Thursday, 31 March 2016

ரூத் 3:11


இயேசு கிறிஸ்து உயித்தெழுந்தார்


இயேசு கிறிஸ்து உயித்தெழுந்தார் என்பது சுவிசேஷம். 2தீமோ2:8


ரோமர் 5: 18   ஒரே மீறுதலினாலே எல்லா மனுஷருக்கும் ஆக்கினைக்கு ஏதுவான தீர்ப்பு உண்டானதுபோல, ஒரே நீதியினாலே எல்லா மனுஷருக்கும் ஜீவனை அளிக்கும் நீதிக்கு ஏதுவான தீர்ப்பு உண்டாயிற்று. 

1 கொரிந்தியர் 15: 45   அந்தப்படியே முந்தின மனுஷனாகிய ஆதாம் ஜீவாத்துமாவானான் என்றெழுதியிருக்கிறது, பிந்தின ஆதாம் உயிர்ப்பிக்கிற ஆவியானார். 

அப்போஸ்தலர் 2: 33  இயேசு கிறிஸ்து தேவனுடைய வலதுகரத்தினாலே உயர்த்தப்பட்டு, பிதா அருளிய வாக்குத்தத்தத்தின்படி பரிசுத்த ஆவியைப் பெற்று, நீங்கள் இப்பொழுது காண்கிறதும் கேட்கிறதுமாகிய இதைப் பொழிந்தருளினார். 

இயேசுகிறிஸ்துவை தேவன் எழுப்பினார்; இதற்கு நாமெல்லாரும்  சாட்சிகளாயிருக்கிறோம். அப் 6:32 

ரோமர் 6:4. பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டதுபோல, நாமும் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்துகொள்ளும்படிக்கு, அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனேகூட அடக்கம்பண்ணப்பட்டோம். 

5  ஆதலால் அவருடைய மரணத்தின் சாயலில் நாம் இணைக்கப்பட்டவர்களானால், அவர் உயிர்த்தெழுதலின் சாயலிலும் இணைக்கப்பட்டிருப்போம். 

6  நாம் இனிப் பாவத்துக்கு ஊழியஞ்செய்யாதபடிக்கு, பாவசரீரம் ஒழிந்துபோகும்பொருட்டாக, நம்முடைய பழைய மனுஷன் அவரோடேகூடச் சிலுவையில் அறையப்பட்டதென்று அறிந்திருக்கிறோம். 

7  மரித்தவன் பாவத்துக்கு நீங்கி விடுதலையாக்கப்பட்டிருக்கிறானே. 

8  ஆகையால் கிறிஸ்துவுடனேகூட நாம் மரித்தோமானால், அவருடனேகூட பிழைத்தும் இருப்போம் என்று நம்புகிறோம். 

9  மரித்தோரிலிருந்து எழுந்த கிறிஸ்து இனி மரிப்பதில்லையென்று அறிந்திருக்கிறோம்; மரணம் இனி அவரை ஆண்டுகொள்வதில்லை. 

10  அவர் மரித்தது, பாவத்திற்கென்று ஒரேதரம் மரித்தார்; அவர் பிழைத்திருக்கிறது, தேவனுக்கென்று பிழைத்திருக்கிறார். 

11  அப்படியே நீங்களும், உங்களை பாவத்திற்கு மரித்தவர்களாகவும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள் தேவனுக்கென்று பிழைத்திருக்கிறவர்களாகவும் எண்ணிக்கொள்ளுங்கள். 

12  அவர் மரித்தது, பாவத்திற்கென்று ஒரேதரம் மரித்தார்; அவர் பிழைத்திருக்கிறது, தேவனுக்கென்று பிழைத்திருக்கிறார். 

13  அப்படியே நீங்களும், உங்களை பாவத்திற்கு மரித்தவர்களாகவும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள் தேவனுக்கென்று பிழைத்திருக்கிறவர்களாகவும் எண்ணிக்கொள்ளுங்கள். 


பிதா என்னை அனுப்பினதுபோல நானும் உங்களை அனுப்புகிறேன்.  
யோ 20:21

பொல்லாதவர்கள் அறுப்புண்டு போவார்கள்

சங்கீதம் 37:9-12

பொல்லாதவர்கள் அறுப்புண்டு போவார்கள், கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ பூமியைச் சுதந்தரித்துக்கொள்வார்கள். 
இன்னுங் கொஞ்சநேரந்தான், அப்போது துன்மார்க்கன் இரான், 

அவன் ஸ்தானத்தை உற்று விசாரித்தாயானால் அவன் இல்லை. 
 சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள் 

 துன்மார்க்கன் நீதிமானுக்கு விரோதமாய்த் தீங்கு நினைத்து, அவன்பேரில் பற்கடிக்கிறான். 
ஆண்டவர் அவனைப்பார்த்து நகைக்கிறார், அவனுடைய நாள் வருகிறதென்று காண்கிறார். 

சிறுமையும் எளிமையுமானவனை மடிவிக்கவும், செம்மை மார்க்கத்தாரை விழப்பண்ணவும், துன்மார்க்கர்பட்டயத்தை உருவி, தங்கள் வில்லை நாணேற்றுகிறார்கள். 

ஆனாலும் அவர்கள் பட்டயம் அவர்களுடைய இருதயத்திற்குள் உருவிப்போம், அவர்கள் வில்லுகள் முறியும்.  

அநேக துன்மார்க்கருக்குள்ள செல்வத்திரட்சியைப்பார்க்கிலும், நீதிமானுக்குள்ள கொஞ்சமே நல்லது. 

சங்கீதம் 37 :17-24

துன்மார்க்கருடைய புயங்கள் முறியும், நீதிமான்களையோ கர்த்தர் தாங்குகிறார். 

உத்தமர்களின் நாட்களைக் கர்த்தர் அறிந்திருக்கிறார், அவர்கள் சுதந்தரம் என்றென்றைக்கும் இருக்கும். 

 அவர்கள் ஆபத்துக்காலத்திலே வெட்கப்பட்டுப்போகாதிருந்து, பஞ்சகாலத்திலே திருப்தியடைவார்கள். 

 துன்மார்க்கரோ அழிந்துபோவார்கள், கர்த்தருடைய சத்துருக்கள் ஆட்டுக்குட்டிகளின் நிணத்தைப்போல் புகைந்துபோவார்கள், 

அவர்கள் புகையாய்ப் புகைந்துபோவார்கள். 
 துன்மார்க்கன் கடன்வாங்கிச் செலுத்தாமற்போகிறான், நீதிமானோ இரங்கிக்கொடுக்கிறான். 

அவரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள், அவரால் சபிக்கப்பட்டவர்களோ அறுப்புண்டுபோவார்கள். 

 நல்ல மனுஷனுடைய நடைகள் கர்த்தரால் உறுதிப்படும், அவனுடைய வழியின்மேல் அவர் பிரியமாயிருக்கிறார். 

அவன் விழுந்தாலும் தள்ளுண்டு போவதில்லை, கர்த்தர் தமது கையினால் அவனைத் தாங்குகிறார். 

ஏசாயா 41:13