Wednesday, 10 August 2016

சங்கீதம் 104 :1-12

உன் ஆத்துமா, கர்த்தரை ஸ்தோத்தரிக்கட்டும், உன் தேவனாகிய கர்த்தர், மிகவும் பெரியவராயிருக்கிறார், மகிமையையும் மகத்துவத்தையும் அணிந்துகொண்டிருக்கிறார். ஒளியை வஸ்திரமாகத் தரித்து, வானங்களைத் திரையைப்போல் விரித்திருக்கிறார். அவரது மேல்வீடுகளைத் தண்ணீர்களால் மச்சுப்பாவி, மேகங்களைத் தமது இரதமாக்கி, காற்றினுடைய செட்டைகளின்மேல் செல்லுகிறார். அவருடைய தூதர்களைக் காற்றுகளாகவும், அவருடைய ஊழியக்காரரை அக்கினிஜூவாலைகளாகவும் செய்கிறார். பூமி ஒருபோதும் நிலைபேராதபடி அதின் ஆதாரங்கள்மேல் அதை ஸ்தாபித்தார். அதை வஸ்திரத்தினால் மூடுவதுபோல ஆழத்தினால் மூடினார், பர்வதங்களின்மேல் தண்ணீர்கள் நின்றது. அவைகள் அவரது கண்டிதத்தால் விலகியோடி, அவரது குமுறலின் சத்தத்தால் விரைந்துபோயிற்று. அவைகள் மலைகளில் ஏறி, பள்ளத்தாக்குகளில் இறங்கி, அவர் அவைகளுக்கு ஏற்படுத்தின இடத்தில் செல்லுகிறது. அவைகள் திரும்பவும் வந்து பூமியை மூடிக்கொள்ளாதபடி கடவாதிருக்கும் எல்லையை அவைகளுக்கு ஏற்படுத்தினார். அவர் பள்ளத்தாக்குகளில் நீரூற்றுகளை வரவிடுகிறார், அவைகள் மலைகள் நடுவே ஓடுகிறது. அவைகள் வெளியின் ஜீவன்களுக்கெல்லாம் தண்ணீர் கொடுக்கிறது அங்கே காட்டுக்கழுதைகள் தங்கள் தாகத்தைத் தீர்த்துக்கொள்ளுகிறது. அவைகளின் ஓரமாய் ஆகாயத்துப்பறவைகள் சஞ்சரித்து, கிளைகள்மேலிருந்து பாடுகிறது. சங்கீதம் 104 :1-12

அவரைக்காய்

அவரைக்காய் இதிலும் பல வகைகள் உண்டு. வெள்ளை அவரைப் பிஞ்சை நோயாளிகள் உண்ணும் காலத்தில் பத்திய உணவாக உண்ணலாம். இதை சமைத்து உண்டால் உடலை உரமாக்கும் காம உணர்ச்சியைப் பெருக்கும். சூட்டுடம்புக்கு இது மிகவும் நல்லது. இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இது மிகவும் ஏற்றது

Wednesday, 3 August 2016

"தினம் ஒரு ஜெபக்குறிப்பு"

♥♥♥♥♥♥♥♥♪♥♥♥ "தினம் ஒரு ஜெபக்குறிப்பு" இந்த நாளில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது கர்த்தர் பெரிய அற்புதம் செய்வார். ' இந்திய இரானுவத்திற்காக ஜெபிப்போம்.'

Monday, 1 August 2016

சங்கீதம் 100 :1-5

♦♦♦♦♦♦♦♦♦♦♦♦ சங்கீதம் 100 :1-5 நீ கர்த்தரைக் கெம்பீரமாய்ப் பாடு. மகிழ்ச்சியோடே கர்த்தருக்கு ஆராதனைசெய்து, ஆனந்தசத்தத்தோடே அவர் சந்நிதிமுன் வா. கர்த்தரே தேவனென்று அறிந்து கொள், நீ அல்ல, அவரே உன்னை உண்டாக்கினார், நீ அவர் ஜனமும், அவர் மேய்ச்சலின் ஆடுமாயிருக்கிறாய். அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரி. கர்த்தர் நல்லவர், அவருடைய கிருபை என்றென்றைக்கும், அவருடைய உண்மை தலைமுறை தலைமுறைக்கும் உள்ளது சங்கீதம் 100 :1-5 . ♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

செம்பருத்தி பூ

♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪ செம்பருத்தி பூ செம்பருத்தி பூ பார்ப்பதற்கு மட்டுமல்ல.... வைத்தியத்திற்கும் ரொம்ப சிறப்பானது. அதோட வேர், இலை, மொட்டு, பூ எல்லாமே மருத்துவ குணம் நிறைஞ்சதுதான். இது பருத்தி வகையைச் சேர்ந்த ஒரு செடி. இதோட பூக்கள் இரண்டு வகையா இருக்கும். ஒரு வகை பூக்கள் அடுக்கடுக்கா காட்சியளிக்கும். இன்னொரு வகை, தனித்தனியா அகலமா காட்சியளிக்கும். இந்தச் செடி எட்டடி உயரம் வரைக்கும் செழித்து வளரும். இதோட பூக்கள் வருஷம் முழுக்கப் பூத்துக்கிட்டே இருக்கும். உடல் உஷ்ணம் குறைய.... உடல் உஷ்ணம் அதிகமாகிவிட்டால் பலவித பிணிகள் வர வாய்ப்புண்டு. இதுபோல் வராமல் தடுக்க ஐந்து செம்பருத்திப் பூவைக் கொண்டு வந்து ஒரு லிட்டர் நீர் விட்டுப் பாதியாகச் சுண்டக் காய்ச்சி எடுத்துவைத்துக் கொண்டு குடிநீருக்குப் பதிலாக, இதனைப் பயன்படுத்தலாம். இதனால் உடல் உஷ்ணம் குறைஞ்சுடும். சாதாரண காய்ச்சலுக்கும் இந்த நீரைக் குடித்து நிவாரணம் பெறலாம். இருதயம் பலம் பெற... இருதய பலவீனமானவர்களுக்குச் செம்பருத்தி பூ டானிக் சிறப்பாக உதவுகிறது. செம்பருத்திப் பூவை 250 கிராம் கொண்டு வந்து துண்டு துண்டாக நறுக்கி, ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் போட்டு 50 கிராம் எலுமிச்சம் பழத்தின் சாறை அதில் பிழிந்துவிட்டு கலக்கி, காலையில் வெயிலில் வைக்கவும். பின்னர் மாலையில் எடுத்துப் பிசையவும். அப்போது சிவப்பான சாறு வரும். அந்தச் சாறை ஒரு சட்டியில் ஊற்றி சேர்க்க வேண்டிய சர்க்கரையைச் சேர்த்துக் காய்ச்சி சர்பத் செய்து வடிகட்டி ஒரு பாட்டிலில் பத்திரப்படுத்திக் கொள்ளவும். இதிலிருந்து காலை மாலை இரு வேளைகளிலும் ஒரு ஸ்பூன் எடுத்து 2 அவுன்ஸ் நீரில் கலந்து குடிக்கவும். இது போன்று தொடர்ந்து குடித்து வந்தால் இரத்தம் சீரான முறையில் பரவும். இருதயமும் பலம் பெறும். குழந்தையின் வளர்ச்சிக்கு..... சில குழந்தைகள் பிறக்கும்போதே பலகீனத்துடன் பிறப்பதுண்டு. இதனால் வயதிற்கேற்ப வளர்ச்சியில்லாமல் இருக்கும். இக்குறையைப் போக்கிட, ஐந்து செம்பருத்தி பூக்களை, ஒரு மண்பாண்டத்தில் போட்டு அரைலிட்டர் நீர் விட்டு கால் லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி பனைவெல்லம் சேர்த்துக் கொடுத்து வர வேண்டும். தொடர்ந்து கொடுத்து வந்தால், சில நாட்களிலேயே குழந்தை வளர்ச்சியில் நல்ல பலன் தெரியும். - உணவே மருந்து ?????????????♪♪♪????????