Wednesday, 13 April 2016

சங்கீதம்43:1-5

தேவன் உன் நியாயத்தை விசாரித்து, பக்தியில்லாத ஜாதியாரோடு உனக்காக வழக்காடி, சூதும் அநியாயமுமான மனுஷனுக்கு உன்னைத் தப்புவிப்பார் உன் அரணாகிய தேவன் உன்னைத் தள்ளிவிடமாட்டாா சத்துருவினால் ஒடுக்கப்பட்டு நீ உன் துக்கத்துடனே திரியவேண்டாம் கர்த்தர் அவரது வெளிச்சத்தையும் அவரது சத்தியத்தையும் அனுப்பியருளுவார் அவைகள் உன்னை நடத்தி, அவரது பரிசுத்த பர்வதத்திற்கும் அவரது வாசஸ்தலங்களுக்கும் உன்னைக் கொண்டுபோகும் அப்பொழுது நீ தேவனுடைய பீடத்தண்டைக்கும், உனக்கு ஆனந்த மகிழ்ச்சியாயிருக்கிற தேவனிடத்திற்கும் பிரவேசிப்பாய் தேவனை, உன் தேவனைச் சுரமண்டலத்தால் துதி உன் ஆத்துமா ஏன் கலங்குகிறது? ஏன் உனக்குள் தியங்குகிறது தேவனை நோக்கிக் காத்திரு, உன் முகத்திற்கு இரட்சிப்பு உண்டாக உன் தேவனாயிருக்கிறவரை நீ இன்னும் துதி சங்கீதம்43:1-5

Tuesday, 12 April 2016

சங்கீதம்42:6-11

உன் ஆத்துமா உனக்குள் கலங்குகிறது, ஆகையால் யோர்தான் தேசத்திலும் எர்மோன் மலைகளிலும் சிறுமலையிலுமிருந்து கர்த்தரை நினை அவரது மதகுகளின் இரைச்சலால் ஆழத்தை ஆழம் கூப்பிடுகிறது, அவரது அலைகளும் திரைகளும் எல்லாம் உன்மேல் புரண்டுபோகிறது ஆகிலும் கர்த்தர் பகற்காலத்திலே தமது கிருபையைக் கட்டளையிடுகிறார், இராக்காலத்திலே அவரைப் பாடும் பாட்டு உன் வாயிலிருக்கிறது, உன் ஜீவனுடைய தேவனை நோக்கி விண்ணப்பஞ்செய்கிற நீ உன் கன்மலையாகிய தேவனை நோக்கி: ஏன் என்னை மறந்தீர்? சத்துருவினால் ஒடுக்கப்பட்டு, நான் ஏன் துக்கத்துடனே திரியவேண்டும் என்று சொல்லு உன் தேவன் எங்கே என்று உன் சத்துருக்கள் நாள்தோறும் உன்னோடே சொல்லி, உன்னை நிந்திப்பது உன் எலும்புகளை உருவக்குத்துகிறதுபோல் இருக்கிறது. உன் ஆத்துமா ஏன் கலங்குகிறது ஏன் உனக்குள் தியங்குகிறது தேவனை நோக்கிக் காத்திருக்கட்டும், உன் முகத்திற்கு இரட்சிப்பும் உன் தேவனுமாயிருக்கிறவரை நீ் இன்னும் துதி சங்கீதம் 42 :6-11

சங்கீதம்42:1-5

மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, உன் ஆத்துமா தேவனை வாஞ்சி;த்துக் கதறுகிறது. உன் ஆத்துமா தேவன்மேல், ஜீவனுள்ள தேவன்மேலேயே தாகமாயிருக்கிறது, நீ எப்பொழுது தேவனுடைய சந்நிதியில் வந்து நிற்பாய் உன் தேவன் எங்கே என்று அவர்கள் நாள்தோறும் உன்னிடத்தில் சொல்லுகிறபடியால், இரவும் பகலும் உன் கண்ணீரே உனக்கு உணவாயிற்று. முன்னே நீ பண்டிகையை ஆசரிக்கிற ஜனங்களோடே கூட நடந்து, கூட்டத்தின் களிப்பும் துதியுமான சத்தத்தோடே தேவாலயத்திற்குப் போய்வருவாய், இவைகளை நீ நினைக்கும்போது உன் உள்ளம் உனக்குள்ளே உருகுகிறது. உன் ஆத்துமா ஏன் கலங்குகிறது? ஏன் எனக்குள் தியங்குகிறது? நீ தேவனை நோக்கிக் காத்திரு, அவர் சமுகத்து இரட்சிப்பினிமித்தம் நீ இன்னும் அவரைத் துதி சங்கீதம்41,1-5.

Sunday, 10 April 2016

சங்கீதம41;7-13

உன்ன் பகைஞரெல்லாரும் உன்மேல் ஏகமாய் முணுமுணுத்து, உனக்கு விரோதமாயிருந்து, உனக்குப் பொல்லாங்கு நினைத்து
தீராவியாதி அவனைப் பிடித்துக் கொண்டது, படுக்கையில் கிடக்கிற அவன் இனி எழுந்திருப்பதில்லை என்கிறார்கள்.

உன் பிராணசிநேகிதனும், நீ நம்பினவனும், உன் அப்பம் புசித்தவனுமாகிய மனுஷனும், உன்மேல் தன் குதிகாலைத் தூக்கினான்

கர்த்தர் உனக்கு இரங்கி, நீ அவர்களுக்குச் சரிக்கட்ட உன்னை எழுந்திருக்கப்பண்ணுவார்
உன் சத்துரு உன்மேல் ஜெயங்கொள்ளாததினால்,  கர்த்தர் உன்மேல் பிரியமாயிருக்கிறாரென்று அறிவாய்   உன் சத்துரு உன்மேல் ஜெயங்கொள்ளாததினால், நீர் என்மேல் பிரியமாயிருக்கிறீரென்று அறிவாய்  
கர்த்தர்  உன் உத்தமத்திலே உன்னைத்தாங்கி, என்றென்றைக்கும் அவருடைய சமுகத்தில் உன்னை நிலைநிறுத்துவார்.
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அநாதியாய் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவர். ஆமென், ஆமென்.
சங்கீதம் 41 :13