Tuesday, 6 December 2016

நீதிமொழிகள் 7:2-23

நீ கர்த்தருடைய கட்டளைகளையும் அவருடைய போதகத்தையும் உன் கண்மணியைப்போல் காத்துக்கொள், அப்பொழுது பிழைப்பாய். அவைகளை உன் விரல்களில் கட்டி, அவைகளை உன் இருதய பலகையில் எழுதிக்கொள். இச்சகவார்த்தைகளைப் பேசும் அந்நிய பெண்ணாகிய பரஸ்திரீக்கு உன்னை விலக்கிக் காப்பதற்காக, ஞானத்தை நோக்கி, நீ என் சகோதரி என்றும், புத்தியைப்பார்த்து, நீ என் இனத்தாள் என்றும் சொல்வாயாக. பேதையர்களாகிய வாலிபருக்குள்ளே ஒரு புத்தியீன வாலிபன் மாலைமயங்கும் அஸ்தமனநேரத்திலும் இரவின் இருண்ட அந்தகாரத்திலும். அவள் இருக்கும் சந்துக்கடுத்த தெருவில் சென்று, அவள் வீட்டுவழியாய் நடந்துபோனான். அப்பொழுது இதோ, வேசியின் ஆடையாபரணந் தரித்த தந்திரமனமுள்ள ஒரு ஸ்திரீ அவனுக்கு எதிர்ப்பட்டாள். அவள் வாயாடியும் அடங்காதவளுமானவள்: அவள் கால்கள் வீட்டிலே தரிக்கிறதில்லை. சிலவேளை வெளியிலிருப்பாள், சிலவேளை வீதியிலிருப்பாள், சந்துகள்தோறும் பதிவிருப்பாள். அவள் அவனைப் பிடித்து முத்தஞ்செய்து, முகம் நாணாமல் அவனைப்பார்த்து: சமாதான பலிகள் என்மேல் சுமந்திருந்தது, இன்றைக்குத்தான் என் பொருத்தனைகளை நிறைவேற்றினேன். ஆதலால், நான் உன்னைச் சந்திக்கப் புறப்பட்டு, உன் முகத்தை ஆவலோடு தேடினேன்: இப்பொழுது உன்னைக் கண்டுபிடித்தேன். என் மஞ்சத்தை இரத்தின கம்பளங்களாலும், எகிப்துதேசத்து விசித்திரமான மெல்லிய வஸ்திரங்களாலும் சிங்காரித்தேன். என் படுக்கையை வெள்ளைப்போளத்தாலும் சந்தனத்தாலும் இலவங்கப்பட்டையாலும் வாசனை கட்டினேன். வா, விடியற்காலம் வரைக்கும் சம்போகமாயிருப்போம், இன்பங்களினால் பூரிப்போம். வா, விடியற்காலம் வரைக்கும் சம்போகமாயிருப்போம், இன்பங்களினால் பூரிப்போம். புருஷன் வீட்டிலே இல்லை, தூரப் பிரயாணம் போனான். பணப்பையைத் தன் கையிலே கொண்டுபோனான், குறிக்கப்பட்ட நாளிலே வீட்டுக்கு வருவான் என்று சொல்லி, தன் மிகுதியான இனிய சொற்களால் அவனை வசப்படுத்தி, தன் உதடுகளின் மதுரவாக்கினால் அவனை இணங்கப் பண்ணினாள். உடனே அவன் அவள் பின்னே சென்றான்: ஒரு மாடு அடிக்கப்படும்படி செல்வதுபோலும், ஒரு மூடன் விலங்கிடப்பட்டுத் தண்டனைக்குப் போவது போலும், ஒரு குருவி தன் பிராணணை வாங்கும் கண்ணியை அறியாமல் அதில் விழத் தீவிரிக்கிறது போலும், அவளுக்குப் பின்னே போனான்: அம்பு அவன் ஈரலைப் பிளந்தது. நீதிமொழிகள் 7:2-23

நீதிமொழிகள் 6 :24-35

தன் வஸ்திரம் வேகாமல் மடியிலே எவனாவது நெருப்பை வைத்துக்கொள்ளக் கூடுமோ? தன் கால் சுடாமல் எவனாவது தழலின்மேல் நடக்கக் கூடுமோ? பிறனுடைய மனைவியிடத்தில் பிரவேசிப்பபனும், அப்படியே அவளைத்தொடுகிற எவனும் ஆக்கினைக்குத் தப்பான். திருடன் தன் பசியை ஆற்றத் திருடினால் ஜனங்கள் அவனை இகழமாட்டார்கள். அவன் கண்டுபிடிக்கப்பட்டால் ஏழு மடங்கு கொடுத்துத் தீரவேண்டும்: தன் வீட்டிலுள்ள பொருட்களையெல்லாம் கொடுக்கவேண்டியதாகும். ஸ்திரீயுடனே விபசாரம்பண்ணுகிறவன் மதிகெட்டவன்: அப்படிச் செய்கிறவன் தன் ஆத்துமாவைக் கெடுத்துப் போடுகிறான். வாதையையும் இலச்சையையும் அடைவான்: அவன் நிந்தை ஒளியாது ஸ்திரீயைப் பற்றிய எரிச்சல் புருஷனுக்கு மூர்க்கத்தை உண்டுபண்ணும்: அவன் பழிவாங்கும் நாளில் தப்பவிடான். அவன் எந்த ஈட்டையும் பாரான்: அநேகம் வெகுமதிகளைக் கொடுத்தாலும் அமர்ந்திருக்கமாட்டான நீதிமொழிகள் 6 :24-35

நீதிமொழிகள் 6 :22-26

@@@@@ நீ நடக்கும்போது உன் தகப்பன் கற்பனை உனக்கு வழிகாட்டும்: நீ படுக்கும்போது அது உன்னைக் காப்பாற்றும்: நீ விழிக்கும்போது அது உன்னோடே சம்பாஷிக்கும். கட்டளையே விளக்கு, வேதமே வெளிச்சம், போதகசிட்சையே ஜீவவழி. அது உன்னைத் துன்மார்க்க ஸ்திரீக்கும், இச்சகம்பேசும் நாவையுடைய பரஸ்திரீக்கும் விலக்கிக் காக்கும். உன் இருதயத்திலே அவள் அழகை இச்சியாதே: அவள் தன் கண்ணிமைகளினால் உன்னைப் பிடிக்கவிடாதே. வேசியினிமித்தம் ஒரு அப்பத்துணிக்கையையும் இரக்கவேண்டியதாகும்: விபச்சாரியானவள் அருமையான உயிரை வேட்டையாடுகிறாள். நீதிமொழிகள் 6 :22-26

நீதிமொழிகள் 6 :12-21

பேலியாளின் மனுஷனாகிய ஒரு துன்மார்க்கன் ஆகடியம் பேசித்திரிகிறான். அவன் தன் கண்களால் சைகைகாட்டி, தன் கால்களால் பேசி, தன் விரல்களால் போதனை செய்கிறான். அவன் இருதயத்திலோ திரியாவரமுண்டு: இடைவிடாமல் பொல்லாப்பைப் பிணைத்து, வழக்குகளை உண்டுபண்ணுகிறான். ஆகையால் சடுதியில் அவனுக்கு ஆபத்து வரும்: சகாயமின்றிச் சடிதியில் நாசமடைவான். ஆறு காரியங்களைக் கர்த்தர் வெறுக்கிறார், ஏழும் அவருக்கு அருவருப்பானவைகள். அவையாவன: மேட்டிமையான கண், பொய்நாவு, குற்றமற்றவர்களுடைய இரத்தம் சிந்துங் கை, துராலோசனையைப் பிணைக்கும் இருதயம், தீங்கு செய்வதற்கு விரைந்தோடுங் கால், அபத்தம்பேசும் பொய்ச்சாட்சி, சகோதரருக்குள்ளே விரோதத்தை உண்டுபண்ணுதல் ஆகிய இவைகளே. நீ உன் தகப்பன் கற்பனையைக் காத்துக்கொள்: உன் தாயின் போதகத்தைத் தள்ளாதே. அவைகளை எப்பொழுதும் உன் இருதயத்திலே அணிந்து, அவைகளை உன் கழுத்திலே கட்டிக்கொள். நீதிமொழிகள் 6 :12-21