Thursday, 2 June 2016

சாலை விபத்துக்கள்

உலகளவில் சாலை விபத்துக்களில், இந்தியாவில்தான் அதிகம் பேர் பலியாகிறார்கள்! வருடத்திற்கு, சுமார் 5லட்சம் சாலைவிபத்துக்கள் நடக்கின்றன! இதில், சுமார் 1,5லட்சம்பேர் இதில் பலியாகின்றனர்!கடந்த 2014ம் ஆண்டு,தமிழ்நாட்டில்தான் அதிகளவு சாலை விபத்துக்கள் நடந்துள்ளது! நாடுமுழுவதும் 3ஆயிரம் கோடி ரூபாய் செலவில் தேசிய நெடுஞ்சாலையில் ஒவ்வொரு 100கி.மி. தூரத்திறகு, ஒரு விபத்து சிகிச்சை மையம், என,1.200 சிகிச்சை மையங்கள் அமைக்க திட்டமிடப் பட்டுள்ளன நாடுமுழுவதும் சாலைவிபத்துக்கள் நடைபெறாத வண்ணம் தடுக்கப்பட ஜெபிப்போம் .மக்கள் சாலை விதிகளை கண்டிப்பாக கடைப்பிடித்திட ஜெபிப்போம் மேம்பாலங்கள் மற்றும் சாலைகளை மக்கள் கடக்கும் நேரங்களில் விபத்துக்கள் ஏற்படாதவண்ணம் தடைகள் அமைப்பது போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப் பட ஜெபிப்போம் சாலைவிபத்துகளின் உயிரிழப்புகள் ஏற்படாதிருக்க.ஆங்காங்கே சாலையோரங்களிருந்து கொண்டு. இரத்தம் சிந்த பேராடுகிற பெல்லாத பெண் விக்ரக ஆவிகளை கட்டி துரத்தி ஜெபிப்போம் சாலைகளில் செல்வோர் மீது தேவ பாதுகாப்பு இருக்க ஜெபிப்போம்

Wednesday, 1 June 2016

வயிறு இதமாக

புழுங்கலரிச நொய்க்கஞ்சியுடன் வெந்தயம் கால் ஸ்பூன் சேர்த்து, மோருடன் கலந்து காலையில் 2 கப் குடித்தால் வயிறு இதமாகும

நீரில் மூழ்குதல் !

உலகளவில் வருடந்தோரும் சுமார் 3,70,000 பேர் நீரில் முழ்கி இறப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது "மக்கள்,படகில் சுற்றுளா செல்லும்போது அநேகர் பாதுகாப்பு மிதவைகளை அணிய மறந்து விடுவதுதான் காரணம்" எனவும் அந்நிறுவனம் கூறியுள்ளது உலகம் முழுவதும் படகில் சுற்றுலா செல்லும் பயணிகள் தண்ணீரில் பயணிக்கும்போது, உயிர்காக்கும் உடைகளை பயன்படுத்திக்கொள்ள ஜெபிப்போம் .நீரில் மூழ்கி மக்கள் பலியாவது தடுக்கப் படவும், அதற்குரிய விதி முறைகளை ஜனங்கள் பின்பற்றவும் ஜெபிப்போம்

சங்கீதம்67

தேவன், பூமியில் அவருடைய வழியும், அவருடைய இரட்சணியமும் விளங்கும்படியாய், தேவன் உனக்கு இரங்கி, உன்னை ஆசீர்வதித்து, அவருடைய முகத்தை உன்மேல் பிரகாசிக்கப்பண்ணுவார் நீ கர்த்தரைதுதிப்பாயாக, சகல ஜனங்களும் அவரைத் துதிப்பார்களாக. தேவன் ஜனங்களை நிதானமாய் நியாயந்தீர்த்து, பூமியிலுள்ள ஜாதிகளை நடத்துவார் ஆதலால் ஜாதிகள் சந்தோஷித்து, கெம்பீரத்தோடே மகிழக்கடவர்கள். நீ தேவனை துதிப்பாயாக, பூமி தன் பலனைத் தரும், தேவன் உன்னை ஆசீர்வதிப்பார். பூமியின் எல்லைகளெல்லாம் அவருக்குப் பயந்திருக்கும். சங்கீதம்67

கொசுக்கள் ஓடி விடும்

இலையுதிர் காலத்தில் பழுத்து உதிரும் வேப்பம் இலைகளை சேகரித்து எடுத்து தூள் செய்து நெருப்பில் போட்டால் புகை நெடி தாளாமல் கொசுக்கள் ஓடி விடும்