Bro . D . Augustine Jebakumar
சேர்ந்த இரண்டும்
ஆரம்பம்
" குடும்பம் ஒரு கோவில் " என்றனர் நம் மூதாதையர் ; அதாவது , ஆண்டவர் தங்கி தாபரிக்கும் ஸ்தலம் என்பது அதின் கருத்து ; எனவேதான் , அதனைத் தாக்க சத்துருவாகிய சாத்தான் பலமுறைகளில் , பலவேளைகளில் முயற்சி செய்கிறான் ; அதில் இந்நாட்களில் பெரும் வெற்றியையும் கண்டுவருகிறான் . குறிப்பாக , கிறிஸ்தவக் குடும்பங்களில் இவை காணப்படும் போது நம் இதயம் வேதனைப்படுகிறது . அதன் காரணம் நம் ஜனங்கள் " அறிவில்லாமல் சங்காரமாகிறதினாலேயே " ( ஒசி 4 : 6 ) , '
நீ உன் தேவனுடைய வேதத்தை மறந்தாய் , ஆகையால் , நானும் உன் பிள்ளைகளை மறந்துவிடுவேன் ' என்பதே ஆண்டவரின் அங்கலாய்ப்பு . ' என் வேதத்தின் மகத்துவங்களை அவர்களுக்கு எழுதிக்கொடுத்தேன் , அவைகளை அந்நியகாரியமாக எண்ணினார்கள் ' என்பதே அவரின் புலம்பல் ( ஒசி 4 : 6 ; 8 : 12 ) ,
வேதத்தின் வெளிச்சத்தில் நடக்க முற்பட்டால் அநேக குடும்பங்கள் புயலுக்குத் தப்பி , புரிந்துகொண்ட வாழ்க்கைக்குத் தங்களை ஒப்புக்கொடுப்பர் என்பது என்னுடைய அசையா நம்பிக்கை .
திருமணம் தேவனால் ஏற்படுத்தப்பட்ட உயர்ந்த ஒரு காரியம் . முதல் திருமணத்தை தேவனே முன் நின்று நடத்தினார் ( ஆதி 2 : 22 ) , குமாரனாகிய இயேசுவும் , தன்னுடைய முதல் அற்புதத்தினை திருமண வீட்டில் நடத்தி திருமணத்தை அலங்காரமாக மாற்றினார் ( யோவா 2 : 11 ) , பரிசுத்த ஆவியானவரும் , சபையாம் மணவாட்டியை ஆட்டுக்குட்டியானவருக்கு ஆயத்தம் செய்கிறார் ( வெளி 19 : 7 ; 2 கொரி 5 : 5 ) .
எனவே திரித்துவ தேவன் இதனை ஆமோதித்து , அங்கிகரித்து , அழகு செய்து அகமகிழ்கிறார் . அதனை சத்துரு விரும்புவதில்லை . அதனால் , ஆதியிலேயே அவன் அதற்கு விரோதமாய் கிரியை செய்து , அவர்களை பிரிக்கவும் மற்றும் ஒருவரை ஒருவர் வெறுக்கவும் செய்துவிட்டான் ( ஆதி 3 : 12 , 13 ) ; அத்துடன் , திருமணத்தின் நோக்கத்தினை மறக்கவும் செய்துவிட்டான் .
தேவன் பரிசுத்தர் எனவே பரிசுத்தமாக வாழவேண்டும் ; தான் உண்டாக்கிய மற்றும் தமது சாயலாக உருவாக்கப்பட்ட மனிதர்கள் பரிசுத்தமாகத்தான் வாழவேண்டும் என்பது அவருடைய மாறாத விருப்பம் . அவர் பரிசுத்தத்தினை சிநேகிப்பவர் .
அல்லவாமல் வேசித்தனமும் விபச்சாரமும் தம்முடைய ஜனத்தில் காணப்படக்கூடாது என்பதற்காக அதனை உண்டாக்கினார் ( 1கொரி :7:2)
கூடவே ஒரு பரிசுத்தமுள்ளதும் , தேவபக்தியான சந்ததியை உருவாக்க வேண்டும் என்பது அவருடைய நோக்கம் என்பதனை மலகியா தீர்க்கன்மூலம் அவர் விளக்குகிறார் ( மல் 2:15 )
இதோ நானும் , கர்த்தர் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் சீயோன் பாவநத்தில் வாசமாயிருக்கிற சேனைகளின் கர்த்தராலே இஸ்ரவேலில் அடையாளங்களாகவும் அற்புதங்களாகவும் இருக்கிறோம் ( ஏசா8.18 ) என்று சாட்சி பகறவேண்டிய குடும்பங்கள் , இன்று சின்னா பின்னமாகி , நிலையிழந்துக் காணப்படக் காரணம் தெளிவும் , புரிந்து கொள்ளுதலும் தேவ நோக்கத்தினைக் குறித்த அறிவும் இல்லாததே .
பாரம்பரியம் , சமூகக் கட்டுப்பாடு , வழிவழியாய் வந்த கொள்கைகள் , கலாச்சார வேற்றுமைகள் , சத்துரு உத்தியாய் விதைத்துவிட்ட வேதத்திற்கு ஒவ்வாத புதுமை எண்ணங்கள் ( moclemism ) , மேற்கத்திய நாகரீக மோகங்கள் , சிலுவையில் அடிக்கப்படாத சுயம் , சுதந்தரம் என்ற பெயரில் காணப்படும் தாறுமாறுகள் , உரிமை என்ற குரலில் தொனிக்கும் அகங்காரம் , சம்பாத்தியம் எனக்குரியது என்ற பெருமை , பணம் படுத்தும் பாடு , அடிமையாக்க நினைக்கும் அற்பத்தனங்கள் இவை அனைத்தும் திருமண வாழ்வின் இன்பத்தினையும் ( pleasure ) , நோக்கத்தினையும ( purpose ) நோகடித்து , சிதறடித்து விடப் போதுமான பெலனுள்ளவை என்பதனை யார் மறுக்கக் கூடும் .
" தேவன் இணைத்தவர்கள் " ( மத் 190 ) என்று அனைத்து திருமணங்களையும் அழைத்தாலும் , அநேக நேரங்களில் இந்தியாவின் சூழ்நிலையில் திருமணத்தை நிர்ணயித்தது வேறு அநேக காரியங்களாகவே உள்ளது . பணம் , படிப்பு , அழகு , அந்தஸ்து , பெற்றோரின் பெருமை , விருப்பம் , வயது வந்தோர்களின் ஆசை நிறைவேற்றம் , ஜாதி , குலம் , கோத்திர வரம்புகள் , முன்னுரிமை பெற்றதினால அநேக திருமணங்கள் நிச்சயக்கப்படுகின்றன ,
தேவசித்தமும் , தேவ நோக்கமும் அநேக நேரங்களில் பின்னுக்குத் தள்ளப்படுகின்றன . தேவன் இணைத்தார் என்பதனை விட " மனிதர்கள் இணைந்தார்கள் " என காதல் திருமணத்தினை குறித்தும் , " மனிதர்கள் இணைத்தார்கள் " என்பது ஒழுங்கு செய்யப்பட்ட திருமணங்களிலும் காணப்படுகின்றன . கொஞ்ச பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட மனக்கசப்பு அநேகக் குடும்பங்களைச் சிதறடித்து விட்டதும் நாம் அறிந்ததே .
மேலை நாகரீகமும் , வாழ்க்கை முறையும் ( life style ) அதிக தாக்கத்தினை ( influence ) ஏற்படுத்திய சூழ்நிலையில் , " தாங்களாகவே தெரிந்து கொள்ளுதல் " பெருகி வரும் இந்நாட்களில் , இணையதளங்களும் , ஊடகங்களும் ( website & media ) பெரும் பங்கு வகிக்கின்றன .
ஒரு மாயத் தோற்றம் உருவாக்கப்பட்டு , அதனையே " நிஜம் " என நம்பி ஓடிய வாலிப உள்ளங்களும் , அதனையே நிஜ வாழ்வில் கைப்பிடிக்க நினைத்து தோற்றுப் போய் நிற்கும் அவல நிலை பட்டணத்து வாசிகளோடு மற்றவர்களையும் அதிகம் பாதித்துவிட்டது .
" இரட்டை எண்ணங்களில் ” மாட்டிக்கொள்ள நேரிட்ட இன்றைய சமுதாயத்திற்கு , அதாவது முந்தைய நாட்களின் எண்ணங்கள் " இன்றைய நாட்களின் எண்ணங்கள் என வேறு பிரிக்கப்பட்ட சூழ்நிலையில் , இடையில் தத்தளிக்கும் இன்றைய தம்பதியினரின் பாடு மிக அதிகமே .
" கூடி வாழ்ந்தால் கோடி நன்மை " ( Joint family system ) என்பது அன்றைய எண்ணம் , " கிட்டப்போனால் முட்டப் பகை " ( Independent family System ) என்பது இன்றைய எண்ணம் . திருமணம் ஆனவுடன் தனிக்குடித்தனம் என்பது தான் சிறந்தது என்ற நிலையில் , " என் சுதந்திரம் அது ” என்பது இன்றைய தம்பதியினரின் மாறாத தீர்மானம் . " சேர்ந்து வாழ பிடிக்காமல் பிரித்துக் கொண்டுப் போய்விட்டாள் " என்பது இன்றைய மருமக்களைக் குறித்து மாமியார் கூறும் பெரிய ஆவலாதி . "
ஆதியிலே மனுஷரை உண்டாக்கினவர் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார் என்பதையும் , இதினிமித்தம் புருஷனானவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டுத் தன் மனைவியோடே இசைந்திருப்பான் அவர்கள் இருவரும் ஒரே மாமிசமாயிருப்பார்கள் என்று அவர் சொன்னதையும் நீங்கள் வாசிக்கவில்லையா ? " என்ற இயேசுவின் கேள்வி ( மத் 19 : 4 , 5 ) அநேகப் பெற்றோர்களால் புரிந்து கொள்ளப்படாமலேயே இருக்கிறது .
திருமணமாகும் ஆணும் பெண்ணும் ஒரு தனி யூனிட் ஆலோசகர்களாகவும் , என்பதனை புரிந்து கொண்டு வெறும் ஆலோசகர்கள் உதவியாளர்களாகவும் செயல் படவேண்டிய பெற்றோர்கள் தாங்களே இன்னமும் முடிவு செய்கிறவர்களாகவும் , தீர்மானிக்கிறவர்கள் மாற முயற்சிக்கும் போது ( decision makers ) , சிக்கல்கள் பிரச்சனைகளையும் உறவு விரிசல்களையும் போராட்டத்தை அது கொண்டு வந்துவிடுகிறது ,
சிக்கல்களையும் தனக்குப் பிள்ளைகளை வளர்க்க ( அதுவும் இரு வேலைக்கு போகும் சூழ்நிலையில் ) , வீட்டை பாதுகாக்க பெற்றோரின் ஒத்தாசையினை ( support ) எதிர்நோக்கம் பிள்ளைகள் , பெற்றோர் தங்கள் கூட இருக்க அனுமதிக்கும் போது மேற்சொன்ன காரியங்களில் கவனமாக இல்லையென்றால் நித்தமம் போர்களத்தினையே சந்திக்க நேரிடும் .
தங்கள் கனவுகளை மாத்திரம் நிறைவேற்றுவதற்காக , பிள்ளைகளின் கனவுகளை கலைத்துப் போட்ட பெற்றோர்களும் ஏராளமே . " பெற்றோரை கனம் பண்ணுவது " ஆசீர்வாதத்திற்கும் வாக்குத்தத்த நிறைவேறுதலுக்கும் அஸ்திபாரம் ( எபே 6 : 1 - 3 ) என்ற வார்த்தைகளை தவறாகப் புரிந்து கொண்டு செயலாற்றும் பெற்றோரும் உண்டு .
திருமணம் ஆன பின்னரும் எல்லாவற்றிலும் ( பணத்தினை செலவழிப்பதில் , பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுப்பதில் , வேலையினை தீர்மானிப்பதில் ) தங்களின் விருப்பப்படி தான் பிள்ளைகள் கேட்டுச் செய்ய வேண்டும் என அடம் பிடித்து , அதனைத் திணிக்க முயலும் பெற்றோர் , தங்கள் வாழ்க்கையில் அது நடந்ததா ? என்று கூட யோசித்துப் பார்ப்பது இல்லை .
மாறாக , அப்படி நடந்தால்தான் தேவ பக்தி என சுட்டிக் காட்டி குடும்பத்தினை கூறு போடுகிறார்கள் .
இது ஒரு புறமிருக்க , " ஏதோ ஒரு நபர் நமக்கு எந்த வழியிலோ கொடுக்கப்பட்டுவிட்டார் ; இவரோடு எப்படி ஜீவியத்தினை நிர்வாகம் செய்வது " என அறியாமல் வாழ்வது அநேகருடைய வாழ்வினை சீரழித்து விட்டது ; இந்திய சூழ்நிலையில் 90 % க்கு மேற்பட்டோரின் வாழ்வு அப்படி அமைந்ததே . நன்றாக அறிந்து , காதலித்து , பின்னர் பழகி , ஊர் சுற்றி , பல மணி நேரங்கள் பல விஷயங்களை உட்கார்ந்து பேசி , புரிந்து கொண்ட சுபாவத்தோடு திருமணம் செய்தோம் என்பது அநேக திருமணங்களில் நடைபெற , இந்திய கலாச்சாரமும் வாழ்க்கை முறையும் இடம் தருவதில்லை . தற்போது அதில் மாற்றம் உண்டாகி , தொடர்பு ( communication ) அதிகம் உண்டாகி திருமணத்திற்கு முன் பகிர்ந்து கொள்ளுதல் பெருகி வருவது காணப்பட்டாலும் , நேசிக்கும் அல்லது காதலிக்கும் நேரத்தில் எதிர்மறை காரியங்கள் ( Negatives ) அநேக நேரங்களில் மறைக்கப்பட்டுப் போகிறது . எனவே , திருமணத்திற்குப் பின்னர் சுமுகமான வாழ்க்கை அமையும் என்பதற்கு எந்தவித உத்திரவாதமும் இல்லை .
அநேக நேரங்களில் , தேவபக்தியுள்ள வாழ்வினைக் குறித்த வேறுபட்ட எண்ணங்கள் இணைந்துபோக தடையாகவே மாறிவிடுகின்றன . வேறுபட்ட பின்னணியில் பிறந்து , வளர்ந்து , படித்து , பழகிய இரண்டு மனங்கள் இணைக்கப்பட்ட பின்னர் , ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளப் போராடும் போராட்டத்தில் வெற்றி பெற்றவர்கள் ஒரு சிலரே . " கல்லானாலும் கணவன் , புல்லானாலும் புருஷன் " என்ற காலம் மலையேறிப் போய்விட்டதினால் வேறுவழியின்றி தாம்பத்திய வாழ்வினை வாழ்வோர் , தங்களின் பிள்ளைகளின் வாழ்வில் கூட அதிக பாதிப்பை ( influence ) ஏற்படுத்த முடியாமல் தத்தளிக்கின்றனர் .
இதற்கிடையே வந்துவிட்ட உலகளாவிய மாற்றம் ( Globlisation ) இன்று அநேக பிள்ளைகளை மூன்றாம் கலாச்சாரத்திற்குத் ( தாய் , தகப்பன் வெவ்வேறு கலாச்சாரத்திற்குரியவர்கள் ) தள்ளிவிட்டுள்ளது . எதைப் பற்றிக் கொள்வது எதை விட்டுவிடுவது என்பதனை பிள்ளை தீர்மானிக்கும் முன் வாழ்க்கையே முடிந்து விடும் போல் தெரிகிறது . எது வேதம் காட்டும் முறை எது இடைச் சொறுகல் என்பதனை கணிக்கவும் கூடாதபடி ஏற்பட்டுள்ள சூழ்நிலை தடுமாற்றத்தினையும் , குழப்பத்தினையுமே அதிகமாக்கியுள்ளது .
“ வேத உண்மைகள் " முன்னமே தெரிந்திருந்தால் இப்படிப்பட்ட ஒரு திருமணத்திற்கு நான் சம்மதித்திருக்க மாட்டேனே ! என்று அங்கலாய்த்து இனி என்ன செய்வது ? எப்படி மாற்றுவது அல்லது மாறுவது ? என்ற கேள்வியோடு மனைவியையோ , கணவனையோ பாரக்கல்லாகப் பார்த்து வாழ்வினை வேண்டா வெறுப்போடு வாழ்பவரும் அநேகர் .
மாறிவரும் " கலாச்சார சூழலில் " ( Turbulance ) , திருமணத்திற்கு வெளியே உறவு ( Extra marital affair ) பெருக ஆரம்பித துள்ளது . வேலை ஸ்தலங்களில் தங்கள் மேல் பரிவு
காட்டியவர்களோடு உள்ள நெருக்கம் அநேகரை இரட்டை வாழ்வு வாழ வழி வகுத்துவிட்டது ( double life ) ;
அது தவறு அல்ல என்பது போன்ற தோற்றமும் உருவாக்கப்பட்டு விட்டது . - " திருமணம் " என்றால் அது ஒரு ஒப்பந்தம் ( commitment ) "
பிள்ளை என்றால் அது பொறுப்பு ( Responsibility ) எனவே திருமணம் செய்யாமல் பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ளாமல் , ஆயினும் இணைந்து வாழ்க்கை நடத்துவோம் ( on contract ) என்ற சிந்தனை மேலோங்கித் திருமணத்திற்கு முன்பே ஒரே வீட்டில் குடியிருக்க ஒத்துக் கொண்டோரின் எண்ணிக்கை மேல்நாட்டில் பெருக , அது இந்தியாவையும் பாதிக்க ஆரம்பித்துள்ளது .
இதன் மத்தியில் " தகாதது " என்றும் " கேடான சிந்தை " என்றும் " இழிவான இச்சைமோகம் " என்றும் தேவனே பெயரிட்டு அழைத்த ஆண் ஆணோடும் , பெண் பெண்ணோடும் அவலட்சணத்தை நடப்பிக்க ஒப்புக்கொடுத்தோரின் குரல் பெருகி , வலுப்பெற்று அரசாங்கத்தின் அங்கிகரிப்பையும் , நீதிதுறையின் அங்கிகாரத்தினையும் பெற்றதோடு சமுதாயத்தினையும் அங்கிகரிக்க வைக்கவும் , திருச்சபைத் தலைவர்களின் தலையசைவையும் பெற்று வீறுநடை போட ஆரம்பித்த ள்ளது ( ரோமர் 1 : 26 - 28 ) .
இதன் விளைவாக ஏற்படும் பாலியல் ரோகங்களையும் ( AIDS போன்றவை ) கண்டும் காணாமல் இருக்க செய்து விடுகிறது பரிதாபமே . " விவாகரத்து " என்ற சொல் ஆதியிலிருந்தே நமக்குத் தெரிந்திருந்தாலும் ( மத் 19 : 7 ) , இன்றைய நாட்களில் அது ஏற்றுக் கொள்ளப்பட்டாக வேண்டும் என்ற கட்டாய நிலைக்கு சமுதாயமும் ஏன் திருச்சபையும் தள்ளப்பட்டுள்ளது .
அது அரச குடும்பங்களையும் , ஆண்டி குடும்பத்தினையும் விட்டு வைக்கவில்லை . எப்படி இவளோடு , இவரோடு இணைந்து வாழ்வது என்ற கேள்வி மேலோங்கி நிற்பதனை அறியாதோர் யார் ? இணைக்கப்பட்டது எந்த வகையில் என்று திரும்பி பார்ப்பதற்குப்பதிலாக இணைந்து விட்டவர்கள் எப்படி வாழ வேண்டும் என்பதனைக் காட்டிக் கொடுக்க வேண்டியது அவசியமானபடியால் , வேத வெளிச்சத்தில் சேர்ந்தவர்கள் எப்படி சேர்ந்து வாழ்ந்து தேவ நோக்கத்தினைப் புரிந்து கொண்டு இன்பமாக வாழலாம் என்பதனைக் காண்பிக்க வேண்டி இந்த புத்தகத்தை நான் எழுதுகிறேன் .
தன் நிலையை புரிந்துகொண்டவர்கள்தான் தன்னை மாற்றிக்கொள்ளமுடியும் . இளையகுமாரனைக் குறித்து , அவனுக்கு புத்தித் தெளிந்தபோது என்ற பதங்கள் அவன் தன்னை புரிந்து கொண்டபோது என்றே பொருள்பட வருகிறது ( He came to himself ) . நம்மைப் புரிந்து கொள்ள உதவுவது “ மாறாத வேதமே " , அது வெளிச்சம் காட்டும் வரை நாம் அந்தகாரத்தில் இருப்பவர்களே ( நீதி 6 : 23 ) .
வேதபுத்தகம் அநேகருடைய குடும்பவாழ்வுகளை இருப்பதனை இருக்கும் வண்ணமாகவே காண்பித்து நமக்கு எச்சரிப்பினைத் தருவதோடு வழிகாட்டவும் செய்கிறது . எனவே அதன் அடிப்படையில் இப்புத்தகத்தை அனைவருக்கும் பிரயோஜனப்படும் வகையில் எழுத முயற்சி எடுத்தேன் . தொடர்ந்து படியுங்கள் உங்கள் உதவி தேவைபடுவோர் சமுதாயத்திலும் திருச்சபைகளிலும் நிரம்பியுள்ளனர் .
நீங்கள் பயன் பெறுவதோடு , அவர்களுக்கும் உதவ இதனை தேவன் பயன்படுத்துவாராக .
2 திருமணத்தின் போது . . . .
திருமணத்தில் நடக்கும் வெளிப்படையான , உள்ளான இரண்டினையும் அறிந்தவர்கள் சிலரே . இன்றைய திருமணங்கள் பெரியவர்களால் அநேகமாக நிச்சயிக்கப்பட்டாலும் , தேவனுக்கு ஒப்புக் கொடுத்த ஒருவரின் வாழ்வில் தேவகரம் இதனை நடத்த வல்லதாகவே இருக்கிறது . "
இந்தக் காரியம் கர்த்தரால் வந்தது , ( ஆதி 24 : 50 ) என்ற வார்த்தை தேவனை சரியாக அறியாத லாபான் , பெத்துவேலின் வாயிலிருந்தே புறப்பட்டது .
தன்னுடைய வழிகளைக் கர்த்தருக்கு ஒப்புவித்த ஒரு மனிதனை தேவன் சரியான வழியிலே நடத்துகிறார் ( ஆதி 24 : 12 , 63 ) . இரண்டு வேற்று சூழ்நிலையில் வளரும் நபர்களை தேவன் இணைக்கிறார் . இங்கே தேவன் ஒரு ( welder ) வெல்டரைப் போலவே கிரியை செய்கிறார் . இரண்டு இரும்பு துண்டுகளைய அல்லது வேறு இரண்டு உலோகப் பொருட்களையோ சூடாக்கி , உருகும் நிலைக்குக் கொண்டுவந்து இணைப்பது போல தேவன் அவர்களை தம்முடைய பலத்தால் கிருபையால் இணைக்கிறார் .
இரண்டு பேரும் இணங்க வேண்டும் அதனைத் தேவன் செய்வதற்கு அதன் மூலம் இந்தக்காரியம் எளிதாகிறது , பித்தளையும் செம்பும் வெவ்வேறு குணத்தினை உடையதாக இருந்தாலும் அது ஒன்றாக்கப்படும் போது வெண்கலம் போன்ற அதிக உறுதியான ஒரு உலோகம உண்டாக்கப்படுகிறதே . இதனைத்தான் ஆண்டவரும் , ஒருவராய் ஆயிரம் பேரைத் துரத்துகிறவன் இரண்டுபேராய் பதினாயிரம் பேரைத்துரத்துவார்கள் என்கின்றாரே ( உபா 32 : 30 ) .
திருமணத்தில் இணைகின்ற போது , நம்மை தேவன் இணைக்கிறார் என்ற நினைவில் இணைபவர்கள் தங்களின் பெலன் கூடுவதனை அறிய முடியும் . கணவன் மனைவியைப் போல , இருவரும் ஒரு மனதோடு வேறுயாரோடும் இணைந்து வரமுடியாதே ; அது அதிசயங்களை நடப்பிக்குமே ( மத் 18 : 19 ) . கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் மாத்திரமே ஒன்றும் வருவதில்லை ; ஏன் ஒரு துணிகூட . தாய் தகப்பன் , சகோதரன் , சகோதரி , நண்பர்கள் இடையில் ஏதோ ஒன்று இடையில் வரலாம் . ஆனால் அதற்கு முற்றிலும் கணவனும் மனைவியும் விலக்காகிறார்கள் . இதனை அவர்கள் ஒரே மாம்சமாயிருக்கிறார்கள் என்றே வேதம் கூறுகிறது ( ஆதி 2 : 24 ) .
ஆகையால் தான் திருமண ஆராதனையில் தேவன் இணைத்ததை மனுஷன் எவனும் , எக்காரணத்தைக் கொண்டும் , எக்காலத்திலும் பிரிக்காதிருக்கக்கடவன் என்ற கட்டளை கொடுக்கப்படுகிறது . இதனைப் புரிந்து கொண்ட சமுதாயமும் , குடும்பங்களும் கணவன் மனைவியைப் பிரிக்கும் என்ற முயற்சிக்குக் கை கொடுக்காதே . தானாக எரியும் ஹைட்ரஜனும் , எரிவதனை துரிதப்படுத்தும் ஆக்ஸிஜனும் இணைந்து தண்ணீராக , அக்கினியை அணைக்கும் , தாகம் தீர்க்கும் பொருளாக மாற்றப்படும் விந்தை ( H , O )
திருமணத்தில் நடைபெறும் ரசாயணச் சேர்க்கையல்லவா ! அதனை அறிந்து இணைந்து செயல்படும் வாழ்க்கை அநேக ஆயிரங்களுக்கு ஆசீர்வாதத்தினைக் கொண்டுவரும் என்பதில் சற்றும் சந்தேகமில்லை .
இரண்டாவதாக . தேவன் திருமணத்தில் சாட்சியாகிறார் என்பதனை வேதம் அழுத்தமாகவே கூறுகிறது ( Witness ) . மல்கியா 2 : 14 - ல் கர்த்தர் உனக்கும் உன் இளவயதின் மனைவிக்கும் சாட்சியாயிருக்கிறார் என்று வேதம் கூறுகிறது . அந்த உடன்படிக்கையில் அவருடைய சாட்சி நிலையானது என்பதனை மறுக்கக் கூடாதே . திருமண வைபவத்தினை வெறும் கொண்டாட்டமாகவோ , சடங்காச்சாரமாகவோ , நடைமுறையாகவோ நடத்தும் போதகர்களைக் கண்டு நான் மனம் வெம்பியிருக்கிறேன் : அது எத்தனை அர்த்தமுள்ளது , தேவன் வந்து இணைப்பது மாத்திரமல்லாமல் , அவரே சாட்சியாக நிற்கிறார் என்ற நினைவு எந்த கணவன் மனைவியையும் நடுங்கச் செய்திடுடே அந்த உடன்படிக்கைதனை முறிக்க முயலும் போது , யாருடைய பேச்சையோ கேட்டு , யாருடைய உறவையோ நாடி , ாருடைய உதவியையோ பெறுவதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்படும் போது , அதில் இணைக்கப்பட்டவர் தேவனும் என்கிற நினைவு நம்மை எத்தனையாய் மாற்ற வல்லது . இதனைத் தானே பிரசங்கி " முப்புரி நூல் சீக்கிரமாய் அறாது " ( பிரசங்கி பம் என்கிறான் . அந்த இருவர் கூடிவரும் போது நல்ல பலன் உண்டாகும் அவர்களுடைய பிரயாசத்தினால் ( working ) ; அவர்களுடைய நடையில் உதவி உண்டு ( walking ) ; அவர்களுடைய செய்கையில் சூடு உண்டாகும் ( warming up ) ; ஒருவரை ஒருவர் கவனித்துக் கொள்வதால் ( watching over ) வெற்றி பெற்று வீறுநடை போடலாம் என்பதனை எத்தனை அழகாக வேதம் வர்ணிக்கிறது ( பிர 4 : 9 - 12 ) . நியாயப பிரமாணமும் வழங்கப்படாத நாட்களில் வாழ்ந்தன
யோபுவும் " என் கண்களோடே உடன்படிக்கை பண்ணின நான் கன்னிகையின்மேல் நினைவாயிருப்பது எப்படி ? அப்பொழுது உன்னதங்களிலிருந்து தேவன் அளிக்கும் பங்கும் உன்னதங்களிலிருந்து சர்வவல்லவர் கொடுக்கும் சுதந்திரமும் கிடைக்குமோ ? என் மனம் யாதொரு ஸ்திரியின் மேல் மயங்கி அயலானுடைய வாசலை நான் எட்டிப்பார்த்தது உண்டானால் . அப்பொழுது என் மனைவி வேறொருவனுக்கு மாவரைப்பாளாக வேற்றுமனிதன் அவள் மேல் சாய்வார்களாக . அது தோஷம் அது நியாயாதிபதிகளால் விசாரிக்கப்படும் அக்கிரமமாமே . அது பாதாள பரியந்தம் பட்சிக்கும் அக்கினியாய் என் சம்பத்தையெல்லாம் நிர்மூலமாக்கும் " ( யோபு 31 : 1 - 2 ; 9 - 12 ) என்று நியாயத்தீர்ப்பினை ஞாபகமூட்டுகிறாரே . அதனை அறிந்த அவர் ஆசீர்வாதங்களையும் இழக்க ஆயத்தமாயில்லையே !
மூன்றாவதாக , தேவன் திருமணத்திலும் திருமணத்திற்குப் பின்னரும் வாழ்க்கைக்குக் கண்காணியாகிறார் ( watch ) . “ நாம் ஒருவரைவிட்டு ஒருவர் மறைந்த பின் நீ என் குமாரத்திகளைத் துயரப்படுத்தி அவர்களையல்லாமல் வேறே ஸ்திரிகளை விவாகம் பண்ணினாயாகில் கர்த்தர் எனக்கும் உனக்கும் நடுநின்று கண்காணிக்கக்கடவர் " என்று தேவனை அறியாமல் குறிப்பினால் ( குறிசொல்லுவதனை நம்பி ) மாத்திரம் வாழ்க்கையை அமைத்துக் கொண்டவனும் ( ஆதி 30 : 27 ) ; என் தெய்வங்கள் என்று கூறி சுரூபங்களை உண்டாக்கி வணங்கி வந்தவனான லாபான ( ஆதி 31 : 30 , 34 ) கூறுகிறான் . அந்த அறிவையும் இன்று அநேகர் இழந்து விட்டனரே .
ஒரே மாம்சமாக்கப்பட்டவர்கள் பாலுறவு கொள்வதில் மாத்திரம் அதனை நிறைவேற்றிவிடலாம் . ஆனால் ஒரே மனதாக மாற வேண்டிய காரியம் படிப்படியாக புரிந்து கொள்ளுதலின் அடிப்படையில் உண்டாவது . இரண்டு பேரும் தங்களை உண்டாக்கிய ஆண்டவரின் நோக்கத்தினை திருமணத்திற்கு முன்னமே புரிந்து கொண்டிருந்தால் , திருமணத்திற்கு முன் ( ஆமோஸ் 3 : 3 )
இதினிமித்தம் " நாங்கள் ஒரே ஆவியையுடையவர்களாய் ஒரே அடிச்சுவடுகளில் நடக்கிறவர்கள் ” என்று எளிதாக பிரகடனப்படுத்தக் கூடுமே . ( 2 கொரி 12 : 18 ) தீர்மானங்கள் வாழ்க்கையில் எடுக்கும் நேரங்கள் அனைத்திலும் , வேலையைக் குறித்தோ , பிள்ளைகளைக் குறித்தோ , பெரிய வீடு வாங்குவதினைக்குறித்தோ மேற்சொல்லப்பட்டக் காரியங்கள் நினைவில் கொள்ளப்படும் போது , போராட்டத்தோடே அல்ல சந்தோஷத்தோடே கூட அதனை நிறைவேற்றக் கூடும் . கூடவே விட்டுக் கொடுத்தல் என்னும் மந்திரமும் வாழ்க்கையில் வளம் சேர்க்கிறது .
விவாகம் பண்ணினவன் தன் மனைவிக்கு எப்படி பிரியமாயிருக்கலாமென கவலைப்படுகிறான் ; அப்படியே விவாகம் பண்ணினவள் தன் புருஷனுக்கு எப்படி பிரியமாயிருக்கலாமென கவலைப்படுகிறாள் ( 1கொரி 7 : 33 , 34 ) .
திருமணத்திற்கு முன் தனக்காகவும் தன் பிரயோஜனத்திற்காகவும் வாழும் நபர் . திருமணத திற்கு பின் மற்றவரை சந்தோஷப்படுத்தவும் , பின்னர் பிள்ளைகள் பிறக்கும் போது அவர்களை சந்தோஷப்படுத்தவும் வாழ ஆரம்பிப்பதினால் அன்பு பகிர்வு அதனைப் பெருக்கவே செய்கிறதே ஒழிய குறைப்பதில்லை ' இறைக்கிற கிணறு ஊறுகிறது " என்பது முற்றிலும் உண்மையாகிறது . இதுனால் , பலவீனபாண்டம் என்று அழைக்கப்படும் மனைவியோடு விவேகமாய் வாழ , கணவனும் அவர்களுக்குச் செய்ய வேண்டிய கனத்தினை செய்து இணைந்து நித்திய ஜீவனை சுதந்தரிக்க வேண்டும் என்ற சிந்தையினாலும் , ஜெபங்களுக்குத் தடைவந்து தேவ ஐக்கியத்தினை இழந்து விடக்கூடாது என்கிற கரிசனையினாலும் தங்களை விட்டுக் கொடுக்கும் காரியத்திற்கு மாற்றிக் கொள்கின்றனர் . ( 1 பேது 3 : 7 )
மனைவியும் புருஷனுக்குக் கீழ்படிந்து தங்களை அலங்கரித்து கொள்கிறாள் ( 1பேது 3 : 5 ) ; இவை அனைத்தும் திருமணத்தின் போது நடைபெறுகிறது . உள்ளும் புறமும் இதனை உணர்ந்த வாழ்க்கை இன்பகரமானதே .
பாலுறவில்
இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள் என்ற வார்த்தைகளில் தம்பதியரின் பாலுறவும் அடங்கும் . இயற்கையில் சிலர் பாலுறவில் அதிகம் நாட்டம் உடையவராகவும் , சிலர் அதனைக் குறித்து அத்தனை கவலை கொள்ளாதவர்களாகவும் உண்டாக்கப்பட்டுள்ளனர் . இந்த ஏற்றத் தாழ்வினை இணைபவர்கள் புரிந்து கொள்ளாவிடில் எப்போதும் மற்றவரை குறைவாகவோ அல்லது ஒரு மிருகத்தைப் போன்றோ பார்க்கும் சூழ்நிலை உண்டாகி புயலை உண்டாக்க அதிக வாய்ப்புகள் உண்டு .
வாலிப நாட்களில் தேவையற்ற ( Pronography ) திரித்த வாழ்விற்கு ( perverted life ) ஒப்புக் கொடுத்தக் காரியங்களில் ஈடுபட்டதினால் , மனைவியிடத்திலும் அல்லது கணவனிடத்திலும் இப்படிப்பட்டவைகளை எதிர்பார்த்துத் தங்களைக் காயப்படுத்திக் கொண்டோர் ஏராளம் .
சரீர பெலவீனங்கள் நிமித்தம் , வியாதியின் நிமித்தம் இதற்கு ஈடுகொடுக்க முடியாமல் தவிப்போர் வாழ்வில் நித்தமும் போராட்டமே .
தெளிவான எண்ணங்கள் , அன்பைப் பகிர்ந்து கொள்வது வெறும் பாலுறவில் மாத்திரம் அல்ல என்ற நினைவுகள் இந்த போராட்டத்தினை மேற்கொள்ளப் போதுமான பெலனுள்ளவை .
பாலுறவு ( sex ) மிருகங்களுக்கு வெறும் இனப்பெருக்கத்திற்காகக் கொடுக்கப்பட்டுள்ளது . ஆனால் மனிதனுக்கோ மகிழ்ந்து இன்புறுவதற்கும் இணைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது ( To enjoy & have pleasure ) , சினையான ஒரு ஆட்டையோ , பசுவையோ துணை மிருகம் தீண்டுவதில்லை .
ஆனால் மனிதன் இதற்கு விதிவிலக்கு ஒரு குறிப்பிட்ட வயதினைக் கடந்து விட்டால் மிருகங்கள் அதில் ஈடுபடுவதில்லை
மாறாக மனிதன் இறுதி வரை இந்த உணர்வுகளினால் நிறைந்திருக்கிறான் . இதனை விளக்கவே நீதிமொழி 5 : 18 - 200 , " உன் இளவயதின் மனைவியோடு மகழ்ந்திரு அவளே நேசிக்கப்படத்தக்க பெண்மானும் , அழகான வரையாடும் போலிருப்பாளாக . அவளுடைய ஸ்தனங்களே எப்போதும் உன்னைத் திருப்தி செய்வதாக , அவளுடைய நேசத்தால் நீ எப்போதும் மயங்கியிருப்பாயாக .
என் மகனே , நீ பரஸ்திரியின் மேல் மயங்கித் திரிந்து அன்னிய ஸ்திரியின் மார்பைத் தழுவ வேண்டியதென்ன " என்று காண்கிறோம் . மார்பு குழந்தைக்கு அல்லது குட்டிக்குப் பாலூட்டி வளர்க்க மிருகங்களுக்கு தரப்பட்டது .
மனிதனுக்கோ கூடவே மகிழ்வுறவும் அருளப்பட்டுள்ளது என்பது இந்த வசனங்களில் தெளிவாகிறது அல்லவா !
இதில் கவனிக்கப்படவேண்டியது , உன் மனைவியை அல்லது கணவனைத் திருப்திப்படுத்த வேண்டியது கடமை ஆகிறது . புருஷன் தன் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமையைச் செய்யக்கடவன் ; அப்படியே மனைவியும் தன் புருஷனுக்குச் செய்யக்கடவள் . மனைவியானவள் தன் சுய சரீரத்திற்கு அதிகாரியல்ல , புருஷனே அதற்கு அதிகாரி ; அப்படியே புருஷனும் தன் சுய சரீரத்திற்கு அதிகாரியல்ல , மனைவியே அதற்கு அதிகாரி ( 1கொரி . 7 : 3 , 4 ) என்ற வார்த்தைகள் அர்த்தம் பொதிந்தவை . மணவாளன் மணவாட்டியின் மேல் மகிழ்ச்சியாய் திருப்தியாய் இருப்பது தேவ சித்தம் ( ஏசா 62 : 5 ) ;
இது செயல்படாத குடும்பத்தில் மற்றவர்களை நாடிச் செல்ல விழையும் நபர்களைப் பார்த்து ஆண்டவர் சொல்வதனைக் கேளுங்கள் . விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளதாயும் , விவாக மஞ்சம் அசுசிப்படாததாயுமிருப்பதாக . வேசிக்கள்ளரையும் விபச்சாரகாரரையும் தேவன் நியாயந்தீர்ப்பார் ( எபி 13 : 4 ) .
மனைவியோடு மாத்திரமே மகிழ்ந்திருக்க வேதம் அனுமதிக்கிறது மாற்றாரோடு அல்ல . கணவனின் ஒரு அன்பு தொடுதல் ( caressing ) ஆயிரம் வார்த்தைகளுக்குச் சமம் . மனைவியின் ஒரு முத்தத்தில் ஆயிரம் ஆபத்தை அகற்றிவிட போதுமான பெலன் உள்ளது . படுக்கைக்குச் செல்லுமுன் இருவரும் சமாதானத்தோடு செல்ல வேண்டும் என்பதனை விளக்கும் வேதம்
" நீங்கள் கோபங்கொண்டாலும் பாவம் செய்யாதிருங்கள் . சூரியன் அஸ்தமிக்கும் முன்னமே உங்கள் எரிச்சல் தணியக்கடவது " ( எபே 4 : 26 ) என்று கூறுகிறது .
ஏனெனில் , உடலுறவில் ஆவியும் ஈடுபடுகிறது என்பதனை நாம் மறக்கலாகாது ( மல் 2 : 15 ; 1கொரி 6 : 16 , 17 ) . இனப்பெருக்கத்தின் போது அல்லது பிள்ளை உண்டாகும் போது அது மூன்றுவிதத்தில் உருவாக வாய்ப்புண்டு என்பதனை வேதம் நமக்குக் காட்டுகிறது .
இரத்தத்தினாலாவது , மாம்ச சித்தத்தினாலாவது , புருஷனுடைய சித்தத்தினாலாவது என்று அது வரையறுக்கிறது ( யோவா 1 : 13 ) . அதன் பொருள் என்ன ? இரத்தத்தினால் என்றால் உணர்ச்சி. பூர்வமான ஈடுபாட்டினால் பிறக்கும் குழந்தை . அது உணர்ச்சிகளை வெளிக்கொப்பளிக்கும் பிள்ளையாகவே காணப்படும் ( by a casual relationship ) , புருஷசித்தத்தினால் என்றால் புருஷனுக்கு உடலுறவு கொள்ள வாஞ்சை மனைவிக்கோ அதில் விருப்பமில்லை , எனவே அது ஒரு கட்டாய உடலுறவு , மனைவிதான் என்றாலும் அதில் பிறக்கும் பிள்ளை கடினமனதுடனேயே காணப்படும் ( forced sex ) , மாம்ச சித்தத்தினால் பிறக்கும் குழந்தை
இரண்டு பேரும் இசைந்து ,
தீர்மானித்து , திட்டமிட்டுக் கூடிவருவதால் உண்டான குழந்தை , அதில் இன்பம் இணைந்திருந்தாலும் நோக்கமும் இணைகிறது . இந்த குழந்தை மிருது சுபாவங்களோடு ( gentle ) பிறக்கிறது . எனவே பாலுறவு கொள்ளுமுன் மனைவியும் ஆவியில் ஏற்படும் காரியங்களும் மிகவும் முக்கியம் .
பயந்த ஆவியில் இணையும் பெற்றோருக்கு பிறக்கும் குழந்தை எதைக் கண்டாலும் பயப்படும் . சந்தேக ஆவியில் இணையும் போது பிறக்கும் குழந்தை எதையுமே நம்பாது . எனவே ஏதோ உடலின் தூண்டுதலால் உடறவு கொள்வது அநேக நேரங்களில் பிற்கால சந்ததியைப் பாதித்து விட வாய்ப்புண்டு .
ஈசாக்கு ரெபேக்காளோடு தனக்கு பெரிய பிள்ளைகள் இருந்த போதிலும் விளையாடிக்கொண்டிருந்தான் ( caressing , dallying ) ( ஆதி 26 : 8 ) என்பது ஒரு சுமூகமான திருமணத்தின் அடையாளம் .
விட்டுக்கொடுத்தல் , திருப்தியாக்குதல் போன்றவை தாம்பத்திய உறவில் இந்நிலையில் முக்கியமானவை . பட்டணங்களில் வாழ்வோருக்கும் , சிறிய வீட்டில் வாழ்பவருக்கும் , கூட்டுக் குடும்ப வாழ்க்கையில் உள்ளவருக்கும் ( Joint family ) அதனால் அனேக நேரங்களில் போராட்டம் உண்டு .
அக்காவின் பேர்காலத்தில் உதவிசெய்யச் சென்ற சகோதரிகளுக்கும் , தொடர் வியாதியின் நிமித்தம் படுக்கையில் உள்ள மனைவியை நெருங்கக் கூடாத கணவருக்கும் , அந்நிய தேசத்தில் சம்பாத்தியம் செய்ய சென்ற கணவன் நிமித்தமும் . படைகளத்தில் போர்புரியும் வீரர்களின் பிரிவின் நிமிக்கமும் , வியாதி நேரத்தில் அன்பு பாராட்டும் சிலரின் அலாதி பிரியக்கின் நிமித்தமும் அநேகருடைய குடும்ப வாழ்வில் புயல் வீசுவது உண்டு , அகப்பட்டு மாட்டிக் கொண்டோரும் உண்டு .
எந்நிலையிலும் தேவ பார்வையை விட்டு அகலாத வாழ்க்கையைத் தேவன் தருவாராக .
இணைந்து விட்டதினால் . . .
அநேக நேரங்களில் இந்தியத் திருமணங்களில் , தேவ நோக்கம் தனி வாழ்வில் என்ன என்பதினைக் கண்டு கொண்டோரின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளபடியினால் ,
அதனைக் குறித்து கவனம் அதிகம் செலுத்தப்படுவதில்லை . நம் குடும்பத்திற்கு வந்துப் போவார்களா ? என்கிற கேள்விகள் கூட கேட்கப்படுவதில்லை . மாறாக மற்ற புறக்காரியங்கள் மேலோங்குவதினால் இணைக்கப்பட்டவர்கள் அநேகருடைய வாழ்க்கையில் அடிக்கடி " பூகம்பங்கள் " தான் ஏற்படுகின்றன .
இதன் விளைவுகள் சுற்றத்தாரையும் , பெற்றோரையும் சபைகளையும் , சமுதாயத்தினையும் அதிகமாக பாதிக்கத் தொடங்கியுள்ளதனை அறிந்ததினால் இந்த புத்தகத்தை எழுத நேரிட்டது .
சாதாரணமாக நான் ஒரு நபரிடம் திருமணத்திற்கு முன் சில காரியங்களை தற்பரிசோதனைச் செய்ய சொல்லுவது வழக்கம் .
முதலாவது வாழ்க்கையில் " தேவ நோக்கம் ” என்ன என்பதனை அறியாமல் திருமண வாழ்க்கையில் ஈடுபடுவது சரியானது அல்ல .
இரண்டாவது , அதனை நிறைவேற்ற வேண்டிய ஒப்புக்கொடுத்தலும் , இணைவோரை அதற்குள்ளாக மாற்ற பலனும் , பொருளாதாரமும் உனக்கு கிடைக்கும் வரை காத்திரு .
மூன்றாவது , யாரையாவது மனதில் வைத்துக்கொண்டு பின்னர் இந்த திருமணம் தேவ சித்தம் தானா என்பதனை அறிய முற்படுவதினால் ஒன்றும் நடக்கப் போவதில்லை .
முதலாவது அறிய வேண்டியவைகளை அறிந்து , ஆராயவேண்டியவைகளை ஆராய்ந்து , அனைத்தும் தெளிவான பின்னர் தேவ சமூகத்தில் போய் காத்திருந்து பதில் பெறுவது சிறந்தது . பதில் தெளிவாக இல்லாவிடினும் மனதில் சமாதானம் இருக்கவேண்டும் .
அது தேவ நடத்துதலுக்கு நம்மை இயக்குவிக்கும் நல் ஆதாரம் . ஆயினும் , பெற்றோரின் கட்டாயம் , சூழ்நிலைகளின் கட்டாயம் , அறியாமையின் ஆதிக்கம் போன்றவை அநேக ஒழுங்குபடுத்தப்பட்டத் திருமணங்களில் காணப்படுவதினால் எனக்கு ஏற்றவர் இவர்தானா ? என்கிற கேள்விக்குப் பதில் காணும் முன்னரே அனைத்தும் முடிந்து விடுகிறது . அதனால் வாழ்க்கையில் திக்குமுக்காடுவோரின் எண்ணிக்கை மிகவும் அதிகம் . அவர்களுக்கு' வைதமான தம்பதியரை உறுதுணையாக வேதம் காட்டும் பலவிதமான தம்பதியரை மையமாக வைத்து இப்புத்தகத்தில் அறிவுரைகள் தரப்பட்டுள் வேதம் காட்டும் தம்பதியரை நான்கு பிரிவாக பிரித்து அதினால் உண்டாகும் கஷ்ட , நஷ்டங்கள் , நிலைகள் , பாதிப்புபோன்றவைகளை எடுத்துக் காட்டாகவும் எச்சரிப்பாகவும் எழுதினால்கரைகாண முயற்சிப்போர்க்கு உதவ முடியுமே என்ற நோக்கில் இதனைப் படைக்கிறேன் .
உலகோரை இரண்டு பிரிவாக பிரிக்கிறேன் . தேவபக்தியுள்ளோர் ( Godly ) தேவ பக்தியில்லாதோர் ( Ungodly ) . இந்த இரண்டு தரப்பினர்கள் இணைய நேரிட்டால் கீழ்கண்ட முறையில் திருமண உறவுகள் ஏற்படலாம் .
தேவ பக்தியுள்ள கணவனும் , பக்தியற்ற மனைவியும் ( Godly Husband & Ungodly Wife )
பக்தியற்ற கணவனும் தேவ பக்தியுள்ள மனைவியும் , ( Godly Wife & Ungodly husband )
தேவபக்தியுள்ள கணவனும் , பக்தியுள்ள மனைவியும் ( Godly husband & Godly wife )
தேவபக்தியற்ற கணவனும் , பக்தியற்ற மனைவியும் ( Ungodly Husband & Ungodly Wife )
கிட்டத்தட்ட 32 தம்பதியரை கண்டுபிடித்து , அவர்களுடைய வாழ்க்கையினை ஆராயமுற்பட்டு , கற்றுக்கொள்ளக் கூடிய பாடங்களை வாழ்வின் படிப்பினையாக்க இதனை வரைகிறேன் . இந்த உதாரணங்களில் சிலர் பழைய ஏற்பாட்டுக் காலத்தில் வாழ்ந்ததினால் இரண்டு மனைவிகளோடு வாழ்ந்தவர்கள் . குறிப்பாக ஆபிரகாம் தேவனுக்குப் பயந்த சாராளோடும் ( 1பேது 3 : 5 , 0 ) . தேவனை சந்தித்திருந்த போதிலும் தேவனை சாராமல் வாழ்ந்த ஆகாரோடும் வாழ்ந்தவர் ( ஆதி 16 : 13 ; ஆதி 21 : 15 , 16 )
தேவனுக்குப் பயந்து வாழ்ந்த எல்க்கானா , தேவ பக்தியும் அன்னாளோடும் தேவனை புரிந்து கொள்ளாத பெனினாளோடு வாழ்ந்தவர் ( 1 சாமு 1 : 2 , 6 , 7 ) தேவ நோக்கத்தினை நிறைவேற்ற அழைக்கப்பட்ட
யாக்கோபு தன் இம்மைக்குரிய வாழ்வினையே குறியாகக் கொண்டிருந்த லேயாள் , ராகேல் என்ற மனைவிகளை உடையவர் ( ஆதி 29 , 30 அதிகாரங்கள் ) , " சத்திய வேதம் " அனைத்தையும் தெள்ளத்தெளிவாக பாரபட்சம் பாராட்டாமல் இருப்பதனை இருக்கிற வண்ணமாகவே காண்பித்து நமக்குத் தெரிவிக்கிறது . அது பரிசுத்த வேதாகமம் தான் ஆயினும் உள்ள பிழைகளை எந்த தேவ மனிதனில் கண்டாலும் கட்டிக்காட்ட அது மறக்கவில்லை ; மறைக்கவுமில்லை .
இது புராணங்களைப் போல கட்டுக் கதையும் அல்ல . தேவனே சத்தியபரர் என்றும் , எந்த மனுஷனும் பொய்யன் என்றும் அடித்துக் கூறி ( ரோமர் 3 : 4 ) ; எல்லாரும் வழிதப்பி ஏகமாய்க் கெட்டுப்போனார்கள் . நன்மை செய்கிறவன் இல்லை ஒருவனாகிலும் இல்லை ( ரோமர் 3 : 12 ) என்பதனை வெட்ட வெளிச்சமாக்கி , விழுந்து போனவர்களுக்கும் தடுமாறுகிறவர்களுக்கும் வாழ வழி காட்ட வெளிச்சமாய் அநேகருடைய வாழ்க்கையை வெட்டவெளிச்சமாக்கி , நம்மை எச்சரித்து கடிந்து கொள்ளுதலுக்கும் , சீர்திருத்தலுக்கும் , நீதியை படிப்பிக்குதலுக்கும் , பிரயோஜனமுள்ளதாய் நம்மை தேறினவர்களாக ( வாழ்க்கை பரீட்சையில் தேர்வு பெறச் செய்து ) வாழத் தகுதியுடையவர்களாக மாற்றுகிறது . ( 2தீமோ 3 : 16 , 17 ) . சத்திய வேதம் கண்களையும் தெளிவாக்கி விடுகிறது ( சங் 19 : 8 ) , பேதைகளை ஞானியுமாக்கி விடுகிறது ( சங்19 : 7
எனவே இந்த 32 தம்பதியினரின் வாழ்வில் காணப்படும் அன்றாடப் போராட்டங்கள் , இந்த நவீன காலத்தில் வாழும் நமக்கும் ( Modern life ) உண்டு என்பதனையும் , தொழில் நுட்பத்தின் விளைவினால் ( Technology ) நம் சிந்தைகள் மாற்றப்பட்ட சூழ்நிலையில் , போராட்டத்தின் வர்ணம் ( colour ) மாறியிருந்தாலும் , கருப்பொருள் அதுவாகவே இருப்பதினால் அவர்கள் மேற்கொண்ட முறைகள் நமக்கு நிச்சயமாகவே உதவும் . கலாச்சாரம் நம்மை அநேக நேரங்களில் நோவாவைப் போல தேவ வார்த்தைக்குச் செவி கொடுக்க தயங்கப்பண்ணுகிறது .
பேழையை உண்டாக்க கர்த்தர் கட்டளையிட்டபோது அதற்கு முற்றிலும் கேள்வியின்றி கீழ்படிந்த நோவா ( ஆதி 6 : 22 ) , ஆணும் பெண்ணுமாக பேழையில் பிரவேசிக்கச் சொன்ன போது , மிருகங்கள் ஆணும் பெண்ணுமாக பேழைக்குட்பட்டன ( ஆதி 7 : 9 ) ஆனால் நோவா தன் குமாரரோடும் , அவன் மனைவியும் மருமக்களோடு பிரவேசித்தனர் ( ஆதி 7 : 13 ) .
பேழையை விட்டு வெளியே வரும்போதும் தேவன் மீண்டும் கட்டளையிடுகிறார் . " நீயும் உன்னோடே உன் மனைவியும் உன் குமாரரும் உன் குமாரரின் மனைவிகளும் பேழையை விட்டுப்புறப்படுங்கள் ” என்று ( ஆதி 8 : 16 ) .
ஆனால் , நோவாவோ பழக்கதோஷம் , பாரம்பரியம் , கலாச்சாரம் என்கிற படியினால் தன் குமாரரோடும் பெண்கள் அனைவரும் தனியாகவும் புறப்பட்டனர் . ( ஆதி 8 : 18 ) விளைவு விபரீதமே ,
தன் கூடாரத்தில் வஸ்திரம் விலகிப்படுத்திருந்ததனை குமாரன் காம் கண்டு சபிக்கப்பட்டவன் ஆகிறதற்கு இதுவும் ( கலாச்சாரம் , பாரம்பரியம் போன்றவை காரணமாகிற்று ( ஆதி 9 : 21 . 25 ) ,
இணைந்து விட்ட நாம் எப்படி நம்மை மாற்றிக்கொள்ளவேண்டும் என்பதனை வேதம் காட்டும் தம்பதியரின் வாழ்வில் இருந்து கற்றுகொண்டு சீர்பெறுவோமாக .
மனைவியைக் கண்டடைகிறவன் நன்மையானதைக் கண்டடைகிறான் . கர்த்தரால் தயையும் பெற்றுக் கொள்ளுகிறான் ( நீதி 18 : 22 ) , வீடும் ஆஸ்தியும் பிதாக்கள் வைக்கும் சுதந்தரம் ; புத்தியுள்ள மனைவியோ கர்த்தர் அருளும் ஈவு ( நீதி 19 : 14 ) என்ற மாறாத ஆசீர்வாதங்களை அனுபவிப்பவர்கள் வெகுசிலரே .
அவள் வீட்டிற்குள் இருப்பவர்களுக்கும் வருபவர்களுக்கும் புத்துணர்ச்சி தரும் வீட்டோர கனிதரும் திராட்சக் கொடி ( சங் 1283 ) குடும்பத் திறகு பெலன சேர்க்கும் பிள்ளைகளை உருவாக்கித்தருபவள் ( சங் 128 : 3 ; சக 4 : 12 ) , அவள் " ஆறை நூறாக மாற்றுபவள் கணவனிடமிருந்து பெறும் ஒரு சிறு விந்தை பிள்ளையாக உருமாற்ற வல்லமையுள்ள கர்ப்பப்பையை உடையவள் .
12 கிலோ அரிசியை சமைத்து பாத்திரம் நிறைய சோறாக மாற்றுபவள் . ருசியற்ற வாழ்விற்கு ருசி ஏற்றுபவள் என்பது எத்தனை உண்மையோ , அத்தனை உண்மை அவளுக்கு அழிக்கவும் வல்லமை உண்டு என்பது . புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டைக் கட்டுகிறாள் . புத்தியில்லாத ஸ்திரியோ தன் கையினால் அதை இடித்துப் போடுகிறாள் ( நீதி 14 : 1 )
தான் வேலை செய்வது மற்றவர்களுக்கு வாழ்வு கொடுக்கவே என்பதனை கற்றுக்கொண்ட குணசாலியானவள் , முதலாவது தன் வேலையின் பலன் சிறுமையானவர்களுக்கும் ஏழைகளுக்கும் உதவவே என்பதனையும் , பின்னர் தன் வீட்டார் அனைவருக்கும் பாதுகாப்பளிக்கவும் எல்லாவற்றிற்கும் பின்னரே தன்னுடைய தேவைகளுக்கு என்பதனை விளங்கப்பண்ணுகிறாள் ; ( நீதி 31 : 19 - 22 ) அவள் பெருமை சேர்ப்பவள் .
ஆனால் அப்படிப்பட்டவளோடு விவேகமாக வாழக் கற்றுக்கொள்ளாதோர் நிலை பரிதாபமே . தான் ஆண் எனவே அவளை அடக்கி வாழ வேண்டும் . அடிமையாய் நடத்த வேண்டும் , பெண் புத்தி பின் புத்தி என்ற கொள்கையை தலையில் கொண்டு வாழ்வினைக் கெடுத்துப் போட்டவர்கள் எத்தனை பேர் !
ஆனால் இடித்துப்போடும் குணம் கொண்டவளின் ஆலோசனைகள் ஏவாளைப் போல , சாராளைப் போல சில நேரங்களில் தவறான ஆலோசனைக்களை கணவனுக்கு தந்து காரியங்களைச் சீரழித்தும் போட்டுள்ளனவே . ஏவாள் கர்த்தரை நித்தம் தரிசித்தவள் ( ஆதி 3 : 8 ) , சாராள் கர்த்தரை நம்பி ஆபத்துக்குப் பயப்படாமல் எகிப்தில் பார்வோன் அரண்மனையில் புகுந்தவள் ( 1பேது 3 : 6 ) ;
ஆயினும் சூழ்நிலைகள் அவர்களைத் தடுமாறச் செய்தபோது பெரும் ஆபத்தினை உலகிற்கு கொண்டு வரக் காரணமாகிவிட்டார்கள் . எனவே “ அவள் சொல்லுவது எல்லாம் எனக்கு ஏற்றது " என வாழும் கணவனும் மாட்டிக்கொள்கிறான் . இதனைத்தான் விவேகமற்ற வாழ்வு என்று வேதம் சொல்லுகிறதோ . . . ?
. உங்களுக்கு
நன்மையுண்டாகும்
என்று நீதிமான்களுக்குச்
சொல்லுங்கள், அவர்கள்
தங்கள் கிரியைகளின்
பலனை அநுபவிப்பார்கள்.
ஏசாயா 3:10
வேத வெளிச்சத்தில் , தேவ சித்தத்தில் தேவ நோக்கத்தினைப் புரிந்து கொண்ட வாழ்வில் தன்னை வாழ ஒப்புக்கொடுத்தோர் வாழ்வில் காயங்கள் பட்டாலும் மடிந்து போக மாட்டார் ; மாறாக நிமிர்ந்து வெற்றிப் புன்னகையோடு முன்னேறுவர் . இப்புத்தகத்தினை வாசித்து முடிக்கும் போது அப்படிப்பட்ட இன்பகரமான , இணக்கமான , இல்லறவாழ்வு உங்களுக்காகும் என நான் நம்புகிறேன் .
செய்த தவறுகளைத் திரும்பச் செய்யாதபடிக் காத்துக் கொள்ளவும் . விளைவுகளைக் கண்டு விலகியோட தேவ பலன் போதுமானதாக இருக்கும் என விசுவாசிக்கிறேன் . " நீதிமான் ஏழுதரம் விழுந்தாலும் திரும்பவும் எழுந்திருப்பான் ” ( நீதி 24 : 16 ) எனவே வெற்றி வாழ்வை நாடுங்கள் ; புன்னகை செய்து முன்னேறுங்கள் ; புதியதாக மாறட்டும் எண்ணங்கள் : புதுப்பிக்கப்படட்டும் தீர்மானங்கள் ; புத்துணர்ச்சி பெறட்டும் உடன்படிக்கை ; புது சமுதாயம் படைப்போம் .
ஆதாம் மிகுந்த ஞானவானாக , அறிவுள்ளவனாக புத்தி் கூர்மையுள்ளவனாக சிருஷ்டிக்கப்பட்டிருந்தான் . பாவம் . பிரவேசித்து அவனுடைய எண்ணங்களைக் கெடுக்கும் சகலவித பறவைகளுக்கும் மிருகங்களுக்கும் பேரி வல்லவனாக இருந்தான் ( ஆதி 2 : 19 , 20 ) . ஆனால் அவன் தனிமையைக் கண்ட ஆண்டவர் அவனுக்கு ஏற்ற துணை தருவதற்கு அவனிடம் ஆலோசனைக் கேட்கவில்லை . எப்படி பெண் உனக்கு வேண்டும் ? என அவனிடம் கேட்கவில்லை . எது அவனுக்கு ஏற்ற துணையைக் கொண்டுவந்து நிறுத்துகிறார் ஆதாமும் தேவன் எனக்கு நன்மையையே செய்கிறவர் என்பது அறிந்திருந்ததினால் ( சங்119 : 68 ) , அவளை அவர் தந்த வண்ணமாகவே ஏற்றுக்கொள்ளுகிறான் ; கூடவே அவன் களிகூறுகிறான் ( ஆதி 2 : 23 )
அனேகருடைய ஒப்புக்கொடுக்கப்பட்ட வாழ்வில் சேல தருவதனை அப்படியே ஏற்றுக்கொள்ள மனமில்லாததினால் தான் போராட்டம் ஆரம்பிக்கிறது .
பின்னதாக ஈசாக்கும் அப்படியே எலியேசர் கர்த்தர் நடத்தின விதத்தையும் , ரெபேக்காளைத் தெரிந்தெடுத்தமுறையினையும் கூறி விவரித்த போது அவளை அழைத்துக்கொண்டு போய் தனக்கு மனைவியாக்கிக் கொண்டு அவளை நேசித்தான் ( ஆதி 24 : 66 , 67 ) .
தன் தகப்பனாகிய ஆபிரகாம் விருப்பத்தினை வேலைக்காரன் மூலம் தேவன் நிறைவேற்றுவதனையும் , வேலைக்காரன் தெரிந்து கொள்வதற்கு தேவ நடத்துதல் எப்படியிருந்தது என்பதனையும் கண்ட அவனுக்கு வாழ்க்கையில் போராட்டங்கள் வந்தபோது அதை தாண்டிச்செல்வது எளிதாக இருந்தது
மாத்திரமல்லாமல் , தனக்குப் பிள்ளைகள் பிறந்து , பெரியவர்களான பின்னரும் தன் மனைவியாகிய ரெபேக்காளோடு விளையாடிக் கொண்டிருக்கக் கூடியதான சூழ்நிலையில் காணப்படுகிறான் ( ஆதி 26 : 8 ) ,
அதனை ஜன்னல் வழியாகக் கண்ட அபிமெலேக்கு அவர்கள் கணவன் மனைவி என்பதனை அறியக் கூடிய விளையாட்டு அது ; அத்தனை இனிமையான வாழ்க்கை அது . இறுதிவரை வேறொருவர் முகமும் அவன் பார்க்கவில்லை . இருபது வருடங்கள் பிள்ளையில்லாமல் இருந்தும் தன் தகப்பனைப் போலவோ அல்லது மற்ற ஜனத்தினைப் போலவோ அவன் வேறொருத்தியைத் தேட வில்லை ( ஆதி 25 : 20 , 26 ) .
ஆதியில் " ஏற்ற துணை " யை உண்டாக்கின ஆண்டவர் அவளை துணையாள் என்றே அழைக்கிறார் ( Help Meet ) " வாழ்வை முழுதாக்கும் " பாகம் என்றே வேதம் குறிப்பிடுகிறது ( compliment plified Bible ) .
இதே பொருளில் தான் நமக்கு பரிசுத்த ஆவியானவரும் தரப்பட்டிருக்கிறார் . யோவான் 14 : 15 - 2 வில Amplified Bible ) விரிவுரை வேதாகமம் தேற்றரவாளன் , ஆலோசகர் , உதவியாளர் , பரிந்து பேசுபவர் , வழக்குரைஞர் , பலப்படுத்துபவர் , கூட நிற்பவர் , ( Comforter , consoler , helper . intercenor , Advocate , Strengther and Stand by ) என்ற தங்களை உபயோகப்படுத்தி அதின் உள் அர்த்தந்தனை நமக்கு விளக்குகிறது
எனவே , மனைவியும் நமக்குத் தரப்படும் போது , இதே நிலையில் இணைக்கப்படுகிறாள் என்கிற எண்ணம் நம்மை ஆக்கிரமித்தால் , அவள் உயிரோடிருக்கும் நாளெல்லாம் எனக்கு தீமையையல்ல நன்மையையே செய்கிறாள் ( நீதி 31 : 12 ) என்பது தெள்ளத் தெளிவாகத் தெரியும் . பரிபூரண ஒப்புக்கொடுத்தலின் விளைவாக தேவன் இதனை நடப்பிப்பார் .
அது வேலைக்காரன் தேடினதாக இருந்தாலும் , கர்த்தரின் வழிநடத்துதலைப் புரிந்து கொண்டோர்க்கு அதனை அள்ளி அணைத்துக்கொள்வது மிகவும் எளிதானதே .
சூழ்நிலைகளினால் , மற்றவர்களின் கட்டாயத்தினால் , தேவையற்றவர்களின் குறுக்கீட்டினால் , மாம்சத்துக்குரியவரின் பிடிவாதத்தினால் சில வேளைகளில் விரும்பப்படாத நபர் நமக்குக் கிடைத்துவிட்டால் என்ன செய்வது ? என்கிற கேள்விக்கு பதில் கொடுக்க வேண்டிய அவசியம் உண்டாகிறபடியால் , அதனை விளக்கும் வண்ணமே தேவ பக்தியற்ற நபரை மணந்தவர்கள் வாழ்வில் ஏற்படும் சூறாவளியினைக் கடந்து செல்ல உதவும் வண்ணம் , வேதத்தின் வெளிச்சத்தில் மேற்சொல்லப்பட்ட தம்பதியினரின் வாழ்வினை நாம் அலசி ஆராய்வது நல்லது .
ஏனெனில் மனைவியைக் கண்டவன் வாழ்வில் காரியங்கள் வெகுவிரைவில் மாற்றப்படும் அபாயம் உண்டு . இராஜாவின் பந்திக்கு அழைக்கப்பட்டிருந்த ஒருவன் இடையில் திருமணம் செய்து கொண்டபோது , மனைவி அவனை மாற்றிவிட்ட விந்தையை இயேசு விளக்கும் போது ,
' நான் பெண்ணை விவாகம் பண்ணினேன் அதினால் நான் வரக்கூடாது ' என்று சொல்கிறான் ( மத் 22 : 2 ; லூக் 14 : 20 ) , திருமணத்திற்கு முன்பு " துரு துரு " என்று காணப்படும் அநேகர் திருமணத்திற்கு பின்பு " திரு திரு " என்று முழிப்பதனை நான் எப்படியாயினும் இணைக்கப்பட்டிருக்கிற நபரில் இருந்து பிரிந்து போவதற்கு வேதம் அனுமதி வழங்கவில்லை .
மாறாக மாற்றி வாழ்வதற்கான வழியை நமக்குக் காட்டிக்கொடுக்கிறது . " தவறான நபர் கிடைத்து விட்டார் " என்று அங்கலாய்க்கவோ , வாழ்நாள் எல்லாம் வருத்தப்படவோ தேவையில்லை . ' அந்நிய நுகத்தில் அவிசுவாசிகளுடனே பிணைக்கப் படாதிருப்பீர்களாக ' ( 2கொரி 6 : 14 ) என்பது மாறாத பிரமாணம் . ஆனால் ,
திருமணத்தின் போது இரட்சிக்கப்படவில்லை , பின்னரே ஆண்டவரை அறிந்து கொண்டேன் என்பவர்கள் உண்டல்லவா ! அப்படிப்பட்டவர்களைக் குறித்து வேதம் கூறும் தெளிவான அறிவுரை , " மனைவியானவள் தன் புருஷனை விட்டுப் பிரிந்து போகக்கூடாது ; பிரிந்து போனால் அவள் விவாகமில்லா திருக்கக்கடவள் ; அல்லது புருஷனோடே ஒப்புரவாகக்கடவள் புருஷனும் தன் மனைவியைத் தள்ளிவிடக் கூடாது . சகோதரனுடைய மனைவி அவிசுவாசியாயிருந்தும் அவனுடனே வாசமாயிருக்க அவளுக்குச் சம்மதமானால் அவன் அவளைத் தள்ளி விடாதிருக்கக்கட ன் .
அப்படியே , ஒரு ஸ்திரியினுடைய புருஷன் அவிசுவாசியாயிருந்தும் , அவளுடனே வாசமாயிருக்க அவனுக்குச் சம்மதமிருந்தால் அவன் அவளைத் தள்ளிவிடாதிருக்கக்கடவன் .
ஏன்னத்தினாலெனில் , அவிசுவாசியான புருஷன் தன் மனைவியால் பரிசுத்தமாக்கப்படுகிறான் . அவிசுவாசியான மனைவி தன் புருஷனால் பரிசுத்தமாக்கப்படுகிறாள் . இல்லாவிட்டால் உங்கள் பிள்ளைகள் அசுத்தமாயிருக்குமே ; இப்பொழுதோ அவைகள் பரிசுத்தமாயிருக்கின்றன . ஆகிலும் , அவிசுவாசி பிரிந்து போனால் பிரிந்து போகட்டும் . இப்படிப்பட்ட விஷயத்தில் சகோதரராவது சகோதரியாவது அடிமைப்பட்டவர்களல்ல . சமாதானமாயிருக்கும்படிக்கே தேவன் நம்மை அழைத்திருக்கிறார் .
மனைவியானவளே , நீ உன் புருஷனை இரட்சிப்பாயோ அல்லவோ உனக்கு எப்படித் தெரியும் ? புருஷனே , நீ உன் மனைவியை இரட்சிப்பாயோ அல்லவோ உனக்கு எப்படித் தெரியும் ? ( 1 கொரி 7 : 10 - 16 ) உங்கள் மனைவிகளைத் தள்ளிவிடலாமென்று உங்கள் இருதயக் கடினத்தினிமித்தமே மோசே உங்களுக்கு இடங்கொடுத்தார் ; ஆதிமுதலாய் அப்படியிருக்கவில்லை . ஆதலால் எவனாகிலும் தன் மனைவி வேசித்தனஞ் செய்ததினிமித்தமேயன்றி அவளை தள்ளிவிட்டு வேறொருத்தியை விவாகம் பண்ணினால் விபச்சாரஞ் செய்கிறவனாயிருப்பான் . தள்ளிவிடப்பட்டவளை க பண்ணுகிறவனும் விபசாரஞ் செய்கிறவனாயிருப்பான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் ( மத்19 . 8 . 9 ) .
ஆனாலும் , உங்களுக்கு விரதத்துவம் இல்லாமையால் என்றும் ( 1கொரி 15 ) , வேகிறதைப்பார்க்கிலும் விவாகம் பணைகிறது நலம் என்றும் ( 1கொரி 19 ) , வேசித்தனம் இராதபடிக்கு அவனவன் தன் சொந்த மனைவியையும் , அவளவள் தன் சொந்த புருஷனையும் உடையவர்களாயிருக்க வேண்டும் ( 1 கொரி 7 : 2 ) என்று சொல்லும் வசனங்களை அசட்டை பண்ணலாகாது .
ஏமாற்றப்பட்டு , திருமணத்திற்குத் தகுதியற்றவர்களைத் திருமணம் செய்து , அறிந்து கொண்ட பின்னர் ( ஆண்மையோ , பெண்மையோ இல்லாதிருப்பவர்கள் - impotent ) விலக நேரிடுகிற காரியங்களும் உலகில் மலிந்து வருகின்றது . அப்படிப்பட்டவர்கள் ஏமாற்றப்பட்ட உடன்படிக்கையில் ஈடுபடுத்தப்பட்டபடியால் அந்த உடன்படிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டதல்ல என்பது உண்மை .
எனவே , அது முறிக்கப்பட அனுமதி வழங்கலாம் என்பது என்னுடைய கருத்து . ஆனால் , யோசுவாவின் காலத்தில் கர்த்தருடைய வாக்கைக் கேளாமல் கிபியோனியரோடு உடன்படிக்கை செய்து பின்னர் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்று கண்டு கொண்ட பிரபுக்கள் அவர்களை அடிமைகளாக நடத்தி , அவர்களைக் கொன்று போடாதிருந்தார்கள் . அந்த உடன்படிக்கை தேவன் பேரில் அவர்கள் செய்திருந்தபடியால் ( யோசு 9 : 19 ) இதனைச் செய்தார்கள் என்று வேதம் கூறுகிறது .
இந்த உடன்படிக்கைதனை பின் காலத்தில் மீறின சவுலின் நாட்கள் நிமித்தம் இஸ்ரவேலில் பஞ்சம் ஏற்பட்டதினையும் , அதற்கு பாவ நிவிர்த்தியாக தாவீது என்கிற தேவ மனுஷன் செய்தக் காரியங்களையும் தேவன் நமக்கு எழுதித் தந்துள்ளார் ( 2 சாமு 21 : 1
மேற்கண்ட சம்பவம் உடன்படிக்கை மீறப்படுவதில் உள்ள ஆபத்துக்களைக் குறிப்பதினால் , அநேகர் அப்படி ஏமாற்றப் பட்டிருந்து பிரிந்து போக மனதில்லாமல் வாழ்க்கை நடத்துவதனையும் நான் கண்டிருக்கிறேன் . எது எப்படியிருந்தாலும் உடன்படிக்கை ( covenant ) திருமணத்தில் நடைபெறுவதனை மறக்கவே கூடாது ( மல் 2 : 14 ) ,
உடன்படிக்கையை மீறுவது ஆவியில் உண்டாகும் அசுசி என்பதனை நாம் மறக்கலாகாது ( மல் 2 . 15 2கொரி 7 : 7 ) வேதத்தின் இரகசியங்களையும் உண்மைகளையும் சரியாக அறியும் முன்னர் ஏற்பட்ட கோளாறுகள் , விபத்துக்கள் , போராட்டங்கள் , புயல்கள் , சேதங்கள் , விளைவுகள் அனைத்தையும் மனத்தாங்கல்களையும் மாற்ற வல்லது வேத தியானமும் தெளிந்த புத்தியுமே .
அதனை அறிய தேவன் நம் கண்களைத் திறப்பாராக . " உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும் படிக்கு என் கண்களைத் திறந்தருளும் " ( சங் 119 : 18 ) என்பது நம்முடைய ஜெபமாவதாக . அவைகளால் உமது அடியேன் எச்சரிக்கப்படுகிறேன் அவைகளைக் கைக்கொள்ளுவதினால் மிகுந்த பலன் உண்டு ( சங்19 : 11 ) .
வேதம் மறக்கப்பட்டால் . . . .
" உன் தேவனாகிய கர்த்தரை மறவாதபடிக்கு எச்சரிக்கையாயிரு " என்ற கட்டளை மறுபடி மறுபடி இஸ்ரவேல் ஜனத்திற்குக் கொடுக்கப்பட்டிருந்த போதிலும் ( உபா 6 : 12 ; 8 : 16 ) , கானான் என்ற செழிப்பும் வனப்புமான தேசத்தில் அவர்கள் பிரவேசித்த போது தின்று , திருப்தியாகி , கொழுத்து ( உபா32 : 15 ) அவருடைய வேதத்தினை மறந்தார்கள் .
இதனால் இல்லற வாழ்க்கையில் ஏற்பட்ட தாக்கங்கள் ஏராளம் . விளைவு , அவனவன் தன் தன் பார்வைக்கு நலமானதைச் செய்ய ஆரம்பித்தார்கள் ( நியா21 : 25 ) .
பரதேசியாய் வாழ்ந்த லேவியன் ஒருவன் ( தேவ பணிக்கு என்று ஏற்படுத்தப்பட்டவன் ) பெத்லகேம் ஊராளாகிய ஒரு ஸ்திரியை தனக்கு மறுமனையாட்டியாகக் கொண்டிருந்தான் ( நியா 19 : 1 ) ; இது அவன் செய்த முதல் தவறு . அவளும் அவனுக்குத் துரோகமாய் விபசாரம் பண்ணி அவனைவிட்டு தன் தகப்பன் வீட்டுக்குப் போய் அங்கே நான்கு மாதம் வரைக்கும் இருந்தாள் ( வச 2 ) இது அவள் செய்த பாதகம் . ஆனால் மன்னிப்பை நினைவு கூர்ந்த அவன் அவளோடே நலவு சொல்லவும் அவளைத் திரும்ப அழைத்து வரவும் சென்றபோது , மாமனார் வீட்டில் சந்தோஷமாய் ஏற்றுக் கொள்ளப்படுகிறான் ( வச 3 ) .
ஆனால் , மாமனின் மதியீனமும் குடிவெறியும் அவனை சில நாட்கள் தாமதப்படுத்தி வந்த காரியத்தினை மறக்கச் செய்கிறது ( வச 4 - 9 ) . இறுதியாக அவன் ஒரு நாள் இரவு மனைவியை அழைத்துக்கொண்டு புறப்பட்டு வழியில் பேலியாளின் மக்களினால் பாதிக்கப்படுகிறான் . ஆணோடு ஆண் அவலட்சமானதை நடப்பிக்க அவர்கள் கட்டாயப் படுத்தினதினால் ( வச 22 ) , காரியம் கை மிஞ்சிப்போக தன் மறுமனையாட்டியை பிடித்து காம வெறிப் பிடித்த அவர்களிடத்தில் கொண்டுவந்து விடுகிறான் ( வச 25 ) . அவளை அந்த வெறியர் கூட்டம் இலச்சையாய் நடத்தி கொன்றும் விட , அந்த லேவியன் தன் கையால் அவளை பன்னிரெண்டு துண்டங்களாக வெட்டி அனைத்து இஸ்ரவேலுக்கும் அனுப்பி வைக்கிறான் ( வச 29 ) .
இது இஸ்ரவேலில் ஒரு உள் நாட்டுப் போரை உருவாக்கி , ஓர் இனத்தின் ஆண் மக்களையே அழிக்க ஏதுவாக்குகிறது ( நியா 20 அதி ) , பட்டணங்களும் அழிக்கப்படுக்கின்றன . '
அறிவற்ற ஒரு ஊழியகாரனின் குடும்பத்தில் ஏற்பட்ட சம்பவம் , தேசத்தையே பாழடித்து விட்டதனை தேவன் நமக்கு என் வைத்திருக்கிறார் .
ஒரு குடும்பத்தின் ஒழுக்கக் கேடும் , பெற்றோரின் அறிவு கெட்டச் செயலும் , ஒரு சமுதாயத்தை பாதிக்க போதுமான பலம் உள்ளவை என்பதனை போதிக்கவே இவைகள் எழுதப்பட்டுள்ளன . வேதத்தின் திட்டத்தினை மீறும் கணவன் ( மத் 19 : 8 ; மல் 2 : 15 ) , கணவனுக்குத் துரோகம் செய்யும் மனைவி , குடித்து , வெறித்து , வெறிக்கச் செய்வதினால் இருதயம் தேற்றப்படும் என்ற தப்புக் கணக்கு போடும் மாமனார் , மாமிசத்திற்கு இடம் கொடுத்து வாழும் அயலகத்தார் , முட்டாளைப் போல செயல்பட்டு பின்னர் மூர்க்கவெறி கொண்டு கொலை செய்து , கூறு போடவும் அஞ்சாத கணவன் இவர்கள் அனைத்து பேரும் சமுதாயத்திற்கு ஆபத்தானவர்களே . ஆனால் இவை அனைத்திற்கும் காரணம் என்ன ? தேவன் தள்ளிவைக்கப்பட்டுவிட்டார் , தேவ வார்த்தை மீறப்பட்டது என்பதே .
இஸ்ரவேலின் குமாரத்திகளில் ஒருத்தியும் வேசியாயிருக்கக்கூடாது : இஸ்ரவேல் குமாரரில் ஒருவனும் ஆண்புணர்ச்சிக்காரனாயிருக்கக்கூடாது ( உபா 23 : 17 ) என்ற கட்டளை முற்றிலும் மறக்கப்பட்டது .
தன் மகள் பாவம் செய்திருக்க அவளை தன் வீட்டிலே 4 மாதங்கள் வைத்திருந்து தானாகவே அழைத்துக்கொண்டு போய் , சமரசத்தை உண்டாக்க வேண்டிய அந்த பெத்லகேம் ஊரான் , அதனை செய்யத் தவறினபோது நடந்த விபரீதம் அல்லவோ இது !
இன்றைக்கும் தன் மகளின் மேல் தவறியிருக்க ( அது விபச்சாரப் பாவம் இல்லாமல் இருக்கலாம் ) , தன் வீட்டிலே - அநேக நாட்கள் ( ஏன் வருடங்கள் கூட ) தங்க வைத்து வேடிக்கை பார்க்கும் பெற்றோர் எத்தனை பேர் ? அந்தப் பிரிவை முடிவிற்கு கொண்டு வர தயக்கம் காட்டுவோரும் , உள்ளாசத்தில் தளைப்போரும் உண்டாக்கும் தீமைகள் எத்தனைப் பெரியது கணவன் இறங்கி வரட்டுமே என காத்திருப்போர் எத்தனை பேர்? மன்னிக்க மனதிருந்தும் மகிழ்ச்சியைக் காணக்கூடாம் இந்த லேவியன் கெட்டுப்போனானே ! வேதம் மறக்கப் பட்டதினால் அல்லவோ . .
1 நீதிமானாயிருந்தும் . . .
தேவபக்தியுள்ள கணவனும் பக்தியற்ற மனைவியும்
லோத்து
வேதம் ஆபிரகாமோடு கடந்து சென்ற லோத்துவை நீதிமான் என்றும் , நீதியுள்ள இருதயம் உள்ளவன் என்றும் , அக்கிரமக்காரரின் நடக்கையைக் கண்டு இருதயத்தில் வாதிக்கப்பட்டவன் என்றுமே அழைக்கிறது ( 2பேது 2 : 7 , 8 ) ;
அந்நியரை உபசரிக்கத் தவறாதவன் | அவன் . தான் உயர்ந்த ஸ்தானத்தில் இருந்த போதிலும் ( ஆதி 19 : 1 ) , அந்நியரை அறியாமல் இருந்த போதும் , அவர்களை வருந்திக்கேட்டு வீட்டிற்குக் கொண்டு சென்று விசாரிப்பவன் அவன் ( எபி 13 : 2 ) . தன் வீட்டின் நிழலில் வந்தவர்கள் சேதப்பட விரும்பாமல் அதனைத் தடுக்க எந்த விலைக்கிரயத்தினையும் செலுத்தத் ( தன் பிரிய குமாரத்திகளின் கற்பையும் ) தயங்காதவன் ( ஆதி 19 : 8 ) ,
ஆனால் அவனுக்கு கிடைத்த மனைவியைப் பாருங்கள் . ஆபிரகாம் வீட்டிற்கு ( அல்லது கூடாரத்திற்கு ) இதே தூதர்கள் போன போது , ஆபிரகாம் சாராளிடத்திற்குப் போய் மூன்றுபடி மெல்லிய மாவை எடுத்து பிசைந்து அப்பம் சுடச் சொன்ன போது , 89 வயதான அவள் துரிதமாகச் செய்கிறாள் . வீட்டிலே ஏராளமான வேலைக்காரர்கள் மற்றும் வேலைக்காரிகள் இருந்தபோதிலும் ( 318பேர் ஆபிரகாம் வீட்டில் யுத்த வீரர்களான வாலிபர் - ஆதி14 : 14 ) , லோத்தின் வீட்டில் விருந்தினர் கொண்டுவரப்பட்ட போது , லோத்தே புளிப்பில்லாத அப்பங்களைச் சுடும் பொல்லாத காட்சி காணக் கிடைக்கிறது ( ஆதி 19 : 3 ) . லோத்துவின் மனைவி வீட்டில் தான் இருந்தாள் ( வச 16 ) ; வீட்டைச்சுற்றிலும் வாலிபர் முதல் கிழவர் வரை ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள் ( வச4 ) ; ஆனால் தன் வீட்டிற்கு வரும் ஆபத்தினையும் அறியாதவள் அவள் . லோத்து தன் குமாரத்திகளை உலகின் காமப்பசிக்குத் தாரை வார்க்க முயற்சிக்கிறான் ( வச 8 ) , ஆனால் இவளுக்கு அதனைக் குறித்த ஒரு கவலையும் இல்லை ; அக்கறையும் இல்லை . பிள்ளைகளை அதுவும் பெண் பிள்ளைகளைப் பாதுகாக்கவும் அவள் கற்றுக் கொள்ளவில்லை . பொருட்களின் மேலே உள்ள பற்று , உலக சிநேகிதம் பின் திரும்பச் செய்து உப்புத்தூணாகவும் அவளை மாற்றிவிட்டது ( ஆதி 19 : 26 ) . ) குடும்பத்தினைக் குறித்தோ , பிள்ளைகளைக்குறித்தோ விருந்தினரைக் குறித்தோ , ஊரில் நடப்பதனைக் குறித்தோ , வரும் ஆபத்தினைக் குறித்தோ , ஏற்படப்போகும் அழிவினைக் குறித்கோ அவள் கவலை இல்லாதவள் . தூதன் கையில் அவள் இருந்தாலும் ( ஆதி 19 : 16 ) , அவர்களுடைய வார்த்தை அவளில் கிரியை செய்யவில்லை ( வச 17 , 26 ) . தேவனோடு நடந்த ஆபிரகாமின் குடும்பத்தினரை அவள் தன் பிள்ளைகளுக்கு அறிமுகம் செய்து . பழகச் செய்து , அதனுடைய ஆசீர்வாதத்தினைப் பெற்றுக் கொள்ளவும் வழி செய்யவில்லை ( ஆதி 18 : 19 ) .
இவளுடைய வற்புறுத்துதலே லோத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக சோதோமுக்குள் இழுத்துச் சென்றிருக்கும் எனவும் , உயர் பதவியில் அமர்த்தியிருக்கும் எனவும் நான் நம்புகிறேன் . சோதோமுக்கு நேரே கூடாரம் போட்ட அவன் ( ஆதி 13 : 12 ) , தனியாக என்னால் இருக்கக் கூடாது என்று இவளுடைய ஆலோசனையைக் கேட்டு சோதோமுக்குள் குடியிருக்க ஏவியிருக்கும் என்பது ( ஆதி 14 : 12 ) என்னுடைய அசையா நம்பிக்கை .
அடித் ( Adith ) என்று யூதபாரம்பரியம் இவள் பேரை கூறி அறிவிக்கிறது . இவள் சோதோம் பட்டணத்தைச் சேர்ந்தவள் என்றும் நம்புகிறவர்கள் உண்டு . எப்படியாயினும் இவள் ஒரு தேவபக்தியற்றப் பெண்ணுக்கு அடையாளம் . தேவனுக்குப் பயப்பட்ட லோத்து , ஆபிரகாமைச் சார்ந்து கானானுக்குப் புறப்பட்டவன் . பின்னர் சொத்து அதிகமானதினால் பலிபீடத்தினையோ , ஜெபத்தினையோ , கர்த்தரின் தரிசனத்தையோ கண்டறியாதவன் .
கூடவே , தேவனற்ற மனைவியும் அவன் வாழ்வினை பாழாக்கி விட்டாளே ! அவன் இந்த உலகிற்கு வைத்துப் போனது எல்லாம் சாபம் மிகுந்த இரு சந்ததியாம் மோவாப் மற்றும் அம்மோனியரே ( ஆதி 19 : 37 , 38 ) ( உபா 23 : 3 ) . தரிசனம் இல்லாமல் வாழும் மனிதர்களின் முடிவு இதுவே . அவனால் தன் மனைவியையோ , மக்களையோ , மருமக்களையோ பாதிக்க முடியவில்லை . அவபத்தினை இழந்த உப்பே .
இதனை இயேசுவும் நினைத்து எச்சரிப்படையச் சொல்கிறார் ( லூக் 17 : 32 ) .
2 தேவனுடைய இருதயத்திற்கு ஏற்றவன் தான் . . . .
தேவபக்தியுள்ள கணவனும் பக்தியற்ற மனைவியும்
தாவீது-----மீகாள்
ராஜாவுக்கு மருமகன் ஆவதற்கு ஆசை தாவீதுக்கு . ஆனால் , அந்த நாட்களில் பரிசம் பெண்ணுக்குத் தரப்படவேண்டும் . அதற்குரிய வசதியில்லாத தாவீது ஏக்கமுற்றான் ( 1சாமு 18 : 23 ) .
பெரிய வீட்டு சம்பந்தம் என்றால் அநேகர் ஏங்குகின்றனர் வாஞ்சிக்கின்றனர் . மதிப்பு பெறுவது எப்படி என்ற ஏக்கம் எதையும் செய்ய அவர்களை விரட்டி விடுகிறது . கோலியாத்தை வீழ்த்துபவனுக்குத் தம்முடைய குமாரத்தியைத் தருவேன் என்று சவுல் அறிவித்ததனைத் திரும்ப திரும்பச் சொல்லக் கேட்கிறான் ( 1சாமு 17 : 25 - 27 ) .
ஒரு பக்கம் இஸ்ரவேலுக்கு ஏற்பட்ட நிந்தையை நீக்க வேண்டும் என்ற விருப்பம் : இஸ்ரவேலின் தேவன் ஒருவர் உண்டு என்று பூலோகத்தார் எல்லாரும் அறிந்து கொள்ளுவார்கள் என்ற ஆசை அவனை உந்தித் தள்ளுகிறது ( 1சாமு 17 : 26 . 46 ) ;
ஆனால் வெற்றி பெற்ற தாவீதிற்கு சவுலின் மகள் அறிவிக்கப்பட்டபடித் தரப்படவில்லை . அதற்குள் பொறாமையும் , வண்கண்ணும் , காய்மகாரமும் நுழைந்து விட்டது .
சவுலின் இருதயத்தில் பொல்லாத ஆவியினால் நிரப்பட்ட அவன் , மீண்டும் தாவீதிற்கு ஏற்பட்ட ஆசையைத் தூண்டிவிட்டு , அந்த ஆசையே அவனை அழிக்க வகை செய்கிறான் . பெலிஸ்தரின் கை அவன் மேல் விழ வேண்டி யுத்தங்களுக்கு அனுப்புகிறான் .
தன் மகள் ' மேராப் ' - ஐ தருவேன் என்று சொல்லுகிறான் . ஆனால் , காலம் வந்தபோது மீண்டும் சவுலால் தாவீது ஏமாற்றப்படுகிறான் ( 1சாமு 18 : 17 - 19 ) . இப்போது அவனுடைய குமாரத்தி மீகாள் தாவீதை நேசிக்கும் விஷயம் சவுலுக்குத் தெரிய , மீண்டும் ஒரு வலையை விரிக்கிறான் . இது ஒரு தலைக் காதல் தான் . ஆனாலும் , ஆசை ராஜாவுக்கு மருமகனாகும் பெரிய இடத்து சம்பந்தம் என்ற காரியம் தாவீதுக்கு உள்ளக் கிளர்ச்சியை உண்டாக்குகிறது .
மற்றவர்களை வைத்து வலையில் மாட்டவைக்க ஆசை வார்த்தைகளைப் பேச வைக்கிறான் சவுல் ( 1சாமு 18 : 22 ) . மீண்டும் தன்னுடைய ஏழ்மை , இல்லாமை , குடும்பத்தில் இல்லாத மதிப்பு போன்றவை அவனைத் தயங்கப்பண்ணுகிறது ( வச 23 ) .
ஆனால் கண்ணிவைக்கும் சவுல் நூறு பெலிஸ்தரின் நுனித்தோல் கிடைக்கப் பெற்றால் போதும் எனக் கூறி எப்படியாவது தாவீது அழிக்கப்பட வழி உண்டாக்குகிறான் . தாவீதோ அந்த விஷப் பரீட்சையில் இருநூறு பேரைக் கொன்று மீகாளை மனைவியாகக் கொள்ளுகிறான் . மீகாளுக்கு தேவனைக் குறித்த அறிவோ , வைராக்கியமோ , வாஞ்சையோ இருக்கவில்லை . அவள் ஆண்டவரை பாடுவதைக் கூட அற்பமாக என்னுபவள் ( 2சாமு 6 : 20 ; 1 நாளா 15 : 29 ) ,
தகப்பன் எப்படித் தேவனைத் தேடவில்லையோ அப்படி ஆடம்பர மோகத்தில் , அரண்மனை சுகத்தில் , அதிகார போதையில் வாழ்ந்த அவள் தனக்கு ஏற்றவள் தானா என தாவீது பார்க்கவில்லை .
காதலிக்கிறாள் எதற்காக ? வீரன் என்பதினால் , நல்ல சவுந்தரிய ரூபமான சிவந்த மேனியுள்ளவனாயிருந்தபடியால் ( 1சாமு 17 : 42 ) , சுரமண்டலம் ( இக்கால கிட்டார் ) வாசிப்பதில் நிபுணர் என்பதினால் .
அவனோடு கர்த்தர் இருந்தது ( 1 சாமு 18 : 14 ) அவளுக்குத் தெரியவில்லை . காதல் , சில வேளைகளில் அவனைத் தப்புவிக்க தகப்பனிடத்தில் பொய்யையும் கூற பயப்படவில்லை ( 1சாமு 19 : 11 17 ) .
ஆனால் தேவ பயமோ , தேவனுக்கு ஆராதனை செய்யும் ஆவலோ இல்லாத மனைவி தேவ பக்தியற்றவள் தானே . பதவி , பணம் , பகட்டு இவைகளைச் சார்ந்து வாழும் நபர் தன் கண்களுக்கு இனிமையாக , வீரனாக , மற்றவர்கள் பாராட்டி பாடல் இயற்றும் காவியமாக இருக்கும் ஒருவரை காதலிக்கலாம் . கச்சேரியில் பாடும் நபரும் ஆலயத்தில் பாடகர் குழுவில் இசை வாசிக்கும் இளைஞனும் ஈர்க்கும் பொருள் ஆகலாம் . பெரிய இடத்து சம்பந்தம் என்ற வலை அநேகரை இருதயத்தில் அவமதிக்கும் மனைவியை உடையவர்களாக மாற்றிவிடும் ( 1நாளா 15 : 29 ) ஜாக்கிரதை ;
ஆனால் ஆண்டவர் அவளுக்கு பிள்ளையில்லாமற் செய்துவிட்டாரே அது தேவ தண்டனையாய் மாறிப் போயிற்றே
. அரசன் மகள் , ஆனால் அரசாள பிள்ளையைப் பெறக் கூடாத நிலை ; என்னே பரிதாபம் . இதற்கிடையில் சவுல் மீண்டும் தாவீதை ஏமாற்ற மீகாளை வேறொருவனுக்கு மனைவியாக்கிவிடுகிறான் ( 1சாமு 25 : 44 ) .
தேவனற்ற மாமனார் எதை வேண்டுமானாலும் செய்வார் ( 2சாமு 3 : 14 - 16 ) . ஆயினும் தாவீது அவளை வாஞ்சிக்கிறான் அவள் கொண்டு வரப்பட்டபோது தான் இந்த அவமதிப்பு உண்டாகிறது .
தேவனை நேசித்து , அதின் அடிப்படையில் என்னை நேசிக்க- வேண்டும் என்ற அடிப்படையில் பெண் பார்க்கும் படலம் அமைந்தால் எத்தனை நலமாக இருக்கும் . என் குடும்பத்திற்கு ஏற்ற , அதே நிலையில் உள்ளவளாக உள்ளவராக இருந்தால்தான் வாழ்க்கை சுமூகமாக அமையும் என்பதனை புரிந்தவர் எத்தனைபேர் ? பணத்தையும் , பதவியையும் , ஆடம்பரத்தையும் , அதிகாரத்தையுமே கொள்கையாகக் கொள்பவர் , அகால பாதாளத்தில் விழுவர் என்பது மாறாத பிரமாணம் ;
ஜாக்கிரதை . மீகாளுக்கு இன்னும் ஒரு திருமணம் அக்காள் மாப்பிள்ளையோடே நடந்தது ( 2சாமு 21 : 8 ) ; அவனிடத்திலும் அவளுக்குப் பிள்ளை பிறக்கவில்லை . மீண்டும் தாவீதின் மனைவியானாள் ; ஆனால் சரித்திரம் தேவனை அவமதித்த அவளை , தேவ ஆராதனைக்காரனை அவமதித்த அவளை பிள்ளையற்றவளாகவே பார்க்கிறது .
இன்பமான இசைபாடும் தாவீதுக்கா இப்படிப்பட்ட மனைவி ( 2சாமு 23 : 1 ) ; மேன்மையாய் உயர்த்தப்பட்டு , யாக்கோபுடைய தேவனால் அபிஷேகம் பெற்று நிச்சயமான உடன்படிக்கைகளைப் பெற்றவன்தானே ( வச 3 ) .
உனக்கு வீட்டைக் கட்டுவேன் என்றவர் மீகாளைத் தாண்டியேச் செல்கிறார் . ஒரு ஆசாரியனும் தீர்க்கனும் அவளோடு நின்றதில்லை . தேவனை அறியாதவள் , தேவபக்தியுள்ள கணவனை மதிக்காதவள் தேவ ஊழியரால் மதிக்கப்படுவது எப்படி ? மீகாள் என்பதற்கு " யார் பூரணப்பட்டவர் ? ( who is perfect ) என அர்த்தம் . மற்றவர்களைப் பார்த்து இந்தக் கேள்வி கேட்பவர் ஒருவரும் ஆவிக்குரிய வாழ்வில் முன்னேறியவர் அல்ல !
தேவனுடைய இருதயத்திற்கு ஏற்றவன் எனப்பட்ட தாவீதும் , பகட்டின் வாஞ்சையினால் தவறான மனைவியை அடைந்து அவமதிக்கப்பட ஏதுவாகலாம் . ஜாக்கிரதை . அப்படிப்பட்டவளைத் தவறாகப் பெற்றுவிட்டோர் , அவளை தேவனுக்காக சம்பாதிக்க வகை தேடுவீர் அது. வாழ்க்கையைசீராக்கும்
3 தேவன் சிநேகித்த மனிதன் தான் . . ( 1 )
தேவபக்தியுள்ள கணவனும் பக்தியற்ற மனைவியும்
யாக்கோபு-------லேயாள்
முற்பிதாவாம் யாக்கோபின் வாழ்க்கை விசித்திரமானது ! அவனுடைய திருமணவாழ்வில் தெரிந்துகொண்ட ஒரு மனைவி , திணிக்கப்பட்ட ஒரு மனைவி இருந்தனர் ; கூடவே போடு கருப்பட்டியாக இரண்டு பேர் ( இது இந்த நாட்களுக்கு உரியது அல்ல ) . ஆயினும் தனித்தனியே அவனுடைய குடித்தன வாழ்வை ஆராய்வது நமக்கு பலன் தரும் .
ஆண்டவர் அவனைத் தேடிவந்தார் ; ஆசீர்வாதங்களை வாக்களித்தார் . அவனும் கர்த்தரை இந்த ஸ்தலத்தில் கண்டேன் என அறிக்கையிடுகிறான் ( ஆதி 28 : 16 ) .
காலத்தின் கோலம் , சூழ்நிலைகள் அவனை லாபான் வீட்டிற்குத் தள்ளிக்கொண்டு வந்திருந்தது . லாபான் வீட்டிற்கு அனுப்பும் போதே தாய் அங்கே போய் விவாகம் செய்துகொள் என்று கட்டளை கொடுத்தே அனுப்புகிறாள் ( ஆதி 28 : 2 ) , பெண் வேண்டும் என்ற நோக்கில் தான் யாக்கோபு மாமன் வீட்டில் அடி எடுத்து வைக்கிறான் ; ரூபவதியான ராகேலைக் கண்டவுடன் தன் வீரத்தினைக் காண்பித்து அவளை கவர்ந்து கொள்கிறான் , காதலிக்கிறான் ( ஆதி 29 : 10 , 17 , 18 ) , காதல் கண்களை அடைக்க , " இஸ்ரவேல் ஒரு பெண்ணுக்காக ஆடு மேய்த்தான் " என்று தேவன் பின்னதாக கேலி செய்யும் அளவுக்கு அது முற்றிப் போயிற்று ( ஒசி 12 : 12 ) ,
மாமன் நியமித்த 7 வருடங்கள் கொஞ்ச நாட்களாகத் தோன்றுகிறது ( ஆதி 29 : 20 ) , ஆனால் , இறுதியில் ஏமாற்றப்பட்டு கூச்சப் பார்வை கொண்ட அலட்ச்சியமாக மற்றும் அற்பமாக எண்ணப்பட்ட லேயாள் மனைவியாகிறாள் ( ஆதி 29 : 17 , 31 ) ; வேறு வழியின்றி வாழ்க்கை ஆரம்பிக்கிறது ; பின்னும் 7 வருடம் ஆடு மேய்க்கிறான் . தேவன் தன்னைச் சந்தித்த விதத்தினையும் பெற்றோரின் அனுபவத்தையும் தன் மனைவிகளோடு அவன் பகிர்ந்து கொண்டிருக்க வேண்டுமே . ஆனால் , அவர்களுக்கு தேவன் உலகத்தை ஆசீர்வதிக்க தங்கள் குடும்பத்தினைத் தெரிந்து கொண்டிருக்கிறார் என்ற எண்ணம் எந்த நேரத்திலும் தோன்றவில்லை ( ஆதி 28 : 14 ) ,
தங்களில் இருந்து பிறக்கப்போகும் சந்ததியே பூமியின் ஆசீர்வாதத்திற்குக் காரணமாகும் என்பதனைக் குறித்து அறிவும் இருந்ததில்லை .
மாறாக இருவரும் போட்டி , பொறாமைக் கொண்டே வாழ்கின்றனர் . இந்தப் பின்னணியில் லேயாளோடு நடைபெறும் குடும்ப- வாழ்வினை குறித்து முதலாவது ஆராய்வோம் .
தேவ தரிசனம் பெற்றவனும் , தன்னுடைய தொழில் நடத்துவதற்கும் லாபம் சம்பாதிப்பதற்கும் தேவ ஆலோசனையைப் பெற்ற யாக்கோபைக் கணவராகக் கொண்டவள் லேயாள் .
தேவன் அவனை சந்திக்கும் தூரத்தில் மாத்திரம் அல்லாமல் , தெளிவாகப் பேசும் நிலையில் இருந்து ' நான் நடந்து வந்த பாதையிலெல்லாம் என்னோடே கூட இருந்தவர் ' என்று அவனே சாட்சி சொல்கிறான் ( ஆதி 28 : 13 ; 31 : 11 - 13 ; 35 : 3 ) .
அப்படிப்பட்ட தேவ பக்தியுள்ள கணவன் ( அநேக நேரங்களில் குடும்பப் பிரச்சனைகளால் நெருக்கப்பட்டிருந்தும் , பணம் சம்பாதிப்பதனை குறியாகக் கொண்டிருந்தவன் - ஆதி 31 : 40 ) லேயாளுக்குக் கிடைத்திருந்த போதிலும் . . . . . . . . - அவள் கவலையெல்லாம் புருஷன் என்னை நேசிக்க வேண்டும் என்பதிலேயே உள்ளது ( ஆதி 29 : 32 ) .
அதனால் , முதல் பிள்ளைக்கு ரூபன் என்று பெயரிடுகிறாள் . மூன்றாம் பிள்ளை பிறந்தபோது அதே நாட்டம் " இப்பொழுது என்னோடே என் புருஷன் சேர்ந்திருப்பார் " ( ஆதி 29 : 34 ) ,
ஆறாம் பிள்ளையை பெறும் போது " என் புருஷன் என்னோடே வாசம் பண்ணுவார் " ( ஆதி 30 : 20 ) என்பதே அவளுடைய நாட்டம் , பாட்டு என்னே பரிதாபம் ! இதனையும் தாண்டி அவள் வயிற்றில் பிறந்த லேவியையும் , யூதாவையும் தானே தேவன் தமக்கு முன்பாக நிற்கத்தக்க ஆசாரியர்களாகவும் இராஜாக்களாகவும் ஏற்படுத்துகிறார் ;
என்னே அவருடைய மாட்சிமை இரக்கம் . இதனை அவளால் காணக்கூடாமல் போயிற்றே . என் வயிற்றில் பிறந்த பிள்ளைகள் ஜனத்தினை தேவனிடத்தில் சேர்க்கிறவர்களாகவும் , ஜனத்தினை ஆளுபவர்களாகவும் மாற்றப்படுகின்றனரே என்ற தூரப் பார்வை அவளுக்கு இல்லை .
புருஷனைக் குறித்து பைத்தியமானதற்குக் காரணம் என்ன ? " உன் ஆசை புருஷனைப் பற்றியிருக்கும் " என்ற சாபத்தின் வார்த்தைகள் அன்று ஏவாளுக்கு அளிக்கப்பட்டது ( ஆதி 3 : 16 ) ; அது இவளில் பூரணமாகக் கிரியை செய்கிறதே . தேவ நோக்கத்தையோ , தேவ திட்டத்தையோ புரியாத , தேவனைத் தேடாத , தேவ பக்தியற்ற ஒரு மனைவி இப்படி புருஷன் பைத்தியமாகத்தான் இருப்பாள் .
அதனால் , அவள் செய்ய நேரிட்டது என்ன ? தன் வேலைக்காரியை எடுத்து புருஷனுக்குத் தாரை வார்க்கிறாள் ; சில்பாள் மூலம் பிறந்த குழந்தை காத் . இந்த வம்சத்தினரின் குணநலம் என்ன ? தேவன் வாக்குத்தத்தம் பண்ணின கானான் மேல் விருப்பம் இல்லாமல் தங்களுக்கு வசதியான இடம் என- யோர்தானின் இப்புறத்திலே தங்கி தாபரிக்க விருப்பம் கொள்ளும் ஒரு சந்ததி .
இதற்குக் காரணம் என்ன ? லேயாளின் புருஷனைக் குறித்த பைத்தியம் ( எண் 32 : 1 ) , புருஷன் தன்னை நேசிக்கவேண்டும் என்றும் எண்ணுவது தவறல்ல ;
ஆனால் , 7 பிள்ளைகளைப் பெற்றும் அது ஒன்றே வாழ்க்கையின் நோக்கமாக மாறிவிட்டதே இவளுக்கு . இவள் வாயினின்று அருள்வாக்கு ஒன்றும் அவளுடைய பிள்ளைகளுக்குக் கூட கிடைக்கவில்லை . இஸ்ரவேலில் மேலிருக்கும் கர்த்தருடைய கோபத்தினை , உக்கிரத்தை இன்னும் அதிகரிக்கப்பண்ணும்படி , பிதாக்களின் ஸ்தானத்தில் பாவமுள்ள பெருங்கூட்டமாய் எழும்பும் கூட்டத்தினைக் கொண்ட காத் வம்சம் ( எண் 32 : 14 ) எழும்பக் காரணம் என்ன ? புருஷனைக் குறித்த பைத்தியம் கொண்ட லேயாளே ! சகோதரிகளே ஜாக்கிரதை . |
யாதொருவன் என்னிடத்தில் வந்து தன் தகப்பனையும் தாயையும் , மனைவியையும் , ( கணவனையும் ) பிள்ளைகளையும் , சகோதரரையும் , சகோதரிகளையும் தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால் ( என்னக் காட்டிலும் அதிகம் நேசித்தால் ) எனக்குச் சீஷனாயிருக்க மாட்டான் ( மத் 10 : 37 ; லூக் 14 : 26 ) , இந்தக் காரியத்தில் லேயாள் தோற்றுப்போனாள் .
ஆனாலும் , தேவன் தன் திட்டத்தினை நிறைஈவேற்ற அற்பமாக எண்ணப்பட்ட அவள் வயிற்றில் பிறந்தவர்களையே ஆசாரியர்களாக , இராஜாக்களாக மாற்றுகிறார் ; அவருக்கே மகிமை , அளவோடு நேசி , அவரோடு அன்பைத் தேடு , அதற்காக அரும் பொருட்களையும் இழந்து விட அவசரப்படாதே ( ஆதி 30 : 14 - 15 ) கணவனை விலைக்கு வாங்கவும் முயற்சிக்காதே .
4 தேவன் சிநேகித்த மனிதன் தான் . . . . ( 2 )
தேவபக்தியுள்ள கணவனும் பக்தியற்ற மனைவியும் ' _
யாக்கோபு------ராகேல் .
யாக்கோபின் காதல் மனைவி ராகேல் . கண் நிறைந்தவள் , அழகி , சுறுசுறுப்பானவள் ( ஆதி 29 : 17 . 15 யாக்கோபை சிறைப்பிடித்துக் கொண்டவள் ( ஆதி 30 : 15 ) . . உண்டு ஆனால் உள்ளத்தில் பொறாமையைக் குடி கொள்ள வைத்து , அதனால் அனுதினமும் புருஷனை அலட்டி சாகடிப்பவள் ( ஆதி 30 : 1 ) .
தன் இஷ்டம் நடக்காவிடில் செத்துப்போவேன் என்ற மிரட்டல்களை அள்ளி வீசுபவள் . காரியம் நடைபெறாத போது எதையும் செய்யத் துணிபவள் ; பலன் என்ன ? தன் வேலைக்காரியான பில்காளை யாக்கோ புக்குக் தருகிறாள் .
அவள் மூலம் ' தாண் ' என்ற கோத்திரம் பிறக்கக் காரணமாகிறாள் . இந்த தாண் கோத்திரத்தில் தான் அந்திக்கிறிஸ்து தோன்றுவான் என்பது எனது நம்பிக்கை . எப்படி என்றுக் கேட்கிறீர்களா ? கவனியுங்கள் வசனத்தினை . தன் மரண நேரத்தில் கடைசி நாட்களைக் குறித்தக் காரியங்களை தீர்க்கதரிசனமாக யாக்கோபு கூறுகிறான் . ஒவ்வொரு பிள்ளையையும் குறித்து அவன் சொன்னக்காரியங்கள் கடைசி நாட்களுக்கு உரியவைகள் . தாணைக்குறித்து சொல்லும் போது , " தாண் குதிரையின் மேல் ஏறியிருக்கிறவன்
மல்லாந்து விழும்படியாய் அதின் குதிகாலைக் கடிக்கிறதற்கு வழியில் கிடக்கிற சர்ப்பத்தைப் போலவும் , பாதையில் இருக்கிற விரியனைப் போலவும் இருப்பான் என்று அறிவித்தவுடன் , " கர்த்தாவே உம்முடைய இரட்சிப்புக்கு காத்திருக்கிறேன் " ( ஆதி 49 : 1 , 17 , 18 ) என்ற ஒரு ஜெபத்தையும் செய்கிறான் .
நம்முடைய இரட்சிப்பு முக்காலத்துக்குரியது ; பாவத்தின் தண்டனையை இயேசு கல்வாரியில் தீர்த்துவிட்டபடியால் , அவரை ஏற்றுக்கொள்ளும் போது நாம் பாவத்தின் தண்டனையிலிருந்து விடுதலைப் பெற்று இரட்சிக்கப்படுகிறோம் . பாவத்தின் வல்லமை நம்மில் கிரியை செய்யும் போது ( மாம்சத்தின் மூலம் , உலகத்தின் மூலம் , சத்துருவாகிய சாத்தானின் மூலம் ) ,
அதனை மேற்கொள்ள நமக்குத் தந்தருளிய பரிசுத்தாவியின் வல்லமையினால் அதனை நாம் மேற்கொள்ளும் போது அனுதினமும் நாம் இரட்சிக்கப்படுகிறோம் . ரோமர் 8 : 13 - ன் படி ஆவியினால் மாமசத்தின்' கிரியையை நாம் அழிக்க அழைக்கப்பட்டுள்ளோம் .
ஆனால் நம்முடைய சரீர மீட்பாகிய இரட்சிப்பு கிறிஸ்து வரும்போது நடைபெற்று , பாவத்தின் பிரசன்னத்திலிருந்து நாம் விடுதலையாகும் போது நடைபெறுகிறது ( ரோம 8 : 23 ) .
கிறிஸ்து வெளிப்படுவதற்கு முன் இந்த அந்திக்கிறிஸ்து தோன்றுவான் என்பது வேதம் அருளும் போதனை .
நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வருகையையும் , நாம் அவரிடத்தில் சேர்க்கப்படுவதையும் குறித்து நாங்கள் உங்களை வேண்டிக் கொள்ளுகிறது என்னவென்றால் , எவ்விதத்திலும் ஒருவனும் உங்களை மோசம் போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள் . ஏனெனில் விசுவாச துரோகம் முந்தி நேரிட்டு , கேட்டின் மகனாகிய பாவ மனுஷன் வெளிப்பட்டாலொழிய அந்த நாள் வராது ( 2 தெச 2 : 1 - 3 ) .
இதனை முன்னறிந்த தீர்க்கதரிசன பார்வை கொண்ட யாக்கோபு , கடைசி நாட்களைக் குறித்து கூறும் போது , தாண் கோத்திரத்திலிருந்து எழும்பும் அந்திக்கிறிஸ்துவின் வருகையில் இரட்சிப்பைக் குறித்து ஜெபித்தது எத்தனை அர்த்தமுள்ளது . கூடவே வெளிப்படுத்தின விசேஷத்தில் , இஸ்ரவேல் கோத்திரத்தார் முத்தரிக்கப்படும் போது , தாண் கோத்திரம் மாத்திரம் கணக்கில் வரவில்லை என்பதனை கவனிக்கவும் ( வெளி 7 : 4 - 8 ) .
இந்த தாண் கோத்திரம் வரக்காரணமாயிருந்தவர் யார் ? சகோதரியின் மேல் பொறாமை கொண்டு , புருஷனை வாட்டி வதைத்த ராகேல் அல்லவா ! தேவனை நோக்கிப்பார்க்கக் கற்றுக் கொள்ளாத அவள் புருஷனைச் சாடுகிறாள் .
பின்னதாகவே தேவன் தான் தனக்கு உதவி செய்ய முடியும் என்ற நிலை வந்த போது , அவரை நோக்கிப்பார்த்து " கனிதரும் திராட்சை செடியாம் " யோசேப்பு என்னும் பரிசுத்தவானைப் பெற்றெடுக்கிறாள் ( ஆதி 30 : 24 ; 49 : 22 ) .
ணதேசங்களுக்கும் , குடும்பத்திற்கும் ஆசீர்வாதமாக மாறின அன்பு மகனைப் பெற அவள் தேவனையே நோக்கிப்பார்க்க வேண்டியிருந்தது . இன்னமும் ஒரு குமாரனைத் தருவார் என்ற தீர்க்க தரிசனப் பாவையும் பெற்றுவிட்டாள் . ஆனால் கஷ்டம் வந்தபோது புருஷனைப்போல கஷ்டத்தின் மத்தியில் கர்த்தரின் கரத்தை
அவளால் காணமுடியவில்லை . இரண்டாவது மகன் பிறந்த போ " எனக்குக் கஷ்டத்தைக் கொண்டு வந்து விட்டாயே " என்று பெனொனி என்று பெயரிடுகிறாள் .
யாக்கோபோ அவ வலதுகையின் பராக்கிரமபுத்திரன் என்று கூறி " பென்யமீன் " என் பேரிடுகிறான் .
இதற்கிடையில் , புருஷன் அறியாமல் அவள் மறைத்து வைத்த தன் தகப்பன் வீட்டின் சுரூபம் அவளுடைய மரணத்திற்கும் கண்ணி வைத்துவிட்டது . யாக்கோபு அவள் மறைத்து வைத்திருந்ததனை அறியாமல் , " யாரிடத்தில் அது காணப்படுமோ அவன் அல்லது அவள் மரிக்க வேண்டும் " என்ற வார்த்தைகள் அறியாமையினால் சொல்லப்பட்டபோதிலும் , ராகேலுக்கு சாப வார்த்தைகளாக மாறி , பேர்காலத்தில் அவளை மரணத்துக்கும் தள்ளி விட்டுவிட்டது ( ஆதி 31 : 32 ; 35 : 17 - 29 )
. தன் குமாரன் யோசேப்பு எகிப்தில் அதிபதியாய் ( ஆதி 45 : 26 ) உலகின் இரட்சகனாய் ( ஆதி 50 : 20 ) உயர்த்தப்பட்டதனையும் கண்டு , ரசிக்க முடியாமற் போய் விட்டதற்குக் காரணம் நேசித்த புருஷனுக்குக் காரியத்தினை மறைத்ததே , மனைவிகளே ஜாக்கிரதை .
பிள்ளை வேண்டும் என்ற பைத்தியத்தினால் அலறிக்கொண்டிருந்த ராகேலின் புலம்பலைத்தான் , பின்னதாக பெத்லகேமில் இயேசுவின் நாட்களில் புலம்பினார்கள் என்பதனைக் குறிக்கும் வண்ணமே , எரேமியாவின் தீர்க்கத்தரிசன நிறைவேறுதல் , ஏரோதுவினால் கொலை செய்ய இரண்டு வயதுக்குப்பட்ட தாயார்களிடமிருந்து கேட்டது ( ஆதி 30 : 1 ; மத் 2 : 17 , 18 ) .
இன்றைய உன் புலம்பல் தலைமுறை தலைமுறையாக கேட்க வழிசெய்துவிடக் கூடாது . ஒருத்தி புருஷன் பைத்தியம் மற்றவள் பிள்ளை பைத்தியம் . தேவ பக்தி நிறைந்த யாக்கோபுக் தேவனால் சிநேகிக்கப்பட்டவனுக்கு ( மல் 1 : 2 ) கிடைக்கப்பெற்ற இரண்டு பைத்தியங்களைக் கண்டீர்களா ?
நாங்கள் பைத்திய கொண்டவர்களென்றால் தேவனுக்காக அப்படியாவோம் என சொல்லுவோமாக ( 2 கொரி 5 : 13 ) .
5 சாரோனின் ரோஜாவுக்கா இப்படி ஒருத்தி . . .
தேவபக்தியுள்ள கணவனும் பக்தியற்ற மனைவியும்
சூலமித்தி
உன்னதப்பாட்டு புத்தகத்தினைப் புரிந்து கொண்டவர்கள் சிலரே . அதில் காணப்படும் ஒரு உயர்த்தப்பட்ட மனைவியானவளை உங்களுக்குக் காட்டிக் கொடுக்கிறேன் .
இவள் தகப்பனற்ற அனாதை . தாய் வேறு திருமணம் செய்து கொண்டதின் விளைவாக , உடன் பிறந்த மாற்று தகப்பனுக்குப் பிறந்த சகோதரர்களால் வெறுக்கப்பட்டு ,
பெண் பிள்ளைக்குத் தகாத வேலையாம் திராட்சைத் தோட்டங்களுக்கு காவல்காரியாய் ஏற்படுத்தப்பட்டு நசுக்கப்படுகிறாள் .
பகலின் உஷ்ணம் இவளை கறுத்துப் போகச் செய்து " கருப்பாயி " ஆக மாற்றுகிறது ( உன் 1 : 5 , 6 ) . ஆனால் , அரசன் என்று தெரியாமல் மாறு வேடத்தில் மந்தையின் மேய்ப்பனாய் வந்தவனின் காதல் வலையில் சிக்கி மயங்குகிறாள் . காதல் கனிந்து கல்யாணத்தில் முடிகிறது . அது அவளை அரண்மனை சுகத்தில் கொண்டு சேர்க்கிறது ( உன் 2 : 4 ; 3 : 7 - 10 ) ,
அனாதையாய் இருந்த அவள் உயர்த்தப்பட்ட போது , கைகளிலிருந்து வெள்ளைப்போளமும் , விரல்களிலிருந்து வாசனையுள்ள வெள்ளைப் போளமும் வடியும் அளவுக்குச் சீராட்டப்பட்டு ( உன் 3 : 5 ) , தாலாட்டப்பட்டு மஞ்சத்தில் அமர்ந்த போது தன்னுடைய பழைய காரியங்களை மறக்கிறாள் .
வசதிகள் பெருகும் போது , உயர்த்தப்படும்போது , உல்லாசம் மிஞ்சும் போது , ஆடம்பரம் பெருகும் போது அநேகருடைய நிலை இதுதான் .
இப்போது நேசர் அவளைத் தேடி வருகிறார் ; கதவைத்தட்டுகிறார் . ஆனால் அவளோ , கதவைத்திறக்க மனமின்றி " என் வஸ்திரத்தைக் கழற்றிப் போட்டேன் , நான் எப்படி அதைத் திரும்பவும் உடுப்பேன் . என் பாதங்களைக் கழுவினேன் . எப்படி அதனை அழுக்காக்குவேன் " என்று அங்கலாய்க்கிறாள் .
உயர்த்தி மகிழ்ந்தவருக்கே ( கணவனுக்கே ) இப்போது இடமில்லை . தட்டிக் கொண்டே நிற்கிறவர் காலதாமதத்தின் நிமித்தம் கடந்து செல்கிறார் .
பின்னர் அவரை தேடித்திரிய வேண்டிய அவல நிலை . தெருக்களில் ஓட வேண்டிய நிர்ப்பந்தம் , காவற்காரர்களால் காயங்கள் ( உன் 5 : 3 - 7 ) . துன்பப் பாதையும் வரவழைத்துக் கொண்ட அடிகளும் , மன்னவனின் தயையை மறந்ததால் உண்டான விளைவுகளுமே அவளை உணர்த்துவிக்கிறது .
நான் என் நேசருடையவள் ( உன் ;7:10) ஒருவன் திரளான ஐசுவரியத்தைக் கொடுத்தாலும் நேசமே பெரிது என பிரகடனப்படுத்துகிறது ( உன் 8 : 7 ) . -
கர்த்தரின் ஆசீர்வாதங்களை அனுபவிக்கும் சிலர் , அதனை சீக்கிரமாய் மறந்து சுக போகமே வாழ்வாகக் கொள்ள ஆரம்பிக்க விடுகின்றனர் . தன்னை நேசிக்கும் நேசக் கணவனின் நேசத்தினை வாஞ்சிப்பதனைக் காட்டிலும் , அவன் தந்த தங்க நகைகளின் மேலும் , தரமான வாழ்க்கையின் மேலும் கண்களைப் பதிப்பவர் ஏராளம் . தனக்கு ஆசீர்வாதங்கள் கொடுக்கப்பட்ட நோக்கம்
தன்னைப்போல வளர இயலாமல் இருக்கும் சிறிய சகோதரிகளுக்கு உதவவே என்பதனை மறந்தோர் ( உன் 8 : 6 - 10 ) நிறைந்தது இப்பூமி . அவனுடைய நேசத்தில் , அரவணைப்பில் மயங்கினால் , கிராமமும் , வயல்வெளியும் , வனாந்திரமும் ( உன் 7 : 11 ; உன் 8 : 5 ) பஞ்சு மெத்தையின் சுகமே . அதனை அனுபவித்தவள் தன் சுகத்தில் மிதக்காமல் மற்றவர்களைக் குறித்து ஏங்க ஆரம்பித்து விடுகிறாள் .
என்னைப்போல ஒதுக்கப்பட்டு கிடப்போர் , வேதனையில் வாழ்வோர் , சகோதரர்களின் கோபத்தால் கறுத்துப்போய் இருப்போர் எத்தனைபேர் ? என்ற ஏக்கம் மேலோங்குகிறது . பெற்ற சுகத்தினை பேணிக் காக்கமுடியாமல் காவற்காரர்களால் அடிக்கப்படுபவர்கள் எத்தனை பேர் ? என்ற தாக்கம் செயல்படும் மனைவியாக மாற்றுகிறது . )
தங்களை அலங்கரிக்கவே , தங்க நகைகளை அள்ளி எடுத்து சப்பரங்களைப் போல திருமண வைபவங்களிலும் பண்டிகை நாட்களிலும் இல்லாதவர்களைக் கேலி செய்வது போல அலங்காரபவனி வருவோர் ஆண்டவரின் தயையை உணர்ந்தனரோ ? அடுத்தவரைக் குறித்த கரிசனைக் கொண்டனரோ ? அள்ளிப் போடத்தெரியாவிடிலும் , கிள்ளித்தரவும் மனதற்ற மனதையுடையவர்கள் , சுக போகத்தில் மயங்கி திரிவதனைக் காணுங்கால் சாரோனின் ரோஜாவைப் போன்றவருக்கு இப்படி ஒரு மனைவியா ? என்று தானே கேட்கத் தோன்றுகிறது . "
சுகபோகமாய் வாழ்கிறவள் உயிரோடே செத்தவள் " என்பதனை புரிந்த வாழ்க்கையல்லவோ மேலானது ( 1தீமோ 5 : 6 ) . சீயோன் குமாரத்திகள் அகந்தையாயிருந்து கழுத்தை நெறித்து நடந்து , கண்களால் மருட்டிப் பார்த்து ஒய்யாராமாய் நடந்து , தங்கள் கால்களில் சிலம்பு ஒலிக்கத் திரிகிறார்கள்
சீயோன் குமாரத்தியின் உச்சந்தலையை மொட்டையாக்குவார் . அவர்கள் மானத்தைக் குலைப்பார் ( ஏசா 3 : 16 - 17 ) என்று நம்மைக் குறித்து சொல்லக்கூடாது .
6 விசுவாசிகளின் தகப்பன் ஆனால் . . .
தேவபக்தியுள்ள கணவனும் பக்தியற்ற மனைவியும்
ஆபிரகாம்-------ஆகார்
. தன் வீட்டை எப்படியாவது கட்ட நினைத்த சாராளின் முடிவினால் , ஆகார் என்ற அடிமைப்பெண் , எகிப்திலே ஆபிரகாமுக்கு இலவசமாகக் கொடுக்கப்பட்ட பணிப்பெண் ஆபிரகாமின் மனைவியாகிறாள் ( ஆதி 16 : 1 ; 12 : 16 ) .
தான் உயர்த்தப்பட்ட போது , உயர்வுக்குக் காரணமாயிருந்த எஜமாட்டியை அவள் அற்பமாக எண்ணிய போது வந்தது ஆபத்து .
சாராளின் அன்பு உபசாரம் இப்போது அடிக்கும் கரங்களாக மாறுகிறது ; வீட்டை விட்டு துரத்துகிறது . ஓடிப்போனவளைத் தேவன் திசை திருப்புகிறார் ( ஆதி 16 : 5 - 9 ) .
இந்த இணைப்பினால் பிறக்கப்போகும் குழந்தை துஷ்டமனிதன் ; எல்லோருக்கும் விரோதமானவன் ( ஆதி 16 : 12 ) . ஏனென்றால் நான் முன்னதாக குறிப்பிட்டதனைப் போன்று பயத்தில் , பீதியில் , நிலைக்குமா நிலைக்காதா , என்ற நிலையற்ற சூழ்நிலையில் , ஆகார் ஆபிரகாமோடு உடலுறவு கொள்ளுகிறாள் . அதன் பலன் பிள்ளையில் வெளிப்படுகிறது .
ஆபிரகாமும் மாம்ச பெலத்தில் தான் இவளோடு சேர்கிறான் . காட்டுக் கழுதை என்றே இஸ்மவேலை வேதம் அழைக்கிறது . ஆனால் இவள் தன் பிள்ளையையும் சரியாக வளர்க்கவில்லை . ஆபிரகாம் இவளை நேசித்ததையும் , இஸ்மவேல் என்ற இவளின் மகனை நேசித்ததையும் வேதம் விளக்காமல் இல்லை ( ஆதி 21 : 11 ; 17 : 18 ) .
பதிமூன்று வயது இளையவனான ஈசாக்கை இஸ்மவேல் பரிகாசம் செய்து மகிழ்கிறான் . இதனை கலாத்தியர் 4 : 29 துன்பப்படுத்தினான் என்றே கூறுகிறது ;
அல்லது பயமுறுத்தியிருக்கலாம் ( Threatening ) ; அல்லது கெடுத்துப்போடப்பார்த்தான் ( Polluting the mind ) என்றே யூத பரம்பரியம் கூறுகிறது . அல்லது விளையாட்டாகவே கொல்லவும் முயற்சி செய்தான் என்று சிலர் நம்புகின்றனர் . இதற்குக் காரணம் யார் ?
பிறப்பிலிருந்தே , பாலுண்ணக் கொடுக்கும் போது விஷவார்த்தைகள் கலந்து விட்ட ஆகார் . எனவே ஆகாரின் அழுகையை அல்ல பிள்ளையின் சத்தத்தைத் தேவன் கேட்டார் என்று வேதம் கூறுகிறது ( ஆதி 21 : 17 ) .
உயர்த்தப்பட்ட நிலையில் ஆயிரகாமுக்கு மனைவியாக்கப்பட்ட அவள் , ஆபிரகாமின் தேவ பக்தியின் நிமித்தம் பிள்ளையின் மேலும் ஆசீர்வாதம் உண்டாகும் என்பதைப் காணக்கூடாத ஆகார் ( ஆதி 21 : 13 ) ,
வித்தியாசமான மனநிலையை பிள்ளையில் உருவாக்கிவிட்டாள் .
யாரோ ஒருவர்மேல் உள்ள கசப்பினை அது ஒரு வேளை மாமியாரின் மீதாக இருக்கலாம் , அவர்கள் தன் புருஷனை , பெற்றும் வளர்த்து , படிக்கவைத்து , பேணிப் பாதுகாத்துத் தந்தார்கள் என்பதனை மறக்கும் மருமக்களுக்கு வேறு வழியில் பழி தீர்க்க நினைக்கும் மனைவிமார் எத்தனை பேர் . பிள்ளையைக் கொண்டே அதனைச் சாதிக்க நினைக்கும் நபர்கள் மலிந்தது இந்த உலகம் .
பிள்ளைகளின் உள்ளத்தினை பாழாக்கி தாத்தா , பாட டி , சித்தி , சித்தப்பா , மாமா , அத்தை உறவினைக் கெடுத்துப்போட்டவர்கள் ஏராளம் .
கூடவே அதனைக் கடத்தி விட்டு , கோர்ட் கச்சேரி என்று அலையவைத்து நிரந்தர பகையை உருவாக்கியவர்களும் எண்ணிக்கையில் அடங்கார் . " இனம் இனத்தோடு தான் சேரும் " என்பது போல் தன் மகனுக்கு எகிப்து தேசத்தவளையே மணம் முடித்துக் கொடுக்கிறாள் ஆகார் ( ஆதி 21 : 21 ) ,
உண்மையாய் தேவ மனிதன் ஆபிரகாமின் உறவை அவள் வாஞ்சித்திருந்தால் ஆபிரகாமின் வீட்டில் பிறந்து வளர்ந்தவர்களுடைய குடும்பத்தில் சம்பந்தம் எடுத்திருக்கலாமே ( ஆதி 14 : 14 ) ; அவர்களில் தேவ பயம் காணப்பட்டிருக்குமே அவர்களை ஆபிரகாம் கர்த்தர் பயத்தில் வழி நடத்தியிருப்பானே ( ஆதி 18 : 19 ) . தேவ பயமற்ற எகிப்திற்கு ( ஆதி 12 : 11 - 13 ) அல்லது தன்னுடைய ஜென்ம பூமிக்குத்தான் அவனை இணைத்துவிடுகிறாள் . பெரிய ஜாதியாக்கப்பட்டாலும் ( ஆதி 17 : 20 ) , பிரபுக்களை உடையவனாக இருந்தாலும் ( ஆதி 25 : 16 ) , தன் சகோதரர் எல்லாருக்கும் எதிரானவனாகத்தானே மாறிவிட்டான் . அதற்கு எகிப்தின் உறவும் உதவி செய்துவிட்டதே .
மனைவிகளே ஜாக்கிரதை , உன் மனதில் காணப்படும் வெறுமை , வெறுப்பு , ஏமாற்றம் உன் பிள்ளைகளின் வாழ்வினையும் பாழாக்கிப் போட வகை செய்துவிடாதீர்கள் . அதின் பலன் மிகவும் கொடியது ; சமுதாயத்திற்கே கேடு என்பதனை மறக்தீர்கள் .
7 பாரபட்சமற்றவனுக்கு
தேவபக்தியுள்ள கணவனும் பக்தியற்ற மனைவியும்
எல்கானா----பெனின்னாள்
தேவனைத் தேடுவதில் சளைக்காதவனும் , முழுக் குடும்பத்தினையும் ஆண்டவரைத்தேட வழி செய்கிறவனும் , குடும்பச் சச்சரவுகள் தேவ சமூகத்தில் தான் தீர்த்துவைக்கப்பட முடியும் என்பதனை நம்பினவனும் , குடும்பச் சமாதானத்திற்காக பாரபட்சமற்றவனாய் காயப்பட்டோரை காயம் கட்டுபவனாக காட்சி அளிப்பவனுமான எல்க்கானா என்ற தேவ பக்தியுள்ள ஒரு மனிதனுக்கு பெனின்னாள் என்ற மனைவி ( 1 சாமு 1 : 3 , 8 , 23 )
மற்றவரின் குறைகளைச் சொல்லிச் சொல்லி நோகடிப்பதில் அவளுக்கு நிகர் அவளே ( 1சாமு 1 : 6 ) . அவளுடைய மேட்டிமையானப் பேச்சு அகந்தையான வார்த்தைகள் எவரையும் கொல்ல சக்தி வாய்ந்தவை ( 1சாமு 2 : 3 ) .
பெலத்தினால் யாரையும் மேற்கொண்டுவிடலாம் என்ற அகங்காரம் ( 1 சாமு 2 : 9 ) ,
மனிதரோடு வழக்காடுவது கர்த்தரோடு வழக்காடுவதற்கு சமானம் ( 1சாமு 2 : 10 ) என்பதனை அறியாத அவளுடைய பெயரின் அர்த்தம் வைரக்கல் .
ஆனால் பட்டை தீட்டப்பட்டதாகவோ , பாலீஷ் செய்யப்பட்டதாகவோ தெரியவில்லை ; எத்தனை முரட்டாட்டம் .
எத்தனை பிள்ளைகள் இருந்தாலும் , ஒன்றையும் ஆண்டவருக்காக அர்ப்பணிக்க அவளுக்கு மனதில்லை . ஆராதனைக்கு வருவாள் , பலியில் பங்குபெறுவாள் , ஆசீர்வாதம் வேண்டும் , ஆனால் ஆண்டவருக்குரியதைத் தர மனதில்லை ( 1சாமு 1 : 2 , 4 ; யாத் 34 : 19 , 20 ) .
ஆனால் , அன்னாளை கவனியுங்கள் தேவன் ஒன்று தந்தாலும் அவருக்கே தருவேன் ( 1 சாமு 1 : 11 ) என்ற அர்ப்பணிப்பு .
கர்த்தர் இடைபட்டு , ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கும் ஒருவரின் வாழ்க்கையை அற்பமாக எண்ணி ( 1சாமு 1 : 5 ) , அழ வைத்து மகிழும் சுபாவம் கொண்டவள் இவனின் மனைவி .
அவன் ஆறுதல் செய்பவன் , இவள் காயப்படுத்துபவள் . வருடந்தோறும் செய்வாள் , சொல்லி சொல்லிக் காண்பிப்பாள் .
அன்னாளுக்குப் பின்னர்தான் இவள் எல்க்கானாவுக்கு மனைவியானாள் . ஆனால் , அமைதியையோ பணிவையோ இவளில் காணமுடியாது ; தேவ சமுக பழக்கமும் இல்லை . ஆலயம் செல்வாள் பணிந்துகொள்வாள் ( worship ) ( 1சாமு 1 : 19 ) ; ஆனால் அர்ப்பணம் என்பதோ , மற்றவரை ஆற்றவும் தேற்றவும் தூக்கிவிடவும் வேண்டும் என்ற எந்த எண்ணமும் கிடையாது . இன்று நம்முடைய சபைகளில் , குடும்பங்களில் இவளைப் போன்ற மனைவிமார் எத்தனைபேர் உண்டு . அநேகம் பிள்ளைகளைப் பெற்றவன் பலட்சயமானான் ( சாமு 2 : 5 ) என்ற வார்த்தைகள் எழுதப்பட்டக் காரணத்தை கூறும் யூத பாரம்பரியம் ,
சாமுவேல் பிறந்த போது பெனின்னாள் இரண்டு பிள்ளைகளை இழந்தாள் என்றும் , அன்னாளுக்கு மீண்டும் ஐந்து பிள்ளைகள் பிறந்தபோது ( 1சாமு 2 : 21 ) பென்னினாள் தன் பத்துப் பிள்ளைகளையும் இழந்தாள் என்றும் கூறுகிறது . கூடவே பெனின்னாள் பிள்ளை பெறும் வல்லமைமையும் இழந்தாள் என்கிறது என்னே பரிதாபம் !
கூடவே , தேவனைத் தேடி ஆராதனை செய்பவர் , அவர்களையும் அவர்களுடையதையும் அர்ப்பணிக்காமலேயே ஆராதனை செய்யக்கூடும் என்பதனை பெனின்னாளின் வாழ்வின் மூலம் வேதம் விளக்கிச் சொல்கிறது . அப்படி வாழ்பவர் வாழ்த்து என்ன பயன் ? இழப்புதானே அதிகம் .
அன்னாளின் ஒரு மகள் இராஜாக்களை அபிஷேகம் செய்பவர் ( Kingmaker ) , இஸ்ரவேலின் தீர்க்கதரிசி , தேவனுடைய மனுஷன் ( 1சாமு 320 ) , பட்டணத்தில் பெரியவர் ( 1சாமு 9 : 6 ) , ஜெய வீரன் ( சங் 996 ) ,
ஆனால் பெனின்னாளின் பிள்ளைகளோ பிணமானார்கள் .
மற்றவர்களை உன் ஆசீர்வாதங்களைக் காட்டி நோகப் பண்ணுகிறாயோ ! உன்னை நிரப்பியுள்ளவர் அவர்களை வெறுமையாய் வைத்திருப்பதனைக் கண்டு மனமடிவாக்குகிறாயோ ! அழுது புலம்பியும் நீ ஒன்றையும் பெற்றுக் கொள்ளவில்லை என்று கூறி வதைக்கிறாயோ !
ஆண்டவர் சமூகத்தில் ஆனந்த படவேண்டிய நீ . மற்றவர்களோடு உன்னை ஒப்பிட்டுப் பார்த்து பரிசேயனைப் போல , பெனின்னாளைப் போல மேன்மை பாராட்டுகிறாயோ ? ( லூக் 18 . 10 - 14 ) நினைத்துப் பார் முடிவினை .
இல்லாதவர்களை இகழ்ந்து விடாதே நீதி 17:5,21:13. 23: 10,11 ஒலிமுகவாசலில் எனக்குச் செல்வாக்கு உண்டு என்று நான் கண்டு , திக்கற்றவனுக்கு விரோதமாய் என் கையை நீட்டினதும் உண்டானால் என் கைப்பட்டை தோளிலிருந்து சரிந்து என் புயத்து எழும்பு முறிந்து போவதாக என்பது யோபுவின் திக்க முடிவு ( யோபு 11:21,22 ) .
நம் துவக்கம் அற்பமாயிருந்தாலும் நம்முடைய முடிவு சம்பூரணமாயிருப்பதே நமக்கு அழகு ( யோபு 8 : 7 ) எச்சரிப்பைப் பெறுவோம் . சீர்படுவோம் , சிறந்து வாழ்வோம் அவர் சிறந்ததனைத் தருவார் .
8 பொல்லாப்புக்கு விலகுகிறவனின் பொல்லாத மனைவி . . . .
தேவபக்தியுள்ள கணவனும் பக்தியற்ற மனைவியும்
யோபு
தேவனே சாட்சி கொடுக்கும் ஒரு மனிதன் அவன் . " உத்தமன் , சன்மார்க்கன் , தேவனுக்குப் பயப்படுகிறவன் . பொல்லாப்புக்கு விலகுகிறவன் , என் தாசன் " ( யோபு 1 : 8 )
இதுதான் யோபுவைக்குறித்த தேவ எண்ணம் . சத்துருவாகிய சாத்தான் தேவ அனுமதியோடு அவனுடைய வாழ்க்கையைச் சோதிக்க நேர்ந்த போது ,
ஒரே நாளில் 10 பிள்ளைகளின் மரணம் மற்றும் அனைத்துச் சொத்துக்களையும் இழந்த அவல நிலை ( யோபு 1 : 13 - 19 ) . வீட்டையும் , பிள்ளைகளையும் , சொத்துக்களையும் ஒரே நாளில் இழந்தவளின் நிலையில் எந்தப் பெண்ணையும் வைத்துப் பார்க்கக் கூடாது தான் .
தொடர்ச்சியாக சாத்தானின் கை அவனைத் தொட , உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலைமட்டும் கொடிய பருக்களால் வாதிக்கப்பட்ட அவனைக் குறித்து அவனே சொல்லும் காரியங்கள் மிகுந்த வேதனையையே கொண்டுவரும் .
1 . இராக்காலத்தில் எலும்புகள் துளைக்கப்பட்ட நிலை ( யோபு 30 : 17 )
2 தோல் கறுத்துப் போயிற்று ( யோபு 30 : 30 )
3 எலும்புகள் உஷ்ணத்தினால் காய்ந்து போயிற்று ( யோபு 30 : 30 )
4மாம்சம் பூச்சிகளினாலும் , அடைபற்றின புழுதியினாலும் மூடப்பட்டிருக்கிறது ( யோபு 7 : 5 )
5 எலும்புகள் தோலோடு ஒட்டிக்கொண்டிருக்கிறது ( யோபு 19 : 20 )
6பற்களை மூட கொஞ்சம் தோல் மாத்திரம் தப்பியுள்ளது ( யோபு 19 : 20 )
7 காய்ச்சல் ( யோபு 30 : 30 )
8மனஉளைச்சல் ( Depression ) யோபு 7 : 15 )
9அழுகை ( யோபு 16 : 16 )
10தூக்கமின்மை ( யோபு 7 : 4 )
11பாதிக்கும் சொப்பனங்கள் ( யோபு 7 : 14 )
12நாற்றமிகும் துர்நாற்றமெடுக்கும் சுவாசம் ( யோபு 19 : 17 )
13குருட்டாட்டம் ( யோபு 16 : 16 )
14 கெட்டுப்போன பற்கள் ( யோபு 19 : 20 )
15உருமாறிப்போன உடல் ( யோபு 2 : 12 )
16ஓட்டை எடுத்து சுரண்டச் செய்யும் ஊரல் ( யோபு 2 : 8 ) 17 .
17கொடிய பருக்கையால் உண்டாகும் வாதை ( யோபு 2 : 7 )
18 அநேக நாட்களாக தொடரும் வியாதி ( யோபு 29 : 2 ) 19 .
19சீழ் பிடித்ததனை மறைக்க சாம்பல் ( யோபு 2 : 8 )
20 . நரம்புகளுக்கு இளைப்பாறுதல் இல்லை ( யோபு 30 : 17 )
அவனுடைய மனைவிக்கு யோபுவின் சுவாசம் வேறுபட்டிருக்க காரணங்கள் உண்டே ( யோபு 19 : 17 ) . இழப்பு இழிவு , கணவனின் வியாதியின் கொடுமை , நீண்ட நாட்களின் பாடுகள் எந்த மனைவியையும் வருத்தப்படுத்துமே . அவள் இடத்தில் நாம் இருந்தால் எப்படி இருந்திருப்போம் ? நண்பர்களே அவனுடைய நிலையைப் பார்த்து ஏழு நாட்கள் பேசக் கூடாது மாற்றப்பட்டிருந்தனரே ( யோபு 2 : 13 ) .
இவளை யூத பாரம்பரியம் யாக்கோபின் குமாரத்தி “ தீனாள் " என்றே சொல்லுகிறது . யோபு யாக்கோபின் காலத்தில் வாழ்ந்தவன் என்பதும் கருத்து . யோபு நன்றாக , சுகத்தோடு , வசதியோடு , செல்வத்தோடு வாழ்ந்த போது சுற்றி சுற்றி வந்து பத்து பிள்ளைகளைப் பெற்றெடுத்தவள் . அவள் ஆரம்பத்திலேயே ஆடம்பரப் பிரியை தானே ( ஆதி 34 : 1 , 2 ) .
ஒருவன் பார்த்த மாத்திரத்திலே கற்பழிக்கும் அளவுக்கு அவளுடைய ஆடம்பரம் இருந்திருக்க வாய்ப்புண்டு .
புருஷனை சீக்கிரம் சாகும் என்று கூறும் அவள் , தான் அதனால் பிள்ளைகள் இழந்த நேரத்தில் விதவையாகவும் ஆயத்தம் என்று வாழ்க்கையில் ஏற்பட்ட துன்பப் புயலில் அடிபட்ட அவள் புலம்புகிறாள் ( யோபு 2 : 9 ) .
ஆனால் துன்ப சூழ்நிலை அவளை சாத்தானின் கைப்பொம்மை ஆக்கின பரிதாபம் தான் பெரிது . சாத்தான் தேவனிடத்தில் சவால் விட்டது " யோபுவை தேவனை தூஷிக்கவைத்துவிடுவேன் என்பதே ” ( யோ பு 1 : 11 ) ;
அதே வார்த்தையைத் தானே இவளும் சொல்கிறாள் ( யோபு 2 : 9 ) . அன்று பேதுரு சாத்தானால் நிரப்பப்பட்டு , மனுஷீக சிந்தையால் நிறைந்து , இயேசுவுக்கு ஆலோசனை தந்ததைப் போலவே ( மத் 16 : 23 ) , இவளும் யோபுவை இடறப் பண்ணுகிறாள் . இடறல் உண்டாக்குகிறவனுக்கு ஐயோ ! அல்லவா ( மத் 18 : 7 ) .
பக்கத்தில் வரவும் விடக்கூடாத வியாதி பிடித்து , மற்றவர்களால் ஏளனமாய் பேசப்பட்ட நிலைக்குத் தள்ளப்பட்டு நொந்து போயிருக்கும் அவனை " வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல " பேசுகிறாள் . " இப்பொழுதோ என்னிலும் இளவயதானவர்கள் என்னைப் பரியாசம் பண்ணுகிறார்கள் .
இவர்களுடைய பிதாக்களை நான் என் மந்தையைக் காக்கும் நாய்களோடே வைக்கவும் வெட்கப்பட்டிருப்பேனே " ( யோபு 30 : 1 ) .
அரவணைத்து , ஆறுதல் சொல்லி , தேற்ற வேண்டிய அவள் , சேவை செய்து வேதனையை மறக்கச் செய்ய வேண்டிய அவள் , தேவன் கடந்த நாட்களில் செய்த நன்மைகளை ஞாபகப்படுத்தி துதிக்கக் கற்றுக்கொடுக்க வேண்டிய அவள் , சுகத்திலும் , துக்கத்திலும் கூட நிற்பேன் என்று வாக்குக் கொடுத்த அவளின் வார்த்தைள் அவனைத் துளைத்திருக்க வேண்டும் .
ஆதலால்தான் அவன் அவளைப் " பைத்தியகாரியைப் போல பேசுகிறாய் " என்கிறான் ( யோபு 2 : 10 ) . துன்பம் அடுக்கடுக்காக வரும்வேளையில் தளர்ந்து போனவர்கள் கணவனை எப்படி நடத்துகின்றனர் . அதுவும் தேவபக்தியுள்ளவனை எப்படி நடத்துகின்றனர் என்பதனை ஆராயும் போது , நமக்குத் தைரியம் வந்திருக்க வேண்டும் .
ஆனால் இவளோ நமக்கும் மன உளைச்சலையே கொண்டு வருகிறாள் . ஆனால் , திரும்ப தேவன் நினைவு கூர்ந்து , சிறையிருப்பை மாற்றி இரட்டைத்தனையாய் திரும்பத் தந்து , முன்னிலையைப் பார்க்கிலும் பின் நிலைமையை அதிகம் ஆசீர்வதித்தபோது , இதே தீனாள் ( மனைவி ) மீண்டும் பத்து பிள்ளைகளுக்கு தாயாகிறாள் அழகான பிள்ளைகளைப் பெற்றெடுக்கிறாள் ( யோபு 42 : 10 - 15 ) .
எத்தனையான சந்தர்ப்பவாதி ; நலமாய் , சுகமாய் , வசதியாய் ஐசுவரியமாய் இருந்தால் அவர் வேண்டும் , இல்லையென்றால் " செத்து மடியுமே ” என்று தற்கொலைக்குத் தூண்டும் ஆலோசனை . அவனைப் பாவத்தில் விழப்பண்ணும் அவளுடைய முயற்சியில் ( யோபு 1 : 22 ; 2 : 10 )
அவள் தோல்வியுற்றாள் . என்ன வந்தாலும் நம்புவேன் , என் புருஷனை நேசிப்பேன் , அவருடைய தேவபக்தியைப் பாராட்டுவேன் என்று கூறுவோம் . அது தேவனற்ற கணவனுக்கும் , பக்தியுள்ள மனைவிக்கும் பொருந்தும் . பரீட்சையில் வெற்றிப் பெற்றவர்களாய் நிற்போம் .
9 தீர்க்கனுக்கு ஒரு கிறுக்கு மனைவியா?
தேவபக்தியுள்ள கணவனும் பக்தியற்ற மனைவியும்
ஓசியா-----கோமர்
தேவன் சொன்னதினால் தேவக் கட்டளைக்கு செவி கொடுத்து , சோர வாழ்க்கை வாழ்ந்த ஒருத்தியைத் தான் ஒசியா தீர்க்கதரிசி மணந்து கொள்கிறார் .
அவள் சோர வாழ்க்கை வாழ்ந்ததும் போதாது என்று , பிள்ளைகளைப் பெற்றவள் ; அப்பிள்ளைகளையும் சேர்த்து காப்பாற்றுகிறார் .
அவனோடு வாழ்க்கை நடத்தி மூன்று பிள்ளைகளைப் பெற்ற பின்னர் , மீண்டும் அவள் தன் பழைய நாயகர்களை ( திருமணத்திற்கு முன் காதலித்தவர்களை ) நாடி ஓடி விடுகிறாள் . கணவன் கொடுத்த வெகுமதிகளையும் , பொருட்களையும் கொடுத்து , அவர்களோடு ஓடிப் போகிறாள் ( ஒசி 1 : 2 - 3 , 6 , 9 ; 2 : 5 - 8 ) .
ஆனால் அன்பினிமித்தமும் , மன்னிப்பை அருளும் சுபாவத்தின் நிமித்தம் , மீண்டும் பணயம் கொடுத்து எனக்காக காத்திரு , வேசித்தனம் பண்ணாதே என்று கேட்டுக் கொண்டு , தானும் காத்திருப்பேன் என்று சொல்கிற கணவன் தான் ஒசியா ( ஒசி 3 : 2 , 3 ) .
ஆனால் உள்ளத்தில் வேசித்தன ஆவி உள்ள அவளோ . . . ( ஒசி 5 : 4 ) கர்த்தரின் அன்பை வாழ்வில் வெளிப்படுத்தி மற்றவர்களுக்கு மாதிரியாக வாழ நினைத்த அவன் வாழ்வில் மீண்டும் மீண்டும் மண்ணைப் போட்டாலும் , “ உனக்கு என்னிடத்தில் சகாயம் உண்டு ( ஓசி 13 : 9 ) , நித்திய விவாகத்துக் கென்று உன்னை எனக்கு நியமித்துக் கொள்ளுவேன் ( ஒசி 2 : 19 ) , மனப்பூர்வமாய்ச் சிநேகிப்பேன் " ( ஓசி 14 : 4 ) என்று கூறும் கணவன் இன்றைய சமுதாயத்திற்கு ஓர் பெரும் சவால் ;
சிறிய காரணங்களயும் காட்டி விவாகரத்துக் கோரும் நாட்கள் இவைகள் . “ தள்ளிவிடுதலை நான் வெறுக்கிறேன் " என்று தேவன் கூறினாலும் ( மல் 2 : 16 ) , அற்பக் காரியங்களுக்கும் கோர்ட்டில் போய் நிற்கும் தம்பதியர் கிறிஸ்துவின் அன்பினால் நிரப்பப்பட்டால் எத்தனை நலமாயிருக்கும் .
கிறிஸ்து நம்மை ஏற்றுக்கொண்டது போல நீங்களும் ஒருவரையொருவர் ஏற்றுக் கொள்ளுங்கள் ( ரோமர் 15 : 7 ) என்பதே மன்னிப்பின் மகுடம் .
10 புத்திசாலிக்கு ஒரு பைத்தியக்காரன்
தேவபக்தியுள்ள மனைவியும் பக்தியற்ற கணவனும்
நாபால்-----அபிகாயில்
பணக்காரன் என்பதினால் தன் மகளை பைத்தியமும் , முரடனுமான ஒரு மனிதனுக்கு திருமணம் செய்து வைத்து விட்டனர் அபிகாயிலின் பெற்றோர் ;
அவளோ புத்திசாலியும் , ரூபவதியுமானவள் ( சாமு 25 : 5 , 25 ) , ஒருவரும் அவளிடத்தில் பேசவும் கூடாது ( 1சாமு 25 : 17 ) , தன்னுடையது தனக்கே என்பதில் கவனமாகயிருக்கும் அவன் , என்னுடையது என்னுடையது என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளுகிறவன் ( 1சாமு 25 : 11 ) , மற்றவர்கள் செய்யும் மறைமுக உதவியினைக் காணக் கூடாதபடிக்கு அவனுடைய தன்னயம் அவன் கண்களை மறைத்திருந்தது ( 1சாமு 25 : 15 , 16 ) ,
தன் ஜனத்திற்காக யுத்தங்களை நடப்பித்து , தன் உயிரை கையில் வைத்து தேசத்தினை எதிரியின் கையிலிருந்து தப்புவித்தவனை அடையாளம் கண்டு கொள்ளவோ ( 1சாமு 25 : 28 ) , இனிவரும் நாட்களில் அவனை ஆண்டவர் ஜனத்தின் அதிபதியாக உயர்த்த இருப்பதனையோ புரியவும் அவனுடைய கடின இருதயம் இடம் தரவில்லை ( சாமு 25 : 30 )
கரம் கூப்பி தன் தேவைகளைக் கூறுபவர்க்கு இரங்கவும் அறியாதவன் அவன் ( வச 5 - 8 ) , தானே குடித்து வெறித்து ராஜவிருந்துக்கு ஒப்பாய் விருந்து சாப்பிட்டு வெறி கொள்ளுகிறவன் ( வச 36 ) , சம்பூரணமாய் வாழ்ந்த அந்த ஐசுவரியவானைப் போன்றவன் ( லூக் 16 : 19 ) ,
மற்றவர்களுக்கு ஏற்படும் ஆபத்தைக் காணக் கூடாதவன் , நன்மை செய்யும் படிக்கு உனக்குத் திராணியிருக்கையில் அதை செய்யத்தக்கவர்களுக்குச் செய்யாமல் இராதே ( நீதி 3 : 27 ) என்கிற நல் வார்த்தைகளை அறியாதவன் .
கூடவே , தனக்குத் தெரியாமல் நன்மை செய்யப்படுமானால் அதனைப் பொறுக்க கூடாமல் இருதயம் கல்லாக மாற்றப்படும் அளவுக்குப் பாதிக்கப்படுபவன் ( 1சாமு 15 : 37 ) ;
இதினிமித்தம் தன் குடும்பத்திற்கும் தனக்கும் வரும் ஆபத்தினைக் காணக்கூடாதபடிக்கு மாற்றப்பட்டிருந்த அவனைக் காப்பாற்ற துரிதமாய்ச் செயல்படும் தேவபக்தியுள்ள ஒரு மனைவி அவனுக்கு உண்டு .
அவள் தாழ்மையை அணிகலனாக உடையவள் ( வச 13 ) , ஞானமாய் பேசுபவள் , புருஷனின் குற்றத்தைத் தன் குற்றமாக சுமக்க ஆயத்தமானவள் ( வச 24 ) , தனக்குத் தெரிந்திருந்தால் நடக்கவிடாமல் தடுத்திருப்பேனே ( வச 25 ) என புலம்புபவள் ,
தேசத்தில் அதிபதியாய் உயர்த்தப்படப் போகும் தேவ மனிதன் குற்றமற்றவனாகவும் , நல்மனசாட்சியை உடையவராகவும் இருக்கவேண்டும் என்பதில் கவனம் உள்ளவள் ( வச 30 31 ) , கர்த்தர் தான் பழிவாங்குகிறவர் என்பதனை நினைப்பூட்டுபவள் ( வச 29 ) . சமயம் அறிந்து சங்கதிகளை புருஷனுக்குச் சொல்லுபவள் ( வச 37 ) , தன்னுடைய நன்மைகள் பிறர் குறைவில் உதவ வேண்டும் என்பதில் கவனமாய் இருப்பவள் ( வச 18 ) , பிறர் கோபத்தினை தன் சாகசப் பேச்சினால் குளிரப்பண்ணுபவள் ( வச 35 )
மகா புத்திசாலி . தன் குலத்துக்கு வரும் அழிவு எப்படி வருகிறது என்பதனைக் கண்டு கொண்ட பெண்கள் எத்தனை பேர் ? அதனைத் தடுக்க அவர்கள் செய்வது என்ன ? ஜென்ம குணத்தோடு வாழும் முரடனை திருமணம் செய்து வைத்து விட்டார்களே என்று தன்னைக் குறித்து ஏங்கி வாழ அவளுக்கு தெரியாது . நடந்தது நடந்துவிட்டது ஆனால் , நான் அவனையும் அவன் உடமைகளையும் காக்கக் கடமைப்பட்டவள் என்பதனை அவள் நன்கு அறிவாள் . அவளுடைய வீட்டு வேலைக்காரர்கள் இவளைக் குறித்து நன்கு அறிந்து வைத்திருந்தனர் ( வச 14 ) .
தங்களுக்குப் மதிலாக இருந்து உதவினவர்களை காக்கும் கடமை தனக்கு உண்டு என்பதனை புருஷன் அறியவில்லை ; மாறாக புத்திசாலி மனைவி அறிந்து துரிதமாய்ச் செயல்பட்டாள் . பின்னர் , விதவையானதினால் ( நாபாலை கர்த்தர் அடித்து செத்துப் போனான் ) , தாவீதுக்கு மனைவியாக உயர்த்தப்பட்டாள் . உயர்த்தப்பட்டபோது , தான் பணிவிடை செய்யத்தான் உயர்த்தப்படுகிறேன் என்ற பக்குவமும் , பண்பும் , தாழ்மையும் கொண்ட தேவ பார்வையில் விலையேறப் பெற்ற குணங்களைக்கொண்டவள் அவள் ( 1சாமு 25 : 3 ; 1பேது 3 : 4 ) .
தனக்கு கிடைத்திருந்த அருமை மனைவியை அடையாளம் கண்டுக் கொள்ளத் தெரியாத புருஷர்கள் எத்தனை பேர் ? அவளுடைய விலை முத்துக்களைப் பார்க்கிலும் உயர்ந்தது ( நீதி 31 : 10 ) . அவள் சிறுமையானவர்களுக்குத் தன் கையைத் திறந்து ஏழைகளுக்குத் தன் கரங்களை நீட்டுகிறாள் ( நீதி 31 : 20 ) . தன் வாயை ஞானம் விளங்கத் திறக்கிறாள் , தயையுள்ள போதகம் அவள் நாவின் மேல் இருக்கிறது ( நீதி 31 : 26 ) . தன் நிலையை மாத்திரம் கண்டு அழுது கொண்டிருப்போர் , தன் குடும்பத்தினருக்கும் வரும் அழிவைக் காக்க தன்னால் இயன்ற அத்தனையையும் செய்தால் இவளைப் போல் மாறிவிடலாமே .
11 தேவனுடைய மனுஷனை அடையாளம் கண்ட தேவ பிள்ளை
தேவபக்தியுள்ள மனைவியும் பக்தியற்ற கணவனும்
சூனேமியாள்
தனக்குக் கனமும் ஐசுவரியமும் இருந்தாலும் அதனை பெருமையாக எண்ணாமல் , தேவ மனிதர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவள் சூனேமியாள் ( 2 இரா4 : 8 ) .
சரியான வழியில் எலிசாவை அவள் பரிசுத்தவான் என்று அடையாளம் கண்டு கொண்டதினால் , தன் புருஷனையும் எலிசா தங்கிச் செல்ல அறையைக் கட்ட வைத்துவிடுகிறாள் ( வச 9 , 10 ) ,
தான் செய்த நன்மைக்குப் பதில் கிடைக்க வேண்டும் . தேவ மனிதன் தன்னை ஆசீர்வதிக்கவேண்டும் என்று வாஞ்சித்து , எதிர்பார்த்து , இராஜாவினிடத்திலும் , சேனாபதியினிடத்திலும் , அதன் மூலம் செல்வாக்கைத் தேடிக்கொள்ள வேண்டுமென்ற விருப்பமும் இல்லாமல் ( வச 13 ) ,
தனக்கு ஒரு பெரிய பிள்ளையற்ற குறையிருந்ததனையும் வெளிப்படுத்தி லாபம் சேர்க்க நினைக்காமல் , தன் கணவன் வயதானவன் என்பதனையும் கருதாமல் வாழ்ந்தவள் அந்த தேவ பிள்ளை ( வச 14 , 16 ) ,
அவளுடைய கணவன் , காரியங்களில் அவள் சொல்வதனை ஏற்றுக்கொள்ளுவான் ; ஆனால் , அதிகம் அக்கறை கொள்ளாதவன் . பிரச்சனைகளை மனைவியிடத்தில் தள்ளிவிட்டு விடுவான் ( வச 18 , 19 ) ;
அவளோ பிரச்சனைகளைத் தேவனுக்குத் தெரியப்படுத்தி தேவ மனிதனின் உதவியை நாடுகிறவள் ( வச 22 ) , வீட்டிலே அருமை மகனின் மரணத்தையும் அவள் புருஷனுக்கும் சொல்லவில்லை ;
மாறாக மரித்தவனை தேவன் உயிர்ப்பிப்பார் என்ற அசைக்க முடியாத விசுவாசம் அவளுக்கு இருந்தது ( வச 30 ) . இன்றைக்கு எத்தனைப் பெண்கள் கஷ்டங்கள் , பாடுகள் , துன்பங்கள் வந்தால் ஐயோ , குய்யோ என அலறி புருஷனை அலட்டி , ஊராரைக் கூப்பிட்டு காரியத்தினைப் பெரிதாக்கிவிடுகிறார்கள் . கண்டவர்களிடத்திலும் தன் காரியங்களைச் சொல்லி சுய பரிதாபத்தினை சம்பாதிக்க அவளுக்குத் தெரியாது ( வச 26 ) .
விசுவாசத்தினால் ஸ்திரீகள் தாங்கள் சாகக் கொடுத்தவர்களை உயிரோடத் திரும்ப பெற்றார்கள் என்பது இவளைக் குறித்து தானோ ( எபி 11 : 35 ) .
என் கடமையை நான் செய்தால் , ஏற்றவேளையில் எனக்குக் கர்த்தரும் உதவுவார் என்பது இவளின் அசைக்க முடியா நம்பிக்கை . தேவ தீர்க்கத்தரிசியியையும் , தீர்க்க தரிசனத்தையும் சார்ந்து வாழ்ந்ததால் பஞ்சத்திற்கும் அவள் தப்பிவிட்டாள் ( 2இரா 8 : 1 , 2 ) .
கைமாறு கருதாமல் கர்த்தரின் ஊழியரைத் தாங்குவோர் எப்போதும் வெட்கப்பட்டுப் போகார் என்பதற்கு இவள் ஒரு எடுத்துக்காட்டு .
12 ஆகாமியம் கொண்ட ஆசாரியனின் மனைவி
தேவபக்தியுள்ள மனைவியும் பக்தியற்ற கணவனும்
பினேகாஸ்
ஆசாரியனின் மனைவி . அவனோ பேலியாளின் குமாரன் ( சாமு 2 : 12 ) , தேவனை அறியாதவன் . ஜனங்கள் காணிக்கையை அருவருப்பாய் நினைக்கும் அளவுக்கு வாலிபனான அவளின் புருஷன் , வலுக்கட்டாயமாய் ஜனத்தினை நச்சரிப்பவன் ( வச B - 17 )
கூடவே , ஆராதனைக்கு வரும் பெண்களையும் கெடுத்துப்போடுகிறவன் ( வச 22 ) . தன் தகப்பனின் எச்சரிப்பையோ , தீர்க்கதரிசிகளின் எச்சரிப்பையோ கேட்க விரும்பாதவன் ( வச 25 , 27 35 ) ,
அவனுடைய கெட்ட நடக்கையே மரணநாளையும் குறித்து விட்டது ( 1சாமு 2 : 34 ) ; சந்ததிக்கும் சாபத்தை சம்பாதித்தவன் அவன் ( சாமு 1 : 33 )
தேவ பெட்டி கூட இருந்தால் நம்மை அது பாதுகாக்கும் என்று குருட்டு நம்பிக்கை , தேவனுக்குப் பிரியமாய் வாழ்வதனைக் குறித்தோ ஒரு கவலையும் இல்லாதவன் ( 1சாமு 44 ) .
ஆரவாரமும் ஆர்ப்பரிப்பும் வெற்றியைக் கொண்டு வந்துவிடும் , எதிரியின் மேல் வெற்றியை பெற்றிடமுடியும் என்ற அபத்த நம்பிக்கைக்கு ஜனங்களை எவிவிட்டவன் ( வச 5 ) .
ஆனால் போர் முகத்தில் பரிசுத்தமே பாதுகாக்கும் என்பதனை உணர்த்துவிக்கும் வண்ணம் தோல்வி அவனையும் அவனுடையவர்களையும் கவ்விற்று ( 1சாமு
தொண்ணூற்றெட்டு வயது கொண்ட மாமனார் உண்டு அவளுக்கு , ஆனால் முதுகெலும்பு இல்லாதவர் தேவ வார்த்தை அவர் வாயில் உண்டு ( சாமு 1 : 17 ) தீர்க்கதரினமும் உரைப்பார் . ஆனால் , மக்களின் அங்கலாய்ப்பை புரிந்து கொள்ளும் திறன் அற்றவர் ( சாமு 1 : 12 . 13 ) ,
தேவ சத்தம் கேட்க சிறுபிள்ளையாண்டான் சாமுவேலை தெளிவாக நடத்தத் தெரியும் , ஆனால் தேவன் சொல்லிக் காண்பிப்பதனைத் திருத்தத் திராணியற்றவன் ( 1சாமு 3 : 9 . 18 ) ,
ஆனால் , பினகாஸின் மனைவிக்கோ கர்த்தரின் பெட்டியைக்குறித்தும் , கர்த்தரின் மகிமை தன் ஜனத்தை விட்டுப் போய் விடக்கூடாது என்பதிலேயே கவலை . அவளுடைய வேதளை பிரசவிக்கவும் செய்துவிட்டது . ஆனால் , தனக்கு ஆண்மகன் கிடைத்தது அவளுக்கு ஆறுதலைத் தரவில்லை .
குடும்பத்தில் ஏற்பட்ட நஷ்டத்திற்குக் காரணம் தேவ மகிமை தேவமக்களை விட்டுப் போய்விட காரணமாயிருந்த தன் குடும்பத்தினாலேயே தன் அங்கலாய்ப்பு அவளை உயிரை விடவும் செய்துவிட்டது . ( 1சாமு4:19-22) ,
தேவபக்தி , வைராக்கியம் அவளை மேற்கொள்ள தன் புருஷனுக்குப் பதிலாக பின்ளை வந்து விட்டானே என்று திருப்தி கொள்ளவிடவில்லை . அதனைக் கண்டு கொள்ளவுமில்லை ( வச 20 ) திரும்பிப்பார்க்கவுமில்லை . இப்படி ஏங்குபவர் யார் ? இன்று .
13 எதிரியை மடங்கடிக்கும் எஸ்தர் . .
தேவபக்தியுள்ள மனைவியும் பக்தியற்ற கணவனும்
எஸ்தர்----அகாஸ்வேரு
அனாதைக்கு அரசு வாழ்வு அரண்மனை சுகம் , பட்டத்தரசி அவன் ஆண்டவரையோ , ஆண்டவரின் ஜனத்தையோ அறியாத கணவனுக்கு அவள் மனைவி ( எஸ் 27 . 17 ) .
குடித்து , வெறித்து மனைவியை மற்றவர்கள் பார்த்து மகிழவேண்டும் என்பதனை விரும்பும் அப்படிப்பட்ட கணவன் ( எஸ் 1 : 10 . 11 ) தான் விரும்பாதது நடக்கும் போது மூர்க்க வெறி கொள்பவன் ( எஸ் 1112 ) , பின்னர் கோபம் தணிந்தால் கஷ்டப்படுபவன் ( எஸ் 10 . ராஜ ஸ்திரி என்றாலும் அழைக்காமல் அறைக்குள் நுழைந்தால் அடுத்த நிமிடமே கொலை செய்யப்படுவான் என்ற கட்டளையை பிறப்பித்தவன் ( எஸ் 41 ) ,
ஒருமாதமளவும் அரண்மனையிலேயே இருந்தும் , அலுவல் நிமித்தம் அல்லது ஆட்டம் பாட்டத்தில் மனதினைப்பறிகொடுத்ததின் நிமித்தம் மனைவியின் முகத்தைக் கூடப்பார்க்காதவன் ( வச 11
இங்கிதமாய் பேசி , இப்படிப்பட்ட அதிகாரப் பெருமை வாய்ந்த அகங்கார கணவனை தன் வழியில் கொண்டு வந்து தன் ஜனத்தினை அழிவுக்குத் தப்புவித்தவள்தான் எஸ்தர் ( எஸ் 5:8 ) .
தன் ஜீவனைப் பார்க்கிலும் தன் ஜனத்தின் அழிவைக் தாங்கிக்கொள்ள முடியாமற் போய் விட்ட அவளின் மனநிலை ( எஸ் 4:16 ) . சட்டத்தினையும் மீறச் செய்து விட்டது .
பெருமை பேசுவோரை ( எஸ் 5 : 10 - 12 ) , துர்க்குணம் கொண்டோரை ( எஸ் 10 , துல்லியமாகக் காட்டிக் கொடுத்து , தேவ பெலத்தினால் அழித்துப் போட்ட அவள் தேவமனிதன் மொர்தேக்காயின் சொல் கேட்டபடியினால் தான் நடந்தது . தேவ ஜனத்திற்கு , தன் குலத்திற்கு வெளிச்சத்தையும் , மகிழ்ச்சியையும் , களிப்பையும் கனத்தையும் கொண்டு வந்துவிட்டாள்
அவள் ( எஸ் 8:16 . அழிவுக்கு ஏதுவான ஜனம் அவளுடைய அர்ப்பணத்தினால் ஆர்ப்பரித்து மகிழும் ஜனமாக மாற்றப்பட்டுவிட்டது ( எஸ் 7:4,8;15 , 9:19 ) .
திருவசனத்திற்குக் கீழ்படியாத கணவன்மாரை , பயபக்தியோடு கூடிய கற்புள்ள நடக்கையினால் , போதனையின்றி ஆதாயப்படுத்தக்கூடும் . ஆசிர்வாதமாக மாற்ற முடியும் என்பதனை 1 பேதுரு3:1,2 ) நிருபித்து விட்டாள் எஸ்தர் : அவளைப்போன்றோர் எழும்பட்டும் .
14 மதிக்கப்படத்தக்க மருமகள்
தேவபக்தியுள்ள மனைவியும் பக்தியற்ற கணவனும்
மத்தேயு எழுதின சுவிசேஷத்தின் முதல் அதிகாரத்திலேயே இந்து பெண்களின் பெயர்களை மத்தேயு குறிப்பிடுகிறார் . வழக்கமாக தங்கள் ஜென்ம அட்டவணையில் பெண்களின் பெயர்களைக் குறிப்பிடுவது யூதர்களுக்கு வழக்கமில்லை . எனெனில் , யூதன் ஒருவன் மூன்று தடவை தேவனை ஒரு நாளில் மூன்று காரியங்களுக்காக ஸ்தோத்தரிப்பான் .
முதலாவது தான் ஆபிரகாமின் வித்து என்பதினாலும் , இரண்டாவதாக சுதந்தரமாய் பிறந்திருக்கிறேன் அடிமையில்லை எனவும் , மூன்றாவதாக பெண்ணாக பிறக்காமல் ஆணாக பிறந்ததற்காகவும் .
ஆனால் யூதர்களுக்காக எழுதப்பட்ட இந்த சுவிசேஷத்தின் ஆரம்ப அத்தியாயத்திலேயே மத்தேயு தாமார் ( வச 3 ) ராகாப் ( வச 5 ) ரூத் ( வச5 ) பத்சேபாள் ( வச 6 ) மரியாள் ( வச 16 ) என்ற ஐந்து பெண்களைக் குறிப்பிடுகிறார் . இந்த ஐந்து பெண்களின் மத்தியில் காணப்படும் பொதுவான குணம் , " அவமானம் ஆனாலும் ஆண்டவரின் ஆசீர்வாதந்தினை பூமிக்கு வழங்க வேண்டும் ” என்ற நோக்கமே .
ஆபிரகாமுக்குக் கொடுக்கப்பட்ட ஆசீர்வாதம் " உன் சந்ததிகளினால் இந்த பூமி ஆசீர்வதிக்கப்படும் என்பதே " ( ஆதி 12 : 3 ; 22 : 18 ) ; இதனை அவர்கள் பரிபூரணமாக நம்பினார்கள் வாஞ்சித்தார்கள் . உலகின் ஆசீர்வாதத்திற்காகவே தங்களை தேவன் தெரிந்து கொண்டிருக்கிறார் என்பதனை அறிந்திருந்த குலம் , அதற்காக எதையும் செய்ய ஆயத்தம் . ஆதி 38 - வது அதிகாரத்தில் , தாமார் யூதாவின் குடும்பத்தில் இணைந்து , அந்த சந்ததியில் தனக்குப்பிள்ளை வேண்டும் என்பதினால் மாமனோடு இணைந்து ( ஏமாற்றி ) கர்ப்பவதியானதை வேதம் நமக்குச் சுட்டிக் காட்டுகிறது .
எரிகோவாசியான ராகாப் , தன் ஜனத்தினை விட்டு இவர்களோடு இணைந்து பின்னர் சல்மோனை திருமணம் செய்கிறாள் ( மத் 1 : 5 ) .
ரூத என்னும் தள்ளப்பட்ட சாப சந்ததியான மோவாபில் பிறந்திருந்தாலும் , உறுதியான தன்மானத்தின்படி ( ரூத் 1 : 16 ) போவாஸை மணக்கிறாள் ( ரூத் 4 : 10 ) .
பத்சேபாளும் தாவீதின் இராஜ குலத்தில் தான் மீட்பர் தோன்றுவார் என்பதனை அறிந்திருந்ததினால் ( ஆதி 49 : 10 ) , வழியில் தனக்கு ஒரு சந்ததி உண்டாகட்டுமே என்றதினால் தான் அவனோடு உறங்க சம்மதித்தாள் ( 2சாமு14
பின்னதாக உன் சந்ததி தான் சிங்காசனத்தில் அமருவான் என்ற உறுதி மொழியினையும் பெற்றுக் கொண்டாள் ( இராஜா1 : 29 ) ,
மாற்றான் மனைவி என்ற போதிலும் அவள் தாவீதுக்குக் கர்ப்பந்தரிக்கிறாள் .
மரியாளும் கன்னிப் பெண் கர்ப்பவதியானால் என்ன சொல்வார்கள் என்பதனை விட்டுக்கொடுத்து , தேவ தூதன் வாக்குக்கு செவிகொடுக்கிறாள் , தன் சரீரத்தினால் தேவன் மகிமைப்பட ஒப்புக கொடுக்கிறாள் ( லூக் 13 , 38 ) .
இந்த உண்மைகளைப் புரிந்து கொண்டால் , ஆதி 38 - ம் அதிகாரம் நமக்கு மன உளச்சலை ஏற்படுத்தாது . யூதா கானானியப் பெண்ணாம் சூவாவிடத்தில் ' ஏர் ' என்ற குமாரனைப் பெற்ற போது 13 . 2 வயதுடையவனாகத் தான் இருந்தான் . " ஓனான் " பிறக்கும் போது அவனுக்கு 14 வயது : சேலா பிறக்கும் போது அவனுக்கு 15 . வயது , தாமரிடத்தில் பேரேஸ் பிறந்த போது 28 , வயது . எனவே " பேரேஸ் " பிறந்த போது தாமார் 25 வயது நிரம்பிய ஓர் பெண்ணாய் தான் இருந்திருக்க வேண்டும் .
தன்னுடைய முந்திய கணவர்கள் இரண்டு பேரும் கர்த்தரின் பார்வையில் பொல்லாப்பை செய்து மரணத்தைச் சந்தித்த காரியம் அவளை வாட்டியிருந்தாலும் ( ஆதி 38 : 7 , 10 ) ,
மூன்றாம் மகன் அவளுக்குக் கணவனாய் மாறுவான் என்று காத்திருந்தாள் . ஆனால் யூதா பயத்தின் நிமித்தம் அவனைத் தரவில்லை ( வச 11 ) . எனவே தனக்கு வரவிருந்த பாக்கியம் இல்லாமல் போகுமோ என்று பயந்து , தன் மனதைக் கடினமாக்கிக்கொண்டு , நாடகமாடி யூதாவுக்கு ஒரு குமாரனைப் பெறுகிறாள் .
பின்னதாக யூதா அவளைக் குறித்து , " என்னிலும் அவள் நீதியுள்ளவள் " என்கிறான் ( வச 26 ) , அவமானம் வந்தாலும் , அது தேவ ஆசீர்வாதத்தைக் கொண்டுவர தன்னை வாய்க்காலாக மாற்றுவதிலிருந்து தடுத்து நிறுத்தக் கூடாது என்பதனை உணர்ந்து தன் சாரத்தை ஒப்புக்கொடுக்கிறாள் .
பின்னர் யூதா வம்சத்திலும் திருமண விழாக்களில் ஆசீர்வதிக்கும்போது " தாமார் வீட்டைப்போல " என்று இவள் செய்ததை ஞாபகப்படுத்தி ஆசீர்வதிப்பது வழக்கமாயிற்று ( ரூத் 4 : 12 ) . )
ஏமாற்றப்பட்டு விட்டேனே என்று ஏங்காமல் , எப்படியாகிலும் பூமியின் குடிகளுக்கு ஆசீர்வாதமாக என் குடும்பம் ஆக வேண்டும்' _ என ஏங்குவோர்க்கு இவள் எடுத்துக்காட்டு . காரியத்தினைக் கண்டால் காரி உமிழச்செய்யும் செயல் போலக் காணப்பட்டாலும் , உள் நோக்கத்தினை அறிந்த ஆண்டவரும் இதனை அங்கீகரித்து விட்டாரே . திருமண வாழ்வில் எதை நோக்கிச் செயல்படுகிறோம் என்பது மிகவும் முக்கியம் . உள் நோக்கம் என்ன ? என்ற கேள்வி அடிக்கடி கேட்கப்படுவது நல்லது . இன்றைய சூழ்நிலையில் இது ஏற்புடையதாய் காணப்படுகிறது இல்லை ;
ஆனால் , ஆண்டவரை தன் இரட்சகராக ஏற்றுக்கொண்ட மாற்று மதத்தினர் குடும்பத்தினை அள்ளி அணைப்பவர் யார் ? கீழ் ஜாதி என்று தள்ளி விட்டு அடைக்கலம் தர மறுப்பவர் எத்தனை பேர் யோசிப்போம் .
15 பயந்தவனுக்கு பராக்கிரமசாலியைத் தந்தவள்
தேவபக்தியுள்ள மனைவியும் பக்தியற்ற கணவனும்
மனோவா
ஜெபிக்காத தம்பதியருக்கு ஒரு சிறப்புச் செய்தி வருகிறது .
வேண்டிக்கொள்ளாமல் சத்துருவின் பிடியில் சமாதானமாக வாழ்ந்து கொண்டிருந்த இஸ்ரவேலுக்கு , விடுதலையை தேவன் வாக்குப் பண்ணுகிறார் ( நியா 13 : 13 : 15 : 11 ) .
கணவன் விசுவாசத்தில் அத்தனைத் தேறினவன் இல்லை ( நியா 13 : 22 ) பயந்து சாகிறவன் . வாக்குத் தந்தவருக்கு பலி செலுத்தவேண்டும் என்பதனை அறிவான் ; ஆனால் , அவர் பலியை ஏற்றுக்கொண்டதினால் என்னையும் எற்றுக்கொண்டார் என்பதனை அறிய மாட்டான் ( நியா 13 : 15 , 23 ) ( ஆதி 4 : 4 ) ,
அதிசயம் கண்டான் ஆனால் அது தன்னில் நிறைவேறும் என்பதனை விசுவாசிக்க பெலன் இல்லை . ( நியா 13 : 19 . 20 )
ஆனால் , மனைவி உறுதியானவள் . எனவேதான் அவள் பிள்ளைக்காக ஏங்கி தவித்து வேண்டுதல் கூட செய்யாத போது ( லூக் 1 : 13 ) ,
தேவன் அவளைத் தேடித் தந்த ஆசீர்வாதத்தினைப் பெற்றுக்கொள்ளும் செய்தியினைப் பெற தகுதியுள்ளவளாகிறாள் ,
முதல் தூதனானவன் இரண்டு முறையும் அவளுக்கே தரிசனமாகிறதைக் கவனியுங்கள் நியா 133 . 71 .
கணவன் தான் நீர் அனுப்பின் தேவனுடைய மனுஷன் மறுபடியும் ஒரு விசை எங்களிடத்தில் வந்து பிறக்கப்போகிற பிள்ளைக்காக நாங்கள் செய்ய வேண்டியதை எங்களுக்குக் கற்பிப்பாராக என்று வேண்டிக்கொண்டான் . ஆனால் , அவனுடைய பலவீனத்தை அறிந்த கர்த்தர் அவளுக்கே காட்சியளிக்கிறார் .
பயந்து நடுங்கி செத்துப்போவோம் " என்று கலங்கும் . அவனை , அவளுடைய விசுவாசமே தூக்கி நிறுத்துகிறது . விசுவாசத்தில் தளர்ந்து காரியங்களை கர்த்தரின் கண்ணோட்டத்தில் காணத்தவறும் அவனை , அவள்தான் கட்டிப்பிடித்து கலங்காதீர் " என்கிறாள் . "
விசுவாசத்தில் பலவீனமுள்ளவர்களைச் சேர்ந்துக்கொள்ளுங்கள் . ஆனாலும் , அவர்களுடைய மன ஐயங்களைக் குற்றமாக நிர்ணயிக்காதிருங்கள் ( ரோ 14 : 1 ) என்ற அறிவுரை இவள் வாழ்க்கையின் மூலம் தான் நமக்குத் தரப்படுகிறதோ ?
கணவனின் பக்தியை எள்ளி நகையாடுவோரும் , விசுவாசத்தைச் சேதப்படுத்துவோரும் , பயத்தினை பலமடங்காக மாற்றுவோரும் நிறைந்த மனைவிகளைக் கொண்ட இவ்வுலகில் , இவள் ஒரு மாற்று மருந்து ! தேவ நோக்கினை அவள் நிறைவேற்ற பராக்கிரமசாலி ஒருவனைப் பெற்றுத் தர காரணமாகிவிட்டாளே ! ( எபி 1132 )
16 நீதிமன்றம் வரை சென்ற மனைவி "
தேவபக்தியுள்ள மனைவியும் பக்தியற்ற கணவனும்
பிலாத்து
கனநித்திரை மனுஷர் மேல் இறங்குகையில் அவர்கள் படுக்கையின் மேல் அமர்ந்திருக்கையில் , கர்த்தர் இராக்காலத்துத் தரிசனமான சொப்பனத்திலே மனுஷனுடைய செவிக்குத் தாம் செய்யும் காரியத்தை வெளிப்படுத்தி , அதை அவர்களுக்கு வரும் தண்டனையினால் முத்திரைப் போட்டு ,
மனுஷன் தன் செய்கையை விட்டு நீங்கவும் மனுஷருடைய பெருமை அடங்கவும் செய்கிறார் . இவ்விதமாய் அவன் ஆத்துமாவைப் படுகுழிக்கும் அவன் ஜீவனை பட்டய வெட்டுக்கும் தப்புவிக்கிறார் ” யோபு 33 : 15 - 18 ) என்பது நியாயப்பிரமாணமும் அறியப்படும் முன்னர் மனிதர்கள் கண்டிருந்த உண்மை .
தேவ பிரமாணங்களை அறியாத ஒரு புறஜாதிப் பெண் , தேசாதிபதியான பிலாத்துவின் மனைவிக்கு வந்த சொப்பனங்கள் பிலாத்துவை எச்சரிப்பதற்கு ஆளை அனுப்பிவைக்கிறது ( மத் 27 : 19 ) ,
அந்த வார்த்தைகள் பிலாத்துவையும் இயேசு நீதிமான் என்றே கறுத வைக்கிறது ( மத் 27 : 24 )
. கணவன் தவறு செய்து தன் குடும்பத்திற்கும் சந்ததிக்கும் அழிவைக் கொண்டு வந்து விடக்கூடாது என்று கலங்கும் இந்த மனைவி , நியாயஸ்தலத்தில் உட்கார்ந்திருக்கும் தன் கணவனை எச்சரிக்கிறாள் . தேவனுக்கும் , தேவ நியாயத்தீர்ப்புக்கும் பயப்படுகிற அவள் , தேவனை அறிய வேண்டிய விதம் அறிய வாய்ப்பற்றிருந்தும் ( அரண்மனையில் , ரோமர் அரியாசனையில் வீற்றிருக்கும் கணவனின் அன்பு மனைவியாக வாழ்ந்ததால் ) எச்சரிப்பைத் துணிந்து தருகிறாள் . இன்றும் பாத்திரத்தில் பிலாத்து தன் கைகளைக் கைகழுவிக்கொண்டே “ இந்த நீதிமானின் இரத்தப்பழிக்கு நான் பங்காளியல்ல " என்று சொல்லிக்கொண்டிருப்பதாக சிலர் கூறுவர் ;
அத்தனைப் பெரிய தாக்கத்தைச் செய்து விட்டாள் அவள் . ஒருவேளை அவளுடைய சொப்பனங்கள் “ இயேசுவை பாவமற்றவர் " என்பதனை நிரூபிக்க மற்றொரு உபகரணமாக இருந்தாலும் , அதிகாரப் பெருமை , தன் கணவனை கூக்குரல் செய்யும் ஜனத்தின் நெருக்கம ் ( Peer presure ) கெடுத்து விடக் கூடாது என்பதில் கவனம் செலுத்துகிறாள் .
இன்றைக்கும் , அரசு பணியில் , நீதி துறையில் உள்ளவர்களின் பக்தியுள்ள மனைவிகள் இதனை நிறைவேற்றக் கூடுமே . தன் கணவன் அதிகாரத்தினை துர் பிரயோகம் செய்து விடாதபடியும் , சுற்றியுள்ளோரின் அழுத்தத்தினால் அநீதி செய்து லஞ்சம் வாங்கி குடும்பத்திற்குச் சாபத்தினைக் கொண்டு வந்துவிடக்கூடாதே என்பதில் கவனமாக இருந்து எச்சரிப்பைத் தரமுடியுமே ; தேவன் அப்படிப்பட்ட மனைவிகளை எழுப்புவாராக
்
கிடைத்துவிட்டதை மாற்ற நினைக்காதீர்கள்
மேலே குறிப்பிட்ட இரண்டு வகையான தம்பதிகளும் ( தேவபக்தி கொண்ட கணவன் பக்தி அற்ற மனைவி , தேவ பக்தி கொண்ட மனைவி பக்தி அற்ற கணவன் ) உடையவர் , மற்றக் குடும்பங்களைப் பார்த்து , எனக்கு அப்படிப்பட்ட கணவர் கிடைத்திருந்தால் அல்லது அப்படிப்பட்ட மனைவி கிடைத்திருந்தால் நலமாயிருந்திருக்குமே என எண்ணி எண்ணி ஏங்கி தன் மனைவியின் அல்லது கனவனிடத்தில் மற்றவர்களை வைத்து கற்பனைசெய்து கலங்கித் தவித்து தம்முடைய வாழ்க்கையை சீரழித்துக் கொண்டவர்களும் உண்டு . நீ மனைவியோடே கட்டப்பட்டிருந்தால் அவிழ்க்கப்பட வகை தேடாதே ( 1கொரி 7 : 27 ) .
மாறாக , உடன் எவ்விதத்திலேயோ இணைக்கப்பட்ட அவர்கள் கிறிஸ்துவைத் தேடவும் தேவபக்தியில் நடக்கவும் உதவி செய்து , இரண்டுபேரும் தேவபக்தியாய் நடக்கவும் இருவரும் கர்த்தரிட்ட சகல கற்பனைகளின்படியேயும் நியமங்களின்படியேயும் குற்றமற்றவர்களாய் நடந்து தேவனுக்கு முன்பாக நீதியுள்ளவர்களாக ( லூக் 1 : 6 ) மாறினால் ,
கிறிஸ்துவின் முதல் வருகைக்கு ஜனத்தை ஆயத்தம் செய்ய அனுப்பப்பட்ட யோவான் ஸ்நானகனின் பெற்றோரைப் போல இரண்டாம் வருகைக்கு ஜனத்தை ஆயத்தப்படுத்த வழி உண்டாக்க முடியுமே . தேவனுடைய செயலைக் கவனித்துப்பார் அவர் கோணலாக்கினதை நேர்மையாக்கத்தக்கவன் யார் ( பிர 7 : 13 ) .
நாம் உயிரோடிருக்கும் நாளெல்லாம் பயமில்லாமல் அவருக்கு முன்பாகப் பரிசுத்ததோடும் , நீதியோடும் ஊழியஞ் செய்யத்தானே நமக்கு கிறிஸ்துவின் அன்பு அருளப்பட்டிருக்கிறது ( லூக் 1 : 71 ) . அந்தகாரத்திலும் மரண இருளிலும் உட்கார்ந்திருக்கிறவர்களுக்கு வெளிச்சம் தர , நம் குடும்பத்தினையும் தேவன் தெரிந்து கொண்டுள்ளார் என்கிற நினைவு நம்மை ஆட்கொள்ள , நானும் என் வீட்டாருமோவெனில் கர்த்தரையே சேவிப்போம் என்று முழக்கமிடச் செய்யுமே ( யோசு 24 : 15 ) .
அது நம்மைச் சுற்றியிருக்கிறவர்களையும் அயலகத்தாரையும் சுற்றத்தாரையும் ஆண்டவரைச் சேவிக்கத் தூண்டும் சக்தியாய் மாறிவிடுமே . கிடைத்த மனைவியை அல்லது கணவனை தேவனுக்குரியவர்களாய் மாற்றும் பணியினை செய்ய தூய ஆவியானவர் உதவுவார் .
நீயும் உன் வீட்டாரும் என்பது அவருடைய வாக்குத்தத்தம் ( அப் 16 : 31 ) ஒரு குளம்பும் பின்வைக்கப்படுவதில்லை ( யாத் 10 : 26 ) .
ஒருமனமாகிய இருமனம்
இணைக்கப்பட்ட இருவரும் தங்களை தேவன் இணைத்த நோக்கத்தினையும் , அதை நிறைவேற்ற வேண்டிய புரிந்து கொள்ளுதலையும் அறிந்து , இணைந்து வாழ ஆரம்பித்தால் அக்குடும்பம் ஒரு குட்டிப் பரலோகமே . அதில் இடர்கள் வரலாம் . பிரச்சனைகள் எழலாம் . போராட்டங்களைச் சந்திக்க நேரிடலாம் . சத்துருவை முகமுகமாய் சந்திக்க நேரிடலாம் , இல்லாமை , ஏழ்மை என்கிற மலைகளைத் தாண்டிச் செல்ல நேரிடலாம் ; என்றபோதிலும் , அது அவர்கள் உறவையோ , தேவ நோக்க நிறைவேறுதலையோ பாதிக்கப் பலனற்றவை .
ஆண்டவர் அவர்களோடு இணைந்து செயல்படுவதால் ஆறுதலும் , தேறுதலும் நிறைந்த ஒரு பூங்காவாக அது காட்சியளிக்கும் . மற்றவரின் பழிச்சொற்கள் பாதகத்தைக் கொண்டு வராமல் இருவரையும் தேவ சமூகத்திற்கே அடிக்கடிக் கூட்டிச்சேர்க்கும் , சில நேரங்களில் வாக்கு வாதங்கள் உண்டாகலாம் ; ஆனால் , அவை தேவ பலத்தால் மேற்கொள்ளப்படும் ; தவறாகப் புரிந்து கொள்ளுதல் உண்டாகும் வாய்ப்புகளும் வரலாம் ,
ஆனால் இருவரும் வெளிச்சத்தின் பிள்ளைகள் ஆனதால் சீக்கிரத்தில் அந்த திரை அகற்றப்படும் . முடிவுகள் ஒருவரையொருவர் சில காலம் வரை பாதிக்கலாம் . ஆனால் இறுதி வெற்றி இருவருக்குமே உரியதாக மாறிவிடும் , -
தேவபயம் , தேவ பக்தி அக்கம் பக்கத்தவரையும் பாதிக்கும் . சந்ததி சந்ததியாய் ஆசீர்வாதம் பெறும் . இருவரும் இணைந்து இல்லறத்தினைக் கட்டுவதால் , விட்டுக்கொடுத்தல் , இசைந்து போகுதல் , தியாக சிந்தை , நேசப்பெருக்கம் , மன்னிக்கும் சுபாவம் , ஒருவருக்காக ஒருவர் கவலை கொள்ளுதல் மற்றும் நற்கனிகளால் நிறைந்திருக்கும் சாந்தமே தாராளமாகக் காணப்படும் . களிப்பின் சத்தமும் மகிழ்ச்சியின் சத்தம் ஆடல் பாடலின் சத்தமும் அறைகளில் நிறைந்து காணப்படும் . அலங்கத்திற்குள்ளே சமாதானமும் அரண்மனைக்குள்ளே சுகமும் தங்கும் ( சங் 122 : 7 ) .
எதிர்காலத்தினைக் குறித்த பயமில்லாமல் , என் ஆண்டவர் எங்களில் கிரியை செய்து , எங்களைக்கொண்டு செய்ய வேண்டியவைகளை செய்து முடிப்பார் என்ற தரிசன நிறைவேறுதலைக் காண வாஞ்சிக்கும் வாஞ்சை மிஞ்சுவதினால் , திருப்தியான வாழ்வும் , தீங்கற்ற நினைவுகளும் , திக்கற்று திரியும் நிலையும் இல்லா நிம்மதியும் நிறைந்த வாழ்வாகும் ; அப்படி வாழ்ந்தவர்களை சற்று கவனிப்போம் .
.
17 சீர்கெட்ட பூமியில் சீரான குடும்பம்
பக்தி நிறைந்த
கணவனும் மனைவியும் .
. நோவா
நோவாவைக் குறித்து நமக்கு பல தகவல்களைத் தரும் வேதம் , அவனுடைய இணைந்து போகும் மனைவியைக் குறித்து அதிகம் பேசவில்லை . ஆயினும் , 950 வருடம் வாழ்ந்த நீதிமானாகிய மனிதன் ஒருவனோடு இவளும் நீண்ட காலம் வாழ்ந்திருக்க வேண்டும் ( ஆதி 9 : 29 ; ஆதி 6 : 9 ) , அவன் தேவனோடு சஞ்சரித்து வந்ததற்கு இவளுடைய ஒத்துழைப்பு எத்தனையாய் இருந்திருக்க வேண்டும் . தேவக் கட்டளையைத் தலைமேல் கொண்டு ( ஆதி 6 : 22 ) கிட்டத்தட்ட 1 , 35 , 560 ஆடுகளை ஏற்றிச்செல்லக்கூடிய பெரிய பேழையை இயந்திரங்கள் இல்லாத நாட்களில் உருவாக்கின் அவனுக்கு அவள் எத்தனையாய் துணை நின்றிருக்கவேண்டும் .
கூடவே , மூன்று கீழ்ப்படியக் கூடியவர்களும் , தகப்பனுடைய தரிசனத்தை நிறைவேற்ற இணைந்து செயல்பட்ட குமாரர்களை அவள் எத்தனை கரிசனையாய் வளர்த்திருக்கவேண்டும் . அவர்கள் திருமணம் செய்த பெண்களிடத்தில் எத்தனை அன்பாய் நடந்துகொண்டு , குடும்ப ஒற்றுமைக்காய் , இணைக்கும் பாலமாய் செயல்பட்டிருக்க வேண்டும் என்பதனை நினைக்குங்கால் இவளின் மாபெரும் சாதனை தெளிவாகத் தெரியும் .
தன் புருஷனுக்குத் தேவன் தந்த பணியினையோ கட்டளைகளையோ அவள் கேள்வி கேட்டதேயில்லை . மாறாக தேவமனிதன் இவர் தேவ ஆலோசனையை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை அவளுக்கு இருந்தது . நிரம்பி வழியும் பூமியில் ( ஆதி 6 : 1 )
தேவனுக்குப் பிரியமற்ற இனச்சேர்க்கையினாலும் , பொல்லாத ஆவிகளின் ஈடுபாடுகளினாலும் தங்களைக் கெடுத்துக்கொண்ட பெண்கள் நிறைந்த உலகில் ( ஆதி 6 : 2 , 4 ) , இராட்சதர்களை உருவாக்கி உலகுக்கு அழிவைக் கொண்டு வரக்காரணமாயிருந்த பெண்களைக் கொண்ட பூமியில் , தொடர்ச்சியாக இருதயத்தின் நினைவுகளில் பொல்லாதவைகளை நினைக்கும் பூமியில் ( வச 5 ) , தேவனே மனம் சலித்துப்போ ் இருந்தவேளையில் ( வச 6 ) , கொடுமையினால் ( வச 11 ) நிறைந்த உலகில் , தங்களை தேவனுக்கு முன்பாக ஏற்றுக்கொள்ளக் கூடியப் பாத்திரங்களாக குடும்பமாக தங்களைக் காத்துக்கொண்ட இந்த தம்பதியர் எத்தனை விசேஷமானவர்கள் .
தேவனே அவர்களோடு ஒரு உடன்படிக்கை செய்ய வாஞ்சிக்கும் அளவுக்கு பயபக்தியுள்ள குடும்பமாகத் தன்னைக் காத்துக்கொண்டவர்கள் இவர்கள் ( வச 18 ) .
அவபக்தியுள்ளவர்கள் நிறைந்த உலகில் ( 2பேது 2 : 5 ) நீதியைப் பிரசங்கித்த ஊழியக்காரனின் மனவிையின் பங்கையும் மறக்கமுடியாது . - இத்தனைப்பெரிய வேலையைச் செய்வதற்கு தங்களுக்கு | பெலன் உண்டா ? என்ற கேள்வி எழவில்லை . விசுவாசம் மேலோங்கி நிற்கும் வாழ்வில் இது இலகுவானதே ( எபி 11 : 7 ) . அத்தனை மிருகங்களோடு கூட , பறவைகளோடு கூட , ஒரு வருடம் பேழைக்குள் வாழ்வதற்கு அக்குடும்பத்திற்கு எத்தனை பொறுமை , தாங்கும் சக்தி இருந்திருக்கவேண்டும் . எத்தனை விதவிதமான பறவை மிருகங்களை கண்காணிக்க அவர்களுக்கு எத்தனை கஷ்டமாய் இருந்திருக்க வேண்டும் . ஆனால் கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறோம் என்ற நினைவு அத்தனையையும் மாற்ற வலியது அல்லவா ! குடும்பக் கட்டுபாடு , கர்த்தருடைய வேலையில் முனைந்து நின்ற அவர்களுடைய குமாரருக்கும் மருமக்களுக்கும் 120 வருடம் பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ளக் கூட மனதற்றவர்களாக மாற்றியிருந்ததனைக் கண்டு நான் வியப்படைகிறேன் ( ஆதி 10 : 1 ) .
தன் நீதியுள்ள வாழ்க்கை , அது நீண்டவாழ்க்கை ஆயினும் தன் குடும்பத்தாரை நீதிக்குள் வழிநடத்திய வாழ்க்கை ( எசே 14 : 14 ) . தீர்க்க தரிசியான நோவா ( எபி 11 : 7 ) வருங்காலத்தினை நன்கு அறிந்தவன் . 120 வருட ஊழியத்தில் ஒருவரையும் ஆதாயம் செய்ய கூடாமற் போனாலும் , சோர்ந்து போகாமல் நீதியைப் பிரசங்கிக்க அவனுக்கு பெலன் இருந்ததற்கு , அவன் பயபக்தியுள்ள மனைவியும் மக்களும் , மருமக்களும் காரணமாயிருந்திருக்க வேண்டும் ( 2 பேது 2 : 5 ) . ஆபேலுக்குப் பதிலாக ஆதாமுக்கு பிறந்த சேத் - ஐ ( ஆதி 4 : 2 கண்டவன் நோவா ;
அப்போது அவனுக்கு வயது 14 தாக தேவனோடு நடந்த பின்னர் கானாமற் போன ஏனோக்கையும் அவன் நன்கு அறிவான் . அவன்தானே வரும் நியாயத்தீர்ப்பைக் - அறிவிக்கும் வண்ணம் தன் மகனுக்கு மெத்தூசலா என்று பெயரிட்டான் ( ஆதி 5 : 21 ) மெத்தூசலா என்பதற்கு " இவன் மரிக்கும் போது அது வரும் ” என்று அர்த்தம் . தன்னையும் , மனைவி பிள்ளைகளையும் அவர்கள் காத்துக்கொணடதற்கும் கர்த்தருடைய கட்டளைகள் காத்துக்கொண்டதற்கும் காரணம் " கர்த்தருடைய கண்களில் கிரு பெற்றதினால் " அல்லவோ ( ஆதி 6 : 8 ) . கர்த்தருடைய கிருபையைப பெற்றக் குடும்பமாக மாற கணவனும் மனைவியும் தேவபக்தியுள்ளவர்களாய் நடக்க வேண்டிய அவசியத்தினை உணருவோம் .
மிருகங்களும் பறவைகளும் தாங்களாகவே புறப்பட்டு , ஜோடி ஜோடியாக இவர்களைத் தேடி வந்ததே . மனிதர் செய்ய மறுத்ததனை , மிருகங்களும் பறவைகளும் செய்து தண்டனையிலிருந்து தப்பிக்கொண்டனவே . இன்று பூமியில் விதைப்பும் , அறுப்பும் , சீதனமும் , உஷ்ணமும் , கோடை காலமும் , மாரிகாலமும் , பகலும் , இரவும் , ஒழியாமல் இருப்பதற்குக் காரணமான இந்த பக்தியுள்ள குடும்பம் வாழ்க .
.
18 ஆபத்துக்கஞ்சாத ஆதிப்பெற்றோர்
. பக்தி நிறைந்த
கணவனும் மனைவியும் .
ஆபிரகாம்------சாராள்
இணைந்து போகும் பெண் , தைரியசாலியாக இருந்தால் தானே அந்நிய தேசத்திலும் ஆபத்திற்குப் பயப்படாமல் செயலாற்ற முடியும் ( 1பேது 3 : 6 ) .
உன் தகப்பனாகிய ஆபிரகாமையும் சாராளையும் நோக்கிப்பாருங்கள் என்று நீதியைப் பின்பற்ற வாஞ்சிக்கிறவர்களையும் , கர்த்தரைத் தேடுகிறவர்களையும் , ஆண்டவரே அறை கூவி அழைக்கிறாரே ( ஏசா 51 : 1 , 2 ) ,
தன் தகப்பனுக்கு பிறந்த ஒன்று விட்ட தாயின் மகளைத் தான் ஆபிரகாம் திருமணம் செய்திருந்தான் அந்த நாட்களில் அது பொதுவாகக் காணப்பட்டது ( ஆதி 20 : 12 ) . தன் புருஷன் உயிரோடு இருப்பதுதான் தனக்கு மேன்மை என்பதனை அறிந்திருந்த சாராள் , தனக்கு ஆபத்து என்றாலும் பார்வோனின் அரண்மனையிலும் , அபிமெலேக்கின் அரண்மனையிலும் தேவ பாதுகாப்பையே தன் பாதுகாப்பாகக் கொண்டு நுழைகிறதை நாம் காண்கிறோம் ;
அதினிமித்தம் தேவனும் பெலனற்ற ஆபிரகாமுக்கு உதவும் வண்ண ம் ( ஆதி 12 : 17 ; ஆதி 20 : 17 ) இறங்கி வந்து கிரியை நடப்பிக்கிறார் . " எப்படியாவது தன் வீடு கட்டப்படட்டும் " என்ற நோக்கில்தான் சாராள் ஆகாரை ஆபிரகாமுக்கு தருகிறாள் ( ஆதி 16 : 2 ) ;
ஆயினும் , ஆபிரகாமும் இணைந்தே இதில் செவி கொடுக்கிறான் . குடும்பச் சமாதானமே முக்கியம் என்பதில் ஆபிரகாம் கவனமாயிருக்கிறான் ( ஆதி 16 : 6 ; ஆதி 21 : 14 ) ,
“ தன் பிள்ளைகளுக்கும் , தனக்குப் பின் வரும் தன் வீட்டாருக்கும் நீதி நியாயத்தைச் செய்யக் கற்றுக்கொடுக்க கவனமாயிருப்பான் " என்று தேவனே நம்பக்கூடியவன் ஆபிரகாம் ( ஆதி 18 : 19 ) .
எத்தனை வயதாயினும் , எவ்வளவு வேலையாட்கள் வீட்டில் இருந்தாலும் , ( ஆதி 18 : 12 ஆதி 14 : 14 ) தன் புருஷன் கொடுக்கும் பெரிய வேலையை ( மூன்று படி மாவை அப்பமாக்கும் அவசரவேலையை ) மனதார ஏற்றுக்கொண்டு செய்து முடிக்கும் கீழ்ப்படிதல் கொண்டவள் சாராள் ( ஆதி 18 : 6 ) ,
வீட்டில் அடிமைப் பெண் ஆகார் உண்டு என்பதனை நினைவு கூறுங்கால் , கணவனுக்குக் கீழ்ப்படியக் கற்றுக்கொண்டிருந்த சாராளுக்கு அடிமையை இந்த சமயத்தில் உபயோகிக்கத்தானும் விருப்பமில்லை
கர்த்தர் உமக்குத் தரினமாகிக் காண்பிக்கிற தேசத்தின் ஆபத்துக்களை நானும் சந்திக்க ஆயத்தம் என்பதே சாராளின் ஒப்புக்கொடுத்தல் ( ஆதி 12 : 4 , 5 ) . வயதானபோதும் அழகு குறையாதவள் அவள் ; வெளியில் மாத்திரம் அல்ல உள்ளேயும் தான் . அயல்நாடுகளில் சுற்றித்திரியும் போது தேவன் தன்னைக் காக்க வல்லவர் என்பதனை விசுவாச வீரனாகிய ஆபிரகாம் நம்ப முடியவில்லை ; அந்த நேரத்தில் அவன் விசுவாசம் பெலவீனப்படுகிறது . தனக்குப்பிள்ளைத் தரமுடியும் என்கிற காரியத்தில் சாராள் விசுவாசத்தில் பெலவீனப்பட்டதினால்தான் ஆகாரை ஆபிரகாமுக்குத் தருகிறாள் .
ஆக மொத்தத்தில் ஒருவர் பெலவீனப்படும் போது மற்றவரின் பெலன் அதனைப் பூர்த்தி செய்வதனை இந்த தேவ பக்தியுள்ள தம்பதியில் நாம் காணமுடியும் அப்படித்தானே , அதற்காகத்தானே தேவன் தம்பதியரை இணைத்திருக்கிறார் ; ஒருவர் குறைவில் மற்றவரின் நிறைவு பூர்த்தி செய்யப் போதுமானது அல்லவா !
ஆபிரகாம் தன் மகன் ஈசாக்கைப் பலி செலுத்தச் சென்றபோது , அவர்களைத் தேடி சாராள் எபிரோனுக்கு வந்தாள் என்றும் , வந்த இடத்தில் சாத்தான் கொடுத்த ஒரு தரிசனத்தில் தன் மகன் பலியாக்கப்பட்டுவிட்டான் என்பதனைக் கேட்ட அவள் வேதனையுற்று , பின்னர் தேவ தரிசனத்தினால் தேற்றப்பட்டு சந்தோஷத்தின் மிகுதியினால் இறந்து போனாள் என்றும் பாரம்பரியக் கதைகள் கூறுகிறது
யாசேர் புத்தகத்தில் காணப்படுகிறது . யோசு 10 : 13 ; 2 சாமு 1 : 18 ) . எனவேதான் , ஆபிரகாம் அவள் இறந்தபோது கேள்விப்பட்டு எபிரோனுக்கு வந்தான் ( ஆதி 23 : 2 ) ; இதனை வேதம் நமக்குச்சொல்லவில்லை . ஆயினும் , மனம் பொருந்தி அந்நிய தேசத்தில் வாழ்ந்த இந்த தம்பதியர் பூமிக்கு ஆசீர்வாதத்தினைக் கொண்டு வந்தவர்கள் . விக்கிரகக்காரர்களாக இருந்தவர்கள் , ஜீவ தேவனைக் கண்டு கொண்டது மல்லாமல் , அவரைத் தொழுது சேவிக்கும் பெரும் கூட்டத்தை எழுப்பக் காரணமாக அமைந்துவிட்டனரே .
தேவனுடைய இஸ்ரவேலர் என்றும் ( கலா 6 : 16 ) , ஆபிரகாமுக்கு உண்டான ஆசீர்வாதம்தானே கிறிஸ்து இயேசுவினால் புறஜாதியான நமக்கு உண்டாயிற்று ( கலா 3 : 14 , 29 ) , சுயாதீனமுள்ளவளுக்கே நாம் பிள்ளைகள் என்று சாராளையும் உள்ளடக்கிற்று சுவிசேஷம் ( கலா 4 : 31 ) .
இப்படி அறியாத நம்மையும் ஆசீர்வாதத்திற்கு உரியவர்களாக மாற்ற தேவன் பயன்படுத்திய இவர்களின் குடும்ப வாழ்வும் ஆவிக்குரிய வாழ்வும் நமக்கு எத்தனை சவால் ( எபி 11 : 11 , 18 ) . இந்த இணைந்த வாழ்வும் , ஒருவர் குறைவில் ஒருவரின் உதவியும் நம்மை உந்திச் செல்லும் சக்தியாக மாறுவதாக . கீழ்படிய தயங்கவில்லை , சோதிக்கப்படும் போது தேவனுக்குப் பயந்தவர்கள் என்பதனை விளங்கப்பண்ணினார்கள் ( ஆதி 22 : 12 , 18 ) இவர்கள் . இதுவே நம்மையும் இயக்குவிக்கட்டும் .
19 கர்த்தரை மையமாகக் கொண்ட கணவன் மனைவி
( பக்தி நிறைந்த கணவனும் மனைவியும்)
ஈசாக்கு-------ரெபேக்காள்
திருமணங்களில் ஈசாக்கு ரெபெக்காளைப் போல வாழுங்கள் என்று வாழ்த்துவது வழக்கம் . தேவபக்தியுள்ளவன் அவன் ( ஆதி 24 : 63 ) ; தியான வாழ்க்கையைக் கொண்டதினால் தேவன் தனக்குச் சரியான மனைவியைத் தருவார் என்ற உறுதியான நம்பிக்கை இருந்ததோடு , தேவ வழி நடத்துதலை நன்றாகப் புரிந்து கொண்டு ரெபெக்காளை எலியேசர் கூட்டி வந்த போது மனைவியாக ஏற்றுக்கொண்டு நேசித்தவன் ( ஆதி 24 : 67 ) .
தேவ தரிசனமும் வழி நடத்துதலும் இவனுக்குக் கிடைத்ததுமாத்திரமல்லாமல் ( ஆதி 26 : 2 - 5 ; 24 , 25 ) , கர்த்தர் அவனோடு இருப்பதனை சத்துருக்களும் அயலகத்தாரும் கண்கூடாகக் கண்டனர் . மற்றவர்களிடத்தில் சண்டையிடத் தெரியாதவன் , உபத்திரவம் தருபவர்களை தவிர்ப்பவன் ( ஆதி 26 : 18 - 22 ) , ஆனால் ருசியான சாப்பாடு என்றால் உயிர் . தீர்க்கதரிசன வார்த்தைகளைக் கொண்ட ஆசீர்வாதம் கூற வல்லவன் ( ஆதி 27 : 7 ) , மருமக்களால் அவதிப்பட்டவன் ( ஆதி 26 : 35 ) , மனைவியை வயதானக்காலத்திலும் நேசிக்கக் கற்றுக்கொண்டவன் ( ஆதி 26 : 8 ) , அலட்டாத வாழ்வு .
தன்மனைவிக்கு 20 ஆண்டுகள் குழந்தைகள் இல்லாதிருந்த போதிலும் வேறொரு மனைவியைத் தேடாமல் , தேவனிடத்தில் விண்ணப்பம் செய்து பதில் பெற்றுக்கொண்டவன் ( ஆதி 25 : 21 ) . மனைவி ரெபெக்காளோ பயங்கர சுறுசுறுப்பானவள் , தனக்குத் தண்ணீர் கேட்ட எலியேசரிடத்தில் “ உமக்கும் உம் ஒட்டகங்களுக்கும் தண்ணீர் வார்ப்பேன் " என்று கூறி பதிலுக்குக் கூடக் காத்திராமல் ஒட்டகங்களுக்குத் தண்ணீர் வார்த்தவள் . ஒரு ஒட்டகம் 100 லிட்டர் தண்ணீ ர் குடிக்க வல்லது எலியேசரின் 10 ஒட்டகங்களுக்கு அதாவது 1000 லிட்டர் தண்ணீர் மொண்டு ஊற்றுகிறாள் . அவளுக்கு அப்போது வயது 13 அல்லது 14 என றுதான் பாரம்பரியம் கூறுகிறது ( ஆதி 24 : 20 ) , கர்த்தரின் வழி நடத்துதலை எலியேசர் சொல்லக் கேட்டபோது , அவரோடு புறப்பட அறியாத தேசத்திற்குப் போக ஆயத்தமாகிவிட்டாள் . கர்த்தரால் வந்தது என்ற வார்த்தைகளே இவளை இயக்கி விடுகிறது ( ஆதி 24 : 50 ) . கணவன் துக்கத்தை எளிதாக மாற்றி விடுவாள் அவள் ( ஆதி 24 : 67 ) .
கர்ப்பத்தில் போராட்டம் வந்தபோது கர்த்தரிடத்தில் விசாரிக்கவே போகிறாள் . வளர்ந்தது விக்கிரக ஆராதனை செய்வோர் மத்தியில் . ஆனால் வாழ்க்கையில் கர்த்தரைக் கண்டு கொண்டபோது அவரையே சார்ந்திருக்கக் கற்றுக்கொண்டாள் ( ஆதி 25 : 22 ) .
இரண்டு பேருக்கும் இரண்டு பிள்ளைகளின் மேலும் தனித்தனிப் பிரியம் . அதினிமித்தம் சில வேளைகளில் பாரபட்சம் காட்டுகின்றனர் ( ஆதி 25 : 28 ; ஆதி 27 : 6 - 11 ) . நன்றாக மேக்அப் செய்யக் கற்றிருந்தாள் ரெபெக்காள் . சமையலில் கில்லாடி , கணவனை வசீகரிக்க அவளுக்குத் தெரியும் ( ஆதி 27 : 9 ) , குறுக்கு வழியில் வந்த ஆசீர்வாதம் நீண்ட நாட்களுக்குச் செல்லாது என்பதை சீக்கிரத்திலேயே கண்டுகொண்ட ரெபெக்காள் உடனடியாக அதற்கு நிவாரணத்தையும் செய்யத் துரிதமாக செயல்படுகிறாள் ( ஆதி 27 : 42 - 2 ) .
யாக்கோபு அழைத்து வந்த குடும்பத்தினரை இவள் கண்டதாகத் தெரியவில்லை ; ஆனால் நிம்மதியிருந்தது . அவளின் அவசரம் பிரியமான மகனைப் பிரிய நேரிட்டது ; அது துக்கத்தை வரவழைத்துத் தந்திருக்க வேண்டும் .
ஆனால் தேவனை நம்பி அவனை அனுப்பித்தருகிறாள் ( ஆதி 28 : 3 , 7 ) . “ சகோதரியே நீ கோடாகோடியாய்ப் பெருகுவாயாக . உன் சந்ததியார் தங்கள் பகைஞருடைய வாசல்களைச் சுதந்தரித்து கொள்வார்களாக ” என்று தேவனையும் தேவ திட்டத்தினையும் சரியாக புரிந்துகொள்ளாத லாபான் குடும்பத்தார் வாழ்த்தின் வாழ்த்தினை வழிவழியாய் வாய்க்கப்பண்ணின கர்த்தரைப் பற்றிக்கொண்டவர்கள் இந்தத் தம்பதியர் ( ஆதி 25 : 21 , 22 ) .
பின்னா மோசேயும் கூட “ உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களைப் பெருகப்பண்ணினார் . இதோ இந்நாளில் நீங்கள் வானத்த நட்சத்திரங்களைப்போலத் திரளாயிருக்கிறீர்கள் . நீங்கள் இப்போ இருக்கிறதைப் பார்க்கிலும் ஆயிரமடங்கு அதிகமாகும்படி உங்க பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சொல்லியபடி உங்களை ஆசீர்வதிப்பாராக ” என்றான் ( உபா 1 : 10 , 11 ) .
கர்த்தரை நம்பிக்கை வைத்து அவரையே சார்ந்து வாழ்வோரின் வாழ்கை சமாதானமே . போராட்டங்கள் இல்லை , புரிந்து கொள்ள மிகுதியாய் உண்டு .
20 ஆபத்தை முன்னறிந்த ஆத்துக்காரி
( பக்தி நிறைந்த கணவனும் மனைவியும்)
மோசே--சிப்போராள்
தேவனால் தெரிந்தெடுக்கப்பட்டு தெளிவாகப் பாதுக்காக்கப்பட்ட மோசே அவசரப்பட்டதின் நிமித்தம் தன் உயிரைக்காக்க ஓட வேண்டிய அவசியம் ஏற்பட்டது .
ஆபிரகாமிடத்தில் ஆண்டவர் 400 வருடங்கள் என்று கூறினார் ( ஆதி 15 : 13 ) . ஆனால் , அவனோ அதனை 430 வருடங்களாக மாற்றிவிட்டான் ( யாத் 12 : 41 ) ,
இதனை 100 வருடங்கள் 130 வருடங்கள் என்று கணக்கிடுகிறவர்களும் உண்டு ; கலா 3 : 17 - ஐ மையமாகக் கொண்டு பேசும் இவர்கள் , அது இரண்டு வாக்குத்தத்தத்திற்கும் இடைப்பட்ட வருடங்கள் என்று வாதிடுவார்கள் . காரியங்கள் எப்படி இருந்தாலும் 30 ஆண்டுகள் மோசே ஓடிப்போனபடியினால் ஏற்பட்ட தாமதமே .
ஆனால் , தேவன் விடுவதாக இல்லை , தேடிவந்தார் ; மோசேயின் வறட்டு வாக்குவாதங்கள் ஆண்டவரின் அழைப்பின் முன் நிற்க முடியவில்லை ( யாத் 3 : 4 - 10 , 11 , 13 ; 4 : 1 , 10 ) ;
தேவனே அதில் வெற்றிப் பெற்றார் .
இடைப்பட்ட காலத்திலும் நடந்த திருமணத்தில் இணைக்கப்பட்டிருந்த அமைதிப்பெண் சிப்போராள் ( யாத் 2 : 21 ) , தங்களுக்கு உதவினவனை தகப்பன் உத்தரவு இல்லாமல் வீட்டிற்குக் கூட வரவழைக்க விரும்பாத பெண்களைக் கொண்டக் குடும்பத்தில் பிறந்த மீதியான் தேசத்து ஆசாரியனின் மகள
அவள் . மோசே தன்னோடு தங்கியிருந்த நாட்களில் தன் குமாரத்திகளில் ஒருத்தியை அவன் மனைவியாகக் கொடுத்தான் . மோசே அவளைத் திருமணம் செய்தபோது மீதியான் தேசத்தில் 37 வருடங்கள் சேவித்து விட்டான் எனவும் , மோசே எகிப்துக்குத் திரும்பிபோகும் போது அவனுடைய இரண்டு குமாரர்களும் மிகவும் சிறியவர்கள் என்று நம்புவோரும் உண்டு . அங்கே அவனுக்கு " கெர்சோம் " மற்றும் “ எலியேசர் ” என்ற இரண்டு குமாரர்கள் பிறந்திருந்தார்கள் ( யாத் 18 : 3 , 4 ) .
சின்னஞ்சிறுக் குடும்பமாய் , சமாதானமாய் திருப்தியோடு வாழ்ந்த அவனைத்தான் தேவன் திரும்பவும் அழைத்து ஜனத்தின் வேதனையின் துயர் தீர்க்க தீவிரம் காட்டும் கர்த்தர் ( யாத் 3 : 7 ) இழுத்து வருகிறார் . இணக்கத்தோடு தான் மோசே பிரயாணத்தினை மேற்கொள்கிறான் ( யாத் 4 : 18 )
ஆனால் , " வழியில் தங்கும் இடத்தில் கர்த்தர் அவனுக்கு எதிர்ப்பட்டு அவனைக் கொல்லப் பார்த்தார் " என்ற அதிர்ச்சித் தரும் வசனத்தை வாசிக்க நேரிடுகிறது ( யாக் 4 : 24 ) ' ஊழியத்திற்குப் புறப்பட்டவன் , தான் செய்ய வேண்டிய கடமைதனைச் செய்யாதவனாய் , தான் விருத்தசேதனம் செய்திருக்கவேண்டிய மகனை ( உடன்படிக்கைக்கு உட்படுத்தியிருக்க வேண்டும் ) உதாசீனப்படுத்தியவனைத் தேவன் இடை மறிக்கிறார் ( யாத் 4 : 26 ) . இதுவரை அப்படிப்பட்டக் காரியத்தினைச் செய்ய மீதியான் தேசத்துப் பெண் ஒருவேளை ஒத்துக்கொள்ளாமல் இருந்திருக்கலாம் . ( மீதியானியர்கள் தேவனை ஆராதிக்கிறவர்களாய் இருந்த போதிலும் தேவ உடன்படிக்கைக்கு உட்பட்டதில்லை என்பதனை கவனியுங்கள் ;
அவர்கள் ஆபிரகாமின் மறுமனையாட்டியாகிய கேத்தூராளின் வழியில் வந்தவர்கள் தான் ஆதி25 : 2 , 4 ) . இதைப்பற்றி மோசேயின் கவனக்குறைவோ , சிப்போராளின் உடன்பாடு இல்லா நிலையோ தடுத்திருக்கலாம் . ஆனால் , மோசேயை தேவன் கொல்லப் பார்க்கும் சூழ்நிலையில் சிப்போராளுக்கு அது தெளிவாகத் தெரிகிறது . உடனே அவள் தன் மகனின் நுனித்தோலை எடுத்து எறிந்து மோசேயைக் காப்பாற்றுகிறாள் ( யாத் 4 : 25 , 26 ) .
அவளுடைய இந்த சமயோகித புத்தி அவனை மாத்திரமல்ல தேவ நோக்கத்தினை நிறைவேற்ற போதுமானதாக உள்ளது . இந்த சம்பவத்தினால் மிகவும் பயந்து போய்விட்ட மோசே , சிப்போராளை தன் தகப்பன் வீட்டிற்குத் திரும்ப அனுப்பினான் என்று நம்புகிறவர்கள் உண்டு ( யாத் 18 : 1 , 2 ) .
இல்லை , எகிப்திலே தேவ கோபம் இறங்கினபோது அந்த ஆபத்து தன் குடும்பத்தினரை பார்வோன் குறிவைக்க ஏதுவாகிவிடலாம் என்று கூறி அவர்களை திரும்ப அனுப்பிவைத்தான் என நம்புவோரும் உண்டு .
எப்படியாயினும் உரிய நேரத்தில் வரும் ஆபத்தினைக் காணும் கண்களை கொண்ட இந்த சிப்போராளைப் போல கணவனைப் பேணி பாதுகாக்க இணைந்து போகும் பெண்களை நம்முடைய உள்ளம் நாடுகிறது . ஊழிய அழைப்புப் பெற்றவனை அனைத்து விதத்திலும் அரவணைக்கவும் , இணைந்து இணங்கி கருத்து வேற்றுமைகளை மாற்றிக் கொள்ளவும் அறிந்திருக்க வேண்டும் ; அனுசரித்துப் போகவும் கற்றிருக்கவேண்டும் . அது குடும்பத்தையும் தேவ நோக்கத்தினையும் காக்குமல்லவா !
21 பிந்தின நற்குணமும் நிறைவான பலனும்
( பக்தி நிறைந்த கணவனும் மனைவியும்)
ரூத் -போவாஸ்
ஆகாது என்று தள்ளப்பட்டக் குடும்ப பின்ணணியைக் கொண்ட ரூத் ( ருத்1 : 4 ; உபா 23 : 3 ) , எதிர்காலத்தைக் கையாளும் தேவனை உறுதியாய் பிடித்துக் கொண்டபடியினாலும் ( ரூத் 2 : 12 ; 1 : 16 ) , தனக்கு நம்புவதற்கு ஏதுவற்ற சூழ்நிலை காணப்பட்ட போதிலும் ( ரூத் 1 : 2 , 12 ) ,
உடன் இருந்தவள் முன்னோடியாய் வேறுவழியைக் காண்பித்த போதிலும் ( ரூத் 1 : 15 ) , விதவை என்பதனை மறந்து அநேகரை தொடர்ச்சியாக சாகக் கொடுத்தக் குடும்பத்தின் சூழ்நிலை ( ரூத் 1 : 5 ) அவளை அசைக்கவில்லை .
கர்த்தரின் அடைக்கலத்தில் வந்து விட்ட அவளை கர்த்தர் நடத்தின விதமே அலாதி . தற்செயலான சம்பவங்களும் சாதகமாகிறது ( ரூத் 2 : 2 , 22 ; 3 : 2 ) அன்பும் பாசமும் நிறைந்தவனும் , வேலைக்காரரையும் பேணிப் பாதுகாக்கிறவனும் ( ரூத் 2 : 13 , 14 ) , அனாதைகளை ஆதரிக்கும் நல் உள்ளம் கொண்டவனுமாகிய போவாஸ் ( ரூத் 2 : 14 ) , தேவ நியமம் கட்டளைகளை நன்கு அறிந்தவன்
மாத்திரம் அல்ல கைக்கொள்ளவும் கவனமாயிருப்பவன் ( ரூத் 3 : 12 - 13 ; 4 : 4 ) . அவசரமாய் தனக்கு ஓர் சந்தர்ப்பம் கிடைத்துவிட்டது . தன் காலடியில் தன்னைத் தேடி தானாகவே ஒரு பெண் இருண்ட வேளையில் கிடைத்திருக்கிறாள் . உபயோகித்துக்கொள்வோமே என்ற நினைவற்றவன் ( ரூத் 3 : 7 , 8 , 13 ) ,
கூடவே அவளுக்குக் கெட்ட பெயர் வரக்கூடாது . தன்னுடைய சாட்சி கெட்டுவிடக்கூடாது என்பதில் அத்தனை சிரத்தைக் கொண்டவன் அவன் ( ரூத் 3 : 14 ) , தனக்கு ஒப்புவிக்கப்பட்டப் பொறுப்பை அல்லது தான் எடுத்துக்கொண்ட கடமையை செய்து முடிப்பதில் அவன் கவனம் செலுத்துபவன் ( ருத் 3 : 18 ) ,
பெரியவர்களைக் கலந்தாலோசிக்காமல் , சம்மதம் பெறாமல் , வழி முறைகளை மீறாமல் , நேர்த்தியாய் செய்து முடிக்கவேண்டும் என்ற தீவிரம் உண்டு ( ரூத் 4 : 1 - 10 ) . இப்படி இரண்டு தேவனை நம்பும் சாட்சிதனைக் காத்துக்கொள்ளத் துடிப்போரை இணைத்த தேவன் .
அவர்கள் மூலம் இயேசு இந்த உலகில் வெளிப்படக் காரணமான ஒரு குடும்பத்தைத் தந்து விட்டாரே . பெத்லேகேமில் புகழ்ச்சிப் பெற்றவராக மாற்றி விட்டாரே ( ரூத் 4 : 11 ) ;
கர்த்தரும் ஆண் மகனைத் தந்துவிட்டாரே ( ரூத் 4 : 12 ) . சாட்சியைக் காப்பாற்றிக்கொள்ளக் கவனம் கொண்டோர் தேவை . சந்தர்ப்பங்களைத் தனக்குச் சாதகமாக்கிக் கொள்வதை விட சந்தர்ப்பங்களை தரும் தேவனை அண்டி வாழ்வது எத்தனை பாக்கியம் .
ருத் வாலிபர்களையோ , ஐசுவரியவான்களையோ பின்பற்றிப் போகவில்லை ; மாறாக வேதம் காட்டும் மனிதன் . சுதந்தரவாளியைத்தான் நாடுகிறாள் . அதுவே அவளுடைய பிந்திய நற்குணம் பெரிதாவதற்கு வழி வகுக்கிறது . முந்திய நற்குணம் ( ரூத் 1 : 11 ) அபலைகளாக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக மாற்றியிருந்தது .
பிந்திய நற்குணம் வேதத்தின் வழியைப் பின்பற்றியதினால் உண்டானது . அப்படியே போவாசும் வாய்ப்பு கிடைத்துவிட்டது என்றும் என் காலடியில் அழகான பெண் என்றும் எண்ணி அவள் பின் சென்றுவிடவில்லை . மாறாக வேத பிரமாணத்தின்படி எனக்கு முன் ஒரு சுதந்தரவாளி உண்டு . அவன் மாட்டேன் என்றால் , நான் உதவுகிறேன் என்று வேதத்தின் வழியைத்தான் பின்பற்றுகிறான் .
வேத வசனத்திற்கேற்ப நடந்தால் அது பூமிக்கு ஆசீர்வாதத்தினைக் கொண்டுவரக்கூடிய குடும்பங்களை உலகுக்குத் தந்துவிடுமே .
22 அந்தகார வேளையில் ஒளியேற்றின தம்பதியர்
( பக்தி நிறைந்த கணவனும் மனைவியும்)
எல்கானா - அன்னாள்
ஆராதனை உண்டு ஆனால் ஆண்டவரின் வார்த்தை அங்கு இல்லை . ஆசாரியர்கள் உண்டு ஆனால் அவர்கள் ஆண்டவரை அறிந்தவர்கள் அல்ல ( 1சாமு 3 : 1 ; 1சாமு 2 : 12 ) .
ஆண்டவருக்கென தருபவற்றை தன்னைக் கொழுக்க வைக்கவே உபயோகிக்கும் , தேவனை அசட்டைப் பண்ணும் தேவ பயமற்ற குடும்பமே ஆலயத்தில் பிரதானமாகக் காணப்பட்ட
அந்த நாட்களில் ( 1சாமு 2 : 29 , 30 : 1 : 9 ) , ஆண்டவரின் வார்த்தையை ஜனத்திற்கு சொல்லக்கூடியவனும் ( 1சாமு 3 : 20 ) , உண்மையான ஆசாரியனும் ( 1சாமு 2 : 35 ) , பட்டணத்தில் வாழும் பெரியவரும் தேவ மனிதன். என்று அழைக்கப்பட்டவனும் ( 1சாமு 9 : 6 ) , யாருடைய எருதையும் , கழுதையையும் அநியாயஞ் செய்யவேண்டி அபகரித்துக் கொள்ளாமல் , பரிதானம் வாங்கி கண்சாடையாய் இராமல் இடுக்கண் செய்யாத நல்ல நியாயாதிபதி என்று பெயரெடுத்தவனும் ( 1சாமு 12 : 3 , 4 ) , ஜனத்தின் மீறுதலுக்காக தேவ சந்நிதியில் நின்று முறையிட்டு ஜெபிக்காவிட்டால் அது பாவம் என்று கருதுகிறவனும் ( 1சாமு 12 : 23 ) , நன்மையும் செம்மையுமான வழியை ஜனங்களுக்குப் போதிப்பவனும் ( 1சாமு 12 : 23 ) , கர்த்தரின் தண்டனையை பெற்ற தலை னுக்காகத் துக்கித்து புலம்பித் தவிப்பவனும் ( 1சாமு 16 : 1 ) , இஸ்ரவேலில் இராஜாக்களை அபிஷேகம் செய்ய அதிகாரம் பெற்றவனுமாகிய சாமுவேலை தேவன் தோன்றப்பண்ணத் தெரிந்துக் கொள்ளப்பட்ட பாத்திரங்கள்
அன்னாள் எல்க்கானா என்ற அன்பு தம்பதியரே . மனைவியை அழவிடாமல் பார்த்துக் கொள்வதில் எல்க்கானா செலுத்திய கவனம் தான் எத்தனை ( 1சாமு 1 : 5 , 23 ) . குடும்பத்தினரைத் தேவனைத் தேட வைத்துவிட வேண்டும் என்பதில் சிரத்தைக் கொண்டவன் ( 1சாமு 1 : 3 ; 21 ) .
தேவனுக்குப் பலியை மாத்திரமல்ல ( பலி செலுத்துவது பாவ நிவாரணத்திற்கு ) ஆனால் , பொருத்தனையையும் செலுத்த அவன் தவறுவதில்லை . “ நீ தேவனுக்கு ஸ்தோத்திர பலியிட்டு உன்னதமானவருக்கு உன் பொருத்தனைகளைச் செலுத்தி ஆபத்துக்காலத்தில் அவரை நோக்கிக் கூப்பிட்டால் அவர் உன்னை விடுவிப்பார் . நீயும் தேவனை மகிமைப்படுத்துவாய் " ( சங் 50 : 14 , 15 ) என்பதனை நன்கு அறிந்து செயல்படுபவன் அவன் .
அன்னாளும் அழுது ஜெபிக்கக் கற்றுக் கொண்டவள் ( 1சாமு1 ;10.) தன்னை அலட்சியமாய் நினைக்கும் ஆசாரியணையம் ஆண்டவனே என்று அழைப்பவள் ( 1சாமு 1 : 14 , 15 ) ,
தன்னை இப்படி தவறாக எடை போடுபவர் ஜனத்தில் பிரதானமாய் , ஆசாரியராய் , நியாயாதிபதியாய் வைக்கப்பட்டுள்ளாரே என்று அவள் எண்ணவில்லை ( சோமு 19 . 13 ) , தன்மேல் இல்லாதக் குற்றத்தைப் போடுகிறாரே என்று முறுமுறுக்கவுமில்லை . மாறாகத் தன் நிலையை எடுத்துக் கூறி தன் மனக்கிலேசத்தினைச் சொல்லி தான் தன் இருதயத்தை தேவ சமூகத்தில் ஊற்றிவிட்டதனை விளக்குகிறாள் ( சாமு 5 . 10 )
விளைவு வாக்குத்தத்தம் ஒன்றையும் ஆசீர்வாதத்தினையும் பெற்றுக் கொண்டாள் . தேவ பக்தியின் அடையாளங்கள் அல்லவா ! இவைகள் . ஏற்றவேளையில் இருவரும் பிள்ளையைக் கொண்டு வந்து அர்ப்பணிக்கும் காட்சி கண் கொள்ளாதது ( 1சாமு 125 ) ,
இதனைக் கண்ட ஏலியும் அவர்க ் இருவரையும் ஆசீர்வதித்து கர்த்தருக்கென்று ஒப்புக்கொடுத்ததற்குப் பதிலாக அநேக ஆசீர்வாதங்களைத்தருவார் எனக் கூறியதனை தேவனும் கவனமாகக் கேட்டு மீண்டும் ஐந்து பிள்ளைகளைத் தந்து ஆசீர்வதிக்கிறார் . ( 1 சாமு 3 : 20 . 21 ) ,
இந்தத் தம்பதியின் குடும்ப வாழ்வினைக் கொஞ்சம் கவனித்துப் பாருங்கள் . எத்தனை ஒருமனம் , உடன்பாடு கர்த்தரை முன்னிட்டே சகலத்தையும் நடப்பிப்பவர் யாவரும் இப்படியேத்தானே செயல்படுவார்கள் ,
தன்னை நடத்தவல்ல ஆசாரியர்களின் கெட்ட வாழ்க்கை , சாட்சியற்ற ஜீவியம் , கர்த்தருக்குப் பயப்படாத கிரியைகள் இவர்களைப் பாதிக்கவேயில்லை . இன்றைக்கு அநேகர் ஆலயத்தில் ஆண்டவரைத் தேடாமல் ஆசாரியர்களைப் ( ஊழியரையே ) பார்த்து இடறியிருக்கிறார்கள் என்றால் மிகையாகாது ; அதனால் பெற வேண்டிய ஆசீர்வாதங்களையும் இழந்திருக்கின்றனர் .
இயேசு இதனைக் குறிக்கும் போது வேதபாரகரும் பரிசேயரும் மோசேயினுடைய ஆசனத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள் . ஆகையால் நீங்கள் கைக் கொள்ளும்படி அவர்கள் உங்களுக்குச் சொல்லுகிற யாவையும் கைக்கொண்டு செய்யுங்கள் . அவர்கள் செய்கையின்படியோ செய்யாதிருங்கள் . ஏனெனில் , அவர்கள் சொல்கிறார்கள் சொல்லியும் செய்யாதிருக்கிறார்கள் " என்றார் ( மத் 23 ) .
கவனமாக செயல்படுவோம் ஆண்டவருக்கேற்ற உண்மை ஊழியரை உலகத்துக்குப் பெற்றுத் தருவோம் ,
23. அழுகும் உலகில் ஆச்சரியக் குடும்பம்
( பக்தி நிறைந்த கணவனும் மனைவியும்)
ஏசாயா
வேசியாய் போய்விட்ட உண்மை நகரம் அது . ! நீதிபுரமாயிருந்து இப்போது கொலைபாதகரால் நிறைந்துள்ளது . திராட்சைத் தோட்டத்திலுள்ள ஒரு குச்சி போலவும் , வெள்ளரித் கோட்டத்திலுள்ள ஒரு குடிசையைப் போல மாற்றப்பட்டுள்ளது ( ஏசா 21 . 8 ) .
அதில் வாசம்பண்ணும் குடிகள் ஒவ்வொருவனும் பரிதானத்தை விரும்பி , கைக்கூலியை நாடித்திரிந்து . திக்கற்றவர்களை வதைக்கிறவர்கள் ( ஏசா 1 : 21 ) ,
முரடராய் திருடராய்ப் போனவர்கள் அதின் அதிகாரிகள் . இது தான் சீயோன் ( தேவன் வாசம் பண்ணும் நகரம் என்று அழைக்கப்பட்ட நகரம் ) சியோனிலிருந்து வேதம் வெளிப்படும் என்றுக் கூறப்பட்டது ( ஏசா 2 : 3 ) .
ஆனால் அதின் குமாரத்திகள் ( Product ) அகந்தையாய் , கழுத்தை நெறித்து நடந்து , கண்களால் மருட்டிப் பார்த்து , ஒய்யாரமாய் நடந்து , தங்கள் கால்களில் சிலம்பு ஒலிக்கத் திரிபவர்கள் ( ஏசா 3 : 16 ) .
பிள்ளைகளே தன் வீட்டாரை விரட்டி ஆள்பவர்கள் ( ஏசா 3 : 4 ; 12 ) , ஒரு புருஷனை ஏழு பெண்கள் திருமணம் செய்யத் தீவிரம் காட்டுபவர்கள் ( ஏசா 4 : 1 ) .
கசப்பான கனிகளையே தரும் அந்த சீயோனில் ( ஏசா 5 : 2 ) , தாங்கள் மாத்திரம் தேசத்தின் நடுவில் வாசமாயிருக்கும் படி மற்றவர்களுக்கு இடமில்லாமல் போகும்மட்டும் வீட்டோடு வீட்டையும் வயலோடு வயலையும் கூட்டுகிற சுயநலக்காரர்கள் நிறைந்த பட்டணத்தில் ( ஏசா 5 : 5 )
கண்ணிருந்தும் காணமுடியாமலும் , காதிருந்தும் கேட்கக் கூடாமலும் , குணப்படக் கூடாதபடி கொழுத்த இருதயமுள்ள ஜனம் நிறைந்த இந்த பட்டணத்தில் ( ஏசா 6 : 10 )
ஆச்சரியமான ஒரு குடும்பம் . தீர்க்கன் ஏசாயாவின் குடும்பம் அது . அவனும் கர்த்தர் அவனுக்குத் தந்த பிள்ளைகளும் கர்த்தரின் பலத்தினால் இந்த பட்டணத்தில் அடையாளங்களும் அற்புதங்களுமாக காட்சியளிக்கின்றனர் ( ஏசா 8 : 18 ) .
இதனை உயிர்வாழும் செய்திகள் ( living Messages ) என்று ( message ) எனும் ஆங்கில வேதாகமம் மொழி பெயர்க்கிறது .
நம் குடும்பங்கள் இப்படி மாற வேண்டிய அவசியம் உண்டல்லவா ! கணவனும் மனைவியும் இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் தங்கள் பிள்ளைகளை “ உலகிற்குச் செய்தியாக ” மாற்றிவிட்டார்களே .
வெற்றி வாழ்க்கை வாழவும் சாத்தான் குடிகொண்டிருக்கிற இடத்தில் குடியிருக்கும் குடும்பங்கள் தேவ பலனைப் பெற்றுக்கொள்ளாதா ?
24 அடையாளமாவதற்கு விட்டுத்தந்த
அன்பு மனைவி
( பக்தி நிறைந்த கணவனும் மனைவியும்)
எசேக்கியேல்
“ திருமணம் செய்து கொள்ளாதே " இது தீர்க்கன் எரேமியாவுக்குக் கர்த்தரின் கட்டளை ( ஏரே 16 : 2 ) .
வேசியை அல்லது சோரம்போன ஒருவளை மனைவியாகச் சேர்த்துக்கொள் ,
இது தீர்க்கன் ஒசியாவுக்கு தேவ ஆலோசனை .
“ உன் கண்களுக்கு விருப்பமானவளை ஒரே அடியினாலே உன்னைவிட்டு எடுத்துக்கொள்ளுவேன் , ஆனாலும் நீ புலம்பாலும் அழாமலும் கண்ணீர் விடாமலும் இருப்பாயாக . அலறாமல் பெருமூச்சுவிடு , இழவு கொண்டாட வேண்டாம் , உன் பாகையை உன் தலையிலே கட்டி உன் பாதரட்சைகளை உன் பாதங்களில் தொடுத்துக்கொள் . உன் தாடியை முடாமலும் துக்கங்கொண்டாடுபவர்களின் அப்பத்தைப் புசியாமலும் இருக்கக்கடவாய் " இது தீர்க்கத்தரிசி எசேக்கியேலுக்கு உண்டான தேவ செய்தி ( எசே 24 : 15 - 17 ) .
தீர்க்கதரிசியாய் இருப்பது அந்த நாட்களில் அத்தனைக் கடினம் . இன்று தீர்க்கர்கள் பெருத்துப் போய்விட்டார்கள் . ஏனெனில் ஜனத்தின் குறைகளைச் சொல்ல அன்றைய தீர்க்கர்களே அடையாளங்கள் , இரவிலே தேவன் சொன்ன செய்தியை எசேக்கியேல் விடியற்காலையில் ஜனங்களுக்குச் சொல்ல ,
அன்று சாயங்காலத்தில் மனைவி இறந்து போகிறாள் ( எசே 24 : 18 ) , அப்படி என்னுடைய குடும்ப வாழ்க்கை உங்களுக்கு அடையாளம் என்கிறான் ( எசே 24 : 24 ) ,
அன்று அவனுடைய மனநிலையும் அவனுடைய விருப்பமான , இன்பமான மனைவியின் மனநிலையும் எப்படி இருந்திருக்கும் என்று யோசியுங்கள் .
முதல் நான்கு அதிகாரங்களிலேயே எசேக்கியேல் 24 முறை தேவனுக்கு முழுமையாகக் கீழ்படிகிறான் . பைத்தியக்காரனைப் போல செங்கலை எடுத்துவைத்து , இருப்புச் சட்டி வாங்கிவைத்து , சிறு பிள்ளையைப் போல விளையாடச் சொல்கிறார் அவனும் அப்படியே செய்கிறான் ( எசே 4 : 1 - 3 ) .
350 நாட்கள் இடது பக்கமாக ஒருக்களித்தும் , 40 நாட்கள் வலது பக்கமாக ஒருகளித்தும் படுக்கச் செய்கிறார் ( எசே 4 : 6 ) ,
மனித வரட்டியினால் அப்பஞ் செய்து சாப்பிடச் சொல்கிறார் ( எசே 4 : 12 ) . அப்படிக் கீழ்ப்படிய ஒப்புக்கொடுத்த அவனுக்கு இவ்வளவு பெரிய அடி ,
அதுவும் அடையாளமாவதற்கேதுவாக . கூடவே அழகான மனைவியை ஒரே அடியில் ஆண்டவர் எடுத்துக் கொள்வாரா ,
தன் அழைப்பைப் புரிந்து கொண்டவனுக்கு , அப்படியே அர்ப்பணித்த மனைவி இல்லாமல் இருந்திருந்தால் இது நடந்திருக்க வாய்ப்பேயில்லையே . என் உயிர் அல்ல உங்கள் அழைப்பே முக்கியம் நாம் பிரிவது முக்கியமில்லை . தேசம் தேவனுக்கு நேராய் திரும்பிவிடவேண்டும் என்பதே நம்முடைய ஒப்புக்கொடுத்தல் என்று கூறிய மனைவியாகத் தானே அவள் இருந்திருக்க வேண்டும் .
இல்லையேல் அவள் ஓடிப் போயிருப்பாளே ! இத்தனை ஆழமாகப் புரிந்து கொண்ட வாழ்க்கை காணக் கிடைக்குமோ ?
.
25 அடைக்கலப் பட்டணமான ஆசாரியக் குடும்பம்
( பக்தி நிறைந்த கணவனும் மனைவியும்)
சகரியா----எலிசபெத்து
400 வருடங்கள் தீர்க்கத்தரிசிகளின் மூலமாய் தேவ ஜனமாம் இஸ்ரவேலுக்கு ஒரு செய்தியும் இல்லை . தேவசத்தத்தினை கேட்க மறுத்தவர்களுக்கு இது பாடமாக அமையட்டும் என்று கூறி தேவன் அமைதியாகிவிட்டாரோ ? ஆயினும் ஆங்காங்கே தேவ பிள்ளைகளுக்குத் தேவன் செய்தி தந்து கொண்டிருந்தார் . கர்த்தருடைய கிறிஸ்துவை காணுமுன்னே நீ மரணமடையமாட்டாய் என்று பரிசுத்த ஆவியினாலே சிமியோன் என்ற நீதியும் தேவ பக்தியும் உள்ளவனுக்குச் சொல்லப்பட்டிருந்தது ( லூக் 2 : 25 , 26 ) .
அதே வகையில் கர்த்தரிட்ட கற்பனைகளின்படியேயும் , நியாயங்களின் படியேயும் குற்றமல்லாதவர்களாய் நடந்து தேவனுக்கு முன்பாக நீதியுள்ள சகரியா என்னும் ஆசாரியனுக்குச் செய்தி ஒன்றை தேவன் தருகிறார் ( லூக் 1 : 5 , 6 , 13 ) .
யோவான் ஸ்நானனின் பிறப்பைக் குறித்து தேவன் அவனுக்கு முன்னறிவித்து அதனை நிறைவேறுங்காலத்தில் அவனும் " தேவன் உடன் படிக்கையை நினைவு கூர்ந்தார் " என களிப்போடு ( லூக் 1 : 70 ) தீர்க்கதரிசனம் உரைக்கிறான் .
அவனும் அவன் மனைவியும் ஏன் கர்ப்பத்தில் பிள்ளையும் பரிசுத்த ஆவியினால் நிறைந்துக் காணப்படும் இக்குடும்பம் எத்தனை தேவ பக்தியாய் வாழ்ந்தது என்பதற்கு அடையாளம் ( லூக் 1 : 41 , 67 ) .
வயதான காலத்திலும் , தங்களுடைய வேண்டுதலின் ஜெபம் நீண்ட நாட்களாக கேட்கப்படாமல் இருந்த ஜெபத்திற்கு விடை கிடைக்கும் என்ற நம்பிக்கை அற்றுப் போன போதிலும் , தேவபக்தி இவர்களிலிருந்து குறையவுமில்லை , இல்லற உறவு மங்கவும் இல்லை ( லூக் 1 : 13 , 18 - 25 ) .
ஐந்துமாதம் அளவும் அவர் மனைவி எலிசபெத்தினால் வெளியே எட்டிப் பார்க்கவும் கூடாத அளவு வெட்கம் . இந்த வயதிலும் கர்ப்பந்தரித்தாயா ? என்ற கேள்வி ( லூக் 1 : 36 ) . அவர்களின் பக்தியுள்ள வாழ்க்கை மரியாளுக்கும் அடைக்கலப் பட்டணமாக அமைகிறது .
அவர்கள் வீட்டில் தங்கியிருந்த போதுதான் மரியாள் கர்ப்பவதியான காரியம் வெளிப்பட்டது . ஆறாம் மாதம் வந்து ஒன்பதாம் மாதம் சென்று விட்டாளே . எலிசபெத்தின் பேர்காலத்திற்கு மரியாள் அங்கே உதவி இருக்கவில்லை . ஆகையால்தான் சமுதாயம் இயேசுவை ஒருநாளும் வேசித்தனத்தினால் பிறந்த பிள்ளை என்று சொல்லக் கூடாமல் இருந்தது . சகரியா வீட்டில் பாதுகாப்பாக இருந்த மரியாளை தேவன் சந்தித்திருக்கிறார் என்பதனை மக்கள் நம்ப ஏதுவாயிற்று . உங்களின் தேவப்பக்தியுள்ள வாழ்க்கை அநேகருடைய வாக்குத்தத்தத்தினை நிறைவேற்றவும் களங்கமில்லாமல் பார்த்துக்கொள்ளவும் ஏதுவாகட்டும் .
26 ஏழைகள் ஆனால் ஏக இரட்சகரின் பெட்டகம்
( பக்தி நிறைந்த கணவனும் மனைவியும்)
மரியாள்-----யோசேப்பு
உலகிற்கு இரட்சகரைத் தர , ஒரு கன்னியையும் அவளைப் பேணிப் பாதுகாக்கவும் உலகரட்சகர் உலகில் உதிக்கும் வரை தன் ஆசைகளை உள்ளடக்கி அவளை அறியாதிருந்து ஆனால் அவளைப் பத்திரமாகப் பாதுகாக்கவும் ( மத் 1 : 25 ) ,
பிதா தன் குமாரனை உலகில் அனுப்பும் போது உலகின் ஆபத்துகளிலிருந்து அவரைப் பாதுகாக்க மத் 2 : 13 - 15 ) , பிள்ளைப் பிறந்த போது ஒரு ஆட்டுக்குட்டியைத்தானும் பலியிடத் திராணியற்றதினால் இரண்டு காட்டுப் புறாக்களைப் பலியிட்டவனும் ( லூக் 2 : 22 - 25 ) , சொந்த ஊரில் சேர்த்துக்கொள்வார் இல்லாதிருந்தவனுமாகிய ( லூக் 2 : 4 - 70 யோசேப்பு என்னும் ஏழை மனிதனையும் அவனுக்கு நியமிக்கப்பட்டிருந்த ஏழை மரியாளையும் ஆண்டவர் நம்பினார் .
ஏழையாய் , ஏற்றுக் கொள்வார் இல்லாதிருந்தால் நேர்மையாக , நீதிமானாக வாழ்வது கூடாதக் காரியம் என்பதற்கு சாவுமணி அடிக்கிறான் யோசேப்பு .
ஆகூர் என்ற மானிடன் அப்படித்தானே ஜெபித்தான் " தரித்திரப்படுகிறதினால் திருடி என் தேவனுடைய நாமத்தை வீணிலே வழங்காதப்படிக்கு என் படியை எனக்கு அளந்து போஷித்தருளும் " ( நீதி 30 : 8 . 9 ) ,
எகிப்துக்கு பிரயாணப்பட வேண்டும் என்பதனை முன்னறிந்த தேவன் . போவதற்குரிய செலவுகளை சாஸ்திரிகள் மூலம் முன்னமே தீர்த்து வைத்துவிட்டாரே ( மத் 1 : 11 ) ,
பொன்னை காணிக்கையாய் கொண்டு வந்தவர்கள் முன்னிலையில் படுத்துக் கிடந்த தேவ குமாரனுக்குத் ( இராஜா என்றழைக்கப்பட்டவர் ) தர யோசிக்கவில்லையே ( மத் 1 : 2 ) ; அது தேவன் செய்யும் அற்புதம் அல்லவா !
நீதிமானாய் வாழ்ந்த யோசேப்பு யாரையும் அவமானப்படுத்தவும் , தனக்கு அதற்குரியத் தகுதியும் உரிமையும் இருந்தாலும் , துணிய மாட்டான் ( மத் 1 : 19 ) . பயந்த சுபாவம் உள்ள அவன் ( மத் 1 : 22 ) தேவன் தன்னை நம்பித் தந்த பொறுப்பை நிறைவேற்ற எந்த ஆபத்தினையும் சந்திக்கத் தயார் ( மத் 2 : 14 ) . தேவனும் அவனுடைய பெலவீனத்தினை அறிந்து கோடியாகவோ , தேவதூதன் மூலமாகவோ பேசாமல் சொப்பனத்திலேயே பேசுகிறார் ( மத் 1 : 20 : 2 : 13 ; 2 : 19 ) . மரியாளிடத்தில் காபேரியேலை அனுப்பினவருக்கு யோசேப்பினிடத்தில் அனுப்ப எத்தனை நேரம் பிடித்திருக்கும் . -
கூ டவே திருமணத்திற்கு முன் மரியாளிடம் செய்தி சொன்னவர்
திருமணத்திற்குப் பின் அத்தனை செய்தியையும் , நடக்க வேர் வழிகளையும் , செயல்படவேண்டிய வழிகளையும் செயல் திட்டங்களையம் குடும்பத்தலைவன் தேவ பக்தியுள்ளவனாய் இருந்ததினால் யோசேப்புக்கே அறிவிக்கிறார் . - காரியங்களையும் இரகசியங்களையும் தன் இருதயத்தில் வைத்து சிந்திக்கக் கற்றிருந்தாள் அமைதி பெண் மரியாள் ( லூக் 2 : 19 , 51 ) ,
தேவ பிள்ளையை வளர்க்கும் பெரிய பொறுப்புத் தனக்குக் தரப்பட்டுள்ளதை அவள் ஒரு போதும் மறந்ததில்லை ( லூக் 2 : 48 ) ,
அதனால் உண்டாகப் போகும் பாடுகளையும் கஷ்டங்களையும் இருதய வேதனைகளையும் அவள் அறிந்திருந்த போதிலும் , ( உன் ஆத்துமாவையும் ஒரு பட்டயம் ஊடுருவிப்போகும் ( லூ ் 2 : 33 ) என்று தீர்க்கதரிசனம் ) கலங்கவில்லை . இயேசு அநேக நேரங்களில் “ ஸ்திரியே உனக்கும் எனக்கும் என்ன ? " ( யோவா 2 : 4 ) , தாயும் சகோதரரும் பேசவேண்டும் எனக் கேட்டபோது " என் பிதாவின் சித்தம் செய்கிறவனே தாயும் சகோதரருமாயிருக்கிறார்கள் " என்று முகத்தில் அறைந்தாற் போல் உத்தரவு சொன்ன போதும் , தாயாகிய மரியாளை அது பாதிக்கவில்லை ( மத் 12 : 46 - 50 ) .
கூடவே யோசேப்பும் " என் பிதாவுக்கு அடுத்தவைகள் " என்று வானத்தினை நோக்கி மற்றவர்கள் மத்தியில் நீர் என் தகப்பன் அல்ல என்று கூறுவது போல ( லூக் 2 : 48 - 49 ) பேசின போது பாதிக்கப்படவில்லை . எந்தநோக்கத்திற்காக தேவன் எங்களை இணைத்தாரோ அதனை நிறைவேற்றுவதில் நாங்கள் கருத்தாய் இருப்போமே ஒழிய , பாராட்டுதல் பெறுவதனை நோக்கமாகக் கொண்டு வாழ எங்களை ஒப்புக்கொடுக்கவில்லை எனக் கூறுகிறார்களோ
இந்த தேவ பக்தியுடைய தேவன் நம்பின அன்பு தம்பதியர் . தம்பட்டம் அடித்து வாழப் படித்த இந்த பாழ் உலகில் இப்படி வாழ்வோரைத் தேடித் தான் தேவன் அலைகிறாரோ பெரிய பொ றுப்புகளைத் தர ( 2 நாளா 16 : 9 ) . தாழ்மையுள்ளவர்களை உயர்த்தும் தேவனையும் இருதயத்தில் அகந்தையுள்ளவர்களைச் சிதறடிக்கும் ஆண்டவரையும் அறிந்தவர்களுக்கு ( லூக் 1 : 51 , 52 ) 25 அதிசயமல்ல !
தேவன் நம்மை நம்பி , ஒப்புக்கொடுக்க வல்ல பத்திரமான பாக்கியமான குடும்பமாக மாறுவோம் . தேவ பக்தி நிறை வாழ்வு இதனை சாதித்திட வல்லமையுள்ளது ஒப்புக்கொடுத்தலில் சிகரம் அது
27 பிரிக்க முடியாத பிரயாணிகளான குடும்பம்
( பக்தி நிறைந்த கணவனும் மனைவியும்)
ஆக்கில்லா ----பிரிஸ்கில்லா
அகதிகளாக்கப்பட்டு அலைந்து திரிந்தவர்கள் ஆக்கில்லா பிரிஸ்கில்லா தம்பதியர் . பொந்து தேசத்தான் என்று ( கப்பதோக்கியாவுக்கும் கருங்கடலுக்கும் இடைப்பட்ட தேசம் , இன்றைய துருக்கி ) அழைக்கப்பட்ட இந்த யூதன் பிழைப்பைத் தேடி ரோமாபுரிக்குச் செல்ல , பின்னர் ரோம அரசாங்கத்தின் கெடுபிடியினால் கொரிந்து பட்டணம் ( கிரேக்க நாடு ) வந்து சேர்ந்தான் .
கூடாரம் செய்து விற்கிறதொழில் அவனைக் கூடார வாசியாகவும் மாற்றி விட்டது . மாறி மாறி தேசங்களை மாற்றவேண்டியவர்கள் வாழ்வில் ஏற்படும் தாக்கத்தின் மத்தியில் குடும்ப வாழ்க்கையைக் கவனிப்பதும் இணைந்து வாழ்வதும் அதுவும் கொரிந்து போன்ற துன்மார்க்க பட்டணத்தில் ( 1 கொரி 5 : 11 ; அப் 18 : 17 ) மிகவும் கடினம் .
ஆனால் தேவ நோக்கம் அவர்களைக் குறித்தது வேறே அல்லவா ! வேலையினிமித்தம் பவுலை சந்திக்க நேரிட்டு பின்னர் பவுலோடு சேர்ந்து கர்த்தரின் பணியில் தீவிரமாய் , ஈடுபட்ட இந்த தம்பதியர் துடிப்பானவர்கள் ( அப் 18 : 3 , 26 ; ரோமர் 16 : 3 - 5 ; 1 கொரி 16 : 19 ) .
அப்பொல்லோவை அப்போஸ்தலனாகக் உதவியது இவர்களின் தீவிரமான தேவ பணியே ( அப் 18 : 26 ; 1கொரி 3 : 4 - 5 ) . போட்டிப்போட்டுக் கொண்டு தேவனுக்காக வைராக்கியம் காண்பித்த இந்த தம்பதியரின் பெயர் முன்னுக்கு பின் வருவதற்கு காரணம் இதுவே ( ஆக்கில்லா பிரிஸ்கில்லா என்றும் பின்னர் பிரிஸ்கில்லா ஆக்கில்லா என்றும் வருகிறது . ( 1 கொரி 16 : 19 ; 2 தீமோ 4 : 19 ; ரோமர் 16 : 3 ; அப் 18 : 26 )
வாழ்க்கையில் எங்கு சென்றாலும் , எத்தேசத்திலிருந்தும் எந்த சூழ்நிலையிலிருந்தும் வீட்டிலே சபையை ஸ்தாபித்து விட்டார்களே ( ரோமர் 16 : 3 - 5 ; 1கொரி 16 : 19 ; 2தீமோ 4 : 19 ) .
ரோமாபுரியில் , கொரிந்துவில் , பின்னர் எபேசுவில் என அவர்கள் செயல்படுவதினைக் காணமுடியும் . ஆண்டவரின் ஊழியங்களுக்காக பிராணனையும் கொடுக்க ஆயத்தமானவர்கள் இவர்கள் . ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்து கொண்டு வேலையை செய்து கொண்டு , ஆண்டவரின் பணியிலும் தீவிரமாய் ஈடுபட்ட இந்த குடும்பம் இணைபிரியாமல் வாழ்ந்ததனைத்தான் அவர்கள் பெயர்கள் பிரிக்கப்படாமல் சொல்வதனைக் காண்பிக்கிறது .
இருவருக்கும்- தரப்பட்டிருந்த கிருபைகளை இணைந்து இயக்குவித்து ஆவியானவரின் கையில் அவர்கள் பலத்த ஆயுதமாகமா றிப் போனது மாத்திரமல்லாமல் , அவர்களைக் குறித்து அனைத்து தேச சபைகளும் ஆர்ப்பரிக்கவும் , நன்றி செலுத்தவும் காரணமாகி மாறிவிட்டனரே இந்த தேவனுக்கு பயப்படும் குடும்பத்தார் .
28 தேவ பயமிக்கவர் தேசத்தில் ஆசீர்வாத சின்னங்கள்
( பக்தி நிறைந்த கணவனும் மனைவியும்)
குணசாலியானமனைவி
சுறு சுறுப்பான மனைவி, கண்ணும் கருத்தாய் தன் வீட்டுக் காரியத்தைக் கவனிப்பவள் ( நீதி 31 : 27 ) ; புருஷனை நேர்த்தியாய தேசத்து மூப்பர்களோடே நியாயஸ்தலத்தில் பேர் பெற்றவனாக்க காணலாம் . புருஷனும் பிள்ளைகளும் உன்னைப் போல நாங்கள் யாரையும் கண்டதில்லை என்று புகழப்பட்ட அவள் ( நீதி 31 : 23 . 28 , 29 ) . வீட்டாரின் எதிர்கால ஆபத்துக்களை அறிந்து செயல்படுகிறவள் ( வச 21 ) . புருஷனுடைய சம்பத்தின் பெருக்கத்திற்கு அவளே காரணம் ( வச 11 , 16 ) . சிறுமையானவர்களுக்கும் ஏழைகளுக்கும் அவள் ஒரு பெலன் ( வச 20 ) . வீட்டுக் காரியங்களை நீ கவனித்துக் கொள் நான் வெளியின் காரியங்களைப் பார்த்து கொள்ளுகிறேன் என்ற புரிந்து கொள்ளுதலோடு செயல்படும் இந்தத் தம்பதியினருக்குப் பிறந்த பிள்ளைகள் தாய் தகப்பனைப் புகழக் கற்றிருந்தனர் .
காயம்பட்டவர்கள் இவளைத் தேடி வருவர் ( வச 26 ) . அலங்காரம் செய்து கொள்வதில் அவளுக்கு அதிக கவனம் இல்லை , ஏனெனில் சௌந்தரியம் வஞ்சனையுள்ளது என்றும் அழகும் வீண் என்றும் அவள் அறிவாள் ( வச 30 ) .
ஒரு பெண்ணே மற்ற பெண்ணைப் பாராட்டுவது எளிதில் நடப்பதில்லை , ஆனால் இங்கேயோ வித்தியாசம் ( நீதி 31 : 31 ) . குணசாலியான அவளுடைய செய்கைகள் குடும்பத்தைக் கட்டுவிப்பதற்கும் , காத்துக் கொள்கிறதற்கும் , கருவியாய் மாற்றுவதற்கும் , கஷ்டப்படுவோருக்கும் நியாயம் இழந்தோருக்கும் களைப்பை மாற்றுபவர்களாக செயல்படும் இந்த தம்பதியர் வாழ்வுக்கு முக்கிய மூல காரணம் கர்த்தருக்கு பயப்பட்டதே ( நீதி 31 : 30 ) . சங் 128 சொல்கிறது கர்த்தருக்குப் பயந்து அவர் வழியில் நடக்கிறவன் எவனோ . . . . . அவன் மனைவி வீட்டோரங்களில் கனிதரும் திராட்சைச் செடி . . . . அவன் பிள்ளைகள் அழகு சேர்த்து பெலன் சேர்க்கும் ஒலிவமரக்கன்றுகள் . கர்த்தருக்குப்பயப்படும் தம்பதியர் தங்கள் குடும்பத்திற்கும் , வாழும் பட்டணத்திற்கும் , வாழும் தேசத்திற்கும் செழிப்பையும் மற்றும் சமாதானத்தையும் கொண்டு வருபவர்கள் அல்லவா ! ( சங் 128 : 5 , 6 ) . அப்படிப்பட்டவர்களாக நம்மை தேவன் நிறுத்தட்டும் " சேர்ந்த இரண்டும் " செழிப்புண்டாக்கவே .
29 கர்த்தரைக் குறை கூறும் கணவன் மனைவி
(பக்தியற்ற பாதகக் குடும்பங்கள்)
எலிமேலேக்கு---நகோமி
தேவனே என் ராஜா " என்று தான் பெயர் ( எலிமெலேக்கு ) . ஆனால் , அவன் தேவனை இராஜாவாகக்கொண்டதில்லை .
இனிமையானவள் ( நகோமி ) என்று தான் பெயர் ஆனால் தன் வாழ்வை நரகமாக்கிக் கொண்டவள் . கசப்பினால் நிறையப் பெற்ற வாழ்க்கை அவள் வாழ்க்கை ( ரூத் 1 : 20 ) .
தானே அப்படிப்பட்ட வாழ்க்கையைத் தெரிந்து கொண்டு தேவன் மேல் பழியைப் போடுகிறவள் அவள் .
அவர் என்னை வெறுமையாக்கினார . அவர் என்னை சிறுமைப்படுத்தினார் . அவர் என்னை கிலேசப்படுத்தினார் என்பதே அவள் தேவனைக் குறித்து சொல்லும் சாட்சி ( ரூத் 1 : 21 ) .
கர்த்தருடைய கை தங்களுக்கு விரோதமாய் இருந்தக் காரணத்தினை உணர்ந்து மனம் திரும்பக் கூடாதபடி கண்கள் அடைக்கப்பட்டிருந்தது ( ரூத் 1 : 13 ) .
தாங்கள் தேவ வார்த்தைக்குக் கீழ்ப்படியாததினால்தான் என்பதனை உணராமல் " கர்த்தர் " நாமத்தினை உச்சரிக்க அவள் தவற மாட்டாள் ( ரூத் 1 : 6 , 8 , 9 , 13 , 21 ) ,
" இன்னும் நீங்கள் எனக்குச் செவி கொடாதிருந்தால் உங்கள் பாவங்களினிமித்தம் ஏழத்தனையாய் உங்களைத் தண்டித்து , உங்கள் வல்லமையின் பெருமையை முறித்து , உங்கள் வானத்தை இரும்பைப் போலவும் உங்கள் பூமியை வெண்கலத்தைப்போலவும் ஆக்குவேன் . உங்கள் தேசம் தன் பலனையும் தேசத்தின் மரங்கள் தங்கள் கனிகளையும் கொடுக்க மாட்டாது ' ( லேவி 26 : 18 ) என்றவரின் எச்சரிப்பைக் கவனிக்காமல் , மோவாபுக்குக் குடி பெயர்ந்து , " கர்த்தர் அன்னிய ஜாதியாரான ஸ்திரீகளண்டைக்கு பிரவேசிக்கலாகாது ' ( 1 இரா 11 : 1 , 2 ) என்று கூறியிருந்த போதிலும் , மோவாபின் குமாரத்திகள் இஸ்ரவேலரை பாகால் பேயோரைப் பின் பற்றச் செய்து இஸ்ரவேலின் மத்தியில் பெரிய அழிவைக் கொண்டு வந்தனை அறிந்திருந்த போதிலும் ( எண் 25 : 1 - 9 ) , தன்னுடைய மகன்களுக்கு அவர்களிலேயே பெண் எடுத்தாள் நகோமி ( ரூத் 1 : 5 ) . மூன்று விதவைகளை உண்டாக்கி ஆண்களை இழந்து தவித்த அவள் அப்போதும் கர்த்தரையே குறை சொன்னாள் ( ரூத் 1 : 13 ) ,
தங்களின் தெய்வங்களிடத்தில் திரும்பப் போகவே அவர்களை ஏவுகிறாள் ( ரூத் 1 : 15 ) . வயது சென்றபின்னரும் அவளுக்கு கர்த்தரிடம் திரும்ப விருப்பமில்லை ( ரூத் 1 : 12 ) .
ரூத்தின் விடாப்பிடியான தீர்மானமும் பொறுமையும் . காத்திருத்தலும் , கீழ்படிதலும் , ஐசுவரியத்தினை நாடாமல் வாலிபரைப் பின் தொடராமல் தேவ நியாயத்தின் படி உரியவனை மாத்திரம் நாடின அவளின் நற்குணமே நகோமியைப் பின்னதாக திருப்பிற்று ( ரூத் 3 : 10 ; 2 : 20 ) ;
ஏழு குமாரனை பார்க்கிலம் அருமையானவள் அவள் ( ரூத் 4 : 15 ) . மற்றவர்களை பழைய வாழ்க்கைக்கு திருப்பி அனுப்புவதில் தான் நகோமியின் கவனம் இருந்தது ( ரூத் 1 : 11 ) .
பஞ்சம் என்றால் அல்லது குறைவு என்றால் அனைத்தையும் மறந்துவிடும் இந்த தேவ பயமற்ற தம்பதியர் , தேவ ஜனத்தை விட்டு அந்நியர்களிடத்தில் சென்றவர்கள் அந்நியர்களைத் திருப்பவேண்டியவர்கள் . ஆனால் , அந்நியர்களைக் கொண்டுதான் தேவன் இவர்களைத் திருப்புகிறார் . சந்தான சேதமும் விதவையிருப்பும் ஆகிய இவ்விரண்டும் உனக்கு சடிதியாய் ஒரே நாளில் வரும் ( ஏசா 47 : 9 ) ,
உன் அறிவு ( மோவாபில் ஆகாரம் உண்டு என்ற அறிவு ) உன்னைக் கெடுத்தது ( ஏசா 47 : 10 ) என்ற ஏசாயா தீர்க்க னின் புலம்பல் இவளைக் குறித்தது தானோ !
கர்த்தரின் கை தன்னை மீண்டும் தள்ளிக்கொண்டு வந்து தாவீதின் இராஜா வம்சத்தில் பங்கடைய உன்னை வைத்துவிட்டதனை ருசித்தாயோ ? - கர்த்தரைக் குற்றப்படுத்தின ஆதாம் ( ஆதி 3 : 12 ) விட்டுச் சென்ற ஜென்ம சுபாவம் இவளை எவ்வளவாய் ஆட்கொண்டிருக்கிறது பாருங்கள் . “ உம்முடைய தேவன் என்னுடைய தேவன் என்று கூறி பற்றிக் கொண்டாளே ரூத் ( ருத் 1 : 16 ) , ரூத் முன்னால் கூட இவள் பேச்சு சரியில்லையே ( 1 : 20 , 21 )
இவருடைய பிள்ளைகள் மக்லோன் ( பெலவீனன் ) என்றும் , கிலியோன் ( சாப்பாட்டு ராமன் ) என்றும் அழைக்கப்படக் காரணமானவள் இவளே .
கர்த்தரைக் காண்பிக்காத பெற்றோராய் வாழ்ந்து என்ன பிரயோஜனம் ? ரூத் என்ற ஆண்டவர் அன்பு கொண்ட அந்நிய பெண்ணால் தேவகிருபை மாத்திரம் இந்த தேவ பயமற்ற பக்தியற்றக் குடும்பத்தில் கிரியை செய்யாதிருக்குமானால் , இவர்கள் பெயர் முற்றிலும் அழிந்திருக்குமே . ஜாக்கிரதை !
30 ஒருமனப்பட்டு அழிந்த ஒரு அன்பு தம்பதி
(பக்தியற்ற பாதகக் குடும்பங்கள்)
அனனியா----சப்பீராள்
விசுவாசிகளின் திரளான கூட்டத்தில் ஒருமனம் . ஆனால் , பெயர் பெற வேண்டும் , பாராட்டப்பட வேண்டும் என்று நினைத்து அதற்கு தங்களை ஒப்புக்கொடுத்து , மாய்மாலம் பண்ணி , சாத்தானால் இருதயம் நிரப்ப விட்டுக் கொடுத்து ஒருமனப்பட்ட அனனியா சப்பீராள் ஓர் எச்சரிக்கைச் சின்னம் ( அப் 4 : 32 ; 5 : 3 , 5 , 9 ) ,
எல்லார் மேலும் தேவ கிருபை பெருகியிருந்த நேரத்தில் , உண்மையான ஒருவனாகிலும் தன்னுடையது . என்று உரிமை பாராட்டாத நேரத்தில் , ஒருவனுக்கு ஒன்றும் குறைவில்லாத போது , இந்த தம்பதியரின் தன்னயமும் பொய் வார்த்தைகளும் , வெளிப்படையான துர் எண்ணமும் ஆதி சபைக்கு ஒரு அதிரடியைத் தந்து விட்டது ( அப் 4 : 22 , 23 , 25 ) ,
எத்தனை தம்பதியர் இன்று பேர் புகழ் கிடைக்கும் என்பதில் ஈடுபட்டு , ஒருமனப்பட்டு தேவனுக்கு ஒப்புக்கொடுத்த வாழ்விலிருந்து திரும்பிக் கெட்டுப்போனார்கள் .
வஞ்சனையும் மாய்மாலமும் கொண்ட வாழ்வு , பரிசுத்த ஆவியானவரிடத்திலும் பரிசுத்தவான்களிடத்திலும் பொய் சொல்ல ஏவிவிடும் என்பதும் அதனுடைய பேரழிவு எத்தனைப் பெரியது என்பதினையும் உணர்ந்தால் எத்தனை நலமாயிருக்கும் .
பர்னபாசைப் பாராட்டியவர்கள் தங்களையும் பாராட்ட வேண்டும் என்ற நோக்கமே மேலோங்கி நின்ற இந்த தம்பதியரின் ஒருமனம் , ஒரே நாளில் மரணத்தைத்தான் கொண்டு வந்தது ( அப் 4 : 36 , 37 ) ,
ஆதி சபையை அளவு கோலாக நியமிக்க நினைத்த தேவ ஆவியானவரின் தீவிரம் இந்த சம்பவத்தில் தெளிவாகிறது . ஆனால் ஆதி நிலை திரும்ப நினைக்கும் இன்றைய சபைகளில் தேவ மக்களின் , விசேஷமாக தம்பதியரின் மனநிலை எப்படி இருக்க வேண்டும் என்பது முக்கியமல்லவா
பரிசுத்த வாழ்க்கைக்கும் , தேவனுக்குப் பிரியமான வாழ்வுக்கும் வழி நடத்தாத ஒரு மனம் ஏற்பட்டு என்ன பயன் ! அவர்களுக்கு மனம் திரும்ப போதிய தருணம் கொடுக்கப்படவில்லையே என்று வாதிடுவர் உண்டு . ஆனால் , இது ஒரு திட்டமிட்ட கூடிப் பேசி எடுத்த முடிவு மாத்திரமல்ல , மாறாக வஞ்சித்து ஒரு நல்ல காட்சியை மற்றவர்கள் முன் காட்ட நினைத்தக் காரியம் .
அவர்களுடைய இருதயம் ஏற்கனவே பிரிக்கப்பட்ட நிலையில் இருந்தது என்பதும் ஒட்டக் கூடாதபடி மாற்றப்பட்டிருந்தது என்பதனையும் கவனியுங்கள் . ஒருமனப்படுவோம் தேவ காரியங்களில் அவர் நம் மேல் பிரியமாயிருக்கட்டும் .
31 தேசத்தைக் கெடுக்க போதும் இணையும் இருவர்
(பக்தியற்ற பாதகக் குடும்பங்கள்)
ஆகாப்---யேசபேல்
ஆண்டவர் உயர்த்தியிருந்தார் ராஜாவாக . ஆட்களைத் தந்திருந்தார் , அருட்பணியாளர்களையும் , தீர்க்கர்களையும் தேவனுக்குப் பயன்படுகிற உடன் வேலையாட்களையும் தந்திருந்தார் . தேவனைத் தேடும் நண்பர்களைத் தந்திருந்தார் . ஆனால் , பாவத்தோடே பாவத்தினைக் கூட்டும் வாழ்க்கையை மேற்கொள்ளத் தக்கதாக தன் மனைவிக்கு அதுவும் பில்லிசூனியக்காரியும் வேசித்தனங்களால் நிறைந்தவளும் , தேவனையும் தேவ ஊழியர்களையும் முழுமையாய் பகைக்கிறவளுமாகிய அவளுடைய தாக்கம் கணவனையும் இராஜ்யத்தையும் மூப்பர்களையும் ஆட்டிப்படைத்தது . இதுவே ஆகாப் யேசபேலின் கதை .
அவ்வப்போது தீர்க்கத்தரிசிகளை அனுப்பித் தருகிறார் 1இரா 17 : 1ல் எலியா ,
1இரா 20 : 13 , 22ல் ஒரு தீர்க்க தரிசி , 1இரா 20 : 28ல் மற்றொரு தேவனுடைய மனுஷன்
1இரா20 : 35ல் தீர்க்கதரிகளின் புத்திரரில் ஒருவன் .
இப்படி அடுக்கடுக்காக ஆண்டவரால் எச்சரிக்கப்பட்டு , வழி நடத்த ஆண்டவர் அனுப்பித் தந்தவர்களை அவனோ பகைஞனாகப் ( 1இரா 21 : 20 ) பார்த்தான் . அவர்கள் வார்த்தை சலிப்பையும் விசனத்தையும் தந்தது ( 1இரா20 : 43 ) . உண்மையைக் கூறும் மிகாயா போன்ற தீர்க்கதரிசிகளை அவன் வெறுத்தான் ( 1இரா22 : 8 ) ; வெளிப்படையாகவே “ பகைக்கிறேன் " என்று கூறுகிறான் .
அப்படிப்பட்டவர்களை சிறையில் வைக்கவும் , இடுக்கத்தின் அப்பத்தையும் தண்ணீரையும் சாப்பிடச் செய்கிறான் ( 1இரா 22 : 27 ) . நல்ல தேவ பக்தியுள்ள நண்பர்கள் உண்டு யோசபாத்தைப் போல ( 1இரா 22 : 3 , 4 ) , அவர்கள் தேவனைத் தேட இவனை ஏவினார்கள் ( 1இராஜா 22 : 5 , 7 , 8 ) .
தேசத்தின் குடிகள் மேல் வைக்கப்பட்ட அதிகாரிகள் சிறுவயது முதல் தேவனுக்குப் பயந்தவர்கள் ( 1இராஜா 18 : 3 , 12 ) , கூடவே நூறு தீர்க்கதரிசிகளை ஒளித்து வைத்து நித்தமும் போஷித்து வந்தவன் ( 1இராஜா 18 : 4 ) .
ஆனால் இவை அனைத்தையும் அவன் உதறி விட்டு , விக்கிரக ஆராதனைக்குத் தன்னை விற்றுப்போட்டவளும் , தேவ பயமுள்ளவர்களைத் தன்னுடைய அதிகாரத்தினால் கொல்ல வல்ல யேசபேலை விவாகம் பண்ணி , அவள் வழியில் , ஆலோசனையில் நடந்து தன்னை தேசத்தையும் கெடுத்துப் போட்டவன் .
தன்னையும் மனைவியாகிய யேசபேல் புருஷனுக்குப் பின் அனைத்தையும் செய்ய வேண்டும் அவன் மகிழ்ச்சியாயின் வேண்டும் என்ற காரியத்தினை நிறைவேற்ற எந்தக் கோலத்தை எடுக்க ஆயத்தம் .
1இரா21ம் அதிகாரம் சொல்லுகிறபடி , நாபோக்கில் திராட்சைத் தோட்டத்தினைக் கீரை கொல்லையாக்க விரும்பி ஆகாபுக்கு உடந்தையாய் நின்று
கர்த்தரின் பேரில் அவனை கல்லெறியவும் , உபவாசம் என்ற பேரில் பொய்யை நிரூபிக்கவும் பட்டணத்தின் மூப்பர்களையும் பெரியவர்களையும் பொய்யர்களாம் மாற்றவும் பேலியாளின் மக்களுக்கு உற்சாகமூட்டவும் இவளால் ஆகும் . -
இஸ்ரவேலில் சமாதானக் குறைவை உண்டாக்க அவளின் பில்லிசூனியத்தின் ஆளுகை ( 2இரா 9 : 22 ) இஸ்ரவேலைக் கலங்கப்பண்ண ஆகாபையும் ஏவிவிட்டிருந்தது ( 1இராஜா 18 : 18 ) ,
ஆகாப் தன் மனைவிக்கு தன்னை விற்றுப்போட்டிருந்தான் ( 1இராஜா 21 : 25 ) ; அவள் தீமை செய்ய தூண்டிவிடுகிறவன் . சில வேளைகளில் தேவ கோபத்தை நினைத்து துக்கித்து உபவாசம் பண்ணி தன்னைத் தாழ்த்துவான் ( 1இராஜா 2 : 27 ) ; தீர்க்கதரிசி எலியாவின் கட்டளைக்குக் கீழ்ப்படிவான் ( 1இரா18 : 20 , 4142 ) ; கர்த்தரின் அக்கினி இறங்குவதனைக் கண்டு பிரமிப்பான் ,
ஆயினும் , அவையெல்லாம் யேசபேலைப் பார்த்த உடன் பறந்து போய் விடும் . அவளின் வஞ்சக ஆவி அத்தனை வல்லமையுள்ளது ; அது எலியாவையேக் கலங்கப்பண்ணிற்றே ; சோர்ந்து போகச் செய்து விட்டது ( 1 இராஜா 19 : 3 , 14 ) ,
இப்படிப்பட்ட தம்பதியரால் நடக்கும் காரியம் என்ன ? தேசமும் , மூப்பர்களும் சீரழிந்து பாவத்தின் மேல் பாவம் கூட்டப்பட்டது ( 1இரா 16 : 25 . 30 - 33 ) , ஜனங்கள் சாபத்தின் வார்த்தைகளைக் கனம் பண்ணி , தண்டனையை அனுபவித்தாலும் அதிலிருந்து மனம் திரும்பக் கூடாதப்படி மாற்றப்பட்டிருந்தார்கள் ( 1இரா 16 : 34 ) , கர்த்தருக்குக் கோபமுண்டாக்கி ( 1இரா16 : 33 ) பின்னதாக தன்னையும் தன் வீட்டாரையும் தன் ஆதீனத்தில் தன் மக்களையும் சிறைப்பிடித்துக் கொடுக்க வழி வகுத்தார்கள் . அவர்கள் இரத்தமும் நாய்களினால் நக்கப்பட்டு போயிற்று ( 1 இரா 22 : 38 : 2 இரா9 : 36 ) .பிள்ளைகள் ஒருவரும் தப்பப் கூடாமற் போயிற்று ( 2இரா10 : 17 ) . கூடப் பந்தியிருந்தவர்களும் அழிக்கப்பட்டார்கள் ( 2 இரா10 : 25 ) .
தேவபக்தியற்ற இரண்டு பேர் இணைந்தால் நடக்கும் விபரீதங்கள் தான் எத்தனை .
32 ஆதி பெற்றோர் தந்த அலங்கோலம்
(பக்தியற்ற பாதகக் குடும்பங்கள்)
ஆதாம்-----ஏவாள்
அனைத்திற்கும் ஆரம்பம் ஆதிப்பெற்றோரில் காணப்பட்ட கீழ்படியாமையே ( ரோமர் 5 : 19 ) .
ஆண்டவர் அழகாக உண்டாக்கி அனைத்தையும் கையளித்திருந்த போதிலும் ( ஆதி 1 : 26 - 28 ) ,
ஆண்டவரின் சொல்லைத் தட்டி , அற்ப சாத்தானின் வார்த்தைக்கு அவசரப்பட்டு கீழ்ப்படிந்து ( ஆதி 2 : 17 ; 3 : 6 ) ,
( அவர்தான் தினமும் குளிர்ச்சியான வேளையில் சந்திக்க வந்தாரே ( ஆதி 3 : 8 ) அவரைக் கேட்டிருக்க வேண்டாமா ?
வரும் சந்ததிக்கும் அந்த சுபாவத்தினை வைத்துப் போய்விட்டவர்கள் அவர்களே . ஏவாளுக்குத்தான் ஏன் இந்த அவசரம் கணவனை விட்டு விட்டுத்தானே அவள் புசித்தாள் ( ஆதி 3 : 6 ) , அவனையும் வஞ்சக வலையில் இழுத்துப்போட்டு விட்டாளே ( 11 கொரி 1 : 3 ) , வஞ்சகனின் தந்திரம் இவளை எத்தனையாய் ஏமாற்றிவிட்டது . “ என்னை சர்ப்பம் வஞ்சித்தது " ( ஆதி 3 : 13 ) என்பதனை முன்னமே கண்டு கொள்ளக் கண்கள் இல்லையே .
கணவனையும் விசாரிக்கலாம் , கர்த்தரையும் வினவலாம் என்று ஏன் தெரியவில்லை . - ஆசையும் , இச்சையும் இணையுங்கால் அது காரணம் கேட்பதில லை ( ஆதி 3 : 5 , 6 ) . தாங்கள் ஏற்கனவே தேவ சாயலில் தான் உருவாக்கப்பட்டிருக்கிறோம் என்கிற அறிவே இல்லாமல் , தேவர்களைப்போல மாறுவீர்கள் என்று கூறின அவனுடைய வார்த்தைகளை ஏன் அவள் புரிந்து கொள்ள முடியவில்லை ( ஆதி 1 : 26 ; 35 ) . ஏற்ற துணையாக இருப்பாள் என்று தானே அவளை உருவாக்கித் தந்தார் . ( ஆதி 2 : 18 , 22 ) அவளோ ஆதாமை சுதந்தரத்தை விட்டு தேவன் வெளியே அனுப்பவேண்டிய நிலைக்கு தள்ளிவிட்டு விட்டாளே ( ஆதி 3 : 22 ) .
பெற்ற பிள்ளையும் கொலைகாரனாக மாறி நிற்கிறானே . உன் அவபக்தி , தேவனைக் கேட்டுக் காரியங்களை நீ செய்யக் கற்றுக் கொள்ளாததினால் அவனும் தேவனைக் கேட்டுப் பழகவில்லையே ( ஆதி 4 : 8 ) .
தேவபக்தியற்றவர்களாய் கற்பனைகளைவிட்டு விட்டு வாழ்ந்த அநேகருடைய வாழ்க்கையைத் தியானித்தோமே , அதற்கெல்லாம் மூல காரணமாய் மாறிவிட்டனரே இந்த ஆண்டவரின் சாயலில் உண்டாக்கப்பட்ட ஆதி பெற்றோர் .' தேவனுடைய கிருபையை இழந்து விட இவர்கள் காண்பித்த கீழ்படியாமை எனும் பாவமும் , தேவ பயமற்ற செய்கைகளும் , பின்னர் அதனை மூடி மறைக்க எடுத்துக்கொள்ளப்பட்ட முயற்சியும் , தலை முறை தலை முறையாய தேவனை அண்டிக கொள்ளாதவர்களுக்கும் தேவனுககுக கீழ்படியாதவர்களுக்கும் பக்தி அற்றவர்களுக்கும் ஏற்படுவதினைக் கவனித்தீர்களா ? உமக்குப் பயந்தவர்களுக்கும் மனுபுத்திரருக்கு முன்பாக உம்மை நம்புகிறவர்களுக்கும் நீர் உண்டு பண்ணி வைத்திருக்கிற உம்முடைய நன்மை எவ்வளவு பெரியதாயிருக்கிறது ( சங் 31 : 19 ) என்ற சங்கீதக்காரனின் வார்த்தைகளைக் கடைபிடித்து நன்மை பெற்றுக்கொள்வோமாக .
" தேவ பயமே ஜீவ ஊற்று " என்றான் ஞானி சாலோமோன் ( நீதி 14 : 27 ) தேவனுக்குப் பயந்த , பக்திக்குரிய குடும்பம் ஒன்றினைக் கட்டி எழுப்புவோம் . அதன் விளைவுகளைக் கண்ட நாம் இப்பூமிக்கு ஆசீர்வாதமாக மாறவே தேவன் நம்மை அழைத்திருக்கிறார் என்ற தெளிவை பெறுவோம் . தேசங்கள் தேவனை அறிந்திட நம் குடும்பமும் காரணமாகட்டும் .
அதற்காகத் தான் தேவன் நம்மை இணைத்திருக்கிறார் என்ற நினைவு நம்மை ஆட்கொள்வதாக . இணைக்கப்பட்டோம் இணையற்ற தேவனால் இயங்குவோம் அவர் வார்த்தையின் வழியில் இணைந்த கரங்கள் இறைவனின் சமூகத்தில் இணைபிரியாமல் நிற்கட்டும் நித்தமும் இனியும் சத்துரு பெலன் கொள்ளாமல் இருக்கட்டும் நம் வாழ்க்கையில் இந்திய தேசம் இயேசுவைக் கண்டிட்டால் இல்லற வாழ்வின் இனிமை புரியுமே .