Thursday, 27 October 2016

மிஷனெரிகளுக்காக

யயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயய மிஷனெரிகளுக்காக! இயேசு கிறிஸ்துவின் அன்பினால் நெருக்கப்பட்டும், ஏவப்பட்டும் தேசத்தில் வேதவசனம் அறிவிக்கப்படாத இடத்திற்கு புறபட்டுச் சென்று, சுவிஷேத்தை அறிவித்து வரும் நற்செய்தியாளர்களுக்காக கருத்தாக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். இவர்கள் பாதுகாக்கப்பட, இவர்களுக்கு விரோதமாய் எழும்பியுள்ள உள்ளூர் மதவாதிகள், மந்திரவாதிகள், கிராம இனத்தலைவர்களின் செயல்பாடுகள் ஒன்றுமில்லாமல் போக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். மிஷனெரிகளுக்கு சரியான சுகாதார அடிப்படை வசதிகள் இல்லாததால், ஏற்படும் வியாதிகள், நோய்களுக்கு விலக்கிக்காக்கப்பட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். பணிசெய்யும் இடங்களில் கொடிய மிருகங்களாலும், விஷபூச்சிகளினாலும் பாதிக்கப் படாதிருக்க ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். ஒவ்வொரு ஆண்டும் தேவன் கொடுக்கும் இலக்கை அடைய தேவன் கிருபை பாராட்ட, திரளான ஆத்துமாக்கள் இரட்சிப்படைய ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். புதிய ஆராதனை குழுக்கள், சபைகள், ஆலயங்கள் எழும்பிட, இயற்கைக்கு அப்பாற்பட்ட அற்புத அடையாளங்கள் இயேசுவின் நாமத்தில் நடந்திட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். மிஷனெரிகள் தைரியமாய் எங்கும் சென்று ஊழியம் செய்திட, விசேஷித்த வரங்களினாலும், வல்லமையினாலும் நிரப்பப்பட்டு பயன் படுத்தப்பட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். கர்த்தருடைய ஊழியத்தை சந்தோஷமாய் செய்வதற்கு வேண்டிய பொருளாதார உதவிகள், பணஉதவிகள் தாராளமாய் கிடைத்திட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். சுதேச மிஷனெரிகள் எழும்பிடவும், தேவன் இவர்களையும் பலப்படுத்தி, பயன்படுத்தவும் ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்.

No comments:

Post a Comment