Sunday, 11 September 2016

சங்கீதம் 119 :61-70

துன்மார்க்கரின் கூட்டங்கள் உன்னைக் கொள்ளையிட்டும், கர்த்தருடைய வேதத்தை நீ மறக்காதே. கர்த்தருடைய நீதியான நியாயத்தீர்ப்புகளினிமித்தம், கர்த்தரைத் துதிக்கும்படி பாதிராத்திரியில் எழுந்திரு. கர்த்தருக்குப் பயந்து, அவரது கட்டளைகளைக் கைக்கொள்ளுகிற அனைவருக்கும் நீ தோழன். பூமி கர்த்தருடைய கிருபையினால் நிறைந்திருக்கிறது, கர்த்தர் அவருடைய பிரமாணங்களை உனக்குப் போதிப்பார். கர்த்தர் அவருடைய வசனத்தின்படி உன்னை நன்றாய் நடத்துவார். உத்தம நிதானிப்பையும் அறிவையும் உனக்குப் போதிப்பார், அவருடைய கற்பனைகளின்பேரில் விசுவாசமாயிரு. நீ உபத்திரவப்படுவதற்கு முன் வழி தப்பி நடந்தாய், இப்பொழுதோ கர்த்தருடைய வார்த்தையைக் காத்து நடக்கிறாய். கர்த்தர் நல்லவரும், நன்மை செய்கிறவருமாயிருக்கிறார், அவரது பிரமாணங்களை உனக்குப் போதிப்பார். அகங்காரிகள் உனக்கு விரோதமாய்ப் பொய்களைப் பிணைக்கிறார்கள், நீயோ, முழு இருதயத்தோடும் கர்த்தருடைய கட்டளைகளைக் கைக்கொள். அவர்கள் இருதயம் நிணந்துன்னிக் கொழுத்திருக்கிறது, நீ கர்த்தருடைய வேதத்தில் மனமகிழ்ச்சியாயிரு. சங்கீதம் 119 :61-70

தினம் ஒரு ஜெபக்குறிப்பு

♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪ தினம் ஒரு ஜெபக்குறிப்பு புதிய பகுதியாக தினம் ஒரு ஜெபக்குறிப்பு அறிமுகமாகிறது ஜெப வீரர்கள் இதனை மனதில் கொண்டு, அந்தந்த நாளில் அந்தந்தக் காரியத்திற்காக நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார். "இந்தியாவில் ஜாதி வெறியைத் தூண்டுகிற ஜதி தலைவர்கள் மனம் மாற" ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். ???????????????????????????

வீட்டுக்குறிப்பு

?????????????????????? வீட்டுக்குறிப்பு கல் பதிக்காத நகைகளை ஆல்கஹாலில் அமிழ்த்தி எடுத்துத் துடைத்தால் அவை பளபளப்பாகிவிடும். கல் பதித்த நகைகளை ஆல்கஹாலில் அமிழ்த்தி எடுக்கக்கூடாது.

தூக்கம்

மமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமம தூக்கம் மனித வாழ்க்கையில் தூக்கம் என்பது அத்தியாவசியம். ஒருவரின் தூக்கம் அவரது வேலையில் பிரதிபலிக்கிறது. குறைவான அல்லது இடையூறான தூக்கம் என்றால் அது வேலையைப் பாதிப்படையச் செய்யலாம். அல்லது மற்றவர்களுடன் நீங்கள் பேசும் உரையாடலானது தூக்கமின்மையால் பாதிப்புக்குள்ளாவதோடு, கவனத்தையும் சிதறச் செய்யும். தூக்கத்தின் போது உடல் மற்றும் மூளைக்கும் ஓய்வு கிடைக்கிறது. இதன் காரணமாகவே காலையில் தூங்கி எழுந்ததும் பிரஷ் ஆகவும், களைப்பின்றியும் இருக்கிறோம். தூக்கத்தின் தேவை என்பது ஒருவருக்கொருவர் வேறுபடுகிறது. சராசரியாக சுமார் 7 மணி முதல் 8 மணி நேரம் வரை தூக்கம் அவசியமாகிறது. நீங்கள் உரிய அளவு தூக்கத்தை மேற்கொண்டீர்களா என்பதை அடுத்த நாள் உங்களின் வேலை மற்றும் நீங்கள் உணர்வதிலிருந்து தெரிந்து கொள்ளலாம். அதிக அளவு தூக்கமும், மிகவும் குறைவான அளவு தூக்கமும் மிகவும் களைப்பையும், எரிச்சலையும் தரும். தூக்கத்தின் போது தான் வளர்ச்சிக்கான ஹார்மோன் சுரக்கும் என்பதால், குழந்தைகள், சிறியவர்கள், டீன் - ஏஜ் வயதுடையோருக்கு பெரியவர்களைக் காட்டிலும் அதிக நேரம் தூக்கம் தேவைப்படும். வயதானவர்களுக்கு அதிக நேரம் தூக்கம் தேவையில்லை என்பது போன்ற தோற்றத்தை உருவாக்கி உள்ளனர். வயது வந்த பெரியவர்களுக்கு நிலையான நீடித்த தூக்கம் என்றால், வயது முதிர்ந்தோரின் தூக்கத்தின் அளவு மாறுபடுகிறது. வயதானவர்களைப் பொருத்தவரை இரவில் அடிக்கடி முழித்துக் கொள்ளும் வழக்கம் கொண்டவர்களாக உள்ளனர். பொதுவாக தூக்கம் உடலில் ஏற்படுவதற்கான சரியான காரணங்கள் என்று எதுவும் அறிவியல்பூர்வமாக தெளிவுபடுத்தப்பட வில்லை. நம் உடலில் கடிகாரம் போன்று சுழற்சி முறையின் அடிப்படையிலேயே தூக்கமும் ஏற்படுகிறது. உடலில் நிகழும் சில ரசாயன மாற்றங்களாலும் தூக்கம் தூண்டப்படுகிறது. மேலும் நாம் உண்ணும் உணவு ஒரு முக்கியக் காரணமாகிறது. தூக்கத்தைப் பாதிக்ககூடிய உணவுமுறைகள் அல்லது வகைகள்: தூங்கச் செல்லும் முன்பாக லேசான ஸ்நாக்ஸ் எடுத்துக் கொள்வதால் அமைதியான தூக்கம் ஏற்படும். அதே நேரத்தில் அதிக அளவு உணவு சாப்பிடும் பட்சத்தில் அது அஜீரணப் பிரச்சினையாகி தூக்கத்தை பாதிக்கிறது. குறைந்த அளவிலான ஆல்கஹால் எடுத்துக் கொள்வதால் ஆழ்ந்த உறக்கம் ஏற்படும். ஆனால் அதுவே பழக்கமாகி விடும்பட்சத்தில் தூக்கத்தை கெடுக்கும் பிரச்சினையாகி விடுவதும் உண்டு. உங்கள் ஆல்கஹால், தண்ணீரை இழக்கச் செய்யும் என்பதால் அடுத்த நாள் முழுவதும் உடல் களைப்படைய காரணமாகிறது. எந்த உணவிலும் காபீன் இருந்தால் அது தூக்கத்தைப் பாதிக்கிறது. என்றாலும் இது அனைவருக்கும் பொருந்துவதில்லை. காபீன் எடுத்துக் கொள்வது உங்களுக்கு ஒவ்வாது என்றால் அவற்றை வயது முதிர்ந்தோர் தவிர்க்கலாம். அதிக கொழுப்பு கொண்ட உணவுகளை மாலையிலோ அல்லது இரவிலோ நீங்கள் சாப்பிட்டால், ஜீரணம் பாதிப்புக்குள்ளாகி இருதயத்திற்கும் பாதிப்பு ஏற்படும். உங்களின் தூக்கமும் தடை படலாம். இருதய நோய் அல்லது அமில சுரப்பு உள்ளவர்கள் இரவில் வெகுநேரமாகி உண்பதைத் தவிருங்கள். வெறும் வயிற்றுடன் இருந்து அதிகமாக சாப்பிட்டாலோ அல்லது நன்றாக சாப்பிட்ட பின்னரும் இரவில் மீண்டும் சாப்பிட்டாலோ தூக்கத்தின் போது பாதிப்பைத்தரும். இரவில் சாப்பிட்ட பின்னர் திரவ உணவு வகைகளை அருந்துவதைத் தவிர்க்கவும். சாப்பிட்டபின் திரவப்பொருட்களை எடுத்துக் கொண்டால் அது சிறுநீருக்காக உங்களை இரவில் எழுந்திருக்கச் செய்யும். அமினோ அமிலம் அடங்கிய பால் மற்றும் சிறிதளவு தேன் போன்றவை உங்களின் தூக்கத்தை மேலும் ஊக்கப்படுத்தும். இயற்கையான தூக்கத்தை கட்டுப்படுத்தாதீர். பொதுவாக வீட்டுப் பிரச்சினைகளையோ, அலுவலகப் பிரச்சினைகளையோ மனதில் போட்டுக் குழப்பிக் கொண்டிருக்காதீர்கள். நடப்பவை நன்மைக்கே என்று நினைத்து நேரத்தில் தூங்குங்கள். குறித்த நேரத்தில் எழுந்து விடுங்கள். -

Saturday, 10 September 2016

சங்கீதம் 119 :51-60

அகந்தைக்காரர் உன்னை மிகவும் பரியாசம்பண்ணினாலும், நீ கர்த்தருடைய வேதத்தைவிட்டு விலகாதே. ஆதிமுதலான கர்த்தருடைய நியாயத்தீர்ப்புகளை நீ நினைத்து உன்னைத் தேற்று. கர்த்தருடைய வேதத்தை விட்டு விலகுகிற துன்மார்க்கர் நிமித்தம் நடுக்கம் உன்னைப் பிடித்தது. நீ பரதேசியாய்த் தங்கும் வீட்டிலே கர்த்தருடைய பிரமாணங்கள் உனக்குக் கீதங்களாயின. இராக்காலத்தில் கர்த்தருடைய நாமத்தை நினைத்து, அவரது வேதத்தைக் கைக்கொள்ளுவாயாக. நீ கர்த்தருடைய கட்டளைகளைக் கைக்கொண்டபடியினால், இது உனக்குக் கிடைத்தது. கர்த்தரே உன் பங்கு, நீ அவரது வசனங்களைக் கைக்கொள். முழு இருதயத்தோடும் கர்த்தருடைய தயவுக்காகக் கெஞ்சு. அவரது வாக்கின்படி உனக்கு இரங்குவார். உன் வழிகளைச் சிந்தித்துக்கொண்டு, உன் கால்களை அவருுடைய சாட்சிகளுக்கு நேராகத் திருப்பு. அவரது கற்பனைகளைக் கைக்கொள்ளும்படி, நீ தாமதியாமல் தீவிரி. சங்கீதம் 119 :51-60