Monday, 30 May 2016

காய்கறிகளை நறுக்கிப் போடும் போது

காய்கறிகளை நறுக்கிப் போடும் தண்ணீரில் சிட்டிகை மஞ்சள் தூள் போட்டு வைக்க, பூச்சி, புழு இருந்தால் மேலே மிதந்து வந்து விடும்.

சோம்பு (பெருஞ்சீரகம்):

சோம்பை லேசாக வறுத்து பொடித்து இரண்டு கிராம் அளவில் எடுத்து சர்க்கரை சேர்த்து தினம் இரண்டு வேளை சாப்பிட வயிற்று வலி, வயிற்று உப்புசம், செரியாமை, இரைப்பு முதலியன நீங்கும். இதன் சூரணம் வியர்வையை உண்டாக்கி சிறு நீரை அதிகப்படுத்தும்.

சங்கீதம் 66 :16-20.

தேவனுக்குப் பயந்தவர்களுக்கு தேவன் உன் ஆத்துமாவுக்குச் செய்ததைச் சொல்லு. அவரை நோக்கி உன் வாயினால் கூப்பிடு உன் நாவினால் அவர் புகழப்பட்டார். உன் இருதயத்தில் அக்கிரமசிந்தை கொண்டிருந்தாயானால், ஆண்டவர் உனக்குச் செவிகொடார். மெய்யாய்த் தேவன் உனக்குச் செவிகொடுத்தார், உன் ஜெபத்தின் சத்தத்தைக் கேட்டார். சங்கீதம் 66 :16 -20

உலக நாடுகளுக்காக ஒருநிமிடம்

சிங்கப்பூர் தேசத்தின் எழுப்புதலுக்காக ஜெபிப்போம் பெருகி வருகிற சூதாட்டங்கள் விபச்சாரக் கிரியைகள தடைச் செய்யப்படவும் அந்த தேசம் கர்த்தருடைய தேசமாக மாறவும் ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்

Sunday, 29 May 2016

வெந்தயம்

அரிசி அல்லது ஜவ்வரிசிக் கஞ்சியுடன் வெந்தயத்தைச் சேர்த்து காய்ச்சிக் கொடுக்க தாய்ப்பால் நன்றாகச் சுரக்கும். வெந்தயத்தை ஊர வைத்து தலையில் தேய்த்துக் குளித்தால் தலை முடி நன்றாக வளரும். வெந்தயக் கீரை அஜீரணக் கோளாறை நீக்கும். தினமும் இரவில் ஒரு கைப்பிடி வெந்தயத்தை ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டுக்குள் வரும். -