருடைய ஜெபத்தையும், பத்துக்கட்டளைகளையும், அப்போஸ்தலருடைய விசுவாசஅறிக்கையையும் தங்களுடைய பிள்ளைகளுக்குஆங்கிலத்தில் போதித்த காரணத்திற்காக ஏழு பேர்உயிரோடு எரிக்கப்பட்டிருந்தனர்.
மதகுரு ஒருவருடைய துணையும் பாதுகாப்பும் இல்லாமல் மொழி பெயர்ப்பு வேலையில் ஈடுபடமுடியாதென்று உணர்ந்த டின்டேல் லண்டன் பிசப்டன்ஸ்டலின் துணையை நாடி லண்டனுக்கும்
1523இல் சென்றார். ஆனால் அரச நிலவரங்களால்அத்தகைய உதவியை அளிக்க பிசப் டன்ஸ்டல்தயங்கினார். இங்கிலாந்தில் இருந்துமொழி பெயர்ப்பு வேலையில் ஈடுபடுவது முடியாதகாரியமென்று உணர்ந்த டின்டேல் 1524 இல்ஜெர்மனிக்குப் போகத் தீர்மானித்தார். அரசருடைய அனுமதியையும் பெறாமல் ஜெர்மனியில்விட்டன்பர்க் என்ற இடத்தை அடைந்தார் டின்டேல். ஜெர்மனியை அடையுமுன் இரகசியமாக புதிய ஏற்பாட்டை மொழிபெயர்த்து முடித்திருந்தார்டின்டேல். விட்டன்பர்க்கில் இருந்து கொலோனைஅடைந்த டின்டேல் தனது மொழிபெயர்ப்பைஅச்சிடும் பணியில் ஈடுபட்டார். அச்சுப்பணி பாதி முடியுமுன்பே அது அச்சிடப்படுகின்றது என்பதை அறிந்தகத்தோலிக்கர்கள் டின்டேலுக்கு பெருந்துன்பத்தைவிளைவித்தனர். இதனால் கொலோனில் இருந்துதனது மொழி பெயர்ப்போடு எதிரிகளிடம் இருந்து தப்பி டின்டேல் வேர்ம்ஸ் என்ற இடத்தை அடைந்தார்.அங்கே இறுதியாக தனது வேத மொழி பெயர்ப்பை அச்சிட்டு முடித்தார். வேர்ம்ஸிலேயே டின்டேலின்முதல் புதிய ஏற்பாட்டுப் பிரதி வெளியானது. அரசனுடையதும், அதிகாரிகளுடையதும்கட்டுப்பாடுகள் அனைத்தையும் மீறி இப்புதியஏற்பாடு இங்கிலாந்தை 1526 இல் அடைந்தது.
ஜெர்மனியில் இருந்த இங்கிலாந்து வியாபாரிகள்மூலமாக டின்டேலின் புதிய ஏற்பாடு கடத்தப்பட்டு இங்கிலாந்தின் நகரங்கள், கிராமங்கள் எல்லாம் பரவத்தொடங்கியது. பிசப் டின்ஸ்டல ்இப்பிரதிகளைக் கைப்பற்றி அழிக்க பெரு முயற்சிசெய்தார். இதைக் கேள்விப்பட்ட டின்டேல், “புதியஏற்பாட்டை எரிப்பதன் மூலம் நான்எதிர்பார்க்காததை அவர்கள் செய்துவிடவில்லை;அவர்கள் என்னையும்கூட எரிப்பார்கள். கர்த்தருக்குவிருப்பமானால் அதுவும் நடக்கட்டும்” என்றார். இவ்வெதிர்ப்புகள் எல்லாவற்றிற்கும் மத்தியில்ஆரம்பத்தில் வெளியிடப்பட்ட பிரதிகள், அதன்மறுபதிப்புகள், திருத்தப்பதிப்புகள் என்றுடின்டேலின் புதிய ஏற்பாடு இங்கிலாந்தின் நாடுநகரங்கள் எல்லாம் பரவத் தொடங்கியது. கத்தோலிக்க மதகுருக்கள் இதைத் தடுப்பதற்கு ஒருவழி கண்டுபிடித்தனர். பணம் கொடுத்து அனைத்துப் பிரதிகளையும் வாங்கினால் அவைமக்களை
அடைவதைத் தடுத்துவிடலாம் என்று முடிவுசெய்து அவ்வாறே செய்தனர்.
இதனால்இப்பிரதிகளை இங்கிலாந்திற்குக் கொண்டு வந்தவியாபாரிகளால் நன்றாகப் பணம் சம்பாதிக்கமுடிந்தது. மதகுருக்கள் எரிப்பதற்கும் அதிக புதியஏற்பாடுகள் கிடைத்தன. டின்டேல் புதிதாக ஒருதிருத்திய புதிய ஏற்பாட்டை வெளியிடுவதற்குத்தேவையான பணமும் கிடைத்தது. இப்புதிய ஏற்பாடுஎன்றுமில்லாத வகையில் இங்கிலாந்து மக்களின்கண்களுக்கும் காதுகளுக்கும் நல்ல வேதவிருந்தளித்தது.
1611 இல் இங்கிலாந்தில் வெளியிடப்பட்டு இன்றும்அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வரும் கிங் ஜே ம்ஸ்வேதம் (King James Version) தொண்ணூறு வீதம்டின் டேலின் மொழி பெயர்ப்பைப் பயன் படுத்திஎழுதப்பட்டது. டின்டேல் தனது எதிரிகளின்கரங்களில் பிடிபடாமல் தொடர்ந்து எழுதியும்,மொழிபெயர்ப்பு வேலைகளைத் தொடர்ந்தும்வந்தார். இறுதியில் அவர் சிறைபிடிக்கப்பட்டு பிரசல்ஸில் ஒரு கோட்டையில் வைக்கப்பட்டார்.சிறை பிடிக்கப்பட்டு பதினாறு மாதங்களுக்குப்பின்பு ஆகஸ்ட் 1536 இல் டின்டேலுக்கு தண்டனைவிதிக்கப்பட்டது. தன் செயல்களுக்காக மன்னிப்புகேட்கும்படி டின்டேலை அவரது எதிரிகள் வற்புறுத்தினர். அக்டோபர் மாதத்தில் கத்தோலிக்கர்கள் டின்டேலை சித்திரவதை செய்துஉயிரோடு எரித்தனர்.
இறப்பதற்கு முன் டின்டேல்,இங்கிலாந்து அரசரின் கண்கள் திறக்க வேண்டும்என்று ஜெபித்து மடிந்தார். சத்தியத்திற்காக தங்கள் உயிரைப்பலி கொடுத்த அநேக கிறிஸ்தவர்களில் டின்டேலும் ஒருவர்.வேதத்தை நாம் கையிலெடுக்கும் ஒவ்வொரு வேளையும் அவ்வேதத்திற்காகவும், சத்தியத்திற்காகவும் தம் உயிரைத் தந்த டின்டேலைநாம் நினைத்துப் பார்க்க வேண்டும்
No comments:
Post a Comment