Friday, 6 November 2020

323-374



323      கடைசி இலை_Lastleaf ..

இதன் கதாநாயகன் ஒரு நோயாளி. மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேருகிறான்.

அவன் மனதில் அணுவளவுகூட தாம் குணமடைவோம் என்ற நம்பிக்கையில்லை. இதனால்  உடலும் மனமும் பாதிக்கப்பட்டுவிட உட்கொள்ளும் மருந்தினால் எவ்வித நன்மையும் ஏற்படவில்லை.

ஆனால் அவனைப் பேணும் செவிலிப்பெண் மட்டும் நம்பிக்கையுடன் அவனை எப்போதும் ஊக்கப்படுத்திக் கொண்டே இருக்கிறாள்.

அவனது அறையின் வெளியில் ஒருமரம் தனது இலைகளைத் தினமும் உதிர்த்துக் கொண்டே வருகிறது. அந்தக் காட்சி அவனை மிகவும் பாதித்தது.

அதைச் சுட்டிக்காட்டி அதைப்போல தானும் செத்துக் கொண்டிருப்பதாக புலம்ப ஆரம்பிக்கிறான்.

மரத்தின் ஓர் இலையைத் தவிர அனைத்து இலைகளும் உதிர்ந்து போகின்றன.

அந்தக் கடைசி இலை விழும்போது தானும் இறந்துவிடுவோம் என அஞ்சுகிறான். சோகத்தின் பிள்ளையாய் மாறிக்கொண்டே வருகிறான்.

செவிலி எவ்வளவு தைரியம் சொல்லியும் அவன் நம்பவில்லை. நாளைக் காலை கடைசி இலை உதிரும்போது தானும் உதிர்வோம் என்றே நம்பினான்.

பொழுது விடிந்தது. என்ன ஆச்சரியம்! அந்த ஒற்றை இலை உதிரவில்லை.! இதைக்கண்டதும் அவனுக்கு மகிழ்ச்சி பிறந்து விட்டது.

நம்பிக்கை விதை முளைவிட்டது. 
அந்த ஒற்றை இலைபோல் தானும் வாழலாம் என எண்ணத்தையும் நம்பிக்கையும்  அந்த கடைசி  இலை உண்டு பண்ணி விட்டன.

மருத்துவரோடும், மருந்துகளோடும் நன்கு ஒத்துழைத்தான். விரைவில் குணமடைந்தான்.

அவன் வீட்டுக்குச் செல்லும் நாள் வந்தது. செவிலி (நா்ஸ்) வந்து அவனை மரத்தருகில் அழைத்துச் சென்றாள். அந்த ஒற்றை இலையைப் பறித்து அவனிடம் தந்தாள்.

அது வெறும் துணியில் வரையப்பட்ட செயற்கை இலை என்பது தொிந்தது. 

அதை அந்தச் செவிலி, மரத்தின் கடைசி இலை உதிர்வதற்கு முன் ஓர் ஓவியனைக்கொண்டு வரைந்த இலையை மரத்தில் பொருத்தியிருந் தாள். அது அவனது நம்பிக்கையை வளர்க்கும் கருவியாகி வெற்றி பெற்றது.

என் அன்புக்குாியவா்களே, 
பாா்த்தீர்களா! நம்பிக்கை என்னென்ன செய்கிற தென்று! திடமான உள்ளமும், தேவன் எனக்காக செய்வாா் நம்பிக்கையும் இருந்தால், உடலென்ன உலகையே வென்று காட்டலாம்.

உடலும், உள்ளமும் ஒன்றோடு ஒன்று தொடா்பு உள்ளவை.அதாவது ஆத்மாவும், சரீரமும் இரு வழி தொடா்பு உள்ளவையாயிருக்கிறது.
 (TWO WAY CONNECTION) மனதில் நினைப்பது எல்லாம் சரீரத்தி்ல் செய்ய முடியும். சமீபத்தில் கண்கள் வழியாக பார்த்தது மனதில் நினைக்க முடியும். 

இந்த ஆத்துமாவையும், சரீரத்தையும் ஆளுகை செய்யும்படி ஆவியை (SPIRIT) நமக்குள் வைத்து இருக்கிறாா்.  அந்த ஆவியில் தான்  ஆவியாயிருக்கிற தேவன்  வாசம் பண்ணுகிறாா். 

இயேசுவின்
சிலுவைப் பாடுகளுக்கு முன் தம் சீஷா்களைப் பாா்த்து.... இப்படி கூறினார். 

நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார். 

உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும்.இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது, 

அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்கு ள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள். 
யோவான் 14:16,17

இந்த ஆவியானவா் ஆவியிலுள்ள உள்உணா்வு மூலமாக மனசாட்சி வழியாக  ஆத்துமாவிலுள்ள உணா்வில்உணா்த்துவாா். அவைகள் சரீரத்தில் செயல்படும். 

ஏசாயா 11:2 -ல் வாசிக்கிறோம்
1, ஞானத்தையும் உணர்வையும் அருளும் ஆவி 
2. ஆலோசனையையும் பெலனையும் அருளும் ஆவியும், 
3. அறிவையும் கர்த்தருக்குப் பயப்படுகிற பயத் தையும் அருளும் ஆவியுமாகிய கா்த்தருடைய ஆவியானவா் அவர் மேல்  தங்கியிருப்பாா் . 

இயேசுவின்  மேல் தங்கியிருந்த ஆவியானவரே நம் மேலும் தங்கியிருக்கிறாா். உங்களுக்கு விசுவாசத்தையும் நம்பிக்கையும் தருகிறாா்.  
தேவன்  உங்களுக்கு என்னவெல்லாம் வைத்தி இருக்கிறாா் என்பதை  பைபிளில்  படிக்கவும் தியானிக்கவும் செய்து பேச ஆரம்பிப்பாா்.  

தேவன் வேதத்தின் மூலம் இரண்டு விதத்தில்
பேசுகிறாா்.  

1. எழுதப்பட்ட வார்த்தை மூலமாக... 
2.  பேசப்படுகிற வார்த்தை மூலமாக ..

1.WRITTEN WORD... 
2. SPOKEN  WORD... 

தேவன்  உங்களோடு  பேசுவாா். தேவனுடைய  வாா்த்தையின் மேல்  நம்பிக்கை, விசுவாசம், அன்பு கொள்ள செய்து உங்கள் வாழ்க்கையை வளமாக்குவாா்.

உங்கள் 
வாழ்வில் எங்கே வியாதி, வருத்தம் வேதனை மரண போராட்டம் ஆகியவைகள் எல்லா இலைகளும் விழுந்து கடைசி இலை மட்டுமே  இருக்கிறது என்ற நிலை  இருக்கிறதோ 

அங்கே  தேவன் மேலும்,  தேவனுடைய  வார்த்தையின் மேலும் சிறு நம்பிக்கைத் தூறல் பட்டாலேபோதும். உங்கள் சுக வாழ்வு துளிா்த்து செடிகளும், பூக்களும் பூத்துக்குலுங்குவது போல நீங்கள் ஆரோக்கியமாகவும்,சுகமாகவும், சவுக்கியமாகவும் இருப்பீர்கள். 

நம்பிக்கையாயிருங்கள்!! உங்கள் சுக வாழ்வு இன்று துளிா்விட ஆரம்பித்து விடும்.!!! 

நீங்கள் ஆசீா்வதிக்கப்பட்டவர்கள்.



324   எல்லாம் நன்மைக்கே

ஒரு ராஜாவிடத்தில் ஒரு மந்திரி இருந்தான்.அவன் எது நடந்தாலும் எல்லாம் நன்மைக்கே என்று சொல்லுவான்.ஒருநாள் ராஜாவின் கையில் சிறுகாயம் ஏற்பட்டுவிட்டது.எல்லாரும் அதற்காக வருத்தப்பட்டு ராஜாவிடம் நலம் விசாரித்தார்கள்.ஆனால் மந்திரியோ எல்லாம் நன்மைக்கே என்றார்.ராஜாவுக்கு கோபம் வந்து மந்திரியைச் சிறையில் அடைத்தார்.

பின்பு வீரர்களோடு சேர்ந்து காட்டுக்கு வேட்டையாடச் சென்றார்.வீரர்களை விட்டு வெகுதூரம் விலகிவந்த மன்னரை திடீரென்று ஒரு ஆதிவாசி கூட்டம் பிடித்துச் சென்று தங்கள் கடவுளுக்கு பலியிட பலிபீடத்தின் முன்பு நிறுத்தினர்.அப்பொழுது அதில் ஒருவன் ராஜாவின் கையிலிருந்த காயத்தைப்பார்த்து அவரை விடுவித்தனர்.தன்னுடைய காயமே தன்னைப் பலியிடாமல காப்பாற்றியது என்பதை உணர்ந்த மன்னர் தான் அரண்மனைக்குச் சென்றவுடன் சிறையிலிருந்து மந்திரியை விடுவித்தார்.

 பிறகு அவரிடம்"எல்லாம் நன்மைக்கே"என்றீரே உம்மை சிறையில் அடைத்ததும் நன்மைக்கா?என்றான்.அதற்கு அவர்"ஆம் அரசே நான் உம்மோடு வந்திருந்தால் உம்மை விட்டு விட்டு என்னைப் பலியிட்டிருப்பார்களே,ஆகவே நீர் என்னைச் சிறையில் அடைத்ததும் ஒரு வகையில்நன்மைக்கே" என்றான்.

நம்முடைய வேதம் சொல்லுகிறது**அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டு தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறது
(ரோமர் 8:28) 

ஆகவே தேவனிடத்தில் அன்புகூருவோம்.தேவையான நன்மைகளை அவரிடமிருந்து பெற்றுக் கொள்வோம்-இனியகாலைவணக்கம்-

நீங்கள் ஆசீா்வதிக்கப்பட்டவர்கள்.




    சிலந்தியாக பிரதிபலித்த பயம்


ஒரு ஜென் மாணவன் ஒருவன் தினமும் தன் அறையில் தியானம் செய்வான். அப்போது அந்த அறையின் சுவரில் சிலந்தி ஒன்று இருந்து வந்தது. அது நாளுக்கு நாள் பெரிதாக வளர்ந்து வந்தது. அதை பார்க்க பார்க்க அவனுக்கு பெரும் பயம் உண்டாகியது. எனவே அவன் தனது பயத்தை குறித்து தனது குருவிடம் முறையிட எண்ணினான். ஆகவே அவன் குருவை சந்தித்து, நடந்ததை சொல்லி, அந்த சிலந்தியை கொல்ல முடிவெடுத்துள்ளதாக கூறினான். 

மேலும் அதை கொல்வதற்கு போடப்பட்டுள்ள திட்டமான "தியானம் செய்யும் போது ஒரு கத்தியை தொடையில் வைத்து கொள்ள போவதாகவும், அந்த சிலந்தி மறுமுறை கண் முன் தோன்றினால் அதை நறுக்க போகிறேன்" என்று கூறினான். அதற்கு குரு அவனுடைய யோசனைக்கு எதிராக ஒரு அறிவுரை கூறினார். 

அதாவது "நீ தியானம் செய்ய போகும் பொழுது, சுண்ணக்கட்டி ஒரு துண்டு கொண்டு செல். அதனை அந்த சிலந்தி உன் கண்ணுக்கு தென்படும் பொழுது நீ உன் வயிற்றில் "x" என்ற குறியீட்டை எழுது" என்றார். மாணவனும் குருவின் அறிவுரையின் படி தியானம் செய்ய போனான். சிலந்தியும் அவன் கண்ணுக்கு தென்பட்டது. அதைக் கண்டதும் அதைக் கொல்லாமல், அதற்கு பதிலாக குருவின் ஆலோசனை படி, அவன் தன் வயிற்றில் "x" என எழுதினான். 

சில நாட்களுக்கு பிறகு குருவிடம் சென்ற போது, குரு அவனது சட்டையை கழற்ற சொன்னார். அவனது வயிற்றில் "x" என்ற குறியீடு இருந்ததை கண்டு பின் குரு அவனிடம், "அந்த "x" குறியானது சிலந்தி வலையின் அமைப்புடையது. அது உன் தியானத்தின் போது மனதில் தோன்றிய பயத்தை பிரதிபலிக்கிறது. ஆகவே எந்த வேலை செய்தாலும் எந்த பயமுமின்றி தைரியத்துடன் செய்ய வேண்டும். மேலும் எந்த ஒரு உயிரினத்தையும் கொள்வது தவறு, நீ எழுதியுள்ள அந்த 'x' குறியீடும் அதை தான் உணர்த்துகிறது' என்று கூறினார். 

பிரியமானவர்களே,
"பயம்" இந்த மொத்த உலகத்தையுமே இப்போது ஆண்டுகொண்டிருக்கிறது. எந்தவொரு மனிதனும் தனக்கு பயம் இல்லை என்று வாய்மொழியாக கூறலாமே ஒழிய மற்றபடி உள்ளத்தில் பயம் இருக்கும். இந்த உலகத்தில் வாழ்ந்தவர்களில் பயமின்றி வாழ்ந்தவர் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மட்டுமே.

எதற்கு எடுத்தாலும் பயம். தற்போது நிலவுகிற இந்த கெரோனா தொற்றை கண்டு இந்த உலகமே கலங்கிப் போய் நிற்கிறது. இஸ்ரவேலர் எகிப்தில் இருந்த காலத்தில், எகிப்தியர் ஒவ்வொரு நோயினாலும், வாதையினாலும் வாதிக்கப்படும்போது ஆண்டவர் இஸ்ரவேலரோடு சொன்ன வார்த்தை

*"நான் எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பண்ணேன். நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் என்றார்".
(யாத்திராகமம் 15:26)

*இதே வார்த்தையை தான் இன்றைய இஸ்ரவேலராகிய நமக்கும் தந்திருக்கிறார். ஆனால் அதை விசுவாசியாமல் மிகுந்த பயத்தோடு காணப்படுகிறோம். அது மாத்திரமல்ல

 "பயப்படாதே" என்கிற பதம் வேதாகமத்தில் 365 முறை சொல்லப்பட்டிருக்கிறது.* 

*ஒரு வருடத்தின் மொத்த நாட்கள் 365. ஒவ்வொரு நாளும் தேவன் நம்மிடம் கூறுவது நீ எதை குறித்தும் பயப்படாதே, உன்னை உருவாக்கின தேவனாகிய நான் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்கிறேன் என்று.* 

சிலருக்கு தங்கள் எதிர்காலத்தை பற்றியும், தங்கள் தொழிலை பற்றியும், தங்கள் குழந்தைகளை பற்றியும், தங்கள் ஊழியத்தை பற்றிய பயமும் ஆண்டுகொண்டிருக்கிறது. இன்றைய கதையில் வருவதுபோல் அந்த X குறியீடு வேறொன்றும் அல்ல அது நம் இயேசு சுமந்த சிலுவையே நீங்கள் பயப்படும் காரியம் உங்களை ஆட்கொள்ளும்போது அந்த சிலுவையை உங்கள் உள்ளத்தில் வைத்து சிலுவையை நினைவுகூருங்கள் உங்களை பற்றிய பயம் பயந்து உங்களை விட்டு ஓடிவிடும். ஏசாயா தீர்க்கதரிசி இவ்வாறு கூறுகிறார்,

*"நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன், திகையாதே, நான் உன் தேவன், நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன், என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்".*

-(ஏசாயா 41:10)

ஆம் அன்பானவர்களே, நம்மோடு நம்மை படைத்த தேவனும் அவர் சுமந்த சிலுவையும் நம்மோடு இருப்பதால் அவரே நமக்கு சகாயரகவும், நம்மை தாங்குகிற துணையாகவும் இருந்து நம்மை அனுதினமும் பயமில்லாமல் வழிநடத்துவார். எனவே நாம் தேவனை சாரந்திருப்போம், பயமில்லாமல் வாழ்வோம்.!!..

நீங்கள்_ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.



326.                யேகோவாயீரே... 

ஒரு நாள் குருவை பார்க்க ஒருவன் சென்று இருந்தார்....அவர் பாதம் தொட்டு கும்பிட்டுவிட்டு வணங்கி நின்றான்....

அவனை மேலும் கீழுமாக பார்த்தவர்., ஏதோ எதிர்பார்ப்புடன் வந்திருக்கிறாய் போல என்று முகத்தை பார்த்து கேட்டார்.

அவன் மௌனமாக ஆமாம்.! என தலையாட்டிவிட்டு மெல்ல ஆரம்பித்தான். 

நான் நினைப்பதெல்லாம் நடக்கவேண்டும். இதற்கு என்ன வழி..? என்று ஒரு கேள்வியை கேட்டான்.

குரு புன்முறுவலாக சிரித்துக்கொண்டே.,
அவனை அருகில் அழைத்தார். மெல்ல அவன் தலையை கோதிவிட்டு., கன்னங்களை தட்டிக்கொடுக்க..... 

அவனில் முணுக்கென  கண்களில் எட்டிப்பார்த்த கண்ணீரை மெதுவாக துடைத்து விட்டு., 
நீ கலங்கக்கூடாது என்று ஆறுதல் படுத்தியவர்.,  நான் ஒரு கதை சொல்லப் போகிறேன்., பொறுமையாக கேள் என்று மெல்ல ஆரம்பித்தார்.

ஒரு ஊர்ல ஒரு இளவரசன் இருந்தான். 
ஒரு நாள் அவன் காட்டுக்கு வேட்டையாடப் போனான். வழியில் அவன் பரிவாரங்களை விட்டு வழி தவறி போய் விட்டான்.

அவர்களை தேடித் தேடி காட்டுக்குள் ரொம்ப தூரம் போய் விட்டான். ரொம்ப களைப்பு., பசி., தாகம்., கொஞ்சம் பயம் வேறு.

சோர்ந்து போய் ஒரு மரத்தடியில் உட்கர்ந்து விட்டான். அது ஒரு கற்பக மரம். நம் மனத்தில் நினைப்பதை எல்லாம் அப்படியே நிறைவேற்றி வைக்கும் அற்புத சக்தி கொண்டது. ஆனால் அது அந்த இளவரசனுக்குத் தெரியாது.

ரொம்ப தாகமா இருக்கிறதே. கொஞ்சம் தண்ணி கிடைத்தால் நல்லா இருக்குமே என்று நினைத்தான். சற்றே திரும்பி பார்த்தால்., அந்த மரத்தடியில் ஒரு சிறு குழி., அதில் குமிழியிட்டு நல்ல தண்ணீர் பொங்கி வந்து கொண்டு இருந்தது. தாகம் தீர குடித்தான்.

சற்று நேரத்தில் பசி வந்தது. ஏதாவது சாப்பிட கிடைத்தால் நல்லா இருக்குமே என்று நினைத்தான்., அந்த மரத்தில் இருந்து சுவையான சில பழங்கள் விழுந்தன. அவனுக்கிருந்த பசியிலும்., களைப்பிலும் என்ன ஏது என்று நினைக்க நேரமில்லை. அந்த பழங்களை உண்டு பசி ஆறினான். 

பிரயாணக் களைப்பு., உண்ட மயக்கம்., தூக்கம் கண்ணை சொக்கி கொண்டு வந்தது. அடடா இப்ப பஞ்சு மெத்தையோடு ஒரு கட்டில் இருந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்தான்., உடனே ஒரு கட்டில் வந்தது. 

ஏறி படுத்தான். காலெல்லாம் வலிக்கிறது. பிடித்து விட ஒரு அழகான இளம் பெண் இருந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்தான்.... டங் என்று ஒரு பெண் தோன்றி அவன் காலை மெல்ல வருடி விட்டாள். 

அசந்து தூங்கினான். 
திடீரென்று விழித்துக் கொண்டான்.

என்னடா இது., நாம நினைக்கிறது எல்லாம் நடக்கிறதே., ஒரு வேளை இது ஏதாவது பிசாசோட வேலையா இருக்குமோ... அந்த பிசாசு இங்க வந்துட்டால்..? என்று நினைத்தான். டங் என்று ஒரு பெரிய பிசாசு வந்தது. கற்பக மரம் தான் நினைப்பது எல்லாம் கொடுக்குமே. 

ஐயோ., இந்த பிசாசு நம்மை கடித்து தின்று விடுமோ..? என்று நினைத்தான்., அவன் நினைத்த மாதிரியே அவனை கடித்து தின்று விட்டது. 

இப்படி நினைப்பது எல்லாம் நடந்து விட்டால் நாம் பிசாசின் வாயில் தான் போய் விழுவோம் என்று சற்று நிறுத்தியவர்.....

பிறகு தொடர்ந்தார்.

நல்ல பெண் என்று தான் நினைத்து திருமணம் செய்து கொள்கிறான். இவள் தான் வேண்டும். இவள் இல்லாவிட்டால் வாழ்கையே இல்லை என்று நினைக்கிறான். திருமணம் முடிந்தவுடன்., ஐயோ., இவளுக்கா ஆசைப்பட்டேன் என்று நொந்து கொள்ளுகிறான்.

ஆசை ஆசையாக வீட்டை வாங்குகிறான்., கட்டுகிறான். அக்கம் பக்கம் தொல்லை., ஏண்டா இங்க வந்தோம் என்று ஆகி விடுகிறது.

பாராட்டி சீராட்டி வளர்த்த பிள்ளைகள் திரும்பிப் பார்க்காமல் போய் விடுகின்றன மனம் கிடந்து கவலையில் உழல்கிறது.

இப்படி வேண்டும் வேண்டும் என்று கேட்டது எல்லாம் பின்னாளில் வேண்டாம் வேண்டாம் என்று மறுதலிக்கும்படி ஆகி விடுகிறது என்று சொல்லிவிட்டு., சற்று நிறுத்தியவர்... நம் தேவனுக்குத் தெரியாதா  இவர்தான் நம் பிதா.. அதாவது அப்பா ..

அவர் இருக்கும் போது நமக்கு என்ன வேண்டும் என்று அவனை பார்த்து ஒரு கேள்வியை கேட்டார். அவனுள் ஞானம் பிறந்தது.

என்_அன்புக்குாியவா்களே, 

தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிற உங்களு க்கு உங்களின் தேவைகளைச் சந்திக்கும் யேகோவாயீரே என்ற அா்த்தமுடையவராக 
(God supplies,God provides) நம் அனைத்துத்தேவை களையும் சந்திக்கிறவராயிருக்கிறாா். என்பதை ஆபிரகாமுடைய வாழ்வில் காண்கிறோம். 

தேவன் ஆபிரகாமைச் சோதித்தார். எப்படியெனில், அவர் அவனை நோக்கி: ஆபிரகாமே : உன் புத்திரனும் உன் ஏகசுதனும் உன் நேசகுமாரனுமாகிய ஈசாக்கை நீ  தகனபலியாகப் பலியிடு என்றாா். 

ஆபிரகாம் அதிகாலையில் எழுந்து, தன் கழுதை யின்மேல் சேணங்கட்டி, தன் வேலைக்காரரில் இரண்டுபேரையும் தன் குமாரன் ஈசாக்கையும் கூட்டிக்கொண்டு, தகனபலிக்குக் கட்டைகளை
யும் பிளந்துகொண்டு, தேவன் தனக்குக் குறித்த இடத்திற்குப் புறப்பட்டுப்போனான். 
ஆதியாகமம் 22:1 -3

ஆபிரகாம் தன்னுடைய பிள்ளையை தேவன் சர்வாங்க தகனபலியிடச்  சொல்லும் போது அவன் மனது மிகவும் கலங்கிப் போனது ஆண்டவரின் 100 வயதில் பிள்ளை கொடுத்தாா்.  ஆனால் இப்போது பலியிட சொல்கிறாரே  என்ற கலக்கம் அவன் மனதில் இருந்தது. 

அவன்  யோசித்துக்கொண்டே இருக்கும்போதே 
ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும். 21 :13  என்று தேவன் அவனுக்கு சொன்னது ஞாபகத்தி ற்கு வந்தது

எனவே 
சந்ததி விளங்கும் என்றால் ஈசாக்கு உயிரோடு இருந்த ஆக வேண்டும் எனவே ஆண்டவர் பலியிட சொன்னாலும் அந்த சாம்பலிலிருந்து ஈசாக்கை உயிரோடு எழுப்ப வல்லவராய் இருக்கிறார் என்ற ஒரு விசுவாசம் அவனுக்குள் துளிர் விட்டது 

எனவே அவன் சந்தோஷமாய் விசுவாசத்தோடு கூட போனான். இடம் வந்தவுடன் அந்த வேலைக் காரா்களைப் பார்த்து ,நானும் பிள்ளையாண்டா னும் அவ்விடம்  போய்போய் தொழுது கொண்டு திரும்பி வருவோம் என்று விசுவாசத்துடன் ஆணித்தரமாய் சொன்னான்.

இதைக் குறித்து எபிரேயா் 
நிருபத்தின் ஆசிாியா் இவ்விதமாய் எழுதுகிறார். 

விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் சோதிக்கப் பட்டபோது, ஈசாக்கைப் பலியாக ஒப்புக் கொடுத் தான் 

ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும் என்று அவனோடே சொல்லப்பட்டிருந்ததே. இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்களைப் பெற்றவன், மரித்தோாில் இருந்துமெழுப்பத் தேவன் வல்லவராயிருக்கிறா ரென்றெண்ணி, தனக்கு ஒரேபேறானவனையே பலியாகஒப்புக்கொடுத்தான் மரித்தோரிலிருந்து
அவனை பாவனையாகத் திரும்பவும் பெற்றுக் கொண்டான்.  எபி. 11:17-19

ஈசாக்கு  ஆபிரகாமை நோக்கி: என் தகப்பனே இதோ நெருப்பும் கட்டையும் இருக்கிறது தகனபலிக்கு ஆட்டுக்குட்டி எங்கே என்றான். 
அதற்கு ஆபிரகாம்: என் மகனே, தேவன் தமக்குத் தகனபலிக்கான ஆட்டுக்குட்டியைப் பார்த்துக் கொள்வார் என்றான். - ஆதி.  22:7,8
உண்மையாகவே  ஆட்டுக்குட்டியை கா்த்தா் ஆயத்தப்படுத்தி இருந்தாா் 

இவன் வருவததற்கு முன்பாகவே ஒரு ஆட்டுக் கடாவையும் அவா்  அவ்வழியே அனுப்பினார் 
அது மலையோரத்தில் வந்தது மலைக்கு மேல் போக வேண்டும் என்ற உநதுதல் உண்டாகி அந்த ஆடு மலையின் மேலேமேய்ந்து கொண்டே போனது 

அந்த மலையின் உச்சியில் போன போது ஒரு முள் புதரில் ஏதாவது கிடைக்கும் என்று அது உள்ளே சென்றது. அது சிக்கிக்கொண்டது 
இவ்விதமாய்  கர்த்தர் அந்த ஆட்டை அங்கேயே ஆபிரகாமுக்காய் அதை ஆயத்தப்படுத்தி இருக்க வைத்திருந்தார் 

ஆபிரகாம் தன் மகனை பலிபீடம் கட்டி பலியிட கத்தியை எடுக்கும்போது தேவன்  தடுத்தாா். .  இப்போது தேவனுக்குபயந்தவன் என்பதை அறிந்து கொண்டேன். என்று தேவன் சொல்லி 

ஆபிரகாமை முட்புதாில் சிக்கியிருந்த ஆட்டை ஏறிட்டுப் பாா்ககச் செய்தாா். அந்த ஆட்டை ஈசாக்குக்குப் பதிலாக பலியிட்டான். 

அந்த இடத்திற்கு யேகோவாயீரே என்று பேரிட் டான். இந்த வாா்த்தை கா்த்தருடைய பா்வதத்தில் பாா்த்துக் கொள்ளப்படும் என்றா்த்தமாகும். 

இதிலிருந்து நாம் என்னத் தொிநது கொள்கி றோம். நம் அனைத்துத் தேவைகளையும் தேவனேப் பாா்த்து ஆயத்தப்படுத்தி வைத்து உள்ளாா். எனவே நீங்கள் . மனம் கலங்காதீா்கள்.

இயேசு  இவ்வாறாக சொல்கிறார்.. 

நீங்கள் ஜெபம்பண்ணும்போது, அஞ்ஞானிகளைப்போல வீண் வார்த்தை களை அலப்பாதேயுங்கள், அவர்கள், அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள். 
அவர்களைப்போல நீங்கள் செய்யாதிருங்கள், 
(We are not fatherless people )

உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்.  - மத்தேயு 6:7,8

என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று, கவலைப்படாதிருங்கள் இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித் தேடுகிறார்கள், 
இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவை கள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார். 
மத்தேயு  6:31,32

தேவன் உங்கள் தேவைகள் அனைத்தையும் சந்திக்கும் யேகோவாயீரே - வாய் இருக்கிறாா். 

நீங்கள் ஆசீா்வதிக்கப்பட்டவா்கள் 




327               இயேசுவே_துணை.. 

இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார்.  - மத். 28:20

அந்த   ரயிலில்  கூட்டம்  நிரம்பி  வழிந்தது..  டிக்கெட்  பரிசோதகரின் காலில்  ஏதோ  இடறியது..  குனிந்து  அதை  எடுத்தார்..

அது  ஒரு  பழைய  மணி பர்ஸ்.. ஓரமெல்லாம்   ஜீரணம் ஆகி,  மெருகு  குலைந்திருந்தது..

பர்ஸைத்  திறந்தார்..  சில  கசங்கிய நோட்டுகளும், சில்லறைகளும் இருந்தன..  அத்துடன்  கடவுள் படம்  ஒன்றும் இருந்தது..

பர்ஸைத்  தலைக்கு மேலே  பிடித்துக் காட்டிய  பரிசோதகர், "இது யாருடையது?" என்று  குரலை  உயர்த்திக் கேட்டார்..

ஒரு  முதியவர், "அது  என்னுடையது" என்றார்..  பர்ஸின்  நிலையையும், முதியவரின்   வயதையும்  கண்டு ஜோடிப் பொருத்தம்  பார்த்தே  பர்ஸைத்  தந்திருக்கலாம்..

ஆனாலும்  பரிசோதகர், "உம்முடையது  தான்  என்பதற்கு என்ன ஆதாரம்? "எனக் கேட்டார்..

"அதில்  கடவுள் படம்   இருக்கும்.."

"இதெல்லாம்  ஒரு ஆதாரமா?  யார் வேண்டுமானாலும்  கடவுள் படம் வைத்திருக்கலாமே...?"

"ஐயா"  என்று  செருமியவாறு  முதியவர்  ஏதோ கதை  சொல்வது போல் சொல்ல ஆரம்பித்தார்..  வண்டி  வேகமெடுத்ததால்   காற்று பெட்டியினுள்  பரவ, இறுக்கம் விலகியது..  அனைவரும் அவரது கதையைக்  கேட்க ஆர்வமாகினர்..

முதியவர்  கூறினார் :

நான்  படித்துக் கொண்டிருந்த போது என்  அப்பா  எனக்கு இந்தப்  பர்ஸைக்   கொடுத்தார்..  அப்பா அவ்வப்போது  தரும் சில்லரைகளை இதில்  சேர்க்க ஆரம்பித்தேன்..

வீட்டில்  தேடிப் பிடித்து  என் அப்பாவும், அம்மாவும்  ஒன்றாக இருக்கும்  புகைப்படத்தைக்  கண்டு பிடித்து  அதில் வைத்தேன்..

நான்  வாலிபனானேன்.. பள்ளித் தகவல்களுக்காக  என்னைப் புகைப்படம் எடுத்தனர்..

ஆஹா!  அரும்பு மீசையும், குறும்புச் சிரிப்புமாக  இருந்த  என்னை எனக்கே  மிகவும் பிடித்தது..  அம்மா அப்பா  படத்தை   எடுத்து விட்டு என் படத்தை  பர்ஸில் வைத்து, நொடிக்கு 100 தரம் பார்த்துக் கொண்டேன்..

சில வருடங்களில்  திருமணமாயிற்று..  இப்போது மனைவியின்  முகத்தை அடிக்கடி பார்க்க விரும்பினேன்.. பர்ஸில் மாற்றம்.  என்  படம் இருந்த இடத்தில் என் அன்பு மனைவி.. அலுவலக வேலையின்  இடையில்  பர்ஸைத் திறந்து  புகைப்படத்தைப்  பார்ப்பது மகிழ்ச்சியாக இருந்தது..

இதெல்லாம்  சில காலம் தான்..  எங்கள்  அன்பு மயமான  வாழ்க்கையின்  சாட்சியாக  மகன் பிறந்தான்..  பர்ஸில்  மறுபடியும் மாற்றம்!

மனைவியின்  இடத்தை  மகன் ஆக்கிரமித்துக்  கொண்டான்...  பலமுறை  படத்தைப்  பார்ப்பதும்,'என் மகன்' என்று  மற்றவர்களுக்குக்  காட்டுவதும்.. எனக்கு  ஒரே  பெருமை தான்..

வருடங்கள்  ஓடின..  மனைவி காலமானாள்..  என்  மகனுக்குத் தன் குடும்பத்தைக்  கவனிக்கவே நேரம் போதவில்லை..  என்னை எப்படி கவனிப்பது?

என்னைத்  தனிமை  வாட்டியது..  கூட்டத்தில்  தொலைந்து விட்ட குழந்தையாய்த்  தவித்தேன் :  தடுமாறினேன்..  அப்போது தான் இந்தப்  படத்தை  ஒரு கடையில் பார்த்தேன்..  அன்பே உருவான  இயேசு கடவுளின் கண்கள்  என் நெஞ்சை  வருடின..

அவனது   உதட்டின்  முறுவல்  என் உள்ளத்தில்  நேசத்தையும், பாசத்தையும்  நிறைத்தது.. 
சொன்னால்  நம்புங்கள்,  

என்  கண்கள்  அருவியாய்  நீரைச் சொரிந்தன..  உடனே  இயேசு நாதாின்  படத்தை  வாங்கி பர்ஸில்  வைத்து, நெஞ்சோடு  அணைத்துக்  கொண்டேன்..

என்  கவலையும்  பறந்தது ; தனிமையும்   மறைந்தது..  என்றென்றும்  எவருக்கும்  நிரந்தரமான  துணையாக  இருப்பவர்  இயேசு கடவுள்   மட்டுமே..

முதியவர்  நிறுத்தினார்..

ஆனால், வண்டியில்  இருந்த  ஒவ்வொருவர்  நெஞ்சிலும்  இயேசுவின்  அன்பின் முகம் தெரிய  ஆரம்பித்தது. 

பரிசோதகர்  நெகிழ்ச்சியுடன் பர்ஸை  முதியவரிடம்  கொடுத்தார்.

என் அன்புக்குாியவா்களே, 
இவ்வளவு தாங்க மனுஷனின் வாழ்க்கை
இதுக்குள்ள தான் எத்தனை போட்டி,,பொறாமை யுமான அவமானங்களும்.....

தேவன்ஒருவரே என்றும் துணையானவா்இன்று 
உங்களைப் பாா்த்து தேவன் சொல்கிறாா்.. 

நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன், திகையாதே, நான் உன் தேவன்
நான் உன்னைப் பலப்படுத்தி உனக்கு சகாயம் பண்ணுவேன், என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.   -  ஏசா. 41:10

இந்த புதிய வாரத்தில் தைாியமாயிருங்கள்.  தேவன்  உங்களோடிருக்கிறாா்.  

உங்கள் பிள்ளைகளும், உங்கள் குடும்பத்தினரும் உன்னுடன் கடைசிவரை இருப்பேன் என்ற உங்கள் துணையும் கூட மாித்தோ அல்லது பிாிந்தோப் போயிருக்கலாம். 

உங்கள் நண்பா்கள்  கூட உங்களை அலட்சியப் படுத்தி உங்களை விட்டுப் போயிருக்கலாம்.
நம் தேவனும்,கா்த்தருமாய் இருக்கிற  இயேசு கிறிஸ்து உங்களை ஒருபோதும் கைவிடவே  மாட்டாா். உங்களோடு துணையாக இருக்கிறாா். 

இந்த புதிய வாரத்தில் புதிய குறிக்கோளுடனும் லட்சியத்தோடும் புதிய தாிசனத்தோடும் உங்கள் 
வாழ்க்கை ஆரம்பியுங்கள். உங்கள் வாழ்க்கை அழகாகும்.

நீங்கள் ஆசீா்வதிக்கப்பட்டவர்கள் !!!



328                 குதிரையும் ஆடும்

ஒரு மடத்தில் ஜென் துறவி ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் மிகவும் ஜாலியான குணமுடையவர். எப்போதுமே கோபப்படமாட்டார். அவரிடம் சீடர்கள் சிலர் கல்வி கற்று வந்தனர். அவரது சீடர்களுக்கு அந்த துறவி என்றால் மிகவும் பிடிக்கும். 

ஒரு நாள் அந்த துறவி தன் சீடர்களிம் பேசிக் கொண்டிருக்கையில், சீடர்கள் அவரிடம் "குருவே! உங்களுக்கு பிடித்த கதை என்ன?" கேட்டனர். அதற்கு அவர் "குதிரையும் ஆடும்" என்று சொன்னார். அதென்ன குதிரையும் ஆடும், அது எந்த மாதிரியான கதை, எங்களுக்கும் அந்த கதையை சொல்லுங்களேன் என்று வேண்டிக் கொண்டனர். 

அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க குரு அந்த கதையை சொல்ல ஆரம்பித்தார். 

அதாவது "ஒரு விவசாயி குதிரையையும், ஆட்டையும் வளர்த்து வந்தான். குதிரையும் ஆடும் சிறந்த நண்பர்கள். ஒரு நாள் அந்த குதிரை வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டது. அதனால் அந்த விவசாயி குதிரைக்கு சிகிச்சை அளிக்க மருத்துவரை அழைத்து வந்தான். மருத்துவர் அந்த குதிரையின் நிலையை பார்த்து, நான் மூன்று நாட்கள் வந்து மருந்து தருகிறேன். அந்த மருந்தை சாப்பிட்டு குதிரை எழுந்து நடந்தால் சரி, இல்லையெனில் அதனை கொன்றுவிட வேண்டியது தான் என்று சொல்லி, அன்றைய மருந்தை கொடுத்துச் சென்றார். 

இவர்களது உரையாடலை அந்த ஆடு கேட்டுக் கொண்டிருந்தது. மறுநாள், அந்த மருத்துவர் வந்து அன்றைய மருந்தைக் கொடுத்து சென்றார். பின் அங்கிருந்த ஆடு, அந்த குதிரையிடம் வந்து, "எழுந்து நட நண்பா, இல்லாவிட்டால் அவர்கள் உன்னை கொன்று விடுவார்கள்" என்று அந்த குதிரையை ஊக்குவித்தது.

 மூன்றாம் நாளும் வந்துவிட்டது, மருத்துவரும் வந்து குதிரைக்கு மருந்து கொடுத்துவிட்டு, அந்த விவசாயிடம் "நாளை குதிரை நடக்கவில்லையெனில், அதனை கொன்றுவிட வேண்டும். இல்லாவிட்டால், அந்த வைரஸ் மற்றவர்களுக்கு பரவிவிடும்." என்று சொல்லிச் சென்றார். 

அந்த மருத்துவர் போனதும், ஆடு குதிரையிடம் வந்து, நண்பா! எப்படியாவது எழுந்து நடக்க முயற்சி செய். உன்னால் முடியும், எழுந்திரு! எழுந்திரு! என்று சொல்லியது. அந்த குதிரையும் முயற்சி செய்து எழுந்து நடந்துவிட்டது. எதிர்பாராதவிதமாக அந்த குதிரையை விவசாயி பார்க்க வரும் போது, குதிரை ஓடியதைப் பார்த்து சந்தோஷமடைந்து, மருத்துவரை அழைத்து அவரிடம் "என்ன ஒரு ஆச்சரியம். என் குதிரை குணமடைந்துவிட்டது. இதற்கு நிச்சயம் உங்களுக்கு ஒரு விருந்து வைக்க வேண்டும். சரி, இந்த ஆட்டை வெட்டுவோமா!!!" என்று சொன்னார்" என்று கதையை சொல்லி முடித்தார். 

பின் அவர்களிடம் "பார்த்தீர்களா! இந்த கதையில் உண்மையில் குதிரை குணமடைந்ததற்கு அந்த ஆடு தான் காரணம். ஆனால் மருத்துவரின் மருந்தால் தான் குதிரை குணமடைந்தது என்று எண்ணி, கடைசியில் அந்த ஆட்டையே பலி கொடுக்க நினைக்கிறார்கள். ஆகவே இந்த உலகில் யாரால் நன்மை கிடைத்ததோ, அவர்களை விட, அந்த நன்மைக்கு அருகில் இருப்பவர்களுக்குத் தான் அதிக மரியாதை கிடைக்கும்." என்று இறுதியில் சொல்லி விடைபெற்றார்.

என் அன்பு வாசகர்களே,
இன்றைய சூழலில் அநேகர் இந்த ஆட்டைப்போல் தான்‌ இருக்கிறார்கள். தங்களால் இயன்ற அளவு மற்றவர்களுக்கு உதவி செய்கிறார்கள் ஆனால் இறுதியில் அதுவே அவர்களுக்கு கன்னியாய் மாறிவிடுகிறது.

உதாரணமாக ஒரு விசுவாசியின் குடும்பத்தில் ஏதேனும் இக்கட்டான சூழ்நிலை வரும்போது சபை போதகர் தான் முன்சென்று எல்லா காரியத்தையும் செய்ய வேண்டும். அவரால் முடியாத பட்சத்தில் உடன் ஊழியர்களோ, விசுவாசிகளோ சென்று அவர்களுக்காக உத்திரவாதத்தோடு ஜெபம் பண்ணுவதிலும், உபவாசம் செய்வதிலும் தரித்திருப்பார்கள்.  அப்படி உத்திரவாதத்தோடு இருப்பவர்களுக்கு அதற்கான அங்கிகாரம் கிடைப்பதில்லை

 மாறாக சபை ஊழியராலும் மற்ற விசுவாசிகளாலும் புறக்கணிக்கப்படுகிறார்கள். 

வேதாகமத்தில் நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் நம்முடைய பாவங்களுக்காய், மீறுதல்களுக்காய் உத்திரவாதத்தோடு தன்னுடைய சிங்காசனத்தை விட்டு பூலோகத்தில் வந்து நமக்கு பதிலாக நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, துக்கங்களை சுமந்துகொண்டு கல்வாரி சிலுவையில் தன் ஜீவனையே தியாகமாக ஈந்தார். 

ஆனால் சுகமாய் வாழ்கின்ற காலத்தில் அவர் நமக்காக செய்த தியாகங்களை மறந்து அவரை புறக்கணிக்கிறோம். நாம் உண்மையில் நன்றாய் வாழ்வதற்கு காரணம் அவர் சிலுவையில் மரித்தது கிருபையாகிய இரட்சிப்பை இலவசமாய் நமக்கு தந்ததால் தான் இன்றளவும் நாம் நிலைநிற்கிறோம்.

நாம் செய்த எந்தவொரு காரியமும் நம்மை இரட்சிக்கவில்லை தேவனுடைய கிருபை நம்மை சுழ்ந்திருப்பதாலும், தேவ தயவு அல்லது ஈவு நம்மை ஆட்கொண்டிருப்பதால் மாத்திரமே. வேதம் சொல்கிறது,

8 கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள். இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு.

எபேசியர் 2:8

எனவே அன்பானவர்களே, நமக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்த இயேசுவை நாம் ஒருபோதும் விட்டுவிடாமல் அவருடைய ஈவாகிய தேவ கிருபையை தரித்துக்கொள்வோம்.

நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்



329           கிறிஸ்துவுக்குள்

*ஒருவன் கிறிஸ்துவுக்குள் இருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்து போயின, எல்லாம் புதிதாயின.  2 கொரிந்தியர் 5:17*

தெற்கு அமெரிக்காவில் வாழ்ந்த ஜோனா என்ற பெண், சிறைச்சாலையில் வாழும் கைதிகளுக்கு கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் கொடுப்பதன் மூலம், அவர்களுக்கு நம்பிக்கையை வழங்குவதில் கருத்தாயிருந்தார். ஜோனா அனுதினமும், மன்னிப்பையும், மனம் பொருந்துதலையும் பற்றிய ஒரு சிறிய சுவிசேஷ செய்தியுடன் சிறைக்கைதிகளைச் சந்தித்து வந்தாள். அவள் அந்த கைதிகளின் நம்பிக்கையைச் சம்பாதித்தாள், அவர்களும் தங்களின் குழந்தைப் பருவத்தில் தங்களுக்கு இழைக்கப் பட்ட    அநீதிகளைப் பகிர்ந்து கொண்டனர். அவளும், முரண்பாடுகளை எப்படி தீர்த்துக் கொள்வது என்பதைப் பற்றி அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தாள். அவள் அங்கு செல்வதற்கு முந்தின ஆண்டு, அந்த சிறைச் சாலையில், 279 வன்முறைச் செயல்கள், கைதிகளுக்கிடையேயும், காவலர் மீதும் நடத்தப்பட்டதாகவும், அடுத்த ஆண்டு, இரண்டு வன்முறைச் செயல்கள் மட்டுமே       நடந்ததாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

“ஒருவன் கிறிஸ்துவுக்குள் இருந்தால் புதுச் சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்து போயின, எல்லாம் புதிதாயின” (2 கொரி.5:17) என அப்போஸ்தலனாகிய பவுல் எழுதுகின்றார். புதிதாக்கப்படுதலை ஃப்ளான்டர்- தாமஸ் கண்டது போல நாம் காணாவிட்டாலும், சுவிசேஷத்தின் வல்லமையே உலகிற்கு பெரும் நம்பிக்கையூட்டும் வல்லமை. புதிய படைப்புகள் என்பது எத்தனை ஆச்சரியமான      சிந்தனை! இயேசு கிறிஸ்துவின் மரணம், நம்மை அவரைப் போல மாற்றும் ஒரு பயணத்திற்கு அழைத்துச் செல்கின்றது. நாம் அவரை முகமுகமாய் சந்திக்கும் போது, இந்த பயணம் முடிவடைகின்றது (1 யோவா. 3:1-3).

இயேசுவின் விசுவாசிகளாகிய நாம் புதிதாக்கப்பட்ட நம் வாழ்வைக் கொண்டாடுகின்றோம். ஆயினும் கிறிஸ்து அதற்காகச் செலுத்தின கிரயத்தை மறந்து விடக் கூடாது. அவருடைய மரணம் நமக்கு வாழ்வைக் கொடுக்கின்றது. “நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்” (2 கொரி .5:21).

இயேசு, புதிதாக்குகின்ற வேலையை உன் வாழ்வில் செய்கிறார் என்பதை எவ்வாறு உணர்கின்றாய்? இன்னமும் எப்பகுதிகளில் “புதிதாக்குதல்” தேவையாயிருக்கின்றது?

அன்புள்ள தந்தையே, இயேசு கிறிஸ்து சிலுவையில் நிறைவேற்றின காரியத்தின் மூலம், நான் புதிய படைப்பாக மாறுகின்றேன். நான் கழைந்து போட வேண்டிய, பழையவற்றிற்கு திரும்பிய நேரங்களை மன்னித்தருளும். 

தேவனுடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக.


330           பிறரின் வீழ்ச்சியில்

உன் சத்துரு விழும்போது சந்தோஷப்படாதே...
நீதிமொழிகள் 24:17

தென்னை மரத்திலிருந்து கீழே விழுந்த காய்ந்த ஓலையைப் பார்த்து, பச்சை ஓலை கேலி செய்து சிரித்ததாம். அதைக்கண்ட குருவி ஒன்று அந்தப் பச்சை ஓலையைப்
பார்த்து வேடிக்கையாகச் சிரித்ததாம். என்னைப் பார்த்து ஏன் சிரிக்கிறாய்? என்று கேட்டதாம் பச்சை ஓலை. சற்று முன்பு கீழே விழுந்த காய்ந்த ஓலை பச்சையாக
இருக்கும் போது காய்ந்த ஓலைகள் விழும் போதெல்லாம் கைகொட்டிச் சிரித்து வந்தது. இன்று பரிதாபமாக விழுந்துவிட்டது. அதைப்பார்த்து உனக்குச் சிரிப்பு வந்தது. நாளைக்கு நீயும் விழப் போகிறாய் என்பதை நினைத்த போது எனக்கும் சிரிப்பு
வந்துவிட்டது என்றதாம் அந்தக் குருவி.

இன்னொருவருடைய வீழ்ச்சி நம்முடைய மனதிற்குள் ஒரு குஷியை உருவாக்குமாயின் அது நம்முடைய மனிதாபிமானமற்ற தன்மையையே காண்பிக்கும். இன்று இன்னொருவருக்கு நிகழ்வது நாளைக்கு நமக்குக்கூட நடக்க முடியும். தாவீதின் பரம விரோதிதான் சவுல் அரசன். 

ஆனால், அந்த சவுலுக்கு
ஏற்பட்ட வீழ்ச்சி தாவீதின் மனதில் களிப்பை உருவாக்கவில்லை. அக்கிரமக்காரன் அழிந்தான் என்று அவன் ஆரவாரம் செய்யாமல், அவனுக்காக அங்கலாய்த்துக்
கண்ணீர்விட்டான். அது தேவ பக்தியின் முதிர்ச்சி.

பிறருக்கு நேர்ந்த கஷ்டங்கள் அவர்களுடைய அக்கிரமப்போக்கிற்கு நியாயமான பலன்தான் என்று எண்ணத்தக்க சூழ்நிலை இருந்தால்கூட, கஷ்டம்
யாருக்கு வந்தாலும் அதற்காகப் பரிதவிக்க வேண்டுமேயன்றி அதைப் பார்த்து சந்தோஷப்படக்கூடாது. அது தேவன் விரும்பாத செயலேயாகும்.

 சிலர் பிறர் கஷ்பட நேரிடும் காலங்களில் அவன் செய்த தவறுகளின் பலனை அனுபவிக்கின்றான
நாம் என்ன செய்ய முடியும் என எண்ணி, அவர்களின் இக்கட்டான நிலைகளை பாராமல் கண்ணை மூடி விடுகிறார்கள். ஆனால், ஏன் அவனுக்குத் துன்பம் என்ற ஆராய்ச்சி அல்ல. அந்த நேரத்தில் நாம் நம்மால் இயன்ற ஒரு ஆறுதலின் செயலைச் செய்வதே தேவனுக்குப் பிரியமாயிருக்கும்.

ஆபிரகாமின் உறவை அசட்டை செய்து தனி வழி தேடி அவனை விட்டுப் பிரிந்து சென்றவன் லோத்து. ஒரு நாள் அவனுக்கு இக்கட்டு நேரிட்டது. அவன் அந்நிய அரசனால் சிறைபிடிக்கப்பட்டான். ஆபிரகாம் அதனால் வருத்தமடைந்தானேயன்றி
,சந்தோஷப்படவில்லை. 

அவனவன் செய்த தவறுக்குத் தகுந்த பலனை அனுபவிக்கின்றான் என்று எண்ணாமல், பாச உணர்வோடு ஓடோடிப் போய் அவனை மீட்பதற்கு உரிய நட வடிக்கைகளை எடுத்தான்.

இன்றைய சிந்தனைக்கு:
இறைவன் உனக்கு எதையாவது செய்யவேண்டுமானால்
மனிதனுக்கு நீ என்ன செய்யவேண்டும் என்பதை அறிந்திரு.

நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை நம் அனைவரோடும் கூட இருப்பதாக. ஆமென். ஆமென்



331  பிரயோஜனமில்லாதவன்

ஒரு மனிதன் தன்னுடைய கடைக்கு முன்பாக ஒரு விளம்பரப் பலகையை
வைத்திருந்தான். உங்களிடம் பயன்படாமலிருக்கும் எந்தப் பொருளையும் என்னிடம் கொண்டு வாருங்கள். அதனை உங்களுக்குப் பயனுள்ளதாக்கித் தருகின்றேன் என்று அதில் எழுதியிருந்தது. 

அந்த மனிதனிடம் எதற்கும் பிரயோஜனமற்ற எந்தப் பொருளைக் கொடுத்தாலும், அதனை ஒரு நல்ல பயனுள்ள
பொருளாக மாற்றிவிடும் கலைத்திறனும் ஞானமும் இருந்தது.

ஒருநாள் வாழ்க்கையில் விரக்தியடைந்த வாலிபன் ஒருவன் அவனிடம் வந்தான். ஐயா, என்னை எதற்கும் பிரயோஜனமில்லாதவன் என்று என் பெற்றோர் கூறிவிட்டனர். என்னை நீர் பிரயோஜனமுள்ளவனாக மாற்ற இயலுமா? என்று கேட்டான்.

அதற்கு அந்த மனிதன் பொருட்களைத்தான் என்னால் பயனுள்ளதாக்க இயலும். உன்னைப் போன்றவர்களை பயன்படுத்த கடவுளால்தான் முடியும், நீ போய் பிரார்த்தனை செய் என்று பதிலளித்தான்.

ஆம், தேவன் மட்டும்தான் பயன்பாடற்றுப் போன ஒரு மனித வாழ்வை பயன்மிக்கதாக மாற்றமுடியும். யாருக்கும் வேண்டாம் என்று வீசப்படும் வாழ்க்கைதனை அவரால்தான் எல்லோருக்கும் பயனுள்ளதாக மாற்ற இயலும், இதை எழுதிக்கொண்டிருக்கின்ற என் வாழ்வை நான் எதற்கும் பயன்பாடற்றதாகக் கண்டு கசந்து போன காலங்கள் இருந்தது.

 ஆனால், அற்புதக் கலைஞராகிய தேவன் இந்தப் பயனிழந்துபோன வாழ்வை, இன்று பயன்மிக்கதாக மாற்றியிருக்கின்றாரே.

யோபு அனைத்தையும் இழந்து போனான். ஆஸ்தி, அந்தஸ்து, ஆரோக்கியம் யாவும் போய் விட்டது. அவனுடைய பயன்பாடிழந்த பரிதாப நிலைமையைப் பார்த்து.
அவனுடைய சொந்த மனைவியே உயிரைவிட்டுவிட ஆலோசனை கொடுத்தாள் ஆனால், அந்த மனிதனோ தேவனை நோக்கிப் புலம்பினான். அந்தப் பயனிழந்து
போன வாழ்வைத் தேவன் தொட்டுத் துலக்கி, புதிய வடிவத்தில் மிகுந்த ஆசீர்வாதமுள்ளதாக்கினாரே.

என்னால் என்ன பயன்? இனி என் வாழ்வினால் என்ன பிரயோஜனம்? என்ற கேள்விகள் அடிக்கடி உங்களுக்குள் வருகிறதா? விசுவாசக் கண்களால் உற்றுப் பாருங்கள். உங்களின் அருகில் ஒருவர் நிற்கின்றார். இந்த வாழ்வை என்னிடம்அர்ப்பணித்துவிடு. அதைப் பயனுள்ளதாக்கிக் காட்டுகிறேன் என்கிறார். அவர்தான் உங்களை மீட்கப் வந்த இயேசு கிறிஸ்து. அவரிடம் உங்களை ஒப்படையுங்கள். அவர் உங்களை ஆசீர்வாதமாக்குவார்.

இன்றைய சிந்தனைக்கு....
நாம் நம்பிய ஆதாரங்கள் அசையும் போதுதான் நம் நம்பிக்கையை வைக்க வேண்டிய ஆதாரம் எதுவென்பது புரியும்.

நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை நம் அனைவரோடும் கூட இருப்பதாக. ஆமென். 



332.         திசையா_நேரமா...

இந்தக் குட்டிக்கதையில் நீங்கள் தான் முக்கிய கதாப்பாத்திரம்...

ஒரு நாள், ஒரு விமானியுடன், ஒற்றைப் பயணியாக, விமானத்தில் பயணம் செய்து கொண்டு இருக்கிறீர்கள். 

திடிரென்று விமானத்தின் இஞ்சின் பழுதடைந்து விடவே, விமானம் ஆகாயத்தில் தடுமாறுகிறது. எந்த நேரத்திலும் விமானம் விபத்துக்குள்ளாகும் நிலைமை வருகிறது. 

அப்போது விமானி உங்களிடம், பாரஷூட் ஒன்றை கொடுத்து, தப்பி விடுமாறு உதவுகிறார்.

நீங்களும் பாரஷூட்டை எடுத்துக்கொண்டு வானிலிருந்து குதித்து விடுகின்றீர்கள். ஆனால் சோதனையாக, அந்த பாரஷூட்டோ உங்களை ஒரு அடர்த்தியான காட்டிற்குள் எடுத்துச் சென்று இறக்கிவிடுகிறது. 

காட்டின் எல்லாப்புறமும் ஒரே மாதிரி இருக்கின்றது. காட்டின் எந்தப்புறம் ஓடினால் தப்பிக்க முடியும் என்று உங்களுக்குத் தெரியவில்லை.

சில நொடிகள் சுற்றி முற்றி பார்க்கின்றீர்கள். அப்போது ஒரு பலகையில் காட்டின் இரு விதிகள் எழுதப் பட்டிருக்கிறது..

முதல்_விதி.. மனிதர்கள் எவரேனும் தவறுதலாக காட்டிற்குள் நுழைந்து விட்டால் சரியாக ஒரு மணி நேரத்தில் காட்டின் மிகக் கொடிய விலங்குகள் மனிதர்கள் இருக்கும் இடத்திற்கு மோப்பம் பிடித்து வந்து சேரும். எனவே ஒரு மணி நேரத்திற்குள் அந்த காட்டை விட்டு நீங்கள் தப்பித்தாக வேண்டும்.

இரண்டாவது_விதி.. கிழக்குப் பக்கமாக சென்றால் மட்டும் தான் அந்தக் காட்டை விட்டு நீங்கள் வெளியே செல்ல முடியும்.
மீண்டும் ஒருமுறை சுற்றிலும் நீங்கள் பார்க்கின்றீர்கள். கிழக்கு திசை எங்கு இருக்கிறது என்று தெரியவில்லை. என்ன செய்வதென்று ஒரு தெரியாமல் திகைத்துப் போகிறிர்கள். காட்டு விலங்குகளின் பசிக்கு இரையாகிவிடுவோமோ என்ற அச்சம் வேறு உங்களை ஆட்டிப் படைக்கிறது.

அப்போது அந்த இடத்தில் திடீரென ஒரு தேவதூதன்  உங்கள் முன் தோன்றுகிறான். உங்களின் சூழ்நிலையை புாிந்துக்கொண்டு, உங்களிடம் இரு பொருள்களை நீட்டுகிறான். 

ஒன்று மணி பார்க்கும் கடிகாரம். அதன் மூலம் உங்களுக்கு இன்னும் எவ்வளவு நேரம் தப்பிக்க இருக்கிறது என்பதை கணக்கிட்டுக் கொள்ளலாம். ஆனால் அதை வைத்துக் கொண்டு திசையை கண்டுபிடிக்க இயலாது.

மற்றொன்று திசைக் காட்டும் கருவி. இந்தக் கருவி மூலம் உங்களுக்குத் தப்பிச் செல்லக்கூடிய திசை தெரியும். ஆனால் நீங்கள் தப்பிக்க எவ்வளவு நேரம் மீதம் உள்ளது என்று தெரியாது.

தேவதூதன் உங்களிடம் இந்த இரு பொருட்களையும் காண்பித்து, 
.
“நான் உனக்கு உதவ முடியும். ஆனால் இந்த இரு பொருள்களில் ஏதேனும் ஒன்றை மட்டும் தான் நீ எடுத்துக் கொள்ள முடியும். உனக்கு எது வேண்டும்..?” என்று கேட்கிறான் 

இத்தகைய சூழ்நிலையில் நீங்கள் எந்தப் பொருளை தேர்வு செய்வீர்கள்..? எது உங்களுக்கு மிக முக்கியமானதாகத் தோன்றும்..?

திசையா_நேரமா? வேகமா_வழியா?

ஆம், உங்கள் யூகமும் பதிலும் சரிதான். திசை காட்டும் கருவிதான் உங்களுக்கு அதிக தேவையாக இருக்கும்.

என் அன்புக்குாியவா்களே, 

இந்தக் கதைக்கு மட்டுமல்ல.  உங்கள்  வாழ்க்கைக்கும்_இதே_நிலை தான். பல பிரச்சினைகள் நமக்கு வரும்போது, சரியான திசையில் செல்லக்கூடிய முடிவே பெரிய வெற்றியை பெற்றுத் தருகிறது.

ஒருவர் எவ்வளவு தான் திறமைகள் கொண்டவராய் இருப்பினும், வேகமாக செயல்படக் கூடியவராய் இருப்பினும், சரியான வழியில் செல்லத் தொியவில்லை என்றால், அவர் இலக்கை அடைவது இயலாதக் காாியமே.

வெற்றிக்கு வேகமாக ஓடுவதை_காட்டிலும், 
சாியான_திசையில் ஓடுவது முக்கியமான காரணமாக இருக்கிறது.

எனவே உங்கள் திசையை, வழியை சரியாகத் தீர்மானியுங்கள். பயணம் வெற்றி பெறட்டும்.

பைபிள் சொல்கிறது, வழிகளிலே நின்று, பூர்வ பாதைகள் எவை யென்று கேட்டு விசாரித்து, நல்ல வழி எங்கே என்று பார்த்து, அதிலே நடவுங்கள், அப்பொழுது உங்கள் ஆத்துமாவுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும் என்று கா்த்தா் சொல்லுகிறாா். 
எரேமியா 6:16

அந்த ஒரே வழி இயேசுவே.. அவா் வழியில் நடவுங்கள். திசை மாற மாட்டீர்கள்.  

இயேசு  சொல்கிறாா், 

நான் போகிற இடத்தை அறிந்திருக்கிறீர்கள், வழியையும் அறிந்திருக்கிறீர்கள் என்றார். தோமா அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் போகிற இடத்தை அறியோமே, வழியை நாங்கள் எப்படி அறிவோம் என்றான்.அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன. (யோவான் 14:4 -6)

உங்கள் வாழ்வில்  உங்களை சரியான வழியில்
அழைத்துச் செல்லவும், தடுமாறாமல் நீங்கள் செல்லவும் அவரே வழியாயிருக்கிறாா்.  

அந்த வழியாகிய இயேசுவைக் குறித்து ஏசாயா  எழுதுகிறார். 

அங்கே பெரும்பாதையான வழியும் இருக்கும், அது பாிசுத்த  வழி என்னப்படும், தீட்டுள்ளவன் அதிலே நடந்துவருவதில்லை, அந்த வழியில் நடக்கிறவர்கள் பேதையராயிருந்தாலும் திசைகெட்டுப் போவதில்லை. அங்கே சிங்கம் இருப்பதில்லை, துஷ்டமிருகம் அங்கே போவதுமில்லை, அங்கே காணப்படவுமாட்டாது, மீட்கப்பட்டவர்களே அதில் நடப்பார்கள். 

கர்த்தரால் மீட்கப்பட்டவர்கள் திரும்பி, ஆனந்தக்களிப்புடன் பாடி, சீயோனுக்கு வருவார்கள், நித்திய மகிழ்ச்சி அவர்கள் தலையின்மேலிருக்கும், சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைவார்கள், சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போம். (ஏசாயா 35:8 -10)

இயேசுவின் வழியில் நீங்கள் நடவுங்கள்.  அவரே உங்கள் வாழ்க்கையைத் திட்டமிடுவாா்.உங்களை அதில் உழைக்கச் செய்வாா். உங்கள் வாழ்க்கையை மேன்மைப்படுத்துவாா்.!
நீங்கள்  சரியான திசையில் செல்வீர்கள். !!
உங்கள் வாழ்க்கை எப்போதும் வெற்றியாய் இருக்கும்.!!!  

நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் 


333.      மனபூா்வமாய்_செய்தல்.. 

வயதான ஒரு மேஸ்திரி, வேலையிலிருந்து ஓய்வு பெற விரும்பினார். இனியாவது குடும்பத் தோடு நேரம் செலவழிக்கவேண்டும் என்பது அவர் திட்டம்!

முதலாளியான கான்ட்ராக்டரிடம் இந்த முடிவை அவர் சொல்ல.. தனது நீண்ட கால ஊழியர் ஓய்வு பெறுவதில் கான்ட்ராக்டருக்கு லேசான வருத்தம்! 

சில விநாடிகள் யோசித்தவர், 
‘‘எனக்காக ஒரு உதவி செய்ய முடியுமா? இன்னும் ஒரே ஒரு வீடு மட்டும் கட்டி முடித்துக் கொடுப்பீர்களா?’’ என்று பணிவோடு கேட்டார்.

அந்த வீடு  பொியதாக  கட்டுங்கள்.  அதை உங்கள் போறுப்பில் விட்டு விடுகிறேன். அதை நீங்கள் எப்படிக் கட்ட முடியுமோ அப்படிக் கட்டுங்கள்.எவ்வளவு பொிய இடத்தை அதற்கு எடுத்துக் கொள்ள வேண்டுமோ அந்த இடத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.  

அழகான பூந்தோட்டததுடன் காா்கள் நிற்கவும் அமைக்க வேண்டுமானாலும் அதை கட்டுங்கள்.    எவ்வளவுபணம் செலவானாலும் பரவாயில்லை. இதை நோ்த்தியாய் கட்டிக் கொடுங்கள். 

மேஸ்திாிஅதற்கு சம்மதித்தாலும் அவருக்கு எாிச்சலாகஇருந்தது.ஓய்வு பெற போகிற கடைசி  நாட்களிலும் வேலை வாங்குகிறாரே என எாிச்சலும் புகைச்சலுமாய் அவா் பணியைத் துவங்கினாா்.  

அவரால் முழு ஈடுபாட்டுடன் அந்தப் பணியில் கவனம் செலுத்த முடியவில்லை. முதலாளி மேல் கோபத்தால் கடுகடுப்புடன் வேலை செய்தாா். 

ஏதோ ஒரு பொருளை பயன்படுத்தி, ஏதோ ஒரு வடிவமைப்பில், ஏனோதானோவென்று வீட்டைக் கட்டினார்.

வேலையிலிருந்தே ஓய்வு பெறப் போகிறோம். இனி, இந்த வீட்டை ஒழுங்காக கட்டினால் மட்டும் என்ன கிடைத்துவிடப் போகிறது’ என்கிற அலட்சிய மனப்பாங்கு!

வேலையெல்லாம் முழுமையாக முடிந்தபிறகு, அந்த வீட்டை பாா்வையிட வந்தார் முதலாளி. வாசலிலேயே வரவேற்ற மேஸ்திரியிடம், சந்தோஷமாக அந்த வீட்டுச்சாவியை எடுத்து நீட்டினார். ‘

‘இந்தாருங்கள்.. இந்த வீடு உங்களுக்கான என் அன்புப் பரிசு! எங்கள் நிறுவனத்தில் இத்தனை நாள் வேலை செய்ததற்கான வெகுமதி!’’ என்றார் முதலாளி.

மேஸ்திரிக்கு முகத்தில் ஈயாடவில்லை. 

‘என்ன கொடுமை இது! 
இந்த வீடு எனக்குத்தான் கிடைக்கப் போகிறது என்று தெரிந்திருந்தால், இன்னும் மூளையை கசக்கி எப்படியெல்லாமோ டிசைன் டிசைனாக கட்டியிருப்பேனே.. 

இருப்பதிலேயே உயர் தரமான பொருட்களை பயன்படுத்தியிருப்பேனே! சே! இப்படி அநியாயமாக ஏமாந்து போய்விட்டேனே..’என்று மனதுக்குள் ஏகமாக புழுங்கினார்.

என்_அன்புக்குாியவா்களே,
பல சந்தர்ப்பங்களில் நமது புழுக்கம்கூட இந்த ரகத்தில்தான் இருக்கிறது. நமக்கான வாழ்க்கையை நாம்தான் நிா்மாணிக்கிறோம் என்பதை அறியாமல்
பல சந்தர்ப்பங்களில் நம் திறமையில் மிகவும் கொஞ்சம் மட்டுமே பயன்படுத்துகிறோம். பிறகு, அப்படி உருவாக்கப்பட்ட வாழ்க்கையையே நாம் வாழவேண்டிய சூழல் வரும்போது, 

அதிர்ச்சி அடைகிறோம்! ‘
இப்படி ஆகும்னு தெரியாம போயிடுச்சே..’ என்று மனம் புழுங்குகிறோம்.

நம் வாழ்க்கை என்னும் வீட்டுக்கு நாம்தான் மேஸ்திரி. ஒவ்வொரு நாளும், ஒரு சுவர் எழுப்புகிறோம். ஆணி அடிக்கிறோம்.. ஜன்னல் பொருத்துகிறோம். 

நம் மனப்போக்கும், அர்ப்பணிப்பும், நாம் தேர்ந்தெடுத்து செயல்படுத்தும் விஷயங்களும் தான் நாளை நாம் வாழப் போகும் வாழ்க்கை எனும் வீட்டின் தரத்தை நிர்ணயிக்கின்றன.

ஒவ்வொரு அடியுமே உன்னதமாக வைப்போம். எந்த அடி திருப்புமுனை தரும் என்பது யாருக்குத் தெரியும்.

வார்த்தைகளினாலாவது கிரியைகளினாலா வது, நீங்கள் எதைச் செய்தாலும், அதையெல் லாம் கா்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து, அவர் முன்னிலையாகப் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள். - கொலோ 3:17

எதைச்செய்தாலும் அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல் கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள்.  -   கொலோ. 3 :24

நீங்கள் ஆசீா்வதிக்கப்பட்டவா்கள் !!!



334             எல்லாவற்றையும் நீர்
                     பார்த்துக் கொள்ளும் 

ஸ்காட்லாந்து தேசத்தில் ஏழைப் பாதிரியார் ஒருவர் வாழ்ந்து வந்தார். தனது வருமானம் சிறியதாய் இருந்தாலும், அதை சிறுகச் சிறுக சேமித்து ஒரு அழகிய ஆலயம் ஒன்றினைக் கட்டினார். மீதமிருந்த பணத்தில் ஆலயத்தினுள்போட நாற்காலி, மேஜை போன்றவற்றை வாங்கினார். 

ஆனால், ஆராதனைக்கு முக்கியமான பியானோ இசைக்கருவியை வாங்கும் அளவிற்கு அவரிடம் பணம் இல்லாத காரணத்தினால் பழைய பியானோ ஒன்றினை ஏலத்தில் எடுக்க முடிவு செய்தார். 

பாதிரியாரின் வளர்ச்சியைப் பிடிக்காத வியாபாரி ஒருவர் பாதிரியாரின் வீட்டின் அருகில் வாழ்ந்து வந்தார். பாதிரியாரின் பியானோ வாங்கும் எண்ணத்தை அறிந்த அந்த வியாபாரி, எப்படியாகிலும் அந்தப் பியானோவை தான் வாங்கிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் ஏலக்கடைக்குச் சென்றார். பாதிரியாரோ அதை அறியாமல் இவ்வாறு ஜெபித்துவிட்டுச் சென்றார். 

"அன்புள்ள இயேசப்பா, எனது கைகளில் 10 பவுண்டுகள் மட்டுமே உள்ளது. இந்தப் பணத்தை ஆசீர்வதித்துத் தாரும். இந்தத் தொகைக்கு மேல் ஏலம் கேட்க என்னிடம் பணம் இல்லை. எனவே எல்லாவற்றையும் நீர் பார்த்துக் கொள்ளும் ஆமென்''. 

ஏலக்கடையில் ஏலக்காரர், 
"இந்த அழகிய பியானோவின் விலை 3 பவுண்டு, விருப்பம் உள்ளவர்கள் மேலே கேளுங்கள்" என்று கூற "4 பவுண்டு, 5 பவுண்டு 7 பவுண்டு, 9 பவுண்டு" என்று ஒவ்வொருவராக கேட்டனர். 
கடைசியாகப் பாதிரியார், "10 பவுண்டு" என்று கத்தினார். அதற்கு மேல் ஒருவருக்கும் அப்பியானோவை வாங்க விருப்பமில்லை. "10 பவுண்டு ஒரு தரம், 10 பவுண்டு இரண்டு தரம், 10 பவுண்டு..." என்று ஏலக்காரர் முடிக்கும் முன்பு, "11 பவுண்டு" என்று ஒரு குரல் ஒலித்தது. குரலுக்குச் சொந்தக்காரர் அந்த வியாபாரி! 

பாதிரியார் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. பியானோ அந்த வியாபாரியின் கைக்குப்போனது. மனச்சோர்வோடு வீடு வந்து சேர்ந்தார் பாதிரியார். 

சிறிது நேரத்தில் அவர் வீட்டின் வாசலில் ஓர் லாரி வந்து நின்றது. அதில், தான் வாங்க எண்ணிய அழகிய பியானோ இருந்தது. அதை வாங்கிய வியாபாரி பாதிரியாரிடத்தில் வந்து, "பாதிரியாரே, இந்தப் பியானோவானது என் வீட்டு வாசலின் அகலத்தைக் காட்டிலும் அகலமாக உள்ளது. எப்படி சாய்த்து நகர்த்தினாலும் இடிக்கிறது. 
எனவே நீங்கள் இதை எடுத்துக்கொண்டு நீங்கள் கொடுக்க நினைத்த 10 பவுண்டுகளைத் தாருங்கள்" என்றார்.

 பாதிரியாரின் உள்ளம் சந்தோஷத்தினால் துள்ளிற்று. 'என்னிடம் பியானோவை ஏற்றிச் செல்ல லாரிக்குப் பணம் இல்லை என்று அறிந்த என் தேவன் இலவசமாக லாரிக் கட்டணமின்றி பியானோவை ஆலயத்தில் கொண்டு சேர்த்தார்' என்று சொல்லி தேவனைத் துதித்தார். 

*ஆம், பிரியமாளவர்களே,*
*நம்முடைய இயேசப்பாவிற்கு நமக்கு எந்த நேரத்தில் எதைக் கொடுக்க வேண்டும் என்பது நன்றாகத் தெரியும்.* *நம்முடைய பார்வைக்கு அது முடியாததாய் தோன்றினாலும் ஏற்ற வேளையில் தமது ஒத்தாசையை அனுப்பி நன்மையாய் நம்முடைய தேவைகளைச் சந்திப்பார்.* *எனவே விசுவாசத்தோடு  ஏற்ற நேரத்திற்காய் காத்திருப்போம்.*

*"எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன். வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும்."
சங். 121:1,2
அல்லேலூயா!


.                      335  தாய் கழுகு

தாய் கழுகு தன் கூட்டைக் கட்ட ஆரம்பிக்கும் போது, நாம் நினைத்திராதபடி, முட்களையும், சிறுசிறு கற்களையும், கிளைகளையும் கொண்டு வந்து, கட்ட ஆரம்பிக்கும். அதைக் கட்டி முடித்தப்பின், அதன் மேல், மெதுவான மிருதுவான பஞ்சு, மெலிதான இறகுகள், தான் சாப்பிட்ட மிருகத்தின் தோல் இவற்றைக் கொண்டு அதன் மேல் பரப்பி, தன் முட்டைகளை சுகமாக இருக்கும்படி, அவற்றை ஒழுங்குப்படுத்தும். பின் முட்டையிட்டு, அதை அடைக்காத்து, அது குஞ்சுகளாக வந்து, அவற்றிற்கு இரையைக் கொண்டு வந்து ஊட்டி, அவற்றை வளர்க்கும். 

அவை வளர்ந்து, பறக்கும் நிலையை அடைந்தவுடன், தாய்க் கழுகு தன் கூட்டை கலைக்க ஆரம்பிக்கும். குஞ்சுகள் சொகுசாக இருந்த பஞ்சு மற்றும், மெலிதான இறகுகள் எல்லாவற்றையும் எடுத்துப் போட்டு விட்டு, முட்களையும், சிறுசிறு கூர்மையான கற்களையும் வெளியே வைத்துவிடும். அந்த மெத்தைப் போன்றவை போனவுடன், குஞ்சுகளுக்கு, கூடு குத்துகிற இடமாக, அவை தங்கியிருக்க முடியாத இடமாக மாறிப் போகும். 

அப்போது அவை தாமாக அந்தக் கூட்டைவிட்டு பறக்க ஆரம்பித்து, தன் இரையைத் தேட ஆரம்பிக்கும். பின், அவை தங்களுக்கென்று குடும்பத்தையும், வீட்டையும் கட்ட ஆரம்பிக்கும்.

நம்மில் கூட சிலர், அந்த கழுகின் குஞ்சுகளைப் போல தங்களுக்கு கிடைத்த கூட்டில் சுகமாய் இருக்கவே விரும்புகின்றனர். எழுந்து பறக்கக் கற்றுக்கொள்வோம் என்ற எண்ணம் சற்றும் இல்லாதவர்களாக, பெற்றோரின் நிழலில், மற்றவர்களின் உதவியில் வாழவே விரும்புகிறார்கள்.

கர்த்தர் அந்த சுகங்களை எடுத்துவிட்டு நம்மை பறக்க ஆயத்தப்படுத்தினால் அவரை குற்றம் சொல்லாதிருங்கள். நாம் பறந்து நம் காலில் நிற்பதையே கர்த்தர் விரும்புகிறார், நாம் நம்மால் இயன்ற அளவு எவ்வளவு தூரம் பறந்து செல்ல முடியுமோ அவ்வளவு தூரம் பறந்துச் செல்வதையே விரும்புகிறார். 

இன்னும் சொல்லப் போனால், நாம் நம்முடைய பிரச்சனைகள், பாடுகள், போராட்டங்கள் எல்லாவற்றையும் விட்டு உயரத்தில் தேவனோடு, உறவாடி, நம்மால் இயன்ற அளவு, அவருக்குள் வளருவதையே கர்த்தர் விரும்புகிறார்.

கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள் அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்து போகார்கள்    (ஏசாயா 40:31) 

என்று வசனம் சொல்கிறது. ஆகையால், எந்த உலக காரியங்களானாலும், நம்மை அவரிடமிருந்து, பிரிக்காதபடி, அவருக்கு காத்திருந்து, புதுப் பெலனை அடைந்து, உயரே எழும்பி, அவருக்காக வாழ்வதையே கர்த்தர் விரும்புகிறார். அவருக்கு காத்திருக்கிறவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துப் போகார்கள். அவர்களுக்கு எந்த கஷ்டம் வந்தாலும் அதினிமித்தம் அவர்கள் சோர்ந்துப் போகாதபடி தங்களைக் கர்த்தருக்குள் காத்துக் கொள்வார்கள். தேவன் அவர்களை பெலப்படுத்துவார். 

கழுகிற்கு வயதாகி தன் பெலனை எல்லாம் இழந்துப் போகும்போது, ஒரு கன்மலையின்மேல் போய் அமர்ந்து, தன் இறகுகள் எல்லாம் விழுந்து, புதிதான இறகுகள் முளைக்கும் வரை காத்திருக்குமாம். புதிதான இறகுகள் முளைத்தவுடன், 

உயர எழும்பி பறக்கும். அதுப்போல கர்த்தருக்கு நாம் காத்திருக்கும்போது, அவர் நமக்குத் தரும் புது பெலத்தினால் உலகையும் சத்துருவையும் எதிர்கொள்ள தேவன் நம்மை புதுபெலத்தினால் நிரப்புகிறார்.


336          நமக்கு மரியாதை

ஒரு தந்தை தனது இறுதி காலத்தில் மகனை அழைத்து சொன்னார், 

மகனே, இது உனது பூட்டனின் கைக்கடிகாரம், 200 வருடங்கள் பழைமை வாய்ந்தது, நான் இதனை உனக்கு தருவதற்கு முன்னால் நீ கடைவீதிக்கு சென்று கைக்கடிகார கடையில் நான் இதனை விற்கப் போகிறேன் எவ்வளவு விலை மதிப்பீர்கள் என்று கேட்டுப் பார் என்றார். 

அவன் போய் கேட்டு விட்டு தந்தையிடம்,  இது பழையது என்பதால் 5 டாலர்கள் மட்டுமே தர முடியும் என்கின்றனர், என்றான். 

தந்தை பழைய பொருட்கள் விற்கும் Antique   கடைக்குப் போய் கேட்டுப் பார் என்றார்.

அவன் போய் கேட்டு விட்டு,  தந்தையிடம் இதற்கு 5000 டாலர்கள் டாலர்கள் தர முடியும் என்கின்றனர் என்றான்.

தந்தை இதனை #Museum கொண்டு சென்று விலையை கேட்டுப்பார் என்றார்...
அவன் போய் கேட்டு விட்டு தந்தையிடம், நான் அங்கு போன போது, அவர்கள் அதனை பரிசோதனைக்குட்படுத்த ஒருவரை வரவழைத்து, பரிசோதித்துவிட்டு, என்னிடம் இதற்கான பெறுமதி ஒரு மில்லியன் டாலர்கள் என்கின்றனர் என்றான்...
தந்தை மகனை பார்த்து, மகனே! சரியான இடம் தான், உனது அந்தஸ்தை சரியாக மதிப்பிடும். எனவே,  பிழையான இடத்தில் நீ உன்னை நிறுத்திவிட்டு, உன்னை  மதிக்கவில்லை என்று நீ கோபப்படுவதில் அர்த்தம் இல்லை என்றார்...

" உன்னுடைய  மரியாதையை அறிந்தவனே உன்னை கண்ணியப்படுத்துவான்...."

" உனக்கு தகுதி இல்லாத இடத்தில் நீ இருக்காதே... "
இதனை வாழ்க்கையின் பாடமாக எடுத்துக்கொள்...

நமக்கு மரியாதை இல்லாத இடத்தில் ஒரு நிமிடம் கூட செலவலிக்காதீர்கள்.
எல்லா துக்கங்களும் முடிவுக்கு வரும் . 




337       மனைவியை_நேசியுங்கள்

ஒருவன் மிகவும் அழகான ஒரு பெண்ணை மணமுடித்தான். அவள் மீது அளவு கடந்த பாசத்தையும் காட்டினான்.

இவ்வாறிருக்க ஒரு நாள் அவன் அன்பு மனைவி  ஒரு தோல் நோய்க்கு ஆளானாள். அதனால் அவளது  முகம்,  கை, கால்கள் உடல்  ஆகியவைகளின் அழகு படிப்படியாக குறைவடையத் தொடங்கியது. 

அவ்வேளை அவன்  கணவன் ஒரு நீண்ட  பயணமொன்றை மேற்கொண்டிருந்தான்.
அவன் திரும்பி வரும் போது ஒரு விபத்துக்குள்ளாகி அவனது கண் பார்வையை இழந்தான்.

அதனால் பிரச்சினையும் இன்றி அவர்களது மண வாழ்வு தொடர்ந்தது. நாட்கள் செல்லச் செல்ல அவன்  மனைவியும்  தனது சரீரத்தில்  தோல் நோய் அதிகமாகி  தனது  அழகும் படிப்படியாக குறைவடைந்து செல்வதை உணர்ந்தாள். 

ஆனால் குருடனான கணவனுக்கோ இது ஒன்றும் தொியாது. இருவரும் அவா்களிருவரது அன்பில் எவ்வித வேறுபாடும் மாற்றமும் காட்டாது வாழ்ந்தனர்.

அவன் அவளை அதிகமாக நேசித்தான் அவளுடன் அன்பாக நடந்து கொண்டான். அவளும் அவனுடன் அவ்வாறு தான் இருந்தாள்.

அப்படியிருக்க ஒரு நாள் அவள் இறந்துவிட்டாள்.
அவளது மரணம் அவனை  மனதை மிகவும் வேதனைப்படுத்தியது.

தன் அன்பு மனைவியின் இறுதி கிாியைகளை நிறைவேற்றி அவளை அடக்கம் செய்த பின் அவன் தனி மனிதனாக அவ்விடத்தை விட்டு வீடு திரும்பினான்.

அவன் திரும்பி வரும் போது அவனுக்கு பின்னாலிருந்து ஒரு மனிதர் அவனை அழைத்து

"எவ்வாறு நீ தனியே நடந்து செல்கிறாய்? 

இது வரைக்காலமும் நீ உன் மனைவியின் உதவியுடன் அல்லவா நடந்தாய்?"
எனக் கேட்டான்.

அதற்கு அவன் ஃநான் குருடன் இல்லை. எனது மனைவி தோல் நோயினால் மிகவும் கஷ்டபட்டுள்ளாள் என்பதை நான் அறிந்தால் அவள் மனம் காயப்படக் கூடும் என்பதால் தான் குருடன் போன்று பாசாங்கு செய்தேன்.

அவள் சிறந்ததொரு மனைவியாக இருந்தாள். அவள் பின்னடைவதற்கு ஒரு காரணமாக இருக்க பயப்பட்டேன்.

அதனால் தான் குருடன் போன்று பாசாங்கு செய்து இதற்கு முன் எவ்வளவு பாசமாக நடந்து கொண்டேனோ அவ்வாறே இது வரையும் அவளுடன் வாழ்ந்தேன்" அவரவர் மனம் புண்படக்கூடாது என்றான்.  

இவன் ஒரு அற்புதமான கணவன்... 

அன்புக்குாியவா்களே,

உங்கள் மனைவியை  உள் மனதின் 
ஆழத்திலிருந்து உண்மையாக நேசியுங்கள்!! அவா்களின் வியாதி, பெலவீனங்கள், மற்ற எந்த குறைகளையும் மனதில் வைக்காதபடி அந்த நேரங்களில்  மிகவும் அதிகமாக நேசியுங்கள். 

அவர்களுக்கு உங்களைத் தவிர வேறு யாருமில்லை என்று உணருங்கள்.அவா்களோடு எந்த சூழ்நிலையிலும் ஒருமனமாயிருங்கள் !!
அவா்கள்  சண்டையிட்டாலும் அதை பொருப்படுத்தாதீா்கள். 

ஒருவேளை அவர்கள சரியில்லாதவர்களாயிருந்தாலும் உங்கள் அன்பு  அவா்கள் சாியானவர்களாய் மாற்றிவிடும். அன்புக்கு உள்ள சக்தி  உலகத்தில் வேறெதுக்கும் இல்லை. 

ஏனென்றால்,
அன்பு என்பது ஆவியானவாின்  வெளிப்பாடாயிருக்கிறது. அன்பு ஆவியானவாின் குணமாயிருக்கிறது. 

*இதைக் குறித்து பவுல் எழுதுகிறார்..* 
*நமக்கு அருளப்பட்ட பரிசுத்தஆவியினாலே தேவஅன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது.*  
*-(ரோமர் 5:5)*

*மேலும் பவுல் புருஷா்களுக்கு எழுதும் போது,*

*"புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள். தங்கள் மனைவிகளைத் தங்கள் சொந்த சரீரங்களாகப் பாவித்து,* *அவர்களில் அன்புகூரவேண்டும்.* 
*தன் மனைவியில் அன்புகூருகிறவன் தன்னில்தான் அன்புகூருகிறான்".*
*-(எபேசியர் 5:25,28)*

பேதுரு சொல்கிறாா்,
*"புருஷர்களே, மனைவியானவள் பெலவீன பாண்டமாயிருக்கிறபடியினால், உங்கள் ஜெபங்களுக்குத் தடை வராதபடிக்கு, நீங்கள் விவேகத்தோடு அவர்களுடனே வாழ்ந்து, உங்களுடனேகூட அவர்களும் நித்திய ஜீவனாகிய கிருபையைச் சுதந்தரித்துக் கொள்கிறவர்களானபடியினால் அவர்களுக்குச் செய்யவேண்டிய கனத்தைச் செய்யுங்கள்".*
*-(1 பேதுரு 3:7)*

*மனுஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியுடன் இசைந்து, இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள்.* *(எபேசியர் 5 :31)*

*எனவே ஒவ்வொரு நாளையும் உங்கள் மனைவியுடனும்  பிள்ளைகளுடனும் உங்கள் குடும்பத்தினருடனும் மகிழ்ச்சியாய் ஆரம்பியுங்கள்.*

*தேவன் உங்கள் குடும்பததினா் அனைவரையும்  கண்மணியைப் போலப் பாதுகாப்பாா். அற்புதமாய் நீங்கள்  இருப்பீா்கள்.* 

நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.


338.             மனோதிடம்.  

சிறுவனை அழைத்துக்கொண்டு அவனது தந்தை ஒரு காட்டிற்குச் சென்றார். அப்போது மகனுக்கு ஒரு சவாலை முன்வைத்தார். ''மகனே, இப்போது உனக்கு முன் ஒரு பெரிய சவால் உள்ளது. அதில் வெற்றி பெற்றால், நீ பெரிய வீரனாகி விடுவாய். இன்று இரவு முழுவதும் நீ தனியாக இந்தக் காட்டிலேயே இருக்க வேண்டும். உன் கண்கள் கட்டப்படும். ஆனாலும் நீ பயப்படக்கூடாது; வீட்டிற்கு ஓடிவந்துவிடவும் கூடாது'' என்றார். சிறுவன் ஆர்வத்துடன் சவாலை சந்திக்கத் தயாரானான்.

அவனது கண்களைத் தந்தை துணியால் இறுகக் கட்டினார். பிறகு, தந்தை திரும்பிச் செல்லும் காலடி ஓசை, மெல்ல மெல்ல மறைந்தது. அதுவரை தந்தை அருகில் இருக்கிறார் என்ற தைரியத்தில் இருந்த அவனுக்கு, தூரத்தில் ஆந்தை கத்துவதும் நரி ஊளையிடுவதும் நடுக்கத்தைக் கொடுத்தது.

காட்டு விலங்குகள் வந்து தாக்கிவிடுமோ என்ற அச்சத்தில் அவனது இதயத்துடிப்பு வழக்கத்தைத் தாண்டி எகிறியது. 

மரங்கள் பேயாட்டம் ஆடின. மழைவேறு தூறத் தொடங்கியது. கடுங்குளிர் ஊசியாய் உடலைத் துளைத்தது. ‘’அய்யோ! இப்படி நிர்க்கதியாய்த் தவிக்க விட்டு தந்தை போய்விட்டாரே! யாராவது வந்து என்னைக் காப்பாற்றுங்களேன்’’ என்று பலமுறை கத்திப் பார்த்தான். பயனில்லை.

சிறிது நேரத்தில், இனி கத்திப் பயனில்லை என்பது அவனுக்குப் புரிந்தது. திடீரென்று அவனுக்குள் ஒரு துணிச்சல். என்னதான் நடக்கும், பார்ப்போமே என்று சுற்றுப்புறத்தில் கேட்கும் ஓசைகளை ஆர்வத்துடன் கவனிக்கத் தொடங்கினான். இப்படியே இரவு கழிந்தது. விடியற்காலையில் லேசாகக் கண்ணயர்ந்தான். சூரியன் உடம்பைச் சுட்டபோதுதான், கண்கட்டைத் திறந்துப் பார்த்தான். கண்ணைக் கசக்கிக்கொண்டு எதிரே பார்த்தபோது, அவனுக்கு ஆச்சரியம்! ஆனந்தம்! அழுகையே வந்துவிட்டது. ‘’அப்பா’’ என்று கூவி அருகில் அமர்ந்திருந்த தன் தந்தையைப் பாய்ந்து தழுவிக் கொண்டான்.

‘’அப்பா நீங்க எப்போ வந்தீங்க?’’ என்று ஆவலாகக் கேட்டான். சோர்வும் மகிழ்ச்சியும் கொண்டிருந்த அந்தத் தந்தை, ''நான் எப்போது மகனே உன்னை விட்டுப் போனேன்’’ என்றார். இரவு இங்குதான் இருந்தீங்களா? பிறகு ஏன் நான் பயந்து அலறியப் போதெல்லாம் என்னைக் காப்பாற்றவில்லை? ஏன் என்னிடம் எதுவும் பேசவில்லை?’’ என்று கேட்டான்.

‘’உன் மனோதிடம் வளர வேண்டும். நீ எதற்கும் அஞ்சாத வீரனாக வேண்டும் என்பதற்காக மெளனம் காத்தேன். ஏனென்றால் அச்சத்தின் உச்சத்தை எட்டும்போது, துணிச்சல் தானே வரும்’’ என்றார் தந்தை. மகனுக்கு தந்தையின் நோக்கம் புரிந்தது.

கடவுளும் அந்தத் தந்தையைப் போலத்தான், நம்மோடு இருக்கிறார். துன்பத்திலும் சோகத்திலும் தவிக்கும்போது துவண்டுவிடாமல், நாம் தீரர்களாக வேண்டும் என்பதற்காகவே பல நேரங்களில் மெளனம் காத்து வெறும் பார்வையாளரைப் போல் இருக்கிறார்.



339          கடவுள் இருக்கிறாரா..?

 கஸ்டமர் முடி வெட்டிக்கவும் தன்னோட
மீசையை ட்ரிம் பண்ணிக்கவும் ஒரு சலூன் கடைக்குப் போனாரு. 

அங்க இருந்த முடி திருத்துபவர் அவரோட பேசிகிட்டே தன்னோட வேலையையும் பார்க்கறாரு. 

அப்ப அவங்க பேச்சு கடவுள் இருக்கிறாரா, அப்படிங்கற சப்ஜெக்ட்குள்ள போச்சு.

அப்ப அந்த முடி திருத்துபவர், "கடவுள் இருக்கிறார்னு சொல்றத நான் நம்பல..

"ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?"

"ஓகே...நீங்க இப்ப நம்ம தெருவுல நடந்து பாருங்க, அப்ப உங்களுக்கே தெரியும். கடவுள் இல்லைனு. கடவுள் இருந்திருந்தா ஏன் இத்தனை அனாதைக் குழந்தைகள்?

ஏன் இத்தனை நோயாளிகள்? 

கடவுள் இருந்திருந்தால் நோயும் இருக்காது. வலியும் இருக்காது. கடவுள் அன்பு செலுத்துவதாக இருந்தால் எதற்காக 
இதனை அனுமதிக்க வேண்டும்?"

இதற்கு பதில் சொன்னால் அது பெரிய வாக்கு வாதத்திற்கு வழி வகுக்கும் என்று அந்த கஸ்டமர் பதில் எதுவும் சொல்லாமல் கடையை விட்டு வெளியேறுகிறார்.

அவர் கடையை விட்டு வெளியே வந்த சமயத்தில் மிக நீளமான தாடியுடனும் நீளமான, அழுக்கான தலை முடியுடனும் ஒருவன் வருவதைப் பார்த்துவிட்டு மீண்டும் கடைக்குள் சென்று அந்த முடி திருத்துபவரிடம்,

"உங்களுக்கு ஒன்று தெரியுமா? முடி திருத்துபவர் கூட இந்த உலகத்தில் இல்லை"

அதிர்ச்சியான முடி திருத்துபவர்,

"அது எப்படி சொல்வீர்கள்? நான் இங்கு தான் உள்ளேன். உங்களுக்காக உங்களை அழகு படுத்துவதற்காக நான் இருக்கிறேன்."

"இல்லை....அப்படி முடி திருத்துபவர் என்பவர் இருந்திருந்தால் இப்படி நீளமான முடியுடனும் ட்ரிம் செய்யப்படாத தாடியுடனும் இவனைப் போல ஒருவன் இந்த ஊரில் இருக்க மாட்டான்."

"முடி திருத்துபவர் நாங்கள் இருக்கிறோம். ஆனால், எங்களிடம் வராமல் ஒருவன் இருந்தால் இப்படித்தான் இருப்பான். அதற்கு நாங்கள் எப்படி பொறுப்பாக
முடியும்?"

"மிகச் சரியாகச் சொன்னீர்கள். 
அதே போலத் தான்,

கடவுள் என்பவர் இருக்கிறார்.
மக்கள் அவனைச் சரணடையாமல்
கடவுள் இல்லை என்று சொன்னால் என்ன அர்த்தம்?"

இந்தக் கேள்வியில் முடி திருத்துபவர் வாயடைத்துப் போனார்

340         இறைவன் கணக்கு

ஒரு கோவில் மண்டப வாசலில் இரண்டு வழிப்போகர்கள் அமர்ந்து கொண்டிருந்தனர்.

 இரவு நேரம்.

 பெருத்த மழை வேறு.

 அப்போது அங்கே மற்றொருவரும் வந்து சேர்ந்தார். வந்தவர் நானும் இரவு இங்கே தங்கலாமா என்று கேட்டார். 

அதற்கென்ன? தாராளமாய் தங்குங்கள் என்றார்கள்.

 சிறிது நேரம் கழித்து எனக்கு சாப்பிட ஏதாவது கிடைக்குமா? என்றார் வந்தவர்.

முன்னவர் இருவரில் ஒருவர் சொன்னார். என்னிடம் ஐந்து ரொட்டிகள் இருக்கின்றது என்றார். 

இரண்டாமவர் என்னிடம் மூன்று ரொட்டிகள் இருக்கின்றது என்றவர் ஆக மொத்தம் எட்டு ரொட்டிகள் இதனை நாம் எப்படி மூவரும் சமமாய் பிரித்துக்கொள்ள முடியும்? என்றார். 

மூன்றாம் நபர் இதற்கு
நான் ஒரு வழி சொல்கிறேன்.( தேவை உள்ளவன்தான் தீர்வு சொல்வான்!)

நீங்கள் உங்கள் ரொட்டிகளை ,ஒவ்வொரு ரொட்டியையும் மூன்று துண்டுகள் போடுங்கள்.

 இப்ப்பொது இருபத்து நான்கு துண்டுகள் கிடைக்கும்! நாம் மூவரும் ஆளுக்கு எட்டு துண்டுகள் எடுத்து கொள்ளலாம் என்றார். 

இது சரியான யோசனை என்று அப்படியே செய்தனர்.

ஆளுக்கு எட்டு துண்டு ரொட்டிகளை சாப்பிட்டுவிட்டு உறங்கினார்கள்.

பொழுது விடிந்தது.மழையும் நின்றது. மூன்றாவதாய் வந்தவர் கிளம்பும்போது உங்கள் உதவிக்கு மிக்க நன்றி என்று சொல்லி எட்டு தங்க நாணய்ங்களை கொடுத்து நீங்கள் உங்களுக்குள் பிரித்து கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு விடை பெற்றார்.

மூன்று ரொட்டிகளை கொடுதவர் அந்த காசுகளை சமமாகப்பிரித்து ஆளுக்கு நான்காய் எடுத்துக்கொள்ளலாம் என்றார்.

 மற்றொருவர் இதற்கு சம்மதிக்கவில்லை. மூன்று ரொட்டிகள் கொடுத்த உனக்கு மூன்று காசுகள்.

ஐந்து ரொட்டிகள் கொடுத்த எனக்கு ஐந்து காசுகள் என்று வாதிட்டார்.(5:3)

மூன்று ரொட்டிகள் கொடுத்தவர் ஒப்புக் கொள்ளவில்லை. என்னிடம் மூன்றே ரொட்டிகள் இருந்தபோதும் நான் பங்கிட சம்மதித்தேன்.

நிறைய இருப்பவன் கொடுப்பது ஒன்றும் பெரிய செயல் ஆகாது.அதனால் என் செய்கையே பாராட்ட தக்கது என்றாலும் பரவாயில்லை.சமமாகவே பங்கிடுவோம் என்றார்.

சுமுகமான முடிவு எட்டாத்தால் விஷயம் அரசனின் சபைக்கு சென்றது. அரசனுக்கு யார் சொல்வது சரி என்று புரிபடவில்லை. நாளை தீர்ப்பு சொல்லதாய் அறிவித்து அரண்மனைக்கு சென்றான்.

 இரவு முழுவதும் இதே சிந்தனை. வெகு நேரம் கழித்தே தூங்க முடிந்தது. கனவில் கடவுள் காட்சி அளித்து சொன்ன தீர்ப்பும் அதற்கு அவர் அளித்த விளக்கமும் மன்னரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

அடுத்த நாள் சபை கூடியது. மன்னன் இருவரையும் அழைத்தான்.

மூன்று ரொட்டிகளை கொடுத்தவனுக்கு ஒரு காசும் ஐந்து ரொட்டி கொடுத்தவருக்கு ஏழு காசுகளும் கொடுத்தார்.

ஒரு காசு வழங்கப்பட்டவர்
மன்னா ... இது அநியாயம். அவரே எனக்கு மூன்று காசுகள் கொடுத்தார்.

அரசர் சொன்னார். நீ கொடுத்தது ஒன்பது துண்டுகள். அதிலும் எட்டு துண்டுகள் உன்னிடமே வந்து விட்டது. அவன் தந்தது பதினைந்து துண்டுகள். அவனுக்கும் எட்டுத்துண்டுகள்தான் கிடைத்தது.ஆக நீ தருமம் செய்தது ஒரு துண்டு ரொட்டி. அதற்கு இதுவே அதிகம் என்றார்.

ஆம் கடவுளின் கணக்கு இவ்வளவு துல்லியமாக இருக்கும்.

இழந்ததை எல்லாம் தருவது அல்ல அவன் கணக்கு. 

எது உனக்கு புண்ணியம் சேர்க்குமோ அதுதான் உனக்கு என்பது அவன் கணக்கு

ஏனென்றால், 

அவனது கணக்கு
ஏட்டு கணக்கு அல்ல. 
தர்ம கணக்கு.





341         முயற்சி செய்யுங்கள்.

ஒரு பெரிய பணக்காரர். மன அழுத்தம் தாங்காமல் தவித்தார். அப்போது அந்த ஊருக்கு ஒரு ஜென் துறவி வந்திருந்தார். ‘அவரைச் சந்திச்சா உன்னோட மனசுக்கு நிம்மதி கிடைக்கும்’ என்று சில நண்பர்கள் சிபாரிசு செய்தார்கள்.

பணக்காரருக்குப் பெரிய நம்பிக்கை எதுவும் இல்லை. ஆனாலும் நண்பர்கள் சொல்கிறார்களே என்பதற்காக அந்தத் துறவியைச் சந்திக்கச் சென்றார். அவரிடம் தன்னுடைய பிரச்னைகளை விளக்கிச் சொன்னார். எல்லாவற்றையும் கேட்டுக் கொண்ட துறவி அவருக்கு, " எதிர்காலத்தை பற்றி கவலைப்படாமல் நிகழ் காலத்தை மட்டும் ஆனந்தமாக அனுபவி " என்று அறிவுரை சொன்னார். அவற்றைக் கேட்ட பணக்காரருக்குச் சிரிப்பு வந்து விட்டது.

‘ஐயா, நீங்க என்னைத் தப்பா நினைச்சுக்கக் கூடாது. நான் சந்திக்கிற பிரச்னைகள் ரொம்பப் பெரிசு, அதையெல்லாம் இந்த மாதிரி சின்ன யோசனைகளால தீர்த்துட முடியுமா? என்னால நம்ப முடியலை!’

ஜென் துறவி கோபப்படவில்லை. ‘இங்கிருந்து உங்க வீடு எவ்வளவு தூரம்?’ என்றார்.

‘ஏழெட்டுக் கிலோ மீட்டர் இருக்கும். ஏன் கேட்கறீங்க?’

‘பொழுது இருட்டிடுச்சே. நீங்க எப்படித் திரும்பிப் போவீங்க?’

’அது ஒண்ணும் பெரிய பிரச்னையில்லை. நான் கார்ல தான் வந்திருக்கேன்!’

‘உங்க கார்ல இருக்கிற விளக்கு அந்த ஏழெட்டுக் கிலோ மீட்டருக்கும் வெளிச்சம் காட்டுமா?’‘நிச்சயமா’ என்றார் 

அந்தப் பணக்கார். ‘அதில் என்ன சந்தேகம்?’

‘எனக்குத் தெரிஞ்சு எந்தக் கார் விளக்கும், சில அடி தூரத்துக்கு தான் வெளிச்சம் காட்டும். அதை வெச்சுகிட்டு ஏழெட்டுக் கிலோ மீட்டர் எப்படிப் பயணம் செய்வீங்க?’

‘என்ன சாமி காமெடி பண்றீங்க? நாம் கார் ஓட்டற தொலைவுக்கு மட்டும் வெளிச்சமும் வழியும் தெரிஞ்சாப் போதாதா? அதை வெச்சுகிட்டுக் கொஞ்சம் கொஞ்சமா முன்னேறி ஏழெட்டு கிலோ மீட்டர் என்ன? ஏழாயிரம் கிலோ மீட்டர் கூடப் போகலாமே!’

’அதே மாதிரி தான் நான் சொன்ன யோசனையும்!’ என்றார் ஜென் துறவி.

‘சின்னதா, எளிமையா இருக்கேன்னு பார்க்காதீங்க, அதைப் பயன்படுத்திக் கொஞ்சம் கொஞ்சமா முன்னாடி போனீங்கன்னா, வழி தெரியும், எவ்வளவு தூரமும் பயணம் செய்யலாம்!’

என் அன்பு வாசகர்களே,
"சிறுதுளி பெருவெள்ளம்" என்பதற்கிணங்க நம் வாழ்க்கையில் நாம் எடுத்துவைக்கின்ற ஒவ்வொரு அடியும் சிறியதாய் இருத்தல் வேண்டும். அப்போது தான்‌ நம்மால் நீண்ட தூரம் பிரயாணம் செய்ய முடியும். மாறாக ஒவ்வொரு அடியும் மிகப்பெரியதாய் இருக்கும் பட்சத்தில் முதலாவது நம் கால்கள் சற்று தூரம் சென்றதும் வலி கொடுக்கும் எனவே இலக்கை அடைய முடியாது.

வாழ்க்கையில் முன்னேற ஒவ்வொரு படியாகத்தான் முன்னேற வேண்டுமேயன்றி நான்கு படிகளை ஒன்றாக சேர்த்து கடக்க முயற்சிக்க கூடாது. அவ்வாறு முயன்றும் பயனில்லை ஏனெனில் அவ்வாறு கடக்க முடியாது.


வேதாகமத்தில் கறவலாடுகளின் பின்னால் சென்ற தாவீது இஸ்ரவேலருக்கு ராஜாவாய் மாறினான். எவ்வாறு ஒரே இராத்திரியிலா??  இல்லை. அவன் கோலியாத்தை மேற்கொள்வதற்கு முன்பாகவே பலம்வாய்ந்த சிங்கத்தையும், கரடியையும் ஏற்கனவே வென்றிருந்தான் அதனால் தான் கோலியாத்தை அத்தனை எளிதாக வெல்ல முடிந்தது. அல்லாமலும் அவன் ராஜாவாய் சிங்காசனத்தில் அமரும் முன்பு அநேக கஷ்ட நஷ்டங்களை சந்தித்தான். எனவேதான் அவன் கையில் சிங்காரம் ஸ்திரப்பட்டது.

இவ்வுலகில் இப்போது உயர்ந்த நிலையில் இருப்பவர்கள் ஆரம்பத்திலேயே உயர்ந்து விடவில்லை ஒவ்வொரு படியாக உயர்ந்து இப்போது நல்ல நிலையில் இருக்கிறார்கள். 

அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நான் உங்களுக்கு வானத்திலிருந்து அப்பம் வருஷிக்கப்பண்ணுவேன். ஜனங்கள் போய், ஒவ்வொரு நாளுக்கு வேண்டியதை ஒவ்வொரு நாளிலும் சேர்த்துக்கொள்ளவேண்டும். அதினால் அவர்கள் என் நியாயப்பிரமாணத்தின்படி நடப்பார்களோ நடக்கமாட்டார்களோ என்று அவர்களைச் சோதிப்பேன்.

யாத்திராகமம் 16:4

தேவன் இஸ்ரவேல் ஜனங்களை பல்வேறு விதத்தில் போதித்தார். அவ்வாறு சோதிக்கும் போது இஸ்ரவேலர்களால் தங்களை பொன்னாக விளங்க பண்ணமுடியவில்லை. ஆனால் தேவன் நம்மை ஒவ்வொரு முறை சோதிக்கும் போது நாம் சுத்த பொன்னாக விளங்க வேண்டும். அதை தான் யோபு இவ்வாறு கூறுகிறார்,

10 ஆனாலும் நான் போகும் வழியை அவர் அறிவார். அவர் என்னைச் சோதித்தபின் பொன்னாக விளங்குவேன்.

யோபு 23:10

எனவே நாமும் நமது சோதனை அதாவது வாழக்கையின் ஒவ்வொரு படியும் நம்மை பொன்னாக விளங்க தேவன் தருவது என்பதை புரிந்து பொன்னாக விளங்குவோம் வாழ்வில் முன்னேறுவோம்.

நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!






342   சொர்க்கத்தில் தாடி மீசை வளரும்

ஒருமுறை, பீர்பாலின் செல்வாக்கு நாளுக்குநாள் மன்னரிடம் அதிகரிப்பது கண்டு, பீர்பாலை நிரந்தரமாக மன்னரிடம் இருந்து பிரிக்க எண்ணிய சில அமைச்சர்கள், ஒருதிட்டம் போட்டு அதன்படி, மன்னரின் முடித்திருத்துபவனை அழைத்து, பொன்னையும் பொருளையும் அளித்து ஆசை வார்த்தை கூறி, தங்கள் இரகசியதிட்டத்திற்கு அவனை சம்மதிக்கவைத்து, திட்டம் நிறைவேறியபின், மேலும் பொன்னை அளிப்பதாகக்கூறி தங்கள் சதித்திட்டத்தை தயார்செய்தனர்.

எதிர்பார்த்ததுபோல, ஒருநாள் மன்னரிடமிருந்து முடித்திருத்துபவனுக்கு அழைப்புவர, மன்னரின் முடியை வெட்டிக்கொண்டே அவன் "மன்னா, தங்கள் தந்தை முடிபோல தங்களுக்கும் முடி அழகாக இருக்கிறது, இருந்தாலும் நீங்கள் உங்கள் தந்தையாரின் நலன்மீது அக்கறை செலுத்துவதில்லை, இப்போது தந்தையாரின் தலைமுடி நீண்டு வளர்ந்து, அவருடைய முக அழகை கெடுத்துவிட்டது. அவர் நலனை விசாரியுங்கள் என்றான்.

" என்ன உளறுகிறாய்? என்தந்தை காலமாகி நெடுநாட்களாகிவிட்டன. இப்போது எப்படி அவருக்கு முடிவளர்ந்திருக்கும்? இறந்துபோனவரிடம் எப்படி நலம் விசாரிக்கமுடியும்? புத்திபேதலித்துவிட்டதா உனக்கு? என மன்னர் கடிந்து கொண்டார்.

அவன் பவ்யமாக " முடியும் மன்னா! ஒரு மந்திரவாதி இருக்கிறான், அவன் உயிருடன் ஒருவரை சுடுகாட்டுக்கு கொண்டுசென்று விஷேச மந்திரங்களை சொல்லி, அவன் உடலை எரிப்பார். நம் கண்களுக்குத்தான் உடலை நெருப்பு எரிப்பதாகத்தெரியும், மந்திரவாதியின் சக்தியால், அந்த நபரின் உடல் தீயில்வேகாமல் மேலோகம் சென்று நம் முன்னோரை கண்டுவரும். என்ன, ஒரு நம்பிக்கையான ஆள் மட்டும்வேண்டும்." என்று மன்னரிடம் கூறினார்.

மன்னர் இறந்த தந்தையின் நலம் விசாரிக்க இப்படி ஒருவழி இருப்பது தெரியாமல் போய்விட்டதே என வருந்தி, யாரை அனுப்பலாம் என யோசித்தார்.

"யோசனை ஏன் அரசே? தங்கள் அவையில் புத்திசாலியும் தங்களின் நன்மதிப்பையும் கொண்ட ஒரே அமைச்சர் பீர்பால்தான். நீங்கள் சொன்னால் தட்டாமல் அவரே ஒப்புக்கொண்டு தங்கள் தந்தையின் நலம் விசாரித்துவருவார்" என்று சொல்ல, மன்னர் பீர்பாலை அவைக்கு அழைத்தார்.

அமைச்சரவை கூடியதும், பீர்பாலிடம் மன்னர் விசயத்தைக்கூறி, "இந்த காரியத்தை நல்லமுறையில் செய்து முடிக்க தங்களைவிட சிறந்தவர் யாருமில்லை, தாங்கள் சொர்க்கத்திற்கு சென்று என் தந்தையின் நிலையறிந்து வருக!" எனக்கூறினார்,

ஒரு வினாடி அதிர்ந்த பீர்பால் இவை பொறாமைக்காரர்களின் சதி என்பதை நொடிப்பொழுதில் உணர்ந்து மன்னரிடம், " மன்னா!! தங்கள் ஆணையை ஏற்று நான் செயல்பட எனக்கு மூன்று மாத அவகாசம் வேண்டும். அந்தசமயம் நான் தங்களை சந்திக்க இயலாது, மேலும் என்குடும்பத்துக்கு நான் ஆற்றவேண்டிய சில கடமைகளை அதற்குள் முடித்தபின், நீங்கள் செல்லப்பணித்த சொர்க்கம் சென்று வருகிறேன்" என்று கூறி, மன்னரின் சம்மதம் பெற்று வெளியில் வந்து, யோசித்தார்.

மூன்றுமாதம் கழித்து பீர்பால் மன்னரிடம் நான் தயார் என்றுகூற, முடித்திருத்துபவன் கூறிய மந்திரவாதி மூட்டிய சுடுகாட்டுதீயில், பீர்பாலை எரிக்க, அதில் சூழ்ந்த புகைமூட்டத்தில் பீர்பால் யாரும் அறியாவண்ணம், தான் ஏற்கெனவே செய்துவைத்திருந்த சுரங்கப்பாதையின் வழியே அருகிலுள்ள காட்டை அடைந்து அங்கிருந்து தன் வீட்டுக்கு சென்று மறைந்துகொண்டார். கழிந்தது ஆறுமாதம்.

இதற்குள் சுடுகாட்டு நெருப்பில் ஒழிந்தான் பீர்பால், இனிநாம் அவன் இடையூறின்றி மன்னரிடம் செல்வாக்கு பெறலாம் என அமைச்சர்கள் எல்லாம் மனப்பால் குடித்தனர்.

ஒருநாள் வயதான சாமியார் அரசவைக்கு வந்தார், மன்னரிடம் சென்று "மன்னா, நான்தான் பீர்பால், தங்கள் தந்தையை சொர்க்கத்தில் சந்தித்துவிட்டு நேராக இங்கே வருகிறேன், இந்த ஓலையை தந்தை தங்களிடம் அளிக்கச்சொன்னார் என்றுகூற, 

ஓலையில் மகனே!! எனக்கு தாடியும் மீசையும் வளர்ந்து அதை சரிசெய்ய முடிதிருத்துவோர் யாருமில்லை.. நீ நமது அரண்மனை முடிதிருத்துபவனை உடனே அனுப்பிவை.!" என்றிருந்தது.

படித்தபின் மன்னர், மாமன்னரான எனது தந்தை வாடுவதா என அரண்மனை முடிதிருத்துவோனை அழைத்து விபரம் கூறி, உடனே சொர்க்கத்திற்கு செல்லக்கூற, அவன் "தொபுக்கடீர்" என மன்னர் காலில் விழுந்தான்.

"பொருளுக்கு ஆசைப்பட்டு அமைச்சர்கள் சொன்ன சதிச்செயலில் ஈடுபட்டுவிட்டேன்.. என்னை மன்னித்துவிடுங்கள் மன்னா! எனக்கதறினான். யோசித்த மன்னர் மனிதர்களால் எப்படி இந்த உடம்புடன் சொர்க்கத்திற்கு சென்று திரும்பிவரமுடியும்.. இது பீர்பாலைக் கொல்ல அமைச்சர்கள் செய்தசதிதான் என்று உணர்ந்து, பொறாமைக்கார அமைச்சர்களையும், பேராசை கொண்ட முடி திருத்துபவனையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். சதியால் நண்பனை இழக்க இருந்தேனே என்று வருந்தி, பீர்பாலை கட்டித்தழுவினார்.

என் அன்பு வாசகர்களே,
சொர்க்கம் என்பது நமது சொல் வழக்கில் சொல்ல வேண்டுமெனில் "பரலோகம்" என்பதாகும். பரலோகத்தில் என்னென்ன இருக்கும் எப்படி எப்படி இருக்கும் என்பதை யோவானுக்கு தேவன் வெளிப்படுத்தியிருப்பதை வெளிப்படுத்தின விசேஷம் 21 ஆம் அதிகாரத்தில் தெளிவாய் கொடுக்கப்பட்டுள்ளது.

ஒரு மனிதன் மரித்தால் தான் ஒன்று பரலோகத்திற்கு அல்லது நரகத்திற்கு செல்ல முடியும். ஆனால் வேதாகமத்தில் உள்ள தீர்க்கதரிசிகள் அநேகர் அந்த பரலோகத்தை கண்டு நாம் அறிந்து கொள்ளும் வகையில் வேதாகமத்தில் எழுதியிருக்கிறார்கள். நம்மால் அந்த பரலோகத்தை பூமியில் கொண்டு வர முடியுமா?? என்றால் நிச்சயம் முடியும். 

ஆம் இந்த உலகத்தில் நாம் வாழும்போது நம் குடும்பம் ஒரு சொர்க்கத்தை போல இருத்தல் வேண்டும். ஏனெனில் நம் குடும்பத்திலிருந்து தான் ஆசீர்வாதங்கள் வெளிப்படும். நம் வீடு ஒரு குட்டி பரலோகமாய் இருக்கும்போது நம் தேவைகள் அனைத்தும் சந்திக்கப்படும். இன்றைய கதையிலும் கூட அவர்கள் குடும்பமாய் இருந்த காரணத்தால் தான் ராஜா தன் தகப்பன் ஆசையை நிறைவேற்ற முற்பட்டான்.

அதுபோலவே குடும்பமாய் எல்லோரும் கூடி இருக்கும் பட்சத்தில் எல்லாருடைய தேவைகளும் சந்திக்கப் படும்
 இன்றைய‌ நாட்களில் அலைபேசியையே அநேகர் குடும்பமாய் கொண்டுள்ளார்கள். ஒருவர் முகத்தை ஒருவர் பார்ப்பது என்பதை உலக அதிசயங்களில் ஒன்றை போல மாற‌ துவங்கிவிட்டது. ஒரு மனிதன்/மனுஷி தன் குடும்பத்திற்காக நேரத்தை செலவிட துவங்கினால் அதுதான் உண்மையான பரலோகம்/சொர்க்கம். 

ஜனங்கள் பூமியில் சொர்க்கத்தை தேடி அலைந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால் தன் குடும்பத்தை நன்றாய் நடத்துகிறவர்கள் சொர்க்கத்தை எங்கும் தேடி செல்வதில்லை. தங்கள் பணி முடிந்ததும் நேராக வீட்டிற்கு செல்வார்களே தவிர வேறெங்கும் செல்ல மாட்டார்கள். எரேமியா தீர்த்தர் இவ்வாறு கூறுகிறார்
 
இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது நான் இஸ்ரவேலின் குடும்பத்துக்கும், யூதாவின் குடும்பத்துக்கும் சொன்ன நல்வார்த்தையை நிறைவேற்றுவேன்.
எரேமியா 33:14

ஆம் அன்பானவர்களே, குடும்பத்தில் ஒருவர் ஆசீர்வதிகக்ப்படுவது ஆசீர்வாதமல்ல முழு குடும்பமும் ஆசீர்வதிக்கப்படுவதே உண்மையான ஆசீர்வாதம் தேவனும் அந்த நல்வார்த்தையை ஏற்ற காலத்தில் நிறைவேற்றுவார். எனவே காத்திருப்போம் ஆசீர்வாதத்தை சுதந்தரிப்போம்.

நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.


343.         கழுகும் – காகமும்

கழுகைத் தாக்கும் ஒரே பறவை காகம் மட்டுமே. அது கழுகின் மேல் அமர்ந்துகொண்டு அதின் கழுத்தில் தன் அலகால் கொத்தும்;  ஆனால் கழுகோ தனது நேரம் மற்றும் ஆற்றலை வீணாக்காமல் காகத்தின் மேல் பதில் தாக்குதல் நடத்தாமல் இருக்கும்.

சற்று நேரத்தில் கழுகு தன் இறகுகளை விரித்து வானத்தை நோக்கி உயரப் பறக்கத் துவங்கும். உயரம் கூடக் கூடக் காகம் சுவாசிக்கக் கடும் சிரமம் ஏற்பட்டு ஆக்சிஜன் குறைந்து கீழே விழுந்து விடும்.

உங்கள் பொன்னான நேரத்தை காகங்களைப் போன்று உங்களைக் கொத்துபவர்களோடு போராடி வீணாக்குவதை நிறுத்துங்கள்.
அதற்குப் பதிலாக உங்கள் உயரத்திற்கு அவர்களை அழைத்துச் செல்லுங்கள் விரைவில் அவர்கள் தானாகவே காணாமல் போய்விடுவார்கள். 

நீங்கள் கழுகா அல்லது காகமா என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்..!!!



344       ஆண்டவரை நாம் அடையாளம்
                   கண்டுகொள்கின்றோமா ?

 ஒரு விவசாயிக்கு 6 மாத குழந்தை இருந்தது . மனைவி மரித்துப்போனாள் , உதவி செய்யவோ யாருமேயில்லை . பெரிய வயலை உடைய அந்த விவசாயி , வயலையும் பார்க்கவேண்டும் , குழந்தையையும் கவனிக்கவேண்டும் . எனவே கஷ்டப்பட்டு வேலைசெய்துவந்தான் . அந்த விவசாயி தன் வீட்டில் ஒரு கீரிப்பிள்ளையினை வளர்த்துவந்தான் . கீரிப்பிள்ளை மிகவும் செல்லமான ஓர் பிராணி , தன்னை வளர்ப்பவர்களுக்கு மிகவும் உண்மையுள்ளதாகவும் , நன்றியுள்ளதாகவும் காணப்படும் . ஒருநாள் , பிள்ளை அழுதபோது , பாட்டிலில் பாலைக் கொண்டுவந்து கொடுத்த விவசாயி , திடீரென வயலிலே காட்டு மிருகங்கள் நுழைந்துவிட்டதனைக் கண்டபோது , குழந்தைக்கு காவலாக தான் வளர்த்த கீரிப்பிள்ளையை வைத்துவிட்டு , வயலைப் பார்க்க ஓடினான் . வயலில் நுழைந்த காட்டு மிருகங்களை எல்லாம் விரட்டிவிட்டு , வீட்டை நோக்கி வந்துகொண்டிருந்தான் விவசாயி . கீரிப்பிள்ளையோ , வீட்டின் வாசலில் வாயிலும் , முகத்திலும் , சரீரத்திலும் ரத்தக்கறையுடன் விவசாயிக்காகக் காத்துக்கொண்டிருந்தது . இதனைக் கண்ட விவசாயி , அது குழந்தையைக் கடித்துக் கொன்றுவிட்டது என்று நினைத்தவனாக , கையிலிருந்த கோடரியினால் கீரிப்பிள்ளையைக் கொன்றுபோட்டான் . துக்கம் நிறைந்தவனாக , தனக்கு இருந்த ஒரே குழந்தையும் இறந்துவிட்டதே என்று நினைத்தவனாக உள்ளே அறைக்குள் ஓடினான் . வீட்டின் உள்ளேயோ குழந்தை நன்றாக விளையாண்டுகொண்டிருந்தது . அருகில் , நாகப்பாம்பு ஒன்று துண்டு துண்டாகக் கிடந்தது . குழந்தையைக் கடிக்க வந்த நாகப் பாம்பினைக் கடித்து துண்டு துண்டாக்கி , அந்த செய்தியை அறிவிக்கும்படியாகவே விவசாயிக்காக வாசலில் காத்துக்கொண்டிருந்தது கீரிப்பிள்ளை . குழந்தையைத் தாக்க வந்த நாகத்தைக் கொன்றுவிட்டோம் என்ற சந்தோஷத்தில் , ஆடிக்கொண்டு தன் எஜமானனைச் சந்திக்கும்படியாக அது வாசலில் நின்றது . தன்னை நம்பியிருந்த எஜமானனுக்கு உண்மையுள்ளதாக , தன்னிடம் விடப்பட்ட வேலையினை செய்து முடித்ததாக எஜமானுக்காகக் காத்திருந்தது அந்த கீரிப்பிள்ளை . ஆனால் , அந்த விவசாயியோ , அதனை தவறாக நினைத்து , வெட்டி , அடித்து , கொன்று போட்டுவிட்டான் .

 நம்முடைய சத்துருக்களிடத்தில் வெற்றிபெற்றவராக , சந்தோஷத்துடனும் , வெற்றியின் களிப்புடனும் , ஆனந்தத்துடனும் வந்துகொண்டிருக்கும் ஆண்டவரை நாம் அடையாளம் கண்டுகொள்கின்றோமா ? அல்லது அவருக்கே விரோதமாக நாம் எதிர்த்து நிற்கிறோமா ?

 இந்த உலகம் இயேசு கிறிஸ்துவோடுகூட அப்படித்தான் செய்து கொண்டிருக்கின்றது . நாமோ அப்படியல்ல நமக்காக யுத்தம் செய்து வெற்றி முழக்கத்துடன் வருபவரை ஏற்றுக்கொண்டவர்கள் . 




345     உயிருடன் இருக்கும் போது
                         நல்லது செய்!  

ஒருவன் மிகுந்த செல்வம் கொண்ட பெரிய பணக்காரன். அவன் தன் இறப்பிற்குப் பின் தன் சொத்துக்கள் அனைத்தையும் தர்மம் செய்வதாக இருப்பதை அனைவரும் தெரிந்தும், அவனை மக்கள் குறை கூறிக் கொண்டே இருந்தார்கள். 

அதனால் மிகவும் மனமுடைந்த அவன், அதற்கான காரணத்தை அறிய ஒரு ஜென் துறவியை பார்க்கச் சென்றான். துறவியைப் பார்த்து அனைத்தையும் கூறி, "எதற்கு?" என்று கேட்டான். அதற்கு குரு அவனிடம் "உனக்கு பன்றி மற்றும் பசுவைப் பற்றி சொல்ல வேண்டும்" என்றார். அதற்கு அவன் "அது என்ன பன்றி, பசு கதை, எனக்கு சொல்லுங்கள்" என்று கூறினான். 

பின் குரு "ஒரு முறை பன்றி பசுவிடம், நீ மக்களுக்கு பால் மட்டும் தான் தருகிறாய், ஆனால் நான் அவர்களுக்கு என் மாமிசத்தையே தருகிறேன். இருப்பினும் மக்கள் உன்னையே புகழக் காரணம் என்ன? என்று வருத்தத்தோடு கேட்டது.
 
அதற்கு பசு நான் உயிருடன் இருந்து அவர்களுக்கு தருகிறேன், நீ இறந்து தருகிறாய், அதனால் எதையும் உன்னால் உணர முடியவில்லை என்று சொன்னது." என்று கதையை கூறினார். பிறகு குரு அவனிடம் "நீயும் அந்த பன்றியைப் போல் தான், உயிருடன் இருக்கும் போது மக்களுக்கு தானம் செய்து பார், பின் தெரியும்" என்று கூறி மடத்தின் உள்ளே சென்றார்.

என் அன்பு வாசகர்களே,
நாம் இறந்த பின் செய்ய நினைப்பதை உயிருடன் இருக்கும்போதே செய்தால் அதன் பலன் நாம் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்கும். 

இந்த உலகில் நாம் வாழ்வது அர்த்தமுள்ளதாய் இருக்க வேண்டும் அப்படி இருக்கும் பட்சத்தில் நம் மறைவிற்கு பின்னர் இந்த உலகம் நம்மை புகழும் மாறாக உலகில் இருக்கின்ற போது கஞ்சப்பிசினியாய் இருந்துவிட்டு பின்னர் முழு சொத்துக்களையும் தானம் பண்ணுவதால் எந்த பிரயோஜனமும் இல்லை.

நன்மை செய்வதற்காகத்தான் தேவன் நம்மை தெரிந்துக்கொண்டார் மாத்திரமல்ல இயேசுவும் இந்த உலகத்தில் வாழ்ந்த நாட்களில் நன்மை செய்கிறவராக சுற்றித்திரிந்தார் என்று வேதம் சொல்கிறது.

இயேசு கிறிஸ்துவும் இந்த உலகத்தில் ஊழியம் செய்த நாட்களில் நன்மை மாத்திரம் செய்தார் அதனால் தான் இன்றளவும் அவரை உலகம் முழுவதும் ஆராதிக்கின்றோம். அதை தான் வேதம் இவ்வாறு கூறுகிறது

38 நசரேயனாகிய இயேசுவைத் தேவன் பரிசுத்தஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம்பண்ணினார். தேவன் அவருடனே கூட இருந்தபடியினாலே அவர் நன்மைசெய்கிறவராயும் பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித்திரிந்தார்.

அப்போஸ்தலர் 10:38

ஒருமுறை இரண்டுமுறை நன்மை செய்துவிடலாம் ஆனால் தேவன் நம்மோடு இருக்கும்போது மட்டுமே நன்மை செய்கிறவர்களாய் இருக்க முடியும். எனவே தேவனை நம்மோடு இருக்கும்படியாக நம்மை நாமோ தயார்படுத்திக்கொள்வோம் நன்மை செய்கிறவர்களாய் வாழ்வோம்.

நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!


346       அவசர முடிவுகள்

தன்னுடைய கைப்பையை எங்கோ வைத்துவிட்டு வந்ததை உணர்ந்தாள் ஒரு பெண். தன்னிடமிருந்து பிற உடமைகளையெல்லாம் இரயில் நிலையத்தில் இருந்த பெண்ணிடம் கொடுத்துவிட்டு கைப்பையை தேடச் சென்றாள். சற்று நேரத்தில் அதை தேடிக் கண்டுபிடித்தாள். ஆனால், அதற்குள் பிற உடமைகளைப்
பார்த்துக்கொள்வதாகப் பொறுப்பெடுத்த பெண் அவற்றோடு எங்கோ தலை மறைவாகிவிட்டாள்.

சில நேரங்களில் ஒரு பிரச்சினைக்குத் தீர்வு காண நாம் எடுக்கும் அவசரக்கால முயற்சிகள் பல பிரச்சினைகளுக்கு வழிவகுத்து விடுகிறது. சிலர் தங்களின் குடும்பப் பிரச்சினைகளுக்கு மாய்மாலப் பாஸ்டர்களின் ஆலோசனைகளைத்
தேடி அவற்றைத் தீர்க்க முடியாத பிரச்சினைகளாக்கி விடுகிறார்கள்.

 பிசாசுகளின் பிடியிலிருந்து விடுதலை பெறுவதற்காக பிரார்த்தனை நாடுகின்ற சிலர், போலி ஊழியர்களின் வஞ்சக வலையில் சிக்கி விடுகின்றார்கள்.

ஏதோ ஒரு பிரச்சினை ஏற்படுத்திய நெருக்கடி, தவறானவர்களையும்
தவறான தீர்வுகளையும். தவறான வழிகளையும் நம்ப வைத்து நாசம் செய்து விடுகிறது. ஆம், எந்தச் சூழ்நிலையிலும் பதட்டங்களுக்கும் அவசரமான முடிவுகளுக்கும் இடம் தராமல், தேவனுடைய வழிகளில் தீர்வுகளைத் தேடக் கவனமாயிருக்க வேண்டும்.

 பெலிஸ்தியர்கள் தன்னைத் தோற்கடித்து விடுவார்களோ என்ற அச்சத்தின் விளைவான பதட்டத்தினால், சவுல் சாமுவேலுக்குப் பதிலாக தானே பலியிட்டான். அதன் விளைவாக தேவனுடைய ஆதரவை இழந்து போனான். 

இன்னொரு தருணத்தில் குறிசொல்லும் பெண்ணை நாடி தன்னுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு தேடினான். ஆனால், அதனால் தேவ கோபம் அவன் மேல் வந்தது.

தன்னுடைய வாழ்வின் பிரச்சினை தொடர்பாக வரம் பெற்ற ஊழியர் ஒருவரிடம் தீர்க்கதரிசனம் கேட்கச் சென்றார் ஒருவர். அன்று கர்த்தர் வெளிப்படுத்தினார் என்று அவர் சொன்ன விஷயம் இவருக்குச் சரியாகத் தோன்றியது. எனவே அவர் வல்லமை மிக்க தீர்க்கதரிசி என்று நம்பி அவரிடம் அடிக்கடி சென்றார். அவர் கர்த்தர் பேசினார் கர்த்தர் பேசினார் என்று கூறி இவரிடமிருந்து பணத்தையும் நகை
களையும் மிகுதியாக வாங்கி ஏமாற்றி விட்டார். 

எந்த ஒன்றையும் தேவ சமூகத்தில் வைத்து தேவன் தருகின்ற ஆலோசனைகளைப் பெற அதிகக் கவனம் செலுத்த வேண்டும். யார்மேல் நம்பிக்கை வைத்தாலும், அது வேத வார்த்தைகள் அடிப்
படையிலான சரியான நம்பிக்கையா என்று கவனிக்க வேண்டும்.

இன்றைய சிந்தனைக்கு:
தோல்வியின் காரணத்தை உன்னிடம் தேடிப்பார்.
வெற்றியின் இரகசியத்திற்காக தேவனை நாடிச்செல்.

நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை நம் அனைவரோடும் கூட இருப்பதாக. ஆமென். ஆமென்.


347             சின்னப் பையன் !

அடர்ந்த காட்டில் உள்ள புல்வெளியில், தனக்கு சொந்தமான பன்றிகளை மேய்த்துக் கொண்டிருந்தான் ஆனந்த். பன்றிகள் எல்லாம் கூட்டமாக ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டபடி மேய்ந்து கொண்டிருந்தன.

சிறிது நேரத்தில் அந்தக் காட்டுப் பக்கம் எப்பிராயீம் என்ற சிறுவன் வந்தான். அங்கே ஆனந்த் நிற்பதைக் கூட கவனிக்காத அந்த சிறுவன், அடர்ந்து வளர்ந்த செடி கொடிகளின் மீது தன் பார்வையை செலுத்தினான். தனக்குத் தேவைப்படுகிற மூலிகைச் செடிகளைப் பறிக்கத் தொடங்கினான்.

அப்போது அவன் பின்னால் நின்று நன்றாக சிரிக்கத் தொடங்கினான் ஆனந்த். சிரிப்பு சத்தம் கேட்டு திடுக்கிட்ட எப்பிராயீம் திரும்பிப் பார்த்தான். அங்கே ஆனந்த் நிற்பதைக் கண்டு அவனை பார்த்து லேசாக சிரித்தான்.

“”சிறுவனே! நீ தினமும் இங்கு வந்து மூலிகைகளைப் பறித்துக் கொண்டிருக்கிறாய்! இவற்றையெல்லாம் வைத்து நீ என்ன செய்யப் போகிறாய் என்று தான் தெரியவில்லை.” என்று ஆவலோடு கேட்டான்.

“”ஐயா! இவற்றையெல்லாம் நான் மருந்து செய்யக் கொண்டு போகிறேன். இந்தக் காட்டில் உள்ள மூலிகைகளை எல்லாம் பறித்து விதவிதமான மருந்துகளைத் தயார் செய்து வருகிறேன். மேலும், பல அற்புதமான மருந்துகளை எல்லாம் கண்டுபிடிக்க முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறேன்!” என்றான்.

“”ஹா… ஹா… ஹா…” என்று காடே அதிரும்படியாக சிரிக்கத் தொடங்கினான் ஆனந்த்.

“”சிறுவனே! உன்னை நினைக்கிறபோது எனக்கு வேடிக்கையாகவே இருக்கிறது.

“”நீ தினமும் காட்டிற்கு வந்து ஏதோ பெரிய மனிதர் போன்று பச்சிலைகளைப் பறித்து செல்கிறாய்! உன்னை நீயே பெரிய வைத்தியன் என்று எண்ணி, உன் மனதுக்குள் நீயே உன்னைப் பெருமையாக நினைக்கிறாய். இவைகள் எல்லாம் உன்னிடம் அதிக நாட்கள் தாக்குப் பிடிக்காது,” என்று கூறினான்.

“”ஐயா! சிறியவர்கள், பெரியவர்களின் செயலை செய்யக்கூடாது என்று யாராவது சட்டம் போட்டிருக்கின்றனரா? அப்படி எதுவும் இல்லையே… நான் எனது கடும் முயற்சியால் மருந்துகளைக் கண்டுபிடிக்கும் அரிய முயற்சியை செய்து வருகிறேன். அதைக் கண்டு முடிந்தால் என்னைப் பாராட்டுங்கள். இல்லையென்றால் விட்டுவிடுங்கள்!” என்று கூறினான்.

“”சிறுவனே! நீ படுசுட்டியாகவே பேசுகிறாய்! நீ எப்படித்தான் மருந்தைக் கண்டுபிடிக்கிறாய் என்று நானும் தான் பார்க்கிறேன். எத்தனையோ வைத்தியர்கள், வயதான பின்னும் கூட வைத்தியத்தில் தேர்ச்சி பெறாமல் ஏனோ தானோ என்று வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். நீ என்ன அப்படி அற்புதமான மருந்தைக் கண்டுபிடிக்கப் போகிறாய் என்று பார்க்கிறேன்!” என்று ஆணவத்தோடு கூறினான்.

அதைக் கேட்டுக் கோபப்படவோ, ஆத்திரப்படவோ செய்யாமல் எதையும் நாம் செயல் மூலமே காட்ட வேண்டும் என்ற எண்ணத்தோடு அமைதியுடன் அங்கிருந்து சென்றான் எப்பிராயீம்.

அதன்பின் மீண்டும் தன் பன்றிகளை புல்வெளியில் மேய்க்கச் சென்றான் ஆனந்த். அன்றும் அவன் கண்கள் சிறுவனைத் தேடின.

வெகுநேரமாக எப்பிராயீமை தேடியும் அவன் அங்கு வராதது ஆனந்த்க்கு ஏமாற்றத்தைக் கொடுத்தது. நாட்கள் கடந்து வாரங்கள் கடந்து சில மாதங்களும் கடந்தன. எப்பிராயீம் அதன்பின் ஆனந்த் கண்களுக்குத் தென்படவேயில்லை.
ஒருநாள் தன் பன்றிகளை எல்லாம் காட்டின் மேடான பகுதிக்கு ஓட்டிச் சென்றான் ஆனந்த். அங்கு அவன் சற்று மேடான பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தான். அது மழைக்காலமானதால், மழை நீர் எல்லா இடங்களிலும் வடிந்து சேறாகக் காணப்பட்டது.

அதை கவனிக்காமல் பன்றிகளை விரட்டியபடி வேகமாக ஓடினான். அப்போது அவன் கால் சேற்றில் பட்டு புரண்டுவிட்டது. அடுத்த நிமிடம் , சரிவான மேட்டுப் பகுதியில் இருந்து வேகமாகப் புரண்டபடி பள்ளத்தில் பொத்தென்று விழுந்தான் ஆனந்த்.

அவன் தலையில் பலமான அடிபட்டு ரத்தம் கசிந்தது. கை, கால்கள் எல்லாம் உராய்ந்து ரத்தம் வழிந்தது. கண்கள் இருட்ட உடல் சோர்வடைய அப்படியே தரையில் படுத்தபடி மயக்க நிலையை அடைந்தான்.

சிறிது நேரத்தில் தன் மீது மென்மையான காற்று படுவதை உணர்ந்தான். மெல்லத் தன் கண்களைத் திறந்து பார்த்ததும், தான் ஒரு குடிசையில் கயிற்றுக் கட்டிலில் படுத்திருப்பதை உணர்ந்தான். தன் தலையில் மருந்து வைத்துக் கட்டப்பட்டிருப்பதையும் உணர்ந்தான்.

அவனுக்கு அவன் கண்களையே நம்ப முடியவில்லை. காட்டில் மேடான இடத்திலிருந்து கால் இடறி பள்ளத்தில் விழுந்ததும் அப்படியே தன் உயிர் பிரிந்துவிடும் என்று நினைத்தவனுக்கு, இப்போது தான் உயிரோடு காப்பாற்றப்பட்டிருப்பதை நினைத்துப் பார்க்கிறபோது சற்று ஆச்சர்யமாகத்தான் இருந்தது.

தன்னைக் காப்பாற்றியவர் யாரென்று காணும் ஆவலில் தன் பார்வையை சற்றுத் திருப்பினான். அங்கே சிறுவன் எப்பிராயீம் நின்று கொண்டிருப்பதைக் கண்டு ஆச்சர்யமடைந்தான்.

“”ஐயா! என்ன அப்படிப் பார்க்கிறீர்கள்? நான் கண்டு பிடித்த மருந்தை வைத்துதான் உங்கள் தலையில் ஏற்பட்ட காயத்தின் ரத்தப் போக்கை கட்டுப்படுத்தினேன். நான் கொடுத்த மருந்தை சாப்பிட்டுத்தான் உங்களுக்குப் புதிய உற்சாகம் பிறந்து மயக்கம் எல்லாம் தெளிந்துவிட்டது,” என்றான்.

அதைக் கேட்டு வியப்புற்றான் ஆனந்த். “”தம்பி! உன்னை நான் சாதாரணமாக நினைத்தேன். நீயோ மிகச் சிறந்த அறிவாளியாக இருக்கிறாய்! நீ கண்டுபிடித்த மருந்து தான் இன்று என் உயிரையே காப்பாற்றி இருக்கிறது. உனது திறமையை இன்று நான் நன்றாகவே புரிந்து கொண்டேன். நான் உன்னை எவ்வளவோ ஏளனம் செய்தும் கூட நீ அதைப் பொருட்படுத்தாது என் உயிரையே காப்பாற்றிவிட்டாய். அதோடு நீ கண்டுபிடித்த மருந்துகளுக்கும் உயிர் இருக்கிறது,” என்று கூறினான்.
“”ஐயா! செயற்கரிய செயலைச் செய்து சாதனை படைக்க முயற்சித்தால், கேலியும், ஏளனமும், வசை சொற்களும் போட்டி போட்டுக்கொண்டு தேடி வரத்தான் செய்யும். அவற்றையெல்லாம் முறியடித்து வாழ்க்கையில வெற்றி பெற்றால் தான் சாதனையாளராகத் திகழ முடியும். அதனால் உங்கள் வசைச் சொற்கள் என்னை ஒன்றும் பாதித்துவிடவில்லை. இனி நான் கண்டுபிடித்த இந்த மருந்துகளை உலகத்தில் உள்ள ஏழை மக்கள் எல்லாம் பயன்படுத்தும்படியாக செய்யப் பாடுபடுவேன்,” என்று கூறினான்.

அதைக் கேட்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தான் ஆனந்த்.

“தம்பி! உன் செயலை நான் எப்படிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை. நீ சாதாரணமான ஏழைக் குடும்பத்தில் பிறந்தாலும், உன்னுடைய லட்சியங்கள் எல்லாம் உயர்ந்த லட்சியங்களாக இருக்கின்றன. நிச்சயமாக வாழ்க்கையில் நீ உயர்ந்த நிலையை அடைவாய். நீ சிறுவயதிலேயே செயற்கரிய செயலை செய்துவிட்டாய். உன் செயலில் நீ வெற்றி பெற உன்னை வாழ்த்துகிறேன்!” என்று கூறினான்.

அந்த வாழ்த்தை புன்சிரிப்போடு ஏற்றுக்கொண்டான் எப்பிராயீம்.

என் அன்பு வாசகரே,
இக்கதையில் வருவது போல நமது பிள்ளைகளை மட்டப்படுத்தாது அவர்கள் செய்யக்கூடிய காரியத்தை ஊக்குவித்து  அவர்கள் மேன்மேலும் வளர வழிவகுத்துக் கொடுத்தால் அவர்களால் நமது தேசம் வளரும்.

 26 சாமுவேல் என்னும் பிள்ளையாண்டானோ, பெரியவனாக வளர்ந்து, கர்த்தருக்கும் மனுஷருக்கும் பிரியமாக நடந்துகொண்டான்.
1 சாமுவேல் 2:26

அவர்கள் பெரியவர்களாய் வளர்ந்து மனிதருக்கும் தேவனுக்கும் பிரியமாய் வாழ்ந்து மிகவும் ஆசீர்வாதமாய் இருப்பார்கள்.

நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!



348.     கடவுள் நம்முள் இருக்கிறார்!!!  

இமய மலையில் ஜென் குரு ஒருவர் வாழ்ந்து வந்தார். அவரைக் காண ஒரு மடாலயத்தின் தலைவர் சென்றார். அப்போது அவரிடம் "நான் ஒரு புகழ் பெற்ற மடாலயம் ஒன்றை நடத்தி வருகிறேன்" என்று கூறினார். குருவும் தன் மௌனத்தை கலைக்காமல் அவர் கூறியதை கேட்டு தலை அசைத்தார். மேலும் அந்த தலைவர் குருவிடம் "என் மனம் தற்போது பெரும் குழப்பத்தில் உள்ளது. அதற்கான விடையை அறியவே உங்களைக் காண வந்தேன்" என்றும் கூறினான். 

குரு அதற்கு "என்ன குழப்பம்?" என்று கேட்டார். தலைவர் குருவிடம் "என் மடாலயம் மிகவும் அமைதியாக, பழைமை நிறைந்த புனிதமான இறை வழிபாட்டை மேற்கொண்டு வந்தது. இதனை அறிந்து உலகின் பல பகுதிகளிலிருந்தும், இளைஞர்கள் வந்து தங்கி, பாடத்தை கற்றுக் கொண்டு செல்வர். ஆனால் இப்போதோ, யாரும் வருவதில்லை. இதற்கு காரணம் என்னவென்று தெரியவில்லை. நீங்கள் தான் அதற்கான காரணத்தை சொல்ல வேண்டும்" என்று கூறினார். 

அவ்வாறு வருத்தத்துடன் சொல்லும் போது, அவர்து குரலில் வேதனை தெரிந்தது. அதன் பின் குரு தலைவரிடம், "இதற்கு அறியாமை தான் காரணம்" என்று சொன்னார். "அறியாமையா?" என்று கேட்டார் தலைவர். அதற்கு "ஆம், உங்கள் மத்தியில் தேவதூதர் ஒருவர் உள்ளார். அவரை நீங்கள் உணரவில்லை, அதனால் தான் இந்த குழப்பம்" என்று கூறி அனுப்பி வைத்தார். 

அவரும் யாராக இருக்க முடியும் என்று யோசித்துக் கொண்டே சென்றார். பின் தன் மடாலயத்தில் இருக்கும் சீடர்களிடம் நடந்ததை சொன்னார். அவர்களும் யாரோ ஒருவர் தான் இங்கு தேவதூதர் என்பதை நினைத்து, ஒருவரை ஒருவர் மிகவும் மரியாதையுடன் நடத்தினார்கள். பின் சிறிது மாதங்கள் கழித்து, அவரது மடாலயத்தில் கூட்டம் குவிந்தது. 

ஏனெனில் அவர்கள் இதுவரை எதையும் விரும்பி செய்யாமல், கடமைக்காக செய்ததால், யாரும் வரவில்லை. இப்போது அவர்கள் அனைவருக்கும் மரியாதைக் கொடுத்து, அனைத்தையும் மரியாதையோடு நடத்தினர். இவை அனைத்தையும் கண்டப் பிறகு தான் தலைவருக்கு, துறவி சொன்னது புரிந்தது. அப்போது தான் அவருக்கு தேவ தூதர் வேறு எங்கும் இல்லை, அவரவர் மனதில் தான் இருக்கிறார். அதை நாம் உணர்ந்து, நம்மைப் போல மற்றவரையும் நேசித்தால், இறைவனை உணர முடியும் என்பது புரிந்தது.

என் அன்பு வாசகர்களே,
நம்மை போல் மற்றவர்களையும் நேசிக்க வேண்டும் என்பதே இக்கதையின் கருத்து.

தன்னைப்போல் பிறனையும் நேசிப்பது என்பது எளிதான செயலல்ல அவ்வாறு செய்ய வேண்டுமெனில் அவர்கள் மீது அதீத அன்பு இருந்தால் மட்டுமே அது சாத்தியம். 

இன்றைய காலகட்டத்தில் ஒருவர் மீது ஒருவர் அன்பாயிருக்கும் பட்சத்தில் தன் பெற்றோர்களையும், தன் தன் ஜன பந்தங்கள் என எல்லாவற்றையும் துறந்து தன்னைப்போலவே வேறொரு நபரை நேசித்தபடியால் அவர்கள் எதையும் பொருட்படுத்தாமல் தன் ஜீவனை இழக்கவும் தாயாரயிருக்கின்றனர். 

வேதாகமத்தில் இஸ்ரவேலின் ராஜாவாகிய சவுலின் குமாரனாகிய யோனத்தான் தாவீதை தன் ஜீவனைக்காட்டிலும் அதிகமாய் நேசித்தான் அதனால் தான் தன் தகப்பன் செய்கிற எல்லா காரியத்தையும் ஒன்றுவிடாமல் தன் ஜீவனையும் பொருட்படுத்தாமல் தாவீதுக்கு தெரியப்படுத்தினான். 

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் என்னையும், உங்களையும் இந்த உலகத்தில் உள்ள எல்லா மனிதர்களையும் தன்னைப்போலவே நேசித்தபடியால் தான் இந்த உலகத்தின் பாவத்தை தானே சுமந்து, தன்னைப்போல யாரும் பாடனுபவிக்கக்கூடாது என்பதற்காக தானே எல்லா பாடுகளையும் அனுபவித்தார். ஆகவேதான் இவ்வாறு கூறுகிறார்

18 பழிக்குப்பழி வாங்காமலும், உன் ஜனப்புத்திரர்மேல் பொறாமைகொள்ளாமலும், உன்னில் நீ அன்புகூறுவதுபோல் பிறனிலும் அன்புகூறுவாயாக, நான் கர்த்தர்.

லேவியராகமம் 19:18

நம்மைப்போல் மற்றவர்களையும் நேசிக்கும் பட்சத்தில் இந்த உலகத்தில் பொறாமை, வேற்றுமை உணர்வு, பிறரை அவமதித்தல், புறங்கூறுதல் என எந்தவொரு பிளவின்றி எல்லோரும் சந்தோஷத்தோடும், ஒருவரையொருவர் மதித்து நன்றாய் நடத்தும்போது இந்த உலகமே பரலோகமாய் மாறும் என்பதில் ஐயமில்லை. எனவே பிறரை நேசிக்க, மனிதராய் நடத்த முயல்வோம் பரலோகத்தை இந்த பூலோகத்தில் அனுபவிப்போம். நம்முள் இருக்கும் தேவனை இந்த உலகத்திற்கு பகிர்ந்தளிப்போம். 

நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!




 349                    ஷேக்ஸ்பியர்... 

பதிமூன்று வயதில் படிப்பு போச்சு! வீட்டில் ஏழ்மை! தொடர்ந்து பல நாட்களாக பசி! வேலை தேடித் தேடி அலுத்துப் போச்சு!

 ஒருநாள், பசியால் மயக்கமடைந்து ஒரு நாடகக் கொட்டகை வாசலில் சொருகும் கண்களுடன் அமர்ந்திருந்தான் அந்த சிறுவன்.

ஒரு பணக்காரர் குதிரையில் நாடகம் பார்க்க வந்தார். பையனிடம்,””டேய்! இங்கே கட்டிவிட்டு செல்லும் குதிரைகள் காணாமல் போகின்றன. நீ இதைப் பார்த்துக் கொள். வரும் போது காசு தருகிறேன்,” என்றார்.

“ஆஹா…இப்படி ஒரு வேலையா?’ பையன் ஆர்வமாகத் தலையாட்டினான். தெம்புடன் எழுந்தான். நாடகம் முடிந்து பணக்காரர் வெளியே வந்தார். வெளியே நிற்பது தன் குதிரை தானா என்ற சந்தேகம் வந்து விட்டது. 

குதிரையைச் சுத்தப்படுத்தி, சேணத்தை பளபளப்பாக துடைத்து வைத்திருந்தான் பையன். சற்று அதிகமாக பணத்தை அவனிடம் நீட்டினார் பணக்காரர். சில்லரை கிடைக்குமென நினைத்தவனின் கையில் பணம்… மகிழ்ந்தான்…

மறுநாள், நாடகம் பார்க்க வந்த மற்றவர்களும் குதிரையை அவனிடம் ஒப்படைக்க, அவற்றையும் பாதுகாத்து, சுத்தப்படுத்திக் கொடுத்தான். வருமானம் பெருகவே, குதிரை லாயமே அமைத்து, உதவிக்கு வேலைக்கு ஆள் அமர்த்தி முதலாளியாகி விட்டான்.

அதோடு விட்டானா! நாடகங்களையும் கவனித்தான். மிகப்பெரிய இலக்கிய மேதையாகி விட்டான். அந்தச் சிறுவன் தான், உலகப்புகழ் பெற்ற இலக்கியமாமேதை    ஷேக்ஸ்பியர்.

என் அன்புக்குாியவா்களே, 
மனிதர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் நல்ல நேரம் வரும். வருகிற சந்தர்ப்பத்தை மட்டும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டால், குதிரையை காவல் காக்கிறனும் பணக்காரனாகி விடலாம்.

வாய்ப்புக்களை பயன்படுத்துபவர்கள் தான் உலகினில் வெற்றிகரமாக வலம் வருகின்றனர்....

தேவன் வாழ்வில் முன்னேறுவதற்குாிய  வாய்ப்புகளை ஒரு தடவைக்கு பல தடவை கொடுக்கிறாா். .அதை உங்கள் வாழ்வில்  நீங்கள்  பயன்படுத்திக் கொள்வது ஞானமுள்ள செயலாகும். 

தேவன் கொடுக்கும் வாய்ப்புகள்  அற்பமாக இருந்தாலும் போக போக அது திருப்திகரமானதாயும்,  அதின்  முடிவில் சம்பூரண ஆசீாவாதமானதாயும்  காணப்படும். 

உதாரணமாக,
தேவன் தாவீதை ஆடு மேய்க்கும் போதே அரசனாக கண்டாா். .அவனை மேய்ப்பனாக பார்க்கவில்லை அவன் எதிர்காலத்தில் அரசனாக இருப்பதை பார்த்து அரசன் என்றே சொன்னாா். 

சாமுவேலை தாவீதின் தகப்பன்  ஈசாய் வீட்டுக்கு அனுப்பி அவனுடைய குமாரரில்ஒருவனை சவுல்  ராஜாவிற்கு பதிலாக ராஜாவாக அபிஷேகம் பண்ணு என்று பெத்லகேமுக்கு தேவன் சாமுவேலை அனுப்பினார்.

சாமுவேல் ஈசாயின் வீட்டுக்கு வந்து ராஜ அபிஷேகம் பெற  ஒவ்வொருவராக சாமுவேல் முன் கடந்து  வரச் செய்தான். ஆனால் ஒருவரையும் கர்த்தா் தொிந்து கொள்ளவில்லை.  சாமுவேல்  ஆசியைப் பாா்த்து இவ்வளவு தானா  உன்னுடைய பிள்ளைகள் என்று கேட்ட பொழுது 

 இன்னுமொரு குமாரன் இருக்கிறான்..அவன் சிறுவன் அவன் ஆடுகளை  மேய்ப்பவன் இருக்கிறான் என்று சொன்னபோது 
தேவன் சாமுவேலிடம் அவன் தான் ராஜா  என்று சொல்லி அவனை வரவழைத்து அவனை அபிஷேகம் பண்ணு  என்றார்.

அற்பமாய் எனப்பட்ட தாவீது சாதாரணமாக ஆடு மேய்த்து  கொண்டிருந்தான். ஆனால் அது மிகப் பொிய வல்லமை நிறைந்த  ராஜ அபிஷேகம்  என்று  அவனுக்கு விளக்கினதோ, இல்லையோ  அந்த அபிஷகத்தை அவன் ஒரு வாய்ப்பாகவே  எண்ணினாான்.  அபிஷேகம்  அவனோடே  கிாியை செய்தது. 

சிங்கம், கரடி, கையிலும், தடியிலுமே  அடித்து  கொன்று போடுமளவுக்கு  அபிஷகத்தை  பொக்கிஷமாகவே  கருதினாான். அதனால் அடுத்த கட்டமாக கோலியாத்  ராட்சதனை தனியாகவே  அபிஷகத்தை பயன்படுத்தி  கொன்றான்.  

இப்படி தாவீது படிப்படியாக  உயா்ந்து கா்த்தா் சொன்னபடி  சமஸ்த இஸ்ரவேல் தேசத்தில் ராஜாவானான். 

என் அன்புக்குாியவா்களே, 
உங்கள் ஒவ்வொருவாின் தற்போது உள்ள சாதாரண  நிலையைத் தேவன் பாா்க்கவில்லை. எதிர்காலத்தில் நீங்கள் என்னவாகப் போகிறீா் கள் என்பதை  தான் பாா்க்கிறார். 

உங்களை சுற்றியுள்ள  பல பாதகமான செயல் களை நீங்கள் பாா்த்து  சோா்வடையக் கூடும். 

ஆனால் உங்களுக்குள்ளே இருக்கிற இரட்சிப்பு அபிஷேகம், வல்லமை, அந்நியபாஷை ஆகிய வைகளை உங்களுக்கு தேவன் யாருக்குமே கொடுக்காத வாய்ப்புகள் என்று கருதாமல்  இருப்பதினாலேயே  நீங்கள் எதையும் சாதிக்க முடியாமல் இருக்கிறீா்கள். 

அந்தப் பாதகமான சூழ்நிலையையே நினைத்து  சோா்வடையாமல் உங்களுக்குள் இருக்கிற இரட்சிப்பு  அபிஷேகம், வல்லமை  அந்நிய பாஷை ஆகியவைகளை கொண்டு  பாதகமான சூழ்நிலையை அகற்றி  

தேவன் உங்கள் எதிா்காலத்தில் நீங்கள் என்னவாக  உங்களை  வைத்திருக்கிறாரோ அதை அபிஷேகம்  மூலமாய் கண்டறிந்து  தேவன் உங்களுக்கு நிா்ணயம் பண்ணி வைத்த இலக்கை அடையுங்கள். 

தேவன்  சொல்கிறாா்.. 
நான் நினைத்திருக்கிறபடியே உனக்கு நடக்கும், நான் நிர்ணயித்தபடியே உன் வாழ்வு  நிலை நிற்கும் என்று சேனைகளின் கர்த்தர் ஆணையிட்டுச் சொன்னார்.  - ஏசாயா 14:24

அவர் சிறியவனைப் புழுதியிலிருந்த தூக்கி விடுகிறார், எளியவனைக் குப்பையில் இருந்து உயர்த்துகிறார். அவனைப் பிரபுக்களோடும், தமது ஜனத்தின் அதிபதிகளோடும் உட்காரப் பண்ணுகிறார்.  - சங்கீதம் 113: 7,8

கா்த்தா் உங்களை புழுதியிலிருந்து தூக்கி யெடுப்பாா். குப்பையிலிருந்து  உங்களை உயா்த்துவாா். எனவே தேவன்  உங்களுக்கு  கொடுக்கிற எல்லா வாய்ப்புகளையும்  நீங்கள்  உபயோகித்து தேவன் உங்களுக்கு நிர்ணயம் பண்ணின இலக்கை அடையுங்கள். 

நீங்கள் ஆசீா்வதிக்கப்பட்டவர்கள் 



350           கடவுள்பெயரால்...

அரசன் ஒருவன் இருந்தான். அவன் பல நற்குணங்கள் பொருந்தியவனாக இருந்த போதிலும் அந்த அரசனுக்கு கடவுள் நம்பிக்கை மட்டும் இல்லை...

 ஒருநாள் அரசன் நாட்டு நிலைமையை பற்றி அறிந்துகொள்ள மாறுவேடத்தில் நகர்வலம் சென்றான். அப்போது நகரத்தில் இரண்டு பிச்சைக்காரர்கள் பிச்சை எடுப்பதை கண்டான்...
 ஒரு பிச்சைக்காரன் கடவுள் பெயரை சொல்லி பிச்சை கேட்டான். இன்னொருவன் அரசனின் பெயரை கேட்டு பிச்சை கேட்டான்...
அரசன் தனது சேவகர்களிடம் அந்த இரண்டு பிச்சைக்காரர்களையும் தன் அவைக்கு அழைத்து வரும்படி ஆணையிட்டான், அவர்கள் அந்த இரண்டு பிச்சைக்காரர்களையும் அவைக்கு அழைத்து வந்தார்கள்...

அரசன் அவர்களிடம் இவற்றிலிருந்து இருவருமே பிச்சை எடுப்பதைப் பார்த்தேன். 

ஒருவர் கடவுள் பெயரை சொல்லியும் இன்னொருவர் அரசின் பெயரைச் சொல்லியும் பிச்சை எடுத்தது காரணம் என்ன? என்று கேட்டான் அரசன்...

 அதற்கு கடவுள் நம்பிக்கை கொண்ட பிச்சைக்காரன்." 
அரசே இந்த உலகம் முழுவதையும் காப்பவன் இறைவன் தான். இறைவனின் அருளால் மட்டுமே ஒருவன் செல்வந்தனாக மாறமுடியும் அதனால்தான் இறைவன் பெயரைச் சொல்லி பிச்சை கேட்கிறேன் என்றான்.

 மற்றொரு பிச்சைக்காரன். 
"அரசே ! இறைவன் கண்ணுக்குத் தெரியாதவன். ஆனால் கண்ணுக்குத் தெரிந்த விஷயம் அரசன் மட்டுமே. அரசனால் மட்டுமே ஒருவன் செல்வம் பெற முடியும் அதனால் தான் அரசன் பெயரைச் சொல்லி பிச்சை கேட்கிறேன் என்றான்...

 அரசன் இருவரையும் அனுப்பி விட்டு தன் அமைச்சரிடம் இதுபற்றி ஆலோசித்தான்...
 அமைச்சர் அரசனிடம், "அரசே முதல் பிச்சைக்காரன் சொன்னது தான் சரி. இறைவன் அருள் இருந்தால்தான் அந்த உதவியை பெற முடியும்" என்றார் அமைச்சர்...
 அரசனும், "இறைவன் அருளா ? அல்லது அரசனின் அருளா ? என்று சோதித்துப் பார்க்க தீர்மானித்தான்...
சில நாட்களில் அந்நாட்டிலுள்ள கோயில் திருவிழா நடைபெற்றது. அன்று அரசனும் குடிமக்களுக்கு சில பரிசுகள் அளிக்கப் போவதாக அறிவித்தான்...

 பரிசினைப் பெற குடிமக்கள் அனைவரும் வந்தனர். அவர்களும் அந்த இரண்டு பிச்சைக்காரர்களும் வந்தனர்.‌‌..
 அரசன் ஒவ்வொருவருக்கும் புதிய துணி ஒன்றையும் கூடவே பரங்கிக்காய் ஒன்றையும் பரிசளித்தான். 
அரசன் பெயரில் பிச்சை எடுப்பவனுக்கு மட்டும் பரங்கிக்காயினுள் தங்க , வைர நகைகளை வைத்து பரிசளித்தான். கடவுள் பெயரைச் சொல்லி பிச்சை எடுத்தவனுக்கு எல்லோரையும் போலவே துணியும் பரங்கிக்காய் மட்டும் பரிசளித்தான்...

 சில நாட்கள் கழிந்தன அரசன் ஒரு நாள் நகர்வலம் சென்றான்...
அப்போது அரசன் பெயரைச்சொல்லி பிச்சை எடுப்பவன். சாலையோரத்தில் அமர்ந்து பிச்சை எடுப்பதை கண்ட அரசனுக்கு வியப்பு தோன்றியது. 

" தான் பரங்கிக்காயின் உள்ளே தங்க வைர நகைகள் வைத்து பரிசளித்தும் இவன் பிச்சை எடுக்க வேண்டிய காரணம் என்ன? ' என்று அரசனுக்கு தோன்றியது.

 உடனே அரசன் அந்த பிச்சைக்காரனிடம், "நான் அன்று உனக்கு பரிசுகள் அளித்தேனே, அதற்குப் பிறகும் நீ பிச்சை எடுக்க வேண்டிய அவசியம் என்ன?" என்று கேட்டான்...
 அந்த பிச்சைக்காரனும்
 "அரசே ! நீங்கள் அன்று ஒரு பரங்கிக்காய் பரிசளித்தார்கள். அதை நான் ஐந்து வெள்ளிக் காசுகளுக்கு ஒருவனுக்கு விற்றுவிட்டேன். 
அந்த 
ஐந்து வெள்ளிக் காசுகளை வைத்து எத்தனை நாட்கள் நான் உண்ண முடியும்? அதனால் மீண்டும் பிச்சை எடுக்க வந்து விட்டேன்" என்றான்...

 அதைக் கேட்ட அரசன் கோபமுற்று,
அடேய் மூடனே ! 
நான் உனக்கு பரிசளித்த பரங்கிக்காயினுள். தங்க வைர நகைகள் வைத்திருந்தேனே. நீ அதனை வெட்டி பார்த்திருந்தால் அறிந்திருப்பாயே!" 

என்று அவனை திட்டி விட்டு நகர்ந்தான்...

சற்று தூரத்தில் ஒரு செல்வந்தனை கண்டான். அவன் இறைவன் பேரைச்சொல்லி பிச்சை எடுத்தவன் என்பதையும் அரசன் அறிந்து கொண்டான்...

அரசன் அவனிடம் சென்று, " ஐயா! நீங்கள் முன்பு பிச்சை எடுத்துக் கொண்டு இருந்தீர்கள் அல்லவா ? இப்போது எப்படி செல்வந்தனாகி விட்டீர்கள்? என்று கேட்டான்...

அதற்கு அவனும் "அரசே ! நான் என் தந்தை இறந்த தினத்தில் சிலருக்கு இறைவன் பெயரைச் சொல்லி அன்னதானம் செய்வேன். அன்று ஒருவனிடம் ஐந்து வெள்ளிக் காசு கொடுத்து ஒரு பரங்கிக்காய் வாங்கினேன். 

அதனை சமைப்பதற்காக வெட்டியபோது. அதனுள் தங்க வைர நகைகள் இருப்பதைக் கண்டேன். இறைவன் அருளால் இன்று நான் செல்வந்தன் ஆகிவிட்டேன் என்று கூறினான்...

 இறைவன் அருள் இல்லையென்றால் வாழும் வாழ்வில் எந்த வளமும் பெற முடியாது என்பதை அவன் புரிந்து கொண்டான். 
நாம் நல்லாட்சி செய்வதற்கும் இறைவன் அருளே என்று அவன் அறிந்து கொண்டான்...

நல்ல மனம் படைத்தவர்களுக்கு இறைவன் எப்போதும் அருள் புரிகிறான்...

#என்_அன்புக்குாியவா்களே, 

எந்த ஒரு செயலும் தேவனால் தான் உண்டாயி ருக்கிறது.அவாில்லாமல் ஒரு அணு கூட அசையாது..என்பதை  விளங்கிக் கொள்ளுங் கள். 

இயேசு சொல்கிறாா்.. 
நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான், என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது.  -  யோவான் 15:5

திராட்சை செடியும்அதன் கொடியும் போலத்தான்  ஒவ்வொரு தேவனுடைய பிள்ளைகளின் வாழ்வும் இருக்கிறது. செடியில்லாமல் கொடி பூ பூக்காது, காய்காய்க்காது, கனிதராது. எல்லாவற்றுக்கும்  காரணமே  செடி தான்.  

அதைப்போலவே தான் தேவனில்லாமல் நம் கன்மலையாகிய கிறிஸ்து  இல்லாமல் எதையும் நாடக செய்து விட முடியாது.  

இயேசு  சொல்ஙியிருக்கிறாா்.. என்னையல்லாமல  உங்களால்  ஒன்றும் செய்ய முடியாது... எனவே இயேசுவை  உங்கள் வாழ்வில்  எல்லா விஷயங்களுக்கும் மையமாக வைத்து  வாழுங்கள். அவா் உங்களுக்கு  போதுமானவா் மட்டுமல்ல போதுமானவாிலும் மிகவும் அதிகமானவா்.

அவரே.. உங்களை இரட்சிக்கிறவா்..

அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை, நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷா்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை  - அப். 4:12

எனவே அவா் உங்களை மனப்பூா்வமாக தன் இரத்தத்தினால் மீட்டுக் கொண்டதினால் உங்களை அவருடைய  சரீரமாகவே பாவிக்கிறாா். அவா் தலையாக இருக்கிறாா்.  

பைபிள் சொல்கிறது.. 
எல்லாத் துரைத்தனத்துக்கும், அதிகாரத்துக்கும், வல்லமைக்கும், கர்த்தத்துவத்துக்கும், இம்மை யில்மாத்திரமல்ல மறுமையிலும் பேர் பெற்று இருக்கும் எல்லா நாமத்துக்கும் மேலாய் அவர் உயர்ந்திருக்கத்தக்கதாக, 

அவரை உன்னதங்களில் தம்முடைய வலது பாரிசத்தில் உட்காரும்படி செய்து, எல்லாவற் றையும் அவருடைய பாதங்களுக்குக் கீழ்ப் 
படுத்தி  எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிறவருடைய நிறைவாகிய சரீரமான சபைக்கு அவரை எல்லாவற்றிற்கும் மேலான தலையாகத தந்தருளினார்.  -  எபே. 1:20 - 23

உங்கள் குறைகளை நிவர்த்தி செய்கிறாா் 
அவரே.  எல்லா உலகத்தின் தீய சக்திகளுக்கும் மந்திரவாத பில்லிசூன்யத்திற்கும்  செய்வினை களுக்கும் மேலானவர் அவரை கண்டால் அவைகள் தலைதெறிக்க ஓடிவிடும். 

அதுமட்டுமல்ல  பூமியின் சகல ஆசீாவாதங்களும் நன்மைகளும் அவா் பாதபடியிலே இருக்கிறது..உங்கள்குறைவுகள் எல்லாவற்றையும் எல்லாவற்றாலும்  நிரப்புகிற வரும் அவரே. 

என்பதை புாிந்து கொண்டு  இயேசுவை  சாா்ந்து அவரையேப் பற்றிக் கொள்ளுங்கள்  கடவுள் பேரால் பிச்சையெடுத்தவனுக்கு ராஜா வைரம் பொன், ஆகியவைகளை  கொடுக்காமல் ராஜாவாகிய அரசன் போில் பிச்சை யெடுத்தவ னுக்குக் கொடுத்தாா்.  என்ன நடந்தது. 

கடவுள் போில் பிச்சையெடுத்தவனுக்கே  ராஜா கொடுத்ததெல்லாம்  கிடைத்தது. மனுஷன் மனுஷன் தான்.. கடவுள் கடவுள் தான். .. எக்காரணத்தைக்  கொண்டும் மனுஷன் கடவுளாக  முடியாது.

ஆனால்  கடவுள் மனுஷனாகி தம் இரத்தத்தை சிந்தி உலகத்தை மீட்கும் பொருளாக வந்தாா். .  
அந்த இயேசுவை விசுவாசியுங்கள் அவரே  உங்களை உயா்த்தி மேன்மைப்படுத்துகிறவா்





351.              ஊசி.. 

தினம் பல ஊர்களுக்கும் யாத்திரை சென்ற பட்டிணத்தார் ஒரு ஊரில் தங்கினார். அவ்வூர் பணக்காரர் ஒருவர் பட்டினத்தாரை தன் வீட்டிற்கு விருந்து சாப்பிட அழைத்தார்.

“இந்த ஊரிலேயே பெரிய பணக்காரன் நான் தான். நினைத்ததை சாதிக்கும் பலம் என்னிடம் இருக்கிறது.

உங்களுக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால்
கேளுங்கள்,” என்று பெருமையுடன் தன்னை
அறிமுகப்படுத்தினார்.

சற்று யோசித்த பட்டினத்தார் 

“ரொம்ப நல்லது.
அப்படியானால் எனக்கு ஒரு உதவி செய்ய
வேண்டுமே!” என்று கேட்டார்.

“என்ன சுவாமி.. எதுவாக இருந்தாலும் தயங்காமல் சொல்லுங்கள். செய்ய காத்திருக்கிறேன்” என்றார் பணக்காரர்.

தன் பையில் இருந்து ஊசி ஒன்றை எடுத்த பட்டினத்தார், அதை பணக்காரரிடம் நீட்டினார்.

“இந்த பழைய ஊசியைக் கொண்டு நான் என்ன செய்ய வேண்டும் சுவாமி” என்றார் பணக்காரர்.

“இதைப் பத்திரமாக வைத்திருங்கள். நாம் இருவரும் இறந்தபிறகு மேல் உலகத்தில் சந்திக்கும் போது திருப்பிக்கொடுத்தால் போதும் என்றார் பட்டிணத்தார்

இறந்த பிறகு இந்த ஊசியை எப்படி கொண்டு வர முடியும்” என்று கேட்டாா்  பணக்காரா்

அவரைப் பார்த்து சிரித்த பட்டிணத்தார் “இந்த உலகை விட்டுப் போனால் சிறு ஊசியைக் கூட கொண்டு போக முடியாது என்று நீங்களே ஒத்துக் கொள்கிறீர்கள்.

ஆனால் நினைத்ததை சாதிக்கும் வலிமை இருப்பதாக தற்பெருமை பேசுகிறீா்களே….

ஒருவன் செய்த நன்மை தீமை மட்டுமே இறந்த பிறகு கூட வரும். செல்வத்தால் யாரும் கா்வப்படத் தேவையில்லை. 

அதை இல்லாதவர்களுக்கு கொடுத்து
உதவுங்கள். அதுதான் உண்மையான மகிழ்ச்சி தரும்,” என்று அறிவுரை கூறினார்.

என்_அன்புக்குாியவா்களே,

வாழும் போதும் வாழ்க்கைக்கு பிறகும் நம்முடன் வருவது, நமது நற்செயல்களால் கிடைத்த புண்ணியங்கள் மட்டுமே.. எனவே, இருப்பதை மற்றவருக்கு கொடுத்து வாழுவோம்..

இயேசுவினிடத்தில்...
ஒருவன் ஓடிவந்து, அவருக்கு முன்பாக முழங்கால்படியிட்டு: நல்ல போதகரே, நித்தியஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான். 

அதற்கு இயேசு, 
நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனுமில்லையே. 

விபசாரஞ் செய்யாதிருப்பாயாக, கொலை செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக, வஞ்சனை செய்யாதிருப்பாயாக,உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்கிற கற்பனைகளை அறிந்திருக்கிறாயே என்றார். 

அதற்கு அவன்,
போதகரே, இவைகளையெல்லாம் என் சிறு வயதுமுதல் கைக் கொண்டிருக்கிறேன் என்றான். 

இயேசு அவனைப் பார்த்து, 
அவனிடத்தில் அன்புகூர்ந்து: உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு: நீ போய்,  உனக்கு உண்டான
வைகளையெல்லாம் விற்று, தாித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும், 

பின்பு சிலுவையை எடுத்துக் கொண்டு,என்னைப்  பின்பற்றிவா என்றாா். 

அவன் மிகுந்த ஆஸ்தியுள்ளவனாயிருந்தபடியால், இந்த வார்த்தையைக் கேட்டு, மனமடிந்து, துக்கத்தோடே போய்விட்டான். 

அப்பொழுது இயேசு சுற்றிப் பார்த்து, தம்முடைய சீஷரை நோக்கி, ஜசுவரியமுள்ளவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது எவ்வளவு அரிதாயிருக்கிறது என்றார். 
(மாற்கு 10:17-23)

பணக்காரர்கள் 
எப்படி இருக்க வேண்டுமென்பதை குறித்த  விஷயங்களை பவுல் தீமோத்தேயு வுக்கு எழுதும்போது.. 
.
உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டு வந்ததுமில்லை, இதிலிருந்து நாம் ஒன்றும் கொண்டுபோவதுமில்லை என்பது நிச்சயம். 

இவ்வுலகத்திலே ஐஸ்வா்யமுள்ளவா்கள்... 

இறுமாப்பான சிந்தையுள்ளவர்களா இராமலும், 

நிலையற்ற ஜசுவரியத்தின் மேல் நம்பிக்கை வையாமலும்,

நாம் அனுபவிக்கிறதற்குச் சகலவித நன்மைகளையும் நமக்குச் சம்பூரணமாய்க் கொடுக்கிற ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை வைக்கவும், 

நன்மைசெய்யவும், 

நற்கிரியைகளில் ஐசுவரியவான்களாகவும், 

தாராளமாய்க் கொடுக்கிறவர்களும், 
.  
 உதாரகுணமுள்ளவர்களுமாயிருக்கவும், 

நித்திய ஜீவனைப் பற்றிக்கொள்ளும்படி வருங்காலத்திற்காகத் தங்களுக்கு நல்ல ஆதாரத்தைப் பொக்கிஷமாக வைக்கவும் 
அவா்களுக்குக் கட்டளையிடு.  -  1 தீமோ. 6:7-19

இவ்வசனங்களின்படி ...
நல்ல மனம் உள்ளவா்களாயும், அகந்தை, நான் என்ற கா்வம், பெருமை, மேட்டிமை ஆகிய குணங்களை விட்டொழித்து வாழ்வோம்.

அப்போது ...
நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப் படுத்து வேன். நீ ஆசீர்வாதமாய் இருப்பாய். - ஆதி. 12:2 

என்று 
தேவன் ஆபிரகாமுக்குக் கூறின  வாக்கை இந்த 2020-ல் தேவன் உங்களுக்கு நிறைவேற்றுவாா். 

நீங்கள்ஆசீா்வதிக்கப்பட்டவா்கள் !
 


 
352                ஒரு செம்பு நீர்...


மகேந்திரபுரி என்னும் நாட்டை மகேந்திரவர்மன் என்ற அரசன் ஆண்டு வந்தான். நீதியும் நேர்மையும் ஞானமும் உள்ள அரசனாகத் திகழ்ந்தான். அவனது ஆட்சியில் எந்த ஒரு வழக்கிற்கும் நல்ல நியாயம் வழங்கப்பட்டது. இதனால் அவனது புகழ் எங்கும் பரவியிருந்தது.

மகேந்திரபுரியில் சுந்தரி என்ற பெண் வாழ்ந்து வந்தாள். அவளிடம் இரண்டு பசுமாடுகள் இருந்தன. அம்மாடுகளின் மூலம் கிடைக்கும் பாலை விற்றுப் பிழைப்பு நடத்தி வந்தாள். வறுமைதான்… ஆனாலும் நேர்மையாக உழைத்துச் சம்பாதித்த பணத்தில் ஓரளவுக்குத் துன்பமில்லாமல் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தாள்.

சுந்தரியின் எதிர்வீட்டில் ஒரு பெண் இருந்தாள். அவளுடைய பெயர் பரணி. அவளிடம் இருபது மாடுகள் இருந்தன. ஏராளமான வருமானம். இருந்தபோதிலும் கிடைத்த வருமானத்தை ஊதாரித்தனமாகச் செலவு செய்து வந்தாள். அவளுக்கு சுந்தரியைக் கொஞ்சம் கூடப் பிடிக்காது. சுந்தரியை ஏதாவது சிக்கலில் மாட்டி வைக்க வேண்டும் என்ற எண்ணத்தை மனத்தில் வளர்த்துக் கொண்டிருந்தாள். அதற்காக சமயம் பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஒருநாள் பரணி, சுந்தரியின் வீட்டிற்குச் சென்றாள். அவளிடம் தனக்கு இரண்டு படி வெண்ணெய் கடனாகக் கொடுக்கும்படி கேட்டாள்.

சுந்தரி மறுப்பு ஏதும் சொல்லாமல் உடனடியாக பரணி கேட்ட இரண்டு படி வெண்ணெயைக் கொடுத்து உதவினாள். அதை வாங்கிக் கொண்ட பரணி, விரைவிலேயே திருப்பித் தந்து விடுவதாகக் கூறிவிட்டுச் சென்றாள்.

நாட்கள் பல சென்றன. பரணியிடமிருந்து வெண்ணெய் திரும்பி வரவேயில்லை. தனக்குச் செலவுக்குப் பணமில்லாததால், சுந்தரி தான் கொடுத்து உதவிய வெண்ணெயை திருப்பித் தருமாறு பரணியிடம் கேட்டாள்.

அதற்கு பரணி, “நீ எப்போது எனக்கு வெண்ணெய் கொடுத்தாய்? உன்னிடமெல்லாம் நான் கடன் வாங்குவேனா என்ன?’ என்று அலட்சியமாகப் பதில் கூறினாள்.

சுந்தரி மனம் பதைத்துப் போனாள். இதற்கு என்ன செய்வது என்று யோசித்த அவள், நீதி வழுவாத அரசன் இருக்க நமக்கு என்ன கவலை என்ற முடிவுக்கு வந்தாள்.

வழக்கை மகேந்திரவர்மனிடம் கொண்டு சென்றாள்.
இருவரையும் விசாரித்த அரசன் மறுநாள் அரசவைக்கு இருவரும் வருமாறு உத்தரவிட்டான்.

மறுநாள் காலையில், அரண்மனைக்குள் நுழையும் வழியில் சேறும் சகதியுமாக இருக்கும்படி செய்தான். அங்கேயே இரண்டு செம்புகளில் தண்ணீரை நிரப்பி வைக்கும்படி தனது சேவகர்களுக்கு உத்தரவிட்டான்.

பரணியும் சுந்தரியும் அரசவைக்கு வந்தனர். வரும் வழியில் இருவரும் அந்தச் சேற்றைத் தாண்டி வரும்படி ஆனது. அப்போது இருவரின் கால்களிலும் சேறு அப்பிக் கொண்டது. அருகிலேயே செம்பில் நீர் இருப்பதைப் பார்த்த பரணி, அவசர அவசரமாக நீரை எடுத்துக் காலில் ஊற்றிக் கழுவினாள். சரியாகக் கழுவாததால் அவளுடைய கால்களில் நிறைய சேறு இன்னும் ஒட்டிக் கொண்டுதான் இருந்தது. அதோடு அரசவைக்குள் நுழைந்தாள்.

சுந்தரியோ, செம்பு நீரைக் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றித் தனது கால்களை நன்றாகச் சுத்தம் செய்தாள். அதன்பிறகும் செம்பில் பாதியளவு நீர் இருந்தது.

இவையனைத்தையும் ஒரு காவலாளியை வைத்து கவனிக்கும்படி செய்திருந்தான் அரசன் மகேந்திரவர்மன். காவலாளியும் உடனடியாக நடந்தவற்றை அப்படியே அரசனிடம் சென்று விளக்கமாகக் கூறினான்.

அவனுடைய விளக்கத்தைக் கேட்ட அரசனுக்கு பரணியின் ஊதாரித்தனமும் பொறுப்பற்ற குணமும் புரிந்தது. சுந்தரி பொறுப்பும், ஒழுங்கும் தன்னிடத்தே கொண்டவள் என்பதும் தெரிந்தது.

அரசவை கூடியதும் மகேந்திரவர்மன் தனது தீர்ப்பைக் கூறினான். பரணி வெண்ணெயை வாங்கிக் கொண்டு பொய் சொன்னதால் தண்டனையாக அவளுடைய மாடுகளில் இரண்டை சுந்தரிக்குக் கொடுக்க வேண்டும் அதனால் வரும் லாபத்தை ஓராண்டுக்கு சுந்தரி அனுபவித்துக் கொள்ளலாம் என்பதுதான் தீர்ப்பு.

மன்னனின் புத்திக்கூர்மையையும் நீதி வழுவாத குணத்தையும் அனைவரும் பாராட்டினர். அவனுடைய புகழ் மேலும் பரவியது.

என் அன்பு வாசகர்களே,
முற்காலங்களில் மாதம் மும்மாரி மழைபெய்யும். அதன் பொருள் ஒரு மாதத்திற்கு மூன்று முறை தவறாது மழை பெய்யும். முதலாவது வேதம் ஓதுபவர்களுக்கு, இரண்டாவது நீதி  நேர்மை தவறாத ராஜாவுக்காக, மூன்றாவது பத்தினி பெண்களுக்காக என இந்த மூன்று நபர்களுக்காக மாதம் மும்மாரி பொழிந்தது. 

காலங்கள் மாற மாற மாதத்திற்கு மூன்று முறை போய் வருடத்திற்கு முறை போய், மூன்று வருடத்திற்கு ஒருமுறை போய் மழையே இல்லாமல் பல தேசங்கள் இன்று காணப்படுகிறது. சரி இன்றைய கதைக்கு வரலாம் இதில் நீதி தவறாத ராஜாவாய் அரியணையில் வீற்றிருந்த ராஜா ஞானமாய் தீர்ப்பு வழங்கினான். 

இன்றைய காலகட்டத்தில் நீதி, நேர்மை, நியாயம் என்பது ஒரு சொல்லாக இருக்கிறதேயன்றி அதை அன்றாட வாழ்க்கையில் அநேகர் நடைமுறைபடுத்துவதில்லை. ஏனெனில் அங்கு பணத்திற்கு மட்டும் தான் மதிப்பிருக்கிறது. பணத்திற்காக எதையும் செய்யும் நபர்கள் உயரிய பொறுப்புகளிலும், அரியணையிலும் இருப்பதால் தான் பல தேசங்கள் ஆசீர்வதிக்கப்படாமல் இருக்கின்றன.

நீதி, நேர்மை, நியாயம் வழுவாத தேவன் இஸ்ரவேலராகிய தம்முடைய சொந்த ஜனத்தை தமது ஆசாரியர்களாகிய மோசேயையும், ஆரோனையும்  கொண்டு வழிநடத்தினபோது அவர்கள் போய் சேர வேண்டிய இடத்தில் சென்று சேருமளவும் அவர்களை உண்மையும் நேர்மையுமாய் வழிநடத்தினார். 

எப்போது தங்களுக்கு ராஜா வேண்டும் என்று முறையிட்டார்களோ அப்போதே தேவத்துவம், தேவ கிருபை அவர்களை விட்டு நீங்கி அங்கு மனுஷத்துவம் தலைத்தோங்க ஆரம்பித்தது. அன்றுமுதல் நீதி, நேர்மை, நியாயம் கொஞ்சம் கொஞ்சமாய் குறைய துவங்கியது. இன்று வரையிலும் எந்த ராஜாவும் தன் வாழ்க்கையின் முடிவு வரை நீதியாய் வாழ்ந்ததாக சொல்லப்படவில்லை. ஏதேனும் ஒரு காரியத்தில் தங்கள் நீதியை கெடுத்துப் போட்டார்கள்.

இன்று ராஜ அரசாங்கம் அல்ல, மக்களால் மக்களுக்காக ஏற்ப்படுத்தப்பட்ட அரசாங்கம் எனினும் அங்கும் நீதி, நேர்மை, நியாயம் என்பனவை கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது.
தங்களுக்கு எது நீதிமான் தோன்றுகிறதோ அது தான் நீதி என்கின்ற முறையில் தான் இப்போது சூழ்நிலை போய்க்கொண்டிருக்கிறது. 

நாம் செய்ய வேண்டியது ஒன்று மட்டுமே. நம்மால் இயன்ற மட்டும் நீதியோடும், நியாயத்தோடும், உண்மையாய் வாழ வேண்டும். பிறர் அவ்வாறு வாழ ஆலோசனைகள் வழங்கும் நாம் முதலாவது அவ்வாறு வாழும்போது நம்மை சுற்றியிருப்பவர்களும் நேர்மையாய் வாழ்வார்கள். அவ்வாறு அனைவரும் மாறும்போது நம் தேசம் மற்ற தேசங்களை விட மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டதாய் இருக்கும். 

21 உத்தமமும் நேர்மையும் என்னைக் காக்கக்கடவது, நான் உமக்குக் காத்திருக்கிறேன்.

சங்கீதம் 25:21

11 கர்த்தாவே நீர் உம்முடைய இரக்கங்களை எனக்குக் கிடையாமற் போகப்பண்ணாதேயும், உமது கிருபையும் உமது உண்மையும் எப்பொழுதும் என்னைக் காக்கக்கடவது.

சங்கீதம் 40:11

நாம் உண்மையாய் வாழ வேண்டுமெனில் தேவ இரக்கம் நிச்சயம் தேவை. அதை தேவ சமூகத்தில் காத்திருந்து பெற்றுக் கொள்வோம் ஆசீர்வாதத்தை சுதந்தரிப்போம்.

நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!




353              வெற்றி சிறந்தவர்


ஒரு ஊரில் உள்ள சுப்புராயன் தெருவில் கணபதி அண்ணாச்சி சிறிய மளிகைக் கடை நடத்தி வந்தார்.

கடை சிறியதாக இருந்தாலும் அவரிடம் எந்தப் பொருளும் இல்லாமல் இருக்காது. அப்படியே இல்லை என்றாலும் அடுத்த நாளே சந்தைக்கோ டவுனுக்கோ சென்று வாடிக்கையாளர் கேட்டப் பொருளை வாங்கிக் கொடுத்துவிடுவார். முன் பின் சில்லறை குறைந்தாலும் அண்ணாச்சி தன் கடைக்கு வந்தவரை எந்த வகையிலும் காயப்படுத்தும் வகையில் இல்லை என்று கூறாமல் கனிவாய் நடந்துகொள்வார்.

கிட்டத்தட்ட அந்தத் தெரு முழுவதும் அவர் கடைதான் சப்ளை செய்து வந்தது. திடீரென்று ஒரு நாள் அவர் கடைக்கு எதிர்புறம் இருந்த வெற்று இடத்தில் சிறிய கூடாரங்கள் அமைத்து மணல், ஜல்லி அனைத்தும் இறக்கப்பட்டு சற்று விசாலமான ஒரு கட்டடம் எழுப்பப்பட்டது. இவர் அங்கே உள்ள இன்ஜினீயரிடம் சென்று விசாரித்ததில் அங்கே ஒரு சூப்பர் மார்க்கெட் வர உள்ளது என்றார்.

அண்ணாச்சி அதைப் பெரிதாய் எடுத்துக்கொள்ளவில்லை. சரி சரிப்பா என்று தன் வியாபாரத்தைக் கவனிக்க ஆரம்பித்தார். கட்டடம் கட்டி முடிக்கப்பெற்று சூப்பர் மார்க்கெட் திறந்து ஓரிரு வாரங்களில் அத்தனை கூட்டமும் அங்கே சென்றது.

அண்ணாச்சி கடை வெறிச்சோடி காணப்பட்டது. ஒரு ரூபாய் பொருள் என்றாலும் மக்கள் அனைவரும் அங்கேயே செல்ல விருப்பம் காட்டினார்கள். அண்ணாச்சி கொஞ்சம் மனம் சோர்ந்து மிகுந்த கவலையோடு தன் குரு ஒருவரை பக்கத்து ஊரில் பார்க்கச் சென்றார். குருவிடம் நடந்த விஷயங்களைச் சொல்லி மிகுந்த துன்பம் அடைந்தார். அதற்கு குரு இவ்வளவுதானா இதற்கா வருத்தப்படுகிறாய்.

எளிமையான ஒரு தீர்வு சொல்கிறேன் என்று கூறினார். கணபதி அண்ணாச்சி உடனேயே இதற்குத் தீர்வு இருக்கிறதா குருவே என்று ஆர்வமுடன் கேட்டார். நிச்சயம் கணபதி. இன்றிலிருந்து நானும் நல்லா இருக்கணும் அந்த சூப்பர் மார்க்கெட்காரனும் நல்லா இருக்கணும் என்று நினைத்துக்கொள். எவ்வளவு முடியுமோ அவ்வளவு நினைத்துக்கொள். எப்பொழுதெல்லாம் சோகப்படுகிறாயோ அப்பொழுதெல்லாம் நினைத்துக்கொள் என்றார். கணபதிக்கு ஒன்றும் புரியவில்லை. இருந்தாலும் குருவின் பேச்சைக் கேட்டு ஆகட்டும் குருவே என்று கூறி வீட்டிற்குச் சென்றார்

ஒரு எட்டு மாதங்கள் கழித்து அந்தப் பக்கமாக வந்த குரு, கணபதி வீட்டிற்குச் சென்று என்ன கணபதி எப்படி இருக்க என்று கேட்டார். நல்லா இருக்கேன் குருவே இப்போ நான் என் கடையை மூடிட்டேன். ஆனா அதே சமயம் அந்த சூப்பர் மார்க்கெட்டையே வாங்கிட்டேன் என்றார்.

என் அன்பு வாசகர்களே,
இந்தக் கதை உணர்த்தும் கருத்து மிக எளிதுதான். ஒரு மாற்றம் வரும் சமயம் நாம் அதைப்பார்த்து அஞ்சி நடுங்கி பயத்தில் ஒடுங்கி விடக்கூடாது. அதேசமயம் மாற்றத்தைக் கொண்டு வந்தோரை வசைபாடுவது நம்மை எந்த வகையிலும் சிந்திக்க விடாது. இது போன்ற சமயங்களில் நாம் நமது எண்ணங்களை மிகவும் நேர்த்தியாக நேர்மறையாக வைத்துக்கொண்டால் தான் தெளிவாகச் சிந்திக்க முடியும்.

வேதாகமத்தில் மொர்தேகாய்க்கு எதிராக ஆமான் தூக்குமரத்தையும், யூதர்களுக்கு விரோதமாய் அவர்களை அழிக்கும் அரசாணையையும் பெற்றுக்கொண்டதை அறிந்த மொர்தேகாய் எதர்க்கும் அஞ்சாமல் தான் செய்ய வேண்டியது இன்னது என்று தெளிவாய் அறிந்திருந்தமையால் தான் செய்ய வேண்டியதை தெளிவாய் செய்தான். அதனால் தான் அவனும் சமஸ்த யூத ஜனங்களும் தப்புவிக்கப்பட்டார்கள்.

ஒருவேளை இதே போன்ற சூழ்நிலையில் இருக்கிறீர்களா? நமது நினைவு, யோசனை, அறிவு, விருப்பம், சிந்தனை ஆகியவற்றை தேவனிடம் நாம் முழுவதுமாய் சமர்ப்பிக்கும் போது நமக்கு எதிரான எல்லாவற்றையும் நமக்கு சாதகமாய் தேவன்‌ மாற்றித்தருவார். 

வேதம் இவ்வாறு கூறுகிறது,

14 நமக்கு எதிரிடையாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தைக் குலைத்து, அதை நடுவிலிராதபடிக்கு எடுத்து, சிலுவையின்மேல் ஆணியடித்து, 
கொலோசெயர் 2:14

15 துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவையில் வெற்றிசிறந்தார். 
கொலோசெயர் 2:15

அவர் எல்லாவற்றையும் சிலுவையின் மேல் வெற்றி பிறந்தார். எனவே எதை குறித்தும் கலங்காமல் வெற்றி சிறந்த தேவனை நோக்கி பார்ப்போம் நாமும் நமக்கு எதிரான‌ எல்லாவற்றையும் மேற்கொள்வோம்.

நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!!!!



---
354       தெளிவு, அறிவு, தகவல்

அது காட்டினுள் அமைந்துள்ள ஒரு பிரபலமான ஆசிரமம். அந்த ஆசிரமத்துக்கு பல ஊர்களிலிருந்தும் பக்தர்கள் வந்து செல்வார்கள். 

ஒருநாள் அந்த ஆசிரமத்தின் தலைமைத் துறவி பக்தர்களுக்கு சொற்பொழிவாற்றி முடித்த பின்னர், அதில் ஒரு பக்தர் துறவியைத் தனியாகச் சந்திக்க வேண்டுமென சீடர்களிடம் விருப்பம் தெரிவித்தார்.

அவரைத் துறவி தன் அறைக்கு அழைத்து வரச் செய்தார். துறவியிடம் பக்தர், ``ஐயா எனக்கு ஒரு மிகப்பெரிய சந்தேகம் இருக்கிறது. நீங்கள் பேசும்போது பெரும்பாலான விஷயங்கள் எனக்குப் புரிந்ததுபோல் உள்ளன. ஆனால், பிறகு சிந்தித்துப் பார்த்தால் குழப்பமாகவே உள்ளது. ஒன்றுமே நினைவுக்கு வருவதில்லை. நான் தெளிவடைவது எப்படி?" என்று கேட்டார்.

அதற்குத் துறவி சன்னமாக சிரித்துக்கொண்டே, ``தெளிவு என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டார். சற்று யோசித்த பக்தர், ``இல்லை ஐயா! தெளிவு என்றால் என்ன என்பது குறித்த அறிவு எனக்கு இல்லை" என்றார்.

``சரி அது போகட்டும்! அறிவு என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?" என்ற தனது அடுத்த கேள்வியைக் கேட்டார் துறவி.

நாம் கூறிய பதில்களில் இருந்து நம்மிடமே கேள்வி கேட்கிறாரே என்ற ஆச்சர்யத்துடன் பக்தர் ``அறிவு என்பது தகவல்களை அறிந்து வைத்திருப்பது" என்றார்.

``சரி இரண்டும் போகட்டும், தகவல் என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?" என்ற தனது அடுத்த கேள்வியைப் போட்டார் துறவி.

பக்தர் சற்று எரிச்சலுடன் "அனைத்துக் கேள்விகளுக்கும் நீங்களே பதில் கூறிவிடுங்கள்" என்றார்.

பக்தரின் பொறுமையின்மையைப் பார்த்த துறவி மீண்டும் மென்மையாகச் சிரித்துக்கொண்டே, ``சரி கூறுகிறேன். அதற்கு முன்பாக என்னிடம் மூன்று முக்கியமான சீடர்கள் உள்ளனர். அவர்களை உங்களுக்கு அறிமுகம் செய்யட்டுமா?" என்று கேட்டார்.

தான் கேட்ட கேள்விக்கும், துறவி மூன்று சீடர்களை அறிமுகம் செய்வதற்கும் என்ன தொடர்பு இருக்க முடியும் என்று பக்தருக்குப் புரியவில்லை!. இருந்தாலும் துறவி கூறுவதில் ஏதோ அர்த்தம் இருக்கிறது என்ற நோக்கில், ``சரி ஐயா!" என்றார்.

துறவி தன்னுடைய மூன்று சீடர்களையும் அழைத்தார். முதல் சீடரைக் காட்டி, ``இவர் எனக்கு மிகவும் முக்கியமானவர். என்னுடைய அன்றாடப் பணிகள், எனக்குத் தேவையான தகவல்கள், நான் யாரைச் சந்திக்க வேண்டும் போன்ற அனைத்தையுமே இவர்தான் செய்து கொடுப்பார். என்னுடைய பயணத் திட்டங்களை வகுப்பதும் இவரே. எனக்கு ஏதாவது தேவை என்றால் உடனே இவரை அழைத்தால் அடுத்த நொடி அந்த தேவையை எனக்கு அவர் நிறைவேற்றித் தருவார்" என்றார்.

``அப்படியா!" என்றார் பக்தர்.

அடுத்ததாக இரண்டாவது சீடரைக் காட்டிய துறவி, ``இவர் முதல் சீடர் அளவுக்குப் பெரிதாக எனக்கு எந்த உதவியும் செய்ய மாட்டார். ஆசிரமத்துக்கு வரும் என்னுடைய பக்தர்களுடன் உரையாடுவார். அவர்களுக்குத் தேவையான விளக்கங்களைக் கொடுப்பார்.

ஆசிரமத்தில் உள்ள பழைமையான நூல்களைப் படித்து புரிந்து வைத்திருப்பார். தத்துவங்கள் குறித்து தொடர்ந்து படித்துக்கொண்டிருப்பார்.

என்னுடைய சொற்பொழிவுகளில் ஒன்றைக்கூட தவறவிடாமல் தொடர்ச்சியாகக் கேட்பார். ஏதேனும் ஒரு குறிப்பிட்ட தலைப்பில் எனக்கு சந்தேகம் ஏற்படும்போது இந்த சீடரை நான் பயன்படுத்திக் கொள்வேன். ஆனால், இவர் முதல் சீடர் அளவு எப்போதும் எனக்குப் பயன்படமாட்டார். அவ்வப்போது மட்டுமே எனக்கு உதவுவார். நல்ல திறமையானவர்" என்றார் துறவி.

பெரும் வியப்புடன், ``அப்படியா!" என்றார் பக்தர்.

இறுதியாக மூன்றாவது சீடரைக் காட்டி பேசத்தொடங்கினார் துறவி, ``இவர் என்னுடைய மூன்றாவது சீடர். இவர் முதல் சீடர் மற்றும் இரண்டாவது சீடர் செய்யக்கூடிய பணிகள் எதையுமே செய்ய மாட்டார். ஆசிரமத்தில் இருப்பார். அனைத்து சீடர்களும் தியானங்கள் செய்கையில் இவரும் அங்கு அமர்ந்திருப்பார்.

தனியாகவும் அடிக்கடி தியானங்கள் செய்வார். வேறு எந்தக் குறிப்பிட்ட பணியையும் இவர் செய்ய மாட்டார். இவர்தான் என்னுடைய மூன்றாவது சீடர்" என்றார் துறவி.


``உங்கள் சீடர்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி" என்றார் பக்தர் புன்னைகையுடன்.

துறவி தொடர்ந்தார் ``எனது இந்த மூன்று சீடர்களும் சிறப்பானவர்கள். இப்போது நான் உங்களிடம் இறுதியாக ஒரு கேள்வி கேட்கிறேன். அதற்குப் பதில் கூறுங்கள்" என்றார் துறவி.

``கேளுங்கள் ஐயா! என்னால் இயன்றால் பதில் கூறுகிறேன்" என்றார் பக்தர்.

``இந்த மூன்று சீடர்களில் யாரை நான் என்னுடைய அருகிலேயே வைத்திருக்க வேண்டும்? யாருக்கு அதிக முக்கியத்துவமும் முன்னுரிமையும் கொடுக்க வேண்டும்?" என்றார் துறவி.

பக்தர் சற்றும் யோசிக்காமல் ``முதல் சீடரைத்தான் உங்களுடைய அருகில் எப்போதும் வைத்திருக்க வேண்டும். அவர் உங்களுடன் எப்போதும் இருந்தால், உங்களுக்குத் தேவையான அனைத்துப் பணிகளையும் செய்துகொண்டே இருப்பார்தானே" என்றார்.

துறவி சத்தமாக வாய்விட்டுச் சிரித்தபடியே ``இல்லை! இல்லை! நான் எப்போதுமே என்னுடைய மூன்றாவது சீடரைத்தான் அருகிலேயே வைத்துக்கொண்டுள்ளேன்" என்றார்.

பக்தருக்கு ஆச்சர்யம் தாங்க முடியவில்லை. ஒன்றுமே செய்யாத மூன்றாவது சீடரை அருகில் வைத்துக்கொண்டு துறவி என்ன செய்து கொண்டிருப்பார்? என்று சிந்தித்தபடி ``எனக்குப் புரியவில்லை ஐயா! ஏன் அப்படி?" என்று கேட்டார்.

``தெளிவு என்றால் என்ன என்று நீங்கள் முதலில் என்னிடம் ஒரு கேள்வி கேட்டீர்களே அதற்கான விளக்கம்தான் இது."

``நம் முதல் சீடர் இணையதளங்களில் இருந்து நாம் பெறக் கூடிய தகவல்களைப் போன்றவர். எந்த உதவி வேண்டுமானாலும் முதல் சீடரிடம் இருந்து உடனுக்குடன் கிடைப்பது போன்றே, இணையதளங்களில் இருந்து அனைத்து தகவல்களும் நமக்கு உடனுக்குடன் கிடைக்கும். ஆனால், சில நாள்கள் கழித்து அதே தகவலை மனிதனிடம் கேட்டால், அவனுக்குத் தெரியாது. மறந்து போயிருக்கும். மீண்டும் இணையத்தில் தேடித்தான் அதைத் தெரிந்துகொள்ள முடியும். ஏனென்றால் இணையதளத்தில் பல்வேறு மூலங்களிலிருந்தும் நாம் பெறுவது தகவல் மட்டுமே! அவ்வாறு இந்த முதல் சீடர் எனக்கு தகவல் அளிப்பவராக மட்டுமே இருக்கிறார். தகவல்கள் தேவைப்படும்போது மட்டுமே நான் இவரைப் பயன்படுத்திக் கொள்கிறேன்!.


இரண்டாவது சீடர் மனிதர்கள் நேரிடையாகப் பார்த்தும், பிறரிடமிருந்து கேட்டும், புத்தகங்களைப் படித்தும், அனுபவித்தும் உணரும் அறிவு போன்றவர். ஏதாவது ஒரு விஷயத்தை மனிதன் நேரடியாக அனுபவித்து உணர்ந்தாலோ அல்லது படித்தோ, கேட்டோ, பார்த்தோ உணர்ந்தாலோ அந்த விஷயம் அவனுக்கு அவ்வளவு சீக்கிரம் மறந்து போய் விடாது. அது அவனது அறிவாக நீண்டகாலம் நீடித்திருக்கும்.

என்னுடைய இரண்டாவது சீடர் அப்படிப்பட்டவர்தான். இவர் அறிவு போன்றவர். அதனால் நான் அவரை அவ்வப்போது பயன்படுத்திக் கொள்கின்றேன்" என்ற துறவி தொடர்ந்தார்.

``மூன்றாவது சீடர் மனிதர்களின் சுயசிந்தனை போன்றவர். மனிதனுக்கு சுயசிந்தனை மிக மிக முக்கியமானது.

சுயசிந்தனையின் விளைவு உடனே வெளியில் தெரியாது. ஆனால், சுய சிந்தனையின் காரணமாய் மனிதனுக்குக் கிடைப்பதே தெளிவாகும். தெளிவின் உச்சம் ஞானம். எனவே, மூன்றாவது சீடரை - தெளிவை என்னுடைய அருகிலேயே எப்போதும் வைத்துக்கொண்டிருக்கிறேன்.

அவருக்கு மேலும் மேலும் தெளிவூட்டிக் கொண்டு இருக்கின்றேன்" என்றார் துறவி.

பக்தர் மகிழ்வுடன், ``புரிந்தது ஐயா"என்றபடி துறவியிடமிருந்து விடைபெற்றார்.

என்‌ அன்பு வாசகர்களே,
இணையதளத்தின் பல்வேறு மூலங்களில் இருந்து நமக்கு கிடைக்கக் கூடியவை தகவல்கள் மட்டுமே! அந்தத் தகவல்கள் நம் மனதில் பெரிய அளவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. அவற்றால் அப்போதைக்கு மட்டுமே பயன்.

இணையதளங்கள் மூலமாகப் பார்ப்பதும், கேட்பதும், படிப்பதும் தகவலா? அறிவா? எனும் கேள்வி இந்த இடத்தில் இயல்பாகவே எழும். நேரடி அனுபவங்களே முழுமையான அறிவூட்டும்.

இணையதளங்களில் இருந்து நாம் கிரகிக்கக் கூடியவை அனைத்தும் அறிவு போன்ற மாயத்தோற்றத்தை உருவாக்கக் கூடிய தகவல்கள்தான்.

இதில் முக்கியமாகக் குறிப்பிடத்தக்க ஒரு அம்சம் என்னவெனில், ஒருவர் பணிபுரிவதே கணினி வழிதான் எனும்போது அவர்களது பணி இந்தத் தகவல்கள் எனும் வகையினுள் வருவதில்லை! அவர்களது வட்டம் வேறு.

தமக்குத் தேவைப்படும் பற்பல தகவல்களை பல்வேறு இணைய மூலங்களில் இருந்தும் தேடித் தெரிந்துகொள்வோரையே தகவல் தெரிந்துகொள்வோர் என்கிறோம்.

கணினிகளிலேயே பணியாற்றுவதும், கணினி வழிச் சேவைகளும் காலத்தின் கட்டாயம் என்பதால் அவற்றை நாம் திறந்த மனதுடன் ஏற்கவே வேண்டும்.

இன்றைய இளைய தலைமுறை தகவல்களைச் சேகரிக்கும் இணைய தலைமுறையாகவே வளர்ந்து வருகிறது. ``மூக்கணாங் கயிறுகள் மாற்றப்படுவது மாடுகளுக்கு ஒருபோதும் பயனளிக்காது" என்ற தோழர் ஹோசிமினின் வரிகளுக்கேற்ப,

மனிதர்களுக்கு அடிமையாக வாழ்வது மட்டுமல்ல, தொழில்நுட்பத்துக்கு அடிமையாக வாழ்ந்தாலும் நாம் அடிமைகள்தான் என்பதை மறந்துவிடக் கூடாது!

புத்தகங்களில் படித்தும், ஏதேனும் ஒன்றைப் பார்த்தும், கேட்டும் நம் அனுபவங்களில் இருந்தும் நாம் அறிந்துகொள்ளக் கூடியதாக அறிவு இருக்கின்றது.

அறிவு மனிதனுக்கு அடிப்படையான ஒன்று. அதை வளர்த்துக்கொள்ள நாம் புத்தகங்களை வாசிப்பதும், காதுகளையும், கண்களையும் கூர்மைப்படுத்திக் கொள்வதும், அனுபவங்களைத் திறந்த மனதுடன் ஏற்பதுமே மிகச் சிறந்த வழி. வாசித்து அல்லது அனுபவித்து அறிந்துகொள்வதன் மூலமாக மட்டுமே ஒருவன் அறிவாளியாகவும் புத்திசாலியாகவும் முடியும்!

அடுத்தது தெளிவு. இந்தத் தெளிவானது படிப்பதாலும், அனுபவிப்பதாலும் ஒருபோதும் வரப்போவதில்லை.

தெளிவெனும் ஊருக்கு, அறிவானது சிறந்ததொரு வழிகாட்டிப் பலகையாகவே இருக்கிறது. ஒவ்வொரு மனிதனின் சுய சிந்தனையின் விளைவாக விளைவதே தெளிவு. தெளிவின் உச்சத்தையே ஞானம் என்கின்றனர்.

மூளையைக் கொண்டு சிந்திப்பது அறிவென்றும், மனதைக் கொண்டு சிந்திப்பது தெளிவென்றும் ஞானியர் கூறுவர்.

சுயசிந்தனை மட்டுமே போதுமா? தொழில்நுட்ப அறிவே மனிதனுக்குத் தேவையில்லையா? என்றால் தொழில்நுட்பம் அவசியம் தேவை! சுயசிந்தனை எனும் உணவுக்கு ஊறுகாயாக!

எனவே, வெறும் தகவல்களை மட்டுமே அறிந்து வைத்திருக்கும் கணிப்பொறிகள், மொபைல் போன்கள் போன்ற கருவிகளுக்கு இணையாக நாம் மாறிவிடாமல், அறிவாளிகளாகவும்,

தெளிந்தவர்களாகவும் மாற வேண்டும். அதற்கு நமக்கு சிறந்த அனுபவங்கள் தேவை. சிறந்த நூல்கள் தேவை.

நம்முடைய சுய சிந்தனையே தெளிவுக்கான அடிப்படையாக அமைந்திருப்பதால், ஒவ்வொருவரும் சுய சிந்தனையின் பக்கம் நம்முடைய கவனத்தைத் திருப்புவோம்.

அனைத்துக்கும் இணையத்தையே நம்பியிராமல், கூகுளையே ஆண்டவராக மாற்றிவிடாமல், தகவல்களைத் தேவையின்போது மட்டுமே பயன்படுத்துவோம். அறிவை அடிக்கடி உபயோகிப்போம். சுய சிந்தனையை எப்போதும் கைக்கொள்வோம்! தெளிவான சுயசிந்தனை கொண்ட சமுதாயம் உருவாவதற்கு ஆரம்பப் புள்ளியாக மாறுவோம்!

வேதம் சொல்கிறது,
5 நீயோ எல்லாவற்றிலும் மனத்தெளிவுள்ளவனாயிரு, தீங்கநுபவி, சுவிசேஷகனுடைய வேலையைச் செய், உன் ஊழியத்தை நிறைவேற்று.

2 தீமோத்தேயு 4:5

எனவே எல்லாவற்றிலும், எப்போதும் மனத்தெளிவோடு இருப்போம் நமக்கு நியமிக்கப்பட்ட ஊழியத்தை நிறைவேற்றுவோம்.

நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!


355.        இறைவன் என்பவன் யார்

வீராடிகபுரத்தை பார்கவன் என்கின்ற மன்னன் திறம்பட ஆட்சி செய்து வந்தான். உலகம் முழுதும் ஆராதிக்க படுகின்ற, கடவுள் என்ற சக்தியின் மேல் சற்றும் ஈடுபாடு அற்று இருந்தான் அவன். தனது ஆளுமையை பிற தேசங்களுக்கும் பரப்பிட நினைத்த அவன், தன் படை பலத்தை கொண்டு பல நாட்டு அரசர்களை வெற்றி கண்டு அவர்தம் நாடுகளை முற்றுகையிட தொடங்கினான்.

அவன் தொடுத்திருந்த போர்கள் சற்றே ஓய்வு பெற்றிருந்த சமயம், தன்னால் முற்றுகையிடப்பட்ட ஒரு நாட்டின் வீதி வழியே வீரர்கள் சூழ தேரில் பவனி சென்று கொண்டிருந்தான். அவன் வருவதை அறியாத, பார்வையும் கேட்கும் திறனும் குறைந்த முதியவர் ஒருவர் அவர் மனைவியிடத்தில் “பார்கவன் எனும் மன்னர் நாம் நாட்டை முற்றுகை இட்டதை அறிவாயோ?” என கேட்டு கொண்டிருந்தார்.

தன் பெயரை எவரோ கூற கேட்ட மன்னர், வீரர்களை சிறிது நேரம் அமைதியாய் இருக்கும்படி கூறிவிட்டு அந்த முதியவரின் பேச்சில் தன் கவனத்தை செலுத்தினான். தனது பேச்சை தொடர்ந்த முதியவர் “பிற நாட்டை முற்றுகையிட துடிக்கும் அம்மன்னர் எத்தனை கொடூர குணம் படைத்தவராக இருக்க வேண்டும். இவர் போன்ற அரக்கர்களை அழிக்க இறைவன் நிச்சயம் வருவார்” என சொல்லி முடித்தார்.

அவர் சொன்னதை கேட்ட பார்க்கவ மன்னனின் மனதில் சட்டென்று கோவம் எழுந்த போதும், அதை தாண்டி பிறிதொரு உணர்வு மேலோங்குவதை உணர்ந்தான். அவ்விடம் விட்டு நகர்ந்து தனது அரண்மனை சென்று சேர்ந்தான். அன்றிரவு அவனால் உறங்க முடியவில்லை. தன்னை அரக்கனென்று சொன்ன அந்த முதியவர், இறைவன் வருவான் என்றாரே. அப்படியெனில் இறைவன் என்பவர் யார்? என்ற கேள்வி அவனுள் எழுந்தது. உறக்கமற்ற அந்த இரவை கடினப்பட்டு கழித்தான் அவன்.

பொழுது புலர்ந்ததும் தனது அமைச்சர்களை அழைத்து வர சொன்னான். சற்று நேரத்திற்கெல்லாம் அங்கு வந்த சேர்ந்த அவர்களை கண்டு “இறைவன் என்பவன் யார்?” என்ற கேள்வியை கேட்டான் அவன். அமைச்சர்கள் அனைவரும் ஒருவரின் முகத்தை மற்றவர் பார்த்த வண்ணம் இருந்தனர். “அழித்தல் தொழிலை தனதாக்கி கொண்டவர் தான் இறைவன்” என்றார் அமைச்சர் ஒருவர். “காத்தல் தொழிலை செய்பவரே இறைவன்” என்றார் மற்றொரு அமைச்சர்.

மன்னனின் மனம் எவரின் விளக்கத்தையும் ஏற்கவில்லை. அனைவரையும் கலைந்து செல்ல சொன்னவன் தனது அறையை நோக்கி நடந்தான். அப்போது அங்கிருந்த காவலாளி ஒருவன் வனத்தின் நடுவே கடும் தவம் புரிந்து கொண்டிருக்கும் முனிவரை பற்றி சொல்ல, தான் ஐய்யத்தை போக்கிட அவரால் முடியும் என்று எண்ணிய மன்னன் அவரை சந்திக்கும் ஏற்பாடுகளை செய்திட சொன்னான்.

அடுத்த நாள் காலையே மன்னர் தன் காவலர்கள் சூழ வனத்தை நோக்கி பயணிக்க துவங்கினான். வனத்தின் மைய பகுதியை அவர்கள் அடைந்த போது அங்கே மரமொன்றின் அடியில் தவத்தில் இருந்த முனிவரை கண்டான் மன்னன். தன் காவலாளிகளை சற்று தொலைவிலேயே நிற்க சொல்லி விட்டு அவரை நோக்கி நடந்தான். மன்னர் தன்னை நெருங்குவதை தம் ஞானத்தால் உணர்ந்த முனிவர் தமது கண்களை திறந்து மன்னரை நோக்கினார்.

“முனிவரே! இந்த நாட்டை ஆளும் எனக்கு மனதில் நிம்மதி இல்லை. என் மனதில் எழுந்த கேள்விக்கு தங்களிடம் பதிலை எதிர் பார்த்து வந்திருக்கிறேன்” என்றார். அவர் சொன்னதை கேட்டு புன்னகைத்த முனிவர் கேள்வியை கேள் என்பது போல் செய்கை காட்ட மன்னரும் இறைவன் என்பவன் யார் என்ற தனது கேள்வியை கேட்டான்.

சில மணித்துளிகள் தமது கண்களை மூடிய முனிவர், பின் மன்னரிடம் “மன்னா! உனது கேள்விக்கு யாம் பதில் உரைக்க வேண்டுமெனில் நீ உன்னிடம் இப்போது இருப்பதில் உன் தேவை போக மற்றவை அனைத்தையும் பிறரிடம் கொடுத்து விட்டு வர வேண்டும். நினைவில் கொள். நீ கொடுக்கும் பொருள்களை பெறுகின்றவனுக்கு அதற்கான தேவை இருக்க வேண்டும்” என்றார்.

முனிவர் சொன்னதை கேட்டதும் சற்றே அதிர்ந்த மன்னர் தமது கேள்விக்கு விடை அறியும் பொருட்டு அவர் சொன்னதை செய்வதென முடிவு செய்தான். முனிவரிடம் விடை பெற்றவன் தனது வீரர்களை அரண்மனைக்கு திருப்பி செல்லும்படி கூறிவிட்டு அவனது தேரோட்டியை கண்டு தனது தேரை கடத்தி செல்ல சொன்னான். அவனிடம் அப்போதைக்கு இருந்தவைகள் என்னென்ன என்பதை மனதுள் எண்ணி பார்த்து கொண்டான்.

சிறிது தூரம் அவன் பயணித்த பின் ஓரிடத்தில் ஒரு சிறிய பாலகன் அழுது கொண்டிருப்பதை கண்டான். தேரை நிறுத்திவிட்டு அவனின் அருகில் சென்ற மன்னன் அவன் அழுவதற்கான காரணத்தை வினவினான். தன்னிடம் அக்கேள்வியை கேட்பவன் மன்னன் என்பதை அறியாத சிறுவன் “என் தந்தைக்கு உடல் நலமில்லை. அதனால் அவரால் வேலைக்கு செல்ல இயலவில்லை. அதன் காரணத்தால் என் வீட்டில் உள்ளவர் எவரும் 2 நாட்களாய் உணவேதும் உண்ணவில்லை” என்றான்.

அதை கேட்டதும் கவலை கொண்ட மன்னன் தான் அணிந்திருந்த நகைகளை கழட்டி அந்த சிறுவனிடத்தில் கொடுத்து “பாலகனே! இதை பெற்று கொள். உன் குடும்பத்திற்கு இது உதவியாய் இருக்கும்” என்றார். அவர் கொடுத்ததை பெற்று கொண்ட அச்சிறுவன் அழுவதை நிறுத்திவிட்டு மன்னரை நோக்கி “தாங்கள் இறைவனை போன்றவர்!” என்று சொல்லிவிட்டு மகிழ்ச்சியுடன் அவ்விடம் விட்டு நகர்ந்தான்.

தன்னை இறைவன் என்று சொன்ன அந்த சிறுவனின் வார்த்தைகள் மன்னருக்கு வியப்பை அளித்தது. சற்றே மனது தெளிந்தவனாய் தனது தேரை தொடர்ந்து கடத்திட சொன்னான். சற்று தொலைவில் ஒரு முதியவர் தட்டு தடுமாறி நடப்பதை கண்ட மன்னன் மீண்டும் தனது தேரை நிறுத்திவிட்டு அவர் அருகில் சென்றான். “முதியவரே! தாங்கள் ஏன் இப்படி தனியாக கடினப்பட்டு நடக்கிறீர்கள். தங்களிடம் வாகனமோ உடன் வர துணையோ இல்லையா?” என வினவினான்.

“என் குதிரை நோய் வாய்ப்பட்டு இறந்து விட்டது. வேறு குதிரை வாங்கிட என்னிடம் பொருள் இல்லை. என் மனைவிக்கு பார்வை இல்லாத காரணத்தால் நான் தனியாக வந்தேன்” என்று தன் நிலையை சொன்னார் அந்த முதியவர். ஒரு கணம் சிந்தித்த மன்னன் தனக்கு நடக்கும் வல்லமை இருக்கிறது தேரின் அவசியம் இருப்பது இந்த முதியவர்கே என்பதை உணர்ந்தான். தேரோட்டியிடம் அம்முதியவரை அவரது வீட்டிற்கு அழைத்து செல்லும் படி சொன்னான்.

இதை கேட்ட முதியவர் மன்னரை நோக்கி தன் கரம் கூப்பி “என் நிலையை உணர்ந்து உதவிய தாங்கள் கடவுளாக தெரிகின்றீர்” என்றார். மன்னரின் மனது முற்றிலும் தெளிவானது. முனிவர் இருந்த திசை நோக்கி நடக்க துவங்கினார். இறுதியாய் அவர் முனிவரின் இடத்தை அடைந்த போது அவர் முகத்தில் இருந்த தெளிவை கண்ட முனிவர் “மன்னா! உமது கேள்விக்கு பதில் கூறட்டுமா?” என்று கேட்க, மன்னர் தெளிவான குரலில் உரைத்த வார்த்தைகள்.

“முனிவரே! எம் கேள்விக்கான பதிலை அறிந்து கொண்டோம். தன் தேவைக்கு அதீகமானதை மற்றவரிடம் கொடுத்து வாழும் ஒவ்வொரு மனிதனும் இறைவனே!”

என் அன்பு வாசகர்களே,
இறைவனாய் வாழ்வதும் அரக்கனாய் வாழ்வதும் நம் கையில் தான் இருக்கிறது என்பதே இக்கதையின் கருத்து.

இவ்வுலகில் வாழும் ஏழைகளை நடமாடும் கோயில்கள் எனலாம். ஏனெனில் நாம் அவர்களுக்கு உதவி செய்யும்போது அவர்களின் கண்களுக்கு நாம் இறைவனாக தெரிகிறோம். அது மாத்திரமல்ல அவர்கள் மனதார வாழ்த்தும்போது அந்த வாழ்த்து பலிக்கும்.

 மேலும் அண்டை வீட்டுக்காரர் பசியாய் இருக்கும் போது அல்லது அவர்கள் ஏதேனும் தேவையோடு இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு உதவாது நாம் ஆலயத்திற்கு சென்று இடும் காணிக்கை எந்த வகையிலும் நம் தேவனால் ஏற்றுக்கொள்ளப்படாது. 

வேதாகமத்தில் சாலெமோன் ஞானி இவ்வாறு கூறுகிறார்

21 உன் சத்துரு பசியாயிருந்தால், அவனுக்குப் புசிக்க ஆகாரம்கொடு: அவன் தாகமாயிருந்தால், குடிக்கத் தண்ணீர்கொடு.

நீதிமொழிகள் 25:21

அதாவது யார் யார்‌ தேவைகளோடு இருக்கிறார்களோ அது உன் சத்துருவாய் இருந்தாலும் அவன் தேவையை பூர்த்தி செய்யும் பட்சத்தில் நமது மனதிற்கும் ஆறுதல் அந்த உதவியை பெறுகிறவர்களுக்கு நம்மை உயர்வாய் காண்பிக்கும். 

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடம், நித்திய ஜீவனை அடைய என்ன செய்ய வேண்டும் என்று கேட்ட வாலிபனிடம் "உனக்கு இருப்பதை விற்று தரித்திரருக்கு கொடு" என்று மறுமொழி கூறினார்.  இந்த கூற்றின்படி ஐசுவரியவான்கள் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க முடியாது ஆனால் அதுவே நாம் தேவனுடைய ஆசீர்வாதத்தால் ஐசுவனியவான்களாகும் போது மனதார மற்றவர்களுக்கு உதவும்போது நிச்சயம் நம்மால் பரலோக ராஜ்ஜியத்தை சுதந்தரிக்க முடியும். 

எனவே மேற்கூறிய வசனத்தின் படி சிநேகிதருக்கும், மற்றவர்களுக்கும், சத்துருவுக்கும் உதவுவோம் மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாய் வாழ்வோம், தேவ ராஜ்யத்தை சுதந்தரிப்போம்.

நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!



356    பாட்டுப் பாடிய வெட்டுக்கிளி!

ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு என்பது நாம் நன்கு அறிந்ததே. செய்ய வேண்டிய காரியத்தை அதினதின் காலத்தில் நேர்த்தியாக செய்ய வேண்டும். தவறவிட்ட காலத்தை (Time) ஒருபோதும் திரும்ப பெற இயலாது.

"காலம் பொன் போன்றது, கடைமை கண் போன்றது" என்ற பழமொழி நாம் யாவரும் நன்கு அறிந்ததே. ஆனால் பொன்னான காலத்தை வீணாக்கிவிட்டால் அதன் விளைவு நாம் சற்றும் எதிர்பாராததாய் இருக்கும். அதன் பின்னர் வருந்தி எந்த பிரயோஜனமும் இல்லை.

நமக்கு கிடைத்த பொன்னான நேரத்தை வீணடித்தால் என்ன பின் விளைவு வரும் என்பதை இக்கதையின் மூலம் காண்போம்.

கோடை காலம். வெயில் நன்றாகக் கொளுத்திக் கொண்டிருந்தது. வெட்டுக்கிளி ஒன்று மரத்தின் அடிப்பாகத்தில் உள்ள வேரில் அமர்ந்து பாட்டுப் பாடிக் கொண்டிருந்தது.

அந்த வழியே எறும்புகள் கூட்டம் சாரி சாரியாகச் சென்று கொண்டிருந்தது.

அவை தமக்குத் தேவையான உணவைத் தமது வாயில் கவ்வியவாறு சென்று கொண்டிருந்தன. சுமையோடு செல்வதால் வியர்த்துப் போய் மிகவும் களைப்பாகக் காணப்பட்டன. இருந்தாலும் மன உறுதியோடு தங்கள் உணவைச் சுமந்து கொண்டு சென்றன.

வெட்டுக்கிளி அவர்களைப் பார்த்து, ஏளனம் செய்தது.

“முட்டாள்களே, உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கத் தெரியவில்லையே…’ என்று கூறிவிட்டுத் தொடர்ந்து பாடிக் கொண்டிருந்தது.

எறும்புகளோ, வெட்டுக்கிளியின் பேச்சை சட்டை செய்யவில்லை. தொடர்ந்து தங்கள் வழியே, தங்களது புற்றை நோக்கிச் சென்று கொண்டிருந்தன.

கோடைகாலம் முடிந்து மாரிக் காலம் வந்தது. ஊர் முழுவதும் அடைமழை பிடித்துக் கொண்டது. மக்களோ, உயிரினங்களோ வெளியே தலைகாட்ட முடியவில்லை. அன்றாடம் பிழைப்பு நடத்துபவர்களும் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டனர்

கோடைகாலத்தில் பாட்டுப் பாடி பொழுதைப் போக்கிக் கொண்டிருந்த வெட்டுக்கிளி, சாப்பிட ஒன்றும் கிடைக்காமல் பட்டினியால் இறந்து போனது. எறும்புகளோ, தாம் கோடை காலத்தில் சேகரித்து வைத்திருந்த உணவுப் பொருள்களைத் தின்று ஆனந்தமாக இருந்தன.

காலம் பொன் போன்றது. அதை வீணாகக் கழிப்பவர்கள் ஒருநாள் வருந்த நேரிடும் என்பதற்கு வெட்டுக்கிளியே உதாரணமாகப் போனது!


என் அன்பு வாசகரே,
இவ்வுலகில் உள்ள எல்லாவற்றிற்கும் ஒவ்வொரு காலமும் நேரமும் உண்டு. அந்தந்த நேரத்தில் அந்தந்த காரியத்தை செய்ய வேண்டும். ஒருபோதும் நமக்கு கிடைத்த நேரத்தை வீணாக செலவிடாமல் காலத்தை பிரயோசனம் செய்து தேவ ஆசீர்வாதங்களை பெற்றுக் கொள்வோம்.

பிரசங்கி 3:1-5 வசனங்கள் இதை தான் கூறுகிறது.

எனவே நாமும் நமக்கு கிடைத்த நேரத்தில் நம்மால் இயன்ற வரை அநேகரை நல்வழிப்படுத்த முயற்சி செய்வோம் தேவன் ஏற்ற நேரத்தில் அவர்களை நல்வழிப்படுத்துவர்.

11 அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார், உலகத்தையும் அவர்கள் உள்ளத்திலே வைத்திருக்கிறார், ஆதலால் தேவன் ஆதிமுதல் அந்தம்மட்டும், செய்துவரும் கிரியையை மனுஷன் கண்டுபிடியான்.
 [பிரசங்கி 3]

நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!!



 

357           அவசரம்! ஆபத்து!!

கோஸி நதிக்கரையிலிருந்த காடு ஒன்றில் விலங்குகள் எப்போதும் சண்டையிட்டுக் கொண்டே இருந்தன. ஒரு நாள் முயல், மான், கரடி மூன்றும் உரையாடிக் கொண்டிருந்தன.

“நம்மிடையே நாளுக்கு நாள் சண்டை வலுத்துக் கொணடே செல்கிறதே. இதைத் தீர்க்க ஓர் அரசன் இருந்தா நல்லா இருக்குமே!’ என்றது முயல். இதைக் கேட்ட மான் சொன்னது, “ஆமாமா அப்போதான் நம்ம சண்டை முடிவுக்கு வரும்.’

“ஆனா யார் காட்டுக்கு ராஜா ஆவது?’ – இது கரடி.

இதை வைத்தே ஒரு ரகளை ஆரம்பமானது பாருங்கள்.

“நான்தான் இந்தக் காட்டுக்கு ராஜா’ என்று உரக்கக் கூறியது முயல்.

கரடி அதைவிட குரலை உயர்த்திச் சொன்னது, “ஏய்… நீ இல்ல; நான்தான் மன்னன் ஆவேன்!’

இதைக் கேட்ட மான் சும்மா இருக்குமா? “இல்லவே இல்லை, நான்தான் அரசன்!’ என்றது.

சிறிது நாட்களுக்கு முன்தான் ஏதோ ஒரு காட்டிலிருந்து நோய்வாய்ப்பட்டிருந்த ஒரு கிழட்டுச் சிங்கம் இக்காட்டிற்கு வந்திருந்தது. அதன் தூக்கம் இந்த மூவரின் சண்டையால் கலைந்தது.

“என்ன ஒரே சத்தம்!’ என்றவாறே கரடி, மான், முயல் இருந்த இடத்திற்கு சிங்கம் வந்தது.

சிங்கத்தைப் பார்த்த முயல் சொன்னது.

“இந்த சிங்கத்தையே நம்ம ராஜா ஆக்கிட்டா என்ன?’

மான், “நீ சரியா சொன்னே…’ என்றது.

விலங்குகள் அனைத்தும் கூடின. “தங்களுக்குள் அடிக்கடி நிகழும் சண்டைப் பிரச்னையை சிங்கத்திடம் கூறி… நீங்கதான் எங்க ராஜாவா இருந்து ஆட்சி செய்யணும்..’ என வேண்டுகோள் விடுத்தன.

சிங்கத்தின் மகிழ்ச்சிக்கு கேட்கவா வேண்டும்!

“ஆஹா! என்னே அதிர்ஷ்டம். இப்படிகூட வீடு தேடிவருமா? உம்ம்ம்… என் கெட்ட நேரம் முடிஞ்சிடுச்சின்னு நினைக்கிறேன்…’ என மனதிற்குள் சொல்லிக் கொண்டது.

சிறிது நேரம் யோசிப்பது போன்று பாவனை செய்தது.

“சரி! அரசனாகிறதில எனக்கொன்னும் ஆட்சேபம் இல்லை. ஆனா விஷயம் (உங்களுக்குள் நடக்கும் சண்டை) ரொம்ப கடினமா இருந்தா மட்டும்தான் நான் மரண தண்டனை கொடுப்பேன். அதுவும் நல்லா விசாரிச்சுதான் முடிவு எடுப்பேன்’ என்றது சிங்கம்.

விலங்குகளுக்கோ ஒரே சந்தோஷம். “நமக்கு அரசன் வந்துட்டாரே…’ என்று குதூகலமிட்டன.

முயல், “கொடுமைன்னா எங்களுக்கும் பயம்தான். ஆனா மகாராஜா, குற்றம் செஞ்சா கண்டிப்பா நியாயமா தண்டனை கிடைக்கணும்…’

இதைக் கேட்ட சிங்கம் மனதுக்குள் எண்ணியது, “ஆமாம்… ஆமாம்… அடிக்கடி நானும் மரண தண்டனை கொடுக்க வேண்டிய அவசியம் வரும்தான்..’

அடுத்த நாளே வழக்கம் போல ஒரு முயலும் கெüதாரியும் ஒரு பொந்திற்காக சண்டையிட்டுக் கொண்டன.

முயல்: இந்த வீடு என்னோடது.

கெüதாரி: இல்லே என்னோடது. நான்தான் முதல்ல பார்த்தேன்.

முயல்: நீ வெறுமே பாக்கத்தான் செஞ்சே… இது என் அப்பா உருவாக்கினாரு..

கெüதாரி: ஆனா அவர் விட்டுட்டுப் போயிட்டாரே.. இப்ப இதில நான்தானே இருக்கேன்?’

இறுதியில் இரண்டும் சிங்க ராஜாவிடம் செல்ல முடிவெடுத்தன.

கெüதாரி சிங்கத்திடம் கூறியது.

“மன்னர் மன்னா! எங்களுக்கு நியாயம் வழங்குங்கள்…’

“ஏன்… என்னாச்சு?’ என்று கேட்டது சிங்கம்.

முயலும் கெüதாரியும் கூண்டுப் பிரச்னையைப் பற்றி சிங்கத்திடம் கூறின.

“இருங்க எனக்கு வயசாயிடுச்சி இல்லையா? நீங்க இரண்டு பேரும் என்ன சொன்னீங்கன்னு சரியா கேட்கலை. என் பக்கத்துல வாங்க. இங்க வந்து சொல்லுங்க. என்ன பிரச்னைன்னு…’ என்றது மிகவும் சாதுர்யமாக.

சிங்கத்தின் தந்திரம் அறியாத முயலும் கெüதாரியும் அதனருகில் சென்றன. உடனே இரண்டையும் அமுக்கிப் பிடித்துக் கொண்டது சிங்கம்.

“காப்பாத்துங்க… காப்பாத்துங்க…’ இருவரின் குரல் கேட்டு மற்ற விலங்குகள் அங்கு ஓடிவந்தன. சிங்கம் முயலையும் கெüதாரியையும் தன் இரையாக்கிக் கொண்டது. அதை நேரில் கண்ட மிருகங்கள் தமக்குள் பேசிக் கொண்டன…

“தன் கையே தனக்குதவின்னு நம்ம பிரச்னையை நாமே தீர்த்துக்கிட்டிருந்தா நம்மோட இரண்டு தோழர்களை நாம இழந்திருக்க மாட்டோம். அவசரப்பட்டுட்டோமே….’ என்று தம்மைத்தாமே நொந்து கொண்டன.


என் அன்பு வாசகர்களே,
வேதத்தில் இஸ்ரவேல் ஜனங்கள் தங்களை நியாயந்தீர்க்க நியாதிபதிகள் இருந்த காலகட்டத்தில் அவர்களோ தங்களை நியாயந்தீர்க்க ஒரு ராஜா வேண்டும் என்று மிகவும் தேவனை வருந்தி கேட்டுக்கொண்டபடியால் தேவன் அவர்களுக்கு சவுலை ராஜாவாய் அபிஷேகம் பண்ணி இஸ்ரவேலரை நியாயம் விசாரிக்க ஏற்படுத்தினார்.

ஆனாலும் சவுலால் அநேக நாட்கள் ராஜ்யபாரம் பண்ண முடியவில்லை. அல்லாமலும் சவுலுடைய இறப்பு யாரும் எதிர்பாராத மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருந்தது நாம் அறிந்ததே.

எனவே எல்லா காரியத்திலும் நிதானமாய் யோசித்து நன்றாய் ஆராய்ந்து செய்வோம் மேலான ஆசீர்வாதத்தை பெற்றுக் கொள்வோம்.

31 நம்மை நாமே நிதானித்து அறிந்தால் நாம் நியாயந்தீர்க்கப்படோம்.

1 கொரிந்தியர் 11:31


நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!!!!!


358       நம்முடையது நமக்கு மட்டும்தான்..

புருசன் செத்துட்டான்
பொட்டப்புள்ளையை காப்பாற்ற 
புளியமரத்தடியில் நைட்டு டிபன்கடை போட்டாள் இளவயது ப்ரியா.

கடைபோட்ட அன்னிக்கே ஒரு போலீஸ்காரன் வந்தான் பர்மிசன் யார்கிட்ட கேட்ட மிட்நைட் ஆச்சு கடையைச்சாத்துன்னு எதையாவது சொல்லி தினமும் ஓசியில வயிறுமுட்ட தின்பான்.

பணம் குடுத்து சாப்பிடுபவர்கள் இன்னும் ஒரு தோசை எக்ஸ்ட்ரா சாப்பிடமாட்டார்களா என ஏக்கமாயிருக்கும். அவர்களுக்கு பார்த்து பார்த்து பரிமாறுவாள் ப்ரியா.

ஆனால் இந்த ஓசிபோலீஸ் ஒருதோசை
குறைவாக சாப்பிடமாட்டானா என நினைத்தால்  அவன் தான் ஆற அமர உட்கார்ந்து நிறைய தின்னுட்டு 
பார்சலும் வாங்கிட்டு போவான்.

என்ன செய்ய? புளியமரத்தடியில் கடைபோட்டால் இப்படித்தான் வருவார்கள்... நம்ம தலைவிதி அப்படின்னு போலீசுக்கு வேண்டாவெறுப்பாக பரிமாறுவாள்.

என்ன சுவையா சமைத்தாலும் டவுனுக்குள் நாலுகடை சாத்தினபிறகுதான் நாலுசனம் வரும் ப்ரியாவின் கடைக்கு... நாலு வருசம் ஆகியும் நயாபைசா மிச்சம் பண்ணமுடியலை.

தனது கைப்பக்குவத்தின் மீது நம்பிக்கைவைத்து வாரக்கந்துக்கு பணம் வாங்கி டவுனுக்குள் கடையை பிடித்தாள்.

ஒரே வாரத்தில் ப்ரியாவுக்கு நம்பிக்கை வந்திடுச்சு அப்பாடா இனி ஓரளவுக்கு தப்பிச்சிடலாம்ப்பா கடை வாடகை, கந்துவட்டி போக நாலுகாசை கண்ணுல பார்த்திடலாம்னு நினைச்சநேரம் மறுபடியும் அதே ஓசி போலீஸ் உள்ளே வர்றான்.

"வாடி வா, இன்னைக்கு உன்னை நாலுவார்த்தை நல்லா கேட்கனும். இனி உனக்கு நான் பயப்படத்தேவையில்லை இன்னிக்கு சாப்பிட்டதுக்கு  இப்பவே காசைக்குடுடான்னு" சத்தமா கேட்கனும்னு நினைச்சவேளையில்.

இந்தாம்மா ப்ரியா இதுல ஒரு லட்ச ரூபாய் இருக்கு, நாலு வருசம் நான் உன் புளியமரக்கடையில் சாப்பிட்டதுக்கான பில்.

உன்புருசன் என்னோட படிச்சவன்தான்,
புருசன் இல்லாம அந்த நைட்டுநேரம்
 நீ அந்த இடத்தில வியாபாரம் பண்றது எவ்வளவு ரிஸ்க்னு தெரிஞ்சதனால உன்னோட பாதுகாப்புக்காகத்தான் நான் தினமும் அங்கே வந்தேன். இனிமே என்னோட உதவி உனக்கு தேவப்படாது. நான் கொடுக்கும் இந்தப் பணம் தான்
 புளியமரத்தடிக்கடையின் லாப பணம்.
 வச்சிக்கோ என கையில் கொடுத்தான் அந்த போலீஸ்காரன். 
ப்ரியாவுக்கு ஒரு நிமிடம் என்னசொல்வதென்றே தெரியவில்லை,
கடைசியாகச்சொன்னாள்...

வாங்க  சாப்பிடுங்க! என்று மனதார....

என் அன்பு வாசகரே,

வாழ்க்கையில் நமக்கு ஏதாகிலும் ஒரு காரியம் மட்டும் எப்பொழுதும் இடையுறாக இருந்தால் அது நம் வாழ்க்கைக்கு மிகுந்த நன்மையைக் கொண்டு வரும் என்பதே இக்கதையின் கருத்து.

வாழ்க்கையில் ஏதாகிலும் ஒரு காரியம் (பிரச்சனை), மிகுந்த பாடுபடுத்துகிறதா?? கவலை வேண்டாம் அந்த காரியத்தைக்கொண்டே நீங்கள் எதிர்ப்பார்த்திராத ஆசீர்வாதங்களை தேவன் ஏற்ப்ப்டுத்தி இருக்கிறார். அதை ஏற்ற நேரத்தில் தருவார். அப்படி தருகிற வேளையில் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள். 

எஸ்தரின் சரித்திரத்தில் மொர்தேகாய்க்கு ஆமான் மிகப்பெரிய பிரச்சனையாக காணப்பட்டான் ஆனால் பிற்காலத்தில் அந்த ஆமான் மூலமாக மொர்தேகாய் சிறிது கூட எதிர்ப்பார்த்திராத மிகவும் உயரிய பதவியை அடைந்தான். 

ஆம் அன்பானவர்களே,
இன்று முதல் நமக்கு இருக்கிற பிரச்சனையை குறித்து சிந்திக்காமல் நமக்காக ஆயத்தமாயிருக்கிற ஆசீர்வாதங்களை குறித்து சிந்தியுங்கள் தேவன் தாமே உங்களையும் உங்கள் குடும்பங்களையும் இன்னும் அதிகமதிகமாய் வர்த்திக்கச்செய்வாராக.

நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!


359.                அழுகுரல்


மேற்குத்தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் உள்ள ஒரு கிராமம்... தென்னந்தோப்புகளும், பாக்கு தோட்டங்களும், ரப்பர் தோட்டங்களும் நிறைந்தபகுதி அது! நிலத்தை ஒட்டிய பகுதியில் வீடுகட்டி ஒரு சிறிய குடும்பம் வாழ்ந்துகொண்டு இருந்தது!

நடுத்தர வயதை ஒட்டிய ஒரு கணவன் மனைவி, அவர்களுக்கு பத்து வயதில் ஒரு பெண் குழந்தை!
ஒரு நாள் அந்த வீட்டை சேர்ந்த பெண் தன் வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு, மாடுகளுக்கு புல் அறுப்பதற்காக
தென்னந்தோப்புக்கு செல்கிறாள்! அவள் புல் அறுத்துக்கொண்டு இருக்கும்போது ஒரு குழந்தையின் அழுகுரல் கொஞ்சம் கொஞ்சமாக கேட்கிறது!


அவள் பதட்டத்துடன் எங்கிருந்து வருகிறது என்று தேட கொஞ்ச நேரத்தில் அந்த குழந்தையின் அழுகுரல் நின்று விடுகிறது! திரும்பவும் மீண்டும் ஒரு முறை
அதே அழுகுரல் கேட்கிறது! பயத்துடன் அந்த அழுகுரல் வரும் திசையை நோக்கி நடக்கிறாள்! ஒரு தென்னை மரத்தில் இருந்து அந்த அழுகுரல் வருவதை கவனிக்கிறாள்!
தென்னை மரத்தில் ஏதாவது குழந்தை இருக்கிறதா என்று மேலே பார்த்தபடி தேடுகிறாள்! எந்த குழந்தையும் அவள் கண்ணுக்கு தெரியவில்லை!

ஒரு நாளைக்கு நாலைந்து முறையாவது அந்த அழுகுரல்
கேட்டுக்கொண்டே இருக்கும்! பயந்து போய் தன்னுடைய
கணவனுக்கு சொல்கிறாள்! அவன் முதலில் ஏதாவது
உன்னுடைய பிரம்மையாக இருக்கும் என்று பெரிதாக எடுத்துக்கொள்ளாமல்இருக்கிறான்! அன்று இரவு எல்லோரும் சாப்பிட்டு படுக்கும்போது, இரவு பத்து மணிக்கு மேல் மீண்டும் ஒரு முறை அந்த குழந்தையின் அழுகுரல்
கேட்கிறது!

அவன் இப்போது தான் மனைவி சொன்னதை நம்புகிறான்!
கையில் பெரிய டார்ச் லைட்டை எடுத்துக்கொண்டு அந்த தென்னந்தோப்புக்குள் நுழைகிறான்! அவனுடைய மனைவி வேண்டாம் என்று மறுக்கிறாள்! ஆனாலும் அவன் தைரியமானவன் என்பதாலும் அதே கிராமத்தில் சிறுவயதில் இருந்து வாழ்ந்து பழக்கப்பட்டவன் என்பதாலும் தைரிய மாக தோப்புக்குள் செல்கிறான்!

அவளும் கணவனுக்கு ஏதாவது ஆகிடுமோ என்று பயந்து
பின்னாலேயே போகிறாள்! அவளுக்கு கேட்ட அதே அழு குரல் அதே தென்னை மரத்திலிருந்து கேட்கிறது! அவன் கீழிருந்தபடி உயரமான அந்த தென்னை மரத்தில் டார்ச் அடித்து பார்க்கிறான்! அந்த மரத்தில் இருந்து
ஏதோ ஒரு பறவை மட்டுமே பறந்து செல்கிறது! அருகில் வரும் வரை கேட்டுக் கொண்டிருந்த அந்தஅழுகை குரல் இப்போது கேட்க வில்லை!

போலாம் வாங்க என்று மனைவி அழைத்ததால் இருவரும் வீடு திரும்புகிறார் கள்! அடுத்த நாள் அவளுடைய அண்ணனுக்கு இந்த தகவலை சொல்கிறாள்!
மீண்டும் அழுகுரல் வந்தால் எனக்கு போன் செய்யுங்கள்
நான் ஆட்களோடு வந்து பார்க்கிறேன் என்று சொல்கிறான்!
அவள் அந்த அழுகுரலுக்கு பயந்து அந்த தோப்பின் பக்கமே போகாமல் இருக்கிறாள்! அடுத்த நாள் இரவு எல்லோரும் சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் போது எட்டு மணிக்கெல்லாம் அந்த அழுகை குரல் கேட்கிறது!

அவளும் அண்ணனுக்கு போன் செய்கிறாள்!அவளுடைய அண்ணன் நாலைந்து ஆட்களை அழைத்துக்கொண்டு வருகிறான்! அங்கே இருக்கும் சில மரக் கட்டை களில் துணியை இறுக்கமாக சுற்றிக்கொண்டு அவற்றின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி பற்றவைத்துக் கொண்டு அந்த தென்னந்தோப்பிற்கு கிளம்புகிறார்கள்!

வீட்டில் இருக்கும்போது குறைவாக கேட்கின்ற அந்த
அழுகை சத்தம் அருகேசெல்லச் செல்ல அதிகமாககேட்கிறது!
பின் கொஞ்ச நேரத்திற்கெல் லாம் முழுவதும் நின்றுவிடுகிறது! அந்த குறிப்பிட்ட மரத்தின்
அருகில் சென்று தீப்பந்தத்தை காட்டி மேலே சுற்றி சுற்றி பார்க்கிறார்கள்! எதுவுமே தெரியவில்லை! அழுகுரலும் நின்றுவிட்டது! தீயை பார்த்தால் எந்த பேயாக
இருந்தாலும் பயந்துவிடும் என்று கூட்டத்தில் இருந்த நாலு பேரில் ஒருவன் உறுதியாக கூறுகிறான்!

அவன் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே மீண்டும் அழுகுரல் சத்தமாக கேட்க ஆரம்பிக்கிறது! எல்லோருமே பயந்துவிடுகிறார்கள்!அந்த இடத்தை விட்டு உடனே ஓடிவந்து விடுகிறார்கள்! அடுத்த நாள் ஒரு பெரிய சாமியாரை அழைத்துவந்து அந்த தென்னை மரத்தை சுற்றி
மஞ்சள் கயிறால் கட்டு கட்டி, ஒரு தென்னங்கன்றுக்கு
பாலாபிஷேகம் செய்து நிறைய சடங்குகள் எல்லாம்
செய்து, பூஜைகள் எல்லாம் செய்துவிட்டு, இனிமேல் நிச்சயம் அந்த அழுகுரல் கேட்காது என்றுசொல்லி விட்டு போகிறார்!

அவர்களும் நிம்மதியாக தூங்குகிறார்கள்!
ஆனால் அடுத்த நாள் விடியற் காலையிலேயே அந்த அழு குரல்கேட்க ஆரம்பிக்கிறது! இந்த முறை தொடர்ந்து
கேட்டுக்கொண்டே இருக்கிறது! இடைவெளி இல்லாமல்
திரும்ப திரும்ப கேட்கிறது! தோப்பின் பக்கம் யாரோ
ஆள் நடமாட்டம் இருப்பது போல் அவர்களுக்கு தெரிய
பயமாக இருந்தாலும் யாரென்று பார்ப்பதற்காக,
கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு போகிறார்கள்.

அருகில் போகப்போக மரத்தின் மேல் ஏதோ ஒரு உருவம்
இருப்பது போல் தெரிகிறது! தென்னை ஓலைகளும் மட்டையும் அசைகின்ற சத்தம் கேட்கிறது! திடீரென்று மரத்திலிருந்து ஒரு உருவம் சரசரவென இறங்கிகீழே வருகிறது! இவர்கள் நடுங்கிப்போய் பார்க்க ....
மரத்திலிருந்து இறங்கிய மரமேறி, 

ஒண்ணும் இல்லம்மா நாலு நாள் முன்னாடி தேங்காய் பறிக்க ஏறும்போது போனை மேலயே விட்டுட்டு வந்துட்டிருக் கேன், எங்கடா காணோம் காணோம்னு நாலு நாளா தேடிட்டு இருந்தேன், ஒவ்வொரு தோப்பா போயி ஊரெல்லாம் போன் பண்ணி போன் பண்ணி தேடிட்டு இருந்தேன்! கடைசியில உங்க தோப்புலயே இருந்திருக்கு! என்று அவன் சந்தோஷப்பட அதற்குள் மீண்டும் அந்த அழுகுரல் ரிங்டோன் ஒலிக்க அதை அட்டென்டு செய்து போனு கிடைச்சிடுச்சிம்மா,
கடைசியில நம்ம துர்கா அக்கா தோட்டத்துல தான் இருந்திருக்கு, போனை பார்த்த பின்னாடி தான் எனக்கு உயிரே வந்திருக்கு, என்று அவன் பேசியபடி நடந்துசெல்ல,
பாவம் இவர்களுக்கும் அப்போது தான் உயிரே வந்தது..!!!

என் அன்பு வாசகர்களே,
உங்களுக்கும் இப்போது தான் நிம்மதி வந்திருக்கும் என்று நம்புகிறேன். நல்ல காரியமானாலும், கெட்ட காரியமானாலும் தேவையற்ற பயம் மனிதனை கொல்லும். 

அநேகர் இவ்வாறு தான் தேவையற்ற காரியத்திற்காக பயந்துக்கொண்டு போதகர்களையும், விசுவாசிகளையும் அழைத்து உபவாச ஜெபம் செய்வர் இறுதியில் பார்த்தால் அது அற்பமான காரியமாய் இருக்கும். 

தேவையற்ற எண்ணங்களும், சிந்தனைகளும் கூட ஒரு மனிதனை பயப்படுத்தி அவனை விழப்பண்ணும். அதுதான் இன்றைய கதையிலும் நடந்தது. அது என்னவென்று ஆராய்ந்து பாராமல் தேவையில்லாமல் அதுவாய் இருக்குமோ, இதுவாய் இருக்குமோ என்று சிந்தித்து அந்த சிந்தனையினால் வீணரானார்கள். 

வேதாகமத்தில் மோசே இஸ்ரவேல் கோத்திரத்தில் ஒருவராக பன்னிரண்டு பேரை கானானை வேவு பார்க்க அனுப்பினான். அவர்களும் வேவு பார்த்து திரும்பிவந்து அவர்கள் கண்ட காரியத்தையும் அதற்கு மேலான காரியத்தையும் தங்கள் சிந்தையில் இருந்த அனைத்தையும் இஸ்ரவேலரிடத்தில் சொன்னார்கள். 

அவர்கள் அங்கே கண்ட காரியங்களை மிகைப்படுத்தி சொல்லி இஸ்ரவேலரின் இருதயங்களை கரையப்பண்ணினார்கள். ஆனால் இறுதியில் அந்த பட்டணத்தை மிக எளிமையாய் பிடித்துக்கொண்டார்கள். 

எனவே தேவையற்ற சிந்தனை, தேவையற்ற பேச்சுக்கள், தேவையற்ற பயம் என எல்லாவற்றையும் விட்டு தேவையானதை பற்றிக்கொள்வோம். வேதம் சொல்கிறது

42 தேவையானது ஒன்றே, மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள் என்றார்

லூக்கா 10:42

ஆம் அன்பானவர்களே, மரியாளைப்போல தேவையான நல்ல பங்காகிய தேவனுடைய பாதத்தை பற்றிக்கொள்வோம், பயத்தை ஒழிப்போம்.

நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!



360         கேள்வி கேட்காத கீழ்ப்படிதல்

நோவா அப்படியே செய்தான்; தேவன் தனக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் அவன் செய்து முடித்தான். - (ஆதியாகமம் 6:22).
.

பல ஆண்டுகளுக்கு முன் செல்வந்தர் ஒருவர் வேலைக்கு ஆள் வேண்டி விளம்பரம் செயதிருந்தார்; விளம்பரத்தை பார்த்து இளைஞர்கள் பலர் வந்தனர். இரண்டு நாள்  அவர் சொன்ன வேலையை செய்தனர். மறுநாளோ ஆட்கள் வருவதை நிறுத்தி கொண்டனர். இறுதியில் ஒரு வாலிபன் வேலைக்கு வந்தான் அவனிடம் அந்த செல்வந்தர் அங்கு கிடந்த ஜல்லி கற்களை எடுத்து சற்று தொலைவில் போய் கொட்ட சொன்னார். மறுநாள் அதை அள்ளி ஏற்கனவே இருந்த இடத்திற்கு வந்து போட சொன்னார். அவ்வாறு ஒரு வாரம் முழுவதும் நடைபெற்றது. ஞாயிறு உனக்கு விடுமுறை என்றார். ஒரு வாரத்திற்கான கூலியையும் கையில் கொடுத்தார்.

திங்கட்கிழமை அவர் சற்றும் அந்த வாலிபனை எதிர்ப்பார்க்கவில்லை. ஆனால் அவ்வாலிபனோ திங்கட்கிழமை காலை சொன்ன நேரத்திற்கு வேலைக்கு வந்து விட்டான். ஏன் எதற்கு என்று எந்த கேள்வியுமின்றி எஜமானின் கட்டளைக்கு அப்படியே உண்மையாய் கீழ்ப்படிந்த வாலிபனுக்கு அவன் படிப்பிற்கும் திறமைக்கும் ஏற்ற உயர்ந்த வேலையை கொடுத்தார். பல இலட்ச ரூபாய் கணக்கு வழக்குகளை பார்க்கவும், முக்கியமான பொறுப்புகளை அவனிடம் கொடுத்து இரகசியம் காக்கவும அவனை நியமித்தார். அவன் உயிருள்ள வரை அவருடைய குடும்பத்தாருக்கு மெய்காப்பாளானாக இருந்தான்.

ஒரு மனிதனுடைய வாழ்க்கையிலே அரைகுறையான கீழ்ப்படிதல் இருக்குமானால் அது ஆபத்தானது. பூமியில் பாவம் பெருகினதினால் தேவன் இவ்வுலகை அழிக்க சித்தமாகி நோவா என்ற தேவ மனிதனுடன் பேசுகிறார், “தொடர் மழை பெய்யபோகிறது, அந்த அழிவிலிருந்து உன்னையும் உன் குடும்பத்தையும் காத்துகொள்ள ஒரு பேழையை செய்”  என்று. மழை அதற்குமுன் பூமியிலே பெய்ததா என்பது தெரியவில்லை. ஆனாலும் அது என்ன? ஏன், எதற்கு என எந்த கேள்வியும் கேட்காமல் நோவா கர்த்தர் சொன்ன அளவின்படியே ஒரு இஞ்ச் கூட்டியோ குறைத்தோ கட்டாமல் அவர் சொற்படி கீழ்ப்படிந்து  பேழையை செய்தார். அழிவிலிருந்து அவர் குடும்பம் காக்கப்பட்டது.

அடுத்ததாக ஆபிரகாமிற்கு 100 வயதில் பிறந்த பிள்ளையை மோரியா என்ற மலைக்கு கொண்டு போய் தேவன் பலியிட சொன்னார். அப்படியே கர்த்தரின் வார்த்தைக்கு கீழ்ப்படிந்த ஆபிரகாம் தன் மனைவியிடம் கூட சொல்லாமல், எங்கே கூறினால் அழுது தன்னை தடுத்து விடுவாளோ என்று எண்ணி, வேலைக்காரரில் இரண்டு பேரை கூட்டி கொண்டு அதிகாலமே கிளம்பி விடுகிறார், கேள்வி கேட்காத கீழ்ப்படிதலை கண்ட ஆண்டவர் அவரை உலகம் முழுவதற்கும் ஆசீர்வாதமாக மாற்றினார்.

பிரியமானவர்களே, நமது தனிப்பட்ட அந்தரங்க வாழ்வில் நாம் தேவனுக்கு கீழ்ப்படிகிறோமா? வேதத்தில் அவர் கட்டளையிட்ட காரியம் ஒவ்வொன்றிலும் அதை நிறைவேற்ற பிரயாசப்படுகிறோமா? கேள்வி கேட்காமல், அவருடைய சித்தத்தை செய்ய விரும்பும் விசுவாசிகளையே தேவன் தேடி கொண்டிருக்கிறார். அப்படி கீழ்ப்படியும்போது அநேகருக்கு பிரயோஜனமுள்ள ஜீவ ஊற்றாக நம் ஒவ்வொருவரையும் அவர் நிச்சயமாகவே மாற்ற வல்லவராக இருக்கிறார். ஒருவேளை ஆலயத்தில் ஒரு சிறு வேலையை நீங்கள் செய்யும்படி தேவன் உங்களை அழைத்திருக்கலாம், அதில் நீங்கள் கேள்வி கேட்காமல், எனக்கு இருக்கிற படிப்பு என்ன, தாலந்து என்ன, எனக்கா இந்த வேலை என்று கேள்வி கேட்காமல், அந்த வேலையில் உத்தமமாக இருக்கும்போது, உங்கள் உண்மையை காண்கின்ற தேவன் உங்களை அநேகத்திற்கு பொறுப்புள்ளவராக மாற்றுவார். சிறு காரியத்திலேயே முறுமுறுத்து கொண்டிருந்தால், யார் நம்பி ஒரு வேலையை கொடுக்க முடியும்? தேவன் கட்டளையிட்டபடியே நோவா செய்து முடித்தார். ஆபிரகாம் செய்து முடித்தார் மோசே செய்து முடித்தார். அப்படி செய்தவர்களின் பெயர் தாழ்ந்து போயிற்றா? இல்லை, தேவன் அவர்களை அவர்களுடைய எண்ணத்திற்கும் மேலாக உயர்த்தினார். நாமும் அவருடைய சத்தத்திற்கு செவிகொடுத்து கேள்வி கேட்காமல், அவருடைய சித்தத்தை நிறைவேற்றினால், நிச்சயமாகவே நம்மையும் அவர் உயர்த்துவார், ஆமென்
 அல்லேலூயா!



361"கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு;


 வேதத்திலே எத்தனை வசனங்கள் இருக்கின்றன என்று கேட்டால், ஒருவேளை இரவும், பகலும் எண்ணி நீங்கள் சொல்லி விடக்கூடும். ஆனால் வேதத்தில் எத்தனை எழுத்துக்கள் இருக்கின்றன என்று கேட்டால் திகைத்துப் போவீர்கள்.

ஒரு இளவரசன் பரிசுத்த வேதத்தை வாசித்து முடித்தான். மட்டுமல்ல ஆங்கில வேதாகமத்தின் பழைய ஏற்பாட்டில் 27,21,100 எழுத்துக்களும், புதிய ஏற்பாட்டில் 8,38,380 எழுத்துக்களும், மொத்தம் 35,66,480 எழுத்துக்கள் இருக்கின்றன, என்று எண்ணி எழுதி வைத்தான்.

அந்த ஸ்பானிய தேசத்து இளவரசன், மிகுந்த பக்திமான். ஆனால் திடீரென்று அங்கு ஏற்பட்ட இராணுவ புரட்சியினால், நாடு இழந்து, கொடூரமான சிறையில் தள்ளப்பட்டான். அவனோடுகூட இருந்தது வேத புத்தகம் மட்டுமே.

பழைய, நாற்றம் பிடித்த பயங்கரமான சிறைச்சாலையை, மண்டை ஓடுகளின் கிடங்கு என்று அழைப்பதுண்டு. 33 ஆண்டுகள் பசியும், பட்டினியும் கூடவே சித்திரவதையும், சேர்ந்து அவனை வேதனைப்படுத்தினாலும், மகிழ்ச்சியாய் தியானத்தோடு கிறிஸ்துவின் அன்பை விட்டுப் பிரியாமல் வாழ்ந்து, அங்கேயே மரித்தான்.

அந்த சிறையின் சுவர்களில், இளவரசன் வேதத்திலுள்ள அநேக இரகசியங்களையும், எத்தனை வசனங்கள், வார்த்தைகள், எழுத்துக்கள் இருக்கின்றன என்பதையும் ஒரு ஆணிகொண்டு செதுக்கி வைத்தான். தனக்குப் பிரியமான வசனம் ஒன்றை குறிப்பிட்டிருந்தான். அது என்ன தெரியுமா?

"கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள் செய்வார்" (சங்கீதம் 37:4) என்பதே அந்த வசனம்.

"நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக் கொண்டேன்" (பிலி 4:11).



362     .குரங்குமனது

ஒரு  துறவியொருவர் அந்த ஊர் மடத்தில் வந்து தங்கியிருந்தார்.  உள்ளூர்க்காரன் ஒருவன் அவரைத் தேடி வந்தான். 

என்னால் வாழ்க்கையில் முன்னேறவே முடியவில்லை. என் வயதுத் தோழர்கள், என் உடன் படித்தவர்கள், ஏன்... அடுத்த வீட்டுக்காரன் உள்பட எல்லோரும் எங்கெங்கேயோ போய் விட்டார்கள். 

நான் இன்னும் ஒரு துளிகூட முன்னேறவில்லை. நான் என்ன செய்யட்டும் ஐயா?’’  என்று கேட்டான்.  

இந்தக் கேள்விக்கான பதிலைத்தான் அவன் துறவியிடம் வேண்டி வந்திருந்தான். துறவி அவனிடம் சில கேள்விகள் கேட்டார். 

``என்ன வேலை பார்க்கிறாய்?’’

``கூலி வேலை.’’

``வருமானம்?’’

``போதுமான அளவுக்கு இல்லை. இருக்கிறதை வைத்து பிழைப்பை ஓட்டிக்கொண்டிருக்கிறேன்.’’

``வேறு வேலைக்கு முயற்சி செய்யவில்லையா?’’ 

``பயமாக இருக்கிறது. புது இடம், புது எஜமானன் சரியில்லை என்றால் என்ன செய்வது என்கிற அச்சம்...’’

``சுயதொழில் செய்ய உனக்கு ஆர்வம் இல்லையா?’’

இருக்கிறது. 
ஆனால், அதுவும் பயமாக இருக்கிறது. தொழில் தொடங்கி நான் அதில் என் பொருளை இழந்து விட்டால் என்ன செய்வது? என்னிடம் வியாபார நிமித்தமாக வருபவர்கள் என்னை ஏமாற்றி விட்டால் நான் என்ன செய்வேன்? 

இதையெல்லாம் யோசித்துத்தான்நான் தொழில்  தொடங்குவதை தள்ளிப் போட்டுக்கொண்டே வருகிறேன்...’’

துறவி அவனையேப்  பார்த்துக்கொண்டிருந்தார். 

சொல்லுங்கள் குருவே... நான் என்ன செய்ய வேண்டும்? என் வாழ்க்கைக்கு வெளிச்சம் கிடைக்கிற உபாயம் ஏதாவது இருக்கிறதா? 

எத்தனை நாள் பயிற்சி எடுக்க வேண்டும்? அதற் கான மந்திரங்கள் இருந்தால்கூட சொல்லுங்கள். நிச்சயம் அதைக் கடைப்பிடிக்கிறேன்...’’

உன் பிரச்னை தீர ஒரு வழி இருக்கிறது.அதைக் கடைப்பிடிப்பாயா?’ 

வந்தவனின்முகம் மகிழ்ச்சியால் மலர்ந்தது நிச்ச யமாக குருவே நீங்கள் என்ன சொன்னாலும் அதைச் செய்யத் தயாராக இருக்கிறேன்.’’ - அவன் குரலில் அப்படி ஓர் உறுதி.

சரி, இன்றைக்கு ஒரு நாள் இரவு மட்டும் நான் சொல்கிறபடி செய். உன் பிரச்சனை  தீா்ந்துவிடும்’’ என்றார்.

ஒரு நாளில் என் பிரச்சனை  தீா்ந்துவிடுமா, அப்படி என்ன அற்புத மந்திரம் அது? உடனே சொல்லுங்கள் குருவே...’’ என்றான். 

``மந்திரம் எல்லாம் இல்லை. இன்று இரவு மட்டும் நீ குரங்குகளைப் பற்றி நினைக்கக் கூடாது.’’ 

``என்னது குரங்கா... நினைக்கக் கூடாதா? மந்திரம் எல்லாம் ஒன்றும் இல்லையா?’’

``எதிா்க் கேள்வி கேட்காதே! நான் சொல்கிறதை மட்டும் செய்!’’ 

துறவியின் குரலில் உஷ்ணம் ஏறிக் கிடந்ததை உணர்ந்தான். அவருக்கு நன்றி கூறிவிட்டு வீடு நோக்கி நடந்தான். 

வழியிலேயே துறவி கூறியதுதான் திரும்பத் திரும்ப நினைவுக்கு வந்தது. குரங்கு, அதன் வால், பற்கள், உருண்டைக் கண்கள், சேட்டைகள்... ``சே!’’ என்று தலையை உதறிக்கொண்டான்.
ஏன், துறவி குரங்கு பற்றி நினைக்க வேண்டாம் எனச் சொன்னார்? நான் குரங்குக்கு ஏதாவது துன்பம் இழைத்திருப்பேனோ? அப்படி ஒன்றும் நினைவில்லையே. 

ஒருநாள் மலையில் ஒரு குரங்கைப் பார்த்த
போது அதுவல்லவா என் சோற்று மூட்டையைப் பறித்துக்கொண்டு ஓடியது? அந்தச் சமயத்தில் கூட நான் அதை ஒன்றும் செய்யவில்லையே! ஒரு சிறு கல்லைக்கூடத் தூக்கிப் போட வில்லையே! 

ஒருவேளை கடந்த பிறவியில் குரங்குக்கு
ஏதாவது தீங்கிழைத்திருப்பேனோ!  சரி... துறவியே சொல்லிவிட்டாா். 

அதனால், 
நிச்சயம் இதில் ஓர் அர்த்தம் இருக்கும். ஆனால், கண்டிப்பாக இரவில் குரங்கை மட்டும் நினைக்கக் கூடாது’ என்று மனதுக்குள் நினைத்தபடி வீட்டுக்கு நடந்தான். 
இரவு நெருங்கியது. வேலைகளை முடித்துவிட்டு தூங்கத் தயாரானான். தூக்கம் வரவில்லை. குரங்கு குறித்த சிந்தனையே அவனைத் துரத்தியது. 

ஜன்னலில் ஒரு குரங்கு ஏறி அவனையே பார்ப்பதாக எண்ணம். கதவைப் பிராண்டுவதாக உள்ளுணர்வு. நெடு நேரத்துக்கு அவனுக்குத் தூக்கம் வரவில்லை. 

ஒரு கட்டத்துக்கு மேல், களைப்பால் கண்ணயர்ந் தான். கனவிலும் குரங்கள் அவனைத் துரத்தின. நிஜத்தில் அவனை ஒரு குரங்கு பிராண்ட வில்லையே தவிர, 

மற்ற எல்லாம் நடந்தது. குரங்குச் சிந்தனை அவனைப் பாடாகப்படுத்தி எடுத்துவிட்டது. ஒரு கட்டத்துக்கு மேல் அந்தச் சிந்தனையை அவனால் கட்டுப்படுத்தவே முடியவில்லை. பைத்தியம் பிடித்தவனைப்போல் ஆகிவிட்டான். 

எப்போது விடியும் எனக் காத்திருந்து  துறவி தங்கியிருந்த மடத்துக்கு ஓடினான். அவரைச் சரணடைந்தான்.

`குருவே, நான் முதலாளி ஆக வேண்டாம்.  இதை விட அதிகமாகக் கூலி கிடைக்கும் வேலைகூட வேண்டாம். தயவு செய்து, அந்தக் குரங்களிடம் இருந்து மட்டும் என்னைக் காப்பாற்றுங்கள்’’ மன்றாடியவன் மேலும் தொடர்ந்தான்.

``ஒன்று மட்டும் உண்மை. நான் குரங்குக்கு ஏதோ பாவம் இழைத்துவிட்டேன் என்பது மட்டும் தெரிகிறது. அதற்கு என்ன பரிகாரம் வேண்டுமானாலும் செய்துவிடுகிறேன். இந்தக் குரங்குச் சிந்தனை என்னை தற்கொலை செய்துகொள்வது வரை தூண்டுகிறது. காப்பாற்றுங்கள் குருவே!’’ 

அந்த  குரு மென்மையாகச் சிரித்தார். ``உண்மையில் நீ எந்தக் குரங்குக்கும் பாவம் செய்யவில்லை. இதைப் புரிந்துகொள். குரங்குக்கும் உனக்கும் எந்தச்சம்பந்தமுமில்லை. முதலில் நிம்மதிகொள்’’ என்றாா்

துறவியின் 
பதில் கேட்டு அவன் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டான். ``என்ன... குரங்குக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லையா? அப்படி என்றால் என்னை ஏன் குரங்குகள் விடாமல் துரத்துகின் றன?’’ என்றான்.

சில நிமிட அமைதி காத்த பிறகு குரு அவனுக்கு விளக்கத் தொடங்கினார். 

``உன் எண்ணங்களுக்கு நீயே அதிபதி.அவற்றை நீயே தீர்மானிக்கிறாய். வெளியிலிருந்து யாரும் மற்றொருவரின்எண்ணத்தைக் கட்டுபடுத்தவோ, மாற்றவோ முடியாது. உனக்கு எது தேவையோ அதைப் பற்றி மட்டுமே சிந்திக்கக் கற்றுக்கொள். 

குரங்கைப் பற்றி நினைக்கக் கூடாது என்றதும் நீ அதைப் பற்றியே நினைத்தாய். உன் சிந்தனை அதிலேயே இருந்தது. 

எனவே, உனக்குப் பயன்படாத ஒன்றைப் பற்றி சிந்திக்காதே. எதுவும் நன்றாக நடக்கும்’ என்று நம்பு. ஒன்றை ஆரம்பிக்கும்போதே இப்படி நடந்து விடுமோ என நீயாக ஒரு முடிவுக்கு வந்து குழம்பிக்கொள்ளாதே. 

இந்த எதிர்மறை எண்ணம்தான் உன் முன்னேற் றத்துக்கு முட்டுக்கட்டை. அதை விட்டுவிட்டு நேர்மறை எண்ணத்தை வளர்த்துக்கொள். எதையும் ஏற்றுக்கொள்ளும் மனநிலையை உருவாக்கிக்கொள்.’’ என்றான்... 

என்_அன்புக்குாியவா்களே, 
இந்த போதனை அவனுக்கு மட்டுமானதல்ல.
இது, நம் எல்லோருக்குமானது. நம் ஊரில், மருந்துகுடிக்கும்போது குரங்கை நினைக்காதே!’ என ஒரு வாசகம் உண்டு. 

அதுவும் இதற்குப் பொருந்தும். நோ்மறை எண்ணங்களை வளா்த்துக்கொள்ள, அதைப் பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டும். வேறு ஏதுவும் தேவையில்லை. எல்லாம் நல்லதாகவே நடக்கும். 

உங்கள் மனதின் எண்ணங்களைக் குறித்து ஜாக்கிரதையாயிருங்கள். எதை நினைக்கிறீா் களோ அதுவாகவே மாறிவிடுவீா்கள். நீங்கள்  நினைப்பதைத்தான் பேசுவீா்கள். எதை பேசுவீா் களை அது உங்கள் வாழ்வில் நடந்து விடும். 
எண்ணங்கள் சிந்தனைகள்,நினைவுகள் வாா்த்தைகள் ஆகிய சக்தியுள்ளதும் அவைகள் ஒன்றை ஒன்று சாா்ந்திருக்கிறது என்பதை 
புாிந்து கொள்ளுங்கள். 

இயேசு  சொன்னாா்.. ... 
இருதயத்தின் நினைவு எப்படியோ அப்படியே அவன் இருக்கிறான்:    -  நீதி. 23:7

இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும்....
நல்ல மனுஷன் இருதயமாகிய நல்ல பொக்கி ஷத்திலிருந்து நல்லவைகளை எடுத்துக் காட்டு கிறான், பொல்லாத மனுஷன் பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாதவைகளை எடுத்துக்காட்டுகிறான். 

ஏனெனில், உன் வார்த்தைகளினாலே நீதிமான் என்று தீர்க்கப்படுவாய், அல்லது உன் வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்க்கப்படுவாய் என்றார். 
மத்தேயு 12: 34 - 37

எனவே 
நல்ல நினைவுகளையும், எண்ணங்களையும் வேதத்தை படித்து உருவாக்குங்கள். அதை பேசுங்கள்.  உங்கள் வாழ்வில் சகல ஆசீா்வாதம் களையும், மேன்மை, உயா்வுகளையும் பெற்றுக் கொள்ளுங்கள். 

நீங்கள் ஆசீா்வதிக்கப்பட்டவா்கள்.




363                வாஜனின் சபதம்!


.  இன்னும் ஜெபம்பண்ணுவேன். 
                    சங்கீதம் 141:5

வாஜன், ஒரு பறவை வேட்டைக்காரன். ஏழை என்றாலும் அவன் ஆசை பெரியது. இந்தோனேஷிய மன்னர் இஷாக்கின் அழகான மகளை மணக்க விரும்பினான். மன்னர் இஷாக் திறமையான வில்வித்தைக்காரர். இளவரசியை தலைசிறந்த வில்வித்தைக்காரனுக்கே மணமுடித்துத் தரப்போவதாக அறிவித்தார். 

வாஜனுக்கோ வில்வித்தையைப் பற்றி எதுவுமே தெரியாது. ஆனால், அவன் ஒரு திட்டம் தீட்டினான். பறவைகள் சிலவற்றைப் பிடித்த வாஜன், அவற்றின் வலது கண்ணை மட்டும் தோண்டி எடுத்தான். பிறகு அரண்மனைக் கதவுகள் அருகே நின்று அவற்றை விற்கத் துவங்கினான். அவனைச் சுற்றி கூட்டம் கூடியது. அரசர், விசாரிக்கச் சொன்னார்.

வேலையாள், வாஜன் என்பவன் ஒரே ஒரு கண் மட்டுமுள்ள பறவைகளை விற்பதாகத் தெரிவித்தான். அரசர் வாஜனை அழைத்து வரச் சொன்னார். எப்படி உன் பறவைகளுக்கு ஒரே ஒரு கண் மட்டும் உள்ளது? என்றார். வாஜன், அரசே, நான் எப்போதுமே பறவைகளை வலது கண்ணில் மட்டுமே அம்பெய்து கொல்வேன் என்று பதிலளித்தான். 

வியந்துபோன அரசர், வாஜனுக்கே தன் மகளை மணமுடிக்க முடிவு செய்தார். வாஜன், தான் ஏழை என்றும் ராஜாவின் மகளை வைத்துக் காப்பாற்ற வசதியில்லை என்றும் கூறினான். அவனது நேர்மையைப் பாராட்டிய அரசர், வாஜன் தன் அரண்மனையிலேயே வசிக்கலாமென்றும் கூறினார். இளவரசிக்கும் வாஜனைப் பிடித்துப்போனது. சில வாரங்கள் கழித்து இருவருக்கும் திருமணம் நடந்தது. 

பெரிய வில்வித்தைக்காரன் தனக்கு மருமகனாகக் கிடைத்திருக்கிறான் என்ற பெருமையோடு, வாஜனை திருமண விழாவில் திரண்டிருந்த மக்கள் முன் அவன் திறமையை நிரூபித்துக் காட்டச் சொன்னார் அரசர். அரசர் தன் வில் அம்புகளை எடுத்துக் கொடுத்தான்.

வாஜன் பயத்தில் நடுங்கினான். வில், அம்புகளை எப்படிப் பிடிப்பது என்றுகூட அவனுக்குத் தெரியாது. வில்லையும் அம்பையும் கையில் பிடித்துக்கொண்டு வெகுநேரம் சும்மா நின்றான். விருந்தினர்கள் பொறுமையிழந்தனர். சிலர் வாஜனை ஏமாற்றுக்காரன் என்று சந்தேகிக்கத் தொடங்கினர். 

பொறுமையிழந்த விருந்தினர் ஒருவர், சீக்கிரம் அம்பெய்யச் சொல்லி வாஜன் முதுகில் தட்டினார். அப்போது அது வாஜனின் கைகள் அசைத்ததால் அம்பு, வில்லில் இருந்து புறப்பட்டு காற்றில் பறந்தது. சரியாக அந்த நேரத்தில் ஒரு கொக்கு பறந்து வந்தது. அம்பு அதனைக் குத்த, கொக்கு கீழே விழுந்து இறந்தது.

அரசர் விரைந்து சென்று இறந்த பறவையைத் தூக்கினார். வாஜனின் அம்பு கொக்கின் மெல்லிய கழுத்தில் குத்தி இருப்பதாகவும் அதன் மூலமே வாஜனின் திறமை தெரிகிறது என்றும் பாராட்டினார். அதனை அனைவரும் ஏற்று வாஜனைப் பாராட்டினார்கள். 

ஆனால் வாஜனோ கோபமாக இருப்பதுபோல் நடித்தான். அரசே! எப்போதும் நான் பறவைகளின் வலது கண்ணில் மட்டுமே அம்பெய்வேன். ஆனால், விருந்தினர் என் கையைத் தட்டியதால் குறி தவறி பறவையின் கழுத்தில் பட்டது. என் கொள்கையே பாழாகிவிட்டது. இனி நான் வில்லையே தொட மாட்டேன் என்று சபதம் செய்தான். அதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று. சில நாட்களில் வாஜன் அரசனானான். வெகு காலத்துக்கு அவனை, மிகச் சிறந்த வில்வித்தைக்காரன் என்று மக்கள் பேசிக் கொண்டனர்.

என் அன்பு வாசகர்களே,
தனக்கு தெரிந்த காரியத்தை குறித்து மாத்திரம் மேன்மை பாராட்ட வேண்டும் மற்றபடி நமக்கு தெரியாத காரியத்தை குறித்து மேன்மை பாராட்டினால் என்றாகிலும் ஒருநாள் நிச்சயம் மாட்டிக்கொள்வோம்.

இன்றைய கதையில் வாஜனைப்போல நானும் எப்படியாகிலும் தப்பித்துக்கொள்வேன் என்று நினைத்தால், சிந்தித்து பாருங்கள் அவன் ராஜாவாய் மாறிவிட்டான் அவனை எதிர்த்து கேள்வி கேட்க யாருக்கும் தைரியம் இல்லை. ஆனால் ஏதாகிலும் போருக்கு செல்ல வேண்டிய காட்டாயம் ஏற்படுமாயின் அவனால் தாக்குப்பிடிக்க முடியாது.

அவன் எதற்கு போருக்கு செல்ல வேண்டும், தளபதியையும், போர் வீரர்களையும் அனுப்பிவிட்டு அரண்மனையில் இருந்தால் போதுமே என்று கேட்டால் ஒருவேளை அவர்கள் முறிந்தோடி அரண்மனையை எதிரிகள் கைப்பற்ற நேர்ந்தால் வாஜனால் தன்னையோ தன்னோடு இருப்பவர்களையோ காப்பாற்ற இயலாது. 

வேதம் இவ்வாறு கூறுகிறது

26 வீண் புகழ்ச்சியை விரும்பாமலும், ஒருவரையொருவர் கோபமூட்டாமலும், ஒருவர்மேல் ஒருவர் பொறாமைகொள்ளாமலும் இருக்கக்கடவோம்.

கலாத்தியர் 5:26

வீணான புகழ்ச்சி நிச்சயம் ஒருநாள் நம்மை நாமே அழிக்க வழிவகுக்கும். எனவே வீண் புகழ்ச்சியை விரும்பாமலும் ஒருவரையொருவர் நேசித்து வாழ்வோம் அநேகருக்கு ஆசீர்வாதமாய் வாழ்வோம்.






364        பாவம்... மாடு என்ன செய்யும்?

ஹரியும் நானும் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள். பரீட்சை முடிந்து பள்ளிக்கு விடுமுறை என்பதால் இருவரும் அவரவர் பெற்றோர்களுக்கு உதவி செய்ய எண்ணினோம். இருவர் வீடுகளிலும் மாடுகள் வளர்ப்பதால் அவற்றை மேய்ப்பதில் உதவி செய்ய முடிவு செய்தோம். 

அவ்வாறு தினமும் மேய்க்கச் செல்லும்போது ஹரிக்குக் கெட்ட பழக்கம் ஒன்று இருந்தது. மாடுகளை புல்வெளியில் மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு மாரி மற்றும் அவன் நண்பர்களுடன் சேர்ந்து காசு வைத்து கோலி விளையாட சென்றுவிடுவான். நான் அவனிடம் பலமுறை கூறியிருக்கிறேன் அவ்வாறு செய்வது தவறு என்று.

ஆனால், அவன் அதை காதில் வாங்கிக்கொண்டால்தானே..? டேய் ஹரி! மாடுகளை இப்படிக் கவனிக்காமல் விட்டுவிட்டால் அவை வழி தவறக்கூடும். அதே சமயம், நீ இப்படிக் காசு வைத்து விளையாடுவது மிகவும் தவறான செயல் என்று கண்டித்தேன். அதற்கு நான் என்ன ஐம்பது பைசா, ஒரு ரூபாய் வைத்துத்தானே விளையாடுகிறேன்... இது ஒன்றும் பெரிய தொகை அல்ல என்று எப்போதும் போல சமாளித்துக் கூறிவிடுவான். 

என் வார்த்தைக்கு மதிப்பும் இல்லை... பிரயோஜனமும் இல்லை என்று கூறுவதை நிறுத்திவிட்டேன். ஒருநாள் நல்ல உச்சி வெயில். சூரிய வெப்பம் மிகக் கடுமையாக இருந்ததால் அனல் காற்று வீசியது. நான் புளிய மரத்தடியில் கதைப் புத்தகம் படித்துக் கொண்டிருந்தேன்.

அப்போது மற்றொரு நண்பன் சிவா பதற்றமாக ஓடிவந்ததைக் கண்டு நானும் திகைப்புடன் அவனைப் பார்த்தேன். சங்கர்... ஹரி எங்கே? கார் ஒன்று அவன் பசு மாட்டின் மீது மோதி விபத்துக்குள்ளாகி விட்டது! என்றான். இதைக் கேட்டவுடன் எனக்கு எதுவுமே பேச முடியாமல் வாயடைத்துப் போனேன். 

நானும் சிவாவும் ஹரி விளையாடிக் கொண்டிருக்கும் இடத்துக்கு ஓடினோம். நான் நினைத்தது போல ஹரியும் அவன் நண்பர்களும் சத்தமிட்டபடி உற்சாகமாக கோலி விளையாடிக் கொண்டிருந்தார்கள். டேய் ஹரி! உன் மாடு காரில் அடிபட்டு விட்டது! என்றேன். அனைவரும் சாலையை நோக்கி ஓடினோம். சாலையின் நடுவில் மாடு அடிபட்டுக் கிடந்தது. 

மக்கள் அதைச் சுற்றி கூட்டமாக நின்றிருந்தனர். மாட்டின் மீது மோதிய கார் சாலையிலிருந்து விலகி பள்ளத்தில் கவிழ்ந்து கிடந்தது. காரினுள் இருந்தவர்கள் தட்டுத்தடுமாறி காரின் கதவைத் திறந்துகொண்டு வெளியில் காயத்துடன் கிடந்தனர்.

விபத்தை முதலில் கண்ட ஒரு பெரியவர், காரினுள் நிறைய பொருட்கள் வைத்திருப்பார்கள் போல... பெட்டி பெட்டியாக இருக்கிறது. அந்தப் பெட்டிகளிடையே சிக்கிக்கொண்டதால் இன்னும் காயம் பலமாக இருக்கலாம் என்றார். இன்னொரு கிராமவாசி, கார் ஓட்டுநர் வேகத்தை ஓரளவுதான் குறைக்க முடிந்தது. பசுமாடு திடீரென்று குறுக்கே வந்ததால் கார் திசைமாறி சாலையை விட்டு விலகி பள்ளத்தில் இறங்கிவிட்டது. பசுமாடு என்ன செய்யும்? பாவம்! அது ஐந்தறிவு உள்ள விலங்குதானே?

மாடு மேய்ப்பவனைத்தான் குற்றம் சொல்ல வேண்டும்! நான் மட்டும் அவனைப் பார்த்தால்... நல்லா நாலு வார்த்தை கேட்பேன். அவனுடைய கவனக்குறை வினால் இப்படி ஒரு விபத்து நடந்துவிட்டதே! என்று ஆத்திரப்பட்டார். இதையெல்லாம் கேட்டுக்கொண்டுதான் நானும் ஹரியின் நண்பர்களும் கூட்டத்தினரிடையே இருந்தோம். 

சங்கர்! உன் பேச்சைக் கேட்டிருந்தால் இந்த விபத்து நடந்திருக்குமா? இப்போது பார்த்தாயா... எத்தனை உயிர்கள் இதனால் பாதிக்கப்பட்டிருக்கின்றன? எல்லாம் என்னுடைய விளையாட்டுப் புத்தி, கவனக்குறைவினால் வந்தது... என்று ஹரி பெருங்குரலெடுத்து அழுதான்.

இனிமேல் எதுவும் செய்ய முடியாது. அவர்களை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்லும் முயற்சியில் இறங்கலாம், வா..! இனிமேலாவது கவனத்துடன் இரு! என்றேன்.

என் அன்பு வாசகர்களே,
கவனக்குறைவு நமக்கு மட்டுமல்ல, நம்மை சார்ந்திருப்பவர்களையும், மற்றவர்களுக்கும் கேடு விளைவிக்கக் கூடும். உதாரணமாக நான்கு சக்கர வாகனத்தை ஓட்டிச் செல்லும்போது கவனக்குறைவாக ஓட்டும் பட்சத்தில் பெரிய விபத்து ஏற்படும் அபாயம் இருக்கிறது. அது நம்மை மட்டுமல்ல மற்றவர்களையும் வேதனைப்படுத்தும்.

ஒரு தொழிற்சாலையில் உயர்ந்த பதவியில் பணி செய்கிறவர்கள் தங்கள் கவனக்குறைவான பேச்சாலோ, செயலாலோ ஏதேனும் காரியம் செய்யும்போது ஒட்டுமொத்த தொழிலையே பாதிக்கும் அநேகருடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படும். உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் மாத்திரமல்ல சிறிய பதவியில் இருப்பவர்களின் கவனக்குறைவு கூட மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தும்.

 உதாரணமாக, இன்றைய துப்புரவு பணியாளர்கள் தங்கள் பணியை கவனக்குறைவாக செய்தால் என்ன விளைவு ஏற்படும் என்பது நாம் அறிந்ததே.

ஆகவே நாம் எந்த நிலையில் இருந்தாலும், எங்கு வேலை செய்தாலும், என்ன வேலை செய்தாலும் மிகுந்த கவனத்தோடு செய்யவேண்டும் என்பதே இக்கதையின் கருத்து.

வேதாகமத்தில் இஸ்ரவேலரின் ராஜாவாகிய தாவீது இஸ்ரவேலர்களையும், யூதாவையும் இலக்கம் பார்க்க வேண்டும் என்று சேனாபதியாகிய யோவாபிடமும், இராணுவத்தலைவரிடமும் கட்டளையிட்டான். அவர்கள் வேண்டாம் என்று மறுப்பு தெரிவித்தபோதும் தன்னுடைய பட்சத்தில் இருப்பவர்கள் எத்தனை பேர் என்று அறிந்துக்கொள்ள, தன்னுடைய கவனம் தேவனிடத்திலிருந்து வேறுபக்கம் சாய்ந்ததால் இப்படி செய்தான்.

அவர்கள் ஒன்பது மாதம் இருபது நாட்கள் சுற்றித்திரிந்து கணக்கு ஒப்புவித்தார்கள். இதன் விளைவு அவன் மட்டுமல்ல ஒன்றும் அறியாத அந்த இஸ்ரவேல் ஜனங்கள் தான்‌ கொள்ளை நோயினால் வாதிக்கப்பட்டார்கள். அன்றைய தினம் ஏழுபதினாயிரம் (70,000) பேர் செத்துப்போனார்கள். ஒருவனுடைய கவனக்குறைவு ஏழுபதினாயிரம் உயிரை பறித்து விட்டது.

எனவே நம்முடைய கவனக்குறைவு மற்றவர்களுக்கு இடறலாக இல்லாமல் இருக்க நாம் செய்கிற எல்லா காரியத்தையும் மிகுந்த பொறுமையோடும், மிகுந்த கவனத்தோடும் செய்யும்போது நாமும் ஆசீர்வதிக்கப்படுவோம் நம்மால் மற்றவர்களும் ஆசீர்வதிக்கப்படுவார்கள்.

வேதம் சொல்கிறது,

25 உன் கண்கள் நேராய் நோக்கக்கடவது: உன் கண்ணிமைகள் உனக்குமுன்னே செவ்வையாய் பார்க்கக்கடவது .

நீதிமொழிகள் 4:25

நம்முடைய கண்கள் கவனக்குறைவு அடையாத வண்ணம் தேவனை மட்டும் நோக்கும்போது நமது கவனம் நேராய் இருக்கும் நாமும் செவ்வையாய் பார்த்து நல்ல வழியில் நடப்போம்.

நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!


 தினம்
------ஓர் குட்டிக் கதை - 648

அன்பு நண்பா்கள் அனைவருக்கும், அன்புடன் இனிய காலை வணக்கம் !! இந்த நாள் உங்களுக்கு நல்ல நாளாய் அமைவதாக!!!                                                   

சிந்திக்க வைக்கும் குட்டிக்கதையுடன் உங்களை  சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.!!!

365           திரு, "திரு" திருடா!


அல்லிபுரி என்ற நாட்டை சந்திரசேகரன் என்ற மன்னர் ஆட்சி செய்துவந்தார். அவர் மிகவும் நல்லவர். மக்கள் நலனில் அக்கறை கொண்டவர். தன் ஆட்சியில் மக்கள் சிறு துன்பம்கூட அனுபவிக்க கூடாது என்று நினைப்பவர். அதற்காக எந்த நேரமும் ஓயாமல் உழைத்துகொண்டு இருப்பவர். அதே நேரம் குற்றம் செய்பவர்களைக் கடுமையாக தண்டிக்கவும் தயங்கமாட்டார்.

சந்திரசேகரனின் இந்த நடவடிக்கையால் நாட்டில் குற்றங்கள் மிகவும் குறைந்திருந்தன. ஆனால் சமீப காலமாக ஒரு புதிய பிரச்னை. அதுவும் அரண்மனைக்குள்ளேயே நடந்து கொண்டிருந்தது. சமையலறையில் செய்து வைக்கிற இனிப்பு மற்றும் பலகாரங்கள் அடிக்கடி காணாமல் போயின.

சமையல்காரர் முதல்முறையாகச் சொன்னபோது இளவரசனோ அல்லது இளவரசியோ எடுத்து சாப்பிட்டு இருக்கலாம் என்று எண்ணி, பேசாமல் இருந்துவிட்டார். அடுத்தடுத்துப் புகார்கள் வந்ததும் கவலை ஏற்பட்டது. தன் பிள்ளைகள் எடுக்கிறார்களா, அல்லது வேறு யாராவது எடுக்கிறார்களா? ‘சாப்பிடும் பொருள்தான் என்றாலும் தெரியாமல் எடுப்பது குற்றம்தானே? அரண்மனைக்கு உள்ளேயே இருக்கும் அந்தத் திருடன் யார்’ என்கிற கேள்வி அவரைக் குடைந்தது.

அன்று அரச சபை கூடியதும் அங்கே பணிபுரிபவர்களையும், இளவரசன் மற்றும் இளவரசியையும் வரவழைத்து விசாரணையைத் தொடங்கினார்.

‘‘அரண்மைக்குள்ளேயே இப்படி நடப்பது மிகவும் வெட்கக்கேடான விஷயம். யாருக்கு எவ்வளவு பலகாரம் வேண்டுமென்றாலும் கேட்டு வாங்கிச் சாப்பிடலாம். அதை விட்டு இப்படி திருட்டுத்தனமாக எடுப்பது தவறு. யார் அப்படிச் செய்தது? நீங்களாக ஒப்புக்கொள்ளுங்கள். மன்னித்து விட்டுவிடுகிறேன்’’ என்றார்.

யாரும் வாயைத் திறக்கவில்லை. ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு அமைதியாக இருந்தார்கள். இளவரசனும் இளவரசியும்கூட பதில் பேசவில்லை.

‘‘முத்தழகி, மதிசேகரா! எனக்கு மற்றவர்களைவிட உங்கள் மீதுதான் அதிக சந்தேகம். ஏனென்றால் நீங்கள்தான் சிறுவர்கள். அரண்மனைக்குள் எங்கும் செல்லும் உரிமையுள்ளவர்கள். சொல்லுங்கள் உங்களில் யார் இந்த தவறைச் செய்வது? அல்லது இருவருமே சேர்ந்துச் செய்கிறீர்களா?’’ என்று கேட்டார் சந்திரசேகரன்.

‘‘தந்தையே! பலகாரத்தைத் திருடிச் சாப்பிட வேண்டிய அவசியம் எங்களுக்கில்லை. போதும் போதும் என்று சொல்கிற அளவிற்கு கிடைக்கிறது. பிறகு எதற்கு திருட வேண்டும்?’’ என்றாள் இளவரசி முத்தழகி.

‘‘அதுதானே? உங்களின் பிள்ளைகளான நாங்கள் தவறு செய்வோமா..? இது வேறு யாரோ செய்கிற காரியம்’’ என்றான் இளவரசன் மதிசேகர்.

‘‘அதுதான் யார் செய்வது?’’ என்று சற்றே கோபத்துடன் கேட்டார் சந்திரசேகரன்.

கூட்டத்தில் மீண்டும் அமைதி. இதையெல்லாம் கவனித்துக்கொண்டு இருந்த அமைச்சர் அறிவழகன் எழுந்தார். அரசரை வணங்கிவிட்டுப் பேசினார்.

‘‘அரசே! இப்படி விசாரிப்பதால் உண்மை தெரியாது. குற்றத்தை ஒப்புக்கொள்ள நினைத்தாலும் இத்தனை பேருக்கு மத்தியில், அதுவும் சாதாரண பலகாரத் திருட்டை எப்படி ஒப்புக்கொள்வார்கள்? மற்றவர்கள் கேலியாகச் சிரிப்பார்களே? அதனால் பிரச்னையை என்னிடம் விடுங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன்’’ என்றார்.

‘‘சரி உங்களுக்கு மூன்று நாள் அவகாசம் தருகிறேன், அதற்குள் கண்டுபிடியுங்கள்’’ என்றார் சந்திரசேகரன்.

அத்துடன் அந்தப் பிரச்சனையை நிறுத்தி விட்டு வேறு வேலையைத் தொடங்கினார்கள். அறிவழகன் ஒரு பொறுப்பை எடுத்துக்கொண்டால் கச்சிதமாக முடித்து விடுவார் என்பதால் சந்திரசேகரன் கவலை இல்லாமல் இருந்தார்.

மூன்றாவது நாள் அவர் ஓய்வறையில் தனியாக இருந்தபோது அமைச்சர் அறிவழகன் வந்தார்.

‘‘என்ன அமைச்சரே, பலகாரத் திருடனைக் கண்டுபிடிக்கக் கொடுத்திருந்த அவகாசம் இன்றோடு முடியப் போகிறதே நினைவு இருக்கிறதா?’’ என்று கேட்டார்.

‘‘இருக்கிறது அரசே! அதைப் பற்றிப் பேசத்தான் வந்தேன். திருடனைக் கண்டுபிடித்து விட்டேன்’’ என்றார் அறிவழகன்.

‘‘சபாஷ்! எப்படிக் கண்டுபிடித்தீர்கள்? யார் அவன்?’’

‘‘அரசே! அன்று நீங்கள் எல்லாரையும் அழைத்து விசாரித்துக் கொண்டிருக்கும்போது நான் ஒவ்வொருவர் முகத்தையும் உற்று கவனித்துக் கொண்டிருந்தேன். அவர்களில் ஒரு காவலாளி மட்டும் ‘திரு! திரு’வென விழித்துக்கொண்டு இருந்தான். இரவில் சமையலறைப் பக்கம் காவல் இருப்பவன் அவன்தான்…’’

‘‘ஓகோ! அப்படியென்றால் அவன்தான் திருடியவனா?’’

‘‘நானும் அப்படி சந்தேகப்பட்டுத்தான் அவனை வீட்டில் சந்தித்து விசாரித்தேன். அவன் சொன்ன விஷயத்தை என்னால் நம்ப முடியவில்லை. இரண்டு நாட்கள் இரவில் சமையலறையில் ஒளிந்து கண்காணித்தேன். பிறகுதான் அவன் சொல்வது உண்மைதான் என்பது தெரிந்தது.’’

‘‘புதிர் போடாதீர்கள் அமைச்சரே, நேரடியாகச் சொல்லுங்கள். யார் அந்தத் திருடன்?’’

‘‘தாங்கள்தான் அரசே’’ என்றார் அறிவழகன்.

சந்திரசேகரன் திடுக்கிட்டார். ‘‘அமைச்சரே என்ன உளறுகிறீர்கள்?’’ என்று சீறினார்.

‘‘கோபப்படாமல் சொல்லுவதைக் கேளுங்கள் அரசே. பெரிய மகாராணியாகிய தங்கள் தாயாரிடமும், அரண்மனை வைத்தியரிடமும் கலந்து பேசிவிட்டுத்தான் இங்கே வந்திருக்கிறேன். தங்களுக்கு சிறு வயதில் பலகாரம் சாப்பிடுவது என்றால் மிகவும் உயிராம். கேட்டுக் கேட்டு வாங்கிச் சாப்பிடுவீர்கள் என்று பெரிய மகாராணியார் சொன்னார். உண்மைதானே?’’

‘‘ஆமாம்…’’

‘‘பிறகு வளர்ந்து அரசராகப் பொறுப்பு ஏற்றுக்கொண்ட பிறகும் பலகாரம் சாப்பிடும் ஆசை போகவில்லை. ஆனால் அரசனாக இருந்துகொண்டு அதிகமாக பலகாரங்களைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தால் மற்றவர்கள் கேலி செய்வார்களே, மக்களைப் பற்றிக் கவலை இல்லாதவர் என நினைப்பார்களே என்றெல்லாம் நினைத்து ஆசையை அடக்கிக்கொண்டீர்கள். மற்றவர்கள் சாதாரணமாக இரண்டு, மூன்று என்று சாப்பிட்டாலும் நீங்கள் ஒன்றுதான் சாப்பிடுவீர்கள். இது உண்மைதானே?’’

‘‘எல்லாம் சரிதான். அதற்கும் இதற்கும்…’’

‘‘சொல்கிறேன் அரசே. அந்த வீரனை விசாரித்தபோது சில நாட்களில் நள்ளிரவில் நீங்கள் சமையலறைக்கு வருவீர்களாம். பலகாரங்களை எடுத்துச் சாப்பிடுவீர்களாம். அன்று விசாரிக்கும்போது அவன் விழித்தது அதனால்தான். அவ்வளவு கூட்டத்தில் உங்களைப் பற்றி உங்களிடமே எப்படிப் புகார் கூற முடியும்? இதை அவன் சொன்னபோது நம்பாமல் நானே கண்காணித்தேன். நேற்று இரவு நீங்கள் சமையலறைக்கு வந்து சாப்பிட்டீர்கள்’’ என்றவர் தொடர்ந்து, ‘‘நமது வைத்தியரிடம் பேசினேன். மனிதன் தன் மனதில் தொடர்ந்து அடக்கி வைக்கும் ஆசைகள் இப்படி வெளிப்படுமாம். நீங்கள் செய்தது உங்களுக்கே தெரியாதாம். உறக்க நிலையில் இதைச் செய்தீர்களாம்’’ என்றார்.

‘‘ஓகோ… இதை எப்படி மாற்றிக் கொள்வது? என்று கேட்டார் சந்திரசேகரன்.

‘‘இரண்டே வழிகள். கூச்சப்படாமல் ஆசைப்பட்டதை வெளிப்படையாகச் சாப்பிடுங்கள். அப்படிச் சாப்பிட்டால் யாராவது தவறாக நினைபார்களோ என்ற எண்ணம் வேண்டாம். நமது கடமைகளை நாம் சரியாகச் செய்யும்போது நமக்கென்று இருக்கும் ஆசையை நிறைவேற்றிக் கொள்வதில் தவறேதும் இல்லை. இது ஒரு வழி. இன்னொரு வழி, ஆசையிலிருந்து விலகுவது. இதையெல்லாம் சாப்பிடும் காலத்தை, வயதை நான் தாண்டி விட்டேன். இனி இது எனக்குத் தேவையில்லை. வேறு விஷயங்களை கவனிப்போம் என்று உங்கள் மனதிடம் மீண்டும், மீண்டும் சொல்லிக் கொள்ளுங்கள்’’ என்றார் அறிவழகன்.

‘‘இனிப்புத் திருடனை அடையாளம் காட்டியதற்கு நன்றி அமைச்சரே. இனி அவன் திருடமாட்டான்…’’ என்று கூறிச் சிரித்தார் சந்திரசேகரன்.

என் அன்பு வாசகரே,
மனம் ஒரு புரியாத புதிர். எண்ணத்தில் உள்ள ஆசைகளை கட்டுப்படுத்தலாம் ஆனால் மனதின் ஆசைகளை எப்பேற்பட்ட நபராயினும் கட்டப்படுத்த முடியாது என்பதே இக்கதையின் கருத்து.


எதை வேண்டுமானாலும் நாம் கட்டுப்படுத்தலாம் ஆனால் மனதின் யோசனைகளையும் அதன் ஆசை இச்சைகளையும் நம்மால் கட்டுப்படுத்த முடியாது. அது ராஜாவானாலும், மந்திரி ஆனாலும் இக்காலத்தின் முதலாளியானாலும், உயர் பதவியிலிருப்பவர்களானாலும், எப்பேர்ப்பட்ட மனிதனானாலும் கட்டுப்படுத்த முடியாது. 


ஏனெனில் இருதயத்திலிருந்து (மனம்) 

19 எப்படியெனில், இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும், கொலைபாதகங்களும், விபசாரங்களும், வேசித்தனங்களும், களவுகளும், பொய்ச்சாட்சிகளும், தூஷணங்களும் புறப்பட்டுவரும்.

மத்தேயு 15:19

இவைகளை கட்டுப்படுத்தும் வல்லமையுள்ளவர் நம் ஆவியானவர் ஒருவர் மட்டுமே. 

வேதத்தில் தாவீது ராஜா தேவனோடு மிகுந்த நெருக்கமாக இருந்தவர். அவருடைய மனதும் ஒருமுறை அவருக்கு கீழ்ப்படியவில்லை. அவன் தன் மனதில் இச்சித்ததை அடைந்து தீருமட்டும் அவனால் தன் மனதை அடக்கிக்கொள்ளமுடியவில்லை. இதை 
2 சாமுவேல் 11 ம் அதிகாரத்தில் வாசிக்கிறோம். ஆனால் தான் இச்சித்ததை அடைந்த பின்னர் அதன் மீது அவனுக்கு வெறுப்பு தோன்றியது. 

அநேகர் இது போலத்தான் தாங்கள் இச்சித்ததை எப்படியாகிலும் பெற்றுவிடுகின்றனர். அதன் பின்னர் எவ்வளவு இச்சித்தார்களோ அதற்கும் மேலாக அதை வெறுத்துவிடுகின்றனர். ஆகவேத்தான் சாலெமோன் ஞானி இவ்வாறு கூறுகிறார், 


பலவானைப்பார்க்கிலும் நீடிய சாந்நமுள்ளவன் உத்தமன்: பட்டணத்தை பிடிக்கிறவனைப்பார்க்கிலும் தன் மனதை அடக்குகிறவன் உத்தமன்.

நீதிமொழிகள் 16:32

எனவே, நம் மனதை அடக்கும் வலிமையுடைய ஆவியானவரிடம் இன்றே நம்மை ஒப்புவிப்போம், அவர் மூலம் நம் மனதை அடக்கி, உத்தமமான ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்வோம்.

#நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!


366            அன்பும்_கண்டிப்பும்.. 

மனைவியை அளவுக்கு அதிகமாக நேசிக்கும் ஒரு கணவரின் உணர்வுப் பூர்வமாக எச்சரிக்கை...!!!*_

_*தன் மனைவியை சில விசயங்களுக்காக அடிக்கடி கடிந்து கொள்வதால் அவள் கணவனிடம் கேட்டாள்... ஏங்க என்னை எப்பவும் இப்படி கண்டிப்புடன் நடத்துகிறீர்கள்...??? என்னை கொஞ்சம் சுதந்திரமாக விடலாமே என்று...*_

_*ஆனால் அதை கணவன் சற்று கஷ்டமாகவே உணர்ந்தார்... இதை எப்படி இவளுக்கு சொல்லிக்கொடுப்பது என யோசித்தார்...*_

_*ஒரு நாள் மனைவி தன் கணவனிடம் வந்து கேட்டாள்.. ஏங்க நான் பட்டம் விட்டு விளையாடபோகிறேன், நீங்களும் வாங்க.., என அழைத்துக்கொண்டு வீட்டின் மொட்டை மாடிக்கு சென்றாள்...*_

_*பட்டத்தை நூலில் கட்டி பறக்கவிட்டு மகிழ்ந்தாள்... அப்படி மகிழ்ந்திருக்கும் வேளையில் கணவன் கேட்டார்... பட்டம் மேலே பறக்க, பறக்க எவ்வளவு அழகாய் இருக்கிறது.... ஆனால் அதன் விருப்பம் போல பறக்க முடியவில்லை.. அதற்கு தடையாய் இருப்பது என்னம்மா??? என கேட்டார்...*_

_*மனைவி பட்டென பதில் சொன்னாள், இந்த நூல் தான் அதை தன் இஷ்டத்திற்கு விடாமல் கட்டி வைத்திருக்கிறது என்று சொன்னாள்...*_

_*அப்படியா என கேட்டுவிட்டு அந்த நூலை அப்படியே அறுத்து விட்டார்... பட்டமும் தன் இஷ்டபடி பறந்தது. ஆனால் சற்று நேரத்திலேயே கிழிந்த காகிதமாய் கீழே விழுந்தது...*_

_*கணவன் சொன்னார்.. .. இந்த பட்டத்தை தன் இஷ்டபடி பறக்கவிடாமல் தடுக்கவில்லை... நேரான வழியில் இந்த பட்டம் பறந்து உயரங்களை அடைய இந்த நூல் உதவியாய் இருக்கிறது...*_

_*இதேபோலத்தான்  உன் கணவனாகிய நானும் ஒரு நூல்தான்... நீதான் அந்த பட்டம்... நீ என்னுடைய பேச்சை கேட்டு அதன்படி நடப்பாயெனில் என் பாதுகாவலுடன் உயர பறக்கலாம்... உன் இஷ்டப்படி வாழ நினைத்தால் அந்த பட்டம் கிழிந்து காகிதம் ஆனது போல உன் வாழ்க்கையும் சீரழிந்துவிடும்...*_

_*இப்போது புரிந்திருப்பாய் ஏன் உன்னை கண்டித்தேன் என்பதனை... நூலாகிய என்னை அறுத்துவிடாதே என்று சொல்லும்போதே மனைவி தன்கணவனை கட்டி அணைத்துக் கொண்டாள்...!!!*_

என் அன்புக்குாியவா்களே, .. 
மனைவி மட்டுமல்ல. யாராயிருந்தாலும்  நூல் என்ற பாதுகாவலாக  தேவன் மனைவிக்கு புருஷன்  இருப்பது போல், பிள்ளைகளுக்கு பெற்றோா், வேலை செய்கிறவா்களுக்கு மேல் அதிகாரிகள்,  சபை விசுவாசிகளுக்கு  போதகராகிய மேய்ப்பன்  இப்படி எல்லா நிலையில் இருக்கிற அனைவருக்கும் கண்டிப்புடன் நடத்தும்படி  நூலாகிய ஒருவரை வைத்துள்ளாா்.  

அப்போதுதான் பட்டமாகிய நாம் கழுகுகளை போல் உயரமாய்  எல்லாவற்றுக்கும் மேலாக பறக்க முடியும். அன்பு நிறைந்த  கண்டிப்பு எங்கே உள்ளதோ அங்கே சாதனைகளையும்,  உயா்வுகளையும், மேன்மையையும்   அடுத்தடுத்து பாா்க்க முடியும். 

உங்களுக்கு மனதும், மாம்சமும் விரும்பும் 
இனிமையாய் தோன்றுகின்ற வழிகள் ஏராளம் இருக்கலாம்.. ஆனால் அவற்றின் முடிவு பயங்கரமானது..

எனவே 
உங்களை கண்டிப்பவருக்குக்  கீழ்படிந்து வாழ கற்றுக் கொள்ளுங்கள் உங்கள் இனிய வாழ்வு உங்களை வரவேற்கும்...!!!*_

அன்பு எங்கேயோ அங்கே தான் கண்டிப்பும் இருக்கும். அன்பு மட்டும் உங்களை கண்டிப்பவாிடத்தில் இல்லாமலிருக்குமானால்  அவர் மனதில் அவன் எக்கேடு  கெட்டு போகட்டும் நமக்கென்ன, பட்டாதான் புத்தி வரும். என்ற எண்ணம் தான் மேலோங்கி இருக்கும்.    

கண்டிக்கும்போது 
அதற்கு கீழ்படிந்து அடங்காமல் அவர்களுக்கு விரோதமாய்  எழும்புவதும்,  ஒரு படையை திரட்டி அவர்களை குற்றம்சாட்டுவதுமாய் சண்டை போடுவதுமாய் இருக்கிறவா்கள். இது வரை சாதித்தவா்களாகவோ, மேன்மை அடைந்தவா்களாகவோ சரித்திரம் இல்லை. 

அவர்கள் பாதாளத்தில் இருக்கிறதுபோல் தான் வாழ்க்கையின் அடிமட்டத்தில்  வீழ்ந்து கிடக்கிறார்கள் அவர்களை சீந்துவாாில்லாமல் ஏதோ வாழ்கிறார்கள்.  

பைபிள் சொல்கிறது 
நமது மாம்ச இச்சையின்படியே நடந்து, நமது மாம்சமும் மனதும் விரும்பினவைகளைச் செய்து, சுபாவத்தினாலே, மற்றவர்களைப் போலக் கோபாக்கினையின் பிள்ளைகளாய்  இருந்தோம். 

தேவனோ 
இரக்கத்தில் ஜசுவரியமுள்ளவராய் நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே, அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார். கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள் 
(எபே. 2:3-5)
அன்பும், கண்டிப்புமுள்ள 
கணவனும்,பெற்றோரும்,மேலதிகாிகளும்,நல்ல சபை போதகரும், பாிசுத்தவான்களும் உங்களுக்கு இருந்தால் நீங்கள் பாக்கியசாலிகள். அது ஒரு வரம் என்றே சொல்லலாம். பட்டம் நூலுடைய கட்டுப்பாட்டில் இருந்து உயர பறக்கிறது போலுள்ள  நல்ல வாழ்க்கை உங்களுக்கு அமைவதாக! 

இளைஞரே, மூப்பருக்குக் கீழ்ப்படியுங்கள். நீங்களெல்லாரும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள். பெருமை உள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார். ஆகையால், ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள். 
(1 பேதுரு 5:5,6)

எந்த மனுஷனும் மேலான அதிகாரமுள்ளவர்களுக்கு கீழ்ப்படியக்கடவன், ஏனென்றால், தேவனாலேயன்றி ஒரு அதிகாரமுமில்லை,உண்டாயிருக்கிற அதிகாரங்கள் தேவனாலே நியமிக்கப்பட்டிருக்கிறது. ஆதலால் அதிகாரத்திற்கு எதிர்த்து நிற்கிறவன் தேவனுடைய நியமத்திற்கு எதிர்த்து நிற்கிறான்; அப்படி எதிர்த்து நிற்கிறவர்கள் தங்களுக்குத் தாங்களே ஆக்கினையை வருவித்துக்கொள்ளுகிறார்கள் 
ரோமர் 13:1,2

மேற்கண்ட 
வேதவசனம் சொல்கிறபடி நடவுங்கள் அதனால் யாருமே எட்டாத உயரத்திற்கு தேவன் உங்களை கொண்டு செல்லுவாா். 

நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் !!!




367             அரண்மனை


தலை குனிந்து எதையோ ஆழமாய் சிந்தித்து கொண்டிருந்த விஸ்வகர்மா தயானந்தன் டக்..டக்…என குதிரை அருகே வந்து நின்ற சத்தம் கேட்டு தலை நிமிர்ந்தார். குதிரையில் இருந்து இறங்கிய வீரன் அவரை வணங்கி விட்டு நமது அரசர் இன்று மாலை உங்களை சந்திக்க வருகிறார்.அப்படியே நீங்கள் கட்டி முடிக்கவுள்ள அரண்மனையையும் பார்க்க விரும்புகிறார். சொல்லி விட்டு நிறுத்தியவனை நல்லது நீ போகலாம்..அடுத்த நிமிடம் அந்த வீரன் குதிரை ஏறி காற்றாய் பறக்க ஆரம்பித்தான்.

தயானந்த் தன் பின்புறம் அழகோவியமாய் முடிக்கும் தறுவாயில் இருந்த அந்த அரண்மனையை புன்னகையுடன் பார்த்தார்.”அற்புத மாளிகையே என் திறமையை இந்த உலகுக்கு பறைசாற்ற வந்திருக்கிறாய், என்பதை வரும் மன்னன் வாயால் கேட்கப்போகிறேன்.

அப்பொழுது நீ வெட்கப்பட்டு நிற்கப்போகிறாய்.வாய் விட்டு சொன்னவர் மீண்டும் தன் அருகில் யாரோ நிற்பதை உணர்ந்தவர் திரும்பி பார்த்தார். அவரது உதவியாளன் சச்சிதான்ந்தன் நின்று கொண்டிருந்தான்.

ஐயா மன்னர் வரப்போகிறாராரா?

ஆம்.சச்ச்சிதான்ந்த்..இன்று மாலை வருவதாக சொல்லி அனுப்பி இருக்கிறார்.வந்து அரண்மனையை பார்வையிடப்போகிறாராம்.

அவர் நிச்சயம் நீங்கள் உருவாக்கிய இந்த அரண்மனையை கண்டு பிரமித்து விடப்போகிறார்.

நிச்சயமாய்.. அனேகமாக அடுத்த மாதம் முடிவதற்குள் அவர் குடி புக நினைத்தாலும் நினைப்பார். சரி நீ என்ன செய்கிறாய் என்றால் உள்ளே சென்று நமது ஆட்களிடம் இந்த விவரத்தை தெரிவித்து விடு. முடிக்க வேண்டி இருக்கும் வேலைகளை முடித்து விட சொல்.

அவர் வரும்போது எந்த வேலைகளையும் செய்து கொண்டிருக்க வேண்டாம். புரிந்த்தா?

அப்படியே செய்கிறேன் ஐயா. அங்கிருந்து நகர்ந்தான் சச்சிதான்ந்த்.

மாலை மன்னர் பூபதி மகராஜ் வந்தவர் அரண்மனை வாயிலில் நின்றவர் தன் கண்களையே நம்ப முடியாமல் பார்த்துக்கொண்டிருந்தார்..

அற்புதம் அற்புதம் தயான்ந்த., உங்களின் கை வண்ண்மே வண்ணம். இந்த பூவுலகிலே இது வரை யாரும் பார்த்திருக்காக சிருஷ்டியை உருவாக்கி இருக்கிறீர்கள். இந்த மாளிகையின்
வனப்பு என்னை மதி மயங்க செய்கிறது. இனி எந்த நாட்டு மன்னர்களும், விருந்தினர்களும் வந்தாலும் இந்த மாளிகையில்தான் தங்குவர். அவர்கள் எல்லோரும் மதிமயங்கட்டும் இந்த மாளிகையை பார்த்து. சொல்லி விட்டு ஆன்ந்தமாய் சிரித்தார் மகராஜா.

நன்றி மன்னா, நீங்கள் அடுத்த மாத இறுதிக்குள் இங்கு குடி வந்து விடலாம்.

நீங்கள் எப்பொழுது சொன்னாலும் ஓடி வந்து விடுவேன்.உங்களுக்கு என்ன கைமாறு செய்வேன் என்று யோசனை செய்து கொண்டுள்ளேன்.

மன்னா உங்களது அன்பு ஒன்றே போதும்.

இல்லை விஸ்வகர்மா, நான் ஒத்துக்கொள்ள மாட்டேன். ஒரு நிமிடம் உன் கண்களில் இந்த மாளிகையை பார்க்காமல் என்ன்னை போல சாதாரண மக்களின் கண்களாக நினைத்து இந்த மாளிகையை பார்..

வாயிலில் உயிரோடு நிற்பது போல் தோற்ற்மளிக்கும் இரு யானைகளும், அதனை ஒட்டி பளிங்கு போல தோற்றமளிக்கும் முகப்புக்களும் உள்ளே பார்த்தால் இயற்கை அன்னை வந்து உள்ளே வந்து விட்டாளோ என்ற அமைப்புடன் இருக்கும் சுவர்களும், என்னால் இந்த அழகின் வேதனையை அனுபவிக்க அனுபவிக்க ஆசை அடங்கவில்லை.

மன்னா உங்கள் ரசனை என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது. போதும் மன்னா நான் ஒரு கலைஞன், உங்களின் அன்பு என்னை உணர்ச்சிக்கடலில் ஆழ்த்தி விடுகிறது. சர் விஸ்வகர்மா..நான் விடை பெறுகிறேன். அடுத்த முறை இங்கு குடிவருவது போலத்தான் வருவேன். அது மட்டுமல்ல இந்த அரண்மனையை சுற்றித்தான் இனி நம் அனைத்து அலுவல்களும் நடைபெற வேண்டும் என்று உத்தரவு போடுகிறேன்.

நல்லது மன்னா..விடை பெற்றார் மகராஜா.

மன்னர் வந்து சென்ற பின் இரண்டு நாட்கள் கழித்து வந்த மந்திரியார், தயான்ந்த் உடன் இந்த அரண்மனையை சுற்றிப்பார்த்து, அற்புதமாக உருவாக்கியுள்ளீர்கள். என் கண்களையே நம்ப முடியவில்லை.இப்படி ஒரு மாளிகையை எழுப்ப இனி அடுத்த விஸ்வகர்மா எப்பொழுது தோன்றுவாரோ?

மந்திரியாரே உங்கள் அன்புக்கு நன்றி..

நான் ஒரு யோசனை சொல்லட்டுமா விஸ்வகர்மா அவர்களே

சொல்லுங்கள் மந்திரியாரே..

நீங்கள் வெளியூர்களுக்கு எல்லாம் செல்ல வேண்டும், உங்கள் பெயர் உலகம் முழுக்க பரவ வேண்டும் என்று விரும்புகிறேன்.

நன்றி மந்திரியாரே ! நான் இதை பற்றி ஆலோசிக்கிறேன்.

மந்திரியார் விடை பெற்று சென்றவுடன், யோசனையுடன் நின்று கொண்டிருந்தார் விஸ்வகர்மா.

அன்று அரண்மனை முழுவதும் அன்று மலர்ந்த மலர்களால் அலங்கரிக்கப்பட்டு கோலாகலாமாய் இருந்தது. வந்திருந்த அனைவரும் அந்த அரண்மனையின் அழகில மயங்கி நின்று விட்டனர்.

பூபதி மகராஜா தன் பரிவாரங்களுடன் வந்தவர்களை வரவேற்று உபசரித்து கொண்டிருந்தார். தன் தளபதியின் காதில் ஏதோ சொல்ல அவரும் தலையாட்டி விட்டு வாசலுக்கு சென்று நின்று கொண்டார்.

வாசலில் தன் உதவியாளனுடன் வந்த விஸ்வகர்மா தயான்ந்துவை இரு கரம் கூப்பி வரவேற்றான் தளபதி. வரவேற்பை ஏற்றுக்கொண்டு தலை குனிந்த விஸ்வகர்மா தயான்ந்த்,
நிமிர்ந்து தான் கட்டி முடித்த அரண்மனையை கண் குளிர கண்டார். அதன் வரவேற்புக்காக அவர் அமைத்திருந்த யானை சிலையை தடவி பார்த்தார்.இரு யானை சிலைகளையும் ஆசை தீர தடவிக்கொண்டிருந்தவரை தளபதி தங்களை மன்னர் மரியாதையுடன் அழைத்து வர சொல்லி இருக்கிறார். நல்லது வாருங்கள் உள்ளே செல்லுமுன் உதவியாளரிடம் திரும்பி நான்
நமது இல்லத்தின் அருகில் இருந்த கோயிலில் நமது பொருட்களை வைத்து விட்டு வந்து விட்டேன்.நீ தயவு செய்து அதை எடுத்து வந்து விடு என்று உத்தரவு இட்டார்.
தளபதி நீங்கள் செல்ல வேண்டாம் என் வீர்ர்களை அனுப்புகிறேன், எங்கு என்று மட்டும் சொல்லுங்கள்.

இல்லை தளபதியாரே, பூஜை செய்த அந்த பொருட்களை இன்னொரு விஸ்வகர்மாதான் தொட வேண்டும். ஆகவே அவர் செல்ல அனுமதி கொடுங்கள்.

சரி சீக்கிரமாய் சென்று எடுத்து வாருங்கள் தளபதி சொல்லி தயான்ந்தை மட்டும் உள்ளே அழைத்து சென்றான்.

வாருங்கள் விஸ்வகர்மா அவர்களே, பூஜைக்கு நேரமாகி விட்டது. அந்த அறையை பூஜைக்கு தேர்ந்தெடுத்து உள்ளோம். நீங்கள் சென்று முதல் ஆரத்தியை காட்டுங்கள், தளபதியாரே அவரை அழைத்து செல்லுங்கள்.

அந்த அறைக்குள் நுழைந்து அங்கு வைத்திருந்த சிலையை குனிந்து வணங்கிக்கொண்டிருந்த விஸ்வகர்மாவை அருகில் இருந்த தளபதி தனது வாளால் அவர்து தலையை சீவினான்.

விஸ்வகர்மாவின் தலை தனியாக சென்று உருண்டது. உடலில் இருந்து இரத்தம் பீச்சியடித்து

அந்த அறை முழுவதும் வழிந்தது.

சிறிது நேரம் அவர் உடல் துடிப்பதை பார்த்துக்கொண்டிருந்த தளபதி மன்னர் அருகில் சென்று அவரது காதில் சொல்ல அவர் முகம் மெல்ல புன்னகை புரிந்தது. நல்ல காரியம் செய்தாய்,
இனி அவன் இது போல எந்த காலத்திலும் இப்படிப்பட்ட அரண்மனையை கட்டக்கூடாது.

சொல்லி விட்டு சிரித்தான்.

அதன் பின் கோலாகலமாக அந்த விழா நடந்து கொண்டிருந்தது. நான்கு மணி நேரம் கழிந்து அந்த அரண்மனை அப்படியே சரிந்து விழுந்து மன்னர் உட்பட அங்கிருந்த அத்தனை பேரும் மண்ணோடு மண்ணாக சமாதியாகிவிட்டனர்.

ஓரிரு நாட்கள் கழிந்தபின் மந்திரியாரிடம் சொல்லிக்கொண்டிருந்தான் உதவியாளன். ஐயா அவருக்கு தளபதியே தன்னை வரவேற்க நின்று கொண்டிருப்பதை கண்டவுடன் சந்தேகம் தோன்றி விட்டது. தான் எப்படியும் உயிர் பிழைக்க முடியாது என்பதை உணர்ந்தவர் என்னை காப்பாற்ற அங்கிருந்து அப்புறப்படுத்தி விட்டார்.

அது சரி, மாளிகை எப்படி தரை மட்டமானது.

ஐயா, நாங்கள் கலைஞர்கள்தான், ஆனால் சூட்சும்மானவர்கள். அன்று நீங்கள் ஒரு வார்த்தை அவரிடம் சொன்னது அவர் மனதில் பொறி பறந்தது, அதாவது வெளியூர் சென்று விடு என்று சொன்னதும் அவருக்கு சந்தேகம் வந்து விட்டது.

நாங்கள் எப்பொழுதும் ஒரு கட்டிடத்தை முடிக்கும்பொழுது அதனுடைய முடிச்சாய் ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து அதனுள் அமைத்து விடுவோம். எவ்வளவு பெரிய கட்டிடமாய் இருந்தாலும் அங்கிருந்த ஒரு கல்லை மாற்றி வைத்தால் அந்த கட்டிடமே காணாமல் போய் விடும்.அதனை வாயிலில் நின்றிருந்த இரு யானைகளிலும் வைத்திருந்தோம். இவர் உள்ளே செல்லுமுன் அந்த யானைகளை தடவுவதாக தளபதி நினைத்தான். இல்லை, அந்த சூட்சுமத்தை அவர் செய்து கொண்டிருந்தார்.

அதாவது அந்த இரு யானைகளும் இத்தனை நாழிகைக்குள் அவரே திரும்பி வந்து அந்த சூட்சுமத்தை சரி செய்து விட வேண்டும். இல்லாவிட்டால் அது அந்த அரண்மனையின் முடிச்சுக்களை அவிழ்க்க ஆரம்பித்து விடும்.

அவரைத்தான் அங்கேயே சமாதி ஆக்கி விட்டார்களே,எப்படி வந்து சரி செய்திருக்க முடியும். அந்த யானை சிலைகள் தன்னுடைய வேலையை காண்பித்து விட்டது.

மந்திரி “எனக்கு இவர்கள் திட்டம் புரிந்ததனால் விஸ்வகர்மாவிடம் சொல்லாமல் சொன்னேண். ஆனால் விதி யாரை விட்டது என பெருமூச்சு விட்டார். 

என் அன்பு வாசகர்களே,
இந்த ராஜாவைப் போலத்தான் அநேகர் இன்று வாழ்ந்து வருகின்றனர். தற்பெருமை உடையவர்களாய் வாழ்ந்து இறுதியில் தங்கள் வாழ்க்கையை தாங்களே கெடுத்துக் கொள்கிறார்கள். 

மற்றவர்களால் எவ்வளவு புகழ், பணம் சம்பாதிக்க முடியுமோ சம்பாதித்து விட்டு அவர்களின் தேவை முடிந்ததும் குழம்பிலிருந்து கறிவேப்பிலையை தூக்கி வீசுவதை போல வெளியே வீசி எறிகின்றனர். பிறரின் உழைப்பை உதாசீனப்படுத்தி நாம் நன்றாக வாழ வேண்டும் என்று நினைத்தால் ரொம்ப நாட்கள் அவ்வாறு வாழ‌ முடியாது. பிறரின் உழைப்பிற்கேற்ற ஊதியத்தை கொடுத்து அவர்களை சந்தோஷப்படுத்தினால் தான் நாமும் சந்தோஷமாய் வாழ முடியும்.

எசேக்கியா ராஜா தன் நாமம் விளங்க வேண்டும்  அரண்மனையையும், பொக்கிஷ சாலை என எல்லாவற்றையும் பாபிலோனின் ராஜாவுக்கு காண்பித்தான். ஆனால் அதற்கு கிடைத்த பிரதிபலன் என்ன என்பதை வேதம் இவ்வாறு கூறுகிறது,

17 இதோ நாட்கள் வரும், அப்பொழுது உமது வீட்டில் உள்ளதிலும், உமது பிதாக்கள் இந்நாள்வரைக்கும் சேர்த்ததிலும் ஒன்றும் மீதியாக வைக்கப்படாமல் எல்லாம் பாபிலோனுக்குக் கொண்டுபோகப்படும். 
2 இராஜாக்கள் 20:17

18 நீர் பெறப்போகிற உமது சந்தானமாகிய உமது குமாரர்களிலும் சிலர் பாபிலோன் அரமனையிலே அரமனை வேலைக்காரராயிருப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான். 
2 இராஜாக்கள் 20:18

எனவே நாம் உழைப்பதாயிருந்தாலும், நமக்காக மற்றவர்கள் உழைப்பதாயிருந்தாலும் ஒருபோதும் விருதவாய் போகாதபடி காத்துக்கொண்டால் எந்நாளும் ஆசீர்வதிக்கப்பட்ட சந்ததியாயிருப்போம்.


23 அவர்கள் விருதாவாக உழைப்பதில்லை, அவர்கள் துன்பமுண்டாகப் பிள்ளைகளைப் பெறுவதுமில்லை, அவர்களும், அவர்களோடேகூட அவர்கள் சந்தானமும் கர்த்தராலே ஆசீர்வதிக்கப்பட்ட சந்ததியாயிருப்பார்கள்.

ஏசாயா 65:23

நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!!!



368     குறை சொல்லும் உலகம்  இது


நன்மைசெய்யும்படி உனக்குத் திராணியிருக்கும்போது, அதைச் செய்யத்தக்கவர்களுக்குச் செய்யாமல் இராதே. - (நீதிமொழிகள் 3:27)

திடீரென்று 🏝ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. 
அதில் ஒரு பெண் அடித்து செல்லப்பட்டு தத்தளித்து கொண்டிருந்தாள். அதை அவ்வழியே வந்த துறவி ஒருவர் கவனித்தார். உடனே தாமதமின்றி 🏝ஆற்றில் குதித்து அப்பெண்ணை தூக்கி தோளில் போட்டு கொண்டு அக்கரைக்கு சென்று அவளை இறக்கி விட்டார். அப்பெண்ணும் தன்னை காப்பாற்றிய 🤕துறவிக்கு உள்ளத்திலிருந்து நன்றி கூறினாள்.
 துறவியும் அவருடன் வந்த சீஷனும் தங்கள் பயணத்தை தொடர்ந்தனர். 
சற்று தொலைவு சென்ற பிறகு சீஷன் மெதுவாக, 'என்ன இருந்தாலும் நீங்கள் அந்த பெண்ணை தொட்டு தூக்கியிருக்க கூடாது' என்றான். அதற்கு துறவி 'எனது துறவறத்தை காட்டிலும் ஒரு உயிர் முக்கியமானதல்லவா❓ 
ஆகவே காப்பாற்றினேன், நான் அவளை எப்போதோ இறக்கி விட்டேன். 
ஆனால் நீயோ இன்னும் சுமந்து கொண்டே இருக்கிறாயே' என்று கூறினார்.

நாம் இந்த கதையில் வாசித்தபடி இரண்டு விதமான மக்களை இந்த உலகத்தில் பார்க்க முடியும்.
ஒன்று அந்த துறவியை போல உடன் இருப்பவர்கள் என்ன நினைப்பார்கள் என்றோ, அல்லது குற்றம் சாட்டுவார்கள் என்றோ பயப்படாமல் மற்றவர்களுக்கு, குறிப்பாக கட்டாயம் உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவி செய்கிறவர்கள்.
இரண்டாவது அந்த சீஷனை போல நாம் என்ன நல்ல காரியம் செய்தாலும் அதை தவறான கண்ணோட்டத்துடன் பார்த்து நம்மை எப்பொழுதும் குறை சொல்லும் மக்கள் கூட்டம். 
இதை படிக்கிற நீங்கள் 'என்னுடைய நிலைமையும் இப்படித்தான் இருக்கிறது, ஆபத்தில் உள்ளவர்களுக்கும் தேவையோடும் உள்ளவர்களுக்கும் உதவி செய்ததால் தேவை இல்லாத குற்றச்சாட்டுகளும் நிந்தனைகளும் என்மேல எழும்புகிறது. எனவே இப்பொழுது எனக்கு நன்மை செய்ய ஆசையும் சக்தியும் இருந்தும் மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என பயந்து யாருக்கும் நான் உதவி செய்வதில்லை' என வாழ்வீர்களானால் இன்றைக்கே அந்த மனுஷ பயத்தில் இருந்து வெளியே வாருங்கள். 
நீங்கள் உதவி செய்ததை தவறாக புரிந்து கொண்டு குற்றம் சாட்டுபவர்களையும் அந்த குற்றச்சாட்டையும் மறந்துவிட்டு அடுத்து ஆண்டவருக்காக என்ன செய்யமுடியுமோ அந்த வேலையில் உங்கள் கவனத்தை திருப்புங்கள்.
 அப்பொழுதுதான் நீங்கள்  தெளிந்த புத்தியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கை வாழ முடியும்




    369           குதிரைச்சாணம்

காட்டுப்பகுதியில் ஆழ்ந்த தவத்தில் இருந்தார் அந்த மகரிஷி. அவர் தவத்தின் போதே கண் திறக்காமல், தினமும் ஒருமுறை கையை நீட்டுவார். கையில் யாராவது எதையாவது வைத்தால், அது என்ன ஏதென்று பார்க்காமல் அப்படியே விழுங்கி விடுவார். முனிவர் கையை நீட்டும் நேரம் பார்த்து, பக்தர்கள் நறுக்கிய கனிகள், அப்பம் முதலியவற்றை வைப்பார்கள். இதனால் தங்களுக்கு புண்ணியம் சேரும் என்று அவர்கள் கருதினர்.

ஒருநாள் அந்த நாட்டின் அரசன் வேட்டைக்கு வந்தான். அன்று பக்தர்கள் யாரும் வரவில்லை. அந்நேரம் பார்த்து, மகரிஷி கையை நீட்டினார். மன்னன் மகரிஷியைப் பரிகாசம் செய்யும் நோக்கத்தில், தான் வந்த குதிரை போட்ட சாணத்தில் சிறிது எடுத்து மகரிஷியின் கையில் வைத்தான். மகரிஷியும் அதை வாயில் போட்டு விட்டார். மன்னன் கலகலவென சிரித்தபடியே அங்கிருந்து போய்விட்டான்.

மறுநாள் மன்னனின் நலம் விரும்பியாக உள்ள வேறு ஒரு முனிவர் அரசவைக்கு வந்தார். முக்காலமும் உணர்ந்த அவர், ‘மன்னா! நேற்று நீ காட்டில் தவமிருக்கும் மகரிஷிக்கு, குதிரைச்சாணம் கொடுத்தாய் அல்லவா?. அது நரகத்தில் மலை போல் வளர்ந்து கொண்டிருக்கிறது. நீ நரகம் வந்ததும், அதை உண்ண வைப்பார்கள். அதற்கு தயாராக இரு!’ என்று கூறி விட்டு போய்விட்டார். 

மன்னன் நடுங்கி விட்டான். தான் விளையாட்டாக செய்த தவறை எண்ணி வருந்தினான்.தான தர்மங்கள் செய்து, தன் பாவங்களைக் குறைக்க முடிவெடுத்தான். அரண்மனை நந்தவனத்தில் ஒரு குடில் அமைத்து அங்கேயே தங்கினான். அரண்மனை ஆடம்பர சுகத்தை மறந்தான். தன் நாட்டிலுள்ள இளம்பெண்களை குடிலுக்கு வரவழைத்து, அவர்களது திருமணத்துக்கு தேவையான நகை, பணம் கொடுத்து, பாவம் செய்வதின் கெடுதல் பற்றி எடுத்துக்கூறி அனுப்பிவைத்தான். இது நாள்தோறும் நடைபெறும் ஒரு நிகழ்வாக மாறிவிட்டது.

அரசனின் இந்த தினசரி வழக்கத்தை, அந்த நாட்டில் சிலர் வேறுமாதிரியாக கதை கட்டி விட்டனர். ‘மன்னன், இளம்பெண்களை தவறான நோக்கில் குடிலுக்கு வரச் சொல்கிறான். தவறுக்கு கூலியாக நகை, பணம் தருகிறான்’ என்று திரித்துக் கூறினர். இப்படியாக பல விமர்சனங்கள் வந்தவண்ணமிருந்தன.

ஒருநாள் கற்புக்கரசியான பெண் ஒருத்தி, பார்வையற்ற தன் கணவருடன், அரசனின் குடில் முன்பாக நின்று யாசகம் கேட்டாள். அந்த கணவன், ‘நீ யார் வீட்டு முன்பு இப்போது நிற்கிறாய்?’ எனக் கேட்டான். ‘அரசன் அமைத்திருக்கும் குடில் முன்பு’ என்று பதிலளித்தாள் அந்தப் பெண்.

அதற்கு அவளது கணவன், ‘ஓ! தானம் கொடுப்ப தாகச் சொல்லிக் கொண்டு, பெண்களின் கற்பைச் சூறையாடுகிறானே, அவன் வீட்டு முன்பா?’ என்றான். அந்தப் பெண் பதறிப்போய் உடனடியாக அவனது வாயைப் பொத்தினாள்.

பின் மெதுவாக தன் கணவனிடம் கூறத்தொடங்கினாள். ‘சுவாமி! என் கற்பின் சக்தியால், நான் முக்காலத்தையும் உணர்ந்து சொல்வேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த மன்னன், ஒரு மகரிஷிக்கு குதிரைச் சாணத்தை கொடுத்தான். அது நரகத்தில் மலையளவாக குவிந்து, இவன் உண்பதற்காக தயாரானது. அவ்விஷயம் மன்னனுக்குத் தெரிய வரவே, அந்த பாவ மலையை கரைக்கும் பொருட்டு, கன்னியருக்கு தானதர்மம் செய்து நற்போதனைகளைச் செய்து வருகிறான்.

ஆனால் சிலர் மன்னனைப் பற்றி தவறாகப் பேசி, அவனுக்காக குவிக்கப்பட்டிருந்த சாண மலையில், ஒவ்வொரு கவளமாக ஒவ்வொருவரும் பங்கிட்டுக் கொண்டனர். கடைசி கவளம் மட்டும் பாக்கியிருந்தது. தற்போது மன்னனைப் பற்றி தவறாகப் பேசியதன் காரணமாக, அந்த கடைசி கவளத்தை தாங்கள் எடுத்துக் கொண்டீர்கள். மேலும் அடுத்தப் பிறவியிலும் கூட தாங்கள் பார்வையற்றவராகவே பிறப்பீர்கள்’ என்று கூறினாள். அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போனான் அவளது கணவன்.

என் அன்பு வாசகர்களே,
தவறு செய்தவர்கள் திருந்த எடுக்கும் முயற்சியை விமர்சிக்கக் கூடாது. அவர்களை தவறாக விமர்சித்தால், அவர் செய்த பாவங்களைப் பங்கு போட்டுக் கொள்ளும் நிலைமைக்கு ஆளாக வேண்டி வரும்.

நாம் செய்கின்ற ஒவ்வொரு காரியத்திற்கும் நிச்சயம் பிரதிபலன் உண்டு. உடனே சிலர் கேட்பார் தேவன் தான் என்னுடைய பாவம் நான் செய்தது, செய்யப்போவது என எல்லாவற்றையும் மன்னித்து விட்டாரே பிறகு என்ன???. நன்றாய் புரிந்துக் கொள்ளுங்கள் நாம் அறியாது, தெரியாது செய்த காரியம் மட்டும் தான் மன்னிக்கபடுமே அன்றி மனதார வேண்டுமென்று செய்த காரியம் ஒருபோதும் மன்னிக்கப்படாது.

வேதாகமத்தில் தேவ ஊழியக்காரனாகிய எலியா நாகமானை குஷ்டரோகத்திலிருந்து விடுவித்த நேரத்தில் அவன் கொடுத்த வெகுமதிகளை அவன் ஏற்றுக்கொள்ளாமல் தள்ளிவிட்டான். ஆனால் அவனுடைய வேலைக்காரனோ அந்த பொருட்கள் மீது ஆசை வைத்து நாகமானை பின்தொடர்ந்தது சில வெகுமதிகளை வாங்கி தன் வீட்டில் வைத்து எலியாவைக்காண சென்றான்.

அவன் இவ்வாறு தான் செய்வது தவறு என்று தெரிந்தும் அதை செய்தபடியால் நாகமானின் குஷ்டம் இவனை‌ பிடித்தது. அதுபோலவே புதிய ஏற்பாட்டு காலத்தில்  அனனியாவும் அவன் மனைவியும் தங்கள் நிலத்தில் ஒரு பகுதியை மனதார வஞ்சித்து வைத்து மீந்ததை பேதுருவிடம் கொண்டு சென்றபோது அந்த இடத்தில் தானே தங்கள் ஜீவனை இழந்தனர்.

வேதம் சொல்கிறது,
30 அறியாமையுள்ள காலங்களைத் தேவன் காணாதவர்போலிருந்தார். இப்பொழுதோ மனந்திரும்பவேண்டுமென்று எங்குமுள்ள மனுஷரெல்லாருக்கும் கட்டளையிடுகிறார்.

அப்போஸ்தலர் 17:30

அறியாமல் செய்ததை காணாமலிருந்த தேவன் அறிந்த செய்கின்ற காலங்களை கணக்கில் வைத்து அதற்கான பிரதிபலனை கட்டளையிடுவார். எனவே அதற்கு வழி உண்டாகாதபடிக்கு இப்பொழுதே மனந்திரும்புவோம் தேவ இராஜ்ஜியத்தை சுதந்தரிப்போம்...

நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!

 


370           திறமையை உபயோகித்தல்....


ஓர் அழகிய ஊரில் ஒரு சின்ன கிராமம். அந்தக் கிராமத்துக்கு ஒருமுறை ஒரு குரங்கு ஒன்று வந்தது. சுட்டித்தனத்திற்கு பேர் போனது அல்லவா குரங்கு எனவே, வந்த சில நிமிடங்களில் ஒரு ஓட்டு வீட்டின் கூரை மீது ஏறியது. நமது மக்களை சொல்லவா வேண்டும் எல்லாவற்றையும் வேடிக்கை பார்க்கவில்லை என்றால் தூக்கம் வராது அல்லவா. எனவே அந்த மக்கள் குரங்கை வேடிக்கை பார்க்க, குரங்கிற்கு பயங்கர குஷியாகிவிட்டது. தாவியும் பல்டி அடித்தும் சில வித்தைகளைச் செய்தும் மக்களை மகிழ்வித்தது.


மகிழ்ச்சியில் மிதந்த மக்கள் குரங்கிற்குப் பழங்களைத் தூக்கி வீசினர். அவற்றை லாவகமாக பிடித்த குரங்கு எல்லாவற்றையும் ஆற அமற மூச்சுமுட்ட நன்றாக சாப்பிட்டது. பின்னர் நன்றி கூறுவதுபோல ‘சலாம்' வைத்துவிட்டு அடுத்த கிராமத்தை நோக்கி தன் பயணத்தை தொடங்கியது.

இதையெல்லாம் ஓரமாக நின்றுப் பார்த்துக்கொண்டிருந்தது ஒரு கழுதைக்குட்டி. அது தன் மனதிற்குள் இவ்வாறு சிந்தித்தது " நான் தினமும் என்னால் சுமக்க முடியாத சுமையைச் சுமக்கிறேன், என் மீது ஏறி மனிதர்கள் அடுத்தடுத்த கிராமங்களுக்கு பயணம் மேற்கொள்கின்றனர், என்னுடைய பால் விலையுயர்ந்தது அதிலிருந்து தான் அழகுசாதன பொருட்கள் கூட தயாரிக்கின்றனர்". இப்படி என்னால் அநேக பயன்கள் இருந்தும் என்னை யாரும் மதிப்பதில்லை, அதற்கு பதில் அடியும் உதையும் தான் கிடைக்கிறது. ஆனால் அந்த குரங்கிற்கு பழங்களை வீசுகின்றனர். ஒருவேளை நாமும் இப்படிச் சாகசம் செய்தால் தான் மக்கள் நம்மை ரசிப்பார்களோ?’’ என்று யோசித்தது.

அந்த கழுதைக்குட்டிக்கு அருகில் ஒரு கன்றுக்குட்டி புல் மேய்ந்துகொண்டிருந்தது . அது கழுதையின் யோசனையை அறிந்து  அதைப் பார்த்து ‘‘உனக்கு எதற்கு அதெல்லாம்? நீ ஏன் பிறருக்குக் கிடைக்ககூடிய அதே புகழ்ச்சி உனக்கும் கிடைக்க வேண்டும் என்று சிந்திக்கிராய். உன் வேலையை நீ சரியாகச் செய்தால் நிச்சயமாக உன்னை எல்லோரும் பாராட்டுவார்கள்’’ என்று அறிவுரை கூறியது.

உடனே கழுதைக்குட்டி ‘‘நானும் என் அம்மாவை போன்று பொதி சுமந்து கஷ்டப்பட்டு வாழ விரும்பவில்லை, அந்த குரங்கைப் போல நானும் எதாவது வித்தை செய்து, எனக்கான புதிய பாதையை ஏற்படுத்துவேன்'' என்று கர்வத்துடன் மதில்சுவர் மீது தாவி, அங்கிருந்து வீட்டுக் கூரைக்குத் சென்றது. தெருவில் சென்றுகொண்டிருந்த மக்கள் திகைத்து கழுதைக்குட்டியைப் பார்த்தார்கள். ‘‘அந்தக் கழுதை என்ன செய்யுது?'' என்று கூச்சலிட்டார்கள். கழுதைக்குப் பயங்கர சந்தோஷம். அப்பாடா நம்மையும் மக்கள் பார்க்கிறார்கள் என சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தது. 

சிறிது நேரத்தில் கூரை ஓடுகள் உடைந்து சரிய, நிலைதடுமாறி கீழேவந்து `தொப்' என விழுந்தது.
அந்த ஓட்டு வீட்டின் உரிமையாளர் வேகமாக வெளியில் வந்து கழுதையையும் உடைந்த ஓட்டு துண்டுகளையும் பார்த்து விட்டு ஒரு பெரிய தடியை எடுத்து  அந்த கழுதையை பயங்கரமாக தாக்கினார். கழுதை தப்பித்தால் போதும் என்று நினைத்து அங்கிருந்து ஓடியது. 

‘‘தேவையற்ற வித்தை வேண்டாம் என்று இதற்குத்தான் அப்போதே சொன்னேன்'' நீ கேட்கவில்லை என்று வருத்தத்துடன் கூறி அவ்விடம் விட்டுச் சென்றது கன்றுக்குட்டி.

எனதருமை வாசகரே, 
அநேகர் இதுபோன்று தான் தனக்கு தெரியாத தனக்கு சம்பந்தம் இல்லாத அநேக காரியங்களில் ஈடுபட்டு கடைசியில் வருந்துகின்றனர். தேவன் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு திறமையை கொடுத்திருக்கிறார். எல்லாவருக்கும் ஒன்றுபோல அல்ல வெவ்வேரு திறமைகளை கொடுத்திருக்கிறார். எப்படி? ஒருவருக்கு நன்றாக பாடல் பாடும் திறமை. இன்னொருவருக்கு நன்றாக இசையமைக்கும் திறமை என சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் நாமோ மற்றவர்களுடைய திறமையை பார்த்து மெச்சிக்கொண்டு எனக்கு அந்த திறமை இல்லையே என புலம்புகிறோம். அவர்களை போலவே நாமும் செய்ய வேண்டும் என்று விரும்புகிறோம். நம்மிடத்தில் உள்ள திறமையை நாம் கவனிப்பதில்லை.

மத்தேயு சுவிஷேசத்தில் நம் எல்லாருக்கும் தெரிந்த தேவன் கூறிய ஒரு உவமையை கீழே காண்போம். 

அவனவனுடைய திறமைக்குத்தக்கதாக, ஒருவனிடத்தில் ஐந்து தாலந்தும், ஒருவனிடத்தில் இரண்டு தாலந்தும், ஒருவனிடத்தில் ஒரு தாலந்துமாகக் கொடுத்து, உடனே பிரயாணப்பட்டுப் போனான்.

மத்தேயு 25:15

ஒருவனுக்கு 5, மற்றொருவனுக்கு 3, இன்னொருவனுக்கு 1 என எஜமான் பிரித்து கொடுக்கிறார். ஏன் மூவருக்கும் சமமாக கொடுத்திருக்கலாமே. ஏன் அப்படிசெய்யவில்லை?? எஜமான் பட்சபாதம் பார்க்கிறவரா?? இல்லவே இல்லை. 

மேற்கூரிய வசனத்தின் ஆரம்பம் இவ்வாறு சொல்கிறது "அவனவனுடைய திறமைக்குத்தக்கதாக" என்று. எனவே நமக்குள் இருக்கும் திறமையை நாம் நம்முடைய படிப்பில், செய்யும் வேலையில், தொழிலில், தேவ ஊழியத்தில் முறையாக முதலீடு செய்யும் போது, தாலந்துகளாகிய ஐசுவரியம், ஜீவன், சுகம், பெலன், ஆரோக்கியம் என அனைத்தையும் தேவன் அருளுவது அதிக நிச்சயம் அல்லவா.

 என்னுடைய தாலந்தை நான் அறிந்துக்கொண்டு அதை பயன்படுத்த எனக்கு உதவி செய்யும் என்று இப்பொழுதே தேவனிடத்தில் கேளுங்கள், உங்களுடைய தாலந்தை உங்களுக்கு வெளிப்படுத்தி அதை நீங்கள் உபயோகிக்க தேவன் கிருபை செய்வார்.
 
371        அவர் என் மேய்ப்பர்" 

ஒரு பிரசித்தி பெற்ற நடிகர், 
ஒருமுறை 23- ம் சங்கீதத்தை நாடகமாகவே நடித்துக் காண்பித்தார். பின்பு, "கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறார்" என்று ஒரு கெம்பீரக் குரலில் வாசித்து, முகபாவனைகளை அதற்கேற்றாற்போல் மாற்றி, ஏற்ற இடங்களில் தன் குரலை இறக்கி, ஏற்றி, நடுங்கச் செய்து அபிநயமும், சொல்லாற்றலும் சிறந்து விளங்க எல்லோரையும் கவரும்படிச் செய்தார்.

முழு சங்கீதமும் முடிந்ததும், ஜனங்கள் பேரானந்தமாய், ஆரவாரம் செய்து, கைதட்டி, மகிழ்ந்தனர்.

அப்பொழுது எதிர்பாராதவிதமாக ஒரு வயதான போதகர். மேடையை நோக்கி வந்தார். மேடையிலே நின்றபோது அவர் உள்ளம் தேவன் செய்த எண்ணில்லாத நன்மைகளை நினைத்துப் பொங்கியது.

அவர் 23 - ம் சங்கீதத்தை திறந்தார். ஒவ்வொரு வசனத்தையும் உருக்கத்தோடு, அர்த்தத்தை உணர்ந்தவராய், மெய்ச்சிலிர்க்க வாசித்தார்.

"நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும் நான் கர்த்தருடைய வீட்டிலே" அவர் வாசித்துக் கொண்டிருக்கும்போதே அனைவரின் கண்களிலும் கண்ணீர் தேம்பியது. விம்மி விம்மி அழ ஆரம்பித்து விட்டார்கள்.

முடிவில் நடிகர் கேட்டார், "போதகரே, என்னால் சிரிக்க வைக்க மட்டுமே முடிந்தது. ஆனால் நீரோ எல்லோரையும் உருகச் செய்து விட்டீரே" போதகர் சொன்னார். "நடிகரே, உமக்கு 23 - ஆம் சங்கீதத்தைத் தெரியும். எனக்கோ, அந்த சங்கீதத்தின் மேய்ப்பரைத் தெரியும். அவர் என் மேய்ப்பர்" என்றார்.

கர்த்தர் என் மேய்ப்பர் ' என்று சொல்லும் நீங்கள், அவரது மேய்ச்சலின் ஆடாய், உங்களைத் தாழ்த்தி ஒப்புக்கொடுப்பீர்களா?

 "எங்கள் கண்களினாலே கண்டதும், நாங்கள் நோக்கிப் பார்த்ததும், எங்கள் கைகளினாலே தொட்டதுமாயிருக்கிற ஜீவவார்த்தையைக் குறித்து உங்களுக்கு அறிவிக்கிறோம்" (1 யோவான் 1:1)


372               முட்டாத்தனம்
 
ஒரு கிராமத்தில் ஒருவர் இருந்தார். ருசியான வித விதமான வடைகள் சுடுவதில் வல்லவர். அது தான் அவரது தொழிலும் கூட. அவருக்கு எழுதப் படிக்கத் தெரியாது. அதனால் எந்த செய்தித்தாள்களையும் அவர் படிக்க மாட்டார். செய்தித்தாள்களைப் படிக்கும் பழக்கம் இல்லாததால் நாட்டில் என்ன நடக்கிறது என்பதைக் குறித்து பெரிதாக அலட்டிக் கொள்ள மாட்டார். அதனால் டிவி பார்க்கும் பழக்கமும் அவருக்கு இல்லை.

அதனால் அவரது முழுக் கவனமும் அவரது வடை தொழிலில் மட்டுமே இருந்தது. வேறு எந்த  சிந்தனையும் அவருக்கு இல்லை. விதவிதமான ருசியான வடைகளைத் தருவதால் அதுவும் குறைவான விலையில் தரமாகத் தருவதால் அவரது கடைக்கு வாடிக்கையாளர்கள் கூட்டமும் மிக அதிகமாக இருந்தது. வருமானமும் நிறைவாக இருந்தது. அவரும் மகிழ்ச்சியாக இருந்தார்.

அவருக்கு ஒரு மகன் இருந்தான். அவன் சென்னையில் மிகப் புகழ்பெற்ற ஒரு கல்லூரியில் எக்கனாமிக்ஸ் படித்து வந்தான். பேஸ்புக், ட்விட்டர் என சமூக வலைத்தளங்களிலும் மிக ஆக்டிவ்வாக இருப்பான். விடுமுறையில் ஊருக்கு வந்தான். அப்படியே தன் தந்தையின் கடைக்கும் போனான்.

அங்கே வடைகளுக்காக விதவிதமான மளிகை சாமான்கள், காய்கறிகள் எண்ணெய் வகைகள் என ஏகப்பட்ட சரக்குகளை தன் தந்தை வாங்கி வைத்து இருப்பதைப் பார்த்தான்.

நேராக தந்தையிடம் சென்றான்,

"என்னப்பா நீ...முட்டாத்தனமா இருக்க...நாட்ல பொருளாதார மந்தநிலை இருக்குறது உனக்கு தெரியாதா? பல ஆட்டோமொபைல் கம்பனிங்க சங்கடத்துல இருக்கு. நிறைய ஷோரூம்களை மூடிட்டாங்க. நிறைய பேருக்கு வேலை போச்சு. இது அப்படியே எல்லா இன்டஸ்ட்ரிக்கும் பரவ போகுதாம். பணக் கஷ்டம் வர போகுதாம். பேங்குங்க எல்லாம் திவாலாகப் போகுதாம். அதனால பணத்தை சேர்த்து வையி. இப்படி கன்னாபின்னான்னு சரக்குகளை வாங்கி குமிக்காதே...‌" என்று தான் படித்த மைக்ரோ எக்கனாமிக்ஸ் மற்றும் மேக்ரோ எக்கனாமிக்ஸ் கலந்து லெங்க்த்தாக ஒரு ஸ்பீச் தந்தான். போதாக்குறைக்கு பொருளாதார மந்தநிலை பற்றி பேஸ்புக்கில் எழுதப்பட்ட ரைட்டப்களையும், வாட்சப்பில் வரும் தகவல்களையும் வேறு தன் தந்தைக்கு காட்டினான்.

இதையெல்லாம் பார்த்த அவனது தந்தையும்,

"ஆஹா நமக்கு தான் எழுதப் படிக்கத் தெரியாது. நம்ம புள்ள மெட்ராஸ்ல படிக்குறவன். அவன் சொன்னா தப்பா இருக்காது...."என்று எண்ணினார்.

உடனடியாகத் தன்னிடம் இருக்கும் சரக்குகளைப் பாதியாக குறைத்தார். வாங்கிய இடத்திலேயே அதைத் திரும்பத் தந்தார்.

ஆரம்பத்தில் 50 விதமான வடைகளை விற்றவர், மறுநாளே வடைகளில் வெரைட்டியை 10 ஆக  குறைத்தார். விற்பனையையும் குறைத்தார்.

அவரது கடைக்கு அவரது வெரைட்டியான வடைகளுக்காகவே வந்த கூட்டம்  வெரைட்டியான வடைகள் கிடைக்காததால் பாதியாக குறைந்தது.

வாடிக்கையாளர்கள் கூட்டம் பாதியாக குறைந்ததைப் பார்த்து இவரும் தன் விற்பனையை மேலும் சுருக்கினார். உளுந்து வடையை மட்டுமே போடத் துவங்கினார். உளுந்து வடையை மட்டும் விரும்பும் வாடிக்கையாளர்கள் மட்டும் கடைக்கு வந்தனர். அதைப் பார்த்ததும் மேலும் பதறினார்.

விற்பனை மந்தமாவதால் நாளை முதல் என் வடை கடை காலவரையற்ற விடுமுறை விடப்படுகிறது...என்ற போர்டை வைத்து கடையை மூடினார்.

தன் மகனை அழைத்தார்,

"ஆமாப்பா...நீ சொன்ன மாதிரியே நாட்ல பொருளாதார மந்தநிலை இருக்கு. நம்ம கடைக்கு வர்ற ஆட்கள் கூட குறைஞ்சுகிட்டே போயி...கடைசில யாருமே வரலை... வியாபாரமும் படுத்திருச்சி...இருக்குறதையாவது காப்பாத்தனும்ன்னு நானும் கடையையே மூடிட்டேன்..." என்றார்.

தான் படிக்கும் எக்கனாமிக்ஸ் அறிவைக் கொண்டு தன் தந்தையைத் தான் காப்பாற்றியதாக மகனும் தனக்குத் தானே பெருமைப்பட்டுக் கொண்டான்.

ஆனால் நன்றாக வியாபாரம் நடந்து கொண்டு இருந்த வடை கடையை எதற்காக அவர் மூடினார் என்பது மட்டும் அவரது வாடிக்கையாளர்களுக்கு கடைசி வரையிலும் தெரியவே இல்லை.



373  சரி நம்ம கடவுள் தானே..!

நான் சென்ற சர்ச் சில் சரியான கூட்டம்.  
காணிக்கை எடுப்பவர் அருகே வந்தவுடன் ஒரு பத்து ரூபாய் எடுத்துப் போட்டேன்...! பலர் பார்க்கும்படி பெருமிதமாக..!!

ஆனால் அது சற்று கிழிந்து, வெளியில் யாரிடமாவது கொடுத்தால் வாங்காத அளவில் அழுக்காய் இருந்த 10 ரூபாய் நோட்டு..!

சரி நம்ம கடவுள் தானே..!
அவரிடம் செல்லாத நோட்டு   என்று ஏதேனும் உண்டோ?
இதெல்லாம் இறைவனுக்கு பெரிய விஷயமல்ல என்று ஆறுதல் படுத்திக் கொண்டு காணிக்கை கீர்த்தனைப் பாடலை பாடிக் கொண்டிருந்தேன்..!

அடுத்த வினாடி...

எனக்கு பின்னாடி நின்ற ஒருவர் என் தோளைத் தட்டி ரூ 500 கொடுத்தார்..!
அவருக்கு காணிக்கை பை தூரமாக இருக்கவே சரி என்று நான் அதை வாங்கி காணிக்கை பையில் போட்டு விட்டு,

'சே எவ்வளவு பக்தி இவருக்கு' என்று வியந்தேன்..

பின் ஜெபம் செய்து விட்டு , வெளியே வந்தால் அவரும் அருகே நடக்க அவரிடம்..

சார் நீங்கள் உண்மையிலே க்ரேட் என்றேன்..

அவர் புரியாமல் "எதுக்கு" என்றார்...

 "காணிக்கையாக ரூ 500 போடுகிறீர்களே எவ்வளவு பக்தி உங்களுக்கு" என்றேன்.. 

அதற்கு அவர்.. 
#நானா? இல்ல சார்.. நீங்க காசு எடுக்கும் பொழுது உங்கள் பாக்கெட்டில் இருந்து அந்த 500 ரூ விழுந்தது, அதைத்தான் நான் எடுத்துக் கொடுத்தேன்.." என்றார் !


374        உறவு பாலம்

எப்பொழுதும் போலத் தான் அன்றைய பொழுதும் விடிந்தது தொழிலதிபர் ராஜசேகரன் இல்லத்திற்கு. வழக்கம் போல முதலில் தேநீர் முகத்தில் தான் முழித்தார் ராஜசேகரன். ஆனால் மனைவி வைஷ்ணவி இன்று போட்ட டீ இன்று மிகவும் நன்றாக தெரிந்தது இராஜசேகரனுக்கு.

இராஜசேகரன் பிறப்பால் ஓர் பெரிய தொழில் அதிபர் தான் என்று பார்ப்பவர்கள் எல்லாம் நினைப்பார்கள். ஆனால் அவர் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். அப்பா கிடையாது. அம்மா மட்டுமே. அவளும் இராஜசேகரனுக்கு பதினைந்து வயது இருக்கும் போதுஇறந்து போனார். தங்கள் குடும்பத்திற்கு என இருந்த ஒரே நிலத்தையும் விற்று அதில் கிடைத்த லட்சம் ரூபாய் முதலீட்டை கொண்டு ஓர் சிறிய ரைஸ் மண்டி வைத்தார். இன்று அந்த தொழிலில் பெரிய மனிதராகி கார்... பங்களா அப்பப்பா.

பணத்தின் அருமை தெரிந்த ஒருத்தியே தனக்கு மனைவியாய் வர வேண்டும் என்ற இராஜசேகரனின் ஆசைபடியே, இராஜசேகரின் வீட்டிற்கு விளக்கேற்றியவள் தான் வைஷ்ணவி.

அவர்களுக்கு பிறந்த மூத்த மகன் தான் ரமேஷ். அவன் செல்வந்தர் மகன் என்பதால் நல்ல செலவழிப்பான். இது தான் ராஜசேகரனுக்கும் ரமேஷ்க்கும் இடையே அடிக்கடி பிரச்சனை எழும்பக் காரணம் ஆகும்.

இரண்டு பேருக்குமிடையே ஏற்படும் பிரச்சனையை தீர்த்து வைப்பதற்கே நேரம் சரியாய் போய்விடும் வைஷ்ணவிக்கு. இராஜசேகரன் ஒரு பைசாவை கூட செலவு செய்வது என்றால் மிகவும் யோசிக்க கூடியவர்.

அவரது தும்மலும் கூட பத்து பைசா வரயே செல்லும். ஆனால் இராஜசேகரன் கருமியல்ல. பணத்தின் அருமை புரிந்தவர். இந்த நிலையில் தான் ஒரு சிக்கல்.

இதுவரைக்கும் அவரது ரைஸ் மண்டியிலிருந்து கிடைத்த லாபம் நிர்வாகச் செலவு போக ஓர் அளவிற்கே உட்பட்டு இருந்தது. ஆனால் இப்பொழுது விளைச்சல் குறையவும் லாபம் அதிகமாயிற்று. அதனால் தான் வருமானவரி கட்ட வேண்டிய சிக்கல் வந்தது. வைஷ்ணவியும் ஏற்கனவே இதை ஞாபகப்படுதிக் கொண்டு இருக்கிறாள். ஆனால் இராஜசேகரன் இந்த விஷயத்தில் தாமதம் காட்டி வந்தான்.

இன்றைய செய்தித்தாளை பேப்பர்காரன் வாசலில் அவனுக்கே உரிய தோரணையில் வாசலில் விட்டெரிந்து விட்டு "அம்மா பேப்பர்" என்று ராகமும் பாடினான்.

வழக்கம் போல வைஷ்ணவி தான் வந்து பேப்பரை எடுத்தாள். செய்தித்தாளின் முன் பக்கத்தில் கொட்டை எழுத்தில் அச்சிடப்பட்டு இருந்த செய்தி வைஷ்ணவி கண்ணில் பட்டது.

'என்னங்க' ஒரே உச்ச சாயலில் கூப்பிட்டாள் வைஷ்ணவி.

"என்ன வைஷ்ணவி! காலம் காத்தால" என்றார் இராசசேகரன்.

"இத பாருங்க! இந்த நியூஸ் பேப்பர்ல என்ன போட்டிருக்குன்னு பாருங்க"

"என்ன போட்டிருக்கு! கொடு பார்ப்போம் வருமான வரி கட்டாதவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை தொழிலதிபர் மீது வருமானவரி சோதனை"

"அதற்கு என்ன செய்ய சொல்லுற" என்றார் இராசசேகரன் ஒன்றும் தெரியாதவர் போல
" என்ன செய்யவா" பத்ரகாளி ஆனால் வைஷ்ணவி.

"ஆமாங்க! நான் சொல்லறது கிண்டலாய் தாங்க இருக்கும் உங்களுக்கு. வருமான வரி கட்டாமல் ஏய்ப்பது நமது நாட்டிற்கு நாம் தெரிந்தே செய்கிற துரோகம்ங்க" என்று ஒரு பாடமே நடத்தினாள் வைஷ்ணவி.

"வருமான வரி கட்டணும்ணா. நமக்கு வருகிற லாபத்திற்கு எவ்வளவு கட்டணும். காசோட அருமை தெரிஞ்சா தானே உனக்கு" பதிலுக்கு இராஜசேகர்.

"இப்ப காசு கட்ட பயந்தா. பிறகு சிறைக்கு போன பின்னாடி பணம் நெறைய செலவழிக்கணும். அது மட்டுமா ,மன உளைச்சல் வேறு" இது வைஷ்ணவி.

"பாத்துகிட்டே இரும்மா இவரு கம்பிதான் எண்ணப் போறாரு. இராஜசேகரனு பேரு வைச்சதும் போதும் இவருக்கு வரவர வில்லன் கெட்டப் வந்து விட்டது" இளமைக்கே உரிய துள்ளலுடன் ரமேசும் சேர்ந்து கொண்டான்.

"ம்... இந்த வீட்ல என்னை நிம்மதியாவே இருக்கவே விடுறாங்க இல்ல" சலித்து கொண்டார் இராஜசேகரன்.

வழக்கம் போல இராகம் பாட ஆரம்பித்தாள் வைஷ்ணவி " எம் பேச்சை இந்த வீட்ல யாருதான் கேட்கறாங்க. புருஷன் அப்படி, புள்ள இப்படி" இடைஇடையே அவளது பாட்டிற்கு ஏற்ப தாளம் போட்டன வைஷ்ணவி வீட்டு சமையலறை பாத்திரங்கள்.

வீட்டில் யாரும் பேசவில்லை. இராஜசேகரனுக்கு ஒரே தஞ்சம் தொலைக்காட்சிப் பெட்டி அவருக்கு பிடித்த நடிகர் கமலேஸ் குமார் வருமானவரி கட்ட வேண்டும் என்பதை பற்றி தொலைகாட்சியில் பேசினார்.

மதியம் இராஜசேகரன் வீட்டிற்கு வந்தார். "வைஷ்ணவி இந்த பைலை பத்தரமாக வை; இதுல வருமான வரி கட்டியதற்கான விபரமெல்லா இருக்கு சரியா" என்றார் இராஜசேகர்.

"வருமானவரியா? கட்டி விட்டீர்களா? எப்படி" தொடர்ந்தாள் வைஷ்ணவி.

"நடிகர் கமலேஷ் குமார் சொன்ன பிறகு தான் வருமான வரி கட்ட வேணுங்கிறது நியாமுன்னு தெரிஞ்சது"

"நாங்க சொன்னத கேக்கல. கமலேஷ் குமார் சொன்னா கேட்கிறார். இனிமே எதையாவது இவர செய்ய வைக்க வேணுமுன்னா, கமலேஷ் குமாரத்தான் கூப்பிடனும்" நொந்து போனாள் வைஷ்ணவி.

மறுநாள்,

செய்தித்தாளில் வந்த செய்தி இராசசேகரனை அதிர செய்தது. செய்தி இதுதான்.

"நடிகர் கமலேஷ் குமார் வருமானவரி ஏய்ப்பு. அவரது வீட்டில் வருமான வரி அதிகாரிகள் சோதனை."

நடிகன் என்னும் பொய் வேஷத்தை நம்பிய இராஜசேகரன் மனம் குறுகிப் போனது.

என் அன்பு வாசகர்களே,
வரிப்பணம் ஒரு நாட்டிற்கு இன்றியமையாதது. அதை மற்றவர்கள் செலுத்துகிறார்களோ இல்லையோ நாம் கட்டாயம் செலுத்தியாக வேண்டும். ஏனெனில் ஒவ்வொரு தனி மனிதனுடைய வரிப்பணத்தில் தான் நாடு வளர்ச்சி அடையும். 
உதாரணமாக நமது வீட்டையே எடுத்துக்கொள்ளலாம். கணவன் மாத்திரம் சம்பாதிக்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள் அவர் சம்பாதித்து அவருக்கு தேவையானதை மட்டும் வாங்கி மகிழ்ந்து விட்டு தன் மனைவிக்கோ, குழந்தைகளுக்கோ எதையும் செய்யவில்லை என்றால் அந்த குடும்பத்தின் நிலையை சற்று சிந்தித்துப் பாருங்கள். அதுபோலத்தான் நாடும், நான் வரிப்பணம் கட்டவில்லை என்றால் இந்த நாடு வறுமை அடைய போகிறதா என்ன??? என்று பலபேர் சிந்திக்கின்றனர்.

நாம் செலுத்துகின்ற வரிப்பணம் அது நூறு ரூபாயானாலும், ஆயிரம் ரூபாயானாலும், லட்சம், கோடி என்றாலும் பேரிடர் காலங்களில் அநேக ஏழை எளிய மக்களுக்கு சென்றடைகிறது. அல்லாமலும் நாம் செலுத்துகிற வரிப்பணத்தில் தான் அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கப்படுகிறது. எனவே நாம் ஒவ்வொருவரும் பெருமிதம் கொள்ள வேண்டும் ஏனெனில் நாம் வரிப்பணம் செலுத்தவில்லை எனில் அநேகருடைய வாழ்வாதாரமே பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்படும். 

வேதாகமத்தில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடம் வந்து அவரை பரீட்சித்து பார்க்க நினைத்த பரிசேயர்கள் இவ்வாறு வினவினர்

17 ஆதலால், உமக்கு எப்படித் தோன்றுகிறது? இராயனுக்கு வரிகொடுக்கிறது நியாயமோ, அல்லவோ? அதை எங்களுக்குச் சொல்லும் என்று கேட்டார்கள். 
மத்தேயு 22:17

18 இயேசு அவர்கள் துர்க்குணத்தை அறிந்து: மாயக்காரரே, நீங்கள் என்னை ஏன் சோதிக்கிறீர்கள்? 
மத்தேயு 22:18

19 வரிக்காசை எனக்குக் காண்பியுங்கள் என்றார், அவர்கள் ஒரு பணத்தை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். 
மத்தேயு 22:19

20 அப்பொழுது அவர்: இந்தச் சுருபமும் மேலெழுத்தும் யாருடையது என்று கேட்டார். 
மத்தேயு 22:20

21 இராயனுடையது என்றார்கள். அதற்கு அவர்: அப்படியானால், இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதைத் தேவனுக்கும் செலுத்துங்கள் என்றார். 
மத்தேயு 22:21

எனவே நாம் சம்பாதிப்பதில் நமது கடைமை தேவனுடையதை தேவனுக்கும், அரசாங்கத்திற்குரியதை அரசாங்கத்திற்கும் செலுத்துவோம் அவ்வாறு செலுத்தும்போது நமது உண்மையும் உத்தமமும் உள்ள மனதை பார்த்து தேவன் உங்கள் ஒவ்வொருவரையும் அளவில்லாமல் ஆசீர்வதிப்பார்.

நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!



No comments:

Post a Comment