Friday, 27 January 2017
உலர் திராட்சை
@@@@@@ உலர் திராட்சை செடியில் இருந்து பசுமையாக பறித்த பழங்களை உண்பதில் உள்ள சத்துக்களைப் போல உலர் பழங்களை உண்பதிலும் அதிக ருசியும் சத்துக்களும் @@@@@@ உலர் திராட்சை காணப்படுகின்றன. நாம் உணவில் ருசிக்காக சேர்த்துக்கொள்ளும் உலர் திராட்சையானது கிஸ்மிஸ்பழம் என்று அழைக்கப்படுகிறது. உலர் திராட்சை பழத்தில் உடலுக்கு வலிமை தரும் சத்துக்கள் நிறைந்துள்ளன. திராட்சைப் பழவகைகளில் உயர்தரமான திராட்சைப் பழங்களைப் பதம் செய்து உலர்த்தி பதப்படுத்துகின்றனர். இந்த உலர் பழங்களை வெகுதூர தேசங்களுக்கு அனுப்பினாலும் வெகு நாட்கள் வரை கெடாது. அப்படியே இருக்கும். திராட்சைப் பழத்தில் உள்ள வைட்டமின் சத்துக்களை விட இதில் ஏராளமான சத்துக்கள் காணப்படுகின்றன. பச்சை திராட்சைப் பழத்தை விட இதற்கு உஷ்ணசக்தி அதிகம். பச்சைத் திராட்சைப் பழத்தை விட 10 மடங்கு அதிக உஷ்ணத்தைக் கொடுக்கும். அடங்கியுள்ள சத்துக்கள்: உலர் திராட்சைப் பழத்தில் அதிக அளவு சுக்ரோஸ், ப்ரக்டோசும் நிறைந்துள்ளன. வைட்டமின்களும், அமினோ அமிலங்களும் காணப்படுகின்றன. இதில் பொட்டாசியம், மெக்னீசியமும் காணப்படுவதால் அமிலத் தொந்தரவுகள் அதிகம் ஏற்படாது. ரத்தசோகையை கட்டுப்படுத்தும்: ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பவர்கள் உலர் திரட்சையை உட்கொண்டால் ரத்தசோகை குணமடையும். தாமிரச்சத்துக்கள் ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். காமாலை நோய் குணமடையும்: மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள் தினசரி இரு வேளை உலர்திராட்சையை சாப்பிட்டு வர காமாலை நோய் குணமடையும். உலர் திராட்சைப் பழத்தில் 50 பழங்களை எடுத்து சுத்தம் செய்து பசுவின் பாலில் போட்டு போட்டு காய்ச்சி ஆறவைத்து பழத்தை சாப்பிட்டு விட்டு பாலை குடித்தால் காலையில் மலச்சிக்கல் சரியாகும். உடல்புஷ்டிக்கு: இதில் உள்ள கால்சியம் சத்து எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. குழந்தைக்கு பால்காய்ச்சும் போதும் அதில் இரண்டு பழத்தை உடைத்துப் போட்டு காய்ச்சிய பின் பாலை வடிகட்டிக் கொடுத்தால், தேக புஷ்டி உண்டாகும். குழந்தை திடமாக வளரும். தொண்டைக்கம்மல் இருந்தால் இரவு படுக்கும்முன் 20 பழங்களை சுத்தம்செய்து பழங்களை சுத்தம் செய்து பசுவின் பாலில் போட்டுக் காய்ச்சி, 10 வால்மிளகைத் தூள் செய்து கொஞ்சம் பனங்கல்கண்டு சேர்த்து கலக்கிக் குடித்தால் தொண்டைக் கம்மல் குணமடையும். மூலநோய் உள்ளவர்கள் தினசரி உணவிற்குப்பின்னர் காலையிலும், மாலையிலும் 25 உலர்திராட்சைப் பழங்களை ஏழுநாட்கள் சாப்பிட்டுவந்தால் மூலரோகம் குணமடையும். பெண்கள் நோய் தீரும்: உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும். மாதவிலக்கு சமயத்தில் வயிறு, மார்பு, விலா, முதுகுப் பக்கங்களில் வலி ஏற்படும். இதை நிறுத்த 20 பழங்களை எடுத்து ஒரு சட்டியில் போட்டு ஆழாக்கு தண்ணீரில் தேக்கரண்டியளவு சோம்பு சேர்த்து கசாயம் செய்து மூன்று நாட்களுக்கு இருவேளை சாப்பிட்டு வந்தால் வலி குணமடையும். @@@@@@ ஸ்தோத்திர பலி ஆவிகளின் பிதாவே, உமக்கு கோடாகோடி ஸ்தோத்திரம். 5 எபி:12:9
Subscribe to:
Post Comments (Atom)
About Me
Search This Blog
Popular Posts
-
281 புன்னகை ஒரு தோட்டத்தில் புதிதாக வாழைக் கன்ற ஒன்று நடப்பட்டது. ஏற்கனவே அதற்கு அருகில் ஒரு தென்னங்கன்றும் இருந்தது. வா...
-
307 என் வேலைக்காரந்தான் உலகத்திலேயே படு முட்டாள். ரெண்டு முதலாளிகள் பேசிகிட்டிருந்தாங்க. ஒருத்தர் சொன்னாரு, ‘என் வேலைக்காரந்தான் உலகத்தில...
-
ஜேம்ஸ் பரேசர் சீனாவின் தென்மேற்குப் பகுதிக்கு தனது இருபத்திரண்டாவது வயதில...
Labels
- Christian Missionary History
- 1015 ஏமி கார்மைக்கேல் அம்மையாரின் வரலாறு
- 1016 கிளாடிஸ் அயில்வார்ட் 1902 -
- 1017 பண்டித இராமாபாய் 1858 - 1922
- 1018 ஃபேனி க்ராஸ்பி 1820 - 1915
- 1019 காரி டென் பூம் 1892 - 1983
- Christian Message
- Christian Missionary History
- Health
- Prayer
- Tamil Bible Verse
- Tamil Bible Versev
- Tamil Christian Photos
- நீதிமௌழிகள்
No comments:
Post a Comment