Tuesday, 20 September 2016

சத்தான உணவு

ஏதாவது உடல்நிலை பாதிப்பு என்று டாக்டரிடம் போனால், "மருந்து தர்றேன்; முதல்ல, நன்றாக சாப்பிடுங்க; உடலில் சத்துக்களே இல்லை" என்பார். சத்தான உணவு என்றால் என்ன? ரத்தம், எலும்பு, தசைகள், தோல், நரம்புகளுடன் பின்னிப்பிணைந்த இதயம், மூளை, கல்லீரல், நுரையீரல், குடல், சிறுநீரகம் போன்றவை கொண்டது தான் உடல். அந்த உடலுக்கு சீரான ரத்த ஓட்டம் கிடைத்தால், பல உறுப்புகளுக்கு சத்துக்கள் கிடைக்கும். வைட்டமின், புரோட்டீன், கார்போஹைட்ரேட் போன்ற சத்துக்கள் கிடைத்தால் தான் உறுப்புகள் முழுமையாக இயங்கும். எந்த வியாதியும் அண்டாது. சத்தான உணவு கிடைக்கவில்லை என்பதற்கான அறிகுறிகள்: எப்போது பார்த்தாலும் சோர்வு, பலவீனம். வீட்டில் சாதாரண வேலையை கூட செய்ய முடியாமல் சோர்வு. உடல் எடை அதிகரிப்பது அல்லது குறைவது. சரியான தூக்கம் வராதிருப்பது. எப்போதும் மன அழுத்தம். கவனக்குறைவு அதிகம். ஜீரணம் ஆவதில் அடிக்கடி சிக்கல். மலச்சிக்கல் ஏற்படுவது. அடிக்கடி எரிச்சல் படுவது. தோல்பகுதி வறண்டு இருப்பது. சொறி, சிரங்கு ஏற்படுவது. வாய், உதடு வறண்டு போவது. நகங்கள் திடமாக இல்லாமல், எளிதில் உடைவது. தலைமுடி கொட்டுவது அதிகரிப்பு. உடலில் தண்ணீர் வற்றியது போல உணர்வு. எதையும் நினைவில் வைத்திருக்க முடியாத நிலை. சாப்பாட்டை பற்றிய கவனம் இல்லாமை. கண்டபடி கொழுப்பு உணவுகளை சாப்பிடுவது. இவ்வளவு அறிகுறிகளை கவனித்தாலே, உடலுக்கு சத்தான உணவு சாப்பிடவில்லை என்பதை உறுதிபடுத்திக் கொள்ளலாம். சத்துக்கள் கிடைக்காத நிலையில், அடுத்து நோய்கள் அணிவகுக்கும் என்பதை உணர வேண்டும். இப்போதுள்ள இளைய தலைமுறையினருக்கு "லைப் ஸ்டைல்" மாறி விட்டது. சாட், பீட்சா போன்ற "ஜங்க் புட்" உணவுகளை தான் சாப்பிடுகின்றனர். "ஜங்க்" என்றால் குப்பை என்று பொருள். அப்படியானால், குப்பை உணவு என்று தானே அர்த்தம். அதனால், "ஜங்க் புட் (Junk Food)" வகைகளை வார இறுதியில் சாப்பிட்டு, மற்ற நாட்களில் காய்கறி, பழங்கள் கொண்ட உணவு முறையை கடைபிடிக்க வேண்டும். அதுபோல, "பிரஷ் ஜூஸ்" சாப்பிடலாம்; பாட்டில் பானங்களை கைவிடலாம். பாட்டில் பானங்கள், பாக்கெட் நொறுக்குத் தீனிகள், சாட் உணவுகளை குறைத்துக் கொண்டாலே, எதிர்காலத்தில் சர்க்கரை, இதய நோய் வராமல் தவிர்த்து விடலாம். காலை உணவு அவசியம்! ஆரோக்கியமான வாழ்விற்கு காலை உணவு அவசியம் என்கிறார்கள் மருத்துவர்கள். உடல் பருமனாவதைத் தவிர்த்து, மெலிதான உடல் அமைப்புடன் வாழ, காலை உணவு அவசியம் எனவும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட, 15 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளிடம் ஆய்வு செய்ததில் இந்த உண்மை தெரிய வந்துள்ளது. அடிக்கடி காலை உணவை சாப்பிடாமல் மட்டம் போடும் குழந்தைகள், உடல் எடை அதிகரித்து குண்டாகி விடுகிறார்கள். காலை உணவு சாப்பிடும் குழந்தைகளின் பசி, ஒரு கட்டுப்பாட்டிலேயே இருக்கும் என்பதால், அளவுக்கு அதிகமாக சாப்பிட மாட்டார்கள். காலை உணவை சாப்பிடாமல், காலி வயிற்றுடன் இருக்கும் குழந்தைகள் மதிய உணவை ஒரு கை பார்ப்பதாலும், பசி அவர்களின் கட்டுப்பாட்டில் இல்லாது போவதாலும் பருமனான உடல் அமைப்பை பெற்று விடுவார்கள். அதோடு காலை உணவில், கொழுப்பு குறைவாக கலந்திருக்கும் என்பதும் எடைக் குறைப்பிற்கு காரணமாகி விடுகிறது. எனவே ஆரோக்கியத்தை விரும்பும் குழந்தைகள் காலை உணவை மறக்கக்கூடாது என்று மருத்துவர்கள் கூறி உள்ளனர். - உணவே மருந்து download from http://bit.ly/1OeJioY

No comments:

Post a Comment