Tuesday, 2 June 2020

215-218

215 மரணத்தோடு ஓர் ஒப்பந்தம் 


" தீங்கு நாட்கள் வராததற்கு முன் நீ உன் வாலிபப்பிராயத்தில் உன் சிருஷ்டிகரை நினை ” ( பிர .12 : 1 ) . 

மரணத்தோடு விநோதமான ஓர் ஒப்பந்தம் செய்து கொண்ட மனிதனைக் குறித்த பழங்கதை ஒன்றுண்டு . 

ஒருநாள் மரண தூதன் அம்மனிதனிடம் வந்தான் . " எனது மரண நேரம் வரும்போது நான் உன்னோடு வருவதற்கு எப்பொழுதும் ஆயத்தமாகவே இருப்பேன் . ஆனால் ஒரே ஒரு நிபந்தனை . மரணம் வருவதற்கு முன்பாகவே என்னை எச்சரிக்கை செய்யும்படி எனக்கு செய்தி அனுப்பபடப்வேண்டும் என்று மரண தூதனை அம்மனிதன் கேட்டுக்கொண்டான் .

 மரண தூதனும் அதற்கு ஒப்புக்கொண்டான் . மரண தூதனோடு இப்படியொரு ஒப்பந்தம் செய்து கொண்டதில் அம்மனிதனுக்கு பெரும் மகிழ்ச்சி . வாரங்கள் பறந்தோடி மாதங்களாயின . மாதங்கள் பறந்தோடி ஆண்டுகள் ஆயின . பயங்கர குளிர்காலம் . மாலை வேளையில் அம்மனிதன் உட்கார்ந்து தன்னுடைய ஆஸ்திகளைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருந்தான் . “ மரணம் ” திடீரென்று அவனது அறைக்குள் நுழைந்து அவனது தோளில் தட்டியது . அம்மனிதன் பயந்து நடுங்கி அலறிவிட்டான் . “ நாம் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி நீ எனக்கு முன்னெச்சரிக்கை கொடுக்காமலே வந்துவிட்டாயே ? ” என்று பதறினான் . " 

நான் ஒருநாளும் ஒப்பந்தத்தை மீறவில்லை . என்னுடைய வாக்கை நான் காத்துக்கொண்டேன் . நான் உனக்கு அநேக எச்சரிக்கையின் செய்திகளை அனுப்பினேன் . கண்ணாடியை உற்றுப்பார்த்து உன்னைக் கவனித்துப்பார் . உனக்கே விளங்கும் . உன் தலை முடியைப்பார் ! எவ்வளவு கறுப்பாக அடர்த்தியாக இருந்தது . இப்பொழுது அடர்த்தியெல்லாம் மாறி அத்தனையும் வெள்ளையாக மாறிவிட்டது . நான் சொல்கிறதைக் கேட்பதற்குக் கூட உன்தலையை என் பக்கமாக சாய்த்துதான் கேட்க வேண்டியதிருக்கிறது . இல்லையா !

 கண்ணாடியில் உன்னைப் பார்ப்பதற்குக்கூட முன்பைவிட மிக நெருங்கி நின்றுதான் பார்க்க முடிகிறது . ஆண்டுகள் தோறும் உனக்கு இத்தகைய எச்சரிக்கையின் செய்திகளை அனுப்பிக் கொண்டேதான் இருந்தேன் . ஆனால் நீதான் ஆயத்தமாக இல்லை . இப்பொழுது நேரமாகிறது புறப்படலாம் வா ” என்ற சொல் கடுமையாகவே இருந்தது .

 உங்களுக்கு இதுபோன்ற எச்சரிக்கைகள் வந்து கொண்டே இருக்கலாம் . காலம் தாமதமாவதற்கு முன் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து இரட்சிக்கப்படுங்கள் . 

மரணத்தை சந்திக்கும் தவிர்க்க முடியாத நாளுக்கு அழைப்பு வருவதற்கு முன் அவரை இப்பொழுதே தேடுங்கள் . தேவனுடைய வார்த்தை 2005 மார்ச் 7/7 




216  நற்செய்தியை பறைசாற்றுங்கள்

 ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஆராதனைக்குப்பின் போதகரும் அவருடைய பதினொரு வயது மகனும் அவர்களிருந்த நகரத்திற்குள் சென்று இயேசு கிறிஸ்துவின் நற்செய்தி அடங்கிய துண்டுப்பிரதிகளை ( Gospel Tracts ) வீடுவீடாகச் சென்று விநியோகிப்பது வழக்கம் . 

ஒரு குறிப்பிட்ட ஞாயிறு மாலை வேளையில் சரியான மழை பெய்து கொண்டிருந்தது . ஆனாலும் போதகரின் மகன் மழை பெய்வதைப் பொருட்படுத்தாமல் ரெயின் கோட்டை அணிந்துகொண்டு " அப்பா , நான் ரெடி ” என்று சொன்னான் . “ எதற்கு ரெடி ? ” என்று அப்பா கேட்டார் . “ என்ன அப்பா அப்படிக் கேட்கிறீங்க ? நாம் இருவரும் கைப்பிரதிகள் கொடுக்கப் போகவேண்டாமா ? என்றான் .

 “ மகனே , இன்று மழை பெய்து கொண்டிருக்கிறது . அதோடு குளிராகவுமிருக் கிறது . ” என்று அப்பா வார்த்தையை இழுந்தார் . மகன் அப்பாவை ஆச்சரியமாகப் பார்த்தான் . “ அப்பா , மழை பெய்து கொண்டிருந்தாலும் நரகத்திற்குப் போகிறவர்கள் போய்கொண்டுதானே இருப்பார்கள் . இல்லையா அப்பா ” என்றான் . அப்பா பதில் சொல்லத் தயங்கினார் . “ இல்லை , மகனே மழை பெய்கிறது . குளிராகவும் இருக்கிறது . இதில் எப்படிச் செய்வது ? ” என்றார் . 

மகன் ஏமாற்றமடைந்த வனாய் சோர்ந்துபோய் நின்றான் . “ அப்படியானால் இன்றைக்கு நான் மட்டும் போகிறேன் . தயவுசெய்து என்னை அனுமதியுங்கள் ” என்று குழந்தைகளுக்குரிய கெஞ்சுதலோடு கேட்டான் . அப்பா மகனைத் தனியாக அனுப்புவதற்குத் தயங்கினார் . ஆனாலும் “ சரி மகனே போய்வா , கைப்பிரதிகளை எடுத்துக்கொள் . கவனமாகப் போய்வா என்று சொல்லி அனுப்பி வைத்தார் . “ நன்றி , அப்பா  ” என்று சொல்லி விட்டு மகன் புறப்பட்டான் . 

அவன் வெளியே சென்று மழையையும் , பொருட்படுத்தாமல் வீடு வீடாகச் சென்று கைப்பிரதிகளை விநியோகம் செய்தான் . வெளியே சந்திக்கிறவர்களிடத்திலும் கைப்பிரதியைக் கொடுத்தான் . இரண்டு  மணி நேரமாக பெய்து கொண்டிருக்கும் மழையில் அலைந்து திரிந்த படியான குளிர் அவனை மிகவும் நடுங்கச்செய்தது . ஆனாலும் கையிலிருந்து ஒரு கைப்பிரதியை விநியோகித்து விட்டு திரும்ப வேண்டும் . தெருவின் ஒரு மூலையில் குளிரின் நடுக்கத்தோடு நின்று கொண்டிருந்தான் . 

ஆட்கள் நடமாட்டம் இல்லை . எதிரிலுள்ள வீட்டிற்குப் போய் கொடுத்துவிடலாம் என்று எண்ணிச் சாலையைக் கடந்து மறுபுறம் சென்றான் . வீட்டின் கதவு அடைக்கப்பட்டிருந்தது . அழைப்பு மணி பட்டனை அழுத்தினான் . உள்ளே மணி ஓசை ஒலித்தது . ஆனால் யாரும் வந்து திறக்கவில்லை . மீண்டும் மீண்டும் மணி யோசையை ஒலித்தும் எந்த பதிலுமில்லை . கடைசியாக அச்சிறுவன் திரும்பிவிடலாம் என்று தீர்மானித்தான் . ஆனாலும் அவன் உள் மனதில் மீண்டும் முயற்சித்துப் பார்க்கலாம் என்று தோன்றியது . மீண்டும் அழைப்பு மணியை ஒலிக்கச் செய்தான் . அப்பொழுதும் பதில் இல்லை .

 இப்பொழுது கதவைத் தட்ட ஆரம்பித்தான் . பதில் இல்லை . மீண்டும் தட்டினான் . பொறுத்திருந்தே பார்த்து விடுவோமே என் முன் வராந்தாவில் காத்திருந்தான் . சிறிது நேரம் கழித்து மெதுவாகக் கதவு திறந்தது . மிகுந்த துக்க முகத்தோடு வயது முதிர்ந்த ஒரு பெண்மணி கதவண்டை வந்து நின்றார்கள் . மெல்லிய குரலில் , “ மகனே , உனக்கு என்னவேண்டும் ? " என்று முகத்தில் புன்னகையை வருவித்துக்கொண்டு கேட்டார்கள் . “

 மேடம் , உங்களை தொந்தரவு செய்வதாகத் தோன்றினால் தயவு செய்து மன்னித்துக்கொள்ளுங்கள் . இயேசுவின் அன்பைக்குறித்து உங்களுக்கு சொல்ல வந்திருக்கிறேன் . ஜீவனுக்குள் குதித்தல் ( Leap to Life ) என்ற நற்செய்தி கைப்பிரதிகளை நான் விநியோகித்து வருகிறேன் . இது என் கையிலிருக்கும் கடைசிப்பிரதி . அதை உங்களுக்குக் கொடுப்பதற்காக வந்தேன் . " என்று சொல்லிக்கொண்டே அந்தக் கைப்பிரதியைக் கொடுத்துவிட்டுத் திரும்பினான் . " நன்றி மகனே , ஆண்டவர் உன்னை ஆசீர்வதிப்பாராக ” என்று அந்த வயதான அம்மையார் சொன்னார்கள் . 

இது நடந்த மறு ஞாயிறு காலை ஆராதனையின் போது போதகர் ஆராதனையை ஆரம்பித்தார் . ஆராதனையின் போது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் " உங்களில் யாராவது உங்களது சாட்சிகளைப் பகிர்ந்து கொள்ள விருமாறாகளா ? என்று கேட்டார் . ஆலயத்தின் பின்வரிசையில் அமர்ந்திருந்த ஒரு முதிர்வயதான பெண்மணி மெதுவாக எழுந்து நின்றார்கள் . அந்த அம்மையார் பேச ஆரம்பிக்கும்போதே அவர்களுடைய முகத்தில் மகிமையான ஒரு பிரகாசத்தைக் காண முடிந்தது . 

“ என்னை இந்த சபையிலுள்ள யாருக்கும் தெரியாது , இதற்கு முன்பு நான் இந்த சபைக்கு வந்ததுமில்லை . போன ஞாயிற்றுக் கிழமைக்கு முன்புவரை நான் ஒரு கிறிஸ்தவள் அல்ல . என் கணவர் இந்த உலகத்தில் என்னைத் தனிமையாக விட்டுவிட்டு சில காலத்திற்கு முன் கடந்துபோய்விட்டார் . 

போன ஞாயிற்றுகிழமை மிகவும் குளிரான நாள் . மழையும் பெய்து கொண்டி ருந்தது . அன்று இரவும் என்னுடைய இருதயமும் அந்த நிலையில்தான் இருந்தது . நான் அன்று என் வாழ்க்கையில் விரக்தி நிலையின் எல்லைக்கே வந்துவிட்டேன் . அதற்கு மேல் இவ்வுலகத்தில் வாழும் நம்பிக்கையும் மனதிடமும் எனக்கு இல்லை . ஆகவே நான் ஒரு கயிரையும் நாற்காலியையும் எடுத்துக்கொண்டு என் வீட்டிலுள்ள மேலறைக்குச் சென்றேன் . அங்கு சென்று சாமான்கள் போடும் பரண் ( Attic ) ஒன்று இருக்கிறது . பரணுக்கு ஏறும்படிக் கட்டில் ஏறிகயிற்றின் ஒரு முனையை கூரையிலுள்ள உத்திரத்தில் கட்டினேன் . பரணை விட்டுக்கீழே இறங்கி வந்து நாற்காலியில் ஏறி நின்று கயிற்றின் மறுமுனையில் என் கழுத்தில் சுருக்கு முடிச்சாகக் கட்டினேன் . தனிமை யில் , உடைந்த உள்ளத்தோடு நாற்காலியிலேயே சிறிது நேரம் நின்றேன் . 

நான் நாற்காலியிலிருந்து குதிக்கப்போகும் நேரத்தில் என்னுடைய வீட்டின் அழைப்பு மணி தொடர்ந்து அடித்தது . கீழேசென்று அழைத்தவரைச் சந்தித்துவிட்டு வருவோமா வேண்டாமா என்ற ஒரு மனப்போராட்டம் . பொதுவாக என்னைத் தேடி யாரும் பார்க்க வருவதில்லை . ஆனால் இன்று தொடர்ந்து அழைப்பு மணி அடிப்பதால் அழைத்தவரை சந்தித்து அனுப்பி வைத்துவிட்டு வந்து இதைச் செய்துவிடலாம் என்று எண்ணம் ஏற்பட்டது . இப்பொழுது கதவு தடதடவென்று தட்டப்பட்டது . 

இப்பொழுது கழுத்தில் மாட்டிய கயிறை கழட்டிவிட்டு நாற்காலியை விட்டு கீழே இறங்கி வந்து கதவைத் திறந்தேன் . நான் கதவைத் திறந்தபோது முன் வராந்தாவின் கதவு ஓரத்தில் தேவ தூதனைப்போல பிரகாசமான சிரித்த முகத்துடன் ஒரு சிறுவன் நின்று கொண்டிருந்தான் . 

அப்படிப்பட்டதொரு காட்சியை என் வாழ்நாட்களில கண்டதில்லை . அச்சிறுவனின் புன்சிரிப்பை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது . அவன் வாயிலிருந்து உதிர்ந்த வார்த்தைகள் என்றோ மரித்திருந்த என் இருதயத்தை உயிர்ப்பித்தது . “ ஜீவனுக்குள் குதித்தல் " ( Leap to Life ) என்று அவன் கையில் வைத்திருந்த கைப்பிரதியின் தலைப்பைப் புன் சிரிப்போடு சொல்லித் தொடர்ந்தான் . “ மேடம் , இயேசுவின் அன்பைக் குறித்து உங்களுக்குச் சொல்ல வந்திருக்கிறேன் ” என்று சொல்லி இப்பொழுது நான் கையில் வைத்திருக்கிற சுவிசேஷ கைப்பிரதியை என்னிடத்தில் கொடுத்தான் . 

அச்சிறிய தூதன் மீண்டும் கடும் குளிரிலும் மழைக்குள் சென்று மறைந்துவிட்டான் . நான் கதவை அடைத்துவிட்டு அந்தக் கைப்பிரதியை ஒவ்வொரு வார்த்தையாக மிகக்கவனமாகப் படித்தேன் . நான் மேல் அறைக்குச் சென்று கூரை உத்திரத்தில் கட்டியிருந்த கயிற்றையும் அங்கு வைத்திருந்த நாற்காலியை எடுத்துக்கொண்டு கீழறைக்கு வந்து விட்டேன் . இனிமேல் அந்தக் கயிற்றுக்கு வேலையில்லை .

 நான் இப்பொழுது மிகுந்த மகிழ்ச்சியோடிருக்கிறேன் . இப்பொழுது நான் இராஜாதி இராஜாவின் பிள்ளை . அந்தக் கைப்பிரதியின் பின்பக்கம் இந்த சபையின் முகவரி இருந்தது . ஆகவே நேரில் வந்து உங்களுக்கு நன்றி சொல்லவே வந்தேன் . தேவனின் சிறிய தூதன் சரியான நேரத்தில் வராதிருந்தால் ஜீவனுக்குள் குதித்தல் ( Leap to Life ) என்ற கைப்பிரதி எனக்குக் கிடைக்காதிருந்திருக்குமானால ் நான் மரணத்திற்குள் குதித்திருப்பேன் ( Leap to Death ) என் ஆத்துமா நித்திய நரகத்திற்குச் சென்றிருக்கும் . "

 சபையிலிருந்த எல்லோருடைய கண்களும் கண்ணீரால் நனைந்தன . சபையார் அனைவரும் ஆலயத்தில் கூரை பிளக்கும் அளவுக்கு இராஜாதி இராஜாவைத் துதித்து ஆரவாரித்தனர் . ஆராதனை முடித்து போதகர் பீடத்திலிருந்து இறங்கி வந்து முன் வரிசையில் உட்கார்ந்திருந்த தனது மகனை கட்டி அணைத்து மகிழ்ச்சியால் கண்ணீர் சொரிந்தார் . ஒரு சபைக்கு இதுதான் மகிமையான நேரம் . ஒரு தகப்பன் அன்பின் நிறைவோடு மகனைக் கனப்படுத்தும் நேரம் . பரலோகத்தில் பரலோக பிதாவுக்கும் , தேவதூதர்களுக்கு மத்தியில் மிகுந்த சந்தோஷம் நம்முடைய பரலோக பிதா தம்முடைய ஒரே குமாரனை குளிர்ந்த , இருண்ட உலகத்திற்குள் மனுக்குலத்தை மீட்கும் பொருட்டு அனுப்பி வைத்தார் . அவர் மூலமாக மனிதர்கள் மீட்கப்படும்போது பரலோக.. பிதாவுக்கு சந்தோஷம் . யாவரும் இதன் காரணமாக பிதாவைத் துதிப்பார்கள் . ஆகவே பிதாவானவர் அவருக்கு எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தைக் கொடுத்து அவரோடு சிங்காசனத்தில் உட்கார வைத்தார் . அதே சிலாக்கியத்தை ஜெயங்கொண்டவர்களுக்கும் அருளுகிறார் ( வெளி .3 : 21 ) என்றால் அந்தத் தனிப்பெரும் சிலாக்கியத்தை எண்ணிப்பாருங்கள் . தேவனுடைய நற்செய்தி ஒருவனுடைய வாழ்க்கையில் மாற்றத்தை கொண்டுவரும் ஆற்றல் உள்ளது . ஆகவே அந்த ஆச்சரியமான செய்தியை உங்களுக்கு அன்பானவர்களுக்கு மாத்திரமல்ல மற்றவர்க ளோடும் பகிர்ந்துகொள்ள வெட்கப்படாமல் யாவருக்கும் சொல்லுங்கள் . 

தேவனுடைய வார்த்தை 2007 பிப்ரவரி 


217 என்னை ஏன் தெரிந்து கொண்டீர் ?

 இங்கிலாந்து நாட்டின் போதகர் ஜோசப் பார்க்கரிடத்தில் ஒரு கேள்வி கேட்கப்பட்டது . “ இயேசு , யூதாஸ்காரியோத்தை ஏன் தமது சீஷராகத் தெரிந்துகொண்டார் ? ஆழ்ந்து யோசித்துப்பார்த்தார் . ஆனால் பதில் கூறமுடியவில்லை . கேள்வி அவரை திணறடித்து விட்டது . 

இந்தக் கேள்வி அவருக்கு மற்றுமொரு கேள்வியை உருவாக்கிவிட்டது . அது அவரை இன்னும் திணறடித்தது . “ என்னை ஏன் தெரிந்துகொண்டார் ? " அதுதான் அவரில் எழுந்த கேள்வி . இதே கேள்வி பலநூற்றாண்டுகளாகக் கேட்கப்பட்டு வருகிற கேள்விதான் . நாம் பாவத்தால் மேற்கொள்ளப்பட்ட நிலையில் பாவ உணர்வால் குத்தப்பட்டு வேதனையடையும்போது இயேசு கிறிஸ்துவின் இரக்கத்திற்காகக் கதறி அழுகிறோம் . 

ஆண்டவராகிய இயேசு நம்மை நேசித்து நமக்காக , நம்முடைய பாவங்களுக்காகத் தம்முடைய ஜீவனைக் கொடுத்தார் என்ற சத்தியத்தை உணர்ந்து நம்முடைய பாவங்களை அவரிடம் அறிக்கையிடும்போது அவரது மகா பெரிய இரக்கத்தினால் நமது பாவங்களிலிருந்து மன்னிப்பைப் பெறுகிறோம் . இது நமது சிந்தனைக்கு எட்டாத பெரிய காரியமாக இருக்கிறது .

 மன்னிப்பைப் பெற்ற நாம் ஆச்சரியமான மகிழ்ச்சியை அனுபவிக்கிறோம் . ' ஆண்டவரே , என்னை ஏன் தெரிந்துகொண்டீர் ? ” என்று நாம் கேட்கிறோம் . ஆனால் " நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே , தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார் ( ரோமர் 5 : 8 ) என வேதம் நமக்குத் தெளிவுப்படுத்துகிறது . அது அவருடைய பெரிய அன்பு ( SUPREME LOVE ) . 

நாம் அதற்குத் தகுதியற்ற , நிர்ப்பந்தமான நிலையில் இருந்தோம் . ஆனாலும் தம்முடைய விரித்தக் கரங்களோடும் திறந்த இருதயத்தோடும் நம்மை அணைத்துக்கொண்டு நம்முடைய காதில் தமது மெல்லிய குரலில் " நீ பாவத்தை நேசித்ததை விட நான் உன்னை நேசிக்கிறேன் ( I LOVE YOU EVEN MORE THAN YOU LOVED YOUR SIN ) என்று கூறுகிறார் . 

எவ்வளவு பெரிய அன்பு ! உண்மைதான் நாம் பாவத்தை நேசித்தோம் . ஆனாலும் அவர் நம்மை நேசித்து மன்னித்து விடுதலையாக்கினார் . " என்னை ஏன் தெரிந்து கொண்டார் ? அது நமது புத்திக்கு எட்டாத அறிவுக் கெட்டாத அன்பு ! " நாம் தேவனுடைய பிள்ளைகளென் று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு  பெரிதென்று பாருங்கள் ;
( 1 யோவான் 3 : 1 ) . 



 218வழக்காடும் தேவன் 

" தேவனே , நீர் என் நியாயத்தை விசாரித்து , பக்தியில்லாத ஜாதியாரோடு எனக்காக வழக்காடி , சூதும் அநியாயமுமான மனுஷனுக்கு என்னைத் தப்புவியும் ” ( சங் .43 : 1 ) . 

ஜோன்ஸ் , ஒப்பந்த அடிப்படையில் கட்டடம் கட்டிக்கொடுக்கும் தொழில் ( Construction Business ) செய்து நிறைய பணம் சம்பாதித்தான் . அவனது மிக நெருங்கிய உறவினரான மாமா ஒருவர் , அவர் நடத்தி வரும் ஒரு சாதாரண வியாபார நிறுவனத்துடன் சேர்ந்து தொழில் செய்யும்படி மிகவும் அன்புடன் வற்புறுத்தி அழைத்தார் . ஆகவே ஜோன்ஸ் அதற்கு சம்மதித்து , கட்டிடத் தொழிலில் சம்பாதித்து வைத்திருந்த முழுத்தொகையையும் வியாபார நிறுவனத்தில் முதலீடு செய்தான் . அந்நிறுவனத்தில் தனது மாமாவுடன் உற்சாகமாக வேலைபார்த்தான் . குறுகிய காலத்திற்குள் அந்நிறுவனம் நன்கு வளர்ந்தோங்கியது . தானும் தனது மாமாவும் செய்து வருகிற வியாபாரத்தில் நல்ல வருமானம் வருகிறது என பெருமையாகத் தன் நண்பர்களோடு பேசிக்கொள்வான் . 

ஒருநாள் அவனது மாமா , நிறுவனம் முழுவதும் தன்னுடையது தான் என்றும் , அவரே ஏக உரிமையாளர் ( Sole Owner ) என்றும் கூறி ஜோன்சை நிறுவனத்தைவிட்டு வெளியேறிவிடக்  கூறினார் . தனது மாமாவை முற்றிலும் நம்பி ஏமாற்றப்பட்டுவிட்டதை உணர்ந்து அதிர்ச்சிக் குள்ளானான் . தந்திரமாக அவர் நிறுவனத்தையும் ஜோன்ஸ் கொடுத்த முழு முதலீட்டையும் தனது முதலீடாகவே பதிவு செய்துள்ளார் என்பதையும் அறிந்து செய்வதறியாது திகைத்து நின்றான் . தனது முதலீட்டையும் போட்டு தனது முழு உழைப்பையும் கொடுத்து வளர்த்த நிறுவனத்தில் தனக்கு ஒன்றுமில்லை என வெளியேற்றியதைக் குறித்து தனது மாமா மீது மிகுந்த கோபம்கொண்டான் . அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர விரும்பினான் . 


ஜோன்ஸ் நல்ல கிறிஸ்தவன் . அவனது மாமா தேவனை அறியாத ஒரு மனிதர் , ஜோன்ஸ் தனக்கு சம்பவித்த நிலவரத்தையும் வழக்கு தொடர
விரும்புவதையும் தனது பாஸ்டரிடம் போய் சொன்னான் . 

வழக்கு தொடர நமக்கு நியாயமான காரணமும் சட்டப்பூர்வமான உரிமையும் இருப்பினும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மத்தேயு 5 : 38-48இல் சொல்லியிருக்கிற கோட்பாட்டின் படி நாம் நீதிமன்றத்திற்குச் சென்று நமது உரிமையை நிலைநாட்ட விரும்பாமல் நமது உரிமையை நாம் விட்டுக் கொடுப்போமானால் “ சர்வலோக நியாயாதிபதி ” நமக்காகச் செயல்படுவார் . அதுதான் நம்முடைய கிறிஸ்தவ வாழ்க்கைக்கான சாட்சியாக அமையும் என்று பாஸ்டர் கூறினார் . ஜோன்ஸ் அதை ஏற்றுக்கொள்ளவும் முடியாமல் நிராகரிக்கவும் முடியாமல் திகைத்து நின்றான் . எனினும் சூழ்நிலைகளை விளங்கிக்கொண்ட பாஸ்டர் தனக்கு அறிமுகமான கிறிஸ்தவ வழக்கறிஞரான ஜான் தக்கரிடம் அனுப்பி வைத்தார் . 

ஜோன்ஸ் வழக்கறிஞரின் ஆலோசனைக்காகச் சென்றான் . வழக்கறிஞர் நீதி மன்றத்திற்குச் செல்வதானால் ஏற்படும் செலவையும் தீர்ப்பு கிடைக்க ஏற்படும் காலதாமதம் குறித்தும் பாஸ்டர் கூறிய வேத ஆலோசனையின் அடிப்படையில் ( Biblical Counselling ) அவரது மாமாவுக்கு ஒரு கடிதம் அனுப்பலாம் என்று ஆலோசனை கூறினார் . 

அன்புள்ள மாமா அவர்களுக்கு , இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள் , சிலகாலம் தங்களோடு இணைந்து வியாபாரம் செய்யும் வாய்ப்பை ஆண்டவர் எனக்குத் தந்தபடியால் நான் அவருக்கு நன்றி செலுத்து கிறேன் . இப்பொழுதும் வியாபார நிறுவனத்தைவிட்டு வெளியேற்றப் பட்டாலும் என் ஆண்டவர் அவர் விரும்புகிற பாதையில் என்னை நடத்திவருகிறார் என்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் . 

எனினும் பிரபல வழக்கறிஞர் ஒருவரை சந்தித்தேன் . தங்களிடம் 40,000 டாலர் ( ரூ .20,00,000 ) கேட்டு வழக்கு தொடர எனக்கு உரிமை இருக்கிறது என்றும் அதை நிரூபிப்பதற்கான ஆதாரமும் இருக்கிறது என்றும் அவர் எனக்கு தெளிவுபடுத்தினார் . 

ஆனாலும் நான் ஒரு கிறிஸ்தவன் . என் ஆண்டவர் எனக்காக வழக்காடி நீதி செய்வார் என்று உறுதியாக நம்புகிறேன் . ஆகவேதான் இக்கடிதத்தை எழுதுகிறேன் . எனவே நீங்கள் உங்களது மனச்சாட்சியின்படி எனக்கு நீதி செய்யமுடியும் . ஒரு வேளை உங்களது மனச்சாட்சியைக் கடினப்படுத்தினாலும் என் ஆண்டவர் எனக்காக வழக்காடுவார் என்று விசுவாசிக்கிறேன் . நீதிமன்ற வாசலில் காத்திருக்காமல் தேவனின் சந்நிதியில் காத்திருக்கிறேன் . ஏனெனில் இந்த ஏழையின் வழக்கை அவர் விசாரிப்பார்  வாழ்த்துக்களுடன் முடிக்கிறேன் . அன்புள்ள , ஜோன்ஸ் ,


 கடிதம் அனுப்பிய இரண்டே வாரங்களுக்குள்ளாக ஜோன்சுக்கு 40,000 டாலருக்கு காசோலை வந்து சேர்ந்தது . நீதிமன்றத்திற்குச் சென்றிருந்தால் வழக்கு முடிய குறைந்தது 5 ஆண்டுகள் ஆகியிருக்கும் . இதே 40,000 டாலர் கிடைத்திருந்தாலும் வழக்கறிஞருக்கான செலவு நீதிமன்றச் செலவு இவற்றில் பாதி தொகை செலவாகியிருக்கும் . 

ஆனால் தனது உரிமையை நீதிமன்றத்தில் நிலைநாட்டச் செல்லாமல் வேத ஆலோசனைக்குக் கீழ்படிந்து தேவனுடைய நீதியுள்ள சிங்காசனத் திற்கு முன்பு வைக்கத் தீர்மானித்தபடியால் தேவன் அதைக் கனப் படுத்தினார் . தேவன் ஜோன்சுக்காக அவனது மாமாவின் இருதயத்தில் கிரியைசெய்து ஜோன்சுக்கு நீதி கிடைக்கச்செய்தார் . மிகப் பிரபல்யமான வழக்கறிஞர்களால் சாதிக்க முடியாததையும் தேவனால் சாதிக்கமுடியும் . 

“ நீங்கள் ஒருவரோடொருவர் வழக்காடுகிறது எவ்விதத்திலும் குற்றமாயிருக்கிறது . அப்படிச் செய்கிறதை விட நீங்கள் ஏன் அநியாயத்தைச் சகித்துக்கொள்ளுகிறதில்லை , ஏன் நஷ்டத்தைப் பொறுத்துக்கொள்ளுகிறதில்லை ( Suffer to be defrauded ) " ( 1 கொரி . 6 : 7 ) என்று வேதம் நம்மைப் போதிக்கிறது . நமது வழக்கை நாம் அவரிடம் ஒப்புவித்துவிடும் போது அவர் நமக்காக வழக்காடுவார் . “

 ஏழையா யிருக்கிறான் என்று ஏழையைக் கொள்ளையிடாதே ; சிறுமையானவனை நியாயஸ்தலத்தில் உபத்திரவப்படுத்தாதே . கர்த்தர் அவர்களுக்காக வழக்காடி , அவர்களைக் கொள்ளையிடுகிறவர்களுடைய பிராணனைக் கொள்ளையிடுவார் ” ( நீதி .22 : 22 , 23 ) என்று வேதம் தெளிவுபடுத்துகிறது . 

ஜோன்சுக்காக வழக்காடி நீதி செய்தவர் உங்களுக்கும் உதவி செய்ய வல்லவராயிருக்கிறார் . " சர்வலோக நியாயாதிபதி நீதி செய்யாதிருப்பாரோ ” ( ஆதி .18 : 25 ) . தேவனுடைய வார்த்தை 2005 ஜூன்

231-,235

231 குற்றவாளிக் கூண்டில் நான் 

அந்த நாள் என்னுடைய பதினொராவது பிறந்தநாள் . நான் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்பட்டேன் . நான் சிறுவனாயிருப்பதால் குற்றவாளி அல்ல என்று சொல்லிவிட முடியாது . ஏனெனில் நான் கையும் மெய்யுமாக பிடிபட்டவன் . எனக்கு சாக்கு போக்கு சொல்வதற்கும் ஒன்றுமில்லை . எனக்கு உதவி செய்வாரும் இல்லை . அந்த நம்பிக்கையுமில்லை . குற்றவாளிக் கூண்டிற்குள் என்னைத் தள்ளி அதன் வாசல் அடைக்கப்பட்டது . முரட்டு உருவமான போலீஸ்காரர் அந்த வாசலில் பாய்ந்து கொண்டு இவன் தண்டனை பெறப்போவது நிச்சயம் என்ற திருப்தியோடு என்னை அலட்சியமாகப் பார்த்தார் . நான் முற்றும் உதவியற்றவனாக குற்ற உணர்வோடு பரிதாபத்திற்குரிய நிலையில் நின்றேன் .

 நீதிபதி அவருடைய சிங்காசனம் போன்ற நாற்காலியில் வந்து அமர்ந்தார் . அவருடைய முகத்தை நேருக்கு நேர் பார்க்கும் தைரியம் எனக்கில்லை . எனக்கு இரக்கம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுமில்லை . ஆகவே நீதிபதியின் தீர்ப்பு எனக்கு பேரழிவாகவேயிருக்கும் . நீதிமன்றத்தில் கூட்டம் நிறைந்திருந்தது . எல்லோரும் குற்றவாளிக் கூண்டிலிருக்கும் என்னையே பார்த்தனர் . " நீதிபதி அவர்களே , சட்டத்தில் இவனுக்கு எவ்வளவு தண்டனையுண்டோ அந்தத் தண்டனையை கொடுத்து சமுதாயத்தைக் காப்பாற்றுங்கள் " என்று சொல்வதுபோல் தோன்றியது . 

நான் குற்றவாளிக் கூண்டிற்குள் குனிந்து உட்கார்ந்து கொண்டேன் . " அமைதி , அமைதி ' ' என்று நீதிமன்ற எழுத்தர் குரல் கொடுத்து நீதிமன்ற வேலை துவங்கியது . 

முதல் வழக்கு என்னுடைய வழக்குத்தான் . " இவனுக்காக அவனுடைய பிரதிநிதி யார் ? என்று நீதிபதி , எழுத்தரைக் கேட்டார் . “ பிரதிநிதி " என்ற வார்த்தையின் அர்த்தம் எனக்குத் தெரியாது . என்னுடைய தண்டனையை நிறைவேற்றுபவராக இருக்கும் என்று நினைத்துக் கொண்டேன் .

 அவனுக்கு யாருமே இல்லை " என்று எழுத்தர் சொன்னார் . நீதிபதி , நீதிமன்றத்திற்கு வந்திருந்த வழக்கறிஞர்களில் ஒருவரைப் பார்த்து " இந்தப் பையனின் வழக்கை நடத்தும் பிரதிநிதியாக உங்களை நியமிக்கிறேன் " என்று சொன்னார் . அந்த வழக்கறிஞர் மெதுவாக எழுந்து நாற்காலிகளை விலக்கிக்கொண்டு கூண்டின் கதவைத்திறந்து என் அருகே வந்தார் . நான் உட்கார்ந்தேயிருந்தேன் . பயந்து நடுங்கிக் கொண்டிருந்தேன் . என்னுடைய இருதயமே நின்றுவிடுவது போலிருந்தது .

 நான் அவருடைய முகத்தைப் பார்த்தேன் . அவரது முகத்தைப் பார்த்தது எனக்கு முற்றிலும் பெரிய ஆச்சரியமாயிருந்தது . மிகவும் பலமான உறுதியான முகத்தோற்றம் . ஆனால் சாந்தமும் அமைதியுமான முகபாவம் . அவர் என்னை உற்றுநோக்கினார் . அவருடைய கண்களைப் பார்ப்பதற்கு இன்னும் ஆச்சரியமாக இருந்தது . அந்தப் பார்வையிலிருந்த கனிவான அன்பு என்னை ஊடுருவிப் பாய்வது போலிருந்தது . அவர் குனிந்து என் கையைப்பற்றித் தூக்கி அருகிலிருந்த நாற்காலியில் உட்காரவைத்தார் . 

அவரும் ஒரு நாற்காலியை இழுத்து என் அருகில் போட்டு உட்கார்ந்தார் . அவருடைய கண்கள் என்னை மிகவும் ஆழ்ந்து பார்த்துக்கொண்டே என்னை விசா ரிக்க ஆரம்பித்தார் . 

“ நண்பனே , நீ குற்றவாளியா ? என்று கேட்டார் . அவரிடத்தில் பொய்சொல்ல என் நாவு எழவில்லை . நடுங்கிய குரலோடு எச்சிலை விழுங்கிக்கொண்டே “ ஆம் , ஐயா , நான் குற்றவாளிதான் ” என்று மெல்லிய குரலில் சொன்னேன் . இதைச் சொல்லி முடித்தவுடன் என்னால் கட்டுப்படுத்த முடியாத அளவு அழ ஆரம்பித்துவிட்டேன் . அழுகையை ஒருவாறு கட்டுப்படுத்திக் கொண்டு என் இருதயத்தில் அடக்கிவைத்திருந்த எல்லாவற்றையும் அவரிடத்தில் சொன்னேன் . பொறுமையோடு கேட்டுவிட்டு “ நல்லது , நீதிபதியிடம் குற்றத்தை ஒப்புக்கொண்டு அவரது இரக்கத்திற்கு ஒப்புக்கொடுப்பது தான் நல்லது என்று உனக்குத் தோன்றுகிறதா ?

 “ இரக்கத்திற்கு ஒப்புக்கொடுப்பது என்றால் என்னவென்று எனக்குத் தெரியவில்லை . ஆனாலும் அவர் என்ன முடிவு எடுத்தாலும் நிச்சயமாக அது நன்மையாகத்தானிருக்கும் என்ற நம்பிக்கை எனக்கிருந்தது . “ ஆம் என்ற என் தலையில் பரிவோடு தட்டிக்கொடுத்து விட்டு எழுந்து நீதிபதியின் பக்கம் சென்றார் . 

“ கனம் நீதிபதி அவர்களே , பல ஆண்டுகளாக இந்த நீதிமன்றத்தில் நான் வழக்கறிஞராக பணியாற்றி வருவதில் நான் பெருமைப்படுகிறேன் . குற்றவாளிகளிடமிருந்து சமுதாயம் பாதுகாக்கப்படவேண்டுமென்பது முக்கியமான காரியமாக இருந்தாலும் நீதியின் நோக்கமும் இலக்கும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதும் அதற்கு இணையான பாக்கியமான காரியம்தான் . 

இந்த நோக்கில் இரக்கம் காட்டுவது என்பதும் இந்நீதிமன்றத்தின் மனப்பாங்காக இருக்கும் என்று நான் நம்புகிறேன் . இந்த சிறுபையனுக்காக வழக்கை நடத்த என்னை நியமித்ததில் நான் இந்நீதிமன்றத்திற்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் .

 இச்சிறுவனை நான் விசாரித்தபோது உண்மையிலேயே அவன் இருதயம் உடைந்தது . அவனது தவறுகள் எல்லாவற்றிற்காகவும் மனம் வருந்துவது மாத்திர மல்ல இந்நீதிமன்றத்தில் அவனது குற்றத்தைக்குறித்து ஒப்புதல் வாக்குமூலம் ( confession ) கொடுக்கவும் ஆயத்தமாயிருக்கிறான் .
 இந்நீதிமன்றத்தில் இரக்கத்திற்கு இச்சிறுவன் கெஞ்சி நிற்கிறான் " 

கீழே அமர்ந்திருந்த நான் எனது வழக்கறிஞரின் நீண்ட கோட்டின் தொங்கலைப் பிடித்துக்கொண்டேன் . அப்படி பிடித்துக்கொண்டால் எப்படியேனும் என்னை வெளியேற்றி விடுவார் என்ற நம்பிக்கை ஏற்பட்டது . அவர் பேசவேண்டியதை முடித்துவிட்டார் என்று நினைத்தேன் . 

ஆனால் அது துவக்கவுரைதான் என்பதை பின்னர்தான் விளங்கிக்கொண்டேன் . நீதிமன்றத்தில் பெரிய அமைதி நிலவியது . எல்லோரும் அவரையே கவனித்துக்கொண்டிருந்தார்கள் . மீண்டும் தொடர்ந்தார் . 

வறுமையின் காரணமாக அன்றாட அடிப்படைத் தேவைக்குக் கூட பணமில்லாமல் அநாதையாக ஏங்கி நிற்கும் என்னுடைய நிலவரத்தை விவரித்தார் . பசியோடு திரியும் ஓநாய்கள் மத்தியில் மேய்ப்பனில்லாத ஆட்டுக்குட்டியைப்போல பாதுகாப்பற்ற நிலவரத்தில் வாழும் நிலையையும் , இந்தச் சூழ்நிலையில் சிறுவனாகிய எனக்கு ஏற்படக்கூடிய மனப்போராட்டங்களையும் படம்பிடித்துக் காட்டியது போல் விவரித்தார் . 

என் அருகில் நின்ற போலீஸ்காரருடைய கண்களில் கூட கண்ணீர் நிரம்பியதைக் கண்டேன் . கடின நெஞ்சுடையவர்கள் கூட உருகும் நிலையில் அவர் என்னுடைய நிலவரத்தை எடுத்துரைத்தார் . அவர் வாயிலிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தைகளையும் ஆச்சரியத்தோடு கேட்டு அவருடைய முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன் . நான் பெருமூச்சுவிட்டேன் . என்னுடைய ஆத்துமாவில் நம்பிக்கையும் ஜீவனும் இறங்கியது போலிருந்தது . என்னுடைய வழக்கறிஞர் என்ற உறவு நிலையையும் தாண்டி அவர் மீது எனக்கு அளவற்ற பாசம் ஏற்பட்டது .

 கனம் , நீதிபதி அவர்களே , இச்சிறுவனுக்கு இரக்கம் காட்டி அவனை மன்னித்து விடுதலை செய்வீர்களானால் நானே அவனுக்கு பொறுப் பாளராயிருந்து ( guardian ) அவனுக்கு தங்கும் வீடும் பாதுகாப்புமளிக்க நான் உறுதியளிக்கிறேன் . அவனது படிப்புக்கான காரியத்தையும் நானே கவனித்துக் கொள்கிறேன் . சமுதாயத்திற்கு பயனுள்ள ஒரு நல்ல குடிமகனாக அவனை நான் மாற்றித்தருகிறேன் என்றும் நான் உறுதியளிக்கிறேன் " இதைச் சொல்லி முடிக்கவும் நன்றியால் என் இருதயம் நிறைந்து வெடித்துவிடுவது போலிருந்தது . என்னால் கட்டுப் படுத்த முடியாமல் சத்தமிட்டு அழுதுவிட்டேன் .

 என்னுடைய வழக்கறிஞரை கட்டிப்பிடித்து அவரது கன்னத்தில் முத்தமிடவேண்டும் போல் எனக்குத் தோன்றியது . நீதிமன்றத்தில் அவருடைய பேச்சின் மத்தியில் சில வேளைகளில்

 " கனம் நீதிபதி அவர்களே " ( Your honor ) என்று நீதிபதியைக் கூறுவதற்குப் பதிலாக “ என் தகப்பனே " ( my father ) என்று கூறியதை நான் கவனித்தேன் . அது என் இருதயத்தைத் தொட்டது . ஒருவேளை நீதிபதி அவருடைய மகனையே எனக்கு வழக்கறிஞராக நியமித்திருப் பாரானால் நிச்சயமாக அவரது உருக்கமான பேச்சுக்கு இரக்கம் காட்டுவார் . அவரது பேச்சில் அநேகர் கண்கலங்கியதையும் அநேகருடைய கன்னத்தில் கண்ணீர் வழிந்தோடியதையும் கண்டேன் . 

என் அருகிலிருந்த போலீஸ்காரர் தனது தொப்பியை கையில் எடுத்துக்கொண்டு கைக் குட்டையால் முகத்தை மறைத்து கண்ணீரைத் துடைப்பதைக் கண்டேன் . உண்மையிலேயே என் வழக்கின் விசாரணை முற்றிலும் விநோதமா யிருந்தது . எனது வழக்கறிஞர் அவரது உச்சக்கட்ட பேச்சிற்கு வந்தார் .

 நீதிபதியை நோக்கி " என் தகப்பனே , இந்தத் சிறுபையன் வேறு யாருமில்லை என்னுடைய தம்பிதான் ” விவரிக்க முடியா மகிழ்ச்சி என் இருதயத்தை நிறைத்தது . நீதிபதி என்னுடைய வழக்கறிஞரின் தகப்பனான என்னுடைய வழக்கறிஞர் எனக்கு அண்ணனானால் நீதிபதி எனக்குத் தகப்பன் தானே . 

இந்த எண்ணம் என்னில் வந்ததும் என்னால் அடக்கிக்கொள்ள முடியவில்லை . நான் நீதிபதிக்கு நேராக ஓடினேன் . அவரைப் பற்றிக்கொண்டேன் அவரும் என்னை அணைத்துக் கொண்டார் . என்னை புதிய சிருஷ்டியாக்கினார் . அவரது ஆசனத்தை விட்டு எழுந்து என்னுடைய இரு கரங்களையும் உயர்த்திப் படித்து “ என்னோடு சேர்ந்து சந்தோஷபடுங்கள் என் குமாரனாகிய இவன் மெம்பவம் உயிர்க்கான் . காணாமல் போனான் திரும்பவும் காணப்பட்டான் என்றார் . கூடியிருந்த அனைவரும் கட்டுப்படுத்த முடியாமல் அழுதனர் . 

சிலர் மகிழ்ந்து ஆரவாரம் செய்தனர் . என்னையும் கூட கட்டி அணைக்க விரும்பினார்கள் . என்னுடைய வழக்கறிஞரை மனமாரப் பாராட்டின் டினார்கள் . நடந்த சம்பவம் நீதிமன்றத்தில் அல்ல என்று நான் சொல்லத் தேவையில்லை , அது சபையில் நடந்த நிகழ்ச்சி . 

நீதி விசாரணை முந்திய கால எழுப்புதல் . தேவனுடைய வார்த்தை என்னைக் கைது செய்து குற்றவாளியாக என்னைக் கூண்டிலே நிறுத்தியது . 

அங்கே நித்திய பிதா சிங்காசனத்தில் நீதிபதியாக அமர்ந்திருந்தார் . 

இயேசு கிறிஸ்து என்னுடைய வழக்கறிஞராயிருந்து எனக்காகப் பரிந்துபேசி எனக்கு மன்னிப்பையும் நித்திய இரட்சிப்பையும் பெற்றுத் தந்தார் .

 இந்த நிகழ்ச்சியை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது . அடிமைத்தனத்தி லிருந்து நான் விடுதலையடைந்த நாள் இயேசு கிறிஸ்து என்னுடைய அடிமை விலங்கை உடைத்து என்னை விடுதலையாக்கினார் . " என் பிள்ளைகளே , நீங்கள் பாவஞ்செய்யாதபடிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன் ; ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார் ” ( 1 யோவா .2 : 1 ) . 

தேவனுடைய வார்த்தை 1998 ஜூன்




232  எனக்காக இருவர் மரித்தார்கள் 

ஒரு சமயத்தில் கப்பல் ஒன்று மூழ்கும் தருவாயிலிருந்தது . ஆபத்தில் தப்பிச்செல்ல கப்பலில் பல படகுகள் இருந்தன . ஆனால் கப்பலிலுள்ளோர் அனைவரும் ஒரே நேரத்தில் தப்பிச் செல்லும் அளவுக்குப் படகுகள் இல்லை . ஆகவே கப்பல் அதிகாரி பயணிகளின் பெயரில் சீட்டுப்போட்டு சீட்டுவிழுந்தவர்களுக்குத் தப்பிச்செல்ல முன்னுரிமை கொடுக்கப்பட்டது . அப்பொழுது அப்படி முன்னுரிமை பெறாத ஒருவர் மரணத்தைச் சந்திக்கப் பயந்து பயங்கரமாக பீதியில் அலறினார் . " யாராவது எனக்கு உதவி செய்யமாட்டீர்களா ? " என்று தப்பிச்செல்ல முன்னுரிமை பெற்றவர்களைப் பார்த்து பரிதாபமாகக்  கெஞ்சினார் . அப்பொழுது தப்பிச்செல்ல அனுமதிச்சீட்டு பெற்ற ஒருவர் அவரது பரிதாப நிலவரத்திற்கு இரங்கி தான் செல்ல இருந்த இடத்தை அவருக்குக் கொடுத்தார் . “ 

நண்பனே , நான் மரிக்க ஆயத்தமா யிருக்கிறேன் . ஆகவே என்னுடைய இடத்தை உமக்குத் தருகிறேன் . ஆனால் ஒரு நிபந்தனை . இயேசு கிறிஸ்துவிடம் உங்களுடைய | பாவங்களை அறிக்கை செய்து மன்னிப்பைப் பெற்றுக்கொள்ள வேண்டும் . 

நித்திய வாழ்வில் நான் ஆண்டவராகிய இயேசுவுட னிருக்கும்போது நீங்கள் என்னை வந்து சந்திக்க வரவேண்டும் . உங்கள் பேரிலும் கிறிஸ்துவின் பேரிலும் உள்ள அன்பினிமித்தம் இதைச் செய்கிறேன் " என்று கூறி , தான் வைத்திருந்த சீட்டை அவர் பெயருக்கு மாற்றிக்கொடுத்தார் . 

மரணத்தைச் சந்திக்க ஆயத்தமாக இருந்தவர் கப்பல் மூழ்கியபோது கடலில் மூழ்கி மரித்தார் . மரணத்தைச் சந்திக்கப் பயந்தவர் படகில் ஏறி உயிர்தப்பினார் . ஆனாலும் அவருடைய தியாகச் செயல் தப்பித்த இவரை உருக்கிற்று . எனக்காக ஜீவனைக் கொடுத்தாரே ! இதைவிடப் பெரிய தியாகம் என்ன இருக்க முடியும் ! “ கிறிஸ்துவின் அன்பினிமித்தம் இதைச் செய்கிறேன் ” என்று சொன்னாரே ! முழு மனுக்குலத்தின் பாவத்திற்காக , பாவத்தையும் பாவத்தின் தண்டனையாகிய மரணத்தையும் தம்மேல் ஏற்றுக் கொண்டு சிலுவையில் கொடிய மரணத்தை ஏற்றாரே ! என்றெல்லாம் அவர் ஆழ்ந்து சிந்திக்க ஆரம்பித்தார் . தன்னுடைய பாவங்களுக்கு மனஸ்தாபப்பட்டு இயேசு கிறிஸ்துவின் அதரிசனமான கரங்களில் விழுந்தார் . பாவத்தின் அழிவுக்குத் தப்பித்துக்கொண்டார் . 

அவர் எப்பொழுதும் மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளும்போது “ எனக்காக இரண்டுபேர் மரித்தார்கள் ஆகவே நான் பிழைத்திருக்கிறேன் ” என்று கூறுவார் . அந்த இருவர் யார் ? ஒருவர் நமது பாவங்களுக்காக மரித்த ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து , மற்றவர் தன்னுடைய இடத்தை அவருக்குக் கொடுத்துவிட்டு கடலில் மூழ்கி மரித்த அந்த மனிதர் . இத்தியாக அன்பினைச் சிந்தித்துப்பாருங்கள் . 

“ நீதிமானுக்காக ஒருவன் மரிக்கிறது அரிது ; நல்லவனுக்காக ஒருவேளை ஒருவன் மரிக்கத் துணிவான் . நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே , தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார் ” ( ரோம .5 : 7,8 ) .



233 இரட்சிப்பை ஏன் பகிர்ந்து கொள்ளவில்லை ? 

நாம் இருவரும் துவக்கப்பள்ளியில் சந்தித்தோம் . உனக்கு நினைவிருக்கிறதா ? முதலில் நீ என்னை விரும்பவில்லை . ஏனெனில் உன் தாயைக் குறித்து குறைவான ஒரு வார்த்தை நான் சொல்லிவிட்டேன் என்பதற்காக . ஆனால் நான் உனக்கு ஒரு கரடி பொம்மை வாங்கிக் கொடுத்து என்னுடைய தவறுக்காக வருத்தம் தெரிவித்தேன் . கடைசியாக உன்னை உன் வீட்டில் சந்திக்கும்போது கூட அந்த பொம்மை உன் வீட்டிலிருந்தது . 

நாம் இருவரும் பள்ளி நாட்கள் முழுவதும் மிக நெருக்கமான நண்பர்களாகிவிட்டோம் . இல்லையா ? நாம் இருவரும் ஒன்றாகவே வகுப்பறைக்குச் சென்றோம் . வீட்டுப்பாடம் எழுதுவதற்கு நாம் ஒருவருக்கொருவர் உதவி செய்துகொண்டோம் . நமது நட்பையும் நாம் விரும்புகிற ஒவ்வொரு காரியத்தையும் நாம் பகிர்ந்துகொண்டோம் . நாம் எதைச் செய்தாலும் ஒன்றாகவே செய்தோம் . நாம் மணலில் வீடுகட்டி பொம்மைகள் வைத்து விளையாடினோம் . உன்னோடு கொண்டிருந்த நட்பு என் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய மகி்ழ்ச்சியைத் தந்தது தெரியுமா ? நாம் ஒன்றாக சிரித்தோம் , மகிழ்ந்தோம் . உயர்நிலைப்பள்ளிக்கு நாம் வந்தபோது என்னென்ன காரியங்களை யெல்லாம் பேசி மகிழ்ந்தோம் . எந்த சந்தர்ப்பத்திலும் நாம் சண்டை போட்டுக் கொண்டதேயில்லை .

 நம்முடைய பெற்றோர்களைக் குறித்து விளையாட்டுப் போட்டிகளைக் குறித்து , அன்பைக் குறித்து இன்னும் வாழ்க்கையில் எத்தனையோ காரியங்களைக் குறித்தெல்லாம் நாம் பேசியிருக்கிறோம் . நம்மில் யாரும் மற்றவர்களிடம் சொல்லமாட்டோம் என்ற நம்பிக்கையின் காரணமாக சில ஆழமான இரகசியங்களைக் கூட நாம் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டிருக்கிறோம் . 

நம்முடைய உயர்வுகளையும் தாழ்வுகளையும் நம்முடைய எதிர்கால நம்பிக்கைகளையும் , திட்டங்களையும் குறித்து நாம் எவ்வளவோ பேசியிருக்கிறோம் . உண்மையிலேயே என்னைக் குறித்து உனக்கு அக்கறை உண்டு , கரிசனை உண்டு என்று நினைத்தேன் . எனக்கு நலமானதையே நீ செய்வாய் என்று நினைத்திருந்தேன் . ஆனால் இப்பொழுதுதான் புரிகிறது நீ அப்படிச் செய்யவில்லை .

 நேற்று , அதிவேகமாகச் சென்ற ஒரு கார் என் முன்பாக வந்ததுதான் எனக்கு கடைசியாக நினைவிருக்கிறது . என் வாழ்க்கையில் முன் நடந்த யாவும் என் முன்பாக படம் போலத் தோன்றியது . என் பாவங்கள் எல்லாம் எனக்குத் தெரிந்தது .

 பிறகு ஒரு பெரும் காரிருள் என்னை மூடிக் கொண்டது . திடீர் காரிருள் . இப்பொழுது நான் உயிரோடில்லை . இருளில் நான் என்றென்றுமாய் ஒழிந்து போய்விட்டேன் . நீ அறிந்திருந்த இரட்சிப்பின் வழியை ஏன் நீ எனக்கு சொன்னதே இல்லை ? ஏன் ? ஏன் ?

 இப்பொழுது நான் மனஸ்தாபப்பட்டு அழுது புலம்புவதைத் தவிர வேறு ஒன்றும் என்னால் செய்யமுடியாது . நாம் இருவரும் மிக நெருக்கமான நண்பர்கள் அல்லவா ? நாம் மற்ற எல்லாக் காரியங்களையும் பேசினோமே ! இப்பொழுது இருளும் வேதனையும் பயமும் , வெட்கமும் என்னை என்றென்றுமாய் சூழ்ந்துகொண்டது . முன்பெல்லாம் என்னை ஆறுதல் படுத்தியிருக்கிறாயே ! இப்பொழுது என்னை ஆறுதல் படுத்தும்படி உன்னை நோக்கிக் கதறுகிறேன் . 

ஆனால் நீதான் இங்கே இல்லையே ! இல்லை , என்னை நீ ஆறுதல் படுத்தவேமுடியாது . உன்னுடைய நினைவு என்னுடைய வேதனையைத்தான் கூட்டுகிறது . ஏன் ? ஏன் ? நான் அழுகிறேன் , புலம்புகிறேன் , கதறுகிறேன் . 

நீ அறிந்திருந்த இயேசுவைக் குறித்து நீ ஏன் எனக்குச் சொல்லவில்லை ? நாம் நெருங்கிய நண்பர்களாயிருந்தும் என்னுடைய ஆத்துமாவைக் குறித்து நீ ஏன் கவலைபப்டவில்லை ? என்னை உயிராய் நேசிக்கிறேன் என்றெல்லாம் சொன்னாயே ! உன்னுடைய சந்தோஷத்தை பகிர்ந்துகொள்ள நான் விரும்பமாட்டேன் என்று நீ நினைத்தாயா ? 

நாம் மற்ற எல்லாவற்றையும் ஒன்றாய் பகிர்ந்துகொண்டோமே ! இரட்சிப்பை மாத்திரம் ஏன் நீ என்னோடு பகிர்ந்துகொள்ளவில்லை ? இந்தக் காரியத்தை நீ எனக்குச் சொல்லாமல் மறைத்துவிட்டாய் என்பதை எண்ணும்போது என் இருதயமே பிளந்துவிடுவது போலிருக்கிறது . எங்கும் இருள் சூழ்ந்திருக்கிறது . காரிருள் கவ்வியிருக்கிறது . அக்கினியின் வேதனையை என்னால் தாங்கிக்கொள்ள முடியாமல் துடித்துக்கொண்டிருக்கிறேன் .

 நித்திய நித்தியமாக எனக்கு இந்த நிலைதான் என்பதை என்னால் எண்ணிப்பார்க்க முடியவில்லை . இந்தத் தண்டனையை என்னால்தாங்க முடியாது . எனக்கு ஒரு சொட்டுத் தண்ணீர் தரமாட்டாயா ? உன்னால் தரமுடியாது . எல்லா நேரத்தையும் நாம் ஒன்றாகவே கழித்திருக்கிறோம் என்று நினைக்கிறேன் .

 எனக்காக நீ ஜெபம் செய்திருக்கலாமே ? நீ என்னை கிறிஸ்துவுக்குள் வழி நடத்தி யிருக்கலாமே ? இப்பொழுது தூக்கம் என்பதே இல்லை . எனக்கு ஒரு நல்ல காலம் வரும் என்று கனவுகூட காண முடியாது . எனக்கு விடுதலை என்பதே கிடையாது . நித்திய நித்தியமாய் நான் வேதனைப்படுகிறேன் . எனக்கு எந்த நம்பிக்கையுமில்லை . உண்மையிலே என்மீது அன்பு கொண்டிருக்கிறாய் என்று நான் நினைத்தேன் . என்னைக் குறித்து உனக்கு கரிசனை உண்டென்று நினைத்தேன் . 

எப்படி நீ இரட்சிப்பைக் குறித்து எனக்கு சொல்லாமலிருந் தாய் ? பெற்றோரோடு நீ ஆலயத்திற்குச் சென்றாய் . ஏன் என்னை எப்போதாவது உன்னோடு ஆலயத்திற்கு கூட்டிச் சென்றிருக்கக் கூடாது ? ஏன் எனக்கு ஒரு வேதாகமத்தைத் தந்திருக்கக்கூடாது ? என் ஆத்துமாவைக்குறித்து நீ ஏன் கவலைப்படவில்லை . 

தேவனுடைய வார்த்தை 1998 நவம்பர் 5/5 



234 கடந்தோடுகிறவன் வாசிக்கட்டும்


 பொது இடங்களில் எத்தனையோ எச்சரிக்கை பலகைகள் எழுதி வைத்தாலும் எச்சரிக்கையடைவோர் மிகச்சிலரே . 

கடல் கொந்தளிப்பு குறித்தும் புயல் அபாயம் குறித்தும் வானொலி மூலம் எச்சரித்தாலும் கடலில் மீன்பிடிக்கச் சென்று மூழ்கி மடிவோரும் , கடலில் தத்தளிப்போரும் மிகுதி . 

கனமின் சக்தி எச்சரிக்கை ( Care , High Voltage ) என்பதோடு மண்டையோட்டுடன் இரண்டு எலும்புகளைப் படம் போட்டுக் காட்டினாலும் மின்சாரம் தாக்கி மடிவோருமுண்டு . 

இதேபோன்று இந்தத் தேசத்திற்கு ஆபத்து வரப்போகிறது ' என்ற எச்சரிக்கையைத் தான் ஆபகூக் தீர்க்கதரிசி ஆபகூக் இரண்டாம் அதிகாரத்தில் வலியுறுத்தி கோடிட்டுக் காட்டுகிறார் .

 ஏனென்றால் அப்படிப்பட்ட தரிசனத்தை தேவன் அவருக்குக் கொடுத்தது மாத்திரமல்ல ; “ நீ தரிசனத்தை எழுதி அதைக் கடந்தோடுகிறவன் ( பரபரப்பான வாழ்க்கையிலிருப்பவன் Busy Life ) வாசிக்கும்படிப் பலகைகளில் தீர்க்கமாய் வரை " ( ஆப .2 : 2 ) என்ற கட்டளையையும் கொடுத்திருந்தார் . ஏனென்றால் அந்தத் தரிசனங்கள் நிச்சயமாக நிறைவேறும் என்பதை மக்கள் அறிந்துகொள்ளவேண்டும் ( வச .3 ) என்பது தேவனுடைய நோக்கம் . 

என்ன எச்சரிக்கை பலகைகள் எழுதி வைத்திருப்பார் என்று யூகித்துப் பார்த்தால் இரண்டாம் அதிகாரத்தில் 5 ஐயோக்களைக் குறிப்பிடுகிறார் என்று காண்கிறோம் .

தன்னுடையதல்லாததைத் தனக்காகச் சேர்த்துக் கொள்ளுகிறவனுக்கு ஐயோ ! ( வச .6 ) 

தன் வீட்டுக்குப் பொல்லாத ஆதாயத்தைத் ( Evil Gain ) தேடு கிறவனுக்கு ஐயோ வச .9 ) 

அநியாயத்தினால் நகரத்தைப் பலப்படுத்துகிறவனுக்கு ஐயோ ! ( வச .12 ).. “

 தன் தோழருக்குக் குடிக்கக் கொடுத்துத் தன் துருத்தியை அவர்களண்டையிலே வைத்து , அவர்களுடைய நிர்வாணங்களைப் பார்க்கும்படிக்கு , அவர்களை வெறிக்கப் பண்ணுகிறவனுக்கு ஐயோ ” ( வச .15 ) “

 மரத்தைப்பார்த்து விழியென்றும் , ஊமையான கல்லைப்பார்த்து எழும்பு என்றும் சொல்லுகிறவனுக்கு ஐயோ ! ” ( வச .19 ) .

கி.மு .600 வாக்கில் இஸ்ரவேல் மக்களுக்குக் கொடுக்கப்பட்ட எச்சரிக்கை 21 ஆம் நூற்றாண்டில் வாழ்கிற நமக்கும் பொருந்தும் . வாசித்து எச்சரிக்கையடைவோம் .



235  தவறான இரயிலில் ஏறிவிட்டேனே !

 1882 ஆம் ஆண்டு ஒருநாள் ரெவ. பார்ன் ( Rev. Barne ) தன் னுடைய நெருங்கிய நண்பரின் அடக்க ஆராதனைக்கு சென்றுவிட்டு வீட்டிற்குத் திரும்பினார் . ஏதோ யோசனையில் தவறான இரயிலில் ஏறிவிட்டார் . 

டிட்காட் இரயிலில் ஏறுவதற்குப் பதிலாக போய்மிங்ஹாம் செல்லும் இரயிலில் ஏறிவிட்டார் . அவர் பயணம் செய்த இரயில் பெட்டியில் ரெவ . பார்னும் மற்றும் அறிமுகமில்லாத ஒருவரும் மாத்திரமே இருந்தனர் . 

தவறான ரயிலில் செல்கிறோம் என்ற அறிவின்மையால் எந்த பதட்டமுன்றி எதிரில் அமர்ந்திருந்த பயணியுடன் பேச ஆரம்பித்தார் . முதலாவதாக பொதுவான சில காரியங்களைக் குறித்துப் பேசினார் கள் . 

அடுத்து அந்தப் பயணியுடன் தான் தனது நெருங்கிய நண்பருடைய அடக்க ஆராதனைக்குச் சென்று திரும்புவதாகச் சென்னார் . “ நீங்கள் எத்தனை யோ அடக்க ஆராதனையில் கலந்து கொண்டிருப்பீர்கள் இல்லையா ? " என்று கேட்டார் அந்த பயணி . “ ஆம் , உண்மைதான் எத்தனையோ அடக்க ஆராதனைகளில் கலந்து கொண்டிருக்கிறேன் .

 மரணப்படுக்கையில் மரணத்திற்கு மிக அருகாமையிலிருக்கும் அநேகரையும் பல சந்தர்ப் பங்களில் நான் சந்தித்திருக்கிறேன் ” என்று பதிலளித்தார் ரெவ . பார்ன் . 

அந்தப் பயணி சிறிது நேரம் எதுவும் பேசவில்லை . சிறிய இடைவெளிக்குப் பின் “ மிகப்பெரிய பாவங்களைச் செய்த மனிதனை அவன் சாகும் வேளையில் எப்போதாவது பார்த் திருக்கிறீர்களா ? " என்ற கருத்தான தொரு கேள்வியைக் கேட்டார் . இப் படிப்பட்ட கேள்வி மிகவும் இக்கட்டான கேள்வியாக இருந்தது . '

 ஆண்டவரே , இந்தக் கேள்விக்கு நான் சரியான பதில் கொடுக்க வேண்டும் " என்று உள்ளத்தின் ஆழத்தில் ஜெபித்துக்கொண்டார் . " அப்படிப்பட்ட மனிதர்களின் சாவையும் பார்த்திருக்கிறேன் . அவர்களுடைய முடிவு மிகவும் பரிதாபமாகவே இருப்பதைக் கண்டிருக்கிறேன் . பாவங்களை அறிக்கை செய்து இயேசு கிறிஸ்துவின் மன்னிப்பை பெறாதவர் கள் ' கீழ்ப்படியாமையின் பிள்ளைகள் ' ( எபே .2 : 2 ) என்றும் 

மன்னிப்பைப் பெற்றவர்கள்  தேவனுடையப்பிள்ளைகள் ( யோவான் 1:12 )

 என்றும் வேதம் தெளிவாகக் கூறுகிறது . மனிதன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக் கொண்டாலும் தன் ஆத்து மாவை நஷ்டப்படுத்தி வருவானா னால் அவனுக்கு ஒரு இலாபமுமில்லை என்றுதான் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கூறியுள்ளார் . சாத்தான் எப்பொழுதும் கீழ்ப்படியாமையின் பிள்ளைகளின் ஆத்துமாவை நித்திய அழிவுக்கு நேராய் கொண்டு சென்று நரகத்திற்கு நடத்துகிறான் . சாத்தான் அவர்களை நரகத்திற்குக் கொண்டு செல்லும்போது ஒரு பெரும் மனப் போராட்டத்தையும் , நம்பிக்கையின் மையையும் , குழப்பத்தையும் , கதறு தலையும் காண்கிறோம் . அதே சமயத் தில் தேவனுடைய பிள்ளைகள் மரிக் கும்போது என்னுடைய பரம தகப்பனிடம் செல்லுகிறேன் ' என்ற நிச்சயத்தோடும் நிறைவான சமாதானத் தோடும் செல்வதையும் காணமுடியும் ' என்றார் .

 அந்தப் பயணி மிவும் கவனமாய்க் கேட்டுக்கொண்டிருந்தார் . ரெவ . பார்ன் மீண்டும் தொடர்ந்தார் . “ சாத்தான் நம்முடைய சமாதானத்தைத் திருடவும் , நம்மை அழிக்கவும் வருகிறான் . ஆனால் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவோ நமக்கு ஜீவனைக் கொடுக்கவும் , பரிபூரண ஜீவனாகிய நித்திய ஜீவனையளிக்கவும் வந்தார் ( யோவா .10 : 10 ) என்பது நமக்கு எவ் வளவு ஆறுதலான செய்தி என்பதைச் சிந்தித்துப் பாருங்கள் . எனக்கு விரோதமாகப் பாவஞ்செய்கிறவனோ , தன் ஆத்துமாவைச் சேதப்படுத்துகிறான் ; என்னை வெறுக்கிறவர்கள் யாவரும் மரணத்தை விரும்புகிறவர்கள் ' ( நீதி .8 : 36 ) என்று வேதம் சொல்லுகிறது . வேறுவிதமாகச் சொன்னால் பாவம் செய்கிறவர்களை சாத்தான் தூண்டி தங்களது ஜீவனையே வெறுக்கவைத்து , மரணத்தை விரும்பவைத்து , தற்கொலை செய்யவைத்து , ஆத்துமாக்களை சேதப்படுத்து ” கிறான் என்றார் . 

அந்தப் பயணி மிகவும் தொடப் பட்டவராக “ ஐயா , நான் ஒரு பெரும் பிரச்சனையிலிருக்கிறேன் . நான் இனியும் உயிர்வாழ விரும்பாமல் இன்று என் மனைவியை விட்டுவிட்டு தூர இடத்தில் சென்று தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்ற தீர்மானத்தோடு சென்று கொண்டிருக்கிறேன் . இப்பொழுது நான் என் தீர்மானத்தை மாற்றிக்கொண்டேன் . உங்களைச் சந்திக்காதிருந்தேனானால் நான் தற்கொலை செய்திருப்பேன் . நீங்கள் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் என்னுடைய இருதயத்தை ஊடுருவிச் சென்றது . என் பெற்றோர் என்னை தேவபயத்தில் வளர்த்தனர் . நானோ தேவனைவிட்டுவிட்டு விலகிச்  சென்றுவிட்டேன் . இப்பொழுது நான் உணறுகிறேன் . தேவன் என்னை மன்னிக்கவேண்டும் " என்றார் . 

இரயில் நிலையம் நெருங்கியது . டிட்காட் நிலையம் வந்துவிட்டது என்று அந்தப் பயணியிடம் விடை பெற்றுக்கொண்டு இரயிலிருந்து இறங்கினார் . அப்பொதுதான் தவறான ரயிலில் ஏறிவிட்டோமே என்பது புரிந்தது . "

 ஆண்டவரே , உம்முடைய கிருபை எவ்வளவு பெரியது ! நான் தவறான ரயிலில் ஏறினாலும் நீர் தவறாதவராய் என்னைப் பயன்படுத்தி உம்மைவிட்டு விலகிச்சென்ற ஒருவரை , கரிசனை யாய் உம்பக்கமாய் மீண்டும் திருப்பினீரே ! உம்முடைய கிருபை எவ்வளவு பெரியது ! "

 தேவனுடைய வார்த்தை 2007 அக்டோபர் 

Monday, 1 June 2020

சிறுகதை 90


 90  ஒரு சீன நாட்டு தத்துவக் கதை. 

ஒரு நாள் அப்பா, இரண்டு கிண்ணங்களில் கஞ்சி சமைத்து சாப்பாட்டு மேசை மேல் வைத்தார். ஒரு கிண்ணத்தில் கஞ்சியின் மேலே ஒரு முட்டை. அடுத்த கிண்ணத்தின் கஞ்சியின் மேலே முட்டை இல்லை. அப்பா என்னிடம் கேட்டார். உனக்கு இந்த இரண்டில் எது வேண்டுமோ எடுத்துக் கொள். நான் முட்டை இருந்த கஞ்சிக் கிண்ணத்தை எடுத்துக் கொண்டேன். என்னுடைய புத்திசாலித் தனமான முடிவுக்காக என்னை நானே பாராட்டிக் கொண்டேன்.

 அப்பா சாப்பிட ஆரம்பித்த போது எனக்கு ஆச்சரியம். அவருடைய கிண்ணத்தில் கஞ்சிக்கு அடியில் இரண்டு முட்டைகள். அவசரப்பட்டு நான் எடுத்த முடிவுக்காக வருத்தப் பட்டேன். அப்பா மென்மையாகச் சிரித்தபடி சொன்னார். 

ஒன்றை நினைவில் வைத்துக் கொள். உன் கண்கள் பார்ப்பது உண்மை இல்லாமல் போகலாம். அடுத்த நாளும் இரண்டு பெரிய கிண்ணங்களில் கஞ்சி சமைத்துச் சாப்பாட்டு மேசையில் வைத்தார். முதல் நாளைப் போலவே ஒரு கிண்ணத்தில் ஒரு முட்டை இருந்தது. இன்னும் ஒன்றில் இல்லை. அப்பா என்னிடம் கேட்டார். உனக்கு இந்த இரண்டில் எது வேண்டுமோ... நீயே எடுத்துக் கொள்!’ இந்த முறை நான் கொஞ்சம் புத்திசாலித் தனமாக யோசித்தேன்.

 முட்டை வைக்கப் படாத கிண்ணத்தை எடுத்துக் கொண்டேன். அன்றைக்கும் எனக்கு ஆச்சரியம். கிண்ணத்துக்குள் அடி வரை துழாவிப் பார்த்தும் ஒரு முட்டை கூடக் கிடைக்கவில்லை. அன்றைக்கும் அப்பா சிரித்தபடி சொன்னார்.

 `எப்போதும் அனுபவங்களின் அடிப்படையில் எதையும் நம்பக் கூடாது. ஏன் என்றால் சில நேரங்களில் வாழ்க்கை உன்னை ஏமாற்றக் கூடும். இதை ஒரு பாடமாக எடுத்துக் கொள். மூன்றாவது நாள். மறுபடியும் இரு கிண்ணங்களில் கஞ்சி சமைத்து மேஜையின் மேல் வைத்தார். வழக்கம் போல ஒரு கிண்ணத்தில் முட்டை. மற்றொன்றில் இல்லை. அப்பா கேட்டார் `நீயே தேர்ந்து எடுத்துக் கொள்’. இந்த முறை அவசரப்பட்டு கிண்ணத்தை எடுக்காமல் பொறுமையாக அவரிடம் சொன்னேன்.

 `அப்பா நீங்கள் தான் இந்தக் குடும்பத்தின் தலைவர். நீங்கள் தான் நம் குடும்பத்துக்காக உழைக்கிறீர்கள். எனவே முதலில் நீங்கள் கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். மற்றதை நான் எடுத்துக் கொள்கிறேன்’ என்றேன். அவர் முட்டை இருந்த கஞ்சிக் கிண்ணத்தை எடுத்துக் கொண்டார். நான் முட்டை இல்லாத கஞ்சியைச் சாப்பிட ஆரம்பித்தேன். அன்றைக்கும் எனக்கு ஆச்சரியம். என் கிண்ணத்தின் அடியில் இரண்டு முட்டைகள் இருந்தன. அப்பா என்னைப் பார்த்துச் சொன்னார். நினைவில் வைத்துக் கொள். மற்றவர்களுக்கு நீ நல்லது நினைக்கும் போது எல்லாம் உனக்கும் நல்லதே நடக்கும்! எப்பேர்ப்பட்ட தத்துவம் பார்த்தீர்களா... 

*அடுத்தவர்களுக்கு நல்லது நினையுங்கள். உங்களுக்கும் நல்லதே நடக்கும். இது உண்மை. என் வாழ்க்கையில் நடந்து வருகிறது.* 


சிறுகதை 255-262

255             சவப்பெட்டி காணிக்கை

பிரேசில் நாட்டின் ஒரு கிராமத்தில் இருந்த பழைய தேவாலயத்தின் சுவர்களும் கூரையும் மிகுந்த சிதிலமடைந்து இடிந்து விழும் நிலையில் இருந்தது. ஒரு ஞாயிறு ஆராதனைக்கு பின் ஆலயத்தின் பாதிரியார், "நம் ஆலயத்தை செப்பனிடும் பணிக்கு நம்மிடம் போதிய பண வசதி இல்லை, ஆகவே அதற்குத் தேவையான பணத்தை நாம் சேர்பதற்காக ஒரு Special fund raising programme-ஐ (Sale) நடத்தலாம் என முடிவு செய்துள்ளேன். உங்கள் அனைவரின் ஒத்துழைப்பும் தேவை. அன்றைய தினம்
 சம்பளம் வாங்குபவர்கள் பணமாகவும், வியாபாரம்/ தொழில் செய்பவர்கள், தாங்கள் வியாபாரம்/தொழில் செய்யும் சம்மந்தபட்ட பொருட்களையே, ஆலயத்தில் காணிக்கையாக கொண்டு வந்து வைத்தால் அதனை நாம் ஏலம் விட்டு அதன்மூலம் வருமானத்தையும் சேர்த்துக் கொள்ளலாம். கடவுள் உங்களை  ஆசீர்வதித்தற்கு ஏற்ப பொருட்களை வந்து படைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.
         பாதிரியார் குறிப்பிட்ட அந்த நாள் வந்தது, காய்கறி வியாபாரம் செய்பவர்கள் காய்கறியும், ஆடை வியாபாரம் செய்பவர்கள் ஆடையும், ஹார்ட்வேர்ஸ் வியாபாரம் செய்பவர்கள் அதற்கேற்றாற் போன்ற பொருட்களையும், மாத சம்பளம் வாங்குபவர்கள் பணத்தையும் வந்து படைத்தனர். சபையார் அவரவர் வசதிக்கு ஏற்ப செய்தனர், அப்போது கோயிலின் முகப்பு வாசலை கண்ட சபையாருக்கு அதிர்ச்சியும் ஆச்சரியமும் ஏற்பட்டது,  காரணம் ஏலத்திற்கு வந்த பொருட்களில் ஒரு புத்தம் புதிய அழகிய சவப்பெட்டியும் (Coffin box) இருந்தது. நமது ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில்  அடக்க ஆராதனை நடைபெறாதே, யார் இறந்து விட்டது? என்ன இது புதிதாக முளைத்துள்ளது? இதுவும் ஏலத்திற்கா? இதை யார் ஏலம் எடுப்பார்கள்? என ஒருவரை ஒருவர் கேட்டு முணுமுணுத்தனர். அப்போது அங்கு வந்த கோயில்பிள்ளையிடம் விசாரித்தனர். அதற்கு அவர் "அதோ கட்டம் போட்ட சட்டை போட்டுக் கொண்டு நிற்கிறாரே, அவர் கொண்டு வந்து வைத்துள்ள காணிக்கை பொருள் இது. அவர் ஒரு சவப்பெட்டி செய்யும் ஆச்சாரி (carpenter)" என்றார். சபையார் அனைவரும் அவரை ஒரு மாதிரி ஏளனமாக
 பார்த்தனர், ஆனால் அவர் எதையும் கண்டுகொள்ளவில்லை. பாதிரியார் சொன்னதுபோல், நீங்கள் என்ன தொழில் செய்து பிழைக்கிறீர்களோ, அதில் காணும் பொருட்களை படையுங்கள் என்றார்,  நான் சவப்பெட்டி (Coffin box) செய்து பிழைப்பு நடத்துகிறேன் அதனால் சவப்பெட்டியையே காணிக்கையாக வைத்துள்ளேன், என்றார்  
          ஆராதனை முடிந்தவுடன் ஏலம் தொடங்கியது. எல்லா பொருட்களையும் சபையார் போட்டி போட்டுக்கொண்டு ஏலம் எடுத்தனர். இறுதியாக அந்த சவப்பெட்டியை ஏலத்திற்கு எடுத்து வந்து நிறுத்தினர். அனைவரும் திகைத்து அமைதியாக ஒருவரை ஒருவர் பார்த்தனர், யார் முகத்திலும் ஈயாடவில்லை. அங்கு ஒரே மயான அமைதி. யார் இதை ஏலம் கேட்டு வாங்கப் போகிறார்கள் என்று எல்லாருக்கும் ஒரே Tension. யாருமே சவப்பெட்டியை வாங்கலைனனா என்ன செய்வார்கள்? 
       அப்பொழுது திடீரென சவப்பெட்டி செய்பவரின், வயதான நண்பர் ஒருவர் எழுந்து, அந்த சவப்பெட்டியை 15 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் கேட்டு விட்டு, அதனை பாதிரியாருக்கு அன்பளிப்பாக கொடுப்பதாக கூறினார், உடனே பாதிரியார் முறைத்து எழுந்தாரே பார்க்கலாம். எப்படியோ உடன் சுதாரித்துக்கொண்டு அதை 30 ஆயிரத்திற்கு அவர் ஏலம் கேட்டு அதனை P.C secretary க்கு தாம் அளிப்பதாகக் கூறினார். P.C secretary சட்டென துடித்தெழுந்து சவப்பெட்டியை 50,000 ரூபாய்க்கு ஏலம் கேட்டு அதனை உபதேசியாருக்கு அளிப்பதாக கூறினார், உடனே உபதேசியார் "என்ன Secretary என்னை சாக சொல்றீங்களா" என கோபமாக கேட்டு எழுந்து, சவப்பெட்டியை 80 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் கேட்டு அதனை அவர் அருகில் அமர்ந்திருந்த Treasurer-க்கு அளிப்பதாகக் கூறினார்.  Treasurer எழுந்து சவப்பெட்டியை ஒரு லட்சம் ரூபாய்க்கு ஏலம் கேட்டு மற்றொருவருக்கு என்றும், அந்த மற்றவர் எழுந்து அதற்குமேல் தொகை கோரி அடுத்தவர் என்று கூறவே, இப்படி மாறி மாறி சவப்பெட்டி, ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாயில் வந்து நின்றது.1தரம், 2தரம் என, கடைசியாக மாட்டினவர்கள் முழி பிதுங்கி கடுப்பாகி செய்வதறியாது நின்றனர்.  
     அப்பொழுது புதிதாக அந்த ஊருக்கு சுற்றுறுலா வந்திருந்த மிகுந்த செல்வந்தர் ஒருவர் எழுந்து அந்த சவப்பெட்டியை 2 லட்சம் ரூபாய்க்கு ஏலம் கேட்டு, அதனை சவப்பெட்டி செய்யும் அந்த ஆச்சாரிக்கே அன்பளிப்பாக கொடுப்பதாக கூறினார். அந்த ஆச்சாரியும் சந்தோஷமாக அதனை ஏற்றுக்கொண்டு புன்முறுவலுடன் தான் காணிக்கையாக படைத்த சவப்பெட்டியை தன் வீட்டிற்குச் சுமந்து சென்றார். அவரை கேவலமாக நோக்கிய கண்கள் தரையை குத்தி நின்றது. சல்லி காசும் போடாமல் எல்லாரையும் காட்டிலும்  பெரிய தொகையை ரூ 2லட்சம் Contribute பண்ணின அந்த நபரை பார்ப்பதற்கே வெட்கி தலை குனிந்து நின்றனர். 

         கடவுளின் ஊழியத்தை நீங்கள் பல வழிகளில் செய்யலாம்/தாங்கலாம். அவைகளை சிலர் ஏளனமாகவும், சிறுமையாகவும் நோக்கலாம். உங்கள் மனதை கர்த்தர் அறிவார். நீங்கள் உங்களின், பெருமைக்காக/சுயவிளம்பரத்திற்காக,  கட்டாயமாகவும், விசனமாகவும் போலியாக மனமில்லாமல் செய்யும் சேவைகளை/ஊழியத்தை அவர் ஒருநாளும் ஏற்கமாட்டார். God wants you just the way you are. He will turn your shame into honour.


 256     கர்த்தருக்குப் பயந்து தீமைக்கு விலகு ! 



தேவ ஊழியர் ஒருவரிடம் ஒரு அன்பான தாய் தன் மனதின் பாரங்களை இவ்வாறு பகிர்ந்து கொண்டார்கள் : 

ஐயா ஒரு வாலிய பையன் என் வாலிப மகளுக்கு நல்ல வேலை வாங்கித் தருகிறேன் என்று அவளுடன் பேசிப் பேசி அவள் மனதைக் கலைத்து விட்டான் . என் மகள் கள்ளம் கபடற்றவள் . அவளால் மனிதர்களின் சூழ்ச்சியைப் புரிந்து கொள்ள முடியவில்லை .

 நாங்கள் இதனால் மிகுந்த மனக்கலக்கம் அடைந்திருக்கிறோம் . நிம்மதியே இல்லை என்று கூறினார்கள் . தேவ ஊழியர் ஜெபித்த போது : “ வெள்ளம் போல் சத்துரு வரும்போது கர்த்தருடைய ஆவியானவர் அவனுக்கு விரோதமாய்க் கொடியேற்றுவார் ' ஏசாயா 59:19 ) என்ற வசனத்தை கர்த்தர் வாக்குத்தத்தமாகக் கொடுத்தார் . இந்த வசனத்தைப் பிடித்துக் கொண்டு , 

விசுவாசத்தோடு தொடர்ந்து ஜெபியுங்கள் . கர்த்தர் கிரியை செய்வார் என்று ஆலோசனை சொல்லி ஊழியர் அவர்களை அனுப்பி வைத்தார் . அவர்களும் அப்படியே ஜெபித்து வந்தார்கள் . மகளிடம் இதைப்பற்றி ஒன்றும் பேசாமல் அவளிடம் மிகுந்த அன்பு செலுத்தினார்கள் . 

பெற்றோரின் அன்பு ஒருபுறம் . அந்தப் பையனுடன் கொண்ட தொடர்பு மறுபுறம் மகளை நெருக்கியது . அந்தப் பையனுடனான நட்பை தொடரவும் முடியாமல் , முறிக்கவும் முடியாமல் தடுமாறினாள் . 

நாட்கள் கடந்தன . மறுபடியும் ஒரு நாள் அந்தத்தாய் தேவ ஊழியரிடம் ஜெபிக்க வந்தார்கள் . அவர் ஜெபித்தபோது பரிசுத்த ஆவியானவர் ஒரு காரியத்தை வெளிப்படுத்தினார் . அம்மா . உங்கள் மகளிடம் ஒரு பொம்மை கொடுக்கப்பட்டிருக்கிறது . அந்தக் குறிப்பிட்ட பொம்மையில் பில்லிசூனியம் உள்ளது . எனவே அதை உடனே அகற்றி , சுட்டெரித்துப் போடும்படி ஆவியானவர் சொல்கிறார் என்று சொன்னார் . 

வீட்டுக்கு வந்தவுடன் தாய் தன் மகளிடம் : “ உன்னிடம் ஏதாவது புது பொம்மை இருக்கிறதா ? அது உனக்கு யார் கொடுத்தார்கள் " என்று கேட்டார்கள் .

 தன்னிடம் அந்தச் சிறிய பொம்மை இருப்பது தாய்க்கு எப்படித் தெரியும் என்று ஆச்சரியப்பட்ட மகள் : வேலை வாங்கித் தருவதாகக் கூறிய அந்தப் பையன்தான் எனக்கு அந்தப் பொம்மையைப் பரிசாகக் கொடுத்திருக்கிறான் என்றாள் . 

அந்தப் பொம்மையில் பில்லி சூனியம் ( witchcraft ) வைக்கப்பட்டுள்ளதை பரிசுத்த ஆவியானவர் தேவ ஊழியர் மூலம் வெளிப்படுத்தியதைப் பற்றித் தாய் சொன்னார்கள் . மகள் அதிர்ச்சியுற்றாள் . தனக்கு எதிராக உருவாக்கப்பட்ட சதியினைப் புரிந்து கொண்ட அந்த வாலிப மகள் பொம்மையைத் தாயிடம் கொடுத்தாள் . தாய் அதை நெருப்பினால் சுட்டெரித்துப் போட்டார்கள் . 

மகள் தெளிவு பெற்றாள் . வேண்டாத அந்த நட்பைத் துண்டித்துக்கொண்டாள் . கண்ணீருடன் இயேசுவிடம் ஜெபித்து மன்னிப்பைப் பெற்றுக் கொண்டாள் . மகிழ்ச்சியடைந்த பெற்றோர் தேவனுக்கு நன்றி செலுத்தினார்கள் . 

கர்த்தருடைய கிருபையால் விரைவில் பக்தியுள்ள நல்ல ஒரு குடும்பத்தில் இரட்சிக்கப்பட்ட ஒரு நல்ல மணமகனை அவளுக்குத் தெரிந்து கொண்டார்கள் . திருமணம் சிறப்பாக நடைபெற்றது . இன்றும் அவர்கள் மகிழ்ச்சியோடு வாழ்கிறார்கள் .

 இதை வாசிக்கும் அன்பான வாலிபப் பிள்ளைகளே . உங்கள் பெற்றோரின் தூய்மையான அன்பையும் , பாசத்தையும் உதாசீனப்படுத்தி , தவறான வழிகளைத் தெரிந்து கொள்ளாதபடிக்கு எச்சரிக்கையிருங்கள் . கர்த்தருக்குப் பயந்து தீமைக்கு விலகுங்கள் . தினமும் வேதம் வாசித்து ஜெபிக்க மறவாதிருங்கள் . 

வேதமே வெளிச்சம் . ஜெபமே ஜெயம் . நீங்கள் வேத வசனங்களின்படி எச்சரிப்படைந்து உங்கள் வழிகளைக் காத்துக்கொண்டால் , சாத்தான் உங்களை வழிதப்பச் செய்ய முடியாது . பரிசுத்த ஆவியானவர் நித்தமும் உங்களைச் சரியான வழியில் நடத்துவார் . உங்கள் எதிர்காலம் நிச்சயமாய் ஆசீர்வாதமாயிருக்கும் . 

தீங்கு நாட்கள் வராததற்கு முன்னும் , எனக்குப் பிரியமானவைகள் அல்ல என்று நீ சொல்லும் வருஷங்கள் சேராததற்கு முன்னும் மகா பரிசுத்தமுள்ள உன் சிருஷ்டிகராகிய தேவனை நினைத்து , அவருடைய மேலான கற்பனைகளைக் கைக்கொள்ளவது அவசியம் . சேனைகளின் கர்த்தரையே பரிசுத்தம் பண்ணுங்கள் ; அவரே உங்கள் பயமும் , அவரே உங்கள் அச்சமுமாயிருப்பாராக . ( ஏசாயா 8:13 ) 



257                  வீட்டு ஜெபக்குழுக்கள்  
                            ( Home Prayer Cells ) " 

பால்யாங்கிசோ கொரியாவில் சபையை நிறுவி ஊழியம் செய்ய ஆரம்பித்தபோது அவருக்கு வயது 28. 

அந்தக் காலக் கட்டத்தில் அவர் இருதயம் மிகவும் பலவீனமாக இருப்பதாகவும் , பிரசிங்கிப்பதை விட்டு விட்டு வேறு வேலை எதையாவது செய்வதுதான் ஒரே வழி என்றும் டாக்டர்கள் கூறிவிட்டார்கள் .

 சரீரம் மிகவும் பலவீனப்பட்டு சபை ஊழியத்தைச் சுறுசுறுப்பாகச் செய்ய இயலாத நிலையில் அவர் இருந்தார் .

 ஆனாலும் கர்த்தர் கொடுத்த ஊழியத்தைச் செய்யாமல் பின்வாங்கக் கூடாது என்று தீர்மானித்தார் . அவர் மூலமாக கொரியா தேசத்தில் பெரிய சபையைக் கட்டி எழுப்பப் போவதாகவும் , அவரைப் படிப்படியாகக் குணமாக்கப் போவதாகவும் கர்த்தர் அவருக்கு வாக்குக் கொடுத்திருப்பதை நினைத்து தைரியம் கொண்டார் . 

அவர் படுக்கையில் படுத்துக் கொண்டு , என்னுடைய பெரிய சபையை நான் தனிமையாக எவ்வாறு நிர்வகிக்கப் போகிறேன் என்று ஒரு நாள் சிந்தித்துக் கொண்டிருந்தார் . 

அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் : ' என் ஜனங்கள் வெளியேறி வளரட்டும் ' என்று பேசினார் 

. ' ஆண்டவரே என்ன சொல்லுகிறீர் ' என்று கேட்டார் . அவர் தொடர்ந்து ' என் ஜனங்கள் பால்யாங்கிசோவின்  ஆளுகையிலிருந்து வெளியே புறப்பட்டுப்போய் , வளரட்டும் ' என்றார் .

 தொடர்ந்து ' அவர்கள் தங்கள் சொந்தக் கால்களில் நின்று ஊழியம் செய்ய உதவி செய் ' என்றார் . 

இந்தக் காரியத்தைக் குறித்து அவர் வேதத்தை ஆராய்ந்து பார்க்க இந்த வார்த்தைகள் அவரைத் தூண்டின .

 அப்போஸ்தலர் 2 : 46,47 வசனங்களை வாசித்த போது , 

ஆதிசபையில் இரண்டு விதமான கூட்டங்கள் நடைபெற்றதைப் பற்றிக் கவனித்தார் . ஆதி 

 சீஷர்கள் தேவாலயத்தில் அனுதினமும் கூடி , தேவனை ஆராதித்தார்கள் . அது மட்டுமல்லாமல் , வீடுகள் தோறும் அப்பம்பிட்டு ஐக்கியம் பாராட்டினார்கள் . இது அவரது கவனத்தை ஈர்த்தது . அது வரை சபை என்பது ஒரு பொதுவான கட்டிடம் ( ஆலயம் ) என்பதே அவருடைய எண்ணமாயிருந்தது . 

ஆனால் ஒரு வீடு சபையாக மாற முடியும் என்று அவர் ஒரு போதும் எண்ணியதேயில்லை . அவர் அதுவரை அறிந்திராத ' வீட்டு ஊழியம் ' ஒன்றும் இருக்கிறது என்பதை அன்று அறிந்து கொண்டார் . 

அவர் தொடர்ந்து வேதத்தை வாசித்த போது , லீதியாளின் வீட்டில் கூடி வந்த சபையைப் பற்றியும் ( அப் 16:40 ) ; ஆக்கில்லா . பிரிஸ்கில்லாள் வீட்டில் கூடிவந்த சபையைப் பற்றியும் ( ரோமர் 16 : 3-5 ) , பிலேமோனின் வீட்டில் கூடிய சபையைப் பற்றியும் ( பிலேமோன் 1 : 2 ) கவனத்தைச் செலுத்தினார் . 

எனவே சபை மக்களை உற்சாகப்படுத்தி வீடுகளில் ஜெபக் கூட்டங்கள் நடத்துவதைத்தான் பரிசுத்த ஆவியானவர் எனக்கு உணர்த்துகிறார் என்பதையும் , அது வேதத்தின் அடிப்படையில் தான் இருக்கிறது என்பதையும் அவர் புரிந்து கொண்டார் . 



258  உருவத்தை பார்த்து


10 வயது வாலிபன் இரயில் ஜன்னல் வழியே
பார்த்து கத்தினான்."அப்பா இங்கே பாருங்கள்,"
மரங்கள் எல்லாம் நமக்கு பின்னால் ஓடுகின்றன
என்று!"
அவனருகில் இருந்த அவனது அப்பா
சிரித்துக்கொண்டார்.

ஆனால் அவர்கள் அருகில் இருந்த இளம்
தம்பதியினர் அவனைப் பார்த்து பரிதாப
பட்டுக்கொண்டனர். மறுபடியும் அந்த
வாலிபன் கத்தினான்.

"அப்பா மேலே பாருங்கள், ' மேகங்கள்
நம்மோடு வருகின்றன..; என்றான்.
இதைக்கேட்டு தாங்க முடியாத
தம்பதியினர் வாலிபனின் தந்தையிடம் "நீங்கள்
ஏன் உங்கள் மகனை ஒரு நல்ல டாக்டரிடம்
காட்டக் கூடாது என்றனர்" அதற்கு அந்த
வயதான அப்பா சிரித்துக்
கொண்டே சொன்னார். "நாங்கள் டாக்டரிடம்
இருந்துதான் வந்து கொண்டிருக்கிறோம்.

என் மகன் பிறவிக் குருடு .இன்றைக்கு
தான்அவனுக்கு பார்வை கிடைத்தது என்றார்."

அன்பு நண்பர்களே., உண்மையில் ஒவ்வொரு
மனிதனுக்கும் ஒரு கதை உண்டு. மற்றவரை
தீர்மானிக்க
நினைத்தால் நாம் உண்மையை
இழந்துவிடலாம். சில
நேரங்களில் உண்மை நம்மை ஆச்சிரிய பட
வைக்கலாம்.

'உருவத்தை பார்த்து யாரும் யாரையும்
எடைபோடதிற்கள.


259    கணிப்பு


ஒரு அழகான சிறுமி தன் கைகளில் இரண்டு
ஆப்பிள் வைத்திருந்தாள்.. 

அங்கு வந்த
அவளின் தாய் , நீ இரண்டு ஆப்பிள்
வைத்திருக்கே ஒன்று எனக்கு கொடு என்றாள்.

தன் தாயை ஒரு வினாடி பார்த்த அந்த சிறுமி,
பின் உடனே ஒரு ஆப்பிளை கடித்து விட்டாள்..
பின் உடனே இரண்டாவது ஆப்பிளையும்
கடித்து விட்டாள்..
தாயின் முகத்தில் இருந்த சிரிப்பு உறைந்து
போனது. தன் ஏமாற்றத்தை வெளிப்படுத்த
முடியாமல் தவித்தாள்.

உடனே அந்த சிறுமி, தாயிடம்
சொன்னாள்..அம்மா இந்த ஆப்பிள் தான்
இனிப்பாக இருக்கு நீ எடுத்துக்க என்றாள்....
நட்புக்களே, நீஙகள் யாராக வேண்டுமானாலும்
இருக்கலாம். எவ்வளவு அனுபவமும்
இருக்கலாம்..அறிவு வீஸ்தீரமாகவும்
இருக்கலாம். ஆனால் ஒருவரை பற்றி
கணிப்பதை சற்று தள்ளிப்போட்டு கணிக்கவும்.
அடுத்தவருக்கு போதுமான அளவு
இடைவெளி கொடுத்து அவரை அறியவும்.
நீங்கள் அவரை பற்றிக்கொண்ட கண்ணோட்டம்
தவறாகவும் இருக்கலாம்.
எதையும் மேலோட்டமாக பார்த்து கணிக்காமல்
,அவசரப்படாமல் ஆழ யோசித்து கணியுங்கள்..
மனக்கணக்கு தவறலாம்..மனிதரை பற்றிய
கணக்கு தவறக்கூடாது.

260     உண்மையைப் பலி கொடுத்து


ஒரு விவசாயி ஒரு குதிரையையும், ஒரு
ஆட்டையும் வளர்த்து வந்தான்.
அந்தக் குதிரையும் ஆடும் சிறந்த நண்பர்களாக
இருந்தன.

ஒரு நாள் அந்தக் குதிரை வைரஸ் நோயால்
பாதிக்கப்பட்டது.
அதனால், அந்த விவசாயி குதிரைக்குச்
சிகிச்சை அளிக்க மருத்துவரை அழைத்து
வந்தான்..
மருத்துவர் அந்த குதிரையின் நிலையைப்
பார்த்து,
“நான் மூன்று நாட்கள் வந்து மருந்து
தருகிறேன். அந்த மருந்தைக் குதிரைக்குச்
சாப்பிடக் கொடுங்கள். அதைச் சாப்பிட்ட
குதிரை எழுந்து நடந்தால் சரி,
இல்லையெனில் அதனைக் கொன்றுவிட
வேண்டியது தான்” என்று சொல்லியபடி
குதிரைக்கான மருந்தைக் கொடுத்துச்
சென்றார்.

இவர்களது உரையாடலை அந்த ஆடு கேட்டுக்
கொண்டிருந்தது. விவசாயியும் அந்தக்
குதிரைக்கு மருத்துவர் கொடுத்த மருந்தைக்
கொடுத்தான். மறுநாள் வந்த மருத்துவர்,
குதிரையைப் பார்த்து விட்டு, அன்றைய
மருந்தைக் கொடுத்துச் சென்றார்.
அந்த மருந்தையும் குதிரைக்குக் கொடுத்தான்,

அந்த விவசாயி.பின்பு சிறிது நேரம்
கழித்து,அங்கு வந்த ஆடு, அந்தக்
குதிரையிடம், "நண்பா, நீ எழுந்து நடக்க
முயற்சி செய்.
நீ நடக்கா விட்டால் அவர்கள் உன்னைக்
கொன்று விடுவார்கள்" என்று அந்த
குதிரையை ஊக்குவித்தது.
மூன்றாம் நாளும் மருத்துவரும் வந்தார்.
அவர் குதிரைக்கு மருந்து கொடுத்து விட்டு,
அந்த விவசாயிடம் "நாளை குதிரை
நடக்கவில்லையெனில், அதனைக் கொன்றுவிட வேண்டும்.

இல்லாவிட்டால், அந்த வைரஸ் பரவி,
மற்றவர்களுக்கும் பரவிவிடும்." என்று
சொல்லிச் சென்றார்.
இதைக் கேட்ட ஆடு, அந்த மருத்துவர்
சென்றதும், குதிரையிடம் வந்து,
“நண்பா!
எப்படியாவது எழுந்து நடக்க முயற்சி செய்.
நீ நடக்க முடியாமல் போனால் உன்னைக்
கொன்று விடுவார்கள்” என்று சொல்லியது.
அந்தக் குதிரையும் முயற்சி செய்து மெதுவாக
எழுந்து நடக்கத் தொடங்கியது. தற்செயலாக
அந்தப் பக்கமாக வந்த விவசாயி அசந்து
போகும்படியாக குதிரை ஓடியது.
மறுநாள் அந்த விவசாயி மருத்துவரை
அழைத்து வந்து குதிரையைக் காண்பித்தான்.

அவன் மருத்துவரிடம், "என் குதிரை நன்றாகக்
குணமடைந்து விட்டது. அது நன்றாக ஓடத்
தொடங்கி விட்டது. இதற்கு நீங்கள் கொடுத்த
மருந்துதான் காரணம்.

என் குதிரையைப் பிழைக்க வைத்த உங்களுக்கு
நல்ல விருந்து ஒன்று கொடுக்க வேண்டும்.
இந்த ஆட்டை வெட்டிப் பிரியாணி செய்து
கொண்டாடி விடுவோம்” என்றான்.

குதிரை ஆட்டின் ஊக்கத்தால் எழுந்து
நடந்தாலும் மருத்துவர் கொடுத்த
மருந்தால்தான் குதிரை குணமடைந்ததாகத்தான் விவசாயி நினைத்தான்....
இப்படித்தான் இந்த உலகில் யாரால் நன்மை
கிடைத்தது என்பதை உணராமல், பலரும்
உண்மையைப் பலி கொடுத்துக்
கொண்டிருக்கிறார்கள்.



261 பணம்

தோளில் தன் மகனை தூக்கிக் கொண்டு
பேருந்தில் சென்றார் அவர். முகத்தில் ஏனோ
ஒரு கவலை. 'டிக்கெட்' என்று நடத்துனர்
கேட்ட போது பதில் எதுவும் பேசவில்லை.

'யோவ் எங்கயா போகணும்'னு கண்டக்டர்
டென்ஷன் ஆக, நடுங்கும் கைகளில் இருந்த
காசினை வெடுக்கென்று பிடுங்கிக்கொண்டு,
'காலங்காத்தால வந்துட்டானுங்க' என்று
முணுமுணுத்துக்கொண்டே நகர்ந்தார்
கண்டக்டர்..

ஜன்னல் ஓரத்தில் அமர்திருந்தாலோ என்னவோ
காற்றும் தூசியும் கண்ணில் பட்டு கண்
கலங்கினார். தோளில் கிடந்த துண்டை
எடுத்து கண்களை துடைத்துக்கொண்டு,
தொடர்ந்து மௌனமாகவே பயணித்துக்
கொண்டிருந்தார். அவருடன் வந்திருந்த
மற்றொரு நபர் அவரை இறுக்க
பற்றிக்கொண்டிருந்தார். ஏதோவொரு துயரச்சம்பவம் அவர் வாழ்வில் நடந்திருக்கிறது
என்று தெரிந்தது.

நான் இறங்கும் இடம் வந்துவிட்டது. பேருந்தை
விட்டு இறங்க மனமில்லை. அவர்கள் வாழ்வில்
என்ன நடந்திருக்கும். ஏன் இப்படி சோகமாக
இருக்கிறார்கள் என்று எண்ணிக்கொண்டே
பேருந்தை விட்டு இறங்கினேன். நான் இறங்கிய அதே பஸ் ஸ்டாப்பில் அவர்களும் இறங்கினார்கள். மனம் சற்று நிம்மதி அடைந்தது. அவர்கள் பற்றி எதையேனும்தெரிந்து கொள்ளலாம் என்று மனது விரும்பியது.. அவர்களை பின்தொடர்ந்தேன்..

தோளில் பிள்ளையை சுமந்து கொண்டு
நடக்கத் தொடங்கினர் இருவரும். சிறிது தூரம் அவர்கள் பின்னால் சென்ற எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது..

தன் மகனை தோளில் தூக்கிகொண்டு அவர்கள்சென்ற இடம் சுடுகாடு. சில நெருங்கிய சொந்தங்கள் அங்கு கூடி இருந்தனர்.அவர்களை பார்த்ததும் தூக்கி வந்த தன்மகனை கீழே கிடத்தி ,தலையிலையும் நெஞ்சிலையும் அடித்துக்கொண்டு கதறி
அழுதார்.

எதனால் அந்த நபரின் மகன் இறந்தார், என்ன
காரணம் என்று எனக்கு எதுவும்
தெரியவில்லை, ஆனால் ஒன்று மட்டும்
தெளிவாகப் புரிந்தது. இறுதிச் சடங்கைகூடதிருவிழா போல் கொண்டாடும் இந்தக்
காலத்தில், இறந்து போன தன் மகனை பாடைகட்டி தூக்கி வரும் அளவுக்கு கூட அவரிடம்பணம் இல்லை என்று.

உயிருக்குயிரான தன் மகனை தோளில்
சுமந்துக் கொண்டு, துக்கத்தை நெஞ்சில்
புதைத்துக்கொண்டு, கண்டக்டருக்கு
தெரியாமல் இறந்து போன தன் மகனை
மயானம் வரை தன் தோளில் சுமந்து வந்த
அந்த தந்தையின் வலி, இன்னமும் என் மனதில்
நீங்காமல் இருக்கிறது.

உயிரோடு இருக்கும் வரை தான் பணம் தேவை
என்று நினைத்தேன். மரணித்த பின்னரும் பணம்
தேவைப்படுகிறது இந்த உலகத்தில்..



262    மது அருந்தி விட்டு வாகனம் ஓட்ட வேண்டாம் 

இது கோயம்புத்தூரில் நடந்த ஒரு உண்மை சம்பவம் படிக்க தவறாதீர்கள் ......

ஒரு பெரிய வணிக அங்காடியில்
ஒரு ஐந்து வயது மதிக்கத் தக்க சிறுவன்
பணம் செலுத்துபவரிடம் உரையாடிக்
கொண்டிருந்தான் பணம் பெறுபவர்,
உன்னிடம் இந்தபொம்மை வாங்குவதற்கு தேவையானபணம் இல்லை என்று சொன்னார். அந்தசிறுவன் இந்த பணம்
போதாதா என்று வினவினான்.

அவர் மீண்டும் பணத்தை எண்ணி விட்டு இல்லடா செல்லம்குறைவாக உள்ளது என்றார். அந்தசிறுவன் அந்த
பொம்மையை கையிலேயே பிடித்திருந்தான்.

நான் அந்த சிறுவனிடம் அந்த
பொம்மை யாருக்கு தர போகிறாய்
என்று கேட்டேன். அதற்கு அந்த
சிறுவன் அது தன் தங்கைக்கு ரொம்ப
பிடித்ததாகவும் அவள் பிறந்தநாள்
அன்று அவளுக்கு பரிசளிக்க
போவதாகவும் கூறினான். 

மேலும் அவன்பேச தொடர்ந்தபோது என் இதயம்நின்று விட்டது போல் உணர்தேன். 

அவன்கூறியது "இந்த பொம்மையை என் அம்மாவிடம் கொடுத்தால் அவர்கள் என்
தங்கையிடம் கொடுத்து விடுவார்கள், என்
தங்கை கடவுளிடம் சென்று விட்டாள்.
என் அம்மாவும் கடவுளிடம் செல்ல
இருக்கிறார்.

நான் என் தந்தையிடம் இந்த
பொம்மை வாங்கி வரும் வரை அம்மா
கடவுளிடம் செல்ல வேண்டாம்
என்று கூறி விட்டு வந்தேன்.
எனக்கு என் தங்கையும் அம்மாவும்
ரொம்ப பிடிக்கும். அம்மா கடவுளிடம்
செல்ல வேண்டாம் என்று அப்பாவிடம்
கேட்டேன், ஆனால் அம்மா கடவுளிடம்
செல்லும் நேரம் வந்துவிட்டதாக
கூறினார்.

மேலும் அவன் கையில் அவனுடைய
புகைப்படம் ஒன்றை வைத்து இருந்தான்
அதை தன் அம்மாவிடம் கொடுத்தால்
அவர்கள் தன் தங்கையிடம்
அதை கொடுப்பார்கள், அதனால் அவள்
தன்னை மறக்காமல் இருப்பாள் என்றும்
கூறினான்.

நான் என்னிடம் இருந்த
பணத்தை அவனுக்கு தெரியாமல் அவன்
வைத்திருந்த பணத்துடன் சேர்த்து,
மீண்டும் எண்ணி பார்க்கலாம்
என்று சொன்னேன். அவனும் இசைந்தான்,நாங்கள் எண்ணிய போது போதிய பணத்திற்கு மேல் இருந்தது அவன்கடவுளுக்கு நன்றி கூறினான்.

நான் கனத்த மனதுடன்
அங்கிருந்து நகர்ந்தேன் பின்னர் உள்ளூர்
தினசரி பத்திரிக்கை ஒன்றில்
படித்தது என் நினைவிற்கு வந்தது,


மகிழ்வுந்தில்(car) பயணம் செய்த
அம்மா மற்றும் மகள் மீது ஒரு திறந்த
சரக்கு வண்டி(truck)
மோதி விபத்துக்குள்ளானது என்றும்
அதன் ஓட்டுனர்
குடித்து இருந்ததாலேயே விபத்து நிகழ்ந்தது என்றும்
வந்த அந்த செய்தி மேலும் மகள் சம்பவ
இடத்திலேயே இறந்ததாகவும் தாய்
உயிருக்கு போராடும் நிலையில்
மருத்துவமனையில் அனுமதிக்க
பட்டார் என்றும் அவர் சயித்திய (coma)
நிலையில் உள்ளார் என்றும் வந்த அந்த
செய்தி இந்த சிறுவன் அவர்கள் மகனா?

இரண்டு நாள் கழித்து தினசரி பத்திரிக்கையில் அந்த செய்தி விபதுக்குள்ளான பெண்
இறந்து விட்டாள் என்று.நான் அவரது இறுதி சடங்கிற்கு சென்றேன்
அச் சிறுவனின் அம்மா சடலமாக
கிடந்தாள் , கையில் சிறுவனின்
புகைப்படமும் அந்த பொம்மையும்
இருந்தது. அங்கிருத்து கனத்த
இதயத்துடன் திரும்பினேன் அந்த
சிறுவனின் தன் அம்மாவிடமும்
தங்கையிடம் வைத்திருந்த அன்பும்
பாசமும் அப்படியே உள்ளது. 

ஆனால்ஒரு குடிகாரன் குடி போதையில் வாகனம்ஒட்டியதால் ஒரு நொடியில் அந்த
குடும்பம் சிதைந்து விட்டது

தயவு செய்து மது அருந்தி விட்டு வாகனம் ஓட்ட வேண்டாம் உங்கள் இதயத்தை இது தைத்திருந்தால் பகிருங்கள் ...