Saturday, 8 October 2016

சங்கீதம் 131, சங்கீதம் 132 1-7

உன் இருதயம் இறுமாப்புள்ளதல்ல, உன் கண்கள் மேட்டிமையுள்ளவைகளுமல்ல, பெரிய காரியங்களிலும், உனக்கு மிஞ்சின கருமங்களிலும் நீ தலையிடுகிறதுமில்லை. தாயின் பால்மறந்த குழந்தையைப்போல நீ உன் ஆத்துமாவை அடக்கி அமரப்பண்ணினாய், உன் ஆத்துமா பால்மறந்த குழந்தையைப்போல் இருக்கிறது. இது முதல் என்றென்றைக்கும் நீ கர்த்தரை நம்பியிரு. கர்த்தர், உன்னையும் உன்னுடைய சகல உபத்திரவத்தையும் நினைத்தருளுவார். நீ கர்த்தருக்கு ஒரு இடத்தையும், யாக்கோபின் வல்லவருக்கு ஒரு வாசஸ்தலத்தையும் காணுமட்டும், உன் வீடாகிய கூடாரத்தில் பிரவேசிப்பதுமில்லை, உன் படுக்கையாகிய கட்டிலின்மேல் ஏறுவதுமில்லை, உன் கண்களுக்கு நித்திரையையும், என் இமைகளுக்கு உறக்கத்தையும் வரவிடுவதுமில்லை என்று, கர்த்தருக்கு ஆணையிட்டு யாக்கோபின் வல்லவருக்குப் பொருத்தனை பண்ணினாய் கர்த்தருடைய வாசஸ்தலங்களுக்குள் பிரவேசித்து, அவர் பாதபடியில் பணிந்து கொள். சங்கீதம் 131, சங்கீதம் 132 1-7

No comments:

Post a Comment