Friday, 27 January 2017

நீதிமொழிகள் 25:2-7

காரியத்தை மறைப்பது தேவனுக்கு மேன்மை: காரியத்தை ஆராய்வதோ ராஜாக்களுக்கு மேன்மை. வானத்தின் உயரமும், பூமியின் ஆழமும், ராஜாக்களின் இருதயங்களும் ஆராய்ந்துமுடியாது. வெள்ளியினின்று களிம்பை நீக்கிவிடு, அப்பொழுது தட்டானால் நல்ல உடைமை பிறக்கும். ராஜாவின் முன்னின்று துஷ்டரை நீக்கிவிடு, அப்பொழுது அவனுடைய சிங்காசனம் நீதியினால் நிலைநிற்கும். ராஜாவின் சமூகத்தில் மேன்மை பாராட்டாதே: பெரியோர்களுடைய ஸ்தானத்தில் நில்லாதே. உன் கண்கள் கண்ட பிரபுவின் சமூகத்தில் நீ தாழ்த்தப்படுவது நல்லதல்ல: அவன் உன்னை பார்த்து மேலே வா என்று சொல்வதே உனக்கு மேன்மை. நீதிமொழிகள் 25:2-7

கசப்பான வைராக்கியம்

கசப்பான வைராக்கியம் ஒருவனும் தேவனுடைய கிருபையை இழந்துபோகாதபடிக்கும் யாதொரு கசப்பான வேர் முளைத்தெழும்பிக் கலக்கமுண்டாக்குகிறதினால் அநேகர் தீட்டுப்படாதபடிக்கும்,.. எச்சரிக்கையாயிருங்கள். - (எபிரேயர் 12:15). கி.பி 1592-1598 வரை ஜப்பானியர்கள் கொரியா தேசத்தை கைப்பற்றி அதில் ஊடுருவி இருந்தார்கள். மற்ற எல்லாரை பார்க்கிலும் ஜப்பானியர் கொரியர்களிடம் மிகவும் மோசமாக நடந்து கொண்டார்கள். விசேஷமாக பெண்களையும்;, சிறு குழந்தைகளையும் அவர்கள் நடத்திய விதம் மிகவும் கொடுமையானது. இன்றளவும் அந்த காயங்களை மனதில் சுமந்தபடி வாழுகின்ற கொரியர்கள் உள்ளனர். ஜப்பானியர்கள் கொரியாவை கைபற்றியவுடன் முதலில் செய்த காரியம், அங்கிருந்த தேவாலயங்களை இழுத்து மூடியதுதான். மற்றும் வெளிநாட்டிலிருந்து வந்த மிஷனெரிகளை உள்ளே அனுமதிக்க மறுத்தனர். ஞாயிற்று கிழமைகளில் ஆராதனைகளை முழுவதும் நிறுத்திய ஜப்பானியர், முக்கியமான போதகர்களை சிறையில் அடைத்தனர். அதில் ஒரு போதகர் மாத்திரம் தான் இருந்த இடத்தின் காவல் துறை அதிகாரியிடம் அடி;ககடி போய், தன் சபையை ஒரு ஞாயிறு ஆராதனையை மாத்திரம் அனுமதிக்கும்படி கேட்டு கொண்டே இருந்தார். அவருடைய தொல்லையை பொறுக்காமல், அந்த அதிகாரி ஒரு ஞாயிறு ஆராதனைக்கு அனுமதித்தார். உடனே வேகமாக செய்தி பரவியது. இதுவரை ஆராதனைக்கு செல்ல முடியாமல் இருந்த கிறிஸ்தவர்கள், அனுமதி கிடைத்தவுடன், சூரியன் உதிக்குமுன், குடும்பமாக ஆலயத்திற்கு சென்று, காத்திருந்து, நேரமான உடன், கதவுகளை அடைத்து கர்த்தரை ஆராதிக்க ஆரம்பித்தனர். கொரிய சபை மக்கள் மிகவும் அழகாக பாடுபவர்கள். அவர்களின் பாடல் சத்தம் மூடியிருந்த கதவுகளையும் மீறி வெளியே அழகாக ரீங்காரமிட ஆரம்பித்தது. அவர்கள் உம்மண்டை கர்த்தரே என்னும் பாடலை பாட ஆரம்பித்தபோது, வெளியே இருந்த ஜப்பானிய அதிகாரி ஒருவன் தன் படைக்கு உத்தரவிட ஆரம்பித்தான். ஆலயத்தின் பின்புறம் இருந்தவர்கள், கதவுகள் திறக்கப்படும் சத்தத்தை கேட்டார்கள். ஆனால் அவர்கள் ஒருவரும் அறியவில்லை, அந்த ஆலயம் முழுவதும் மண்ணெண்ணையால் ஜப்பானியர் முழுக்கி கொண்டிருக்கிறார்கள் என்று. பின் அதன் மேல் நெருப்பை வீசி, புகை வர ஆரம்பித்த போதுதான், உள்ளே இருப்பவர்களுக்கு தங்கள் ஆலயம் நெருப்பு வைக்கப்பட்டிருக்கிறது என்று தெரிய வந்தது. உடனே உள்ளே இருந்தவர்கள் ஜன்னலின் வழியாக தப்பும்படி வெளியே போக துடித்த போது, வெளியே இருந்த ராணுவத்தினரின் துப்பாக்கி குண்டுகள் அவர்கள் மேல் பாய்ந்தது. போதகருக்கு தெரிந்தது, தனக்கும் தன் சபையினருக்கும் இதிலிருந்து தப்பிக்க முடியாது என்று. வெளியே கொரியர்கள் தங்கள் மக்களுக்கு நடந்து கொண்டிருக்கும் அநீதியை கண்டு கொண்டிருக்க, போதகர், இந்த பாடல் வரிகளை பாட ஆரம்பித்தார், உடனே சபையாரும் அவருடன் இணைந்து, தங்கள் கண்களுக்கு முன் நெருப்பு கொழுந்து விட்டு எரிய தங்கள் கூரைகீழே விழுந்து அனைவரும் மடிவதற்கு முன் பாடினார்கள், But drops of grief can ne'er repay the debt of love I owe: Here, Lord, I give myself away 'Tis all that I can do! At the cross, at the cross Where I first saw the light, And the burden of my heart rolled away -- It was there by faith I received my sight, And now I am happy all the day. அவர்கள் பாடியதை வெளியே இருந்த ஜப்பானியரும், கொரியர்களும் கேட்டு கொண்டிருந்தார்கள். அவர்கள் பாடியபடியே மறுமைக்கு கடந்து சென்றார்கள். எரிந்து போனவர்களின் சடலங்களை எடுத்து சுத்தம் பண்ணுவது எளிது, ஆனால் உள்ளத்தில் எரிந்து கொண்டிருந்த வேதனையையும், வெறுப்பையும் எடுத்து விடுவது எளிதல்ல. அதுவும் மரித்தவர்களின் உறவினர்கள் ஜப்பானியரின் மீது கொண்டிருந்த வெறுப்பு அதை அணைப்பது என்பது மிகவும் அரிதானதாக மாறியது. வருடங்கள் கடந்தன. கிறிஸ்தவர்க்ள எரிக்கப்பட்ட இடத்தில் ஒரு ஞாபகார்த்த மண்டபம் கட்டப்பட்டது.அதை காணும்போதெல்லாம் கொரியர்களின் உள்ளங்களில் ஜப்பானியர்களின் மேல் வெறுப்பு அதிகமாய் கொழுந்து விட்டு எரிந்தது. கிறிஸ்தவர்களாயிருந்தாலும், உலகம் தரக்கூடாத சமாதானத்தை கொடுக்கும் கிறிஸ்துவின் சமாதானம் அவர்களது உள்ளத்திலிருந்த வெறுப்பினால் மறைந்து போயிருந்தது. ஆனால் அது அப்படியே இருக்கவில்லை. 1972ம் வருடம் ஜப்பானிலிருந்து ஒரு போதக குழு கொரியாவிற்கு வந்தார்கள். அவர்கள் அந்த ஞாபகார்த்த மண்டபத்திற்கு வந்த போது, தங்கள் மூதாதையர் செய்த குற்றத்தை கண்டார்கள். அவர்களுக்கும் அந்த செய்கைக்கும் எந்த சம்பந்தமும் இல்லையென்றாலும், தங்கள் நாடு தப்பிதம் செய்து விட்டது என்ற குற்ற உணர்ச்சியுடன், தங்கள் நாட்டிற்கு திரும்பி சென்று, தங்கள் கூட இருக்கும் விசுவாசிகளிடம் நடந்த விஷயங்களை கூறி, பணம் சேகரித்து, திரும்ப வந்து, கிறிஸ்தவர்கள் எரிக்கப்பட்ட இடத்தில் ஒரு அழகான ஆலயத்தை கட்டினார்கள். அது திறக்கப்படும் நாளிலே அனைவரும் கூடி, அந்த ஆலயத்தை கர்த்தருக்கு அர்ப்பணித்து, ஆராதனை முடியும் தருவாயில், ஒருவர் எழுந்து, அந்த எரிந்து போன கிறிஸ்தவர்கள் பாடிய இரண்டு பாடல்களையும் மீண்டும் பாடுவது, அவர்களை நினைவு கூருவது போலிருக்கும் என்று கூற, உம்மண்டை கர்த்தரே நான் சேரட்டும் என பாடலை பாட ஆரம்பித்தார்கள். பாடி முடித்து, சிலுவையண்டையில் நம்பி வந்து நிற்கையில் (At the cross at the cross where I first saw the light) என்ற பாடலை பாடும்போது, ஜப்பானிய போதகர்களின் கண்களில் கண்ணீர் வழிய ஆரம்பித்தது. அவர்கள் தங்கள் கொரிய நண்பர்களின் கரங்களை பிடித்து கொண்டு, கண்ணீரோடு தங்களை மன்னிக்குமாறு கெஞ்ச ஆரம்பித்தார்கள். கொரியர்களின் இருதயம் கரையவில்லை, ஆனாலும் விடாமல் ஜப்பானியர்கள் கேட்டு கொண்டிருந்தபோது, அந்த பாடலின் அர்த்தத்தை அவர்கள் கேட்டு கொண்டிருந்தபோதுதானே, கர்த்தர் கொரியர்களின் இருதயத்தில் கிரியை செய்ய ஆரம்பித்தார். ஒரு கொரிய சகோதரன், ஜப்பானிய சகோதரனின் கரங்களை பிடித்தார். அதை கண்ட மற்றவர்களும் ஒருவரை யொருவர் கட்டிபிடித்து கொண்டு கதற ஆரம்பித்தனர். அத்தனை நூற்றாண்டுகளாக இருந்த பகைமை மறைந்து கிறிஸ்துவின் அன்பு பெருக்கெடுக்க ஆரம்பித்தது. ஜப்பானியரின் மன்னிப்பின் கண்ணீரும், கொரியர்களின் மன்னித்ததன் கண்ணீரும் கலந்து, அந்த இடம் முழுவதும் தேவ பிரசன்னத்தால் நிரம்பியது. பிரியமானவர்களே, நாமும் யார் மேலாவது, கசப்பையும் விரோதத்தையும் வைத்து கொண்டிருக்கிறோமா? கிறிஸ்துவின் சிலுவை அன்பு நம்மிலும் கடந்து வரட்டும். மற்றவர்களின் குறைகளை நாம் மன்னிப்போம். கிறிஸ்து எந்த தவறும் செய்யாதிருந்தும் அவரை சிலுவையில் அறைந்தவர்களை பார்த்து, பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்வது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்று சிலுவையில் இருந்தபடியே வேண்டினாரே, கிறிஸ்தவர்கள் என்று சொல்லி கொள்கிற நாமும் அவருடைய அடிச்சுவடிகளில் நடக்க வேண்டாமா? கசப்பான வேர் நமக்குள் முளைத்தெழும்ப வேண்டாம், கர்த்தருடைய கிருபையை நாம் இழக்க வேண்டாம். எத்தனையோ வருடங்கள் கழித்து, ஜப்பானியர்கள் மேல் இருந்த வெறுப்பை கொரியர்கள் மன்னித்தார்களே, சாத்தான் அந்த இடத்தில் தோற்று போனானே, நாமும் சத்துரு வெட்கப்படும்படியாக, மற்றவர்களை மன்னித்து, கர்த்தருக்கு மகிமை கொண்டுவருவோமா? Alas! and did my Savior bleed And did my Sovereign die? Would He devote that sacred head For sinners such as I? At the cross, at the cross where I first saw the light, And the burden of my heart rolled away, It was there by faith I received my sight, And now I am happy all the day! Thy body slain, sweet Jesus, Thine And bathed in its own blood While the firm mark of wrath divine, His Soul in anguish stood. But drops of grief can ne’er repay The debt of love I owe: Here, Lord, I give myself away, ’Tis all that I can do. ஜெபம்: எங்களை நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, நாங்கள் யார் மேலும் கசப்பான வைராக்கியம் கொண்டு தேவனுடைய கிருபையை இழந்து விடாதபடி கிறிஸ்துவின் அன்பை வெளிப்படுத்த எங்களுக்கு கிருபை தாரும். கிறிஸ்துவின் சிலுவையிலிருந்து வருகிற அன்பு எங்கள் இருதயத்தை நெருக்கி ஏவட்டும் தகப்பனே, எங்களுக்கு விரோதமாக குற்றம் செய்கிறவர்களை நாங்கள் மனதார மன்னிக்க கிருபை தாரும். எங்கள் சத்துருக்களையும் நாங்கள் நேசிக்க வேண்டும் என்ற இயேசுகிறிஸ்துவின் போதனையின்படி, நாங்கள் மற்றவர்களை மன்னித்து, நாங்கள் உண்மையிலேயே கிறிஸ்துவின் சீடர்கள் என்பதை உலகத்திற்கு எடுத்து காட்ட எங்களுக்கு கிருபை தாரும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்

@@@@@@@@@@@@@ தினசரி ஒரு மிஷனெரி இயக்கம் இந்த நாளில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே கண்ட மிஷனெரி இயக்கத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார். "இந்திய மிஷனெரி இயக்கம் (IMM)", $$$$$$$

சமையல் குறிப்பு

@@@@@@ சமையல் குறிப்பு தக்காளி சட்னி மணம் அதிகமாக இருக்க தக்காளி சட்னி செய்யும்போது அதில் சிறிது எள்ளை வறுத்துப் பொடி செய்து போட்டால் மணம் மிக அதிகமாக இருக்கும். @@@@@@@@@@@@@@@@@@@ கர்த்தர் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தருடைய எல்லாக் கற்பனைகளின்படியும் கட்டளைகளின்படியும் நடக்கக் கவனமாயிரு, அவர் சத்தத்திறகுச் செவிகொடாதேபோவாயாகில், உன் பிணம் ஆகாயத்துப் பறவைகளுக்கும் பூமியின் மிருகங்களுக்கும் இரையாகும், அவைகளை விரட்டுவாரில்லாதிருப்பார்கள். உபாகமம் 28 :26

உலர் திராட்சை

@@@@@@ உலர் திராட்சை செடியில் இருந்து பசுமையாக பறித்த பழங்களை உண்பதில் உள்ள சத்துக்களைப் போல உலர் பழங்களை உண்பதிலும் அதிக ருசியும் சத்துக்களும் @@@@@@ உலர் திராட்சை காணப்படுகின்றன. நாம் உணவில் ருசிக்காக சேர்த்துக்கொள்ளும் உலர் திராட்சையானது கிஸ்மிஸ்பழம் என்று அழைக்கப்படுகிறது. உலர் திராட்சை பழத்தில் உடலுக்கு வலிமை தரும் சத்துக்கள் நிறைந்துள்ளன. திராட்சைப் பழவகைகளில் உயர்தரமான திராட்சைப் பழங்களைப் பதம் செய்து உலர்த்தி பதப்படுத்துகின்றனர். இந்த உலர் பழங்களை வெகுதூர தேசங்களுக்கு அனுப்பினாலும் வெகு நாட்கள் வரை கெடாது. அப்படியே இருக்கும். திராட்சைப் பழத்தில் உள்ள வைட்டமின் சத்துக்களை விட இதில் ஏராளமான சத்துக்கள் காணப்படுகின்றன. பச்சை திராட்சைப் பழத்தை விட இதற்கு உஷ்ணசக்தி அதிகம். பச்சைத் திராட்சைப் பழத்தை விட 10 மடங்கு அதிக உஷ்ணத்தைக் கொடுக்கும். அடங்கியுள்ள சத்துக்கள்: உலர் திராட்சைப் பழத்தில் அதிக அளவு சுக்ரோஸ், ப்ரக்டோசும் நிறைந்துள்ளன. வைட்டமின்களும், அமினோ அமிலங்களும் காணப்படுகின்றன. இதில் பொட்டாசியம், மெக்னீசியமும் காணப்படுவதால் அமிலத் தொந்தரவுகள் அதிகம் ஏற்படாது. ரத்தசோகையை கட்டுப்படுத்தும்: ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பவர்கள் உலர் திரட்சையை உட்கொண்டால் ரத்தசோகை குணமடையும். தாமிரச்சத்துக்கள் ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். காமாலை நோய் குணமடையும்: மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள் தினசரி இரு வேளை உலர்திராட்சையை சாப்பிட்டு வர காமாலை நோய் குணமடையும். உலர் திராட்சைப் பழத்தில் 50 பழங்களை எடுத்து சுத்தம் செய்து பசுவின் பாலில் போட்டு போட்டு காய்ச்சி ஆறவைத்து பழத்தை சாப்பிட்டு விட்டு பாலை குடித்தால் காலையில் மலச்சிக்கல் சரியாகும். உடல்புஷ்டிக்கு: இதில் உள்ள கால்சியம் சத்து எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. குழந்தைக்கு பால்காய்ச்சும் போதும் அதில் இரண்டு பழத்தை உடைத்துப் போட்டு காய்ச்சிய பின் பாலை வடிகட்டிக் கொடுத்தால், தேக புஷ்டி உண்டாகும். குழந்தை திடமாக வளரும். தொண்டைக்கம்மல் இருந்தால் இரவு படுக்கும்முன் 20 பழங்களை சுத்தம்செய்து பழங்களை சுத்தம் செய்து பசுவின் பாலில் போட்டுக் காய்ச்சி, 10 வால்மிளகைத் தூள் செய்து கொஞ்சம் பனங்கல்கண்டு சேர்த்து கலக்கிக் குடித்தால் தொண்டைக் கம்மல் குணமடையும். மூலநோய் உள்ளவர்கள் தினசரி உணவிற்குப்பின்னர் காலையிலும், மாலையிலும் 25 உலர்திராட்சைப் பழங்களை ஏழுநாட்கள் சாப்பிட்டுவந்தால் மூலரோகம் குணமடையும். பெண்கள் நோய் தீரும்: உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீ­ரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும். மாதவிலக்கு சமயத்தில் வயிறு, மார்பு, விலா, முதுகுப் பக்கங்களில் வலி ஏற்படும். இதை நிறுத்த 20 பழங்களை எடுத்து ஒரு சட்டியில் போட்டு ஆழாக்கு தண்ணீ­ரில் தேக்கரண்டியளவு சோம்பு சேர்த்து கசாயம் செய்து மூன்று நாட்களுக்கு இருவேளை சாப்பிட்டு வந்தால் வலி குணமடையும். @@@@@@ ஸ்தோத்திர பலி ஆவிகளின் பிதாவே, உமக்கு கோடாகோடி ஸ்தோத்திரம். 5 எபி:12:9

தினம் ஒரு ஜெபக்குறிப்ப

♪♪♪♪♪♪♪♪ தினம் ஒரு ஜெபக்குறிப்பு இந்த நாளில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே கண்ட காரியத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார் " இந்திய குடும்பங்களில் கனவன்-மனைவி இடையே பெருகிவரும் சண்டை சச்சரவு வேற்றுமை அகன்று ஒற்றுமையாய் வாழ" @@@@@@

நீதிமொழிகள் 24 :28-34

நியாயமின்றிப் பிறனுக்கு விரோதமாய்ச் சாட்சியாக ஏற்படாதே; உன் உதடுகளினால் வஞ்சகம் பேசாதே. அவன் எனக்குச் செய்த பிரகாரம் நானும் அவனுக்குச் செய்வேன், அவன் செய்கைக்குத்தக்கதாக நானும் அவனுக்குச் சரிக்கட்டுவேன் என்று நீ சொல்லாதே சோம்பேறியின் வயலையும் மதியீனனுடைய திராட்சைத்தோட்டத்தையும் கடந்துபோனேன் . இதோ, அதெல்லாம் முள்ளுக்காடாயிருந்தது: நிலத்தின் முகத்தைக் காஞ்சொறி மூடினது, அதின் கற்சுவர் இடிந்து கிடந்தது. அதைக் கண்டு சிந்தனைபண்ணினேன்: அதை நோக்கிப் புத்தியடைந்தேன். இன்னும் கொஞ்சம் உறங்கட்டும் இன்னும் கொஞ்சம் கைமுடங்கிக்கொண்டு நித்திரை செய்யட்டும் என்பாயோ? உன் தரித்திரம் வழிப்போக்கனைப்போலும் உன் வறுமை ஆயதமணிந்தவனைப்போலும் வரும். நீதிமொழிகள் 24 :28-34